வேதகால பாரதம் – புத்தக அறிமுகம்

வேத கால பாரதம்
பாளாசாஸ்த்ரி ஹரிதாஸ் (மராத்தி : மூலநூல்)
எஸ்.எஸ். ஆப்தே (ஆங்கில மொழிபெயர்ப்பு)

தமிழில்: B.R.மகாதேவன்
அல்லயன்ஸ் வெளியீடு.

புத்தகத்தை வாங்க: books@alliancebook.com அல்லது +91-44-24641314 மூலம் தொடர்பு கொள்ளவும்.

சுதந்தரம் கிடைத்த காலகட்டத்தில் எழுதப்பட்ட புத்தகம்.

எதிர்கால இந்தியா எந்த விழுமியங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்படவேண்டும்?

உலகின் பழம்பெரும் தேசங்கள், கலாசாரங்கள் எல்லாம் மறைந்தோ வெகுவாக மாறியோவிட்டிருக்கும் நிலையில் பாரதத்தின் ஆன்மா இன்றுவரை உயிர்த்துடிப்புடன் திகழ எது காரணம்?

தொடர்ச்சியான தாக்குதல்களை மீறியும் அந்த ஆன்மா தன்னைத் தற்காத்துக் கொண்டு புத்துணர்ச்சியுடன் மீண்டெழுந்தது எப்படி?

நமது பாரம்பரியம், ஆன்மா எதில் வேரூன்றியிருக்கிறது?

நம் எதிர்காலம் எந்த அஸ்திவாரத்தின் மேல் எழுப்பப்படவேண்டும்?

என்ற கேள்விகளுக்கான ஒரே பதில்:

வேத கால பாரதத்தை மீட்டெடுப்பதே.

அந்த அடிப்படையில் வேத கால பாரதத்தின் தெளிவான அழுத்தமான சித்திரத்தை இந்தப் புத்தகம் மீட்டுருவாக்கித் தந்திருக்கிறது.

வாழ்க்கை குறித்த வேத தத்துவம்
வேத காலத்தில் கல்வி
வேத சமூகத்தில் பெண்களின் நிலை
வேத கால சதுர் வர்ண அமைப்பு
வேத காலத்தில் அரசாட்சி
வேத கால சமிதி மற்றும் சபா
வேத காலத்தில் படைகள்
வேத காலப் போர்களின் இலக்குகள்
ஜாதி அமைப்பும் தொழில் பிரிவுகளும்
வேதப் பொருளாதாரத்தின் செயல்திட்டம் மற்றும் எல்லைகள்.
உலகை வெல்லும் வேத பாரதம்

முதலான தலைப்புகளில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் சுதந்தரத்துக்குப் பின் இந்த தேசத்தைக் கட்டியெழுப்ப முன்வந்தவர்களின் கண்ணில் படாமலே போனது. பெருமளவுக்கு தேச மக்களின் கண்ணிலும் படாமல் இருந்துவருகிறது.

இனியாவது உரியவர்களின் கண்ணில் படவேண்டும்.

ஏனென்றால், ஸ்ரீ அரவிந்தர் சொன்னதுபோல் இந்தியர்களின் எழுச்சி என்பது இந்தியர்களுக்கான எழுச்சி மட்டுமல்ல. இந்தியா எழுச்சி கொள்ளும் என்று சொன்னால் அதன் சனாதன தர்மம் எழுச்சி பெறும் என்று அர்த்தம். இந்தியா மகத்தான தேசமாக ஆகும் என்று சொல்லும்போது அதன் சனாதன தர்மம் மகத்தானதாக ஆகும் என்று அர்த்தம். இந்தியா விரிவடையும் என்று சொல்வது அதன் சனாதன தர்மம் உலகம் முழுவதும் விரிவடையும் என்று அர்த்தம்.

அன்பைப் பரப்பவும் அமைதியைக் கொண்டுவரவும் துப்பாக்கி பீரங்கிகளோடும் வாளோடும் புறப்பட்ட மதங்கள் தமது அராஜகக் கடந்தகாலம் குறித்து துளியும் வருத்தப்படாமல் இருக்கின்றன.

மிகுதியான நிறைகளுடன் குறைவான குறைகளுடன், மையம் அழிந்த அமைப்பாக,
அவரவர் இயல்புக்கேற்ற வாழ்க்கையை
சமூக பொறுப்புணர்வுடன்
பரஸ்பர ஒத்திசைவுடன் வாழச் சொல்லித்தந்த
நம் முன்னோர்கள் வாழ்ந்த நம் கடந்த காலம் என்பது கை நழுவிப் போன பொற்காலம் மட்டுமல்ல;
அதுவே
நாம் சென்றடையவேண்டிய பொன்னுலகமும் கூட.
இந்தப் புத்தகம்
நவீன இருள் சூழ்ந்த
எதிர்காலக் குகையினூடான பயணத்தில் மறுமுனையில் இருக்கும்
ஒளி பொருந்திய பொன்னுலகைச் சென்றடைய உதவும் சிறு கை விளக்காகத் திகழும்.

புத்தகத்தை வாங்க: books@alliancebook.com அல்லது +91-44-24641314 மூலம் தொடர்பு கொள்ளவும்.

இப்புத்தகத்திற்கு காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் அளித்த ஆசியுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *