துரோக அரசியலுக்கு பாஜகவின் தரமான பதிலடி

மகாராஷ்டிர மாநிலத்தில் நிகழ்ந்துள்ள அதிரடி அரசியல் நிகழ்வுகளால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாநில முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே உள்கட்சியில் ஏற்பட்ட கலகத்தால் பதவி விலக, சிவசேனை அதிருப்தி அணித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் ஆகியிருக்கிறார் (ஜூன் 30). முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னவிஸ் கட்சித் தலைமையின் உத்தரவுப்படி துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

பாஜகவின் சித்தாந்தரீதியான தோழராக இருந்த சிவசேனையின் வீழ்ச்சி மிகவும் பரிதாபத்துக்குரியது. சுயநலம் காரனமாகவும் பாஜக மீதான பொறமை காரணமாகவும் அக்கட்சி தனது தலையில் தானே மண்னை அள்ளிப் போட்டுக்கொண்டிருக்கிறது. அக்கட்சி செய்த துரோகத்துக்கு அதே பாணியிலேயே பாஜக தக்க பதிலடி கொடுத்திருக்கிறது.

1966இல் சிவசேனை தோற்றுவிக்கப்பட்டபோதும், மாநிலம் முழுவதும் வலுவான அடித்தளம் கொண்டிருந்தபோதும், 1990 வரை அக்கட்சியால் பெரிய அளவில் சாதனை படைக்க முடியவில்லை. 1989இல் பாஜகவுடன் கூட்டணி என்ற முடிவை எடுத்த பிறகே அக்கட்சியின் வளர்ச்சி வேகமெடுத்தது. அதை அக்கட்சி மறந்ததால் இன்று நடுத்தெருவில் நின்று புலம்பும் நிலைக்கு வந்துவிட்டது.

சிவசேனையின் தோற்றமும் வளர்ச்சியும்

மொழி அடிப்படையில் பம்பாய் மாகாணம் குஜராத், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, மராத்திப் பெருமிதத்துடன் மாநில பிராந்தியவாதம் அங்கு தலைதூக்கத் துவங்கியது. கர்நாடகத்துடன் இணைந்த மராத்தி மொழி பேசும் மக்கள் கொண்ட பகுதிகளை மகாராஷ்டிரத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. தவிர, நாட்டின் பொருளாதாரத் தலைநகராக வளர்ந்து வந்த மும்பையை நோக்கி பிற மாநில மக்கள் வரத் துவங்கியது உள்ளூர் மக்களிடையே பாதுகாப்பின்மை உணர்வை ஏற்படுத்தியது. இந்தப் பின்னணியில் தான், மராட்டியம் மராட்டியருக்கே என்ற கோஷத்துடன் பத்திரிகை கார்ட்டூனிஸ்டான பாளாசாகேப் பால் தாக்கரே (1926- 2012), சிவசேனை கட்சியை 1966இல் நிறுவினார்.

அதிரடி அரசியல்வாதி: சிவசேனையின் நிறுவனர் பால் தாக்கரே

மராட்டியப் பேரரசர் வீரசிவாஜியின் சைனியம் என்ற பொருள்படும் வகையில் தனது கட்சிக்குப் பெயர் சூட்டிய பால் தாக்கரே, மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டங்களை நடத்தி வந்தார்.

சிவசேனையின் ஆரம்ப நாட்களில் தென்னிந்தியர்களுக்கு – குறிப்பாக மதராஸிகளுக்கு எதிராகவும் கர்நாடகத்துக்கு எதிராகவும் அக்கட்சியினர் நடத்திய வன்முறைகளால் மாநிலம் முழுவதிலும் தாக்கரே பிரபலம் ஆனார். ஆனால், முஸ்லிம்களுக்கு எதிரான கட்சியாக தன்னை சிவசேனை முன்னிறுத்திக் கொண்டபோது, மொழிச் சிறுபான்மையினர் மீதான தனது எதிர்ப்பை அக்கட்சி மெதுவாகக் கைவிட்டது. பிராந்திய அடிப்படைவாதக் கட்சியான சிவசேனை, ஹிந்து தேசியவாதத்தை தனது அரசியல் கோட்பாடாக அறிவித்துக்கொண்டது.

மிக விரைவிலேயே தானே, மும்பை (1968) மாநகராட்சித் தேர்தல்களில் அதிரடி வெற்றிகளைப் பெற்ற சிவசேனை தனது அடித்தளத்தை மாநிலம் முழுக்கப் பரப்பத் துவங்கியது. ஆயினும் அன்றைய காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கின் முன்னால் அவரால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.  

காங்கிரஸ் கட்சிக்கும் சிவசேனைக்கும் இடையிலான உறவு அவ்வப்போது இனித்தும் கசந்தும் செல்வதாக இருந்தது. சிவசேனையின் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிரான மனநிலை காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருந்தது. மும்பையில் தொழிற்சங்கங்களை ஆட்டிப் படைத்துவந்த கம்யூனிஸ்டுகளை முறியடித்து அங்கு சிவசேனையின் தொழிற்சங்கப் பிரிவு வளரத் துவங்கியது. இதற்கு காங்கிரஸ் கட்சி மறைமுகமாக உதவியது. அதற்கு நன்றிக்கடனாக, தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிக்கு சிவசேனை உதவி வந்தது. 1975இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடி நிலையை ஆதரித்தார் தாக்கரே.

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற சில மதக்கலவரங்களில் சிவசேனை கடுமையாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், முஸ்லிம்களின் அடாவடித்தனத்துக்கு சரியான பதிலடி கொடுக்கும் அரசியல் கட்சி என்ற பெயரை சிவசேனை பெற்றுவிட்டது. “நான் முஸ்லிம்களின் எதிரி அல்ல; அதேசமயம், இந்த நாட்டின் சட்டங்களை மதிக்காத முஸ்லிம்களின் எதிரி” என்று வெளிப்படையாகவே பால் தாக்கரே அறிவித்தார். மும்பையில் தனி ராஜாங்கம் நடத்திவந்த நிழலுலக தாதாக்களின் கொட்டத்தை தாக்கரேயின் தொண்டர்கள் அடக்கினர். அவரை ‘ஹிந்து ஹிருதய சாம்ராட்’ என்று சிவசேனைக் கட்சியினர் அழைக்கத் துவங்கினர்.

பாஜகவுக்கும் சிவசேனைக்கும் கொள்கை அடிப்படையில் பிராந்திய அடிப்படைவாதம் தவிர்த்து பிற அம்சங்களில் மாறுபாடு இல்லை. எனவே பாஜகவின் இயல்பான நட்புக் கட்சியாக சிவசேனை அமைந்தது. காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியை முன்னுணர்ந்த பால் தாக்கரே வாஜ்பாய், அத்வானி தலைமையிலான பாஜகவுடன் நெருக்கம் காட்டத் துவங்கினார். 1984லேயே பாஜகவின் சின்னத்தில் சிவசேனை கட்சியினர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டனர். ஆனால், இந்திரா காந்தி படுகொலையால் ஏற்பட்ட அனுதாப அலையில் பாஜகவும் சிவசேனையும் காங்கிரஸிடம் தோல்வியுற்றன.

ராமகோயில் இயக்கமும் சிவசேனையும்

அடுத்து அயோத்தி ஸ்ரீ ராமஜன்மபூமி மீட்பு இயக்கம் 1986இல் துவங்கியபோது, அதன் அதிதீவிர ஆதரவாளராக சிவசேனை தன்னை முன்னிறுத்திக் கொண்டது. அதன் விளைவாக பாஜகவின் நெருங்கிய தோழமைக் கட்சியாக மாறியது. பாஜக- சிவசேனைக் கட்சி கூட்டணி மகாராஷ்டிரத்தில் வெற்றிக்கனிகளை பறிக்கத் துவங்கியது.

அது ஒரு பொற்காலம்: தே.ஜ.கூட்டணியில் முதன்மைப் பங்காளியாக தாக்கரே.

1995இல் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் இக்கூட்டணி வென்று ஆட்சியைப் பிடித்தது. சிவசேனையின் மனோகர் ஜோஷி முதல்வர் ஆனார். அவர் ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலகியபோது சிவசேனையின் நாராயண் ரானே முதல்வரானார். இந்தக் கூட்டணி அரசில் (1995-1999) பாஜக பேரிடம் வகித்தது.

இங்கு குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம், தேர்தலில் சிவசேனை வென்றபோதும் தானோ தனது குடும்பத்தினரோ ஆட்சிப் பொறுப்பேற்க தாக்கரே சம்மதிக்கவில்லை. சிவசேனையின் முன்னணித் தலைவர்களையே அவர் முதல்வராக்கினார். 1999 தேர்தலில் தோற்றபோது, சிவசேனை- பாஜக கூட்டணி அங்கு எதிர்க்கட்சியாக விளங்கியது.

1996- 2004இல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிவசேனை பிரதான இடம் வகித்தது. வாஜ்பாய் பிரதமாக இருந்தபோது லோக்சபா சபாநாயகராக மனோகர் ஜோஷி தேர்வானார்.

என்றபோதும் கட்சியின் கட்டுப்பாட்டை தன்வசமே தாக்கரே வைத்திருந்தார். அவரது தம்பி மகன் ராஜ் தாக்கரே கட்சிப் பணிகளில் உதவி வந்தார். இதனிடையே, பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரேவின் அரசியல் நுழைவு கட்சிக்குள் பூகம்பத்தை உருவாக்கியது. 2005இல் நாராயண் ரானே கட்சியிலிருந்து வெளியேறி காங்கிரஸில் சேர்ந்தார். (இவர் இப்போது பாஜக தலைவராகவும் மத்திய அமைச்சராகவும் இருக்கிறார்). அதேபோல, ராஜ் தாக்கரேவும் தனது பெரியப்பாவின் புத்திரபாசத்துக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி சிவசேனையிலிருந்து வெளியேறினார். அவர் மகாராஷ்டிர நவநிர்மான் சேனை என்ற கட்சியைத் துவக்கினார். இக்கட்சி பிரித்த சுமார் 6 சதவீத வாக்குகளால் தான் 2009 சட்டசபைத் தேர்தலில் சிவசேனை கூட்டணி தோல்வியுற்றது.

இதனிடையே மாநில அரசியல் களத்திலும் பெரும் மாற்றங்கள் விளைந்தன. ஆரம்பத்தில் சிவசேனை- பாஜக கூட்டணியில் சிவசேனையே அண்ணனாக இருந்தது. அதாவது அக்கட்சியே அதிக இடங்களில் வெல்லும் கட்சியாக இருந்தது. ஆனால், பாஜகவின் அதிவேக வளர்ச்சி சிவசேனைக்கு ஏற்க முடியாதாததாக இருந்தது. பிரமோத் மகாஜன், கோபிநாத் முண்டே, நிதின் கட்கரி போன்ற தலைவர்களின் செல்வாக்கால் பாஜக சிவசேனையை பின்னுக்குத் தள்ளிவிட்டது. அக்கட்சியின் தேசிய அளவிலான செல்வாக்கும் அதற்கு உதவியது. எனினும் பால் தாக்கரே உயிருடன் இருந்த வரை இரு கட்சிகளிடையே மனஸ்தாபம் ஏற்படவில்லை.

2012இல் பால் தாக்கரே காலமான பிறகு உத்தவ் தாக்கரேவின் கட்டுப்பாட்டில் சிவசேனை வந்தது. அதன் பிறகு அவரது அணுகுமுறை பாஜகவுடன் மோதல் போக்கிற்கு வித்திட்டது.

மாறிய உள்ளம், மாறிய காட்சி

மகாராஷ்டிரத்தில் பாஜக சிவசேனையை விட வலுவாக வளர்ந்ததை உத்தவ் விரும்பவில்லை. 2014 லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அதீத பலத்துடன் வென்ற பிறகு கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்து செயல்பட வேண்டிய நிர்பந்தமும் பாஜகவுக்குக் குறைந்தது.  இதுவும் இரு கட்சியினரிடையே பிளவு பெருக வழிவகுத்தது.

எதிர்த் துருவங்கள்: உத்தவ் தாக்கரேவும் ராஜ் தாக்கரேவும்.

2014 சட்டசபை தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் சிவசேனையின் ஏற்க முடியாத நிபந்தனைகளால் சங்கடம் ஏற்பட்டது. அதிக இடங்களில் போட்டியிடும் சிவசேனையின் முடிவால் கூட்டணி உடைந்தது. இரு கட்சிகளும் தனித்துக் களம் இறங்கின. நான்குமுனைப் போட்டியாக நடந்த அத்தேர்தலில் பாஜக 122 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியானது. (சிவசேனை- 63, தேசியவாத காங்கிரஸ்- 44, காங்கிரஸ்- 42). தேர்தலுக்குப் பிறகு சரத் பவார் பாஜகவை ஆதரிக்க முன்வந்ததை அடுத்து, கூட்டணியை அவசரமாகப் புதுப்பித்துக் கொண்டு, அரைமனதுடன் பாஜக கூட்டணி அரசில் பங்கேற்றது சிவசேனை. பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வர் ஆனார்.

இந்த மாற்றத்தை சிவசேனையால் ஏற்கவே முடியவில்லை. ஒருகாலத்தில் சிவசேனை தலைமையிலான கூட்டணி அரசில் உதவியாளராகப் பங்கேற்ற பாஜக, மாநில ஆட்சியைக் கைப்பற்றியதை அக்கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை. எனவே, தனது கட்சிப் பத்திரிகையான ‘சாம்னா’வில் தொடர்ந்து பாஜக விரோதக் கருத்துகளை சிவசேனை பரப்பி வந்தது. இதற்கு காரணமானவர், இன்று ‘சிவசேனையின் சகுனி’ என்று புகழப்படும் சஞ்சய் ரௌத்.

எனினும் அதைக் கடந்து 2019 லோக்சபா தேர்தலில் பாஜக- சிவசேனை கூட்டணி தொடர்ந்து பெரும் வெற்றி பெற்றது. 2019 சட்டசபைத் தேர்தலின் போது மீண்டும் சிவசேனை முருங்கைமரம் ஏறியது. அப்போது மோடி, அமித் ஷா ஆகியோரின் முயற்சியால் கூட்டணி உடையாமல் காப்பாற்றப்பட்டது. அத்தேர்தலில் பாஜக- சிவசேனை கூட்டணி 161 இடங்களில் (பாஜக- 105, சிவசேனை- 56) வென்றது. எதிரணியில் தேசியவாத காங்கிரஸ்-54,காங்கிரஸ்- 44 இடங்களில் வென்றன.

அப்போது மீண்டும் சிவசேனையால் சிக்கல் ஏற்பட்டது. தேர்தலுக்கு முந்தைய கூட்டணியாக 161 இடங்களில் வென்றபோதும், சிவசேனை 56 இடங்களில் மட்டுமே வென்றபோதும், தனக்கே முதல்வர் பதவி அளிக்க வேண்டும்; 2.5 ஆண்டுகளில் முதல்வரை மாற்ற வேண்டும் என்ற ஏற்க முடியாத நிபந்தனைகளை விதித்தது. இதனால் கூட்டணி உடைந்தது.

எனவே தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் உதவியுடன் அரசு அமைக்க முயன்றது பாஜக. ஆனால், சிவசேனை- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைந்து, மகா விகாஸ் அகாதி கூட்டணியை அமைத்து, பாஜகவை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்தின. அக்கட்சியினரின் ஆதரவுடன் உத்தவ் தாக்கரே முதல்வரானார்.

நம்பிக்கை துரோகத்துக்கு துரோகமே பரிசு

உத்தவ் தாக்கரே தேர்தலுக்கு முன் மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை மறந்து, தனது அரசியல் எதிரிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது ஒரு ஒவ்வாத கூட்டணியாகவே மாநில மக்களால் பார்க்கப்பட்டது. ஏனெனில் மோடி தலைமையில் பிரசாரம் செய்து ஈட்டிய வெற்றியை தனது சுயநலனுக்காக அடகு வைத்தார் உத்தவ் தாக்கரே. அக்கட்சிகளும் பாஜகவின் தொடர் வெற்றிமுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, சிவசேனையை ஆதரித்தன. மூன்று கட்சிகளும் தங்கள் கொள்கைகளை அடகு வைத்து, ஆட்சிக்கட்டிலில் ஏறின.

மருந்தான கலகம்: அதிருப்தி சிவசேனை எம்.எல்.ஏ.க்களுடன் ஏக்நாத் ஷிண்டே

இது ஒரு வகையில் வாக்களித்த வாக்காளர்களின் முதுகில் குத்துவது போன்றது. வாக்காளர்களின் தேர்வுக்கு மாறாக பொருந்தாக் கூட்டணி அமைத்தது சிவசேனை. அது மட்டுமல்ல, அதுநாள் வரை தான் கடைபிடித்துவந்த ஹிந்து தேசியவாதக் கொள்கைகளையும் மூட்டை கட்டி பரணில் கிடாசியது.

தன்னை ஆதரிக்கும் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியினருக்கு பசையான துறைகளை ஒதுக்கினார் முதல்வர் உத்தவ் தாக்கரே. உண்மையில் அந்த அரசு, சரத் பவாரின் கண்ணசைவில் ஆட்டுவிக்கப்பட்ட பொம்மை அரசாகவே இருந்தது. அதுநாள் வரை ஹிந்து தீவிரவாதியாக இருந்த சிவசேனை கட்சி, ஒரே நாளில் மதச்சார்பற்ற கட்சியாகி விட்டது!

சிவசேனையை எதிர்த்தவர்கள் கடுமையாக வேட்டையாடப்பட்டனர். நடிகை கங்கணா ரனாவத், ரிபப்ளிக் டி.வி பத்திரிகையாளர் அர்ணாப் கோஸ்வாமி, எம்.பி.யும் நடிகையுமான நவ்னீத் ரானா ஆகியோர் சிவசேனை கூட்டணி ஆட்சியில் மிக மோசமாகப் பந்தாடப்பட்டனர். 2020 ஏப்ரலில் பால்கரில் இரு ஹிந்து சாதுக்கள் கம்யூனிஸ்டுகளால் கும்பல் வன்முறையால் கொல்லப்பட்டபோது மாநில அரசு வேடிக்கை பார்த்தது.

மாநில அரசில் ஊழலும் அதிகரித்தது. தவிர, சிவசேனையின் அடுத்தகட்டத் தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டு உத்தவின் மகன் ஆதித்ய தாக்கரே முன்னிலைப்படுத்தப்பட்டார். இதனால் மக்களிடையேயும் கட்சிக்குள்ளும் அதிருப்தி பெருகி வந்தது.

காவல் துறையை ஏவல் துறையாக்கி சிவசேனை நடத்திய அராஜகத்தால் மகாராஷ்டிர அரசின் நம்பகத்தன்மை குலைந்தது. நடிகர் ஷாரூக் கான் மகன் போதைப் பொருளுடன் உல்லாசக் கப்பலில் சிக்கிய விவகாரம், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை, மாநில அமைச்சர் நவாப் மாலிக் உத்தரவுப்படி மும்பை காவல் ஆணையர் லஞ்சம் வசூல் செய்தது என, காவல் துறையின் மானம் சந்தி சிரித்தது. சமூக ஊடகங்களில் சிவசேனையை விமர்சித்தவர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டு சிரையில் அடைக்கப்பட்டனர்.

இவ்வாறாக காட்டு தர்பார் நடத்திக் கொண்டிருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அக்கட்சிக்குள்ளேயே அதிருப்திக் குரல்கள் ஒலிக்கத் துவங்கின. அவற்றின் குவி மையமாக தானே வட்டார சிவசேனைத் தலைவரும் மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே இருந்தார். எனவே அவரையும் உத்தவ் ஓரம் கட்டினார். இதனால் உள்கட்சிக்குள் பூகம்பம் உருவாகி வந்த்து.

ஜூன் மாதம் இரண்டாம் வாரம் நடந்த ராஜ்யசபா உறுப்பினர் தேர்தலிலும் அடுத்து நடந்த மாநில மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தலிலும் சிவசேனை எம்.எல்.ஏ.க்கள் பலர் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களித்து, அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். அப்போதும் உத்தவ் தாக்கரே திருந்தவில்லை.

அதன் தொடர்ச்சியாக, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சுமார் 40 சிவசேனை எம்.எல்.ஏக்களும், 12 சுயேச்சை எம்.எல்.ஏக்களும் சூரத்துக்கும் கௌஹாத்திக்கும் சென்றனர். உடனே அவர்களது குடும்பங்கள், வீடுகள் மீது சிவசேனை ரௌடிக் கும்பல் தாக்குதல் நடத்தியது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டதுடன், அவர்களது எம்.எல்.ஏ. பதவியைப் பறிக்கவும் உத்தவ் தாக்கரே நடவடிக்கை எடுக்க முனைந்தார்.

288 மொத்த உறுப்பினர்கள் கொண்ட மகாராஷ்டிர சட்டசபையில் பெரும்பான்மை பெற 145 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. உண்மை என்னவென்றால் மொத்த சிவசேனை எம்.எல்.ஏக்களான 56 பேரில் 40 பேருக்கு மேல் ஷிண்டேவுடன் இருந்தனர். அவர்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி இழப்பு செய்ய முடியாது.

சிவசேனை உறுப்பினர்கள் பெரும்பான்மையாக அதிருப்தியாளர் ஷிண்டேவை ஆதரித்ததால், உத்தவ் அரசு சிறுபான்மை அரசானது. அதிருப்தியாளர்கள் தொடுத்த நீதிமன்ற வழக்குகளால் உத்தவின் சதி நிறைவேறவில்லை. கடைசிக் கட்டத்தில் உத்தவ் தாக்கரேவை சிவசேனையின் 6 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரித்தனர். எனவே உத்தவ் பதவி விலகினார்.

இந்த இடத்தில் தான் திடீர் திருப்பமாக – மாநில முதல்வராக தேவேந்திர பட்னவிஸ் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் – அவரே, மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார். இது பாஜக தேசிய தலைமையால் எடுக்கப்பட்ட முடிவு என்பதும் அதை அவர் மனப்பூர்வமாக ஏற்றதும் அரசியல் களத்தை வியப்பில் ஆழ்த்தின. ராஜதந்திரி என்று பெயர்பெற்ற சரத் பவாரே இதனை எதிர்பார்க்காமல் ஆடிப் போயிருக்கிறார்!

இந்தத் திடீர் மாற்றத்தால், ஏக்நாட் ஷிண்டே மாநில முதலவராகவும், பட்னவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றுள்ளனர். பாஜகவைப் பொருத்த வரை கட்சிக் கட்டுப்பாடு எவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்பதும், பதவியை விட கட்சி முன்னெடுக்கும் முடிவே பிரதானம் என்பதும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இது முதுகில் குத்திய துரோகிகளுக்கு பாஜகவின் தரமான பதிலடி என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

பதவியாசையால் சிவசேனையின் ஆட்சியைக் கவிழ்த்தது என்று, இனி பாஜக மீது அபவாதம் பேச முடியாது. ஏனெனில் முதல்வர் மட்டுமே மாற்றப்பட்டிருக்கிறார். சிவசேனை அதிருப்தி அணியின் ஆட்சியே தொடர்கிறது. இது ஒரு அற்புதமான காய் நகர்த்தல் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். முதல்வராக வாய்ப்பு இருந்தும் பாஜக அதைத் தவிர்த்து ஷிண்டேவை முதல்வர் ஆக்கியிருப்பதில் வேறு பல கணக்குகளும் உண்டு என்கிறார்கள். ராஜ் தாக்கரேவும் பாஜகவை நெருங்கி வருகிறார். மகாராஷ்டிரம் கடந்த ஆண்டுகளில் அடைந்த சீரழிவுகள் விரைவில் சரியாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

வரும் நாட்களில் சிவசேனை கட்சியினர் பெருவாரியாக ஷிண்டே தலைமையை ஏற்க வாய்ப்புள்ளது. அப்போது உத்தவும் அவரது மகனும் மட்டுமே சிவசேனையில் இருக்கும் நிலை ஏற்படலாம். அரசியல் துரோகி சிவசேனைக்கு பாஜக அளித்திருக்கும் இந்த விநோத தண்டனை சுயநலக் குடும்ப  அரசியல்வாதிகளுக்கு காய்ச்சல் ஏற்படுத்தி இருக்கும். ஷிண்டே- பட்னவிஸ் கூட்டணி ஆட்சி சிறப்புற நடைபெறுமானால், எதிர்காலத்தில் மகாராஷ்டிர மாநில அரசியலில் பாஜகவின் செல்வாக்கு உயர்வதை யாராலும் தடுக்க முடியாது.

19 Replies to “துரோக அரசியலுக்கு பாஜகவின் தரமான பதிலடி”

  1. இது உங்களில் யாருக்காவது புரியுதா???

    1. தமிழனுக்கு மதம் கிடையாது. ஆனால் மரபு உண்டு. மரபு என்றால் என்ன?

    “எப்பொருள் எச்சொல்லின் எவ்வாறு உயர்ந்தோர்
    செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே”

    – நன்னூல்.

    அதாவது அறிவுடையோர் எந்தப் பொருளை எந்தச் சொல்லால் எந்த முறைப்படி குறிப்பிட்டார்களோ அதே முறைப்படி வழங்குதல் மரபாகும் என்பதே இதன் பொருள். எனில் அறிவுடையோராக நம் தெய்வப்புலவன் “திருவள்ளுவரை” எடுத்துக்குவோம். திருவள்ளுவர் என்ன சொல்றாருனா

    “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்”

    அதாவது இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களே பிறவியாகியப் பெருங்கடலைக் கடப்பார்கள். சேராதவர்களால் கடக்க இயலாது என்கிறார். எனில் திருவள்ளுவர் சொல்வதே மரபு. ஆக இறைவனின் திருவடிகளைத் தொழுவதே மரபு.

    2. சாதி கிடையாது குடிதான் உண்டு. சாதினா என்ன? இதற்கும் நாம் துணைக்கு திருவள்ளுவரை அழைப்போம்.!

    “அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
    குன்றுவ செய்தல் இலர்”

    ௭ திருக்குறள்.

    பொருள் : பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு காரணமான குற்றங்களைச் செய்வதில்லை. இக்குறளில் திருவள்ளுவர் கூறும் பிறப்பால் வரும் குடி (குடிப்பிறப்பு) எனப்படுவது யாது? இதை முத்தமிழ் மூதாட்டியான ஔவையார் கூறுகையில்,

    “நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு ௭ மேலைத் தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம் குலத்து அளவே ஆகும் குணம்”

    ௭ ஔவையார்.

    பொருள் : அல்லிப்பூவானது நீரின் அளவு எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவே வளரும். நாம் கற்ற நூல்களின் அளவே நம் அறிவு இருக்கும். முற்பிறப்பில் நாம் செய்த புண்ய கார்யங்களின் அளவே நாம் இப்போது அனுபவிக்கும் செல்வம். நமது குணமானது நாம் தோன்றிய குலத்தின் அளவே இருக்கும். இங்கே முத்தமிழ் மூதாட்டியான ஔவையார் குறிப்பிடும் குலம் யாது???

    “நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
    குலத்தின்கண் ஐயப் படும்”

    ௭ திருக்குறள்.

    கலைஞர் உரை : என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும். இங்கே திருவள்ளுவரும் முத்தமிழ் மூதாட்டியும் குறிப்பிடும் குலமும், குடியும் எதுவென்று வேறுபடுத்திக் காட்டிவிட்டு இதிலிருந்து சாதி எவ்வாறு வேறுபடுகிறது என்பதை நீங்களே சொல்லுங்க.!

    3. இறைவன் கிடையாது. தெய்வம் மட்டுமே உண்டு.

    திருவள்ளுவர் ஏற்கனவே இறைவன் உண்டு என்று “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்” என்ற குறளில் “இறைவன்” என்று பச்சையாக கூறிய பின்னரும் இதற்கு விளக்கம் எழுத வேண்டுமா என்ன?
    இதுபோன்ற அறிவு மிகுதியால் எழும் கேள்விகளைக் கண்டு ஆச்சரியமாகத்தான் உள்ளது.!

  2. வரலாற்றை வீரர்கள் படைப்பதில்லை, பெரும் சாம்ராஜ்யத்தை வாள்முனைகள் மட்டும் அமைப்பதில்லை, மாபெரும் தேசத்தின் மாற்றங்கள் வீரனாலும் மக்களாலும் மட்டும் கிடைப்பதில்லை

    ஒவ்வொரு தேசத்தின் வரலாற்றிலும் அதன் பொற்காலத்திலும் அத்தேசம் வலிமையாக எழவும் மாற்றங்கள் எழவும் ஒரு ஞானி வேண்டும்

    ஞானியே வரலாற்றினை மாற்றுவான், ஆன்மீக ஞானியே அக்கினி குஞ்சாக மக்களின் சிந்தனை காட்டை எரியவைப்பான், அவனே சூரிய வெப்பம் போல் மேகம் கூட காரணமாவான், அவனே பெருமழையாக கொட்டி பெரும் பசுமை செழிப்பை கொடுப்பான்

    வரலாற்றில் அரிஸ்டாட்டில், சாணக்கியன் என பலரை இப்படி சொல்லமுடியும், ஏன் நவீன சீனாவினை தொடங்கி வைத்த சன்யாட்சன் சொன்னபடி “இந்த புத்தமதம் இருக்கும் வரை நாம் உருப்பட போவதில்லை நம் பண்டைய கலாச்சாரத்தை மீட்டெடுக்காமல் உருப்படபோவதில்லை” என்பதில்தான் சீனா எழும்பி நிற்கின்றது

    இஸ்ரேலின் எழுச்சிக்கும் காரணம் அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை மறக்காமல் காத்து வருவது மட்டுமேதான், அவர்களுக்கு அந்த சிந்தனையினை கடந்த நூற்றாண்டில் தியோடர் ஹார்ல் தொடங்கினான்

    வீரசிவாஜிக்கு ராமதாசரும், ஹரிகர புக்கருக்கு வித்யாரண்யரும் அப்படித்தான் அமைந்தார்கள், ராஜராஜ சோழன் கூட கருவூர் சித்தரின் உருவாக்கமே

    ஞானியர் உருவாக்கி கொடுக்காத‌ ஆட்சி நிலைக்காது, நிலைத்து ஒளிவீசாது

    ஆம் சிந்திக்க கற்றுகொடுப்பான் ஞானி, பிரபஞ்ச சக்தியோடு அவன் எடுக்கும் போதனையில் மாபெரும் எழுச்சி எழும், அவனின் சிந்தனை வெறும் உணர்ச்சி வெறியினை கொடுக்காது அது அந்த இனம் எது? அதன் தாத்பரியம் என்ன? அதன் பெருமையும் வரலாறும் என்ன? எனும் மிகபெரிய‌அது வரலாற்றை மாற்றும்

    இந்தியாவின் ஞானமும் சிந்தனையும் எக்காலமும் உலகில் கொண்டாடபட்டது, அந்த இந்திய ஹிந்து ஞானத்தை விட கிரேக்க சிந்தனை உயர்ந்தது என காட்டபோவதாக சொல்லி இந்தியா வந்தான் அலெக்ஸாண்டார்

    ஆனால் போரஸுடன் தோற்ற நாட்களில் அலெக்ஸாண்டர் இந்திய ஞானத்தாலும் அதன் சனாதான சிந்தனையாலும் ஈர்க்கபட்டான் ஞானியாய் திரும்பசென்றான்

    அவனுக்கு பின் புத்தமும் சமணமும் இந்நாட்டை குழப்பி போட்டது ஆதிசங்கரர் வந்து மீட்டெடுத்தார்

    இஸ்லாமிய படையெடுப்புகள் அதை ஒழிக்க பார்த்தன, வீரசிவாஜி பெரும் போராட்டத்தை ஞானியரின் ஆசியோடு தொடங்கி வைத்தான், அந்த இடைவெளியில் புகுந்த‌ பிரிட்டானியர் இந்நாட்டு மதத்தை கலாச்சாரத்தை ஆண்டிகள் தேசம், பாம்பாட்டி தேசம் என மாற்றி சொல்லி இந்நாட்டின் மகத்துவத்தை திரித்தனர்

    இந்தியர்களின் வீரமும் ஞானமும் தாத்பரியமும் ஒழிந்து அவர்களை குழப்பி நாகரீகமற்றவர்காக்கி செவ்விந்தியர்களை போல ஒழித்துவிடும் தந்திரமேதான் ஐரோப்பியருக்கு இந்தது

    அதில்தான் இந்தியாவினை பாம்பாட்டி நாடு, காட்டுமிராண்டி நாடு, மூடநம்பிக்கை நிரம்பிய மதத்தை கொண்ட நாடு என கதைகட்டினர், அக்கதை ஐரோப்பாவிலும் வேகமாக பரவிற்று, இந்திய மதமும் நாகரீகமும் பிற்போக்கானது என அவர்களகவே நம்ப தொடங்கினார்கள்

    ஆனால் அந்த ஆண்டிகள் தேசத்துக்கா ஐரோப்பாவில் இருந்து பிழைக்க வந்தாய்? அந்த அறிவில்லா மூட நம்பிக்கை தேசமா இவ்வளவு செல்வத்தை உருவாக்கிற்று? என அறிவுள்ள இந்தியர் கேட்டாலும் பிரிட்டிஷ்காரனிடம் பதில் இல்லை

    காலம் இந்நாட்டின் தாத்பரியங்களையும், இந்து ஞானத்தின் பிரமிப்பையும் பிரமாண்டத்தையும் அதன் விஸ்வரூபத்தையும் காட்ட ஒரு மகானை உருவாக்கியது, இரண்டாம் சங்கரராக அந்த மகான் வங்கத்தில் தோன்றினார் அந்த பெரும் ஞானி

    சுவாமி விவேகானந்தர்

    அவர்தான் இந்திய சனாதானதர்மத்தின் ஞான முகத்தை மேற்குலகில் மிளிர செய்தார், அவராலே இந்த மங்கிய விளக்கு மிக பிரகாசமாய் எரிந்தது, மேற்குலகம் இந்திய ஞானத்தை கண்டு அசந்தது, ஏகபட்டோர் இந்துமதம் வரவும், இந்து எழுச்சி ஏற்படவும் அது சுதந்திர கணலாக எரியவும் அதுதான் காரணமாயிற்று

    வங்கம் ஏராளமான சிந்தனையாளர்களை கொடுத்திருக்கின்றது, விஞ்ஞானிகள், கவிஞர்கள், நாட்டுபற்றாளார்கள் என அந்த கொடை பெரிது அவ்வாறே அம்மண்ணில் உதித்த ஞான சூரியன்களில் மிக மிக முக்கியமானவர் விவேகானந்தர்.

    அந்த நரேந்திர தத்தா எனும் ஞான பிறப்பு சிறுவயதிலே ஏராளமான கேள்விகளை எழுப்பியவர், குதிரையேற்றம் முதல் வீர விளையாட்டு வரை அவருக்கு தெரிந்தது, மிக எளிதாக கலெக்டர் ஆகும் தகுதி அவரிடம் இருந்தது

    ஆனால் அவர் ஆன்மீகத்தையும் பகுத்தறிவினால் உணரமுற்பட்டவர், அக்கால பெரும் பீடமான பிரம்ம சமாஜம் அவரை எதிர்கொள்ளமுடியவில்லை, இறுதியில் ராமகிருஷ்ண பரம்மஹம்சரிடம் தான் தேடிய ஆத்மஞானத்தினை அடைய அடைக்கலமானார்.

    ராமகிருஷ்ண பரமஹம்சர் மிகபெரிய ஞானி, புலி இன்னொரு புலியினை அடையாளம் காணுதல் போல மிக சரியாக இவரை அடையாளம் கண்டார், அவரின் கைபட்ட நேரத்தில் இருந்து முழு பிரபஞ்ச சக்தி நரேந்திரனில் இறங்கிற்று, சுவாமி விவேகானந்தர் என மாறினார்

    அதில்தான் பல்லாண்டு பாரம்பரியம் கொண்ட இந்துமதத்துக்கு பெரும் ஒளி கிடைத்தது

    தெளிவான முகம், குழப்பமில்லாத பதில்கள், தெளிந்த நீரோடை போன்ற பேச்சு, எதிர்கேள்வி கேட்கமுடியாத அற்புதமான உவமைகள், உள்ளத்தில் உறுதி,எதற்கும் அஞ்ஞாத மனஉறுதி இவற்றுடன் அவர் பரம்மஹம்சர் மடத்தின் தலைவராகும் பொழுது அவருக்கு வயது வெறும் 23.

    பெரும் அவதாரங்களை தவிர, பிறவி ஞானிகளை தவிர யாருக்கும் இது சாத்தியமில்லை.

    அந்த வயதிலே ஞானம் அடைந்தார், ஆண்மீகம் என்பது ஆலயத்திலோ அல்லது இமயமலை,காசி சாமியார் கூட்டத்திலோ அல்ல, ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு தெய்வீக தன்மை உண்டு, அதனை வெளிபடுத்தினால் அதுதான் ஆன்மீகம் என்பதுதான் இம்மண்ணின் ஞானமரபு என பழைய ஞானத்தை மீட்டெடுத்தார்

    ஆண்மீகம் மூலம் இந்தியாவினை மாற்றி அமைக்கலாம், என்பதுதான் அவரின் கொள்கை.
    அக்கால இந்தியா மிகவும் அறியாமையால் பின் தங்கி மோசமாக இருந்தது, தன் மதமும் அதன் உயர்வும் அறியாமல் இருந்தது

    ஆப்கானிய படையெடுப்பும் அதை தொடர்ந்த பிரிட்டிசார் ஆட்சியும் அதனை முறித்து போட்டிருப்பதை உணர்ந்தார், சிவாஜியின் இந்து பேரரசு எழுச்சி ஆங்கிலேயரால் அடக்கபட்டதை அமைதியாக உணர்ந்தார்

    சுல்தான்களும் ஆங்கிலேயனும் சேர்ந்து செய்த ஆட்சியில் இந்துமதம் நசுங்கியிருந்ததையும் அந்த ஆன்ம எழுச்சி இல்லாமல் இனி இங்கு மாற்றமில்லை என்பதையும் உணர்ந்தார்.

    அரச ஆதரவு இல்லா மதம் வாழாது, மக்களிடம் ஆத்மரீதியாக சிந்திக்கவைக்கா சிந்தாந்தம் நிலைக்காது என்பது அவரின் தீர்க்கமான முடிவாயிற்று

    காலத்தால் தூசுஅடைந்து , பாழ்பட்டு கவனிக்க யாருமற்று இருந்த இந்துமதத்தை ஆப்கானியராலும் வெள்ளையனாலும் இந்திய அரசர்கள் வீழவும் விழுந்து கிடந்த இந்துமதத்தை அவர் தட்டி எழுப்பினார்

    அதன் தாத்பரிய நம்பிக்கைகள் கொள்கைகள் ஞான விளக்கங்களை காவி உடை அணிந்து அவர் சொல்ல தொடங்கிய பொழுது ஒவ்வொரு இந்தியனின் ஆன்மாவும் உண்மை உணர்ந்தது, யானையின் பலம் அதற்கு தெரிவது போல் ஒவ்வொருவரும் உணர தொடங்கினர், மாயை அகன்றது

    தேசபற்றும் அர்பணிப்பும் நிரம்பிய‌ 100 இளைஞர்களை கொடுங்கள் இத்தேசத்தை நான் மாற்றுகின்றேன் என சவால் விட்டார் விவேகானந்தர், இளைஞர்களும் திரண்டனர், பெரும் எழுச்சி அவரால் உண்டாயிற்று

    அமெரிக்க சர்வமத மாநாட்டில் அவர் உரையாற்றி நின்றபொழுது வணங்காத கரங்களுமில்லை தெளியாத உள்ளங்களுமில்லை, ஆம் மிகபெரிய ஞானியாக அவரை உலகம் ஏற்றும் கொண்டது

    விவேகானந்தர் தெளிவாக இருந்தார், வீணாக ஆயுதபோராட்டமோ அறவழி போராட்டமோ அர்த்தமற்றது என்பது அவருக்கு தெரிந்தது, உண்மையான ஆன்மீக எழுச்சி ஒன்றே இங்கு தர்மத்தை மீட்டெடுத்து நிலைக்க வைக்கும் என்பதை உணரபெற்றார்

    நாடெல்ல்லாம் சுற்றிபார்த்த விவேகானந்தர் அதனை மாற்ற இளைஞர்களால் மட்டுமே முடியும் என போதித்தார் , அதனால்தால் அர்ப்பணிப்புள்ள இளைஞர்கள் அவருக்கு தேவையாய் இருந்தனர்.

    அவரது போதனைகள் சாகாவரம் பெற்றவை,

    சிகாகோ உலக சமய மாநாட்டில் எல்லோரும் ஆங்கில நாகரீகத்தில் “சீமான்களே,சீமாட்டிகளே” என சொல்லி பேச தொடங்க, எடுத்த எடுப்பிலே “சகோதர, சகோதரிகளே” என தொடங்கி கைதட்டலை அள்ளியவர். கேட்டதற்கு காரணம் சொன்னார். “ஒரு துறவிக்கு பெற்றவரை தவிர வேறு எல்லோரும் சகோதர சகோதரியே” என அமைதியாக விளக்கினார், அதற்கு மேற்கத்திய கலாச்சாரம் இந்துக்களிடம் இருந்து எடுத்து கொண்ட பல சான்றுகளை காட்டினார்

    ஐரோப்பியரின் வாழ்க்கை முறை வேறு கலாச்சாரம் வேறு மதம் வேறு. ஆனால் எங்கள் இந்து மண்ணில் வாழ்வும் மதமும் கலாச்சாரமும் ஒன்று என அவர் சொன்னபொழுது ஐரோப்பியரிடம் பதிலே இல்லை, இந்துமதம் அன்றே அவர்களால் மதிப்புடம் நோக்கபட்டது

    அதுவும் உலக சமயமாநாட்டில் ஒரு காவி பரதேசி கோலத்தில் சென்று, இந்திய ஞானத்தை, அதன் அமைப்பை, அதன் ஆழ்ந்த நோக்கத்தினை அவர் விளக்கி முழங்கியபொழுது, இமைக்கமறந்து அவரை வணங்கி நின்றது அந்த சபை.

    பெண்களுக்கான மரியாதை என்ற பொருளில் அவர் பேசும்பொழுது “எங்கள் நாட்டில் மனைவியினை தவிர எல்லோரையும் அம்மா என்றே அழைப்பார்கள், சிறுமியிடம் பிச்சை கேட்டாலும் தாயே என அழைக்கும் பாரம்பரியம் எங்களது” என அவர் சொன்னபொழுது, மற்ற மத வித்தகர்களிடம் அதற்கு பதில் இல்லை

    இந்து மத கலாச்சாரத்தில் பெண்களுக்குரிய உயர்ந்த இடத்தினை அவர் விளக்கியபொழுது மற்ற மத குருக்கள் எல்லாம் சங்கடத்தில் தலையினை தொங்க போட்டுகொண்டனர். அவ்வளவு அழகாக விளக்கினார்.

    உண்மையில் பழம் இந்திய அடையாளங்களில் பெண்களுக்கான இடம் அவ்வளவு உயர்ந்ததாய் இருந்திருக்கின்றது என்பதை அவர் விளக்கியபொழுது மற்ற மதத்தாருக்கு இந்துமதத்தின் மீதான அபிமானம் கூடிற்று

    இதுதான் விவேகானந்தரின் முத்தாய்ப்பு அவர் எல்லா மதங்களையும் படித்தார், எல்லா மத நோக்கத்தையும் அவரின் இளம் வயதிலே அறியமுடிந்தது, எல்லா ஆறுகளும் கடலுக்கு செல்வது போல எல்லா மதமும் இறைவனை அடையவே என அவரால் 30 வயதிலே போதிக்க முடிந்தது.

    அதனால்தான் வெள்ளையர் கூட அவரை கிழக்கின் ஞான ஒளி என அழைத்தனர். கல்வி மூலம் மக்களின் அறியாயமை அகற்றவேண்டும் என்பதில் தீராத ஆர்வம் கொண்டிருந்தார், இந்தியா முழுமையும் விழிப்புணர்வு வரவேண்டும் என்பதே அவரது முதல் குறிக்கோள்.

    நிச்சயமாக சொல்லலாம்,, அழிந்திருந்த இந்து மதத்தினை மீட்டெடுத்தவர் ஆதிசங்கரர் என்றால், அதற்கு அழியா புகழை கொடுத்தவர் சுவாமி விவேகானந்தர்.

    உலகில் பலநாடுகளில் இந்தியாவில் பிறந்த இருவருக்கு மட்டும் சிலை உண்டு, காரணம் அவர்களை உலகம் மதித்துவணங்கி ஏற்றுகொண்டது, ஒருவர் காந்தி இன்னொருவர் சுவாமி விவேகானந்தர்.

    அவரது தெளிவு அப்படி, போதனைகள் அம்மாதிரியானவை. மனிதனுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுக்கும் ஒப்பற்ற மந்திரங்கள் அவை. ஆன்மாவை தட்டி எழுப்ப கூடியவை.

    ஒரு இந்து துறவி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பெரும் எடுத்துகாட்டாய் இருந்தவர் விவேகானந்தர்
    உங்கள் அறிவிற்காக உங்கள் போல அறிவான மகனை பெற, உங்களை திருமணம் செய்ய தயார் என ஒரு இளம்பக்தை வேண்டி நிற்க, “அம்மா..துறவிக்கு பெண்கள் எல்லாம் தாய் ஸ்தானம், நீ வேண்டுமானால் என்னை மகனாக ஏற்றுகொள், நான் இப்பொழுதே உன் மகனாவேன்” என சொல்லி உயர்ந்து நின்றாரல்லவா? அதுதான் விவேகானந்தர்.

    அவர்தான் இந்தியா தன் ஞானமரபிலும் சனாதர்ம உயரிய சிந்தனையிலும் எழுந்து விடுதலைபெற வேண்டும் என முதலில் முழங்கினார்

    “இந்த நாட்டிற்கு தேவையானது நிச்சயமாக மதம் அல்ல. அது அவர்களிடமே இருக்கின்றது கல்வியும், தங்கள் மதம் கலாச்சாரம் பற்றிய‌ விழிப்புணர்வுமே அதுதான் இந்நாட்டை மாற்றும், ”
    எவ்வளவு அழகான போதனைகள், எளிய வாதங்கள், ஆழ்ந்த தத்துவங்களை மெல்லிய பூங்காற்று போல் சொல்லிய எளிமையான அணுகுமுறைகள்? சந்தேகமில்லை அவர் மாபெரும் ஞானி

    அவரின் கிளிகதையும், ஆமை கதையும் போதும் அவரின் ஞானத்தினை சொல்ல

    அந்த குளத்தாமை கதையின் மூலம் எங்கே என தேடும்பொழுதுதான் விவேகானந்தரின் ஆகபெரிய தேடலும், அவரின் நுணுக்கமான சிந்தனையும் வெளிபடுகின்றன‌

    கடல் ஆமை குளத்தாமையினை நோக்கி கடல் பெரிது என்றால் குளத்து ஆமை கடல் எப்படி இதைவிட பெரிதாக இருக்கும் என அடம்பிடிக்குமாம், இறைவன் எவ்வளவு பெரியவன் என்பதை விளக்க இந்த கதையினை பல இடங்களில் ஆமையாகவும் தவளையாகவும் அறியாமை பதர்களை உருவகபடுத்தி சொல்வார் விவேகானந்தர்

    அந்த கதையின் மூலம் அப்பர் சுவாமிகளின் பாடல் என்பதுதான் ஆச்சரியம்

    “கூவலாமை குரைகடல் ஆமையைக்
    கூவலோடு ஒக்குமோ கடல் என்றல்போல்
    பாவகாரிகள் பார்ப்பரிது என்பரால்
    தேவதேவன் சிவன் பெருந்தன்மையே” என்பது அப்பர் சுவாமிகளின் பாட்டு

    அதையே விவேகானந்தரும் படித்து பேசினார் என்றால் ஒரு இந்துவாக அவர் இந்த பாரத கண்டமெல்லாம் எவ்வளவு தேடி தேடி இந்து நூல்களை படித்திருக்கின்றார் என்பதை புரிந்து கொள்ளமுடிகின்றது

    அதை நினைக்கையிலே கண்ணீரோடு கண்கள் அப்பெருமகனை தேடுகின்றது

    இறைவன் பெரும் சூத்திரதாரி, நைஷ்டிக பிரம்மசாரி துறவிகளை அவன் நீண்டநாள் வாழவிடுவதில்லை, அப்படித்தான் பெரும் ஞான சூரியனாக, தெய்வீக திருமகனாக உலகெல்லாம் இந்துமதத்தின் பெருமையை ஒரு இந்தியனாக ஒளிவீசி பரப்பிய அவரையும் எடுத்துகொண்டான்.இறக்கும் பொழுது அவருக்கு வயது 39 மட்டுமே.

    ஒரு மாபெரும் ஞானசூரியனின் பிறந்த நாளை உலகம் இன்று கொண்டாடுகின்றது, ஒரு இந்தியனாக அந்த ஞானமகனை வாழ்த்துவோம், நிச்சயம் அவர் வாழ்த்துகுறியவர், வாழ்த்துக்கு மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியனும் பின்பற்ற வேண்டிய அவதாரம்

    “இந்த நாட்டின் இழிநிலைக்கு காரணம் மதம் அல்ல, அந்த புனித மதத்தினை ஒழுங்காக பின்பற்றாததே..” என்ற அவரின் போதனை நிச்சயம் இன்றும், எக்காலமும் பொருந்த கூடியது.

    அப்படி பின்பற்றினால் இந்நாடு எவ்வளவு உயர்வாக உலகில் ஒளிவீசும், அதனை செய்தால் இந்துமதமும் வாழும், இந்தியாவும் மகா அமைதியாக செழிப்பாக வாழும்

    இந்நாடு இந்துக்கள் மறுமலர்ச்சி பெறவேண்டும் என்றால் அதற்கு விவேகானந்தர் காட்டிய வழியே எக்காலமும் சால சிறந்தது

    இந்து எப்படி வாழவேண்டும்? எப்படி சிந்திக்க வேண்டும்? எப்படி தியானிக்க வேண்டும் என சொல்லியும் வாழ்ந்தும் காட்டிய மகான்

    இந்துத்வா என்பது என்ன? மனிதனை தெய்வ நிலைக்கு உயர்த்துவதே இந்துமதம், ஒவ்வொரு மனதில் இருக்கும் கடவுள் தன்மையினை வளர்த்து அம்மனிதனை தெய்வநிலையினை எட்ட செய்வதே இந்துமதம்
    இந்த உலக வாழ்வில் எதெல்லாம் மனிதனை மனிதனாக வாழவைக்க அவன் மனதை செம்மைபடுத்துமோ அதுதான் இந்துமதம்

    “ஒவ்வொரு மனிதனும் தான் செய்யும் எல்லா வழிபாட்டிலும் என்னையே அடைகின்றான், அது சுடுகாட்டு பூசையோ , ஆடு வெட்டுவதோ இல்லை ஆலய கருவறை முன் நிற்கும் வழிபாடோ எல்லாம் என்னையே சேரும்” என கண்ணன் சொன்ன தத்துவத்தை எளிதாக விளக்கியவர் விவேகானந்தர்

    ஒவ்வொரு இந்து வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகங்களில் கீதை போல விவேகானந்தரின் போதனைகளும் கட்டாயம் இருக்க வேண்டும்

    பாரதத்தின் கலாச்சார பெருமையும், அதன் மகா உயர்ந்த தாத்பரியமும் , இந்து மதம் உலகுக்கு சொல்லும் மாபெரும் ஞானமும் அந்த ஞானமரபும் அதில்தான் இருக்கின்றன‌

    பென்னெடுங்கால ரிஷிகளும் மகான்களும் முனிகளும் ஒருசேர கலந்து உரிய நேரத்தில் இம்மண்ணின் மகத்துவத்தை விவேகானந்தர் உருவில் விளக்க வந்த நாள் இது

    அலெக்ஸாண்டரையும் அவன் கிரேக்க மன பெருமையினையும் சாணக்கியன் தோற்கடித்து விரட்டியது போல, ஐரோப்பிய கிறிஸ்துவ பெருமைமிகுந்த அகங்கார‌ தலைகணத்தை தோற்கடித்து விரட்டியவர் விவேகானந்தர்.

    அந்த தேசபற்று மிக்க ஞான பிம்பம் நரேந்திரனாய் பிறந்து விவேகானந்தராய் ஜொலித்து மறைந்தபின் இப்பொழுது நரேந்திர மோடியாய் திரும்பவும் வந்திருக்கின்றார், அந்த ஞானமகனால் தேசம் தலை நிமிர்ந்து நிற்கின்றது

    சுவாமி விவேகானந்தர் தன் இறுதிநாட்களில் நான் உடலால் மறைந்தாலும் என் ஆன்மா இந்த நாட்டை மீட்டெடுக்க மறுபடி வரும், நான் மறுபடி வந்து இந்நாட்டை உயர்த்துவேன் என அடிக்கடி சொல்லிகொண்டிருந்தார்

    அந்த நரேந்திர தத்தா பின்னாளில் நரேந்திர மோடியாய் திரும்ப வந்ததை காலம் காட்டிற்று, மோடி தன் தேச சேவையினை விவேகானந்தரின் சீடராகத்தான் தொடங்கினார்

    விவேகானந்தரோடு அவரின் எழுச்சி அடங்கவில்லை உண்மையில் அவர் எழுச்சியும் போராட்டமும் அவர் காலத்துக்கு பின்புதான் பெரும் அலையாக எழும்பிற்று

    வரின் பூலோக வாழ்வு முடிந்து அரூபியாக விஸ்வரூபமெடுத்தார் விவேகானந்தர், அவரின் சிந்தனைகளும் போதனையும் இந்தியாவில் பெரும் எழுச்சியாக உண்டாயிற்று, அதுவும் வங்கத்தில் பற்றி எரிந்தது
    இதன்பின்பே வெள்ளையன் வங்கத்தை இரண்டாக பிரித்தான், இந்துக்கள் எழுச்சியினை தொடர்ந்தே முஸ்லீம் லீக் அமைப்புகளும் தோன்றின‌

    விவேகானந்தர் ஏற்றிவைத்த அமைதி தீ தொடர்ந்து எரிந்தது, அது இந்து மகா சபையாக ஆர்.எஸ்.எஸ் இயக்கமாக தொடர்ந்து வந்தது, ஆனால் உலக நிலை யாருக்கும் சாதமில்லை, அதனால் என்ன, ஞானி ஏற்றிவைத்த தீ அணையுமா என்ன?

    அது எரிந்தது, இந்நிலையில் ஹிட்லரின் எழுச்சியும் அமெரிக்க சோவியத் எழுச்சியும் பிரிட்டனை வீழ்த்தின, இரண்டாம் உலகபோரின் முடிவில் இந்தியாவினை இரண்டாக பிரித்து இரு நாட்டுக்கும் தன் அடிமைகளை அமர்த்திவிட்டு வெளியேறினான் வெள்ளையன்

    1947ல் நடந்தது சுதந்திரம் அல்ல, தன் அடிமைகளிடம் ஆட்சியினை வெள்ளையன் கொடுத்த ஒரு நிகழ்வு அவ்வளவுதான்

    ஆனால் விவேகானந்தர் விஸ்வரூபமாக வளர்ந்தார் நாடெல்லாம் இந்து எழுச்சி நடந்தது, அமைதியாக நடந்தது கன்னியாகுமரி வரை அவர் வந்து நின்றார்

    திராவிட கண்களுக்கு அது ஏதோ ஒரு சாது என தெரிந்ததே தவிர அவர்களின் அறியாமை அகங்கார கண்களுக்கு அந்த ஞானம் பிடிபடவில்லை

    விவேகானந்தரின் போதனைகள் இன்னும் வளர்ந்தன , 1990களில் உலகமே மாற்றங்களை தேடியபொழுது இந்தியாவிலும் காங்கிரஸ் வீழ ஆரம்பித்தது

    அதாவது வெள்ளையனின் அடிமை கூட்டம் வீழ ஆரம்பித்து இந்துக்களிடம் எழுச்சி வந்தது, ஆயினும் அக்கட்சி இத்தாலி கூட்டத்திடம் சென்றது

    பொறுமையுடன் விவேகானந்தரின் ஞானதீ தன் கடமையினை செய்து கொண்டே இருந்தது, 2014ம் ஆண்டு இத்தேசம் இத்தாலி கோஷ்டியினை பிடுங்கி எறிந்து தன்னை முழுக்க மீட்டது

    ஆம் கவனியுங்கள் உங்களுக்கே புரியும்

    1947ல் சுதந்திரம் என சொன்னாலும் உண்மையான சுதந்திரம் 2015ல் தான் நடந்தது, அதன் பின்புதான் காஷ்மீர் இணைப்பு முதல் இன்னும் ஏராளமான நல்ல விஷயங்கள் நடக்கின்றன‌

    அதில் ராமர்கோவிலும் சேர்ந்து கொண்டது, ஆம் விவேகானந்தர் கண்ட கனவுகளெல்லாம் இப்பொழுதுதான் அரங்கேறுகின்றன, இந்தியாவின் சுதந்திரம் 20104ல் நடந்து இப்பொழுதுதான் நடக்கின்றது

    காசி இப்பொழுதுதான் துலங்குகின்றது, இனி ஒவ்வொரு ஷேத்திரமாக துலங்கும்

    எங்கெல்லாம் சுவாமி நடந்து அந்த ஷேத்திரங்களின் நிலைகண்டு கண்ணீர்விட்டாரோ அதெல்லாம் துலங்க ஆரம்பித்துவிட்டன, இதெல்லாம் மாபெரும் ஆச்சரியம் சனாதான துறவிகள் மட்டும் காட்டும் ஆச்சரிய அதிசயம்

    ஞானிகளின் கணக்குகளும் வாழ்வும் ஆயுளும் புரிந்து கொள்ளமுடியாதவை, இதை ராகவேந்திரா சுவாமிகளின் வரலாற்றிலே காணலாம், ராகவேந்திரரின் சாயல் விவேகானந்திரடமும் உண்டு.

    தன் ஆயுள் பற்றி ராகவேந்திரர் சொன்னார் “என் சரீரத்துக்கு வயது நூறு ஆண்டுகள், என் நூல்கள் 300 வருடங்களுக்குப் பின் பிரசுரமடையும், பிருந்தாவனத்தில் நான் 700 ஆண்டுகள் வாசம் செய்வேன்”

    விவேகானந்தர் வாழ்வும் இப்படியே, அவரின் பூவுடலுக்கு வயது 39, அவரின் அரூபியான போராட்ட வாழ்வு 100 வருடங்கள், அவரின் சிந்தனை ஆளதொடங்கியிருக்கும் இந்த காலத்தின் அளவு இனிதான் உலகம் அறியும்

    அந்த அதர்மம் இந்தியாவில் அட்டகாசம் செய்தபொழுது பிரபஞ்சம் இங்கு விவேகானந்தர் எனும் மகா ஞானியினை அனுப்பியது, அவரால் இங்கு மாபெரும் புரட்சி ஏற்பட்டு 2014ல் இந்திய விடுதலையும் சாத்தியமாயிற்று

    ராகவேந்திரரின் அம்சம் விவேகானந்தர் என்படில் சந்தேகமில்லை. ராகவேந்திரரின் எழுச்சி 15ம் நூற்றாண்டில் இந்துமதத்தை காத்தது, எவ்வளவோ இடங்களில் காத்தது அவர் எழாவிட்டால் தென்னகம் பலவற்றை இழந்திருக்கும்

    ராகவேந்திரரின் சாயல் இருப்பதால் என்னவோ விவேகானந்தருகும் தமிழகத்துக்கும் இடையேயான தொடர்பு மிக அதிகம், தமிழகத்தை அவர் அதிகம் நேசித்தார்

    குமரியில்தான் அவர் தவமிருந்தார்

    விவேகானந்தர் 1893ல் சொன்னார், தமிழகத்தில் இருந்து ஒரு ஆன்மீக ஒளி எழுந்து வரகண்டேன் என்றார், அதன் பின்பே ரமணரால் திருவண்ணாமலை மாபெரும் எழுச்சி பெற்றது, காஞ்சி பெரியவரும் இன்னும் பலமகான்களும் உருவாகி வந்தார்கள், அதை முன்னறிவித்தவர் சுவாமி

    ஆண்மீக தலங்கள் நிரம்பிய தமிழகத்திற்கும் அவருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

    இந்தியா சுற்றிய அவருக்கு தமிழகம் பிடித்தமான இடம், சென்னை வந்தார், அவர் தங்கிய இடம் இன்றும் விவேகானந்தர் இல்லம் என அழைக்கபடுகின்றது, மொத்த இந்தியர்களுக்கும் தெரியாத அவர் பெருமை, தமிழகத்து சேதுபதி அரசனுக்கு தெரிந்தது, சேதுபதி மன்னர் மட்டும்தான் அவர் சிகாகோ செல்ல பணவுதவியும் செய்தார்,

    அதன் நன்றிகடனாகத்தான் அந்த மாபெரும் சொற்பொழிவினை நிகழ்த்தியபின் அவர் முதலில் இலங்கை வழியாக தமிழகம்தான் வந்தார்.

    அவருக்கு வரவேற்பு கொடுத்த இடத்தில் இன்றும் நினைவுத்தூண் பாம்பனில் உண்டு.

    குமரி விவேகானந்தர்பாறை அறிவாதவர் யாருமில்லை, அதுவும் அவர் கால்பட்ட புனிதபாறை,இவ்வாறாக‌ தமிழகத்தில் அம்மகானுக்கு அழியாத நினைவுசின்னம் உண்டு. குமரியில் விவேகானந்தர் நினைவு இல்லம் அமைக்க ஆயிரம் காரணம் உண்டு, அதில் அரசியல் சர்ச்சைகளும் உண்டு.

    விவேகானந்தரின் பெயர் எக்காலமும் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு எரிச்சலை கொடுக்கும் என்பதால் கன்னியாகுமரி பாறை சேவியர் பாறை என சிலுவை நட்டு அட்டகாசம் செய்தார்கள்
    கொஞ்சம் அசந்தாலும் பாபர் மசூதி அளவிற்கு பற்றி எரியும் பிரச்சினைதான்.

    பக்தவக்சலம் போன்ற உண்மை அரசியல்வாதியும், ஏக்நாத் ராணடே போன்ற உண்மையான தேசபக்தர்களும் இருந்ததால் பிரச்சினை மகா சுமூகமானது, அல்லாவிட்டால் நிச்சயம் அது பெரும் கலவரமாக வெடித்திருக்கும்.

    அந்த அளவு இந்துவிரோத சக்திகளுக்கு விவேகானந்தர் பெரும் பயத்தையும் அச்சத்தையும் என்றும் கொடுத்து கொண்டிருக்கின்றார்

    (பின்னாளில் அப்பக்கம் இதை மனதில் வைத்தே வஞ்சகமாக நிறுவபட்டதுதான் திருவள்ளுவர் சிலை என்பது வேறு விஷயம்)

    அந்த பாம்பன் தூணும் மகா பெரிய வரலாற்றை கொண்டது, ஆனால் அதனை சொல்ல கூட யாருமில்லை. நிச்சயம் அந்த இடமும் மகா வரலாற்று சிறப்பானது. அந்த ஞானமகன் சிகோகோ வெற்றி உரை ஆற்றிவிட்டு இத்திருநாட்ட்டில் கால்பதித்த முதல் இடம்.

    தமிழகம் நாசமாய் போன தலைவிதி ஈரோட்டில் எழுந்ததென்றால் தமிழகத்தில் தேசியமும் தெய்வீகமும் கன்னியாகுமரி பக்கம் இருந்தே எழும்பின, அய்யா வைகுண்டர் முதல் பலர் வந்தார்கள்

    அவர் கால்பட்ட புதுகோட்டை ராமநாதபுரம் பக்கம் இருந்துதான் தேவர் பெருமகனும் வந்தார்

    இதெல்லாம் ஆழ நோக்க வேண்டிய விஷயங்கள், விவேகானந்தர் இங்கு குறிப்பால் பல விஷயங்களை உணர்த்தித்தான் சென்றார்.

    விவேகானந்தர் காட்டிய வழியில் இந்தியா தன் பொற்காலத்தை மீட்டெடுத்து கொண்டிருக்கின்றது, இனி பாரதம் உச்சம் பெறும்

    ஒருவேளை காலவோட்டத்தில் இந்தியா சறுக்கினால் மறுபடியும் அந்த “நரேந்திரர்” மறுபடியும் வந்து இந்தியாவினை காத்து கொண்டே இருப்பார்

    பாரதத்தின் பெரும் ஞான துறவியும் , இந்திய விடுதலையினை ஆன்மீக வழியில் இந்திய சுதந்திரம் சாத்தியம், அதன் கலாச்சார மீட்டெடுப்பு சாத்தியம், அதன் புனிதமான மதம் சாத்தியம் என நிரூபித்த அந்த மாபெரும் ஞானிக்கு ஞான அஞ்சலிகள்.

    அந்த மகான் இந்தியாவின் “ஞான தந்தை”

    “இங்குள்ள சிக்கலுக்கெல்லாம் காரணம் இந்துமதம் அல்ல, அதை தவறாக புரிந்து கொண்டதே. அம்மத்தின் உண்மையான தத்த்துவத்தை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். யாருக்கெல்லாம் அது விளங்கவில்லையோ அதை நாம் விளக்க வேண்டும்

    இந்துமதத்தின் அருமையும் பெருமையும் அது சொல்லும் வாழ்வியல் முறையினையும் மனபூர்வமாக ஒவ்வொரு இந்தியனும் புரிந்து கொள்ளும்நாளில் பாரத ஆத்மாவினை அவன் உணர்வான், எல்லோரும் அப்படி உணரும் பட்சத்தில் இத்தேசம் மிகபெரும் மேன்மைபெற்று உலகை ஆளும்”

    இதுதான் விவகானந்தர் சொன்ன முத்தாய்ப்பான வரி, ஒவ்வொரு இந்துவும் செய்யவேண்டிய காரியம் இதுதான்
    இந்துமதம் எந்த சிக்கலுக்கும் காரணம் அல்ல, அது தவறாக புரிந்து கொள்ளபட்டதும் அதை பலர் திரித்து சொன்னதுமே சிக்கலுக்கெல்லாம் காரணம், அதை சரிசெய்து இந்துமத மேன்மையினை எல்லோருக்கும் எடுத்து சொல்ல ஒவ்வொரு இந்துவும் உறுதி ஏற்க வேண்டிய நாளிது

    “இங்கு புதிய சிந்தனைகள் நாகரீகமாகவு கண்ணியமாகவும் உருவாக வேண்டும் என்பதே நம் தர்மம் வலியுறுத்தும் விஷயம், இந்தியாவின் புதியசிந்தனைகள் அந்த அடிப்படையில் உருவாக வேண்டும்

    இந்தியா எக்காலமும் வெளிநாட்டை நம்பிருக்க முடியாது, அது சரியானது அல்ல. இங்கு வெற்றிகள் ஒரே நாளில் வராது வெற்றி வரும் வரை காத்திருங்கள், உழையுங்கள்

    தைரியமாக முன்னேறுங்கள், உயர்ந்த கொள்கையும் நம்பிக்கையும் வைத்திருங்கள். திடம் கொள்ளுங்கள் பொறாமையும் சுயநலமும் உங்களிடமிருந்து அகலட்டும், தேசத்தின்பால் அதன் உண்மைக்கும் சத்தியத்துக்கும் கீழ்படிந்திருங்கள் அது தேசத்தை பாரினில் உயர்த்தும் தேசம் முன்னேறும்”

    எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்? அந்த ஞானமகனை தவிர யாருக்கு இவை சாத்தியம்?

    விவேகானந்தர் எக்காலமும் இங்கு பாரத பெருமையினை காத்து கொண்டே இருப்பார், அந்த ஞானமகனின் நினைவுநாளில் தேசம் கம்பீரமாய் அவரை வணங்குகின்றது

    இந்த “ஞானபாரத சிற்பி” அப்பெருமகனே,ஆயிரம் ஆண்டு கழித்து இந்துமதம் ஒளிவீசி துலங்க பெரும் காரணம் அந்த ஞானதிருமகனே

    அவரால் உந்தபட்ட தேசாபிமானிகள் கண்ட இயக்கமே இன்று அவர் கனவுகண்ட இந்தியாவினை உருவாக்கி கொண்டிருக்கின்றது

    அந்த அவதாரத்தை நன்றி கண்ணீரோடு வணங்கி அவர் நினைவு நாளில் இந்துமதத்தாலும் அதன் உயரிய சிந்தனையாலும் நாட்டை காப்போம் நாட்டோடு மதத்தையும் காப்போம் என அவர் வழியில் பாடுபட உறுதியேற்கின்றது இந்துஸ்தானம்

  3. இன்றைய உலகின் நம்பர் 1 வல்லரசு நிச்சயம் அமெரிக்கா, அதில் எவ்வித சந்தேகமும் இல்லை, மிக பெரும் வல்லரசாக அது தன் கொடியினை உயர பறக்கவிட்டு கொண்டே இருக்கின்றது, அதன் செங்கோல் உலகை ஆளத்தான் செய்கின்றது

    இன்று (அமெரிக்காவில் ஜூலை 4) அவர்கள் சுதந்திர நாள், இன்றே கொண்டாட்டம் தொடங்கியாயிற்று

    செவ்விந்தியர், மாயர், இன்கா என பல பழங்குடிகள் வாழ்ந்திருந்தாலும், வைகிங் போன்ற நாடோடிகள் வசித்திருந்தாலும் அதன் நவீன வரலாறு கொலம்பஸும், அமெரிக்கோ வெஸ்புகியும் கால் வைத்த காலங்களுக்கு பின் தொடங்கின‌

    ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ் என எல்லா நாடுகளும் அங்கு காலணி அமைத்தன. போர்சுக்கல்லுக்கும் ஸ்பெயினுக்குமான சண்டையில் போப்பாண்டவர் கிழக்காசியா போர்த்துகீசியருக்கு, அமெரிக்கா ஸ்பெயினுக்கு என தீர்ப்பிட்ட பின் போர்ச்சுகல் ஒதுங்கியது

    தென் அமெரிக்கா ஸ்பெயின் கட்டுபாட்டில் வந்தது, வட அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸிடம் விழுந்தது

    வட அமெரிக்காவில் 13 இடங்களில் பிரிட்டன் குடியேற்றம் இருந்தது, பிரான்ஸ் குடியேற்றமும் இருந்தது

    ஐரோப்பாவில் இருந்த, இந்தியாவில் இருந்த பிரென்ஞ் பிரிட்டன் மோதல் அங்கும் இருந்தது

    பிரிட்டானியர் எங்கு சென்றாலும் அந்நாட்டின் வளங்களை லண்டனில் குவிப்பார்கள், அப்படி அமெரிக்காவிலும் வரி விதித்தார்கள், ஆனால் அமெரிக்க குடியேற்றம் அதனை எதிர்த்தது, இங்கே செய்யவேண்டிய வசதிகள் ஆயிரம் இருக்க லண்டனுக்கு ஏன் வரி என முணுமுணுத்தன‌

    கலவரம் வெடித்தது, பிண்ணணியில் பிரான்ஸ் இருந்தது, 13 குடியேற்றங்களும் போராடின, பாஸ்டன் கலவரம் எல்லாம் ந்டந்து தாங்கள் விடுதலை பெற்றதாக அறிவித்தன‌

    அதன் பின் பிரான்ஸ் தன் பகுதிகளை அவர்களுக்கே விட்டு கொடுத்தது, அமெரிக்கா சுதந்திர நாடாக வளர ஆரம்பித்து பின் 50 மாநிலங்களோடு பெரும் நாடாயிற்று

    அந்நாடு வளர ஏகபட்ட காரணம் உண்டு, முதலாவது குழப்பமான ஐரோப்பிய போர்களில் வெறுப்புற்ற மக்கள் அங்கு குடியேறினர், அமெரிக்கா மிக பெரிய நாடு மற்றும் எல்லா வளமும் கொண்ட நாடு, பெட்ரோல் உட்பட அங்கு கொட்டி கிடந்தது

    வியாபாரம் செய்ய எல்லா வழிகளையும் அதி திறந்துவிட்டது, அந்த பணத்தில் உலகின் எதனையும் அவர்களால் வாங்க முடிந்தது, அபார மூளைகள் உட்பட‌

    ஐரோப்பிய நாடுகள் எல்லாம் மன்னராட்சியில் சிக்கி கிடக்க, அமெரிக்கா மக்களாட்சியில் ஜன்நாயக முறையில் வளர்ந்ததால் மக்களின் விருப்ப தேசமானது

    அடிமை முறையினை ஒழித்தது, சுதந்திரமான மக்கள் வாழ்க்கையினை கொடுத்தது, பிரிட்டனிடமிருந்து மீண்டபின் செழித்த வருமானத்தில் எழும்பியது

    கருப்பர் கலவரம், இனவெறி என ஏகபட்ட சர்ச்சைகளை கடந்து அத்தேசம் வளர்ந்தத்து, கனடா, ஆஸ்திரேலியா போல இருந்த நாடுதான் ஆனால் இரு பெரும் உலக போர்கள் அதனை உலக வல்லரசு நிலையினை அடைய வைத்தன‌

    அமெரிக்க சுதந்திரம் உலகில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியது, அதன் பின்புதான் உலகில் மக்களாட்சி சாத்தியம் என்றொரு நம்பிக்கையே வந்தது, பின்னாளில் பல நாடுகளில் மக்களாட்சி மலர இதுதான் காரணம்

    அவ்வகையில் இன்றைய நாள் வரலாற்றில் குறிப்பிடதக்கது

    பிரான்ஸ் அவர்களின் நட்புக்காக, சுதந்திர தேவி சிலையினையினையும் கொடுத்தது, அச்சிலை அமெரிக்காவிற்காக செய்யபட்டதல்ல, எகிப்து பக்கம் சூயஸ் கால்வாய் ஓரம், பிரென்ஞ் வல்லமையினை காட்ட ஒரு கலங்கரை விளக்கம் போல செய்யபட்ட சிலை, ரோம கடவுளை பிரதிநிதித்த சிலை அது

    ஆனால் சூயஸ் எங்கள் சொத்து என அந்நாளைய பிரிட்டன் மல்லுகட்டியதில் அது நிறுவபடாமல் போக, வெறுப்புற்ற பிரான்ஸ் அதனை அமெரிக்காவிற்கே வழங்கியது அது அமெரிக்க சுதந்திர தேவி சிலையானது

    அமெரிக்க சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் கழித்தே அது அமெரிக்க சுதந்திர தேவி சிலையான கதை இப்படித்தன்

    இன்று எல்லா வளர்ச்சியிலும் உச்சத்தில் இருந்து உலகை ஆட்டி வைக்கும் சக்தி அவர்கள்தான், சந்தேகமில்லை

    நாங்கள் ஜனநாயகத்தில் உயர்ந்தவர்கள் என அந்த சிலையினை காட்டி , இது சுதந்திர தேவி சிலை என பெருமைபடுகின்றது அமெரிக்கா

    ஆனால் மற்ற நாடுகளின் சுதந்திரத்தை அது அங்கீகரிக்கின்றதா என்றால் இல்லை

    போராடி சுதந்திரம் வாங்கிய நாடு, உலகிற்கே சுதந்திரத்தின் மகிமையினை சொன்ன நாடு, இன்று எத்தனை தேசங்களின் விடுதலையினை மறுக்கின்றது என்றால் அதுதான் அரசியல்

    இந்த சுதந்திர தேவியின் சிலையினை கொண்டாடிகொண்டா எங்களை போன்ற சுதந்திர வீரர்களை அடக்குகின்றீர்கள், இது எப்படி நியாயம் என கேட்ட வியட்நாமிய மாவீரன் ஹோ சி மின்னின் கேள்விகளில் எந்நாளும் நியாயம் உண்டு

    அதே கேள்வியினை சதாம் உசேன், கோமேனி, கடாபி, அராபத், காஸ்ட்ரோ, சே குவேரா என பலர் கேட்டுகொண்டே இருந்தனர்

    அமெரிக்காவின் அந்த விசித்திர அணுகுமுறைக்கு சான்றாக அந்த சுதந்திர தேவி சிலை புன்னைக்கின்றது

    இதனை அமெரிக்கர்கள் உணரும் நாளில் அவர்கள் சுதந்திர தின கொண்டாட்டம் அர்த்தமுள்ளதாகும், ஆனால் அவர்களின் இலக்கு, தொழில், ஆளுமை எல்லாம் வேறுமாதிரியனவை

    இதுபற்றி எல்லாம் சிந்திக்க மாட்டார்கள் அதனால் அவர்கள் சுதந்திர தினத்தில் ஒரு அர்த்தமுமில்ல்லை

    சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டன் சாம்ராஜ்யத்தின் அடுத்த வாரிசு அவர்கள் ஆனால் மக்களாட்சி போர்வையில் ஒளிந்திருக்கின்றார்கள் என்பதை தவிர ஒன்றும் சொல்லமுடியாது

    ஆனால் காலம் அவர்கள் பக்கம் இருக்கின்றது, உலகை அவர்கள்தான் ஆள்கின்றார்கள்

    இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பெரும் வரலாற்று தொடர்பு உண்டு

    அமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டன் புரட்சிபடையின் தளபதியாகி பிரிட்டிசாரை ஓட அடித்தபொழுது இந்தியாவில் மொகலாயருக்கும் மராட்டிய சிவாஜி வம்ச அரசுக்கும் பெரும் போர் நடந்துகொண்டிருந்தது

    சிவாஜி வீழ்ந்தாலும் அவன் மருமகளும் அவ்வழி பெண்கள் கூட விடாமல் அடித்தார்கள், சீக்கியர்கள் பெரும் சக்தியாய் எழுந்து பஞ்சாபிய எல்லையில் ஆப்கானியருக்கு சீல் வைத்து காவல் இருந்தார்கள்

    இந்தியா எங்கும் குழப்பமும் சண்டையும் நடந்தன, டெல்லி ஆடியநேரம் நாடெங்கும் தனி குட்டி குட்டி சமஸ்தானங்கள் முளைத்தன‌

    அப்படி உருவான ஆற்காடு நவாபின் குடும்ப சண்டையில் நுழைந்து பின் மெல்ல மெல்ல ஆங்கில ஆட்சிக்கு அடிகோலினான் ராபர்ட் கிளைவ்

    பிரிட்டிஷ் மக்கள் கனவிலும் நினையாத விஷயமான இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி என்பதை அவன் சாத்தியமாக்கினான், அவனும் அவன் கோஷ்டியும் அடித்த கொள்ளை அப்படி

    வரலாற்றில் கஜினியும் மாலிக்காபூரும் மட்டும் கொள்ளையர் அல்ல, அவர்களை விட அதிக கொள்ளையினை உண்மையில் கிளைவ்தான் செய்தான்

    அதுவும் இந்திய தானியங்களை கடத்திவிற்று வங்கத்தை பட்டினிபோட்டு வதைத்த வகையில் கிளைவ் பெரும் குற்றவாளி

    அவன் பெரும் ஊழல் வழக்கில் சிக்கி லண்டனில் இருந்த நேரம் அவன் மேல் பெரும் விசாரணை நடந்தது, ஆனால் பிரிட்டிஷ் ராணுவம் கிளைவை அமெரிக்காவுக்கு அனுப்பி புரட்சியினை ஒடுக்க யோசனை செய்தது

    அது நடந்திருந்தால் அமெரிக்கா விடுதலை இல்லை இந்தியாவிலும் காட்சிமாறி இருக்கலாம்

    யாரும் எதிர்பாராவிதமாக கிளைவ் தற்கொலை செய்ய அமெரிக்கா தப்பித்தது, அதன் பின் வெள்ளையன் கவனமெல்லாம் இந்தியாவினை சுரண்டுவதில் இருந்தது 1947 வரை சுரண்டினார்கள்

    அமெரிக்கா மேல் உயர உயர இந்தியா மோசமாக சுரண்டபட்டது

    இரு உலகபோர்களில் கால்பதித்த அமெரிக்கா இன்று ஒற்றை சக்தியாய் உலகை ஆண்டு கொண்டிருக்கின்றது

    எல்லா நாடும் ஒரு காலம் எழும் ஒரு காலம் வீழும், இது உலக‌ இயல்பு. அப்படி இது அமெரிக்கா ஆடும் காலம், ஆடட்டும்

    எப்படியாயினும் அவர்கள் சுதந்திர நாள், மன்னர் இல்லாமல் ஒரு நாடு சாத்தியம் என வரலாற்றை திருப்பி கொடுத்த நாள், அதனால் அவர்களுக்கு சுதந்திர வாழ்த்தை மகிழ்வோடு சொல்லிகொள்ளலாம்

  4. இந்தியாவின் பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் எப்பொழுதும் ரஷ்ய அனுதாபத்தை காணமுடியும், ஏன் அப்படி ஒரு பிம்பம் உருவாக்கபட்டதென்றால் வரலாற்றில் நிழந்துவிட்ட பெரும் தவறு அப்படி, காங்கிரஸும் கம்யூனிஸ்டுகளும் செய்த அழிச்சாட்டியம் அப்படியானது

    இந்தியா 1947ல் சுதந்திரம் வாங்கும் முன்பே சோவியத் யூனியன் ஆப்கன் எல்லையினை ஒட்டி காரகோரம் மலைதொடரை ஒட்டி கால் வைத்து அரக்கனாய் நின்றது, அப்பக்கம் சீனா இன்னொரு கம்யூனிச தேசமாக உருவாகி நின்றது ஆனால் அது ஏழை சீனா

    இந்த இரு கம்யூனிஸ்டு நாடுகளும் இந்தியா அதுவும் தொழிலாளர் நிரம்பிய இந்தியா கம்யூனிச தேசமாய் மலரும் என நம்பிகொண்டிருந்தார்கள், அவர்கள் கனவு அப்படி இருந்தது

    இந்தியாவினை இப்படியே விட்டு சென்றால் இந்தியாவுக்கும் சோவியத்துக்கும், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் கால்வைக்க ஒரு இடமில்லாமல் போகும் என அஞ்சிய வெள்ளையன் சோவியத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒரு நாடு தனக்காக அமைய வேண்டும் என விரும்பினான்

    அன்று சீனா திபெத்தை விழுங்கவில்லை என்றாலும் சீனாவின் கட்டுபாட்டு நாடாகவே இருந்தது

    இப்படி இரு முனையிலும் சரியாக இரு பாகிஸ்தானை உருவாக்கி தான் கால்வைக்க ஒரு இடமுமாயிற்று இந்தியா உருப்படாமல் போக வழியுமாயிற்று என கிளம்பினான்

    1950களில் கம்யூனிசம் இங்கு வளரும் என கனவுகண்ட சோவியத்தின் ஆசை வீணாயிற்று, இவ்வளவுக்கும் இஸ்லாமியர் தனிநாடாக பிரிந்தபின்னும் இந்துநாடு எனும் கோஷம் பெரும் அளவில் இல்லை அதெல்லாம் கம்யூனிசமாக மாறும் என நம்பிய கணக்கு பொய்யாயிற்று

    ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் ஒரு ஆன்மீகவாதி ஏதோ ஒருமதவடிவில் இருக்கின்றான், அவன் மனம் தெய்வம் இல்லை என வாக்குக்கு சொல்லுமே தவிர மனதறிந்து சொல்லாது. அப்படிபட்ட இந்தியா சோவியத் போல நாத்திக நாடாக திரும்பவே இல்லை

    எவ்வளவோ தொழிற்சங்கம், தினகூலி, அன்றாட காய்ச்சிகள் என மிகுந்திருந்தும் கம்யூனிச புரட்சி வரவில்லை, வங்கமும் கேரளமும் கம்யூனிஸ்ட் தாக்கம் இருந்தாலும் அவன் காளிபக்தனாகவும் குருபாயூரப்பன் பக்தனாகவுமே இருந்தான்

    இந்த ஏமாற்றத்தை சோவியத் குறித்துகொண்டது, சீனாவும் குறித்து கொண்டது

    அன்று சுமார் 50 கோடி மக்களுடன் ஜனநாயக நாடாக இருந்த இந்தியாமேல் அமெரிக்காவுக்கு ஒரு அபிமானம் இருந்தது

    ஆனால் நாங்கள் அணிசேரமாட்டோம் என அறிவித்த நேரு சீனாவுக்கு மட்டும் ஐநாவில் நிரந்தர உறுப்பு அந்தஸ்து வாங்கிகொடுத்தார், ரஷ்ய கருவிகள் வேண்டுமென்றார் இன்னும் என்னவெல்லாமோ செய்து குழப்பினார்

    அதாவது அமெரிக்க அணி ரஷ்ய அணியில் இந்தியா இல்லை ஆனால் எல்லா அணியிலும் உண்டு என குழப்பி அடித்தார்

    அரபு கூட்டணி, ஆப்ரிக்க கூட்டணி, நேட்டோ அணி, ஆசியான், சீன ரஷ்ய கூட்டணி என ஒவ்வொரு நாடும் கூட்டணி தேடியபொழுது நேரு எல்லா கூட்டணியிலும் இருந்தார் அல்லது இல்லை

    இதனால் வெறுப்புற்ற அமெரிக்கா பாகிஸ்தானை தன் நட்புநாடாக அறிவித்து சோவியத்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் கால் வைத்தது, உடனே ஆப்கனில் தன் இடதுகாலை வைக்க விரும்பியது ரஷ்யா

    இதனால் காஷ்மீர் பெரும் சர்ச்சையானது, நேரு முதலில் ஐ.நா சபையில் வாக்கெடுப்பு ஒருங்கிணைந்த காஷ்மீர் என்றெல்லாம் பிதற்றிய நேரு பின் சத்தமில்லாமல் மவுனித்தார், காஷ்மீர் மன்னரே முழு காஷ்மீரை ஒப்ப்டைத்தபின் ஏன் வாக்கெடுப்பு என்ற கேள்விக்கு நேருவின் குழப்பமே பதிலாயிற்று

    1959ல் திபெத்தை சீனா முழுக்கபிடித்ததும் இந்தியசீன முறுகல் தொடங்கியது, அக்சாய் சின் பகுதியினை சீனா பிடித்தது, சீனாவின் கூட்டணிபடி அவர்களை தொட்டால் வடகொரியா, கியூபா, ரஷ்யா என பல நாடுகள் வரும்

    ஆனால் இந்தியாவினை தொட்டால் சோமாலியா கூட வராது ஏனென்றால் இந்தியா “அணிசேரா” நாடு, சரி அணிசேரா நாடுகள் என சொல்லபட்ட நேருவின் கூட்டணியின் யுகோஸ்லேவியா, இந்தோனேஷுயா போன்றவையாவது இந்தியாவுக்கு ஆதரவுக்கு தெரிவிக்க வேண்டும் அல்லவா?

    அவைகளும் வரவில்லை, காரணம் அதுதான் அணிசேரா கொள்கை, அணிசேரா இந்தியா அடிபட்டாலும் அந்த அணிசேரா நாடுகள் அணிசேராது

    அப்படிபட்ட கணக்கில்தான் இந்தியாவினை போட்டு அடித்தது சீனா, இந்தியா கதறி அழும்பொழுது சோவியத்தின் உண்மை முகம் தெரிந்தது

    சோவியத் நினைத்தால் நொடியில் யுத்தம் நிறுத்தியிருக்கலாம் அல்லது இந்தியாவுக்கு ஆயுதம் அள்ளி கொடுத்திருக்கலாம் இரண்டும் செய்யாமல் மவுனம் காத்து சீனாவினைத்தான் ஆதரித்தது அந்த நாடு

    அந்நேரம் நேரு அமெரிக்க கென்னடியிடமே சரணடைந்தார், அமெரிக்கா பல ஆயுதமும் உதவியும் செய்தது அமெரிக்கா உதவி கிடைத்த பின்பே இருமணி நேரத்தில் டெல்லியினை பிடிப்போம் என்ற சீனாவின் முழக்கம் அடங்கி அந்த போரை சீனா நிறுத்தியது

    ஆம், 1962ல் இந்தியாவினை காத்தது அமெரிக்காதான்

    அந்த நேரம் அமெரிக்க ஆயுதமும் கருவியும் இந்தியாவுக்கு நிரம்ப கிடைத்தன, அதை கொண்டுதான் 1965ல் அடுத்த மூன்றாண்டுகளில் நடந்த இந்தியா பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானை பந்தாடினார் சாஸ்திரி, பாகிஸ்தானை முழங்காலில் நிறுத்தி காஷ்மீர் முழுக்க மீட்க முயன்றபொழுது ரஷ்யா நுழைந்தது

    கவனியுங்கள், இந்தியா சீனா மோதியபொழுது மவுனம் காத்த ரஷ்யா காஷ்மீர் இந்தியாவுக்கு சென்றுவிடும் என தெரிந்ததும் களமிறங்கி தாஷ்கண்டுக்கு சாஸ்திரியினை அழைத்தது, சாஸ்திரி பிணமாக திரும்பினார் காஷ்மீர் சிக்கல் நீடித்தது

    சாஸ்திரிக்கு அடுத்துவந்த இந்திரா இரும்புபெண் என்றாலும் சசிகலாவுக்கு அஞ்சிய ஜெயாபோல் ரஷ்யாவுக்கு மிக அஞ்சினார், அதனால் ரஷ்யா தன் கழிவு ஆயுதெமெலாம் விற்றது தன் அணுவுலைகளை விற்றது இந்தியாவை தன் ஆயுத அடிமையாக்கியது அந்நாடு

    இந்நிலையில்தான் பாகிஸ்தானை பிளக்க முடிவெடுத்தார் இந்திரா, அதற்கு பல காரணம் இருந்தது சந்தடி சாக்கில் பெரும் தொகைக்கு ஆயுதம் விற்றது ரஷ்யா

    அந்த போரில் இந்தியா வெற்றிமுகம் காட்டியது ஆனால் டாக்காவினை முற்றுகையிட முடியவில்லை, அந்நேரம் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கொடுத்த ஹாஜி நீர்மூழ்கி கப்பல் இந்தியாவினை மிரட்டியது, அதை தேடி தேடி பின் வலைவிரித்து வரவைத்து விசாகபட்டினம் பக்கம் போட்டு தள்ளியபின் அமெரிக்கா களமிறங்கியது

    வழக்கம் போல கிழக்கு பாகிஸ்தானில் மனுகுல நெருக்கடி, ஐநா படை களமிறங்கவேண்டும் என வாசிக்க தொடங்கியது, இந்தியா இனி அவகாசமில்லை என அந்த சாகசத்தை செய்தது

    இந்திய யூத தளபதி ஜேக்கப் அமெரிக்கா என்ன யாருமே எதிர்பாரா விதமாக வங்கதேச ஆறுகளில் படகில் டாங்கிகளை ஏற்றிசென்று இரவோடு இரவாக 1 லட்சம் பாகிஸ்தானியரை முற்றுகையிட்டார்

    அதன்பின் அமெரிக்கா தாங்கள் வருவதாக சொன்னது, இங்குதான் சீனாவுக்கு நெஞ்சடைத்தது

    ஆம் இன்றைய பங்க்ளாதேசில் அன்று அமெரிக்கா கால்வைத்திருந்தால் வைத்ததுதான் கால் வைத்தபின் திரும்பும் வழக்கமெல்லாம் அவர்களுக்கு ஒரு காலமும் இல்லை

    அப்படி அமெரிக்க முகாம் வந்தால் சீனாவுக்கு ஆபத்து தனக்கும் ஆபத்து என கருதிய ரஷ்யா தானும் களத்தில் குதிப்பதாக அறிவித்தது அமெரிக்கா திரும்பிற்று

    கவனியுங்கள், இப்பொழுதும் சீனாவை காக்கத்தான் அந்நாடு வந்தது

    இப்படி திரும்பும் பக்கமெல்லாம் சீனாவினை காத்து காஷ்மீரில் சீனாவுக்கும் உரிமை உண்டு என சொல்லி இந்தியாவை தன் அடிமையாக ரஷ்யா வைத்திருந்தது

    ஆனால் தன் அடிமை கம்யூனிஸ்டுகள், தொழிற்சங்கம், பொதுவுடமை எழுத்தாளர், முற்போக்கு சங்கம், மத நல்லிணக்கம், மனித்நேயம் என பல முகமூடிகளை போட்டு இந்தியாவுக்கு ரஷ்யா நட்பு நாடு என பிம்பத்தை வளர்த்தது

    அது இன்றுவரை நீடிக்கின்றது

    1974ல் இந்திரா வெடித்த அணுகுண்டு இந்தியாவின் தயாரிப்பு என்றாலும் ரஷ்ய உதவி உண்டு, 1972ல் ரஷ்யாவுக்கு அஞ்சி காஷ்மீரை கைவிட்டு முழுக்க ரஷ்ய அடிமையான இந்திராவுக்கு செய்த நன்றி அது

    பின் ரஷ்யா உடைந்து அமெரிக்கா ஏகபோக வல்லரசானாலும் இந்திய ஆயுத சந்தையினை ரஷ்யா வைத்திருந்தது, காரணம் புதிதாக ஆயுதம் வாங்குவதை விர இருப்பதை பராமரிப்பது நல்லது என்பது காங்கிரஸ் கருத்து அதற்கு ரஷ்ய ஆயுதங்களை மேம்படுத்துவது என அங்கே விழுந்தார்கள், கூடங்குளம் அணுவுலை போல பல ரஷ்யாவில் இருந்து வந்தன‌

    முதன் முதலில் ரஷ்ய பிடியினை உடைக்க விரும்பியவர் வாஜ்பாய், அவர் ஆட்சியில் இந்தியா தன் சொந்த அணுகுண்டை வெடித்தது, மேற்கொண்டு பிரான்ஸின் விமானங்களும் இன்னும் பலவும் வாங்கபட்டன, வாஜ்பாய் புதிய வாசலை திறந்தார்

    அந்நேரம் ஒரிசா பாதிரி முதல் பாராளுமன்ற தாக்குதல்வரை அவர் சந்தித்த சிக்கல் கொஞ்சமல்ல, இன்னும் விமானகடத்தலெல்லாம் நடந்தது

    இப்படி வாஜ்பாய் பல சவால்களை கடந்துதான் ரஷ்ய பிடியில் இருந்து இந்தியா வெளியேற பிள்ளையார் சுழிபோட்டார்

    இன்று மோடி அதில் துணிந்து அடிக்கின்றார், அணிசேரா கொள்கையினை உடைத்து எந்த அணிக்கும் இந்தியா சேரும் என குவாட் அமைப்பில் இருக்கின்றார்

    ரஷ்யாவின் ஆயுத இறக்குமதியினை பன்மடங்கு குறைத்து, ரஷ்ய தயாரிப்பும் இந்தியாவில் நடக்க வழிசெய்தார், இதுபோக இன்று மேலைநாட்டு உறவில் பல உதவிகள் கிடைக்கின்றன‌

    இப்பொழுது உக்ரைன் ரஷ்ய மோதலில் சீனா ரஷ்யாவின் 70 ஆண்டு உறவு பகிரங்கமாக தெரிகின்றது இருவரும் கூட்டாளியாகி நிற்கின்றார்கள்

    இந்த உருப்படாத கூட்டணியில் இந்தியா இருந்திருந்தால் சீனா மிரட்டும் அதைகாட்டி ரஷ்யா ஆயுதம் தரும், சீனா மிரட்டி கொண்டே இருக்கும் ரஷ்யா பணம் பெற்று ஆயுதம் தந்துகொண்டே இருக்கும்

    ஆனால் சீனாவும் ரஷ்யாவும் பெரும் கூட்டாளிகள்

    எப்படி இந்தியாவினை முழு பைத்தியமாக அடிமையாக மாற்றி வைத்திருந்தார்கள் என்றால் இப்படித்தான்

    மோடி இதை உடைத்தார், அதற்காக முழு அமெரிக்க அடிமையாகவும் அவர் மாறவில்லை நாட்டுக்கு அவசியமாக அமெரிக்க உதவி அப்படியே ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் எண்ணெய் என எது வேண்டுமோ அதை வாங்குகின்றார்

    உங்களில் எத்தனைபேர் நம்புவீர்களோ தெரியாது, இந்திரா காலத்தில் சாலைகளில் பணி அகற்றும் வாகனம் இந்திய தமிழகம் காஞ்சிபுரம் பக்கம் நின்றது ரஷ்ய தயாரிப்பு

    அந்த அளவு காயலான் கடை சரக்குகளையெல்லாம் நம் தலையில் கட்டி சம்பாதித்த நாடு அது, அந்நட்டிடம் பாதிவிலையில் அல்ல அதற்கு கீழ் விலையில் எண்ணெய் வாங்கினாலும் தகும் அவ்வளவு சுரண்டியிருக்கின்றார்கள்

    ஒரு காலமும் ரஷ்யா இந்தியாவின் ஆத்மார்த்தமான நண்பனாக இருந்ததே இல்லை, சீனா எனும் அவர்கள் மூலம் நம்மை அச்சுறுத்தி சீனாவுக்கும் அவர்களுக்கும் எது லாபமோ அதை செய்தார்கள்

    இப்பொழுது இந்தியா அந்த அணியில் இல்லை என்பதால் பாகிஸ்தானை தன் தோளில் இருந்து எறிந்துவிட்டது அமெரிக்கா, அதுவரை அவர்களை தாங்கிபிடித்த அமெரிக்கா இப்பொழுது கைவிட்டுவிட்டது

    வழக்கம் போல் இந்தியாவினை மிரட்ட பாகிஸ்தானுக்கு கைநீட்டியது ரஷ்யா, அமெரிக்காவிடம் மூட்டை மூட்டையாக வாங்கி பழக்கபட்ட பாகிஸ்தான் ரஷ்யாவின் வெற்றுகரங்களை பார்த்து முகத்தை திருப்பிகொண்டது வெறுவிஷயம்

    ஆக ரஷ்யா இந்தியாவின் நட்புநாடு, ஆபத்பாந்தவன் என்ற கருத்தெல்லாம் ரஷ்ய சீன கைகூலிகள் உருவாக்கியவை, அதை இன்னும் பேசிகொண்டிருப்பவன் ஒன்று அப்பாவியாக இருக்கவேண்டும் அல்லது அப்பட்டமான தேசவிரோதியாக இருத்தல் வேண்டும்

    மோடி ஒருவகையில் இப்பொழுது ஈரோட்டு ராம்சாமியின் வழியினைத்தான் பின் தொடர்கின்றார், ஈரோட்டு ராம்சாமி முன்பு ரஷ்யாவின் அனுதாபியாக இருந்தார், பொதுவுடமை அது இது என மிரட்டிகொண்டிருந்தார்

    வெள்ளையன் அவரை நோக்கி கொஞ்சம் முறைத்ததும் ராம்சாமி விவரமனார், சோவியத் ரஷ்யாவிடம் இருந்து எதை பெற வேண்டுமோ அதை மட்டும் பெற்றது எதை பெற கூடாதோ அதை கவனமாக விட்டுவிட்டார்

    அதாவது சோவியத்திடம் இருந்து நாத்திகத்தை கற்ற ராம்சாமி கவனமாக சிகப்பு சட்டை போடாமல் கருப்பு சட்டைக்கு வந்தார், சோவியத் போப்பாண்டவரை வைத்த இடத்தில் பிராமணனை வைத்தார்

    ரஷ்ய கம்யூனிஸ்டுகள் போப்பை வறுத்தெடுத்த கேள்விகளை எல்லாம் இந்துமதகேள்விகளாக்கி தன் அபார பகுத்தறிவை ஊருக்கு சொல்லிகொண்டார்

    அதே நேரம் பொதுவுடமை பற்றி ராம்சாமி பேசவே இல்லை, காரணம் அப்படி பேசினால் தன் கோடான கோடி சொத்துக்களை தோழர் அண்ணாதுரை, நிலமில்லா ஏழை கருணாநிதி போன்றோருக்கு பகிர்ந்து கொடுத்து சமத்துவ சமதரம் காக்க வேண்டி இருக்கும், இதனால் அவர்களை விரட்டி அடித்து தன் சொத்தெல்லாம் தன் வாரிசுக்கே என மணியம்மையினை கட்டி வாரிசு வளர்க்க முயற்சித்தார்

    இப்படி ரஷ்ய‌ பொதுவுடமையினை வசமாக மறந்துவிட்டு, அதாவது சோவியத் கொள்கையில் எது தனக்கு தேவையோ அதைமட்டும் எடுத்துகொண்டு புரட்சி செய்ததார் ராம்சாமி

    அவரால் விளைந்த ஒரே நன்மை கேரளம் போல கம்யூனிசம் இங்கு வளரவில்லை, அதை திராவிடம் என திசைமாற்றிவிட்டார்

    ரஷ்யாவிடம் இருந்து எது தேவையோ அதைமட்டும் எடுத்தால் போதும் இல்லாவிட்டால் உருப்படமுடியாது என முதலில் செய்துகாட்டியவர் அய்யா ஈரோட்டு ராம்சாமி, அதைத்தான் மோடியும் செய்கின்றார்

    இந்தியாவின் உண்மையான எதிரி சீனா, அந்த சீனாவுக்கு முழுபலமும் ரஷ்யா எனும் வகையில் ரஷ்யா எப்பொழுதும் இந்தியாவுக்கு ஆபத்தான நாடு அதனை கடந்தகாலமும் சொன்னது வருங்காலமும் சொல்லும்

  5. அமெரிக்காவில் நேற்று நடந்த சுதந்திர தினவிழாவிலும் துப்பாக்கி சூடு நடந்திருப்பது அந்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றது

    அமெரிக்க சட்டபடி எல்லா குடிமகனும் துப்பாக்கி வைத்திருக்க உரிமை உண்டு , காரணம் முன்பொரு காலம் துப்பாக்கி முனையில் ஆட்சியினை மாற்றி சுதந்திரம் பெற்றார்களாம், இதனால் எந்த கொடும் ஆட்சி வந்தாலும் மக்கள் ஆட்சிக்கு எதிராக போராட துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்ற வாதம் சட்டமாக உண்டு

    இது ஜனநாயக உரிமை என்பதால் எந்த அதிபராலும் கைவைக்க முடியவில்லை இதுபோக துப்பாக்கி தயாரிப்பு கம்பெனிகளின் ரகசிய அரசியலும் உண்டு

    இதனால் அமாவாசைக்கு அமாவாசை எவனாது மண்டை சூடாகி பலரை சுட்டுகொன்று கொண்டே இருந்தாலும் அரசால் நடவடிக்கை எடுக்கமுடியாது

    நேற்று சிகாகோவின் புறநகர் பகுதியில் சுதந்திர தின நிகழ்வு நடந்தபொழுது ஒருவனுக்கு சதுர்த்தியிலே மண்டை சூடாகி சுட்டுவிட்டதில் 5 பேர் இறந்திருக்கின்றனர், 20 பேர் காயமடைந்திருக்கின்றனர்

    அடிக்கடி நடக்கும் இந்த களபேரங்களிலும் கொடும் சாவிலும் கையினை பிசையும் அமெரிக்கா அடுத்து என்ன செய்ய என ஒவ்வொரு துப்பாக்கி சூட்டிலும் யோசிப்பது போல் இப்பொழுதும் யோசிக்கின்றது

    தமிழகத்தில் ஊழலை ஒழிப்பது போல் அது சுலபமுமில்லை

    இன்னொன்று இந்திய காவல்துறை குறிப்பாக தமிழக காவல்துறைக்கும் அவர்களுக்கும் வித்தியாசமும் உண்டு

    தமிழக காவல்துறை வெள்ளையன் கால தயாரிப்பு, இந்தியா எனும் அந்நிய மக்களை அடக்கி ஒடுக்கி வைக்க அவன் கடுமையான பயிற்சிகளை அளித்தான், சுதந்திரம் பெற்றபின்பும் அதே கடுமையுடனும் பயிற்சியுடனும் சொந்தநாட்டு மக்களை அது அணுகுவதுதான் பல சிக்கல்களுக்கு காரணம்

    வெள்ளையன் கால அந்நியவிரோத பயிற்சி எனும் அடிப்படையினை மாற்றி நம் மக்கள் எனும் அடிப்படையிலான பயிற்சித்தான் இங்கு பலனளிக்கும்

    அமெரிக்காவின் காவல்துறை அவர்கள் மக்கள் அவர்கள் என பயிற்றுவிக்கபட்ட அமைப்பு என்பதால் இம்மாதிரி விஷயங்களில் கடும் ஆதிக்கம் செலுத்தாது அவர்கள் மனநிலையும் ஜனநாயக சுதந்திரமுறையும் அதற்கு அனுமதிக்காது

    வழக்கம் போல் வார்த்தைகளை வீசிகொண்டிருக்கின்றார் அமெரிக்க அதிபர், அவரால் முடிந்தது அவ்வளவுதான்

  6. பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகின்றது, மக்களின் வாழ்வும் தொழிலும் கடுமையாக பாதிக்கபட்டுள்ளது கிட்டதட்ட இலங்கையின் நிலைதான் அங்கும் நிலவுகின்றது

    இந்நிலையில் அடுத்தவாரம் கொண்டாடபடும் பக்ரீத் எனும் தியாக பண்டிகைக்கு குர்பானி கொடுக்கவும் வழியின்றி மக்கள் தவிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன‌

    இஸ்லாமியரை வாழ்வாங்கு வைக்கபோகின்றோம் இந்துக்களுடன் இணைந்து இஸ்லாமியர் வாழமுடியாது என பிரிந்து சென்ற தேசத்தில் இஸ்லாமிய மக்கள் சிக்கலில் இருப்பதும், இந்தியாவின் இஸ்லாமியர் நல்ல மகிழ்ச்சியுடன் பக்ரீத் கொண்டாட தயாராவதும் சிந்திக்கவேண்டிய காட்சிகள்

    இந்தியா எனும் இந்து பெரும்பான்மை தேசம் அப்படி நல்வாழ்வினை தன் குடிமக்களான இஸ்லாமிய பெருமக்களுக்கு வழங்கியிருக்கின்றது, அவர்கள் பாதுகாப்பையும் உறுதி செய்திருக்கின்றது

    சில வாரங்களுக்கு முன் ஒரு சர்ச்சையில் இந்தியா மேல் பாய்ந்த இஸ்லாமியநாடுகள் இப்பொழுது சொந்த மத மக்களாகிய பாகிஸ்தான் இஸ்லாமியருக்கு அள்ளி கொடுத்து பக்ரீத் கொண்டாட உதவுமா என்றால் இல்லை

    அவர்கள் அப்படித்தான், எந்நாளும் வறிய நாட்டு இஸ்லாமிய மக்கள் பற்றி கவலைபட்டதே இல்லை

    அப்படியெல்லாம் அந்நாடுகள் சிந்தித்திருந்தால் பாலஸ்தீனம் என்றோ நிம்மதியோடு வாழதொடங்கியிருக்கும், அந்நாட்டு மக்கள் இவ்வளவு கண்ணீர்விட்டிருக்க மாட்டார்கள், மழையில்லா அப்பூமி ரத்தத்தாலும் கண்ணீராலும் நனைந்திருக்காது

    இப்பொழுதும் பாகிஸ்தான் அனுமதித்தால் பாகிஸ்தான் மக்கள் விழாகாலத்தில் மகிழ்ந்திருக்க எல்லா உதவிகளையும் இந்தியா செய்யத்தான் செய்யும், இந்நாட்டின் தர்மமும் தாத்பரியமும் அப்படி

  7. எந்த கலைஞனுக்கும் ஞானம் முக்கியம், ஞானமும் தெளிவும் கொண்ட கலைஞன் படைத்த எதுவாயினும் உலகில் அழியாமல் நிற்கும், காலம் காலமாக அந்த படைப்பும் நிற்கும் அவன் போதனையும் நிற்கும்

    ஞானமில்லாமல் தெளிவில்லாமல் குழம்பி தவித்து புரட்சி புண்ணாக்கு என்றோ, காலத்துக்கு ஏற்ப மாறி மாறி வந்த படைபுக்களோ உலகில் நில்லாது

    விஞ்ஞானம் அடிக்கடி மாறிகொண்டே இருக்கவும் ஒரு காலத்து விஞ்ஞானி மறுகாலத்தில் மறுக்கபடவும் ஞானமில்லா விஞ்ஞானமே காரணம், அரசர்கள் வரலாற்றில் காலமெல்லாம் சிலர் நிலைக்கவும் ஞானமே காரணம்

    வரலாற்றில் நிலைத்துவிட்டவரெல்லாம் ஞானம் நிரம்ப பெற்றவர் அன்றி வேறல்ல‌

    அறிவு என்பது தேடி தேடி பெறுவது, ஞானம் என்பது இயல்பில் வருவது. தேனி தேடி தேடி தேனை சேர்க்கலாம் ஆனால் மலரில்தான் தேன் இயல்பாய் ஊறும் தேனி அதை உருவாக்க முடியாது

    எழுத்தாளர்களிலும் இலக்கியவாதிகளிலும் இந்த ஞானம் கொண்டோர் வரலாற்றில் தனித்து நிற்பர் அவர்கள் காவியம் அழியாது, அவர்களும் அழியா புகழ்பெறுவார்கள்

    காளிதாசன், கம்பன், ஒளவை, வள்ளுவன் என பெரும் வரிசை இன்றும் என்றும் நிலைத்து நிற்க அந்த ஞானமே காரணம்

    ஞானமில்லா எழுத்து என்னாகும் என்பதற்கு தமிழக பாக்கெட் நாவல்களும் அனுதினமும் பிளாஸ்டிக் குப்பை போல் பெருகும் சிறுகதைகளும், பலபோக்கு கவிதைகளுமே சான்று

    இங்கு ரசனைமிக்க எழுத்தாளர்கள் உண்டு, ஜனரஞ்சக எழுத்தாளர்கள் உண்டு, வரலாறும் நாவலும் கொடுப்போர் உண்டு

    ஆனால் ஞானமிக்க எழுத்தாளர் மிக குறைவு, அந்த குறைவானவர்களில் முதலிடத்தில் இருப்பவர் அய்யன் பாலகுமாரன்

    ஜாணகிராமன் போல வெறும் பெண் உணர்ச்சி எழுத்தோ, சில வசனகர்த்தா போல சினிமா வசனகர்த்தாகவோ முடிந்திருக்க வேண்டிய வாழ்வு திருவண்ணாமலை ஞானியால் ஞானமாக மாற்றபட்டது

    தன்னை அறிதல் என்பது எல்லோருக்கும் வாய்க்காது அது பாலகுமாரனுக்கு வாய்த்தது முன் ஜென்ம வரம், அந்த வரத்தில்தான் தான் யாரென கண்டார், தன் கர்மா எதுவென கண்டார்

    பெரும் சிற்பியான தான் அம்மிகொத்துதலுக்கு சரியானவன் அல்ல என்பது புரிந்தது, தன் கர்ம வழியினை சரியாக உணர்ந்தார் அதிலிருந்து அவர் பாதை மாறிற்று

    உறுதியாக சொல்லலாம் அவருக்கு நாவல் எழுதும் அவசியமே அவருக்கு இல்லை, ஒரு படத்தின் பட்ஜெட் இத்தனை கோடி என்றால் ஒரு வசனகர்த்தா கதாசிரியரால் தனக்கு இத்தனை கோடி என எளிதாக கணக்கிட முடியும்

    அதுவும் பாலகுமாரனால் பல கோடிகளை கோர முடியும், நிச்சயம் சாதாரண எழுத்தாளனென்றால் அதைத்தான் செய்திருப்பான்

    ஆனால் பாலகுமாரனின் மனம் ஒரு கட்டத்தில் பணத்தில் நிறைவுற்றது, பணம் தன் வாழ்க்கையின் நோக்கத்துக்கு சுதர்மத்துக்கு தடை போடும் என உணர்ந்து சினிமாவினை சட்டென உதறினார்
    பட்டினத்தார் சித்தி அடைய கிளம்பியது போன்ற சாயல் இது

    அப்படி அதன் பின் ஞானமும் வரலாறும் ஆன்மீகமும் எழுதி அசத்தினார், மிக பெரிய தெளிவும் தத்துவம் போதனையும் அவர் எழுத்தில் மிகுந்திருந்தன.

    மனிதரிடம் கடைசி வரை அகங்காரமோ, ஆர்பாட்டமோ , கர்வமோ, எழுத்து சிம்மாசத்தின் உச்சியில் இருக்கின்றோம் எனும் மமதையும் கொஞ்சமுமில்லை

    அவர் எல்லோருக்கும் நண்பனாய் இருந்தார், கொடிய எதிரியும் அவரை பழித்துவிட முடியாது. பழித்தோரும் பின்னாளில் அவரிடமே சரணடைந்தனர்.

    அதுதான் ஒரு துறவியின் மனம், அதில் சரியாக இருந்தார் பாலகுமாரன்

    மகாபாரதத்தில் ஒரு காட்சி உண்டு, சும்மா அர்ஜூனனை போருக்கு அழைத்து செல்வான் கண்ணன், ஏகபட்ட போர்கள் நடந்தன. அர்ஜூனனுக்கு முதலில் எதுவும் புரியவில்லை, சலிப்புற்றான். ஆயினும் சொல்வது கண்ணன் என்பதால் போரிட்டான்

    அந்த போர்களின் அனுபவமே குருஷேத்திரம் எனும் கொடும்போரில் அர்ஜூனனுக்கு கை கொடுத்தது, அப்பொழுதுதான் அர்ஜூனனுக்கு புரிந்தது , “கண்ணன் நம்மை தயார்படுத்தியிருகின்றான்”

    அப்படி தன் 270க்கும் மேற்பட்ட நாவல்கள், ஏகபட்ட சினிமா வசனங்கள், 200க்கும் மேற்பட்ட கதைகளெல்லாம் தான் அவதரித்த மிகபெரிய நோக்கத்திற்கான தயாரிப்பு என்பதை உணர்ந்தார்.

    அந்த அனுபவங்களையெல்லாம் கொட்டி அவர் எழுதியதுதான் “கங்கை கொண்ட சோழபுரம்” மற்றும் என்றும் தமிழ் உலகில் கோபுரமாக இன்னும் அந்த “உடையார்”.
    இன்றுவரை எழுத்துலகில் ஒருவன் ராஜராஜனுக்கு வைத்திருக்கும் மிகபெரிய காணிக்கை அந்நூல். தஞ்சை கோவிலுக்கு அதை விட இன்னொருவன் காணிக்கை வைத்துவிட முடியாது

    காவேரி குறித்தும், தஞ்சை பகுதி குறித்தும் அவர் எழுதிய அளவு நுட்பமாக இன்னொருவன் எழுதமுடியாது. ஆனால் இவர் படித்து வளர்ந்தெல்லாம் சென்னையிலே

    முன்னோர்களின் ஏதோ நினைவு அல்லது பூர்வ ஜென்ம‌ தொடர்ச்சி அவரில் கலந்து அந்த தொடர்ச்சியாகத்தான் இவ்வளவும் எழுதி குவித்தார்.

    இந்துமதத்தின் சித்தர்களின் சாயலாகவும் அவர் அறியபட்டார், கண்ணதாசனின் இறுதிகாலம் போலவே பாலகுமாரனுக்கும் ஆன்மீக ஞானம் உச்சத்தில் இருந்தது

    இன்று அவரின் பிறந்தநாள்

    எழுத்தில் ஒருவகை தாள நயத்துடன் எழுதியவர் அவர், மெல்லிய பூங்காற்று போன்ற எழுத்து அது
    அந்த மெல்லிய பூங்காற்றில் ஆலயமணி போன்ற ஆன்மீகமும் சோழனின் வாள் சத்தமும், உளி சத்தமும் கேட்டுகொண்டே இருந்தது ஒருவித சுகம்

    எத்தனையோ லட்சம் வாசகர்களை கட்டிபோட்ட, எத்தனை ஆயிரம் பேரோ அவரை ஞானதகப்பனாக கொண்டாடிகொண்டருக்கின்றனர்

    ஞானம் கலந்த எழுத்து என்பதை அவர் நிரம்ப கொடுத்தார், ஆன்மீகம் கலந்த எழுத்து எக்காலமும் நிலைத்திருக்கும் என்பதை அவர் காட்டினார்.

    அவர் எழுத்து நதியின் அணைகட்டு, நாமெல்லாம் பயனுற்றோம். அவர் கைகாட்டினார் நாம் வழிகண்டோம், அவர் படிக்கல்லாய் அமர்ந்தார், நாமெல்லாம் நல்வழி ஏறி சென்றோம்

    அவர் மழையாய் பொழிந்தார் நாம் மனநிலமெல்லாம் செழுமை அடைந்தது

    உயர்ந்த ஞானமிக்கோர் எல்லாம் ஒரே வரிசையே

    அதில் வசிஷ்டர் முதல் அகத்தியர் போன்ற சித்தர்கள் வரை எத்தனையோ பேர் வருவார்கள். அப்படி நம் தலைமுறையில் நாம் கண்ட சித்தர் பாலகுமாரன்.

    அவரின் சமூக நாவல், தத்துவ நாவல், இன்னும் ஆன்மீக நாவல், புராண கதைகள் என எவ்வளவோ சிகரம் இருந்தாலும் இமயத்தில் கைலாயம் போல மின்னுவது “உடையார்”

    நிச்சயம் சாகித்ய அகாடமி அல்லது ஞானபீடம் விருது வழங்கி கொண்டாட வேண்டிய படைப்பது அது, கண்ணதாசனின் சேரமான் காதலி எனும் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கொடுக்கபட்டு உடையாருக்கு மறுக்கபட்டதென்றால் அதுதான் இந்தியாவிலும் தமிழகத்திலும் நடக்கும் இந்து துவேஷம்

    இந்துமத நாவல்களுக்கோ,இந்து தத்துவத்தை அழகாக சொல்லும் நாவல்களுக்கோ, பாரத பாரம்பரியத்தை, தமிழக இந்துக்களின் பிரமாண்ட வாழ்வியலை சொல்லும் புத்தங்களுக்கு இங்கு அங்கீகாரம் வராது

    அந்த அளவு மர்ம கரங்கள் பாரதத்தின் பல அசைவுகளை ஆட்டிவைக்கின்றன‌

    உடையார் நாவல் எல்லா மொழியிலும் மாற்றபட்டு பாரதம் முழுக்க செல்லவேண்டிய இந்து இலக்கியம், ஆனால் அப்படி யாரும் செய்யவில்லை பாஜகவும் செய்யவில்லை

    அதே நேரம் தமிழக பல்கலைகழங்கங்களில் பாருங்கள் கண்ட குப்பை நாவலெல்லாம் ஆய்வு, ஆராய்ச்சி என உயர்த்தபட்டிருக்கும் இவ்வளவுக்கும் தரமில்லாதவை

    தமிழின் ஒப்பற்ற இலக்கியமான உடையார் அப்படி அல்லாமல் புறக்கணிக்கபட ஒரே காரணம் எழுதியவன் தூய இந்து, அந்த நாவல் தமிழக இந்துக்களின் இந்து நாவல் என்பதே

    ஆனால் எதைகண்டும் பின்வாங்காமல் பெய்யும் மழைபோல தன் ஞானத்தை மழையாய் பெய்வித்தார் அந்த ஞானி

    “உடையார்” “கங்கை கொண்ட சோழன்” என அவர் அடுத்தடுத்து கொடுத்த பிரமாண்ட நாவல்களும் அதனிடையே கொடுத்த ஆன்மீக நாவல்களும் அப்படி சிறப்பு வாய்ந்தவை

    “கடிகை” எனும் நாவல் கால கல்வெட்டு, அக்காலத்தை கண்முன் நிறுத்திய வரலாற்று நூல்

    இன்னும் எவ்வளவோ சொன்னார் அந்த சித்தர், அவர் எழுத்து சித்தர் அல்ல, அவர் முழு ஞானி, ஞானமெல்லாம் குடிகொண்ட பெரும் சித்தர்

    எல்லாம் அவருக்கு தெளிவானது, எதெல்லாம் புரிந்துகொள்ள முடியாததோ அதெல்லாம் அவருக்கு மிக எளிதாக புரியும், புரிந்ததை எல்லோருக்கும் புரியும்படி விளக்கி சொல்லவும் அவரால்தான் முடியும்

    “உடையார்” போலவே முத்தாய்ப்பாய் வரவேண்டியது அவரின் “மகாபாரதம்”

    அந்த அளவு மகா பிரமாண்டமாய் வேரில் இருந்து அல்ல, விதையில் இருந்து பாரதத்தை தொட்டு சொன்னவர் யாருமில்லை, அந்த இதிகாசத்தை பிரமாண்டமாக தொடங்கினார்

    ஆனால் அதை முடிப்பதற்குள் அவர் விதி முடிந்தது, தமிழ் இலக்கிய உலகின் மிகபெரிய சோகம் அது

    அதை முடிக்க இனி அவர் பிறந்து வந்தால்தான் முடியும், அந்த பெரும் இலக்கியத்தை முடித்துவைக்க அய்யன் மறுபடி பிறந்துவரட்டும்

    இன்று அந்த சித்தனின் பிறந்தநாள்

    அந்த அற்புத சித்தனை, எழுத்துலக வேந்தனை, இலக்கிய சிற்பியினை அனுப்பிய தெய்வத்துக்கு நன்றி செலுத்தும் நேரம், அந்த ஞானமழையினை கொடுத்த தெய்வத்துக்கு நன்றி செலுத்தும் நேரம்

    மொட்டை கோபுரமாக நிற்கும் அவன் தொடங்கிய மகாபாரத்தை முடித்து வைக்க அந்த காளிதாசனும் கம்பனும் ஒளவையும் கலந்த பிறப்பை மறுபடியும் அனுப்பி வைக்க கையேந்தி நிற்கின்றது இந்துக்கள் உலகம்

  8. ஒரு வழியாக ரஷ்யா குறிப்பிடதக்க வெற்றியினை பெற்றுள்ளது, கிழக்கு உக்ரைனிய பிரதேசமான லுகான்ஸ் பகுதியினை முழுக்க கைபற்றியிருகின்றது இது குறிப்பிடதக்க வெற்றி

    ரஷ்யா முன்பு உக்ரைன் தலைநகர் கீவினை கைபற்ற திட்டமிட்டது ஆனால் முன்பு சசிகலாவால் பாஜகவின் காவலில் இருந்த முதல்வர் பழனிச்சாமியினை கொஞ்சம் கூட அசைக்க முடியாத நிலை போல உக்ரைன் அதிபரை அமெரிக்காவும் நேட்டோவும் மிக கடுமையாக காவல் காத்ததால் ரஷ்யாவால் கீவ் நகரை கைபற்றமுடியவில்லை

    ரஷ்ய இழப்பும் அதிகம்

    பின் ரஷ்ய அதிபர் புட்டீன் இனி தாங்கள் கிழக்கு உக்ரைனை குறிவைப்பதாக அறிவித்தார், முன்பே ரஷ்ய ஆதரவில் அங்கு போராளிகள் அதிகம் என்பதால் டொனஸ்ட் மற்றும் லுக்கான்ஸ் பகுதியில் ரஷ்ய செல்வாக்கு அதிகம்

    முன்னதாக அருகிருக்கும் மரியபோல் துறைமுக நகரை ரஷ்யா கைபற்றியது முக்கிய கடற்படை தள கேந்திரம் அது

    அதை தொடர்ந்து லுக்காஸ் மற்றும் டொனஸ்ட் பகுதியினை ரஷ்யா தாக்கியது ஆனால் அமெரிக்கா தரப்பு பல்குழல் ராக்கெட்டுகள் தூர வீச்சு ஏவுகனைகளெல்லாம் கொடுத்து உக்ரைனை பலமாக்கியது

    இந்த பல்குழல் ராக்கெட்டுகள் ஆபத்தானவை, அதாவது ஒரே நேரம் இடைவிடாமல் ஏவுகனைகளை பாய்ச்சும் சக்தி கொண்டவை இதனை தடுப்பது மிக சிரமம் அல்லது முடியாது

    இப்படி கடும் சவால் இருந்த நிலையில் ரஷ்ய படைகள் போராடி லுகான்ஸ் பகுதியினை முழுக்க கைபற்றியிருக்கின்றன இனி டொனஸ்ட் பக்கம் அது கவனத்தை செலுத்தும்

    ஆக கிரிமியாவினை தொடர்ந்து உக்ரைனின் அக்கம் பக்கம் மாகாணங்களும் ரஷ்ய பிடிக்குள் வந்துவிட்டன, இன்னும் பக்தி கூடலாம்

    முழு உக்ரைனை கைபற்றமுடியாவிட்டாலும் கிழக்கு உக்ரைனை கைபற்றும் ரஷ்யாவின் திட்டம் நிச்சயம் இனி வெற்றி என்பது தெரிகின்றது

    ஆக முன்பு ஜெர்மனி போல இன்று இந்தியாவின் காஷ்மீர் போல இனி உக்ரைன் இரு துண்டுகளாக ஆக்கபட்டு உலக அரசியல் புள்ளியில் ஒன்றாகிவிட்டது

    இந்த போரில் எவ்வளவோ தடைகள் முடக்கங்கள் என அறிவித்தும், ரஷ்ய விமானம் கப்பல் தொழில்களுக்கு தடை என அறிவித்தும் ரஷ்யா அதன் போக்கில் அடித்து ஆடிகொண்டேதான் இருக்கின்றது, போரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றார்கள்

    ஒரு வகையில் அமெரிக்கா விரும்புவதும் இதைத்தான்

    அமெரிக்கா நினைத்தால் முழு பலத்தோடு மோதலாம் ஆனால் செய்யமாட்டார்கள்

    அந்த அரசியலும் கிட்டதட்ட தமிழக அரசியலை போலத்த்தான் திமுகவினை அழிக்க அதிமுக விரும்பாது, அதிமுக வீழ்வதை திமுக விரும்பாது

    இருவரும் ஒருமாதிரி ஒப்பந்தம் செய்து யாரையாவது வளரவிடாமல் அடித்துவிரட்டுவார்கள்

    கொஞ்சநாளாக ஐரோப்பிய யூனியன் அமெரிக்காவுக்கு கட்டுபடாமல் திரிந்தது, இன்னொரு பக்கம் சீனா உறுமியது

    இந்த போரினால் ரஷ்யா ஐரோப்பிய யூனியனுக்கு ஆபத்து எனும் பிம்பம் உருவாக்கபட்டு அவர்கள் கன்னத்தில் கைவைத்து அமர்ந்துவிட்டார்கள், அமெரிக்கா உள்ளே புகுந்து “நாங்கள் இல்லையென்றால்” அவ்வளவுதான் என அமர்ந்து கொண்டது

    போலந்தில் மிகபெரிய முகாமை அந்நாடு அமைப்பது ஐரோப்பிய யூனியனுக்கான பெரும் எச்சரிக்கை

    அப்படியே தைவானில் கைவைத்தால் என்னாகும் என சீனாவுக்கும் எச்சரிக்கை

    ரஷ்யாவுக்கும் இது தெரியும் என்பதால் அவர்களும் பழனிச்சாமி திமுகவினை அறிக்கையால் தாக்கி போர் செய்வது போல் சிரித்தபடி போரிட்டு கொண்டிருக்கின்றார்கள்

    ஆக உக்ரைன் மக்கள் நிலை பாவம், தமிழக மக்கள் நிலை பரிதாபம், அரசியல் எல்லா இடத்திலும் அரசியலாகவேத்தான் இருக்கின்றது என்ன ஆனாலும் சிங்கள வாக்குவங்கி போககூடாது அதற்கு பட்டினி கிடந்து சாகலாம் என இலங்கை அரசு அடம்பிடிப்பதை போல

  9. மத நம்பிக்கையில் தலையிட மாட்டோம், தமிழக முதல்வர் அறிவிப்பு

    தலையிட்டால் என்னாகும்?

    மசூதிகளும், சர்ச்சுகளிலும் தலையிட வேண்டியிருக்கும் அந்த தற்கொலை முடிவினை திமுக எப்படி எடுக்கும்? எடுக்கவே எடுக்காது

    அப்படியே அதன் இந்து விரோத கொள்கையினை முழுக்க அமல்படுத்தினால் இந்து ஆலயங்களின் காணிக்கை வராது, தங்கத்தையும் உருக்கமுடியாது

    அதனால் “இந்த பழம் புளிக்கும்” என்ற கதையன்றி வேறொன்றுமல்ல..

  10. இந்துக்களின் பாரம்பரியமான‌ சக்தி வழிபாட்டின் ஒரு வடிவம் காளி. ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு பெயரில் அவள் அழைக்கபட்டாலும் அவளின் பொதுவான பெயர் காளி

    அவள் உக்கிரவடிவானள், வீட்டுக்குள் வைத்து வணங்கதக்கவள் அல்ல, அவள் ரத்தம் குடிப்பவள், அவள் ஒரு ஆங்கார சக்தி என சொல்வோரும் அதை வைத்து கொண்டே அவள் ஒரு பிசாசு என சொல்லியும் அதை கொண்டே பயமுறுத்தி மதமாற்றும் கோஷ்டியும் உண்டு

    இதனை கொண்டு பகுத்தறிவு பேசி இந்து துவேஷம் செய்யும் பதர்களும் எக்காலத்திலும் உண்டு, காளியின் தாத்பரியமும் அர்த்தமும் பொருளும் விளங்காமல் தங்கள் சிற்றறிவில் புற்றுகரையான் போல புலம்பும் கூட்டமும் உண்டு

    காளி என்பது யார்? அவளின் தத்துவம் என்ன? உண்மையில் அஞ்சதக்கவளா காளி அல்லது ஒதுக்கதக்கவளா காளி?

    ஒரு காலமும் இல்லை, எக்காலமுமில்லை அவளின் தத்துவமும் அது கொடுக்கும் பெருமையும் மகா உன்னதமானவை

    உண்மையில் அஞ்சதக்க உருவமா காளி? இல்லை ஒரு காலமும் இல்லை

    அவளுக்கு இந்துக்கள் கொடுத்த உருவத்தில் ஆயிரமாயிரம் தத்துவங்கள் உண்டு

    அந்த பெரும் சக்தியினை பெண் என சொன்னார்களே ஏன்?

    பெண்களே இவ்வுலகை தாங்கி இயக்குபவர்கள், அவர்களே இவ்வுலகின் ஆதார சக்தி. அவர்கள் இல்லையேல் புதியன தோன்றாது, உயிர்கள் உருவாகும் மூலம் அவர்களே

    பெண்கள் இல்லா உலகம் தொடர்ந்து இயங்க முடியாது, பெண்கள் இல்லா இடத்தில் ஆண்களின் அனைத்து பலமும் செயலற்று அர்த்தமற்று போய்விடும், உலகை வழிநடத்தும் சக்தி பெண், உலகை இயங்க வைத்து கொண்டிருப்பவள் பெண்

    அவள் பொறுமையின் சிகரம், ஆக்கும் வல்லமை அவர்களுக்குத்தான் உண்டு, அதே நேரம் அவர்களை போல் அழிக்கும் சக்தி யாருக்கும் இல்லை

    இதனால்தான் காளி எனும் பெரும் சக்திக்கு பெண் வடிவம் கொடுத்தார்கள் இந்துக்கள்

    காளிக்கு இந்துக்கள் கொடுத்த ஆங்கார உருவத்தின் தத்துவம் என்ன?

    அவள் உருவம் நீல நிறம், இது பிரபஞ்சமெல்லாம் வியாபித்து நிற்கும் சக்தி அவள் என்பதால் வானம் போல் நீல வண்ணம் கொடுத்தார்கள், கண்ணனுக்கும் இதே நீல நிறம் உண்டு

    அவள் கூந்தல் ஏன் விரிந்திருக்கின்றது?

    கூந்தல் அசைவது போல் இந்த பிரபஞ்சம் அவளில் இயங்கி கொண்டிருக்கின்றது என்பதே அதன் பொருள். கூந்தல் ஆசையும் பொழுது ஓசை வருவதில்லை என்பது போல் பிரபஞ்சம் இயங்குவதிலும் ஓசை இல்லை, ஓசையின்றி பரந்த பிரபஞ்சத்தை இயக்குபள் அன்னை என்றார்கள்

    அந்த கருங்கூந்தல் என்பது பெரும் அண்டம் கருப்பு நிறம் என்பதை சொல்கின்றது

    இந்த பிரபஞ்சமும் பேரண்டமும் அவள் சிந்தையால் இயக்கபடுகின்றது, அவள் அண்டமும் பிரபஞ்சம சக்தியுமாய் இருக்கின்றாள் என்பதை சொன்னார்கள்

    ஒரு மனிதனுக்கு நாவு முக்கியம், நல்லதும் கெட்டதும் புகழும் செல்வமும் மானமும் அவமானமும் யாவும் நாவால் வரும். நாவு என்பது அவ்வளவு முக்கியமானது

    காளியினை வணங்கினால் நாவன்மை பெருகும், சொல்வாக்கும் செல்வாக்கும் ஏற்படும், காளியினை வணங்குவோரின் சொல் அரங்கேறும் என்பதால் நாவை நீட்டி விட்டார்கள்

    கழுத்திலே மண்டை ஓடு என்ன சொல்கின்றது? சுடுகாட்டில் அவள் நிற்பதாக ஏன் சொல்கின்றார்கள்?

    இறந்தபின் எல்லா ஆத்மாவும் அவளையே சரணடைகின்றன, சிறியவர் பெரியவர் வரை எல்லோரின் தலைவிதியும் வாழ்வும் அவளிடமே உண்டு என்பதை சொல்ல மண்டை ஓட்டு மாலையினை கொடுத்தார்கள்

    அவளே கடைசி புகலிடம் என்பதை சொன்னார்கள்

    16 கரங்களை கொடுத்தார்கள், அது காளியினை வணங்கினால் வரும் 16 வகை செல்வத்தையும் குறிப்பது, இதன் அடையாளமாக சங்கு முதல் ஆபத்தை தடுக்கும் காவல் ஆயுதம் வரை கொடுத்தார்கள்

    காளிக்கு ஆடையில்லா உருவம் ஏன்?

    முற்றும் துறந்த ஞானிகள் ஆடை அணிவதில்லை, ஆடையற்ற நிலை பரிபூரண ஞானத்தின் அடையாளம் என்பதால் காளியினை வணங்கினால் ஞான நிலை அடையலாம் என்றார்கள்

    காளியின் கையில் அசுரனின் தலை கொடுத்தார்களே ஏன்?

    எல்லா ஆபத்தையும் , தீமையினையும் அழிப்பவள் காளி. அழிப்பதோடு மட்டுமல்லாமல் அதற்கு காரணமான பிரதான ஸ்தானத்தையே அகற்றுபவள். தலை மானிடருக்கு பிரதானம் அல்லவா? அப்படி தீமைகளின் தலையினையே அகற்றுபவள் காளி என்றார்கள்

    அவள் கையில் நெருப்பும் கொடுத்தார்கள், உலகுக்கே அவள் ஒளி என பொருள்

    சிவனை அவள் காலடியில் வீழ்ந்து கிடக்குமாறு செய்தார்களே ஏன்? சக்தி இல்லையேல் சிவமில்லை சிவம் வீழும் என்பதை சொன்னார்கள்

    இதை லவுகீக கண்ணில் மட்டும் பார்த்தாலே இவ்வளவு அருமையான விளக்கங்களை பெரும் பொழுது ஆன்மீகத்தால் சிந்தித்தால் இன்னும் பல விஷயங்கள் புரியும்.

    காளி அகங்காரத்தை அகற்றுபவள், அவளை பணிய பணிய மெல்ல மெல்ல அகங்காரம் அகலும

    அதைத்தான் மண்டையோட்டை அவள் கழுத்தில் அணிவதும், தலையினை கையில் ஏந்துவதும், இன்னும் சில தலைகளை மாலைகளாக அணிந்திருப்பதும்

    ஆம் தலைகணம் எனும் அகங்காரத்தை நீக்குவாள் காளி அல்லது அகங்காரம் நீங்காமல் அவள் அருளை அடைய முடியாது

    அவள் ஞானம் தருபவள், இறைவனை அடையும் வழியினை சொல்பவள், அனுக்கிரக தெய்வம்.

    உலகை காக்க விஷம் குடித்த சிவனை போல் மானிடரின் ஆக்ரோஷ அகங்காரத்தையெல்லாம் தான் ஏற்று மானிடரை சாந்தபடுத்தி நிம்மதியும் ஞானமும் கொடுக்கின்றாள் அன்னை

    அவள் ஆங்கார ரூபினியாய் நிற்கும் தத்துவம் இதுதான்

    காளியை உபாசிக்க உபாசிக்க உபாசிக்க ஞானம் பிறக்கும் அவள் அம்பிகையின்தோற்றம்.. அறியக் கூடியவள் அவள் அதே நேரம் முழுக்க அறியமுடியாதவள் அவள்

    ஞானமும், அஞ்ஞானமும் அவள், பிறப்பும் பிறப்பில்லாததும் அவள், சகலமும் அவள், முக்காலமும் அவள், முன்று உலகமும் அவள், மூன்று செல்வமும் அவள்,

    மூவகை ஆசை நீக்கி, மூவகை மயக்கம் நீக்கி ஞானம் அருள்பவளும் அவளே, எல்லாம் அவளே

    அவள் காலடியில் கிடக்கும் சிவனின் குறியீடு சொல்வதென்ன?

    ஒவ்வொருவர் மனதிலும் சிவன் உறைகின்றார், ஆனால் சக்தியற்று செயலற்று கிடக்கின்றார். அந்த மனதில் அன்னை சக்தி வந்தால் மனதில் இருக்கும் சிவன் உயிர்பெறுவார் என்பதே

    அண்டத்தில் இருப்பதெல்லாம் பிண்டத்திலும் உண்டு என்பது இதுதான்

    வான்வெளியில் பிரமாண்ட கோள்முதல் சக்தி மிக்க கிரகங்களும் விண்மீன்களும் நிறைய உண்டு ஆனால் அவற்றை இயக்க ஒரு சக்தி வேண்டும் அன்னையின் சக்தி அதை இயக்குகின்றது

    மானிட மனமும் பெரும் ஆற்றல் மிக்கது ஆனால் அதை இயக்க சக்தி வேண்டும், அந்த சக்தி இல்லையேல் மனமும் இயக்கம் பெறாது

    இதனாலே சிவன் முதல் மனித மனம் வரை இயங்க சக்தி அவசியம், அதை அன்னை ஒருத்தியே தருவாள் என்பதை வலியுறுத்தி சக்தி இல்லையே சிவனே இல்லாத பொழுது மனிதன் எப்படி இயங்க முடியும் என உருவத்தில் சொல்லி அவளை வணங்க சொன்னார்கள்

    தமிழகத்தில் கொற்றவை என பாலை நிலத்தின் தெய்வமாக காளியினை நிறுத்தினார்களே ஏன்? பாலை நிலத்தில் செல்வோருக்கு அச்சமும் ஆபத்தும் அதிகம்

    அந்நிலையில் காளியினை நினைத்தால் அச்சம் தீரும், ஆபத்தை தவிர்ப்பாள் அன்னை என அவளை வழிதுணையாக வழிபட சொன்னார்கள்

    மானிட பயணத்துக்கு மட்டுமல்ல, ஆன்ம பயணத்துக்கும் அவளே அடைக்கலம்

    ஞான வாழ்வுக்கு அவளே வழிகாட்டி, கலைகள் கொடுப்பதும் அவளே, செல்வமும் புகழும் அவளால் மட்டும் வழங்கபடும்

    வீரத்துக்கும் போருக்கும் அவளே நாயகி, தைரியமும் வீரமும் உத்வேகமும் தருபவள் அவளே, அதர்மத்தை வேரறுக்க வருபவளும் அவளே

    அவள் முக்கால நாயகி, இதனாலேதான் அவளை வணங்கியோர் மூன்று காலங்களிலும் நிற்பார்கள்

    அவள் மூன்று வடிவானவள், இதனாலேதான் அவளை வணங்கியோரெல்லாம் கல்வி, செல்வம், வீரம் என ஒவ்வொரு அடையாளம் பெற்று சிறந்தார்கள்

    இந்திய அரசர்களுக்கெல்லாம் அவள் குல தெய்வமாக இருந்தாள், அவளை வணங்கிய காலத்தில் இந்திய அரசுகள் உலகின் சிறந்த அரசுகளாக இருந்தன‌

    காளி வழிபாடு அதிகமுள்ள வங்கத்தில் இருந்துதான் விவேகானந்தர் முதல் எத்தனையோ அழியா அடையாளங்கள் கிடைத்தன‌

    விவேகானந்தர் ஒரு தீவிர காளி உபாசகர் என்பதும் அவரின் குரு ராமகிருஷ்ண பரமஹம்சம்ரும் அப்படியே என்பதும் எல்லோரும் அறிந்தது

    காளியினை வணங்கிய இடமெல்லாம் அறிவும் செல்வமும் வீரமும் பெருகும், நிச்சயம் பெருகும்

    அன்னை வழிபாடு கொண்ட கேரளமும் ஆரியபட்டர் முதல் எத்தனையோ அடையாளங்களை கொடுத்தது

    காளியின் நீண்ட நாவு அவளை வணங்கினால் கிடைக்கும் செல்வாக்கு கொடுக்கும் சொல்வாக்கினை குறிப்பது, அதனாலே காளிதாசன், கம்பன், அபிராமி பட்டர், குமரகுருபரர் என யார் யாரெல்லாமோ அழியா அடையாளமானார்கள்

    உலகின் அதிசய கணிதமேதையான சீனிவாச ராமானுஜம் அன்னை காளி தன் கனவில் வந்து கணிதம் கற்பித்ததாக அடிக்கடி சொல்வான்

    மகாகவி பாரதியார் ஒரு காளி பக்தர்

    சனதான தர்மத்தை தொலைக்க வந்த பவுத்ததினை விரட்டிய ஆதிசங்கரர் முதல் சமணத்தை வேறறுத்த ஞானியர் வரை காளியின் அருள் உண்டு

    இந்தியாவில் ஆப்கானியனுக்கு எதிரான சாம்ராஜ்யத்தை உருவாக்கிய வீரசிவாஜி முதல் மதுரை ஆலயத்தை டெல்லி சுல்தானிடம் இருந்து மீட்ட கம்பண்ணன் வரை காளியால் உருவானர்கள்

    காளியினை வழிபடுபவர்கள் சிறப்பார்கள், எல்லா வகை ஆசீர்வாதமும் அவர்களுக்கு உண்டு, குறிப்பாக வரலாற்றில் எக்காலமும் நிலைத்திருப்பார்கள், அழிவே இல்லா பெரும் நிலை கொடுப்பது காளி வழிபாடு.

    காளி வேதங்களின் தாய், அவளை அழைக்காமல் தொடங்கும் எந்த வேதகாரியமும் சிறக்காது. அவளை தொழுதுவிட்டே வேத வழிபாடு தொடங்குவார்கள், ஆனால் காலவோட்டத்தில் அது மறைந்து அதர்வண வேதத்தில் மட்டும் அவளை காளி என கொண்டாடும் மரபு வந்துவிட்டது

    காளிவழிபாடு எனும் அன்னை சக்தியின் பெரும் வழிபாடு எல்லா காலத்திலும் இங்கு உண்டு, எல்லா நிலையிலும் உண்டு

    அன்னை வழிபாட்டால் இத்தேசம் பெற்ற நன்மைகள் ஆயிரம், அழியா பெரும் கலைவடிவமும் காவியமும் அதிசமான சம்பவங்களும், பாரத பெரும் தாத்பரியமும் அவளாலே இங்கு கொடுக்கபட்டது

    பண்டைய பெரும் நாகரீகமெல்லாம் ஆதிக்க சமயத்தால் தடம் தெரியாமல் அழிக்கபட்ட உலகில், பவுத்தம் முதல் கம்யூனிசம் வரை கண்டும் இந்திய தேசம் இந்து தேசமாக நீடிக்கின்றது என்றால் அதற்கு காரணம் காளி எனும் சக்தி வழிபாடே

    இந்தியாவின் பெருந்தெய்வம் காளி, இந்தியாவின் ஆதார நம்பிக்கை காளி என்றுதான் அதை சீண்ட ஒரு கூட்டம் கிளம்பியிருக்கின்றது

    காளி இந்திய ஞானத்தின் பெருவடிவம், ஆயிரமாயிரம் ஞானபோதனைகளை பிரபஞ்ச ரகசியங்களை வாழ்வியல் சூட்சுமங்களை தன்னில் கொண்டிருக்கும் அருந்தெய்வம், அந்த மாகா சக்தி காளி அன்னை அந்த கூட்டத்தை வதம் செய்யும் காலம் நெருங்கி கொண்டிருக்கின்றது

  11. இதுவரை இல்லாத அளவுக்கு தமிழக பாஜக வுக்கு ஏன் இவ்வளவு கூட்டம் கூடுகிறது என்று சிலர் கேட்கிறார்கள். இளைஞர்கள், படித்தவர்கள், திறமையானவர்கள், எந்த பின்புலமும் இன்றி சுயத்தால் முன்னேறியவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற வாசகங்களை வெறும் “சினிமா வசனங்களில்” மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த நம் தமிழக மக்களுக்கு மிக எளிதாக அவர்கள் சினிமா வசனங்களில் கண்டதைவிட ஒரு நல்ல மனிதனாக, தலைவனாக K.Annamalai முன் வந்து நிற்கும்போது குறைந்தபட்சம் நம் எதிர்கால சந்ததிகளின் முன்னேற்றத்திற்காகவாவது அரசியலை உற்றுநோக்கும் பாமரனும் அவர் பேசுவதை செவிசாய்த்துக் கேட்பான் என்பதற்கு அண்ணாமலைக்குக் கூடும் கூட்டங்களேச் சான்று.!

    “செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
    செல்வத்து ளெல்லாந் தலை”

    அதாவது செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும். இதை மக்கள் அண்ணாமலையின் வழியே செவ்வனே செய்துவருகின்றனர். எந்நேரமும் பாஜக வெறுப்பை காட்டிவந்த ஊடகங்கள் கூட நன்கு அறிந்து வைத்திருக்கின்றன. யாருக்காக மக்கள் கூடுகிறார்கள்.? யார் சொல்வதை மக்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள் என்பதை, அவர்களின் சமூக வலைதளங்களில் வெளியிடும் அண்ணாமலை பற்றிய செய்திகளே எடுத்துக்கூறுகிறது.! அதாவது அண்ணாமலையைப் பற்றி அவர்கள் கூறும் செய்திகளுக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது என்பதோடு அண்ணாமலையின் எளிமையும் பொறுமையும் யாரும் வெறுக்க முடியாத அளவுக்கு சிறந்த மனிதனாக இருக்கிறார் என்பதே பெரும்பான்மையான இளைஞர்களின் குரலாக இருக்கிறது.!

    தனக்கு மிகுந்த நன்மதிப்பை வாங்கித்தந்த மக்களுக்காக 24 மணிநேரமும் தன்னலமின்றி உழைக்கும் காவலர்களின் மேல்மட்ட பொறுப்புகளிலிருந்து தன்னை விடுவித்து மக்களிடம் நேரடியாக பேச வேண்டும், மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும், என்பதற்காக அந்த வேலையை விட்டு மாவட்டம் மாவட்டமாக பொதுக்கூட்டம் நடத்தும் பொறுமையான, பவ்யமான ஒரு மனிதனை யார்தான் வெறுக்க முடியும்? “அண்ணாமலைக்குக் கூடும் கூட்டம் சொல்லும் செய்தி யாதெனில்”! பொதுவாக இந்திய தலைவர்கள் வல்லரசு நாடுகளின் தலைவர்களை தேடிச்சென்று அரவணைக்கும் காலம் சென்று (G7 மாநாட்டில்) வல்லரசு நாடுகளின் தலைவர்கள் நமது பாரத பிரதமரை தேடி வந்து அரவணைக்கும் காலம் வந்துவிட்டதைப்போன்று சினிமா வசனங்களில் மட்டுமே கண்டுகொண்டிருந்த ஒரு தலைவனை நேரடியாக கண்முன்னே பார்த்துவிட்ட மக்கள் அண்ணாமலையை நோக்கி படையெடுக்கிறார்கள் என்பதே “இக்கூட்டம்” நமக்குணர்த்தும் செய்தியாகும்.!

  12. ஹிந்து மன்னர்களின் வரலாற்றை மக்களிடம் எடுத்துச் செல்லப்போகிறோம்..!

    – செய்தி.

    தமிழகத்தைப் பொறுத்தவரை இவர்கள் கூறும் ஹிந்து மன்னர்கள் யாரு???

    சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள்.

    இவர்களின் வரலாறுனா? எதை மக்களிடம் எடுத்துச்செல்லப் போகிறார்கள்?

    பிரம்மாண்டமான கோவில்கள் கட்டியதை, அதன் கட்டுமானத்தை, அதனுடன் தொடர்புடைய பொருளாதாரத்தை, ஆன்மீகத்தை, பண்பாட்டு கலாச்சாரங்களைத்தான் மக்களுக்கு எடுத்துச் செல்லப்போகிறார்கள்.

    என்னென்ன கோவில் கட்டினார்கள்?

    இராமர் கோவில், சிவன் கோவில், விநாயகர் கோவில், முருகன் கோவில் இப்படி பல கோவில்கள் கட்டினார்கள்.

    கோவில்கள் மட்டும்தான் கட்டினார்களா? அப்புறம் பொருளாதாரம்?

    அந்த கோவில்களுடன் மருத்துவமனைகளும் கல்வி நிலையங்களும் கட்டினார்கள்.

    ஓ…! ஏழை மக்களுக்கு அங்கு கல்வியும் மருத்துவமும் கிடைத்ததா?

    இவை மக்களுக்கு பாரபட்சமின்றி இலவசமாகவே அளிக்கப்பட்டது. இலவசமாக இருந்தால் ஏழைகளுக்கு கிடைக்காதா என்ன?

    வேற என்னென்ன பண்ணாங்க?

    அவர்கள் கட்டிய கோவிலுக்கு நிலதானம் பொருள்தானம், ஆடுகள்னு தானங்கள் வழங்கி அந்த பொருட்களை பராமரிக்க ஊர் மக்களுக்கு வேலை கொடுத்தார்கள்.

    வேற என்னென்ன பண்ணாங்க?

    போர்க்கலை, வேதங்கள், மருத்துவம் தொடர்பான பயிற்சிகள்னு நாடும் வீடும் முன்னேறுவதற்கான அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்பட்டது.

    ஓ.. கல்வி, மருத்துவம், வாழ்விற்கான பொருளாதாரம்னு எல்லாமே கொடுத்தாங்களா?

    ஆமா. இதுதான் நமது மன்னர்களின் வரலாறு இதைத்தான் மக்களிடம் எடுத்துச்செல்கிறோம்னு சொல்றாங்க.

    அப்புறம் எதுக்கு இதை எதிர்க்கிறாங்க?

    இவர்களின் வரலாற்றை மக்களுக்கு எடுத்து சொல்லிவிட்டால்.. நம் மன்னர்கள் ஏன் கோவில் கட்டினார்கள்? அதன்மூலம் என்னென்ன செய்தார்கள்? அவர்களின் இறை வழிபாடு என்னென்ன? பண்பாடு, கலாச்சாரம், மொழி னு மக்களுக்கு எல்லாமே தெரிஞ்சிருமே…

    இதெல்லாம் மக்களுக்கு தெரிஞ்சா என்ன?

    இதெல்லாம் மக்களுக்கு தெரிந்தால் மதமாற்றம் நடக்காது. கோவில்கள், பண்பாடு கலாச்சாரம்னு எல்லாவற்றையும் பின்பற்ற துவங்கிவிடுவார்கள். மதத்தின் பெயரில் நடக்கும் ஏமாற்று வேலைகள் மக்களிடம் செல்லாது. இந்த பாரத தேசத்தின் உண்மையான வரலாறு தெரிந்துவிடும்.

    இதெல்லாம் மக்கள் பின்பற்ற துவங்கிவிட்டால் என்ன?

    மிலேச்ச மதங்களுக்கு இங்கு என்ன வேலை? பெட்டி படுக்கைகளை தூக்கீட்டு கெளம்ப வேண்டியதுதான். கோவில்களையோ அதனுடன் தொடர்புடைய எதை இழிவு படுத்தினாலும் ஏறி மிதிச்சிட்டு போய்ட்டே இருப்பாங்க..

    ஓ.. அதுதான் சங்கதியா? அப்போ எதிர்க்கத்தான் செய்வாங்க.

    ஆமா. இவர்கள் நம் மன்னர்களின் வரலாற்றை மக்களுக்குச் சொல்லாமல் அயல்நாட்டு படையெடுப்பாளர்களை முன்மொழிவதற்கு இதுவே காரணம்.

    எனில் அரசின் இந்த முன்னெடுப்பு மக்களை நல்நிலைநோக்கி எடுத்துச்செல்லும். நல்ல முயற்சி. அரசுக்கு பாராட்டுகள்…!

  13. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை “எம்மதமும் சம்மதம்” என்ற தாரக மந்திரத்தை உச்சரிக்காத இந்துக்களை பார்க்கவே முடியாது. அந்த காலங்களில் எம்மதமும் சம்மதம்னா என்ன அர்த்தம்னு தெரியுமோ என்னவோ ஆனால் தன்னை அப்படி அடையாளப்படுத்திக் கொண்டால் தான், தான் ஒரு நடுநிலையாளனாக சமூகத்தின் மத்தியில் நல்ல கெத்தாக தனது இருப்பை காட்ட முடியும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்திருக்கலாம். நானும் எம்மதமும் சம்மதம் என்ற சொல்லுக்கு பயர் () விட்டவன்தான் என்பதை கூறிக்கொண்டு இன்றைய சூழலில் “எம்மதமும் சம்மதம்” என்ற சொல்லாடலை மக்கள் எப்படி புரிந்துகொண்டுள்ளனர் என்பதை எனது புரிதலின் அடிப்படையில் எழுதுகிறேன்…!

    முதலில் எம்மதமும் சம்மதம்னா அந்த காலத்தில் நான் நினைத்துக் கொண்டிருந்தது அனைத்து மதங்களையும் நான் ஏற்கிறேன், நான் ஒரு கிறிஸ்தவ தேவாலையத்திற்கு செல்லும்போது கிறிஸ்தவனாகவும், ஒரு மசூதிக்குச் செல்லும்போது இஸ்லாமியனாகவும் உருபெறுகிறேன் என்றெல்லாம் உளறிக்கொண்டிருக்கிறேன். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல எனது இந்த நிலைப்பாடு மாறியது. அதாவது எம்மதமும் சம்மதம் என்றால், தனது மத நம்பிக்கைகளை “மதிப்பதுபோல்” அடுத்த மத நம்பிக்கைகளை “மதிப்பதுதானே” அன்றி ஒரு இந்து மற்ற வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும்போது கிறிஸ்தவனாக, இஸ்லாமியராக மாறுவதில்லை என்பதாகும். ஏனெனில் கோட்பாட்டு ரீதியாக ஒரு இந்து தன்னை கிறிஸ்தவனாகவோ இஸ்லாமியனாகவோ அறிமுகப்படுத்தினால் அது நகைமுரணையே ஏற்படுத்தும்…!

    எம்மதமும் சம்மதம் என்ற சொல்லுக்கு பதிலாக நமது மத நம்பிக்கைகளை நாம் மதிப்பதுபோல் அடுத்த மத நம்பிக்கைகளையும் மதிக்கிறோம் என்ற வாக்கியத்தை மக்கள் மனதில் பதிய வைத்திருந்தால் அடுத்த மதத்தவர்கள்மீது வெறுப்போ, அவர்களின் கோட்பாடுகளை கேலி செய்யும் எண்ணமோ நமக்கு தோன்றாது என்பது மறுக்க முடியாத உண்மை. அதே சமயம் எனது மத நம்பிக்கைகளை ஏற்பதுபோல் அடுத்தவர் மத நம்பிக்கைகளையும் ஏற்கிறேன் என்று சொல்லும்போது கோட்பாட்டு ரீதியாக விவாதத்திற்கு உட்பட்டு சலசலப்பை ஏற்படுத்துகிறது. ஆகவே அடுத்தவர்களின் மத நம்பிக்கைகளை ஏற்பது என்பது வேறு அதை மதிப்பது என்பது வேறு. ஒரு இந்து அடுத்தவர்களின் மத நம்பிக்கைகளை ஏற்கிறேன் என்ற பெயரில் ஒரு இஸ்லாமியராகவோ கிறிஸ்தவராகவோ மாற வேண்டியது அவசியமில்லை. ஆனால் அவர்களின் நம்பிக்கைகளை மதிப்பதால் மதம் மாற வேண்டும் என்ற சூழல் ஒருபோதும் ஏற்படாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்..!

    இந்த புரிதல் குறைபாடு ஒரு கட்டத்தில் “எம்மதமும் சம்மதம்னா” உனக்கு மதம் மாறுவதில் என்ன பிரச்சினை? என்ற கேள்வியில் ஆரம்பித்து, திருமணம் என்ற ஒற்றைச் சொல்லுக்காக தனது வழிபாட்டு நம்பிக்கைகளை விட்டுக்கொடுத்த இந்துக்கள் ஏராளம். இதன் மூலமாக தனது குலதெய்வ வழிபாட்டை இழந்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் பாரம்பரியமாக பின்பற்றி வந்த பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், இலக்கியங்கள், கலைகள் முதற்கொண்டு இழந்துவிடுகின்றனர். அவர்களிடம் இதற்கு விளக்கம் கேட்டால் பகுத்தறிவு, பழமைவாதம் போன்றதொரு லாஜிக்கே இல்லாத கதைகளை முன்மொழிவார்கள். ஏனெனில் மதம் மாறுவதற்கு மூல காரணமாக இருந்தது இறை நம்பிக்கை இல்லை என்பதை அவர்கள் அறிந்திருக்க கூடும். சாதிய தீண்டாமைதான் இதற்கு காரணம்னா சுதந்திரத்திற்கு பிறகு அல்லது திருமணம் என்ற பெயரில் ஏன் மதம் மாற்றங்கள் நடக்கிறது என்று கேட்டால் அது எனது உரிமை என்று கடந்துசெல்வார்கள். அவர்களில் ஒருபோதும் பிழை இல்லை. நாம் இந்த சமூகத்தை எப்படி கட்டமைத்துள்ளோம் என்பதன் அடிப்படையிலேயே இச்செயல்கள் நிகழ்கின்றன..!

    எம்மதமும் சம்மதம் என்ற சொல்லாடலை இன்று மதச்சார்பின்மை என்ற வார்த்தைக்குள் அடக்கிவிட்டார்கள். எம்மதமும் சம்மதம் எவ்வளவு மோசமான பின்புலத்தைக் கொண்டதோ அதைவிட பலமடங்கு பின்விளைவுகளை ஏற்படுத்த வல்லது இந்த மதச்சார்பின்மை. ஏனெனில் தனக்கென்று ஒரு அடையாளத்தை அல்லது தான் ஒரு மதத்தின்மீது நம்பிக்கை கொண்டவன் என்ற பற்றிலிருந்து மதச்சார்பின்மை என்ற வார்த்தை ஒருவனை பிரித்து விடுகிறது. தான் ஒரு நம்பிக்கையையும் சாராதவன் என்ற சொல்லானது காலப்போக்கில் நம்பிக்கையுடையேர்களின் தலைமேல் ஏறி உக்காந்துகொண்டு “புகுத்தறிவு” பாடம் எடுக்க ஆரம்பித்து விடுவார்கள். இதை நாம் இன்று கண்கூடாக பார்க்கிறோம். புகுத்தறிவு என்ற பெயரில் அடுத்தவர்களின் மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டவர்கள் எந்த மதத்து நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துகிறார்களோ அவர்களுக்கு நேர் எதிர் நம்பிக்கையுடையவர்களின் கூடாரமாகவே மாறியுள்ளனர்..!

    இதற்காகவே உருவாக்கப்பட்ட இந்த “மதச்சார்பின்மை” என்ற சொல்லாடல் ஒவ்வொருவரின் மத நம்பிக்கைகளை, உரிமைகளை, பண்பாட்டு கலாச்சாரங்களை, சிதைக்கும் என்பது கண்கூடு. இதற்கு ஆயிரம் விளக்கங்கள் கூறினாலும் இதன் ப்ரதானமான பொருள் இதுவே. உதாரணமாக சமீப காலமாகவே மதச்சார்பின்மை என்ற பெயரிலும், “புகுத்தறிவு” என்ற பெயரிலும் இந்துக்களின் வழிபாட்டு நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவதை எதிர்த்து கேள்வி கேட்பவர்களுக்கு மதவாதி பட்டமும், ஒருவன் கொச்சைப்படுத்தினால் அதற்கு மறுபடியாக அவனும் எதிராளியின் நம்பிக்கைகளை இழுத்து பேசினால் சிறுபான்மையினர் என்று கூறி எங்கள் உரிமைகள் பறிக்கப்படுகிறது என்றும் அதை விவாதப்பொருளாக்குகின்றனர். அதே சமயம் ஒரு கிறிஸ்தவர் தன்னை கிறிஸ்தவர் என்றோ ஒரு இஸ்லாமியர் தன்னை இஸ்லாமியர் என்றோ கூறிக்கொள்வதில் மதச்சார்பின்மை பேசாத அறிவு ஞானிகள் ஒரு இந்து தன்னை இந்து என்று அடையாளப்படுத்திக் கொண்டாலே போதும், மொழி, இனம், உணர்வுகளை வைத்து பிரிவினை பேசுவதோடு சங்கி, மதவாதி, இந்துத்துவாவாதி, ஆர் எஸ் எஸ் காரன், பாஜக காரன், கைபர் கணவாய் வழியாக வந்தவன், வந்தேறி, நீ தமிழனே இல்லை என்பதுபோன்ற அர்த்தமற்ற வாதங்களால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்…!

    நாம் எப்போது அடுத்தவர்களின் மத நம்பிக்கைகளை மதிக்க ஆரம்பிக்கிறோமோ அப்போதிலிருந்து நாத்திகர்கள் என்ற போர்வையில் இருந்து வேண்டுமென்றே ஒரு மதத்தின் நம்பிக்கைகளை சிதைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வாந்தியும் பேதியும் வந்து தெறிக்க தெறிக்க ஓடுவதோடு மட்டுமல்லாமல் ஒரு சமூகத்தில் மதத்தால் ஏற்படும் சமூக சீரழிவுகள் குறைந்து ஒற்றுமையாக வாழ வழிவகை செய்யலாம். அடுத்தவர்களின் மத நம்பிக்கைகளை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். அதே சமயம் எச்சூழலிலும் தனது வழிபாட்டு நம்பிக்கைகளையும், உரிமைகளையும், பண்பாட்டு கலாச்சாரங்களையும் விட்டுக்கொடுக்காதீர்கள். ஏனெனில் இந்த பாரத தேசத்தின் பண்பாட்டு கலாச்சாரங்களுக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான தெளிவான வரலாற்றுப் பின்னணி உண்டு…!

  14. மோடி இன்று பாரத பெருமையினை உலகுக்கு சொல்லும்படியான ஒன்றை செய்திருக்கின்றார்

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நாட்டின் சின்னமான 4 சிம்மங்கள் அடையாளத்தை சுமார் 10 ஆயிரம் கிலோவுக்கு மேலான எடைகொண்ட அந்த லச்சினையினை நாட்டுக்கு அர்பணிப்பதாக திறந்து வைத்துள்ளார்

    இந்த சிம்மம் என்பது குப்தர் காலத்தில் பாரத லச்சினையாக இருந்தது, நான்கு சிங்கங்கள் என்பது நான்கு பக்கமும் பாரத பெருமையினை எடுத்து செல்வதாகவும், எதிரிகளை ஒழிப்பதாகவும் குறிக்கபட்டது

    சிம்மம் ஆசியாவின் பலமான நாடுகளின் அடையாளமாய் இருந்தது, பாரசீக பேரரசு முதல் பல பேரரசுகள் அதை தங்கள் லச்சினையாக வைத்திருந்தன, இந்தியாவிலும் அது வழமையானது

    குப்தர் காலத்திலே இந்த சிம்ம லச்சனை இருந்தது, பின்பு நான்கு சிங்களாக பரிமானம் பெற்று சக்தி, தைரியம், தன்னம்பிக்கை, பெருமை என நான்கு குணங்களை குறிப்பதாக இது அமைந்தது

    அசோகருக்கு முன்பே இந்த அடையாளம் இருந்தது, அசோகன் தன் சாரநாத் நகரில் இதனை வைத்திருந்தான், இந்தியா முழுக்க அவன் ஏகபட்ட கற்றூணை இதர சிம்மங்களோடு நிறுத்தினாலும் சாரநாத் கற்றூன் தனிதன்மையுடன் இருந்தது

    பின்னாளில் அவன் புத்தமதம் ஏற்று பாதை மாறினாலும் இந்த அடையாளம் மாறவில்லை, ஆம் அதன் தொடக்கம் இந்து அரச சின்னமாகவே இருந்தது

    சுதந்திர இந்தியாவில் அந்த சிம்ம அடையாளம் தேசத்தின் லச்சினையானது, இந்தியாவின் அடையாளமுமானது

    மோடி இந்து மன்னர்கள் கண்ட அந்த நான்கு சிம்மத்தை. குப்த மன்னர்களின் அடையாளத்தை இன்று நாட்டின் வலிமையான அடையாளமாக புதிய பாராளுமன்றத்தில் பிரமாண்டமாக நிறுவியிருக்கின்றார்

    தேசம் குப்தர் காலத்தில் பொற்காலமாய் மின்னியது என்பது வரலாறு, அவ்வகையில் வரும் காலம் தேசத்தின் பொற்காலமாய் அமையட்டும்

  15. வீரசிவாஜியின் எழுச்சியும் அவன் அமைத்த இந்து ராஜ்ஜியத்துடனான மோதலில் மொகலாயம் வம்சமே ஆட்டம் கண்டது, அவன் அரசு தொடர்ச்சியாக செய்த போர்களால் மொகலாய சாம்ராஜ்யம் வீழ்ந்து கொண்டிருந்தது,

    அந்த‌ முகலாய வம்சத்தின் கடைசி காலங்களில் குழப்பங்கள் பெருகிகின‌ இருந்தது, அதாவது மொகலாய வம்சம் வீழ ஆரம்பித்த பின் ஆளாளுக்கு தங்கள் பகுதி அரசரானார்கள்

    சுருக்கமாக சொன்னால் இன்னும் சிலமாதங்களில் கழித்து அதிமுகவில் 130 அணி உருவாக போக போவது போலவும் இருந்ந்தது நிலை

    தமிழகதிலும் நாயக்க ஆட்சிக்கு பின் வந்த‌ ஆர்க்காடு நவாபிடமிருந்து பலர் விடுதலை பெற்றதாக சொல்லிகொண்டார்கள், நாயக்க பாளையங்கள் எல்லாம் தனி அரசுகள் ஆயின‌

    அப்படி ஏரளமான சிற்றரசுகளில் ஒன்றில் வந்தவர்தான் அழகு முத்து கோன்.

    கோன் என்றால் கோனார் சாதியினை குறிப்பது அல்ல, கோன் என்றால் அரசன் என பொருள். அழகுமுத்து கோன் பற்றிய ஆய்வுகள் சில அப்படித்தான் சொல்கின்றன‌

    இவர் தென்னகத்தில் எட்டயபுரம் அருகே ஒரு சிற்றரசர், நெற்கட்டும் செவலை ஆண்ட பூலித்தேவன் போல இருந்திருக்கின்றார்

    இந்நிலையில்தான் ஆற்காட்டு போரில் தொடங்கி வங்கத்தில் பிளாசியுத்ததில் வென்றனர் கிழக்கிந்திய கம்பெனியார், மொகலாயர் சரிந்த நேரம் வலுவற்ற சிற்றரசர்களை வெல்வது அவர்களுக்கு எளிதாயிற்று, அதுதான் இந்தியாவில் அவர்கள் இனி ஆளவு முடியும் என அவர்களுக்கு நம்பிக்கை வந்த நேரம்

    அப்பொழுது ஐரோப்பா போரின் தொடர்சியாக இந்தியாவிலும் பிரென்ச்ஞ் பிரிட்டிஷ் மோதல் வந்தது, ஆர்காடு நவாப்பினை வைத்து விளையாடினார்கள், வெற்றி பிரிட்டானியருக்கு

    அப்பொழுதுதான் ராபர்ட் கிளைவ், ராமநாதபுர பக்கம் கான் சாகிப் எனும் வீரனை கண்டெடுக்கின்றான், அவனை படைதளபதியாகவும் ஆக்குகின்றான்

    கான் சாகிப் ஆற்காடு நவாபின் படையில் இருந்த வீரன், ஆற்காட்டு போரில் அவனின் வீரத்தை பார்த்து தன்னோடு சேர்த்து கொண்டான் கிளைவ்

    ஆர்க்காடு நவாப் முன்பு எங்கெல்லாம் வரிபிரித்தானோ அங்கெல்லாம் சென்று வரிபிரிக்கும் படியும் கட்ட மறுத்தால் ராஜியத்தை கைபற்றவும் உத்தரவிடுகின்றான் கிளைவ்

    அந்த கான் சாகிப்தான் மருதநாயகம் தான், அவன் இயற்பெயர் வேறு இஸ்லாமை தழுவி கான்சாகிப் ஆனான், பின் மதுரையினை ஒரு அரசனாக‌ ஆளும் பொழுது மதுரை நாயகமாகி பின் மருத நாயகம் ஆனான், அவனுக்கும் ஆற்காட்டு நவாபுக்கும் பொருந்தவில்லை வழக்கம் போல் நவாப் முக்கியம் என அவனை கொன்றழித்தனர்.

    இப்பொழுது கதை மருதநாயகம் பற்றியதல்ல, அழகுமுத்து கோனை பற்றியது

    கட்டாலங்குளம் சீமைக்கு வரிபிரிக்க வந்த கான்சாகிப்பிற்கும் அழகு முத்துகோனுக்கும் யுத்தம் வெடித்தது, கடுமையான யுத்தம்

    அழகுமுத்துகோன் எட்டயபுரம் படைகளோடு இணைந்து போரிட்டான், கடும் சண்டை அழகுமுத்துக்கோனை வெல்ல முடியவில்லை, மாறாக அவர் உறங்கும் பொழுது எப்படியோ பிடித்தார்கள்

    கெஞ்சினார்கள், மிரட்டினார்கள் அவர் மிக வீரமாக வரிகொடுக்க மறுத்தார், அதனால் மிக கொடூரமாக பீரங்கி முனையில் கட்டி கொன்றார்கள், அவரோடு ஏராளமானோர் கொல்லபட்டனர்

    தெற்கே வரிகொடுக்க மறுத்து கொல்லபட்ட முதல் மாவீரன் அவர்தான் என வரலாறு சொல்கின்றது, இவருக்கு அடுத்து புலித்தேவன், அவர் கொல்லபடவில்லை ஆனால் தலைமறைவானார், அவரை விரட்டியது அதே கான்சாகிப்

    பின்னாளில் இதே கான்சாகிப் வெள்ளையரை எதிர்த்து மருதநாயகமாகி பின் இதே போன்று பீரங்கி முனையில் கட்டபட்ட காலமாற்றமும் நடந்தது

    அதாவது தமிழனை கொண்டே தமிழனை அழித்துவிட்டு பின் அந்த தமிழனையும் கொன்றனர் வெள்ளையர்

    அழகுமுத்துகோன் தொடங்கி வைத்த இந்த எதிர்ப்புதான் பின் பூலித்தேவன், கட்டம்பொம்மன், மருது சகோதரர்கள் என தொடர்ந்து வந்தது

    இவர்களை போன்ற மாவீரர்களின் வரலாறு எங்கு சேமிக்கபட்டிருந்தது என்றால் ஓலைசுவடிகளில் அல்ல மாறாக இவர்கள் வீரமாக இறந்தபின், இவர்கள் நினைவாக அப்பகுதி மக்கள் சொன்ன கும்ம்பிபாட்டில் இருந்தது

    வெள்ளையர் இருக்கும் வரை அவை ஏட்டுக்கு வரவே இல்லை

    பின் சுதந்திரமடைந்த‌ காலத்தில் மபொசி அப்படி ஒரு கும்மிபாட்டை கேட்டுத்தான் கட்டபொம்மன் கதையினை ஏட்டுக்கு கொண்டுவந்தார், அது நாடகமாயிற்று, பின் திரைப்படமாகி மங்கா புகழ்பெற்றது, கட்டபொம்மனும் பிரபலமானார்

    மருது சகோதரர் கதையும் கண்ணதாசனால் படமாக்கபட்டது

    மதுரை கும்மி பாடலில் வாழும் மருதநாயகம் கதையினை பிடித்து கமலஹாசன் தொங்கி கொண்டிருக்கின்றார் இன்னும் விட்டபாடில்லை, விடமாட்டார்

    இன்னும் எத்தனை வரலாற்று நாயகர்கள் கிராமிய பாடல்களில் புதைந்திருந்தனரோ தெரியாது, கிராம கும்மிகள் அழிந்துகொண்டிருக்கும் காலத்தில் அவர்கள் கதையும் வெளி தெரியாமலே அழியலாம்

    இந்த பூலித்தேவன், அழகுமுத்துகோன் எல்லாம் கிராமிய பாட்டு வடிவிலே இருந்து பின் வெளிகொணரபட்டன, இன்று அவர்களுக்கு சிலைகளும் நினைவு இல்லமும் உண்டு

    ஒரு விஷயம் உறுதியாக சொல்லலாம், முதல் விடுதலை குரலை பூலித்தேவனுக்கு முன்பே ஒலித்தவர் அழகு முத்துகோன்

    அவர் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தலாம்

    வீரன் அழகு முத்துகோனின் வரலாறு இதுதான், அவர் சிற்றரசன், பூலித்தேவன் போல தனி அரசன், எட்டயபுர அரசனுக்கும் இவருக்கும் நல்ல உறவு இருந்தது, அவர் பின்னாளில் தன்னை விடுதலையான அரசனாக அறிவித்துகொண்டவர்.

    அழகுமுத்து கோனுக்கு சென்னையில் சிலையும் உண்டு

    நெல்லை மண் எத்தனையோ வீரர்களை நாட்டிற்கு கொடுத்தது, அதில் ஒருவர்தான் இந்த அழகுமுத்து கோன்

    அழகுமுத்து கோன் என்பது அழகுமுத்து அரசன் என்ற பொருளிலே வரும்

    நெல்லை கட்டாலங்குள மாவீரன் அவன் அந்த வீரதமிழ் இந்து அரசனுக்கு சுதந்திர குரல் எழுப்பிய மாவீரனுக்கு, வீரவணக்கம்

  16. சுமார் 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இயங்கி வந்த “ரத்த குடோன்” கட்சி இன்று உடைந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கபட்டது

    அதாவது திமுகவினர் உடன்பிறப்புக்கள் என அழைக்கபடுவது போல அதிமுகவினர் ரத்தத்தின் ரத்தங்கள் என அழைக்கபடுவார்கள், அடிக்கடி ரத்தம் பார்க்கும் காட்சியும் அங்கு உண்டு

    அப்படி ரத்த காட்டேரிகள் நிரம்பிய கட்சியினை நிறுவணர் ராமசந்திரனும் இரண்டாம் தலைவர் ஜெயாவும் அடக்கி வைத்திருந்தார்கள், என்ன மந்திரம் மாயம் செய்தார்களோ அவர்களிடம் ரத்த காட்டேரிகள் அட்டகாசம் செய்யாமல் ஒழுங்காக ரத்த குடோனுக்கு காவல் இருந்தன‌

    இப்பொழுது மறுபடியும் ரத்த காட்டேரிகள் அழிச்சாட்டியத்தை ஆரம்பித்தன, முன்பு தங்களை அடக்க முயன்ற் சசிகலா எனும் டூப்ளிகேட் மந்திரவாதியினை தூர வீசிய ரத்தகாட்டேரிகள் இப்பொழுது தங்களுக்குள் அடித்து கொண்டிருக்க்ன்றன‌

    திமுகவின் நாத்திக தேசவிரோத கொள்கை ஒன்றே தங்களின் பலம் என பசு வேடமிட்டு இதுகாலம் வலம் வந்த ரத்த காட்டேரிகளின் உண்மை முகம் இப்பொழுது தெரிகின்றது

    எந்த நேரத்தில் “ரத்தத்தின் ரத்தங்களே” என எம்ஜி ராம்சந்தர் அழைக்க தொடங்கினாரோ தெரியவில்லை, அந்த முகூர்த்தம் இப்பொழுது பலித்து கொண்டிருக்கின்றது

    அண்ணா நாமம் வாழ்க

  17. *காஷ்மீர் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி தான் சிறப்பு அந்தஸ்தை நீக்க வேண்டும்…காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம்*

    1. நீங்கள் பொற்கோவிலுக்குள் #அதிரடிப்படை யினரை அனுப்பி நுழைய வைப்பதற்கு முன்பு…
    நீங்க பஞ்சாப் சீக்கியமக்களிடம் கருத்து கேட்டிங்களா….
    ப.சி. அவர்களே..?

    2. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பறதுக்கு முன்னாடி… இந்திய மக்களிடமும், இலங்கை மக்களிடமும் நீங்கள் கருத்து கேட்டு… மக்கள் அனுமதி கொடுத்த பிறகுதான் #அமைதிப்படை யை அனுப்பி வெச்சிங்களா நீதிமானே.??

    3. இந்தியா முழுவதும் #எமர்ஜன்சி யை அமல்படுத்தறதுக்கு முன்னாடி மக்களிடையே கருத்து கேட்டு,
    மக்கள் அனுமதி கொடுத்த பிறகுதான் அமல்படுத்தினீங்களா யோக்யவானே.???

    4. இந்தியாவுக்கு சொந்தமான.. தென் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான… #கச்சதீவை தாரை வார்க்கும் போது….
    தமிழக மக்களிடமோ… அல்லது
    தென் தமிழக மீனவர்களிடமோ கருத்துக்களை கேட்டு… அவர்கள் அனுமதி கொடுத்த பிறகா… இலங்கைக்கு இலவசமாக வழங்கினீர்கள்… மானஸ்தனே…

    5. இந்திய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் மிஷின்களை பாகிஸ்தானுக்கு விலை பேசி விற்கும் போது.. இந்திய மக்களிடம் கருத்து கேட்டு, அவர்கள் அனுமதி கொடுத்த பிறகுதான் பாகிஸ்தானுக்கு விற்றீர்கள் நியாயஸ்தனே.???

    6, விஜய்மல்லையாவிற்கும், நீரவ்மோடிக்கும் மற்றவர்களுக்கும் பல இலச்சம் கோடிகளை 40% கமிஷன் பெற்றுக்கொண்டு வங்கிகளில் கடன் கொடுக்கும்பொழுது மக்களிடம் அனுமதி பெற்றுத்தான் கொடுத்தீர்களா கொடைவள்ளலே…???

    7,. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுப்பதற்கு முன்பு… இந்திய மக்களிடம் கருத்து கேட்டு…
    அவர்கள் அனுமதி கொடுத்த பிறகா #சிறப்பு_அந்தஸ்து வழங்கினீர்கள் பொறம்போக்கே.????,

    8. அவ்வளவு ஏனுங்க…முறைகேடாக… இந்திய மக்களை ஏமாற்றி சம்பாதித்த பணத்தால்…. நீங்கள் உலகம் பூரா சொத்துக்களை வாங்கி குவிச்சதெல்லாம்…இந்திய மக்களிடம் அனுமதி வாங்கிய பிறகா செய்தீர்கள் தேசத்துரோகியே.??????

    9. இதெல்லாம் கூட போகட்டும்….
    உங்க குடும்பத்தினர் மீதுள்ள சொத்து குவிப்பு வழக்குகள்..வரிஏய்ப்பு வழக்குகளை… எதிர்த்து..
    இதுவரையில் 27 வது முறையாக வாய்தாவுக்கு வாய்தா வாங்கிட்டு இருக்கீங்களே… இதையாவது மக்களிடையே கருத்து கேட்டு, அவர்கள் அனுமதி கொடுத்த பிறகுதான் வாய்தா பிச்சை எடுக்கறீங்களா யோக்கிய சிகாமணி யே.???????

    10. உங்கள் #காங்கிரஸ் கட்சியின் அரசியல் ஆதாயத்திற்காக.. 356 வது பிரிவை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு முதல் பல மாநில அரசுகளை பலமுறை கலைத்தீர்களே…அந்தந்த மாநில மக்களிடம் கருத்துக்களைகேட்டு, அவர்கள் அனுமதி கொடுத்த பிறகுதான் கலைத்தீர்களா சிவகெங்கை சீமானே.????????

    11, ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா மாநிலம் கொடுப்பதற்கு முன்பு அம்மாநில மக்களின் கருத்துக்களை கேட்டு, அவர்கள் அனுமதி கொடுத்த பிறகா.. #தெலுங்கானா வை பிரித்து கொடுத்தீர்கள் சீமான் வீட்டு செல்லப் பிள்ளையே.?????????

    நாட்டை காட்டி கொடுத்தும், கூட்டி கொடுத்தும்…
    சொகுசு வாழ்க்கை வாழுகிற நீயெல்லாம்… மக்களிடம் கருத்து கேட்க மாட்டாய்…

    நாட்டை ஒன்றிணைக்க… தீவிரவாதத்தை ஒழிக்க… எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒடுக்க…
    பாரததேசத்தை அமைதிப்பூங்காவாக மாற்ற…
    தேசப்பற்றோடு செயல்படுகிற #மோடி அரசு மட்டும்…
    இராணுவ இரகசியங்களை வெளிப்படையாக தெரிவித்து…
    பாகிஸ்தானிடமும்.. சீனாவிடமும்…
    அனுமதி பெற்ற பிறகுதான் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்க வேண்டுமா…????

    உன்னையெல்லாம் தேசதுரோகவழக்கில் இன்னும் கைது செய்யாமல் விட்டுவைத்திருப்பதே நாங்கள்செய்த தவறு…

  18. மனிதர்களை மிகச்சரியாக அடையாளம் காட்டுவதில் காலம் சிறந்த ஆசான்.அப்படி தான் தற்போதும் அதிமுக தலைவர்களின் கோர முகத்தை அடையாளம் காட்டி கொண்டிருக்கிறது.

    ஜெயலலிதா அம்மையார் இறந்த பின்னர் நடந்த ட்விஸ்ட் அண்ட் டர்ன் மர்ம நாவலுக்கு இணையானது.

    அம்மையாரின் இறப்பு மர்மம், சசிகலா மீதான சந்தேகம், தற்காலிக முதல்வராக ஓபிஸ் நியமிக்கப்பட்டது, தர்ம யுத்தம் நடத்தியது, சசிகலா சிறை சென்றது, ஈபிஎஸ் முதல்வரானது என்று திருப்பங்களுக்கு கொஞ்சமும் பஞ்சம் கிடையாது. அத்தனையும் மர்மங்கள்.

    இதில் குற்றவாளி ஒருவர் மட்டும் கிடையாது. அத்தனை பேருமே சந்தர்ப்ப வாதிகள் தான், ஏமாற்றுகாரர்கள் தான். யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை.

    ஈபிஎஸ் தலைமையிலான அரசு சீட்டுகட்டுகளால் கட்டப்பட்ட கோபுரம் போன்றது, எந்த நேரமும் நிலைகுலைந்து சரியலாம் என்ற நிலைதான் தொடக்கம் முதலே.

    முதலில் சற்று உணர்ச்சிவசப்பட்டு தங்களுக்குள் அடித்து கொண்டாலும், பின்னர் சுதாகரித்து கொண்டார்கள். ஆட்சி ஐந்து வருடம் என்பது நிச்சயம் அதை ஏன் கெடுத்து கொள்ள வேண்டும் என்ற சுதாகரிப்பு.

    மனதில் ஆயிரம் வெறுப்பு இருந்தாலும் ஐந்து வருடங்களை தொழில் ரீதியாக சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதில் கடைசி வரை சூதானமாகவே இருந்தார்கள்.

    தேர்தலில் நேரத்தில் கூட தங்கள் காழ்புணர்ச்சிகளை ஓரம் வைத்துவிட்டு தோளில் கை போட்டு கொண்டார்கள். எல்லாம் பதவியும், பணமும் படுத்திய பாடுதான் காரணம்.

    ஒருவேளை அதிமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்து இருந்தால் இந்த நொடி வரை எந்த பிரச்சனையும் இருந்திருக்காது. அவரவர் தங்கள் தொழில்களில் அதாவது பணம் சம்பாதிப்பதில் பிஸியாக இருந்திருப்பார்கள்.

    இவர்களின் சுயரூபம் இதுவரையிலும் தமிழக மக்களுக்கு தெரியாமலேயே இருந்திருக்கும். அதிமுக தோற்கும் பட்சத்தில் மட்டுமே பாஜக சரியாக அரசியல் செய்து தங்களை வளர்த்து கொள்ளமுடியும்.பாஜக வளர வளர அதிமுகவும் திமுகவும் பலமிழந்துதானே போக வேண்டும்.

    அதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது. தாமரை இதழ்களை விரித்து மலர மலர இலைகள் சிறுத்து போகிறது.

    நமக்கு ஐபிஎஸ் இருக்கையில் ஓபிஎஸ் சும் ஈபிஎஸ் சும் எதற்கு?

    காலம் அதன் கணக்கை சரியாக செய்து கொண்டிருக்கிறது. நடக்கட்டும் எல்லாம் நன்மைக்கே…

  19. இந்தியாவில் புதிதாக கட்டப்பட்டுவரும் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு மேற்பகுதியின் உச்சியில் வெண்கலத்தால் ஆன 9,500 கிலோ எடையுடன் கூடிய 6.5 மீட்டர் உயரமுடைய பிரமாண்டமான தேசிய சின்னத்தை நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். இந்தியாவின் இந்த தேசிய சின்னம் உருவானதற்கு அசோகரின் 2000 ஆண்டுக்கும் முன்னதான வரலாற்றுப் பின்னணி உண்டு. மேலும் அசோகரால் கிமு 3 ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட கிர்னார் பெரும்பாறைக் கல்வெட்டில் சேர, சோழ, பாண்டிய, மன்னர்களைப்பற்றிய கல்வெட்டு வாசகமும் உண்டு. இது நமது மூவேந்தர்களின் காலத்தை கிறிஸ்து பிறப்பிற்கு முன்பாக எடுத்துச் செல்வதற்கு சிறந்த ஆவணமாக உள்ளது.!

    உத்திரபிரதேசத்தின் வாரணாசியிலுள்ள சாரநாத் எனும் நகரத்தில் கிமு 250 களில் அசோகரால் நிறுவப்பட்ட அசோக ஸ்தூபியில் இருந்து எடுக்கப்பட்ட அசோகச்சக்கரமே இந்தியாவின் தேசியச்சின்னம் ஆகும். இந்த தூணின் நான்கு புறமும் உள்ள நான்கு சிங்கங்களும் அதிகாரம், வீரம், பெருமை, நம்பிக்கை ஆகிய நான்கு பண்புகளையும் குறிக்கிறது. இப்படி நான்கு குணங்களுடன் கர்ஜித்து நிற்கும் நான்கு சிங்கங்களின் அடிபீடத்தின் நான்கு திசைகளின் மையத்திலும் தர்ம சக்கரம் இருக்கும். இந்த நான்கு சிங்கங்கள் அமைந்துள்ள தாமரை வடிவம் கொண்ட பீடத்தின் நான்கு திசைகளிலும் யானை, குதிரை, எருது, சிங்கம் போன்ற விலங்குகள் இருக்கும்.!

    1950 ஆம் ஆண்டு அசோகத்தூணின் மேற்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட இந்த இலச்சினை இந்திய அரசின் தேசிய சின்னமாக எடுக்கப்பட்டது. இதை நமக்கு பார்க்கும் விதமாக மூன்று சிங்கங்களும், அடிப்பகுதியில் தாமரை போன்ற அமைப்பு நீக்கப்பட்டும், அடிப்பகுதியில் தர்ம சக்கரத்தின் இடதுபுறத்தில் உள்ள குதிரை ஆற்றலையும் வேகத்தையும் குறிக்கும் விதமாகவும், வலது புறத்தில் உள்ள எருதானது கடினை உழைப்பையும் உறுதியையும் குறிக்கும் விதமாகவும் மாற்றி அமைக்கப்பட்டு இவ்விரண்டு விலங்கின் உருவங்கள் மட்டுமே நமது பார்வைக்கு தெரியும் விதமாக 1958 களில் மாதவ் சாஹ்னி என்பவரால் மாற்றி அமைக்கப்படடது. இந்த இலச்சினையில் “சத்ய மேவ ஜெயதெ” என்று தேவநாகரியில் பொறிக்கப்பட்டிருக்கும். இதற்கு தமிழில் வாய்மையே வெல்லும் என்று பொருள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *