தமிழரின் தாய் மதம் இந்துவரையறையில்லாத இறையைப் போன்றதே இந்துமதமும். அனைத்தையும் அரவணைத்து, எதன் மீதும் வெறுப்பில்லாமல் இருந்ததால் இதற்குக் கரையும் எல்லைகளும் என்றும் இருந்ததில்லை.

ஆனாலும், அவ்வப்போது இருள் மேகங்கள் சூழும் நேரத்தில், நமது முன்னோர்கள் இந்தக் கடலுக்குக் கரைகட்டி அதைக் காப்பாற்ற முயன்றனர். இந்த முயற்சி மதத்தைக் காக்க அல்ல, மானுடத்தைக் காக்க. ஆம், இந்து மகான்கள் தொடர்ந்து இந்த உலகில் கலங்கரை விளக்கமாய் திகழ்ந்து, அன்பு ஒளியைத் தொடர்ந்து வீசி, அமைதியெனும் இந்து தர்மத்தின் கரைக்குத் தள்ளாடும் கலங்களாம் மனித உள்ளங்களைத் தொடர்ந்து கொண்டு வந்து சேர்த்துக் கொண்டுள்ளனர்.

இதன் விளைவாகவே பாரத தேசமெங்கும் நாம் மிகப் பெரிய வேதாந்த, சைவ, வைணவ, பக்தி இயக்கங்களின் எழுச்சியை ஆயிரத்தைநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடர்ச்சியாகக் கண்டு வந்தோம். சங்கரரும், ராமானுஜரும், மத்வரும், கண்ணப்பரும், அப்பரும், சம்பந்தரும், நந்தனாரும், நம்மாழ்வாரும், துளசிதாசரும், திருப்பணாழ்வாரும், ஆண்டாளும், மீராவும், ஏனைய நாயன்மார்களும், ஆழ்வார்களும், ஆன்மீகப் பெரியோர்களும் இருளில் ஆழவிருந்த நமது சமுதாயத்தை இறையன்பில் தோய்த்துத் தூக்கி நிறுத்தினார்கள். தமிழகத்தில் அதன் விளைவாகத் தமிழ் வாழ்ந்தது, தமிழ்ச் சமுதாயம் ஓங்கி உயர்ந்தது. பாரத நாடெங்கும் இந்த ஆன்மிக ஒளி அன்னியர் தாக்குதல்களையும், ஆக்கிரமிப்புகளையும் எதிர்த்துப் போராடும் உறுதியையும், வீரத்தையும் நமக்கு அளித்தது. இந்தத் தூய்மையான இறையன்பின் ஒளி இலங்கை, மலேஷியா, இந்தோனேஷியா என்று விரிந்து பரந்து முழு உலகையும் ஆட்கொண்டது.

உலக சரித்திரத்தில், மற்ற மதங்களெல்லாம் ஆதிக்கம் செலுத்திட விழைந்த நிலையில், தொடர்ந்து என்று துவங்கியது என்று அறியா வண்ணம் மெள்ள மெள்ள அன்பாலும், ஆன்மீக தத்துவங்களாலும் வளர்ந்தது நமது இந்து மதம். மதங்களுக்கிடையே அன்பு மதம் என்ற பெருமை இந்து மதத்துக்கே உண்டு, நாம் எவரையும் நிர்ப்பந்தித்து மதத்தைத் திணித்ததில்லை, ‘என் மதத்தைப் பின்பற்றாவிட்டால் நீ நரகத்துக்குச் செல்வாய்’ என பயமுறுத்தி வலுக்கட்டாயமாக வாள் முனையில் நம் மதத்தை எவர் மீதும் திணித்ததில்லை. அன்பே நம் வழியாய் இருந்துவந்துள்ளது. ஆதிக்கம் செலுத்த விழைந்து, எதையும் செய்யத் தயாராக இருக்கும் மதங்களின் தொடர்ந்த தாக்குதலுக்குப் பின்பும், இன்றும் இத்துணை பெரிய சமுதாயம் வாழ்ந்து வருவதே இதன் பின்னால் இருக்கும் ஆன்மீக ஒளிக்கு சான்றாகும்.

இன்றும் கருமேகங்கள் நம்மை சூழ்ந்திருக்கின்றன. இச்சூழலில், நமது எதிர்காலச் சமுதாயத்திற்கு நமது கலாச்சாரத்தை, முன்னோர்களின் வழியை, மாண்புகளை, தத்துவங்களை, அறிவொளியை, நம் சமுதாயம் நேர்கொள்ளும் பிரசினைகளை, விவாதங்களைத் தமிழில் கொண்டு செல்வது அவசியம் என்ற நோக்கில் இத்தளம் உருவாக்கப் பட்டுள்ளது. இங்கே நாங்களும் மாணாக்கர்கள் தாம். எங்களுக்குத் தெரிந்ததை உங்களுக்குச் சொல்கிறோம், நீங்களும் எங்களுக்கு வழிகாட்டலாம். உங்கள் கருத்துக்களை, படைப்புகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.

~ தமிழ்ஹிந்து  நிர்வாகம் & ஆசிரியர் குழு

தமிழ்ஹிந்து.காம் தளத்தில் வரும் அனைத்துப் படைப்புக்களுக்கும், கட்டுரைகளுக்கும், கருத்துகளுக்கும் அதை எழுதியவர்களே பொறுப்பாவார்கள். அதற்கு தமிழ்ஹிந்து தளம் எவ்வகையிலும் பொறுப்பேற்றுக் கொள்ளாது.

படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே.

தமிழ்ஹிந்து.காம் தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், அதில் வரும் மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

கட்டுரைகளும், மறுமொழிகளும் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தளத்தில் வரும் விளம்பரங்களின் உண்மைத் தன்மைக்கு தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

55 Replies to “அறிமுகம்”

  1. படைப்புக்களை தங்களுக்கு அனுப்ப, தங்களுடைய மின்னஞ்சல் முகவரி வேண்டும். அஃது என்ன?

  2. நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள் தமிழ் இந்து டாட்காம் குழு..

  3. மிக நல்லமுயற்சி

    இதைப்போன்ற ஒரு தளம் நமக்கு இல்லையே என்று ஏங்கி இருந்தேன்

    புது புது பதிவுகளை இட்டு நமக்கு எதிரானவர்களின் முகத்தில் கரியை பூசுங்கள்.

    எனது ஒத்துழைப்பு எப்பொதும் தங்களுக்கு உண்டு

    நன்றி

  4. உங்கள் படைப்புக்களை thamizhhindu at gmail dot com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறேன்.

    நன்றி.

  5. மிகவும் முக்கியமான தேவையான முயற்சி. நாம் இன்னும் பல மைல்கள் பயணிக்க வேண்டியதிருக்கிறது. ஆனால், நம் தோழர்களை ஒன்று சேர்ந்து ஓரணியில் செயல்பட்டால் மிகவும் விரைவாக சென்றிடலாம். தோழர்களே ஒன்று கூடுங்கள். இந்த உலகம் உங்கள் சேவைக்காக காத்திருக்கிறது.

    வாழ்க வளமுடன். வளர்க தமிழுடன்.

  6. I am not sure if I have the fonts for viewing this site, it does not open in Mozilla at all

  7. It is a great initiative. We need to reach out to all Tamils and educated them the need to understand their roots. I am ready to help in whatever way you need me to.
    Please keep up the good work.

  8. very efficiently, effectively presented.
    the giving of the hypertext for linking indicates ambient energy.
    such spaces for exchange and the honouring of Vaak are oases in dreary landscape.
    i am sure this will begin to serve as an index of collective perspective and hence help keep hyenas away till the meal is done with by the true hunters!
    the naming as tamil-hindu is another indicator of ambient resonance. the fraud regarding projecting tamil and sanskrit as being of different origins, would perhaps get exposed here, and the stereo-scopic vision of siva seeing thru TWO eyes [sanskrit and tamil] being the true origins of the divine languages connecting the North with the South, the Urban with the non-Urban, the Lord with the Labour, Psupati with Pasu, Urban Deivayaanai with SC/ST Valli.

    wishing all success in a noble Project linking politics with transcendant matters.

  9. I am very happy to read the contents of the web pages. They are really very good. I liked the explanation of “Thevar” on many Gods of Hindus.

    I shall be happy to contribute my article typed in Tamil Font regarding the above.

    I shall send my Tamil write up in pdf.

    Regards,

    Seshadri Rajagopalan

  10. This is an excellent initiative with great potential. Taking Hunduism and talking Hinduism to the masses in their own language is a requirement the value of which has not been still fully realized.This Website should also strive consistently to educate and persuade the vast Tamil masses which have been badly mislead for six to seven decades now. The task is not easy but is well worth it.Acharya Sabha will be happy to be of assistance in this great effort.
    R.venkatanarayanan

  11. அகிலம் செழிக்க!
    ஆன்மீக வழியில் !
    ஒன்றுபடுவோம்!

  12. Some how we need to take this
    website to young tamil youths.

    In tamil nadu hinduism have been
    badly mislead by the various political parties.

    We need to make our younsters to be proud
    of their literature, like devaram, kamba ramayanm
    thirupugaz, periya puranam and nayanmar , alwar’s charithram.

    the website also can conduct several competeitions
    in various tamil nadu villages –
    competitions can be
    devaram panca puranam chanting,
    nalayira divya prabhandam chanting,

    for young youths encourage them to present
    power point presentation of various life story
    our nayanmar, their devotion ,etc

    educating our young tamil hindus are very very imp.

    we are already doing that in australia.

  13. இந்துத் தமிழர்களின் தாகத்தை தணிக்கும் வகையில் அருமையான தகவல்களை உள்ளடக்கிய இந்த இணைய தளம் மேலும் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள்..

  14. Excellent Web Site. Sanatana Dharma Foundation which hosts a weekly radio program in USA willing to extend its help to bring some of your articles to radio. Please let me know how we can help.

  15. A strong coordinated pursuit. My heartfelt wishes and let me see how I could contribute in your social development activities.

  16. Shrimanji Namasthae,

    This is really a great initiative on your part to bring forth a website for the welfare of Tamil Hindus exclusively. In a land srongly rooted in Dravidian culture, it is high time someone took the initiative to weed out all evil forces trying to tarnish the religion of Tamils, which is otherwise Hinduism. Without “Devaram, Thiruvasagam, Divyaprabandam, Kambaramayanam” and numerous works of saints and religious scholars the Tamil literature is incomlplete. Political parties self proclaiming themselves as followers of Periyar are trying to drive a wedge into the Tamil culture. Well now with this kind of a website we can easily expose the dubious distinctions of the so called secularists.

  17. Yours is really good service to hindu society…
    This is essential to our generation..So keep it up..

    Dharmo Rakshathi Rakshitha..ha :
    God ’s grace always with you..

    JAI HIND….

  18. “இன்றும் கருமேகங்கள் நம்மை சூழ்ந்திருக்கின்றன. இச்சூழலில், நமது எதிர்காலச் சமுதாயத்திற்கு நமது கலாச்சாரத்தை, முன்னோர்களின் வழியை ,மாண்புகளை, தத்துவங்களை, அறிவொளியை அழகு தமிழில் கொண்டு செல்வது அவசியம் என்ற நோக்கில் இத்தளம் உருவாக்கப் பட்டுள்ளது. Thats really good.

  19. The site is good. Understandable even for a non Tamilian like me, and introduced to Tamil by my wife.

    Let us not introduce fanaticism.

    Hinduism is a way of life, and following certain veda agama principles are core to our religion. Each religion connects us to God. There could have been one religion before, we became Hindu’s. Caste system is to be thrown out of our day to day living. All are equal in front of God, divided only by borders and blood group.

    I am from a traditional vedic scholar family of Maharastra, who grew up in Calcutta, knows the value of give and take, even withstanding issues of hardcore elements.

    Continue your service.

  20. தமிழ் ஹிந்து குழுவினருக்கு ,

    வணக்கங்கள், வாழ்த்துகள், நன்றிகள்…

    இது போன்ற ஒரு அமைப்பை / இயக்கத்தை/ குழுவை நண்பர்களுடன் இணைந்து தொடங்க எண்ணியிருந்தேன்.

    நீங்கள் செய்திருக்கிறீர்கள் …

    இணைந்து செயல்பட விரும்புகிறேன்…

    நன்றி,

    அன்புடன்,
    சதீஷ் ராமதுரை

  21. After looking into the Video recording of Ms. Wafa Sultan, I predict that many Indian Women Muslims may be tempted to write against the Islam;
    I give below the words spoken by Wafa Sultan thro’ video:

    ISLAM Vs. WORLD OF CIVILISED RELIGIONS

    The Clash we are witnessing around the world is not a clash of religions or clash of civilisation—

    It is the clash between opposites between two eras.
    It is a clash between a mentality that belongs to middle ages and another mentality belonging to 21st century
    It is a clash between civilisation and backwardness
    It is a clash between civilised and primitive
    It is a clash between barbarity and rationality.
    It is a clash between freedom and oppression

  22. Very Good Initiative. It makes it all the more important to be in Tamil, as most Tamils are brain-washed by the so-called Dravidian ideology and Pagutharivi. I request you to be well with in the limits especially during the tyranny rule of this Axis of Evil both in the centre and the State.

    Very Survival and Rajathanthiram is more important than the hard-core approach.

    All the Best. Vande Mataram

  23. இந்துத் தமிழர்களின் தாகத்தை தணிக்கும் வகையில் அருமையான தகவல்களை உள்ளடக்கிய இந்த இணைய தளம் மேலும் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள்..
    இந்துத் தமிழர்களின் தாகத்தை தணிக்கும் வகையில் அருமையான தகவல்களை உள்ளடக்கிய இந்த இணைய தளம் மேலும் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள்..
    இந்துத் தமிழர்களின் தாகத்தை தணிக்கும் வகையில் அருமையான தகவல்களை உள்ளடக்கிய இந்த இணைய தளம் மேலும் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள்..

  24. பலரிடம் கொண்டு செல்லப்பட வேண்டிய அருமையானதொரு வலைத்தளம். இது குறித்து இன்று கலிஃபோர்னியா வளைகுடாப்பகுதியில் இட்ஸ்டிஃப் (www.itsdiff.com) ஸ்ரீ நடத்தும் ரேடியோ நிகழ்ச்சியில் நான் ஓர் அறிமுகம் கொடுத்தேன். இந்தப்பணி வெற்றிகரமாகத் தொடர கடவுளை வேண்டுகிறேன்.

  25. தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

    இந்து என்று சொல்லடா இன்பம் கொண்டு துள்ளடா

  26. Its a privilege to view such a site which give immense importance to the root of hinduism and the language as such. i would be a honor if the site created on the blessing of sriaravamudan also feature in your site. thank you in advance.

  27. i went through the pages. it is a great attempt.the work that remains to be done in carrying the message of our religion to the tamil speaking people is enormous. i am happy to know that tamilhindu.com has takenup this mission.
    i have a suggestion for the editorial desk. bertrand russels why iam not a christian? can be translated for the tamil audience or atleast portions of it.the book provides a detailed account of the suppression attempted by the church against anyone who dared to use his greymatter.a person who is capable of writing scientific matters in tamil can be requested. once this work comes out, the hypocracy of the rationalism believed and practiced in tamilnadu will stand exposed.
    yours
    subbu

  28. கண்டேன் “தமிழ் இந்து”
    இந்து தருமத்தின் ஒரு விருந்து ,
    மன ஏக்கத்திற்கு ஒரு மருந்து ,
    படித்து பரவசமானேன் மனமுவந்து
    மதம் மாற்றம் தவிர்க்க
    ஒரு சிறந்த இணையம்
    அன்பு மேலும் வளர
    ஒரு பண்பட்ட வளையம்
    வாழ்த்துக்கள் அன்புடன் விசாலம்

  29. தமிழ் இந்து மின்னிதழ் அருமையான பணியைச் செய்கின்றது. தமிழரின் மதம் பற்றிய எதிர்மறையான சிந்தனைகளைக் களையும் பணியில் சிறந்து நிற்கின்றது. என் மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  30. அன்புள்ள ஐயா,

    இந்த வலைத்தளம் எனக்கு ஒரு நண்பரால் அறிமுகம் செய்யப்பட்டது.இந்த தளத்தில் உள்ள தகவல்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாகவும் நாட்டுப்பற்றைத் தூண்டும் வகையிலும் அமைந்துள்ளன. மக்களிடம் ஆன்மீகத்தை வளர்க்கும் முயற்சியிலும் தங்கள் பங்கு மிகவும் போற்றத்தக்கது.சிறக்கட்டும் உங்கள் பணி.

    நன்றி

  31. வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித் திருநாடு!

    nbalu

  32. It is great pleasure to see the website for Hindu Tamils.It is high time we need to protect and preserve our civilization. I heard a channel is also going to come for Hindu Tamil

    https://www.ohmtv.in/

  33. இந்தத் தளத்தைக் கண்டுபிடித்ததில் எனக்கு என்ன மகிழ்ச்சி தெரியுமா!
    உங்களின் ஆதாரச் சிந்தனைகளுக்கு ஆதரவாக நானும் இட விரும்பும் மடல்கள் ஆசிரியர்குழுவுக்கு ஏற்புடையவையாய் இருக்கும் என்று ஒரு நம்பிக்கை!
    கீழே தரும் உண்மைக்கதை ஆங்கிலத்திலும் விநியோகிக்கப்பட்டுப் பிறநாட்டுஅறிஞர் சிலரின் பராட்டும் பெற்றுள்ள தைரியத்தில் இங்கே இடுகிறேன். அதில் நான் சொன்னபடியே மேன்மேலும் கண்டுபிடிப்புகள் நடந்து வருவதை லேட்டெஸ்ட் செய்திகளிலும் பார்க்கலாம்!

    ‘நகுபோலியன்’ [என்ற புனைபெயரில் கணையாழியில் அறிமுகமான Nபாலசுப்பிரமணியன்]

    Please goto

    https://www.appusami.com/v2/Default.asp?ColsName=2&ColsValue=4494&hidtxtvid=112&catid=11

  34. Sir,Your articles are good. we are Hindus. We should unite for our strength. Best wishes to your websites.

  35. இந்து ஒரு மஹா சமுதிதிரம், அதில் பல ஜீவந‌திகளும் அதனுள் பலமாக பல உப நதிகளும்,
    கிளை நதிகளும் சங்கமம். அதுபோலதான் இந்துவும். பல சாதி, சனங்களை கொன்டதுதான். அது குறிப்பிட்ட சமூகதிற்க்கு மட்டுமல்ல. பிரித்தாளுதல் ஆங்கிலேயர்களால் கொன்டு வர‌ப்பட்டு, பிற் காலத்தில் விஸ்வரூபம் எடுத்து விட்டது. இதைஉணர்ந்து, ஓன்றுபட்டால் எந்த சக்தியும் அழிக்க முடியாது ‍ என் கருத்து

  36. அன்புடையீர்: ஸாய்ராம். வணக்கம். ஏன் தமிழ் இந்து? ‘இந்து’ என்றிருந்தால் அனைத்திந்திய, ஏன், அகில உலக, இந்துக்களையும் அரவணைத்துக்கொள்ளும் வகையாக இருக்கட்டுமே என்ற எண்ணத்தில்தான், ஆசையில்தான் சொல்கிறேன். தளம், வளத்துடன், இந்து ஆன்மீகவாதிகளின் நீண்ட நாள் அவாவை பூர்த்திசெய்யும் வண்ணம், வண்ணமயமாக அமைந்திருப்பதும் அவன் செயல் தான். அதற்கு தங்களைப்போல் ஆர்வம், திறன் கொண்டவர்களை தேர்ந்தெடுத்திருப்பது மிக மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். இம்முயற்சியில் மென்மேலும் பல வெற்றிகள் பெற்றிட பிரார்த்தனைகள்.

    நான் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவன், 30 ஆண்டுகள் மும்பையில் பணி புரிந்தபின் ஓய்வு பெற்று தற்சமயம் பெங்களூரில் வசிக்கிறேன். தாங்கள், அவசியம், நாகப்பட்டினம் சென்று, புராதனமான பெருமை வாய்ந்த, நாகை நீலாயதாக்ஷி அம்மன் திருக்கோயிலுக்கு விஜயம் செய்து, அம்பாள் மற்றும் ஈசன் காயரோகணேஸ்வரர் பெறுமைகளை பற்றி எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன். இக்கோயிலுக்கு உரிய கவனிப்பு இல்லை. நான், 25 ஆண்டுகளுக்கு மேலாக அன்னை நீலாயதாக்ஷி போற்றி எழுதிவரும் பிரார்த்தனைப் பாடல்களை வெளியிட தளமொன்று தேடி வருகிறேன். என் மகன் உதவியால் உங்கள் தளம் கிடைத்தது என் பாக்கியம். தாங்கள் அனுமதி அளித்தால், அவற்றை வெளியிடுகிறேன். இவற்றில் 10 பாட்டுக்களுக்கு இசை வடிவம் கொடுத்து, ஒலி நாடாவாகவும், ஒலிப்பேழையாகவும் என் மகன் சொந்த சிலவிலும், சில உற்றார் சுற்றோர் காணிக்கையும் சேர்த்து, 2007 ஆகஸ்ட் 15 ஆடிப்பூரத் திருவிழா அன்று அன்னை திருவடியில் சமர்ப்பித்து திரு ஏ கே சி நடராஜன் கரங்களால் வெளியிட்டேன். இதில் வியாபார நோக்கமோ, லாபமோ எள்ளளவும் இல்லை. விரும்புகிறவர்கள் வாங்கினால், என் சிலவு போக மீதி அன்னைக்கே சமர்ப்பிக்க எண்ணம். ஆனால் நாகையைச் சேர்ந்தவர்களே எதிர்பார்த அளவுக்கு ஆதரவு செய்யவில்லை. இந்த பாட்டுக்களை வேர்ல்டு ஸ்பேஸ் ரேடியோவில் அவ்வப்போது ஒலி பரப்புகிறார்கள். தங்களை துடர்பு கொள்ளக் கூடிய அஞ்சல் முகவரியும், கணினி முகவரியும் அவசியம் என் கணினி முகவரி வழியாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    நன்றி, வணக்கம், வளமும், நலமும் பெற மீண்டும் வாழ்த்துக்களுடன்,
    (நாகை) வி. ராமசாமி. (நீண்ட மடலுக்கு மன்னிக்கவும்).

  37. மிக பாராட்டப்படவேண்டிய, பெருமை கொள்ள்வேண்டிய ஒரு முயற்சி. நல்ல் த்மிழ் என்பது திராவிட இடது சாரி இதழ்களில் மட்டுமே பார்க்கமுடியும் என்ற கருத்தினை பொய்யாக்கியதே ஒரு சாதனை. சிறந்த நடை, தெளிவான பதிவுகள்.

  38. I am getting tears on seeing this web site… oh my Lord … Muruga..
    This is the high time to get united and fight against the evil things.

  39. வண் க்கம் மிகவும் அரிய முயர்ச்சி ஒவ்வொரு இண்தியனும் படிக்கவேண்டிய ஒப்ப்ற்ற் வலைத்தள்ம். பாராட்டுக்கள். ராஜா

  40. தமிழ் ஹிந்து அருமையான பெயர் சூட்டியுள்ளீர்கள். ஹிந்துவுக்கு வடமொழியும் வேறல்ல. இரண்டும் இரு கண்கள் என்பர் பொரியோர்.எனவே ஹிந்துவாக இருப்பவன் வடமொழியைத் தவிர்க்க இயலாது. தமிழ் வளர்த்த பெரியோர்கள் சமஸ்கிருதத்தில் பாண்டியித்தம் பெற்றவர்களே அதிகம். தனித்தமிழ் என்று கடத்தியவர்கள் நாத்திகர்களாக வலம் வந்து நமது பண்பாட்டை அழிக்க முற்பட்டு தமிழன் என்பவன் யார் என்றே கூற இயலாது நிற்கின்றனர். கம்பராமயணத்தின் மேன்மை அறிய ஆவலுடன் இருந்த நான் தமிழ் ஹிந்து வலைதளத்தால் அடைந்த மகிழ்சிக்கு அளவே கிடையாது. ஆவலுடன் வர்த்தமானன் பதிப்பகத்தின் கம்பாமாயணத்தின் புத்தகங்கள் அனைத்தும் வாங்கிப் படிக்க முயன்றேன். ஈடுபட முடியவில்லை. வரப்ரசாதமாக இத்தலத்தைப் பார்வையிட வாய்பு கிடைத்தது. என்ன எளிமை! என்ன அழகு! வாழ்க உங்கள் தொண்டு! சுருங்கச் சொல்லி ஈர்ப்பு ஏற்படுத்தியதற்கு எனது நன்றி!
    அன்புடன் கி.சந்தானகிருஷ்ணன் (வயது 79)

  41. இந்த தளத்தில் இந்து மத விரோதிகள் வைக்கும் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதமான கட்டுரைகளையே அதிகம் பிரசுரம் செய்ய வேண்டும்…
    இதிகாச புராண கட்டுகளை தவிர்த்து கொள்ளலாம்..

  42. தமிழர்கள் இந்துக்கள் என்பதை‌ மறுத்து பேசும் கூட்டத்துகிடையே இது மாதிரி ஒரு இணையதளம் இருப்பது மகிழ்ச்சியை தருகிறது… வாழ்த்துக்கள்… பாராட்டுக்கள்…நன்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *