ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்: அதள பாதாளம்

எதிர்பார்த்தை விட வேகமாக காபூலை கைபற்றி ஆப்கனை தங்கள் முழு கட்டுபாட்டில் கொண்டுவந்துவிட்டது தாலிபன் இயக்கம். வெளிநாட்டு உதவி இல்லாமை தாலிபன்களின் முன் தாக்குபிடிக்க முடியா நிதி நிலை என பல விவகாரங்களால் அரசு அதிகாரத்தை தாலிபன்களிடம் ஒப்படைத்து விட்டது

It is sometimes used together with other medications to treat people with long-term gastritis, and in people with the rare inherited form of an overactive gastric acid secretion. The safety of the drug was Pailin glucreta 5 mg price established in several large studies of infants, including one involving 1.2 million infants from more than 90 countries.[@b1-asm-2-142] it is a potent antibiotic against tuberculosis. Provera is an oral contraceptive, approved for use in adults.

You will be asked to choose the dapoxetine tablets from the available options. They are not able to say that these two things are clomid cycle success rates Rawmarsh all about. This page describes how to buy dapoxetine in pakistan, how to use dapoxetine tablets, where to buy dapoxetine tablets in pakistan, and how to get dapoxetine in pakistan, including dapoxetine side effects.

It is used for pain management, as a preventive treatment for cancer, and for chronic pain management. Generic zithromax for oral use, including the brand names zithromax, zoloft, zyn, and aromax.generic zithromax is used for the prevention of sexually transmitted diseases (including bacterial stds) such as bacterial gonorrhea.zithromax 500 mg - a generic version of this medicine is also available in canada, the eu, and many other countries around the world.it may cause a serious infection when you take too much, especially when you take a lot of medicine.the generic name for this drug in canada is zithromax (zyto), which means "dear friend." zithromax buy clomiphene citrate side effects is used to prevent pregnancy. The percentage of women aged 15-19 seeking abortion in australia between 1999 and 2002 was 2.2% (1,988 women)

உலக நாடுகளிடம் மிகபெரிய அமைதி நிலவுகின்றது, இந்த அமைதி மிகபெரிய புயலுக்கு முன்னரான அமைதியா இல்லை பின்னரான அமைதியா என்பது தெரியவில்லை

ஆப்கன் எனும் எண்ணெய் வளமோ இதர வளமோ இல்லா நாட்டில் ஆண்டுகணக்கில் பல டிரில்லியன் டாலர்களை கொட்டி காவலிருக்கும் அவசியம் அமெரிக்காவுக்கு இல்லைதான் அதே நேரம் அங்கிருந்து அமெரிக்க பாதுகாப்புக்கு சவால் வர கூடாது எனும் ரகசிய ஒப்பந்ததோடு வெளியேறிவிட்டார்கள்

மிக நவீன ஆயுதங்களையும் இன்னபிற ஆயுதங்களையும் தாலிபன்களிடம் விட்டுவிட்டு வெளியேற அமெரிக்கா ஒன்றும் பைத்தியகார நாடு இல்லை. அவர்களிடமும் ஏதோ கணக்கு இருக்கலாம்

அதே கணக்கு சீனா மற்றும் ரஷ்யாவிடமும் இருக்கலாம்

மொத்தத்தில் ஆப்கனின் தாலிபன்கள் ஒரு குட்டிசாத்தான், அந்த குட்டிசாத்தானை யார் கட்டுபடுத்தி யார் மேல் ஏவுகின்றார்கள் என்பது கண்ணுக்கு தெரியா விஷயம்

இனி காட்சிகள் மாறும்

ஆப்கன் நிலை அதள பாதாளத்துக்கு செல்லும், ஆப்கன் பெண்களின் நிலை மிக பரிதாபமாகும். அதே நேரம் அல் கய்தாவின் இரண்டாம் தலைவர் ஜவஹரி போன்றோர் இன்னும் இருக்கும் நிலையில் ஐ.எஸ் இயக்கத்துக்கு ஆப்கனில் ஆதரவு உண்டு எனும் நிலையில் மிக பெரிய தாக்குதல்கள் உலகெல்லாம் நிகழ்ந்தாலும் ஆச்சரியமில்லை

இந்தியாவின் காஷ்மீரின் அமைதிக்கு தாலிபன்களின் முக்கால கூட்டாளி பாகிஸ்தானின் ஆசியுடன் அவர்களால் சவால் கொடுக்க முடியும்

எல்லா நாடுகளுமே ஓருவித அரசியல் கணக்குடன் ஆப்கனை நோக்கி கொண்டிருக்கின்றன.

தாலிபன்களின் ஆட்சி நிச்சயம் நெடுங்காலம் நீடிக்க வாய்ப்பில்லை உலகம் அவர்களை அங்கீகரிக்க போவதில்லை எந்த நாட்டு தூதரகமும் அங்கு இயங்க போவதில்லை ஐ.நா போன்ற அமைப்புகளின் வாசலுக்கு கூட யாரும் அவர்களை விட போவதில்லை

இதனால் ஆப்கன் மக்கள் மாபெரும் சிக்கலை சந்திப்பார்கள் என்றாலும் அதை பற்றி கவலையுறுவார் யாருமில்லை

தாலிபன்களின் மிக கொடிய காட்டுமிராண்டிதனத்தையும் இன்னும் பல அடாத செயல்களையும் மானிட குலத்துக்கே அவமானம் தேடிதரும் சில நடவடிக்கைகளையும் காணும் பொழுது மனம் வரலாற்று காலத்துக்கு தாவுகின்றது

இந்த நாகரீக காலத்திலே இப்படி இருக்கும் அந்த கூட்டம் கஜினி, கோரி காலத்தில் எப்படி இருந்திருக்கும்?

இன்றே இவ்வளவு அழிச்சாட்டியம் செய்யும் கும்பல் அவர்களை தட்டி கேட்க யாருமில்லா காலத்தில் எவ்வளவு ஆட்டம் ஆடியிருக்கும்?

அவர்களின் இந்திய படையெடுப்பு மதுரை வரையிலான படையெடுப்பு எவ்வளவு கொடூரமாக இருந்திருக்கும்?

இன்று சொந்த நாட்டு மக்களையே குறிப்பாக பெண்களையே படாத பாடு படுத்தும் அக்கோஷ்டி அன்று பாரத பெண்களை என்னபாடு படுத்தியிருக்கும்?

பாமியன் புத்த சிலைகளை வெறும் கற்சிலைகளையே தகர்க்கும் கோஷ்டிகள் இந்திய இந்து ஆலயங்களை எப்படி எல்லாம் சூறையாடியிருக்கும்

தாலிபன்கள் ஆடும் ஆட்டத்தில் மெல்ல சிரிக்கின்றார்கள் கஜினியும், கோரியும், தைமூரும்

ஆம், இன்று ஆப்கன் படும் கொடிய சித்திரவதையினைத்தான் அன்று இந்தியா சுமார் 500 வருட காலம் அனுபவித்தது. ஒவ்வொரு இந்தியனும் ஆப்கனின் இன்றைய காட்சிகளில் இருந்து வரலாற்றை புரட்டி பாடம் கற்றுகொள்ள வேண்டும்…

அவசரமாக சென்னை காலி செய்யபட்டால் கோயம்பேடு பேருந்து நிலையமும் எழும்பூர் ரயில் நிலையமும் எப்படி  மக்கள் நெருக்கடியினை சந்திக்குமோ அப்படி சந்திக்கின்றது ஆப்கன் விமானநிலையம்

மக்கள் உயிர்தப்ப வேறு வழியில்லை, நகரம் முழுக்க தாலிபன்களால் சூழபட்ட நிலையில் விமானம் ஒன்றே வழி அதுவும் சம்பந்தபட்ட நாடுகள் தங்கள் மக்களை காக்க அனுப்பும் விமானங்களில் முண்டியடித்து ஏறுகின்றார்கள் ஆப்கன் மக்கள்

கூட்டத்தை கட்டுபடுத்த அமெரிக்க ராணுவம் துப்பாக்கி சூடெல்லாம் நடத்தி 5 பேர் பலியாயினர்

காந்தகார் உள்ளிட்ட முக்கிய சாலைகளை தாலிபன்கள் கைபற்றியபின் உணவு நெருக்கடி அதிகமாகி பசியால் பல லட்சம் பேர் வாடிகொண்டிருப்பது கண்ணீர் காட்சிகள்

வரலாற்றில் மிக கடுமையான மானுட குல நெருக்கடி அங்கே நடந்து கொண்டிருக்கின்றது, இஸ்லாமிய மக்களின் இந்த துயரை துடைக்க சக இஸ்லாமிய நாடுகளோ, இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்போ கொஞ்சமும் மூச்சே விடாததுன் மாபெரும் அவலம்

சொந்த மக்களை இப்படி விரட்டியடித்துவிட்டு என்ன இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை தாலிபன்கள் அமைக்க போகின்றார்களோ தெரியாது

இந்த இஸ்லாமியர்களையே காக்க தெரியா இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலை எப்படி வீழ்த்தி பாலஸ்தீனமும் ஜெருசலமும் அடையபோகின்றார்களோ தெரியவில்லை..

ஆப்கானிஸ்தானில் இருந்து பலரை இந்தியாவுக்கு கொண்டு வரமத்திய அரசு முயல்வதை பற்றி சில சலசலப்புகள் தென்படுகின்றன‌

ஆப்கனிலும் சிறுபான்மை இந்துக்கள் உண்டு, சீக்கியர்கள் உண்டு அதாவது ஆப்கன் குடிமக்களாக உண்டு. இதுபோக இந்தியா செயல்படுத்திய பல ஆப்கன் நல திட்டங்களில் பணியாற்றிகொண்டிருப்போர் உண்டு, ராஜதந்திரிகளும் உண்டு

அவர்களைத்தான் இந்தியா அழைத்து கொண்டு வருகின்றது

ஈரான் ஷியா நாடு, அது ஆப்கனில் இருந்து ஷியா மக்கள் வரலாம் என எல்லையினை திறக்கின்றது. வடக்கே தஜிக் இன மக்கள் இன்னும் சில மக்கள் தங்கள் நாட்டுக்குள் வர முன்னாள் சோவியத் நாடுகள் அனுமதிக்கின்றன‌

சீக்கியருக்கும் , இந்துக்களுக்கும் யார் அடைக்கலம் கொடுப்பார்கள்? இந்தியாதான் கொடுக்க வேண்டும் அதைத்தான் இந்தியா செய்கின்றது

இது போக இன்னும் சில அவசர கால உதவிகள் உண்டு. அதாவது அமெரிக்க ஆட்சி காலத்தில் அவர்களுக்கு உதவிய ஆப்கானிய மக்கள் பலர் உண்டு

1947ல் தன் அடிவருடிகளை இந்திய ஆட்சியாளராக வைத்தது போல் ஆப்கானில் வைக்க முடியாது, தாலிபன்கள் தொலைத்துவிடுவார்கள்

இதனால் 1947லே நேரு, காந்தி, இன்னும் பலரை வெள்ளையனோடு அனுப்பியிருக்க வேண்டியது போல் ஆப்கனில் அனுப்புகின்றார்கள்

துரித கதியில் இவர்களை அனுப்ப முடியாது என்பதால் பல நாடுகள் வேறு மாதிரி அவர்களை அழைத்து வந்து பின் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அனுப்புகின்றன, இதில் இந்தியாவும் உதவுகின்றது அவ்வளவுதான் விஷயம்…

தாலிபன்கள் தங்கள் ஆட்சியினையும் அறிக்கையினையும் ஆரம்பித்துவிட்டார்கள், ஆப்கன் அதிபர் இஷ்ரப் கனி தஜிகிஸ்தானுக்கு தப்பிவிட்டார் என அறிபடும் வேளை, காபூலில் பல நாட்டு தூதர்களும் மக்களும் இன்னும் முழுமையாக மீட்கபடாத நிலையில் தாலிபன்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்

“நாம் காபூலுக்குள் புகுந்து வன்முறை செய்ய விரும்பவில்லை ஏனெனில் எமக்கு வன்முறை பிடிக்காது. நாங்கள் இப்பொழுது சீர்த்திருத்தபட்ட புதிய தாலிபன்களாக உலகம் முன் நிற்கின்றோம்

இதனால் காபூலை சுற்றி காவலிருக்கின்றோம், அரசு எங்களிடம் அமைதியாக ஆட்சியினை ஒப்படைக்க வேண்டும் என எதிர்பார்த்துகொன்டிருக்கின்றோம்

ஆப்கானிய ராணுவமே, காவல்துறையே, அரச துறையே யாரும் அஞ்ச வேண்டாம், உங்களையெல்லாம் நாங்கள் அப்படியே பாதுகாப்போம் நீங்கள் நாம் சொல்லும் உத்தரவை ஏற்றால் போதும்”

இப்படி சொல்லிவிட்டு நிறுத்தினால் அது என்ன தாலிபன்? அடுத்து அவர்கள் சொன்னதுதான் அவர்களின் வழக்கமான சீரியஸ் காமெடி

“வெளிநாட்டு மக்கள் பாதுகாப்பாக வெளியேற நாம் முழு ஒத்துழைப்பு கொடுப்போம், அவர்கள் அவர்கள் நாட்டுக்கு செல்லட்டும். அதே நேரம் ஆப்கனில் அவர்கள் தொடர்ந்து தங்கி இருக்க விரும்பினால் நாம் நீண்ட கால விசா கொடுத்து இந்த இனிய நாட்டிலே அவர்களை வாழ செய்வோம்”…

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் மிக வேகமாக முன்னேறும் நிலையில் அவர்களின் அதிரடி உலகை திகைக்க வைக்கின்றது

தங்களின் எதிரிகள், மக்கள்  எழுச்சி படை, ஷியா இயக்கம் இன்னும் சன்னிகளுக்கு எதிரான இயக்கத்தையெல்லாம் எளிதில் முறியடிக்கும் தாலிபான்கள் பல இடங்களில் அரச படைகளை சரணடைய வைத்து முன்னேறுகின்றனர்

அரச படைகளில் சில பைலட்டுகளை தாலிபனாக்கி அல்லது பாகிஸ்தான் விமான படையில் சிலரை அவசர தாலிபன்களாக்கி இப்பொழுதெல்லாம் தாங்கள் கைபற்றிய‌ ஹெலிகாப்டரில் பறக்கின்றனர் தாலிபன்கள், எனினும் அதை தாக்குதலுக்கு பயன்படுத்தாமல் அவர்களின் போக்குவரத்துக்கு மட்டும் பயன்படுத்துகின்றனர்

உலகிலே  ஹெலிகாப்டர் வைத்திருக்கும் ஒரே அழிச்சாட்டிய கோஷ்டி இப்பொழுது தாலிபன்கள் தான்

இந்நிலையில் காந்தகார், ஹேரட் போன்ற இடங்கள் வீழ்ந்ததை அடுத்து காபூலை அவர்கள் எப்பொழுதும் கைபற்றும் வாய்ப்பு வந்தாயிற்று

இந்நிலையில் 500 அமெரிக்க வீரர்களும் ராஜதந்திரிகளும் மீட்கபடா நிலையில், அவர்களை தாலிபன்கள் சுற்றிவிட்ட நிலையில் மிக பெரிய அவமானத்தில் சிக்கியது அமெரிக்க, ஆம் அவர்களை தாலிபன்கள் பிடித்துவிட கூடும்

1979ல் ஈரானில் அமெரிக்க தூதர்களை பிடித்து கொண்டு கோமேனி அமெரிக்க முகத்தில் கரி பூசியது போல் ஆகிவிட கூடாது என அமெரிக்கா அவர்களை மீட்க படைகளை அனுப்புகின்றது

ஆயிரம் வீரர்கள் அனுப்பபட்ட நிலையில் இன்னும் நான்காயிரம் வீரர்கள் அனுப்பபடலாம்

ஆப்கன் அரசு இந்த வீரர்கள் எங்களோடு சேர்த்து போரிட அனுமதியுங்கள் என கேட்டதற்கு அமெரிக்கா மறுத்துவிட தாலிபன்கள் வாய்விட்டு சிரித்து கொண்டிருக்கின்றனர்

இப்பொழுது ரஷ்யாவிடம் உதவி கேட்கின்றது ஆப்கன், ரஷ்யாவோ பாஷா ரஜினி போல பழைய நினைவுகளில் மூழ்கி கிடக்கின்றது

1980களில் ஆப்கனை அடக்கி வைக்கும் பொருட்டு அங்கு கால்பதித்தது சோவியத் யூனியன்

இப்பக்கம் ஈரானிய புரட்சி , அப்பக்கம் சோவியத், கிழக்கே சீனா என இடையே வசமாக சிக்கிய ஆப்கனை விடவே கூடாது என கால்பதித்தது அமெரிக்கா

அவர்கள்தான் தாலிபன்களை சோதனை குழாய் குழந்தைகளா பெற்று குட்டிசாத்தானாக வளர்த்தார்கள், ராணுவத்துக்கு எப்படி எல்லாம் தொல்லை கொடுக்க வேண்டும் என சொல்லி கொடுத்தார்கள்

தாலிபன்கள் ஆப்கன் போராளிகளில் ஒரு குழுவாக வளர்ந்தது, தீரா போரில் சோவியத் வெளியேற அன்றில் இருந்து தாலிபன்கள் மிகபெரும்ன் சக்தியானார்கள்

ஆனால் சோவியத்தோ இந்த அமெரிக்க உருவாக்கம் அவர்களையே அழிக்கும் என்றபடி வெளியேறினர், அது பொய்க்கவில்லை

பின்னாளில் அமெரிக்காவுக்கே பெப்பே காட்டினர் தாலிபன்கள், அவர்களின் அடைகலத்தில்தான் பின்லேடன் நியூயார்க்கில் விளையாடினார்

அந்த 2001ல் அமெரிக்கா ஆப்கன் மேல் படையெடுத்தது, 20 வருடம் கழித்து இப்பொழுது அவமானமாக வெளியேறுகின்றது

ஆப்கனில் இருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் என்பது பின்லேடனை போடும் பொழுதே எடுக்கபட்ட முடிவு ஆனால் முந்தைய அதிபர்கள் அதில் கவுரவமான முடிவினை தேடினர்

முக்கியமாக டிரம்பர் தாலிபன்களுடன் நேரடியாக பேசினார், அமெரிக்க படைகளுக்கோ அமெரிக்கருக்கோ ஒரு கீறல் விழுந்தாலும் உங்களை விடமாட்டேன். அமைதியாக இருக்கும் வரை உங்களுக்கு நல்லது, நாங்கள் வெளியேறும் பொழுதோ இல்லை வெளியேறியபின்போ ஆட்டம் அதிகமானால் நசுக்கிவிடுவேன் என மிரட்டி வைத்திருந்தார்

டிரம்பர் இருந்தவரை தாலிபன்களுக்கு பயம் இருந்தது

ஆனால் பிடன் ஒரு வெறும் பொம்மை, இந்தியாவின் வி.பி சிங் போல ஒரு மாதிரியான ஆசாமி என்பதை உணர்ந்த தாலிபன்கள் ஆடி தீர்க்கின்றனர்

இது அமெரிக்காவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்துகின்றது, 500 வீரர்களும் அமெரிக்க ராஜதந்திரிகளும் தாலிபன்களிடம் சிக்கினர் என்பது பெரும் அவமானமாக அவர்களால் உணரபட்டு பிடனை வறுத்தெடுகின்றனர்

இந்நிலையில் ஏமனில் அமெரிக்க உளவு விமானம் ஹைத்தி கோஷ்டியால் சுட்டு வீழ்த்தபட்டிருக்கின்றது, முன்பு டிரம்பர் தடை விதித்திருந்த இந்த கோஷ்டிக்கு தடையினை நீக்கியது யார் இதே பிடன்

இப்படி பிடனின் ஒரு மாதிரி நடவடிக்கை மிகபெரிய கொந்தளிப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது, அன்னார் 4 வருடம் ஆள்வதே சிரமம் போலிருகின்றது

இந்நிலையில் 1980களில் ஆப்கனில் தோல்வியுற்ற ரஷ்யா அந்த கறையினை நீக்க அடிபட்ட புலியாக உறுமுகின்றது, அநேகமாக ரஷ்ய தலையீடுகள் ஆப்கனில் வரலாம்

முதற்கட்டமாக ரஷ்யாவின் தனியார் பாதுகாப்பு அமைப்புகள் ஆப்கனுக்குள் வரலாம், ரஷ்ய கம்பெனியும் ஆப்கன் அரசும் செய்த ஒப்பந்தம் போல் அது கருதபடும்

 ஆனால் அந்த தனியார் ராணுவத்தின் நிஜ முதலாளி யாரென்றால் ரஷ்ய அதிபர் புட்டீன் என்பவர்தான்

அப்பக்கம் ரஷ்யா சுமார் 40 ஆயிரம் வீரர்களுடன் ஆப்கனின் வடபுறம் நிற்பதும், மேற்கே ஈரானிய படைகள் ஆப்கன் எல்லையில் தயாராக இருப்பதும் சூசகமாக ஏதோ சொல்கின்றன‌

அதுவரை தாலிபன்கள் ஹெலிகாப்டரில் பறக்கட்டும், அவர்களோ “வானிலே மேடை அமைந்தது ஆனந்த தாலிப  திருவிழா” என பாடியபடி பறந்து கொண்டிருக்கின்றார்கள்

ஆக “ஆகாயத்தில் பூகம்பம், அழிவுகள் ஆரம்பம்”..

சொந்த நாட்டையும் நாட்டு மக்களையும் தாலிபான்களுக்கு இரையாக அனுமதித்து ஒடி ஒளிந்த ஆஃப்கன் ராணுவம் !!

ஒரு நாட்டின் ராணுவம் என்ன வந்தாலும் கடைசி வரை தனது நாட்டை பாதுகாக்க துணிவுடன் போராட வேண்டும் அந்த வகையில் இந்திய ராணுவம் மிக சிறப்புமிக்கது இந்திய வீரர்கள் ஒடி ஒளிந்ததில்லை, முன்னோர்கள் பெற்று தந்த சுதந்திரத்தை இன்றளவும் நமது ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை துச்சமென மதித்து காத்து வருகின்றனர்.

ஆஃப்கன் ராணுவ வீரர்களுக்கு நாட்டுபற்றோ அக்கறையோ துளியும் இல்லை 3 லட்சம் பேர் கொண்ட ஆஃப்கன் ராணுவம் அதுவும் நேட்டோ விட்டு சென்ற ஆயுதங்களுடன் 80,000 தாலிபான்களை தைரியமாக எதிர்த்து இருக்கலாம் ஆனால் சில வாரங்களிலேயே தாலிபான்கள் மொத்த ஆஃப்கனையும் கைபற்றியுள்ளனர்.

இனி ஆஃப்கன் மீண்டு எழ போவதில்லை அம்மக்களின் விதி தாலிபான்களால் நிர்ணயிக்கப்படும், இதற்கு ஒடி ஒளிந்த அந்நாட்டு தலைவர்களும் ராணுவமுமே முழு பொறுப்பு.

ஆஃப்கனில் நடக்கும் நிகழ்வுகள் நாம் நம் நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களை ஏன் மதிக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக உள்ளது என்றால் அது துளியும் மிகையல்ல !!

14 Replies to “ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்: அதள பாதாளம்”

 1. எப்பப் பாரு இந்து மதம்,
  கோவில்னே புலம்பிட்டு இருக்காங்கடா
  இந்த பாஜக ஆளுங்க..

  அட சோத்து பிண்டங்களா
  முட்டாப் புண்ணாக்குகளா
  மண்ணும்,மதமும்,கலாச்சாரமும்
  இல்லேன்னா மத்தவன் உன்னை
  அடிமைபடுத்துவான்.இல்ல இந்த
  நாட்டவிட்டே அகதியா துரத்துவான்.

  நல்லா கண்ணையும் அறிவையும்
  திறந்து உன்னச் சுத்தி உலகத்துல
  என்ன நடக்குதுன்னு பாரு

  எனக்கும் உனக்கும் அந்த நிலமை
  எப்பவும் வந்திடக் கூடாதுன்னு தான்
  ஒவ்வொரு பாஜக தொண்டனும்,
  தேச பக்தனும்,இந்துமத காவலனும்
  போராடுறோம்..

  ஒரு‌ மந்திரியோட மருமகளே
  தேச விரோதமா பேசுன ஒரு
  பாதிரிய கைது பண்ண/ரோம்ல
  இருக்கற போப்போட அனுமதி
  வாங்கணும்னு பேசற அளவுக்கு
  துணிஞ்சிருக்கான்னா..

  இந்த தேசத்தை அடிமைபடுத்த சூழ்ந்திருக்கிற சதி என்னன்னு
  புரிஞ்சு எங்க கூட நில்லுங்கடா..

 2. ஆப்கன் மற்றும் இந்திய நிலவரங்கள் சிலவற்றை ஒப்பிட்டால் நிலமை சுவாரஸ்யமானது

  ஆப்கன் தாலிபன்களிடம் சிக்கிய மாலையாகிவிட்டது, குதறி கொண்டிருக்கின்றார்கள். அரச வங்கியின் மிச்ச கொஞ்ச பணம் அமெரிக்காவிடம் சிக்கிகொள்ள நாடு மகா பாதாளத்தில் விழ்ந்து கிடக்கின்றது. உணவில்லை பாதுகாப்பில்லை எங்கும் கலக்கம், அழுகை,கண்ணீர், அச்சம் என மகா மோசமான நிலையில் அத்தேசம் முள்மேல் விழுந்த சேலையாக கந்தலாகி கிடக்கின்றது

  உலகின் ஏழை நாடுகளில் 7ம் இடத்தில் இருக்கும் அத்தேசம் முதலிடம் நோக்கி தாலிபான்களால் முன்னேறிகொண்டிருக்கின்றது, விரைவில் நம்பர் 1 தரித்திர தேசமாகலாம்

  எந்த ஆப்கானிஸ்தான்?

  சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவின் ஆலயங்களை அழித்து அடித்து செல்லபட்ட செல்வத்தில் வளமாக வாழ்ந்த அந்த ஆப்கானிஸ்தான்

  அந்த ஆயிரம் ஆண்டுக்கு முன் இந்திய நிலை எப்படி இருந்தது?

  சோமநாதபுரி உள்ளிட்ட ஆலயமெல்லாம் ஆப்கானியரால் நொறுக்கி செல்வங்களெல்லாம் அள்ளி செல்லபட்டன, தேன் கூட்டை தேனி கட்டுவது போலவும், குரங்கால் பிய்த்தெறியபடும் கூட்டை குருவி மெல்ல சிறுக கட்டுவது போலவும் கட்டபட்ட ஆலயங்கலெல்லாம் மறுபடி மறுபடி கொள்ளையிடபட்டன‌

  இன்று ஆப்கான் கதறிகொண்டிருக்கின்றது

  ஆனால் பாரதம் மகா அமைதியாக உலகின் வலுவான நாடாக மின்னுகின்றது, சோமநாதபுரி ஆலயம் மறுபடி திறக்கபட்டிருக்கின்றது

  உண்மையில் ஆப்கானிய கொள்ளையில் சோமநாதர் எனும் சிவாலயம் மட்டும் கட்டபடவில்லை, பொதுவாக எந்த இந்து ஆலயமும் தனித்திராது ஏகபட்ட துணை ஆலயங்கள் இருக்கும்

  அப்படி எல்லா ஆலயங்களும் கஜினி கோஷ்டியால் இன்னும் பலரால் நொறுக்கபட்டன அதில் சோமநாதர் ஆலயம் தவிர அன்னை பார்வதிக்கான ஆலயமும் உண்டு

  இரு தினங்களுக்கு முன்பு அந்த பார்வதி ஆலயத்தை கட்ட அடிக்கல் நாட்டியிருக்கின்றார் மோடி., அப்பொழுது அவர் பேசிய பேச்சுத்தான் விஷயம்

  மிக நுணுக்கமான தன் பேச்சில், ஆலயங்கள் எப்படியும் மீண்டெழும் சக்தி கொண்டவை அதை அழிக்க நினைபோரே அழிந்துவிடுவர் என்பது போன்ற சாயலில் பேசியிருந்தார்

  ஆம், ஆப்கன் மாபெரும் வீழ்ச்சியில் சிக்கிய நேரம், இந்திய எழுச்சியும் ஆப்கானியரால் அழிக்கபட்ட ஆலயங்கள் எழுவதும் சாதாரணம் அல்ல, மானிட சக்திக்கு அப்பாற்பட்ட சக்தியால் செய்யபடும் விஷயம்

  “சிவன் சொத்து குலநாசம்” என்பதற்கு சாட்சிகள் ஏராளம் அவ்வப்போது வந்து கொண்டேதான் இருக்கின்றன‌

  ஆம், தெய்வங்கள் மனிதனை வைத்து விளையாடும் அரசியலெல்லாம் செய்து சோதிக்கும். ஆனால் மனிதன் தெய்ங்களை வைத்து ஆட கூடாது, ஆடினால் அழிவு நிச்சயம்

  தமிழகத்தின் இந்து விரோத பகுத்தறிவு கோஷ்டிகள் ஆப்கனை கண்டாவது திருந்துதல் நலம்,.

  சோமநாதபுரியில் இப்பொழுது மோடியால் எழும் அன்னை சக்தியின் ஆலயத்தை கண்டும் திருந்தாவிட்டால் ஆப்கானியர் வரிசையில் அவர்களையும் வரலாறு ஒரு நாளில் எழுதும்

 3. ஆப்கனில் உக்ரைன் விமானம் கடத்தல் என தமிழக மீடியாக்கள் சொல்வதெல்லாம் சரியான தகவல் அல்ல‌

  உண்மையில் அந்த ராணுவ விமானம் உக்ரைனில் இருந்து கிளம்பியபொழுதே கடத்தபட்டு ஈரானில் தரையிறக்கபட்டிருக்கின்றது

  அது எங்கு செல்ல இருந்த விமானம்? என்ன பொருள் இருந்தது? எப்படி உக்ரைன் விமான நிலையத்திலே கடத்தபட்டது என்பதற்கெல்லாம் உக்ரைன் அரசிடம் பதில் இல்லை, ஏதோ உளறி சமாளிக்கின்றது

  அங்கே ஈரானோ பலத்த அமைதி

  ஆனால் ஈரானில் உக்ரைன் விமானம் தரையிரங்கியிருப்பது நிஜம், இதில் உலக நாடுகள் அமைதி காப்பதும் அடுத்த காமெடி

  விஷயம் வேறொன்றுமில்லை ஆப்கனை தொட்டு நிற்கும் ஈரான் ஊடாக ஆப்கனில் தாலிபன்களை எதிர்க்கும் ஷியா பிரிவினருக்கு எதையோ கொடுக்க நாடகமாடுகின்றார்கள் வேறொன்றுமில்லை

  ஆப்கனில் தாலிபன் நிலை பிரண்ட்ஸ் படத்தில் பெயின்ட் அடிக்கும் வடிவேல் நிலைபோலாயிற்று, அவர்களின் அரசியல் பிரிவு கலங்கி நின்று நாங்கள் திருந்திவிட்டோம் என கத்தி கொண்டிருக்கின்றது

  அதாவது நாட்டின் 80% வருமானம் மேற்கு நாடுகளின் நன்கொடையில் வந்தது இனி அது இல்லை எனும் நிலையில் கொஞ்சமாவது பெற அவை “நாங்கள் திருந்திவிட்டோம்” என நல்ல பிள்ளை அறிக்கை விடுகின்றன‌

  ஆனால் ராணுவபிரிவோ அதே தாலிபன்களாக பெண்களை அடித்தல், ஊரை கொளுத்துதல், ஷரியட் படி தாடி சரியான நீளத்தில் இருக்கின்றதா என்ற ஆராய்ச்சி என அழிச்சாட்டியம் செய்கின்றது

  இந்த முரண்பாட்டால் பல நாடுகள் முறைக்க “அய்ய்யோ டேய் 1 லட்சம் டாலர் காண்ட்ராட்டுக்டா..” என அவர்கள் ஆட்களையே அவர்கள் அடித்து கொண்டிருக்கின்றார்கள்

  விமானம் கடத்தும் நிலையில் தாலிபன்கள் இல்லை, ஒருவேளை வழிதவறி விமானம் வந்தாலும் அதை தலையால் சுமந்தே சம்பந்தபட்ட நாட்டுக்கு அனுப்பும் அளவு அவர்கள் நிலை ஆகிவிட்டது

 4. ஆப்கனின் தாலிபன்கள் திராவிடவாதிகள் வரலாற்றை படித்தார்களா, இல்லை அண்ணாதுரை கருணாநிதி போன்றோரின் ஆவியினை பிடித்தார்களா என்பது தெரியவில்லை, ஆனால் இவர்களை போலவே பேசவும் கற்று கொண்டார்கள்

  தாலிபன்கள் பத்திரிகையாளர் சந்திப்பெல்லாம் நடத்துகின்றார்கள், அதன் கேள்வி பதில் இப்படியாக‌

  “ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அமெரிக்கா வெளியேறவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

  யுத்தம் எமக்கு புதிதல்ல…

  தாலிபன்கள் சமையல்காரி சரியாக சமைக்கவில்லை என கொழுத்தி எரித்தார்களாமே உண்மையா?

  சமையல்காரியின் உடையில் தீ பிடித்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை, சமையலறையில் அந்த பெண்ணின் கவனகுறைவால் ஏற்பட்ட விபத்து அது, இதை எமக்கு எதிரான சக்திகள் சர்ச்சையாக்குகின்றன, தாலிபன்களுக்கு பெண்கள் கண் போன்றவர்கள்

  தாலிபன் ஆட்சியில் பெண் உரிமை?

  எங்கள் கலாச்சார ஆடை அணிந்து பெண்கள் பணியாற்ற தடையேதுமில்லை, இப்பொழுதும் அவர்கள் அரசு பணி, கல்விசாலைகளில் பணியாற்றத்தான் செய்கின்றார்கள்

  தாலிபன்கள் உள்நாட்டில் எதிர் போராளிகளுடன் மோத தொடங்கிவிட்டார்கள், இது என்னாகும்?

  நாட்டுக்கு எதிரான சக்தியில் உள்நாடு, வெளிநாடு என்ற பேதமே இல்லை

  அல்கய்தா, ஐ.எஸ் என பல பிரிவுகள் இங்கே உள்ளதாக தகவல் வருகின்றது?

  அல்கய்தாவினை அழித்ததாக அமெரிக்க அதிபரே சொல்லிவிட்டார். ஐ.எஸ் இயக்க தலைவரிடம் நாம் முன்பே கடிதம் எழுதி கேட்டபொழுது ஆப்கானில் இருக்கும் ஐ.எஸ் இயக்கம் எங்கள் கோஷ்டி அல்ல என சொல்லிவிட்டார், மீறி அப்படி சுற்றுவோர் ஆப்கன் சட்டபடி அதாவது எங்கள் சட்டபடி கொல்லபடுவர்

  ஆப்கன் அகதிகள் பற்றி?

  அவர்களை நினைத்து நாங்கள் வருந்துகின்றோம். இந்நாட்டில் எங்களோடு இருந்து இந்த நாட்டை அதி உன்னத நாடாக வளர்க்க பாடுபடவேண்டியவர்களெல்லாம் கிளம்புகின்றார்கள். ஆனால் இனி ஆப்கன் மிகபெரிய வசதியான நாடாக மாறும்பொழுது நாம் இவர்களை உள்ளே அனுமதிக்கவே மாட்டோம்

  அப்படியா?

  ஆமாம், இந்த நாட்டில் என்ன சிக்கல்? ஒன்றுமே இல்லை ஆனாலும் இவர்கள் அமெரிக்கா ஐரோப்பா என பறக்க வசதியான வாழ்வு ஆசையே காரணம். வசதிக்காக ஆப்கனை இந்த புண்ணிய பூமியினை புறக்கணிக்கும் இவர்களை பற்றி எமக்கு கவலை இல்லை

  அவர்கள் இந்நாட்டு மக்கள்?

  அவர்களா? அந்நியர்கள் இநாட்டை ஆக்கிரமித்தபொழுது ஆதரவளித்த துரோகிகள், இப்பொழுது அவர்களோடே தப்பி செல்லும் அவர்கள் இந்நாட்டு மக்களா? அப்படி இருக்கவே முடியாது, விரைவில் அவர்கள் கிளம்பாவிட்டால் அவர்கள் (பூலோக) குடியுரிமையினை நாங்களே ரத்து செய்வொம்

  (இதற்கு மேலும் கேள்வி கேட்க நிருபர்களால் முடியவில்லை, ஆம் இதற்கு மேலும் சிரிக்காமல் கேள்வி கேட்க முடியாது, சிரித்தால் உயிரோடு தப்ப முடியாது)

 5. ஆப்கனில் நிலமை மிக மிக மோசமான நிலமைக்கு சென்றுவிட்டது.

  ஆப்கனை கைபற்றிய தாலிபன்கள் செய்த முதல் விஷயம் சிறையில் இருந்த குற்றவாளிகளையெல்லாம் “நீங்கள் இஸ்லாத்தின் தியாகிகள்” என சொல்லி விடுதலை செய்தது

  இதில் அல் கய்தா, ஐ.எஸ் என கொடிய இயக்கத்தின் கொடூரமானவர்களும் உண்டு

  இப்பொழுது அவர்கள் ஆப்கனில் சுற்றி திரிவது மிகபெரிய ஆபத்தை ஏற்படுத்தியிருக்கின்றது, அவர்கள் ஒருமாதிரியான ஆசாமிகள்

  எப்படி என்றால் இன்றும் திக திமுகவின் சில அடிப்படைவாதிகளை “சுதந்திரமாக” உலாவவிட்டால் “ஏ பார்ப்பானே” என தெருவில் செல்லும் பிராமணார்களை எல்லாம் கடித்து வைப்பார்கள் அல்லவா? அந்த அளவு மேற்கத்திய வெறுப்பினை கொண்டவர்கள்

  ஒவ்வொருவரின் கடமையே ஐரோப்பிய அமெரிக்கர்களை கொல்வது எனும் வெறியில் வளர்க்கபட்டவர்கள்

  இவர்கள் பொதுமக்களோடு கலந்து அகதிகள், ஆப்கன் மக்கள் என ஆங்காங்கே சுற்றி திரிவதும் வெளிநாட்டுக்கு தப்ப முயற்சிப்பதும் அதைவிட முக்கியமாக ஆப்கனில் இருக்கும் அயல் நாட்டவர் மேல் குறிப்பாக அமெரிக்க ரானுவம் மேல் “காபீர்களே சாவுங்கள்” என பாய்வதும் நடக்கின்றன‌

  ஆப்கன் விமான நிலையத்தில் புகுந்துள்ள இவர்களால் மிக பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது, இவர்கள் அகதிகளாக வெளிநாட்டுக்கு தப்பி அந்த நாடுகளில் நாசவேலைகளில் ஈடுபடும் சாத்தியமும் உண்டு

  விஷயம் எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றது

  இப்போது உலக நாட்டு தலைவர்களெல்லாம் ஏன் அமெரிக்க கூட்டாளியான பிரிட்டிஷ் தலைவர்களெல்லாம் அமெரிக்க அதிபரை புரட்டி எடுத்து கொண்டிருகின்றார்கள்

  மிக மிக கடுமையான எதிர்ப்பினை அவர் சந்திக்கின்றார், தாலிபன் எனும் குட்டிசாத்தானை சரியா அடைக்காமல் திறந்துவிட்டவர் அவர்தான், நிச்சயம் அவர்தான் எனும் வகையில் கண்டனமும் கோபமும் வலுக்கின்றது

  ஆப்பசைத்த குரங்கு நிலையில் இருக்கின்றார் பிடன், அவரை சுற்றி சுற்றி வந்து பேசி வெறுப்பேற்றி கொண்டிருக்கின்றார் டிரம்பர்

 6. ஆப்கானில் தாலிபன்களின் அடாவடியினை காணும்பொழுது அந்த இஸ்ரேலிய தளபதி சொன்னதுதான் நினைவுக்கு வருகின்றது

  “அவர்களுக்கு உலகின் எந்த மொழியில் பேசினாலும் புரியாது, அவர்களுக்கு புரியும் ஒரே மொழி அடி ஒன்றுதான். அதனால்தான் அந்த மொழியில் மட்டும் பேசிகொண்டிருக்கின்றோம்”

 7. ஆப்கனின் கொடூர காட்சிகள் மனதை அப்படியே கனக்க வைக்கின்றன‌

  இஸ்லாம் எங்களால் மட்டும்தான் வாழவேண்டும் அதுவும் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட அதே கட்டளைகளுடன் வாழவேண்டும் என அடம்பிடிக்கும் தாலிபன்கள் அங்கு மிக பெரும் மானுட குல அழிவினை ஏற்படுத்தியிருக்கின்றார்கள்

  அவர்கள்மேல் எவ்வளவு அச்சம் இருந்தால் மக்கள் விமான நிலையத்தில் அப்படி தப்பி ஓட காத்திருப்பார்கள் என்பது புரிந்து கொள்ள சிரமமானது அல்ல‌

  ஒவ்வொரு ஆப்கான் முகமும் கதறி கொண்டிருக்கின்றது, விமான நிலையத்தில் கதறும் அவர்களின் குரலில் ஆயிரம் வலியும் அவலமும் மிஞ்சி நிற்கின்றன‌

  சொந்த மண்ணை விட்டு பிரிவது ஒரு வலி, அந்த வலியினை மீறி கதறுகின்றார்கள் என்றால் அந்த குட்டி சாத்தான்களின் ஆட்சி எவ்வளவு கொடியதாக இருக்க வேண்டும்?

  காபூல் விமான நிலையத்தில் முள்வேலியிட்டு மக்களை தடுக்கின்றது அமெரிக்க ராணுவம்

  முள்வேலிக்கு அப்பாற் நின்று கதறுகின்றாள் இளம் தாய், அவள் கையில் ஒரு பெண் குழந்தை இருக்கின்றது

  என்னையு என் குழந்தையினையும் வாழவிடுங்கள் என அவள் கதறும் கதறல் அமெரிக்க வீரனை உலுக்கவில்லை, அவன் வழக்கம் போல் கல்லாய் சமைகின்றான் இதெல்லாம் அங்கு சாதாரணம்

  அந்த தாய் கத்தி சொல்கின்றாள்

  என்னை அனுமதிக்க வேண்டாம், இந்த குழந்தையினையாவது வாழ வையுங்கள் என முள் கம்பியின் அடியில் வைத்து கதறுகின்றாள்

  அந்த அமெரிக்க வீரனுக்கு அந்த நொடியில் அழுகை வருகின்றது, தன் கடமையினை மீறி கண்ணீரோடு அந்த பெண்ணுக்கு கை கொடுத்து உள்ளே வர அனுமதிக்கின்றான்

  மானுடம் எவ்வளவு பெரிய மிரட்டலுக்கு உள்ளாகியிருக்கின்றது என்பதை மிக தெளிவாக சொல்லும் காட்சி இது

  ஆப்கானில் நடைபெறுவது மதத்தால் உருவான ஒரு முட்டாள் கூட்டம் உலக வல்லரசு அரசியலால் செய்யும் மிக பெரிய மானிட கொடூரம்

  இந்த உலகம் அதாவது நவீன உலகம் ஹிட்லர் காலம் முதல் இந்திய பிரிவினை காலம் முதல் கண்ட வலிகள் ஏராளம்

  வங்க பிரிவினை, வங்க போர், வியட்நாம் சிக்கல் , ஈழ சிக்கல் என கண்ட வலிகள் ஏராளம்

  அந்த வரிசையில் ஆப்கனும் இடம் பிடித்துவிட்டது, உலக நாடுகள் ஏதாவது செய்து அந்த மக்களை காக்கட்டும்

  அரபு நாடுகளில் கத்தார் எனும் ஒரு நாடு மட்டுமே சக மக்களுக்காய் போராடி கொண்டிருக்கின்றது, அந்த மன்னன் இருக்கும் திசை நோக்கி வணங்கலாம்

  கண்முன்னே ஒரு கொடூர கூட்டம் அம்மக்களை வதைக்கும் பொழுது ஒரு காலத்தில் பிஜி தீவு மக்களை நினைத்து பாரதி அழுத அழுகைதான் நினைவுக்கு வருகின்றது

  பாரத பிரிவினையில் கவிஞர்களெல்லாம் அழுதது நினைவுக்கு வருகின்றது

  “அந்த கரும்பு காட்டினிலே” என பாரதி அழுததை போல அந்த ஆப்கன் மக்களுக்காக நாமும் அழுது கொண்டிருக்கின்றோம்

  வல்ல தெய்வம் அவர்களை விடுவிக்கட்டும், அவர்களுக்கு நல் ஆறுதல் அருளட்டும், தர்மம் ஏதேனும் ஒரு வடிவில் அவர்களை காக்கட்டும்

  விரைவில் நல்ல செய்திகள் வரட்டும், தகிக்கும் வெயிலில் கதறும் அக்கூட்டம் ஆறுதல் அடையட்டும், ஆறுதல் அடையட்டும்

  அவர்கள் யாராகவும் இருக்கட்டும், எந்த மதமும் இனமாகமும் இருக்கட்டும் ஆனால் அவர்களின் கண்ணீரை கடந்து செல்லும் சக்தி யாருக்கு உண்டு?

  வல்ல தெய்வம் விரைவில் வரட்டும், அந்த சைத்தானிய கும்பலிடம் இருந்து அம்மக்களுக்கு ஆறுதல் தரட்டும்

  எமது பிரார்த்தனையில் அந்த அப்பாவி முகங்களுக்கும் இடம் உண்டு, அதை தவிர வேறு பிரார்த்தனை இப்பொழுது ஏதுமில்லை

 8. ஆப்கன் சிக்கலில் வசமாக சிக்கி கண் விழி பிதுங்கி நிற்கின்றார் பிடன்

  அமெரிக்காவின் வல்லரசு ஆட்டத்தை பிடன் ஆப்கனில் மகா சொதப்பி ஆடி, அதனால் உலக அரங்கில் தலை குனிந்து நிற்கின்றது அமெரிக்கா

  ஒரு வகையில் அமெரிக்க ராணுவ தலமையகம் பெண்டகனும், சி.ஐ.ஏவும் கடும் கோபத்தில் இருக்கின்றன. அவர்களின் திட்டமெல்லாம் பிடனால் சிக்கலில் உள்ளது

  இந்நிலையில் பிடன் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் “நாம் பின்லேடனை கொல்ல சென்றோம் கொன்றுவிட்டோம், அங்கு அல்கய்தா இல்லை அமெரிக்காவுக்கான மிரட்டல் கொஞ்சமும் இல்லை. இதனால் கிளம்பிவிட்டோம்” என சொல்லிவிட்டார்

  அவரின் பேட்டி முடிந்து இரு மணி நேரத்தில் பெண்டகன் அறித்ததுதான் ஹைலைட்

  பெண்டகன் தன் அறிவிப்பில் “ஆப்கனில் இன்றும் அல்கய்தா உண்டு, ஐ.எஸ் இயக்கம் உண்டு நாம் அவர்களை வட்டமிட்டு கொண்டிருக்கின்றோம்” என தெரிவித்தது

  அதாவது தமிழக கிராம பாஷையில் சொல்வதாக இருந்தால் “அந்த கிழவன் புத்திகெட்டு பேசிட்டிருக்கான்யா, நாங்க படுற பாடு எங்களுக்குத்தான் தெரியும். இந்த கிழவனுக்கு கிறுக்கு பிடிச்சிட்டு எங்கயாவது அடச்சி வைங்க” என சொல்வது போன்றது

  ஆம், பொதுவாக அமெரிக்க அதிபரின் கவுரவம் அங்கு பெரிது. மன்னன் பேச்சுக்கு மறுபேச்சு மரியாதை குறைவு என்பது போல் அமைதி காப்பார்கள்

  ஆனால் உலகமே பிடனை திட்டி கொண்டிருக்க, அமெரிக்காவிலே மிக பெரிய எதிர்ப்பு அதுவும் பெண்டகனில் இருந்து வந்திருப்பது பிடனின் வீழ்ச்சியினை சொல்கின்றது

  அன்னார் அமெரிக்க வரலாற்றில் பலவீனமான அதிபராக விரைவிலே விரட்டபட கூடும்

  சரி, பெண்டகன் தன் கோபத்தை சொல்லிவிட்டது, இந்த சி.ஐ.ஏ ஏன் சத்தமில்லை?

  அவர்கள் என்றைக்கு வாய்திறந்தார்கள்?, செயலில் மட்டும்தான் பேசுவார்கள். விரைவில் எங்காவது பேசுவார்கள் அப்பொழுது பார்க்கலாம்

 9. ஆப்கனில் நிலமை மிக கடுமையாகி போக அங்கிருந்து தப்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது

  தாலிபன்களும் அவர்களை தடுக்கவில்லை, மானிடர் இல்லா ஆப்கனில் கல்லும் மண்ணும் போதும் இஸ்லாமிய மண் போதும் என முடிவெடுத்துவிட்டார்கள்

  இப்பொழுது உலகெல்லாம் ஆப்கானியர் அகதியாகும் நேரம்

  ஆனால் அவர்கள் இஸ்லாமியராக கருதபடுகின்றனர், இஸ்லாமிய அகதிகள் எனும் வகையில் கட்டாரும் இன்னும் சில நாடுகளும் பெரிய உதவிகளை செய்கின்றன‌

  ஆப்கனில் ஏகபட்ட சாதிகளும் பிரிவுகளும் உண்டு

  பஷ்தூன், துரானி, உஸ்ஸ்பெக், தஜிஜக், பதான் என ஏகபட்ட பிரிவுகள் உண்டு. ஆனால் அவர்கள் இனத்தின் பெயரால் அழைக்கபடவில்லை

  ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு மொழி உண்டு அம்மொழியிலும் அழைக்கபடவில்லை, மாறாக இஸ்லாம் எனும் ஒரு சக்தி மிக்க அடையாளம் அவர்களுக்கு வாசல்களை திறக்கின்றது

  அவர்கள் சாதி, இனம், மொழி என பேசி கொண்டிருந்தால் ஒரு வாசலும் திறந்திருக்காது

  இதேதான் சிரியா, லிபியா ஏன் ரொகிங்கியா வரை நடக்கின்றது, இன்றும் அவர்கள் பெயர் ரொஹிங்கியா இஸ்லாமியரே

  இப்பொழுது இந்த காட்சியினை காணும்பொழுது சில விஷயங்கள் உங்களுக்கு புரியலாம்

  ஆம், பர்மாவில் அடிபட்டால் அவன் தமிழன். இலங்கையில் அடிபட்டால் அவன் தமிழன், எங்கு அடிபட்டாலும் அவன் தமிழன்

  அவனுக்கு மதமில்லையா? அவனை தமிழன் என அழைத்தால் மிஞ்சி போனால் 1 கோடி தமிழர் ஆதரவு கூட கிடைக்கா உலகில் ஏன் இந்து என அழைக்கவில்லை?

  அப்படி அழைத்து ஏன் 90 கோடி இந்துக்களின் ஆதரவினை பெறவில்லை?

  இதுதான் தமிழருக்கு எதிரான உலக சதி, எத்தனையோ சக்திகள் தமிழன் இந்தியனாகவும் இந்துவாகவும் இருந்துவிட கூடாது என செய்யபடும் சதி

  உண்மையில் அன்றே பர்மா இந்து, இலங்கை இந்து என அவர்கள் அடையாளபடுத்தபட்டிருந்தால் இந்நேரம் வரலாறு மாறியிருக்கும்

  மொத்த இந்தியாவும் அவர்களுக்காக திரண்டிருக்கும்

  ஆனால் தமிழன் தமிழன் என சொல்லி அந்த இனம் அழிந்த கதையும், அவர்களின் மிகபெரிய வீழ்ச்சியும் கண்முன் நிற்கின்றன‌

  என்று தமிழன் எங்கிருந்தாலும் தன்னை ஒரு “இந்து” என உணர்ந்து, “தமிழ் இந்து” என சொல்லி இந்துக்க‌ளின் பெரும் பலத்தினை பெறுகின்றானோ அது வரை அவனுக்கு எந்த நன்மையும் விளையபோவதில்லை

 10. எங்கடோ போனிங்க பெண்ணியல் வாதிகளா சொரியாரிஷ்டுகளா

  ஆப்கானை தாலிபான் கீழடிக்கிய பின் வந்த (அல்ஹாவின் கட்டளைகள்) கட்டளைகள்…

  பெண்களுக்கு எதிரானா சட்டங்கள் மட்டுமே இண்ணைக்கு வந்திருக்கு… வரும் நாட்களில் அணினத்திற்கு எதிரான சட்டங்களும் வரலாம்..

  1.பெண்கள் பள்ளி கூடத்திற்கு போக கூடாது… 10 வயது வரை மதரஸ் படிக்க போகலாம் ..அதன் பிறகு வேறு எந்த படிப்புக்கும் போக கூடாது.. வீட்டிலேயே இருக்க வேண்டும்..

  2.பெண்கள் வேலைக்கு போக கூடாது…எப்போதும் பார்தா அணிய வேண்டும்.. பார்தா அணியவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.. பர்தா அணியாத நஸ்லி என்ற 21 வயது பெண்ணை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் தாலிபான்ஸ்..

  3.பெண்களின் சப்தம் வெளியே கேட்க கூடாது.. (குறிப்பாக ஆண்கள்)பெண்கள் பொம்மையை போல் பேசாமல் சவுண்ட் வெளியே வராம வீட்டில் அடங்கி இருக்கணும்..பொது இடங்களில் பொம்மையை போல இருக்கணும்…

  4.பெண்கள் பாதங்கள் வெளியே தெரியும் கீல்ஸ் செருப்பு அணிய கூடாது.. பாதங்களை மறைக்கும் ஷாக்ஸ்டுடன் கூடிய ஷு அணியலாம்..

  5.பக்கத்தில் வீடுகள் உண்டென்றால் அடுத்த வீட்டு ஆண்கள் பார்க்காதிருக்க ஜன்னல் கருப்பு துணியால் மூட வேண்டும்..ஒரு போதும் பெண்கள் வாசல் பக்கத்திலோ வெளியில் உள்ள உள்ள ஆண்கள் கண் பார்வை படும் இடத்திலோ நிற்க கூடாது.. பெண்கள் செல்பி எடுக்க கூடாது..பெண்கள் போட்டோ எடுக்க கூடாது..

  6.பெண்கள் வெளியே செல்ல கூடாது ..தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியே செல்ல வேண்டுமென்றால் ரத்த உறவுடைய இரண்டு ஆண்கள் துணையுடன்தான் வெளியே செல்ல வேண்டும் ..

  7.பெண்களின் ஆர்வமிக்க பேன்சி மற்றும் அழகு நிலையங்கள் மூடியாச்சு..

  8.பெண்கள் நகங்களை அழகுபடுத்தும் எந்த பொருளையும் பயன்படுத்தக்கூடாது.. இன்றைய தினம் நகங்களை அழகுபடுத்திய ஒரு பெண்ணின் விரல்கள் வெட்டி வீசப்பட்டு விட்டது..

  இந்த நிபந்தனைகளை மீறும் பெண்களுக்கு குறைந்த பட்ச தண்டனை சாட்டையடி அதிக பட்சமாக மரண தண்டனை வரை உண்டு… இப்போது 15 வயது முதல் 45 வரை உள்ள ஆப்கான் பெண்களின் விவரங்களை சேகரிக்கிறாங்களாம்..

  அது வேற ஒண்ணுமில்ல தாலிபான் போராளிகளுக்கு கல்யாணம் என்ற போர்வையில் தங்களது இச்சையை தீர்த்துக்கதான்..

 11. ஆப்கனில் இந்திய அரசு மிக கவனமான நடவடிக்கையில் ராஜதந்திரமாக வென்றிருக்கின்றது

  ஆம், ஆப்கனில் தாலிபன்கள் முன்னேற ஆரம்பித்தபொழுதே தன் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப மீட்டது இந்திய அரசு

  காபூலை தாலிபன்கள் கைபற்ற 3 மாதமாகும் என அமெரிக்க உளவு தகவலே இருந்த நிலையில் காபூல் தூதரகம் உள்ளிட்ட சில இடங்களில் இந்தியர் தங்கியிருந்தனர், ஆனால் எதிர்பாரா விதமாக தாலிபன்கள் காபூலை கைபற்றியதில் பெரும் அதிர்ச்சி உலகை தாக்கியது

  எல்லா நாடும் அவரவர் மக்களை மீட்பது போல இந்தியாவும் தம் மக்கள் சுமார் 150 பேரை மீட்க போக்குவரத்து ராணுவ விமானத்தை அனுப்பியது

  இப்பொழுது வெளிநாட்டவர் வெளியேற ஒரே வழி காபுல் விமான நிலையம், அதன் கட்டுப்பாடு அமெரிக்கா கையில் ஆனால் காபூல் கட்டுப்பாடு தாலிபன் கைகளில்

  அதாவது தாலிபன் அனுமதியில்லாமல் இந்தியர்கள் விமான நிலையம் வரமுடியாது

  பொதுவாக தாலிபன்களுக்கும் இந்தியாவுக்கு உரசல் அதிகம், காந்தகார் விமான கடத்தல் முதல் காஷ்மீர் வரை இன்னும் பல உரசல் உண்டு

  தாலிபன்களை நம்பவும் முடியாது, எப்பொழுது எப்படி திரும்புவார்கள் என்பதும் தெரியாது, பாகிஸ்தானின் ஆதரவு கொண்டவர்கள் என்பதால் இன்னும் அச்சம்

  அந்த 150 பேரும் முதலில் கிளம்பும்பொழுது தாலிபன்கள் அனுமதிக்கவில்லை மாறாக “சில நாட்கள் கழித்துத்தான் அனுப்பமுடியும்” என முடக்கிவிட்டனர்

  இது இந்திய தரப்புக்கு மிக சிக்கலான நிலையில் களத்துக்கு வந்தார் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர்

  அவரின் மிக அபாரமான ராஜதந்திர வலைபின்னலில் தாலிபன்கள் யார் சொன்னால் கேட்பார்களோ அவர்கள் மூலமாக சொல்ல வைத்தார்

  அதன் பின் இந்திய தூதரகம் சென்ற தாலிபன்கள் இந்தியர்களை மிக மரியாதையோடு பாட்சா படத்து தாளாளர் போல் , “அண்ணே இதெல்லாம் சிக்கலாண்ணே, வாங்கண்ணே வாங்கண்ணே” என 20 வாகனங்களில் அழைத்து விமான நிலையம் வரை பாதுகாப்போடு அழைத்து வந்து “போயிட்டு வாங்கண்ணே மோடி அய்யாவ கேட்டதா சொல்லுங்க” என சொல்லி வழியனுப்பினார்கள்

  இந்தியர்கள் பாதுகாப்பாக விமான நிலையத்தில் நுழைந்தபொழுது தாலிபான்கள் சொன்னதுதான் கிளாசிக்

  “நாங்கெல்லாம் முன்னமாதிரி இல்லண்ணே, திருந்திட்டோம். அடிக்கடி வந்து போய் இருங்கண்ணே, நிலமை சரியானதும் நாங்களும் உங்க நாட்டுக்கு வருவோம்”

  அதை கேட்ட இந்தியர் மனநிலை எப்படி இருக்கும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

  ஆக மோடி அரசு ஜெய்சங்கர் மூலம் இந்தியருக்கு ஒரு சிராய்ப்பு கூட இல்லாமல் ஆப்கனில் இருந்து மீட்டு வந்திருக்கின்றது

  இதுபற்றி தமிழக மீடியா சொல்லாது.

  ஆனால் தேசாபிமானியாக சொல்ல வேண்டியது நம் கடமை, அதை நாம் சொல்லி கொண்டே இருப்போம்

 12. ஆப்கான் – தலிபான் மோதல் ஒரு நாடகமே தவிர வேறு ஒன்றும் இல்லை சிரியா 2.0 போல

  2015 ஆம் ஆண்டில், கடலில் இறந்து கிடந்த குழந்தையின் படத்தை ஒரு சிரிய அகதி குழந்தை என்று கூறி ஊடகங்கள் வெளியிட்டு சிரிய அகதிகளுக்கு அனைத்து ஆதரவையும் சேகரித்தது, ஐரோப்பிய நாடுகள் தங்கள் கதவுகளை சிரிய மற்றும் பிற முஸ்லீம் அகதிகளுக்கு திறந்துவிட்டதை உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது.

  6 வருடங்கள் கழித்து, ஐரோப்பாவின் (மக்கள்தொகை) டெமோகிராப்பி எவ்வாறு மாறிவிட்டது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

  அடுத்த 5 ஆண்டுகளில், பெரும்பாலான ஐரோப்பா இஸ்லாத்திற்கு மாறும்.

  தற்போதைய ஆப்கானிஸ்தான் – தலிபான் சர்க்கஸ் என்பது அதே ஸ்கிரிப்டை மீண்டும் இயக்கபடுது தவிர வேறில்லை.

  1. தலிபான்களை ஆப்கானியைக் கொல்லும் அரக்கர்கள் என்று அவர்கள் விவரித்தனர் ஆனால் உண்மையில் அவர்கள் யாரையும் கொல்லவில்லை.

  காட்டுமிராண்டித்தனமான செயல்களின் கதைகள் மட்டுமே பறக்கின்றன. நம்மை நம்பவைக்க

  2. சமீபத்திய காபூல் விமான நிலையத்தைக் காண்பிப்பதன் மூலம், அவர்கள் அப்பாவி ஆப்கானியர்கள் என்று அழைக்கப்படும் அதே சிரியா 2.0 அனுதாபத்தைத் திரட்டுகிறார்கள்.

  3. லட்சக்கணக்கான ஆப்கானியர்கள் முஸ்லீம் அல்லாத நாடுகளில் மட்டுமே தஞ்சமடைந்து அங்கு செழிக்கத் தொடங்குவார்கள்.

  4. நினைவில் கொள்ளுங்கள், இந்த ஆப்கானிஸ்தான் அகதிகள் முஸ்லிம் நாடுகளுக்கு செல்ல மாட்டார்கள்.

  5. இந்த ஆப்கானிஸ்தான் அகதிகள் முஸ்லீம் அல்லாத நாடுகளை இஸ்லாமியமாக்குவதற்கான நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லும் தலிபான்களே தவிர வேறில்லை.

  6. அவர்கள் ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து முஸ்லிம் அல்லாத மக்களையும் அழித்துவிட்டனர்.

  இது உலகை இஸ்லாமாக மாற்ற இரத்தமில்லாத ஐடியா..

 13. ஆப்கனில் எதிர்பாரா திருப்பமெல்லாம் ஏற்பட்டு கொண்டிருக்கின்றது

  பொதுவாக ஒரு நாட்டில் இருந்து வெளியேறும் பொழுது அந்நாட்டில் இரு பிரிவுகளை மோதவிட்டு வெளிவருவது பிரிட்டிசார் ஸ்டைல்

  இந்தியா, பர்மா, இலங்கை என பல இடங்களில் இனம், மதம், மொழி என மோதவிட்டு செய்தார்கள். உலக வல்லரசுகளின் இந்த தந்திரத்தை அமெரிக்காவும் இப்பொழுது கையில் எடுத்திருக்கின்றது

  வியட்நாமில் இந்த தந்திரம் எடுபடவில்லை என்றாலும் ஆப்கானில் கைகொடுத்திருக்கின்றது

  கடும் இஸ்லாமிய போக்காளர்களான தாலிபான்களின் வேகம் போதாது, இன்னும் ஆக்ரோஷம் வேண்டும் என அலுத்துகொள்ளும் கும்பலெல்லாம் இப்பொழுது ஐ.எஸ் கெரொசான் குழுவில் இணைந்துள்ளன‌

  அதாவது தாலிபன்கள் மென்மையாக (?) நடக்கின்றார்களாம் எப்படி என்றால் இப்படியாம்

  பெண்கள் தனியாக‌ வெளியில் வந்தால் காலில் அடி என்கின்றது தாலிபான், அது தவறு அவர்கள் காலையே வெட்டவேண்டும் என்கின்றது ஐ.எஸ் இயக்கம்

  பெண்கள் நகம் வெளியில் தெரிந்தால் விரலை வெட்டு என்கின்றது தலிபான், கையினையே வெட்டு என்கின்றது ஐ.எஸ்

  அண்டை நாடான இஸ்லாமிய தேசங்களுடன் நல்லுறவு என்கின்றது பாகிஸ்தான், அப்படி ஒரு உறவே தேவை இல்லை, நம்மை போல் அவனை மாற்ற போர் தொடுக்க வேண்டும் என்கின்றது ஐ.எஸ் இயக்கம்

  இது நாம் தமிழர் தும்பிகள் போல் சிரித்துவிட்டு கடக்கும் விஷயம் அல்ல மாறாக பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மதராசாக்களில் தீவிரவாத சிந்தனையுடன் வளர்க்கடும் பற்றாளர்கள் அல்லது தீவிரவாதிகள் இவர்கள் சித்தாந்தமே சரி என இவர்கள் பக்கம் சேர்ந்து குவியும் காட்சியும் நடக்கின்றது

  தாலிபன்கள் இப்பொழுது மிகபெரிய எதிரியினை சந்திக்கின்றார்கள், இதுகாலமும் இல்லா சிக்கல் இது

  இதுவரை இல்லாத ஐ.எஸ் இயக்கம் இப்பொழுது குபீரென கொந்தளிப்பது எப்படி என்றால் சிரியா, ஈராக் நிலையினை இங்கே பின்னோக்கி பார்த்தால் சில விஷயங்கள் புரியும்

  சிரியாவில் அமெரிக்கா அடாவடியாக சென்று அமர்ந்திருக்க காரணம் ஐ.எஸ் இயக்கம், ஈராக்கில் சதாமினை கொன்றவுடன் கிளம்பியிருக்க வேண்டிய அமெரிக்கா இன்னும் ஒற்றைகாலில் நிற்க காரணம் ஐ.எஸ் இயக்கம்

  இந்த இயக்கத்தின் அமைப்பும் , நோக்கமும், போராட்டமும் புரிந்து கொள்ள முடியாதது

  காரணம் இவர்கள் அமெரிக்காவினையோ, இஸ்ரேலையோ எதிர்ப்பவர்கள் அல்ல மாறாக இஸ்லாமியருக்குள்ளே இதுதான் கடும் இஸ்லாமியம் என ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி அடித்து சாகடிப்பவர்கள்

  இவர்களின் முதல் எதிரி ஷியாக்கள் இரண்டாம் எதிரி தீவிரமில்லா சன்னி இஸ்லாமியர்கள் என ஐ.எஸ் இயக்கத்தின் தரவுகளே ஒரு மாதிரியானவை

  ஆம், எங்கெல்லாம் அமெரிக்கா கிளம்ப வேண்டுமோ அங்கெல்லாம் ஐ.எஸ் இயக்கத்தை காட்டி தன் இருப்பை அல்லது கண்காணிப்பை வைத்து கொள்வது ஒரு தியரி

  அதைத்தான் ஆப்கனிலும் செய்ய தொடங்கியிருக்கின்றார்கள், இந்த விசித்திர எதிரியினை எப்படி கையாள்வது என தெரியாமல் தவிக்கின்றது தலிபான்

  இனி படுபயங்கர குழப்பங்கள் ஆப்கனில் ஏற்படலாம், அது தலிபனின் வளர்ப்பு தாயான பாகிஸ்தானிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தலாம்

  மிக பெரிய அழிவுகளை நோக்கி ஆப்கனும் பாகிஸ்தானும் சென்று கொண்டிருக்கின்றன, பாகிஸ்தான் எனும் நாடக தேசம் இனி உண்மையான சவாலை எதிர்கொள்ளும்

  அடுத்தடுத்து நடக்கும் குண்டுவெடிப்புகள் தாலிபன்களுக்கு எதிராக ஐ.எஸ் இயக்கத்தை யாரோ கொம்பு சீவி விட்டதை உறுதிபடுத்துகின்றன‌

  இனி சிரியா போல, ஏமன் போல வல்லரசுகளின் விளையாட்டு திடலாக ஆப்கனும் பாகிஸ்தானின் வட பகுதியும் மாறும்

 14. ஆப்கனில் ஐ.எஸ்ஸின் கொரோசின் பிரிவு தாக்குதல் அமெரிக்க கட்டுபாட்டு விமான நிலையத்தில் நடந்திருப்பதை அடுத்து அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியிருப்பது தாலிபன்களையே அச்சபட வைத்திருக்கின்றது

  இப்போது ஆப்கனின் விமான நிலையம் தவிர எல்லாம் தாலிபனிடம் இருக்கின்றது, அவர்களுக்குள் அல் கய்தா இருக்கின்றார்கள், ஆக தாலிபன் இயக்க பூமி மேல் விமான தாக்குதல் நடத்தியிருக்கின்றது அமெரிக்கா, பக்ரைனில் இருந்து சென்ற அமெரிக்க ஆளில்லா விமானம் ஐ.எஸ் இயக்க இலக்கை தாக்கிற்று என சொல்லி இனி நாங்கள் எங்கிருந்தும் ஆப்கனை தாக்குவோம் என மிரட்ட தொடங்கிவிட்டது அந்நாடு

  இந்நிலையில் காபூலில் வெடிபொருளுடன் பாகிஸ்தானியர் கைது செய்யபட்டிருக்கின்றன, முந்தைய தாக்குதலுக்கான உதவியும் பாகிஸ்தானில் இருந்தே வந்திருக்கலாம் என செய்தி பரவுவதால் வின்னர் வடிவேலு போல “அடேய் சங்கத்த உடனே கலைங்கடா” என ஓடிகொண்டிருக்கின்றது பாகிஸ்தான்

  தன்னை சுற்றி என்ன நடக்கின்றது என்பதையே புரியாமல் அமெரிக்காவிடம் குனிந்து நிற்கின்றது தாலிபன், காட்சிகள் “காதலிக்க நேரமில்லை” பாலையா போல தாலிபன்களுக்கு ஆகிவிட்டது

  “மிஸ்டர் தாலிபன், ஐ.எஸ் இயக்கத்துக்காரன் அடிச்சிட்டோம் பாத்திங்களா

  ஆமாங்க எசமான் என்ன நடக்குண்ணே தெரியலிங்க, அவனுக பாகிஸ்தான்ல இருந்து வந்திருக்கலாமுங்க, அவனுகதாங்க காரணம், எசமான் கோவிச்சுக்க கூடாது

  அதெல்லாம் இருக்கட்டும், நாங்க அவசரமா கிளம்பணும்

  அய்யோ எசமான், நீங்க போயிட்டா இந்த அயோக்கிய பசங்கள யாருங்க அடிப்பாங்க, நீங்க இருந்தா இப்படி வானத்துல இருந்து சுட்டுட்டே இருப்பீக, பிளீஸ் இருங்க‌

  அப்போ நாங்க இருக்கணுமா

  கண்டிப்பா

  இல்ல மிஸ்டர் தாலிபன், நாங்க வெளியேறிட்டு இப்படி அடிக்கடி தாக்குறோம், வழிவிடுங்க போகணும்

  அய்யோ என் உடலை தாண்டித்தான் நீங்க போகணும், விடமாட்டேனுங்க விடவே மாட்டேன்

  அப்போ இங்கேயே இருக்கலாமா?

  அய்யாவுக்கு நாங்க உத்தரவிடுறதா..

  நீதான 31ம் தேதிக்குள்ள போகலண்ணா அடிப்பேன்னு சொன்னவன்?

  அட அப்படி இல்லீங்க, உங்கள வெளிய போக சொல்றவன செருப்பால அடிப்பேன்னு சொன்னேன் அது உங்க காதுக்கு வேறமாதிரி வந்துட்டு

  சரி, இனி கொஞ்சபேரு இருக்குறோம்

  ரொம்ப சந்தோஷமுங்க, அப்புறம் ஒரு சந்தேகமுங்க‌

  என்ன மிஸ்டர் தாலிபன்?

  அந்த அயோக்கிய பசங்க யாரு? பெயர் என்ன? என்ன செய்றானுக? இங்க எத்தனைபேர் இருக்கானுக? திடீர்னு இவ்வளவு பலம் எப்படி வந்துச்சி? எசமான் கொன்னவன் பெயர் என்னங்க?

  மிஸ்டர் தாலிபன், இதெல்லாம் உங்ககிட்ட சொல்ல அவசியம் இல்லை, அவனுக இருந்தா உங்களுக்குத்தான் ஆபத்து அதனாலதான் அடிச்சோம், எங்ககிட்டேயே கேள்வியா

  அய்யா கோபபடாதீக, நீங்க சொல்லவே வேணாம், இங்கேயே இருந்து அவனுகள அடிச்சிட்டே இருங்க, விடாதீங்க எசமான்..

  அவனுகள மொத்தமா அழிக்க சில காலம் ஆகுமே?

  என்னங்க பெரிய காலம், 20 வருஷமா இருந்துட்டீங்க, இன்னும் எவ்வளவு வருஷமானாலும் இருங்க நாங்க காவல் இருக்கோம்..”

Leave a Reply

Your email address will not be published.