ஒரு விசுவாசமான கலகக்காரனின் வெளிவராத கடிதங்கள் – புத்தக அறிமுகம்

இந்த கொந்தளிப்பான காலத்தில் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் “ஒரு விசுவாசமான கலகக்காரனின் வெளிவராத கடிதங்கள்”. ஒரு எளிய ஹிந்து அல்லது இந்தியன் தினம் தினம் ஒரு கூர்மையான வாதத்தால் வீழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கிறான். ஒரு சாதரண பேச்சில் பகிரங்கமாக சீண்டப்படுகிறான். தற்செயலற்ற கட்டமைப்பு வாதத்தால் அவனுடைய நெஞ்சுறுதி புழுங்கலாக மாறி தேசத்தின் மீதே எரிச்சல் கொள்ள வைக்கும் அளவுக்கு கொண்டு செல்லப்படுகிறான்.

சமூகசேவை, கல்வி, மருத்துவம் தொடங்கி எல்லாமே இந்தியாவில் எப்படி ஒரு மதமாற்றும் கருவியாக, உள்நோக்கம் கொண்டதாக ஆகியிருக்கிறது என்பதை தன் இயல்பான தர்க்கத்தால் முன் வைத்திருக்கிறார் BR.மகாதேவன், கதைமாந்தர்களின் வழியாக.

இதில் கடிதப்போக்குவரத்தில் நடக்கும் விவாதங்கள் பெரும் சுவராஸ்யம் கொண்டவை. நான் சிறுவயதில் மு.வவின் “அன்னைக்கு” “நண்பருக்கு” போன்ற கடிதவழி பேசும் குறுநாவல்களை படித்திருக்கிறேன். வலிமையான நவீன தேசத்தையும்,சமூகத்தை குறித்தும் ஆழமாக உரையாடும் விதம் அமைத்திருப்பார் மு.வரதராசன். இதே போல தெரசா, மதமாற்றம் குறித்தெல்லாம் அற்புதமான கடிதவழி உரையாடலை உருவாக்கியிருக்கிறார் நூலாசிரியர். எப்படிப்பட்ட வாதங்களால் நாம் அன்றாடம் களத்தில் வீழ்த்தப்படுகிறோமோ, அது எல்லாவற்றிற்கும் வெகுசாதாரண மொழியில் பதில் சொல்ல,ஒரு தரப்பை உருவாக்கிக் கொள்ள இந்த புத்தகம் மிக முக்கியமானது.

புத்தகத்தை திருப்பூர் அறம் அறக்கட்டளை வெளியிடுகிறது. எழுத்தாளருக்கும், அறக்கட்டளைக்கும் நம் மனமார்ந்த நன்றியும், வாழ்த்தும்.

ஒரு விசுவாசமான கலகக்காரனின் வெளிவராத கடிதங்கள்
ஆசிரியர்: B.R.மகாதேவன்
அறம் பதிப்பகம் வெளியீடு
பக்கங்கள் : 656
விலை ரூ 550/-

புத்தகத்தை டயல் ஃபார் புக்ஸ் தளம் மூலம் இங்கு வாங்கலாம்.

தொலைபேசி மூலம் 044-49595818, +91 94459 01234, +91 9445 97 97 97 ஆகிய எண்களில் அழைத்தும் ஆர்டர் செய்யலாம்.

புத்தகத்தின் அத்தியாயங்கள்:

  • சமூக சேவை நிறுவனத்தில் சேர்தல்
  • தெரேசா
  • ராமகிருஷ்ண மடம், கிறிஸ்மஸ், சிறு தெய்வங்கள்
  • முதல் காதல்
  • அருணாச்சல பிரதேசமும் சீனாவும்
  • சீனா நம் நண்பன்?
  • முடிவற்று உதிக்கும் நிலவு
  • தேசத்தின் கடைசி புள்ளியில் இருந்து ஓர் சூர்யோதயம்
  • விவேகானந்தர் ஏன் காளி கோவில்கள் கட்டவில்லை?
  • சபரி மலையும் எல்லா வயதுப் பெண்களின் வழிபாடும்
  • இந்துத்துவம், கம்யூனிஸம் இரண்டின் பொது எதிரி
  • கம்யூனிஸத்தின் உண்மை முகம்
  • மரங்கள் விரும்பினாலும் காற்று விடுவதில்லை
  • கீழ்வெண்மணி
  • மரீச்ஜபி
  • விலக்கப்படும் வட கிழக்கு
  • அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட
  • சிலுவையைக் கொஞ்சம் வளைத்தால் திரிசூலம்
  • கார்கில் போர்
  • ராம ஜென்ம பூமி
  • நாட்டார் வழிபாடும் ரத்தபலியும்
  • களவு
  • யார் கொன்றது?
  • இந்துக்களின் சேவையும் மதமாற்றம் தானா?
  • கலையும் புண்படுத்தும் சுதந்தரமும்
  • குஜராத் – ஊடகக் கலவரங்கள்
  • காஷ்மீர் சோகம்
  • குஜராத் கலவரமும் காந்தியும்
  • காந்தியின் பிழைகள்
  • விதவை மறுமணம்
  • அன்பில் கலக்கும் அரசியல்
  • அரசியல் தர்மம்
  • காவிரி பிரச்னை
  • காவிரி பிரச்னைக்கான தீர்வு
  • போய்வாருங்கள் தாத்தாவே
  • புதிய உலகம் பிறந்தது
  • இஸ்லாமியர் முதல் செங்கல் எடுத்துக்கொடுக்க…
  • கை நழுவும் கனவு
  • தேவனின் உருவில் உலவும் சாத்தான்
  • கோ மாதா?
  • டாக்டர் அம்பேத்கர்
  • வர்ணம்
  • மனுஸ்ம்ருதி
  • நமக்கான ஊடகங்கள்
  • வீடு திரும்புதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *