ஃபாத்திமா ஆன சபரிமாலா: செய்தி தரும் பாடம் என்ன?

சபரிமாலா என்ற “போராளி” அரசுப்பள்ளி ஆசிரியை மதம் மாறி ஃபாத்திமா ஆகிவிட்டார் என்ற செய்தி வந்துள்ளது. “பெண்கள் சந்திக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வை தேடி அலைந்தேன்.. குர் ஆன் ஹதீஸை படித்து மக்கள் எதிர்கொள்ளும் அத்தனை சமூக பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை இஸ்லாம் தெளிவாக 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியதை நான் அறிந்தேன். இஸ்லாத்தை மனப்பூர்வமாக ஏற்றேன்” என்று அவர் கொடுத்துள்ள “வாக்குமூலத்தை” இங்குள்ள இந்து விரோத திமுக கொத்தடிமை ஊடகங்கள் பரப்பி வருகின்றன.

“ஆமாம், இவர் ஏற்கனவே முஸ்லிம்களுக்கு ஆதரவாகத் தான் பேசிக்கொண்டிருந்தார். இது பெரிய ஆச்சரியமாக்கும்..” என்று இதை அசட்டையாகவும் நக்கலுடனும் கடந்து செல்கிறார்கள் பல இந்து நண்பர்கள். இந்த மதமாற்ற செய்தி தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலம், அரபி, மலாய், மலையாளம் என்று பல மொழிகளில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய வெறியர்களால் விதவிதமாகப் பரப்பப் படுகிறது என்பதை இங்கு எத்தனை பேர் கவனித்தார்கள்? (Sabarimala என்று ஆங்கிலத்தில் தேடினாலே தெரியவரும்). ஒரு திண்டுக்கல் லோக்கல் பெண்ணின் மதமாற்றம் ஒரு trophy போல, வெற்றிக்கோப்பை போல உலகம் எங்கும் உள்ள இஸ்லாமிஸ்டுகளால் கொண்டாடப் படுகிறது என்றால், உங்களுக்கு அதிலிருந்து என்ன தெரிய வருகிறது? சிந்தியுங்கள்.

இந்த நபர் எப்படி இந்தப் புள்ளிக்கு வந்து சேர்ந்தார்? பள்ளிப் போட்டிகளுக்கான மேடைப்பேச்சு பயிற்சி, பட்டிமன்றம் என்று டாக்டர் அப்துல் கலாமின் மேற்கோள்களை வைத்து பேச ஆரம்பித்தவர் இவர். அடுத்த புள்ளியில் நீட் தேர்வு எதிர்ப்பு, முற்போக்கு இடதுசாரி அரசியல், மோதி அரசு எதிர்ப்பு, சி.ஏ.ஏ சட்ட எதிர்ப்பு என்று போய் இவருக்கு ஊடக வெளிச்சம் கிடைக்கிறது. அப்போதெல்லாம் பொட்டுவைத்த லட்சணமான கிராமிய முகத்துடன் துடியாகப் பேசிக்கொண்டிருந்த இந்தப் பெண் இப்போது ஒரு வெள்ளைக் கோணியில் உடம்பு முழுக்க மூடிக் கொண்டு சவக்களை தோய்ந்த முகத்துடன் போஸ் கொடுக்கிறார்.

உண்மையில் இது கேலிக்கும் அசட்டைக்கும் உரிய விஷயமல்ல, சீரியசான விஷயம். ஏதோ அரசியல் காரணத்திற்காக முஸ்லிம் ஆதரவு நிலை எடுக்கப் போனவர் படிப்படியாக groom செய்யப்பட்டு, மூளைச்சலவைக்கு ஆட்பட்டு, இஸ்லாம் என்னும் இருள் படுகுழியில் ஒரு தமிழ்ப்பெண் விழுந்திருக்கிறார் என்பது சகஜமான விஷயமல்ல, மிகவும் கவலைக்குரிய ஒன்று. ஒரு கட்டத்தில் மதம் மாறாவிட்டால் உயிருக்குக் கூட உத்தரவாதமில்லை என்ற அளவுக்கான அழுத்தம் அவருக்குத் தரப்பட்டிருக்கலாம். யுவன் சங்கர் ராஜா, அப்துல்லாவாக ஆன பெரியார்தாசன் வரிசையில் இவர் சேர்ந்திருக்கிறார்.

இஸ்லாமிய ஜிகாதி கழுகுகளால் கொத்திச் செல்லப் படும் இத்தகைய ஆபத்தான நிலையிலுள்ளவர்களுக்கு அந்தக் கழுகுகளிடமிருந்து பாதுகாப்பு தரும் அளவுக்கு காவல்துறையும் மற்ற இந்து சமூக அமைப்புகளும் இங்கு இல்லை. குறிப்பாக இளம் ஆண், பெண்களுக்கு இந்துத் தரப்பிலிருந்து சரியான counseling தரும் அமைப்புகள் தமிழ்நாட்டில் இல்லை. பக்கத்திலுள்ள கேரளத்தில் இதே பாணியில் சில நூறு இந்து இளம் ஆண்கள், பெண்கள் (கிறிஸ்தவர்களும் உண்டு) இத்தகைய அழுத்தங்களுக்குள் சென்று இஸ்லாமுக்கு மதம் மாற்றப் பட்டிருக்கிறார்கள். குடும்பங்கள் சீரழிந்துள்ளன. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியலையின் விளைவாக, அங்கு இப்போது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆர்ஷ வித்யா சமாஜம் என்ற அமைப்பு முழு நேரமாக இத்தகைய counseling பணிகளில் ஈடுப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுடன் உரையாடுதல், அவர்களது அனைத்துக் கேள்விகளுக்கும் அமைதியாக, நிதானமாக பதிலளித்தல், யோகம் தியானம் மூலம் அவர்களது மனதை அமைதிப் படுத்துதல் என்று பல வழிகளில் இது நடைபெறுகிறது. இதனை உருவாக்கி நடத்தி வரும் ஆசார்ய மனோஜ் அவர்கள் இந்துதர்ம நூல்களை மட்டுமின்றி, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத நூல்களையும் நன்கு
கற்றறிந்தவர். இந்த அமைப்பின் மூலமாக இஸ்லாம், கிறிஸ்தவ மத மூளைச்சலவைகளில் இருந்து மீண்டு வந்தவர்கள் தங்களது அனுபவங்களை புத்தகங்களாகவே எழுதியுள்ளனவர். உதாரணமாக, ஓ.ஸ்ருதி எழுதியுள்ள “ஒரு பரிவர்த்தனத்தின்டெ கதா”. இது Story of Reversion என்ற பெயரில் ஆங்கிலத்தில் வந்துள்ளது. தமிழிலும் வெளிவர வேண்டியது அவசியம்.

இத்தகைய ஒரு அமைப்பு தமிழ்நாட்டில் இல்லை. அதை உருவாக்க வேண்டியது மிக அவசியம் என்பதையே இந்தச் செய்தி உணர்த்துகிறது.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது).

2 Replies to “ஃபாத்திமா ஆன சபரிமாலா: செய்தி தரும் பாடம் என்ன?”

  1. எங்கள் முப்பாட்டன் இராஜராஜ சோழன் கட்டிய கோவிலிலிருந்து ஆரிய வந்தேறிகளை வெளியேற்ற வேண்டும் ப்ரோ.

    ஏன் ப்ரோ வெளியேற்ற வேண்டும்???

    தமிழர்கள் கட்டிய கோவிலில் எங்களை நுழைய விடாமல் சூத்திரன் என்றும் காலில் பிறந்தவன் என்றும் ஒடுக்கியவர்கள் இந்த ஆரிய வந்தேறிகள் தானே ப்ரோ ???

    அதுசரி ப்ரோ சோழர்கள் கட்டிய கோவில்களில் பூஜை செய்பவர்கள் தங்களை ஆரியர்கள் என்றோ உங்களை சூத்திரர்கள் என்றோ எங்கேயாவது கூறிக்கொண்டார்களா? இதுக்கு உங்ககிட்ட எதாச்சும் ஆதாரம் இருக்கா???

    ஆதாரம் என்ன ப்ரோ இந்த பார்ப்பனர்கள் சோழர்களையே கைக்குள் போட்டு தமிழர்களை வஞ்சித்த வரலாறு உங்களுக்கு தெரியாதா???

    எதே சோழர்காலத்திலேயே சூத்திரர்கள் என்று கூறி ஒடுக்கப்பட்டனரா??? வஞ்சித்தார்களா?

    ஆமா ப்ரோ இந்த பார்ப்பனர்கள் தான் நம்மையெல்லாம் சூத்திரர்கள் என்று சொல்லி சொல்லி மட்டம் தட்டுகின்றனர். இதை சோழர்காலம் முதலே செய்துவருகின்றனர்.

    (சிறிது நேர அமைதிக்கு பிறகு. அதாவது சங்கியாக மாறிய பிறகு. இதுவரை பேசியது நடுநிலை.)

    அப்படியா?? அடேய் உங்க இராஜராஜ சோழனே சூத்திரன் தானடா?? நீ ஏன்டா குதிக்குற? இப்போ நீ சொல்லு சூத்திரச்சோழனை யாரு ஒடுக்குனது??? ஒருவேளை பார்ப்பான் சூத்திரச்சோழனை ஒடுக்கியிருப்பானோ???

    அடேய் எங்க முப்பாட்டன் இராஜராஜ சோழனையே சூத்திரன்னு சொல்லிட்டியா??? விடமாட்டேன்டா உன்னை.

    குதிக்காதடா இராஜராஜ சோழனை சூத்திரச்சோழன்னு சொன்னது நான் இல்லடா.

    அப்புறம் யாருடா?

    அப்படி சொல்லிக்கிட்டது சோழர்களேதான்டா…!

    எப்படி இவ்வளவு உறுதியா சொல்ற? இதுக்கு உன்கிட்ட எதாவது ஆதாரம் இருக்கா?

    ஆதாரம் குடுத்தா தூக்குல தொங்குவியாடா???

    நீ முதல்ல குடு அப்புறம் பாத்துக்கலாம்.

    South Indian Inscription volume 4 ல் உள்ள 391 ஆவது கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

    “ஸ்ரீ ராஜராஜ தேவர் கைக்கேளப்படை பிராந்தகத் தெரிஞ்ச கைக்கோளரும் சூத்திரச்சோழந் தெரிஞ்ச கைக்கோளரும் பாண்டிய குலாசநித் தெரிஞ்ச கைக்கோளரும்”

    என்ற வாசகத்தின் அடிப்படையில் இராஜராஜ சோழனுக்கு சூத்திரச்சோழன் என்ற பெயர் உண்டு என்பதை தெளிவாக அறியலாம்.

    தோழர் மையான அமைதி

    டேய் இருக்கியாடா?

    இருங்க சார் எனக்கு தெரிஞ்ச கல்வெட்டு ஆய்வாளர் ஒருவர் இருக்கார் அவர்கிட்ட இதன் உண்மைத்தன்மை பற்றி கேட்டுட்டு வாறேன்.

    எப்படா திரும்ப வருவ???

    டேய் சொல்லீட்டு போடா.

    அப்படியே போனவன்தான் மாசம் ஒண்ணு ஆகுது. இதுவரை அவனையும் கண்ணுல காணல, அந்த கல்வெட்டு ஆய்வாளரையும் கண்ணில் காணவில்லை.

    இறுதியாக இந்த நால்வர்ணமுறைகள் தொல்காப்பியர் காலத்தில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற பெயரில் தமிழக நிலப்பரப்பில் நடைமுறையில் இருந்ததை தொல்காப்பிய சூத்திரங்களின் அடிப்படையில் உணரலாம். அதுபோல சங்ககாலம் மற்றும் அதற்கு பின்பான சேர சோழ பாண்டியர்களின் ஆட்சி காலங்களிலும் இந்த வர்ணப்பெயர்கள் இருந்தன. ஆனால் இப்பெயர்கள் பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற நோக்கில் பயன்படுத்தப்படவில்லை என்பதற்கு இந்த சோழர்கால கல்வெட்டு ஆகச்சிறந்த உதாரணமாகும். இதை இன்னும் ஆழமாக அலசி ஆராய்ந்தால், சூத்திரன் என்ற சொல்லை என்னென்ன பொருள்களில் நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்று தேடினால் சூடாமணி, பிங்கலம் போன்ற நிகண்டுகளில் பல பொருள்கள் உள்ளது. உதாரணமாக,

    #சூடாமணி_நிகண்டு :

    “மண்மகள் புதல்வர் வாய்ந்த
    வளமையர், களமர் என்றும்
    உண்மைசால் சதுர்த்தர் மாறா
    உழவர், மேழியர், வேளாளர்
    திண்மைகொள் ஏரின் வாழ்நர்
    காராளர், வினைஞர் செம்மை
    நண்ணுபின் னவர் பன் னொன்று
    நவின்ற சூத்திரர்தம் பேரே”

    விளக்கம் :
    சூத்திரர் என்றால் உயிர்களை இயக்கும் தொழில் புரிபவன் என்பது பொருள்.
    வளமையர் என்றால் நிலவளம் உடையவர் என்றும், களமர் என்றால் உழவுக் களத்தில் உழைப்போர் என்றும், வர்ணாசிரமத்தின் அடிப்படையில் சதுர்த்தர் நான்காம் வருணத்தவர் என்றும், மேழியர் என்றால் ஏர் பிடிப்பவர் என்றும், வேளாளர் என்றால் மண்ணை வளப்படுத்தி ஆள்பவர்கள் என்றும், காராளர் என்றால் மழையால் பயன் விளைப்போர் என்றும், வினைஞர் என்றால் தொழில் புரிவோர் என்றும்,
    பின்னவர் என்றால் செம்மையான வாழ்வு பொருந்திய பின்னவர் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

    ஆனால் இதே பொருள்களைத் தரும் மற்ற நிகண்டுகளிலோ எந்தவொரு தமிழ் இலக்கியங்களிலோ சூத்திரன் என்ற சொல்லாது வேசி மகன் என்றோ வைப்பாட்டி மகன் என்ற பொருளிலோ பயன்படுத்தப்படவில்லை. மாறாக சூத்ர என்ற சொல்லாடலானது வர்ணம் தவிர்த்து பல பொருள்களில் வழங்கப்படடிருந்தாலும் பெரியபுராணம் பாடிய #சேக்கிழார் பெருமான் அதில் வரும் #வாயிலார் புராணத்தில் “தொன்மை நீடிய சூத்திரத் தொல்குலம்” என்றும், இளையான்குடி மாற நாயனார் புராணத்தில், “வாய்மையில் நீடு சூத்திர நற்குலம்” என்றும் இரு நாயன்மார்களின் பழமையையும் வாய்மையையும் பெருமையையும் உடைய நல்ல #சூத்திரர் குலம் என்றும் மிகப் பெருமையாகவே பாடி உள்ளார்.

    அதோடு சூத்திரன் என்ற சொல் இராஜராஜ சோழனுக்கு நிகராக உயர் பொருளில் வழங்கப்பட்டது தொடர்பாக சோழர் கால செப்பேடுகளில் உள்ளது. ஆனால் அங்கும் வேசிமகன் என்றோ வைப்பாட்டி மகன் என்றோ இல்லாமல் உயர்ந்த பொருளில் சூத்திரன் பெருமைப் படுத்தப்படுகிறார்.
    அதாவது கடைநிலை ஊழியனான சூத்திரனும், பேரரசர் இராஜராஜனும், ஒரே நிலையில் அடையாளப்படுத்தபட்டுள்ளது.

    இப்பகுதியானது திருவாலங்காடுச் செப்பேட்டின் சமஸ்கிருத ஸ்லோகங்கள் உள்ள பகுதியில் 62 மற்றும் 135 ம் ஸ்லோகங்கள் நமக்குத்தேவையான சூத்திரன் பற்றிய தகவல்களை தருகிறது. அதாவது நில தான வேலைகளின் முக்கிய நிகழ்வான பிடிசூழ்தல் என்னும் நிலத்தை அளக்கும் அளவின்போது இந்த பிடி சூழ்தல் வேலையை செய்பவர் பெயர் சூத்திரன் அரனெறி என்று குறிக்கப்படடுள்ளது.
    இந்த சூத்திரன் #ஸ்ரீமான் அரனெறி என அழைக்கப்படுகிறார். அதாவது உயர்திரு என்று மிகுந்த மரியாதையுடன் அழைக்கப்படுகிறார். இவர் மங்கலவாயில் என்னும் கிராமத்தைச்சேர்ந்த மாயானன் என்பவரின் மகன் என்றும் அச்செப்பேடு சான்று பகர்கிறது…!

    இச்செப்பேட்டின் அடுத்த வரிகளில்,

    தந்தை வழி, தாய்வழி, என்று இருவழிகளிலும் தூய்மையானவன் இந்த சூத்திரன் உயர்திரு அரனெறி அவர்கள் என்றும், மாயனின் மகனும், மங்களவாயில் என்னும் கிராமத்தின் முழு நிலவு போன்றவனும் தந்தை வழி தாய் வழி என்று இரு மரபிலும் தூயவனுமான சூத்திரன் சீமான் அரனெறி என்பவர் பிடிசூழ்தல் வேலையை செய்தார் என்று சூத்திரனை சிறப்பித்து கூறுகிறது அந்த செப்பேடு…!

    #செப்பேட்டு_வரிகள் :

    “மாயானஸ்ய ஸூத்ர ஸ்ரீமான் அறனெறி”

    மற்றும் இதேச் செப்பேட்டில் சுந்தரச்சோழரின் மகனாக இராஜராஜன் அவதரித்ததை நிகழ்வை விளக்கும்போது
    இராஜராஜன் தந்தை வழி தாய் வழி இருமரபுகளிலும் தூயவனாக பிறந்தான் என்கிறது. ஒரு அரசனை சிறப்பித்துக் கூறப்படும் அதே சொற்களால்
    ஒரு ஊழியனான சூத்திரனும் குறிப்பிடப்படுகிறார். அதாவது இராஜராஜனுக்கு என்ன சிறப்பு கொடுக்கப்படடதோ, அவனது தாய் தந்தையர்கள் எவ்வாறு சிறப்பிக்கப்பட்டார்களோ அதே சிறப்பை ஸ்ரீமான் அரனெறியான சூத்திரனும் அவரது தாய் தந்தையும் பெறுகின்றனர்…..!

    (கல்வெட்டுத் தகவல் : தொல்லியல் ஆய்வாளர் மாரிராஜன்)

    இவ்வாறாக சிறப்பிக்கப்பட்டுள்ள ஒரு பெயரை உச்சரிக்கவே சிந்திக்கும் நிலைக்கு மாற்றிய பங்கு திராவிட சித்தாந்தமுடையோரையே சாரும். ஏனெனில் நான் அறிந்து இதுவரை எந்த ஒரு பிராமணரும் சக குடியை சூத்திரன் என்று ஆபாசமாகவோ தரம் தாழ்த்தியோ அழைத்ததை நான் கண்டதில்லை. ஆனால் #புகுத்தறிவு எனும் பெயரில் சிலர் நொடிக்கொருமுறை தவறான சித்தரிப்புடன் இவ்வார்த்தையை சகஜமாக பயன்படுத்துகின்றனர். மக்கள் இவர்களிடமிருந்து சற்று ஒதுங்கியே இருக்க வேண்டும் என்பதை கூற கடமைப்படடுள்ளேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *