பிராமணர் எனது தெய்வங்கள் – ஓர் விளக்கம்

“தெய்வங்களின் வசத்தில் உலகம். மந்திரங்களில் வசத்தில் தெய்வங்கள். அந்த மந்திரங்கள் பிராமணர் வசத்தில். அத்தகைய பிராமணர் எனது தெய்வங்கள்” – இப்படி ஒரு பிரபலமான சுலோகம் உள்ளது.

தை³வாதீ⁴னம்ʼ ஜக³த்ஸர்வம்ʼ
மந்த்ராதீ⁴னம்ʼ து தை³வதம்।
தன்மந்த்ரம்ʼ ப்³ராஹ்மணாதீ⁴னம்ʼ
ப்³ராஹ்மணா மம தே³வதா:॥

இதில் தைவம் என்பதற்கு தெய்வங்கள் என்று அல்லாமல், விதி அல்லது ஊழ் என்றும் பொருள் கொள்ளலாம். விதிவசத்தால் எதிர்பாராமல் தீமை தடுக்கப் பட்டாலோ அல்லது நல்லது நடந்தாலோ தெய்வாதீனமாக என்று தமிழிலும் கூறுகிறோம். அதன்படி முதல் வரியின் பொருள் “விதியின் வசத்தில் உலகம். மந்திரங்களின் வசத்தில் விதி” என்று வரும். அதாவது விதிவசமாக வரும் சில கர்மபலன்களுக்கு மந்திரங்களால் செய்யப்படும் பரிகாரம் அல்லது பிராயச்சித்த கர்மங்களால் நிவாரணம் உண்டு.

இந்த சுலோகத்தை வைத்து வழக்கம் போல இந்துமத வெறுப்பு பிரசாரங்கள் ஓடுகின்றன. ஆரிய பார்ப்பனர்கள் தங்களை உயர்த்திக் கொள்வதற்காக சூழ்ச்சி செய்து எழுதிவிட்டார்கள் இத்யாதி இத்யாதி…

இந்த சுலோகம் அனேகமாக ஏதேனும் புராணங்களில் இருக்கலாம். மகாபாரத்தில் ஸ்ரீகிருஷ்ணர் கூறுவதாக வருகிறது என்று ஒரு கட்டுரையில் பார்த்தேன். எந்த பர்வம், அத்தியாயம் என்ற குறிப்பு அதில் இல்லை. ஸ்ரீ வேதாந்த தேசிகர் தனது கீதை உரையில் (18.14) இதனை மேற்கோள் காட்டுகிறார். அதில் விஷ்ணு ஸம்ஹிதை என்ற வைணவ ஆகம நூலில் உள்ளதாகக் குறிப்பு உள்ளது. எப்படியானாலும், இது போன்ற பல சுலோகங்கள் இதிகாச, புராணங்களிலும் மற்ற சாஸ்திரங்களிலும் உள்ளன. அவற்றை சரியான நோக்கில் புரிந்து கொள்வது முக்கியம்.

பிரம்ம என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு. வேதம், மந்திரம் என்பதும் ஒரு அர்த்தம். எனவே, இந்த சுலோகத்தில் பிராமணர் என்ற சொல் ஜாதி, குலம் என எதையும் குறிக்கவில்லை. பிராமண வர்ணம் என்பதைக் கூட குறிக்கவில்லை. மந்திரமறிந்தவன் என்ற பொருளிலேயே அது வருகிறது. மந்திரங்களால் தேவதைகளை ஆராதிக்கக் கூடிய, அதனால் ஆன்மீக சக்திபெற்றவனாகிய பிராமணன் தெய்வத்தன்மை கொண்டவன், வணக்கத்திற்குரியவன் எனபது தான் இதன் பொருள். இதில் என்ன பிரசினை?

“அந்தணர் என்பர் அறவோர்” என்கிறது திருக்குறள். “பார்ப்பார் அறவோர் பத்தினிப் பெண்டிர்.. ” என்று பட்டியல் போட்டு இவர்களையெல்லாம் விட்டு மற்றவர்களை தீ சுடுக என்று ஆணையிடுகிறாள் சிலப்பதிகாரக் கண்ணகி. இதே போன்றவை தான் பெரும்பாலான சம்ஸ்கிருத நூல்களில் வரும் வாசகங்களும்.

அந்தணர் என்பதாவது பண்புகளைக் குறிக்கும் ஒரு பொதுச்சொல். சைவ சமய ஆசாரியரான சுந்தரர் “தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்று ஒரு குறிப்பிட்ட ஊரின், குறிப்பிட்ட மரபின் அந்தணர்களுக்கு நான் அடியவன் என்றே கூறியிருக்கிறார். சம்ஸ்கிருத வெறுப்பைக் கக்கும் வெறிக் கும்பல்கள் தமிழ் இலக்கிய மரபிலேயே உள்ள இத்தகைய வாசகங்களை என்ன செய்வார்கள்?

இந்து மத சாஸ்திரங்கள் கடல் போல ஏராளமாக உள்ளன. பண்டிதர்களே கூட வாழ்நாள் முழுதும் முயன்றாலும் அவற்றின் ஒரு சிறு பகுதியையே கற்க முடியும். சம்ஸ்கிருத மொழி அறியாத பல சாதாரண இந்துக்கள் அவற்றை நேரடியாகக் கற்க இயலாது என்றாலும் அதனால் எந்த பாதகமும் இல்லை. ஏனெனில் அவற்றில் உள்ள கருத்துக்களும் ஞான நெறிகளும் தான் பல நூற்றாண்டுகளாக தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் பற்பல மகான்களாலும் அருளாளர்களாலும் மீண்டும் மீண்டும் எடுத்தியம்பப் பெற்றுள்ளன. இதை உணர வேண்டும். இந்து வெறுப்பு கும்பல்கள் ஏதேதோ சம்ஸ்கிருத வாசகங்களை தப்பும் தவறுமாக பேசி, எழுதிக் கொண்டுவந்து இதோ பார் இதில் பிராமணனை அப்படிச் சொல்லியிருக்கிறது, சூத்திரனை இப்படிச் சொல்லியிருக்கிறது என்று ஏதேனும் கிளப்பி விடுவார்கள் என்றால் அதில் 95% முழுப்பொய்யாகவும் மீதி 5% உண்மையை திரித்துக் கூறியதாகவும் இருக்கும் என்பதே இது நாள் வரையில் நிகழ்ந்திருக்கிறது. எனவே இத்தகைய பிரசாரங்களைக் கண்ணுறும் மதப்பற்றுள்ள இந்துக்கள், போடா நாயே என் மதத்தைப் பற்றி எனக்குத் தெரியும் என்று அடித்து விரட்ட வேண்டும். பிரசாரம் மிகவும் தீவிரமடைந்தால் அதனை இந்துமத அறிஞர்களின் பார்வைக்குக் கொண்டுவந்து அறிவார்ந்த எதிர்வினைகளையும் பதிலடிகளையும் உருவாக்கலாம்.

பி.கு:

அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் தமிழ்வழி நிகழும் இந்துமத வெறுப்பு பிரசாரங்களில் இஷ்டத்துக்கு எதை வேண்டுமானாலும் எழுதி ஏதோ ஒரு வேத, சாஸ்திர நூலின் பெயரைப் போட்டு விடுகிறார்கள். இந்தத் தகவல் தொழில் நுட்ப யுகத்தில் 3 நிமிட தேடல் மூலமே அவற்றின் பொய்மைத் தன்மையை உடைத்து விட முடியும். ஆனால் பல சாதாரண இந்துக்களுக்கு இதைக் கூட செய்வதற்கான ஊக்கமும் முனைப்பும் கூட இல்லை என்பது சோகம். இதோ, இப்பதிவில் மேலே கொடுக்கப் பட்டுள்ள சுலோகம் பிழைகளுடனும் “ரிக்வேதம் – 62 பிரிவு – 10 சுலோகம்” என்று ஒரு காமெடியான குறிப்புடனும் ஒரு திராவிட இயக்க நிர்மூடனால் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. சுலோகத்தின் அமைப்பை பார்த்தாலே தெரியும் இது வேதத்தில் உள்ளதல்ல, பிற்காலத்தியது என்று. அதை ஊகிக்க முடியாவிட்டாலும், Rigveda 62.10 என்று கூகிளில் தேடினால் பல்பு தான் வரும் 🙂 ஏனெனில் ரிக்வேத சான்றுகளில் முதல் எண் மண்டலத்தையும் அடுத்த எண் சூக்தத்தையும் குறிக்கும். மொத்தம் 10 மண்டலங்களே உள்ளன. எனவே, அதிகபட்ச எண்ணிக்கை என்பது 10.191 என்பது தான். 1.2.3 என்று மூன்று எண்களை எழுதினால், மூன்றாவதாக உள்ளது சூக்தத்தில் உள்ள குறிப்பிட்ட மந்திரத்தைக் குறிக்கும். எனவே உங்கள் கூகிள் தேடலில் 3.62.10 என்பது வரும். அது “தத்ஸவிதுர் வரேண்யம் ..” என்று தொடங்கும் காயத்ரி மந்திரம்!

இந்து வெறுப்பு தரப்புகள் எந்த அளவுக்கு கீழ்த்தரமாகவும் மலினமாகவும் சாதாரண இந்துக்களின் அறியாமையையும் திராவிட இயக்கம் உருவாக்கியுள்ள பிராமண வெறுப்பையும் பயன்படுத்தி தாக்குதல்களை நிகழ்த்துகிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது).

12 Replies to “பிராமணர் எனது தெய்வங்கள் – ஓர் விளக்கம்”

  1. மறுபடியும் பிராமண துவேஷத்தை கையில் எடுத்து ஆகமவிதிகளுக்கு உட்பட்ட கோவில்களில் பிராமணர்களுக்கு எதிரான சர்ச்சையில் சிக்கியிருக்கின்றது திமுக அரசு

    மாநிலம் மிக பின் தங்கிய நிலையில் இருக்கின்றது என நிதியமைச்சரே மஞ்சள் கடிதாசி கொடுத்த நிலையில் இன்னும் ஒரு நாளைக்கு 300 கோடி கடன் வாங்கி அரசு இயக்கும் நிலையில் இப்படி பன்னெடுங்கால பொய்யினை கையில் எடுத்திருப்பது அவர்களின் திசை திருப்பும் வித்தையாகவே அறியபடுகின்றது

    எப்பொழுதெல்லாம் திமுக ஆட்சிமேல் மக்களுக்கு அவநம்பிக்கையும் வெறுப்பும் வருமோ அப்பொழுதெல்லாம் பிராமணர் மேல் வன்மத்தை கக்கி விஷயத்தை திசை திருப்புவது திமுக அரசியல்

    முன்பு கருணாநிதி பல இடங்களில் அதை செய்தார், குறிப்பாக பெரும் சர்ச்சைகளில் திமுக சிக்கும் பொழுது இப்படி விஷயத்தை திசை திருப்புவார், அதையே அவர் மகனும் செய்கின்றார் இதில் ஆச்சரியம் ஏதுமில்லை

    தெய்வங்கள் மனிதர்களை வைத்து விளையாடுமே அன்றி மனிதன் கோவில்களை வைத்து ஆடுவது அவனுக்கு பெரும் அழிவினை கொடுக்கும் என்பது இவர்களுக்கு தெரிந்தும் அதிகார போதையில் ஏதேதோ ஆடுகின்றனர்

    பிராமணர்கள் அப்படி வெறுக்க வேண்டியவர்களா என்றால் இல்லை, அவர்கள் இந்நாட்டின் இந்து தர்மத்தை தாங்கி நிற்கும் அடையாளங்கள்

    அவர்கள் முழு தெய்வ பணியார்களாய் இருப்பதால் முழுக்க முழுக்க ஆலயங்களில் நின்று மக்களுக்கு வழிகாட்டுவதாலும் அவர்கள் இந்துமதத்தின் ஆணிவேராய் இருப்பதாலும் இந்நாடு வளமாய் இருக்கின்றது என்பது கிரேக்கர் முதல் ரோமர் வரை எழுதிய குறிப்பு

    ஆம், இதனாலே இந்துமதத்தை முழுக்க அழிக்காமல் ஆனால் இந்துக்களின் செல்வத்தை தேனி போல் உறிஞ்சி உல்லாச வாழ்வு நடத்தினர் ஆப்கானியர்

    பிராமண துவேஷம் என்பது போர்த்துகீசியர் கால்வைத்த 15ம் நூற்றாண்டில்தான் இங்கு உருவானது, பிராமணர்கள் இருக்கும் வரை இங்கு அந்நிய மதம் வளராது என்பதால் கடுமையான பிராமண வெறுப்பினை அவனே உருவாக்கினான்

    அந்த வழியில் வந்த மிஷினரிகள் பிரிட்டிஷ் ஆட்சியிலும் அதை தொடர்ந்தனர்

    இந்துமத பெருமை அழியாமல், இந்து தர்மம் அழியாமல் இந்நாட்டை காலம் காலமாக காக்க முடியாது என உணர்ந்த பிரிட்டானியரும் அவர்களுக்கு வழிவிட்டனர்

    இதில்தான் பிராமண துவேஷம் பெருகிற்று, வெள்ளையன் தனக்கு தோதாக இங்கு நீதிகட்சி இட ஒதுக்கீடு இன்னும் புரட்சி குரலை எல்லாம் எழுப்ப வைத்து அரசியல் செய்தான்

    அதிலே தொடங்கிய அந்த வெறுப்புத்தான், இந்து தர்மத்தின் ஆணிவேரான பிராமணர்களை ஒழிக்க வேண்டும் என்ற அந்த நுட்பம்தான் இன்று திமுகவின் அறிவிப்புகளாக வந்து கொண்டிருக்கின்றன.

    பிராமணன் என்பவன் யார்?

    பிராமணன் என்பது அன்று ஒரு சபிக்கபட்ட வாழ்க்கை, அவனால் எல்லோரையும் போல இயல்பான வாழ்வினை வாழமுடியாது.

    மந்திரங்கள் என்பதும் அதை உச்சாடனம் செய்வதும் பிரபஞ்சத்தோடு தன்னை இணைத்து கொண்டு மக்கள் சேவை செய்வது சாதாரணம் அல்ல, அதை பிராமணர்கள் செய்தார்கள்

    பிராமண‌ நியதிபடி அவர்கள் சொத்து சேர்க்க கூடாது, பொருள் குவிக்க கூடாது, அவர்கள் தானம் ஒன்றை பெற்றே பசியாற வேண்டும்

    மற்ற மக்களை போல அவர்கள் உல்லாசமாய் இருந்துவிட முடியாது, கவலையற்று அவர்கள் போக்கில் இருக்க முடியாது, மக்களை காக்கவும் , மக்கள் பல பலன்களை பெறவும் அவர்கள் உதவியும் சேவையும் மகா அவசியம்

    உலகில் புரிந்து கொள்ளமுடியாத பல சூட்சுமங்களுக்கும், கால நிலை கணிப்பதற்கும் இன்னும் பல விஷயங்களுக்கும் தங்களை இறைநிலையிலே பிரபஞ்சத்தோடு இணைத்திருக்கும் அவர்கள் உதவி தேவை

    அரசன் படையெடுப்பு முதல் விவசாயி விதைவிதைக்க நாள் குறிப்பது வரை அவர்கள் அவசியம் இருந்தது. நல்லது கெட்டது என எல்லாவற்றிலும் அவர்கள் தேவை இருந்தது

    சுருக்கமாக சொன்னால் உலகம் இயங்க அவர்கள் ஒருவகையில் தியாக பிம்பமாக இருந்தார்கள். வழிகளை சொல்வார்கள், மந்திரங்களை ஜெபிப்பார்கள், காலநிலை கிரகநிலைகளை கணித்து சொல்லி வழிநடத்துவார்கள்

    தானமாக எது கிடைக்குமோ அதை ஏற்றுகொள்வார்கள்

    உண்மையில் பிராமண வாழ்வு மிகவசதியான வாழ்வாக இருத்தல் கூடாது, இங்கு அப்படித்தான் இருந்தது. அவர்கள் நாட்டுக்காக யாகம் நடத்த வேண்டும், மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்க வேண்டும், நாடும் மக்களும் சுபிட்சம் பெற என்ன செய்யவேண்டுமோ அதை செய்ய வேண்டும்

    அதை ஒழுங்காக செய்தார்கள், இதனால் எல்லா தரப்பும் அவர்களை ஆதரித்தது

    நாட்டில் ஏகபட்ட சமூகம் உண்டு. பயிர்தொழில் உலோக தொழில், காவல் தொழில், வியாபாரம் என ஏக தொழில்கள் உண்டு, அவனவனுக்கு தொழில் செய்ய நேரமுண்டே தவிர தெய்வத்தை தேடவோ இன்னும் பல இயற்கையின் சூட்சுமத்தினை அறியவோ நேரமிருக்காது

    எல்லா தரப்பின் இந்த தேவைகளை தன் தலையில் சுமந்தவன் பிராமணன்

    தீண்டாமை என்பார்கள், அது எப்படி உருவாயிற்று என்பதற்கு கொரோனா காலமே சாட்சி. ஆம் பிராமணன் அரண்மனை முதல் ஆற்றங்கரையில் பிண்டம் வைப்பது வரை எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டியவன்
    திதியோ, திருமணமோ, சாதகம் கணிப்போ அவன் பல இடங்களுக்கு சென்று பலரை சந்திக்க வேண்டும், பல சூழலுக்கு செல்ல வேண்டும், அதனால் அவன் நோய்வாங்கும் அல்லது பரப்பும் வாய்ப்பு இருந்தது
    இதனால் அவன் தனக்கு தானே வேலியும் இட்டு கொண்டான்

    பிராமணன் கல்வி பறித்தான் என்பார்கள், அடுத்தவனை வழிபடவிடவில்லை என்பார்கள்

    அல்ல, பக்தி யார் செய்தாலும் பலன் உண்டு, நாயன்மார்கள் 63 பேரில் பிராமணர் வெகு சிலரே

    பிராமணர் யாரின் கல்வியினையும் பறிக்கவில்லை. அன்று கல்வி என்பது வாழ்க்கை கல்வி அது அரச பாடம், ராணுவம், விவசாயம், சிற்பம், கலை, தச்சு என பலவாறு இருந்தது

    அதை எல்லாம் பிராமணர் தொட்டு ஆசீர்வதித்து பிரார்த்தித்து தொடங்கி வைத்து வந்தார்களே தவிர அவர்கள் அதை செய்யவில்லை

    பொற்கொல்லர், தளபதி, வியாபாரி என எல்லாவற்றுக்கும் படிப்பு இருந்தது, பிராமணன் அதை படித்தானா?
    அவன் தன் எல்லையான வேத மந்திர ஆலய பணிகளில் எல்லை கட்டி நின்றான், மறுக்க முடியுமா?

    அவன் அதிகாலையில் எழ வேண்டும், நீராடி தெய்வத்தை தொழவேண்டும், முன்னோர்கள் சொன்ன ஏகபட்ட மந்திர இதர உச்சாடனைகளை மனனம் செய்ய வேண்டும், அதை பரம்பரை பரம்பரையாக காக்க வேண்டும்

    ஆம் ஓலைசுவடி ஒரு கட்டத்துக்கு மேல் கொள்ளாது, கொண்டாலும் செல்லரித்தால் நாசம். அட நூல் என்றால் எரிந்தால் நாசம், இன்றைய டிஜிட்டல் மீடியா என்றாலும் ஒரே ஒரு லேசர் கதிரில் நாசம்

    பின் எங்கிருந்து மந்திரங்களை மீட்டெடுப்பது?

    இதனால் பாராயணம் செய்வது ஒன்றே வழி என அந்த கூட்டம் மனப்பாடமாய் படித்தது, வேறு வேலைக்கு சென்றால் அதை வழிவழியாக தொடர்வது யார்? அந்த வேலையில் கவனம் சென்றால் வேதத்தை காத்து வருவது யார்?

    பிராமணன் ஒரு காலமும் அன்று சுகவாழ்வு வாழவில்லை, அரசனுக்கு, நிலம் கொண்டிருந்த நிலக்கிழாருக்கு , வியாபாரிகளுக்கு, உழைக்கும் மக்களுக்காக பிரார்தித்தும் ஆலோசனைகளும் சொல்லி, கடவுள்பால் அவர்களை பிடித்து வைத்த ஒரு வேலைக்காரன்

    அவனுக்கு சொத்து இல்லை, அதிகாரமில்லை, கைபொருளுமில்லை. தானம் எனும் ஒரே ஒரு விஷயத்தால் வாழ்ந்தவன் அவன்

    அவனை ஆதரிக்க வேண்டியது சமூக கடமையாய் இருந்தது. ஆம் அன்று அவனுக்கு சம்பாதிக்க தெரியாது, சண்டை தெரியாது, ஏமாற்ற தெரியாது

    இதனால் பசுமாடும் அவனும் ஒரே வரிசையில் வைக்கபட்டிருந்தார்கள். அவர்களை சமூகமே காக்க வேண்டும் என்றும், இடையறா கடவுள்பணி செய்யும் அவர்கள், நமக்காக கடவுளிடம் மன்றாடும் அவர்களை நாம் காக்க வேண்டும் எனும் அக்கறையே இருந்தது

    மந்திர முழக்கங்களும் யாகங்களும் நாடு வாழவே உச்சரிக்கபட்டன, கோவிலுக்கு சென்றால் கூட அர்ச்சகர் அவனுக்காகவே மந்திரம் முழங்கினார், அதற்கான ஒரு சிறிய கூலி அல்லது அன்பளிப்பு வழங்கபட்டது
    காரணம் பிராமணனுக்கு வேறு வேலை தெரியாது

    எந்த பிராமணனும் தனக்காக மந்திரம் சொல்லமுடியாது , மந்திரத்தாலோ இறை சக்தியாலோ தன்னை வளர்க்க முடியாது, அரசனின் ஜாதகத்தை கணிக்கும் அவனால் அரச பதவியில் அமரமுடியாது
    அவன் வாழ்வு நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் வாழ்ந்த ஒரு தன்னலமற்ற வாழ்வு

    வேதம் என்பதே விளக்கு, வேதம் என்பதே ஒளி , வேதம் சொல்லபடும் நாடு செழிக்கும்

    பாரதகண்டம் அப்படி இருந்தது, இந்த கண்டத்தின் எல்லா பாகங்களிலும் வேதங்கள் முழங்க முழங்க இந்நாடு செல்வ செழிப்பில் மின்னியது, இது வரலாறு

    இதனால் இந்த கண்டத்தில் பிராமணருக்கு தனி மரியாதை இருந்தது, அவர்கள் இக்கண்டத்தின் பொது சொத்து ஆனார்கள், அவர்களை கொல்லல் பாவம் என்றும், போர்காலங்களில் கூட அவர்களை தொட கூடாது என்றும் உத்தரவுகள் இருந்தன‌

    அந்த செழிப்பில்தான் அலெக்ஸாண்டர் முதல் பிரிட்டிஷார் வரை வந்தனர், வந்து கொள்ளை அடிக்க முயன்றனர், அரசர்களின் வீழ்ச்சியில் இத்தேசம் கொள்ளைகாடு ஆயிற்று

    அரசர்கள் வீழ பிராமணரை ஆதரிக்கும் வழக்கமும் குறைந்தது, ஆட்சியாளர்கள் மாற பிராமண இனம் தத்தளித்தது.

    தன்னை காக்க அதற்கு வேறுவழி தெரியவில்லை, அது வேத பாராணயம் பூஜை இன்னபிற விதிகள் கடமைகளிலிருந்து விலகி கணக்கெழுதுதல் குறிப்பெழுதுதல் என திசைமாறிற்று, ஜோதிடம் போன்றவை விற்பனையானது இப்படித்தான்

    இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆட்சிகளில் இங்கு ஆலயங்கள் சீரழிந்தன பிராமண இனமும் மந்திரம் சொல்லுதலை விட்டுவிட்டு இதர மொழிகளை படிப்பதில் கவனம் செலுத்திற்று

    அது அப்பொழுது அவர்களுக்கு கைகொடுத்தது, ஆனாலும் வழிவழியாக காத்துவரும் மரபினை அந்த வேத மூலங்களை அவர்கள் செய்ய தயங்கவில்லை

    அவர்கள் இறைவனில் கலந்து மந்திரம் சொன்னவர்கள், மனசாட்சிக்கு அஞ்சி சராசரி மனிதனாய் இல்லாமல் தவ வாழ்வில் நின்றவர்கள் என்பதால் ஒரு நேர்மை அவர்களிடம் இருந்தது

    அதை சரியாக பயன்படுத்தினான் வெள்ளையன், அவன் அதை அடையாளம் அவர்களிடம் பெரும் பொறுப்பை கொடுத்தான், தான் செல்லும் இடமெல்லாம் அழைத்தும் சென்றான்

    அவர்களிடம் இருந்த நேர்மை அவனை கவர்ந்தது, இன்றுவரை ஐரோப்பா அமெரிக்காவில் பிராமணர் பெரும் இடத்தில் இருப்பது அப்படித்தான்

    பிராமண இனத்தின்மேல் கடும் குற்றம் சாட்டும் விஷயம் எப்பொழுது தொடங்கியது?

    அதை தொடங்கி வைத்தவர்கள் மிஷனரிகள், பிராமண இனம் இந்துமதத்தை தாங்கி நிற்பதை அவர்களால் பொறுக்கமுடியவில்லை, காசியினை அழித்தால் இந்துமதத்தை அழிக்கலாம் என திட்டமிட்ட அவுரங்கசீப் போல, பிராமணர்களை ஒழித்தால் இந்துமதத்தை ஒழிக்கலாம் என திட்டமிட்டவர்கள் அவர்களே
    இதனால்தான் அரசருக்கு நிகரான செட்டிகள், பெரும் தனவான்களான முதலியார்கள் இன்னும் பெரும் வாழ்வு வாழ்ந்த ஜமீன் கூட்டத்தை அரசிடம் அற்ப சம்பளம் வாங்கிய பிராமணனை குறிவைக்கும் திட்டம் வகுக்கபட்டது

    நீதிகட்சி அதை தொடங்கியது

    நீதிகட்சி போராட்டம் நடத்தியது நமக்கு தெரியுமே தவிர, மேல்நாட்டில் அவர்கள் செய்த வியாபாரமோ அதற்கு மிஷினரிகள் செய்த உதவியோ பலருக்கு தெரியாது

    அப்பொழுது தொடங்கபட்டது தென்னக பிராமண எதிர்ப்பும், திராவிட சித்தாந்தமும்

    வெள்ளையன் பெரும் திட்டங்களை நீண்டகால நோக்கில் வகுப்பவன், இன்று ஹாங்காங் போல, தைவான் போல இந்தியாவினை பிளந்து போடும் திட்டம் அவனுக்கு இருந்தது

    தென்னிந்தியாவினை பிரித்து போட அவன் திராவிட சித்தாந்தத்துக்கு தீனியிட்டான்

    மிகபெரும் பொருளாதார கேந்திரமான பம்பாயினையும் அதன் பகுதிகளை வளைக்க மகராஷ்டிரத்திலும் ஒருவரை கண்டறிந்தான்

    இவர்கள் வைக்கும் தீ பற்றி எரியும் அதில் தேசம் சிதறும் என கனவு கண்டான்

    இப்படி எல்லோரும் வைத்த தீதான் பிராமண எதிர்ப்பு, பிராமணனை எதிர்க்க எதிர்க்க இந்துமதம் புறக்கணிக்கபடும், மந்தைகள் சிதறும் அதை அள்ளிகொண்டு செல்லலாம் என்பது மிஷனரி கணக்கு
    அதில் தனிநாடு கண்டால் தனக்கு லாபம் என்பது பிரிட்டிஷ்காரன் கணக்கு

    எல்லாமே அரசியல் அன்றி வேறல்ல‌

    எம்மால் ஒரு விஷயத்தை உறுதியாக சொல்லமுடியும்

    இங்கு வேதங்கள் வாழ வாழ இந்திய கண்டம் வாழ்ந்தது, அது உலகின் மிகபெரும் பணக்கார நாடாய் மின்னியது

    வேதம் சரிய சரிய அது தரித்திரதேசமானது, ஆனால் பிராமணன் சுதந்திரமாக இயங்கிய நாடுகள் வளம்பெற்றன, பிராமணன் கால்வைத்த இடங்களும் ஆசிபெற்றன‌

    அவனை விரட்டிய தேசம் கடும் சீரழிவினை சந்தித்தது

    இங்கு வேதங்கள் முழக்கம் எவ்வளவு அவசியம், ஒரு இனம் வேறு வேலைக்கு செல்லாமல் அதை காத்துவருதலும், பொது நலத்துக்காக தனித்திருந்து பிரார்தித்து வருதலும் எவ்வளவு அவசியம் என்பதை இப்பொழுது உலகம் புரிந்து கொண்டது

    இன்னும் தெளிவாக புரியவேண்டுமானால் பிராமணருக்கு தனியாக ஒரு தேசம், மிக சிறிய தேசம் அமைத்து கொடுங்கள், அது இஸ்ரேலை விட உலகம் வியக்கும் தேசமாக அமையும், அது சத்தியம்

    இங்கு தவறாக புரிந்து கொள்ளபட்ட ஏகபட்ட விஷயமும், கொடுமையாக திரிக்கபட்ட வரலாறும் பிராமணனுடையது

    இங்கே தமிழகத்தில் எல்லா ஆலயங்களிலும் பிராமணர்கள் இருப்பதில்லை, கிராம ஆலயங்களிலும் ஆதீனங்களிலும் இன்னும் பல இடங்களிலும் எல்லா சாதியும் அர்ச்சகராக எக்காலமும் உண்டு

    ஆகம விதிகளுக்கு உட்பட்ட ஆலயங்களில்தான் சில விதிகள் உண்டு, அது இந்து பாரம்பரியம் அங்கு அரசின் சட்டங்கள் செல்லாது என கருணாநிதி அரசுக்கே நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த காலங்களெல்லாம் உண்டு

    இனி முக ஸ்டாலினும் அதே கண்டனத்தை பெறுவார்

    உண்மையில் ஒரு வைராக்கியமாக நின்று, வருமானமில்லாமல் , தட்டும் தட்சனையுமாக, ஹிந்து தர்மத்துக்காக ஆகமவிதி ஆலயங்களில் வறுமையில் போராடி ஹிந்து தர்மத்தை காக்கின்றார் பிராமண குருக்கள்

    கோடான கோடிகளை வைத்திருக்கும் திமுகவினரை போல் அவர்களுக்கு செல்வமில்லை, வாரிசுகளை கொண்டுவரும் அளவு அத்தொழில் வருமானமுமில்லை

    ஒரு பக்கம் இட ஒதுக்கீடு என அவர்களுக்கான வாய்ப்பு மறுக்கபடுவதும் இன்னொரு பக்கம் மிக சில ஆகம கோவில்களிலும் அவர்களை விரட்டுவோம் என்பதும் அநீதியின் உச்சம்

    அந்த இனம் வேதம் காக்க, ஆலயங்களில் மந்திரம் முழங்க உருவான இனம், ஆலயமில்லை என்றால் அவர்கள் இங்கு வாழும் அவசியமே இல்லை

    விவசாயி, மீனவண் என பலரின் துயர் என்றால் துடிக்கும் அரசு பிராமணரின் துயரை வளர்த்து ரசிப்பது அரக்கதனம்

    அவர்கள் இறைவன் அடியார்கள், இறைவனே வந்து அவர்களுக்காக “தில்லைவாழ் அந்தணருக்கும் அடியேன்” என்பது முதல் எத்தனையோ இடங்களில் அவர்கள் தன் அடியார்கள் என சொன்ன பூமி இது

    அந்த ஆகம விதிகள் ஆலயத்தினை அப்படியே விடுவதுதான் சரி, சட்டமும் அதைத்தான் சொல்கின்றது

    தாஜ்மஹால் அருகே பல போலி தாஜ்மகாலை கட்டினால் உண்மை தாஜ்மஹால் அடையாளமின்றி அழிந்துவிடும் என்பது போல எல்லோரையும் அர்ச்சகராக்கி உள்ளே நுழைத்து குழப்பினால் ஹிந்து தர்மம் அழியும் என கணக்கிடுகின்றது இந்த அரசு

    ஹிந்து தர்மம் என்றால் என்ன?

    அது தன் வரலாற்றில் புத்தம்,சமணம், இஸ்லாம் , கிறிஸ்தவம் என எத்தனையோ சவால்களை மீட்டெடுத்த மதம்

    புத்த காலத்தை ஒரு இளம்துறவி சங்கரர் ஒழித்து இந்துமதம் காத்தார்

    சமணம் ஒரு பாலகன் ஞான சம்பந்தனாலும் ஒரு கிழவன் அப்பர் சாமிகளாலும் ஒழிக்கபட்டது

    ஆப்கானியர் முழுவேகத்துடன் வந்து ஆலயங்களை பாழ்படுத்தியபொழுது நாயக்க அரசும், வீர சிவாஜியும் சிங்கமென எழும்பினர்

    மிஷனரிகள் ஆட்சியில் ஓசையின்றி இந்து துவேஷம் நடந்தபொழுது எத்தனையோ இந்து சபைகளும் ஆதீனங்களும் மடங்களும் சவால் விட்டு எழுந்து இந்துமதம் காத்தன‌

    எல்லாம் எரிந்த காடு ஒரு மழையில் துளிர்ப்பது போல தன்னை ஒன்றுமில்லா சூனியத்தில் இருந்தும் புதிப்பித்து கொள்ளும் சக்தி கொண்டது இந்துமதம்

    அதனால்தான் எகிப்து, ரோம், அரேபியா என பண்டைய பெருமைகளெல்லாம் அடையாளமெல்லாம் அழிந்து சமாதியாகிவிட்ட நிலையில் பாரதமோ ராமர்கோவில் வரை மீட்டெடுத்து வெற்றி நடையிடுகின்றது

    இந்து தர்மம் அந்த அதிசயத்தை செய்யும், அது ஒன்றுக்கே அது சாத்தியம்

    தர்மத்தின் மேல் கட்டபட்ட அந்த இரும்பு கோட்டையினை, பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும் மலையினை வெறும் 5 ஆண்டு முதல்வராக அதுவும் தமிழகம் எனும் சிறுமாநிலத்தின் தற்காலிக முதல்வராக இருக்கும் திமுக அரசு மோதினால் நிச்சயம் அழிவது பிராமண இனமாகவோ இந்து தர்மமாகவோ இருக்காது

  2. கர்ப்பகிரகத்தில் ஏன் எல்லோரும் நுழைய முடியவில்லை அதை கட்டிய கொத்தனார் ஏன் நுழையமுடியவில்லை, செதுக்கிய சிற்பி ஏன் நுழையமுடியவில்லை , சிற்பிக்கு சோறுபோட்ட அவன் மனைவி ஏன் நுழையமுடியவில்லை என கிளம்பிவிட்டார்கள் ஒரு சிலர்

    கிளப்பிவிட்டது இப்போதைய அறமில்லா அமைச்சர், தன் அதிகாரம் மீறி எல்லை
    ஆலயத்து கர்பகிரகம் தனித்து காக்கபட வேண்டும் என்பது அக்காலத்து விதி, அது இந்துமதத்துக்கு மட்டுமல்ல யூத மதத்திலும் இன்னும் சில பண்டைய மதங்களிலும் இருந்தது

    அதற்கு காரணம் தீண்டாமை அல்ல, அல்லவே அல்ல‌

    ஞானிகளுக்கான ஞானி சாலமோன் அமைத்த ஆலயத்திலே முக்கியமான பீடத்திற்கு குரு தவிர யாரும் நுழைய அனுமதியில்லை என்கின்றது சான்றுகள், ஆம் அவன் கட்டிய ஆலயத்து கர்ப்பகிரஹத்துக்குள் அவனே நுழையவில்லை

    ராஜராஜ சோழனும் அப்படியே தன் ஆலயத்தில் தள்ளி நின்றான், ஏன் அப்படி விதி வைத்தார்கள்?

    முதல் விஷயம் பாதுகாப்பு, சிலைகளும் அவற்றின் நகைகளும் இன்னு விலைமதிக்கபடா பொக்கிஷங்களும் அந்த சந்ததியில்தான் இருந்தன, கருவறை தெய்வமே எல்லா வளங்களுக்கும் சாட்சியாய் நின்றது

    எல்லோரையும் உள்ளே விட்டால் அதை காப்பதும் சிரமம், இன்னொன்று அழகிய சிலைகளை சேதபடுத்தும் ஆபத்தும் உண்டு

    முக்கியமான விஷயம் பாதுகாப்பு என்பதால் தள்ளி இருந்து மக்களை தரிசிக்க வைத்தார்கள்

    கருவறையும் அதன் நகையும் பொன்னும் வைரமும் ஒரு நாட்டின் செழுமையின் அடையாளமாய் இருந்தது
    இன்று டிரம்போ மோடியோ வருகின்றார்கள் என்றால் ஓடிசென்று நெருங்கமுடியுமா? தள்ளி நின்றுதான் தரிசிக்கமுடியும்

    மானிடருக்கே இப்படி என்றால் அன்று தெய்வத்தின் சிலைகளுக்கு எப்படி எல்லாம் பாதுகாப்பு வழங்கியிருப்பார்கள்

    அடுத்த விஷயம் எல்லா மக்களையும் கருவறையில் அனுமதித்தால் மூல தெய்வத்தின் பாதம் முதல் முகம் வரை தொட்டு வணங்குவார்கள், அந்த தெய்வத்தின் மேல்தான் பக்தி அதிகம் ஓங்கும்

    எல்லோரும் தொட்டு அல்லது எல்லோரும் அபிஷேகமும் அலங்காரம் செய்தால் என்னாகும்?

    சிலையின் ஆயுள்தான் என்னாகும்? எல்லோரும் தொட்டால் சேதமாகாதா? இதனால் தள்ளி இருந்து வணங்க சொன்னார்கள்

    இன்னொன்று ஆகம விதி

    சைவ உணவும் கட்டுபாடான விரதமும் இன்னும் மந்திர உச்சாடனைகளில் தேர்ச்சியும் முழுநேரமும் இறைவனை பற்றி சிந்தித்து அந்த பாடங்களில் தேர்ச்சியும் முதிர்ச்சியும் பெற்றவர்களே அங்கு அனுமதிக்கபட்டனர்

    முதல் காரணம் அவர்கள் வாழ்வினை முழுநேரமும் கடவுளுக்காக அர்பணித்தவர்கள், கடவுளின் பணியாளர்கள்
    மனசாட்சியும் தெய்வபக்தியும் நிறைந்தவர்கள்

    அவர்களால் ஆலய பீடமோ சிலையோ நகையோ எதுவும் ஆகாது எனும் நம்பிக்கையில் அனுமதிக்கபட்டாரகள்
    ஆம் இறைவனுக்கு வாழ்வினை முழுக்க அர்பணித்தவர்களே செல்லலாம் என்பதுதான் பண்டைய மதங்களின் விதி, அதன் தொடர்ச்சியான இந்துமதத்தின் விதியும் கூட‌

    ஆலயத்தையும் வழிபாட்டையும் தவிர ஏதுமறியா குருக்கள் அங்கு அனுமதிக்கபட்டனர்

    காரணம் கர்பகிரகத்து அமைப்பு முதல் தன்மை வரை சிலையின் பராமரிப்பு வரை அவர்களுக்குத்தான் தெரியும்

    சும்மா நேரம் போகவில்லை என்றாலோ இல்லை நாளில் 10 நிமிடம் கடவளை வணங்க அல்லது புலம்ப வருபவர்களை கர்பகிரகத்தில் விட என்ன அவசியம் உண்டு?

    மனமும் சிந்தனையும் உடலும் எல்லாமும் ஆலயத்தில் பின்னி பிணைந்த மானிடர்களே குருக்கள் என மகா தூய்மையான சந்நிதானத்தில் அனுமதிக்கபட்டார்கள்

    அதிலும் வழிபாட்டு நேரம் மட்டும் செல்லமுடியுமே தவிர அமரவவோ அங்கு ஓய்வெடுக்கவோ அனுமதி இல்லை
    இன்னும் சிலர் சொல்வார்கள் சமஸ்கிருதம் ஏன்?

    அங்குதான் இருக்கின்றது ரகசியம்

    இந்நாடு அன்றே மொழியால் பிரிந்தாலும் மதத்தால் ஒன்றாயிருந்தது

    அன்றைய பாரதத்திலும் பாரதத்துக்கு வெளியிலேயும் இந்து ஆலயம் இருந்தன மொழிவேறு
    ஒரு இந்து எந்த ஆலயத்துக்கு சென்றாலும் புரிந்து வழிபடும் மொழியாக இணைப்பு மொழியாக சமஸ்கிருதம் இருந்தது

    இன்று இஸ்லாமியர் தொழுகைக்கும் அழைப்புக்கும் அரேபிய மொழி உலகளாவிய நிலையில் இருக்கின்றதல்லவா?

    கிறிஸ்தவருக்கு ஆங்கிலம் உண்டல்லவா?

    அப்படி இந்து ஆலயங்களை இணைத்த மொழி சமஸ்கிருதம், அதுதான் உண்மை, அதுதான் சத்தியம்
    கவனியுங்கள்

    அந்த ஆலயத்தை கட்ட சொல்லி பொன்னும் பொருளும் கொடுத்து வழிபாட்டு மானியமும் கொடுத்த அரசன் உள்ளே செல்ல முடியாது

    அவனோ அவனின் குடும்பமோ கர்ப்பகிரகத்தினுள் நுழைய முடியாது

    அரசனின் பலம் வாய்ந்த தளபதிகளும் நுழைய முடியாது

    அதாவது அந்த சமூகம் அப்படி கட்டுபட்டு நின்றது, கடவுளுக்காக வாழ்வோர் மட்டும் உள்ளே சென்றால் போதும் மன்னனே ஆயினும் வெளியில் நிற்க என வகுத்தது

    மன்னனும் அதை ஏற்று மனமார பின்பற்றினான்

    ஆம் ஆலயத்தில் ஆண்டான் அடிமை பார்ப்பான் சூத்திரன் வைசிகன் எனும் பேதத்தை யாரும் கண்டதில்லை
    ஆலயத்துள் நுழைய எல்லோருக்கும் அனுமதி இருந்தது, இந்த மதுரை வைக்கம் போன்ற ஆலயங்களில் இருந்த சர்ச்சை சில காலமே. அதுவும் வெள்ளையன் வந்து செய்த குழப்பங்களின் பின்பே

    அப்பொழுதும் மற்ற ஆலயங்களில் எல்லோரும் செல்லும் அளவுதான் நிலமை இருந்தது, அங்கெல்லாம் சிக்கல் இல்லை

    இறந்த ஆடுமாடுகளை சுமப்போர், வெட்டியான் போன்ற சிலரால் நோய்பரப்பும் ஆபத்து இருப்பதால் சிலரை பொதுஇடங்களில் அக்கால சமூகம் அனுமதிக்கவில்லை

    ஆலயமும் பொதுவிடம் என்பதால் நோய்தடுப்புக்காக சில தொழில் செய்வோரை அனுமதிக்கவில்லை
    அது சாதிவிரோதம் அல்ல, பைரவர் கபாலி மாவிரதர் போன்ற சைவ அடியார்கள் கூட ஆலயத்துனுள் அனுமதிக்கபடவில்லை, அவர்களை கண்டும் இந்து சமூகம் தள்ளி நின்றுதான் வணங்கிற்று

    மற்றபடி ஆலயத்துள் யாரும் செல்லலாம் ஆனால் மகா முக்கியமான கர்ப்பகிரகத்தில் கடவுளுக்கு அர்பணிக்கபட்டோரும் மகா நம்பிக்கைக்கு உகந்தோரும் பந்த பாசம் அறுத்தோரும் மட்டும் செல்லலாம் எனும் விதி இருந்தது

    குருக்கள் செல்வாரே அன்றி குருக்களின் மனைவியும் மக்களும் செல்லமுடியுமா?

    பார்ப்பான் என்பதுதான் கர்ப்பகிரகத்தில் நுழையும் தகுதி என்றால் பிராமண பெண்களும் குழந்தைகளும் செல்லலாமே? சென்றார்களா?

    இல்லை ஒரு காலமும் இல்லை

    பாதுகாப்புக்காகவும் இன்னும் பல காரணங்களுக்காகவும் அன்றே ஏற்படுத்தபட்ட விஷயங்களை இன்றளவும் பின்பற்றி வருகின்றது தூய்மையான இந்துமதம்

    கர்ப்பகிரகம் பார்ப்பனருக்கு மட்டுமான இடம் அல்ல, கடவுளுக்காக அர்ப்பணிக்கபட்ட மற்ற சாதியின வழிபாடு நடத்தும் எத்தனையோ ஆலயங்கள் இங்கு உண்டு

    கத்தோலிக்க கிறிஸ்தவ பீடங்களிலும் குருக்கள் தவிர யாரும் வழிபாடு நடத்தமுடியாது, பெண்களுக்கு பீடத்தில் வழிபாடு நடத்த அனுமதி இன்றும் இல்லை

    பீடத்தை அடுத்த அந்த நற்கருணை பெட்டியினை குருவானவர் தவிர யாரும் தொடக்கூடாது, திறக்க கூடாது
    அவர்கள் காக்கும் புனிதம் அப்படி

    இன்றும் புனிதமான மெக்காவின் கபாவில் அரசகுடும்பம் தவிர யாரும் செல்லமுடியாது

    எல்லோரையும் அனுமதித்தால் அந்த மகா புண்ணிய இடத்தை பராமரிப்பது கடினம் என்கின்றது சவுதி அரச குடும்பம்

    அட வேளாங்கண்ணி கோவிலிலே மூல விக்கிரகத்தை யாரும் தொடமுடியாது

    பீடத்துக்குள்ளே பக்தர்கள் செல்லமுடியாது, காரணம் அந்த காணகிடைக்கா சொரூபத்துக்கான பாதுகாப்பு
    இதுதான் இந்து ஆலயங்களிலும் நடக்கின்றது, அது தீண்டாமையாம்

    ஆம் தனித்துவமும் புனிதமுனான விஷயங்களை எல்லோருக்கும் பொதுவாக தூரத்தில் வைப்பதுதான் சரி
    அனுமதிக்கபட்ட சிலரை மட்டும் வைத்து வழிபடுவதுதான் சால சிறந்தது

    அதில் மந்திர உச்சாடனை,சிலையினை உருவேற்றுதல் என சில விஷயங்கள் உண்டு என நம்புபவர்கள் நம்பட்டும்

    நம்பாதோர் அதில் இருக்கும் பாதுகாப்பு இன்னபிற விஷயங்களை நம்பினாலோ போதும்

    ஒரு மருத்துவருடன் நோயாளி கைகுலுக்கினால் அடுத்த நோயாளி வருமுன் மருத்துவர் கைகளை பலமுறை டெட்டால் போட்டு கழுவுகின்றார் மருத்துவர்

    ஏன் நோய் பரவிவிடுமாம், ஆம் கொரோனா காலத்தில் இது தெளிவாய் விளங்கும்

    எல்லோரையும் கர்பகிரகத்தில் விட்டு சொரூபத்தை தொட்டு வணங்க சொன்னால், ஒவ்வொரு முறையும் சிலையின் பாதத்தை கழுவுவது நடக்கும் காரியமா?

    இதனால்தான் தள்ளி நின்று வணங்க சொன்னார்கள் அன்றைய இந்துக்கள்

    ஆலயங்களை கழுவி விடுவதும் மிக சுத்தமாக பார்த்துகொள்வதும் இந்த தத்துவமன்றி வேறல்ல‌

    அதில் சூத்திரன் அது இது தீட்டு என சொல்ல ஒன்றுமில்லை இன்றைய சுத்தத்தின் அவசியத்தை அன்றே சொன்னது இந்துமதம்

    குருவானவர் பூஜை செய்யும் பொழுது மணி அடிக்கின்றார்களே ஏன்?

    அந்த ஓசை கேட்கும் பொழுதுஎல்லோர் கண்ணும் கர்ப்பகிரகம் நோக்கி திரும்ப வேண்டும், அந்த தெய்வத்தை எல்லோரும் ஒன்றாய் தொழ வேண்டும்

    அரசன் முதல் ஆண்டிவரை அன்று மணியோசை எழுப்பும் பொழுது தள்ளி நின்று வணங்கினார்கள்

    மாறாக நீங்களே சென்று வணங்கிவிட்டு வாருங்கள் என அனுப்பினால் கூட்டம் என்னாகும்? கருவறை என்னாகும்?

    இதெல்லாம் அன்றே திட்டமிட்டு உருவாக்கபட்ட நுட்பமான விஷயங்கள்

    வைர நகையினை ஒருவர் வைத்திருந்தால் அதை பொத்தி பொத்தி பாதுகாப்பாரா இல்லை? எல்லோரும் வந்து பாருங்கள் என எல்லோர் கையிலும் கொடுப்பாரா?

    வைர கண்காட்சியிலே அது பாதுகாப்பாக தள்ளிதான் வைக்கபட்டிருக்கும்

    உயர்ந்த மதிப்புமிக்க பொருட்களுக்கான இடம் அப்படியானது, மகா மகா தூய்மையான கற்பகிரகமும் அப்படியே

    ஆழ சிந்தித்தால் அதிலுள்ள உண்மை விளங்கும்

    புனிதமான விஷயங்களில் சாணி அடிக்க வேண்டாம்

    அங்கு பிறப்பால் எதுவும் வருவதில்லை தனக்கு பின் மகனும் பேரனும் கர்ப்பகிரகத்தில் வந்து தட்சனை பிச்சை வாங்க வேண்டும் என எந்த பிராமணனும் நினைப்பதில்லை

    மாறாக திராவிட கட்சி தலைவர்கள்தான் தங்கள் கட்சியின் தலமை பதவி பிறப்பால் நிர்ணயிக்கபடுகின்றது
    என் அப்பனுக்கு பின் எனக்கு, எனக்கு பின் என்மகனுக்கு அவனுக்கு பின் என் பேரனுக்கு என பிறப்பால் வரும் உரிமையினை நிலைநாட்டுகின்றார்கள்

    ஆலயங்களும் அவற்றின் அமைப்புகளும் நுட்பமான நிர்வாகம், பக்தி, இயங்குமுறை , பாதுகாப்பு, உடல்நலம் இன்னும் ஏகபட்ட விஷயங்களை உள்ளடக்கியவை

    பெண்களுக்கு கர்பகிரகத்தில் அனுமதியில்லை என்பதை விட நோக்க வேண்டிய விஷயம் அவர்கள் மந்திரங்களை உச்சரிக்க கூட அனுமதியில்லை

    காரணம் மந்திரங்கள் உடலை சூடாக்க கூடியவை அது பெண்களின் கர்ப்பையினை பாதிக்கும் என்பதால் அனுமதி இல்லை

    இதே அனுமதிதான் கருவறையிலும் மறுக்கபட்டது, மாத விலக்கான நாள் மட்டுமல்ல சூடு நிறைந்த கருவறை மந்திர உச்சாடனைகளுடன் சேர்ந்தால் பெண்ணின் கர்ப்பபை பாதிக்கபடும்

    இதனாலே அவளுக்கு விலக்கு அளித்தது இந்துமதம்

    கர்ப்பகிரகம் செல்ல அவளுக்கு அனுமதியில்லை தவிர, பூச்சூடி பட்டு உடுத்தி தேர்போல் வர அவளை அனுமதித்தது, பாடல் பாடவும் ஆடவும் அவளுக்கு தடை இல்லை

    சில மதங்களை போல் முக்காடு இட்டு, முழுக்க மூடி புண்ணாக்கு மூட்டைபோல் வர சொல்லவில்லை இந்துமதம், அது பெண்களை பெண்ணாக கொண்டாடியது

    ஆக ஒரு காலத்தில் இருந்த மிக பெரும் அறிவான சமூகத்தால் ஏற்படுத்தபட்டவை, அறிவும் ஆழ்ந்த கவனமும் இருந்தால் அது புரியும், புரிந்தால் கை எடுத்து வணங்க தோன்றும்

    சில விஷயங்களில் கட்டுப்பாடு அவசியம், முதலில் கற்பகிரகம் நுழைய வேண்டும் என்பார்கள், பின் தொட வேண்டும் என்பார்கள் மெல்ல ஆலயத்தில் மீன்குழம்பும் கருவாட்டு பொறியலும் சமைக்க அனுமதிக்க வேண்டும் என்பார்கள், ஒவ்வொன்றாய் சொல்லி ஆலயத்தை மீன் சந்தையாக ஆக்க நினைப்பார்கள்

    அவர்களுக்கு கொடுக்கபட்டிருக்கும் அசைன்மென்ட் இதுதான், அதனால் இப்படி ஏதாவது சொல்லிகொண்டே இருப்பார்கள்

    இவ்வளவு சொல்வார்கள், சரி பூசாரி மகன் பூசாரி என கற்பகிரகத்தில் நுழைவதில்லை ஆனால் தலைவன் மகன் அடுத்த முதல்வராவார், அவருக்கு பின் அவர் மகனும் அவர் மகனும் முதல்வராவார்களே, பிறப்பால் ஏற்ற தாழ்வு எங்கே உண்டு என கேளுங்கள்

    நடிகனுக்கு பின் அவர் மகன் நடிகனாய் வந்து சம்பாதிக்கலாம் இன்னொருவன் வந்தால் வளரவிடாமல் அடிப்பார்கள், அவனவன் போராடி வரும் இடத்தை நடிகன் மகன் எளிதாக வரமுடிகின்றதே எப்படி பிறப்பால் ஏற்றம் எங்கே இருக்கின்றது என கேளுங்கள்

    பதிலே வராது

  3. அனைத்து சாதியினரும் இனி அர்ச்சகராகலாம் , உபிக்கள் சிலிர்ப்பு

    எமக்கு தெரிந்து கிராம கோவில்களில் அர்ச்சகர்களாக பிராமணர்கள் இல்லை, அந்த அந்த ஊரின் சாதி எதுவோ அந்த கோவிலுக்கு பாத்தியபட்ட சாதி யாரோ அவர்களேதான் அர்ச்சகர்கள்

    இது தமிழகத்தின் எல்லா இடங்களிலும் காணபடும் காட்சி

    இன்னும் சமீபத்தில் மறைந்த மதுரை ஆதீனம் போல எல்லா ஆதீனங்களிலும் பிராமணர்கள் தலமை ஆதீனமாக இல்லை, அங்கு அர்ச்சகர்களும் பிராமணர்கள் அல்ல‌

    மிக சில ஆலயங்களில்தான் அதுவும் வேத ஆகம விதிப்படி இயங்கும் ஆலயங்களில்தான் பிராமண அர்ச்சகர்கள் உண்டு

    (அதுவும் இந்த சட்டம் முன்பே ஆகமவிதிகளுக்கு புறம்பாக ஏதும் செய்ய கூடாது என நீதிமன்றத்திலே தள்ளுபடி செய்யபட்ட வாதம்)

    மிக சில ஆலயங்களிலேதான் இந்த ஆகம விதி உண்டு, அது புனிதமானது என்பதால் பின்பற்ற வேண்டிய அவசியம் கட்டாயம் உண்டு

    சில மரபுகள் எல்லா இடங்களிலும் உண்டு அதை பின்பற்றித்தான் வரவேண்டும்

    அந்த ஆலயங்களை தவிர வேறு ஆலயங்களில் என்றோ எல்லா சாதியும் எங்கும் அர்ச்சகராகலாம் என சொன்ன மதம் இது, சிறுதெய்வம் முதல் பெரும் தெய்வம் வரை எல்லா சாதியுமே அர்ச்சகராக இருந்தது

    எல்லா சாதியில் இருந்தும் ஆழ்வார்களும் அடியார்களும் நாயன்மார்களும் வந்தனர், அவர்களுக்கு தனி ஆலயங்களே இன்று உண்டு

    அப்படிபட்ட தமிழகத்தில் எந்த காட்சி ஈரோட்டு ராம்சாமியின் நெஞ்சில் முள்ளாக குத்தியதோ தெரியவில்லை, அதையும் இவர்கள் சட்டம் போட்டு முள் எடுக்கின்றார்களாம் அதுவும் புரியவே இல்லை

    இங்கு சட்டம் போட்டு மாற்றமுடியா விஷயம் பல உண்டு, ஊழல் பெரும் குற்றம் என்று கூடத்தான் தண்டனை உண்டு அதையெல்லாம் யார் கடைபிடிக்கின்றார்கள்

    இவர்கள் ஆயிரம் சட்டம் இயற்றட்டும் ஆனால் மரபுகளும் சில ஆச்சாரங்களும் என்றுமே மாறபோவதில்லை, இந்த மண்ணின் மகத்துவம் அது

    ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும் இந்த மாபெரும் மலையினை இந்த சிட்டுகுருவிகள் அசைத்துவிட முடியாது

    அதுவும் ஏகபட்ட ஆலயங்களில் பிராமணர் அல்லாதோரும் அர்ச்சகராக இருக்கும் நிலையில் வெற்று கூச்சலும், வீம்பு அரசியலாக ராமசாமி தனக்கு தானே முள்ளை குத்திகொண்டார் என்றால் அது அப்படியே இருக்கட்டும்

  4. எதோ திமுக-காரன் என்று இல்லை —அதிமுக,பாஜக,பாமக எல்லாமே இந்து (பிராமண)எதிர்ப்பை அவ்வப்போது கடை பிடித்தே வந்துள்ளனர் ..இந்த மதத்தை எவனாலும் அழிக்க முடியாத….பிராமண பெருமையை கூறினீர்கள் -தற்காலத்தில் யார் அப்படி இருக்கிறார்கள் ..காஞ்சி பெரியவர் சொன்னதை கடை பிடிப்பது இல்லை–வைதீகர்கள் உட்பட ..பிறகு பழம்பெருமை பேசுவதில் அர்த்தம் என்ன? சுருக்கமான சந்தியாவந்தனம் கூட செய்வதில்லை ..பிறகு பெருமை எதற்கு ? அவனவன் தனது தர்மத்தை கடைபிடித்தாலே போதும்

  5. இந்து கோவில்களெல்லாம் அரசின் கட்டுபாட்டில் இருக்கும்பொழுது ஆதீனங்களும் பலமடங்களும் தனித்தே இயங்குகின்றன‌

    அங்கெல்லாம் ஆதீன பதவி என்பதோ, சன்னிதானம் என்பதோ எளிதில் வருவது அல்ல, காலம் காலமாக கடும் பயிற்சியிலும் இன்னும் படிபடியான வளர்ச்சியிலும் வருபவை

    அங்கெல்லாம் “அனைத்து சாதியும் ஆதினமாகலாம்” என அரசு கிளம்பாது , ஆனால் இந்து கோவில் அர்ச்சகர்கள் என்றால் உடனே ஓடிவரும்

    ஏன் என்றால் இங்கு பலவகை அரசியல் உண்டு, அதில் ஆதீனங்களுக்கும் மடங்களுக்கும் திராவிட கோஷ்டிக்கும் ரகசிய உறவும் இருக்கும் போலிருக்கின்றது.

    அனைத்து சாதியும் அர்சகராகலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பில் ஆதீனங்கள் மடங்களின் கள்ள மவுனம் அதைததான் சொல்கின்றது

    ஆக அதேதான்

    “யாரையும் நம்புவதோ இந்துக்கள் நெஞ்சம், அம்மம்மா தமிழகத்தில் யாவும் வஞ்சம்”

  6. விநாசகாலே விபரீத புத்தி…

    நாசகார வேலையில் தகப்பனை மிஞ்சிய தனயன்.

    அனுமனின் வாலில் தீ வைத்து விட்டு குரங்கை சிஷ்டித்தோம் என ராவணன் குஷியாக இருக்க பற்றி எரிந்தது லங்கை. அந்தணனின் எரியும் வயிறு கோபாலபுர வம்சத்தை பதம் பார்க்காமல் விடாது.இது என் சாபமல்ல…கர்மா..

    தட்டுக்காசு மணியாட்டிகள் என கிண்டல் செய்து விட்டு அந்த சேவையை தொழிலாக எண்ணி போட்டிக்கு வந்து அந்தணனை விரட்டி விட்ட கோமாளி திடீர் குபுக் டபுக் அர்ச்சக புண்ணியவான்களுக்கும் இது கர்மாவோ சாபமோ உடனடியாக பலிக்கும்.

    பசு மாடு கூட தினமும் பால் கறப்பவனைத் தவிர்த்து புதிதாக யாரேனும் மாட்டருகே அமர்ந்தால் பல்லெல்லாம் பறக்க உதை விடும்.

    தன்னை தெய்வமாக மட்டுமின்றி குழந்தையாக மாதாவாக பிதாவாக பாவித்து தன் உயிரைப் போல் பாவித்து வந்தவனைப் புறம்தள்ளி எவனோ நுழைந்தால் கெட்டே போவான். ஆமாம் சாமியைத் தொட்டவன் கெட்டுத்தான் போவான்.

    இதைச் செய்த திமுக மற்றும் ஆதரித்த எல்லாக் கட்சிகளுமே அதன் பயனை அடைவர். ஆதரிக்கிறோம் என்று சொன்ன வாய்க்கு தண்டனை நிச்சயம்.

    அப்புறம் இன்னொரு விஷயம்…

    முகஸ் மற்றும் பால்டாயில் கூடவெல்லாம் ஈறு தெரிய சிரித்து செல்லுப்பி எடுத்து பேஸ்புக்கு ட்விட்டர் என போட்டுக் கொண்ட அசல் அர்ச்சகப் புண்ணியவான்கள்…

    திமுக கொடியும் பூணூலுமாகத் திரிந்த நாதாரி.

    திமுகவிற்கு கேன்வாஸ் செய்து நற்சான்றிதழ் வழங்கிய மன்னார்குடியைச் சேர்ந்த மண்டூகக் கிழ நாயும் அதன் குடும்பமும்…

    தொளபதி ஒதய சூரியன் படத்தோடு திரியும் பைக் மவராசன் நங்கநல்லூர் நாராயணன்.(பெயர் ஏதோ)

    ரிசல்ட் வந்த போது கோவில் பிரசாதங்களைத் தூக்கிக் கொண்டு டுர்ர்ர்க்கா வீட்டு வாசலில் க்யூவில் நின்ற பட்டர்கள் குருக்கள்கள்….

    வேண்டாம்டா….திமுக விஷப்பாம்பு. கிட்டே போகாதீங்கடா மானங்கெட்டவனுகளா என நான் கரடியா கத்தின போது என்னை பிராமண விரோதி போல எத்தனை பேர் கரிச்சுக் கொட்டுனீங்க. Unfriend பண்ணிட்டு போனவர்கள் ஏராளம்.

    மனசாட்சி தொட்டு சொல்லுங்க பிராமணர்களே..உங்களில் எத்தனை பேர் திமுகவுக்கு வாக்களித்தீர்கள்..

    உங்கள் மனசாட்சி சாட்டையடி கொடுக்கும்.
    வாங்கிக் கொள்ளுங்கள்.

    ஆனால் இந்த தமிழக தாலிபான் ஆட்சி ஐந்து வருடங்களுக்கு அனுபவித்தே தீர வேண்டும்.

    சக இந்துக்களுக்கு
    உங்களுக்குள் விதைக்கப்பட்டு தற்காலிகமாக மறைந்திருக்கும் பிராமண வெறுப்பு இன்று மகிழ்ந்து கூத்தாடலாம்.
    முத்துக்கள் கோர்த்து கட்டப்பட்ட மாலையின் நூலாக உள்ள பூணூல் சமூகம் இற்று விழுமானால் முத்துக்கள் சிதறுமாப் போலே ஸனாதன தர்மம் கேட்பாரற்றுப் போகும்.

    நாளை நீங்கள் கோவிலில் வாங்கும் விபூதியைக் கொடுப்பவன் ஆறுமுகம் என்ற பெயரை மாற்றாத பெஞ்சமின் ஆக இருப்பான். அதனால் உங்ளுக்கென்ன?
    அதுதான் பாப்பானை அடித்து விரட்டத் தொடங்கிட்டீங்களே..உங்களுக்கு தேவை அவ்வளவுதானே…

    இன்று இரவு திமுகவும் அனைத்து சாதி அர்ச்சகர் சட்டத்தை வரவேற்ற கட்சிகளும் திமுகவுக்கு வாக்களித்த பிராமணர்களும் ஐயருகளை துரத்தி விட்ட சந்தோஷத்தில் மற்ற சாதி இந்துக்களும் நிம்மதியாகத் தூங்குங்கள்.

    விரட்டட்ப்பட்ட அந்தணர்களின் அழுகுரல் ஓங்கி ஒலிக்கட்டும்.

    எந்தளவு ஓங்காரமாய் ஒலிக்கிறதோ அந்தளவு அழிவு விரைவில்.

    (மற்ற சாதி இந்துக்களில் பலர் இதைக் கொண்டாடுவதால் குறிப்பிடப் பட்டுள்ளது)

  7. இந்து அறநிலையதுறை ஏற்படுத்தும் முன் கோயில் நிர்வாகிகளாக செட்டியார் அல்லது முதலியார் பிரிவை சார்ந்தவர்களாக இருப்பார்கள் .

    என்ன தான் கருவறையில் நின்று சிவாச்சாரியார் பிராமணன் பூஜை செய்தாலும் சம்பளம் வாங்க நிர்வாகிகளிடம் கைகட்டி தான் நிற்கனும் .
    கடவுளையும் மதத்தையும் உயிராக நேசிப்பவர்கள்‌ ( சிலர் குறை உடையவர்கள் இருக்காலம் ). இன்றைய நாத்திக ஆட்சியாளர்கள் இவர்களை வைத்திருந்தால் மீதி உள்ளதை ஆட்டைய போட முடியாது என நினைத்து ஏதோ செய்கிறார்கள் .

    இவர்கள் வலுவாக இருப்பதால்
    மதம் மாற்றும் வியாபாரிகள் வலு இழந்து போகிறார்கள் . பிராமணனை வலு இழக்க செய்தால் இந்து மதம் பலவீனமாகும் என சில எச்சங்கள் நினைக்கிறது . இந்து மதம் இருக்கிறவரை தான் சைவம் என மார்தட்டி பேச முடியும் நமது கோயில்களும் இருக்கும் .

    ஆலயத்தில் அனைவரும் அர்ச்சகர் ஆகும்போது அறிவாலயத்தில் மட்டும் அனைவரும் தலைவராக ஆக முடியாது இதை சிந்ததிக்க மாட்டோம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வக்கில்லை எப்படி மறக்க செய்யனும் என்பதில் கைதேர்ந்தவர்கள் செய்கிறார்கள்

    இராமசாமி கருணாநிதி இவர்களே ஆட்ட முடியாத போது அவர்களின் ஒட்டு தசையெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை !

    தமிழ் தமிழ் என்பான் பிறகு சாராயகடையில் படுக்க வைப்பான் !

    அச்சமில்லை அச்சமில்லை .
    மொழியால் தமிழ்
    நாட்டால் ‌பாரதம்
    மதத்தால் இந்து இதுவே எங்களின் சுவாசக்காற்று !

  8. அந்த #கோவிலை கட்டி ஆயிரம் வருஷமாயிடிச்சி, ரொம்ப பழசா இருக்கு அத இடிச்சிட்டு புதுசா சங்கர் சிமென்ட்ல கலர்ஃபுல்லா கோவில் கட்டித்தாரேன்னு தஞ்சை பெரிய கோவிலப் பத்தி ஸ்டாலின் அறிக்கை விட்டுட்டு, அடுத்ததாக அதை இடித்தாலும் கூட நம்மால் தடுக்க இயலாது…!

    -இதுதான் இன்றைய தமிழக ஹிந்துக்களின் நிலை-

    கடவுள் இல்லை…அதிலும் கூட ஹிந்துக்கடவுள்கள் மட்டும் இல்லவேயில்லை என்று கூறும் ஒரு கட்சியை ஆட்சியில் அமரவைத்த சுயநல நடுநிலை ஹிந்துக்களுக்கு என்ன கூறினாலும் விளங்காது –

    தமிழில் அர்ச்சனை, அணைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பதெல்லாம் நூற்றுக்கணக்கான கோவில்களைக் கட்டிய இராஜராஜனுக்கும், இராஜேந்திரனுக்கும் தெரியாதா என்ன? –

    ஆனால், ஹிந்து கோவில்களின் வருமானத்தில் பிழைப்பை நடத்தும் தி.மு.க அரசு இன்று அந்தக் கோவில்களையே அழிக்கப் பார்ர்க்கிறது –

    ஏன்? எங்க சாதிக்காரங்க அர்ச்சகரானா என்ன தப்புன்னு என்னோட நட்பு வட்டத்தில இருக்கற நண்பர்கள் கேட்பது எனக்குப் புரிகிறது –

    ஆனாலும், ஏற்கனவே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாக இருக்கும் நிலையில், இவர்கள் கோவில்களுக்குள் நுழைக்க நினைப்பது தி.கவினரையும், கிரிப்டோ கிறிஸ்தவர்களையும் என்பது கூட உங்களுக்குப் புரியவில்லையா? –

    தமிழில் அர்ச்சனை என்று கூறும் இவர்கள் நடத்தும் பள்ளிகளில் தமிழில் பேசினால்கூட அபராதம் என்று உங்களுக்குத் தெரியுமா? _

    ஹிந்து கோவில்களுக்குப் போகிறவர்கள் எவரும் இதைக் கேட்கவில்லை-

    ஆனால், ஹிந்து கோவில்களை அழிக்க நினைப்பவர்கள்தான் இதைக் கேட்கிறார்கள் –

    கிட்டத்தட்ட 5 லட்சம் ஏக்கர் கோவில் நிலங்களை முறைப்படுத்தினாலே தமிழகத்திற்கான பட்ஜெட்டைப் பற்றாக்குறையின்றி போடமுடியும் –

    அந்தக்கால அரசர்கள் தெரியாமலா கோவில்களைக் கட்டினார்கள்?-

    ஆனால், வருடம் வெறும் 30ஆயிரம் கோடி வருமானத்திற்காக திராவிட அரசுகள் சாராயக்கடைகளை நடத்தி தமிழ்ப்பெண்களின் தாலிகளை அறுத்துக்கொண்டிருக்கிறார்கள் –

  9. இந்து கோவில்களில் தலைகீழாக நிற்கும் அரசு இதர மத நிர்வாகங்களில் சமூக நீதி காக்குமா என்றால் வராது.

    புரட்சியாளர் திருமா சொன்னபடி மதம் மாறிய தலித்துகள் கிறிஸ்துவத்தில் மிகபெரிய சிக்கலை சந்திக்கின்றார்கள் என்பது நிஜம்

    அது இன்றல்ல நேற்றல்ல அவர்கள் மதம் மாறிய காலத்தில் இருந்தே உண்டு. வரலாற்று சான்றுகள் ஜி.யு போப் எழுதிய குறிப்பு முதல் நெல்லை மாவட்டம் வடக்கன்குள ஆலயம் வரை உண்டு

    மதம் மாறினாலும் கிறிஸ்தவ ஆலய சாதி சண்டையால் தான் மனம் வெறுத்து பெங்களூருக்கு ஓடியதாகவும், அதனால் மதமாற்றத்தை விட்டுவிட்டு தமிழ் இலக்க்கியங்களில் கவனம் செலுத்தியதாகவும் சொல்கின்றான் போப்

    திருகுறளையும், திருவாசகத்தையும் லண்டனில் கொண்டாடிய அந்த போப்

    ஆம், மதம் மாறினாலும் கிறிஸ்துவத்தில் சாதி உண்டு, எவ்வளவோ சம்பவத்தை சொல்லமுடியும் 1940களில் நெல்லைமாவட்டம் வடக்கன் குளத்தில் இரு சாதியில் எந்த சாதிக்கு ஆலயம் என வரிந்து கட்டி இடையில் சுவரெல்லாம் கட்டி அந்த ஆலயம் “டவுசர்” ஆலயம் என்றெல்லாம் அழைக்கபட்டது

    பின் சுவர் இடிபட்டாலும் நீதிமன்றம் சுவரை கட்ட சொல்லும் அளவு நிலமை சீரியசானது

    அக்காலத்தில் ஈரோட்டு ராம்சாமி, அண்ணா, கருணாநிதி, அம்பேத்கர் என எல்லா புரட்சியாளரும் இருந்தார்கள், யாராவது அப்பக்கம் வந்தார்களா? கிறிஸ்துவ ஆலயம் என்றால் வரவே மாட்டார்கள்

    வைக்கத்துக்கு ஓடிய ராம்சாமி இப்பக்கம் வரவே இல்லை

    திருமா சொல்வது முற்றிலும் உண்மை, சாதிவாரி கிறிஸ்தவ கல்லறை வரை இன்றும் உண்டு

    ஆனால் அவரும் ஒரு விஷயம் மறைக்கின்றார்

    இந்து தர்மத்தின் சாதி கொடுமையால் கிறிஸ்தவரானார்கள் என கொந்தளிக்கும் கோஷ்டிகள் கிறிஸ்தவம் திரும்பியபின்பு எப்படி சாதி அடையாளம் கொள்வார்கள்?

    சாதி இருந்தால் அது கிறிஸ்தவமே ஆகாது அல்லவா? பின் எப்படி தலித் கிறிஸ்தவன் மேல்சாதி கிறிஸ்தவன் ஆக முடியும்? எந்த நாட்டிலும் இல்லா அதிசயம் இந்தியாவில் எப்படி சாத்தியம்

    சரி, இந்துமதத்தின் சாதியினை கிறிஸ்தவத்திலும் சுமக்க ஏன் மதம் மாறவேண்டும்?

    ஆனால் புரட்சியாளர் திருமா சும்மா சொல்லவில்லை அவர் தலித் கிறிஸ்தவர்களை இஸ்லாமுக்கோ இல்லை புத்தமதத்துக்கோ அழைப்பது போல் தெரிகின்றது

    புரட்சியாளர் திருமா போல் நாமும் சில கோரிக்கைகளை சொல்லலாம்

    தூத்துகுடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயராக பரதவர் குலம் ஆதிக்கம் செலுத்தும்

    இதனால் இந்த சமூகநீதி மறுக்கபட்டதால் மனமுடைந்த நாடார்கள் தங்களுக்கு தனி மறைமாவட்டம் வேண்டும் என புரட்சிகுரல் எழுப்பியும் அதுவும் மறுக்கபட்டது

    தமிழக அரசு வாடிகன் போப்பாண்டவருக்கு அழுத்தம் கொடுத்து சமூக நீதியினை காக்க வேண்டும், இதனால் நாடார்கள் மனதில் 200 ஆண்டுகாலம் குத்திகொண்டிருக்கும் முள் அகலும்

    அப்படியே சில கிறிஸ்தவ சபைகளில் நாடார்களை தவிர யாரும் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை அங்கும் அரசு புகுந்து தலித் கிறிஸ்தவர்களை ஆயர்களாக பேராயளர்களாக நியமிஹ்து

    அதாவது “எல்லா சாதியும் ஆயர்களாகலாம்” என சட்டமியற்றி சமூக நீதி காக்கும் , பலர் நெஞ்சில் குத்திய முள்ளை அகற்றும் என எதிர்பார்க்கின்றது தெற்கத்திய கிறிஸ்தவ சமூகம்

  10. தமிழர்களுக்கும் வைதீக வேதத்திற்கும் தொடர்பே இல்லை, இந்திய ஞானமரபுக்கும் தமிழனுக்கும் தொடர்பே கிடையாது என்பது திராவிட கோஷ்டிகளின் புலம்பல் அதை இப்பொழுது அர்ச்சகர் விவகாரத்திலும் பாட ஆரம்பித்துவிட்டன‌

    உண்மையில் அவைகளுக்கு தமிழ் இலக்கியம் முழுக்க தெரியுமா என்றால் தெரியாது, அவர்களாக சில குறளை படித்து வள்ளுவன் இந்து இல்லை என்பது மீதி குறளை மறைப்பது

    அவர்களாக சில புறநானூற்று பாடலை சொல்வது மீதியினை மறைப்பது, அவர்களுக்கு தெரிந்த கவிஞன் பாரதிதாசன் எனும் புலவனும் அவனின் தமிழ்வெறி வரியும், மற்றபடி பாரதியும் தெரியாது சங்க புலவனும் தெரியாது

    அவ்வையார் தெரிந்தாலும் அவர் பாடிய முருகனையும் பிள்ளையாரையும் பார்த்து கண்ணை மூடுவார்கள், இளங்கோவினை பார்த்தாலும் அவன் சொன்ன இயக்கி, இந்திரவிழா எல்லாம் பார்த்து முகத்தை பொத்தி கொள்வார்கள்

    மூவேந்தர் என்பார்கள் மூவேந்தரும் இந்துக்கள் இந்து ஆலயம் கட்டினார்கள் என்பதை மறைப்பார்கள், பல்லவன் கலை என்பார்கள் அக்கலையில் கோவிலும் இந்துமத சிற்பங்களும் எழும்பின என்பதை சொல்லமாட்டார்கள், அவ்வளவு திருட்டுதனம்

    இதை தொடங்கி வைத்தவர் அண்ணாதுரை “தமிழன் எங்காவது வேள்வி செய்தானா?” என அறிஞர்களிடம் கேட்காமல் எங்கோ மாடுமேய்த்த பாமரனிடம் கேட்டு தன் பகுத்தறிவினை நிரூபித்தவர் அவர்

    தமிழர்கள் அந்தணர் எனும் பிராமணர்களை அவர்கள் குலத்தை அப்படியே ஆலய பணிக்கு நியமித்ததும் அதை செய்ய அவர்களுக்கு எவ்வளவோ விஷயங்களை தானம் செய்து வாழ வழி செய்வதும் சங்க பாடல்களில் இருக்கின்றன‌

    ஆலயத்தில் அவர்களை வேதம் ஓதி அர்ச்சனை செய்ய வழிசெய்த மூவேந்தர்கள், அவர்கள்

    தேவர்களை வேண்டி தீயில் வேட்பது அறக்கள வேள்வி.

    நான்மறையாளரைச் சுற்றமாகக் கொண்டு, அடிபணிந்த அர்சர் ஏவல் செய்ய, தலையங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அறக்கள வேள்வி செய்தான் என மாங்குடிக்கிழார் கூறுவார்

    இந்த பதிற்றுபத்து சொல்லும் வரியினை பாருங்கள், சேரன் பார்ப்பனரை கேட்டு யாகம் செய்த காட்சியினை சொல்லும்.

    பல்யானை செல்கெழுகுட்டுவன் கௌதமனாருக்காக பார்ப்பாரில் பெரியோரைக் கேட்டு பத்து பெருவேள்வி வேட்பித்தான். (பதிற்றுப்பத்து, பதிகம் 3)

    பெருஞ்சேரல் இரும்பொறை வேள்விக்குரிய விதிகளைக் கேட்டு வேள்வி வேட்பதற்கு முன், தான் இருக்க விரதங்களை முறைப்படி முடித்து வேள்வி முடித்தான். (பதிற்றுப்பத்து, பதிகம் 74)

    பாண்டியருக்கும் இக்காட்சி உண்டு

    பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி பல யாகங்களைச் செய்ததால் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி எனப்பெயர் பெற்றான் என்பது வரலாறு

    சிலப்பதிகாரம் என்ன சொல்கின்றது?

    “”பேரிசை வஞ்சிமூதூர்ப்புறத்து தாழ்நீர் வேலி தண் மலர்ப்பூம் பொழில் வேள்விக்கான மாளிகை கட்டி நன் பெரு வேள்வி முடித்த பின்.”

    சேரமான் செங்குட்டுவன் வஞ்சிமாநகரின் குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்த இடத்தில் வேள்விச்சாலை அமைத்தான். வேள்விமாக்களை கேட்டு உரிய முறையில் ராஜசூயம் வேட்டான்

    அதை ஒட்டி சிறையிருந்த எல்லாக் கைதிகளையும் விடுதலை செய்தான். வந்திருந்த மன்னருக்கேற்ப வரிசை முடித்தான்

    அதியமான் வாழ்வு பற்றி புற நானூறு இப்படி சொல்கின்றது

    அதியமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர்கள் “அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும்” சிறப்பெய்தினர் (புறம்.99)

    வேளிர்கள் வேள்விக் குண்டத்தில் தோன்றியவர் என்ற வரலாறு உண்டு. சங்க காலத்தில் அரசர் வேள்வி வேட்டலை மிகச் சிறப்பாகக் கருதினர்.

    சங்க காலத்திற்குப்பின் வந்த பல்லவரும் பாண்டியரும் வேள்வியில் ஈடுபாடு நிறைந்து விளங்கினர். ஒரு பாண்டிய மன்னன் காலையிலும் மாலையிலும் அக்னியில் ஹோமம் செய்தான் என்று தளவாய்புரம் செப்பேடு கூறுகிறது.

    பாண்டியர்களில் அரிகேசரி மாறவர்மன் ஹிரண்யகருப்பம், துலாபாரம், பகு சுவர்ணம் என்பவற்றைச் செய்தான்

    தேர்மாறன் என்னும் பாண்டியனும் எண்ணிறைந்த கோசஹஸ்ரமும், ஹிரண்யகருப்பமும், துலாபாரமும், செய்தான் என்று வேள்விக்குடி செப்பேடுகள் குறிக்கின்றன.

    மாறவர்மன் இராஜசிம்மன் துலாபாரம் செய்தான் என்றும் சின்னமனூர் செப்பேடு கூறுகிறது.

    பல்லவர்கள் முறைப்படி பல வேள்விகளை வேட்டவர்கள் என்று அவர்களது கல்வெட்டுகள் கூறுகின்றன. சிவ ஸ்கந்தவர்மன் என்பான் அக்னிஷ்டோமம், அச்வமேதம், வாஜபேயம் ஆகிய வேள்விகளை வேட்டான்.

    குமார விஷ்ணு அச்வமேத யாகம் செய்தான். சோமயாகம் செய்யாதவரே பல்லவ குலத்தில் கிடையாது என ஒரு செப்பேடு குறிக்கிறது. அவர்கள் பல வேள்விகளை வேட்டதால் பிரும்மண்யம் நிறைந்தவராய் இருந்தனர். அதனால் பரம பிரும்மண்யர் என்று அழைக்கப்பட்டனர்.

    சோழர்களில் முதல் ராஜாதி ராஜன் அச்வமேத யாகம் செய்தான் என அவன் கல்வெட்டுகள் கூறுகின்றன. விஜயாலயன் வழிவந்தவர்களில் இராஜாதி ராஜன் ஒருவனே அச்வமேத யாகம் செய்தவன்.

    இதோ சங்க கால புலவன் முதுகுடுமி பெருவழுதியி எழுதிய பாடல்

    “நல் பனுவல், நால் வேதத்து
    அருஞ் சீர்த்திப் பெருங்கண்ணுறை
    நெய்மலி ஆவுதி பொங்க, பல் மாண்
    வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி,
    யூபம் நட்ட வியன் களம் பல கொல்?”

    அதாவது “வேத‌ நூல் சொன்னபடி வேதவிதிப்படி நெய்யும் சமித்தும் பொரியும் இட்டு நீ செய்த புகழ்மிக்க போற்றற்கரிய பெரும் யாகங்களை செய்த யாகசாலையில் நீ நிறுத்தி வைத்த தூண்களின் தொகை அதிகமா? ”

    இதில் தூண்களின் எண்ணிக்கை அல்ல விஷயம், தமிழன் நெய்யிட்டு யாகம் செய்திருக்கின்றான் என்பதுதான் கவனிக்கதக்கது

    அடுத்தபாடல்

    “எருவை நுகர்ச்சி, யூபநெடுந்தூண்
    வேதவேள்வித் தொழில் முடித்ததூஉம்
    அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்”

    இது கல்லணை கட்டிய கரிகாலனை பற்றி கருங்குழல் ஆதனார் பாடிய பாடல், பொருள் என்னவென்றால் “வட்ட வடிவமாக செய்யப்பட்ட மதில் சூழ்ந்த வேள்விச் சாலையில்,கருட சயனம் என்கிற வேள்வித் தூணை நட்டு வேள்விகள் பல செய்து அறிவுடையாளனாக விளங்கிய வேந்தனே”

    ஆக கரிகாலன் வேள்வி செய்திருக்கின்றான், வேள்வி தூணை நட்டிருகின்றான்.

    அடுத்து ஒரு வாழ்வு தத்துவ பாடல்.

    “வாழச் செய்த நல்வினை அல்லது
    ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை;
    ஒன்றுபுரிந்து அடங்கிய இருபிறப் பாளர்
    முத்தீப் புரையக் காண்தக இருந்த
    கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்,
    யான்அறி அளவையோ இதுவே”

    அதாவது, நீங்கள் வாழும்பொழுது இவ்வுலகில் செய்த நல்வினைகளைத் தவிர, நீங்கள் மறுவுலகிற்குச் செல்லும்பொழுது உங்களுக்குத் துணையாக வருவது வேறொன்றுமில்லை. வீடுபேறு ஒன்றையே விரும்பிப், புலன்களை அடக்கிய அந்தணர்கள் வளர்க்கும் முத்தீயைப் போல அழகுடன் வீற்றிருக்கும் வெண்கொற்றக் குடையையும் கொடிகட்டிய தேரையும் உடைய மூவேந்தர்களே! நான் அறிந்த அளவில் முடிவாகத் தெரிந்தது இதுவேயாகும்.

    ஆம் இங்கும் யாகம் பற்றி சொல்லபடுகின்றது

    மூவேந்தர் கூடிய இடத்தில் அவ்வையார் சொன்ன பாடல் இது.

    “ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை
    நான்மறை முதல்வர் சுற்ற மாக
    மன்ன ரேவல் செய்ய மன்னிய
    வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே ” – புறம் 26

    இதன் பொருள் தகுந்த கல்வி கற்று ஐம்புலன்களை அடக்கிய மனவலிமையோடு,
    நான்கு வேதங்களையும் கற்ற அந்தணர்கள் உன்னைச் சூழ்ந்திருக்க, பிற மன்னர்கள் உன் சொற்படி கேட்டு பணிவிடை செய்ய, நிலையான பெயர் தரக்கூடிய வேள்வியைச் செய்து முடித்த பெருமை வாய்ந்த வாளினை உடைய வேந்தனே.

    இதோ கோவூர் கிழார் எனும் புலவனின் வரிகள்

    “மறவர் மலிந்த தன்
    கேள்வி மலிந்த வேள்வி தூணத்து” – புறம் 400

    அதாவது போர் மறவர்கள் மிகுந்த படைக்கலத்தையும், கேள்வி அறிவிற் சிறந்த மறையோர்கள் நிறைந்த வேள்விச் சாலையில் தூண்களை நிலைநாட்டியவன் என்று சோழன் நலங்கிள்ளியை கோவூர் கிழார் புகழ்ந்து பாடுகிறார்.

    “கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு
    அருங்கல நீரோடு சிதறிப் பெருந்தகை”
    – புறம் 362

    இதன் பொருள் பலநூல்களை படித்து வேள்வி செய்யும் அந்தணர்க்கு நீரைவார்த்து தானம் வழங்கும் பெருந்தகை.

    இன்னும் எவ்வளவோ உண்டு, ஆம் தமிழரின் இலக்கியமெல்லாம் அவன் அந்தணர்களை ஆதரித்த கதைகளும் அவர்கள் மன்னனுக்காக வேள்வி செய்த வரிகளும் எங்கும் நிறைந்திருக்கின்றன‌

    அது குறளில் உண்டு, புற நானூற்றில் உண்டு இன்னும் பல இடங்களில் உண்டு, அதை ஆதாரத்துடன் சொல்ல முடியும்
    இங்கு வேதம் கொண்டாடபட்டது அது ஒலிக்க ஒலிக்க தமிழகம் உச்சத்தில் இருந்தது அதன் பொற்காலத்தில் இருந்தது

    ஆம், ஆலயங்களிலும் யாகங்களிலும் அந்தணர்கள் வேதம் ஓத ஓத, அதை இம்மன்னர்கள் ஆதரிக்க ஆதரிக்கத்தான் இத்தமிழகம் வாழ்வாங்கு வாழ்ந்தது

    அதில் காலவோட்டத்தில் வஞ்சக கும்பல் கைவைத்தபின்பே சரிந்தது தமிழக பெருமையும் பாரம்பரியமும்.

    தமிழகம் எக்காலமும் அந்தணருக்கும் வேதங்களுக்கும் தனி மரியாதை கொடுத்த பூமி, அது தொடரத்தான் வேண்டும்

    தமிழக வரலாற்றில் கொடுங்காலம் 13ம் நூற்றாண்டில் ஆப்கானியர் திருவரங்கம் மதுரை உள்ளிட்ட ஆலயங்களை ஆக்கிரமித்திருந்த காலம்

    அந்நேரம் இன்றைய தமிழக அரசினைபோலத்தான் மிக கொடுமையான அறிவிப்புக்களையெல்லாம் சுல்தான் விட்டுகொண்டிருந்தார்

    பிராமணர் பூஜை செய்தால்தான் மழைவருமா, ஆப்கானியர் அந்த சிலையினை உடைத்தால் மழை வராதா என்ற எகத்தாளமெல்லாம் உண்டு

    கல்யானை செய்து வைத்த தமிழனுக்கு நிஜயானை தெரிந்திருந்தால் நம்மிடம் ஏன் தோற்பான் என்றெல்லாம் வார்த்தைகள் வந்தன‌

    இன்னும் ஏகபட்ட கொடுமைகள் உண்டு

    இந்துக்களையும் இந்து ஆலயங்களையும் அவர்கள் படுத்தியபாடு கொஞ்சமல்ல, உலகின் கண்ணீர் ரத்த வரலாற்றில் அதுவும் ஒன்று

    40 ஆண்டுக்கும் மேல் மதுரை ஆலயம் பாழ்பட்டு கிடந்தது

    அந்நேரம்தான் காஞ்சியில் இருந்த கம்பண்ண உடையார் எனும் நாயக்க மன்னனிடம் அன்னை மீனாட்சியே சென்று மதுரையினை மீட்க உத்தரவிட்டாள்

    மிக சிறுபடையுடன் அவன் சுல்தானை வென்று மதுரையினை மீட்டது இன்றுவரை ஆச்சரியம், அதன் பின் ஆகம விதிபடி பூஜைகள் நடக்க ஆலயம் செழித்தது

    ஆட்சியாளர் ஆயிரம் செய்யட்டும் ஆனால் தெய்வங்களுக்கு பொறுமை உண்டு, சரியான காலத்தில் சரியான ஆட்கள் மூலம் அவை தங்கள் ஆலயத்தை மீட்டெடுக்கும்

    காசி வரலாறு முதல் சமணம், புத்தம், ஆப்கானியர் வரலாறு என தமிழக ஆலய பக்கங்களில் எங்கு புரட்டினாலும் காணும் காட்சி இது இதற்கு எந்த அரசனும் அரசும் தப்பவே முடியாது

  11. இன்று ஆவணி அவிட்டம் என்பதால் பூணூல் மாற்று சடங்கு நடைபெறும். இது சம்பந்தமாக புகுத்தறிவு நண்பர் ஒருவர் என்னிடம்,

    “நான் பூணூலை கடுமையாக வெறுக்கிறேன். அது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கான அடையாளமாக இருக்கிறது. இந்து மதம் சிறந்த மதம் என்றால் அது ஏன் அனைவரையும் பூணூல் அணிய விட மறுக்கிறது? இதற்கு ஒரே மருந்து புகுத்தறிவாதம் தான்”

    எனச் சொன்னார். நான் அவரிடம் பதிலுக்கு கேட்டேன்,

    “நண்பரே! நீங்கள் பூணூல் அணிய முயற்சித்து அதை அணிய விடாமல் யாராவது தடுத்தார்களா?”

    நண்பர் இல்லை என மண்டையை ஆட்டினார். அடுத்த கேள்வியைக் கேட்டேன்,

    “மாற்று சமுதாயத்தினர் எத்தனையோ பேர்கள் பூணூல் அணிந்திருக்கின்றனர். அவர்களுடைய பூணூலை நீங்கள் சொல்லும் சமுதாயத்தினர் அறுத்து எறிந்திருக்கிறார்களா?”

    மீண்டும் இல்லை என மண்டையை ஆட்டினார். கேள்விகளைத் தொடர்ந்தேன்,

    “நீங்கள் சொல்லும் சமுதாயத்தினர் கோவில் வாசல்களில் நின்று கொண்டு அந்த வழியே போகும் மற்ற சமூகத்தினரை “நீங்கள் கட்டாயமாக பூணூல் அணியக் கூடாது” என ஏதாவது எச்சரித்துக் கொண்டிருக்கிறார்களா?”

    நண்பர் வழக்கம் போல் இல்லையென மண்டையை ஆட்டினார்.

    நான் சொன்னேன்,

    “அப்படியானால் இல்லாத ஒன்றை இருப்பதாக நீங்கள் கற்பனை பண்ணிக் கொண்டு, இந்து மதம் உங்களை பூணூல் அணிய விடாமல் தடுப்பதாக மனதிற்குள் ஒரு எண்ணம் வலுவாக இருக்கிறது என்றால்,

    மற்றவர்களுக்கு நீங்கள் புகுத்தறிவு மருந்து கொடுப்பதற்கு முன் உடனடியாக மனநல மருத்துவமனைக்கு சென்று நீங்கள் மருந்து எடுத்துக் கொள்ளுங்கள்”

    நண்பர் படாரென கோபத்தோடு போய்விட்டார். எப்படியோ மனநல மருத்துவமனைக்கு இன்றைக்கு வரவுதான்.

  12. பார்ப்பானிய ஆதிக்கம், பிராமண சூது , ஆரிய வந்தேரி என சொல்லி பிராமணருக்கு பெரும் தொல்லை கொடுத்து அவர்களை வெளிநாடுகளுக்கு அடித்துவிரட்டிவிட்டது திராவிட கோஷ்டி

    ஒருவகையில் இது வெள்ளையனின் சதியாகவும் இருக்கலாம், இந்தியாவில் தான் கண்ட நேர்மையான அறிவான இனமான பிராமண இனத்தை எப்படி தன் நாட்டுக்கு அழைத்து செல்வது எனும் சதியின் விளைவாகவும் இருக்கலாம்

    அம்பேத்கர், ராம்சாமி என சிலரை தூண்டிவிட்டு அவர்கள் இடஒதுக்கீடு என பொங்கினால் அறிவான சமூகம் அகதியாக தன் நாடு தேடிவரும் என அவன் கணக்கிட்டு இருக்கலாம்

    நடக்கும் காட்சிகள் அதை தெளிவாக சொல்கின்றன‌

    இதனால் தமிழக ஆலயங்களில் மந்திரம் சொல்லி மணி ஆட்ட‌ வேண்டிய சுந்தர் பிச்சை எங்கோ சென்றுவிட்டார், சென்னை கோவிலில் பூ தொடுக்க வேண்டிய கமலா என்பவர் அமெரிக்க துணை அதிபர் அளவுக்கு சென்றுவிட்டார்

    தமிழக கோவிலில் பஜனையோ இல்லை மாவிளக்கு போடவேண்டிய இந்திரா லூயி, வீட்டில் கொலு வைக்க வேண்டிய சிலர் உட்பட பலர் உலகளாவிய நிலைக்கு சென்றாயிற்று

    ஆக பிராமண மூளைகளை எப்படி கடத்துவது என்பதை அழகாக செய்திருகின்றான் பிரிட்டிஷ்காரன், அவனின் நுணுக்கமான தந்திரத்தில் அம்பேத்கர், ராம்சாமி கோஷ்டியெல்லாம் ஆடிதீர்க்க பிராமண இனம் அகதியாக வெள்ளையன் நாட்டிலே அடைக்கலாமாகி என்றோ சென்றுவிட்டது

    இதனால் தேசாபிமானிகள் இந்நாட்டின் திறமையெல்லாம் வெளிநாட்டுக்கு பயன்படுகின்றதே என கதறும் நேரம், அவர்கள் அங்கே நிம்மதியாக வாழ்கின்றார்கள்

    உண்மையில் ராம்சாமியின் உழைப்பில் பிராமண இனம் அயல்நாடுகளில் நன்றாய் வாழ்கின்றது, அவர்கள் ராம்சாமி அய்யாவுக்கு மலர்தூவி நன்றி தெரிவிப்பார்கள் என எதிர்பார்ப்போம்

    இவர்களை பார்க்கும் பொழுது திராவிட கோஷ்டியிடம் நாம் வைக்கும் கோரிக்கை ஒன்றுதான்

    ஒரு சாதியினை மட்டும் இப்படி உயர்த்தினால் எப்படி? இந்த நாடார் சாதியினையும் இப்படி விரட்டினால் அமெரிக்காவில் வாலன் பெப்பட் உட்பட தொழிலதிபர்களுக்கு எப்படி சவால் விடும் தெரியுமா?

    இந்த டெஸ்கோ, கேரிபோர், வால்மார்ட் எல்லாம் இருக்குமா? இல்லை மெக் டொனால்டு கே.எப்.சி இருக்குமா? இல்லை ஐரோப்பிய அமெரிக்க வியாபார கம்பெனி ஒன்று நிற்குமா? பூராவும் நாடார் இனம் அமுக்கிவிடாதா?

    இதனால் நாடார்களையும் பிராமணர் போல் அகில உலகில் உயர்த்த திராவிட கோஷ்டி போராடுமாறு கேட்டு கொண்டு, அவர்களுக்கு ஈரோட்டு ராம்சாமி பாணியில் ஆலோசனைகளையும் சங்கமே தருகின்றது

    * பெட்டி கடையில இருந்து பெரிய பெரிய சூப்பர் மாக்கெட், சாப்பாட்டு கடைன்னு எல்லாம் நாடார் பயலுகளே பிடிச்சிட்டா என்னங்க நியாயம்?

    * அந்த பெட்டி கடை நாடாருக்காம் , தி.நகர் பஜார் முழுக்க நாடாருக்காம். இன்னும் தமிழ்நாட்டுல எல்லா ஊரிலேயும், எல்லா கடையும் அவனுகதான் வச்சிருக்கானுக வெங்காயமுங்க‌

    * சாப்பாட்டு கடை, ஜவுளி கடை மட்டுமில்லீங்க. ஆதித்தன் குடும்பம், வைகுண்ட ராஜன் குடும்பம் பத்திரிகைய வச்சிருக்குங்க.. இந்த சிவநாடார் ஐடி உலகத்தை வச்சிருக்காங்க.. அதுல நாடாரனு பெருமையா பெயரை எல்லாம் வச்சிருங்க்காங்க‌

    *ஒரு சாதி மட்டும் வியாபாரம் பண்ணினா மத்த சாதியெல்லாம் எப்படிங்க பொழைக்கிறது. ஒரு காலத்துல மார்வாடி, செட்டி, நாயுடு, நா எல்லா பயலும் வியாவாரத்துல இருந்தானுகங்க.. இந்த நாடாரு பயலுலக தெற்க இருந்து வந்து எல்லாரையும் விரட்டிட்டானுகங்க..

    * இதுனால சொல்றோமுங்க, இங்க பொருளாதார நீதி இல்லீங்க.. நாடார் பயலை எல்லாம் விரட்டனுமுங்க‌

    * இதுக்கு பொருளாதார இட ஒதுக்கீடு வேணுமுங்க.. ஒரு கடை தெருவுல நாடாருக்கு ஒரு கடைதாங்க கொடுக்கணும், அவனும் அரைநாள்தான் திறக்கணுமுங்க. மற்ற 70% கடை தாழ்ந்த்தபட்ட சாதிக்கு கொடுக்கணுமுங்க, அவங்க 20 மணிநேரம் திறக்கணுமுங்க.. இதுக்கு சட்டம் கொண்டு வரணுமுங்க‌

    * இதுனால நாங்க போராட போரமுங்க.. நாடார் கடை அரை நாளுக்கு மேல் திறந்தா நாங்க வாசல்ல நின்னு வர்ற வாடிக்கையாளரை எல்லாம் அடிப்போமுங்க.

    * வெங்காயம், நீ நாள் முழுக்க உழைச்சி என்ன விலை ஏதுவிலைன்னு கேட்காம நாடார் பயகிட்ட கொட்டுற. உன் உழைப்பு நாடார் பொண்டாட்டி கழுத்துல நகையா தொங்குது, அவன் வப்பாட்டி வீட்டுல பணமா கொட்டுது

    * நாடார் பய பூரா இலங்கையில இருந்து பொழைக்க வந்தவன்னு அய்யா கால்டுவெல் சொல்லியிருகாருங்க, அவன் திராவிடனும் இல்லைங்க. பொழைக்க வந்த பய நம்மள பொழைக்க விடலண்ணா எப்படிங்க.. நமக்கு மானம் இல்ல, அறிவு இல்ல, சிந்தனை இல்ல..அவன்கிட்டயே வியாபாரம் வச்சி அவன வள்ர்த்துவிடுரோம்..வெட்க கேடுங்க..

    * இலங்கையில இருந்து பனையேற வந்த பய தமிழ்நாட்டை பிடிச்சி வச்சி வியாபாரம் பண்ணி நம்மள சுரண்டுறது என்னங்க நியாயம்? இது சமூக இழிவுங்க..

    * எல்லா சாதியும் கல்லாபெட்டியில் நுழையும் உரிமை வேணுமுங்க..

    * மளிகை கடையில வேலை செய்றவனுக்கே கடை சொந்தமுங்க, முடி வெட்ரவனுக்கு முடி சொந்தம்ங்க அப்படி நகை கடையில வேலை செய்றவனுக்கு நகை சொந்தமுங்க, சமைக்கிறவனுக்கே ஹோட்டல் சொந்தமுங்க, இப்படி சமத்துவ புரட்சி வேணுமுங்க..

    இப்படி எல்லாம் போராடி நாடார்களை இந்த தமிழ்நாடு எனும் குண்டு சட்டியினை விட்டு விரட்டினால் அவர்கள் வால்ட்மார்ட்டை விரட்டுவார்கள், அமெரிக்க சீன கம்பெனிகளை ஒழிப்பார்கள், பெரும் உலகளாவிய வியாபார கும்பலாக உருவெடுப்பார்கள்.

    அதனால் திராவிட கும்பல் பிராமணரை உயர்த்தியது போல் நாடாரையும் உயர்த்த உடனே பொருளாதார இட ஒதுக்கீடு கேட்டு போராடுமாறு கோரிக்கை வைக்கின்றோம், அதற்கு தேவையான ஐடியா மற்றும் பண உதவிகள் உடனே தரபடும்..

    “நாடாரையும் நாயினையும் கண்டால் நாடாரை முதலில் அடி..” என இன்றே தொடங்கட்டும் புரட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *