தமிழகமும் பா.ஜ.க.வும் – பிணைக்கப் பட்ட எதிர்காலம்

இங்கு மிகப்பெரிய சந்தேகம், முதலில் பா.ஜ.கவினருக்கு தமிழகத்தில் காலூன்ற வேண்டும் எனும் எண்ணம் இருக்கிறதா என்பதே. தன்னை நிலைநிறுத்திக்கொள்ள விழையும் ஒரு கட்சி இதைப்போன்றதொரு அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லதல்ல…. இன்று தமிழகத்தில் உருப்படியான அரசியல் சக்தியாகத் தெரிந்தது அ.இ.அ.தி.மு.க மட்டும் தான். இந்த சூழலில் தமிழக அரசியலில் ஒரு ஆற்றல் வெற்றிடம் நிலவுவதை நம்மால் உணரமுடிகிறது. அந்தவெற்றிடத்தை நிரப்புவது யார்? அந்த இடத்துக்கான போட்டியாளர்கள் யார்?யார்?… இஸ்லாத்தின் பெயரால் இயங்கும் தீவிரவாத இயக்கங்கள். இனத்தையும், சமுதாயத்தையும், இயற்கையையும் காப்பவர்களாகக் காட்டிக்கொண்டு,கிறிஸ்தவ அமைப்புகளுக்கும் மேற்கத்திய சக்திகளுக்கும் கையாள்களாக இருக்கக்கூடிய அமைப்புகள்…இந்தப் பட்டியலைப் பார்த்தாலே தமிழகம் சந்தித்துக்கொண்டிருக்கும் அபாயம் புரியும்….

View More தமிழகமும் பா.ஜ.க.வும் – பிணைக்கப் பட்ட எதிர்காலம்

புதிய அரசு – நம்பிக்கை ஏற்படுத்தும் தொடக்கம்

பழைய ஆட்சிகளின் புளித்துபோன பாணியிலிருந்து விலகி 100 நாட்களில் செயல்படுத்த வேண்டிய திட்டங்களை முடிவுசெய்வது, அமைச்சர்கள் தங்களது உறவினர்களுக்கு பதவி அளிக்கக்கூடாது எனும் எச்சரிக்கை ஆகியவை நல்ல தொடக்கத்தையும் பொதுமக்களான நமக்கு நம்பிக்கையையும் அளிப்பவையாக உள்ளன… ஸ்மிருதி இரானியி தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பொறுமையாகவும், பொறுப்பாகவும் பதிலளித்துள்ளார், தன்னை தான் செய்யும் பணிகளை வைத்து எடைபோடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்…. அஜித்குமார் டோவல் அவர்களும் அனுபவம் வாய்ந்த செயல்வீரராக அறியப்படுகிறார். அவர் பல காலம் வடகிழக்குபகுதியிலும், காஷ்மிரிலும் பணியாற்றிய அனுபவமுடையவர், IB ன் முன்னால் தலைவர்….

View More புதிய அரசு – நம்பிக்கை ஏற்படுத்தும் தொடக்கம்

திரு.மோதி – ஈழத்தமிழருக்கு விடிவெள்ளி

தமிழர்கள் சம உரிமையுடனும் பாதுகாப்புடனும் வாழும் இந்தியாவின் நட்புநாடாக இலங்கையை மோதி மாற்றுவார். அதற்கான நோக்கமும், திட்டமிடலும், செயல் வேகமும், தகுதியும் ,வாய்ப்பும், ஆர்வமும் இன்று மோதி அவர்களிடம் மட்டுமே உள்ளது. ஆனால் அவரைப் புரிந்துகொண்டு பாரதத்தின் புணர்நிர்மாணத்தில் தோள்கொடுக்க தமிழகம் தவறியது வேதனையான ஒன்று… மோதி அவர்கள் இலங்கை அதிபர் ராஜபச்சாவை பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததைக் காட்டமாக விமர்சிக்கும் தீவிர தமிழர் அமைப்புகள் ஈழத்தமிழருக்கு நன்மை செய்வதாகக் கூறிக்கொண்டு இந்தியத் தமிழர்களையும் தவறான பாதையில் திருப்புகிறவர்கள். இதில் பலரது நோக்கம் வயிற்றுப்பிழைப்பு, இவர்களால் ஈழத்தமிழர்கள் பெற்ற நன்மை என்ன? ஒன்றுமே இல்லை…

View More திரு.மோதி – ஈழத்தமிழருக்கு விடிவெள்ளி