திருவள்ளுவர் – ஒரு விரிவான வரலாற்றுத் தேடல் : புத்தக அறிமுகம்

பண்டைய புத்தகங்கள், வரலாற்று மாந்தர்கள் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் திருக்குறள், அதன் ஆசிரியர் வள்ளுவர் தொடர்பான ஆராய்ச்சி விஷயத்தில் ஒரு பிரத்தியேக சிறப்பும் சர்ச்சையும் உண்டு.

குறள் ஆராய்ச்சியில் ஈடுபடுவோர் ஒவ்வொருவரும், தங்களது உயர்வு நவிற்சியால், வள்ளுவனையும் குறளையும் தம்முடையதாக மட்டுமே ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதுதான் சர்ச்சைக்கும் விவாதத்துக்கும் காரணமாகிவிடுகிறது.

அறிவியலாளர்கள் குறைவாகவும், ஆர்வலர்கள் அதிகமாகவும் குறள் ஆராய்ச்சியில் இறங்கியதால் இன்றும் குழப்பம் தொடர்கிறது. திருவள்ளுவரின் காலம், ஜாதி, சமயம், பல்வேறு குறட்பாக்கள் எடுத்தாளும் நூல்கள், கருத்துகள், சர்ச்சைகள் என பல கோணங்களிலிருந்தும் வள்ளுவனையும் குறளையும் ஆராய்ந்து தொகுத்து எழுதப்பட்டுள்ள நூல் இது.

திருவள்ளுவர் கால நிர்ணயம் பற்றிய ஆராய்ச்சியில், பெரும்பாலான நேரங்களில், அறிவியல் பூர்வமாக சிந்திக்கவில்லை என்பது இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ள தமிழறிஞர்களின் கருத்துகளிலிருந்து தெரிகிறது.

குறள் ஆராய்ச்சியும் அது தொடர்பான சர்ச்சைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும். என்றாலும், அது அறிவியல் அடிப்படையில் நடைபெற வேண்டும். அறிவுத் தேடலுக்கு எல்லையேது? ஆராய்ச்சிக்கு முடிவும், கரையும் ஏது?

நூலாசிரியர் மிகுந்த முயற்சியெடுத்து, பாடுபட்டு இதை உருவாக்கியிருக்கிறார். திருக்குறள் ஆர்வலர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய நூல் இது என்றால் மிகையல்ல.

(நன்றி: தினமணி)

திருவள்ளுவர் – ஒரு விரிவான வரலாற்றுத் தேடல்
ஜனனி ரமேஷ்
பக்.344
விலை – ரூ.375
கிழக்கு பதிப்பகம், சென்னை- 14

இணையம் மூலம் இங்கு வாங்கலாம்.

தொலைபேசி மூலம் ஆர்டர் செய்ய – 044-49595818, +91 94459 01234, +9
1 9445 97 97 97

2 Replies to “திருவள்ளுவர் – ஒரு விரிவான வரலாற்றுத் தேடல் : புத்தக அறிமுகம்”

  1. வள்ளுவம் குறி கூறும் வர்க்கம். இன மத சம்பிரதாயங்களில் இவர்களின் வரும் பொருள் உரைத்து குறி கூறி குறைகளை நிவர்த்திக்கும் பங்கு அதிகம். இவர்களில் பலர் சமணம் சீக்கியம் பௌத்தம் என பல மதங்களில் தோன்றியவர்கள். அவர்களிடையில் தோன்றிய சமணர் வள்ளுவர். இவரது குறட்பாக்களில் சமண போதனைகள் அங்கங்கே சிறுக சிறுக அள்ளி தெளிக்கப்பட்டிருக்கும். இவரது காலம் மதுரை கடை தமிழ் ச்சங்க காலம்.

  2. வள்ளுவர் யோகியல்ல.ரிஷியோ அல்லது ஞானியோ அல்ல.ஆனால் மிக சிறந்த உலக அறிவியல் மேதை அதற்கேற்ற அவரது உருவம் வேறு. இத்தகைய காலம் போற்றும் குறட்பாக்களை அவரது வாழ்வில் கிடைத்த பட்டறிவின் காரணமாக
    குறித்தை வைத்து சென்றுள்ளார்.
    சமணர் தோற்றம் இவரது உருவம் முக தோற்றத்திற்கு மாறானது.அவரது சிதறல் கருத்துக்களை நூல் வடிவில் ஓலைச் சுவடிகளில் தொகுத்தவர் அவரது உருவம் அறியாதவர்.அதை முதன் முதலில் அச்சில் ஏற்றியவர் திருவள்ளுவர் இப்படித்தான் இருந்தார் என கற்பனையில் உருவத்தை வரைந்து அச்சில் ஏற்றி விட்டார். இப்படி ஒரே மூச்சில் 1333 குறட்பாக்களை எழூத இயலாது. அதனை செய்தால் அவரது மற்ற வேலைகள் என்னானது. வருமானம் தொழில் குடும்பம் பிள்ளைகள் இனம் என பலவகை இணைவுகளின்றி தனி மனிதனாகவா வாழ்ந்தார். அவரது சிந்தனையில் எழுந்த கருத்து க்களை நூல் வடிவாக்கிய அறிவாளிகள் அவரது பின்புல விவரங்களை கவனிக்க தவறியுள்ளது திருவள்ளுவருக்கே மனத்தாங்கல் ஏற்பட்டு இனி மனித ரிடை வாழ்ந்து பயனில்லை என நினைத்து தனியாக போய் கடலில் நின்று தவம் செய்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *