கமலஹாசன் நம்மவரும் இல்லை நல்லவரும் இல்லை – 1

சென்ற பாராளுமன்ற தேர்தலின் பொழுது பெரும் அளவில் தமிழக நடுத்தர வர்க்க மக்கள் குறிப்பாக பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கமலஹாசன் கட்சிக்கு வாக்களித்தனர். அதன் காரணமாகவே திமுக கூட்டணி பல தொகுதிகளிலும் வெற்றி அடைந்தது.

பிராமணர்களும் நடுத்தரவர்க்கத்தினரும் ஏன் கமலஹாசனை ஆதரித்தனர் என்ற காரணத்தை முதலில் பார்க்கலாம்.

பிராமணர்களில் பலரும் நன்கு படித்தவர்கள். ஓரளவுக்கு நடுத்தர வர்க்க வாழ்க்கை வாழ்பவர்கள். அவர்களில் பலரும் ஊழலற்ற ரவுடித்தனம் இல்லாத பிராமணக் காழ்ப்பு இல்லாத வேட்ப்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்றும் அதை கமலஹாசன் அளிப்பார் என்றும் உண்மையாகவே நம்பினார்கள். அப்படி வாக்களித்தவர்களில் பலருக்குக் கூடுதலாக அவர் “நம்மவர்” அதாவது நம் ஜாதியைச் சேர்ந்தவர் என்ற அபிமானமும் இருந்ததை மறைக்க முடியாது. அப்படியாகப் பட்ட ஜாதி அபிமானம் காரணமாக ஜெயலலிதாவுக்குப் பிறகு நம் இனத்தைச் சேர்ந்த ஒருவர் வருகிறார் அவரை நாம் ஆதரிக்க வேண்டும் என்று தவறுதலாக நினைத்து அவருக்கு ஆதரவு அளித்து விட்டார்கள். மேலும் அவர் அறிவானவர் திறமையானவர் ஊழலற்ற ஆட்சியை அளிப்பார் என்ற போலியான பிம்பம் ஒன்றை நம்பி விட்டார்கள். ஆனால் அது தவறு. அவர் தன்னை நிச்சயமாக ஒரு பிராமணராக என்றும் கருதிக் கொண்டதும் இல்லை அவர்களுக்காக என்றும் குரல் எழுப்பியவரும் ஆதரவு அளித்தவரும் அவர்கள் பாதிக்கப் பட்ட பொழுது ஒரு சிறிய ஆதரவையாவதுக் காட்டியவர் கிடையாது. ஆகவே விபரம் அறியாத, கமலஹாசனின் உண்மை முகம் தெரியாத அப்பாவி பிராமணர்கள் செய்த தவறு அவர்களுக்கே வினையாகி திமுகவின் வெற்றியில் கொண்டு போய் விட்டு விட்டது. கமலஹாசன் நம்மவர் என்ற ஒரு சினிமாவில் நடித்திருக்கிறாரே ஒழிய அவர் நிச்சயமாக நம்மவரும் கிடையாது நல்லவரும் கிடையாது. ஏன் என்பதை விவரமாகப் பார்க்கலாம்.

பிராமணர்கள் ஏன் கமலஹாசனை ஆதரிக்கக் கூடாது?

(1) கமலஹாசன் தன்னை ஒரு நாத்திகவாதியாகவே கடவுள் நம்பிக்கை அற்றவராகவே மேலும் இந்து மத நம்பிக்கைகளை மட்டுமே இழிவு படுத்தும் ஒரு பகுத்தறிவுவாதியாகவே தன்னை முன்னிலைப் படுத்தி வந்துள்ளார். அவர் என்றுமே தன்னை ஒரு பிராமண இனத்தைச் சேர்ந்தவர் என்றோ அவர்களின் நலனில் அக்கறைக் கொண்டவர் என்றோ அறிவித்துக் கொண்டவர் கிடையாது.

பிராமணர்களின் அக்ரஹாரங்களை தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்றும் அவர்களைக் கொன்று அழிக்க வேண்டும் என்றும் பேசிய ஈ வெ ராமசாமி நாயக்கனின் பேரன் என்று கமலஹாசன் தன்னை பெருமையுடன் அறிவித்துக் கொண்டவர். அதற்காக திக வீரமணியினால் பாராட்டப் பட்டவர். பிராமணர்களை அழிக்க வேண்டும் என்று சொன்ன ஈ வெ ரா வின் வாரிசாக தன்னை அறிவித்துக் கொண்ட கமலஹாசனா பிராமணர்களில் ஒருவர்? நிச்சயம் கிடையாது. அவர் குலத்தை அழிக்க வந்த கோடாரிக் காம்பு மட்டுமே. ஒரு ஈ வெ ரா ஆதரவு நாத்திகவாதியை எப்படி பிராமணர்கள் தங்களில் ஒருவர் என்று நினைக்க முடியும்?

(2) பிராமணர்கள் பல முறை தாக்கப் பட்டுள்ளார்கள், அவர்களின் பூணூல்கள் அறுக்கப் பட்டன. பிராமணப் பெண்கள் கொடூரமாகக் கொல்லப் பட்டார்கள். இவற்றில் எவற்றுக்காவது சின்ன ஒரு கண்டனமாவது சின்ன ஒரு முணுமுணுப்பையாவது லேசான ஒரு எதிர்ப்பையாவது என்றாவது இந்த கமலஹாசன் வெளிப்படுத்தியது உண்டா? சக ஜாதியினர் என்று கூட வேண்டாம் மனிதாபிமான அடிப்படையிலாவது அப்பாவி பிராமணர்கள் மீது திக திமுகவினர் நடத்தும் தாக்குதல்களை அவர் என்றாவது கண்டித்தது உண்டா? பிராமணர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் உடனே ஓடி வரும் அர்ஜுன் சம்பத், எஸ் வி சேகர், ஹெச்.ராஜா போன்றவர்கள் அல்லவா நம்மவர்களாக நம் நம்பிக்கைக்குயுரியவர்களாக இருக்க முடியும்? பிராமணர்களின் மீது தாக்குதல்களை என்றுமே கண்டு கொள்ளாத அப்படி தாக்கும் பொறுக்கிக் கும்பல்களை ஆதரிக்கும் அவர்கள் புகழ்பாடும் கமலஹசான் எப்படி எப்படி ஐயா நம்மவராக இருக்க முடியும்? அப்படி ஒரு சுயநலவாதியை பிராமண வெறுப்பாளனை எப்படி நாம் நம்மவராகக் கருதி ஆதரிக்க முடியும்? இனியாவது சிறிதாவது சிந்திபீர்களா ?

(3) இன்று பிராமணர்கள் தமிழக அரசு பள்ளிகளிலோ கல்லூரிகளிலோ வேலைகளிலோ சேரவே முடியாத நிலையில்தான் இட ஒதுக்கீட்டு அமைப்பு உள்ளது. அதில் வசதியானவர்கள் எப்படியாவது வேறு மாநிலங்களிலோ தனியார் பள்ளி கல்லூரிகளிலோ படித்து முன்னேறி விடுகிறார்கள். தனியார் நிறுவனங்களிலோ வெளிநாடுகளிலோ வேலைக்குப் போய் விடுகிறார்கள். ஆனால் அவர்களில் இன்னும் பெரும்பாலானோர் அடித்தட்டு ஏழைகளாகவே இருக்கிறார்கள். ஏழை அர்ச்சகர்களும், ஏழை சமையல் வேலை செய்பவர்களும், அப்பளம் ஊறுகாய் செய்து விற்றுப் பிழைப்பவர்களும், ஹோட்டல் சர்வர்களும், ஈமக்கடன் செய்பவர்களும் ஏழைகளும் எண்ணற்றோர் உள்ளார்கள். அவர்களின் ஏழைக் குழந்தைகளுக்கு எந்தவொரு இட ஒதுக்கீடும் கிடையாது. அதைப் போக்க பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமுதாயத்தில் ஏழையாக உள்ளவர்களுக்காக ஒரு 10% இட ஒதுக்கீடு கொண்டு வந்துள்ளார். அதை தமிழகத்தில் மட்டும் இன்னமும் அமுல் படுத்தவில்லை. அதை அமுல் படுத்துவோம் என்று பா ஜ க தேர்தல் அறிக்கையில் சொல்லியுள்ளார்கள். ஆனால் அப்படி பிராமணர்களில் ஏழைகளுக்குக் கூட இட ஒதுக்கீடு அளிப்பதை எதிர்ப்பவர்தான் இந்தக் கமலஹாசன். இவர் என்றாவது எங்காவது முற்படுத்தப் பட்டவர்களில் உள்ள ஏழைகளுக்கு 10% ரிசர்வேஷனை உடனடியாக தமிழக அரசு அமுல் செய்ய வேண்டும் என்றோ நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என்றோ சொல்லியுள்ளாரா? மாறாக இவரது தேர்தல் அறிக்கையில் தனியார் நிறுவனங்களில் கூட பிராமணர்கள் வேலை பெறுவதை எதிர்த்துள்ளார். உங்கள் வாரிசுகளுக்கு தனியார் நிறுவனங்களில் கூட நாளைக்கு வேலை கிடைக்காமல் தெருவில் தள்ளப் போகும் இந்தக் குலத் துரோகி கமலஹாசனுக்கா உங்கள் ஆதரவு? இவரை ஆதரிப்பதன் மூலமாக உங்கள் வாரிசுகளுக்கு நீங்களே துரோகம் இழைக்கலாமா ? பிள்ளைகளைப் பெற்ற பிராமணர்களே சற்று சிந்தியுங்கள்.

இவரா பிராமணர்களில் ஒருவர்? இவரா நம்மவர்? இவருக்கா அந்தணர்களின் ஆதரவு? சிந்திப்பீர் பிராமணர்களே, சிந்திப்பீர்.

(4) ஆண்டாள் தாயாரை வைர முத்து ஆபாசமாக பேசிய போதும், கடவுள் முருகணை திமுக திக ஆதரவு கருப்பர் கூட்டம் ஆபாசமாக வசை பாடிய பொழுதும் சபரிமலை விஷயத்தில் கம்னியுஸ்டுகள் கோவிலின் ஆகம விதிகளுக்குப் புறம்பாக இந்துக்களுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்த போதும் இந்தக் கமலஹாசன் என்றாவது தன் எதிப்பை வன்மையாகக் காட்டியிருப்பாரா? இந்துக்களின் நம்பிக்கைகளை அவமதிக்கக் கூடாது என்று எங்காவது போராடியிருப்பாரா? மாறாக அதே கேரள கம்னியுஸ்டுகளை ஆதரித்தவர் இந்த கமலஹாசன், திக கும்பல்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர் இந்தக் கமலஹாசன், இந்துக் கோவில்களையெல்லாம் இடிப்பேன் என்றும் இந்துக் கோவில்களின் கோபுரங்கள் எல்லாம் ஆபாசமானவை என்றும் பாப்பானை வெட்டு பாப்பாத்தியைக் கட்டு என்று சூளுரைக்கும் திருமாவளவனை தன் அன்புத் தம்பி என்று அழைத்து ஆதரிப்பவர் கமலஹாசன். அனுதினமும் பிராமணர்களை ஆபாசமாகப் பேசியும் இழிவு செய்து வரும் சுபவீரபாண்டி, வீரமணி போன்றவர்களை பாராட்டி ஆதரிப்பவர் அல்லவா இந்தக் கமலஹாசன்? இவருக்கு ஆதரவு அளிப்பது என்பது எவ்வளவு பெரிய மகா பாவம்? எவ்வளவு கேவலமான செயல்? வணங்கும் கடவுளுக்கு செய்யும் துரோகம்? நாளைக்கு இவரும் இந்துக் கோவில்களையெல்லாம் ஏன் இடிக்க மாட்டார்? நீங்கள் ஆண்டாள் தாயாரை வணங்கும் வைணவராக இருக்கலாம் முருகனை வணங்கும் சைவராக இருக்கலாம் எவராக இருந்தாலும் இந்துக்களின் விரோதியான இந்த கமலஹாசனை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். நம்மவர் என்று மயங்கி விடாதீர்கள். இந்துக் கடவுள்களை இழித்தும் பழித்தும் அசிங்கமாகப் பேசியும் படம் எடுத்தும் இழிவு படுத்தும் எந்த நிலையிலும் பிராமணர்களில் ஒருவராக இருக்கவே முடியாது

(5) இவரோ தன்னை நாத்திகர் என்றும் ஈ வெ ராவின் பேரன் என்றும் சொல்லிக் கொள்பவர். ஆனால் பிராமணர்களைக் கிண்டலும் கேலியும் செய்வார். கேட்டால் அவரும் பிராமணர்தானே அந்த உரிமையில் பாப்பத்தியம்மா சிக்கன் சாபிடுகிறாயா என்றும் உற்சவப் பெருமாளை கக்கூஸில் வைத்துக் கொள் என்றும் கிண்டலடிப்பதில் என்ன தப்பு என்றும் பிராமணர்கள் சிலரே கேட்க்கிறார்கள். தன்னை நாத்திகன் என்றும் பிராமணர்களின் எதிரியின் பிராமணர்களைக் கொன்று அழிக்க நினைத்தவனின் பேரன் என்றும் சொல்லிக் கொள்ளும் ஒருவருக்கு அந்த உரிமை கிடையாது. அது பிராமணர்கள் மீது இழைக்கப் பட்ட அசிங்கம் அவமரியாதை மட்டுமே என்பதை உணருங்கள்.

(6) அன்பே சிவம் என்ற தன் சினிமாவில் இந்துக்களை வில்லன்களாகவும் கிறிஸ்துவர்களை நல்லவர்களாகவும் சித்தரித்திருப்பார். இவர் கிறிஸ்துவ மதத்திற்காக பிரசாரம் செய்ததைப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார். இவரது குடும்பத்தினர் பெரும்பாலும் இன்று கிறிஸ்துவர்களாக மதம் மாறி விட்டிருக்கிறார்கள். இவரும் , இவர் சகோதரர்களும் தங்களை கிறிஸ்துவர்களாக முன்னிறுத்திக் கொள்வதில் பெருமை அடைபவர்கள். இவர் எப்படி பிராமணர்களில் ஒருவராக இருக்க முடியும் என்று சற்றே சிந்தியுங்கள்.

(7) சரி ஒரு பேச்சுக்கு நீங்கள் ஒரு கடவுள் நம்பிக்கையில்லாத சடங்குகளில் நம்பிக்கையில்லாத முற்போக்குப் பிராமணர் என்று கூட வைத்துக் கொள்வோமே. அப்படியாக இருந்தாலும் நீங்கள் அரசாங்கத்தின் படி முற்படுத்தப் பட்டவர்தானே? நீங்கள் அடிமட்ட ஏழையாக இருந்தாலும் உங்களுக்கு எந்தவொரு சலுகையும் மறுக்கப் படும்தானே? போடா பாப்பாரப் பயலே என்றுதானே உங்களையும் வசை பாடுகிறார்கள்? உங்கள் வீட்டுப் பெண்களை இழிவு செய்கிறார்கள்? அப்படியானால் நீங்களும் ஒரு நம்பிக்கையுள்ள பிராமணர் படும் அதே அவலங்களை தானே அனுபவிக்கப் போகிறீர்கள்? பின் எப்படி உங்களையெல்லாம் ஒரு மனிதராகக் கூட மதிக்காமல் கொன்று தீர்க்க வேண்டும் என்று ஊளையிடும் திகவையும் திருமாவையும் ஆதரிக்கும் ஒரு கமலஹாசனை ஆதரிக்க உங்கள் முற்போக்கு இடம் அளிக்கிறது?

ஆகவே அந்தணர்கள் அடிபட்ட பொழுதெல்லாம் அவமானப் படுத்தப் பட்ட பொழுதெல்லாம் தாக்கப் பட்ட போதெல்லாம் இவர் என்றுமே அதற்காக ஒரு சிறிய கண்டனத்தைத் தெரிவித்தவர் அல்லர். அந்தணர்களில் ஏழைகளுக்குக் கூட மோடி அரசு தரும் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர். இவர் ஆட்சிக்கு வந்தால் தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டைக் கொணர்வேன் என்று தேர்தல் அறிக்கை அளித்திருப்பவர் இப்படியாகப் பட்ட ஒருவரை நீங்கள் நம்மில் ஒருவர் என்ற தவறான புரிதல் இல்லாத தன்மையுடன் ஆதரித்தால் நாளைக்கு நீங்களும் உங்கள் வாரிசுகளுமே பாதிக்கப் படுவீர்கள். இவருக்கு ஓட்டுப் போடுவதால் இவர் ஜெயிக்கப் போவதில்லை மாறாக இவர் பாஜக ஆதரவு ஓட்டுக்களைப் பிரித்து திமுக ஜெயிக்க வழிவகுக்கிறார் என்பது கூடவா அறிவான அந்தணர்களுக்குப் புரிவதில்லை. திமுக ஜெயிக்கும் பட்சத்தில் உங்கள் வீட்டுப் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது, உங்கள் நிலத்துக்கும் வீடுகளுக்கும் பாதுகாப்பு இருக்காது உங்கள் உடலுக்கும் உடமைக்கும் உயிருக்கும் கூட பாதுகாப்பு இருக்காது அதற்காகவா இவரை நீங்கள் ஆதரிக்கப் போகிறீர்கள்.

உங்கள் குழந்தைகளுக்கு உங்களில் எவராவது கமலஹாசனை ஒரு ரோல்மாடலாக காட்டும் துணிவு உண்டா? அவரை மாதிரி ஒழுக்கமாக அவரை மாதிரி தெளிவாக வர வேண்டும் என்று உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்வீர்களா? உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு வழிகாட்டியாகக் காட்ட உங்களால் முடியாத ஒருவரை எப்படி நாட்டின் முதல்வராக வருவதற்கு வாக்களிக்கிறீர்கள்? இது அறமா? தகுமா? முறையா? சிந்திப்பீர்.

அந்தணர்கள் அறிவிழக்கலாகுமா? அந்தணர்கள் அறம் இழக்கல் தகுமோ? நீங்கள் செய்த ஜெபமும், நோன்பும், வழிபாடும், பக்தியும் விழலுக்கு இழைத்த நீராக்குவது தகுமோ? அது அறிவான செயலோ? உங்கள் சந்ததியினருக்கு இவருக்கு ஓட்டுப் போடுவதன் மூலமாக துரோகம் இழைக்கலாமா? பாவத்தைச் சம்பாதிக்கலாமா? சிந்தியுங்கள் பிராமணர்களே. துஷ்டனைக் கண்டால் தூர விலக வேண்டும். அவன் துஷ்டன் அல்லன் நம்மில் ஒருவன் என்ற மயக்கம் இருக்கலாகாது. ஆகவே கமலஹாசன் நம்மவரும் அல்லர் நல்லவரும் அல்லர். அது விஷயம் தெரியாததினால் ஏற்பட்டுள்ள ஒரு மாயையை மட்டுமே. ஆகவே மாயையில் இருந்து விலகி தெளிவு பெற்று கமலஹாசனையும் அவர் கட்சியினரையும் எதிர்த்து வாக்களிப்பீர். உங்களுக்காக 10% ரிசர்வேஷன் கொண்டு வந்துள்ள மோடியின் பா ஜ க கூட்டணியை ஆதரித்து தாமரைக்கு வாக்களிப்பீர். அந்தணர் என்றால் அறவோர் அறிவுடையோ என்ற பெயருக்குக் தயவு செய்து களங்கம் ஏற்படுத்தி விடாதீர்கள் உங்கள் கால்களில் விழுந்து நமஸ்கரித்து வேண்டிக் கொள்கிறேன். உங்கள் குலத்தில் பிறந்ததினால் மட்டுமே அவர் உங்களில் ஒருவராக ஆகி விட முடியாது. உங்களுக்காக உங்கள் சந்ததியினருக்காக 10% ரிசர்வேஷனாவது ஒதுக்கியுள்ள உங்கள் வழிபடும் இடங்களை பாதுகாக்கக் கூடிய நரேந்திர மோடி மட்டுமே உங்கள் நம்பிக்கைக்குரிய நம்மவராக இருக்க முடியும் என்பதை உணருங்கள்.

சரி. கமலஹாசன் நம்மவர் இல்லை என்று பார்த்து விட்டோம். அவர் நல்லவர்தானா அவரை நம்பி நாட்டை ஒப்படைக்க வேண்டாம் ஒரு தொகுதியையாவது ஒப்படைக்க முடியுமா என்பதை அடுத்து பார்க்கலாம்.

(தொடரும்)

அடுத்த பகுதி >>

தேர்தல் 2021 பதிவுகள்:

One Reply to “கமலஹாசன் நம்மவரும் இல்லை நல்லவரும் இல்லை – 1”

  1. உண்மையைச் சொன்னீர்கள் உரக்கச் சொன்னீர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *