மேற்கு வங்கத்தில் சிபிஐ விசாரணை:மம்தா அரசின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி!

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மே மாதத் துவக்கத்தில் நடைபெற்ற கொடிய வன்முறைகள் தொடர்பாக, மாநில உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணையை தீவிரமாக நடத்தி வருகிறது. இந்த விசாரணை, தேர்தலுக்குப் பிந்திய வன்முறைக்கு காரணமான, மாநிலத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரல்  மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்தது. மே 2ஆம் தேதி, முடிவுகள் வெளியாயின. இதில், திரிணமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்தது. அதேசமயம், மாநில அரசியலில் அதிர்ச்சித் திருப்பமாக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் முற்றிலும் துடைத்தெறியப்பட்டு, 77 இடங்களில் வென்ற பாஜக பிரதான எதிர்க்கட்சியானது. குறிப்பாக, முதல்வர் மம்தா பானர்ஜியே நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். இதனை மம்தாவால் ஏற்க முடியவில்லை. அதன் வெளிப்பாடாக, மாநிலம் முழுவதும் மே 2 முதல் ஒரு வார காலத்துக்கு பாஜகவினர் மீதும் பாஜக ஆதரவாளர்கள் மீதும் கணக்கற்ற வன்முறை திரிணாமூல் கட்சியினரால் கட்டவிழ்த்து விடப்பட்டது.

இந்த வன்முறைகளில் 16 பேர் உயிரிழந்தனர் (உயிரிழப்புகளின் எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கலாம்).  மேலும், நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் பலர் மானப்பங்கப்படுத்தப்பட்டனர்.  பாஜக நிர்வாகிகளாக இருந்த இரு பெண்கள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டனர். பலநூறு பாஜக நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பொதுச் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. சட்டம் ஒழுங்கு என்பதே இல்லாமல் போனது.

மாநில காவல் துறையோ மம்தா அரசுக்கு கைகட்டி சேவகம் செய்தது. கண்முன் நடந்த வன்முறைகளை மாநில காவல் துறை வேடிக்கை மட்டுமே பார்த்தது. இந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கூட மாநில முதல்வர் மம்தா சந்திக்கவோ ஆறுதல் கூறவோ இல்லை என்பதிலிருந்தே, இதன் பின்னணியை உணரலாம்.

இது ஒரு வகையில் ஆளுங்கட்சியே முன்னின்று நடத்திய அரசியல் பயங்கரவாதம் தான். இந்தக் குற்றங்கள் தொடர்பாக குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. அவ்வாறு கைது செய்யப்பட்டாலும், உண்மையான குற்றவாளிகளை வழக்கில் சேர்க்கப்படவில்லை.

இந்த வன்முறையை ஆய்வு செய்து, மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கச் சென்ற மாநில ஆளுநர் ஜகதீப் தங்கருக்கு மாநில அரசு எந்த உதவியும் செய்யவில்லை. அவர் பல இடங்களில் தடுக்கப்பட்டார். அது மட்டுமல்ல, நிலைமையை மதிப்பிட, மத்திய பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் நேரில் சென்ற மத்திய இணை அமைச்சர் முரளிதரனின் வாகனமே வன்முறையாளர்களால் தாக்கப்பட்டது.

மாநில அரசைக் கலைக்கக் கூடிய அளவுக்கு மேற்கு வங்கத்தில் அரசியல் சாசனம் மீறப்பட்டது. ஆனால், ஊடகங்கள் மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், மம்தாவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு மதசார்பின்மையைக் காத்தன.

அரசியல் சாசனத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசைக் கலைப்பதற்கான அனைத்துக் காரணங்களும் மேற்கு வங்க மாநில அரசுக்கு எதிராக இருந்தபோதிலும், மேலும் வன்முறையோ, பெரும் மதக்ககலவரமோ வெடித்துவிடும் என்ற அச்சத்தால், மத்திய அரசு கட்டுண்டு கிடந்தது. வேறு வழியின்றி, நீதித்துறையை பாதிக்கப்பட்ட மக்கள் நாடினர்.

இந்தக் கொடிய வன்முறை தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. வன்முறைக்கு பலியான பாஜகவைச் சேர்ந்த இரு இளம்பெண்களின் குடும்பங்கள் சார்பிலும் வழக்குகள் பதியப்பட்டன. இதையடுத்து, வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு, கொல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த ஆணையமும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை நடத்தியது. அப்போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன. பங்களாதேஷிலிருந்து ஊடுருவி மேற்கு வங்க குடிமக்களாகிவிட்ட இஸ்லாமியர்கள் பலர், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் என்ற போர்வையில் கும்பல் வன்முறையில் பங்கேற்றது தெரிய வந்தது. ஊடுருவல்காரர்களுக்கு எதிரான பாஜகவின் தொடர் போராட்டமே பங்களாதேஷிகளின் கோபத்துக்குக் காரணம். அவர்கள் கடந்த பத்தாண்டுகளாகவே திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பிரதான வாக்கு வங்கியாக இருந்து வருகிறார்கள். எனவேதான். அவர்களின் வன்முறையை மாநில அரசு கண்டுகொள்ளவில்லை.

தேசிய மனித உரிமை ஆணையம் தன் அறிக்கையை, கடந்த ஜூலை 15இல், கோல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், “எதிர்க்கட்சியினர் மீது பழி வாங்கும் வகையில் இந்த வன்முறை நடந்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமையை மோசமாக்கும் வகையில் வன்முறை இப்போதும் தொடர்கிறது. ஆளுங்கட்சியினர் மற்றும் காவல் துறையினருக்கு எதிராக, பாதிக்கப்பட்டவர்களிடையே அச்சம் நிலவுகிறது.

பலாத்கார வன்முறை காரணமாக வேறு இடங்களுக்குத் தப்பிச் சென்றவர்களால் இன்னமும் தங்களின் வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலையே உள்ளது. இயல்பு வாழ்க்கையைத் தொடங்க முடியாத சூழலில் அவர்கள் உள்ளனர். பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் பேசவே பயப்படுகிறார்கள். அவர்கள் மாநில நிர்வாகத்தின் மீது நம்பிக்கையை முழுமையாக இழந்துவிட்டனர்.

இது தொடர்பாக மாநில காவல் துறை நடவடிக்கை என்ற நம்பிக்கை இல்லை. எனவே. இதுகுறித்து மத்தியப் புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கின் விசாரணையை, வேறு மாநில நீதிமன்றத்தில் நடத்த வேண்டும்” என்று கூறியிருந்தது.

அப்போது மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், ‘தேசிய மனித உரிமை ஆனையத்தின் அறிக்கை, அரசியல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. ஆணைய உறுப்பினர்களுக்கு பாஜகவுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது’ என்றார். அதனை நீதிமன்றம் ஏற்கவில்லை.

கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ் பிந்தால், நீதிபதிகள் ஐ.பி.முகர்ஜி, ஹரீஷ் தாண்டன் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கினை விசாரித்தது. இவ்வழக்கில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அளித்த 50 பக்க ஆவணங்கள் விரிவாக ஆராயப்பட்டன. இறுதியாக, கொல்கத்தா உயர் நீதிமன்றம், ஆக 19இல் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஏற்பட்ட அனைத்து வன்முறைகள் குறித்தும் முழுமையாக விசாரிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, கொலைகள், பலாத்காரங்கள் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும். கொள்ளை, தீவைப்பு உள்ளிட்ட பிற வன்முறைச் சம்பவங்களை, சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி)  விசாரிக்க வேண்டும். இதற்காக, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சுமன் பாலா சஹோ, சௌமன் மித்ரா, ரன்பீர் குமார் ஆகியோர் அடங்கிய சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்படுகிறது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த இரண்டு விசாரணைகளும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் நடக்கும். விசாரணைக்கு இடையூறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் அறிவித்தது. ஆறு வாரங்களுக்குள் வழக்குகள் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அக்டோபர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கொலை, பாலியல் பலாத்காரம் மற்றும் வன்முறையின்போது பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்பான வழக்குகளின் விவரங்களை அளிக்குமாறு மேற்கு வங்க காவல் துறை டிஜிபிக்கு சிபிஐ கடிதம் அனுப்பியது.

அத்துடன் மேற்கு வங்கத்தின் அரசியல் வன்முறையை  விசாரிக்க சிபிஐ தலா 4  குழுக்களை இணை இயக்குநர்கள் ராம்நிஷ், அனுராக், வினீத் விநாயக், சம்பத் மீனா ஆகியோர் தலைமையில் அமைத்தது. ஒவ்வொரு குழுவிலும் ஒரு டிஐஜி, நான்கு காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளனர். ஒட்டுமொத்த விசாரணையை ஏடிஜிபி அஜய் பட்னாகர் கண்காணித்து வருகிறார்.

இதுதொடர்பாக மேற்கு வங்க மாநிலத்தில் தொடர் விசாரணை நடத்திவரும் சிபிஐ அதிகாரிகள், இதுவரை, 21 வழக்குகளைப் பதிவு செய்து, அதில் தொடர்புடைய குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளனர். மே 14ஆம் தேதி மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் நடந்த பயங்கரக் கொலைக் குற்றம் தொடர்பாக இரண்டு பேரை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர். குற்றவாளிகளுக்கு ஆளுங்கட்சியினரின் ஆதரவு காரணமாக, இன்னமும் பலரை கைது செய்ய முடியாத நிலை தொடர்கிறது.

இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலத்தையும் சிபிஐ பதிவு செய்யத் தொடங்கியுள்ளது. அரசுக்கு அஞ்சி ஆரம்பத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த பொதுமக்களும், பாஜக ஆதரவாளர்களும் இப்போது தாமாக முன்வந்து வன்முறை தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பிக்கத் துவங்கி உள்ளனர்.

இதுவரை கிடைத்த தகவல்களின்படி, இந்த வன்முறைகள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை என்பது உறுதியாகி உள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போதே, மக்களுக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மிரட்டல் விடுத்திருந்ததன் பதிவையும் சிபிஐ ஆராய்ந்து வருகிறது. அதில், “தேர்தல் முடிந்த பிறகு நமது எதிரிகளுக்கு வாழ்வில் மறக்க முடியாத வகையில் பாடம் கற்பிக்கப்படும். வெளியிலிருந்து வந்த எனது ஆட்சியை நீக்க சதி செய்வோர் மாநிலத்தில் இருந்தே துரத்தப்படுவார்கள்” என்று அவர் பேசியிருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது.

இந்தக் கலவரம் திரிணமூல் காங்கிரஸ்- பாஜக ஆகிய இரு கட்சியினர் இடையிலான அரசியல் மோதல் அல்ல; வெளிநாட்டு ஊடுருவல்காரர்களான பங்களாதேஷி முஸ்லிம்களின் திட்டமிட்ட ஜிஹாதி தாக்குதல் என்பதும் தெரிய வந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பீர்பும் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்து, அப்பகுதிகளில் ஹிந்துக்கள் சிறுபான்மையினர் ஆகிவிட்டனர். அதுவும் இந்த வன்முறையின் அடிப்படைகளில் ஒன்று என்பது தெரிய வந்திருக்கிறது.

வன்முறையைக் கட்டுப்படுத்த வேண்டிய மாநில அரசே, வன்முறையைத் தூண்டிவிட்டதுடன், காவல் துறை, அரசு நிர்வாகம் ஆகியவற்றை மிரட்டல் மூலம் இயங்காமல் செய்தது மாபெரும் தவறாகும். அது மாநில அரசின் அரசியல் சாசனக் கடமையை மீறுவதாகும். எனவே, சிபிஐ பதிவு செய்துள்ள வழக்குகளின் விசாரணையும், அக். 24-இல் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள விசாரணை அறிக்கையும், அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசிநேர முயற்சியாக, தேசிய மனித உரிமை ஆணைய அறிக்கைக்கு எதிராகவும், மேற்கு வங்கத்தில் சிபிஐ விசாரணை நடத்துவதை எதிர்த்தும், உச்சநீதிமன்றத்தில் மம்தாவின் அரசு வழக்கு தொடுத்திருக்கிறது. இதுவே, மம்தா அரண்டு போயிருப்பதன் அறிகுறி. ஆனால், சட்டம் தன் கடமையைச் செய்யும்போது, உப்புத் தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். வினை விதைத்தவர்கள் அதை அறுவடை செய்துதானே ஆக வேண்டும்?

2 Replies to “மேற்கு வங்கத்தில் சிபிஐ விசாரணை:மம்தா அரசின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி!”

  1. விநாயகர் சதுர்த்தியன்று தமிழக வினை தீர்க்க ஒரு அதிரடி நடவடிக்கையினை மத்திய அரசு எடுத்துள்ளது

    ஆம், மதிப்பிற்குரிய ரவிந்திர நாராயணன் ரவி தமிழக ஆளுநராக நியமிக்கபட்டுள்ளார் இது மிக பெரிய திருப்பம்

    இதுவரை தமிழக ஆளுநர்களாக முன்னாள் அரசியல்வாதிகள், கட்சிக்காரர்கள் இல்லை மத்திய அரசில் யாருக்கோ அல்லது மாநில அரசு விரும்பி கேட்டு கொண்டவர்களே ஆளுநராக இருந்தார்கள்

    முதல் முறையாக உளவு மற்றும் காவல்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட சுருக்கமாக சொன்னால் அஜித் தோவலுக்கு அடுத்த இடத்தில் உள்ளவர் நியமிக்கபட்டிருப்பது இதுதான் முதல்முறை

    ஆர்.என்.ரவி என அழைக்கபடும் இந்த புதிய ஆளுநர் பாட்னாவில் பிறந்தவர், 1976ல் காவல்துறைக்கு வந்து கேரளாவில் பணியாற்றி பின் மத்திய உளவுதுறைக்கு மாற்றபட்டவர்

    இந்தியாவின் மிக சிறந்த நடவடிக்கைகளில்லாம் அவருக்கு பங்கு உண்டு, காஷ்னீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அமைதி திரும்ப மிகபெரிய நடவடிக்கை எடுத்தவர்

    வெளிதெரியா சாகசங்கள் நிறைய உண்டு, மாறுவேடங்களில் உயிருக்கு அஞ்சாமல் நக்சலைட்டுகளுக்குள் ஊடுருவியவர், கள நிலவரத்தை அறிந்து வந்தவர் என மிகபெரிய சாகசங்களை செய்தவர்

    இவருக்கு மேல் அதிகாரியாக இருந்தவர்தான் அஜித் தோவல்

    அது காங்கிரஸ் ஆட்சிகாலங்கள் ஒரு கட்டத்துக்கு மேல் நடவடிக்கை எடுக்கமுடியாமல் அஜித் தோவலின் கரங்காள் கட்டபட்ட காலங்கள் என்பதால் முடிந்தவரை பாடுபட்டார் ரவி

    2012ல் ஓய்வும் பெற்றார்

    2014ல் மோடி வந்தார், மோடி வந்ததும் செய்த ஆகசிறந்த காரியம் மிக திறமையான பணியாளர்கள் ஓய்வில் இருந்தாலும் அழைத்து வந்து தேசபணிக்கு அமர்த்துவது

    நிச்சயம் இது மிகசிறந்த அணுகுமுறை

    அதிதான் வடகிழக்கு மற்றும் காஷ்மீர் பக்கம் நீண்ட அணுகுமுறை கொண்ட ரவியினை நாகலாந்து விவகாரங்களுக்க்கான அலுவலராக‌ அறிவித்தார் மோடி

    ரவியும் மிக சாதுர்யமமாக கடமையாற்றி நாகலாந்தில் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்து 2016லே அங்கு தீவிரவாதிகளை ஆயுதத்தை கீழே போட செய்து சமாதானத்தை நிறுவினார்

    நிச்சயம் பஞ்சாபில் தீவிரவாதத்தை வேறறுக்க கில்லும் அஜித்தோவாலும் அரும்பாடு பட்டதை போல நாகலாந்தில் அமைதியினை நிலைநாட்டினார் ரவி

    மோடி 2018ல் அவரை அஜித்தோவலுக்கு அடுத்தபடியாக துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக்கினார்

    பின் 2019ல் அதே நாகலாந்துக்கு ஆளுநரும் ஆக்கினார் மோடி, அதாவது தீவிர்வாதம் அங்கே மீண்டும் தலையெடுக்காமல் முழுக்க ஒழிக்க செய்யபட்ட ஏற்பாடு அது

    இப்பொழுது வடகிழக்கு மாநிலங்களில் அமைதி பூரணமாக திரும்பியதை அடுத்து தமிழகத்துக்கு அவர் அனுப்படுகின்றார்

    இது தமிழகத்துக்கு மகா புதிது, ஒரு வகையில் திராவிட கும்பலுக்கு பலத்த அதிர்ச்சி

    இந்தியாவின் குழப்பமான மாநிலங்களில் தமிழகமும் ஒன்று, ஆனால் காஷ்மீர் பஞ்சாப் வடகிழக்கு போல் ஆயுதம் இல்லாத ஒன்றுதான் ஆறுதல்

    அவர்கள் ஆயுதமுனையில் தனிநாடு கோரி அட்டகாசம் செய்ததால் தேசம் அவர்களுக்கே முதலுரிமை கொடுத்தது

    திராவிட கும்பலும் பிரிவினைவாத கும்பல்தான் ஆனால் தனிநாடு கேட்கமாட்டார்கள், அவர்களின் ஒரே குறி ஆட்சியில் பங்குபெற்று கொள்ளை அடித்து கொண்டே இருப்பது, கொள்ளையில் சம்பாதித்ததை காக்க மறுபடி ஆட்சியில் இருக்க முயற்சிப்பது

    இதுதான் அவர்கள் கொள்கை இதற்கு அவர்கள் வைத்த பெயர் “மாநில சுயாட்சி”

    அதே நேரம் இலங்கை புலிகளுடன் சேர்ந்து இங்கு ஆயுத கலாச்சாரத்தை வளர்க்க முயன்றதை முளையிலே கிள்ளி எறிந்தது இந்தியா, இவர்களும் அதை ஏற்றும் கொண்டார்கள். காரணம் இவர்களுக்கு தனிநாடு கோரும் தைரியமோ ஆயுதம் ஏந்தும் திட்டமோ கிடையாது, ஒரே நோக்கம் ஊழல்

    இந்த ஊழலுக்குத்தான் அவர்கள் ஆட்சிக்கு வர துடிக்க அவர்களை வைத்து எப்படி இந்தியாவில் குழப்பம் விளைவிக்கலாம் என மிஷனரிகள் அணுக, அவர்களோடு அரேபிய ஊடுருவலும் உண்டு

    இது 1960 முதல் இங்கே நடக்கும் காட்சி

    இதில் மிகபெரிய அழிவுகளும் நடந்தன, காமராஜர் தோற்று தேசியம் மறைந்ததில் இருந்து இந்திரா கொலைமுயற்சி, ராஜிவ் கொலை, கோவை குண்டுவெடிப்பு என ஏகபட்ட அழிவுகளும் கொடுமைகளும் நடந்தன‌

    காங்கிரசும் இதை மறந்தது, திராவிடம் அதை தொடர்ந்தது

    மத்தியில் ஆட்சியில் இல்லாதபொழுதெல்லாம் தமிழகத்தில் தேசவிரோதமாக இந்துவிரோதமாக ஆடி தீர்க்கும் திமுக இப்பொழுது மறுபடியும் தன் அடுத்த தலைமுறை இன்னிங்க்ஸை தொடங்கியது

    ஆட்சிக்கு வந்ததில் இருந்து “ஒன்றிய அரசு” என்பதில் இருந்து “அர்ச்சகர்” திட்டம்வரை அது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்திற்று

    இதனிடையே இன்னும் இம்சைகள் அதிகரித்தன‌

    மிஷனரி கைகூலிகள் ஆங்காங்கே மாநில அட்சியில் ஊடுருவினர், முக்காலமும் தேச எதிர்ப்பும் திராவிடம் எனும் பெயரில் கிறிஸ்துவ அட்டகாசம் இன்னும் பல அட்டகாசங்களை செய்வோர் எல்லாம் பதவிக்கு நியமிக்கபட்டனர்

    மிக மிக மோசமான காலம் நோக்கி தமிழகம் வீழ்தொடங்கியது

    இந்நிலையில்தான் வடகிழக்கில் மிக நீண்ட அனுபவம் கொண்ட, அதாவது கிறிஸ்தவ மிஷினரிகளால் குழப்பம் அடைந்து மிக பெரிய மிரட்டலாக உருவெடுத்த அந்த மாநிலங்களில் அவர்களின் சதியினை முறியடித்த ரவி போன்றவர்களை தமிழகத்துக்கு ஆளுநராக நியமிகின்றது மோடி அரசு

    இவர் அஜித் தோவலின் நெருங்கிய அதிகாரி என்பதால் ஏற்கனவே தமிழக கடத்தல், தீவிரவாதம், பிரிவினை, ரகசிய அரசியல் எல்லாம் அவருக்கு அத்துபடி

    மொத்தத்தில் குட்டிசாத்தான்கள் தலைவிரித்து ஆட தொடங்கிய நிலையில் சக்திவாய்ந்த தேவதையினை அனுப்புகின்றார் மோடி

    இனி தமிழக காட்சிகள் ஒவ்வொன்றாய் மாறும், இந்த திராவிட அழிச்சாட்டியம், புலி, பிரிவினைவாதம், ஒன்றியம் இன்னும் மகா மட்டமான தேசபிரிவினைவாதமெல்லாம் அடங்கும்

    75 வருடமாக காங்கிரஸ் செய்யாததை முதல் முறையாக மிக சரியாக செய்திருக்கும் மோடிக்கு வாழ்த்துக்கள்

    இதுவரை திமுக கண்டதெல்லாம் சொத்தை ஆளுநர்கள், பத்மநாபா கொலையினையில் கூட அப்போதைய ஆளுநர் அமைதியாக இருந்ததை காணபொறுக்காமல் டெல்லிதான் திமுக ஆட்சியினை டிஸ்மிஸ் செய்தது

    ஆளுநர் என்றால் பதவிபிரமாணம் செய்துவிப்பார்கள், விழாவுக்கு வருவார்கள் அவ்வளவுதான், தேநீர் தருவார்கள் விருந்து தருவார்கள் சும்மா பொம்மையாக இருப்பார்கள் என்பதுதான் இவர்கள் கண்ட ஆளுநர்கள், அப்படித்தான் கருதி கொண்டிருந்தார்கள்

    அப்படி ஆளுநர்களை கண்டுதான் “ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்ணரும் தேவையே” என கேட்டு கொண்டிருந்தார்கள்

    இனி ஆட்டின் முதுகில் சாட்டையினை ஓங்கி வைக்கும் பொழுதுதான் ஆளுநரின் அவசியமும் அதிகாரமும் புரியும்

    சுருக்கமாக சொன்னால் இப்படி சொல்லலாம்

    இதெல்லாம் இஸ்ரேலிய பாணி, அமெரிக்காவிலும் இது உண்டு

    ஆம், நாட்டுக்காய் உளவுபணி ஆபத்தான காவல்பணியில் இருந்தவர்கள் ஓய்வுபெற்றபின் அவர்களின் நீண்ட அனுபவம் மற்றும் தேசாபிமானம் இவற்றை கருத்தில் கொண்டு மகா முக்கிய பணியில் அமர்த்துவார்கள்

    அவர்கள் நாடும் வலுவாகும், பாதுகாப்பு பலமாகும், எந்த பிரிவினை குழப்பமும் எடுபடாது

    ஆக காஷ்மீரிலும் வடகிழக்கிலும் அமைதியினை நிலைநாட்டிவிட்டு 70 ஆண்டுகால ஊழல், பிரிவினை என மகா குழப்பங்களை செய்யும் திராவிட கோஷ்டி பக்கம் வந்துவிட்டது மோடி அரசு

    திராவிடம் எனும் புற்றில் எந்தெந்த பாம்பு உண்டு, கம்யூனிஸ்ட், தமிழ் தேசியம், இன்னும் தமிழ் உணர்வு எனும் பெயரில் எத்தனை கொடுந்தேளும் பூரானும் உண்டு என்பதெல்லாம் எல்லோரையும் போல அவர்களுக்கு தெரியும்

    அந்த புற்றை கலைத்து அங்கே பூந்தோட்டம் அமைக்க ஒரு உறுதியான தலைவனை அனுப்புகின்றது டெல்லி

    அந்த தேசாபிமானியினை இருகரம் கூப்பி வணங்கி வரவேற்கின்றது தமிழகம்

    இனி மெல்ல செழிக்கும் தமிழகம், வினை தீர்க்கும் விநாயகனின் நாளில் தமிழக கொடும் வினைகளெல்லாம் தீரட்டும்

    ஆக ரஜினி என்பவர் அரசியலுக்கு “சிங்கம் ஒன்று புறப்பட்டதே” என வருவார், பாஜக அதை செய்யும் என எதிர்பார்த்து அது பொய்த்த நிலையில் திரையுலக டம்மி சிங்கமெல்லாம் வேண்டாம் ஒரிஜினல் சிங்கத்தையே களமிறக்குவோம் என இறக்கிவிட்டது டெல்லி

    சிங்கம் கர்ஜனையோடு சென்னை நோக்கி வருகின்றது, அது வருகின்றது என்ற கர்ஜனையிலே கலங்கி நிற்கின்றது தமிழக நரிகூட்டம், அந்த கருடன் இறக்கை விரிக்க அலறி திகைக்கின்றது தீராவிடம் கொண்ட திராவிட நாக கூட்டம்.

  2. முக ஸ்டாலின் ஒரு மாநிலத்தின் முதல்வர், மக்களுக்கு உண்மையான செய்தியினை மட்டும் சொல்லும் பொறுப்பு அவருக்கு உண்டு, இந்நாட்டின் சட்டம் பற்றியும் இந்நாட்டின அரசியல் அமைப்பு பற்றியும் சரியான் விஷயங்களை மட்டும்தான் அவர் சொல்ல வேண்டும்

    ஏதோ திமுகவின் 4ம் தரத்துக்காரன் 200 ரூபாய் வாங்கி கொண்டு முட்டுசந்தில் கத்துவது போல் கத்துவது முதல்வருக்கு அழகு அல்ல‌

    முக ஸ்டாலின் சொல்வது மாபெரும் புரட்டு, கொஞ்சம் குடியுரிமை சட்ட வரலாற்றை புரிந்துகொண்டு பேசுவது நல்லது

    இந்திய குடியுரிமை சட்டம் 1950ல் அறிவிக்கபட்டாலும் காலம் தோறும் மாறின, ஆனால் இந்த சட்ட திருத்தத்தில் இந்தியா பாகிஸ்தான் பிரியும் பொழுதும் , இந்தியா வங்கதேசத்தை உருவாக்கி கொடுத்து அதனுடன் உறவு தொடங்கிய காலத்தில் எழுதிய ஒப்பந்தபடியேதான் இப்பொழுதும் அறிவிப்புகள் அறிவிக்கபட்டிருக்கின்றன‌

    அதாவது இந்தியா பாகிஸ்தான் பிரியும் பொழுது பாகிஸ்தானுக்கு இந்தியாவில் இருந்து வரும் இஸ்லாமியருக்கு எந்நேரமும் குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் அதே நேரம் இந்தியாவுக்குள் ஓடிவரும்

    சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்களுக்கு இத்தேசம் ஆதரவு தரவேண்டும் என்றும் ஒப்புகொள்ளபட்டது

    அதாவது பாகிஸ்தானில் சிறுபான்மையினரான இந்துக்கள் இந்தியா வரலாம், இந்தியாவில் சிறுபான்மையான இஸ்லாமியர் அங்கே செல்லலாம்

    இதுதான் பின்பு வங்கதேசத்திடமும் பின்பற்றபட்டது

    அதன் அடிப்படையில்தான் இப்பொழுதும் குடியுரிமை சட்டம் அமல் செய்யபடுகின்றது, அகதிகள் என இத்தேசத்துக்கு வந்த சிறுபான்மையினரை முறையாக பதிந்து கொள்ள கேட்டுகொள்கின்றது இந்திய அரசு

    ஆப்கன், பாக்., வங்கதேசம் ஆகிய நாடுகளில் வசிக்கும், முஸ்லிம் அல்லாத ஹிந்து, சீக்கியர், ஜைனர், புத்த மதத்தினர், இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என, மத்திய அரசு அறிவித்து உள்ளளது

    இதில் ஏன் இஸ்லாமியர் விடுபட்டனர், இது மோடி அரசின் சதி என்றெல்லாம் யாரும் குதிக்க முடியாது , இதெல்லாம் நேருவும் சாஸ்திரியும் இந்திராவும் செய்த ஒப்பந்தங்கள், மோடி அதனைத்தான் பின்பற்றுகின்றார்

    சட்டம் இப்படி பாகிஸ்தான், வங்கதேசம் என முன்னாள் இந்தியாவில் இருந்து வரும் சிறுபான்மையினருக்கான ஆதரவு சட்டம் இது, அந்நாட்டு பெரும்பான்மையினருக்கு இங்கே சலுகை அவசியமில்லை

    மதரீதியாக நாட்டை பிரித்துகொண்டு சென்றவர்கள் அங்கிருந்து சிறுபான்மையினரை அடித்து விரட்டும் பொழுது மதரீதியாக அடைக்கலம் கொடுக்கத்தான் சட்டம் சொல்கின்றது

    இதை மறைத்து தமிழக முதல்வர் சில குழப்பமான தகவல்களை தருவது அவரின் நற்தோற்றத்துக்கும் ஆட்சி மாண்புக்கும் நல்லது அல்ல, அல்லவே அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *