குடும்ப அரசியல் ஜனநாயகத்துக்கு ஆபத்து – பிரதமர் மோடி

26.11.2021 ந் தேதி அரசமைப்புச் சட்டம் , அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தினத்தை நினைவுகூறும் வகையில் அரசமைப்புச் சட்ட தின விழா நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட 14 கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. இவர்களின் புறகணிப்பு அரசமைப்புச்சட்டத்திற்கு கொடுத்த மரியாதை. நிகழ்வில் பிரதமர் மோடி பேசியதை பின்னர் விமர்சனம் செய்யும் கட்சிகள் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதற்கு முழு விளக்கம் அளிக்கவில்லை. 1949க்கு பின்னால் மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்கள் செய்ததது என்பதை தற்போது சற்றே பின்னோக்கி பார்க்க வேண்டும்.

குடும்ப அரசியல் குறித்து மோடி தெரிவித்த கருத்துக்கு , ஆனந்த் சர்மா பத்திரிக்கையாளர்களிடம் , மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் பா.ஜ.க.வுக்கு எந்தப் பங்கும் இல்லை. சுதந்திரத்துக்காக போராடியவர்கள் அனைவரும் காங்கிரஸைச் சார்ந்தவர்களே. சுதந்திரப் போராட்டத்தில்பங்கேற்ற தலைவர்களின் தியாகத்தை மக்களின் நினைவிலிருந்து அழித்து, வரலாற்றை மாற்ற பா.ஜ.க. முயற்சித்து வருகிறது என கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் கூறவில்லை. மேலும் வேடிக்கையாக ஒன்றை குறிப்பிட்டுள்ளார், சுதந்திரம் பெற்றது முதல் 2014 வரை ஜனநாயகம் வலுவடைந்தது, அதன் காரணமாகவே மோடி பிரதமரானார் என்றும் கூறி ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் எவ்வாறு இருந்தது என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். 1950-ல் அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நடைபெற்றது. மேற்படி தேர்தலில் தாண்டன் வெற்றி பெற்றார். இவரது வெற்றி நேருவுக்கு பிடிக்கவில்லை. இவர் செய்த செயல்பாடு, இந்து-முஸ்லீம்களுக்கு இடையே சமாதானத்தை நாடுடம் கொள்கையே இந்தியாவுக்கு தேவை என நேரு நம்பினார். தாண்டனை பிரதமராக இருக்கும் கட்சிக்கு தலைவராகத் தேர்ந்தெடுப்பது உலகுக்கு தவறான அறிகுறிகளைத் தெரிவிக்கும் என நேரு நினைத்தார் ( ஆதாரம் இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு ராமச்சந்திர குஹா பக்கம் -210 )

தாண்டன் வெற்றி பெற்றார் என தெரிந்தவுடன், ராஜாஜிக்கு எழுதிய கடிதத்தில், அத்தேர்தல் நான் ஆட்சியிலோ காங்கிரஸ் கட்சியிலோ இருப்பதை விட தாண்டனின் தேர்வு முக்கியமானது என்பதற்காகன மிகத் தெளிவான அடையாளமாகி விட்டது. காங்கிரஸ் கட்சியிலும் ஆட்சியிலும் என்னுடைய உபயோகம் முற்றிலும் தீர்ந்த போய் விட்டதாக ஒவ்வொர் உணர்வும் சொல்கிறது என்று எழுதினார். மேலும் நான் உடல் ரீதியாகவும் மனத்தளவிலும் முழுதுமாகக் களைத்துப் போய்விட்டேன். வரும் காலங்களில் நான் முழு நிறைவுடன் செயலாற்ற முடியும் என நினைக்க வில்லை என்றும் எழுதினார். இது தான் காங்கிரஸ் கட்சியின் ஜனநாயகமா என்ற கேள்வி எழுகிறது.

மேலும் தாண்டனை பதவி விலக நேரு கையாண்ட தந்திரம், மதவாதமும் பழம் பெருமைவாதமும் காங்கிரஸ்க்குள் ஊடுருவி, சில சமயங்களில் அரசின் கொள்கையையும் பாதிக்கிறது என்று தன் வருதத்தைத் தெரிவித்தார். 1950-ல் நாடு விடுதலை பெற்று மூன்று ஆண்டு முடிவதற்குள் மதவாதம் காங்கிரஸ் கட்சிக்குள் ஊடுருவியது என்ற குற்றச்சாட்டே, தாண்டன் தானக முன் வந்து காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது தான் நோக்கமாகும். இது தான் காங்கிளரஸ் கட்சி செயல்படுத்திய ஜனநாயமாகும்.

காங்கிரஸ் கட்சியின் ஜனநாயகத்திற்கு மற்றொரு சம்பவம். நாடு விடுதலை பெறுவதற்கு முன் 1946-ல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் நடைபெற்றது. The Pradesh Congress Committees 15 in number, alone had the power to nominate and elect a president. Gandhi had indicated his preference for Nehru 9 days before the last date of nomination of 29 April 1946 on which date the Congress Working Committee met to consider the nomination send by PCC’s . Not a single PCC nominated Nehru 12 of the 15 PCCs nominated Sardar Pate. 3 of the 15 PCCs did not nominate any one Gandhi asked Patel to withdraw. Patel complied without a protest or delay . That cleared the ground for Nehru. இது தான் காங்கிரஸ் கட்சியின் ஜனநாயகம். இந்த ஜனநாயகத்தை தான் ஆனந்த சர்மா குறிப்பிடுகிறாரா? என்பது தெரியவில்லை. நேருவின் அணுகுமுறையால் கோபமடைந்த ராஜேந்திர பிரசாத் அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் நேருவை அநீதியானவர், ஜனநாயகமற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார். நேருவுக்கு அனுப்பும் முன் அந்தக் கடிதத்தை சர்தார் வல்லபாய் படேலிடம் பகிர்ந்து கொண்டார் பிரசாத். பட்டேல் கடிதத்தை எடுத்து கோபமாக செயல்பட வேண்டாம் என்று பரிந்துரைத்தார். கருத்து வேறுபாடுகளை கட்சி மன்றத்தில் தெரிவிக்கும்படி அறிவுறுத்தினார் ( . Furious with Nehru’s attitude, Rajendra Prasad wrote a letter to him. In the letter, he described Nehru as unjust and undemocratic. Prasad shared the letter with Sardar Vallabhbhai Patel before sending it to Nehru. Patel took the letter and suggested him not to act angrily. He advised him to raise his disagreement in party’s forum. )

காஷ்மீர் விவகாரத்தில் மந்திரிசபையின் ஆலோசனையில்லாமலே, தன்னிச்சையாக செயலாற்றியவர் நேரு. ஆட்சியில் உள்ள ஒரு ஜனநாயகவாதி எந்த பிரச்சினையானாலும் மந்திரி சபையில் விவாதிக்க வேண்டும் என்ற ஜனநாயக நெறி கூட தெரியாமல் விளையாடினார். உள்துறை அமைச்சர் சர்தார் பட்டேல் , திரு.டி.பி.மிஸ்ராவுக்கு எழுதிய கடிதத்தில், அவர் (நேரு) சமீபத்தில் பல விஷயங்களைச் செய்தார். அது எங்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. காஷ்மீரில் அவரது செயல்கள் உணர்ச்சிப் பைத்தியக்காரத்தனமான செயலாகும். மேலும் இந்த விஷயங்களைச் சரி செய்வதற்கு நம் மீது பெரும் ஆழுத்தத்தை ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டதிற்கு நேரு கொடுத்த மரியாதை எவ்வாறு இருந்தது என்பதையும் பார்க்க வேண்டும். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் நேரு உறுதியாக இருந்தார். இந்தப் பின்னணியில், 1952 ஆம் ஆண்டு ஜூன் 26 மற்றும் ஆகஸ்ட் 7 ஆம் தேதிகளில் லோக்சபாவில் 370வது பிரிவு மீண்டும் விவாதிக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும், ஆனால் ஜே&கே மக்களின் அபிலாஷைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வாதிட்டார். 1952 இல் LS இல் பேசும் போது, ​​நேருஜி கூறினார்: “உங்கள் அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது என்பது முக்கியமல்ல என்றும் ஆனால். நான் நமது அரசியலமைப்பை மதிக்கிறேன். காஷ்மீர் மக்கள் விரும்பவில்லை என்றால், , அது அங்கு செல்லாது. ( . While speaking in the LS in 1952, Nehruji said: “I say with all respect to our Constitution that it just does not matter what your Constitution says if the people of Kashmir do not want it, it will not go there. Because what is the alternative? The alternative is compulsion and coercion. We have fought the good fight about Kashmir on field of battle (and)… in many a chancellery of the world and in the United Nations, but, above all, we have fought this fight in the hearts and minds of men and women of the J&K.”)
என வெளிப்படையாக கூறியவர் தான் ஜனநாயக காவலரா?

ஜனநாயக சிற்பி நேருவின் முரண்பட்ட செயல்பாடு, அரசியல் ஷரத்து 370 கொண்டு வரும் முன் நடந்த சம்பவம், அரசியல் சட்டத்தின் வரைவுக் குழுவின் தலைவராக இருந்த பி.ஆர்.அம்பேத்கரிடம் கலந்து ஆலோசிக்குமாறு ஷேக் அப்துல்லாவுக்கு நேரு அறிவுறுத்தினார். அம்பேத்கர், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து குறித்து அப்துல்லாவுடனான கருத்துக்கு உடன்படவில்லை. அதைத் தொடர்ந்து, சட்டப்பிரிவு 370ஐ உருவாக்கும் பொறுப்பை தனது அமைச்சரவையில் உறுப்பினரான என் கோபாலசாமி அய்யங்காருக்கு வழங்க நேரு முடிவு செய்தார். நாடாளுமன்றத்தில் அரசியல் ஷரத்து 370 பற்றிய விவாதம் நடக்கும் போது, நேரு வெளி நாட்டிற்கு ஏன் பயனமானார் என்பதை காங்கிரஸ் கட்சி என்ன விளக்கம் கொடுக்க போகிறது.

பிரதம மந்திரி ,உள்துறை அமைச்சரின் நியாயமான நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான கருத்தை கூட மதிக்காதவர் நேரு, Nehru left for America. Ayyangar complained to Sardar Vallabhbhai Patel about the troubled situation. Patel responded by saying that every attempt to make Article 370 a part of the Constitution was under the guidance of Nehru. Patel conveyed to Ayyangar: “In my view, Jammu and Kashmir should become an integral part of India, any deviation from this stand will seriously threaten the stability and integrity of India in the coming years.” இவ்வாறு கூறிய பின்னரும் நேரு சர்வாதிகரமாக அரசியல் ஷரத்து 370 கொண்டு வரப்பட்டது. இது தான் காங்கிரஸ் கட்சியின் ஜனநாயகமாகும்.

நேருவின் ஜனநாயகத்தை பற்றி ராஜேந்திர பிரசாத், நேருவின் அணுகு முறையால் கோபமடைந்த ராஜேந்திர பிரசாத் அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் நேருவை அநீதியானவர், ஜனநாயகமற்றவர் என்று குறிப்பிட்டுள்ளார். நேருக்கு கடிதத்தை அனுப்பும் முன் சர்தார் வல்லபாய் படேலிடம் பகிர்ந்து கொண்டார். பிரசாத்திடம் சர்தார் பட்டேல் கடிதத்தின் மீது கோபமாக செயல்பட வேண்lடாம் என்று பரிந்துரைத்தார். இந்த கடிதம் நேருவின் ஜனநாயகத்தைப் பற்றிய கருத்தாகும். இதை தான் ஆனந்த் சர்மா புகழுகிறார்.

நேருவின் ஜனநாயகம் எப்படிப்பட்டது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். 1947 நவம்பர் மாதம் 29-ந் தேதி ஐ.நா.சபையின் பிரிவினை திட்டத்தின் படி பாலஸ்தீனம் இரண்டாக பிரிக்கப்பட்டு, இஸ்ரேல் என்ற ஒரு நாடு உருவாகியது. ஐ.நா.சபையில் இஸ்ரேல் என்ற நாடு உருவாக 33 நாடுகள் ஆதரவாகவும், 12 நாடுகள் எதிராகவும், 10 நாடுகள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமலும் நடைபெற்றது. இஸ்ரேல் நாடு உருவாக எதிர்ப்பு தெரிவித்த 12 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். 12-ல் 10 நாடுகள் முஸ்லீம் நாடுகள். ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாத நாடு சீனா. 1949-ல் சீனாவுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என கோரிய நாடுகளில் முதன்மையான நாடு இந்தியா, ஆனால் 1950-ல் இஸ்ரேலுக்கு அங்கீகாரம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்த நாடு இந்தியா. இந்த முடிவை எடுக்க எந்த மந்திரி சபையில் ஆலோசனையை நடத்தினார் நேரு என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

1969-ல் நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் திரு. நீலம் சஞ்சீவ ரெட்டியை எதிர்த்து வி.வி.கிரிக்கு மனசாட்சிப்படி ஓட்டளிக்க வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற சட்ட மன்ற உறுப்பினருக்கு கட்டளையிட்ட இந்திரா காந்தி ஜனநாயகவாதியா? இதன் காரணமாக அவரை விட மூத்த காங்கிரஸ் தலைவர்களை கட்சியிலிருந்தும் , அதிகாரத்திலிருந்தும் வெளியேற்றியவர் ஜனநாயகவாதியாக சித்தரிப்பது வேடிக்கையானது.

இவரின் ஜனநாயக கடமையை பற்றியது, 1971-ல் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று குடியரசு தலைவர் வி.வி கிரியிடம் கேட்டுக் கொண்டார். இதை ஏற்க மறுத்த வி.வி.கிரி, அமைச்சரவை கூடி உங்கள் ஆலோசனையை விவாதித்ததா? அப்படி என்றால் அமைச்சரவையின் பரிந்துரை எங்கே? என திருப்பி கேட்டார். இதன் காரணமாக தான் அமைச்சரவை கூடி வி.வி.கிரிக்கு பரிந்துரை செய்தது. ஆகவே இந்த சம்பவமே இந்திரா காந்தி ஜனநாயகவாதியல்ல என்பது தெளிவாகும்.

நேருவின் புதல்வி இந்திரா காந்தி, எந்த விவாதமும் நடத்தப்படாமல், சர்வாதிகாரியாக கொண்டு வந்தது அவசர நிலை பிரகடனம். தனது மகனின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொண்டவர். 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவரது தேர்தல் வெற்றியை நிராகரித்து அவர் தேர்தலில் போட்டியிட ஆறு வருடம் தடை விதித்தது. ஆனால் அவரை மக்களவை பதவியிலிருந்து நீக்கவில்லை இந்திரா காந்தி ஜனாதிபதி ஃபக்ரூதின் அலி அகமதுவுக்கு அவசரகால நடவடிக்கையை அறிவிக்க அறிவுறுத்தினார். இந்திய வரலாற்றில் முக்கிய நிகழ்வான எமர்ஜென்சி எனப்படும் அவசரக்கால நடவடிக்கை 1975 ஜூன் முதல் 1977 மார்ச் வரை 21 மாதங்கள் நீடித்தது. இதனால் தேர்தல் மற்றும் அனைத்து மக்கள் உரிமைகளும் தடுத்து நிறுத்தப்பட்டன. மொத்த இந்தியாவும் மத்திய அரசின் ஆட்சியின் கீழ் இருந்தது. அவசரகாலத்தின் போது அனைத்து பத்திரிக்கை வெளியீடுகளும் தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகத்தால் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. இதனால் அரசின் குரலுக்கு எதிராக யாராலும் குரல் எழுப்ப முடியவில்லை. இந்த சர்வாதிகாரி தான் ஜனநாயகவாதியாக காங்கிரஸ் கட்சியினர் சித்தரிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஜனநாயகவாதி மோடி கிடையாது என்பது ஆனந்த் சர்மாவிற்கு தெரிந்தும், தெரியாத மாதிரி நடிக்கிறார்.

மற்றொரு முக்கியமான நிகழ்வு , ஜனநாயக நாட்டில் பொறுப்பில்லாத எவரும் பாதுகாப்பு சம்பந்தமான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என்பது விதியாகும். ஆனால் அந்த விதியை மாற்றியவர் இந்திரா காந்தி. பொற்கோவில் ராணுவ தாக்குதலுக்குப் பழிவாங்கும் வகையில் எங்கிருந்தாவது ஒரு சீக்கியர் இந்திராவை கொல்லலாம் என தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அரசில் எந்த பொறுப்பையும் வகிக்காத ராஜீவ் , இந்திராவின் பாதுகாப்பை வலுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்ட துவங்கினார். அவரது விருப்பத்தின் பேரில் அவருக்கு நெருக்கமான ஆலோசர்களில் இருவர் தங்களது யோசனைகளை தெரிவிக்கவும், , அந்த கலந்துரையாடல்கள் மூலமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை குறித்து ராஜீவிடம் தெரிவிக்கவும் அச்சந்திப்புகளில் கலந்து கொள்வர்கள். அவர்களுக்கு அரசில் எந்த பொறுப்பும் இல்லை என்பதால் முக்கியமான தகவல்கள் பரிமாறப்படும் இந்த மிக ரகசியச் சந்திப்புகளில் கலந்து கொள்ள எந்த உரிமையும் இல்லை. ஆனால் இந்திராவின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன என ராஜீவைத் திருப்திப் படுத்துவதற்காக பாதுகாப்பு காரணங்களையும் மீறி அவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள் எனினும் நிகழ்ச்சிப் பதிவேட்டில் அவர்களது பெயர்கள் இருக்க மாட்டா. இது தான் இந்திரா காந்தியின் ஜனநாயக உணர்வு ( ஆதாரம் நிழல் வீரர்கள் – பக்கம் 124 )

ஆனந்த சர்மா குறிப்பிடும் ஜனநாயகம் எப்படி பட்டது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். எந்த மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முறையாக தேர்வு செய்யப்படவில்லை. டெல்லியின் உத்திரவின் பேரிலேயே நியமனம் நடைபெறுகிறது என்பதும், அதுவும் டெல்லி தலைமைக்கு தலை ஆட்டும் தஞ்சாவூர் மொம்மையாகவே இருக்க வேண்டும் என்பது எழுதபடாத சட்டமாகும்.

குடும்ப அரசியல் – 2004 முதல் 2014ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 30 சதவீத உறுப்பினர்கள் குடும்ப அரசியலை பின்னணியாக கொண்டவர்கள் என்று திரிவேதி அரசியல் தரவு ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் குடும்ப அரசியலை உருவாக்கிய பெருமை காங்கிரஸ் கட்சியை சாரும். இதன் தொடர்ச்சியாக தற்போது 34க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளில் குடும்பத்தின் பிடியில் உள்ளது. மாநில கட்சிகளிலேயே குடும்ப அரசியல் ஓங்கியுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா , தெலுங்கான, பிகார், மகாராஷ்ட்ரா, காஷ்மீர் என குறிப்பிடலாம். மேற்படி மாநிலங்களில் உள்ள மாநில கட்சிகளில் எவ்வாறு குடும்ப அரசியல் கோலோச்சுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

காங்கிரஸ் – 100 ஆண்டுகளுக்கு மேலான கட்சியாக தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டு, குடும்ப அரசியலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் கட்சிகளில் தலையாய கட்சி காங்கிரஸ் கட்சி. 1947-க்கு பி்ன்னால் நேரு குடும்பத்திற்கு கொடுத்த முக்கியத்துவம், கட்சிகளில் உள்ள மூத்த தலைவர்களின் குடும்பங்களுக்கு கொடுக்கப்படவில்லை, என்பது மட்டுமில்லாமல், அவர்களை வளர விடாமல் செய்து காங்கிரஸ் கட்சியின் நேரு வழித்தோன்றல்கள்.

காங்கிரஸ் கட்சி. “ஒரு பிரதமரின் சிதைக்கு இன்னொரு பிரதமர்தான் தீ மூட்ட வேண்டியிருக்கிறது” என்று கவிஞர் கந்தர்வன் ஒரு குறுங்கவிதையில் சொன்னதன் உள்ளடக்கத்தில் ஜவஹர்லால் நேரு உடலுக்கு அவரது மகள் இந்திரா காந்தி இறுதிச் சடங்குகள் செய்தார். பின்னர் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிரதமராகப் பொறுப்பேற்கச் செய்யப்பட்ட அவரது மகன் ராஜீவ் காந்தி இறுதிச் சடங்குகள் செய்தார் என்ற தொடர்ச்சி பற்றிய விமர்சனம் இருந்தது. காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பு, இந்திராவின் மருமகள், ராஜீவ் இணையர் சோனியா காந்தியிடம்தான் இத்தனை ஆண்டுகள் நிலைத்திருக்கிறது. இப்போது அவரது உடல்நிலை காரணமாக, மகன் ராகுல் காந்தியிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்க காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் தயங்கவில்லை.

இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து தேசிய அரசியலில் மட்டுமின்றி , மாநில அரசியலிலும் பல இடங்களில் ஒரு சில குடும்பத்தினர்தான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்தியாவில் மன்னராட்சி முறை ஒழிந்து விட்டது என்று கூறினாலும் , பல நிலைகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் அமைச்சர் எம்.பி., எம்.எல்.ஏ., கட்சிகளின் உயர் பதவிகள் என ஆட்சியிலும், கட்சியிலும் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றனர். இவர்கள் கட்சியைக் குடும்பச் சொத்தாக மாற்றி விட்டதாக இவர்களுக்கு எதிராகக் கடும் விமர்சனங்கள் எழுந்தாலும் , கருணாநிதி போன்றவர்கள் தங்களது பேச்சாற்றலால் சமாளித்து வாரிசுகளுக்கும், உற்றார், உறவினர்களுக்கும் பதவிகளைப் பகிர்ந்தளிப்பதும், தங்களின் சுயநலப் போக்கை மாற்றிக் கொள்வதே இல்லை. ஆட்சி, அதிகாரம் பதவி சுகம் அவர்களை இந்த அளவுக்குக் கொண்டு வந்துள்ளது. இதற்கு சமீபத்திய உதாரணம் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கின் குடும்பத்தில் இருந்து 6வது நபராக தேர்தல் மூலம் பதவியைப் பெற்றுள்ளார் டிம்பிள் யாதவ். முலாயம் சிங் மக்களவை உறுப்பினராக இருந்த போது, அவரது மகன் அகிலேஷ் தான் உத்தரப் பிரதேச முதல்வர். மருமகன் தர்மேந்திர யாதவ், உறவினர் ராம்கோபால் யாதவ் ஆகியோரும் எம்.பிக்களாக உள்ளனர். முலாயமின் சகோதரர் சிவபால் யாதவ் மாநில அமைச்சராக வளம் வந்தவர். குடும்பம் ஒன்று, கட்சி வேறு: மகன், மகள், மருமகள், மனைவி உள்ளிட்டோர் அரசியலுக்கு வருவது இந்தியாவுக்குப் புதிது அல்ல. இதற்கு நேருவின் குடும்பம் சிறந்த உதாரணம். இந்திரா காந்தியின் மருமகளான சோனியா காந்தி தான், 2004 முதல் 2014 வரை மத்திய அரசை இயக்கும் சக்தியாக உள்ளார். மற்றொரு மருமகள் மேனகா காந்தி, காங்கிரஸின் எதிரணியான பாஜகவில் உள்ளார். இவர்களது பிள்ளைகள் ராகுல் காந்தி, வருண் காந்தி ஆகியோரும் எம்.பிக்கள்தான். முன்னதாக 2004ம் ஆண்டில் ராகுலுக்கு எம்.பி.சீட் வழங்கப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப் பட்டபோது, “ஏன் எங்கள் கட்சிக்கு எதிராக மட்டும் குடும்பம் – அரசியல் என்ற கேள்வியை எழுப்புகிறீர்கள். மற்ற கட்சியை விட்டுவிடுகிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார் சோனியா.


குடும்ப அரசியலுக்கு எந்த மாநிலமும் விதிவிலக் அல்ல என்பதுதான் சமீபகால இந்திய அரசியல் சூழ்நிலை. பீகாரில் தனக்கு அரசியல் சிக்கல் ஏற்பட்ட போது தனது மனைவியை முதல்வராக்கி அரசியலுக்கு அழைத்து வந்தார் லாலுபிரசாத்.. தமிழகத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன்கள் ஸ்டாலின், அழகிரி என குடும்பத்தினர் பலர் அரசியலில் உள்ளனர். கருணாநிதியின் மகள் கனிமொழியும் எம்.பி.தான்.
பாமகவில் டாக்டர் ராமதாஸை அடுத்து கட்சியில் முக்கியத்துவம் பெற்றுள்ளவர் அவரது மகன் அன்புமணி.
ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு, அந்த மாநில மக்களின் செல்வாக்கை நீண்ட காலம் பெற்றிருந்த எ.டி.ராமராவின் மருமகன். கேரள முன்னாள் முதல்வர் மறைந்த கே.கருணாகரனின் மகன் முரளிதரன் தந்தை வழியில் அரசியலுக்கு வந்தவர். முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகௌடாவின் மகன் எச்.டி. குமாரசாமி தான் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர். மற்றொரு மகன் எச்.டி. ரேவண்ணாவும் அரசியலில்தான் உள்ளார்.
தேசியவாதக் காங்கிரஸ் தலைவரும், மத்திய வேளாண்துறை அமைச்சருமான சரத்பவார் தனது மகள் சுப்ரியா சுலேவை எம்.பி.யாக்கி அழகு பார்த்தார். மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜீத் மேற்கு வங்கத்தில் எம்.எல்.ஏ.வாக உள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் சங்மாவின் மகளும் எம்.பி.தான்.
காஷ்மீரில் பரூக் அப்துல்லாவின் வாரிசு, தில்லியில் முதல்வர் ஷீலா தீட்ஷித்தின் வாரிசு, ஹரியாணாவில் முதல்வர் பூபிந்தர் சில் ஹுடாவின் வாரிசு, ஆந்திராவில் காங்கிரஸ் முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டியின் வாரிசு, மகாராஷ்டிரத்தில் பால்தாக்கரேவின் மகன், பேரன், அதே மாநிலத்தில் காங்கிரஸின் பிருதிவிராஜ் சவான் – என வாரிசு அரசியலை வழி நடத்தாத அரசியல்வாதிகளே இல்லை.
தேசிய, மாநில அளவில் என்று மட்டுமல்லாது உள்ளூர் அளவிலும் மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோரும் தங்கள் வாரிசுகளை தங்களது அரசியல் வாரிசுகளாகத்தான் வளர்த்து வருகின்றனர். இதற்கு மாநில அளவில் ஏராளமான உதாரணங்களைக் கூறலாம். நாட்டு நலனுக்காக அரசியலுக்கு வந்தவர்கள் போய், தங்கள் வீட்டு நலனுக்காக வாரிசுகளை அரசியலுக்கு அழைத்து வருவதே இப்போதைய அரசியல்வாதிகளின் முதன்மைப் பணியாக உள்ளது.

“பல மாநிலங்கள், அங்கேயெல்லாம் செல்வாக்குள்ள தலைவர்கள் என்றிருப்பதால், நேரு குடும்ப வாரிசாக வருகிறவர்களிடம் கட்சியை ஒப்படைக்காவிட்டால் யாரும் கட்டுப்பட மாட்டார்கள், நீயா நானா என்ற சண்டைதான் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும்” என்று எனது நண்பரான காங்கிரஸ் இளம் தலைமுறைத் தலைவர் ஒருவர் கூறினார்.

தமிழக நிலவரம் தமிழகத்தில் தலைவரின் வாரிசு என்ற முத்திரையோடு அரசியலுக்கும் கட்சிப் பதவிக்கும் அரசு அதிகாரத்துக்கும் வந்தவர் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின். தொடக்கத்திலிருந்தே கட்சியின் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுவந்திருப்பவர் என்ற தகுதியையும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. கனிமொழி அக்கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருப்பது, மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்படுவது ஆகியவற்றின் பின்னணியில், அவரது வாசிப்புகள், வெளிப்பாடுகள் ஆகியவற்றுக்கு முன்னதாக அவர் கலைஞரின் மகள் என்ற அடையாளம் இருப்பதை மறுப்பதற்கில்லை. மற்றொரு மகன் மு.க.அழகிரி விவகாரம் மன்னர் கால வாரிசுரிமைச் சண்டையைத்தான் நினைவூட்டுகிறது. இன்று ஸ்டாலினின் மகன் உதயநிதி கட்சியின் ஆர்ப்பாட்டக் களத்தில் இறக்கிவிடப்பட்டிருக்கிறார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் அய்யா, சின்ன அய்யா குடும்ப சார்பும் இங்கே குறிப்பிடப்பட வேண்டியதுதான். இதுபோன்ற கட்சிகளில் இத்தகைய வாரிசுத் தகுதியைத் தாண்டி மற்றவர்கள் ஜனநாயகபூர்வமாகத் தலைமைப் பொறுப்புக்கு வந்துவிட முடியுமா? கட்சியின் முக்கிய இடங்களில் இருப்பவர்கள்கூட மற்ற உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டு, உட்கட்சி ஜனநாயகம் செயல்படுத்தப்பட்ட வந்தவர்கள் அல்ல, தலைமைகளால் பொறுக்கி எடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டவர்களே.

ஆனால், இவ்வாறு வாரிசு என்ற தகுதியால் கட்சிப் பதவிகளுக்கு, ஒருவேளை ஆட்சியதிகாரத்தில் அமர்கிற வாய்ப்புக் கிடைத்தால் அரசுப் பதவிகளுக்கு வருவது குறித்து, அதை விமர்சிக்கிறவர்கள்தான் கவலைப்படுகிறார்களேயன்றி, அந்தக் கட்சிகளின் அடுத்த மட்டத் தலைவர்களோ உறுப்பினர்களோ பொருட்படுத்துவதில்லை. உள்ளுக்குள் குமுறல் இருக்கக்கூடும், அதைக் காட்டிக்கொள்வதில்லை. தங்களது சம காலத்தவர் அல்லது வட்டாரத்தில் தங்களது ஆளுமைக்குப் போட்டியாகக் கருதுபவர் வசம் தலைமைப் பொறுப்பு போவதைவிட, வாரிசுகளின் கையில் அது தரப்படுவதை ஏற்றுக்கொள்கிற சமரச உளவியல்கூட இருக்கக்கூடும். வாரிசு அடிப்படையில் அரசியலுக்கு வந்தது பற்றிக் கேட்டால் இக்கட்சிகளின் தலைவர்கள் சொல்கிற பதில், அதிலே என்ன தவறு இருக்கிறது என்பதல்ல, மாறாக அந்தக் கட்சியில் அப்படி நடக்கவில்லையா, இந்தக் கட்சியில் அப்படி நடக்கவில்லையா என்று கேட்டுப் பதுங்குவதாகவே இருக்கும்.

அஇஅதிமுக, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தோர், தங்கள் தலைவருக்குக் குடும்பம் என இல்லாததன் காரணமாகவே அவர்கள் சொத்துச் சேர்க்க வேண்டிய தேவையில்லை என்று சித்திரித்து ஊழல் குற்றங்களுக்கும் இதர பல அத்துமீறல்களுக்கும் திரையிட முயன்றதையும் நாடு கண்டுவந்திருக்கிறது.

குடும்பமே கட்சியாகும் நிலை ஆக, பெரும்பாலான கட்சிகளில் குடும்பச் செல்வாக்கு அரசியல் இருக்கிறது – கம்யூனிஸ்ட் கட்சிகளையும் இதர இடதுசாரி கட்சிகளையும் சில முற்போக்கான கட்சிகளையும் தவிர. கவனத்துக்குரியது என்னவெனில் இக்கட்சிகள், குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள், குடும்பத்தினர் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்துவதுதான். ஒரு குறிப்பிட்ட தலைவர் அல்லது மூத்த தோழர் பற்றிக் கூறுகிறபோது அவரது குடும்பமே கட்சிக் குடும்பம் என்று அடையாளப்படுத்துவதில் பெருமை கொள்வது கம்யூனிஸ்ட் இயக்கம். அவ்வாறு அடையாளப்படுத்தப்படுகிற தோழர்கள் அதற்காகப் பெருமிதம் கொள்வது ஒருபுறமிருக்க, தங்களது குடும்பத்தினர் பற்றி அவ்வாறு சொல்கிற வாய்ப்பு அமையவில்லையே என்று பல தோழர்கள் உறுத்தலுணர்வுக்கு உள்ளாவதும் உண்டு.

வாரிசு அரசியல் என்று இதை தான் சொல்கிறோம். மத்திய அரசின், பாராளுமன்ற மேம்பாட்டு நிதியின் கீழ் தென் சென்னை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நிதியில் கட்டப்பட்ட கட்டடம். இதை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தி நகரில் திறந்து வைத்தது ஏன்? வாரிசு அரசியல் என்று இதை தான் சொல்கிறோம். இதற்கு மேலும் வாரிசு அரசியல் குறித்து பேசுமா தி மு க?

நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத்தான் தேர்தல்களில் மக்களும் தேர்ந்தெடுக்கிறார்கள் என்கிறபோது, மக்கள் செல்வாக்குபெற்ற தலைவர்களாக அந்தக் குடும்பத்தினர் மட்டுமே இருந்துவருகிறார்கள் என்பதுதான் உண்மை. எனவே, நேரு குடும்பத்தைத் தாண்டி மக்கள் செல்வாக்குபெற்ற தலைவர்கள் என்று யாரும் காங்கிரஸ் கட்சியில் கிடையாது. என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கோபண்ணா தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியில் தேர்தல் மூலமாகத்தான் எல்லோருமே பொறுப்புகளுக்கு வருகிறார்கள் என்றாலும்கூட, ஒரு முழுமையான தேர்தலை இன்னும் கட்சிக்குள் நடத்த முடியவில்லை என்பதும் உண்மை. ஏதோவொரு கருத்தொற்றுமையினால் கட்சியின் பொறுப்புகளுக்கு தலைவர்கள் நியமனம் ஆகிவிடுவார்கள்.

ஆம், அரசியல் என்பது ஒரு சாராருக்கு என நேர்ந்துவிடப்பட்டதாக இருக்க முடியாது. அரசியல்வாதிகள் தனிப்பட்ட பிறவிகள் என்று கருதி மற்றவர்கள் மௌனப் பார்வையாளர்களாக இருப்பது அரசியல் சீர்குலைவுக்கான ஒரு முக்கியக் காரணம். அரசியல் பங்கேற்பு என்பது, எந்தக் கட்சியின் சின்னத்துக்கு நேராகப் பொத்தானை அழுத்தினோம் என்பது மற்றவர்களுக்குத் தெரியாமல் வாக்குச் சாவடிக்குப் போய்வருவதோடு நிற்பது சுயநலக் கூட்டங்களுக்குப் பெரிய வாய்ப்பாக இருக்கிறது. இப்படிச் சொல்வது ரகசிய வாக்குப் பதிவு முறை கூடாது என்ற பொருளில் அல்ல. அரசியலைச் சிலருக்கு மட்டுமே உரியதாக ஒதுக்கிவிட்டுத் தாங்கள் ஒதுங்கியிருக்கிற மனநிலை சரிதானா என்று மக்களிடம் கேட்பதற்காகவே.

சில அரசியல் குடும்பங்களில் அண்ணன் ஒரு கட்சி என்றால் தம்பி இன்னொரு கட்சியில் இருப்பார். அதற்குக் காரணம், கொள்கை வேறுபாட்டால் அல்ல, எந்தக் கட்சி அதிகாரத்துக்கு வந்தாலும் குடும்பத்தின் செல்வாக்கும் வருவாயும் அமோகமாய்த் தொடரும் என்ற கணக்கில்தான். வீட்டுக்குள் ஏற்பட்ட யார் பெரிய ஆள் என்ற குடும்ப அரசியலின் தொடர்ச்சியாகவும் இது அமையக்கூடும். அது போன்ற சுயநலமிகளை அரசியல் ஈடுபாட்டுக்கான முன்னுதாரணமாகக் கொள்ளத் தேவையில்லை.

அரசியலைத் தூய்மைப்படுத்துவது பற்றிப் பலரும் பல கோணங்களில் பேசுகிறார்கள். அரசியலின் தூய்மைக் கேட்டுக்குச் சான்றாக அவர்கள் ஆட்சியாளர்களின் ஊழல் வேட்டைகளை மட்டுமே சுட்டிக்காட்டுகிறார்கள். ஊழல் ஒரு மோசமான கேடு என்பதை மறுக்க முடியாது என்றாலும், மக்களின் மத உணர்வுகளைப் பயன்படுத்துவது, சாதிய அடையாளங்கள் பற்றிச் சொல்லி உசுப்பிவிடுவது, சிலரது ஏகபோக லாபக்குவிப்புக்காக ஒட்டுமொத்த தேசமே சுரண்டப்படுவது போன்ற இன்னும் மோசமான கேடுகள் இருக்கின்றன. இந்தக் கேடுகள் அனைத்தையும் களைந்து அரசியலை உண்மையிலே மக்கள் தொண்டுக்கான மையக் களமாக மாற்றுவதற்கு உத்தரவாதமான ஒரு வழி குடும்பம் குடும்பமாக அரசியலுக்கு வருவதுதான்.

மாற்றுப் பண்பாடு பற்றிப் பேசுகிறவர்கள் இதையும் சேர்த்துதான் பேச வேண்டும். தகப்பனோ, தாயோ இயக்கத்தில் முன்னணி இடத்தில் இருப்பதால் வாரிசுகளுக்கு ஓர் எளிதான அறிமுகம் கிடைத்துவிடுவது உண்மை. அதற்குப் பிறகு அவர்களே முன்னணி இடத்துக்கு வருவது அவர்களது கொள்கை உறுதி, ஈடுபாடு, உழைப்பு, அர்ப்பணிப்பு, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில்தான் அமைய வேண்டும். தலைவரின் வாரிசு என்பதே முழுத் தகுதியாகிவிடக் கூடாது.

One Reply to “குடும்ப அரசியல் ஜனநாயகத்துக்கு ஆபத்து – பிரதமர் மோடி”

  1. இந்துமதம் என்பது விஞ்ஞானமும் ஆன்மீகமும் வானவியலும் மருத்துவமும் கலந்த ஒரு விஷேஷமான ஞானமார்க்கம்

    ஒவ்வொரு காலநிலைக்கும் மனிதரை அது நலம்பெற வைக்கவும் அந்த நலத்தில் இறைவனை தேடவும் பல வழிகளை வைத்திருக்கின்றது, மார்கழி மாதமும் அதில் ஒன்று

    மாதங்களில் பீடுடைய மாதம் அது

    இந்த மாதம் மாரிகாலம் கழியும் மாதம் என்பதால் மார்கழி என்றும் , “மார்க்க சீர்ஷம்” எனும் சமஸ்கிருத வார்த்தை அதாவது “மேலான வழி” எனும் பொருளில் வரும் மார்க்க வழி எனும் சொல்லே மார்கழி ஆயிற்று என்றும் சொல்வார்கள்

    மாதங்களில் அது சைவருக்கும், வைணவருக்கும் மேலான மாதம். சைவர்கள் தேவர் வரும் மாதம் என திருவெம்பாவை பாடி கொண்டாடுவார்கள். வைணவருக்கு கண்ணணே “அர்ஜூனா, மாதங்களில் நான் மார்கழி” என சொன்னபின் என்ன மாற்று கருத்து இருக்க முடியும்?

    ஒரு வகையில் இந்த மாதம் பண்டைய உலகில் கடவுளுக்கு அர்பணிக்கபட்ட மாதமாகவே இருந்திருக்கின்றது
    மிக பெரும் பழமை மதங்களான கிரேக்கம் மற்றும் ரோமை மதங்களில் இக்காலகட்டம் கடவுளுக்கான கொண்டாட்ட மாதமாக இருந்திருக்கின்றது, மிக சரியாக கிறிஸ்து பிறப்பினை அதில் புகுத்தியது கிறிஸ்தவம்

    ஆம் இயேசு இந்தமாதம் இந்த தேதியில் பிறந்தார் என்பதற்கு ஆதாரமில்லை, எல்லாம் ஈஸ்டர் திருவிழாவில் இயேசு உயிர்ப்பை கலந்தது போல, ரோமர் கொண்டாட்டத்தில் புகுத்தபட்டது கிறிஸ்மஸ்

    இயேசு இரவில் பிறந்தாரா? அதிகாலையில் பிறந்தாரா? என்பது யாருக்கும் தெரியாது, மிக சரியான பிறந்த நேரமும் காலமும் யாருக்கும் தெரியாது

    அந்த ரோமை மதத்திலும், கிரேக்க மதத்திலும் இந்துக்களின் சாயல் இருந்தது, அதிகாலையில் துயில் எழுப்புதல் பாடலும் இன்னும் பலவும் இருந்தன. இந்துக்களின் மார்கழி காட்சிகள் இருந்தன‌

    அதில் மிக சரியாக கிறிஸ்து பிறப்பினை உட்சொருகிய கிறிஸ்தவம், அதிகாலை வழிபாடு, வானவர் வாழ்த்து இன்னபிற காட்சிகளை செய்து தன் வசபடுத்திகொண்டு ரோமை ,, கிரேக்க மதங்களை ஒழித்தது, அந்த மாதத்தில் கிறிஸ்துமஸ் மட்டும் நிலைத்தது.

    மார்கழி பஜனை போன்ற ஊர்வலமும் பாடல்களும் கிறிஸ்மஸ் கேரல்களாக மாறின , பைபிளில் அப்படி ஒரு ஏற்பாடும் போதனையும் இல்லவே இல்லை, யூதனுக்கே இல்லை

    மார்கழி பஜனை போன்ற சாயல் கொண்ட ரோம வழிபாடு கிறிஸ்துமஸ் கேரல்களானது. ரோமை மதம் இந்து மத சாயலே

    ரோமையர்கள் அதை கிரேக்கரிடம் இருந்து பெற்றார்கள், கிரேக்கர்கள் அதை அலெக்ஸாண்டர் இந்தியா பக்கம் வந்த காலங்களில் பெற்றார்கள்.

    இவை எல்லாம் தொன்றுதொட்டு வரும் கலாச்சார மத அடிப்படை விஷயங்கள், ரோமை மதம் அதை இழந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என மாறிவிட்டது, ஐரோப்பாவும் அவர்கள் புகுந்த் இடமெல்லாம் மாறிற்று

    ஆனால் பாரதம் அதன் மார்கழி மகிமையினை அப்படியே பின்பற்றி வருகின்றது. இந்துமதம் அந்த பண்டைய பெருமையினை பாதுகாத்து வருகின்றது

    இம்மாதம் முழுக்க கடவுளுக்கானது என்பதால் வேறு விஷேஷங்களை செய்யமாட்டார்கள், குடும்ப விழா இருக்காது, முழு வழிபாடு மட்டுமே வீட்டிலும் ஆலயங்களிலும் நடக்கும்

    அக்காலத்தில் மார்கழியில் போர் கூட செய்யமாட்டார்களாம், புனிதமான மாதம் என்பதால் போர் நிறுத்தம் உண்டாம்

    இன்னும் ஏகபட்ட சிறப்புகளை கொண்டது இம்மாதம், பாற்கடல் கடையபட்டதும் கண்ணன் கோவர்த்தன மலையினை தூக்கி மக்களை காத்ததும் இன்னும் பல சிறப்புகள் கொண்டதும் இம்மாதமே

    பகவான் கிருஷ்ணன் ஒவ்வொரு தமிழ்மாதமும் ஒவ்வொரு பெயரில் அழைக்கபடுவார், இந்த மாதத்தில் அவருக்கான பெயர் கேசவன். கேசி எனும் அரக்கனை கொன்றதால் கேசவன்

    எண்ணற்ற ஆழ்வார்களும் அடியார்களும் நாயன்மார்களும் இம்மாதத்தில் தோன்றினார்கள், நம் கண் கண்ட பெரும் அவதாரமான ரமண மகரிஷி மார்கழியிலே அவதரித்தார்

    இது தேவர்களுக்கான மாதம் என்பதால் அதிகாலையில் எழும்பி வழிபாடுகளை தொடங்குவார்கள், திருபள்ளி எழுச்சி மிக விமரிசையாக நடக்கும்

    கடவுளை நாம் எழுப்பவேண்டுமா? இது மூடநம்பிக்கை என பகுத்தறிவு கோஷ்டிகள் ஏளனம் செய்யும், ஆழ கவனித்தால் அதன் ஏற்பாடு புரியும்

    கடவுளை யாரும் எழுப்ப வேண்டாம், அது அவசியமல்ல ஆனால் அப்படி சொன்னால்தான் மனிதன் அதிகாலையில் எழும்பி கடவுளை தேடுவான் எனும் மறைமுக ஏற்பாடு அது

    மங்கையரை வாசல் தெளித்து அதிகாலை கோலமிட சொல்வதும், தெருதெருவாக பஜனை நடப்பதும் அதனாலே

    ஆம் எல்லோரும் இம்மாதத்தில் அதிகாலை விழித்தல் வேண்டும்

    விஞ்ஞானத்தில் சீதோஷண விஞ்ஞானம் என்றொரு பிரிவு உண்டு, அது கார்த்திகைக்கு அடுத்த மாதம் அதாவது டிசம்பர் மாதத்தில் மழை பெயது ஓய்ந்திருக்கும் மாதத்தில் அதிகாலையில் ஓசோன் காற்றில் அதிகரிக்கும் அதை சுவாசித்தால் உடலுக்கு நல்லது , மூளைக்கும் நல்லது என்கின்றது

    பூமி சூரிய மண்டலத்தின் குறிப்பிட்ட பகுதியில் நுழையும் பொழுது குறிப்பிட்ட இந்த மாதம் அந்த வரம் பூமிக்கு கிடைக்கின்றது

    இதனாலேதான் இந்துக்களை அதிகாலை வெளியில் நடமாட வைக்க தேவர்கள் வருவதாக சொல்லி வைத்தனர் அறிவார்ந்த இந்துக்கள்

    அந்த மார்கழி குளிர் தூக்கத்தை வரவைக்கும் பருவம், அதில் லயிப்பவர்கள் அன்றாட கடமையினை தாமதமாக செய்தால் உலக இயக்கம் சரிவராது, இதனால் துயில் எழுப்ப ஆலயத்தில் திருபள்ளி எழுச்சியும் வீதிகளில் பஜனையும் நடந்தது

    ஆன்மீகம் , அறிவியல், வானவியல், உளவியல் என எல்லாம் கலந்த விஷயம் மார்கழி வழிபாடு
    சபரிமலை திருபயணமோ இல்லை பழனி போன்ற ஆலயங்களுக்கான திருபயணமோ இந்த மாதமே தொடங்கும், எல்லாம் மேற்சொன்ன ஏற்பாடுகளே

    தைபூச விரத முருக பக்தர்களுக்கான விரத ஏற்பாடும் இக்காலத்திலேதான் நடக்கும்.
    அதை அவசியம் எல்லொரும் செய்தல் வேண்டும்

    தெய்வம் என்றொரு சக்தி இருக்கின்றது, அதை நீ காக்க வேண்டாம் துயில் எழுப்பி சுமக்க வேண்டாம், உன் ஆரோக்கியத்தை நீ காத்து கொள்ள தெய்வத்தின் பெயரை சொல்லி சில காரியங்களை செய் என்றது இந்துமதம்

    ஆம் ஆரோக்கியம் என்பது வரம், அந்த வரத்தை அருளும் மாதம் மார்கழி. இதை சரியாக செய்தால் உடல் நலத்துக்கு ஒரு கேடும் வராது

    சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் அதாவது முறையாக விரதம் இருந்து கடும் தவம் இருந்து செல்லும் பக்தர்களுக்கு வருடம் முழுக்க நோய் வராது என்கின்றது ஆய்வு

    மார்கழி மாதத்தை முறையாக அனுசரிக்கும் யாரும் மருத்துவமனை வாசலை மிதிக்கபோவதில்லை

    உடல் நலத்தை பேணவும் ஆன்மீகத்தை வளர்க்கவும் அன்றே இது தேவருக்கும் கண்ணனுக்குமான மாதம் என சொல்லி வைத்த இந்துமதம் எவ்வளவு அறிவானதும் உயர்ந்த சிந்தனை மிக்கதாக இருந்திருக்க வேண்டும்?
    சிந்திக்க சிந்திக்க பெரும் ஆச்சரியமும் அதிசயமுமே விளங்கும்

    மார்கழி மாதம் திருப்பவையும், திருவெம்பாவையும் பாடபடும்

    இரண்டுமே தமிழுக்கு இந்துமதம் செய்த மாபெரும் இலக்கிய ஆலயங்கள், செந்தமிழின் தேன்சாறுகள், பெரும் அடையாளங்கள்.

    மாணிக்க வாசகரும், ஆண்டாளும் தமிழை அப்படி ஆண்டிருக்கின்றார்கள்

    மாணிக்க வாசகர் உருக வைக்கின்றார், ஆண்டாள் தமிழை அனாசயமாக ஆண்டிருக்கின்றாள். அந்த வார்த்தையும் உருக்கமும் சொல்லாடலும் இன்னொருவருக்கு வராது

    அந்த திருவெம்பாவை வைரம் என்றால் திருப்பாவை வைடூரியம்

    30 பாடல்களை ஆண்டாள் 30 நாளும் விரதம் இருந்து பாடினார் என்பார்கள்

    அக்காலத்தில் கார்த்திகையில் பேசி முடித்து தை மாதம் திருமணம் செய்வார்களாம், அப்பெண்கள் மார்கழியில் மன்னவன் நினைப்பிலே இருபபர்களாம்

    ஆண்டாள் பகவான் கண்ணனை தன் மணாளனாக நினைத்ததால் அவனுக்காக உருகி உருகி பாடியிருக்கின்றாள்

    அவள் கண்ணனை நினைத்து வாழ்ந்த ஆண்டாள் என ஒரு சாராரும், பெரியாழ்வாரே மங்கையின் நிலையில் இருந்து பாரதி கண்ணனை பாடியது போல பாடியபாடல் என ஒரு சாரார் சொன்னாலும் , ஆண்டாள் ஒரு பெண்ணாக இருந்து பாடினாள் என்பதே வரலாற்று உண்மை

    தமிழ் இலக்கியங்களிலே தனி சிறப்பு வாய்ந்தது திருப்பாவை, அவ்வளவு அழகிய சொற்கள் , வார்த்தை பிரயோகம், பக்தி, காதல், உருக்கம், ஏக்கம்

    அதியுச்ச பக்திநிலைக்கு அதை விட்டால் பாடலே இல்லை

    அந்த ஆண்டாள் மார்கழியில் இறைவனுக்கும் தமிழுக்கும் செய்த சேவை கால காலத்துக்கும் நிலைத்துவிட்டது, திருப்பதி முதல் தெருமுனை பெருமாள் கோவில் வரை இக்கால கட்டம் அனுதினமும் ஆண்டாளின் வரியோடு தொடங்கும்

    சைவ ஆலயங்களில் மாணிக்கவாசகர் அருந்தமிழில் அடியெடுத்து கொடுக்கின்றார்

    அது தமிழ்நாடு என்பதே ஆண்டாளாளும் மாணிக்க வாசகராலுமே அறியபடும் காலம் இது

    ஆண்டாளின் பாடல்கள் பக்தியின் உச்சிக்கு இழுத்து செல்லும், மாணிக்கவாசகரின் வரிகள் கர்வம், மாயை, தற்பெருமை எல்லாம் சில்லு சில்லாக உடைக்க்கும்

    மார்கழியில் தவறவிட கூடா பாடல்கள் இவை, மனதை பக்குபபடுத்தும் பாடல் அவை

    மிக பக்தியாக அனுசரிக்க வேண்டிய மாதம் மார்கழி, அப்படி அனுசரித்தால் உடல் நலம் முதல் ஆத்ம நலம் வரை ஒருவனுக்கு ஓங்கும். உடல் நோயும் மனபிணியும் அவனை தீண்டா

    “மாதாவை வணங்காத சிசுவும், மார்கழியில் இறைவனை வணங்காத ஜீவனும் வீண்” என்பார்கள்.

    அப்படி இறைவனை வணங்கி அடுத்த நல்ல தலைமுறையினை உருவாக்குவோம், அடுத்த தலைமுறை நம் பாரம்பரியத்தினை தொடர்ந்து நல்ல உடல் மற்றும் மனபலத்தோடு உருவாகட்டும்

    மார்கழியினை விரதத்துடனும் அதிகாலை வழிபாட்டுடனும் அனுசரிக்கும் அனைவருக்கும் பரந்தாமனின் அருள் மென்மேலும் பொழியட்டும், மானுடம் வாழட்டும் பாரதம் செழிக்கட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *