திருக்குறள் கூறுவது தர்ம சாஸ்திரங்களே

பேரா. வ.வெ.சு.

“திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் தன்னுடைய குறட்பாக்களில் ஒவ்வோர் அதிகாரத்திலும், தான் எடுத்துக்கொண்டுள்ள கருத்துப்பொருட்களை விளக்கும்போது, உபதேசங்களாகச் சொல்லிக் கடைசியில் தன் கருத்தை ஆணையாக இடுவார். சம்ஸ்க்ருதத்தில் “உபதேஷா” மற்றும் “ஆதேஷா” என்று கூறுவர். அதாவது குருவானவர், தன் சீடர்களுக்கு நல்லமுறையில் உபதேசங்களைக் கூறிவிட்டுக் அவர்கள் கேட்காத நிலையில் கண்டிக்கும் விதமாக உத்தரவிடுவதைப் போல, திருவள்ளுவர் நமக்குப் பல கருத்துகளைத் தன் குறட்பாக்கள் மூலம் விளக்கியுள்ளார்” என்று கவிமாமணியும் விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வருமான பேராசிரியர் வ.வெ.சுப்பிரமணியம் கூறினார்.

வரலாற்று ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளரும், இலக்கிய எழுத்தாளருமான முன்னாள் தமிழகத் தொல்லியல் துறையின் இயக்குனர் டாக்டர் நாகஸ்வாமி அவர்கள் எழுதியுள்ள “THIRUKKURAL – An Abridgment of Sastras” என்கிற நூலைப் பற்றிய கருத்தரங்கு சென்ற 08-01-2018 திங்கட்கிழமை அன்று, மயிலை பாரடிய வித்யா பவன் சிற்றரங்கில் நடந்தது. அந்தக் கருத்தரங்கில் மேற்கண்டவாறு தலைமை உரையாற்றிப் பேசினார் பேராசிரியர் வ.வெ.சு.

அவர் மேலும் பேசுகையில், “திருக்குறளில் கூறப்பட்டிருப்பது வேதங்கள் மற்றும் தர்ம சாஸ்திரங்களின் கருத்துக்கள் தான் என்பதைச் சொல்லத் தைரியம் வேண்டும்; அதை நூலாகவும் கொண்டுவரக் கூடுதல் தைரியம் வேண்டும். அது டாக்டர் நாகஸ்வாமியிடம் இருக்கின்றது. அறத்துப்பால் குறட்பாக்களில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை, பிரம்மச்சாரி விரதம், கிரஹஸ்த விரதம், சன்யாஸம் என்று மூன்று வகையாகப் பிரித்திருப்பது அருமையான வகைப்படுத்தல். மேலும், ‘அகர முதல எழுத்தெல்லாம்…’ என்று ஆரம்பிக்கும் கடவுள் வாழ்த்து அதிகாரத்தை “அக்ஷராப்யாசம்” என்று வகைப்படுத்தியிருப்பது அற்புதம். பிரம்மச்சரிய விரதம் அக்ஷராப்யாஸத்தில் தான் ஆரம்பிக்கிறது.”

“அதைப் போலவே அடுத்ததாக “வான்சிறப்பு” அதிகாரர்த்தை “பிக்ஷாவந்தனம்” என்று விளக்கியிருப்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இவ்விடத்தில் தைத்ரிய உபனிஷத் சொல்வதைச் சுட்டிக் காட்டி அதையே வள்ளுவரும் கூறுவதை உறுதி செய்கிறார் நாகஸ்வாமி. அதாவது பிரம்மச்சரிய விரதத்தில் கல்வி கற்க ஆரம்பித்தவுடன், உணவின் முக்கியத்துவமும் மாணவனுக்குக் கற்றுவிக்கப்படுகிறது. அவன் குருகுல வாழ்வில் ஆசிரியருடன் இருந்தாலும், தன்னுடைய உணவுக்காகப் பிக்ஷைக்குத்தான் போக வேண்டும். ஆகவே அன்னம் என்றால் என்ன, அது எவ்வாறு உண்டாகின்றது, போன்றவற்றை அவன் தன் அனுபவித்திலேயே உணர்ந்துகொள்கிறான். அன்னம் உருவாக நீர் காரணமாகின்றது. நீரை மழை தருகின்றது. பிரம்மச்சரிய விரதத்தில் கல்வியுடன் கூடவே நீர், அன்னம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவன் அறிந்துகொள்ள வேண்டும் என்பதால், அக்ஷராப்யாசத்துக்கு அடுத்ததாக பிக்ஷாவந்தனம் கூறப்படுகிறது. அதையே வள்ளுவரும் கடவுள் வாழ்த்துக்கு அடுத்தபடியாக வான்சிறப்பு என்று வைத்தார்.”

“அதைப்போலவே தான் அடுத்த அதிகாரமான நீத்தார் பெருமையும். இங்கே உலகத்தைத் துறந்தவர்கள் என்பதைவிட, ஒழுக்கத்தின்பாற் தங்களை ஈந்தவர் என்கிற வகையில் ‘ஒழுக்கத்து நீத்தார்’ என்று கொள்வதே சரி. ஆகவே, நீத்தார் பெருமை என்கிற அதிகாரத்தை ஆசாரமாகக் கொண்டு, பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்பவர்கள் தங்களை ஒழுக்கத்தின்பாற் அளித்திட வேண்டும் என்று உறுதி செய்கிறார்.”

இவ்வாறாக, வேதங்களிலும் தர்ம சாஸ்திரங்களிலும் கூறப்பட்ட கருத்துப் பொருட்களின் சாரங்களைப் பிழிந்து திருக்குறளில் திருவள்ளுவர் கொடுத்துள்ளதை நன்றாக ஆய்வு செய்து, திறம்பட எழுதியுள்ளார் டாக்டர் நாகஸ்வாமி. இந்நூலைப் படித்து, இதன் கருத்துக்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு எடுத்துச் செல்வது நம் கடமையாகும்” என்று கூறித் தன் தலைமை உரையை நிறைவு செய்தார் பேராசிரியர் வ.வெ.சு.

டாக்டர் இரா.நாகசாமி

முன்னதாக அறிமுக உரை வழங்கிய டாக்டர் நாகஸ்வாமி, பின்வருமாறு பேசினார்.

“நமது வேத கலாச்சாரத்தின் சாரத்தைத் தருகின்ற நூலாக ஒரு புரட்சிகரமான பார்வையுடன் திருக்குறளை அணுகி எழுதப்பட்டுள்ள நூல் இது. நமது தர்ம சாஸ்த்திரம், அர்த்த சாஸ்த்திரம், நாட்டிய சாஸ்த்திரம், காம சாஸ்த்திரம் ஆகியவற்றின் கருத்துப் பொருட்கள் திருக்குறள் எங்கும் நெடுக உள்ளன. நமது ஹிந்து தர்மத்தின் அடிப்படைகளான நான்கு புருஷார்த்தங்களாகிய தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் ஆகியவற்றில் முதல் மூன்றான தர்மம், அர்த்தம், காமம் ஆகியவற்றை “த்ரிவர்கம்” என்கிற ஒற்றைக் கோட்பாடாகக்கருதி முறையே அறம், பொருள் ம்ற்றும் காமம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது”

“வள்ளுவரின் குறள் நமது வர்ணாஸ்ரமத் தர்மத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. பிராம்மண, க்ஷத்ரிய, வைஸ்ய மற்றும் சூத்திர வர்ணத்தவரின் வாழ்க்கை முறை, மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றைப் பற்றிப் பல குறட்பாக்களில் பேசும் திருவள்ளுவர், நான்கு ஆஸ்ரம தர்மங்களான பிரம்மச்சர்யம், கிரஹஸ்தம், வானப்ரஸ்தம், சன்யாஸம் ஆகியவற்றைப் பற்றியும் முதல் தொகுதியான அறத்துப்பாலில் பேசுகிறார். தேவர்கள், ரிஷிகள் மற்றும் பித்ருக்களுக்குச் செய்யும் தர்ப்பணம் பற்றியும், பஞ்ச மஹா யக்யங்கள் என்று சொல்லப்படுகின்ற ஐந்து வகையான யாகங்கள் பற்றியும் பேசுகிறார்.”

“தர்ம சாஸ்த்திரங்களைக் கருத்துப் பொருளாக மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக வரிசைப்படுத்தியும் எழுதியுள்ளார் திருவள்ளுவர். பொருட்பாலில் அந்தணர் நூலாகிய வேதங்களைப் பற்றியும் தர்ம சாஸ்த்திரங்களைப் பற்றியும் குறிப்பிட்டு, மன்னர்கள் அவற்றைப் பின்பற்றுவதே கடமை என்று சொல்லும் விதத்தில்,

‘அந்தணர் நூலுக்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்’

என்றும்,

‘ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூற்மறப்பர்

காவலன் காவான் எனின்’

என்றும் திருவள்ளுவர் தெளிவாக அறுதொழில் புரியும் அறவோரான அந்தணர்களின் நூல்களான வேதங்கள் மற்றும் தர்ம சாஸ்த்திரங்கள் சொல்படி செங்கோல் செலுத்துவதே மன்னரின் கடமை என்று நிலைநிறுத்துகிறார். இதையே தான் புறநானூறு (35) ‘அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து முறை’ என்று கூறுகிறது.”

“மன்னரைப் பற்றிக் கூறும் இடத்திலெல்லாம் தர்ம சாஸ்த்திரங்களைக் குறிப்பிடும் திருவள்ளுவர், கருணை, தயை, உறுதி, அறம் என்று மனு நீதியின் ராஜ தர்மத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து நற்பண்புகளின் மொத்த உருவமாக மன்னனைக் காட்சிப்படுத்துகிறார். ‘அமைச்சர்’ பற்றி அவர் விவரிப்பது நமக்கு சேர, சோழ, பாண்டிய, பல்லவ, நாயக்க மன்னர்களின் செப்புப் பட்டயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல அமைச்சர்களை நினைவூட்டுகிறது.”

“காமத்துப்பால் தொகுதியில் திருவள்ளுவர் களவு மற்றும் கற்பு என்று இருவகையாகப் பிரித்துக்கொண்டு, நாட்டிய சஸ்த்திரம் மற்றும் வாத்ஸ்யாயனரின் காம சூத்திரம் ஆகியவற்றிலிருந்து குறிப்புகளை எடுத்தாள்கிறார். தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர், த.பொ.மீனாட்சிசுந்தரம், டாக்டர்.மு.வரதராசனார், ஆகியோர் காமத்துப் பால் தொகுதியை ‘நாடக வழக்கு’ என்றே குறிப்பிடுகின்றனர்.”

“பிராகிருத மொழியில் தம்மபதா என்று ஒரு நூல் உள்ளது. இது புத்தரின் உபதேசங்களை உள்ளடக்கியது, பௌத்த தர்மத்தைப் பின்பற்றுபவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றிப் பேசும் நூல். இதையும் இந்நூலில் காட்டியுள்ளேன். மேலும் புத்தர் பிராம்மணர்களுக்கு உயர்ந்த நிலையைக் கொடுத்து உபதேசித்துள்ள ‘பாம்மண வக்கோ’ (பிராம்மண வர்கம்) பற்றியும் ஒரு அத்தியாயத்தைச் சேர்த்துள்ளேன். ஆனால், இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, நாட்டில், குறிப்பாக தமிழகத்தில் பிராம்மணர்கள் பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்தப் பிராம்மண துவேஷத்தின் அர்த்தமற்ற தன்மையை தம்மபதா பற்றிய அத்தியாயத்தைப் படிக்கையில் புரிந்து கொள்ளலாம். ஜி.யு.போப், லஸாரஸ், போன்றவர்களின் மொழியாகத்தையும் ஆங்காங்கே குறிப்பிட்டு, அவை எவ்வளவு பற்றாக்குறையுடன் இருக்கின்றன என்பதைப் பரிமேலழகரின் உரையுடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளேன்.”

“இறுதியாக, வேத, உபநிடத, தர்ம சாஸ்த்திரங்களின் சாரங்களைத் தமிழில் குறட்பாக்களாகத் தொகுத்து வழங்கும் திருவள்ளுவர், மனு, யாக்யவல்கியர், கௌதமர், ஆபஸ்தம்பர், போதாயனர், பராசரர், வசிஷ்டர் போன்ற மஹரிஷிகள் வரிசையில் வைக்கப்பட வேண்டியவர் ஆவார். திருவள்ளுவர் வைதீக தர்ம மார்க்கத்தைத் தமிழில் எளிமையாக வழங்கியுள்ளதே திருக்குறள் என்கிற உண்மை எழுகின்றது. திருக்குறளைத் தொடர்ந்து வாசிக்கும் அன்பர்களின் திருக்குறள் பற்றிய பார்வையை இந்நூல் மாற்றும் என்று பரிபூரணமாக நம்புகிறேன்”

பேராசிரியர் வ.வெ.சுவைத் தொடர்ந்து அகில இந்திய வானொலியின் சென்னை மையத்தின் முன்னாள் இயக்குனர் கலைமாமணி டாக்டர் சேயோன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். திருவள்ளுவரைப் போற்றும் விதமாக ஒரு பாடலுடன் தன் உரையைத் தொடங்கிய டாக்டர் சேயோன், தாம் நடத்திவரும் மயிலைத் திருவள்ளுவர் சங்கத்தின் பல ஆண்டுகால சேவைகளைப் பற்றிய சிறு அறிமுகத்தையும் கொடுத்தார்.

அவர் தன்னுடைய உரையில், “டாக்டர் நாகஸ்வாமி அவர்களின் இப்பணி மிகவும் போற்றுதலுக்கு உரியது. திருக்குறளில் திருவள்ளுவர் நமது வேத, தர்ம சாஸ்த்திரங்களின் கருத்துப்பொருட்களைக் கையாண்டுள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை. அதைத் தெளிவாகவே தொகுத்தளித்துள்ளார் டாக்டர் நாகஸ்வாமி. குறிப்பாகப் பொருட்பாலில், மன்னரின் அட்சி முறைப் பற்றியும் செங்கோல் பற்றியும் பேசுமிடங்களில் எல்லாம் திருவள்ளுவர் அர்த்த சாஸ்த்திரத்தையும் தர்ம சாஸ்த்திரங்களையும் குறிப்பிட்டே பேசுகிறார். ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் தமிழ் இலக்கிய உலகில் இந்நூல் நிச்சயம் ஒரு தாக்கத்தை உண்டாக்கும். இதன் மூலம் திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் பற்றிய ஆய்வும் விவாதங்களும் மேலும் தொடரும். தமிழ் இலக்கிய உலகு நன்மை பெறும்” என்றார்.

பி.ஆர்.ஹரன்

அவரைத் தொடர்ந்து பத்திரிகையாளர் பி.ஆர்.ஹரன் பேசினார். தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநிலத் தலைவரும் ‘ஹிந்து மித்திரன்’ பத்திரிகையின் ஆசிரியருமான திரு.ஆர்.எஸ்.நாராயணஸ்வாமி அவர்கள் கடைசி நேரத்தில் கருத்தரங்கில் கலந்துகொள்ள இயலாத காரணங்களால் அவர் சார்பாகக் கலந்து கொண்டார் பி.ஆர்.ஹரன். அவர் தன்னுடைய வழ்த்துரையில், டாக்டர் நாகஸ்வாமி அவர்கள் நுலில், திருக்குறளை கிறிஸ்தவ மயமாக்கும் காலனிய முயற்சியைப் பற்றி ஒரு அத்தியாயம் எழுதியுள்ளதைக் குறிப்பிட்டு, கிறிஸ்தவ மிஷனரிகள் தமிழகத்துள் நுழைந்த 15-ஆம் நூற்றாண்டிலிருந்தே தமிழகத்தைக் கிறிஸ்தவ மயமாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டார்கள் என்றார். அவர்கள் மதமாற்றம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு, மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதற்காகவே தமிழ் மொழியையும் கற்றுக்கொண்டனர்; தமிழ் இலக்கியங்களைத் தங்களுடைய கிறிஸ்தவ இலக்கிய கருத்தாக்கங்களுக்கு ஏற்றவாறு மொழியாக்கம் செய்தனர்; மேலும் கலாச்சாரக்களவு (Inculturation) மூலம் பெரிதும் மதமாறத்தில் ஈடுபட்டனர்; என்று கூறினார்.

தன்னை ரோமானிய பிராம்மணர் என்று சொல்லிக்கொண்ட ரோமானியப் பாதிரி ராபர்ட்-டி-நொபிலி, இத்தாலிய முனிவர் என்று சொல்லிக்கொண்ட கான்ஸ்டண்டைன் ஜோஸப் பெஸ்கி என்கிற வீரமாமுனிவர், ஜெர்மானிய ஐயர் என்று சொல்லிக்கொண்ட பார்த்தலோமியோ ஸீகன்பால்கு, ஜி.யு.போப் போன்ற கிறிஸ்தவ மிஷனரிகள் எவ்வாறு தமிழ் மொழியையும், சில தமிழ் நூல்களையும் கற்றுக்கொண்டு அதன் மூலம் விவிலியத்தைத் தமிழில் கொண்டுவந்துப் பெரிதும் மதமாறத்தில் ஈடுபட்டனர் என்றும், தாமஸ் கட்டுக்கதையை உருவாக்கி எவ்வாறு திருவள்ளுவரைக் கிறிஸ்தவர் ஆக்கவும், திருக்குறளைக் கிறிஸ்தவ நூலாக ஆக்கவும் முயன்றனர் என்றும், அம்முயற்சி இன்றும் தொடர்வதைப் பற்றியும் விவரித்துப் பேசினார். டாக்டர் நாகஸ்வாமியின் உழைப்பும் பங்களிப்பும் போற்றப்பட வேண்டும் என்று கூறிய பி.ஆர்.ஹரன், இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் அனைவருக்கும், குறிப்பாக அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய தொல்லியல் அறிஞரும் இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் கண்காணிப்பாளருமான டாக்டர் சத்தியமூர்த்தி அவர்கள், தன்னுடைய வாழ்த்துரையில், டாக்டர் நாகஸ்வாமியுடனான தன்னுடைய துறை ரீதியான தொடர்பைக் குறிப்பிட்டுச் சிலாகித்துப் பேசினார். தன்னுடைய தொல்லியல் அனுபவத்தையும், தமிழ், சம்ஸ்க்ருதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தனக்குள்ள ஆளுமையையும் நன்றாகப் பயன்படுத்தி இந்நூலை அவர் எழுதியுள்ளார் என்று குறிப்பிட்டார். அவர் மேலும், தொழில்நுட்பம் அசுரத்தனமாக வளர்ந்து வரும் இக்காலத்தில் அடுத்த தலைமுறையினருக்கு மற்ற நெடிய இலக்கியங்களை விட, குறுந்தகவல் (SMS) போன்று விளங்கும் திருக்குறளை எளிதாகக் கொண்டு செல்ல முடியும். அந்த விதத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்நூல் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், திருக்குறள் போன்ற ஒரு தமிழ் இலக்கியத்தின் மீது அவர்களுடைய ஈடுபாட்டை அதிகரிக்கும் விதத்திலும் இருக்கும், என்றார்.

ஊரன் அடிகள்

இறுதியாக, எதிர்பாராமல் எழுந்தருளிய ஊரன் அடிகள் அவர்களுடைய அருளாசியுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. சொந்த வேலையாக பாரதிய வித்யா பவனுக்கு வந்தபோது, டாக்டர் சேயோன் மூலம் நிகழ்ச்சி பற்றி அறிந்து கலந்துகொண்டதாகக் குறிப்பிட்டார். அவர் தன்னுடைய ஆசியுரையில், தமிழகத்தில் சம்ஸ்க்ருதம் எவ்வாறு அவமதிக்கப்படுகிறது என்பதையும், அன்னியர்கள் தமிழ் பங்களிப்பு செய்திருந்தாலும் அவர்களின் நோக்கம் மதமாற்றம் தான் என்பதையும் விளக்கிப் பேசினார். இன்றைய காலகட்டத்தில் டாக்டர் நாகஸ்வாமியின் இந்த நூல்  மிகவும் தேவையானது என்று கூறினார்.

காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரத்தாஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா

கருத்தரங்கு நடந்த அன்று (08-01-18 – மார்கசிர கிருஷ்ணபக்ஷ துவாதசி) மாலை, பாரதிய வித்யா பவனும் வேத பாட நிதி அறக்கட்டளையும் இணைந்து, காஞ்சி முனிவர் பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு, அவரது ஆராதனை தினத்தை முன்னிட்டு, பாரதிய வித்யா பவனின் பிரதான அரங்கில் “ஸ்ரத்தாஞ்சலி” நிகழ்ச்சி நடத்தின. காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் முன்னின்று ஸ்ரத்தாஞ்சலி நிகழ்ச்சியை நடத்தினார்.

மாலை 5.30க்குச் சரியாகத் தொடங்கிய நிகழ்ச்சியில், வேத பண்டிதர்களின் வேதபாராயணத்துடன் காஞ்சி பரமாச்சாரியாரின் திருவுருவப் படத்திற்குப் பூஜை செய்யப்பட்டு, தீப ஆராதனை நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, வரலாற்று ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளரும், இலக்கிய எழுத்தாளருமான முன்னாள் தமிழகத் தொல்லியல் துறையின் இயக்குனர் டாக்டர் நாகஸ்வாமி அவர்கள் எழுதியுள்ள “THIRUKKURAL – An Abridgment of Sastras” என்கிற நூலும், அவருடைய மகன் திரு.மோகன் நாகஸ்வாமி அவர்கள் எழுதியுள்ள “Samadarsan” என்கிற நூலும், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் அருளாசிகளுடன், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களின் திருக்கரங்களால் வெளியிடப்பட்டன.

நூல் வெளியீடு, தேவாரத் திருப்பதிகப் பாடலுடன் தொடங்கியது. ஆச்சாரிய ஸ்வாமிகளை நமஸ்கரித்துவிட்டு, வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை வரவேற்றுப் பேசிய டாக்டர் நாகஸ்வாமி அவர்கள், வெளியிடவிருக்கின்ற இரு நூல்களைப்பற்றியும் அறிமுக உரை ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து ஆச்சார்ய ஸ்வாமிகள் இரு நூல்களையும் வெளியிட, முதல் பிரதிகளை ‘கிரி டிரேடர்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் பெற்றுக்கொண்டார்.  

அடுத்ததாக, தமிழ்நடு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் நிறுவனர் தலைவர் திரு, வேதாந்தம் ஜி அவர்கள் தன்னுடைய வாழ்த்துரையில், டாக்டர் நாகசாமியின் புத்தகத்தைக் குறித்துப் பாராட்டிப் பேசினார். அவர் பேசுகையில், “டாக்டர் நாகசாமி அவர்கள் தன்னுடைய ‘திருக்குறள் வேத சாரம்’ என்ற புத்தகத்தைத் தமிழ்நாட்டின் இன்றைய சூழ்நிலையில் துணிவோடு வெளியிடுவதற்கான காரணம் அவரிடம் இருந்த ஆதாரங்களே ஆகும். தமிழும் சமஸ்கிருதமும் நம் நாட்டில் இணைந்தே இருந்து வந்துள்ளன. இப்பொழுது நிலவும் பிரிவினைகள் எல்லாம் ஆங்கிலேயர்கள் செய்த சதி. ஆதலால், இப்படியான மாயையிலிருந்து விலக இந்தப் புத்தகம் உதவும். இந்தப் புத்தகத்தை மிகவும் பாடுபட்டுக் கொண்டு வந்துள்ள டாக்டர் நாகசாமிக்கு நன்றியும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறித் தன் உரையை முடித்தார்.

அடுத்ததாக, நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவை உறுப்பினர் திரு இல கணேசன் அவர்கள் தன்னுடைய வாழ்த்துரையில், “இன்று ஸ்ரீ மஹாபெரியவா அவர்களின் நினைவு தின நிகழ்ச்சி அதில் வள்ளுவர் பற்றிய புத்தக வெளியீட்டு விழா. இருவருக்கும் என்ன சம்பந்தம் என்றால் இருவருமே வைகாசி அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தவர்கள். இது பல ஆராய்ச்சிகளின் வாயிலாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நாம் தேசம் முழுவதும் வேறுபட்டாலும் அனைத்து மொழிகளிலும் ஒற்றுமை இருக்கிறது. அதனால் இந்த ‘அகர’ என்ற சொல்லே பாரத தேசத்திற்குத் தான் பொருந்தும், இந்தப் புத்தகம் கடுமையான விமர்சனங்களைப் பெறும் என்று திரு. வேதாந்தம்ஜி அவர்கள் கூறியதை நானும் வழிமொழிகிறேன். ஆனால் அந்த விமர்சனத்தாலேயே இந்தப் புத்தகம் அமோகமாக விற்பனை ஆகும் என்று கூறி அனைவருக்கும் நன்றி பாராட்டி ஸ்ரீ பெரியவாளுக்கு நமஸ்காரத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தன் உரையை முடித்தார்.

அடுத்ததாக, முன்னாள் IG திரு. C.L.ராமகிருஷ்ணன் IPS அவர்கள் ‘சமதரிசனம்’ என்ற புத்தகத்தைக் குறித்துப் பேசினார். அவர் தன் உரையில், “நிறைய தமிழ் புத்தகத்திலிருந்தும், வேதம் மற்றும் வேதாந்தம், உபநிஷத் போன்றவற்றிலிருந்தும் மேற்கோள்கள்களை எடுத்துக்காட்டி அவற்றுக்கு விளக்கம் கொடுத்து இருக்கும் ஒரு விரிவான புத்தகம் இது. இந்தப் புத்தகத்தை ஒரு முறை படித்தால் போதாது; பல முறைகள் படித்தால் தான் நமக்கு லாவகம் கிடைக்கும்” என்று கூறி தன் உரையை முடித்தார்.

அடுத்ததாக வாழ்த்துரை வழங்கிய தமிழக ஆளுனரின் முன்னாள் செயலாளர் திருமதி கரியாலி IAS அவர்கள், “திருக்குறளுக்கு டாக்டர் நாகசாமி ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொடுத்துள்ளார். அவர் நிறைய ஆதாரங்களுடன் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். அவர் மகன் மோகன் நாகஸ்வாமி எழுதியுள்ள சமதரிசனம் என்ற புத்தகத்த்தின் சாரமானது, கடவுள் என்பவர் எப்படி அனைவரையும் ஒன்று போல் பார்க்கிறாரோ, அது போல் நாமும் அனைத்தையும் சமமாகப் பார்க்கவேண்டும் என்பதாகும், என்று நான் புரிந்து கொண்டுள்ளேன்” என்று கூறிப் பாராட்டித் தன் உரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக, வேத பாட நிதி அறகட்டளையின் அறங்காவலர் திரு.சரபேஸ்வரன் அவர்கள், “இந்த வேத பாட நிதி டிரஸ்ட் 1983ல் பரமாச்சார்யாரால் ஆரம்பிக்கப்பட்டது. திரு.நானி பல்கிவாலா அவர்கள் இந்த டிரஸ்டின் முதல் சேர்மனாக இருந்தார். இந்த டிரஸ்ட்டின் நிறுவனர் TVS group லேட். T.சந்தானம் என்பவர். இந்த டிரஸ்ட்டின் நோக்கம் ஏதாவது ஒரு வேத சாகையை அத்யயனம் செய்து கொண்டு நமது புராதன கலாச்சாரத்தைப் பின்பற்றி வாழ்ந்து வரும் வேத பண்டிதர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு நன்மதிப்பு கொடுத்து மரியாதை செய்து வருவதாகும். அதன்படியே, அவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நிதியுதவி செய்து வருகிறோம். 60வயதிற்கு மேற்பட்ட 150க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்களுக்கு நிதியுதவி செய்து வருகிறோம். இப்படிப்பட்ட வேத பண்டிதர்கள் இறந்து விட்டால் அவர்களின் அந்திம காரியங்களான 13 நாட்கள் காரியங்களுக்கும் உடனடியாக நிதியுதவி செய்து வருகிறோம். இதற்கு எங்களுக்கு பாரதிய வித்யா பவனும் மிகவும் உடந்தையாக இருந்து உதவுகிறது.” என்றார்.

திரு. நாகசாமி அவர்கள் வருகைப்புரிந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பொன்னாடைகள் போர்த்தி மரியாதை செய்தார்.

நிறைவாக அனுக்ரஹம் செய்த காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், தன்னுடைய அருளாசியில், “மார்கசிர கிருஷ்ணபக்ஷ துவாதசி அன்று ஸ்ரீ மஹாபெரியவாளின் ஆராதனையைப் பக்தி பூர்வமாகவும், வைதீக முறைப்படியும் பல இடங்களில் நடத்தி வருகிறார்கள். பலவிதமான சேவைக் காரியங்களும் அவர் அருளால் நாடு முழுவதும் நடந்து வருகின்றன. அந்தச் சேவைக் காரியங்களும் தொடரவேண்டும்; அவருடைய ஆராதனையும் தொடரவேண்டும். ஆச்சார்யாளின் அனுக்ரஹத்துடன் அனைத்தும் நடந்தேற வேண்டும்” என்றார்.

அவர் மேலும், “ஸ்ரீ மஹாபெரியவா, சாஸ்திரங்களையும், சரித்திரத்தையும் காப்பாற்றி சரித்திரம் படைத்தவர். திருக்குறளின் பெருமைகளைப் பற்றியும் அவர்கள் தன்னுடைய உபன்யாசங்களில் சொல்லி இருக்கிறார்கள். 100 ஆண்டுகளுக்கும் மேலாக, தர்மத்திற்கு அரணாக விளங்கி, தர்மசாஸ்திரத்தில், உள்ள சந்தேகங்களை நீக்கி அனைவருடைய பார்வையிலும் தர்மசாஸ்திரத்தை விளக்கி, வெளி நாட்டவர்களுக்கும் அருள் புரிந்து அனுகிரகித்துள்ளார். இங்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் ஆசியும், பெரிவாளின் அனுக்கிரஹமும் கிடைக்கட்டும்” என்று கூறி பக்தர்களுக்கு அனுக்கிரஹ பாஷணம் அருளி, பிரசாதமும் வழங்கினார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, திருவள்ளுவரை அனைத்து விதமான அரசியலிலும் ஈடுபடுத்துகின்றனர். அவரை சமணர் என்றும் கிறிஸ்தவர் என்றும் முத்திரை குத்தும் முயற்சியில் மத அரசியலிலும், அவருடைய பிறப்பை ஆய்வு செய்கின்ற முயற்சியில் ஜாதி அரசியலிலும், அவருடைய பிறந்த தினத்தைக் குறித்துப் பொது அரசியலிலும் ஈடுபடுத்துகின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆட்சியாளர்களாக இருந்துகொண்டிருக்கும் திராவிட இயக்கத்தினர், தமிழ் என்கிற பெயரில் திருவள்ளுவரை வெற்று அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்திருக்கின்றனர் என்பது கசப்பான உண்மை. இவர்களால் திருவள்ளுவருக்கோ, திருக்குறளுக்கோ, தமிழக மக்களுக்கோ எந்தப் பயனும் கிட்டவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. மேலும் பிராம்மண துவேஷத்தையும் சம்ஸ்க்ருத வெறுப்பையும், வேத தர்ம சாஸ்த்திர மறுப்பையும் கொள்கைகளாகக் கொண்டுள்ள திராவிட இயக்கம் திருவள்ளுவரையும் திருக்குறளையும் தொடர்ந்து சீரழிக்க முயன்று வரும் காலகட்டத்தில் டாக்டர் நாகஸ்வாமியின் இந்தப் புத்தகம் மகத்தான சேவை என்பதில் ஐயமில்லை.

இப்புத்தகம் அவசியம் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு, இதில் உள்ள விஷயங்கள் அனைத்தும் தமிழ் கூறும் நல்லுலகில் பரப்பப்பட வேண்டும் என்பதே நமது அவா.

21 Replies to “திருக்குறள் கூறுவது தர்ம சாஸ்திரங்களே”

  1. டாக்டர் நாகஸ்வாமியின் புத்தகத்தைப் பற்றிய இந்த அறிமுகக் கட்டுரைக்கு நன்றி
    திருக்குறள் தர்மத்தைப் பற்றிய நூல்தான் என்பதை முந்தைய தலைமுறையினர் நன்கு அறிந்தே இருந்தனர். இடைக்காலத்தில் வந்த திராவிட,நாஸ்திகப் பிரசாரங்களாலும், குறுகிய தமிழ்மொழி வெறியாலும் உண்மை மறைக்கப்பட்டு விட்டது. இன்று அந்த கும்பலே ஆட்சியில் அமர்ந்து கல்வித்துறையையும் தன் கைப்பிடியில் வைத்திருப்பதால் பள்ளி, கல்லூரியில் பயிலும் லட்சக் கணக்கான இளைய தலைமுறையினர் உண்மையை அறியாமலேயே வளர்ந்துவருகின்றனர்.
    இந்த நிலையில் உண்மையை தக்க ஆதாரங்களுடன் ஆணித்தரமாக எடுத்துக்காட்டி எழுதியிருப்பது மகத்தான சேவையாகும். மூல நூல்களிலிருந்து ஒத்த பகுதிகளை எடுத்துக்காட்டியிருப்பது அரிய முயற்சி. பலருக்கும் இந்த மூல நூல்களின் பரிச்சயம் இருக்க வாய்ப்பில்லை. தமிழ், ஸம்ஸ்க்ருதம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் புலமையும், தொல்லியல் , வறலாறு,இலக்கியம் ஆகிய முத்துறைகளில் பயிற்சியும், அனுபவமும் சிறந்த டாக்டர் நாகஸ்வாமி அவர்கள் செய்திருக்கும் மகத்தான சேவை இது.
    இங்கு ஒரு விஷயம் வேதனை அளிக்கிறது. நான் இந்த ஆங்கிலப் புத்தகத்தை
    [ TIRUKKURAL-An Abridgement of Sastras] வாங்கிப் படித்துவிட்டேன். இது மிக மட்டமான முறையில் வெளியிடப்பட்டிருக்கிறது. காகிதம், அச்சுக்கோர்வை ஆகியவை நன்றாகவே இருக்கின்றன. ஸம்ஸ்க்ருத ஶ்லோகங்கள், தமிழில் குறள் பாக்கள் ஆகியவையும் சிறந்த முறையிலேயே அச்சிடப் பட்டிருக்கின்றன. ஆனால் ஆங்கில நூல் பகுதி பிழைகள் மலிந்திருக்கின்றன. இலக்கணப் பிழைகள், சொற்பிழைகள் மலிந்திருக்கின்றன. வாக்கியங்கள் முற்றுப்பெறாமல் பல இடங்களில் காண்கின்றன. என்ன சொல்ல வருகிறார் என்பதே தெளிவாக இல்லை.
    இதன் மூல காரணம், இந்த புத்தகம் சரியாக EDIT செய்யப் படவில்லை; Proof பார்த்தவருக்கு விஷய ஞானமும் இல்லை, மொழி யறிவும் பற்றாது போலிருக்கிறது! தப்பும் தவறும் இல்லாத ஒரு பக்கத்தைக்கூட பார்க்க இயலாத நிலையில் இந்தப் புத்தகம் வெளிவந்திருக்கிறது.
    இது டாக்டர் நாகஸ்வாமி என்ற மேதைக்கும், அவர் எடுத்துகொண்ட உயரிய விஷயத்திற்கும் லட்சியத்திற்கும் நேர்ந்துள்ள மிகப் பெரிய அநியாயமும் துரோகமும் ஆகும்.
    விஷயம் அறிந்தவர்களிடையே வரவேற்பும் செல்வாக்கும் பெறவேண்டுமானால் புத்தகம் நல்ல முறையில் எடிட் செய்யப்பட்டு, தவறுகள் இல்லாமலிருக்கவேண்டும்.
    இந்தபுத்தகம் கூறும் விஷயம் அகில உலக அளவில் முக்கியத்துவம் பெற்றது. அதற்கேற்ற முறையில் தங்கள் பொறுப்புணர்ந்து, தக்கவர்களைக் கொண்டு இப்புத்தகம் செப்பனிடப்படவேண்டும். பதிப்பாளர்கள் [Giri Trading Agency] உடனே ஆவன செய்யவேண்டும்.

  2. இந்த வலைதளத்தினை தற்செயலாக பார்த்தேன். இந்து மத அறிவினை மிகச்சிறப்பாக எடுத்துறைக்கிறது. வாழ்துக்ள்.

  3. Shri R Nanjappa, I agree with you. Dr Nagaswamy is a great scholar and his work should not be undermined by poor editing. I also felt the same after his other book “Tamil Nadu, the land of Vedas”.

  4. https://www.amazon.in/PHILOSOPHY-PENINSULAR-INDIA-THIRUKKURAL-ARAM-VISWESWARAN-ebook/dp/B079NL99RQ/ref=sr_1_1?s=digital-text&ie=UTF8&qid=1518199011&sr=1-1&keywords=visweswaran

    Dr.நாகசாமியின் இந்த நூல் ஒரு திரிபு. இணைப்பில் உள்ள என்நூலைப் படியுங்கள்.
    இரவச்சம் என்ற திருக்குறள் பிக்ஷாவந்தனம் பேசுகிறது என்பது தவறு, திரிபு.

  5. The conclusions drawn by the author is an over-exaggeration. The Kural is not an abridgment of Shastras. Yes, it contains information that we find in the Shastras (Dharma, Artha) also, but that would constitute not more than 5-10% of the entire Thirukkural. How can then the Kural become an ‘abridgement’? The interpretation of Chapter 1 and 2 is completely unacceptable. Done so, with the sole aim of aligning to the authors view.

  6. இந்நூல் ஒரு பாட் பாய்லர். அதாவது அவசரமவசரமாக எழுதி வெளியிட்டுவிட்டார். சனவரி ஐந்தாம் தியதி மயிலாப்பூர் பாரதீய வித்யா பவனின், மயிலாப்பூர் பிராமணர்கள் குழமியிருக்க, பி ஜே பி தலைவர்கள் (இல கணேசன்) போன்றவர்கள் மேடையை அலங்கரிக்க காஞ்சி சங்கராச்சாரியார் (சின்னவர்) வெளியிட்டார். இது ஆங்கிலத்தில் ஏன் எழுதப்பட்டது என்பதுதான் வியப்பு. தமிழரிடையே திருக்குறள் ஒரு சாஸ்திர சாரமே என நிறுவ ஏன் ஆங்கிலத்தில் எழுதப்பட வேண்டும்? ஆசிரியர் ஒரு பெரிய பேர்பெற்ற அறிஞர் என்றதனால் அரங்கிலேயே முதலாளாக வாங்கி விட வேண்டுமென்று விரைவாகப் போய் வாங்கி வீட்டில் வந்து படித்தால் மேலே சொன்ன கேள்விகளே எழுந்தன. ஆங்கிலம் அறிந்த பிற மாநில மக்களும் வெள்ளைக்காரர்களும் இந்நூல் கருத்துக்களை அறிய வேண்டுமென்ற ஆர்வத்தில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டார் நம் அறிஞர். அடிப்படை ஆங்கில இலக்கணே தெரியாத ஒருவர் எழுதியது. அதைப்பதிப்பித்தோர் தங்களிடம் ஓர் ஆங்கிலம் தெரிந்த நபரை வேலைக்கு வைத்திருந்தால், முன்னரே திருத்திவிட்டிருக்கலாம். தற்போதைய நிலையில் இந்நூலை மேலும் அப்படியே பதிப்பிடமல் இலக்கணப்பிழைகளைத் திருத்தி பதிப்பிக்க வேண்டும்.

    இந்நூல் திருக்குறளைத் தமிழரின் பொதுமறை என்று பெருமைப் பட்டுக்கொள்வோரை இழிவுபடுத்தவேண்டுமென்ற காழ்ப்புணர்ச்சியுடன் எழுதப்பட்டிருக்கிறது. ஆரிய-திராவிட புகைச்சலுக்குத் தூபம் போடும் நூலிது. இப்படியே போனால், ஒரு கால கட்டத்தில் சமஸ்கிருதமே தமிழரின் தாய்மொழி என்பார் தொல்லியல் அறிஞர் நாகசாமி.

  7. “மயிலாப்பூர் பிராமணர்கள் குழமியிருக்க“
    Don’t ask me how BSV managed to find out that it was all just Brahmins out there ( maybe he demanded them to show their sacred thread! Thank God, it was not an Islamic crowd. God knows what he would have done for verification then!).
    The crypto Christian BSV had to bring in the Brahmin angle in any topic. I congratulate him heartily for the hard work he is doing for his Christian cult. Money well spent by the church, I say! They need more brown sepoys like BSV.

  8. Mass Suicide by Women of Rawalpindi in 1947gபஞ்சாப் பத்மாவதிகள்

    Thoha Khalsa is a village of Kahuta Region of District Rawalpindi in Pakistan. The village is located in the South East of Rawalpindi city at the distance of about 30 miles. The language used by its people is Pothohari dialect of Punjabi. The population is about 20,000 consisting Janjua Rajput, Ghakhar, and few others – all Muslims. Current inhabitants may not even know that it was a flourishing village of Sikhs before the partition of India (creation of Pakistan). The village was inhabited by wealthy Sikh families – Bindras, Duggals, Anands, and Chandhoks.
    Sectarian violence erupts in Punjab as Muslim League announces partition and creation of Pakistan, a Muslim only nation carved out of India. Sikh leader Master Tara Singh declares opposition to the partition and tears the flag of Pakistan in Lahore. To the dismay of Sikhs and Punjabis, Indian leaders Gandhi and Nehru cave in to the demand of Pakistan.

    On the evening of March 6, Muslim mobs from the surrounding Pathan villages entered Thoha Khalsa and gave ultimatums to the Sikhs to convert. On that evening, the impact of their presence was negligible due to the lateness of the hour but the actual clashes started the next morning, when their numbers swelled to some thousands. The local Muslims who had earlier assured safety to the Sikhs, remained mute spectator when violence started.

    After resisting for three days, the Sikhs hoisted white flags and negotiated truce with the Muslim mobs. Under the agreement, the mobs will loot their houses but will not burn them, kill men, or dishonor the women. The Sikhs collected Rs. 20,000 and gave to the mob leaders as demanded. They then abandoned their own houses and all gathered in the central Haveli of Sardar Gulab Singh. His mansion was huge with large boundary wall. Others took shelter in the “Dukh Bhanjani” Gurdwara located next to Gulab Singh’s mansion.

    From Gulab Singh’s Haveli, they saw their houses being looted and burned for six days. After looting the houses, the Muslim mob turned to Gulab Singh’s Haveli and surrounded it. Their intentions appeared menacing and it was clear that they do not intend to honor the terms of the truce.
    But when defeat and dishonor was imminent, Sikh men started to prepare for the battle till death. While their men fought, the Sikh women started gathering near a well around the garden. When just women and children were left, Maan Kaur led all the women to a large well inside the Haveli. She recited “Japuji Sahib” the Sikh prayers and jumped inside the well. Over 93 Sikh women followed her and all committed mass suicide in order to save their honor.

    Eyewitness Accounts

    An eyewitness who was a young Muslim boy in the village at that time, recalls the event:

    “It was almost after noon, and I watched from nearby with two of my friends. Some of the women held their children in their arms. They sobbed desperately as they jumped into the well. In about half an hour, the well was full of bodies. I still remember when Bhansa Singh killed his wife with tears in his eyes. In the span of some hours, I witnessed the deaths of almost 25 women. It was such a horrible scene. I went closer and realized that those who were on top were trying to submerge their heads so they don’t survive. No space remained. A few came up and jumped again. It was a terrible scene. They were determined to die rather than sacrifice their honor.”

  9. In Thoha Khalsa, on March 12, 1947 after long and heroic resistance, 200 Sikhs were killed. The women were asked to embrace Islam, but 93 of them, old and young, decided to escape dishonor by drowning themselves in a well, which they did. The Muslim invaders, aghast at this tragedy, fled from the place. A little later, the military arrived and rescued the survivors.

    Lord Mountbatten visits Thoha Khalsa
    The news of the massacre at Thoha flashed on national newspapers. The Viceroy of India, Lord Mountbatten visited the village to assess the situation firsthand.

    Mountbattens (79K)

    He saw the loss of property and life at Thoha Khalsa:

    MountbattensAtHaveli (80K)

    He met with the survivors and heard their ordeal directly:

    SikhsDescribeViolence (78K)

    Lady Mountbatten led the rescue and hospitalization of the victims.

    LadyMountbattenWithSikhLadies (85K)

    Life survives somehow … and the survivors reached the safety of refugee camps in Delhi, India and lived to tell their stories.

    Survivors (71K)

    References

    https://nation.com.pk/29-Dec-2014/the-forgotten-massacre
    https://thohakhalsa.blogspot.com/p/history_7.html
    https://tribune.com.pk/story/619750/agony-of-women-during-partition/
    https://en.wikipedia.org/wiki/Violence_against_women_during_the_partitio
    https://feminisminindia.com/2017/06/27/partition-punjab-violation-women/

  10. அன்பின் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ

    \\ மயிலாப்பூர் பிராமணர்கள் குழமியிருக்க, பி ஜே பி தலைவர்கள் (இல கணேசன்) போன்றவர்கள் மேடையை அலங்கரிக்க காஞ்சி சங்கராச்சாரியார் (சின்னவர்) வெளியிட்டார். \\

    அங்கு குழுமியிருந்தவர்கள் பிராமணர்கள் என்று உங்கள் ஏஸ்ஸப்பா கெனாவுல சொன்னாரா? அல்லது அங்கு குழுமியிருந்தவர்களது ஜாதிச் சான்றிதழை ஒவ்வொருவராகப் பார்த்தீரோ? ராமசாமிநாயக்க ஆதிக்க ஜாதி நாசித்தனமான கழிசடைத்தனம் மேற்கண்ட வாசகத்தில் தெரிகிறது. நீங்கள் மறைத்தாலும் மறைக்க முடியாத உங்களது ஆப்ரஹாமிய ஆதரவுப் பின்னணி தெரிகிறது மேற்கண்ட வாசகத்தில்

    அங்க இருப்பவர்களை எல்லாரையும் மயிலாப்பூர் பிராமணர்கள் என்று இவர் கண்டுபிடிக்கலாமாம். ஆனால்ன் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ க்றைஸ்தவர் என்று கண்டுபிடித்தால் தப்பாம். இது ஒங்க ஏஸ்ஸப்பருக்கே அடுக்காதுங்காணும்.

    \\இது ஆங்கிலத்தில் ஏன் எழுதப்பட்டது என்பதுதான் வியப்பு. தமிழரிடையே திருக்குறள் ஒரு சாஸ்திர சாரமே என நிறுவ ஏன் ஆங்கிலத்தில் எழுதப்பட வேண்டும்? \\

    ஏனென்றால் உலக முழுதிலும் ஆங்க்லமறிந்த அனைவரும் இதை அறிய வேண்டும் என்பதற்காக

    \\அடிப்படை ஆங்கில இலக்கணே தெரியாத \\

    எப்புடி…….. நீங்கள் TAMIL என்ற பெயரில் தப்புத்தப்பாக தமிழிலும் ஆங்க்லத்திலும் உளறிக்கொட்டுவீர்களே அப்படிக்கா? 1331 வது குறளைக் கண்டுபிடித்து திருவள்ளுவரின் கொறவளையை நெறித்த நீங்களெல்லாம் திருக்குறளைப் பத்தி பேசுவது……………. நேரஞ்சாமி………நேரம்.

    மேல எழுதியிருப்பது எலக்கணமா? பெலாக்கணமா?

    \\இந்நூல் திருக்குறளைத் தமிழரின் பொதுமறை என்று பெருமைப் பட்டுக்கொள்வோரை இழிவுபடுத்தவேண்டுமென்ற காழ்ப்புணர்ச்சியுடன் எழுதப்பட்டிருக்கிறது. \\

    ஸம்ஸ்க்ருதத்தை வெறுக்கிறேன் என்று நீங்கள் இந்த தளத்தில் இந்த அவதாரத்திலும் இதுக்கு முந்தி தமிழை அவமரியாதை செய்ய வேண்டும் என்பதையே லக்ஷ்யமாகக் கொண்ட …….. உளறிக்கொட்டுவதையே லக்ஷ்யமாகக் கொண்ட TAMIL அவதாரத்திலும் பேத்தியிருக்கிறீர்கள்.

    நாகசாமி அவர்கள் தர்ம சாஸ்த்ரத்தையும் திருக்குறளையும் ஒப்பிட்டிருக்கிறார் ஐயன்மீர். நாகசாமி அவர்கள் ஒப்பிட்ட தர்மசாஸ்த்ர நூற்களில் சொன்னது இது தான் என்பதனை முதலில் புரிந்து கொள்ள விழையுங்கள். பின்னர் அதைத் திருக்குறளுடன் ஒப்பிடுங்கள்.

    அதுக்குப்பின்னாடி தான் அவர் சொன்னது சரியா தப்பான்னு சொல்லுவதற்கு உங்களுக்கு அருகதையே வரும். வாயிலயே வட சுடக்கூடாது. அல்லது பெந்தகொஸ்தே சபையில் சில்சாம் சொல்லிவிட்டதையெல்லாம் கேட்டுவிட்டு இங்கே தமிழ் ஹிந்து தளத்தில் வந்து வாந்தி எடுக்கக்கூடாது.

    \\ இப்படியே போனால், ஒரு கால கட்டத்தில் சமஸ்கிருதமே தமிழரின் தாய்மொழி \\

    கையறுநிலை இப்படிப்பேச வைக்கிறது. செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்யாசம் தெரியாது. லவணமென்றால் எருமைச்சாணி என்ற அளவில் ஸம்ஸ்க்ருதம் கற்றறிந்த நீங்கள் டாக்டர் நாகசாமி எழுதிய நூலை விமர்சிக்க முனைவது ஹிந்துஸ்தான அரசியல் சாஸனமும் தமிழ் ஹிந்து தளமும் உங்களுக்கு அளித்திருக்கும் ஸ்வதந்த்ரம்.

    இப்படியே போனால் க்றைஸ்தவம் தான் தமிழரின் தாய்மதம் என்று தமிழ் ஹிந்து தளத்திலேயே நீங்கள் கதை அளப்பீர்கள்.

    என்ன? பீ விமலன் பரங்கி பம்ப்ளிமாஸ்கான் என்று பெயரை மாற்றிக்கொண்டு மறைக்க முடியாத சிலுவைக் கொண்டையை மறைக்க விழைந்து கொண்டே

    போயி புள்ள குட்டிய படிக்க வையுங்க.

  11. இங்கு பங்களிக்கும் ஜடாயு அவர்கள் டாக்டர் நாகசாமி அவர்கள் எழுதியிருக்கும் நூலில் பல விஷயங்களின் பாற்பட்டு அவருக்கு அபிப்ராய பேதமிருப்பதாகவும் அதை விவரமாகப் பகிருவதாகவும் ஃபேஸ்புக்கில் சொல்லியிருப்பது நினைவுக்கு வருகிறது.

    அபிப்ராய பேதங்களைத் தரவு சார்ந்து வெளிப்படையாகப் பகிர முனைவது உள்ளபடி ந்யாயமான செயல். வாயில வட சுடுவது கீழ்த்தரமான செயல்.

    டாக்டர் நாகசாமி சொல்லியது என்ன? அதில் அபிப்ராயபேதங்கள் என்ன என்று அறிவதில் எனக்கும் ஆவல் உண்டு. பொருள் பொதிந்த ஜடாயுவின் பதிவினை எதிர்நோக்குகிறேன்.

  12. it is wrong to try to put both poonul or blockshirt to tirukkural and tiruvalluar.tirukkural is universal literature.

  13. திருக்குறளை தெய்நாயகம் என்ற கிறுக்கன் -கிறிஸ்தவன் ஒரு கிறிஸ்தவ நூல் என்றும் யேசுவின் சீடா் தாமஸ் என்பவாிடம் கேட்டுதான் திருக்குறளை எழுதினாா்என்று திருவள்ளுவருக்கு ஞானஸ்தானம் கொடுக்கின்றாரே ? அதுபற்றி திரு நாராயணன் அறிவாரா ? தாளுள்ளாள் தாமரையினாள் என்ற வரிகள் திருவள்ளுவா் ஒரு இந்து என்பதை தெளிவாகக் காட்டுகின்றது.இன்றும் சிவகாசி பகுதியில் புணூல் போடும் நாடாா் மக்கள் இருக்கின்றார்கள். பாரதியாா் விரும்பியபடி அனைத்து இந்தியா்களுக்கும் புனித நூலை போட்டுவிட வேண்டியதுதான்.

  14. the era of tiruvalluar was 34bc as per Dravidans and accepted by all Tamils.so no chance for Christians and Islams to claim as their literature. but at that time Jainism and Buddism were there at tamil nadu on 34BC. Just our Dravidian friends who did not want to show themselves as Hindus But want to show as secular, Tiruvalluar may also want to show himself as secular and prevented to show himself as Hindu to satisfy the other two religions.

  15. re: s.narayanan. The idea of ‘secularism’ is a distinctly modern concept, without any definite connotation. In Tiruvalluvar’s time, it was all ‘Dharma’.The word Hindu did not exist. Buddha did not call his teaching ‘Buddhism’ or any separate religion, but merely Dharma. It was just a branch of the Sanatana Dharma, like so many other sects within it. Jainism too was part of the broader dharmic structure. So, there was no need for Tiruvalluvar to appear secular. We need not read present ideas of political correctness in Tiruvalluvar’s life and work.

  16. அருமையான புத்தகம். திருக்குறள் பாரத தமிழ் மெய்யியல் மரபில் எழுதப் பட்டுள்ளது என்பதில் அணு அளவும் சந்தேகமில்லை.
    ஆயினும் பேராசிரியர் நாகசாமி, சில பல விஷயங்களில் சற்றே தாவியும் உள்ளார், உதாரணம் வான் சிறப்பு என்பது பிஷா வந்தன் என்பது.
    வள்ளுவர் குறளிற்கு வள்ளுவர் உள்ளம், சங்க தமிழ் மரபின் வழி தான் காண வேண்டும். இந்த நூலின் தன்மையில் தான் நான் சென்னை ஐஐடியில் தந்த ஆய்வு கட்டுரையும்.
    முழுமையாய் சமணத்ட்தை மறுக்கும் நூலாய், வேத தர்ம வழியில் தான் குறள் உள்ளது
    குறளிற்கு உரை எனப் பலரும் ஆய்வுக் கட்டுரை எனவும் பல ஆயிரம் நூல்கள் வந்துள்ள நிலையில் இன்னும் ஆளமாய் தமிழ் ஆதாரங்களோடே விளக்க வேண்டும்.
    திருவள்ளுவரும் வேதங்களும் – பார்ப்பனர்களும்
    https://thamilkalanjiyam.blogspot.in/2018/02/blog-post_39.html

  17. yes I agree with sri R. Nanjappa. At that time, only one dharma not religion was there but not named as hindu. even Buddha and jain were followed by the those who already followed Hinduism but not in that name as HINDUISM .kammadasan wrote clearly in his arthamulla indumadam illustrating more than 20 kurals and proved Tiruvalluar as hindu. BUT VALLUAR WROTE KURAL AS DHARMA NOT AS RELIGIOUS WORK. MY VIEW IS WHY THERE MUST BE ARGUMENT WHICH ALREADY ACCEPTED AS UNIVERSAL DHARMA LITERATURE.

  18. திரு.நாகசாமி அவர்களின் “Tirukkural – An Abridgement of Sastras” நூலுக்கு முறையான விளக்கம் பெற, கீழ்க்கண்ட கட்டுரைகளை சொடுக்கிப் படிக்கவும். தொடர்ந்து கட்டுரைகள் வருகின்றன.
    திருக்குறள் ஆரிய சாத்திர நூற்களின் வழிநூலா? ஆய்வுத் தொடர்-1
    https://www.yarl.com/forum3/topic/212772-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-1/
    தமிழ்நாடு ஆரியநாடே என்பது உண்மையா – குறள் ஆய்வு-2
    https://www.yarl.com/forum3/topic/213020-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2/
    குறள் கூறும் ‘அறவாழி அந்தணன்’ ஆரியப்பிராமணரா? – குறள் ஆய்வு-3.
    https://www.yarl.com/forum3/topic/213455-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3/
    திருக்குறள் நால்வருண சாதிமுறையைப் பின்பற்றிய நூலா? – குறள் ஆய்வு-4(பகுதி1)
    https://www.yarl.com/forum3/topic/213703-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-4%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF1/
    திருக்குறள் நால்வருண சாதிமுறையைப் பின்பற்றிய நூலா? – குறள் ஆய்வு-4(பகுதி2).
    https://www.yarl.com/forum3/topic/213762-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-4%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF2/

  19. தமிழ் இலக்கியமான திருக்குறளை எதற்காக வடமொழி வழிப்பட்டதாக வலிந்து சொல்ல வேண்டும்? எனக்குப்புரியவில்லை.வடமொழியைத் தாழ்த்திப்பார்க்கவில்லை.
    தமிழைத் தமிழாக வாழவிடுங்கள்.இது என் வேண்டுகோள்.தீக்குறளைச் சென்றோதோம் என்ற ஆண்டாள் மொழிவுக்குத் தீமை தருகின்ற குறள் என்று சொன்னவர்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

  20. Thirukkural has always been rightly understood as a simple but higher genre of couplets in Tamil literature by literary scholars of the world of any language and is also translated in many languages purely for its universal literary values and liberal form of writing. It is a text with secular or liberal principles that makes it a great literature to be researched by those who study literature for its literary values. It is really pathetic and disgraceful for those who are religious, political fundamentalists and fanatic groups who are organizing programs merely to misinterpret or create misconceptions not knowing the basic difference between religious scriptures for absolute truth and liberal literature for relative truths. If they are courageous enough to seek knowledge discussions on such controversies must always include scholars and researches on a pluralistic context to analyze all perspectives rather than including any one religious and political group and shamelessly targeting another religious and political structure of colonial India when they are no different in their power structure agenda and have no courage to quest for true knowledge and find it.
    First of all the knowledge of what literature is and why it stands as relative truth and not absolute truth must be understood by all who are merely fundamentalist and fanatics in their respective knowledge. Literature may have its extrinsic affiliations in terms of personal biography, sociology, history, religion, politics etc. But above all this it has its very essence is in its intrinsic affiliations like its form or genre, structure, symbolism, myth, paradox etc. Now, for those who will confuse myth as something religious, in also a genre or form purely a work of art with its own literary principles for all mythology and is purely relative truth meaning liberal literature.
    It is always political power structures that turn these relative truths into absolute truth meaning sacred scriptures diluting its mythical literature, fine arts, social philosophy and culture for its own political agenda. When these power structures existed they rise and fall when these power structures fall. Examples are the well known Iliad or Aeneid by the Greek and Roman power structures. Their mythical literature was understood as absolute truth meaning sacred scriptures of their nation. They worshipped the characters their deities, founded worship centers using fine arts and established their social and cultural principles for their empires. With the rise of liberal philosophical discourse there arose skepticism and the subsequent fall of their nations and the religions ended as well. But the good news is, their liberal literature, fine arts, and its secular and liberal philosophies stand and still finds its expressions in various arts and natural philosophy. They are now rightly understood and well preserved as relative truths.
    The right thing for these religious and politically fundamental and fanatic groups should do is understand their own scriptures for its absolute truth rather than confuse literature texts in all its relative truths as absolute truths in their ignorance and misconceptions..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *