பஞ்சாப் காங்கிரஸ் அரசின் நய வஞ்சகம்; பிரதமர் பாதுகாப்பு தேசத்தின் கடமை

ஜனவரி 5 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்புத் தவறுகள் மிகவும் அபாயகரமானவை. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் 130 கோடி மக்களால் இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உச்ச கட்ட பாதுகாப்பில் உள்ளவர் திரு நரேந்திர மோடி. அன்று சாலையில் செல்லும் வழியில் சற்று தொலைவில் போராட்டக்காரர்கள் வழியை மறிக்க ஒரு பாலத்தின் நடுவில் சுமார் இருபது நிமிடங்கள் அவர் காத்திருந்த புகைப்படங்கள் வெளிவந்த போது நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

They are always looking for a relationship that is perfect in every way. I'm really curious why cost of budesonide inhaler Deoria they have been approved and why they are so effective. These are the most commonly reported uses for this drug:

You have to spend a ton of money on groceries without doing any research. There are many reasons for erectile dysfunction, but in the uk you could be offered the chance to make an appointment with your gp before a prescription is made - and you propranolol cost walmart Babat can also find a specialist urologist if the condition is complex. It is a potent anti-epileptic medication used to treat two types of seizure disorders, and also as a medication for bipolar depression.

It should be administered at least 4 times a day, at a dose which is at most 50%. We have to wait for Paracho de Verduzco order dapoxetine the outcome of the test,” said james e. Prednisone is a synthetic glucocorticoid used to treat inflammatory conditions such as arthritis and asthma.

அதுவும் அந்த இடம் பாகிஸ்தான் எல்லையிலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் மட்டுமே அமைந்துள்ளது. பாகிஸ்தான் பகுதிக்குள்ளிருந்தே கூட அங்குள்ளவர்களைக் குறி வைத்துத் தாக்க முடியும் எனச் சொல்லப்படுகிறது. சம்பவம் நடந்த பெரோஸ்பூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வெடிகுண்டுகள் மற்றும் வெடிக்கும் கருவிகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் அந்தப் பகுதியானது பாகிஸ்தானில் இருந்து வெடிகுண்டுகளைக் கடத்திக் கொண்டு வரப்படும் பகுதியாக இருந்து வருகிறது.

அன்று பிரதமர் டெல்லியிலிருந்து வந்து, படிண்டா விமான நிலையத்தில் இறங்கியது தொடங்கி, அத்தனை விசயங்களிலும் பஞ்சாபை ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் அரசு விதிகளுக்கு முரணாக, சற்றும் பொறுப்பற்ற முறையில், நடந்து கொண்டுள்ளது. பிரதமர் ஒரு மாநிலத்துக்கு வரும் போது அந்த மாநில முதலமைச்சர், தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை அதிகாரி, சம்பந்தப்பட்ட மாவட்ட முக்கிய அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் வரவேற்பு கொடுப்பது என்பது அடிப்படையான நடைமுறையாகும்.

ஆனால் அங்கு பிரதமர் வந்த போது முதலமைச்சர், தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை அதிகாரி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் யாரும் வரவேற்கச் செல்லவில்லை. மேலும் மாநில உள்துறை அமைச்சர் மற்றும் உள்துறைச் செயலரும் இல்லை, மாநிலத்தின் இன்னொரு அமைச்சர் மட்டுமே வரவேற்றிருக்கிறார். அது நிர்வாக, அரசியல் நடைமுறைகள் மற்றும் நாகரிகத்துக்கு விரோதமான செயலாகும்.

தன்னுடன் உள்ள அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்றிக் கொண்டதால், தான் வரவேற்கச் செல்லவில்லை என முதலமைச்சர் சரண்ஜித்சிங் சன்னி விளக்கமளித்துள்ளார். ஆனால் அவர் அதற்குப் பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் முக கவசம் எதுவுமின்றி கலந்து கொண்டு பேசியுள்ளார். தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை அதிகாரி ஆகியோர் வாகனங்கள் மட்டும் அவர்கள் வராததால் மற்ற வாகனங்களுடன் பிரதமர் வாகனத்தைத் தொடர்ந்து வரிசையில் சென்றுள்ளன.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கியமான தியாகிகளில் மூவர் பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகியோர். 1931 ஆம் வருடம் மார்ச் 23 ஆம் தேதி அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம் ஹூசைனிவாலா என்பது. அங்கு தேசிய தியாகிகள் நினைவிடம் உள்ளது. விமான நிலையத்திலிருந்து பிரதமர் ஹெலிகாப்டர் மூலம் அங்கு சென்று அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது அவரது முதல் நிகழ்ச்சியாக இருந்தது.

ஆனால் அங்கு வானிலை பொருத்தமாக இல்லாததால், காரிலேயே தியாகிகள் நினைவிடத்துக்குச் செல்லத் தீர்மானிக்கப்பட்டது. அங்கு அஞ்சலி செலுத்திய பின்னர், பெரோஸ்பூரில் சுமார் 42000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை மாநிலத்துக்கு அர்ப்பணித்து பொது மக்களிடையே பிரதமர் பேசும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனவே ஹுசைனிவாலாவை நோக்கி காரில் அவர் பயணத்தை ஆரம்பித்தார். செல்லும் வழியில் பியரியானா கிராமத்துக்கு அருகில் உள்ள மேம்பாலத்தில் வாகனங்கள் சென்றன. பாலத்தில் ஒரு கட்டத்துக்கு மேல் வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியவில்லை. ஏனெனில் சில மீட்டர் தூரத்தில் ஒரு பிரிவைச் சேர்ந்த விவசாயிகள் அமைப்பு வழியை மறித்து வாகனங்களைச் செல்ல விடாமல் தடுத்து விட்டுக் கொண்டிருந்தது.

எனவே பிரதமர் பாலத்தின் மேலேயே காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவருக்குப் பாதுகாப்பு கொடுக்கப் போதுமான எண்ணிக்கையில் பஞ்சாப் காவல் துறையினர் அங்கில்லை. அன்று பிரதமரின் பாதுகாப்புக்காக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நீலப் புத்தகத்தின் விதி முறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை.

பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மட்டும் கீழே இறங்கி, அவரது வாகனத்தைச் சுற்றி நின்று பாதுகாப்பு கொடுத்தனர். விதி முறைகள் படி தேவையான பாதுகாப்பு தர வேண்டி உடனே மாநில முதலமைச்சரையும், காவல் துறை தலைமை அதிகாரியையும் அவர்கள் தொடர்பு கொண்டனர். பல முறை தொடர்பு கொண்டும், அவர்கள் இருவரும் கடைசி வரை தொடர்புக்கு வரவேயில்லை.

இத்தனைக்கும் முறைப்படி பிரதமரின் பயணத் திட்டங்கள் முழுமையும் முன்னரே மாநிலத்துக்கு அனுப்பப்பட்டு, அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் நடந்த குறிப்பிட்ட வழியில் பாலத்தின் மேல் செல்வதற்கு மாநில காவல்துறை தலைமை அதிகாரி, அந்த வழி பாதுகாப்பானது; எந்தப் பிரச்னையும் இல்லை என உறுதி அளித்துள்ளார்.

பிரதமரின் பிரயாணத்தை முடிவு செய்யும் முன்னரே மத்திய அரசின் அமைப்புகள் பஞ்சாபின் அந்தப் பகுதிகள் பற்றிய விபரங்களை மாநில அரசுக்கு அனுப்பி அதிக கவனம் எடுத்துக் கொள்ளுமாறு எச்சரித்துள்ளன. மேலும் அந்தப் பகுதிகளில் நிலவும் சூழ்நிலை, அங்கு நடைபெற வாய்ப்புள்ள விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகள், சந்தேகிக்கப்படும் தீவிரவாத அமைப்புகளின் பெயர்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டுத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளன.

அப்படியிருந்தும் மாநில அரசு தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யாமல் விட்டது வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்பட்டதாகத் தற்போது வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலத்தின் தலைமைக் காவல் அதிகாரி சித்தார்த் சட்டோபாத்யாய அந்தப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கே தகுதியவற்றவர் என மத்திய தேர்வாணையக் குழு முன்னரே அறிவித்துள்ளது. ஆயினும் அங்கு ஆளும் கட்சியில் நிலவும் உட்கட்சி போட்டியின் விளைவாக மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவின் பிரநிதியாக அவர் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

கடந்த நாற்பது வருடங்களில் இந்தியா தனது முன்னாள் பிரதமர்கள் இரண்டு பேரை, அதுவும் ஒருவர் பதவியில் இருக்கும் போதே, தீவிரவாதத்தால் இழந்துள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு பிரதமர் மோடி அவர்கள் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை வேரறுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதனால் நாட்டில் அமைதி நிலவி வருகிறது.

எனவே தேச விரோத சக்திகள், தீவிரவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிகளைச் செய்து வருகின்றன. அவரை முக்கியமாகக் குறிவைத்து தாக்குதல்களை நடத்தவும் திட்டமிட்டு வருகின்றன. அன்று பஞ்சாபில் நடந்த வழி மறிப்பு மற்றும் போராட்டத்துக்கு பாரதிய கிசான் சங்கம் – கிரந்திகா பிரிவு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.

அது ஒரு இடதுசாரி சார்பு கொண்ட அமைப்பு. அதன் தலைவர் சுர்ஜித் பூல் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு பதவி வகித்த போது 2009 ஆம் வருடம் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஐந்து மாதம் சிறையில் இருந்தவர். மேலும் அதன் முக்கிய தலைவர்கள் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் உள்ளதாகத் தெரிகிறது.

எனவே விவசாயிகள் என்கின்ற போர்வையில் தீவிரவாத மற்றும் தேசவிரோத சக்திகள் அந்தப் போராட்டத்தை முன் நின்று நடத்தியதாகத் தெரிகிறது. அவற்றின் பின்னணியில் காலிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அமைப்புகள் இருக்கவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கு மாநில அரசு மறைமுகமாக ஒத்துழைப்பு கொடுத்திருப்பது தெளிவாகி வருகிறது. பிரதமர் பிரயாணம் செய்யும் வழித்தடம் முன்னரே அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மிக குறைந்த கால அவகாசத்திலேயே அவர்கள் அந்த இடங்களில் கூடுவதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் மாநில காவல் துறை அத்தனை நிகழ்வுகளையும் கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்துள்ளது. கடமை உணர்வுள்ள அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டுள்ளன. காவல் துறையினர் பிரதமர் செல்லும் வழியில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல், போராட்டக்காரர்களுடன் சேர்ந்து எந்த வித அக்கறையுமின்றி தேநீர் குடித்துக் கொண்டிருந்த நிகழ்வு வீடியோவாக வெளி வந்ததைப் பலரும் பார்த்தோம்.

சுதந்திர இந்தியாவில் அண்மைக் காலத்தில் ஒரு பிரதமருக்கு இவ்வளவு கவனமில்லாத பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த மாநிலத்திலும் கொடுக்கப்படவில்லை. எனவே அங்குள்ள நிலமையை உணர்ந்து கொண்ட பிரதமர் தன்னுடைய பிரயாணத்தை நிறுத்தி விட்டு உடனே டெல்லி திரும்பினார். பிரயாணம் தொடர்ந்து நடந்திருந்தால் பெரிய அசம்பாவிதங்கள் ஏற்பட்டு, உயிரழப்புகள் நிகழ்ந்திருக்கலாம். அதன் மூலம் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த தேச விரோத சக்திகள் முயற்சி செய்திருக்கும்.

ஆனால் அவ்வளவு நடந்த பின்னரும் மாநில முதல்வர் நடந்த நிகழ்வுகளுக்கு வருத்தம் தெரிவித்து, தவறுகளைச் சரி செய்கிறோம் என்று சொல்லவில்லை. மத்திய காங்கிரஸ் தலைமையும் மௌனம் காத்தது. நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் வலுத்த பின்னர் சில நாட்கள் கழித்தே முதல்வர் வேறு வழியின்றி வருத்தம் தெரிவித்தார்.

மாறாக அந்த நிகழ்வைக் காங்கிரஸ் கட்சியினர் கேலி செய்தனர். பெரோஸ்பூரில் போதிய கூட்டம் இல்லாதால்தான் பிரதமர் திரும்பிச் சென்றார் எனக் கூச்சமில்லாமல் பேசினார்கள். மேலும் பிரதமருக்குப் போதுமான பாதுகாப்பு இருந்தது எனவும், அவரின் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை எனவும் சொன்னார்கள்.

அவற்றுக்கெல்லாம் மேலே போய் சில தலைவர்கள் அதைக் கொண்டாடினார்கள். காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் ‘ ஜோஷ் எப்படி இருந்தது?’ எனப் பிரதமரைக் கேட்டார். ராஜிவ் காந்தி பலியான தமிழ் மண்ணிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது கட்சியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அந்த நிகழ்வை எள்ளி நகையாடினார்.

பிரதமரின் அந்தக் கூட்டத்துக்கு மக்கள் செல்வதைக் கூட ஆளும் காங்கிரஸ் கட்சி பல இடங்களில் தடுத்துள்ளது. கூட்டத்தைத் தடுக்க காங்கிரஸ் எல்லா தந்திரங்களையும் மேற்கொண்டது என பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நட்டா குறிப்பிட்டுள்ளார். அன்று பிரதமருக்கு பாதிப்பு ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்தது என மத்திய அமைச்சர் ஸ்மிருதி ஈரானி குற்றம் சாட்டினார்.

மாநில ஆளும் கட்சியின் போக்கை பல முக்கிய தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள் மற்றும் பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் மட்டுமன்றி, அந்த மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர் போன்றவர்களும் கண்டித்துள்ளனர். அது மட்டுமின்றி இருபத்தேழு முன்னாள் காவல்துறை உயர் அதிகாரிகள் அந்த விசயம் குறித்து குடியரசுத் தலைவருக்கு மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அதில் பஞ்சாப் அரசின் வேண்டுமென்றே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகளுக்காக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரியுள்ளனர். மேற்கண்ட சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து உண்மையைக் கண்டறிய உச்ச நீதி மன்றம் முன்னாள் நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது. அதன் மூலம் பல விசயங்கள் வெளிச்சத்துக்கு வரும் என நம்பலாம்.

இந்த சமயத்தில் ஒரு முக்கியமான விசயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாட்டின் பிரதமர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர். அவர் நமது மக்களாட்சியின் தலைமைப் பிரதிநிதி. எனவே அவரைப் பாதுகாப்பது நமது தலையாய கடமை. அதில் எந்தவித சமரசமும் செய்யக் கூடாது.

ஆனால் மோடி அவர்கள் பிரதமர் ஆன பின்னர், தேச விரோத, தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட நாட்டின் எதிர்கட்சிகள் சிலவும் சேர்ந்து செயல்படுவது மக்களாட்சியின் மாண்பைச் சிதைப்பதாகும். குறிப்பிட்ட அந்த நிகழ்வுக்கு அனைத்து கட்சிகளும் சேர்ந்து ஒரு மனதாக எதிர்ப்புக் குரல் எழுப்பியிருக்க வேண்டும். ஆனால் திமுக உள்ளிட்ட பல கட்சியினர் இன்னமும் அமைதி காத்து வருகின்றனர்.

பிரதமர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மேல் உள்ள தனிப்பட்ட விரோதம் தேசத்துக்கு எதிராகப் போகும் போது, அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும். நாட்டுக்கு எதிரான சக்திகள் ஒன்றிணைந்து இறையாண்மைக்கு விரோதமாகச் செயல்பட்டு வரும் போது, அவற்றை அடக்குவதில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். எனவே தற்போது காங்கிரஸ் கட்சி பஞ்சாபில் செய்த செயல் நய வஞ்சகமானது; மக்களால் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.

One Reply to “பஞ்சாப் காங்கிரஸ் அரசின் நய வஞ்சகம்; பிரதமர் பாதுகாப்பு தேசத்தின் கடமை”

 1. இந்தியாவின் தமிழகமும் வங்கமும் பஞ்சாபும் விடுதலை போராட்டகாலத்தில் மாபெரும் தலைவர்களை கொடுத்த தியாக பூமிகளாகவும் நாட்டுபற்றும் அர்பணிப்பும் மிக்க பகுதிகளாகவும் விளங்கின‌

  அந்த வங்கம் ஆன்மீகத்துக்கு சுவாமி விவேகானந்தரை கொடுத்தது போல, வீரத்துக்கும் தியாகத்துக்கும் குதிராம் போஸ் என பலரை கொடுத்தது அவர்களில் ஒப்பற்ற இளைஞனே அந்த சுபாஷ் சந்திர போஸ்

  காங்கிரஸில் அதி தீவிரமாக இருந்த அவருக்கு காந்தியாலும் வெள்ளையனை எதிர்க்க முடியாது என்பது ஜின்னாவின் எழுச்சியில் தெரிந்தது, காந்தியின் பலவீனம் சுதந்திரம் வாங்கி தராது தந்தாலும் முழு இந்தியாவாக தராது உடைந்து சிதறிய சிதறு தேங்காயாகத்தான் கிடைக்கும் என அஞ்சினான்

  அவன் நினைத்திருந்தால் வங்கநாடு கோரியிருக்கலாம், வடநாடு கோரியிருக்கலாம் வங்காளிகளின் தன் உரிமை கோரியிருக்கலாம் அப்படி கோரியிருந்தால் ஒன்றுபட்ட வங்கத்தின் தேசிய தலைவனாக , ஒரு நாட்டின் கரன்ஸி முதல் எல்லா இடத்திலும் அவன் கொண்டாடபட்டிருக்கலாம்

  ஆனால் அவன் பாரதி சாதி, தேசமே முக்கியம் தேசவிடுதலையே முக்கியம் என தன் கலெக்டர் படிப்பையும் தூக்கி எறிந்து களத்துக்கு வந்தான்

  ஆயுதமுனையில் இந்தியாவினை அடக்கி வைத்திருக்கும் வெள்ளையனிடம் அஹிம்சையோ இல்லை அமைதிவழி எல்லாம் எடுபடாது என்பது அந்த இளைஞனுக்கு அன்றே புரிந்தது

  அதுவும் லித்திங்கோவ் போன்ற நயவஞ்சக வைஸ்ராய்களை காந்தியாலும் வெல்ல முடியாது என்பதை உணர்ந்தபொழுது அவனுக்கு காந்திமேல் பரிதாபமே மிஞ்சிற்று அமைதியாய் ஒதுங்கினான்

  பெரும் சிந்தனையாளருக்கு நாட்டுபற்று இருப்பது அபூர்வம்,அந்த நாட்டுபற்றாளமுக்கு தைரியம் இருப்பதும் அபூர்வம், அந்த அபூர்வமானவன் தன்னலமற்று படைதிரட்டி நாட்டுக்காய் போராடுவதும் காலம் கொடுத்த கொடை

  அந்த சந்திரபோஸ் அப்படித்தான் இந்நாட்டுக்கு வரமாய் வந்தார், தேசம் அந்த மாவீரனை வரவேற்று அணைத்து கொண்டது, கலெக்டர் பட்டத்தையே தூக்கி எறிந்து நாட்டுக்காய் நின்றபொழுது காங்கிரசும் தேசமும் அவரை தலைவன் என கொண்டாடிற்று

  கூர்மையான பதில்கள், அப்பழுக்கில்லா தேசபக்தி, பற்றி எரியும் அர்பணிப்பு உணர்வு, எந்த தியாகத்துக்கும் தயார் என சீறி நீற்கும் வீரம் என அந்த வீரமகன் நடைபோட்டபொழுது நாடு வணங்கிற்று
  இதனை மூன்று கண்கள் வித்தியாசமாக நோக்கின‌

  பிரிட்டன் கண்களும், காந்தி கோஷ்டியின் கண்களும் அதில் முக்கியமானவை. பிரிட்டனுக்கு ஆயுதத்தால் பிடித்த இந்தியாவினை ஆயுதமுனையில் போஸ் விரட்டிவிடுவான் எனும் உண்மை சுட்டது

  வெள்ளையன் அடிமையான காந்திக்கும் நேருவுக்கும் தங்களின் பிரிட்டிசார் ஊழியத்துக்கு போஸ் நெருப்பு வைத்துவிடுவான் எனும் அச்சம் எற்பட்டது, இருவரும் ஒன்றானார்கள்

  இன்னொரு கண் ஹிட்லர் ஜப்பானிய கூட்டணி

  ஆம் ஹிட்லருக்கு இந்தியர்மேல் என்றுமே அபிமானமில்லை, காந்தியினை அவன் கால்செருப்புக்கும் மதிக்கவில்லை. 30 கோடி மக்கள் கேவலம் 1 லட்சம் கூட தேறாத பிரிட்டிசாரிடம் அடிமைபட்டு கிடப்பது அவர்களின் அறிவுகெட்டதனம் என எண்ணினான், இந்தியருக்கு அறிவே இல்லை என்பதும் ஜனநாயகம் அவர்களுக்கு தெரியாது அடக்குமுறை ஒன்றே அவர்களுக்கான ஆட்சி எனவும் சரியாக இருந்தான்

  அவ்வகையில்தான் அன்றே சென்பகராமனுக்கும் ஹிட்லருக்கும் மோதிற்று

  அந்நேரம் நேதாஜிக்கு போர் தொடங்க வேண்டும் என்ற வெறி இருந்ததே தவிர ஆயுதம் வழங்க எந்த நாடும் தயார் இல்லை

  சோவியத் யூனியனிடம் சென்றால் இந்தியாவினை கம்யூனிசநாடாக மாற்றிவிடுவார்கள் அது மகா ஆபத்து என்பதை உணர்ந்து பிரிட்டனுக்கு சவால்விட்ட ஜெர்மனிடம் சென்றார்

  ஹிட்லருக்கு நேதாஜி ஒரு பொருட்டே அல்ல, பிரிட்டனை வீழ்த்தினால் இந்தியா தானாக தன் காலடியில் விழும் என திட்டமிட்டாவன் நேதாஜி தனக்கு அடிமைபட்ட ஒரு சர்வாதிரியாக இருந்தால் போதும் என கருதினான்

  மானமுள்ள நேதாஜி தான் கேட்டது ஒரு உதவி என்பதையும் அதற்காக இன்னொரு அடிமைதனத்தை ஏற்கமுடியாது என சீறியவுடன் ஜப்பான் பக்கம் அவரை தள்ளிவிட்டான்

  ஜப்பானியரும் ஹிட்லரும் திட்டமிட்டு நேதாஜியினை பிரிட்டனுக்கு எதிராக புதிய போரை துவக்கும் ஒரு அடியாளாக கருதினார்களே தவிர முழு உதவியுமில்லை

  ஜப்பான் அதில் கைதேரந்திருந்தது, ஆம் முழு உதவியும் கொடுக்காமல் ஒருமாதிரி அரசியல் செய்தது

  நேதாஜி ஏன் அமெரிக்கா பக்கம் செல்லவில்லை என கேள்வி எழலாம், அதற்கான பதில் இரண்டு . முதலாவது அந்நாடு அன்று போர்களில் இல்லை அமைதியான நாடாய் இருந்தது, இரண்டாவது பிரிட்டனின் அடிமை நாடுகள் எதையும் அமெரிக்கா விடுவித்ததாக வரலாறே கிடையாது, அவர்கள் காக்கும் ஜனநாயகம் அப்படி
  எல்லாம் வியாபார கயமைதனம்

  இதனால் ஹிட்லர் ஜப்பான் தவிர வேறுவாய்ப்பு பரிதாபத்துகுரிய நேதாஜிக்கு இல்லை.

  நேதாஜியின் தொடர்புகளை உறுதி செய்த பிரிட்டிஷ் உளவுதுறை அரசுக்கு தகவல் கொடுக்க, பிரிட்டிஷ் அரசு அவரை வீட்டு காவலில் வைத்தது, அந்த த வீட்டுகாவலில் இருந்து தப்பி சென்று மலேயா சிங்கப்பூர் பர்மாவில் படைதிரட்டினார்

  ஆம், அன்று ஜப்பானுக்கும் ஹிட்லருக்கு ரப்பர் மிகபெரும் தேவையாய் இருந்தது, மலேயவினை அவர்கள் குறிவைத்து பிடித்தது அதனாலே

  முக்கியமான கடல்பாதையாக மலேயாவின் மலாக்கா துறைமுகம் மிக முக்கிய கேந்திரமாய் இருந்தது

  ஹாங்காங் முதல் பலவற்றை கைபற்றவும் பிரிட்டன் கடற்படையினை முடக்கவும் அவையெல்லாம் அவசியமென ஜப்பான் திட்டமிட அந்த வாய்ப்பினை நேதாஜியும் பயன்படுத்தினார்

  மலேயா பர்மா சிங்கப்பூர் பக்கம் இந்தியர்களை திரட்டி படை தொடங்கினார் நேதாஜி, அதில் பெரும்பான்மை தமிழர்கள்தான் இருந்தார்கள்

  மிகபெரிய படைதிரட்டினார் நேதாஜி

  நேதாஜியின் திட்டபடி அந்தமான் கைபற்றபட்டது அதில் பாரத கொடி ஏற்றபட்டது

  சிங்கப்பூரில் உருவான நேதாஜியின் தேசிய கொடி பிரபலமானது அதை ஏந்திய நேதாஜியின் “இந்திய தேசியபடை” இரு பிரிவுகளாக பிரிந்தன‌

  ஒரு பிரிவு அசாம் வழியாக இந்தியாவுக்குள் நுழையவேண்டும் இன்னொரு பிரிவு அந்தமான் வழியாக வந்து தமிழகத்தை அடைந்து அவ்வழியாக வரவேண்டும்

  இந்த இரு எல்லைளையும் அடைந்தபின் மக்களை திரட்டி செல்லி நோக்கி செல்ல வேண்டும்

  இப்படி செல்லும் பொழுது மேற்கு கடல் வழியாக கராச்சிக்கு வரும் இன்னொரு பிரிவு மேற்கில் தாக்குதல் தொடுக்கும்

  அப்பொழுது 3 களமுனைகளில் சிக்கும் பிரிட்டன் திணறும், இந்தியாவின் 40 கோடி மக்களை ஆளும் சில ஆயிரம் கொண்ட பிரிட்டானியரை விரட்டுவது எளிது ஆனால் இந்தியரின் அச்ச உணர்வும் தலைவனும் படையும் இல்லாத நிலையே இழிநிலைக்கு காரணம் என்பதால் இந்திய படைகளை காணும் இந்திய மக்கள் எழுச்சியுடன் எழுவார்கள் என்பதே நேதாஜி கணக்கு

  அது சரியாகவும் இருந்தது அசாமிலும் தமிழகத்திலும் தென் பகுதியிலும் நேதாஜியினை வரவேற்க மிகபெரும் உற்சாகத்துடன் மக்கள் கூடினார்கள்

  வெள்ளையனின் காவலும் ராணுவமும் மிகபெரிய அச்சத்தில் இருந்தன, தப்பி செல்லும் ஏற்பாட்டிலும் வெள்ளையர்கள் இருந்தனர்

  காலமும் நேரமும் ஜப்பானும் விதியும் ஒத்துழைத்திருக்குமானால் இந்திய தலைவிதியே மாறியிருக்கும் ஆனால் எல்லாமே சதி செய்தது

  ஹிட்லரின் வீழ்ச்சி, அமெரிக்க எழுச்சி, ஜப்பானில் வீசபட்ட அணுகுண்டு எல்லாவற்றுக்கும் மேல் ஜப்பான் அடைந்த பின்னடைவு, மலேயா சிங்கப்பூர் பர்மா மறுபடி பிரிட்டனிடம் விழுந்தது அமெரிக்க படைகளின் கிழக்காசிய வருகை என நேதாஜியின் படை தோற்றது

  அதுவும் அந்தமான் அசாம் என வெற்றியின் விளிம்பில் இருந்தபொழுது தோற்றது

  அந்த தோல்வியினை விட நேதாஜிக்கு கிடைத்த பெரும்வலி சொந்தநாட்டு தலைவர்கள் செய்தது, நேதாஜி நினைத்திருந்தால் காந்தி, நேருவினை நொடியில் சாம்பலாக்கிவிட்டு போராட்டத்தை கையில் எடுத்திருக்கலாம்

  ஆனால் ஒருபக்கம் அமைதி போராட்டம் ஒருபக்கம் ஆயுதபோராட்டம் என திட்டமிட்ட அந்தமாமனிதன் தனிவழியில் சென்றான்

  அவன் அப்படி சென்றானே தவிர இந்தியாவின் தலைவர்கர்களோ அவன் நாட்டுக்குள் நுழைந்தால் வெள்ளையனிடம் பிடித்து கொடுப்போம் , வெள்ளையனுக்கு எதிரியான போஸ் எமக்கும் எதிரி என உறுதிகொடுத்தன‌

  ஆம், போஸ் ஹிட்லரின் கூட்டாளி எனும் சர்வதேச தீவிரவாதி என பிரிட்டன் கோஷ்டி, அமெரிக்கா , சோவியத் என எல்லோரும் வலைவிரித்து தேடினர்.

  இந்திய சுதந்திர போராளியான அந்த ஒப்பற்ற தலைவன் உலக சதியால் போர்குற்றவாளி என்றானான், அதை உள்ளூர் தலமைகளும் ஆதரித்தன‌

  அவன் இந்திய விடுதலைக்குத்தான் போராடினான் அவனுக்கு விதிவிலக்கு வேண்டும் என ஒரு குரல் கூட இங்கு எழாததுதான் வரலாற்றின் மிக கொடிய தருணம்

  அந்த சுதந்திர வீரனுக்கு இந்திய தலைவர்கள் கொடுத்தபட்டம் “போர் குற்றவாளி”‘

  அந்த வெறுப்பில் தைவானில் தரைஇறங்கிய நேதாஜி இந்திய தலைவர் துரோகம், தன்னை கைவிட்ட ஜப்பானியரின் துரோகம் என மனதால் நொந்து அங்கே தற்கொலை செய்து கொண்டார்

  மற்றபடி நேதாஜி உயிரோடு உள்ளார் என்பதெல்லாம் நேருவினை பயமுறுத்த சோவியத் கட்டிய கட்டுகதைகளன்றி வேறல்ல, காரணம் நேதாஜி எப்பொழுது உள்ளே வந்தாலும் நேருவினை விரட்டிவிட்டு அவரை அரவணைக்க தேசம் தயாராக இருந்தது

  கம்யூனிசம் இந்தியாவில் வளரும் என நம்பிய சோவியத் நேதாஜி பெயரில் சில கட்ட்கதைகளை பரப்பியது

  அந்த அப்பழுக்கற்ற மாமனிதன் இந்த தேசத்தில் பிறந்து இந்த தேசத்துக்காக போராடியதை தவிர எந்த தவரும் செய்யவில்லை , காந்தியினை நம்பியதை தவிர வேறெந்த பாவமும் செய்யவில்லை

  அந்த மகத்தான தலைவனுக்கு தேசத்தின் வீரமகனுக்கு ஜனவரி 23ம் தேதி பிறந்தநாள்

  ஐ.என்.ஏ எனப்படும் நேதாஜியின் ராணுவத்தில் இருந்தவர்கள் இன்றும் வெகுசிலர் உண்டு, அவர்களிடம் பேசினால் அவர்களின் குரல் இப்படித்தான் சொல்லும்

  கட்சிக்கும் பதவிக்கும் காசுக்கும் அல்லாமல் நாட்டுக்காக சாக நேதாஜி பின்னால் சென்ற அந்த உத்தமர்களின் ஆன்மாவின் குரல் எக்காலமும் உண்மையினைத்தான் சொல்லும்

  கண்களில் நீர் வழிய, தங்கள் கனவுகளின் உடைந்த பிம்பங்களை நினைத்தபடியே கேவி கேவி இடை நிறுத்தி , தவித்து, அழுது அவர்கள் சொல்லும் நினைவுகள் உண்மையும் சத்தியமுமானவை

  தாய்பாலில் மாசு இல்லை, அந்த உன்னதமான தியாகிகளின் வார்த்தையில் கொஞ்சமும் மிகையோ பொய்யோ இல்லை

  எக்காலமும் காதில் ஒலிக்கும் வார்த்தைகள் அவை, ஒவ்வொரு இந்தியனும் மனதிலும் சிந்தையிலும் எந்நேரமும் நிறுத்தவேண்டிய வரலாறு அவை

  “நேதாஜி இந்தியர்களால் விரும்பட்ட மாபெரும் தலைவர் , குறிப்பாக இளையபட்டாளம் அவரை கொண்டாடி கொண்டிருந்தது.

  காந்தியின் அணுகுமுறை இங்கு குழப்பமானது என சொல்லி, பகத்சிங்கினை காந்தி கைவிட்ட பொழுது காங்கிரஸில் இருந்து வெளிவந்தார் போஸ்

  ஆம் அதைத்தான் செய்யவேண்டும் என தேசம் எதிர்பார்த்தது, அதனால் மாபெரும் ஆதரவும் கிட்டிற்று
  ஏகபட்டோர் அவர்பின்னால் உயிரை கொடுக்க முன்வந்தனர். இந்தியாவில் இருந்து மட்டுமா வந்தனர்? பர்மா மலேயா சிங்கப்பூர் என எல்லோரும் வந்தனர், பெரும்பாலும் தமிழர்கள் இருந்தனர்

  கட்டம்பொம்மனையும் பூலிதேவனையும் மருதுக்களையும் போஸ் உருவில் கண்டோம் நாங்கள், அப்படி ஒரு வசீகரமான வீர தலைவர் போஸ்

  காந்தி, நேரு போல வளைந்துகொடுப்பவர் அல்ல போஸ், அவரின் தன்மையே வேறு. அவர் இருந்திருந்தால் பாகிஸ்தானுமில்லை காஷ்மீர் சிக்கலுமில்லை. அவரின் சிந்தனையும் நாட்டுபற்றும் தீர்க்கமும் அப்படினானது

  இனி ஆயுதவழிதான் என இந்தியாவில் இருந்து தப்பிய நேதாஜி முதலில் ஆதரவின மாஸ்கோவிடம் கேட்டார், அவர்களோ இந்தியாவினை கம்யூனிஸ்ட் நாடாக மாற்ற சொன்னார்கள், போஸுக்கு அதில் உடன்பாடில்லை அதன் பின்பே ஹிட்லரிடம் சென்றார்

  ஹிட்லர் அவரை தன் அடியாளாக மாற்றி இந்தியாவில் ஆளவைக்க திட்டமிட்டான், ஆதரவு போதும் ஆள்வது எம்மக்கள் என சொல்லிய நேதாஜியினை அவன் ரசிக்கவில்லை ஜப்பான் பக்கம் தள்ளிவிட்டான்

  ஜப்பான் இந்தியாவினை தன் பொருட்களை விற்கும் சந்தையாக பார்த்தது, நேதாஜி அதன் தலைவராகும் பொழுது தன் பொருட்களுக்கு பெரும் சந்தை கிடைக்கும் என கணக்கிட்டே அவருக்கு ஆதரவு கொடுத்தது

  ஜப்பானின் திட்டம் தாங்களே இந்தியாவினை கைப்பற்றுவதாக இருந்தது, ஆனால் அதன்பின் ஜப்பானிடம் இருந்து மீளமுடியாது என உணர்ந்த நேதாஜி தங்கள் படைக்கு உதவினால் போதும் என சொல்லி நின்றார்
  ஆம் பிரிட்டிஷ்காரன் விடுதலை தரமாட்டான், எதிரி தன்னை வளைக்கபார்க்கின்றான் ஆனால் எதிரியிடம் சிக்கவும் கூடாது அதே நேரம் உதவியும் வேண்டும்

  இந்த ராஜதந்திரத்தில் யாரிடமும் சிக்காமல் ராணுவத்தை அமைத்தார் நேதாஜி

  அவரின் கணிப்பு சரி, ஆனால் ஹிட்லர் தோற்கும் என்றோ பிரிட்டன் அமெரிக்காவுடன் தன் வல்லரசு பட்டத்தை இழந்து இந்தியாவிட்டு வெளியேறும் என்றோ யாரும் நினைக்கவில்லை அவரும் நினைக்கவில்லை
  இந்நிலையில் போர் முடிந்து, ஹிட்லர் அடித்த அடியில் அமெரிக்காவும் சோவியத்தும் வல்லரசாக பிரிட்டனின் கொடி இறங்கி தன் வாலை சுருட்டி அது ஒதுங்கியது

  நேதாஜி இந்தியாவுக்குள் வந்தால் அவரை தேசம் தலைவராக்கியிருக்கும், மிக எளிதில் இந்திய அதிபராயிருப்பார் நேதாஜி

  ஆனால் அமெரிக்காவும் பிரிட்டனும் சோவியத்தும் அதை விரும்பவில்லை, பலமான இந்தியா அவர்களின் விருப்பம் அல்ல‌

  பிரிட்டன் தன் சுதந்திர ஒப்பந்தத்தில் இந்தியாவினை கீறிபோட்டு கலவரபடுத்தும் திட்டத்தில் இருந்தது, நேதாஜி அதற்கு நிச்சயம் ஒப்புகொள்ளமாட்டார் என கருதிற்று

  நேதாஜி வந்தால் தேசத்தை பிளக்கவிடவே மாட்டார் அதைவிட ஆபத்து தேசத்தின் வெள்ளை கைகூலிகளான சிலரை ஒழித்துகட்டிவிடுவார்

  ஆம் வெள்ளையன் இந்தியாவின் பலமென கருதிய இடங்கள் சில, அதில் மும்பை, வங்கம், பஞ்சாப், தமிழகம் என முக்கிய பகுதிகள் இருந்தன‌

  வங்கத்தை கம்யூனிஸ்டுகளை விட்டு கெடுத்தான், பஞ்சாபை மூன்றாக பிரித்து கெடுத்தான்

  மும்பை பகுதிகளின் அமைதியினை கெடுக்க அம்பேத்கருக்கு கொம்பு சீவினான் , தென்னக அமைதியினை கெடுக்க ஈரோட்டு ராம்சாமிக்கு ரகசிய அனுமதி கொடுத்தான்

  இந்த அனைத்து ஆபத்துக்களையும் நேதாஜி இந்தியாவில் இருந்தால் செய்யமுடியாது என உணர்ந்தான், அதனால் காந்தியுடன் நேருவுடன் பேசும் பொழுது அதாவது ஹிட்லர் இறந்து , அமெரிக்கா எழுந்து இனி பிரிட்டன் வல்லரசு அல்ல எனும் உலக நிலை மாறி இனி சுதந்திரம் உறுதி என்ற நிலை வரும்பொழுது சொன்னான்

  “தேசத்தை பிரித்து போடுவோம், அப்படியே நேதாஜியும் எங்களுக்கு வேண்டும். அவன் இல்லா இந்தியாவுக்கே சுதந்திரம், அவன் இருந்தால் சுதந்திரமே இல்லை”

  இந்திய தலைவர்கள் அவனை போர்குற்றவாளி என ஒப்புகொண்டு அவன் இந்தியா வந்தால் ஒப்படைக்கவும் தயாராயினர்

  அந்த ஒப்புதல் பேரிலே தேசம் பிரிந்தது, அந்த ஒப்புதல் பேரிலே அம்பேத்கர் பெரும் பிம்பமாக்கபட்டார், அந்த ஒப்புதல் பேரிலே ஈரோட்டு ராம்சாமி உலா வந்தார்

  ஈரோட்டு ராம்சாமியினை சுதந்திர இந்தியாவில் நிச்சயம் அடக்கியிருக்கலாம், ஆனால் காந்தியின் சம்பந்தியும் நேருவின் கூட்டாளியுமான ராஜாஜி காத்த அமைதியே தமிழக பிற்கால சீரழிவுக்கு காரணம், திமுகவினை அடக்காதது மட்டுமல்ல அவர்களை ஆட்சிக்கு கொண்டுவந்ததும் ராஜாஜியே

  ஆம் எல்லாம் வெள்ளையன் என்றோ செய்த ஏற்பாடு

  நேதாஜி இங்கே வந்திருந்து நாடு அவரிடம் ஒப்படைக்கபட்டிருந்தால் தேசம் பிரிந்திருக்காது, பஞ்சாபும் வங்கமும் நாசமாயிருக்காது, காஷ்மீர் சிக்கல் இருந்திருக்காது, தமிழகம் இப்படி நாசமாயிருக்காது

  தான் இந்தியாவுக்கு சென்றாலும் சாவு நிச்சயம், ஜப்பானும் அமெரிக்காவிடம் தோற்றுவிட்டது என மனம் ஒடிந்த நேதாஜி தைவானில் தற்கொலை செய்தார்

  இந்த இடத்தில் நேதாஜியின் விசுவாசிகள் அழுவார்கள், அரைமணி நேரம் அழுவார்கள், பின் அப்படியே அமர்ந்திருப்பார்கள்

  நீண்ட பெருமூச்சுக்கு பின் தொடர்வார்கள்

  “இந்து முஸ்லீம் பிரிவினைக்கா காந்தி கொல்லபட்டார் என இத்தலைமுறை நினைக்கின்றது, அல்ல, ஒருகாலும் அது அல்ல.

  அதுவும் ஒரு காரணம் அன்றி அது மட்டும் காரணம் அல்ல. காந்தி மதவெறியில் கொல்லபடவில்லை
  நேதாஜிக்க்கு காந்தி செய்த துரோகம் வரலாற்றில் மறைக்கபட்டது , இந்நாட்டுக்கு காந்தி செய்த துரோகமும் பிரிவினையில் கலவரத்தில் மறைக்கபட்டது

  பாகிஸ்தானுக்கு காந்தி சம்மதித்தது கூட சிக்கல் இல்லை, சண்டைக்காரர்க்ள் ஒழிந்தார்கள் என விட்டுவிடலாம் ஆனால் நேதாஜியினை கைவிட்டார் அல்லவா? அதுதான் அவரை எல்லோரும் கொல்ல தேடிய முதல் காரணம்

  பலர் முயற்சித்தார்கள், கோட்சே சுட்டான், கோட்சே முயற்சியும் பிழைத்திருந்தால் வேறு யாராவது அன்று இரவே சுட்டு கொன்றிருப்பார்கள்

  கோட்சே எங்களுக்கு தவறானவன் அல்ல, நேதாஜியின் உண்மை சீடர்களுக்கு அவன் செய்தது சரியான செயலே, அவன் குறி தவறியிருந்தாலும் காந்தி உயிரோடு இருந்திருக்கமாட்டார்

  ஒருவகையில் எங்கள் வலியும் கோட்சேவின் வலியும் ஒன்றே.

  சிலருக்கு இது புரியாது, எல்லையில் அழிந்தவருக்கும் நேதாஜியினை பறிகொடுத்தவருக்கும் அந்த வலி புரியும்
  உங்களுக்கு அவர் தேசபிதாவாக இருக்கட்டும், எங்களுக்கு எக்காலமும் துரோகி”

  ஆம் , நேதாஜியின் சிந்தனையும் வழியும் புத்துயிர் பெறாமல் இத்தேசம் வல்லரசாய் மாற வாய்ப்பே இல்லை
  நேதாஜி எக்காலமும் இந்தியாவின் விளக்கு, ஒரு காலம் இத்தேசம் அவரை சரியாய் புரிந்துகொள்ளும் , அன்று பாராளுமன்றம் முதல் இந்திய ரூபாய் வரை அவர் சிரிப்பார்.

  அந்தமானில் இருக்க வேண்டியது நேதாஜியின் சிலை, அதை முறையாக செய்தவர் மோடி

  ஆம் அந்தமானில் நேதாஜிக்கு சிலை அமைத்து வணங்கிய முதல் இந்திய பிரதமர் மோடி, அந்தமானின் சில தீவுகளுக்கு நேதாஜியின் பெயரை இட்டதும் மோடி

  அந்தமான் சாதாரணா இடம் அல்ல, தேசத்தின் கிழக்காசிய பாதுகாப்பே அங்குதான் இருக்கின்றது,

  இந்தோனேஷியாவினை ஒட்டி சீனாவுக்கு சவால்விடும் இடத்தில் இருக்கின்றது, மகா முக்கிய ராணுவ‌ கேந்திரம் அது

  அந்த இந்திய தீவில் சிலையாய் நிற்கின்றார் நம் நேதாஜி

  ஆம் ஒரு காலத்தில் கிழக்கில் இருந்து விடுதலைக்காக‌ படையெடுத்து வந்த நேதாஜி இன்றும் அதே அந்தமானில் தேசத்துக்காய் இந்திய ராணுவ வடிவில் நிற்கின்றார்

  முதல் இந்திய சொந்த ராணுவத்தை அமைத்த அவர் அந்த ராணுவ தீவில் ராணுவ வீரர் வடிவாய் நிற்கின்றார்
  மோடி மேல் ஆயிரம் சர்ச்சைகளை சொல்லுங்கள், ஆனால் நாட்டுபற்றாளனே நாட்டு நலன் மிக்க தலைவனை அறிவான்

  மோடி அப்படி அறிந்தார் வணங்கினார், அந்தமானில் நேதாஜிக்குரிய இடத்தை கொடுத்தார், மோடியும் இல்லையெனில் அதை இங்கு யார் செய்வார்?

  மோடியினை ஏன் கொண்டாடுகின்றோம் என்றால் இம்மாதிரியான நற்காரியங்களுக்கே, 60 ஆண்டுகளாக காங்கிரஸ் செய்யாததை அவர்தான் செய்தார்

  இன்று நேதாஜிக்கு பிறந்த நாள்.

  முதல் இந்தியரின் ராணுவத்தை அமைத்த அந்த வீரனுக்கு அஞ்சலி

  ஒன்றுபட்ட இந்தியாவினை காக்க நினைத்த மாவீரனுக்கு அஞ்சலி

  தலைவர்கள் என கருதபட்ட துரோகிகளினால் சாய்க்கபட்ட வீரனுக்கு அஞ்சலி

  கடலெல்லாம் மலையெல்லாம் காடெல்லாம் ஓடி ஓடி இயக்கம் வளர்த்து தன் சொந்தநாட்டு தலைவர்களாலே விரட்டபட்ட மாவீரனுக்கு அஞ்சலி

  இன்றும் அந்தமானில் காவல் தெய்வமாய் நிற்கும் எம் தேசத்தின் பரமபிதாவுக்கு ஆழ்ந்த அஞ்சலி

  அந்த மாவீரதேசபக்தனுக்கு டெல்லியில் பளிங்கு சிலை அமைக்கபடும் என மோடி அறிவித்திருப்பது மிகபெரும் மகிழ்ச்சி எனினும் இதுகாலமும் ஆப்கானியர் முதல் ஐரோப்பியர் வரை அடையாளமும் சிலையும் கொண்ட பாரத தலைநகரில் இந்நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட நேதாஜிக்கு பெரும் அடையாளம் இல்லாமலா இருந்தது எனும் பெரும் கேள்வியும் எழுகின்றது

  மோடி நாட்டுக்கும் அதன் வரலாற்றுக்கும் இத்தேசம் பெற்றெடுத்த வீரபெருமக்களுக்கும் எதை செய்யவேண்டுமோ அதை சரியாக செய்கின்றார்

  நேதாஜியின் பிறப்பு வங்கமாக இருந்தாலும் அவருடன் மிக நெருங்கி பழகியது தமிழர்களே, அவரின் படையில் பெரும்பான்மையாக இருந்தது தமிழர்களே

  தமிழக பெண்களும் ஆண்களும் அவர்பின்னால் திரண்டிருந்தார்கள், பர்மா வழியாக அவர் அசாமில் நுழையமுயன்றபொழுது இருந்த பெரும் படையிலும், அந்தமானை கைபற்றியபொழுது அவர் பின்னால் இருந்த பெரும் படையிலும் தமிழர்கள்தான் இருந்தார்கள்

  பசும்பொன்னின் வீரதிருச்சிங்கம் தேவர் அவர்கள் நேதாஜியின் இன்னொரு பிரதியாகவே இங்கு கொண்டாடபட்டார்

  அந்த வங்கத்து சிங்கத்துக்கு சென்னை ராணுவ மையம் அருகிலும் நெல்லை மாவட்டம் ஐ.என்.எஸ் கட்டபொம்மன் கடற்படை தளத்தை ஒட்டிய பகுதிகளிலும் பெரும் அடையாளங்கள் வேண்டும்

  பசும்பொன் தேவர் பெருமகனார் இருக்குமிடமெல்லாம் அந்த தங்கமகனுக்கும் அடையாளம் வேண்டும்

  இந்திய விடுதலைக்கு தமிழகமே கைகொடுக்கும் என நம்பி அதில் ஓரளவு வெற்றியும் பெற்ற அந்த தியாக திருமகனை பெரும் உற்சாகத்தோடு கொண்டாட இந்தியகுடிமக்களாகிய தமிழர்களுக்கு பெரும் கடமையும் அவசியமும் உரிமையும் உண்டு

  “வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்”

Leave a Reply

Your email address will not be published.