ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 5

திராவிட தேச மன்னர்கள் வேத தர்மத்தை பின்பற்றினார்களா?

ஸ்ரீமத் பாகவதம் காண்டம் 8 அத்தியாயம் 24 லில் , திராவிட தேசம் எனப்படும் தென்னிந்தியாவில் வைவஸ்வத மனுவின் தோற்றத்தை விவரிக்கிறது. சக்ஷுஷ மனுவின் ஆட்சியின் போது சத்யவ்ரதன் என்ற ஒரு மன்னர் இருந்தார், அவர் ஒரு சிறந்த பக்தி கொண்ட அரசராக இருந்தார். அவரைக் காப்பாற்ற விஷ்ணு பகவான் இரண்டாவது முறையாக மச்ச அவதாரமாகத் தோன்றினார்.

புகைப்பட ஆதாரம் : presswire18.com/

காலப்போக்கில், பிரளய அழிவு நடந்து இந்த உலகமே தண்ணீரில் மூழ்கியது. அப்போது ஒரு பெரிய படகு ஒன்று அருகில் வருவதை மன்னர் பார்த்தார். மகராஜா சத்யவ்ரதர் கற்றறிந்த பிராமணர்கள் மற்றும் துறவிகளுடன் அந்தப் படகில் ஏறி பரம புருஷ பகவானை வணங்கி பிரார்த்தனை செய்தார். அப்பொது ஒரு தங்க நிற மீன் தோன்றியது. அப்பொது சத்யவ்ரதர் வாசுகி என்ற பாம்பால் படகை மீனுடைய கொம்பில் கட்டினார். படகை இழுத்துக் கொண்டு போகும்போது, மச்ச அவதார புருஷரானவர் மகாராஜா சத்யவ்ரதருக்கும் துறவிகளுக்கும் வேத அறிவைக் கற்றுக் கொடுத்தார்.

மன்னர் சத்யவ்ரதர் தனது அடுத்த பிறவியில் சூரியக் கடவுளான விவஸ்வானின் மகனாகப் பிறந்தார். இந்த மனு விவஸ்வானின் மகன் என்பதால் வைவஸ்வத மனு என்று பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அழைக்கப்படுகிறார். அவர் பரம புருஷன் பகவான் கிருஷ்ணரால் மனுவாக நியமிக்கப்பட்டார். சூரியக் கடவுள் விவஸ்வான் தனது மகன் வைவஸ்வத மனுவிடம் பகவத் கீதையின் தத்துவத்தை உபதேசித்தார்.

இந்த மனுவானவர், வைவஸ்வத மனு என்று மட்டுமல்லாமல், ஸ்ரத்த தேவா என்றும் அழைக்கப்படுகிறார். வைவஸ்வத மனு இந்த யுக சுழற்சியில் மனித குலத்தின் முதல் முன்னோடி. அவர் சூரியக் கடவுளின் மகனாகப் பிறந்ததால், சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர் ஆகின்றார். இன்றைய தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் இடையேயான மலாயா மலை அல்லது பொதிகை மலையின் அடிவாரத்திலிருந்து ஓடும் வைகை ஆறு மதுரை நகரூடாகச் செல்கிறது. அந்த மதுரைக்கு அருகில் உள்ள இடத்திலிருந்து அவர் ஆட்சி செய்தார். மகாவிஷ்ணுவின் மத்ஸ்ய அவதாரம் வைகை ஆற்றில் இருந்து தொடங்குகிறது. மதுரை மன்னருக்கு மத்ஸ்ய அவதாரம் உதவியதால், சந்திர வம்சத்தில் வந்த பாண்டிய மன்னர்கள் தங்கள் கொடியில் மீன்களை சின்னமாக பயன்படுத்தினர்.

ஸ்ரீமத் பாகவதம் மற்றும் பிற புராணங்களின் மேற்கூறிய விளக்கங்களிலிருந்து, திராவிட தேசம் என்று குறிப்பிடப்படும் தென்னிந்தியாவில் உள்ள மதுரையில், பிரளய அழிவுக்குப் பின்னர் மனித நாகரிகம் மீண்டும் நிறுவப்பட்டது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். கடந்த 1200 லட்சம் (120 மில்லியன்) ஆண்டுகளாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் நிறுவப்பட்ட சனாதன தர்மத்தின் கொள்கையை திராவிட மக்கள் பின்பற்றுகிறார்கள் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. ஆரியத் தத்துவங்களை நிறுவ 3500 ஆண்டுகளுக்கு முன்னரும்,ஆரியர்கள் வருவதற்கு முன்பும், திராவிட தேச மக்கள் வேறு சில மதங்களைப் பின்பற்றினார்கள் என்பது தவறான கருத்தாகும்.

தென்னிந்தியாவை ஆண்ட சோழ சக்கரவர்த்திகள் சூரிய வம்சத்தில் வழி வந்தவர்கள் ஆவார்கள்( வைவஸ்வத மனுவின் பரம்பரையில் வந்தவர்கள்) . சூரிய வம்சத்தில் வந்ததால் ஆரிய வழி பாடுமுறைகளைப் பின்பற்றி வந்ததுடன் மாபெரும் கோவில்களை தமிழ் நாட்டில் கட்டினார்கள். மேலும்,சிவபெருமானும் முருகப் பெருமானும் பல திருவிளையாடல்களை தமிழ் நாட்டில் செய்து மக்களை பக்தி மார்க்கத்தில் ஈடு படுத்தினார்கள். இதைவிட, இந்தியாவில் மட்டுமல்லாமல், ஈழத்திலுள்ள யாழ்ப்பாணத்திலிருந்து ஆட்சி செய்த மன்னர்கள் ஆரிய சக்கரவர்த்திகள் என்று அழைக்கப்பட்டார்கள். உதாரணமாக குலசேகர சிங்கை ஆரியன் நந்திக் கொடியுடன் யாழ்ப்பாணத்திலிருந்து ஆட்சி செய்தார். தமிழர் கலாச்சாரம் என்பது ஆரிய கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும், தமிழர்கள் வேதங்களை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

ராமபிரான் வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவிற்கு திரேதா யுகத்தின் 24 வது யுக சுழற்சியின் போது நடந்து வந்தார். இது சில லட்சம் வருஷங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வாகும். தற்போது நடக்கும் யுக சுழற்சி 28வது யுக சுழற்சியாகும். ஒவ்வொரு யுக சுழற்சியும் 43 லட்சம் வருஷங்கள் எடுக்கும். ராமபிரான் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே “ராம் சேது” என்று அழைக்கப்படும் பாலத்தை உருவாக்கினார். இந்த பாலம் சுமார் 180 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு 24வது யுக சுழற்சியின்போது திரேதா யுகத்தில் கட்டப்பட்டதாகும். இந்தப் பாலம் இருப்பதை இன்றும் நாசாவின் செயற்கைக்கோள் படங்களில் இருந்து காணலாம்.

துவாபர யுகத்தின் முடிவில், சுமார் 5100 ஆண்டுகளுக்கு முந்தைய மகாபாரதக் காலத்தில், பகவான் கிருஷ்ணர் இந்த பூவுலகில் அவதார புருஷராக இருந்து பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்துகொண்டிருந்தார். யுதிஷ்டிர மகாராஜா ராஜசூய யாகம் செய்யமுன்பு, மகா பாரதம் திக்விஜய பார்வை 2.31 இன் படி சஹாதேவரை​​ தென்னிந்தியாவிற்கு அனுப்பி பாண்டியர் முதலான திராவிட அரசர்களைத் தோற்கடித்து, அவர்களிடமிருந்து பலவிதமான பரிசுப் பொருட்களை பெற்றுக் கொண்டார். லங்காவின் அரசரான விபீஷணர் பலவகையான நகைகள் , சிறந்த ரத்தினங்கள், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களையும், கடலில் கிடைத்த லேபிஸ் லாசுலி மற்றும் முத்துக் குவியல்களையும், யானைகளுக்கென்று நூற்றுக்கணக்கான அலங்காரத்துணிகளையும் பரிசுப் பொருளாகக் கொடுத்தார்.

யுதிஷ்டிர மகாராஜா ராஜசூய யாகம் செய்தபோது மகா பாரதம் சபா பார்வை 2.52 இன் படி திராவிட மன்னர்கள் வந்துள்ளார்கள். சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள், மலாயாவின் மலைகளில் இருந்து மணம் நிறைந்த சந்தன சாறு நிரப்பப்பட்ட எண்ணற்ற தங்க ஜாடிகளையும், தர்துராஸ் மலையிலிருந்து ஏராளமான சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களையும், சிறந்த ரத்தினங்களையும், தங்கங்கள் பதிக்கப்பட்ட மெல்லிய துணிகளையும் கொண்டு வந்தனர்.

அப்போது, ​​இந்திய மக்களிடையே ஆரியம், திராவிடம் என்றோ, வட இந்தியா, தென்னிந்தியா என்றோ பிரிவினை கிடையாது. மாறாக பல்வேறு அரசர்கள் வேத மரபுகளைப் பின்பற்றி அந்தந்த ராஜ்ஜியங்களை ஆட்சி செய்து வந்தனர். யுதிஷ்டிர மகாராஜா ராஜசூய யாகம் செய்த போது திராவிட மன்னர்கள் கலந்து கொண்டு யாகத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். மேற்கூறியவற்றிலிருந்து தென்னிந்திய மக்கள், தென்னிந்தியாவில் வாழ்ந்த திராவிடர்களாக இருந்தாலும், சனாதன தர்மத்தின் அடிப்படையில் ஆரிய தத்துவங்களைப் பின்பற்றி வந்தனர் என்பது தெளிவாகிறது.

வடக்கின் ஆரியர்கள் என்று அழைக்கப்படுபவர்களுக்கும் தெற்கின் திராவிடர்களுக்கும் அல்லது இந்திய துணைக்கண்டத்தின் பிற சமூகங்களுக்கும் உள்ள வேறுபாடு ஒரு இன வகை அல்ல. உயிரியல் ரீதியாக அனைவரும் ஒரே மாதிரியானவர்கள். பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கும்போது மட்டுமே தோல் கருமையாகிறது, மேலும் நிலையான வெப்பத்தின் செல்வாக்கின் கீழ் உடல் அமைப்பு சிறிது சிறிதாகிவிடும்.

சில சமயங்களில், திராவிடர்கள் முதலில் சிவபெருமானை வழிபட்டதாகவும், ஆரியர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் பிற்காலத்தில் மற்ற வழிபாட்டு முறைகளை அறிமுகப்படுத்தியதாகவும் வாதிடப்படுகிறது. இருப்பினும், சிவபெருமான் திராவிடர்களுக்கென பிரத்தியேகமான இறைவன் அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பிரம்மதேவர் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கிய காலத்திலிருந்தே, இந்த உலகில் தோன்றி, வேத காலத்திலிருந்து அனைவராலும் இறைவனாக வணங்கப்பட்டவர் சிவபெருமான் ஆவார். அத்துடன், பகவான் கிருஷ்ணருடைய “ராச லீலா” நடனத்தின் போது சிவபெருமான் கோபீஷ்வர் மஹாதேவராகத் தோன்றினார்.

சிவபெருமானுடைய புனிதத் தலங்கள் இந்தியா முழுவதும் இமயமலையில் தொடங்கி , வடக்கே கேதார்நாத் மற்றும் காசி, மேற்கில் சோம்நாத், கிழக்கில் ஜார்கண்ட் மற்றும் தெற்கில் ராமேஸ்வரம் முதலான இடங்கள் முழுவதும் பரவி உள்ளன. இது இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பரவியுள்ள மக்களால் சிவபெருமான் வழிபடுவதைக் குறிக்கிறது. மேலும், மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பாவில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட சிவபெருமானுடைய முத்திரைகள் வட இந்தியாவிலும் மக்கள் சிவபெருமானை வழிபட்டதைக் குறிக்கின்றது.

முடிவுரை

இந்தியத் துணைக்கண்டத்தின் பரந்த வடக்குப் பகுதியில் உள்ள சிந்து, புருஷ்ணி (ரவி), சரஸ்வதி மற்றும் பிற நதிகளை ஒட்டிய நகரங்களில் ஆரியர்கள் ஆதி மக்களாக நீண்ட காலமாக வசித்து வந்தவர்கள் என்றும், இந்தியாவுக்கு வெளியில் இருந்து நாடோடிகளின் படையெடுப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், ஆரிய நாகரீகம் ஏற்கனவெ இந்திய தேசத்தில் பூர்விகமாக, யுகம் யுகமாக இந்த உலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து வளர்ந்து வந்தது என்றும், நாடோடிகளின் படையெடுப்பால் அழிந்துவிடவில்லை என்றும் , ஆனால் சரஸ்வதி நதி வறண்டபோது மக்கள் மற்ற பகுதிகளுக்குச் சென்று சனாதன தர்மத்தின் அடிப்படையில் நாகரிகத்தைத் தொடர்ந்தனர் என்றும் ஆரியப் படையெடுப்பு என்பது ஒரு கட்டுக்கதையாகும் என்பதே முடிவாகும்.

“வாசுதேவ குடும்பகம்” என்ற அடிப்படையில் பல்வேறு சமூகங்களின் அமைதியான சகவாழ்வுக்காக, பிராமணர்கள் வேத சாஸ்திரங்களில் உள்ள தத்துவங்களைக் கொண்ட வாழ்க்கை முறைகளை சகல மனிதர்களும் இணக்கமாக வாழ்வதற்காக அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளனர். இது எல்லா உலக மக்களும் ஒரே குடும்பம், “சர்வே ஜனா சுகினோ பவந்து” – எல்லா உலக மக்களும் ஆனந்தமாக இருக்கட்டும் என்ற செய்தியை உலகம் முழுவதும் பரப்புகின்றது.

இதே செய்தியை தென்னிந்திய தமிழ் தத்துவஞானியும் ஜோதிடருமான கணியன் பூங்குன்றனார் கிமு 6 ஆம் நூற்றாண்டில் எதிரொலித்தார். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற புகழ்பெற்ற மேற்கோளை அவர் எழுதினார். அதாவது – நமக்கு எல்லா ஊர்களும் சொந்தம், அனைவரும் நம் உறவினர்கள் என்ற தத்துவத்தை எடுத்து உரைத்தார். சனாதன தர்மத்தின் வாசுதேவ குடும்பம் என்ற கூற்றிலும் இதே உணர்வுதான் எதிரொலிக்கிறது. எனவே, இந்திய மக்கள் தெற்கில் இருந்தாலும் சரி, வடக்கிகே இருந்தாலும் சரி, அவர்கள் ஆரிய நாகரிகத்தைச் சித்தரிக்கும் சனாதன தர்மத்தைப் பின்பற்றி வாழ்ந்ததுடன், இன்றும் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர்.

இந்திய மக்கள் தெற்கில் அல்லது வடக்கில் வாழ்ந்தாலும், பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக சனாதன தர்மத்தை பின்பற்றி வந்ததாகவும், மாக்ஸ் முல்லரின் கருதுகோள்களின்படி 3500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புதிய நடைமுறையைத் தொடங்கவில்லை என்பதற்கும் பல்வேறு வேத சாஸ்திரங்களில் இருந்து ஏராளமான தகவல்கள் உள்ளன. மாக்ஸ் முல்லர் மற்றும் பிற ஐரோப்பிய அறிஞர்கள் 3500 ஆண்டுகளுக்கு முன்பு வரையுமே செல்கிறார்கள். ஆனால், ஆரிய நாகரிகமானது பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவில் உள்ளது. மாக்ஸ் முல்லர் மற்றும் பிறர் இந்தியாவை பிரித்து ஆளவும், இந்திய மொழிகளின் மீது ஐரோப்பிய மொழிகளின் மேலாதிக்கத்தை நிலைநாட்டவும், இந்தியாவில் கிறிஸ்தவத்தை பரப்பவும் ஆரிய படையெடுப்பு கோட்பாடு (AIT) என்ற கட்டுக்கதையை உருவாக்கினர்.

பல்வேறு சாஸ்திரங்களின் அடிப்படையில், மாக்ஸ் முல்லர் மற்றும் பல்வேறு மொழியியலாளர்களாலும் இந்தியவியலாளர்களாலும் பரப்பப்பட்ட கட்டுக்கதை பொய்யானது என்றும், இந்தியாவிலிருந்து மனிதர்கள் வெளியே சென்றார்கள் என்ற கோட்பாடே (OIT) மிகவும் பொருத்தமானது என்றும் ஆரிய படையெடுப்பு கோட்பாடு (AIT) அல்ல , என்றதொரு தீர்க்கமான முடிவுக்கு நாம் வரலாம்.

(முற்றும்)

Series Navigation<< ஆரிய படையெடுப்பு கோட்பாடு என்ற பொய்யுரை – 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *