ம(மா)ரியம்மா – 2

This entry is part 1 of 14 in the series ம(மா)ரியம்மா

அச்சோ நிச்சயம் இந்துப் பேய்தான்.

இப்ப என்ன செய்யலாம் என்று ஜான் பயந்தபடியே கேட்கிறான்.

வல்ல மலையாள மாந்திரீகன் யாரையாச்சும் விளிச்சோண்டு வரவேண்டியதுதான்.

பாதிரியார் பதறியபடியே, வேண்டாம் வேண்டாம் என்கிறார்.

ஏன் அச்சோ நம்ம பெலம் வெளிய தெரிஞ்சுடுமென்று பயமா?

அதில்லை மக்ளே. ஒரு விசுவாசியோட விட்டுல ஜெபச் சத்தம் மட்டும்தான் கேட்கணும்.

அது கேட்டதுனாலதான் மத்தவ வந்திருக்கா அச்சோ.

அதுக்கோசரம் வல்லவனையும் கூப்பிட்டு மானங்கெட முடியாதுடே.

அப்படின்னா கரீம் பாயைக் கூப்பிடலாமா. அவருக்கும் மந்திரிச்சு பேயோட்டத் தெரியுமே என்கிறான் ஜான்.

அது செய்யாம் என்கிறார் பாதிரியார்.

ஓவன் வந்து இவனுங்களை மதம் மாத்திடப்போறாரு என்று சொல்கிறார் துணை பாஸ்டர்.

அதெல்லாம் செய்யமாட்டாருடே. நாம என்னிக்காவது அவனுங்களை ரட்சிக்கப் புறப்பட்டிருக்கோமா… அவனுங்களும் அதே மாதிரி. பேச்சு பேச்சாத்தான் இருக்கும். இந்தக் கோட்டை அவனும் தாண்டமாட்டான் நாமளும் தாண்டப்டாது.

அனைவரும் மறு நாள் காலையில் மசூதியை நோக்கிப் போகிறார்கள்.

இவர்கள் வருவதைப் பார்த்ததும் ஹஜ்ஜியார் அருகில் இருப்பவரிடம் குனிந்து, பிரியாணி எதுவும் செய்ய சாமான் வாங்கிட்டு வந்திருக்கியாடே… மோப்பம் பிடிச்சிட்டு வாரானுவ.

இல்லை மூஸா… வேற சங்கதி ஏதாச்சும் இருக்கும்.

இந்த வேக்காட்டுலயும் இப்படி உடம்பு முழுக்க பாவாடையைச் சுத்திக்கிட்டு எப்படித்தான் நடக்கானுங்களோ?

நம்ம பாயம்மா கிட்ட கேட்டாத் தெரிஞ்சிடப்போகுது ஹஜ்ஜியாரே.

ஹஜ்ஜியார் மௌனத்தில் ஆழ்கிறார்.

ஜானும் பாதிரியாரும் உதவி பாஸ்டரும் ஹஜ்ஜியாரை நெருங்குகிறார்கள்.

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என்கிறார் ஹஜ்ஜியர்.

பரலோகத்தில் இருக்கும் பரம பிதா உங்களை ஆசீர்வதிக்கட்டும் என்கிறார் பாதிரியார்.

அச்சோ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். ஏக இறைவன்னு அவங்க சொல்றாங்க. பரம பிதான்னு நாம ஜெபிக்கறோம். மோளில இருக்குன்னது யாராணு அச்சோ? என்று மெதுவாக பாதிரியிடம் கேட்கிறார் உதவி பாஸ்டர்.

மோனே தினேசா… நீ தனியாட்டு வந்து ஓன் கிட்ட கேட்டுக்கோ. இப்ப கொஞ்சம் அனத்தாம இருடே என்று சொல்லியபடியே ஹஜ்ஜியாரைப் பார்த்து புன்முறுவலுடன் கையசைக்கிறார்.

என்னவாக்கும் சங்கதி..?

மரியம்மா மேல ஒரு பேய் வந்திட்டுண்டு.

குருசு ஸ்டாக் இல்லியோ ஃபாதர்…

அது ஒருபாடு உண்டு. பட்சே இது கிறிஸ்தவ பேய் இல்ல பாத்துகிடுங்க. ஜெபத்துக்கு மசியமாட்டேங்குது.

இதென்ன புதுக் கதையா இருக்கு.

ஆமாம். இந்துப் பேயாக்கும். வேப்பிலைக்குத்தான் மசியுது.

அப்படின்னா வீட்டை சுத்தி வேப்பிலை கட்டி வைக்கவேண்டியதுதான.

அதெப்படி ஹஜ்ஜியாரே முடியும். மரியம்மாவும் ஜானும் இயேசுவினால் ரட்சிக்கப்பட்டவங்கள்லா.

இப்ப நான் என்ன செய்யணும்?

நீங்க வந்து அந்தப் பேயைக் கட்டிப்போடணும். இந்துக்களைச் சமாளிக்க நீங்கதான் லாயக்கு. இந்துப் பேயையும் நீங்கதான் அடக்க முடியும்.

ஆமா இந்துவும் முஸ்லீமும் சண்டைபோட்டுக்கிட்டிருந்தாத்தான் நாம வன் அறுவடை செஞ்சு தேவனின் சாம்ராஜ்ஜியத்தை ஈஸியா ஸ்தாபிக்கமுடியும் என்று பாதிரியின் காதில் உதவி பாஸ்டர் மெதுவாகச் சொல்கிறார்.

கம்பெனி சீக்ரெட்டை வெளியை சொல்லாதடா என்று அவனைக் கடிந்துகொள்கிறார் பாதிரியார்.

ஹஜ்ஜியார் தாயத்து, டாலர், சாம்பிராணி எல்லாம் எடுத்துக்கொண்டு புறப்படுகிறார்.

மரியத்தின் வீட்டை அடைகிறார்கள். சாம்பிராணி பொடியை அள்ளித் தூவி வீடு முழுவதும் போடுகிறார். சாம்பிராணி புகை மத்தியில் ஒவ்வொரு அறைக்குள் இருந்து வருபவர்களும் பேய்போல் ஒவ்வொருத்தரையும் பயமுறுத்துகிறார்கள். சிறிது நேர களேபரங்களுக்குப் பின்னர் ஹஜ்ஜியார் பாயை விரித்து தரையில் உட்காருகிறார். குர்ரானைத் திறந்து வைக்கிறார். திடீரென்று அதில் இருக்கும் எழுத்துகள் எல்லாம் மாயமாக அழிந்துபோகின்றன.

ஹஜ்ஜியார் குர்ரான் வசனங்களை ஓத ஆரம்பிக்கிறார். ஆனால் அவரால் முடியவில்லை. அவர் கழுத்தைப் பிடித்து யாரோ இறுக்குவதுபோல் துடிக்கிறார். அவருடைய வாயைக் கட்டிப்போட்டதுபோல் எதுவும் பேசமுடியாமல் தடுமாறுகிறார். உடன் வந்த உதவியாளர் சாம்பிராணியை அள்ளிப்போட்டு அவருக்கு ஏதேதோ மந்திரிக்கிறார். ஒரு பலனும் இல்லை. சிறிது நேரத்தில் ஹஜ்ஜியார் மயங்கி விழுகிறார். அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார்கள். அந்த அறைக்குள் ஓம் ஓம் என்ற ஓங்காரம் மெள்ள மெள்ள வலுப்பெற்று ஓங்கி ஒலிக்க ஆரம்பிக்கிறது.

வேறு வழியின்றி ஓர் இந்து கோடாங்கியை அழைத்து வந்து பேயை ஓட்ட முற்படுகிறார்கள். அவர் பல்வேறு மந்திர தந்திரங்கள் சக்கரங்கள் வரைந்து மரியம்மாளுக்குள் புகுந்திருக்கும் ஆவியுடன் பேச ஆரம்பிக்கிறார்.

ஏன் மரியம்மா மேல இறங்கியிருக்க… யார் நீ?

நான் இவளோட தாய் வழிப் பாட்டி…

எதுக்கு வந்திருக்க. வெடகோழியா… குரும்பு ஆடா… என்ன வேணும். வேணுங்கறதைக் கேட்டுட்டு கொடுக்கறதை வாங்கிட்டுப் போயிரு… உனக்கு என்ன வேணும்..?

அவளுக்குள் இறங்கியிருக்கற பாட்டி, நிறுத்தி நிதானமாகச் சொல்கிறார் : மரியம்மா மாரியம்மாவாகணும். குல தெய்வக் கோவில்ல கூழு காய்ச்சி ஊத்தணும்.

அது எப்படி முடியும் என்று சீறுகிறார் பாதிரியார்.

ஏன் முடியாது..?

இப்ப அவ எந்த ஜாதில போய்ச் சேருவா..?

எந்த ஜாதியில இருந்து பிரிச்சுக் கொண்டுவந்தீங்களோ அதுல சேர்ந்துப்பா. வழி தவறிய ஆடு, தாயிடம் சென்று சேரட்டும்.

வழி தவறியவை அல்ல. ரட்சிக்கப்பட்டவை.

உங்களுடைய ரட்சிப்பு பற்றி ஊருக்கே தெரியும் அச்சோ. என்னை மதம் மாத்த நீங்க விழுந்து பொரண்டதெல்லாம் எனக்குத் தெரியும்.

அதெல்லாம் நீங்கள் தேவனுடைய ஒளியின் பக்கம் வரத்தானே.

எது ஒளி… யார் தேவன்..? நான் சொகமில்லாம கிடந்தப்ப என் தலைமாட்டுல வந்து உட்கார்ந்துகிட்டு ஜெபிக்க ஆரம்பிச்சாரு ஒரு பாதிரி.

அது உங்கள் வியாதி சொஸ்தமாகவேண்டும் என்ற ஸ்நேகத்தால்தானே.

நானும் அப்படித்தான் மொதல்ல நினைச்சேன். வீட்டில் இருக்கும் திருநீறை எடுத்து என் நெற்றியில் இட்டுவிட்டு, தேவாரப் பாடல்கள் நான்கு படியுங்கள். அதுவே என்னை சுகப்படுத்தும்னு சொன்னேன். அவர் அதற்கு மறுத்துவிட்டார்.

உங்கள் பூசாரி வந்து ஜெபித்திருக்கவேண்டியதுதானே.

எங்கள் பூசாரிகள் ஆலயத்தில் இருந்தபடி அனைவருக்கும் பிரார்த்தனை செய்துதான் வருகிறார்கள்.

அப்படியானால் உங்களுக்கு நோய் எப்படி வந்தது?

இதென்ன கேள்வி… நோயும் மூப்பும் இழப்பும் தோல்வியும் யாருக்கு வராமல் இருக்கிறது. யாரால் அதைத் தடுக்க முடியும்?

இயேசுவினால் தடுக்க முடியும். உலகை ரட்சிக்க அவரால் முடியும்.

அவர் ரட்சிக்கும் லட்சணத்தை உலகம் பார்க்கத்தானே செய்திருக்கிறது.

இன்று உலகில் செழிப்புடன் திகழும் நாடுகள் எல்லாம் கிறிஸ்துவின் மகிமையை ஏற்றுக்கொண்டவைதான்.

கொள்ளைக்காரர்களின் வீட்டில் வறுமை இருக்குமா என்ன? அதோடு அவரை ஏற்றுக்கொள்பவர்களுக்கு செழுமைதான். ஏற்க மறுப்பவர்களுக்கு என்ன கதி..? எங்கள் பக்கம் வந்து நிற்காதவர்கள் எல்லாம் எங்கள் எதிரிகளே என்பது தெய்வத்தின் குரல் அல்ல. சாத்தானின் கூக்குரல். அது இனியும் இந்த உலகில் ஒலிக்கக்கூடாது என்று சொல்லியபடியே மரியம்மாள் ஆடி அடங்குகிறார்.

Series Navigationம(மா)ரியம்மா – 3 >>

13 Replies to “ம(மா)ரியம்மா – 2”

  1. இலங்கையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கெல்லாம் காரணம் இனவாதம் மதவாதம் என யாராவது சொன்னால் அது இந்த நூற்றாண்டின் மிகபெரும் காமெடியே தவிர வேறொன்றுமில்லை

    இலங்கையில் சிங்களர் பெருவாரிநாடு சந்தேகமில்லை , பவுத்தம் அதன் தேசிய மதமாக அங்கீகரிக்கபட்டிருக்கின்றது

    அங்கு ஆட்சி செலுத்துவோர் பெரும்பாலும் புத்தமதத்தவர் அல்ல, அங்குள்ள சட்டபடி புத்தமதம் சார்ந்தோர் அதிபராக முடியும், மதமும் கலாச்சாரமும் அப்பொழுதுதான் நிலைக்கும் என்ற ஏற்பாடு அது

    இன்றும் பல நாடுகளில் மன்னராட்சி ஏன் தொடர்கின்றது என்றால் முக்கிய காரணம் அரசமதம் என ஒன்று இல்லாவிட்டால் அது அழிந்துவிடும் என்பதே, அதனாலே பல நாடுகள் மன்னர்களை ஆதரிக்கின்றன‌

    அங்கு டட்லி சேனநாயகா முதல் ஜெயவர்த்தனே இன்றைய ராஜபக்சேக்கள் வரை யாரும் பிறப்பால் பவுத்தர்கள் அல்ல, அவர்கள் பிறப்பால் கிறிஸ்தவர்கள்

    ராஜபக்சேவின் தந்தையும் முன்னாள் எம்பியுமான டான் ஆல்வின் ராஜபக்சே ஒரு கிறிஸ்தவர்

    இவர்கள் திறமையானவர்கள், கற்றவர்கள் ஆற்றல் மிக்கவர்கள் என்பதால் தேர்தலில் போட்டியிட வருவார்கள் பெருவாரி பவுத்த சிங்களவரும் ஆதரிப்பார்கள், வென்றவர்கள் கடமைக்கு புத்தமதம் தழுவி சட்டபடி பவுத்தனாக ஆட்சியில் அமர்வார்கள்

    சிங்கள நாயக்கர்களின் குலதெய்வமான திருப்பதிபெருமாளையும் பார்க்க வருவார்கள்
    அங்கு மக்கள் இனவாதம் பிரிவினைவாதமெல்லாம் பேசவில்லை

    பெருவாரி வாக்கு வங்கிக்கு எல்லா நாட்டிலும் சில சலுகைகள் உண்டு மக்களாட்சியின் சாபம் அது, அதுவன்றி ஆட்சி அமைக்க முடியாது

    இலங்கையில் இனவாதம் மதவாதம் சிங்களவருக்கு தனி உரிமை என்பவர்கள் இந்தியாவின் இட ஒதுக்கீட்டையும், சில வகுப்பினருக்கான தனி சலுகைகளையும் வசமாக மறைப்பார்கள்

    இலங்கையில் நடந்தால் அது இனபாகுபாடு என்பதும் தமிழகத்தில் நடந்தால் “சமூக நீதி” என்பதெல்லாம் எவ்வகை நியாயமோ தெரியாது

    உண்மையில் இலங்கையின் சிக்கலுக்கு காரணம் இரண்டு
    முதலாவது கொரோனா காரணமாக அவர்களின் சுற்றுலா உள்ளிட்ட விஷயங்கள் பாதிக்கபட்டது, இரண்டாவது இயற்கை விவசாயம் மூலம் சம்பாதிப்போம் என நாம் தமிழர் போல் கிளம்பியது

    இயற்கை விவசாயம் நல்லதுதான் சந்தேகமில்லை, பூமியின் தத்துவபடி அதன் ஆகசிறந்த விளைச்சல் நவீன விவசாயத்தை ஒப்பிடும்பொழுது குறைவு, இயற்கையின் விதி அது

    ஊசிபோட்டு பால்கறக்கும் மாட்டுக்கும் நாட்டு மாட்டுக்கும் உள்ள வித்தியாசம் போன்றது
    இயற்கை விவசாயம் வேண்டுமானால் சாகுபடி பரப்பு அதிகரிக்கபட வேண்டும், இப்பொழுதுள்ள மக்கள் தொகைக்கு இப்பொழுதுள்ள நிலங்களை விட ஐந்துமடங்கு நிலம் வேண்டும்

    அக்காலத்தில் தொடர்ந்து விளைநிலங்கள் ஏன் பெருக்கபட்டன என்றால் இதுதான்

    புதிதாக விவசாய நிலத்தை பெருக்காமல் இருக்கும் நிலத்திலே இயற்கை விவசாயம் என்பது விளைச்சலை சுருக்கும், இலங்கையில் இதுதான் நடந்தது

    இதையெல்லாம் தாண்டி அவர்கள் சிக்கிய விஷயம் சீனாவிடம் நெருங்கியது

    சீனா உலக அரசியலுக்கு புதிதான நாடு, கடன் கொடுப்பதும் அதை வசூலிப்பதும் அவர்களின் உரிமை என்றாலும் அந்த அணுகுமுறை மகா குழப்பமானது பலரால் புரிந்துகொள்ளமுடியாதது

    அமெரிக்கா, பிரிட்டனை போல் சீனாவினை அணுகித்தான் பாகிஸ்தான் குப்புற கிடக்கின்றது அதில்தான் இலங்கையும் சேர்ந்துவிட்டது

    ஹம்பந்தோட்டா, கொழும்பு துறைமுக முனையம், வட இலங்கையில் அனுமதி என இலங்கை சீனாவிடம் விழ அமெரிக்கா முகம் சுழித்தது

    அதுவும் குவாட் அமைப்பு, பிரான்ஸின் தனி சீன எதிர்ப்பு என காட்சிகள் மாறும்பொழுது பல நாடுகளின் எதிர்ப்பை இலங்கை சம்பாதித்தது

    இப்பொழுது அங்கு நடக்கும் கொந்தளிப்பு அரசுக்கு எதிரான மக்களின் போராட்டமாக உலகுக்கு தெரிந்தாலும் ராஜதந்திர மொழியில் “சீனாவிடம் சேராதே என்றால் கேட்டியா? அடிவாங்கு நல்லா வாங்கு..” என்பதே பொருள்

    அப்படித்தான் நடக்கும், அங்கு ராஜபக்சே அல்ல அந்த ஜெயவர்த்தன இருந்திருந்தாலும் இதுதான் நடக்கும்
    இலங்கையின் அமைவிடம் முக்கியமானது, இதனால் உலக அரசியலின் தாக்கம் அடிக்கடி விழும் , இப்பொழுது அதுதான் விழுகின்றது

    அதற்கு “மத நல்லிணக்கம்” “இன வெறி” “மதவெறி” என சாயம் பூசினால் அதெல்லாம் காரணமே அல்ல‌
    உக்ரைனும் ரஷ்யாவும் ஒரே இனம் ஒரே மொழிகுடும்பம், என்ன வெறியில் மோதுகின்றார்கள் என்றால் இவர்களிடம் பதிலே வராது

    சீனாவும் தைவானும் ஒரே இனம், ஏன் முறுகுகின்றார்கள்?

    அட இரு கொரியாக்களும் ஒரே இனம் ஒரே மொழி ஆனால் ஏன் சேரவில்லை என்றால் சுத்தமாக பதில் வராது
    இரு பாகிஸ்தானியரும் இஸ்லாமியர்கள் ஒன்றாகத்தான் தனிநாடு அடைந்தார்கள் பின் ஏன் 1971ல் மோதி கொண்டு பிரிந்தார்கள்?

    இந்த “நல்லிணக்க” கும்பலெல்லாம் திராவிட முகமூடிகள், இந்துமத‌ எதிரிகள் அன்றி வேறு யாருமே அல்ல

  2. இலங்கையில் மகிந்த ராஜபக்சேவுக்கு நடப்பது ஒரு விதமான உலக அரசியல் அடி

    ஒரு நாட்டுக்கு பலமான தலைவன் உருவாகிவிட கூடாது என்பது சில வல்லரசுகளின் கணக்கு, இதனால் தனிபெரும் தலைவன் ஒரு நாட்டுக்கு வரகூடாது வந்தாலும் நிலைக்க கூடாது அதுவும் சிறிய நாட்டுக்கு அல்லது வளரும் நாட்டுக்கு வரவே கூடாது என்பது உலக வல்லரசுகளின் அரசியல்

    இதில் சீனா போன்ற இறுக்கமான நாடுகள் தப்பும், தப்ப முடியா நாடுகள் அப்படி ஒரு தலைவன் உருவாகும் பொழுது சிக்கும்

    எகிப்தின் கர்னல் நாசர், ஈராக்கின் சதாம் உசேன், லிபியாவின் கடாபி என வரிசை பெரிது

    அப்படி மக்களை தூண்டி சரிக்கமுடியாவிட்டால் போரால் செக் வைப்பார்கள் அந்த செக் இப்பொழுது ரஷ்ய அதிபர் புட்டீனுக்கு வைக்கபட்டிருக்கின்றது, சதாம் அப்படித்தான் சரிக்கபட்டார்

    இந்தியாவில் தனிபெரும் தைரியமிக்க தலைவர்களான சாஸ்திரி, இந்திரா, ராஜிவ் அப்படி கொல்லபட்டனர்

    சிரிய அதிபர் சதாத் தீரா சிக்கலுக்குள் தள்ளபட்டார், துருக்கி அதிபர் எர்டோகன் தந்திரமாக நீடிக்கின்றார்

    இன்றைய உலகில் மன்னராட்சி தவிர (மன்னர்கள் சொத்தெல்லாம் மேலை நாட்டில் இருப்பதால் அடக்குவது எளிது, வடகொரியா தனி ரகம்) தங்கள் நாடுகளில் அசைக்கமுடியா தலைவர்கள் என இருப்பது சிலர்,

    புட்டீன், ஜின்பெங், மோடி, ராஜபக்சே என வெகுசிலர்

    இதனில் புட்டீன் கடும் சிக்கலில் கிடக்கின்றார் இனி மீள்வது சிரமம், ஜின்பெங் மூன்றாம் முறை பதவிக்கு வந்தாலும் அவரைபற்றி வரும் செய்திகள் சரியல்ல‌

    மகிந்த ராஜபக்சே இதோ விரட்டியடிக்கபட்டுவிட்டார், இலங்கை எனும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாட்டின் தலைமை அரண் முறிக்கபட்டிருக்கின்றது

    இப்பொழுது தன் நிலையில் அப்படியே வலுவாக நீடிப்பவர் பாரதபிரதமர் மோடி ஒருவர்தான், அவர்மேல் சில வெளிநாட்டு கைகூலிகள் ஏன் வன்மம் கொண்டு கத்தி திரிகின்றார்கள் என்றால் அதற்கு காரணம் தேவை இல்லை

    பாரதத்துக்கு வராமல் வந்த மாமணியினை கண்ணின் மணிபோல் காக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகின்றது …
    இவ்வளவு பிரச்சனை களுக்கும் காரணம் இலங்கை முஸ்லீம்களே….
    முஸ்லீம் தீவிரவாதி சஹ்ரான்….
    சர்ச்களில் குண்டு வைத்து இலங்கை சுற்றுலா துறையை ஒழித்த காரணத்தாலேயே….
    பொருளாதாரம் வீழ்ந்து…
    இன்றைய நிலை உருவானது…
    முஸ்லீம்களின் சொத்துகளும் அழித்து ஒழிக்கபட வேண்டும்….

  3. இலங்கையில் எம்பிக்களின் வீடுகளை அடித்து உதைத்து தீ வைத்தது போல் இந்தியாவிலும் பாஜக எம்பிக்களை விரட்ட வேண்டும் என்பதே பெரும்பாலான கிறித்தவ இஸ்லாமியர்களின் பதிவாக கருத்தாக அதிக அளவில் வலைத்தளங்களில் வலம் வருகிறது ..

    மதவெறி கொண்ட கிறித்தவ இஸ்லாமியர்களே மற்றும் இந்து நடுநிலை நக்கிகளே ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் ..

    பாஜக ஆளும் வரைதான் உங்களுக்கெல்லாம் பாதுகாப்பு என்று பாஜக வீழ்ச்சி அடைய துவங்குகிறதோ அன்று பாரதமும் வீழ்ச்சி அடையும்

    எங்கெல்லாம் சனாதன தர்மம் வீழ்ச்சி அடைகிறோதோ அங்கெல்லாம் அழிவும் ஏற்படும் என்பதற்கு ஆதாரங்கள் தான் ஆப்கானிஸ்தான் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ..

    கொரானாவால் உலகெங்கும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு தாக்கு பிடிக்க முடியாமல் இலங்கையைப் போன்று தீக்கிரையாகி கொண்டிருக்கின்றன என்பதை புரிந்து கொள்ளுங்கள்

    மோடி என்ற மனிதரால் இன்று பாரதம் தலை நிமிர்ந்து காணப்படுவதால் தான் நீங்கள் இதுபோன்ற கீழ்த்தரமான மதவெறி பிடித்த பதிவுகளை போட முடிகிறது !

  4. இலங்கையில் நடைபெற்ற தொடர் போராட்டம் பெரும் வன்முறையில் முடிந்துள்ளது, பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் தன் பதவியினை துறந்துள்ளார்

    அந்த தீவு நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக சில வாரங்களாக நடக்கும் ஆட்சிக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது, பதவி விலகமுடியாது என பிரதமர் மகிந்த ராஜபக்சே அறிவித்த்தபின் நிலமை இன்னும் மோசமானது

    அதிபர் கோத்தபாய ராஜபக்சே அவசரநிலை பிரகடனம் செய்தபின்னும் நிலமை சரியாகவில்லை, நேற்று அதிபர் மாளிகை முன் நடந்த போராட்டம் ஆங்காங்கே போராட்டகாரர்களுக்கும் ஆளும்கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையாயன் மோதலாக உருவெடுத்தது

    எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தாக்கபட்டபின் நிலமை மோசமானது, ஆளும் ராஜபக்சே கட்சியான பொதுஜன பெருமுன கட்சியினர் போராட்டகாரர்களுடன் நேரடியாக மோதினர்

    அந்த மோதலில் முன்னாள் எம்பி அமரகீர்த்தி அதுகொரால என்பவர் போராட்டகாரர்களை நோக்கி சுட்டதாகவும் அதனால் போராட்டகாரர்கள் அவரை தாக்கியதில் அவர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன‌

    நிலமையின் வீரியத்தை தொடர்ந்து நேற்று மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்

    இலங்கையின் பலமான புத்த சங்கங்கள் ராஜபக்சேவுக்கு எதிராக பேச தொடங்கியதை அடுத்து அவருக்கும் வேறு வழி தெரியவில்லை

    ஆனாலும் அதிபராக மகிந்தாவின் சகோதரர் கோத்தபாய இன்னமும் நீடிக்கின்றார், இலங்கை அரசியலமைப்புபடி அதிபரே பெரும் அதிகாரங்களை கொண்டவர், நிழல் அதிபர் எனும் வகையில் மகிந்தாவின் மறைமுக ஆட்சி இன்னமும் நீடிக்கின்றது
    தொடர்ந்து கலவரங்கள் நடக்கின்றன, ராஜபக்சேவின் சொத்துக்கள் சில எரிக்கபடுகின்றன‌

    இலங்கையின் நிலை சிக்கலானதை தொடர்ந்து அதிபர் கோத்தபாய ராஜபக்சே விரைவில் இந்தியாவின் டெல்லிக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன‌

    இலங்கையில் 1970களின் கம்யூனிச போரட்டங்கள், 1980களின் தமிழ் போராளி மோதல்கள் என இலங்கை அரசுக்கு சிக்கல் வரும்பொழுதெல்லாம் இந்தியாதான் களமிறங்கும், இன்னொரு நாட்டை இந்தியா அங்கு அனுமதிக்காது

    அவ்வகையில் இம்முறையும் இந்தியா களமிறங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது, விரைவில் சில காட்சிகளை காணலாம்

    எது எப்படியாயினும் இன்னும் சிலமாதம் அல்லது அடுத்த தேர்தலில் தமிழக தெருக்களில் இப்படி ஒரு குரல் ஒலிக்கும்

    “என்ன நடந்து கொழும்புல.. என்ன நடந்து?

    ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டத்துல கன்னத்துல மரு வச்சிட்டு நின்னவன் நானேதான் ஒரு பயலும் கண்டுபிடிக்க முடியலியே, ஏண்ணா அண்ணன் எனக்கு கத்து கொடுத்த சிங்களம் அப்படி

    ராஜபக்சேவ குறிவச்சி நான் அடிக்கும் போதுதான் அந்த எம்பி மாட்டிகிட்டான், இல்லண்ணா ராஜபக்சே அவ்வளவுதான்

    அவன் என்ன சொல்லி பதவி விலகுனான் தெரியுமா? இப்ப சொல்றேன்

    பிரபாகரன கூட சமாளிக்கலாம் சீமான் வந்துட்டான் எனக்கு பயமாயிருக்கு… புஹஹஹா புஹஹஹா புஹஹஹா”

  5. இந்தியாவின் இந்துமத பண்டிகை எல்லாம் அந்நாடு வாழ்ந்த பெருவாழ்வின் பிரதிபலிப்புகள், இந்துமதம் அங்கு கொண்டாடபட்ட வகையினையும் அம்மதம் கொடுத்த பிரமாண்ட வாழ்வினையும் நினைவு கூறும் காட்சிகள்

    அது தஞ்சை கோவில் விழா, மதுரை சித்திரை திருவிழா, திருவாரூர் தேர், பூரி ஜனநாதர் ஆலய விழா இன்னும் நாடெங்கும் நடக்கும் விழாக்களில் அழகாக தெரியும்

    எவ்வளவு வசதியும் வளமும் வாழ்வும் செல்வமும் கற்பனைக்கும் எட்டா ஐஸ்வர்யமும் இருந்திருந்தால் அவ்வளவு செல்வத்தையும் ஞானத்தையும் இந்துமதம் கொடுத்திருந்தால் இதெல்லாம் சாத்தியம் என்பதும் விளங்கும்

    ஒவ்வொரு இந்துவிழாவும் ஒவ்வொரு வரலாற்றை சொல்பவை, பாரம்பரியத்தை சொல்பவை

    அவ்வகையில் கேரள திருச்சூர் ஆலயத்தின் பூரம் விழா கொண்டாடபட்டுகொண்டிருக்கின்றது

    பிரமாண்டமான கூட்டமும் யானைகளின் அணிவகுப்பும் ஊர்வலமும் முத்து குடைகளும் யானைக்கான தோரணங்களும் இன்னும் பலவும் அந்த இந்து மண்ணின் பெருவாழ்வை சொல்கின்றது

    அந்த விழா அக்கால மன்னன் வடக்குநாதன் ஆலயம் எனும் சிவாலயத்துக்கு ஏற்படுத்திய விழா அது, இந்து மன்னர்கள் எப்படியான பக்தியினை வளர்த்திருக்கின்றார்கள், எப்படியான பக்தி கொண்டாட்டங்களை கொடுத்திருக்கின்றார்கள் என்பதை சொல்லும் விழா அது

    சேரநாட்டின் யானைகள் தனி சிறப்பு வாய்ந்தவை, சேரநாடு வேழமுடைத்து எனும் அளவு சிறப்பானவை

    அந்த பண்டைய அடையாள யானைகள் அணிவகுப்போடு அவர்களின் பிரசித்தியான இசையோடு தனித்துவமான இந்து கலாச்சாரத்தோடு பூரம் விழாவினை கொண்டாடுகின்றது அந்த பரசுராமன் பூமி

    இந்த பூர திருவிழாவில் சாவர்க்கர் உள்ளிட்ட தேசாபிமானிகள் படங்களும் குடைகளில் இடம்பிடித்தன என்கின்றன செய்திகள்

    திருச்சூர் பூரம் ஒரு தேசிய பண்டிகை, இந்நாட்டின் பெருவாழ்வினையும் இந்த தேசம் கொண்டிருந்த பிரமாண்ட கொண்டாட்டத்தையும் சொல்லும் பண்டிகை

    அதனை கொண்டாடும் ஒவ்வொருவருக்கும் தேசாபிமானிகள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றார்கள்

    ஜெய் மகாதேவா…

  6. ராஜபக்சே தப்பி ஓட்டம் சர்வதேச சமூகமே தமிழனின் வீரத்திற்கு தலைவணங்கு : வைரமுத்து கவிதை

    ஆக ராஜபக்சே வீட்டை கொளுத்தியதும் அவரை ஓட விரட்டியதும் சிங்கள மக்கள் அல்ல, இலங்கை மக்கள் அல்ல தமிழர்கள் என்பது போல சொல்லவருகின்றார் கவிஞர்

    அப்பட்டமான உளறல் என்றால் இதுதான்.

    தமிழ் ஜிப்மர் மருத்துவமனையில் உள்ளது என முன்னதாக கவிஞர் சொல்லியிருந்தார்

    “கொலம்பஸ் விட்டாச்சி லீவு…” “சென்னோரிட்டா.. சென்னோரிட்டா” என தமிழ்பாடல் எழுதி தமிழை ஜிப்மருக்கு ஏற்றிவிட்டது யாரென்றால் இவரேதான்

    “தீவானா தீவானா” என தமிழில் இந்திபாடல் எழுதியது யாரென்றால் அதுவும் அவரேதான்

    ஏன் இப்படி ஆகிவிட்டார் கவிஞர்?

    கருணாநிதி சமாதியின் தயிர்வடையினை தின்று தொலைத்திருப்பார் போலிருக்கின்றது

  7. இலங்கையில் உள்ள சிலரிடம் தொடர்பு கொண்டு மகிந்த ராஜபக்சேவின் தந்தையார் சிலை ஏன் வைக்கபட்டது? அதை ஏன் இப்பொழுது இடித்தார்கள் என கேட்டால் அவர்களில் சிலர் சொல்வது இதுதான்

    “அய்யா, அந்த டான் ஆல்வின் வெள்ளையருக்கு எடுபிடியாக வெள்ளையனுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டிருந்ததால் பெரிய அடிதளத்தை அவருக்கு வெள்ளையன் கொடுத்தான்

    அந்த அடிதளத்தில்தான் ராஜபக்சே குடும்பம் அரசியலில் நிலைத்து இன்று இப்படி தேசம் ஆகிவிட்டது

    உங்களுக்கு புரியும்படி சொன்னால் உங்கள் நாட்டின் பிரதான பழைய‌ அரசியல்வாதிகளின் சிலையினை கவனியுங்கள் அதெல்லாம் பெரும்பாலும் வெள்ளையன் காலத்தில் அவனுக்கு ஊழியம் செய்த கூட்டத்தின் சிலைகளாகவே இருக்கும், இதுவும் அப்படித்தான்

    அவை இருக்கும் வரை தேசம் உருப்படாது அய்யா”

  8. இலங்கையில் நடப்பது உள்நாட்டு சிக்கல், அங்கு அதிபர் கோத்தபாய அரசு நிலமையினை கட்டுக்குள் வைத்திருக்கின்றது, அவர்கள் அழைக்காமல் இன்னொரு நாடு உள்ளே செல்லமுடியாது அப்படி சென்றால் அது இறையாண்மையினை மீறும் செயலாகும்

    இதனால் இந்தியா தன் ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பும் வதந்தியினை அறிக்கை பூர்வமாக முறியடித்திருக்கின்றது, இந்திய ராணுவம் அனுப்பபடாது என இந்திய வெளியுறவுதுறை அதிகாரி தெரிவித்துள்ளார்

    இலங்கை நிலவரம் இப்படி இருக்க ரஷ்யா உக்ரைனில் பெரிதாக அடிவாங்குகின்றது, கார்கிவ் நகரில் இருந்தும் ரஷ்யா அப்புறபடுத்தபடுகின்றது

    ரஷ்ய ராணுவம் மிக பலமானது பேரழிவு ஆயுதங்களை கொண்டிருப்பது என்பதில் சந்தேகமில்லை ஆனால் ரஷ்யாவின் முழு பலமும் அந்நாட்டுக்கு அச்சுறுத்தல் வந்தால் மட்டுமே பாவிக்க அதுவும் போர் காலத்தில் பாவிக்கத்தான் அவர்கள் சட்டம் அனுமதிக்கின்றது

    இந்த போர் ரஷ்யாமேல் தொடுக்கபட்ட போர் அல்ல மாறாக ரஷ்யா வலுத்து தொடங்கியது, இன்னமும் அதை போராக அறிவிக்காமல் “சிறப்பு ராணுவ நடவடிக்கை” என்றுதான் புட்டீன் சொல்லிகொண்டிருக்கின்றார்

    இதனால் பெரும் அழிவு ஆயுதங்களை ரஷ்யா பாவிக்க முடியாது, பாவித்தால் ரஷ்ய நிலமை இன்னும் மகா மோசமாகும்

    ரஷ்யா கோடரியினை கையில் வைத்திருக்கின்றது ஆனால் தேனி கூட்டம் கொட்டும்பொழுது கோடரியால் என்ன பலன் இருக்க முடியும்? ரஷ்ய நிலை அப்படித்தான்

    மிக மோசமான பின்னடைவில் இருக்கும் ரஷ்ய ராணுவம் தன் தரைபோரின் பெரும் பலமாக கருதும் சிறப்பு டாங்கிகளை இறக்கியிருக்கின்றது

    இவை ஏவுகனையால் தகர்க்கமுடியாதவை பெரும் பாதுகாப்பு அம்சம் கொண்டவை, இது மிக சிறிய அளவில்தான் ரஷ்யாவிடம் உண்டு

    அவற்றை களமிறக்கியிருக்கின்றது ரஷ்யா, அதாவது போரின் அடுத்த கட்டத்துக்கு செல்கின்றது

    மேலை நாடுகள் உக்ரைனில் ரஷ்ய ஆயுதத்தையெல்லாம் சந்தித்துவிடுவது அல்லது வெளிகொணர்வது என சவால் எடுக்கும் வேளையில் அவர்கள் திட்டம் வெற்றியாகின்றது

    இந்த டாங்கியும் தோற்கும் பட்சத்தில் உக்ரைன் தலைகீழ் வெற்றியினை பெறலாம்

    அதாவது நிலமை இப்படி ரஷ்யாவினை பின்வாங்க வைத்தால் 2014ல் ரஷ்யா கைபற்றிய உக்ரைனின் கிரிமீயாவினை கூட உக்ரைன் மீள பிடிக்கலாம்

    ஆக உக்ரனை பிடிக்க போய் உள்ளதையும் விட்டுவிட்டு திரும்பும் ரஷ்ய ராணுவம் எனும் ஆருடங்கள் வர தொடங்கியிருக்கின்றன, பார்க்கலாம்

  9. மறுபடியும் ஏதோ கிளறிவிட்டிருக்கின்றார் மாரிதாசர்

    அவர் ஒருவிஷயத்தை உணர மறுக்கின்றார் அல்லது பிடிவாதம் பிடிக்கின்றார், கொள்கை அளவில் ஒவ்வொருவருக்கும் ஒரு பிடிப்பு இருக்கலாம் ஆனால் அரசியல் என்பது சில இடங்களில் சமரசம் செய்யவேண்டிய விஷயம்

    உதாரணத்துக்கு காந்தியினை பாஜகவினருக்கு பிடிக்காதுதான் ஆனால் அரசியலில் காந்தி சமாதிக்கோ காந்தி நினைவுநாளுக்கோ மோடி போகாமல் இருக்கமுடியாது அவரை பற்றி பேசாமல் இருக்க முடியாது அதுதான் அரசியல்

    அண்ணாமலை ராம்சாமியினை பெரியார் என சொன்னால் அது கட்சி நிலைப்பாடு அதுதான் அரசியல்

    மாரிதாஸரின் புரட்சி வெறி எல்லாம் அவ்வளவு சரியானதாக இருக்கமுடியாது, 1980களில் அசாமில் 28 வயது மொகந்தா குபீரென புரட்சியாளராகி முதல்வராகி அசத்தினார் மக்கள் ஆதரவு அன்று அப்படி இருந்தது

    பின் என்னாயிற்று? இன்று மொகந்தா யாருக்காவது தெரியுமா?

    இப்படி மக்களை திரட்டுகின்றேன் புரட்சி செய்கின்றேன் என்பதெல்லாம் நீண்டகாலம் பலனளிக்காது நின்று நிலைக்காது

    மக்களை வாக்களிக்க திரட்டுவதை விட சிந்திக்க வைக்க வேண்டும் தன்னை உணரவைக்க வேண்டும், ஒரு நல்ல தலைவன் அதற்கு வழிகாட்ட வேண்டும்

    அரசியலின் இன்னொரு பக்கத்தை ஆளும் கட்சியினரின் செயல்பாடுகளை பொதுஇடத்தில் பிளந்து காட்ட வேண்டும், ஒவ்வொரு மக்களையும் சிந்திக்க வைக்க வேண்டும்

    அண்ணாமலை அதைத்தான் செய்கின்றார்

    மாரிதாஸர் மறுபடி மறுபடி அண்ணாமலையினை தாக்குவதும் சரியல்ல, சமூக ஊடகங்களால் சல்லிக்கு பிரயோசனமில்லை என மாரிதாஸர் கருதுவாரானால் அவருக்கு ஏன் யு டியூபும் இணையதளமும்?

    அவருக்கு தலைவர் மோடி என்றால் ஏன் யுடியூபிலே சுற்றிகொண்டிருக்க வேண்டும்?, களமிறங்கி ஒரு தொகுதியிலாவது பாஜக எனும் கட்சியினை மோடிக்காக வளர்க்கலாம் அல்லவா?

    அதை செய்யலாம் அல்லவா?

    அவர் செய்யமாட்டார் செய்யும் திட்டமும் இல்லை, அவர் ஒரு விபரீத பெரும் கனவில் இருப்பது தெரிகின்றது ஆளாளுக்கு கனவு கண்டு கட்சிக்குள் வந்தால் கட்சிக்கு ஏன் தலமை அதுவும் டெல்லியில் ஒரு தலமை என்பதுதான் தெரியவில்லை

    சிலவருடம் வீடியோ வெளியிடுவதுதான் பாஜகவில் பதவி வாங்க தகுதி என்றால் எதிர்காலத்தில் அது மிகபெரிய குழப்பமாக முடியும், ஆளாளுக்கு வீடியோ என்ன? வெப் சீரியலே தயாரித்துவிட்டு கமலாயலம் வாசலில் வந்து நிற்பார்கள்

    இதெல்லாம் சரியான விஷயம் அல்ல‌

    மாரிதாஸ் மோடியினை ஏற்றுகொண்டார் என்றால் நல்லது, அவர் ஒரு குழப்பத்தில் இருப்பது தெரிகின்றது

    அவர் யூடியூப் பத்திரிகையாளரா இல்லை அரசியல்வாதியா என்பது அவருக்கே தெரியவில்லை

    அவர் அரசியல்வாதி என்றால் தலமைக்கு கட்டுபட்டு கட்சியில் இணையட்டும், அவர் யு டூயுப் பத்திரிகையாளர் என்றால் அதை நடத்தட்டும்

    ஒரு பத்திரிகை வைத்து கொண்டு கட்சியினை கைபற்றும் “முரசொலி” காலமெல்லாம் என்றோ முடிந்துவிட்டது, கருணாநிதியின் அந்த ஜெகஜாலத்தை மாரிதாஸால் செய்யமுடியாது அதுவும் பாஜகவில் முடியாது

    இங்கு ஆனானபட்ட ஜெயகாந்தன் கண்ணாதாசன் சிவாஜிகணேசன் சோ ராமசாமியெல்லாம் பெரும் மக்கள் செல்வாக்கு இருப்பதாக கருதி தலைகீழான காட்சிகள் உண்டு, மாரிதாஸர் அதை கவனத்தில் கொள்வது நல்லது

    1984ல் கட்சி தொடங்கி இன்று அசைக்கமுடியா நிலையில் இருக்கும் பாஜகவினருக்கு தமிழகம் பற்றி நிச்சயம் சில திட்டம் இருக்கும், அவர்களுக்கு சில வீடியோக்களை வெளியிட்ட தான் வழிகாட்ட போவதாக மாரிதாசர் சொன்னால் அது அமெரிக்காவுக்கு இலங்கை அரசு ஆயுதம் கொடுப்பதற்கு சமம்

  10. மத விவகாரங்களில், விழாக்களில், வழிபாடுகளில் தலையிட அரசாங்கத்திற்கு இடமில்லை என உறுதியாகக் கூறுகிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். இருப்பினும், ஹிந்துப் பண்டிகைகளுக்கு, விழாக்களுக்கு, வழிபாடுகளுக்கு எதிராகத் தொடர்ந்து தமிழக அரசாங்கம் நடந்து கொள்கிறது. ஹிந்துக்களைச் சிறுமைப்படுத்தி அவமானப்படுத்துவதனை இன்றைய தி.மு.க. அரசாங்கம் செய்துகொண்டே இருப்பதனைக் காண்கிறோம். இது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய உரிமையை அவமதிக்கும் ஒரு செயல். இதனைக் கண்டித்து பா.ஜ.க.வைத் தவிர எந்தக் கட்சிகளும் குரலெழுப்புவதில்லை. இது கண்டிக்கத் தக்க ஒரு செயலாகும்.

    மதச் சுதந்திரம் என்பது இஸ்லாமியனுக்கும், கிறிஸ்தவனுக்கும் மட்டும்தானா என்ன? பெரும்பான்மை ஹிந்துக்களுக்கு எதற்காக அந்தச் சுதந்திரம் மறுக்கப்படுகிறது? இந்த அநீதியை எதிர்த்துப் போராட எதற்காக ஹிந்துக்களுக்குத் துணிச்சல் இல்லாமல் இருக்கிறது?

    திராவிடப் புண்ணாக்கர்கள் ஆட்சிக்கு வந்த இந்த ஐம்பதாண்டு காலகட்டத்தில் தமிழக கலாச்சாரம் சீரழிக்கப்பட்டிருக்கிறது. நமது முன்னோர்கள் கட்டிய பேராலயங்கள் பலவும் அழிந்துவிட்டன அல்லது அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இதனை இரண்டு திராவிடக் கட்சிகளும் செய்திருந்தாலும் குறிப்பாக தி.மு.க. செய்த அழிவு அதிகம்.

    தமிழ் ஹிந்துக்களை, அவர்களின் கலாச்சார விழுமியங்களை, அவரகளின் பக்தி இலக்கியங்களைச் சிறுமைப்படுத்தி அழிப்பதனை முன்னெடுத்துச் செய்தவர்கள் தெலுங்கர்!களான ஈ.வெ.ராமசாமியும், அண்ணாதுரையும் (அரைத் தெ!லுங்கர்), மு.கருணாநிதியும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தமிழர்களை வெற்றி கொண்டு அவர்களை ஆண்ட பரம்பரையில் வந்தவர்களெனத் தங்களை நினைத்துக் கொண்ட, தமிழர்களை அடக்கி ஆளும் உரிமை தங்களுக்கே இருப்பதாக கற்பனை செய்து கொண்ட இவர்களே மிஷனரிகளின் கைப்பாவைகளாகச் செயல்பட்டு இன்றுவரையில் பூர்வகுடித் தமிழர்களை முன்னேற விடாமல் அடக்கி ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.

    சமீபத்தில் தமிழ் வளர்த்த ஆதினங்களின் வழிபாட்டுரிமைகளில் கை வைத்ததுவும் இதன் தொடர்ச்சியே. ஏனென்றால் தமிழ், தமிழர்கள் சம்பந்தமான எதுவுமே தி.மு.க.வைச் சேர்ந்த தெ!லுங்குத் தலைமைக்கு எட்டிக்காயாகக் கசக்கும். ஏனென்றால் தமிழன் விழிப்புணர்வு அடைந்தால் இவர்களின் பிஸினஸ் படுத்துவிடும். எனவே அவனை எப்பாடுபட்டேனும் அமுக்கி வைக்கவே மெற்படி தி.மு.க. தெ!லுங்கர்கள் முயலுவார்கள்.

    ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எனக்குத் தமிழன், தெலுங்கன் என்கிற வேறுபாடெல்லாம் இல்லை. அதேசமயம் உண்மையைச் சொல்ல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. உண்மை உண்மையாகவே சொல்லப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக நிற்கிறேன்.

    இன்றைக்குத் தமிழகத்தில் இருக்கும் அனைத்து உயர்பதவிகளிலும் நீங்கள் பூர்வகுடித் தமிழர்களை அபூர்வமாகவே பார்க்க நேரிடும் என்பது உண்மையா இல்லையா? இன்றைக்குத் தி.மு.க சார்பில் தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் குறைந்ததது 130 பேர்கள் தெ!லுங்கர்களா இல்லையா? பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. எம்.பி.க்களில் குறைந்தது 25 பேர்கள் தெ!லுங்கர்களா இல்லையா? எதற்காக தமிழர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்?

    மு.கருணாநிதிக்குத் தானொரு தெ!லுங்கன் என்கிற பெருமிதம் இருந்தது. தன்னைச் சேர்ந்தவர்களே தமிழக அரசுப் பணிகளில் இருக்கவேண்டும் எனத் திட்டமிட்டு நுழைத்தவர் அவர் என்பது உண்மையா இல்லையா? அவரது மகனான அய்யாத்துரை என்கிற மு.க.ஸ்டாலினுக்கும் அந்தப் பெருமிதம் மிக அதிகம் என்பதும் உண்மையா இல்லையா?

    சேகர்பாபு என்கிற தெ!லுங்கர் தமிழர்களின் ஆலயங்களைச் சூறையாடி வருகிறார் என்பது உண்மையா இல்லையா? தமிழர்களின் ஆலய வழிபாட்டில் கொள்ளையடிக்கிறான் என்பது உண்மையா இல்லையா?

    தமிழ், தமிழ் என்று சொல்லித் தமிழை அழித்தவன் தி.மு.க.காரன் என்பது உண்மையா, இல்லையா?

    தமிழர்களை சினிமாப் பைத்தியமாகவும், குடிகாரர்களாகவும் ஆக்கி அவர்களின் ரத்தத்தை உறிஞ்சிப் பிழைப்பவன் யார்? தமிழ்க் குழந்தைகளை இன்றைக்குக் குடிக்கப் பழக்கி அவர்களின் எதிர்காலத்தைப் பாழடித்துக் கொண்டிருப்பவன் எவன்?

    தமிழகத்திற்கு நாயக்க அரசர்கள் செய்த நன்மைகள் எல்லாம் எனக்கு நன்றாகவே தெரியும். அதனை வைத்து ஜல்லியடிக்காதீர்கள். அந்தக் காலம் வேறு; இன்றைய காலகட்டம் வேறு.

    இன்றைய நிலைமையை உணர்ந்து உங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் போராடுங்கள் என்கிறேன். கேட்பதும் கேட்காததும் அவனவன் விருப்பம்.

  11. அந்த திருவாரூர் இந்துஸ்தானத்தின் பழம்பெரும் தலங்களில் ஒன்று, கடலுள் மூழ்கிய பூம்புகாருக்கு இணையான பாரம்பரியமும் பழமையும் கொண்ட ஊர்

    அந்த ஊர் சிவனின் அடையாளம் ஒன்றால் அறியபட்டது, அரூர் எனும் அந்த நகரமே சிவாலயம் ஒன்றால் பெயர்பெற்றது, அந்த ஆலயம் இல்லையென்றால் அங்கு எதுவுமில்லை

    அப்படிபட்ட ஆலயத்தின் சிறப்புகள் சொல்லி முடிக்க முடியாதவை, முற்கால சோழர் முதல் ராஜராஜசோழனின் கடைசி வாரிசுகள் வரை ஏன் பாண்டியரின் காலம் வரை அந்த ஆலயம் தனிசிறப்புடன் கொண்டாடபட்டது

    “திருவாரூரில் பிறந்தால் முக்தி” எனும் அளவு அது சிறப்பான வரலாறு கொண்டது

    சோழமன்னர்கள் பரம்பரை பரம்பரையாக அதனை விரிவாக்கினர், இன்று ஆசியாவின் மிகபெரிய வழிபாட்டு தலங்களில் அதுவும் ஒன்று

    சுமார் ஐந்துவேலி அளவு ஆலயம், ஐந்து வேலி அளவு குளம், ஐந்துவேலி அளவு நந்தவனம் என மிக பிரமாண்டமான வகையில் அது உருவாக்கபட்டது

    எத்தனையோ முனிகளும், சிவனடியார்களும் அங்கு சிவனை தரிசித்தார்கள்

    நாயன்மார்களில் முக்கால்வாசி பேர் அந்த தலத்தை வணங்கியவர்கள், அங்கு வராத நாயன்மார்கள் குறைவு

    சுந்தரர் அங்குதான் நாயன்மார்களின் திருதொண்டர் வகையினை பாடினார்

    சோழமன்னர்கள் அங்கு செய்வித்த காரியம் கொஞ்சமல்ல, நாயன்மார் பாடிவைத்ததும் கொஞ்சமல்ல‌

    அப்படிபட்ட ஊரில்தான் மனுநீதி சோழன் தேர்காலில் மகனை இட்டான் எனும் பெருமையும் பெற்றான், அந்த சோழனுக்கு சிவன் சோதனையினை கொடுத்ததாகவும் அந்த தேர்வடிவில் அவன் அதை வென்றதாகவும் நம்பிக்கை உண்டு

    இதனால்தான் அந்த தேரினை உலகின் மிகபெரிய தேராக சோழமன்னர்கள் செய்தார்கள், இன்றும் உலகின் மிகபெரிய தேர் அதுதான்

    அப்படிபட்ட பல்லாயிரம் வருட பாரம்பரியம் கொண்ட திருவாரூரில் , அதாவது செம்பியன் எல்லாளன் காலம் தொடங்கி 3ம் ராஜராஜசோழன் காலம் வரை சுமார் 4 ஆயிரம் ஆண்டு ஆண்ட மன்னர்கள் கூட ஒரு தெருவுக்கும் தங்கள் அடையாளத்தை இடவில்லை

    கரிகால் சோழன், விஜயாலயன், பராந்தகன், ராஜராஜன், ராஜேந்திரன் என எத்தனையோ உலக சக்ரவர்த்திகள் ஆண்டபொழுதும் அவர்கள் பெயர் இடபடவில்லை

    அதிசிறந்த முனிகள் உலவிய மண் அது, ஒப்பற்ற நாயன்மார்கள் உலாவிய தெருக்கள் அவை அப்படியும் ஒரு நாயன்மார் பெயர் கூட அந்த தெருவுக்கு இல்லை

    காரணம் அந்த ஒப்பற்ற தேர் ஓடும் வீதி தேரின் பெயரிலே அழைக்கபட வேண்டும் என கவுரவபடுத்தினார்கள்

    தியாகராயர் வலம் வரும் வீதி தேர்வீதி அதில் அற்ப மன்னரின் பெயர் இருக்க கூடாது என பக்தியாய் ஒதுங்கினார்கள்

    அப்படிபட்ட பாரம்பரியம் கொண்ட திருவாரூரின் தெற்கு வீதிக்கு கடவுளை நம்பாதவரும் முழு நாத்திகருமான கருணாநிதி பெயரை சூட்டும் அறிவிப்பெல்லாம் சரியானது அல்ல‌

    கருணாநிதி அங்கு சில ஆண்டுகள் 7ம் வகுப்புவரை படித்ததாக வரலாறு உண்டு, அதிலும் தோல்வி, அவ்வளவுதான் அவருக்கும் அந்த ஊருக்குமான தொடர்பு, பின்னாளில் ஒருமுறை எம்.எல்.ஏவாக இருந்தார்

    (அவர் ஓடாத தேரை ஓடவைத்தார் என்பதெல்லாம் வெற்றுவாதம் , இந்துக்கள் வாக்கும் இந்து அறநிலையதுறை நிர்வாகம் பெற்றிருந்த அவர் அதை செய்வது கடமை, அவர் அலுவல்)

    இதற்காக அந்த ஊரின் புனிதமான தெருவுக்கு அவர் பெயர் என்பதெல்லாம் ஏற்றுகொள்ள முடியாதது

    கருணாநிதியும் சுமார் 19 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டார், காஞ்சி தேர்வீதிக்கு அண்ணா நாமம் , ஈரோட்டு தேர் வீதிக்கு ராம்சாமி நாமம், மதுரை தேர்வீதிக்கு மதுரை முத்து நாமம் என மாற்றவில்லை

    அவர் செய்யாததை எல்லாம் இந்த அரசு செய்யுமானால் இது அவருக்கு செய்யும் துரோகம் மட்டுமல்ல , இந்த அரசு சரியான வழியில் செல்லவில்லை என்பதையும் காட்டும் விஷயம்

    இந்துக்களின் எதிர்ப்பு பலமாகின்றது, அதற்கு அரசு செவிமடுக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உருவாகியுள்ளது, அரசு அதை ஏற்கும் என நம்புவோம்

    தமிழக மக்களை முன்னேற்றவும் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவுமே இந்த அரசை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள்

    மாறாக இந்துக்களுடன் எப்பொழுதும் உரசிகொண்டே இருக்கத்தான் இந்த வாய்ப்பினை தங்களுக்கு மக்கள் தந்திருப்பதாக சிலர் கருதுவார்களானால் அது நிச்சயம் நல்ல பலன்களை தராது.

    அரசு அந்த ஆலயத்துக்கு ஏதாவது செய்ய விரும்பினால் ஆக்கிரமிப்புகளை அகற்றட்டும், அந்த ஆலயத்துக்கு 5 வேலி அளவில் நந்தவனம் இருந்ததாகவும், செங்கழுநீர் ஓடை என ஒரு ஓடை அவ்வழி வந்ததாகவும் அந்த நந்தவனத்து பூக்களில்தான் தியாகேஸ்வரருக்கு அர்ச்சனை நடந்ததாகவும் நாயன்மார் வாழ்வில் பதியபட்டிருக்கின்றது

    அரசு அந்த நந்தவனத்தை மறுபடி உருவாக்கட்டும், இன்று சாக்கடையாக மாறியுள்ள அந்த நந்தவனத்தை மீட்கட்டும்

    இப்படி எவ்வளவோ அவசர வேலைகள் உள்ள ஆலயத்தில் அதையெல்லாம் விட்டுவிட்டு வீதிபெயரை மாற்றுவோம் என்பதெல்லாம் ஏற்புடையது அல்ல, செய்ய வேண்டிய விஷயமும் அல்ல

  12. இந்தியாவின் மூன்றாம் குடியரசு தலைவராக ஹாகீர் உசேன் அவர்கள் பொறுப்பேற்ற தினம் இன்று

    இந்த இடத்தில் ஒரு சில விஷயங்களை நினைவு கூறலாம்

    பாகிஸ்தானை ஜின்னா பிரித்தெடுக்கும் பொழுது இந்தியாவில் இஸ்லாமியரும் தாழ்த்தபட்டோரும் வாழமுடியாது என்றும், தான் உருவாக்கும் பாகிஸ்தான் இஸ்லாமிய நாடு எனினும் எல்லா இனமும் சாதியும் சரிக்கு சமம் அன்பாக ஒற்றுமையாக வாழும் முன்மாதிரி தேசம் என சொல்லி பலரை அழைத்தார்

    அங்கு குடியேற அம்பேத்கருக்கும் அழைப்புவிடுக்கபட்டது, தாழ்த்தபட்டோரை பாகிஸ்தான் வரவேற்கின்றது அங்கு எல்லா சலுகைகளும் கிடைக்கும் என சொல்லபட்டது ஆனால் அம்பேத்கர் செல்லவில்லை

    ஆனால் இன்னொரு தலித் தலைவர் சென்றார் அவர் பெயர் ஜோகேந்திரநாத் மண்டல், அவர் ஒருவிதமான இந்திய எதிர்ப்பு அல்லது தலித் புரட்சி மனப்பான்மை கொண்டவர், இந்தியாவில் தலித் மக்கள் வாழமுடியாது எனும் போதனையினை நம்பியவர் ஆனால் நிரம்ப கற்றவர்

    இவர் பாகிஸ்தானுக்கு சென்றார் ஜின்னாவும் அவருக்கு அந்நாட்டின் முதல் நிதியமைச்சர் எனும் பதவி கொடுத்து தன் சமூக நீதியினை நிலைநாட்டினார்

    பாகிஸ்தானில் ஒரு தாழ்த்தபட்டவர் நிதியமைச்சராகிவிட்டார் இந்தியாவில் என்னாயிற்று என ஏராளமானோர் கேட்ட கேள்விக்கு நேருவிடம் பதிலே இல்லை, அந்நேரம் அம்பேத்கர் அவசரமாக சட்டமியற்றும் வேலைக்கு ஒதுக்கபட்டிருந்தார்

    கடைசிவரை அம்பேத்கருக்கு அமைச்சரவையில் இடமில்லை என்பது வேறுவிஷயம்

    அப்படி பாகிஸ்தானில் முதல் நிதியமைச்சராக இருந்த மண்டல் ஜின்னாவுக்கு பின் அந்நாட்டின் உண்மை முகத்தை உணர்ந்தார், அங்கு தலித் இந்துக்கள் மதமாற வேண்டும் அல்லது மிக சிறுபான்மையாக சலுகை இன்றிவாழவேண்டும் என்ற மிரட்டல் விடபட்டபொழுது கடுமையாக எதிர்த்தார்

    விளைவு அவருக்கே மிரட்டல் வந்தது இன்னும் என்னவெல்லாமோ வந்தது

    அலறி அடித்த மண்டல் இந்தியாவுக்கு 1950ல் அடைகலமாக வந்தார், இத்தேசம் அவரை ஏற்றுகொண்டு அடைக்கலம் கொடுத்தது

    இதுதான் இந்தியா, ஒவ்வொரு தலித் புரட்சியாளர்களும் உணரவேண்டிய இந்தியா

    அப்படி பாகிஸ்தானில் இருந்து ஒருவர் மூன்று ஆண்டுகளில் விரட்டபட்ட போதிலும் இந்தியா தன் குடியரசு தலைவராக ஒரு இஸ்லாமியரை 3ம் முறையே நியமித்தது, தொடர்ந்து கலாம் வரை அப்பதவியினை அலங்கரித்தார்கள்

    இந்தியா என்பது அப்படிபட்ட தேசம்

    எமது வருத்தமெல்லாம் இன்று தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் பொங்கும் புரட்சியாளர்களெல்லாம் 1940களில் பிறக்காமல் இருந்தார்களே என்பது

    ஒருவேளை அன்று பிறந்திருந்தால் பாகிஸ்தானுக்கு அனுப்பி இந்தியா எவ்வளவு அருமையான நாடு என்பதை மண்டலுக்கு உணரவைத்ததை போல உணரவைத்திருக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *