இனப் படுகொலையை பற்றிய பொய் பிரச்சாரம்

கோத்ரா சம்பவத்திற்கு பழி வாங்கும் நோக்குடன் இந்துத்துவ அமைப்புகள் இனப் படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக ஒரு பொய் செய்தியை பரப்புவதற்காக 3 நாள் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்தியாவில் அதிகரித்து வரும் இனப்படுகொலை வெறுப்பு பேச்சு மற்றும் அரசு ஒடுக்குமுறை குறித்து அக்கறை கொண்ட இந்திய புலம்பெயர்ந்தோர், நட்பு நாடுகள் மற்றும் அக்கறையுள்ள குடிமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மனித உரிமைகள் வாதிடும் குழுக்களின் கூட்டினால் இந்த உச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகிறது. இந்த அமைப்புகள் இனப்படுகொலையைத் தடுப்பதில் உறுதிபூண்டுள்ளன மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அமைதியான சமூகங்களை உருவாக்குவதில் முன்முயற்சியுடன் கூடிய பொறுப்பைப் பெற முயல்கின்றன. என்ற அறிவிப்பு செய்யப்பட்டு பிப்ரவரி மாதம் 26 முதல் 28 வரை நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டின் நோக்கம் மோடி எதிர்ப்பு என்பதை தவிர வேறு எந்த திட்டமும் கிடையாது.

இதில் கலந்து கொண்டவர்களின் பட்டியலில் இருப்பவர்கள் கடந்த காலங்களில், இந்து எதிர்ப்பு, இந்துத்துவா எதிர்ப்பு, குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு பிரசாத்தில் முதன்மை வகித்தவர்கள். இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சிலின் நிர்வாக இயக்குநரும், உச்சிமாநாட்டின் இணைத் தலைவருமான ரஷீத் அகமது கூறுகையில், “இந்த உச்சி மாநாடு அனைத்து இந்தியர்களுக்கும் அமைதி, பன்மைத்துவம் மற்றும் நீதியைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைக்கான அவசர அழைப்பு. “மதம் மற்றும் ஆன்மீகம் ஆகியவை அன்பு, இரக்கம் மற்றும் வாழ்க்கையின் புனிதத்தன்மையின் பகிரப்பட்ட நெறிமுறைகளின் ஊற்றுகளாக இருக்கும் ஒரு சிறந்த உலகத்திற்காக நாங்கள் ஏங்குகிறோம், வெறுப்பு மற்றும் வெகுஜன வன்முறை அல்ல,” என்று அகமது கூறினார்.

இந்த கருத்து இந்தியாவிற்கு மட்டுமா அல்லது வன்முறையை ஆயுதமாக கொண்டு செயல்படும் இஸ்லாமிய நாடுகளுக்கும் பொருந்துமா என்ற கேள்வி எழுகிறது. ஏன் என்றால் மேற்படி மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் இந்த கேள்வி எழுகிறது.

2022 பிப்ரவரி மாதம் 26 முதல் 28 வரை மூன்று நாட்கள் இந்தியா ஆன் தி ப்ரிங்க் – பிரிவென்டிங் ஜெனோசைட் ( Inida.onthe.brink. Preventing Genocide ) என்ற தலைப்பில், காணெலி காட்சியாக ஒரு மாநாடு நடத்தப்பட்டது. மேற்படி மாநாட்டில், 2014க்கு பின்னால் முஸ்லீம்கள் இனப் படுகொலை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்கள். இதில் பங்கேற்றவர்களில் பெரும்பாலோனோர் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு ஆதரவான கருத்துக்களை பரப்புவர்கள். அந்நிய நாடுகளிலிருந்து இந்தியாவில் தொண்டு காரியங்களுக்கு நிதி உதவி பெற்று, தனது சொந்த வாழ்க்கைக்கு லட்சக்கணக்கில் செலவு செய்த பிரிவினைவாதிகள். இந்த மாநாட்டை நடத்தியவர்கள் அமெரிக்காவை முதன்மை தளமாக கொண்டு இஸ்லாமிய அமைப்புகள்.

மேற்படி மாநாட்டில் இந்தியாவிலிருந்து கவிதா கிருஷ்ணன், டிஸ்டா செடல்வாட், ரஷீத் அகமது போன்றவர்களும், பத்திரிக்கையாளர் ரக்கிப் ஹமீத் நாயக் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோனர் முஸ்லீம்களும், முஸ்லீம் ஆதரவாளர்களும். இந்த உச்சிமாநாட்டிற்கு 20 அமைப்புகள் ஏன் ஒன்றிணைகின்றன என்பதை அந்த செய்திக்குறிப்பில் சுட்டிக்காட்டியது, “இந்தப் பின்னணியில், உலகெங்கிலும் உள்ள இந்திய புலம்பெயர் அமைப்புகள் உலக அளவில் போற்றப்படும் மனித உரிமை அமைப்புகளுடன் கூட்டு சேர்ந்து ‘இந்தியா விளிம்பில் – இனப்படுகொலையைத் தடுக்கும்’ என்ற தலைப்பில்’ 20க்கும் மேற்பட்ட அமைப்புகள், இந்து விரோத போக்கு கொண்ட உலகளாவிய CAIR போன்ற இந்து விரோத அமைப்புகளுடன் கூட்டணியால் இணைந்து நடத்தப்பட்டது.

மூன்று நாட்கள் நடந்த மாநாட்டில் விவாதித்த தலைப்புகளிலிருந்தே இவர்களின் நோக்கம் நன்கு புரியும். 2002ல் குஜராத்தில் நடந்த இனப்படுகொலையை நினைவூட்டும், நீதிக்கான போராட்டங்கள், குற்றவாளிகளின் துரோகம், அரசின் உடந்தை போன்றவற்றை விவாதிக்கும் என முதல் நாள் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2004 முதல் 2014 வரை மத்தியில் ஆட்சியிலிருந்து காங்கிரஸ் கட்சியை பற்றி எந்த குறிப்பும் கிடையாது. மேலும் 2002-ல் நடந்த கலவரத்திற்கு மூல காரணமாக அமைந்தது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் என்பதை மறந்து விட்டு விவாதிப்பது ஏன் என்பது புரிந்து கொள்ள இயலும். இனப்படுகொலை நடக்கும் என எதிர்பார்த்து உலக அளவில் இந்தியாவின் மீது இனப்படுகொலை நடக்கும் என்ற மாயையை உருவாக்கும் நோக்கமே , நிகழ்ச்சி நடத்தியவர்களின் திட்டமாகும்..

27 பிப்ரவரி 2002 அன்று 59 பயணிகளை உயிருடன் எரித்த மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அதிகமான இந்துக்களைக் கொல்ல இஸ்லாமிய கும்பல் திரும்பியபோது, உடனடியாக காவல் துறையினர் எடுத்த தடுப்பு நடவடிக்கையின் காரணமாக இந்து இன படுகொலை தடுத்து நிறுத்தப்பட்டது. இது பற்றிய கருத்துக்களை கூட தெரிவிக்கவில்லை. 6 டிசம்பர் 1992 அன்று, அயோத்தியில் பிரச்சினைக்குறிய கட்டிடம் இடிக்கப்பட்டது. இதற்கு பழிவாங்கும் விதமாக 1993 மார்ச் 12 அன்று மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. மேற்படி குண்டு வெடிப்பில் பலியான அப்பாவி மக்களை பற்றியும், குண்டு வெடிப்பு நடத்திய முஸ்லீம் பயங்கரவாதிகளை பற்றியும் விவாதிக்க முன் வராத அமைப்பு தான் , இந்தியாவில் இன படுகொலை நடப்பதாக புலம்புகிறது.

மேற்படி மாநாட்டில் விவாதிக்கப்படும் மற்றொரு விஷயம், அசாமின் மறக்கப்பட்ட இனப்படுகொலை 1983 ஆம் ஆண்டு Nellie படுகொலையை மறுபரிசீலனை நடத்த வேண்டும் என்பது பற்றி விவாதிப்பது. ஹிஜாப் தடை, வெறுப்பு பேச்சு மற்றும் வேட்டையாடுதல்: குஜராத்தின் நீண்ட நிழலில் முஸ்லீம் பெண்களை குறிவைத்தல் 2002 மனிதாபிமானம் மற்றும் துருவப்படுத்தல்: இந்துத்துவா வெறுப்பு பேச்சு. போன்ற தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றன. மேற்படி விவாதங்களில் பங்கு கொண்டவர்கள் பலர் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த வன்முறையை கூட தற்போதைய அரசுடன் ஒப்பிட்டு பேசினார்கள்.

ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலையை இந்தியாவில் நடக்கும் சில சம்பவங்களை ஒப்பிட்டு, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் முன்னாள் வழக்கறிஞர் கிரெக் கார்டன், “ துருவமுனைப்பு: இந்துத்துவா வெறுப்பு பேச்சு” என்ற குழுவில் பங்கேற்று, இனப்படுகொலைக்கான தூண்டுதலின் லென்ஸ் மூலம் வெறுப்பூட்டும் பேச்சுக்கு வழக்குத் தொடரப்பட வேண்டும் என்றார். “சமீபத்தில் இந்தியாவில் [இனப்படுகொலைக்கான] நேரடி அழைப்புகளை நாங்கள் பெற்றுள்ளோம்,” என்று அவர் கூறினார். இது சர்வ தேச சதி திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

மூத்த மனித உரிமை வழக்கறிஞர் மீதாலி ஜெயின், மியான்மர் மற்றும் எத்தியோப்பியாவில் காணப்படுவதைப் போன்று “இனப்படுகொலை குணாம்சம் கொண்ட” இந்தியாவில் வெறுப்புப் பேச்சு மற்றும் தவறான தகவல்கள் குறித்து முன்னதாக ஒரு அறிக்கையை வெளியிட்டதாகக் கூறினார். சில தவறான தகவல்களின் அடிப்படையில் அறிக்கையை வெளியிட்டார் என்பதை மறந்து விட்டு மேற்படி கருத்தரங்கில் பங்கேற்றுள்ளார். குடியுரிமை (திருத்தம்) சட்டத்தை (CAA) இந்தியா சட்டமாக்கிய காலத்தில் பேஸ்புக்கில் மில்லியன் கணக்கான பார்வைகளுடன் வெறுப்பு நிறைந்த நூற்றுக்கணக்கான பதிவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன, பேஸ்புக்கில் தவறான தகவல்கள், வேறு இடங்களில் நடந்த முஸ்லீம் தாக்குதல் புகைப்படங்களை வெளியிட்டு தனது தரப்பு வாதத்தை முன் வைத்தார். டெல்லியில் வன்முறையில் உச்சக்கட்டத்தை அடைந்தது, இது பல இது முஸ்லீம் அமைப்பான பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தூண்டுதலால் உருவானது என்பதை கூட கவனிக்க மறந்து விட்டார்கள். . ஒரு முஸ்லீம் கவுன்சிலர் வீட்டின் மாடியலிருந்து பெட்ரோல் குண்டுகள், கற்கள் போன்றவற்றை குவித்து வைத்தார் என்பது கூட இவர்களுக்கு இட்டுக் கட்டிய பொய்யாகவே தெரிகிறது.

“உலகளாவிய இஸ்லாமோஃபோபியாவில் இந்தியாவின் பங்கு” என்ற தலைப்பில் ஒரு குழுவில் பங்கேற்று, அமெரிக்காவின் ஜெய்துனா கல்லூரியின் இஸ்லாமிய சட்டப் பேராசிரியரான ஹடெம் பாஜியன், சீனா, இந்தியா, மியான்மர், பாலஸ்தீனம் மற்றும் காஷ்மீர் உட்பட உலகம் முழுவதும் முஸ்லிம்கள் இனப்படுகொலைகளை எதிர்கொள்கின்றனர் என்றார். . இஸ்லாமிய சட்ட பேராசிரியருக்கு சில சம்பவங்களை நினைவுப் படுத்த வேண்டும். காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதையே ஏற்க மறுக்கும் இவர்களின் பார்வையில் இந்தியா பற்றிய பார்வையும் மாறுப்பட்டதாகவே அமையும். சீனாவில் உய்கார் முஸ்லீம்கள் மீது நடத்திய இனப் படுகொலை சம்பந்தமாக மேற்படி அமைப்புகள் ஏன் உச்சி மாநாடு நடத்தவில்லை என்பதற்குறிய காரணங்கள் கொடுக்கவில்லை என்பதையும் இந்நேரத்தில் நினைவுப்படுத்த வேண்டும்.

1983 ஆம் ஆண்டு Nellie படுகொலையின் மூலம் யார் என்பதை கூட தெரிவிக்க மறுத்த இந்த அமைப்பினர், இது பற்றி மீன்டும் விசாரனையை நடத்த வேண்டும் என்கிறார்கள். லட்சக்கணக்கான பங்களா தேஷ் நாட்டினர் சட்ட விரோதமாக ஊடுருவியதற்கு வக்காலத்து வாங்கும் இவர்கள் தான் மோடி அரசை குறை கூறும் அறிவுஜீவிகள். இந்திய இராணுவத்தை “காஷ்மீர் இனப்படுகொலையாளர்” என்று அழைப்பது தனது அடிப்படை உரிமை என்று நம்பும் ஜேஎன்யு மாணவர் CFI இன் தேசியத் தலைவர் சாஜித் பின் சயீத்தை முன்னிலைப்படுத்திய இந்த அமைப்பினர் , 1989-ல் பாகல்பூரில் சமஸ்கிருத கல்லூரிக்குள் 33க்கும் மேற்பட்ட மாணவர்களை கொன்ற சம்பவத்தைப் பற்றி விவாதிக்கவில்லை.

1998-ல் லூதியானாவில் இரு முறை 100க்கும் மேற்பட்ட இந்துக்களை கொன்று குவித்த சம்பவம் பிரபல பத்திரிக்கையாளர்கள் கண்களுக்கு தெரியவில்லை. ஹரித்துவாரில் ஒரு இந்து சன்னியாசி பேசியதை மட்டும் முன்னிலைப்படுத்தி, இந்தியாவில் இன படுகொலை நடக்கும் என மாநாடு நடத்துபவர்கள், தவ்ஹீத் ஜமாத் தலைவர் P.Jainulabdeen, There are only 20,000 policeman in the state, whereas his organization had 50 lakhs activities ready to do anything என கூறியது இவர்களின் கண்களில் படவில்லை. ஏ.ஐ.எம்.ஐ.எம். சட்ட மன்ற உறுப்பினர் அக்பரூதின் ஒவைசி, Remove Police for 15 minutes , we could finish off 100 cores hindus. என பல நேரங்களில் பொது மேடைகளில் பேசியது இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்தாக கூறியது மாநாட்டு பொறுப்பாளர்களின் கண்களுக்கு தெரியாது.

மாநாடு அமைப்பாளர்களுக்கு முஸ்லீம் பயங்கரவாத அமைப்புகள் நடத்தி வரும் வன்முறை வெறியாட்டம் பற்றிய கருத்தரங்குகள் நடத்த முன் வருவதில்லை. ஏன் என்றால் மேற்படி மாநாடு நடத்தும் அமைப்புகளும் சரி அல்லது அந்த அமைப்பின் பொறுப்பாளர்கள் முஸ்லீம்களாகவும், பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவாளராகவும் உள்ளவர்கள். இவர்களின் பார்வையில் பல முஸ்லீம் நாடுகளில் ஷியா பிரிவினருக்கும் சன்னி பிரிவினருக்கும் நடக்கும் சண்டையில் நிகழும் இனப்படுகொலையைப் பற்றிய விவரங்களை கூட தெரிவிக்க மாட்டார்கள்.

மேற்படி மாநாட்டு பொறுப்பாளர்களின் பார்வையில் மறைந்த சில சம்பவங்களை குறிப்பிட வேண்டும் 1998-ல் சர்வதேச அளவில் 57 நாடுகளில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளால் நடத்திய தாக்குதல்களில் 9098 பேர்கள் கொல்லப்பட்டார்கள், 16, 926 பேர்கள் காயமடைந்தார்கள். 2009-ல் 40 நாடுகளில் 2131 தாக்குதல்களும், இத் தாக்குதல்களில் 9172 பேர்கள் கொல்லப்பட்டார்கள், 18612 பேர்கள் படுகாயமடைந்தார்கள். 2019-ல் 54 நாடுகளில் முஸ்லீம் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதல்கள் 1763, இதில் 10524 பேர்கள் கொல்லப்பட்டார்கள், 10725 பேர்கள் படுகாயமடைந்தார்கள். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் நீண்டு கொண்டே போகிறது. 2022 பிப்ரவரி மாதம் மட்டும் 20 நாடுகளில் முஸ்லீம் அடிப்படைவாத அமைப்புகள் நடத்திய தாக்குதல்களில் 369 பேர்கள் கொல்லப்பட்டார்கள்.

இம்மாதிரி தாக்குதல்களால் பாதிக்கப்படும் நாடுகள் ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், சிரியா , நைஜீரியா, ஈராக், ஈரான் போன்ற நாடுகள் என்பதும், இந்த நாடுகளில் நடக்கும் இனப்படுகொலையை பற்றிய ஆய்வும் அல்லது கருத்தரங்கமும் நடத்தப்படுவதில்லை. ஏன் இந்தியாவை மட்டும் குறி வைத்து தாக்குதல்களை நடத்துகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.

தங்களுக்கு அடிமையாகவே இருக்க வேண்டும் என்ற நினைவில் வாழ்கின்ற அந்நிய நாட்டு ஊடகங்கள் தொடர்ந்து மோடியின் ஆட்சி மீது வன்மத்தை புகுத்தும் ஈன செயல்கள் அறவே நிறுத்தப்பட வேண்டும்.

4 Replies to “இனப் படுகொலையை பற்றிய பொய் பிரச்சாரம்”

  1. தேசமெங்கும் தேசத்தை தாண்டியும் வசூலை அள்ளி குவிக்கின்றது காஷ்மீர்பைல்ஸ் திரைப்படம், பெரும் வரவேற்பை அப்படம் சில மாநிலங்களில் வருமானவரி விலக்கினை பெற்று தொடர்ந்து அசத்துகின்றது

    இந்நிலையில் அப்படத்தை காணவருமாறு பாஜக அண்ணாமலை மக்களுக்கும் தொண்டர்களுக்கும் அழைப்புவிடுத்துள்ளார், இனி தமிழக தியேட்டர்களை கையில் வைத்திருக்கும் மாபியாக்கள் நிச்சயம் ஏதாவது செய்வார்கள் என எதிர்பார்க்கபடுகின்றது

    என்ன செய்வார்கள்? சொல்லமுடியாது “பராசக்தி” படத்தை ஓடவிட்டுவிட்டு அவர்கள் போக்கில் இருப்பார்கள்

    “என் ஓட்டத்தை நிறுத்தியிருக்கவேண்டும், வாட்டத்தை போக்கியிருக்க வேண்டும் சட்டத்தை நீட்டுவோர், வாழவிட்டார்களா இந்த கல்யாணராமனை………..” என்ற வசனம் பல தியேட்டர்களில் வந்தாலும் வரலாம்

  2. மாப்பிள்ளைமார் கலவரம் என்றால் என்ன? என சிலர் கேட்பதால் சொல்கின்றோம், அது கிட்டதட்ட 100 வருடங்களுக்கு முன்னால் அதாவது 1921 ஆகஸ்ட் மாதம் கேரளாவின் மலபார் பகுதிகளில் நடைபெற்ற பெரும் கலவரம்,

    இந்த மாப்பிள்ள்ளைமார்கள் யாரென்றால் மலபாரில் வசித்த அரபு இந்திய கலப்பு சமூகம். அதாவது கேரளாவின் மேற்கு பகுதிகடற்கரைக்கும் அரேபியாவுக்குமான கப்பல் போக்குவரத்து பலநூறு காலத்துக்கு முந்தையது, அப்படி வந்த அராபியர்கள் உள்ளூர் மக்களுடன் சம்பந்தம் செய்தனர், மாப்பிள்ளைகள் என உரிமையாக அழைக்கபட்டனர்,

    இந்த மாப்பிள்ளை மாமா உறவு இன்றும் பல இடங்களில் இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் இருக்கும் அக்கால உறவின் தொடர்ச்சி என்பதில் சந்தேகமில்லை, பல இடங்களில் இதனை காணலாம்

    இந்த மலபார் சிக்கல் தொடக்கத்தில் இருந்தே இருந்ததில்லை , 17ம் நூற்றாண்டில் திப்பு சுல்தானின் மலபார் படையெடுப்பு இந்துக்களுக்கு எதிரான பல கொடுமைகளை செய்தது, இந்துக்களின் நிலமும் சொத்தும் அபகரிக்கபட்டு கட்டாயமதமாற்றமும் இன்னும் என்னவெல்லாமோ எல்லாம் நடந்தது

    திப்புவினை வீழ்த்திய வெள்ளையர்கள் அந்த திப்பு செய்த அட்டகாசத்தை தலைகீழாக செய்தனர், இந்து மக்களின் ஆதரவுக்காக மறுபடி நிலங்களை இந்துக்களிடம் ஒப்படைத்தல் இந்துக்களுக்கு உரிமையினை மீண்டும் வழங்குதல் என நிலையினை மாற்றினர், ஆனாலும் இரு இனங்களுக்கும் இடையேயான பகை அப்படியே இருக்கவேண்டும் என அவர்களுக்கு பெரும் விருப்பம்

    17ம் நூற்றாண்டுக்கு பின் நிலமை அமைதியானாலும் கேரள மன்னர்களும் வெள்ளையனும் சேர்ந்து தங்களுக்கு அநீதி இழைத்ததாக மாப்பிள்ளைமார் தரப்பில் ஒரு அதிருப்தி நிலவியிருந்தது அல்லது அப்படி ஒரு பிம்பம் அமைக்கபட்டிருந்தது

    இந்நிலையில்தான் கிலாபத் இயக்கம் வந்தது , இந்த கிலாபத் இயக்கம் என்றால் என்ன?

    அன்று உலக இஸ்லாமியர்களின் பெருமையான அரசுகளாக விளங்கியவை இரண்டு ஒன்று மொகலாய சாம்ராஜ்யம் இன்னொன்று ஆட்டோமன் துருக்கிய சாம்ராஜ்யம்

    இந்த இரண்டையும் நினைத்து நினைத்து உலக இஸ்லாமியர்கள் மகிழ்வார்கள், அன்று அரபு தேசங்களெலெல்லாம் இல்லை எண்ணெய் இல்லை அங்கே ஒட்டகமும் பேரிட்சைபழங்களும் நிலவழி வியாபாரம் மட்டுமே இருந்தன

    இதனால் உஸ்கெக்கின் தைமூர், துருக்கியின் ஆட்டோமன், மொகலாயரின் ஷாஜகான் போன்றோர் மிகபெரிய இஸ்லாமிய அடையாளங்கள் அதில் தைமூருக்கு பின் உஸ்பெக் சாம்ராஜ்யம் அழிந்தாலும் மொகலாயமும் துருக்கியும் தனித்து நின்றன‌

    இதில் மொகலாயர் அழிவினை வீர சிவாஜி தொடங்கி வைத்தான் அதை பிரிட்டிசார் வந்து முடித்து வைத்தனர், ஆனால் ஆட்டோமன் சாம்ராஜ்யம் நீடித்தது

    அது நெப்போலியனே மோத அஞ்சிய சாம்ராஜ்யம் , சிலுவைபோர்களின் தொடர்ச்சியாக உருவான வலுவான இஸ்லாமிய சாம்ரஜ்யம்

    அவர்கள் நிலவழியினை அடைத்தபின்புதான் கொலம்பஸ், வாஸ்கோடகாமா என பலர் கப்பல் ஏறி இந்தியாவுக்கு வழிதேடினர், ஆம் அவர்களை நிலத்தில் வெல்ல ஐரோப்பியரால் முடியவில்லை

    சுமார் 500 வருடகாலம் இஸ்லாமிய சாம்ராஜ்யமாக இருந்த கோட்டை அது, அந்த கோட்டை முதலாம் உலகப்போர் முடிவில் உடைக்கபட்டு துருக்கி எனும் பெரிய தேசம் கலைக்கபட்டது

    அது கலைவதை உலக இஸ்லாமியர் விரும்பவில்லை தங்கள் பெரும் நம்பிக்கை தகர்வதாக கதறினார்கள், அது இஸ்லாத்தின் தலமையகமாக அன்று இருந்தது

    வாடிகன் மேல் கைவைத்தால் கிறிஸ்தவர்கள் எப்படி பொங்குவார்களோ அன்று இஸ்லாம் சமூகம் அப்படி பொங்கிற்று

    கலீபாக்களின் தலைநாடு காக்கபட வேண்டும் என அலி சகோதரர்கள் என அழைக்கப்பட்ட முகமது அலி மற்றும் சௌகத் அலி ஆகியோர் 1919ம் ஆண்டு இந்தியாவில் கிலாபத் இயக்கத்தைத் தொடங்கினர்.
    இதுதான் பாகிஸ்தான் எனும் தேசத்துக்கு முன்னோடி அமைப்பு

    இந்த அமைப்பு துருக்கியினை காப்போம் என இங்கே போராட ஆரம்பித்தது, அது துருக்கியினை பிரிட்டிசார் உடைக்க கூடாது என நெருக்கடி கொடுக்க காந்தியினை அழைத்தது

    இஸ்லாமிய சகோதரர்களின் கோரிக்கைக்கு குரல் கொடுக்கின்றேன் என காந்தியும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டார்

    இதில் மிகபெரிய காமெடி என்னவென்றால் இதே காந்திதான் முதல் உலகபோரில் இந்திய வீரர்கள் கலந்து கொள்ள அழைப்புவிடுத்தார், அதில்தான் 1919ல் பிரிட்டிஷ் அரசு துருக்கியினை வீழ்த்தியது, பாலஸ்தீனத்தில் இருந்து நடந்த தென்முனை தாக்குதலில் இந்தியர்கள் கலந்து கொண்டனர்

    ஆக இரு பக்கமும் ஆதரவு எனும் குழப்ப நிலையில் காந்தி இருந்தார்

    கிலாபத் இயக்கம் முழுவதும் இஸ்லாமிய மனபான்மை கொண்ட இயக்கம் அது தேசத்தை விட மதமும் அந்த அபிமானமும் கொண்ட இயக்கம் எனபதால் காந்தியின் அமைதி பலத்த கண்டத்துகுள்ளானது

    கிலாபத் இயக்கத்தின் மாநாட்டில்தான் இங்கே தனி இஸ்லாமிய நாடு இஸ்லாமியர்களுக்கு தனிதேசம் என்றெல்லாம் குரல்கள் வந்தன, காந்தி அதை கண்டிக்கவில்லை

    இந்த மாநாட்டின் தொடர்ச்சிதான் இஸ்லாமியருக்கு இனி தேசமில்லை நாமே அமைக்கவேண்டும் என்றெல்லாம் ஆங்காங்கே கலவர காட்சிகள் தொடங்கின, இது மலபாரில் புகைந்திருந்த கணலில் பெட்ரோல் ஊற்றியது போல் பெரிதாக எரிந்தது

    இந்துக்களிடம் இருந்து அதிகாரத்தை கைபற்றி தனிநாடு அமைப்போம் என பெரும் கூட்டம் கிளம்பி வரலாறு காணா கொலைகள் நடந்தன, பலமாதம் அந்த கலவரம் நீடித்தது

    அதில் எவ்வளவு ஆயிரம் கற்பழிப்பு நடந்தது, எவ்வளவு கொலை நடந்தது என இன்றுவரை முழு தகவல் இல்லை எனினும் வெள்ளையன் கடைசியில் அறிவித்ததுமட்டும் சுமார் 15 ஆயிரம் முதல் 20000 பேர் இறந்திருக்கலாம் என்பது

    கலவரத்தை அடக்கும் காட்சிகள் மெதுவாகத்தான் நடந்தன, முதலில் ஏதோ மோதல் என அமைதியாக இருந்த சென்னை மாகாண ஆளுநர் விலிங்க்டன் மெல்ல நிலமையின் வீரியத்தை அறிய மாதகணக்கு ஆனது

    காந்தி இந்த கலவரத்தை வெகு எளிதாக கடந்து சென்றார், சில இந்துக்களே நில தகறாறில் கொல்லபட்டார்கள் இதை பெரிதாக்க கூடாது என மனசாட்சியினை கொன்றுவிட்டு பேசிகொண்டிருந்தார்

    அந்த காலங்கள் எவ்வளவு கொடூரமாக இருந்ததென்றால் காணும் கிணறேல்லாம் இந்து பெண்களின் துண்டான உடலால் நிரப்பபட்டு அவை அப்படியே மூடபடும் அளவு கொடிய காட்சிகளாய் இருந்தது என்கின்றது வரலாறு

    பல்லாயிரம் இந்துக்கள் கொல்லபட்ட இந்த “இனபடுகொலை” குற்றவாளிகள் என 10 பேரை தூக்கு தண்டனை விதித்தது பிரிட்டிஷ் அரசு, இவர்கள் கிலாபத் இயக்க ஆட்களாய் இருந்தார்கள்

    பிரிட்டிஷ் ராணுவம் காட்சிக்குள் வந்து கலவரத்தை அடக்கியபின்பே பெரும் சோக காட்சிகள் உலகுக்கு தெரிந்தன‌

    ஹிட்லரிடம் யூத இனம் பட்ட அத்தனை கொடுமைகளும் அங்கே அரங்கேறியிருந்தன, ஒருவகையில் ஹிட்லர் நல்லவன் விஷவாயு செலுத்தி யூதரை அழுகையும் கண்ணீருமின்றி கொன்றான்

    இங்கோ காட்டில் எலிகளை அழிப்பது போல் இரக்கமின்றி இந்துக்களை கொன்றிருந்தார்கள்

    உண்மையில் மிக கொடுமையான வரலாறு இது

    எங்கோ துருக்கியில் ஒரு சாம்ராஜ்யம் உடைய கூடாது என்றும், அப்படி உடைந்தால் இந்தியாவினை உடைப்போம் என்று சொந்த மக்களை கொன்று குவித்ததெல்லாம் மன்னிக்கமுடியா குற்றம்

    இதனை நிலவுடமை போர் என கம்யூனிஸ்டுகளும், தேசவிடுதலைபோர் மாப்ளாக்கள் செய்தது பிரிட்டிசாருக்கான எதிர்ப்பு போர் என சொல்வோரும் உண்டு, ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியாளர் சாகவில்லை கலவரத்தை அடக்க சென்ற காவலர் தவிர வேறுயாரும் சாகவில்லை செத்ததெல்லாம் இந்துக்கள்

    இந்து பெண்களையும் குழந்தைகளையும் மிக கொடூரமாக கொன்றுவிட்டு அதை சுதந்திரபோர் என சொல்லும் அளவு கொடுமை வரலாற்றில் நடந்தது

    1921 மற்றும் 1922ல் மலபார் எரிந்து எத்தனை ஆயிரம் இந்துக்க்களோ செத்த நிலையில் ஆம் பிரிட்டிசாரின் மறைக்கபட்ட குறைவான கணக்கே 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் என்றால் உண்மை நிலவரம் என்ன என்பதை ஊகித்து கொள்ளலாம் அந்நிலையிலும் காந்தியோ நேருவோ மலபார் பக்கம் செல்லவே இல்லை

    தமிழக புரட்சியாளன் 1924ல் வைக்கம் கோவிலில் சாதி சிக்கல் என ஓடிய ராம்சாமி அவர்களும், இந்துக்கள் கொத்து கொத்தாக கொல்லபட்டபொழுதும் அதன் பின்னும் அந்த இடத்துபக்கமே செல்லவில்லை

    சரி, அதன் பின்னும் இந்த 100 ஆண்டுகளில் இந்திய தலைவர்கள் யாராவது சென்றார்களா , துருக்கி பிளப்புக்காக இங்கு செத்த அப்பாவி இந்துக்களுக்கு அஞ்சலி செலுத்தினார்களா என்றால் இல்லை

    அவர்களுக்கு மலபார் பக்கம் ஒரு நினைவிடம் உண்டா என்றால் அதுவுமில்லை

    இந்தியாவின் கலவரங்களில் மிக கடுமையானதும் நினைத்தாலே குலைநடுங்குவதுமானது அந்த மலபார் கலவரம்

    எம்மால் சுருக்கமாக இவ்வளவுதான் சொல்லமுடியும், அங்கு கலவரம் முடிந்த கொடுமைகளுக்கு பின்னும் உயிர்தப்பிய பெண்களுக்கெல்லாம் கருகலைப்பு கட்டாயம் எனும் அளவு நிலமை இருந்ததென்றால் அதற்கு மேலும் சொல்ல ஒன்றுமில்லை

    இந்திய தேசத்தின் மறைக்கபட்ட ரத்த வரலாறு இது, 1921க்கு பின்னரான காந்தியின் சுதந்திர நாடக காட்சிகளில் இந்த கோரம் மறைக்கபட்டது பின் கேரளாவினை காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் மாறி மாறி ஆண்டதில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை எனும் அளவு காலத்தின் மேல் சுண்ணாம்பு அடிக்கபட்டது

    காஷ்மீர்பைல்ஸ் படத்தை தொடர்ந்து மலபார் கொடுமையும் படமாக வரும் என்ற அறிவிப்பு வந்ததாக சில தகவல்கள் தெரிவிகின்றன, வந்தால் எல்லோருக்கும் அதன் வீரியம் தெரியும்

    இதெல்லாம் ஆட்சியில் இல்லா மதமும் அதன் மக்களும் எதிர்கொள்ளும் சவால்கள், ஆட்சியில் இல்லா மதம் நிலைக்காது அதன் மக்களுக்கு காவலும் சட்டமும் இருக்காது அவர்கள் வேலியற்ற பயிர்கள், காவலில்லா ஆடுகள் என்பதை காட்டிய ரத்த வரலாறு

    மலபார் கலவரத்தை போல கொடியது சிவாஜி காலத்துக்கு முன் அதாவது 16ம் நூற்றாண்டில் கோவாவில் போர்த்துகீசிய மிஷனரிகள் நடத்திய “புனித விசாரணை” எனும் ரத்தவெறி ஆட்டம்

    எங்கிருந்தோ வந்த அக்கோஷ்டிகள் தங்களுக்கு ஆதரவாக இருக்க இங்கு பலரை மதம் மாற்றி, அதை தக்கவைக்க நிகழ்த்திய மிகபெரும் வெறியாட்டம்

    அதை அன்றைய மொகலாய அரசோ, பிஜப்பூர் சுல்தானோ கண்டிக்கவே இல்லை அதன் பின்னும் போர்ச்சுகீசியரின் மிரட்டல் இருக்கத்தான் செய்தது, சிவாஜிதான் கப்பல்படை கட்டி அவர்களை அடக்கி வைத்தான்

    அந்த “கோவாவின் புனித விசாரணை” என்பதுதான் ஒரு காலத்தில் லத்தீன் அமெரிக்காவில் ஸ்பானியர்களும் போர்த்துகீசியர்களும் அந்த மக்களுக்கு செய்த கொடூரத்தை இந்திய இந்துமக்களுக்கும் செய்த கொடும் காட்சிகள்

    ரத்ததில் மரித்த இயேசுவின் பெயரில் இந்துக்களை ரத்தத்தில் குளிக்கவைத்து கொன்று பரிசுத்த ஆவியின் தண்டனை என நெருப்பில் எரித்து போட்ட கொடூரங்கள்

    இங்கு மலபார் கலவரம் கூட படமாக வரும், ஆனால் கோவாவின் கலவரங்கள் நிச்சயம் படமாக வராது, வருவதற்கு இங்கிருக்கும் மாய சக்திகள் விடாது

  3. இந்தியாவுக்கு மோடி மாபெரும் நல்வழியினை காட்டியுள்ளார் அவரின் மிகசிறந்த சர்வதேச அணுகுமுறை சரியான நேரத்தில் தேசத்துக்கு நல்வழி காட்டியிருக்கின்றது

    பாரதம் உலகத்தில் ஒரு நாடு என்பதால் உலகளாவிய நெருக்கடிக்கு அதுவும் தப்பமுடியாது, உலக பாதிப்புகளெல்லாம் தேசத்தை தாக்கியே தீரும் அதனை திறமையாக சமாளிப்பதுதான் தேசிய அரசின் கடமை அது திறமையும் கூட‌

    அவ்வகையில் உக்ரைன் போரினால் எண்ணெய் விலை உலக சந்தையில் கணிசமாக எகிறியிருக்கின்றது, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வரலாறு காணா விலை உயர்வு ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவிலும் அது உயரவேண்டும்

    ஆனால் ஏற்கனவே எண்ணெய்விலை உச்சத்தில் இருக்கும் நாட்டில் இன்னும் உயர்த்த மோடி அரசு விரும்பவில்லை காரணம் அது மக்கள் நலமுள்ள அரசு, அரசியலை தாண்டி அவர்களுக்கு மக்கள் அபிமானம் எப்பொழுதும் அதிகம்

    உபி தேர்தலுக்காக விலை ஏறவில்லை அதன் பின் விலை ஏறும் என ராகுல் சொல்வதெல்லாம் அபத்தம் அதனால்தான் காங்கிரஸ் கட்சியினை மக்கள் வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருக்கின்றனர், எந்த பிரதமர் என்றாலும் இந்த உலகளாவிய விலை உயர்வை தடுக்க முடியாது

    மோடி அரசுக்கு இதில் ஒரு வாய்ப்பு அழகாக உருவாகின்றது அல்லது முன் கூட்டியே அவர் செய்த தீர்க்கதரிசனமான முடிவு

    மோடி அரசு உலக அரங்கில் ரஷ்யாவின் பிடியில் இருந்து தன்னைவிடுவித்து அதனை தனக்கு ஏற்ற வகையில் பாவித்து கொண்டது

    அதாவது முந்தைய காங்கிரஸ் அரசுகள் ரஷ்யாவின் முழுபிடியில் சிக்கியிருந்தன ரஷ்யா இன்று உக்ரைனில் தூர வீசி எறியும் பழைய ஆயுதங்களை இந்தியா தலையில் கட்டிவைத்து பெரும் பணம் பார்த்துகொண்டிருந்தது, இந்தியாவின் அணிசேரா கொள்கை முதல் பாகிஸ்தானின் அமெரிக்க நெருக்கம் வரை ரஷ்யாவுக்கு சாதகமாய் இருந்தது

    மோடி அரசு அணிசேரா கொள்கையினை கடாசிவிட்டு இந்தியாவுக்கு எது நல்லதோ அதை அமெரிக்கா மற்று ரஷ்யாவிடம் இருந்து பெற்றுகொள்ள துணிச்சலாக முடிவெடுத்தது, சுமார் 60 ஆண்டுகால ரஷ்ய பிடியில் இருந்து வெளிவந்தது, இந்தியாவுக்கு நாங்கள் விரும்பியதெல்லாம் தருவோம் இந்தியா வாங்கி தீரவேண்டும் எனும் மிரட்டலில் இருந்து விலகி இந்தியாவுக்கு தேவையானதை மட்டும் வாங்குவோம் என ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது மோடி அரசு

    ரஷ்யாவிடம் இருந்து கவனமாக தேவைபடும் ஆயுதங்களை மட்டும் வாங்கிய இந்தியா இதர நாடுகளிலும் வாங்கியது தன்சொந்த உற்பத்தியில் இறங்கியது

    அப்படியே அரபு நாடுகளை மட்டும் சாராமல் ரஷ்யாவில் இருந்தும் எண்ணெய் வாங்க ஒப்பந்தமிட்டது

    ஆம் ரஷ்யா தன் பழைய காயலான் கடை குடோனாக , பழைய இரும்பு கடையாக மட்டும் பார்த்த ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்து அதன் ஆயுதங்களை குறைத்துவாங்கி எண்ணெயினை அதிகம் பெறும் வர்த்தகத்துக்கு மோடி அரசு மாறிற்று

    இதனால் இரு அனுகூலங்கள் நிகழ்ந்தன‌

    முதலாவது ரஷ்ய ஆயுத இறக்குமதி குறைந்தது இன்னொரு எண்ணெய் சந்தையினை தேசம் கண்டடைந்தது

    அதுவரை இந்தியாவுக்கு தங்களைவிட்டால் யாருமில்லை என இறுமாந்திருந்த அரபுநாடுகள் இந்தியா எனும் பெரும் சந்தையினை இழக்க விரும்பாமல் இறங்கிவந்தன இன்று அரபுலகில் இந்திய செல்வாக்கு அதிகம் இருக்கின்றது

    இந்த திட்டத்தில்தான் முன்பு மோடியும் புட்டீனும் ரஷ்யாவின் கிழக்கு நகரமான விலாடிவோஸ்டாக் நகரில் எண்ணெய் ஒப்பந்தம் செய்தனர், இதில் இன்னொரு அழகான திருப்பத்தை நாட்டுக்கு கொடுத்தார் மோடி

    ஆம் அரபுலகில் இருந்து அரபுகடல் வழியாக‌ எண்ணெய் கப்பல் அதிகம் வருவதால் மும்பை குஜராத் உள்ளிட்ட மேற்கு கடற்கரைகள் வேகமாக வளர்ந்தன, கிழக்கே சென்னை, விசாகப்ட்டினம், பாரதீப் போன்றவை பெரும் வளர்ச்சி காணவில்லை காரணம் எண்ணெய் கப்பல் வரவில்லை

    மோடி கிழக்கே ரஷ்யாவில் இருந்து சீனா வழியாக கப்பல் வரும்படி செய்து வங்க கடல் பாதையில் அதிக எண்ணெய் கப்பல் சுற்ற வழிவகுத்தார், இதனால் இனி நாட்டின் கிழக்கு கடற்கரை வளரும்

    இந்த திட்டத்தின்படி ரஷ்யாவில் இருந்து எண்ணெய் தென் சீனகடல் வங்க கடல் வழியாக இந்தியா வரும்

    இதனால் சீன கடல்பாதையில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும், இந்த வர்த்தகம் ரூபாய் ரூபிளில் நடப்பதால் டாலர் பரிவர்த்தனை செலவு இல்லை இன்னும் பணம் மிச்சமாகும்

    இது கடந்த டிசம்பரில் புட்டீன் இந்தியா வந்தபொழுது பூரணமானது., எண்ணெய் வரதொடங்கிய நேரத்தில்தான் பெரும் யுத்தம் உக்ரைனில் வெடித்தது ரஷ்யாமேல் தடைகள் வலுத்தன‌

    ஐரோப்பிய நாடுகள் சந்தையினை இழந்த ரஷ்யா சீன இந்திய சந்தையினை பிடித்தால் போதும் சுமார் 250 கோடி மக்கள் கொண்ட இந்த இருநாட்டிலும் குறைந்த விலைக்கு எண்ணெய் விற்றாலும் ஐரோப்பிய லாப கணக்கை சரியாக எட்டலாம் என முனைந்தது

    இங்கேதான் அமெரிக்க மிரட்டல் வரும் எனும் அச்சம் இருந்தது, ஆனால் நேற்று காட்சிகள் மாறின‌

    ரஷ்ய எண்ணெயினை இந்தியா வாங்க தடை இல்லை என அமெரிக்கா அறிவித்திருக்கின்றது, உலக எண்ணெய் சந்தை டாலரில்தான் நடகக்வேண்டும் அதுவும் தன் கண்காணிப்பில்தான் நடக்கவேண்டும் என்ற கொள்கையுடைய அமெரிக்கா இந்த வர்த்தகத்தை தடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது

    ஆனால் ஆசியாவில் இந்தியாவினை இனி பகைக்கமுடியாது என உணர்ந்த அமெரிக்கா “ரஷ்ய தலமையினை ஆதரிப்பது வேறு, ரஷ்ய மக்களின் அடிப்படை தேவைக்கு உதவுவது வேறு” என விளக்கம் சொல்லி இந்தியாவுக்கு அனுமதிகொடுத்தாயிற்று

    இனி ரஷ்ய எண்ணெய் குறைந்த விலையில் வரும் இதனால் நாடு அடையும் பயன்கள் ஏராளம்

    எண்ணெய் விலை இனி நிலையாகும் , உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை. கிழக்கு கடற்கரை இனி வேகமாக வளரும் சென்னை போன்ற இடங்களில் எண்ணெய் சுத்திகரிப்பு பெரும் ஆலைகள் வரும்

    அரேபியாவில் இருந்து எண்ணெய் குறையும் அந்நாடுகளுக்கு இந்தியாமேல் ஒரு மெல்லிய அச்சம் வரும், அவர்களும் இறங்கிவருவார்கள்

    ரஷ்யாவுடனும் அமெரிக்காவுடனும் சமமாக பேணபடும் இந்த உறவு நல்ல விஷயங்களை நாட்டுக்கு கொடுக்கும்

    முன்பு இந்திரா அமெரிக்காவுக்கு அஞ்சி இந்திய பணத்தை சடுதியாக குறைத்தது போல் அல்லாமல், சோவியத்துக்கு அஞ்சி அதன் பழைய இரும்பை எல்லாம் வாங்கியது போல் அல்லாமல் அரபு நாட்டு மிரட்டலுக்கு அஞ்சி அவர்கள் எண்ணெயினை மட்டும் வாங்கி அடங்கியது போல் அல்லாமல் நாட்டுக்கு எது தேவையோ அதை செய்கின்றது மோடி அரசு

    இந்த மண் அரசியல் பெரும்ஞானி கண்ணபிரான் வாழ்ந்த மண், மோடியின் நடவடிக்கைகளெல்லாம் அந்த மாயகண்ணனின் சாயலில் நடப்பவை

    ஆனால் சில இடங்களில் பலராமன் பாதையினையும் அவர் எடுப்பார், ஆம் அந்த பலராமன் மகாபாரத பெரும் போரில் கலந்துகொள்ளவில்லை, கண்ணன் தன் படை ஒரு பக்கம் தான் ஒரு பக்கம் என நின்றபொழுதும் பலராமனோ தவறு இருபக்கமும் உண்டு என யுத்தபக்கம் செல்லாமல் ஒருபக்கம் சாராமல் நடுநிலையாய் ஒதுங்கிநின்றார், அவர் ராஜ்ஜியம் வாழ்ந்தது

    மோடி இப்பொழுது பலராமனின் பாதையில் நாட்டை நடத்துகின்றார், உலகம் முறுகலில் நிற்கும் பதற்றமான நேரம் முன்கூட்டியே பல காரியங்களை செய்து நாட்டை மிக சரியாக நடத்தி செல்லும் அந்த பெருமகனை ஒவ்வொரு இந்தியனும் நன்றியோடு வணங்கிகொண்டிருக்கின்றார்கள்

    (காமராஜரின் காலத்துக்கு பின் பெரும் மத்திய அரசின் திட்டம் சென்னைக்கு வரவில்லை, மோடி அரசுதான் இப்பொழுது சென்னையினை மறுபடியும் உலக அரங்கின் முன்னணி நகரமாக்கும் காரியத்தை செய்கின்றது

    பாஜக மத்திய அரசுதான் இப்பொழுது தமிழக சென்னைக்கு பெரும் திட்டம் கொண்டு வருகின்றது)

    வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்

  4. இப்படி பேசுனவங்கள நம்புன நாடு, எப்படி உருப்படும்?

    நடு நிலை பேசும் இந்துக்கள்
    ஒரு நிமிடம்

    *மதச்சார்பின்மை பேசுவோர் கவனத்திற்கு ….*

    இந்தியா பாகிஸ்தானைத் தாக்கத் துணிந்தால், 25 கோடி இந்திய முஸ்லிம்கள் அனைவரும் பாகிஸ்தான் படைகளில் சேர்ந்து இந்தியாவுக்கு எதிராக போராடுவார்கள் – அசாதுதீன்_ஒவைசி_MP ஹைதராபாத்.

    அரபுநிலம்,அல்லது 56 இஸ்லாமிய நாடுகளில் ஏதேனும் ஒன்றில் வாக்களிக்க இந்துக்களுக்கு எந்த உரிமையும் இல்லை ஆனால் இந்தியாவில் முஸ்லிம்களின் வாக்குரிமைக்கு கட்டுப்பாடுகளை விதிக்க ஒரு ஹிந்துவுக்குக் கூட தைரியம் உள்ளதா என்று நான் சவால் விடுகிறேன் – மவுலானா_பதர்ருதீன்_அஜ்மல், அசாம்

    ஹைதராபாத்தில், முஸ்லீம் மக்கள் தொகை 50% தாண்டிவிட்டது, இப்போது நாங்கள் பெரும்பான்மையில் இருக்கிறோம். ஆகவே,ராம நவமி, அனுமன் ஜெயந்தி போன்ற இந்து பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க ஆட்சியாளர்களை நான் கோருகிறேன்.
    சார்மினார் அருகிலுள்ள பாக்ய லட்சுமி கோவிலில் பூஜை மணி,கோங்கை ஒலிப்பதை நிறுத்துவதன் மூலம் நாங்கள் ஏற்கனவே எங்கள் பலத்தைக் காட்டியுள்ளோம் இந்த ஆலயமும் அழிக்கப்படுவதை முஸ்லிம்களான நாங்கள் உறுதி செய்வோம் – அக்பருதீன் சன்சாத் மஜ்லிஸ் இ இத்தேஹாதுல் முசல்மீன் AIMIM

    பங்களாதேஷில் இந்துக்கள் மற்றும் புத்த மதத்தினர் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவது ஏனெனில் பங்களாதேஷ் ஒரு இஸ்லாமிய நாடு, மதச்சார்பற்றது அல்ல இப்போது முஸ்லிம்கள் இங்கு பெரும்பான்மையாக உள்ளனர்.
    இந்தச் சூழ்நிலையில் இந்துக்களும் புத்த மதத்தினரும் பாதுகாப்பாக வாழ விரும்பினால், அவர்கள் ஒன்று இஸ்லாத்திற்கு மதம் மாற வேண்டும் அல்லது இந்தியாவுக்குச் செல்ல வேண்டும் – பேகம்_கலிதா_ஜியா, தலைவர், பங்களாதேஷ் கட்சி.

    இந்து தலைவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் முஸ்லீம் தொப்பியை அணியக்கூடும், ஆனால் நாங்கள் முஸ்லீம் தலைவர்கள் ஒருபோதும் நெற்றியில் திலகம் அணிய மாட்டோம்.

    இந்துக்கள் நம் நமாஸுக்கு எந்தவிதமான மரியாதையும் கொடுக்கட்டும்,
    ஆனால் நாங்கள் முஸ்லிம்கள் நிச்சயமாக வந்தே மாதரத்தை புறக்கணிப்போம் – அசாம்_கான், சமாஜ்வாடி கட்சியின் தலைவர், யு.பி.

    முஸ்லிம்கள் 800 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்துள்ளனர் பல லட்சம் இந்துக்கள் தலை துண்டிக்கப்பட்டுள்ளனர்.கோடிக்கணக்கான இந்துக்கள் மதம் மாற்றப்பட்டனர். நாங்கள் இந்தியாவைப் பிரித்து பாகிஸ்தானையும் பங்களாதேஷையும் பறித்தோம்.2000 கோயில்களை இடித்து மசூதிகளாக மாற்றினோம்.
    ஹிந்துக்கள் இன்றும் ‘ஹிந்துக்களும் முஸ்லீம்களும் சகோதரர்களாக வாழ்வோம் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்
    இது இஸ்லாத்தின் வலிமை – ஜாகிர்_நாயக்

    எந்த ஆட்சியாளருக்கும், அரசாங்கத்திற்கும் நாங்கள் பயப்படவில்லை ஏனென்றால் ஏற்கனவே முஸ்லிம் சமூகம் கணிசமாக வளர்ந்துள்ளோம். எந்த தாயின்மகனும் தலையிட்டால், நாங்கள் சமாளிப்போம் – நூர்_ரஹ்மான் பர்கதி, ஷாஹி இமாம், திப்பு சுல்தான் மஸ்ஜித், கொல்கத்தா

    எங்கள் வலிமையை பாருங்கள். இந்துக்கள் தங்கள் சொந்த நாட்டில் ஒரு ராமர் கோயிலைக் கூட கட்ட முடியாமல் தவிக்கிறார்கள் – சையத்_அஹ்மத்_புகாரி,ஷாஹி இமாம்

    எங்கள் பங்களாதேஷ் முஸ்லீம் சகோதரர்கள் அஸ்ஸாமிற்குள் ஊடுருவுவதை தடுக்க எந்த ஹிந்துக்களிடமும் தைரியம் இல்லை. நாங்கள் தொடர்ந்து ஊடுருவுகிறோம் – மவுலானாபதர்ருதின்_அஜ்மல், லோக்சபா சன்சாத், ஏ.யு.டி.எஃப்,அசாம்.

    இந்த நிலைக்கு யார் காரணம் என என்றாவது *இந்துக்கள் யோசித்தது உண்டா ?*❓️❓️❓️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *