ம(மா)ரியம்மா – 4

This entry is part 3 of 14 in the series ம(மா)ரியம்மா

அது சரி… மரியம்மா மதம் மாறி கொற நாளாச்சே. இன்னிக்கு என்ன திடீர்னு போய் அவ மேல இறங்கியிருக்க.

அது சரிதான். ஆனா ஜான் ஒரு அயோக்கியத்தனம் செஞ்சிருக்கான். சர்டிஃபிகேட்ல இந்துன்னு எழுதிக் கொடுத்து அற நிலையத்துறைல வேலைக்குச் சேர்ந்திருக்கான்.

அடப்பாவி.

கிறிஸ்தவனா மதம் மாறிட்டு இந்துவா சலுகையை அனுபவிக்கறதுங்கறது பகலுக்கு புருஷன் ராத்திரிக்கு வேறொருத்தன்னு இருக்கறது மாதிரியானது.

நீ ஆயிரம் தான் சொன்னலும் நீ செஞ்சது தப்புத்தான். நீ என் கூட வா. மொதல்ல மரியத்தை உன் பிடில இருந்து விட்ரு.

உமக்கு என்ன சொன்னாலும் விளங்காதா? விடிய விடிய ராமாயணம் கதை கேட்டுட்டு சீதைக்கு ராமன் சித்தப்பனான்னு கேட்ட வம்சம் தான… பின்ன எப்படி இருக்கும்?

போதும்… உன் வம்சம் பத்திப் பேச ஆரம்பிச்சா ஊரே கூடி நின்னு கை தட்டும். அது கெடக்கட்டும். நீ என் கூட வா. பேத்திக்க தேகத்துல இருந்து வெளிய வா. அதுக எப்படியும் பொழைச்சுப் போகட்டும். இது என் மேல ஆணை என்று சொல்லி இழுத்துச் செல்கிறார்.

மூப்பரால் இழுத்துவரப்படுபவளைப் பார்த்து உற்சாகமடையும் பாதிரியார், ஹஜ்ஜியாரைப் பார்த்து தம்ஸ் அப் காட்டுகிறார்.

வாங்க வாங்க என்று அனைவரும் அவர்கள் இருவரையும் வரவேற்கிறார்கள். தரையில் தலைவிரி கோலமாக, நிலை குத்திய விழிகளுடன் அமர்ந்திருக்கும் மரியம்மாளின் உடம்பில் லேசாக அசைவுகள் தென்படுகின்றன. எழுந்து நின்று தலைமுடியை சரி செய்து கட்டிக்கொள்கிறாள். கலைந்திருந்த உடைகளைச் சரி செய்துகொள்கிறாள்.

ஆசானே… சம்மதிச்சு ஆசானே… ஜெபத்தின பெலம் உண்டோ இல்லையோ நிங்களிட தந்திரத்தின பெலம் இருக்கு ஆசானே என்று அவர் முன் மண்டியிடுகிறான். எதேச்சையாக அந்தப் பக்கம் திரும்பும் ஹஜ்ஜியார் பதறிப் போய் அவனை எழுப்புகிறார்.

அனைவரும் பிரச்னைகள் ஓய்ந்துவிட்டது என்று நிம்மதிப் பெருமூச்சுவிடுகையில் பாதிரியாருக்கும் ஹஜ்ஜியாருக்கும் நடுவில் நிற்கும் ஜானின் உடம்பு முறுக்கேறத் தொடங்குகிறது. அதைப் பார்த்து பாதிரியார் சற்று பின்வாங்குகிறார். மெள்ள ஜானுக்குள் ஏதோ மாற்றங்கள் நடப்பதுபோல் அவன் நிலை குலைகிறான். படாரென்று இரு கைகளையும் விரித்துக் கொண்டு ஆடுகிறான். அவன் வேகமாக வீசியதில் பாதிரியார் மற்றும் ஹஜ்ஜியாரின் மூக்கு உடைபட்டு ரத்தம் கசியத் தொடங்குகிறது.

ஜான் நடந்து சென்று மரியம்மாளின் அருகில் நிற்கிறான். அவனுடைய ஒரு கால் நடராஜரைப்போல் மேலெழுகிறது. மரியம்மாளின் தோள் மேல் அவன் கைகள் சுற்றி வளைக்கின்றன. மரியம்மாள் கையில் திரிசூலம் ஏந்தியதுபோல் நிற்க ஜான் எம்பெருமான் போல் பாதம் தூக்கி நிற்கிறான்.

பாதிரியாரும் ஹஜ்ஜியாரும் என்ன நடக்கிறது என்று புரியாமல் முழிக்கிறார்கள்.

ஆசானே… கட்டுல அடங்காத யானையை அடக்க கும்கியை அனுப்பினீங்க… இப்ப கும்கியும் கட்டறுத்திருச்சு போல. ஆசானா… கொக்கா என்று நடுங்குகிறார்.

அவன் சொன்னதுபோலவே ஜானுக்குள் இறங்கிய மூப்பர் நிறுத்தி நிதானமாகச் சொல்கிறார் :

மரியம்மா மாரியம்மா ஆனா மட்டும் பத்தாது;

ஜானும் தாய் மதம் திரும்பணும்;

மைக்கேல்பட்டிகள் மகேஸ்வரன்பட்டிகளாகணும்.

இதைக் கேட்டதும் பாதிரியார் ஆவேசம் கொள்கிறார்.

ஏன் இதோட நிறுத்தணும். ரோமாபுரி ராமாபுரமாகணும்; இத்தாலி இந்திரபுரியாகணும் அப்படின்னும் சொல்லவேண்டியதுதான?

எங்கள் கையில் இருந்து பறிக்கப்பட்டதை மீட்பதுதான் எங்கள் இலக்கு. மற்றவர்கள் தாமாக மனம் மாறி வந்தால் ஏற்றுக்கொள்ளலாம். நாமாக எதுவும் செய்ய விரும்பவில்லை.

மந்தையில் இருந்த ஆடுகளின் கண்ணீரைத் துடைக்காத இடையனுக்கு ஆடுகள் சொந்தமில்லை.

ஆடுகள் கஷ்டப்படுவதாக ஓநாய்கள் இனியும் கண்ணீர் வடிக்கவேண்டாம். மந்தைகள் இனி தம்மைத் தாமே சரிசெய்துகொள்ளும்.

ஆமாம். மரியம்மாளையும் ஜானையும் தாய் மதம் திரும்பவைக்க அவர்கள் உடம்பில் புகுந்துகொண்டு ஆட்டம்போடுகிறீர்கள். ஊரில் மதம் மாறியிருக்கும் அனைவரையும் தாய் மதம் திரும்ப வைக்க அத்தனை பேரின் உடம்பிலும் புகுந்து கொள்ளப்போகிறீர்களா..?

அது அவசியமில்லை. அவர்களுக்குள் புகுந்திருக்கும் பரிசுத்தப் பேய்களை ஓட்டினாலே போதும்.

அதைக் கேட்டதும் பாதிரியார் சற்று அதிர்ந்து பின்வாங்குகிறார்.

மூப்பர் தொடர்ந்து பேசுகிறார்.

மதம் மாற்றுவதற்கு ஒவ்வொருவராகத் தனித்தனியாக வலை விரிப்பது சரியாக இருக்கலாம். தாய் மதம் திரும்பவைக்கவேண்டுமென்றால் ஒட்டு மொத்தமாக வர வைப்பதுதான் நல்லது. ஏனென்றால், ஏராளமானோர் வழி தவறிவிட்டிருக்கின்றனர். ஒவ்வொருவராகத் திரும்ப வைக்கமுயன்றால் பல தலைமுறைகள் ஆகிவிடும்.

என்ன செய்யப் போகிறீர்கள்? மாஸ் ரீ கன்வர்ஷனா?

அது ரீ கன்வர்ஷன் அல்ல. தாய் மதம் தாய் ஜாதி அதாவது தாய் வீடு திரும்புதல். கடத்தப்பட்டவர்களை விடுவித்து வீடு திரும்பச் செய்வதுபோல் தான் அது. பௌத்தர்கள் தமது மதத்தை எப்படிப் பரப்பினார்கள் என்று தெரியுமல்லவா?

ஒரு மன்னரை மதம் மாற்றுவார்கள். அவர் தனது நாட்டு மக்களை மதம் மாற்றுவார்.

ஆமாம். அது ஒரு வழி. இன்னொரு வழி என்னவென்றால் ஒரு ஊருக்குச் சென்று அங்கிருக்கும் இந்துக்களை வாதத்துக்கு அழைப்பார்கள். பௌத்தர் வென்றால் வாதில் ஈடுபட்டவர்கள் பௌத்தத்தைத் தழுவிவிடவேண்டும். இந்து வென்றால் பௌத்தர் இந்து மதத்துக்குத் திரும்பிவிடவேண்டும்.

கிறிஸ்தவமும் இந்தியாவில் நுழைந்த காலகட்டத்தில் சில இடங்களில் இப்படி வாதுக்கு, உரையாடலுக்கு அழைத்திருக்கிறார்கள்.

ஆமாம். அவர்கள் மதம் மாற்றும் நோக்கத்தில் எந்தவொரு வழிமுறையையும் விட்டுவைக்கவில்லை. ஆனால், வாதம் செய்து வெல்ல முடியாது என்பது தெரிந்ததும்தான் கல்வி, மருத்துவம், பால், ரொட்டி என்று இறங்கியிருக்கிறார்கள்.

அதுதானே மக்களுக்கு மிகவும் அவசியம்.

நிச்சயமாக அவையும் அவசியம்தான். ஆனால், கிறிஸ்தவர்கள் இந்தியாவில் கல்வி, மருத்துவ மையங்கள் ஆரம்பித்தது எல்லாம் ஏற்கெனவே இருந்த அமைப்புகளை அழித்துவிட்டுச் செய்த அராஜகங்கள். அமெரிக்க செவ்விந்திய இனத்தில் அநாதையான குழந்தையை எடுத்து வளர்ப்பதாக பாப்டிஸ்ட் சர்ச்சினர் சொல்வார்கள். உண்மையில் அந்தக் குழந்தையின் தாய் தந்தைக்கு அம்மை நோயைப் பரப்பிக் கொன்றதே அவர்களாகத்தான் இருப்பார்கள். அதுபோல்தான் இந்தியாவில் ஏற்கெனவே இருந்த கல்வி, மருத்துவம், சமூக, பொருளாதார அமைப்புகள், தொழில்கள் அனைத்தையும் அழித்தனர். ஆட்சி அதிகாரம், வணிக நிறுவனம் அனைத்தையும் கையில் வைத்துக்கொண்டு தமது புதிய அமைப்பை இங்கு புகுத்திவிட்டு என்னமோ எல்லாமே அவர்கள் வந்த பின்னர்தான் அறிமுகமானதாக கதைகட்டினார்கள். அவர்களுடைய பள்ளிகளில், கல்லூரிகளில் படித்தவர்கள் அதையே மனப்பாடம் செய்து ஒப்பித்தார்கள். அப்படியாக, நமது வரலாறையும் நம்மை அடக்கி ஆக்கிரமித்த கிறிஸ்தவர்களே எழுதினர்.

இந்துக்களுக்கு புராணங்கள் எழுதத்தான் தெரியும். வரலாறு என்றால் என்ன என்றே அவர்களுக்குத் தெரியாது.

நடந்ததை நடந்தவாறு எழுதுவது என்ற வரலாற்றுப் பார்வை உலகம் முழுவதிலுமே வெகு பின்பாகத்தான் உருவானது. அதுவரை பழங்கால கலாசாரங்கள் அது கிரேக்கமானாலும் ரோமானாலும் சீனாவானாலும் பாரசீகமானாலும் பாரதத்தைப் போலவே மித் மற்றும் புராணங்களினால் உருவானதுதான். பௌத்தர்கள் பகுத்தறிவை நம்புபவர்கள். ஆனால் அவர்கள் எழுதியவற்றிலும் இந்த புராண அம்சமே மிகுந்திருக்கும். இது அன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத விஷயம். ஆனால், ஐரோப்பியர்கள் எழுதும் வரலாறு என்பது அவர்களுடைய அரசியல் திருகல் நிரம்பியது. நினைத்துப் பாருங்கள்… மானின் வரலாறாக மான்கள் படித்தவையெல்லாம் ஓநாய்கள் எழுதியதாக இருந்தால் எப்படி இருக்கும்? ஓநாயின் பசியைப் போக்கத்தான் மான்கள் பூமியில் பிறந்திருப்பதாகவும் ஓநாய்கள்தான் மான்களுக்கு மேய்ச்சல் நிலம் உருவாக்கித் தந்ததாகவும் அவை முன்பு வாழ்ந்து வந்த காடு மிகவும் பாதுகாப்பற்றது என்றும் தானே எழுதப்பட்டிருக்கும்.

அப்படி ஒரு பொய் வரலாறை யாரும் உருவாக்கி நிலைநிறுத்தமுடியாது. மக்கள் கஷ்டப்பட்டதால்தான் மீட்பரைத் தேடி வருகிறார்கள். இந்து தெய்வங்கள் இந்துக்களின் துயரைப் போக்கியிருந்தால் அவர்கள் ஏன் விட்டு விட்டு வருகிறார்கள்?

சரி… இது பற்றி விரிவாக மக்கள் பேசட்டும். வாதத்தில் நீங்கள் ஜெயித்துவிட்டால் உங்களுடைய டினாமினேஷனுக்கு அனைவரும் சென்று சேரட்டும். போட்டியில் உங்களுடைய மதத்தின் பிற டினாமினேஷன்களும் கலந்துகொள்ளட்டும்.

பாதிரியார் இதைக் கேட்டதும் சற்று அதிர்ச்சி அடைகிறார். ஆனால், மறுப்புத் தெரிவித்தால் முதலிலேயே தோல்வியை ஒப்புக்கொண்டதுபோல் ஆகிவிடும் என்று பேசாமல் இருந்துவிடுகிறார்.

அச்சோ வேண்டாம்… நமக்கு பில்டிங் ஸ்ட்ராங். ஆனா பேஸ்மெண்ட் வீக்கு என்கிறார் உதவி பாதிரியார்.

ஹஜ்ஜியாரும் அதையே சொல்கிறார். நாங்கள் இந்த விளையாட்டுக்கு வரவில்லை என்று சொல்லி ஒதுங்கப் பார்க்கிறார்.

கலந்துக்கோங்க பாய். ஒருவேளை நிலைமை கை மீறிப் போனா நமக்குத் தெரிஞ்ச அடவுகளைக் காட்டிக்கலாம். பயப்படாதீங்க என்று உற்சாகப்படுத்துகிறார் பாதிரியார்.

வாதப் பிரதிவாதம் செஞ்செல்லாம் மதம் மாற்றத்தை நியாயப்படுத்த முடியாது ஃபாதர். இது பேசித் தீர்க்கவேண்டிய விஷயம் இல்லை. தீர்த்துட்டுப் பேசவேண்டிய விஷயம்.

அப்படியில்லை. எனக்கு தேவனின் மகிமை மீதும் கருணை மீதும் ஞானத்தின் மீதும் நம்பிக்கை இருக்கிறது. மோதிப் பார்த்துவிடுவோம். நமது செயல்களே நமது பலம் என்கிறார். ஒருவழியாக ஹஜ்ஜியாரும் சம்மதிக்கிறார்.

தேவாலய முற்றத்தில் அனைவரும் ஒன்று கூடி விவாதிக்கலாமென்று பாதிரியார் சொல்கிறார்.

ஆமாம் பாய்… அப்படியே பேசி முடிச்சிட்டு அப்பமும் வைனும் சாப்பிட்டுட்டுப் போகலாம் என்று உதவி பாஸ்டர் சொல்கிறார்.

ஹஜ்ஜியாரோ மசூதியில் அனைவரும் அமர்ந்து விவாதிக்கலாம். அப்படியே பேசி முடிச்சிட்டு பிரியாணி சாப்பிட்டுவிட்டுப் போகலாம் என்கிறார்.

வைன் அப்பமா… பிரியாணியா என்பதில் அவர்களுக்குள் ஒரு சமரசத் தீர்வு உருவாகாமல் போகிறது. கடைசியில் ஊர் மக்கள் அனைவரும் ஆலமரத்தடியில் கூடுகிறார்கள். இந்துக்களும் இந்துவாக மாற வேண்டியவர்களும் தனித்தனி வரிசைகளில் அமர்கிறார்கள்.

Series Navigation<< ம(மா)ரியம்மா – 3 ம(மா)ரியம்மா – 5 >>

9 Replies to “ம(மா)ரியம்மா – 4”

  1. ₹இந்தியா குப்தர்கள், சோழர்கள், ஜடாவர்ம சுந்தரபாண்டியன் காலத்துக்கு பின் உலக அரங்கில் இப்பொழுது வலுவான நாடாக மாறிவருகின்றது, ஒரே காரணம் மோடியின் பலம்

    அந்த பலத்தில் பாகிஸ்தான் பணிந்து கிடக்கின்றது, சீனா ஒதுங்கி நிற்கின்றது, பர்மாவும் வங்கதேசமும் சத்தமில்லாமல் சரிந்து கிடக்கின்றன, இதுகாலம் இந்தியாவினை ஒருமாதிரி தவிக்கவிட்ட இலங்கை இப்பொழுது முழு சரணாகதியில் இந்தியாவிடம் அடைக்கலமாகியிருக்கின்றது

    சில அறிகுறிகள் அதை தெளிவாக சொல்கின்றது, பெரும் சம்பவம் அண்ணாமலையின் இலங்கை பயணமும் அதை தொடர்ந்த பழ.நெடுமாறனின் அறிக்கையும்

    பழ.நெடுமாறன் அண்ணாமலையினை வலுவாக ஆதரிப்பது இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா ஒரு நிலைபாட்டுக்கு வந்ததை தெரிவிக்கின்றது

    பழ.நெடுமாறனுக்கும் ஒரு வரலாறு தமிழகத்தில் உண்டு.1950களில் தமிழகத்தில் நாத்திக நச்சுகாற்று வீசியபொழுது மதுரை பக்கம் அதனை தடுத்தவர் பசும்பொன் தேவர், அந்த சிங்கத்தின் சீற்றத்தில் மதுரையும் அதன் தென்பகுதியும் தேசியமும் தெய்வீகமுமாகவே இருந்தது

    தேவரின் காலத்திலே பழனியப்பா குடும்பம் நாத்திக திமுகவுக்கு சவால் விட்டது, தேவரின் காலத்துக்கு பின்பும் அந்த குடும்பம் தேசிய தெய்வீக செயல்பாட்டுக்கு மதுரையில் காவல் இருந்தது

    மதுரை முத்து உள்ளிட்ட பல திமுகவின் சர்ச்சைகுரிய முகங்களின் அட்டகாசத்தின் பொழுது மிக சரியான பதிலடியினை கொடுத்தது பழனியப்பா குடும்பம், நாள்காட்டி உள்ளிட்டவற்றை அச்சடிக்கும் பிரஸ்கள் வைத்திருந்தார்கள் இன்னும் சில தொழிலும் உண்டு

    அந்த குடும்பத்தில் வந்தவர்தான் பழ.நெடுமாறன்

    1960களில் திமுகவினை எதிர்க்க ஒரே தேர்வு காங்கிரஸ், ஆனால் காங்கிரசும் திமுகவும் “சமய சார்பற்ற” “மத நல்லிக்க” உடன்பாடு கொண்ட கட்சிகள் என்பதுதான் சிக்கல், இருவருக்குமே முதலாளிகள் சிறுபான்மையினர்

    இந்த புள்ளியின் ஆபத்து தெரியாமல் பல தேசியவாதிகள் காங்கிரசில் சிக்கி சீரழிந்தனர், குமரி அனந்தன் பழ.நெடுமாறன் என பலர் உண்டு. காமராஜரும் தன் வழமையான குணம் போல் காங்கிரஸில் தனக்கு அடுத்து யாரையும் வளர்க்காமலே மறைந்தார்

    பழ.நெடுமாறன் காங்கிரஸில் தொடர்ந்தார், இந்திராகாந்தி மதுரையில் தாக்கபட்டபொழுது அவரை மின்னல் வேகத்தில் காப்பாற்றியவர் இந்த பழ.நெடுமாறனே தான்

    இந்திரா இருந்தவரை அவர் காங்கிரஸில் இருந்தார், அப்பொழுதுதான் ஈழபிரச்சினை பெரிதானது

    அந்த 1983 கொழும்பு கலவரத்துக்கு பின் இலங்கையில் இந்தியா நேரடியாக தலையிட்டது, ஆனால் இந்திராவின் மனம் வங்கம் போல் தனிநாடு அமைத்து கொடுப்பது அல்ல என்பதை அவரின் நடவடிக்கைகள் சொன்னது

    காரணம் வங்கம் போல அல்ல இலங்கை, அதன் கடல்பரப்பு காரணமாக பல நாடுகள் தலையிடும் அப்பொழுது தமிழீழம் அமைந்தால் தனி தமிழ்நாடு கோஷம் தமிழகத்தில் உருவாகும் என இந்திரா அஞ்சினார்

    அப்பொழுது காஷ்மீர், பஞ்சாப் என பெரும் சிக்கலில் இந்தியா இருந்த நேரம்

    இலங்கை அரசு அமெரிக்காவுக்கு இடமளிக்க கூடாது அப்படியே தன் கட்டுபாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் போராளிகளை வளர்த்தார், போராளிகளை வளர்த்து என்ன செய்யலாம் என சில திட்டங்கள் இருந்தன அதில் தனிநாடு இல்லை

    இதனை முதலில் உணர்ந்தவன் பிரபாகரன்

    சும்மா சொல்லகூடாது, ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் பிரபாகரனின் நோக்கமும் போராட்டமும் தூய்மையானது தனிநாடு அல்லாத ஒன்றுக்கு அவன் சம்மதிக்கவே இல்லை, அவனின் துணிவும் போராட்ட குணமும் 16 வயதிலே அந்நாட்டில் மக்களை கையெடுத்து வணங்க வைத்தது

    அந்த பிரபாகரன் இந்தியாவின் பயிற்சிக்கு முதலில் வரவில்லை, இந்திரா அழைத்தும் அவன் ஒதுங்கினான், இன்று இந்தியாவின் கைக்குள் விழுந்தால் நாளை இலங்கையில் அவர்களின் அடியாளாக மாறுவோம் எனும் அச்சமும் முன்னெச்சரிக்கையும் இருந்தது

    4 பிரதான குழுக்களுக்கு இந்தியா பயிற்சி அளிக்க தொடங்கியபொழுது பிரபாகரன் வரவில்லை, அவன் கணித்தது சரியாக இருந்தது

    காரணம் பத்மநாபா உள்ளிட்ட குழுவினருக்கு இந்தியா பாலஸ்தீன யாசர் அராபத்திடம் லெபனாலில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தது, இப்படி செய்தால் இஸ்ரேல் அமெரிக்க கூட்டணி இலங்கையில் கால்பதிக்கும் என அஞ்சினான் பிரபாகரன் சரியான கணிப்பு அது

    இந்தியா பக்கம் வரமறுத்த பிரபாகரனை இந்தியா தமிழக மன்னன் எம்ஜி ராம்சந்தர் மூலம் வளைத்தது, ராமசந்திரன் கொடுத்த பாதுகாப்பின் பேரில்தான் பிரபாகரன் இந்திய பயிற்சிக்கே வந்தார்

    இலங்கையில் 4 குழு யுத்தம் புரிந்தாலும் புலிகளின் வீச்சும் அர்பணிப்பும் தூய்மையான கட்டுகோப்பும் அவர்களுக்கு தனி இடம் கொடுத்தன‌

    தமிழகம் மிக பெரிய ஆதரவினை போராளிகளுக்கு கொடுத்தது, திமுகவும் அதிமுகவும் தனி அரசியலாக கையில் எடுத்தன

    இந்திய பயிற்சியில் போராளிகள் இலங்கை ராணுவத்தை கட்டுக்குள் கொண்டுவந்தபொழுதுதான் பிரபாகரன் அஞ்சிய காட்சிகள் நடந்தன‌

    அது ஆப்கனில் சோவியத் யூனியனுக்கு எதிராக அமெரிக்கா கடும் போர் நடத்திய காலம், பின்லேடன் அவர்களின் செல்லபிள்ளையாக இருந்த காலம்

    யாசர் அராபத்தின் பயிற்சி இலங்கைவரை வந்துவிட்ட நிலையில் மொசாத்தும் இலங்கைக்கு வந்தது, பல நாட்டு உளவுதுறைகள் மோதும் களமாயிற்று நிலமை

    அப்பொழுதுதான் போராளி குழுக்குள் சண்டை வந்தது எனினும் இந்திரா இருந்தவரை அமைதி, இந்திராவின் மரணம் அமைதியினை குலைத்தது

    இதுகாலம் காங்கிரஸில் இருந்த பழ.நெடுமாறன் குழம்பியது இங்குதான்

    அடுத்து வந்த ராஜிவ் சீனியர் ராகுல் எனும் வகையில் குழப்பி அடித்தார், ராஜிவின் குழப்பமே பின்பு எல்லா ஈழகுழப்பத்துக்கும் காரணம்

    ராஜிவின் காலத்தில் மிக சரியான தலைவர் ஒருவர் ஈழபிரச்சினையினை சரியான கோணத்தில் கையாள நினைத்தார், அவருக்கு இருந்த அனுபவமும் அறிவும் பல ஆலோசனைகளை சொன்னது, ஆனால் அவர் கட்சி அன்று இரு எம்பிக்களுடன் இருந்த புதுகட்சியாக இருந்ததால் ராஜிவ் அவரை புறக்கணித்தார்

    அந்த தலைவர் பெயர் வாஜ்பாய், அடல் பிஹாரி வாஜ்பாய்

    வாஜ்பாய்க்கு இலங்கை தமிழர்கள் இந்துக்கள், இந்தியாவோடு கலாச்சாரத்தோடு தொடர்புடையவர்கள் எனும் அனுதாபம் எப்பொழுதும் இருந்தது, ஆனால் திராவிடம் போல் அவர்கள் தமீழீழம் கேட்டதும், சிங்கள பவுத்தனுக்கு எதிராக இந்துஈழம் கேட்ட்காமல் இருந்ததும் சரியாக படவில்லைதான் ஆனாலும் கலாச்சார அடிப்படையில் இலங்கை தமிழர்களை வலுவாக ஆதரித்தார்

    இந்த ஆதரவை கருணாநிதி பயன்படுத்தினார், எம்ஜிஆரும் புலிகளும் ஒரு அணியில் நின்றார்கள் தன் கட்சியின் ஜெயலிதாவினை ராஜிவ் ஆதரிக்க, அங்கு ஜெயலலிதாவினை நீங்கள் எனக்கு எதிராக பயன்படுத்தினால் புலிகளை நான் பயன்படுத்துவேன் எனும் ராஜதந்திரம் இருந்தது

    இந்திராவுக்கு பின் பிரபாகரன் எம்ஜி ராமசந்திரனை மட்டும் நம்பினான், அதில் உண்மை இருந்தது

    ராஜிவ் குபீரென குழப்பம் விளைவித்தார், இலங்கையில் வெற்றிபெறும் நிலை இருந்தாலும் ஜெயவர்த்தனே தந்திரத்தில் வீழ்ந்தார், விளைவு தமிழருக்கு தீர்வு எனும் ஒப்பந்தத்தில் தமிழர் தரப்பு யாருமே இல்லாமல் அவர் செய்த ஒப்பந்தத்தை பிரபாகரன் தைரியமாக மறுத்தான்

    இந்த எச்சிசோற்றுக்காக நாங்கள் செத்து போராடவில்லை என தைரியமாக அதுவும் டெல்லியிலே ராஜிவிடம் சீறினார், ராஜதந்திரமாக அவனை கையாளவேண்டிய ராஜிவ் ஏமாற்றம் கொடுத்தது சிக்கலின் முதல்படி

    அதன் பின் காட்சிகள் மாறின, ராமசந்திரன் மறையவும் என்னென்னாலாமோ நடந்தது

    பன்னாட்டு உளவுதுறை சதியில் போராளி குழுக்களே மோதி கொண்டன, பிரபாகரன் தன் உயிரை காக்க பலரை கொல்லவேண்டியதும் ஆயிற்று, காரணம் அந்த ஈழபோராட்ட குழுக்களே முதலாளித்துவம் கம்யூனிசம் என உலக நாடுகளின் பினாமிகளாக மாற ஆரம்பித்தது

    அந்நேரம் வாஜ்பாய் டெசோ அமைப்பில் இருந்தார், இந்தியா முழுக்க இலங்கை தமிழருக்கு ஆதரவு திரட்டினார், அந்நேரம் இந்திய அமைதிபடையும் இலங்கை சென்று நிலமைஇன்னும் சிக்கலாயிற்று

    வாஜ்பாயின் ஆலோசனையினை ராஜிவும் ஏற்கவில்லை பிரபாகரனும் ஏற்கவில்லை, விளைவு வாஜ்பாய் ஒதுங்கினார்

    அதன் பின் என்னானது என்பதுதான் விசித்திரம், அதுவரை புலிகள் பக்கம் திரும்பாத கருணாநிதி புலிகளின் முழு காவலனாக தன்னை காட்டிகொண்டார்

    எப்பொழுதும் மக்கள் விரும்பும் ஒருவரை தன் அருகே வைத்து அவரைகொண்டு தன்னை தமிழின தலைவராக காட்டுவது அவர் ஸ்டைல், எம்ஜி ராம்சந்திரன் எனும் முகமூடி போட்டு அவர் கட்சிவளர்த்தது அப்படித்தான்

    1988ல் தனி தமிழிழத்துக்காய் இந்திய ராணுவத்தையே எதிர்த்த பிரபாகரனை தன் செல்லபிள்ளையாக கருதினார், அன்றைய வலுவற்ற ராஜிவ் இருவரையும் கட்டுபடுத்தமுடியாமல் குழம்பி பின் இந்திய ராணுவமும் குழம்பி எல்லாம் நாசமாகி ராஜிவும் கொல்லபட்டார்

    ராஜிவ் மேல் தவறு உண்டு அதே நேரம் புலிகள் மேலும் பெரும் தவறுகள் உண்டு, ஆனால் அவர்களுக்கும் வேறு தெரிவு இல்லை, இரு துருவ உலக அரசியலில் அவர்களும் வசமாக சிக்கியிருந்தனர், தமிழீழம் எனும் கனவில் வேறு தெரிவும் இல்லை

    ராஜிவ்கொலைக்கு பின் திமுகவின் உண்மை முகம் தெரிந்தது, இனி புலிகளை ஆதரிப்பது அரசியல் தற்கொலை என முடிவு செய்தது அக்கட்சி

    இங்குதான் திமுகவின் தமிழ் அபிமானமெல்லாம் அரசியல் என அதிர்ந்தான் பிரபாகரன், எனினும் வைகோ தங்களை காப்பார் என கடைசி கட்டமாக அவரையும் நம்பினர் அவர் கருணாநிதியினைவிட ஆபத்தானவர் என்பது பின்னாளில்தான் புலிகளுக்கு விளங்கிற்று

    ஆனால் இந்தியாவின்மேல் ராஜிவ் கொலைக்கு பின் புலிகள் எந்த தாக்குதலும் நடத்தவில்லை, காங்கிரஸ் அல்லா ஒரு அரசு வரும்பொழுது நிலமைசரியாகும் என நம்பினார்கள்

    1997ல் வாஜ்பாய் வந்தார், அப்பொழுது புலிகளுக்கு பெரும் வாய்ப்பு ஆனையிறவு யுத்தத்தில் வந்தது

    அந்த வெற்றி வரலாற்று சிறப்பான வெற்றி, புலிகளின் இருபது வருட போராட்டத்தில் மகத்தான வெற்றி சுமார்
    50 ஆயிரம் இலங்கை ராணுவத்தாரை புலிகள் வளைத்து கட்டியிருந்தனர், அதாவது இனி ஈழம் அமைந்த அறிவிப்பு வரவேண்டும்

    பிரபாகரன் 1991ல் செய்த தவறை இங்கு திருத்திகொள்ளவிரும்பினான் அது சரியானது, பழ.நெடுமாறன் அந்நேரம் பெரும் குரல் எழுப்பினார்

    ஆனால் திமுகவும், மதிமுகவும் பெரும் அமைதி. அவர்கள் வலியுறுத்தினால் அன்றே வாஜ்பாய் இந்திய பிரதமராக ஒரு வலுவான முடிவினை இலங்கை தமிழருக்கு கொடுத்திருக்க முடியும் ஆனால் ஜெயின் கமிஷனில் வசமாக சிக்கிய திமுகவும் மதிமுகவும் புலிகளை பலிகொடுத்தன‌

    வாஜ்பாய்க்கு ராஜிவினை கொன்றவர்கள் எனும் வலி இருந்தாலும் அதை தாண்டி இன்னொரு நாட்டில் கால்வைக்க ஆசை இருந்தது, ஈழதமிழருக்கு ஏதும் செய்ய விளைந்தார் ஆனால் பாகிஸ்தான் தொந்தரவு, உள்நாட்டு எதிர்ப்பு , மெஜாரிட்டி இன்மை எனஅவருக்கு சிக்கல் அதிகம்

    ஆனால் திமுக மதிமுக காட்டிய துரோகம் பிரபாகரனை சோகமாக்கியது, சுமார் இரண்டாயிரம் புலிகள் பலகோடி மதிப்பான ஆயுதங்களை இழந்து பெற்ற அந்த வெற்றி பலனில்லாமல் போனது

    இந்தியா அங்கீகரிக்காமல் தனிஈழம் அறிவிக்கமாட்டோம் என தன் பழைய தவறுக்கு பிராயசித்தம் தேடிய பிரபாகனை உலகமே கண்ணீரோடு நோக்கியபொழுது தமிழக அரசியல்வாதிகள் கனத்த அமைதி

    புலிகளும் மனம் ஒடிந்த நேரம் அது, உயிரை கொடுத்து தாங்கள் நடத்திய போராட்டத்தை திமுக தங்கள் அரசியலுக்கு பயன்படுத்தியதை நினைத்து அழத்தான் செய்தனர், 1987ல் இந்தியராணுவத்தையே எதிர்த்த கருணாநிதி இப்படி பல்டி அடித்ததை அவர்களால் தாங்கமுடியவில்லை

    தமிழீழத்தினை விட 1991ல் இழந்த ஆட்சியினை திரும்ப பெறும் வேகம் மட்டும் கருணாநிதிக்கு இருந்தது

    அவர் மட்டும் ஒன்றிய அரசு என ஒன்றாமல் பேசியிருந்தால் 1999லே ஈழம் அமைய காலம் நெருங்கியிருக்கும் அவர் செய்யவில்லை

    எல்லாம் மாறி 2002 வந்தது

    உலகம் அப்பொழுது மாறியிருந்தது, பின்லேடன் செய்த அட்டகாசத்தால் இனி எல்லா தீவிரவாத இயக்கங்களும் தடை என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்து நார்வே தூதுகுழுவினை அனுப்பியது

    அப்பொழுது இந்தியா தலமையில் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தீர்வு கிடைக்க பிரபாகரன் விரும்பினான், ஆனால் காங்கிரஸ் சம்மதிக்கவில்லை பாஜகவும் வலுவாக இல்லை

    இலங்கையில் தங்களை மீறி எதுவும் நடக்காது எனும் மமதையில் இருந்தது காங்கிரஸ்

    ஆனால் ராஜபக்சே சீனா பக்கம் சாய்ந்து அழகாக ஆடி பெரும் யுத்தம் நடத்தினான், அமெரிக்காவும் தங்கள் தலமையில் பேச்சுவார்த்தை நடத்தாமல் இந்தியாவினையே தேடிய புலிகளை ஒழிக்க நினைத்தது

    ஆம் பிரபாகரன் கடைசி காலத்தில் தன் தவறை உணர்ந்து இந்தியா நோக்கி தவமிருந்தான், ஆனால் இங்கு யாரும் அதை உணரவில்லை

    திமுக, 1987ல் எவ்வளவோ தேச எதிர்ப்புகளை புலிகளுக்காக செய்த திமுக மொத்தமாக புலிகளை கைவிட்டதில் பெரும் களபேரம் நடந்தது

    பழ.நெடுமாறன் போன்றோர் கதறினாலும் யாரும் காதுகொடுத்து கேட்கவில்லை

    நிச்சயம் இந்திய ராணுவத்துக்கு உத்தரவிட்டால் இந்திய ராணுவம் இறங்கியிருக்கும், எல்லா வலுவான ராணுவமும் அண்டைநாட்டில் தன் படைகளை எவ்வளவு விரைவாக இறக்கி ஏற்றலாம் என பயிற்சிபெற தயாராக இருக்கும் ஆனால் இந்திய அரசு தலையிடவில்லை

    விளைவு பல்லாயிரம் மக்களோடு செத்தான் பிரபாகரன்

    நிச்சயம் அவன் பரிதாபத்துகுரியவன், இந்தியா இங்கு தலையிட வேண்டாம் அவர்களுக்கு காஷ்மீர் பஞ்சாப் என ஏக சிக்கல் உள்ள நேரம் இன்னொரு நாட்டில் அவர்கள் தனிநாடு உருவாக்கமுடியாது என அவன் மன்றாடியபொழுதும் காங்கிரஸ் அவனை இழுத்து வந்தது

    திமுகவும் அதிமுகவும் அவனை அரசியலாக்கின‌

    பின் 1987ல் துப்பாக்கியினை கீழே போடு என காங்கிரஸின் ராஜிவ் மிரட்டியபொழுது உங்களை கேட்டா துப்பாக்கி எடுத்தேன் என அவன்சீறினான்

    அவுரங்கசீப் முன்னால் சீறிய சிவாஜிக்கும் ராஜிவிடம் சீறிய பிரபாகரனுக்கும் வித்தியாசம் ஏதும் காணமுடியாது

    ஆனால் சிவாஜி வாழ்க்கையில் துரோகிகள் இல்லை, பிரபாகரன் வாழ்க்கையில் அவன் சந்தித்தெல்லாமே துரோகிகள்

    சிவாஜி இந்து ராஜ்ஜியத்துக்கு போராடினான், பிரபாகரன் அதை செய்யாமல் மிஷனரி வலையில் வீழ்ந்தான் பரிதாபம்

    எல்லோராலும் வஞ்சிக்கபட்டு கொல்லபட்டான் அந்த ஈழத்து கர்ணன்

    ஆனால் ஈழம் என்பது அவன் அல்ல, அவன் மட்டும் அல்ல, அவனோடு முடிந்துபோக கூடிய விஷயம் அல்ல, சுமார் 20 லட்சம் மக்களின் எதிர்காலம் அங்கு கேள்விகுறியானது, அதுவும் பெருவாரி இந்துமக்கள்

    இந்நிலையில்தான் மோடி அரசு வந்தது, முதலிலே இலங்கை ஹட்டனில் கால்வைத்து அசத்தினார் மோடி, இந்துத்வா என்பது இந்தியா தாண்டி வெல்ல வேண்டும் என அமித்ஷா சொன்னது உலகை அதிரவைத்தது

    அதில் இருந்து காட்சிகள் மாறின,இலங்கையில் இந்து எழுச்சி மெல்ல கேட்டது, காசி ஆனந்தன் போன்றவர்கள் மோடி ஆதரவுக்க்கு வந்தார்கள்

    இப்பொழுது அப்பழுக்கில்லா தேசியவாதியும் இந்திராவுக்கு பின் அது காங்கிரசே இல்லை என ஒதுங்கியவரும்,இன்றளவும் தன் கொள்கையில் ஈழமக்கள் பால் உண்மையான அன்பு கொண்டவருமான நெடுமாறனும் மோடி பக்கம் வந்திருகின்றார்

    நாம் இதனை முன்பே சொன்னோம், சில வருடங்களுக்கு முன்பே சொன்னோம் தேசியவாதியான பழ.நெடுமாறன் பாஜக பக்கம் வரவேண்டும் என சொன்னோம்

    சரியாக வந்திருக்கின்றார் சரியாக பேசியிருக்கின்றார்

    உண்மையில் இலங்கை தமிழருக்கு ஏதும் செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்த தேசிய தலைவர்கள் இந்திராவும் வாஜ்பாயும் மட்டுமே, தேசிய தலமையால் மட்டுமே அங்கு ஏதும் செய்யவும் முடியும்

    இந்திராவுக்கு பின் காங்கிரஸ் அழிந்ததில்தான் இலங்கையும் அழிந்தது

    வாஜ்பாயினை மிக சரியாக படித்த மோடி இப்பொழுது வலுவான வாஜ்பாயாக களம் இறங்கி தன் தளபதி அண்ணாமலையினை முன் நிறுத்துகின்றார்

    தளபதி அண்ணாமலையும் சரியான ஆட்களை சரியான நேரத்தில் சந்தித்து காட்சிகளை மாற்றுகின்றார்

    இனி நிச்சயம் இலங்கை தமிழருக்கு ஒரு முடிவு வரும்

    ஜெயவர்த்தனேவுக்கு அடுத்து மிகபெரிய தந்திரகாரனாக இந்தியாவிற்கு எதிராக சீனாவினை கையில் வைத்து ஆட்டம் போடமுயன்ற ராஜபக்சே அலறி அடித்து ஓடியிருக்கின்றார் என்பது ஒருவகையில் இந்திய வெற்றி

    இந்திய எதிரி ஆளமுடியாது எனும் வெற்றி

    சீனாவோ இதர நாடுகளோ இலங்கையில் கால்வைக்கமுடியா அளவு காய் நகர்த்தி அந்த நேரம் அண்ணாமலையினை அனுப்பி பல்ஸ் பார்த்ததெல்லாம் பெரும் ராஜதந்திரம்

    ஈழசிக்கலுக்கு ஒரே காரணம் வலுவான இந்திய தலமையும் அவர்களோடு வலுவாக தமிழக தலமை இல்லாததுமே

    இப்பொழுது எல்லாம் சரியாகின்றது “தளபதி” அண்ணாமலை மிளிர்கின்றார்

    பிரபாகரன் ஒருவகையில் வீரசிவாஜி சாயல், ஆனால் சிவாஜியிடம் இருந்த இந்துராஜ்ய வெறிமட்டும் அவனிடம் இல்லை அவனின் வீழ்ச்சிக்குஅதுதான் காரணம்

    சிவாஜிக்கு பின்னர் பெரும் அழிவுகள் அவுரங்கசீப்பால் வந்தாலும் வரலாற்றில் மராட்டிய இந்துசேனைதான் வென்றது என்பது போல இலங்கையிலும் வரலாறு திரும்பட்டும்

    பழ.நெடுமாறனை நாம் வாழ்த்துகின்றோம், இந்திய அரசின் சார்பில் ஈழவிவகாரங்களுக்கு அவரை தயக்கமின்றி நியமிக்கலாம் முதிர்ந்த அனுபவமும் வயதும் கொண்ட அவர் சரியான தேர்வு

    “தளபதி” அண்ணாமலையாருக்கு நன்றி, சரியான பாதையில் செல்கின்றது தமிழக பாஜக

  2. மே 26ம் தேதி சென்னைக்கு வருகின்றார் பாரத பிரதமர் மோடி

    தமிழகத்துக்கு பல்லாயிரம் கோடி நலதிட்டங்களை அறிவிக்க வரும் அந்த பெருமகன், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடக்கும் விழாவில் அதனை அறிவிப்பார்

    இம்முறை இந்த கருப்புகொடி விளையாட்டு, “கோபேக் மோடி” எனும் விளையாட்டெல்லாம் இருக்காது என்பது எல்லோரும் அறிந்தது, தமிழக அரசு இப்பொழுதெல்லாம் எந்த சிக்கலையும் தவிர்க்கவே விரும்புகின்றது என்பது தெரிகின்றது

    எம்மை பொறுத்தவரை மோடி வந்து நலதிட்டங்களை அறிவிக்கட்டும், அதை மக்களிடம் தமிழக பாஜக சென்று சேர்க்கட்டும்

    இதுவரை தமிழகத்துக்கு செய்த திட்டங்களை மோடி சொல்லட்டும் அதுவும் தமிழகமெல்லாம் பரவட்டும், அதற்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் அங்கே அது கிழிபடட்டும்

    மோடி செய்யவேண்டிய முதல் காரியம் ஒன்று உண்டு, அது மே மாத துயரங்கள்

    மேமாதம் ராஜிவ் கொலை முதல் முள்ளிவாய்க்கால் கொலைகள் வரை அரங்கேறிய மாதம், மோடி திருப்பெரும்புதூர் சென்று ராஜிவ் பலியான இடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு விரைவில் சென்னை மெரினாவில் இலங்கையில் அமைதிபடையாக இறந்த வீரர்களுக்கு அஞ்சலி தூண் நிறுவபடும் என அறிவித்தால் அது ஏகபட்ட விஷயங்களுக்கு பதிலாக அமையும்

    யாரும் ஒருவார்த்தை பேசிவிட முடியாது

    சென்னை மெரினாவில் அவசிய தேவை திராவிட கல்லறைகள் அல்ல, இலங்கையில் அமைதி ஏற்படுத்த சென்று இந்திய காங்கிரஸ் அரசு தமிழக திமுக அரசு உள்ளிட்ட அரசுகளின் குழப்பத்தால் செத்த , இன்னும் பலவகை குழப்பங்களால் உயிரிழந்த இந்திய வீரர்கள் 1500 பேருக்கான நினைவு தூண்

    அதனை மோடி நிறுவ உத்தரவிட்டால் அதை தடுக்க யாருக்கும் சக்தி இல்லை, ஏன் சென்னை கோட்டையே ராணுவத்துக்கு சொந்தமானது எனும் வகையில் தமிழக அரசு கூட இவ்விவகாரத்தில் தடைகோர முடியாது

    மோடி இதனை அறிவிப்பார் என எதிர்பார்ப்போம்

    இலங்கையில் செத்த இந்த வீரர்களுக்கு இலங்கை கொழும்புவில் நினைவாலயம் உண்டு ஆனால் சொந்த இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் நினைவாலயம் இல்லை என்பது பெரும் வேதனை, மோடி அந்த குறையினை நீக்குவார் தமிழக ஆளுநரும் தளபதி அண்ணாமலையாரும் அதன் அவசியத்தை மோடிக்கு எடுத்துரைப்பார்கள் என நம்புவோம்

    நிச்சயம் இதெல்லாம் காங்கிரஸ் என்றோ செய்திருக்கவேண்டிய காரியம் ஆனால் செய்யவில்லை, பாஜவும் செய்யாவிட்டால் செய்ய யாருமில்லை

  3. சுதந்திர இந்திய வரலாற்றில் மிக முக்கியமான விஷயம் சிக்கிம் இணைப்பு, சிக்கிம் மட்டும் இந்தியாவோடு இணையாமல் இருந்திருந்தால் இந்நேரம் வடகிழக்கு மாகாணங்களுக்கான இந்தியா தொடர்பு அறுந்திருக்கும்

    இரு இந்தியாக்களாக சிக்கல் பெரிதாகியிருக்கும்

    தேசபிரிவினை நடந்திராதவரை கிழக்கு பாகிஸ்தான் உருவாகாமல் இருந்தவரை சிக்கல் இல்லை, அந்த எதிர்பாரா விபத்து நடந்தபின் வடகிழக்குக்கான நிலவழி பாதை துண்டிக்கபட்டது

    பூட்டான் போல சிக்கிமிலும் ஒரு மன்னர் இருந்தார், அவரை கையில் எடுத்தால் இந்தியாவினை வடகிழக்கு மாகாணங்களில் இருந்து துண்டிக்கலாம் எனும் கணக்கு சீனாவுக்கு வந்தது

    அந்த 1970களில் சீனாவின் திட்டம் அப்படித்தான் இருந்தது

    இந்தியா பாகிஸ்தானுக்கு ராட்கிளிப் கோடுபோல, இந்தியா சீனா இடையே மக்மோகன் எல்லைகோடு ஒன்று உண்டு, ஆனால் சீனா ஒருபோதும் மதித்ததில்லை

    அதுவும் மாவோ வந்தபின் கோட்டையே அழித்துவிட்டார்கள்

    திபெத் தவிர, சிக்கிம் பூட்டான் என பல நாடுகளை அபகரிக்கும் திட்டம் சீனாவிற்கு இருந்தது, சிக்கிமை முடக்கினால் அருணாசல பிரதேசத்தை முடக்கலாம் எனும் வியூகமும் இருந்தது

    நேபாளம் உலகின் ஒரே இந்துநாடு எனும் அரணாக அன்று இந்தியாவிற்கு பாதுகாப்பாக இருந்தது, இப்போது அரசர் இல்லை என்றாலும் இந்துமதம் வலுவாக இருந்து இந்தியாவுக்கு அரணாக நேபாளம் மறுபடி மீட்டெடுக்கபட்டிருக்கின்றது

    அன்று சிக்கிமில் அரசர் ஆண்டுகொண்டிருந்தார், அவர் பெயர் சோக்யால் இவர் மனைவி அமெரிக்க பெண்மணி

    இந்த அமெரிக்க பெண்மணிக்கு இந்தியாவினை அறவே பிடிக்காது, சிக்கிமின் ராணியாக தானே ஆளவேண்டும் எந்நாடும் தலையிட கூடாது என நினைத்துகொண்டிருந்தார்

    அமெரிக்கா தன் படைகளை அனுப்பவும், சீனா சிக்கிம் எல்லையில் கொக்குபோல் காத்திருந்த காலம் அது, சிறு சிக்கல் என்றாலும் உள்ளே செல்ல காத்திருந்தார்கள்

    அப்பொழுது ராவின் ஏஜெண்டாக தானு என்பவர் சிக்கிமிற்கு அனுப்பபட்டார்

    அரசி இந்திய எதிரி, சிறு கலகம் வந்தாலும் சீனபடைகள் புகுந்துவிடும் அபாயம். இருக்கும் ஒரே வாய்ப்பு நேபாளிகள்

    ஆம் அரசவம்சம் வேறு, மக்கள் வம்சம் எல்லாம் நேப்பாளிகள்

    இந்த நேப்பாளிகளை வைத்துத்தான் ஆட வேண்டும், ஆனால் சிறு கலவரம் என்றாலும் அமெரிக்கா முதல் சீனா வரை உள்ளே பாயலாம்

    இந்த சிக்கலான பிரச்சினையினைத்தான் உளவாளி தானு வெற்றிகரமாக கையாண்டு, அரசர் வேண்டுமா ? ஜனநாயகம் வேண்டுமா? எனும் கோரிக்கையினை சாதுர்யமாக இந்தியா வேண்டுமா? வேண்டாமா? என மாற்றி பாட வைத்தார்

    சீனாவின் கொடுமைகளை திபெத்தில் கண்ட சிக்கிம் மக்கள் சீனா பக்கம் செல்லாமல் இருப்பதில் இந்திய உளவுதுறை மகத்தான வெற்றி பெற்றது, சீனா சிக்கிமில் வரமுடியா சூழல் இதுதான்

    பாகிஸ்தான், அமெரிக்காவுக்கான எல்லா வாசல்களையும் மூடி இந்தியா மட்டுமே சிக்கிமிற்கு பொருத்தம் என சூழ்நிலையினை உருவாக்கி சிறு சேதாரமின்றி சிக்கிமை இந்தியாவோடு அவர்தான் இணைத்தார்

    இதற்கு வழிகாட்டியாவர் இந்திரா

    இதுபோக இன்னும் பல சாகசங்கள் நிகழ்த்தபட்டன என்றாலும் ஓரளவு வெளிவந்த தகவல் இதுதான்

    இப்படித்தான் சிக்கிம் இந்தியாவோடு இணைந்தது, அது இதே மே 16ம் தேதி

    சாஸ்திரி சுதந்திர இந்தியாவின் தைரியமான பிரதமர், அவருக்கு பின் தேசம் இந்திராவினை கண்டது இந்திராவுக்கு பின் மோடியினைத்தான் கண்டிருக்கின்றது

    சிக்கிமில் அடைந்த தோல்வியினை அதாவது கோழிகழுத்து சிக்கிமினை வெட்டினால் வடகிழக்கு மாகாணங்களை இந்தியாவிடம் இருந்து பிரிக்கலாம் என கனவுகண்ட சீனாவின் திட்டம் தோற்றது

    ஆனாலும் மாவோயிஸ்டுகள் மண்ணாங்கட்டிகள் என வடகிழக்கில் பல நாசவேலைகளை செய்தார்கள் இதில் மிஷனரிகளின் அரசியலும் இருந்தது

    1950களில் இருந்தே அசாமிலும் நாகலாந்திலும் மெல்ல மெல்ல காலூன்றிய ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இன்று கிறிஸ்தவர் மிகுந்த அந்த வடகிழக்கு மாகாணங்களில் தேசியம் ஏற்பட காரணமாய் இருந்தது என்றால் மிகையாகாது

    இன்று வடகிழக்கு மாகாணங்கள் அமைதியாய் தேசியத்துக்கு திரும்பியிருக்கின்றன, அந்த அமைதிக்கு நமது ஆளுநர் அவர்களின் முன்னாள் நாகலாந்து சேவையும் காரணம்

    வடகிழக்கு மாகணங்கள் இன்று இந்தியாவோடு இணைந்திருக்க சிக்கிம் இணைப்பு முக்கிய காரணம் அந்த சாதனையினை செய்த இந்திய உளவுதுறையின் அதிகாரி தானுவினை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும்

    அப்பொழுது இந்திய உளவுதுறையின் தலைவராக இருந்தவர் கே.என் ராவ், அவரின் திறமையான நடவடிக்கையில்தான் சிக்கிம் இந்தியாவோடு இணைந்தது

    அந்த கே.என் ராவினையும் இந்நேரம் நினைவு கூர்வது சால சிறந்தது, இம்மாதிரி அர்பணிப்புமிக்க உளவுதுறை அதிகாரிகளால்தான் இந்நாடு இன்றளவும் பாதுகாப்பாய் நிற்கின்றது

  4. உலகளவில் இப்பொழுது மகா உற்சாகமாகியுள்ள நாடு ஈரான், அந்த உற்சாகத்துக்கு காரணம் ரஷ்ய உக்ரைன் குழப்பம்

    ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் திட்டத்தில் இருப்பதாக இஸ்ரேல் போட்டு கொடுப்பதை தொடர்ந்து மேல்நாடுகள் கடும் தடையினை அறிவித்துள்ளன, ஈரானின் பொருளாதாரம் மிக கீழே விழுந்து கிடக்கின்றது ஆனாலும் தந்திரமாகவும் திறமையாகவும் தடைகளை தாண்டி வாழும் ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை என காலத்தை இழுத்தது

    நிச்சயம் டிரம்பர் இருந்திருந்தால் ஈரான் தலையில் இடி விழுந்திருக்கும் ஆனால் பிடன் வந்ததும் இன்னும் பல மாற்றங்களும் ஈரானுக்கு யோகமாயின‌

    இப்பொழுது ரஷ்யாவினை ஓரம்கட்ட அதாவது சர்வதேச எண்ணெய் சந்தையில் இருந்து அந்நாட்டை ஒதுக்கும் அமெரிக்க அணி ஒரு சிக்கலை சந்திக்கின்றது

    அது ஐரோப்பாவில் எரிவாயு எண்ணெய் என ரஷ்ய சரக்கு வராத நிலையில் அவை மாற்றுவழி தேடுகின்றன‌

    இந்நிலையில் கத்தார் கைகொடுத்தாலும் ஈரான் அளவு அது பெரிய நாடும் அல்ல பெரிய வளமும் அல்ல, உண்மையான எரிவாயு மற்றும் பெட்ரோல் வளம் ஈரானிடமும் அதை அண்டிய கடலிலும்தான் இருக்கின்றது

    இனி அமெரிக்க தரப்புக்கு ஈரானிய எண்ணெய் வேண்டும், ஈரானுக்கோ அமெரிக்க தடை நீங்க வேண்டும், இஸ்ரேலுக்கோ ஈரான் வலுத்தால் அணுகுண்டு செய்யும் அதன்பின் தன் மிரட்டல் அரேபியாவில் எடுபடாது எனும் அச்சம் இஸ்ரேலுக்கு

    ஆக ஒரு சுவாரஸ்ய விளையாட்டு அரேபியாவில் தொடங்கியிருக்கின்றது பார்க்கலாம்

    என்ன சொன்னாலும் ஈரானை அசைக்க மேலை நாடுகளாலும் இஸ்ரேலாலும் முடியவில்லை என்பதுதான் நிஜம்

    காரணம் இதர நாடுகளில் மன்னர்கள், அதிபர்கள் என ஒரு நபர் இருந்தார் அவரை சரித்தால் நாட்டில் குழப்பமும் போராட்டமுமே மிஞ்சும்

    ஆனால் ஈரானில் சித்தாந்தம் வலுவானது, அய்யதுல்லா கோமேனி ஏற்றிவைத்த அந்த சித்தாந்தம் தனக்குரிய தலைவர்களை உருவாக்குகின்றது, சித்தாந்த ரீதியாக பலமான ஈரானை யாராலும் குழப்ப முடியவில்லை

    ஆம், சிந்த்தாந்தம் அவ்வளவு வலுவானது அதுதான் நாட்டை வலுவாக்கும், அரேபியாவில் தனிநபர் துதிபாடிய எல்லா அரசுகளும் கவிழ்ந்து நாடுகள் சீரழிந்து கிடக்கும் பொழுது ஈரான் மட்டும் அதன் சித்தாந்த பலத்தால் தனித்து நிற்கின்றது

  5. ரஷ்ய ராணுவத்தை உக்ரைன் தன் கார்கிவ் நகரில் இருந்து அடித்து விரட்டி மறுபடியும் அந்நகரை தன் கட்டுபாட்டில் கொண்டுவந்துவிட்டது இது ரஷ்யாவுக்கு மிகபெரிய அடி

    கார்கிவ் நகரை இருமாதங்களுக்கு முன்பே வளைத்தது ரஷ்யா, அப்படியே கிழக்கு உக்ரைனில் இது எங்கள் பலமான பகுதி என்றார்கள் ஆனால் உக்ரைன் பொடரியில் போட்டு அடித்திருக்கின்றது

    இதனால் ரஷ்ய எல்லை வரை முன்னேறியிருக்கிறது உக்ரைன், அதாவது ரஷ்ய படைகள் அப்பகுதியில் இருந்து முழுக்க விரட்டபட்டிருக்கின்றன‌

    இனி எதுவும் நடக்கலாம், உக்ரைனின் கிரிமியா பகுதியினை ரஷ்யாவிடம் இருந்து மீளவும் உக்ரைன் கைபற்றினாலும் கைபற்றலாம்

    அந்த அளவு உக்ரைன் பெரும் பலம் பெற்றிருக்கின்றது, இந்த உக்ரைனுக்கு முழு பலம் அமெரிக்கா என்பது எல்லோரும் அறிந்தது

    இதே சூழல்தான் 1962ல் இந்தியா சீன மோதலில் இருந்தது, திம்மையா கரியப்பா போன்ற தளபதிகள் அமெரிக்க உதவியுடன் சீனாவினை நொறுக்க ஆலோசனை சொன்னார்கள் ஆனால் நேரு கேட்கவில்லை

    நிச்சயம் அன்று நேரு அமெரிக்க உதவியினை தொடக்கத்திலே ஏற்றிருந்தால் இந்தியா அக்சாய் சின் நிலத்தையோ அருணாசல் பிரதேசத்தின் இதர பகுதிகளையோ இழந்திருக்காது

    நேருவின் அணிசேரா கொள்கை அந்த பாதகத்தை நாட்டுக்கு செய்தது

    அதன் பின் நேரு சுதாரித்து அமெரிக்காவினை தொடர்பு கொண்டாலும் நிலமை எல்லை மீறி சென்றிருந்தது போர் சீனாவுக்கு சாதகமாக முடிந்தது

    நேரு செய்த தவறினை உக்ரைன் அதிபர் செய்யவில்லை சரியாக நாட்டுக்கு எது நன்மையோ அதை செய்தார், அதனால் அந்நாடு இன்று ரஷ்யா எனும் ஜாம்பவனானையே ஓட அடித்திருக்கின்றது

    பொதுவாக தொழில்நுட்பம் வேறு ராணுவ பலம் வேறு, தொழில்நுட்பம் யாரும் செய்யலாம் ஆனால் ராணுவபலம் என்பது பொருளாதாரத்தில் மட்டும் வரகூடியது, ராணுவ பராமரிப்பு என்பது செல்வம் இல்லாமல் வராது

    ரஷ்யாவிடம் தொழில்நுட்பம் இருக்கலாம் ஆனால் ராணுவ பராமரிப்பினை செய்ய பொருளாதாரம் இல்லை என்பதுதான் நிஜம், அது பட்டவர்த்தனமாக தெரிகின்றது

    விரைவில் கிரிமீயா மீட்கபட்டாலும் ஆச்சரியமில்லை, ரஷ்ய படைகள் அப்படி மரண அடி வாங்கி கொண்டிருக்கின்றது

  6. கேரளாவின் சோக கதை
    ……………………………………………………………….

    உண்மையில் கம்மியூனிசம் வெல்லலாம் …அதை அமல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இருந்தால் .

    துரதிருஷ்டவசமாக உலகெங்கும் சோம்பேறிகளும், பொறாமை பிடித்தவர்களும்தான் கம்ம்யூனிஸ்ட்களாகிறார்கள் .இறுதில் தோல்வியைச் சந்திக்கிறார்கள் .

    கேரளா அதற்க்கு விதிவிலக்கல்ல.

    உலக உகழ்பெற்ற ,
    நோபல் பரிசு பெற்ற
    இந்திய பொருளாதாரமேதை அமர்த்தியா சென்
    கொடிபிடித்த கம்மியூனிஸ்ட் அரசாங்கம் தடுமாறிக்கொண்டிருக்கிறது .

    கேரளாவின் புகழ்பெற்ற பத்திரிகையான மாத்ருபூமி கேரள அரசாங்கம் எப்போதுவேண்டுமானாலும் திவாலாகலாம் ..இப்போதைக்கு அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கலாம் என்ற ப்ராப்போசல் இருப்பதாக கட்டுரை வெளியிட்டிருக்கிறது.

    ஏற்கனவே போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தாமதமாக சம்பளம் வழங்கப்படுகிறது …

    போக்குவரத்து துறை கேட்ட நிதியை தரமுடியாது என்று மாநில அரசு கையை விரித்துவிட்டதாம் .

    தொந்திரவான மனநிலையுடன் ஊழியர்கள்
    நிதி குறைவால் பராமரிப்பு குறைவான வாகனங்கள்..
    மக்கள் உயிரைக் கையில் பிடித்தபடி பயணிக்கிறார்களாம்..

    ஏன் இந்த நிலைமை?

    நம்ம உச்சம் சொன்னதுதான்.

    சிஸ்டம் சரி இல்லை .

    நான் சொல்லவில்லை..கேரள அரசாங்கமே ஒப்புக்கொண்டுள்ளது.

    அரசாங்க துறைகள்- மருத்துவமனைகள் உட்பட எதிலும் சரியான கண்காணிப்பு.. நிர்வாகம் இல்லை

    பெரிய மருத்துவமனைகளுக்குக்கூட மக்கள் வர அஞ்சுகிறார்களாம் .

    அத்தனை தவறான தகவல்கள் /
    சிகிச்சை ..

    மத்திய அரசாங்கம் கோவிட்டுக்காக கொடுத்த பணம் எங்கே போனதென்று தெரியவில்லை .செலவு அறிக்கை இல்லை.

    இப்படிப்பட்ட மட்டமான நிலையால் மாநில அரசாங்கத்தின் கடன் லிமிட்டை உயர்த்த முடியாது என்று சொல்லிவிட்டது மத்திய அரசு .

    கேட்ட ரொட்டின் அறிக்கைகளைக்கூட தரமுடியாமல் விழிக்கிறார் பினராய் விஜயன்.

    சிஸ்டத்தை எப்படி சரி செய்ய?

    பள்ளியில் படிக்கும்போது படிப்பு ஏறவில்லை…
    சில பாடங்கள் புரியவில்லை என்றால் என்ன செய்வோம்?

    வேறு நன்றாக படிக்கும் மாணவன் வீட்டுக்கு சென்று அவன் உதவியை நாடுவோமல்லவா ?

    அதைத்தான் செய்திருக்கிறது கேரளா அரசாங்கம் .

    போனமாதம் கேரளாவின் தலைமை செயலர் வி பி ஜாய் ,
    இன்னொரு அதிகாரி உமேஷ்
    இருவரும்

    இந்தியாவின் சிறந்த முதல்வர்
    சிறந்த மாநிலமான
    தமிழகத்தைவிட்டு விட்டு

    குஜராத் பயணமானார்கள் .
    (இப்ப தெரிகிறதல்லவா உதார் வேறு உண்மை வேறு என்று!)

    குஜராத் மாநில நிர்வாகம்
    ஈ கவர்னஸ்
    பற்றி தெரிந்து கொள்ள
    மூன்றுநாள் விஜயம் செய்தனர் இருவரும் .

    பயண முடிவில் கேரள தலைமை செயலர் சொன்னது :

    ” மிகுந்த திருப்தி.குஜராத்தில் சிஸ்டம்
    சிறப்பாக நல்ல ரிசல்ட் கொடுக்கிறது .குஜராத் மாடல்..பின்பற்றவேண்டிய மாடல்.”

    பாருங்கள் ..

    குஜராத் மாடல் இந்துத்துவா பாசிச மாடல் என்றவர்கள் ..இப்ப அங்கே சென்று நிர்வாகம் தெரிந்துகொள்கிறார்கள்

    முதலில் அமர்த்தியா சென்னின் நோபல் பரிசை திரும்ப வாங்க சொல்லணும் !

    இந்த நிதி பிரச்னை
    தகவல்கள் பரவ பரவ
    கேரளா மக்கள் கொதிக்க தொடங்கி விட்டார்கள்

    இஸ்லாமிய தீவிரவாதம்

    வரி கொடாமல் ,வங்கிக்குவராமலே துபாய் பணத்தால் அவர்கள் வாங்கி குவித்த சொத்து இவைகளும்

    பொருளாதாரத்தை தாக்கிய ஒரு பாக்டர் என்கிறார்கள் சில பொருளாதர வல்லுநர்கள் .

    இலவச திட்டங்கள்..

    தொழிலதிபர்களை எதிரிகளாக பார்த்ததால் தொழில்வளர்ச்சி குன்றல்

    கூடுதலான காரணங்கள்.

    கடவுளின் தேசம்

    கஷடப்படுகிறது ..

    ” திவால் ஆகாது .சம்பளங்கள் குறைக்கப்படாது ” என்று கேரளா நிதி அமைச்சர் ஈனஸ்வரத்தில் அறிக்கை விட்டிருக்கிறார்..

    ஆனால் அதே நிதி அமைச்சர் 25 லட்சத்துக்கு மேல் எந்த துறையும் பில் கொடுக்க கூடாது என்று கட் ஆப் கொடுத்து சுற்றறிக்கையும் அனுப்பி இருக்கிறார்.

    இந்த இக்கட்டான நிலை நமக்கு சொல்வது என்ன தெரியுமா?

    ” தேசம் யாரைத் தொடரவேண்டும் ” என்று.

    குஜராத்தும்

    முன்பு அதை ஆண்டவரும்

    காப்பாற்றுவார்கள்

    என்று பினராய் நம்புகிறார் .

    ராஜயோகி ஒருநாளும் ” நல்லவர்களை ” கைவிட்டதில்லை

  7. 1944ல் மிக தைரியமாக அதாவது வெள்ளையன் ஆட்சியில் ஈரோட்டு ராம்சாமி அழிச்சாட்டிய ஆட்டம் போட்டு பெரிய புராணத்தை கொளுத்துவேன் ராமாயணத்தை எரிப்பேன் என ஆட்டம் போட்ட காலங்களில் “நாத்திக நச்சு ஆறு இங்கு ஓடுகின்றது” என பொதுவாக சொன்னார்

    நச்சு ஆறு என்பது தாங்களே என உண்மையினை ஏற்று கொண்ட திக தரப்பு பொங்கி எழுந்தது, அண்ணா டுரை என்பவர் “கீலாசேபம்” என்றொரு கட்டுரை எழுதி பெரியார் நல்லாறு நச்சுகளை அழிக்க வந்த ஆறு என பொங்கி கொண்டிருந்தார்

    ஈ.வெ.ரா விடுதலையில் தலையங்கம் எழுதினார். ‘யோக்கியமற்ற கூப்பாடுகள்’ என்ற அந்தத் தலையங்கத்தில் வாரியாரைப் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார், தாக்குதலை நியாயப்படுத்தியிருந்தார்.

    அண்ணாவுக்கும் கிருபானந்தவாரிக்கும் எழுத்துபோர் நடந்தது, அது தீவிரமாகவும் நடந்தது , வாரியாரின் தாக்குதல் முன் பேரறிஞன் பதுங்கினார்

    அதே நேரம் மணியம்மையுடன் ராம்சாமி இரண்டாம் திருமணம் , ராம்சாமியுடன் மனகசப்பு என காட்சிகள் வந்ததால் டிராக் மாற்றினார் அண்ணா

    வாரியார் சுவாமிகள் தன் இயல்பில் அவர்போக்கில் ஆன்மீக மேகமாய் பொழிந்து கொண்டிருந்தார், அவ்வப்போது திமுக வாரியார் மோதல் நடந்து கொண்டே இருந்தது

    வாரியாரின் மக்கள் அபிமானத்தை கண்ட கருணாநிதி நேரடியாக தாக்காமல் தன் அடிபொடிகள் மூலம் எழுதி தாக்கி கொண்டிருந்தார்.

    ஒரு கட்டத்தில் வாரியாரின் உபன்யாசங்களில் குறுக்குக்கேள்வி கேட்டு வம்பு செய்ததாக மு. கருணாநிதியே ‘நெஞ்சுக்கு நீதி’யில் குறிப்பிட்டிருந்தார்.

    1969ல் கருணாநிதி முதல்வராய் இருந்தார் , அப்பொழுது வாரியார் சுவாமிகள் நெய்வேலி பக்கம் ஆன்மீக கூட்டங்களில் பேசினார் அப்பொழுது “கடவுளை நம்பாதவனுக்கு நல்மரணம் வாய்க்காது, மருத்துவம் அவனுக்கு பலன் கொடுக்காது” என்றுதான் பொதுவாக சொன்னார்

    ஆனால் அவர் அண்ணாதுரையினை சொல்லிவிட்டார் என திமுக ரவுடிகள் அவரை சூழ நின்று தாக்கினர், மக்கள் கூட்டம் பாதுகாப்பில் காவல்துறை அவரை மீட்டது, காயமின்றி வாரியார் தப்பினாலும் அவரின் வீட்டின் மயில் சிலையும் இன்னும் பலவும் உடைத்தெறியபட்டன‌

    ஆம், அவர் பூஜை அறையில் புகுந்து உடைத்தார்கள் விக்ரகங்களையும் வழிபாட்டு பொருட்களையெல்லொம் உடைத்தார்கள் , ஆனால் அன்று ஊடகம் என்பது செய்திதாளும் வானொலியும் என்பதால் விஷயம் மூடி மறைக்கபட்டது.

    அதை செய்தது திமுக அரசு என்றால் ஊடகங்கள் வாய்மூடுவது வரலாற்றில் புதிதல்ல‌

    வாரியார் தாக்கபடும் பொழுது அவருக்கு வயது 65, அந்த முதியவரை தாக்கியது தமிழ் வீரம், அதை ரசித்து கொண்டிருந்த பெயர் திராவிட பகுத்தறிவு

    விஷயம் சட்டசபை வரை எதிரொலித்தது, வாரியாருக்கு இருந்த மிகபெரும் நற்பெயரை தமிழகம் கண்டது, மக்கள் அபிமான கிருபானந்தர் திமுகவினரால் தாக்கபட்டது மிகபெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்திற்று

    ராஜாஜி மனம் வருந்தி எழுதினார், தீட்சிதர்களும் ஆதீனங்களும் களத்துக்கு வந்தனர்

    முன்னாள் முதல்வர் எம். பக்தவத்சலம் கண்டன அறிக்கை வெளியிட்டார். கி. வா. ஜகன்னாதன், குமரி அனந்தன் ஆகியோர் சுவாமிகளை நேரில் பார்த்து உரையாடினார்கள்

    ம.பொ.சி திமுகவினரின் அராஜகத்தை கண்டித்து தீர்மானமே கொண்டு வந்தார்.

    நிலமை எல்லை மீறி சென்றதை அவதானித்த கருணாநிதி அந்நேரம் தன்னுடன் மோத தொடங்கியிருந்த எம்ஜிஆரை சரியாக பழிவாங்கினார்

    ஆம், வாரியாரை அடித்தது எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என ஆட்டத்தை திசை திருப்பினார்

    ஆனால் அதுதான் அவரின் வாழ்வில் மிகபெரும் தவறு, கடைசிவரை அவர் தலையில் அடித்து அடித்து அழுத தவறு,

    தெய்வத்தின் தண்டனை அப்படி சரியாக இருந்தது.

    வாரியாரை நேரில் சந்தித்து உண்மையினை விளக்கினார் ராமசந்திரன், வாரியாரை நேரில் கண்ட முதல் திமுக பிரமுக‌ தலைவர் அவர்தான், அப்பொழுதுதான் அவரை வாழ்த்தி அனுப்பினார் வாரியார்

    அந்த வாழ்த்தில் கருணாநிதியினை வீட்டுக்கு அனுப்பிவிட்டு முதல்வராக அமர்ந்தார் ராமசந்தர், அதன் பின் கருணாநிதியால் எழமுடியவில்லை 1987ல் வந்தாலும் சில மாதங்களில் ஆட்சி கவிழ்ந்தது

    வாரியாரால் ராமசந்திரன் ஆசீர்வதிக்கபடும் காட்சியே ராம்சந்திரனுக்கு பெரும் வெற்றியினை பெற்று கொடுத்தது

    “பொன்மன செம்மல்” என வாரியார் சொன்ன அந்த வார்த்தையே ராமசந்திரனுக்கு அடையாளமாகி, மங்கா புகழாகி அவரை அரசர் கோலத்துக்கு ஆக்கியது

    சுமார் 30 ஆண்டுகள் திராவிட நாத்திக கோஷ்டியோடு மல்லுகட்டிய கிருபானந்த வாரியாருக்கு ராமசந்திரன் மூலம் பெரும் ஆறுதல் கிடைத்தது, அத்தோடு போலி நாத்திக அடையாளம் இங்கு ஒழிய ஆரம்பித்தது

    அதன் பின்பே ஜெயா முதல்வராகி ஆலயமெல்லாம் பகிரங்கமாக சென்றார், பின் பழனிச்சாமி அனுதினமும் தான் ஒரு இந்து என்பதை பகிரங்கமாக சொல்கின்றார்

    வாரியாருடன் மோதியதில்தான் திமுகவின் அழிவு தொடங்கிற்று, முருகபெருமான் தன் ஞானவேல் மூலம் அந்த அரக்க கூட்டத்தை சரித்து போட்டார்

    ஆம் வாரியார் மேலான தாக்குதலை கண்டிக்காத கருணாநிதி வாரியார் காலம் வரை எழவே இல்லை, முருகபெருமானின் அடி அப்படி இருந்தது

    வரலாற்றின் மிக பெரிய சான்று இது, ஒரு ஜெகஜால கில்லாடி ஒரு சாதாரண முருகன் கோவில் ஆண்டியிடம் தோற்று அவமானபட்ட பெரும் வரலாறு அது

    அப்படியான வரலாற்றில் ஆட்சிக்கு மீண்டும்வந்து அதுவும் 13 கட்சி கூட்டணியுடன் ஆட்சிக்கு வந்த திமுக இப்பொழுது பழைய சம்பவங்களை மறக்காமல் தாங்கள் திருந்தவில்லை திருந்தவும் மாட்டோம் என விளக்கம் கொடுத்து கொண்டிருக்கின்றது

    நடப்பதையெல்லாம் முருகபெருமான் மிக மவுனமாக கவனித்துகொண்டிருக்கின்றார், தன் வேலை எப்பொழுது வீசவேண்டும் என்பது அவருக்குத்தான் தெரியும்

    வீரபாகு தேவரை கண்டு அரக்க கூட்டம் அலறுவது ஒன்றும் அதிசயமல்ல, அது இயல்பானது

  8. பாரத பிரதமர் மோடி மிக பெரிய பலத்தை உலகுக்கு காட்டியிருக்கின்றார், ஒருவகையில் சீனாவின் அதிகாரத்துக்கு செவிட்டில் விழுந்த அடி இது

    நேபாளம் இந்து அரசர் நாடாக இருக்கும்வரை இந்தியாவுடன் நல்லுறவு கொண்டிருந்தது , கம்யூனிஸ்டுகள் அங்கு உருவாகி நாடு மாறியதும் சீன ஆதிக்கம் வந்தது , கம்யூனிஸ்டுகளில் பலர் சீன கைகூலிகள் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

    சமீபகாலமாக இந்தியாவுக்கு எதிரான காரியங்களை நேபாளம் செய்தது, சீனா அதிபர் ஷிஜின்பெங் இந்தியாவுக்கு பெரும் எச்சரிக்கையினை சூசகமாக செய்தார், இந்திய தமிழகம் மகாபலிபுரம் வந்த அவர் பின் நேபாளம் சென்று சீனா திரும்பினார்

    அதன்பின்புதான் எல்லையில் இந்திய சீனா முறுகல் கல்வான் பள்ளதாக்கில் நடந்தது அதை அடுத்து நேபாள குரல்கள் மாறின‌

    இந்தியா நேபாளத்தின் பகுதிகளை அபகரிப்பதிருப்பதாக புதுவரைபடமெல்லாம் வெளியிட்டு போர்முரசெல்லாம் கொட்டியது நேபாளம், அதுவரை இந்தியாவின் சகோதரனாக இருந்த அந்நாட்டின் குபீர் குழப்பம் இந்தியாவுக்கு மிக வருத்தமாயிற்று

    நேபாள அந்நாளைய பிரதமர் ஓலி என்னவெல்லாமோ பேசினார், சர்ச்சைகள் வலுத்தன‌

    பின் இந்தியா மெல்ல மெல்ல காய்நகர்த்தி இப்பொழுது நேபாளத்தை தன் நட்புநாடாக்கிவிட்டது, இப்பொழுது மோடி அங்கு சுற்றுபயணம் செய்திருக்கின்றார்

    அங்கு புத்த பூர்னிமா நிகழ்வில் புத்தன் பிறந்த லும்பினுக்கு சென்று மரியாதை செலுத்தியிருக்கின்றார்

    இதனால் மோடி இரு நாடுகளுக்கு பதில் சொல்கின்றார்

    முதலாவது சீனாவின் முகத்தில் அடித்து நேபாளம் எங்களின் நட்பு நாடு என்பதை உறுதிபடுத்துகின்றார், இரண்டாவது இலங்கையின் பலமான பவுத்த துறவிகளுக்கு மோடியும் அவர்கட்சியும் இந்தியாவும் பவுத்தர்களுக்கு எதிரான கொள்கை கொண்டவர்கள் அல்ல என்பதை மவுனமாக தெரிவிக்கின்றார்

    வாழ்க மோடி, அருமையான ராஜதந்திரம் என்றால் இதுதான்

  9. திருமுருக கிருபானந்தவாரியார் மேல் தாக்குதல் நடந்தது போல் அண்ணாமலை மேல் நடக்கும் என சிலர் எச்சரித்ததாக தகவல்கள் பரவுகின்றன‌

    20 நூற்றாண்டில் இந்துமதம் பெரும் ஆபத்தை தமிழகத்தில் சந்தித்தபொழுது அதற்கு தூணாக இருந்தவர்களில் ரமண மகரிஷி , காஞ்சிபெரியவர், திருமுருக கிருபானந்தவாரி போன்றவர்கள் முக்கியமானவர்கள்

    இந்த கிருபானந்த சுவாமிகள் “தமிழகத்தில் நச்சு ஆறு ஓடுகின்றது” என மேடையில் பேசிவிட அதற்கு அண்ணாதுரை பதிலளிக்க அந்த மோதல் அங்குதான் தொடங்கிற்று

    கிருபானந்தவாரி தனக்கே உரித்தான தனித்துவத்துடன் இந்துமதத்தை தாங்கி நின்றார் அவரை அசைக்க யாராலும் முடியவில்லை

    அண்ணாதுரை நோய்வாய்பட்டபொழுது தன் இயல்பான பேச்சினை அரசியல் கலக்காமல் கிருபானந்தவாரி பேசிவிட அது அண்ணாதுரையினை குறித்துபேசபட்டதாக சலசலப்பு எழுந்தது, கிருபானந்தவாரியார் இல்லம் தாக்கபட்டது, அவரின் மயில் உள்ளிட்டவை உடைக்கபட்டன‌

    விஷயம் பற்றி எறிந்தது, அன்று திமுக ஆட்சியில் இருந்தது

    ராஜாஜி , குமரி அனந்தன் என பெரும் பிம்பங்களெல்லாம் களமிறங்க கருணாநிதி திணறினார், இதை செய்தது எம்ஜிஆர் ரசிகர்கள் என்ற பேச்சு வந்தது

    மிக பதற்றமான எம்ஜி ராம்சந்திரன் நேரடியாக சென்று வாரியாரை சந்தித்தார், அவருக்கு “பொன்மனசெம்மல்” எனும் பட்டம் அதன் பின்பே வாரியாரால் வந்தது

    வாரியாரை சந்தித்தபின்புதான் எம்ஜிஆரின் அரசியல் ஏறுமுகமானது அடுத்த சில ஆண்டுகளில் அவர் முதல்வரானார்

    தமிழகத்தில் எம்ஜிஆர் அரியணை ஏற முக்கிய காரணம் அந்த சம்பவம், மகானும் அப்பழுக்கற்றவருமான அந்த ஞானபழத்தின் மேல் திமுகவினர் செய்த தாக்குதலே பின்பு அதிமுக என்றொரு கட்சி உருவாகவும் அது திமுக கண்ணில் விரலை விட்டு ஆட்டவும் வைத்தது

    திமுகவினை அதிமுக உருவாகி அடக்க இதுதான் தொடக்கம்

    அந்த சம்பவத்தை இப்பொழுது இவர்கள் சொல்வார்கள் என்றால் இவர்கள் ஒப்புகொள்ளும் விஷயம் இரண்டு

    முதலாவது கிருபானந்தவாரியினை நாங்கள்தான் தாக்கினோம்

    இரண்டாவது அண்ணாமலை விரைவில் முதல்வர் ஆகிவிடுவார்

    பொதுவாக தமிழக அரசியலுக்கும் முருகபெருமானுக்கும் தொடர்பு அதிகம், முருகபெருனானின் ஆசிபெற்றவர்களே இங்கு நிலைத்து ஆளமுடியும் அல்லாதோர் விரைவில் அடையாளமற்று அழிவர்

    அப்படித்தான் சமணம் அழிந்தது, பின்னாளைய ஆப்கானியர் ஓடினார்கள், வெள்ளையர்கள் பறந்தார்கள், இந்த நாத்திக அட்டகாச கும்பலும் விரைவில் கரையும், தன் அடியார் கிருபானந்தவாரி மூலம் மறுபடியும் விசாக நாளன்று வெளிகொண்டுவருகின்றார் எம்பெருமான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *