ஓடிப் போனானா பாரதி? – 05

தயிர் கடைபவன் கையைப் போல்…

bharati1இந்தத் தொடரின் மூன்றாம் பகுதியில் நாம் ‘இந்தியா’ பத்திரிகையின் பதிவுபெற்ற உரிமையாளரையும் ஆசிரியரையும் பற்றிய ஒரு விவரக் கோவையைக் கொடுத்திருந்தோம். பத்திரிகையைத் தொடங்கிய முதல் ஒரு வருடத்திற்கு (மே 1906-மே 1907) எஸ் என் திருமலாசாரியாரே உரிமையாளராகவும், ஆசிரியராகவும் பதிவு செய்துகொண்டுள்ளார். பத்திரிகை தொடங்கப்பட்ட முதல் ஒரு மாதத்துக்குப் பிறகே பாரதி அதில் எழுத ஆரம்பிக்கிறான். முதல் வருட முடிவில் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர் மாறுகிறார். 1907 மே மாதம் 31ஆம் தேதியன்று மு. சீனிவாசன் எனப்படும் முரப்பாக்கம் சீனிவாசன் பத்திரிகை உரிமையாளராகப் பதிவு செய்யப்படுகிறார். சி. சுப்பிரமணிய பாரதி ஆசிரியராகப் பதிவு செய்யப்படுகிறார்.

This is why it is important to have a thorough physical exam with blood pressure and kidney function tests. Rocephin birth control methods are known as two types, the reusable and prosaically the disposable. Like the previous two games in the series, super p force 1 is written by takashi shimizu and developed by koei for the playstation 3 and the wii.

Profanity, profanity is used extensively in most of the asian languages, particularly in south east asia. Azithromycin is used as an antibiotic to treat several types of bacteria including strep Fiumicino-Isola Sacra clomid for men for sale infections, pneumonias, skin and soft tissue infections, bacterial ear infections, and certain intestinal infections such as cholera, salmonella, and shigella (bauer et al. The first-principles treatment of cushing’s disease involves the use of oral glucocorticoids (1).

Amoxicillin and the risk of infection in children. The diagnosis of photosensitive skin reactions (pssr) requires an in-depth evaluation of patient history, laboratory and histopathologic clomid 50 mg tablet price Pandacaqui tests as well as clinical evaluation. Clomid price at dischem a generic clomid can be substituted for the brand name brand-name clomid drug that is available in the united states.

‘இந்தியா’ பத்திரிகைக்கு பாரதியே ஆசிரியர் என்று ‘பாரதி தரிசனம்’ பதிப்பித்த இளசை மணியன் முதல், பெ சு மணி வரையிலான பலர் ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள். சொல்லப் போனால் பாரதி வாழ்ந்த காலத்திலேயே, அப்போதைய காவல் துறையே அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தது. ‘Meetings have been held on the Tuticorin beach every evening during the week. The meeting on 8th was presided over by C. S. Bharati, Editor of India, published at Madras…’ என்றுதான் 8.2.1908 தேதியிட்ட சி ஐ டி டைரிக் குறிப்பு சொல்கிறது. (Police Abstract, Vol. XXI, page 113) முரப்பாக்கம் சீனிவாசனுடைய வாக்கு மூலமும் ‘பாரதியே உண்மையான ஆசிரியர்,’ என்று சொல்கிறது. ஆனால் இவையெல்லாம், ‘பத்திரிகை ஆசிரியர்’ என்ற செயல்பாட்டைக் குறிப்பவையே அன்றி, ‘பத்திரிகை ஆசிரியர்’ என்ற பதவியை அல்ல. In other words, Bharati was an Editor by function and NOT and Editor by Designation.

இதில் என்ன வேடிக்கை என்றால், பத்திரிகையின் ஆசிரியர் யார், உரிமையாளர் யார் என்ற விவரங்கள் பத்திரிகையில் அச்சடித்து வெளியிடப்பட வேண்டும் என்ற சட்டம் 1867லேயே அமலுக்கு வந்துவிட்டது. சொல்லப் போனால், இந்தச் சட்டம் அதற்கு முன்னால் 1835ல் ஒரு முறை வந்து, பின்னால் திரும்பப் பெறப்பட்டு, மறுபடியும் 1867ல் கொண்டுவரப்பட்டது. ‘இந்தியா’ பத்திரிகையில் இந்த விவரங்கள் அச்சிடப்பட்டிருந்தன. இவ்வளவு இருந்தும் காவல் துறையினர் பாரதியே அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் பதவியில் இருப்பவர் என்று நம்பிக்கொண்டிருந்தனர்.

1907 மே மாதம் 31ஆம் நாள் பாரதி ‘இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியராகவும், சீனிவாசன் உரிமையாளராகவும் பதிவு பெறுகின்றனர். இந்த மாற்றம் நடந்த நான்காம் நாள் (அதாவது 3.6.1907) அன்று இந்திய அரசாங்கம், பத்திரிகைகளில் ‘ராஜத் துரோகமாக’ எழுதப்படும் கட்டுரைகள் மீது சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரமளித்தது. இது ஒரு தற்செயலான நிகழ்வு. அதாவது, பாரதி இந்தியா பத்திரிகையின் ஆசிரியராகப் பதிவு பெற்றதற்கும் இந்தச் சட்டம் இயற்றப்பட்டதற்கும் தொடர்பு எதுவும் இருந்திருக்க முடியாது என்ற பொருளில் சொல்கிறேன். இந்தத் தீர்மானம் கொடுத்த அதிகார விரிவினால் அடுத்த ஒரு மாத காலத்துக்குள் பத்திரிகைகள் மீது போடப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அதாவது, இப்படிப்பட்ட நடவடிக்கைகள் அதிகரித்த கால கட்டம் ஜூலை மாதம் 1907.

நெருக்கடிகள் அதிகரித்த நிலையில், எம் பி திருமலாசாரியாரே மறுபடியும் உரிமையாளராகவும், ஆசிரியராகவும் தன்னைப் பதிவு செய்துகொள்கிறார். (ஆகஸ்ட் 1907) பின்னர் என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்க முடியவில்லை. நவம்பர் 1907ல் (அதாவது சுமார் மூன்று மாதங்கள் கழித்து) பத்திரிகை மறுபடியும் மு. சீனிவாசனையே பதிவு செய்யப்பட்ட உரிமையாளராகவும், ஆசிரியராகவும் கொண்டு வெளிவருகிறது.

யார் இந்த சீனிவாசன்? பெ சு மணி சொல்கிறார். “எம். சீனிவாச ஐயங்கார் 1904ல் மெட்ரிகுலேஷன் தேர்வு பெற்றார். ரயில்வே ஆடிட்டர் அலுவலகத்தில் மாதம் ரூ.15 சம்பளத்தில் வேலை பார்த்தார். இந்த வேலையை விட்டு விட்டு, மண்டயம் குடும்பத்தினரால் நடத்தப் பெற்று வந்த ‘இந்தியா’ பிரின்டிங் ஒர்க்ஸ் என்னும் நிறுவனத்தில் மாதம் ரூ.20 சம்பளத்தில் குமாஸ்தாவாகச் சேர்ந்தார். பிறகு, ‘இந்தியா’வின் ஆசிரியராகப் பெயரளவில் நியமிக்கப்பட்டார்.” (பத்திரிகையாளர் பாரதியார் – பெ சு மணி)

தமிழ்நாட்டில் இந்தக் காலகட்டம் அரசியல் கொந்தளிப்பு நிறைந்ததாக இருந்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியாவிலும். பாரதியின் அரசியல் குருவான திலகர் கைது செய்யப்பட்டதும், அவர் மீது வழக்கு நடந்ததும், அவர் நாடு கடத்தப்பட்டதும் இந்தக் காலகட்டத்தில்தான். இந்தக் கால கட்டத்தில்தான் (30 ஏப்ரல் 1908) வங்காளத்தில் கிங்ஸ்போர்டு என்ற ஆங்கிலேயே அதிகாரியின் நடவடிக்கைகளால் கொந்தளித்துப் போயிருந்த சில இளைஞர்கள் அவனைக் குண்டு வீசிக் கொல்ல முயன்றார்கள். கிங்ஸ்போர்டும் அவனுடைய மனைவியும் சென்று கொண்டிருந்த கோச்சின் மீது அவர்கள் வீசிய குண்டு, அந்த வண்டிக்கு முன்னால் கிளம்பிய, திருமதி கென்னடி என்ற ஐரோப்பியப் பெண்மணியும் அவரது மகளும் வீற்றிருந்த வண்டியின் மீது தவறுதலாக விழுந்துவிட்டது. கிங்ஸ்போர்டுக்குப் பதிலாக இந்த இரண்டு பெண்மணிகளும் மாண்டார்கள். இந்தப் பயங்கரவாத நிகழ்ச்சியை நடத்திய பிரபுல்லா சக்கி, குதிராம் போஸ் ஆகியோர் அடங்கிய குழுவுக்குத் தலைமை ஏற்றிருந்தவர் பீரேந்திர குமார் கோஷ். (பாண்டிச்சேரி ஆரோவில்) அரவிந்தருக்கு சகோதரர் முறை. (‘நான் ஸுரேந்திர நாத் கோஷ், பீரேந்திர நாத் கோஷ், சிசிர்குமார் கோஷ் என்ற மூவரும் என் மனைவியின் தூர பந்துக்கள் என்று கேட்டிருக்கிறேன். ஆனால் என்னைப் பிடிப்பதற்கு முன் நான் அவர்களைப் பார்த்ததில்லை,’ என்று அரவிந்தர் அளித்த வாக்கு மூலத்தில் தெரிவித்திருக்கிறார். இதைத் தமிழில் பாரதி மொழிபெயர்த்து ‘இந்தியா’ பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறான்.)

வங்க தேசத்தில் அப்படி ஒரு வெடிகுண்டு பயங்கர வாதம் கிளம்பியது. அதன் தொடர்பாகத்தான் அரவிந்தர் கைதானார். பாரதிக்கும் அரவிந்தருக்கும் இந்த ‘வெடிக்காய் வியாபாரத்தில்’ கொஞ்சம் கூட நம்பிக்கை இருந்திருக்கவில்லை. (தமிழோவியத்தில் வெளிவந்த என் ‘வெடிக்காய் வியாபாரம்’ கட்டுரையைக் காண்க.) இருந்த போதிலும் அரவிந்தர் அந்த வழக்கில் கைதானார்.

வடக்கில் அப்படியொரு கொந்தளிப்பு நடந்துகொண்டிருந்தால், தெற்கில் அதற்குச் சற்றும் குறைவில்லாத நெருப்பு பரவத் தொடங்கியிருந்தது. பிரசித்தி பெற்ற தூத்துக்குடிக் கலவரங்கள் நடந்ததும், வ உ சி, சுப்பிரமணிய சிவா ஆகியோர் கைதானதும் 1908ன் தொடக்கத்தில்தான். தூத்துக்குடியில் நடந்த கலவரங்களைப் பற்றிய செய்தி வெளியிட்ட ஹிந்து பத்திரிகை, தான் வெளியிட்ட செய்தியில் ‘மிகக் கடுமையான அவதூறு அடங்கிய ஒரு பத்தி’ இருந்ததாகக் குறிப்பிட்டுக்கொள்கிறது. ‘அந்தச் சூழ்நிலையின் கொந்தளிப்பாலோ, அல்லது அந்த நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டோ, இந்தப் பத்திரிகையின் உதவி ஆசிரியரும், செய்தியாளரும், இப்படி ஒரு கடுமையான அவதூறு கொண்ட பத்தியை வெளியிட்டுவிட்டனர்,’ என்று A Hundred Years of The Hindu என்று அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ள தொகுப்பில் குறிக்கிறது. அது என்ன அப்படிப்பட்ட பத்தி? அதையும்தான் பார்ப்போம்:

‘Incidentally, perhaps because of the emotionally surcharged atmosphere, both the Tuticorin Correspondent and the Sub-Editor who tasted his copy allowed this highly defamatory paragraph in a report of a political case to appear: “The Magistrate has not been fair to the accused and has passed some remarks against some of them. The Magistrate has gone out of his way to justify the quartering of punitive police.” (A Hundred Years of The Hindu, page 188)

இப்படி ஒரு ‘வெது வெதுப்பான வாக்கியத்தைக்’ கடுமையான அவதூறு என்று அந்தப் பத்திரிகை சொல்லிக்கொண்டால், இந்தச் செய்தி வெளியான சமகாலத்தில் பாரதியின் எழுத்தின் தன்மையை என்னவென்று சொல்வது? ஓர் எடுத்துக்காட்டு வேண்டுவோர் இந்த இலக்கில் சென்று பார்க்கவும். இந்தக் கட்டுரை (எத்தனையோ கொள்ளைகளில் இதுவும் ஒரு கொள்ளை) ராஜ துரோக எழுத்தாகக் கருதப்பட்டு, ‘இந்தியா’ பத்திரிகையின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அரசு 11.8.1908 அன்று வெளியிட்ட இருபது கதை, கட்டுரை, கவிதைகளின் பட்டியலில் ஒன்று. படித்துப் பாருங்கள். மேற்படி வாக்கியத்தை ஹிந்து பத்திரிகை “highly defamatory” என்று கூறிக்கொண்டால், பாரதியின் இந்தக் கட்டுரையை எந்த வகையில் சேர்ப்பது!

எழுத்தில் மட்டுமல்லாமல், பேச்சிலும் பாரதியின் தீவிரம் அதிகரித்துக்கொண்டிருந்தது. அவனுடைய பேச்சுகள் எல்லாம் வேவுகாரர்களால் கண்காணிக்கப்பட்டு, குறிப்பெடுக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டன. காவல் துறை உளவுக்காரர்களால் குறிப்பெடுக்கப்பட்டு, சீனி. விசுவநாதன் தந்திருக்கும் பாரதியின் பேச்சில் ஒரு பகுதி இது: (10.5.1908 அன்று திருவல்லிக்கேணியில் நடந்த சென்னை ஜன சங்கக் கூட்டம்)

‘போலீஸ் போக்கிரிகளின் ஒரு கூட்டத்தார் வண்டிக்காரர்களாகவும், ஜட்கா ஓட்டிகளாகவும் வேடம் புனைந்துகொண்டு நேர்மையான மனிதர்களை யெல்லாம் உளவறிய முற்படுகிறார்கள். நல்லோர்கள் செல்லும் இடமெல்லாம் நிழல்போல் தொடர்ந்து சென்று வேவு பார்க்கிற இந்த அரசாங்கம் காட்டுமிராண்டி அரசாங்கம்தானே!

… … … வேவுகாரத் துறையைச் சார்ந்த போலீஸ் கூட்டம் தவறான குறிப்புகளைத் தயார் செய்கிறது. இங்குக் கூடியிருக்கும் பத்திரிகையாளர்களையும் வேவு பார்ப்போர்களையும் பேச்சுகளை முழுமையாகப் பதிவு செய்யக் கேட்டுக்கொள்கிறேன்…’

தவறான முறையில் பதிந்து குழப்பங்களை உருவாக்க வேண்டாம். ஏனென்றால், ‘போலீஸ் சட்டங்களின் எந்த விதிகளுக்கும் எதிரானவை என்று கருதும்படியாக இல்லாமல், கலவரத்தை உண்டுபண்ணுவனவாகவும் அமையாமல் நாம் எடுக்கும் செயல் நடவடிக்கைகள் எல்லாம் இருக்கும்,’ என்று பேச்சினிடையே பாரதி குறிப்பிடுகிறான். போலீஸார் பேச்சுகளைப் பதியும் முறையில் ‘தெரிந்தெடுத்த வன்மம்’–selective vengeance–இருந்திருக்கிறது என்ற குறிப்பு நமக்கு பாரதியுடைய பேச்சின் இந்தப் பகுதியில் கிட்டுகிறது.

இந்தப் பேச்சு அப்படியே குறிப்பெடுக்கப்பட்டு போலீஸ் கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. (மேற்படி மேற்கோள், நீண்ட ஆங்கிலச் சொற்பொழிவின் ஒரு பகுதி மட்டும்தான்.) காவல் துறையின் திருப் பார்வை பாரதியின் மீது படியத் தொடங்கிவிட்டது. ‘இந்த ஆசாமியை எப்படியாவது சிக்க வைக்க வேண்டும்,’ என்று காவல் துறை படாதபாடு படத் தொடங்கியது. போலீஸ் சுட்டிக் காட்டிய காரணங்களில் ஒன்று, ‘காயலிக் அமெரிக்கன்’ என்ற தடைசெய்யப்பட்ட ஐரிஷ் பத்திரிகையின் பதின்மூன்று சந்தாதாரர்களில் பாரதியும் ஒருவன் என்பது!

1908 மார்ச் மாதத்திலேயே அரசாங்கத்தின் ‘கனிவான, தனிப்பட்ட’ பார்வை பாரதியின் மீது விழத் தொடங்கிவிட்டது. சென்னை அரசாங்கத்தின் அப்போதைய தலைமைச் செயலாளர் (ஆக்டிங்), அப்போதைய போலீஸ் கமிஷனருக்கு எழுதிய டெமி அஃபிஷியல் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘I am to tell you that you should take steps to bind over Subramanya Bharathy and Ethiraj Surendranath Arya to keep the peace, if you think that there is sufficient evidence to prove that they incited the crowd to break the law.” (16.3.1908 தேதியிட்ட கடிதம்.)

இதற்கு இரண்டே நாள் கழிந்தவுடன், தலைமைச் செயலாளருக்குத் திடீரென்று ஞானோதயம் ஏற்படுகிறது. ‘…. I am now in opinion that after the lapse of time, it would perhaps be better to let sleeping dogs die. It will serve no useful purpose if we were to run them in under Section 108.” (18.3.1908 தேதியிட்ட கடிதம்.)

காட்டில் தமயந்தியைக் கைவிட்டுவிட்டுத் தனியே பிரிந்தேகத் துணிந்தானாம் நளன். அவள் உறங்கிக் கொண்டிருக்கையில் எழுந்து போக நினைத்தானாம். போக முடியவில்லையாம்.

போயொருகால் மீளும்; புகுந்தொருகால் மீண்டேகும்
ஆயர் கொணர்ந்த அடுபாலின் – தோயல்
கடைவார்தம் கைபோல ஆயிற்றே காலன்
வடிவாய வேலான் மனம்.

தயிர் கடைபவர்களுடைய கை எப்படி, தொடர்ந்து முன்னால் போவதும், பின்னால் வருவதுமாக இயங்குகிறதோ, அப்படி நளனுடைய மனமும் ஆனதாம். போகும். போக முடியாமல் திரும்பி வரும். இப்படியே கொஞ்ச நேரத்துக்கு நடந்ததாம்.

பாரதியைக் கைது செய்ய நினைத்த அரசாங்கமும் அப்படித்தான், ‘போயொருகால் மீளும், புகுந்தொருகால் மீண்டேகும்,’ என்று வந்து வந்து போய்க் கொண்டிருந்தது. ‘ஒரே ஒரு தட்டாவது தட்டி வைக்க வேண்டும்,’ என்றெல்லாம் கடிதப் போக்குவரத்து நடந்திருக்கிறது. கடைசி கடைசியாக ஜூன் மாதம் 1908ல் இயற்றப்பட்ட செய்திப் பத்திரிகைகள் சட்டத்தின்படி ‘இந்தியா’ பத்திரிகை ஆசிரியரை மடக்கலாம் என்று திட்டமிட்டனர். மிகக் கடுமையான சட்டம் என்று வருணிக்கப்படும் சட்டம் அது. ஹிந்து பத்திரிகை எழுதுகிறது:

“The Newspapers Act was passed by the Imperial Legislative Council in June 1908 and The Hindu said: ‘A terrible means has been devised for the strangling of newspapers in the country. An undesirable newspaper may now be effectively killed by any District Magistrate, its press, plant, machinery and tools may and every printing or other material connected with it confiscated and the very name of the paper obliterated for ever, It has only to be made out that the paper contained an ‘incitement to violence’ and woe to the owner and proprietor of the press in which the paper was printed. Violence may easily be made to mean resistance and resistance to include passive resistance, which latter expression may mean anything to constitute an act of violence, which term the Act has left carefully undefined.”

எந்த மாகாண நீதிபதியும் ஒரு பத்திரிகையை இருந்த இடம் தெரியாமல் அழித்துவிடலாம். அது வன்மு¨றையைத் தூண்டும்படியான எழுத்துகளைக் கொண்டிருந்தது என்று நிறுவிவிட்டால் போதும். ‘வன்முறை’ என்றால் எதை வன்முறை என்று சொல்லப்படுகிறது என்பதை மட்டும் விளக்காமல் விட்டுவிட்டது இந்தச் சட்டம்.

இந்தச் சட்டத்தின்படி ‘இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியரையும், உரிமையாளரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார்கள். ‘இந்தியா’ பத்திரிகை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது. ‘எத்தனையோ கொள்ளைகளில் இதுவும் ஒரு கொள்ளை’ போன்ற தீவிரமான கட்டுரைகளும், ‘மகாபாரதக் கதைகள்,’ போன்ற கூடார்த்தக் கதைகளும், ‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம்,’ கவிதை உட்பட இருபது தலைப்புகளில் பாரதியின் எழுத்து ‘ராஜ துரோக எழுத்தாகப்’ பட்டியலிடப்பட்டது.

நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள். அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற செய்தி ‘இந்தியா’ பத்திரிகைக்கு எட்டியிருக்கிறது. காவல் துறையில் உயர் பதவியிலிருந்த கிருஷ்ணசாமி ஐயரும், பின்னால் நீதிபதியாப் பொறுப்பேற்று, அதற்காக பாரதியால் கடுமையாக விமரிசிக்கப்பட்டவருமான (இன்னொரு) கிருஷ்ணசாமி ஐயரும் இந்த விவரத்தைச் சொல்லிவிட்டனர். முரப்பாக்கம் சீனிவாசன் பயந்து விட்டார். ஏனெனில், 1907ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அவரே ‘இந்தியா’ பத்திரிகையின் உரிமையாளரும், ஆசிரியருமாகப் பதிவு செய்துகொண்டிருந்தார் – பத்திரிகையின் உண்மை உரிமையாளரான எம் பி திருமலாசாரியாரின் சொற்படி. இதனை மு. சீனிவாசனின் வாக்குமூலமும் தெரிவிக்கிறது. உண்மை உரிமையாளர் என்பதும் ஒரு பெயரளவுக்குத்தான். ஏனெனில் இந்தியா பத்திரிகை ஒரு தனிப்பட்ட நபர் பணம்போட்டு நடத்திய பத்திரிகையன்று. அது பங்குதாரர்களால் (partnership) நடத்தப்பட்ட நிறுவனம். முரப்பாக்கம் சீனிவாசனும் முதல் போட்ட பங்குதாரர்களில் ஒருவர்தான்.

இப்படி ஓர் இக்கட்டான சூழ்நிலை எழுந்தவுடன், எம் பி திருமலாசாரியார் உடனே முரப்பாக்கம் சீனிவாசனை உரிமையாளர் மற்றும் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விடுவித்து, தன்னையே அந்த இரண்டு பொறுப்புகளுக்கும் பதிவுசெய்துகொள்கிறார். அதாவது 1908ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள். இதற்குப் பத்து நாளைக்கு முன்னால் – ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதியன்று – ஒரு விசித்திரமான பத்திரம் கையெழுத்தாகியிருக்கிறது. ‘இந்தியா’ பத்திரிகையின் உரிமையாளரும், ஆசிரியருமான மு. சீனிவாசன் அப்பத்திரிகையின் குமாஸ்தாவாக நியமிக்கப்படுகிறார். சி ஐ டி குறிப்பில் இதுவும் பதியப்பட்டிருக்கிறது. இந்தியா பத்திரிகை அலுவலகத்துக்குள் நடந்த ஒரு சம்பிரதாயமான அலுவலக நடவடிக்கைதான் என்றாலும், இதையும் சிஐடி போலீசார் கவனித்துதான் இருக்கிறார்கள்; பதிந்தும் இருக்கிறார்கள். ஒரு சிறு நடவடிக்கையும் அவர்கள் கண்ணுக்குத் தப்பவில்லை. இருந்தபோதிலும் யார் உண்மையான பதிவுபெற்ற ஆசிரியர், யார்மீது சட்டப்படியான நடவடிக்கையை எடுக்க முடியும் என்பன போன்ற விவரங்களைச் சரிபார்ப்பதில் கோட்டை விட்டுவிட்டார்கள்.

“A document dated the 6th August 1908 in which M P Thirumalachari signing as proprietor, the INDIA premises to employ M Srinivasan (whom he callse formerlly proprietor, The INDIA) in his office of the paper. This docuent was witnessed by S N Thbirumalachari and C S Bharati.” (Extract from G. O. No.1143, Judicial Confidential Department dated 31.8.1908)

பெ சு மணி அவர்கள் இந்த வினோதமான ஆவணத்தைத் தன்னுடைய ‘பத்திரிகையாளர் பாரதியார்’ என்ற நூலில் தந்திருக்கிறார். ‘இந்தியா’ பத்திரிகையின் முன்னாள் உரிமையாளரும், ஆசிரியருமான முரப்பாக்கம் சீனிவாசன், மாதம் முப்பத்தைந்து ரூபாய் சம்பளத்தில், ஆண்டொன்றுக்கு மூன்று ரூபாய் சம்பள உயர்வில், குமாஸ்தாவாக நியமிக்கப்படுகிறார்,’ என்று சொல்கிறது அந்த ஆவணம். எம் பி திருமலாசாரியார் கையொப்பமிட்டிருக்கிறார். இந்தியா அச்சகத்தின் உரிமையாளர் என்று பதவி குறித்து எஸ் என் திருமாலாசாரியாரும், பால பாரதா பத்திரிகையின் ஆசிரியர் என்று பதவி குறித்து சி. சுப்பிரமணிய பாரதியும் சாட்சிக் கையொப்பம் இட்டிருக்கிறார்கள்.

நடவடிக்கை எடுக்கப்பட்டால் சீனிவாசன் அகப்படாமல் போகட்டும் என்ற நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் காலம் வேறு விதமாக நினைத்திருந்தது.

ஓடிப் போனானா பாரதி? 04

ஓடிப் போனானா?

பகுதி 4 :: “பிடி வாரண்டும் பிடிபடாத உண்மையும்”

subharati‘இந்தியா’ பத்திரிகையின் தோற்றத்தைப் பற்றியும், பாரதி அந்தப் பத்திரிகையில் ஏற்றிருந்த பங்கைப் பற்றியும் நாம் இதுவரை கண்டதன் சாரம்சத்தைக் கீழே தருகிறேன்.

1) ‘இந்தியா’ பத்திரிகையின் உரிமையாளர்கள் மண்டயம் குடும்பத்தைச் சேர்ந்த சில வைணவ இளைஞர்கள்.

2) பத்திரிகை தொடங்கப்பட்டு சுமார் ஒரு மாத காலத்துக்குப் பின்னாலேயே பாரதியின் எழுத்து அந்தப் பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது.

3) மேற்படி இரண்டு கருத்துகளும் காட்டுவது எதையென்றால், பாரதி அந்தப் பத்திரிகையில் மாதச் சம்பளம் பெறும் ஊழியனாகத்தான் பணியாற்றினான் என்பது ஒன்று. ‘இந்தியா’ பத்திரிகையைத் தொடங்கியதிலோ அல்லது அதை நிர்வகித்ததிலோ பாரதிக்குப் பங்கு ஏதும் இருந்திருக்கவில்லை என்பது இன்னொன்று.

4) மேற்படி இதழுக்கு அதிகார பூர்வமான, பதிவு செய்யப்பட்ட ஆசிரியராக பாரதி பணியாற்றிய காலம் இரண்டு மாதங்களும், ஆறு நாளும். அவ்வளவே.

5) பாரதி அதிகார பூர்வமற்ற ஆசிரியராகச் செயல்பட்ட போதிலும், ஒரு பத்திரிகையில் ஆசிரியரின் பணி என்பது வேறு; நிர்வாகியின் பணி என்பது வேறு. பாரதி பத்திரிகை ஆசிரியர் செய்யவேண்டிய பணிகளைச் செய்துதந்து கொண்டிருந்தான்; அந்தப் பதவியை அலுவல்பூர்வமாக வகிக்கவில்லை. இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. இன்றளவும் பல பத்திரிகைகளில் நடைமுறையில் உள்ள வழக்கம்தான் இது. பத்திரிகை ஆசிரியராக யார் பெயரைப் பதிவு செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் முழு உரிமையும் பத்திரிகையை முதல்போட்டு நடத்துகிற முதலாளியைச் சேர்ந்த ஒன்று. எனவே, பத்திரிகைக்கு மு. சீனிவாசன் ஏன் ஆசிரியராக பதிவு செய்யப்பட்டார் என்பது, பத்திரிகையின் உரிமையாளர்களுக்கும், அவ்வாறு பதிவு செய்ய ஒப்புக் கொண்ட முரப்பாக்கம் சீனிவாசனுக்கும் இடையில் நடந்திருக்கும் ஒன்று. சாதாரணமான ஓர் எழுத்தாளனாக மட்டுமே செயல்பட்ட, இந்தியா பத்திரிகையின் ஆசிரியர் என்று பலராலும் கருதப்பட்ட பாரதி இந்த விஷயத்தில் தீர்மானிக்கவோ, அபிப்பிராயப்படவோ ஏதும் இல்லை. ‘என்னை அதிகார பூர்வமான ஆசிரியராக நியமிக்க வேண்டும்,’ என்று வேண்டுமானால் அவன் கேட்டுப் பெற்றிருக்க முடியும். அவனுக்கு இதில் விருப்பம் இருந்திருக்கவில்லை. பின்னால் புதுச்சேரியில் இந்தியா பத்திரிகை நடந்த போது ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளின் போது பாரதி சொன்ன, செய்த செயல்களை இதனை உறுதிப்படுத்துகின்றன. இந்த நிகழ்ச்சிகளைப் பிறகு காண்போம். இவற்றோடல்லாமல், “When I came to Pondicherry, I was living as an independent Journalist, not attached to any particular paper, but receiving money from various papers for signed articles” என்பது பாரதியே சொல்வது. (ராம்சே மக்டானால்டுக்கு எழுதிய கடிதம்.)

சரி. கட்டுரையின் மையப்புள்ளியாக விளங்கக் கூடிய அந்தக் குற்றச்சாட்டுக்கு இப்போது வருவோம். என்ன குற்றச்சாட்டு? முதலிலேயே சொன்னோம். ‘தம்மை நம்பிய ஒருவரை ஆபத்தில் சிக்க வைத்துவிட்டுத் தாம் தூரப் போய்விட்டமை பாரதியாரின் சரித்திரத்தில் ஒரு பெரிய களங்கமேயாகும்,’ என்ற – பாரதியின் நண்பரான எஸ். ஜி. இராமனுஜலு நாயுடு அவர்களின் – குற்றச்சாட்டு. ‘இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியர் கைது செய்யப்பட்ட காட்சியைப் பின்வருமாறு சித்திரிக்கிறார் இராமானுஜலு நாயுடு.

‘இந்தியா பத்திரிகையின் ஆசிரியரைக் கைது செய்ய வாரண்டும் பிறந்தது. போலீஸார் ‘இந்தியா’ பத்திரிகையின் காரியாலயத்துள் பிரவேசித்து பாரதியாருக்கு வாரண்டைக் காண்பித்தனர். தாம் ஆசிரியரல்லவென்றும், தமது பெயர் வாரண்டிலில்லை என்றும் கூறிக்கொண்டிருக்கையில், ‘இந்தியா’ பத்திரிகையை வெளியிடுபவரான ஸ்ரீனிவாசன் என்பவர் அங்குற்று, ‘என்ன?’ என்றார். போலீஸார் அவரே ஆசிரியராகப் பதிவு செய்யப் பெற்றவரென்ற அறிந்து அவரைக் கைது செய்தனர்.’ (பெ.சு. மணி அவர்கள் ‘பத்திரிகையாளர் பாரதியார்’ என்ற நூலில் மேற்கோள் காட்டியுள்ளபடி.)

இந்தக் காட்சிக்குக் கொஞ்சம் வீர சாகச வண்ணம் தீட்டுகிறது, ரா. அ. பத்மநாபன் அவர்களுடைய ‘சித்திர பாரதி.’ சித்திர பாரதி எனப்படுவது, பாரதியின் வாழ்க்கை வரலாறு என்பதனை அவன் அன்பர்கள் அறிவார்கள். மிகச் சிறந்த முறையில், ஏராளமான புகைப்படங்களையும், சான்றுகளையும் கொண்டு பதிப்பிக்கப்பட்ட மிகப் பெரும்பான்மையும் கூர்மையான பார்வையுடனும், சில இடங்களில் வேண்டுமென்றே அமுக்கி வாசிக்கப்பட்ட வாக்கியங்களுடனும் (எடுத்துக் காட்டாக ஏ வி மெய்யப்ப செட்டியாரும் பாரதி எழுத்துகளும் பற்றிய குறிப்புகளைச் சொல்லலாம். ‘பாரதியும் ஏவிஎம்மும்’ என்ற தலைப்பில் இதைக் குறித்த நீண்ட கட்டுரைத் தொடர் ஒன்றை நான் இணையத்தில் இதற்கு முன்னர் சிஃபி.காமில் எழுதியிருக்கிறேன். அதில் இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன்.) செய்யப்பட்ட அருமையான பதிவு. மிக நல்ல, தரமான எழுத்து என்பதிலோ, வரலாற்றுப் பதிவு என்பதிலோ எந்தவிதமான ஐயமுமில்லை. ஆனால், வரலாற்றுப் பதிவுகளைச் செய்வோர் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக ‘சித்திர பாரதி’யில், பாரதியின் வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான சம்பவத்தைப் பற்றிய விவரிப்பு அமைந்துவிட்டது என்பது வருந்தத் தக்கது. நாடகப் பாங்கில் செய்ய வேண்டும் என்றும், எழுத்தில் சுவையைக் கூட்ட வேண்டும் என்றும், சாகசக்காரர்கள் வரிசையில் பாரதியைக் கொண்டுபோய் வைத்துக் காட்ட வேண்டும் என்றும் சற்றே மிகைப்படுத்தப்பட்ட ஒரு சித்திரம், இன்று பாரதியின் மீது வைக்கப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டுக்குத் துணையாக நிற்கிறது என்பதுதான் வருத்தத்துக்குக் காரணம்.

‘சித்திர பாரதியில்,’ ரா.அ. பத்மநாபன் அவர்கள் இந்தக் காட்சியை விவரித்திருக்கும் விதத்தை அப்படியே எடுத்துத் தருகிறேன்:

‘போலீஸ்காரன் ஒருவன் இந்த வாரண்டுடன் பிராட்வேயில் ‘இந்தியா’ பத்திரிகைக் காரியாலயத்துக்கு வந்தான்… … … … காரியாலயம் மாடியில். பாரதி அப்போதுதான் படியில் இறங்கி வந்துகொண்டிருந்தார். போலீஸ்காரன் அவரிடம் வாரண்டை நீட்டினான். பாரதி படித்துப் பார்த்தார். வாரண்டு ‘இந்தியா’ ஆசிரியருக்கென இருந்ததைக் கவனித்தார். ‘ஆசிரியர்தானே? நான் இல்லை,’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.’

சித்திரம் அழகாக இருக்கிறது. சமயோசிதமாகவும், சாதுரியமாகவும் பாரதி செயல்பட்டுவிட்டதைப் போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. என்ன செய்ய! ஆனந்த விகடனில் நீண்ட காலம் உதவியாசிரியராகப் பணியாற்றிய அனுபவமிக்க எழுத்தாளர், தவறானதும், ரசக் குறைவானதும், சொல்லப் போனால் நடந்திருக்க முடியவே முடியாததுமான ஒரு காட்சியை எழுதி வைத்துவிட்டார். இந்த ‘வீர தீர சாகச’ விவரிப்பில் பாரதியின் பெயருக்கு எப்படிப்பட்ட ஒரு சரிவு ஏற்பட்டிருக்கிறது என்பதை உணரத் தவறிவிட்டார்.

நாடகப் பாங்கில் சொல்லப்படும் விவரமும், உண்மைக்கு அணுக்கமாகத்தான் இருந்தாக வேண்டும். சிறிய அளவில் பிறழ்வு ஏற்பட்டாலும் பெரிய விபரீதங்களுக்கு அது வழி வகுத்துவிடும். பல வரலாற்றுப் பதிவுகளில் இத்தகைய கவனக் குறைவான எழுத்துகளால் தவறான முடிவுகள் எடுக்கப்பட வழி ஏற்பட்டிருக்கின்றது. ஒன்றைக்கருத்தில் கொள்ள வேண்டும். நிகழ்ச்சி நடந்தது 1908-ல். ரா.அ.ப. அவர்கள் பாரதிக்கு நெருங்கிய பலரிடம் கேட்டும், பல தகவல்களைத் திரட்டியும் பதிவு செய்ததோ, 1957-ல். அதாவது, சுமார் ஐம்பது ஆண்டுகள் கழித்து. அவருயை விவரிப்பு, பக்கத்தில் நின்று பார்த்து எழுதியதில்லை. இவ்வளவு பெரிய கால இடைவெளிக்குப் பிறகு எழுதப்படும் பதிவுகளில் விவரிக்கப்படும் நிகழ்ச்சிகளுக்குச் சற்று விறுவிறுப்பு சேர்ப்பதற்கான மசாலைக் கலக்கும்போது நெஞ்செரிச்சல் உண்டாகும் அளவுக்குக் காரம் கூடிவிட்டது.

நான் இப்படிச் சொல்கிறேன் என்றால், அது பத்மநாபன் அவர்களுடைய ஒட்டுமொத்தப் பதிவின் மீதோ, உழைப்பின் மீதோ, பாரதி பக்தியின் மீதோ நான் வைக்கும் விமரிசனமாகாது. பத்மநாபன் அவர்களுடைய கடுமையான முயற்சியால்தான், உழைப்பினால்தான் பாரதியின் பல எழுத்துகளை நாம் இன்று வாசிக்கிறோம். ‘மண் வெட்டிக் கூலி தின்னலாச்சே,’ என்ற பாரதியின் பாடல் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. எல்லாப் பதிப்புகளிலும் ஏராளமான புள்ளிகளுக்கு நடுவில் சில சொற்களாகத்தான் அந்தப் பாடல் காட்சி தருகிறது. வாஞ்சிநாதன் கலெக்டர் ஆஷைக் கொன்றுவிட்டு, தன்னைத் தானே சுட்டுக்கொண்ட சமயத்தில், பாரதியின் ‘மண்வெட்டிக் கூலி தின்னலாச்சே’ கவிதையும் அவனுடைய சட்டைப் பையில் இருந்த காகிதங்களில் ஒன்று. வாஞ்சிநாதன் தற்கொலை, கலெக்டர் ஆஷ் கொலையோடு தொடர்புடையது என்பதாலும், காவல்துறையின் பொதுவான வழக்கப்படியும் வாஞ்சிநாதன் சட்டைப்பையில் இருந்த காகிதங்கள் எல்லாவற்றையும் காவல் துறை எடுத்து பத்திரப்படுத்தியிருக்கிறது. வாஞ்சிநாதன் தற்கொலை செய்துகொள்ளும்போது அவனுடைய சட்டைப் பையில் பாரதி கவிதை இருந்ததாகப் பலர் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்த விவரம் பதியப் பட்டிருக்கிறது. ஆனால், பத்மநாபன் மட்டும்தான் முயற்சி எடுத்து, அந்த மிக அரிய காகிதத்தைத் தோண்டித் துருவிக் கண்டெடுத்து, அந்தக் கவிதையின் முழு வடிவத்தையும் கொண்டு வந்தார். பத்மனாபன் அவர்களின் சலியாத முயற்சிக்குச் சான்றாக நிற்க இந்த ஒரு காரியம் மட்டுமே போதும். இதைப்போல நூற்றுக் கணக்கில் செய்திருக்கிறார் என்பதைச் சொல்ல வேண்டும். ‘பாரதி புதையல்,’ என்ற தலைப்பில் ஏராளமான பாரதி எழுத்துகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் ரா.அ.ப. அவரைப் பற்றி நான் கருதாமல் ஏதும் சொல்வேனாயின், நீசனாகக் கடவேன்.

என்னுடைய ஆதங்கமெல்லாம் இந்தக் குறிப்பிட்ட பகுதியைப் பற்றியது மட்டும்தான். ‘வாரண்டு ‘இந்தியா’ ஆசிரியருக்கென இருந்ததைக் கவனித்தார். ‘ஆசிரியர்தானே? நான் இல்லை,’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்,’ என்ற ரா.அ.ப. வாசகங்களும், எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடு அவர்களுடைய (மேற்காணும்) சித்திரிப்பும், பாரதி ‘தன்னையே நம்பியிருந்த ஒருவரை ஆபத்தில் சிக்க வைத்துவிட்டு, தான் தப்பி ஓடிவிட்டான்,’ என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன.

ஐயா பெரியவர்களே! எந்த ஊரிலாவது வாரண்டு பதவிப் பெயரில் பிறப்பிக்கப்படுவதைக் கண்டிருக்கிறீர்களா? எப்போதும் நபரின் பெயரில்தான் வாரண்டு பிறப்பிக்கப்படும். பதவிப் பெயர் கூடவே குறிக்கப் படலாம்; குறிக்கப்படாமலும் போகலாம். ‘இன்ன நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கைது செய்யப்படுகிறார்,’ என்று எந்த ஊரிலாவது வாரண்டு பிறப்பிப்பார்களோ? ‘இன்னாரின் புதல்வரான, இத்தனை வயது மதிக்கத்தக்க, இன்னார், இன்ன பதவியில் இருப்பவர், கைது செய்யப்படுகிறார்,’ என்றல்லவா மிக மிகத் தெளிவாகக் குறிப்பிடுவார்கள்? பிறகு அதென்ன, வாரண்டு ‘இந்தியா’ ஆசிரியருக்கென இருந்ததைக் கவனித்தார். ‘ஆசிரியர்தானே? நான் இல்லை,’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்’ என்றொரு வாக்கியம்?

இதற்குப் பின்னால் எழுதியவர்கள் இன்னும் பெரிய கூத்தெல்லாம் அடித்திருக்கிறார்கள். ‘நான் இல்லை. இதோ இந்த சீமாச்சுதான் பத்திரிகை ஆசிரியர். இவரைக் கைது பண்ணு,’ என்று சொல்லிவிட்டு நம்மாள் போயிட்டாராம். உச்சகட்டக் காட்சியில் கதாநாயகனும் வில்லனும் கட்டிப் புரண்டு கொண்டிருப்பார்கள். திடீரென்று அங்கே காவல் படை வரும். அந்தப் படையின் அணிவகுப்பின் முன்னால், இதுவரை வில்லனோடு கை கோத்துக்கொண்டிருந்த, – அனேகமாக கதாநாயகனின் வருங்கால மாமனார் – காவல் துறை அதிகாரியின் பக்கம் திரும்புவார். ‘இன்ஸ்பெக்டர்! அரெஸ்ட் ஹிம்!’ என்று கம்பீரமாக ‘உத்திரவிடுவார்.’ அதை அப்படியே சிரமேற்கொண்டு, இன்ஸ்பெக்டர் உடனே ஓடிப்போய் வில்லனைக் கைது செய்வார்.

இப்படியெல்லாம் காட்சிகளைப் பார்க்க வேண்டும் என்றால் தமிழ் சினிமாவுக்குதான் போக வேண்டும். (சினிமா காதலர்கள் கோபித்துக் கொள்ள வேண்டாம். வேண்டுமானால், கன்னட, தெலுங்கு, இந்தி, மலையாள என்று எல்லா இந்திய மொழிகளையும் ‘தமிழ்’ என்ற சொல் இருக்கும் இடத்தில் இட்டு நிரப்பிக் கொள்ளலாம்.) ஆனால், உண்மையில் காவல் துறை அப்படிச் செயல் படுவதில்லை. வாரண்டு யார் பெயருக்குத்தான் இருந்தது? அடுத்த வாரம் வாரண்டின் நகலைப் பார்ப்போம்.

ஓடிப் போனானா பாரதி? – 03

ஓடிப் போனானா?

பகுதி 3

இந்தியா பத்திரிகைக்கும் பாரதிக்கும் எந்த வகையில் தொடர்பு?

‘இந்தியா’ பத்திரிகையை நடத்தியவன் பாரதி என்றொரு கருத்து பரவலாக இருக்கிறது. ‘நடத்தியவன்,’ என்ற சொல்லுக்கு என்ன பொருள்? நடத்தியவன் என்றால் அந்தப் பத்திரிகையைத் தொடங்கி, முதல் போட்டு நடத்தியவனா? இல்லாவிட்டால் அந்தப் பத்திரிகையில் பணியாற்றியவனா? பணியாற்றியவன் என்றால் என்ன வகையில்? எப்படிப்பட்ட முறையில்? இந்தக் கேள்விகளுக்கு விடை காண்பது, பாரதியின் மீது வைக்கப்பட்டிருக்கும், ‘தம்மை நம்பிய ஒருவரை ஆபத்தில் சிக்க வைத்துவிட்டுத் தாம் தூரப் போய்விட்டமை பாரதியாரின் சரித்திரத்தில் ஒரு பெரிய களங்கமேயாகும்,’ என்ற குற்றச்சாட்டு எவ்வளவு தூரம் செல்லுபடியாகும் என்பதைக் காண உதவும். (இந்தக் குற்றச்சாட்டு மிகப் பல வருடங்களுக்கு முன்னால், பாரதியின் நண்பரான எஸ். ஜி. இராமானுஜலு நாயுடு அவர்களால் வைக்கப்பட்டது. இது அவருடைய பார்வை. நமக்கான விடைகளை நாம் தேடிக்கொள்வோம்.)

சிதைந்த நிலையில் கிடைத்திருக்கும் இந்தியா முதல் இதழ். 9.5.1906 அன்று வெளிவந்திருக்கிறது. (நன்றி: ‘பாரதி தரிசனம்’ இளசை எழில் மணியன்)
சிதைந்த நிலையில் கிடைத்திருக்கும் இந்தியா முதல் இதழ். 9.5.1906 அன்று வெளிவந்திருக்கிறது. (நன்றி: ‘பாரதி தரிசனம்’ இளசை எழில் மணியன்)

‘இந்தியா’ வாரப் பத்திரிகையாக 1906ஆம் வருடம் மே மாதம் 9ஆம் தேதி தொடங்கப்பட்டது என்று சீனி. விசுவநாதன் தெரிவிக்கிறார். தொடங்கியவர் எஸ் என் திருமலாசாரியார் என்ற இளைஞர். பாரதிக்கு மூன்று வயது இளையவர் என்று விசுவநாதனுடைய பதிவு தெரிவிக்கிறது. (மகா கவி பாரதி வரலாறு – சீனி. விசுவநாதன்). ஸ்ரீரங்கம் நரசிம்மாசாரியாரின் புதல்வரான திருமலாசாரியார் தொடங்கியது இந்தியா பத்திரிகை. சுதேசிய இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அவர் முதலில் நிறுவியது ‘பிரம்மவாதின்’ என்ற பெயரிலான அச்சுக்கூடம். இந்த அச்சுக் கூடத்தை நிறுவியது யார் என்பதைப் பற்றி இரண்டுவிதமான கருத்துகள் நிலவுகின்றன. எஸ் என் திருமலாசாரியார் நிறுவினார் என்று சீனி. விசுவநாதனும், எஸ் ஸ்ரீனிவாசாசாரியார் 1903ஆம் வருடம் நிறுவினார் என்று பெ சு மணியும் இரண்டு விதமான செய்திகளைத் தெரிவிக்கிறார்கள்.

எப்படி இருப்பினும், ‘இந்தியா’ பத்திரிகை தொடங்கப்பட்ட சமயத்தில் பாரதி பணி புரிந்துகொண்டிருந்தது சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி ஆகிய இரு பத்திரிகைகளிலும். பத்திரிகை தொடங்கப்பட்டு சுமார் ஒரு மாத காலத்துக்குப் பின்னால்தான் பாரதியின் எழுத்து ‘இந்தியா’வில் வெளிவரத் தொடங்கியது. என்று முதல்? பாரதியின் எந்தக் கட்டுரை ‘இந்தியா’ பத்திரிகையில் முதன்முதலில் வெளிவந்தது? சீனி. விசுவநாதனின் ‘கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்’ அடையாளம் காட்டுவது, ‘திருநெல்வேலி ஆசாரத் திருத்தச் சங்கம்,’ என்ற பாரதியின் கட்டுரையை. வெளி வந்த நாள் 30.6.1906. அதாவது, பத்திரிகை தொடங்கப்பட்டு ஒன்றரை மாதங்களுக்கு மேல் ஆன பிறகே. ஆனால், இளசை மணியன் தொகுத்த ‘பாரதி தரிசனம்,’ சொல்லும் கணக்கை எடுத்துக்கொண்டால், 23.6.1906 முதல் பாரதியின் எழுத்துகள் ‘இந்தியா’ பத்திரிகையில் வெளிவந்திருக்கின்றன. 23 ஜூன் 1906 தேதியிட்ட இந்தியா இதழில் பாரதி ஐந்து கட்டுரைகள் எழுதியிருக்கிறான். (இந்த ஐந்து கட்டுரைகளையும் சீனி. விசுவநாதன் தொகுப்பில் காண முடியவில்லை என்பது வியப்புக்குரியது. இப்படிப்பட்ட அடிப்படை விஷயங்களை, இவ்வளவு பெரிய ஆய்வாளர்கள் கவனிக்காமல் விட்டுவிடுவது எப்படி நேர்கிறது என்று புரியவில்லை. இந்த விஷயம் சீனி. விசுவநாதனுடைய கவனத்துக்கு வருமானால் சந்தோஷப்படுவேன்.)

என்ன சொல்ல வருகிறேன் என்றால், ‘இந்தியா’ பத்திரிகை தொடங்கப்பட்டதில் பாரதிக்கு நேரடியாக எந்தப் பங்கும் இருந்திருக்கவில்லை. ‘பாரதி பின்னால்தான் வந்து இணைந்தார்,’ என்று பத்திரிகை நடத்தியவர்களில் ஒருவரான எஸ் ஸ்ரீனிவாசாசாரியார் சொல்கிறார். இந்தியா பத்திரிகையை நடத்தியவர்கள் எல்லோரும் ‘மண்டயம்’ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்தக் குடும்பத்தைப் பற்றிய விரிவான தகவல்களைப் ‘பத்திரிகையாளர் பாரதியார்,’ என்ற நூலில் பெ சு மணி அவர்கள் தந்திருக்கிறார்கள். எஸ் என் திருமலாசாரியார், எஸ் ஸ்ரீனிவாசாசாரியார் (எஸ் எஸ் ஆசார்யா என்றும் மண்டயம் ஸ்ரீனிவாசாசாரியார் என்றும் அறியப்படுபவர்), எம் பி திருமலாசாரியார் (எம் பி டி ஆசார்யா என்றும் அறியப்படுபவர்), எம் சி அழகிய சிங்கப்பெருமாள் ஐயங்கார் ஆகியோர். இவர்கள் அனைவரும் உறவினர்கள். திலகரின் வழியைப் பின்பற்றியவர்கள். இந்தக் காரணத்தாலும், தேசிய இயக்கத்தில் அவர்களுக்கிருந்த தொடர்பினாலும் பாரதிக்கு நெருக்கமாக வந்தவர்கள்.

‘இந்தியா பத்திரிகை சென்னையில் வெளி வர ஆரம்பித்த கொஞ்ச நாட்களுக்கெல்லாம் பாரதியார் அதில் வந்து சேர்ந்தார்,’ என்று மண்டயம் ஸ்ரீனிவாசாசாரியார், ‘சித்திர பாரதி’க்கு எழுதிய முன்னுரையில் சொல்கிறார். எப்படி அறிமுகமானார்கள்? அவரே சொல்கிறார். ‘இதற்கு முன்பே ‘பால பாரதா,’ என்னும் ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் அவர் எழுதியிருந்த ஒரு கட்டுரையைப் படித்து அவர் திறமையை நான் அறிந்திருந்தேன். பின்பு அவரைச் சந்தித்ததிலிருந்து எங்கள் நட்பு வெகு சீக்கிரத்தில் வளர ஆரம்பித்தது.’

பாரதியின் வரலாற்றுப் பதிவு எவ்வளவு சிக்கல்கள் நிறைந்தது என்பதற்கு மண்டயம் ஸ்ரீனிவாசாசாரியாருடைய மேற்படி வாக்கியம் ஓர் எடுத்துக்காட்டு. அவர் சொல்கின்றபடி பார்த்தால், ‘இந்தியா’ பத்திரிகையில் பாரதி எழுத ஆரம்பிப்பதற்கு முன்னாலிருந்தே ‘பால பாரதா’ பத்திரிகையில் அவனுடைய ஆங்கில எழுத்துகள் வெளிவந்துகொண்டிருந்தன என்ற தோற்றம் ஏற்படுகிறது. ஆனால் சீனி. விசுவநாதன் வேறு மாதிரி சொல்லுகிறார். ‘தமிழறிந்த மக்களிடையே சுதந்திர தாகத்தை ஊட்டிய இந்தியா பத்திரிகை நிர்வாகத்தினர் ஆங்கிலப் பயிற்சி கொண்ணட சுதேச பக்தர்களிடம் நாட்டு நடப்பைப் புலப்படுத்திக் காட்ட ஆசைப்பட்டனர். அதனால் 1906 நவம்பர் 3ஆம் தேதியிலிருந்து Bala Bharat (பால பாரத்) என்னும் ஆங்கில வாரப் பத்திரிகையைத் தொடங்கினர்.’

சீனி. விசுவநாதனின் ஆய்வின்படி, இந்தியா பத்திரிகை தொடங்கப்பட்டு ஏறத்தாழ ஆறு மாத காலத்துக்குப் பின்னால் ‘பால பாரத’ பத்திரிகை ‘இந்தியா’ பத்திரிகையின் நிறுவனர்களால் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியா பத்திரிகையின் நிர்வாகிகளில் ஒருவர் சொல்கிறார், ‘பாரதியின் ஆங்கில எழுத்தை அவர் இந்தியாவில் எழுதத் தொடங்கும் முன்பிருந்தே அறிவேன்,’ என்று! எது பொருத்தமானது, எது சரியானது என்பதை எப்படி நிர்ணயிப்பது!

ஒன்று மட்டும் நிச்சயம். இந்தப் பத்திரிகை பாரதி சென்னையில் இருந்த கால கட்டத்திலேயே தொடங்கப்பட்டிருக்கிறது. இது தொடங்கப்பட்ட காலத்தில் பாரதி புதுவைக்குச் சென்றிருக்கவில்லை. ஏனெனில், அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் என்னும் முறையில் ஓர் ஆவணத்தில் பாரதி சாட்சிக் கையொப்பமிட்டிருக்கிறான்; தேதியும் குறிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆவணத்தைப் பற்றிய விவரங்கள் நாம் இப்போது எடுத்துக் கொண்டிருக்கும் தலைப்புக்குத் தொடர்புள்ளவை. ஆகவே இதைப் பற்றிய மற்ற விவரங்களுக்கு அப்புறம் வருகிறேன்.

பாரதி பத்திரிகை ஆசிரியர் பொறுப்பு வகித்தான் என்றால், பதிவுபெற்ற, அதிகாரபூர்வமான ஆசிரியராக இருந்த பத்திரிகை ‘பால பாரத’தான். (விஜயா போ்ன்ற மற்ற சில பத்திரிகைகளும் உண்டு.) இந்தியா பத்திரிகையில் அப்படி அவன் இருந்திருக்கவில்லை. குறிப்பாக, இந்தியா பத்திரிகையின் மீது அரசாங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட கால கட்டத்தில். இந்தியா பத்திரிகையின் ஆசிரியர் பாரதியே என்று பலரும் சொல்லியும், எழுதியும் வருகிறார்கள். ‘பாரதி தரிசனம்’ என்ற தலைப்பில் பாரதியின் ‘இந்தியா’ பத்திரிகை எழுத்துகளைத் தொகுத்து வெளியிட்ட போது (1975) அதன் பதிப்புரையில் பதிப்பகத்தார் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) பின்வருமாறு சொல்கிறார்கள்:

‘இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியர் எம். சீனிவாசன் என்றாலும், மகாகவி பாரதியார்தான் அதன் உண்மை ஆசிரியர் என்பது இப்போது அனைவரும் ஏற்கும் விஷயம்.’

பாரதி அந்தப் பத்திரிகையில் எழுதியிருக்கும் எழுத்துகளின் அளவு அத்தகையது. தன்மை அத்தகையது. தலையங்கம் உட்பட எழுதியிருக்கிறான். ஆகவே அவனை ஆசிரியர் என்ற நிலையில் வைத்துப் பார்க்கலாம்தான். ஆனால், பாரதி அந்தப் பத்திரிகையின் பதிவுபெற்ற ஆசிரியராக இருந்தது ஏறத்தாழ இரண்டே மாத காலத்துக்குத்தான். ‘சென்னை அரசாங்கத்திடம் பத்திரிகை வெளியிடுவோர் ஆங்கிலத்தில் தந்த அறிக்கையின் தமிழாக்கம்’ என்று பெ. சு. மணி அவர்கள் பின்வரும் அட்டவணையைத் தருகிறார். இந்தியா பத்திரிகையின் உரிமையாளர் யார், ஆசிரியர் யார் என்றெல்லாம் விவரங்களை அரசாங்கத்துக்குத் தரும் குறிப்பு அது. பெ. சு. மணி அவர்களின் ‘பத்திரிகையாளர் பாரதியார்’ நூலிலிருந்து இந்த அட்டவணையைத் தருகிறேன்.

பத்திரிகையின் பெயர்: இந்தியா.

உரிமையாளர்: எஸ் என் திருமலாசாரியார்
உரிமையாளரே ஆசிரியர்.
(மே மாதம் நான்காம் தேதி, 1906ஆம் வருடத்தில் செய்த பதிவு)

உரிமையாளர்: எம் ஸ்ரீநிவாசன்
ஆசிரியர்: சி. சுப்பிரமணிய பாரதி
(மே மாதம் முப்பத்தோராம் தேதி, 1907ஆம் வருடத்தில் செய்த பதிவு)

உரிமையாளர்: எம் பி திருமலாசாரியார்
உரிமையாளரே ஆசிரியர்
(ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி, 1907ஆம் வருடத்தில் செய்த பதிவு)

உரிமையாளர்: எம் ஸ்ரீநிவாசன்
உரிமையாளரே ஆசிரியர்
(நவம்பர் மாதம் பதினெட்டாம் தேதி, 1907ஆம் வருடத்தில் செய்த பதிவு)

உரிமையாளர்: எம் பி திருமலாசாரியார்
உரிமையாளரே ஆசிரியர்
(ஆகஸ்ட் மாதம் பதினைந்தாம் தேதி 1908ஆம் வருடத்தில் செய்த பதிவு)

இத்தோடு, ‘இந்தியா’ பத்திரிகை, இந்தியாவிலிருந்து வெளிவருவது நின்று போகிறது. மேற்படிப் பதிவில் ஒன்றைக் கவனியுங்கள். பாரதி ‘இந்தியா’ பத்திரிகையின் பதிவுபெற்ற ஆசிரியராகப் பணியாற்றிய காலம் 31.5.1907 முதல் 6.8.1907 வரை. இரண்டு மாதங்களும் ஆறு நாளும். அவ்வளவுதான். 1907ஆம் வருடம் மூன்று முறை ஆசிரியர், உரிமையாளர் ஆகியோருடைய பெயர் மாற்றிப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதையும் கவனித்துக்கொள்ளுங்கள். விரிவாகப் பேசுவோம். இவற்றில் ஒரேஒரு முறை (இரண்டு மாத காலங்களுக்கு மட்டும்) பாரதியின் பெயர் ஆசிரியராகப் பதிவுசெய்யபட்டிருக்கிறது. 1907ஆம் ஆண்டில் நடந்த இரண்டு மாற்றங்களும் சரி, 1908ல் நடந்த கடைசி மாற்றமும் சரி, திருமலாசாரியாருக்கும், சீனிவசனுக்கும் இடையே மட்டுமே மாறிமாறி நடந்திருக்ன்ற மாற்றங்கள். பாரதியின் பெயர் பதிப்பாளராகவோ, உரிமையாளராகவோ அல்லது ஆசிரியராகவோ பதியப்படவே இல்லை.

இவை எல்லாவற்றையும்விட மிக முக்கியமான ஆவணம் பாரதியுடைய கடிதம். ‘அந்தப் பத்திரிகையை நிர்வகித்ததில் எனக்கு எந்தப் பங்கும் இருந்ததில்லை’ (“I was not the person responsible for the conduct of the Journal, and so, of course, they sent another man to gaol”) என்றுதான் ராம்ஸே மக்டானல்டுக்கு 1914ல் எழுதிய கடிதத்தில் பாரதி தெரிவிக்கிறான். இதைப் பற்றியும் பின்னால் பேசுவோம்.

பாரதி 26.8.1908 அன்று பாண்டிச்சேரிக்குப் போகிறான். பாரதியின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக்கொண்டிருந்த (28.8.1908 தேதியிட்ட) சி. ஐ. டி. டயரிக் குறிப்பு பின்வருமாறு சொல்கிறது: ‘This individual left Madras with his family for his native place in Tinnelvely.’ (Police Archives Vol. XXI, 1908) அதாவது, அப்போது பாரதியின் இரண்டாவது மகளான சகுந்தலாவைக் கருவுற்றிருந்த செல்லம்மாவைக் கொண்டுபோய் திருநெல்வேலியில் விட்டுவிட்டு, அதன் பிறகே பாண்டிச்சேரிக்குச் சென்றிருக்கிறான் பாரதி. இதையும் போலீஸ் பார்த்துக்கொண்டுதான் இருந்திருக்கிறது.

‘இந்தியா’ பத்திரிகையின் அச்சு இயந்திரங்களும் மற்ற உபகரணங்களும் பாண்டிச்சேரிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இதை ஒரு சாகசக் கதையைப் போல் விவரிக்கிறார்கள். ‘பாரதி புதுவை சேர்ந்த ஒரு மாதத்துக்குள்ளாகவே ‘இந்தியா’ பத்திரிகையின் அச்சகம் கூட மிக ரகசியமாய்ப் புதுவைக்குக் கொண்டு சேர்க்கப்பட்டது! இது அக்காலத்தில் மகத்தான சாதனையாகும்,’ என்கிறார் ரா. அ. பத்மநாபன் அவர்கள். (சித்திர பாரதி: புதுவை ‘இந்தியா’)

பாரதியின் வரலாற்றைப் பதிவு செய்தவர்களில் முக்கியமானவரான வை. சச்சிதானந்தனும் ஏறத்தாழ இதையே சொல்கிறார். ‘பாரதியார், பாண்டிச்சேரிக்குப் போய்ச் சேர்ந்த சிறிது நாட்களில் (சரியான தேதியை நிர்ணயிக்க முடியவில்லை) ‘இந்தியா பத்திரிகையும், அச்சுக் கூடமும் மண்டயம் சீனிவாசாசாரியின் முயற்சியினால் பாண்டிச்சேரிக்கு அப்புறப்படுத்தப்பட்டன. பத்திரிகையையும் அச்சுக் கூடத்தையும் புதுவையிலுள்ள யாரோ ஒருவருக்கு விற்றுவிட்டதுபோல, பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கூறி அவர்களை ஏமாற்றி அவற்றைச் சென்னையிலிருந்து கொண்டு சென்றனர்.’ (பாரதியாரின் வாழ்க்கையும் நூல்களும் – அதிகாரம் நான்கு, ‘புதுவையில் புரட்சி வீரன்’ வை. சச்சிதானந்தன்).

இப்படிப்பட்ட முடிவுகளுக்கு எப்படி வருகிறார்கள், எதன் அடிப்படையில் இப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்பதற்கு யாரும் எந்தக் குறிப்பும் தருவதில்லை. ஆய்வு என்றாலும் சரி; பதிவு என்றாலும் சரி. அது திறந்ததாகவும், வெளிப்படையாகவும், தகுந்த ஆதாரங்களை உரிய இடங்களில் தருவதாகவும், அதன் பின்னர் அந்தத் தலைப்பில் தொடர்ந்து ஆய விரும்புவோர்கள் இன்னும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் குறிப்புகளைத் தருவதாகவும், முடிவுகளுக்கான காரணங்களைக் குறிப்பிடுவதாகவும் இருந்தால் மட்டும்தான் பயன்தருவதாக இருக்கும். மற்ற விதங்களில் செய்யப்படும் எந்த ஆய்வானாலும், they just try to impress. அவற்றை எழுதிய ஆசிரியர் மெத்தப் படித்திருக்கிறார்; ஆழ ஆய்ந்திருக்கிறார் என்ற எண்ணத்தை உண்டு பண்ண உதவும். அவ்வளவுதான்.

இந்த இரண்டு பெயர்பெற்ற ஆய்வாளர்களும் சொல்வதைப் பார்த்தால், அரசாங்கத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, ஏமாற்றிவிட்டு பாரதி பாண்டிச்சேரிக்குப் போயிருக்கிறான் என்றும், ‘இந்தியா’ பத்திரிகையின் அச்சுக் கூடம் இடம் பெயர்ந்தது எனவும் தோன்றுகிறது. பாரதி திருநெல்வேலி சென்றதும், பாண்டிச்சேரிக்குச் சென்றதும் சி. ஐ. டி.களால் கண்காணிக்கப்பட்டு, காவல் துறை ஆவணங்களில் பதியப்பட்டிருக்கின்றன. அச்சுக் கூடம் பாண்டிச்சேரிக்குப் போனது பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குத் தெரியாதா? சி. ஐ. டி. குறிப்பு பின்வருமாறு சொல்கிறது:

“These individuals have removed all the plant from the INDIA office in Madras and have opened an office at Pondicherry in 72, Ambulataru Aiyar Street. The press has been set up and a staff engaged.” (Police Archive Vol. XXI, 1908. Page 754)

போலீசார் these individuals என்று குறிப்பிடுவது எஸ் என் திருமலாசாரியாரையும் (வை. சச்சிதானந்தன் குறிப்பிடுவதைப் போல் மண்டயம் ஸ்ரீநிவாசாசாரியார் இல்லை. அவர் இன்னொருவர்.) பாரதியையும். போலீஸ் இந்த நடமாட்டங்களைக் கவனித்துக்கொண்டுதான் இருந்தது. ரா. அ. பத்மநாபன் சொல்வதைப் போல் ‘மிக ரகசியமாய்ப் புதுவைக்குக் கொண்டு சேர்க்கப்’படவில்லை. இந்தியா அலுவலகமும் அச்சுக்கூடமும் இடம் பெயர்ந்ததை மட்டுமல்ல; பாண்டிச்சேரியில் எந்த விலாசத்தில் இந்தியா பத்திரிக்கையின் புதிய அலுவலகம் தொடங்கப் பட்டிருக்கிறது என்பது வரையில் சிஐடி குறிப்பில் பதியப் பட்டிருக்கிறது. ‘மகா ரகசியமாக அவை எடுத்துச் செல்லப்பட்டதாக நம் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்!

இது ஒரு பக்கம் இருக்க, ‘இந்தியா’ பத்திரிகை வழக்கில் முரப்பாக்கம் சீனிவாசன் கைதானது எவ்வாறு? பாரதியின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருந்த அரசாங்கம் அவனை ஏன் கைது செய்யவில்லை?

தொடர்வேன்…

(மேலே தரப்பட்டிருக்கும் சி ஐ டி குறிப்புகள் டாக்டர் ஜி கேசவன் அவர்கள், காவல் துறை ஆவணக் களறியிலிருந்து தொகுத்த Bharati and Imperialism – A Documentation என்ற தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. சிவகங்கை பாரதி மண்டலம் வெளியீடு.)

ஓடிப் போனானா பாரதி? – 02

ஓடிப் போனானா?

பகுதி 2

பாரதி பாண்டிச்சேரிக்குப் போனதன் தொடர்பாக அவன் மீது வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டைப் போன முறை கண்டோம். முரப்பாக்கம் சீனிவாசன் என்ற இளைஞரை போலீசில் அகப்படுமாறு விட்டுவிட்டு, தான் தப்பித்துக்கொண்டார் என்பது குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டை எடுத்து வைத்தவர் பாரதியைத் தன் நெஞ்சில் மிக உயர்ந்த இடத்தில் வைத்திருக்கும் அன்பர் என்பதையும் பார்த்தோம். பாரதி வரலாறு எவ்வளவு தவறான முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது என்றும் சொன்னோம். பாரதி பாண்டிச்சேரிக்குப் போன கதைக்குத் தொடர்பான சம்பவங்களையும், ஆவணங்களையும் எடுத்து வைத்துக் கொண்டு, இந்தக் குற்றச்சாட்டு எப்படி உருப்பெற்றது, என்ன காரணத்தால் இப்படி ஒரு வடிவம் எடுத்தது, இந்தக் குற்றச்சாட்டில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்று இதன் ஒவ்வொரு அம்சமாகப் பார்த்தபடி வருவோம். அதற்கு முன்னர், இந்தக் கதையில் சம்பந்தப்பட்டிருக்கும் கதை மாந்தர்களையும், களனையும் முதலில் அறிமுகம் செய்துகொள்வோம்.

பாரதியின் பத்திரிகை உலகப் பணிகள் ‘சுதேசமித்திரனில்’ தொடங்கின என்பது நாம் அறிந்த ஒன்றுதான். பாரதி 1904ஆம் வருடம் நவம்பர் மாதம் சுதேசமித்திரனில் பணிக்குச் சேர்ந்தான். அதாவது, பாரதி தன் நிறைமாத கர்ப்பிணியான மனைவியுடன் சென்னைக்கு வந்து முழு நேர எழுத்துப் பணிக்குத் தன்னை ஆட்படுத்திக் கொள்ளும் போது வெறும் இருபத்திரண்டு வயதுப் பையன். அந்த வயதுக்கு அவன் வகித்த பதவிக்கு அவனை இளைஞன் என்று சொல்வது கொஞ்சம் அதிகப்படி. உதவி ஆசிரியர் பணி. பெரும்பாலும் செய்தி மொழிபெயர்த்தல், பிழை திருத்துதல் போன்ற பணிகள்தாம் அவன் செய்தது. அவ்வளவுதான் எதிர்பார்க்க முடியும். பத்திரிகை உலகத்துக்கு அப்போதுதான் வந்திருக்கும் இளைஞனிடம் தலையங்கம் எழுதும் பொறுப்பைத் தூக்கி யாரும் ஒப்படைக்க மாட்டார்கள்.

இதை இங்கே சொல்வதற்குக் காரணம் உண்டு. அது இன்னொரு பாரதீய-மூடநம்பிக்கை. பாரதியைப் பற்றி நிலவும் தவறான கருத்துகளில் இன்னொன்று. தன்னைத் தலையங்கம் எழுத விடாத காரணத்தால்தான் பாரதி சுதேசமித்திரனிலிருந்து விலகி, இந்தியா பத்திரிகையில் சேர்ந்தார் என்று கவிஞர் வைரமுத்து ‘கவிராஜன் கதை’யில் எழுதியிருக்கிறார். அப்படியும் ஒரு கருத்து நிலவுகிறது என்பதும் உண்மைதான். அது கவிஞர் வைரமுத்து அவர்களின் சொந்தக் கருத்தோ, ஆய்வோ அன்று; அப்படி அவர் எழுதியதற்குக் காரணம் உண்டு. பாரதி வரலாறு எழுதிய சிலர் அப்படி ஒரு கருத்தை, பொத்தாம் பொதுவான அபிப்பிராயமாக, அடிப்படை, ஆதாரம் என்று எதையும் பார்க்காமல் எழுதி வைத்திருக்கிறார்கள். சிலர் என்ன சிலர்? பாரதியின் பாஸ்வெல் என்று போற்றப்படும் வ. ரா. இந்த விஷயத்தில் என்ன சொல்கிறார் கேட்போம்.

“தமிழுக்குப் புதிய உயிர் கொடுத்து அதைப் புது மொழியாக்கிய பாரதியார், ‘சுதேசமித்திரன்’ ஆபீசில் மொழிபெயர்ப்பு வேலை செய்தது நமக்கு ஆச்சரியமா யிருக்கலாம்.

“அய்யர், பாரதியாரைத் தலையங்கம் எழுதும்படி விட்டதில்லையாம். அரசியலில் பாரதியார் ‘அதி தீவிரவாதி’ என்ற சாக்கே தலையங்கம் எழுதாதபடி அவர் தடுக்கப்பட்டதற்குக் காரணமாயினும், வேறு விஷயங்களைப் பற்றிக் கூட, பாரதியார் சொந்தமாகக் கட்டுரைகள் எழுதும்படியாக விடப்பட்டதில்லையாம்.” (மகா கவி பாரதியார் – வ. ரா. எழுதிய பாரதி வரலாறு, பகுதி 6)

g-subramanya-aiyer-002அப்படி இருந்திருந்தால் அது புரிந்துகொள்ளக் கூடிய ஒரு நிலைதான். ஜீ. சுப்பிரமணிய ஐயரைப் பொருத்த வரை, பாரதி சின்னப் பையன்தான். அதில் என்ன ஐயம் இருக்க முடியும்? பணியில் சேர்ந்து ஓராண்டு கூட ஆகாத நிலையில் இப்படி ஒரு பொறுப்பை எந்தப் பத்திரிகையாகிலும் – இன்று கூட – இப்படி ஒரு இளைஞனிடம் ஒப்படைக்க முன்வருமோ? அது ஒரு பக்கம் இருக்கட்டும். மேற்கண்ட பகுதியைப் படிக்கும்போது, பாரதிக்கு அப்படி ஓர் ஆதங்கம் இருந்திருக்குமோ என்ற ஐயம் தோன்றும்படியாகத்தான் வ. ரா. எழுதியிருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. இப்படி எழுதியவர், ஆறு பக்கங்கள் தள்ளி, பகுதி ஏழில் சொல்கிறார்:

“…. எனவே, இரண்டு பேரும் மனம் ஒப்பிய பிறகே பாரதியார், சுதேசமித்திரன் பத்திரிகையை விட்டு விலகிக் கொண்டார். பாரதியாரிடம் சுப்பிரமணிய அய்யருக்கு இருந்த பிரேமை, அய்யர் சாகும் வரையில் இருந்தது.

பாரதியார் மனக்கசப்பால் ‘சுதேசமித்திரனை விட்டார் என்ற வதந்திக்கும் ஆதாரம் இல்லை. ஜீ. சுப்பிரமணிய ஐயர் கோகலேயைப் போல மிதவாதி அல்லர்; காந்தியைப் போலப் புரட்சிக்காரருமல்லர். எனவே, அரசியலில் அதி தீவிர புரட்சி மனப்பான்மை கொண்ட பாரதியார், அய்யரின் காரியாலயத்தினின்றும் வெளியேறியது ரொம்பப் பொருத்தமுள்ளதாகும்.” (வ. ரா.வின் மேற்படி நூல், பகுதி 7)

இந்தக் கருத்துகளை அப்படியே பிரதிபலிக்கிறார் வை. சச்சிதானந்தன் அவர்கள், ‘பாரதியாரின் வாழ்க்கையும் நூல்களும்,’ என்ற தன்னுடைய நூலில். வ. ரா.வின் மேற்படி மேற்கோள்களில் முதலாவதைத் தன் நூலின் மூன்றாம் பகுதியில் தருகிறார் சச்சிதானந்தன். ‘மனக்கசப்பு இருந்திருக்கவில்லை,’ என்ற கருத்தை எட்டுப் பக்கங்கள் தள்ளி எடுத்து வைக்கிறார். இவற்றில் எந்தப் பதிவை எடுத்துக் கொள்வது? எளிமையான, பொருத்தமான, தர்க்க ரீதியான சிந்தனைக்குச் சரிப்பட்டு வரும் முடிவைத்தானே கொள்ள முடியும்!

இப்படிப்பட்ட கருத்து முரண்களால் ஏற்பட்ட வினை கவிஞர் வைரமுத்து எழுதிய பாரதி வரலாறு வரை பாய்ந்திருக்கிறது என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது.

நம்முடைய தர்க்க ரீதியான முடிவுக்கு இப்போது வருவோம். ‘பாரதியை ஜீ. சுப்பிரமணிய ஐயர் தலையங்கம் எழுதவிட்டதில்லை,’ என்ற இந்தக் கருத்தைக் கொஞ்சம் நெருங்கி ஆய்ந்து பார்த்தால், இது பொடிப்பொடியாக உதிர்ந்து போகும். இந்தியா பத்திரிகை தொடங்கப்பட்டது 1906ஆம் ஆண்டு மே மாதம் என்பதைப் பார்க்கும் போது, பாரதி சுதேசமித்திரனில் பணியாற்றிய முதல் கட்டத்தின் நீளமே ஒன்றரை வருடங்களுக்குள்தான் என்பது தெளிவாகிறது. சுதேசமித்திரனின் உரிமையாளரும், ஆசிரியருமான ஜீ. சுப்பிரமணிய ஐயரோ, ஹிந்து பத்திரிகையைத் தொடங்கி நடத்திய அனுபவசாலி. 1878ஆம் வருடம் அவர் ஹிந்து பத்திரிகையைத் தொடங்கியபோது, பாரதி பிறந்திருக்கவே இல்லை. ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதித் தேர்ந்திருந்த அவருடைய பட்டறையில் அப்போதுதான் புகுந்திருந்த பாரதி (நமக்கெல்லாம் மகா கவிதான்; அவன் பணிக்குச் சேர்ந்த காலத்தில் இன்னொரு பையன். அவ்வளவுதானே!) அவரிடம் பயிற்சி பெற்றான். சுதேசமித்திரன் அவனைக் கூர் தீட்டியது. எனவே, வேலைக்குச் சேர்ந்து ஒன்றரை வருட காலத்திற்குள், தலையங்கம் எழுதும் பொறுப்பைத் தன்னிடம் ஒப்படைக்கவில்லை என்று வயதிலும், அனுபவத்திலும் மிக மூத்தவரான ஜீ. சுப்பிரமணிய ஐயரிடம் ‘கோபித்துக் கொண்டு’ பாரதி சுதேசமித்திரனிலிருந்து விலகினான் என்பது கொஞ்சமும் பொருத்தமில்லாத கருத்து.

ஆனால், அந்தக் குறுகிய காலத்துக்குள்ளேயே பாரதியின் ஆற்றல் மீது சுற்று வட்டாரத்தில் மிகப் பெரிய அளவில் நம்பிக்கை உண்டாகியிருந்தது. அப்படி இல்லாவிட்டால், ஆகஸ்ட் 1905ல் தொடங்கப்பட்ட பெண்கள் பத்திரிகையான ‘சக்ரவர்த்தினி’ பத்திரிகைக்கு ஆசிரியராக அவன் நியமிக்கப்பட்டிருக்க முடியாது. அதாவது, பத்திரிகையாளனாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி, துணை ஆசிரியராக ஓராண்டுக்கும் குறைந்த அனுபவமே பெற்றிருந்த இருபத்து மூன்று வயது இளைஞனுக்கு இது ஐயத்திற்கிடமில்லாமல் பெரிய பொறுப்பு.

இந்தப் பத்திரிகை சுதேசமித்திரன் பத்திரிகையின் ஓர் அங்கம் என்பது போன்ற தோற்றமே ரா. அ. பத்மநாபன் போன்றோருடைய பதிவுகளில் காணப்படுகிறது. “புதிய பத்திரிகையில், அழகாக, அவருடைய பெயர், ‘ஆசிரியர்: சி. சுப்பிரமணிய பாரதி,’ என்றும் அவர்கள் வெளியிட்டது அவரிடம் ‘மித்திரன்’ அதிபரும், ஆசிரியருமான ஜீ. சுப்பிரமணிய ஐயர் வைத்திருந்த நம்பிக்கையின் சான்றாகும்,’ என்று ரா. அ. ப. அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (சித்திர பாரதி, பக்கம் 24)

ஆனால் சக்ரவர்த்தினி பத்திரிகையின் உரிமையாளர் வேறொருவர் என்று சீனி. விசுவநாதன் சொல்கிறார். “1905ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதற்கொண்டு ‘சக்ரவர்த்தினி’ உலா வரத் தொடங்கியது. பத்திரிகையின் அதிபர் – உரிமையாளர் – திரு. பி. வைத்தியநாத ஐயர் என்பவராவார்,’ என்று சீனி விசுவநாதனின் ‘கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்’ சொல்கிறது. (தொகுதி 1, பக்கம் 38)

சக்ரவர்த்தினி பத்திரிகை - பாரதி ஆசிரியர் என்று குறிப்பிடப்படும் இடம் சுழித்துக் காட்டப்பட்டுள்ளது.
சக்ரவர்த்தினி பத்திரிகை - பாரதி ஆசிரியர் என்று குறிப்பிடப்படும் இடம் சுழித்துக் காட்டப்பட்டுள்ளது.

அதாவது, இரு வேறு உரிமையாளர்கள் நடத்திய இரண்டு வேறு பத்திரிகைகளில், இரண்டு விதமான பதவிகளை ஒரே நேரத்தில் வகித்திருக்கிறான் பாரதி என்பதுதான் இங்கே காணப்பட வேண்டிய செய்தி. சுதேசமித்திரனின் துணை ஆசிரியர்; சக்ரவர்த்தினியின் ஆசிரியர். இரண்டு பதவிகளையும் வகித்தது ஒரே காலத்தில். எத்தனை வயதில்? இருபத்து மூன்றில். இப்படி, தன்னிடம் பணியாற்றிக்கொண்டே, இன்னொரு பத்திரிகையிலும் பணியாற்ற ஜீ. சுப்பிரமணிய ஐயர் இவனை அனுமதித்திருக்கிறார். சொல்லப் போனால், அவரே கூட இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கக் கூடும். அவர் பாரதியிடம் பாராட்டிய அபிமானம் அப்படி. பாரதியே இந்த அபிமானங்களை வ. ரா. போன்றோரிடம் நிகழ்த்திய உரையாடல்களின் போது தெரிவித்திருக்கிறான். எனவே, ‘இந்தியா,’ பத்திரிகையில் அவன் சேர்ந்தது, ஜீ. சுப்பிரமணிய ஐயரிடம் கொண்ட கருத்து வேற்றுமையால் என்பது அடிபட்டுப் போகிறது. வேறெந்த இடத்தில் இப்படி ஒரு சுதந்திரத்தை எதிர்பார்க்க முடியும்?

இந்தியா பத்திரிகை யாரால், எப்போது, எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்ற விவரத்துக்கு வருவோம்.

தொடர்வேன்…

ஓடிப் போனானா பாரதி? – 01

ஒருசின்ன முன்கதை: இந்தத் தொடரைத் தமிழோவியம் இணையதளத்தில் எழுதிக் கொண்டிருந்தேன். சில காரணங்களால் இதைத் தொடரமுடியவில்லை. முற்றுப் பெறாமல் நிற்கும் இந்தத் தொடரை தமிழ்இந்து தளத்தில் தொடர்ந்து, முடிக்கிறேன். தொடர்ச்சி கருதி இதுவரையில் வெளிவந்த தவணைகளையும் இங்கே இடுகிறேன்.

ஓடிப் போனானா?

பூர்வ பீடிகை

பாரதியின் கவிதைகள் வாங்கப்படும் அளவுக்கு – கவனிக்கவும், மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு சொல்கிறேன், ‘படிக்கப்படும் அளவுக்கு’ என்று சொன்னேன் இல்லை – அவனுடைய வசனங்கள் பரவலாக பதிப்பிக்கவோ, வாங்கவோ, படிக்கவோ படுவதில்லை. பாரதி அன்பர்களாகத் தங்களைக் கருதிக்கொள்ளும் எவரும் அவனுடைய வசனங்களை ஒதுக்கிவிட்டு அவனை அறிய முடியாது என்பது என்னுடைய திடமான நம்பிக்கை. எங்கெங்கெல்லாம் அவனுடைய வசனங்களைப் பற்றிக் குரல் எழும்புகிறதோ அங்கங்கெல்லாம் ஓடிப் போய் நின்று கவனமாகக் கேட்டுக் கொள்வேன், அதாவது என் கவன வட்டத்திற்குள் வரும் எந்தக் குரலையும்.

பாரதி வசனங்கள் குறித்த அலட்சியம் மிகப் பலரிடம் விரவியிருக்கிறது. என் மரியாதைக்குரிய ஓர் அன்பரிடமும் இது உண்டு. தமிழ்நாட்டில் பாரதிக்குத் தொண்டாற்றியவர்களில் (அதாவது நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர்களில்) மிக முக்கியமான பத்து பேர் என்று பட்டியல் எடுத்தால், அவர் பெயரும் கட்டாயம் அதில் இருக்கும். ஆனால் அவர் கூட பாரதி வசனம் என்றாலே முகத்தைச் சுளிப்பார். இப்போது தலைகீழாக மாறிவிட்டார் என்பது வேறு விஷயம்.

அவர் சார்ந்த அமைப்பில் ஒரு பட்டிமன்றம் நடந்தது. பாரதி வசனங்கள்தான் விவாதப் பொருள். இவர் எதிரணியில் பேசினார். பட்டிமன்ற மரபுக்குச் சற்றும் குறையாமல் தரக்குறைவான ஒரு வாக்கியத்தை, பாரதி வசனங்கள் குறித்துச் சொன்னார். இது நடந்தது 95ல் என்று நினைவு. அந்த நிகழ்ச்சியின் போது நான் அங்கே இல்லை. அதன் பிறகு இதைப் பற்றிக் கேள்விப் பட்டதும் அவருக்கு இது குறித்து ஒரு கடிதம் எழுதினேன். பாரதியின் வசனங்களை ஏன் படிப்பதில்லை என்று எனக்கு விளக்கம் அளித்து ஒரு நீண்ட கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில்தான் நம் தலைப்பில் உள்ள கதை ஆரம்பிக்கிறது.

அவருடைய கடிதத்தில் இருந்து சில பகுதிகளை மேற்கோளாகக் காட்டி, அதன் பிறகு அவருக்கு நான் எழுதிய நீண்ட கடிதத்தை நண்பர்களுக்கு நடுவில் வைக்கிறேன். தனிப்பட்ட கடிதங்கள் என்றாலும், செய்திகள் மிக மிகப் பொதுவானவை என்பதால் இவற்றைப் பொது மேடையில் வைப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. தனிப்பட்ட ஒன்று என்பதால் அவருடைய பெயரைத் தவிர்க்கிறேன். இங்கே விவாதம் அவரைப் பற்றியதன்று. எனவே அவருடைய பெயர் தேவையில்லாத ஒன்று.

பாரதியின் வரலாறு எத்தனை தூரம் தவறான கருத்துகளை உள்ளடக்கி நிற்கிறது என்பதைக் காட்டுவதே இந்த முயற்சியின் நோக்கம். பாரதியின் அணுக்கத் தொண்டனாக அறிமுகம் பெறுவதில் பெருமிதம் கொண்ட ஒருவரே இப்படிப் பட்ட கருத்துகளைக் கொண்டிருக்கிறார் என்பது பாரதி வரலாறு பதியப்பட்டிருக்கும் விதத்தில் உள்ள குறைகளைக் காட்டுகிறது. ஒன்று ஒரேயடியான துதிபாடல். இல்லாவிட்டால், நேர்மையான அணுகுமுறை என்று காட்டிக் கொள்ளவாவது பாசாங்கான குறைகூறல். மிகச் சிறந்த முறையில் பதிவு செய்திருப்பவர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. இந்தக் கடிதத்திற்கு விடை எழுத மிகுந்த சிரமம் எடுத்துக்கொண்டேன். ஆதார பூர்வமாக எடுத்துச் சொல்ல நிறைய வரலாற்றுப் பதிவுகள் தேவைப்பட்டன.

நான் குறிப்பிடும் பாரதி அன்பருக்கு, பாரதியின் கவிதைகளைப் படிப்பதோடு நிறுத்திக்கொண்டால் வம்பில்லை என்ற ஒரு அபிப்பிராயம் ஆழமாகவே இருந்தது. பாரதியின் உரைநடையைப் படிக்கத் தொடங்கினால் பல சிக்கல்களுக்கு உள்ளாக நேரிடும் என்றொரு கருத்தும் அவருக்கு இருந்தது. எடுத்துக் காட்டாக ஒன்றைச் சொன்னார். பாரதி பாண்டிச்சேரிக்குப் போனதைக் சுற்றிப் படர்ந்திருக்கும் சில வினோதமான செய்திகளும், பாரதியின் ‘இந்தியா’ பத்திரிகை எழுத்தில் சிலவும் அவனை நல்லதொரு கோணத்தில் காட்டவில்லை என்பது அவற்றில் ஒன்று. பாரதியின் நெருங்கிய நண்பர்களே, ‘ஒன்றும் அறியாத அப்பாவியான முரப்பாக்கம் சீனிவாசனை – இந்தியா பத்திரிகையின் ஆசிரியராகப் பதிவு பெற்றிருந்த இளைஞரை – இக்கட்டில் மாட்டி வைத்துவிட்டு, தான் தப்பித்துக்கொண்டார்,’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ‘பாரதியின் வரலாற்றில் இது ஒரு கரும்புள்ளி,’ என்றும் பாரதியின் சில நண்பர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்தக் கருத்தைத்தான் நான் குறிப்பிட்டிருக்கும் பாரதி அன்பர் தன் கடிதத்தில் எடுத்து வைத்திருந்தார்.

இனி அவருடைய 1.2.1997 தேதியிட்ட கடிதத்திலிருந்து சில பகுதிகள்.

“பாரதி ஒரு மகாகவி. முதலாவதாகவும், இரண்டாவதாகவும், மூன்றாவதாகவும். அவர் வசனகர்த்தா, சிறுகதை ஆசிரியர், வசன கவிதையின் பிதாமகன் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்தான் என்பது என் அசைக்க முடியாத கொள்கை. எதற்கெடுத்தாலும் அவர் மீது அட்சதை தூவி அர்ச்சிக்கும் பூஜா மனப்பான்மை எனக்கு உடன்பாடல்ல. மேலும், வசனத்தில் பாரதியை விஞ்சும் எழுத்துகள் வந்துவிட்டன. கவிதையில் அப்படி இல்லை என்பது என் கணிப்பு. மேலும், பாரதியின் வசனத்தை ஆராய்ந்தால் கவிதையுடன் முரண்படும் இடங்கள் வருகின்றன. பாரதியின் வசனச் சிறப்பைப் பற்றி என் பழைய கருத்துகள் சில மறு பரிசீலனை செய்யப்படுகின்றன. எத்தனைப் பிரச்சினைகள் பற்றி அவன் சிந்தித்திருக்கிறான் என்பதை எல்லாம் அறிந்து வருகிறேன்.

பாரதி புதுவைக்குச் சென்ற (ஓடிய) வரலாறு நாம் அறிந்ததே. இது பாகை முள்ளாக உறுத்துகிறது. நான் வணங்கும் இராமநுஜரும் இப்படி கர்நாடகத்துக்கு ஓடியவர். என்ன சமாதானம் சொன்னாலும் இங்கிருந்து போராடி இருக்க வேண்டாமா? இரண்டு ஜன்ம தண்டனை பெற்ற கப்பலோட்டிய தமிழர் ஊரைவிட்டா ஓடினார்? இதில் insult added to the injury என்னவென்றால், இந்தியா பத்திரிகை ஆசிரியராக உண்மையில் செயல்பட்ட பாரதி, புதுச்சேரி செல்ல ‘நாம்கே வாஸ்தே’ ஆசிரியர் கைது செய்யப்படுகிறார். அவர் பயந்தாங்கொள்ளி. நீதிமன்றத்தில் தாம் பிரிட்டிஷ் விசுவாசி என்று வாக்கு மூலம் தருகிறார் அந்த அப்பாவி! இதைக் கண்டித்துப் புதுவையிலிருந்து பாரதியாரின் ‘இந்தியா’ தலையங்கம் எழுதுகிறது! வீரமாக எதிர்த்து நின்றிருக்க வேண்டாமா? என்று. (வேடிக்கை. நீதி மன்றத்தில் நின்று குரல் கொடுக்க வேண்டியவர் ஓடி வந்துவிட்து மட்டுமன்றி, இப்படி ஓர் எழுத்து!) ஓடிவந்த செயலுக்கு வருந்தியதாக பாரதியார் எழுத்தில் ஒரு குறிப்பும் இல்லை. பாரதி வசனம் பற்றிப் பேசினால் இதெல்லாம் வரும் என்று பட்டிமன்றத்தில் கூறினேன். இதுதான் விமர்சனத்துக்கு ஆளானது.”

இதில் என்ன வேடிக்கை என்றால், மேற்படிச் செய்திகளில் எதற்குமே ஆதாரம் இல்லை என்பதுதான். (1) பாரதி முரப்பாக்கம் சீனிவாசனை (இந்தியா பத்திரிக்கை ஆசிரியர்) காட்டிக் கொடுத்துவிட்டு பாண்டிச்சேரிக்குத் தப்பி ஓடிவிட்டார். (2) அங்கே போய் ஒளிந்து வாழ்ந்துகொண்டு இந்தியா பத்திரிகையில் அவரைப் பற்றி இழிவாக எழுதினார். (3) தான் ‘ஓடிப் போய்விட்டதற்காக’ வருத்தப் பட்டு எழுதவில்லை. (இத்தனைச் சிக்கல்கள் வெளிப்படும் ஆகையினாலே பாரதி வசனங்களைப் படிப்பதில்லை.)

முதல் கருத்துக்கு அணுக்கமாக இருப்பது, பாரதியின் தோழரும் பத்திரிக்கையாளருமான எஸ். ஜி. இராமநுஜலு நாயுடு காரணம். “தம்மை நம்பிய ஒருவரை ஆபத்தில் சிக்கவைத்து விட்டுத் தாம் தூரப் போய்விட்டமை பாரதியாரின் சரித்திரத்தில் ஒரு பெரிய களங்கமே ஆகும்” என்று எழுதியிருப்பது. உண்மைகளை நுணுகிப் பார்த்தால் இந்தக் கூற்றுக்கு ஆதாரமே இல்லை என்பது புலனாகும்.

‘ஓடிப் போய்விட்டார்’ என்ற வன்மமான எழுத்து சுதேசமித்திரனில் வெளிவந்த ஒன்று. (அதாவது பாரதி இந்தியா பத்திரிகையில் பணியாற்றிய காலகட்டத்தில்). “துவக்கத்திலேயே கவர்ன்மெண்டார் எச்சரித்திருந்தார்களானால் இப்போது ஓடிப் போயிருக்கிற எடிட்டரும், புரொப்ரைட்டரும் அப்படிப்பட்ட வியாசங்கள் தோன்ற இடம் கொடுத்திருக்க மாட்டார்கள். அவைகளால் விளையும் தீங்கும் குறைந்து இருக்கும்’ என்று சுதேசமித்திரன் 16.11.1908ல் எழுதியதை பெ. சு. மணி சுட்டிக்காட்டுகிறார். (“பிற பத்திரிகைகள் எடுத்துக் கூறாததை பின்வருமாறு வெளியிட்டது” என்ற குறிப்புடன். – பத்திரிகையாளர் பாரதியார், பெ. சு. மணி, பக்கம் 141).

முரப்பாக்கம் சீனிவாசனைச் சிக்க வைத்துவிட்டுத் தான் தப்பிவிட்டார் என்ற தவறான கருத்துக்கு இராமநுஜலு நாயுடு வித்திட்டார். ரா. அ. பத்மநாபன், நாடக பாங்கில் அந்தக் காட்சியை எழுதுவதாக நினைத்துக் கொண்டு ‘சித்திர பாரதி’யில் இந்தத் தவறான கருத்துக்கு நீரூற்றி வளர்த்தார்.

பாரதியின் வாழ்க்கை மிகப் பெரும் அளவில் எழுதப்பட்டிருந்தும், அவரவருக்குத் தோன்றிய விதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சிக்கலாகப் பிரித்து, உண்மையை ஆதார பூர்வமாகத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. என்னுடைய விடைக் கடிதம் அப்படிப் பட்ட ஒரு முயற்சி. பின்வருவது என் விடைக் கடிதத்திலிருந்து.

எனதன்புக்குரிய ……. அவர்களுக்கு,

தங்களின் அன்பான கடிதம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. பல நாள்களுக்குப் பிறகு சிந்திக்க நிறைய தீனி கிடைத்திருக்கிறது.

ஆரம்பத்திலேயே ஒன்று கூறிவிடுகிறேன். பாரதியைப் பற்றி, மற்றும் அவரின் எழுத்தைப் பற்றி எந்த அபிப்பிராயத்தையும் யாரும் வைத்துக்கொள்ளலாம். அதை யாரும் மறுக்கவோ, குறை கூறவோ முடியாது. தங்களுக்கு, பாரதி கவிஞனாக மட்டுமே தென்பட்டால் அதற்கு எந்தவித ஆட்சேபமும் கிடையாது. உதிக்கும் செங்கதிர் ஒரு வண்ணமும், உச்சி வெய்யில் ஒரு வண்ணமும், அஸ்தமனத்தின் போது ஒரு வண்ணமும் தெரியவில்லையா? ஆனால், வானவில் தோன்றும் போதன்றோ சூரியனுக்கு ஏழு வண்ணங்கள் இருப்பதாய்ப் புலப்படுகிறது?

கண்ணுக்குக் கண் பார்வை மாறுபடும். மஞ்சள் நிறத்தில் நமக்குத் தெரியும் பூ, வெள்ளை நிறத்தில் தேனீக்குத் தெரிவதாகச் சொல்கிறார்கள். போகட்டும். இந்தப் பார்வை வித்தியாசத்தைப் பற்றி பாரதி என்ன சொல்கிறான் தெரியுமா?

“ஸங்கீதத்தில் ஸ்வர ஸ்தானங்கள் ஸ, ரி, க, ம, ப, த, நி என ஏழு இருக்கின்றன. ஆனால் நாம் எந்த ஒலியையும் ஸ (ஷட்ஜம்) என்று வைத்துக் கொண்டு அதற்குத் தக்கபடி மற்ற ரி, க, ம, ப, த, நி பாடலாம். இங்ஙனம் ஸாதாரண மனிதனுடைய தொண்டைக்கு இரண்டரை ஸ்தாயிதான் எட்டும். சிலருக்கு மூன்று ஸ்தாயியும், சிலருக்கு இன்னும் அதிகமாகவும் எட்டக்கூடும் என்றும் சொல்லுகிறார்கள். இருந்தாலும் மூன்றரை ஸ்தாயிக்கு மேலே மனிதத் தொண்டை பேசுதல் ஸாத்தியமில்லை.

ஆனால், ஒளியுலகத்தில் அநந்த ஸ்தாயிகள் இருக்கின்றன. கிளிக்குஞ்சு கத்துவதை ஷட்ஜமாக வைத்துக் கொள்வோம். சந்த்ர மண்டலம் இடிந்து பூமிமேல் விழுந்தால் அதிலுண்டாகும் ஒலியை மேற்படிக் கிளிக்குஞ்சின் ஒலியினின்றும் எத்தனை ஸ்தாயி மேலாக வைத்துக் கணக்கிடலாம்?

……….ஒளியோ எல்லையற்றது. நாமோ துளி தவிர முழுக் குருடு. மனிதன் இருளாகக் கருதுவதை ஆந்தை ஒளியாகக் கருதுகிறது. ஒளி விஷயத்தில் ஆந்தை நம்மைவிட ‘கீழ் ஸ்தாயி’ பழகியிருக்கிறது. ஆனால் நம்முடைய ஸ்தாயி ஆந்தைக்கு எட்டாது….”

மேலே எழுதிக் கொண்டே போகிறார். ஆச்சரியமான physics. குழந்தைக்கும் புரியவைக்கும் அழகான உத்தி. நம் ஒவ்வொருவருக்கும் இது பொருந்தும். ஒருவருக்கு எட்டுவது மற்றவருக்குப் புலப்படுவதில்லை. சங்கங்கள் அமைப்பதும், கழகங்கள் குழுமுவதும் தத்தமக்குப் புலப்பட்டதை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளவே. ஆகவே, உங்கள் பார்வைக்குப் பட்டதைச் சொல்லிவிட்டீர்கள். என் பார்வையில் பட்டதையும் கொஞ்சம் சொல்கிறேன். ஒன்றே ஒன்று. ஆயிரமாயிரம் வாதப் பிரதிவாதங்களால் ஒரே ஒரு உண்மையை நிறுவவோ, தெளிவுபடுத்தவோ, தரிசிக்க வைக்கவோ இயலாது. சத்தியம் வாதங்களுக்கு அப்பாற்பட்டது. பற்பல வாதங்களைக் கண்டும், ஆராய்ந்தும் சத்தியத்தின் வழி இன்னதாக இருக்கலாம் என்று நிச்சயித்துக் கொள்ளலாகும். அதாவது, யாருடைய வாதம் மேலானது என்ற ஆராய்ச்சியில் இறங்காமல் இருந்தால்.

ராமனுஜரைப் பற்றி சொல்வதற்கான தகுதியோ, கல்வியோ எனக்கில்லை. பாரதியைப் பற்றி நிச்சயமாகச் சொல்ல இயலும்.

பாரதி வரலாறு எழுதிய ஒவ்வொருவரும், அவர் பாண்டிச்சேரி செல்வதற்கு (சரி, ஓடிப் போவதற்கு) உடன்படவில்லை; நண்பர்களின் வற்புறுத்தல் அதிகரிக்கவே, இணங்கினார் என்கிறார்கள். (முரப்பாக்கம் ஸ்ரீனிவாசன் கதைக்குப் பின்னால் வருகிறேன்.)

“பாரதியார் சென்னையிலிருப்பதற்கு அஞ்சவில்லை. ஆனால், நண்பர்கள்தான், சிறை செல்வதைவிட புதுவை சென்று அங்கிருந்து இந்தியாவைத் தொடர்ந்து நடத்த முயல்வதே சரி என்று வற்புறுத்தினார்கள். மேலும் அக்காலம் காந்தி யுகதுக்கு முந்தியது. திலகர் முதலிய தலைவர்கள், சிறை சென்று ஆத்மிக வழியில் பிரிட்டிஷ்காரனை எதிர்க்க முடியும் என்று கருதவில்லை. போராட்டத்தை விடாமல் நடத்த வேண்டும் என்பதே கருத்தாயிருந்தார்கள்.” — சித்திர பாரதி. ரா. அ. பத்மநாபன்.

“பாரதியார் வெள்ளையர் ஆட்சிக்குப் பயந்து சென்னையை விட்டு ஓடிவிடவில்லை. அவர் எழுத்திலும், பேச்சிலும், வாழ்க்கையிலும் அச்சத்தை அறவே தவிர்த்தவர். அவர் பாண்டிச்சேரிக்குச் செல்வதற்கு அவர் நண்பர்கள்தான் காரணம்.” பாரதியாரின் வாழ்க்கையும் நூல்களும். வை. சச்சிதானந்தன்.

“பாரதியார் சென்னையில் இருப்பது அபாயம் என்றறிந்த அவரது நண்பர்கள், அவர் பிரிட்டிஷ் இந்தியா எல்லையில் எங்கிருந்தாலும் ஆபத்துதான் என்றும், புதுச்சேரி போன்ற பிரெஞ்சு இந்தியாவுக்குப் போய்விடுவதே நல்லது என்றும் சொன்னார்கள்.” — பாரதியைப் பற்றி நண்பர்கள். நீலகண்ட பிரம்மச்சாரி. (நீலகண்ட பிரம்மச்சாரி பாரதி ‘விஜயா’ பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்த போது துணையாசிரியராக இருந்தார். கலெக்டர் ஆஷைக் கொன்ற வாஞ்சிநாதன் இருந்த குழுவின் தலைவர். சத்குரு ஓம்கார் என்ற பெயரில் மைசூர் நந்திஹில்ஸ் பகுதியில் துறவியாக வாழ்ந்த 1978ல் காலமானார்.)

திரு. சீனி. விசுவநாதன் கூறுகிறார்.

“பழுத்த பத்திரிகையாளரும், பாரதியை உள்ளும் புறமும் அறிந்தவருமான திரு. எஸ். ஜி. ராமநுஜலு நாயுடு அவர்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால்,

‘…..அதற்கு முன்னர் எவரும் அவ்வழியில் பத்திரிகையை நடத்தவில்லையென்று சொல்லும்வாறாக வெகுசிறப்புடனும், திறமையுடனும் எழுதிவரத் தொடங்கினார். இந்தியா பத்திரிகை பிரபலப்பட்ட பொழுது அது மிகவும் உக்கிர வாசகமுள்ளதாக இருந்தது. சிறிதும் அச்சமின்றி எழுதப்படலானது. அந்த அம்சம்தான் கடைசியில் அப்பத்திரிகைக்கு ஆபத்தாய் முடிந்தது. பத்திரிகை என்றைக்கும் நடக்கும்படியான ரீதியில் சாந்தமாய், சட்ட வரம்புக்கு உட்பட்டு நடத்தும்படி பல நண்பர்கள் கூறியும் பாரதியாரி எழுதுகோல் பழையபடியே இருந்தது. பத்திரிகைக்கு ஆபத்து நிச்சயம் என்று பலர் கூறினர்.’ (அமிர்தகுண போதினி 1929).

“நின்று போராடியிருக்க வேண்டாமா?” என்பது தங்கள் வாதம். நாம் விரும்புகிறபடியெல்லாம் சரித்திரம் நடந்துவிடுமா? நடப்பதுதான் சாத்தியமா?

தொடரட்டுமா?

நகரம் நானூறு – 8

இந்த முறை நகரத்தில் திரியும் யானைகளின் உலா. சென்னைக்கு யானை; பெங்களூருக்கு ஒட்டகம். பெங்களூர் ஒட்டையை பின்னொரு நாள்பார்ப்போம். இப்போதைக்கு சென்னை நகரத்து யானைகள் இடம்பெறுகின்றன. (படங்களில் காணப்படுபவை தஞ்சை பெரியகோவில் முன்னால் நிற்கும் யானை. நாமம் போட்டது, ஸ்ரீரங்கம் ஆலயத்தைச் சேர்ந்தது.)

elephant-3
முன்னே மணியொலித்து மோதி அறிவிக்கச்
சின்னதாய் ஆனை தெருவந்தால் – சன்னலெல்லாம்
பிஞ்சு முகம்முளைக்கும் பேட்டை கலகலக்கும்
குஞ்சிரிப்புக் கென்ன குறை.

கடைத்தெருவில் வாழை கரந்தொடக் காசு
உடைக்கின்ற தேங்காய்தென் னோலை – சடக்கென்று
தானே குவிகின்ற சாத்தியங்கள் உண்(டு)அதனால்
ஆனையொன்று வாங்கிடலா மா.

elephant-with-namam

யானைகள் அவ்வப்போது கோவில்களுக்கும், கட்சிகளுக்கும் வாடகைக்கு விடப்படுவதுண்டு. அப்படி வாடகைக்குப் போகும் யானைகளின் கோலம் அன்றாடம் மாறிகொண்டே இருக்கும். நேற்று நாமம்; இன்று திருநீறு; நாளை ‘கடவுள் இல்லை’ கோஷம் என்று ஒவ்வொரு நாளும் யானை சுமக்கும் வேடம் அனேகம்.

நேற்றிட்ட நாமம் நெடுமால் கோயிலுக்கு
தீற்றிட்ட சாம்பல் சிவத்துக்கு – மாற்றியெதும்
போடா திருந்தால் புரட்சிகரக் கட்சிக்கு
வாடகைக்கு ஆனையுறும் வாழ்வு.

elephant-2

சேன்னையில் தண்ணீர்ப் பஞ்சம் வந்தால் பாதிப்புக்கு ஆளாவது தெருக்களில் இட்டுச் செல்லப்படும் யானையும்தான். இப்படி ஒரு காட்சியைக் கண்டபோது புகைப்படம் எடுக்கத் தவறிவிட்டேன். இனி என்றாவது ஒருநாள் கிடைக்கலாம்.

சொட்டும் குழாயைத் துதிக்கைக்குள் மூழ்கடித்து
ஒட்டஒட்ட என்ன உறிஞ்சிடினும் – கிட்டியதும்
என்னை? வெறுங்காற்றே! ஏமாந்த யானையுடன்
சென்னை நகரத் தெரு.

துதிக்கையை ஆசி வழங்க உயர்த்திய அடுத்தகணமே அதே துதிக்கையைக் காசுவேண்டி தாழ்த்தவும் பழகியிருக்கிறதல்லவா? ஓட்டுக்குக் கையேந்தி அடுத்த கணமே மக்களுடைய முகத்தை மறந்துவிடும் போக்குக்கு இது எவ்வளவோ மேல், இல்லையா! அங்கே உயரும் கை, தாழ்கிறது. இங்கோ, தாழும் கை உதைக்கிறது.

ஆசிக்(கு) உயர்ந்தகை அப்படியே முன்தாழ்ந்து
காசுக்காய் ஏந்தும் காட்சியிதை – யோசித்தால்
வாக்குக்குக் கையேந்தி மக்கள் முகம்மறக்கும்
போக்குக்(கு) இதுமேல்தான் போம்.

நகரம் நானூறு – 7

‘பசும்புல் தலைகாண்பரிது‘ என்று சொன்ன மைலாப்பூர்காரர் இப்போது மைலாப்பூருக்கு வந்து பார்த்தால் விசும்பின் துளி வீழ்ந்துகொண்டிருந்தாலும் பசும்புல் தலை காண்பது அரிது என்ற புது உண்மையை உணர்ந்துகொள்வார். பெங்களூரில் பத்துப் பதினைந்து அருகம்புல் கொண்ட கட்டு ஐந்து ரூபாய்க்கு விற்கிறது! பூஜைக்கு வேண்டும் என்று அதையும் வாங்குகிறார்கள். புல்லும் விலைபோகும் புதுக்காலம் இல்லையா இது! இந்தப் படம் சென்னை மடிப்பாக்கத்தில் எடுக்கப்பட்டது. சாலையெல்லாம் காங்க்ரீட் போட்டு மெழுகினால், பசு எதைத்தான் மேயும! சுவரில் உள்ள வாசகத்தைப் பாருங்கள்! புல்லை மேய்வதை விட இது எவ்வளவோ மேல் என்று சொல்வது போலில்லை!

cows-0081

தார்மெழுகி காங்க்ரீட் தளமிட்டுச் சாலைகள்;
வேர்பிடித்துப் புல்முளைக்கா வீதிகளில் – கார்செல்லும்
திக்கெட்டும் பச்சையெதும் தென்படவே இல்லையெனில்
பக்கெட்டை மேயும் பசு.

நகரம் நானூறு – 6

நகரம் நானூறு

cuckoo-009மழைக்காலத்தில் கூவுகின்ற குயில் ஒரு அற்புதமா வாழ்க்கைச் சித்திரமல்லவா! துணையைத் தேடிக் கூவுகிறது குயில் (mating call). பருவம் கடந்து போனபின்பும் இந்தக் குயில் கூவிக்கொண்டிருக்கிறது. பருவம் கடந்தபின்னும் துணையைத் தேடிக்கொண்டிருக்கும் இந்தப் படிமம் எத்தனையோ சேதிகளைச் சொல்கிறதில்லையா! மழையில் நடுங்கிக் கொண்டு கூவிக் கொண்டிருக்கும் குயிலின் புகைப்படத்துக்காக கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் காத்திருந்தேன். இந்தப் படத்தில் நடுக்கம் தெரிந்தால், அதற்குக் காரணம் குளிரால் குயில் நடுங்கிக் கொண்டிருக்கிறது என்பது.cuckoo-006 காட்சியைப் படம் பிடிக்கத்தான் காலச்செலவு ஏற்பட்டது. வார்த்தையில் படம்பிடிப்பது இவ்வளவு வேலை வாங்கவில்லை.

சன்ன மழைத்தூறல்; சாத்திவைத்த சன்னல்கள்
முன்னோட்ட மேக முழக்கங்கள் – இன்னும்
சருகுதிரும் தாழ்கிளையில் தன்னுள்தான் ஆழ்ந்து
குரலுடைந்து கூவும் குயில்

கம்பராமாயணம் – 19 (Kamba Ramayanam – 19)

03. நகரப் படலம் – Canto of the City. (16 – 20)

அந்தமா மதில்புறத்து, அகத்து எழுந்து அலர்ந்த, நீள்
கந்தநாறு பங்கயத்த கான(ம்)மான மாதரார்
முந்துவாள் முகங்களுக்கு உடைந்துபோன மொய்ம்பு எலாம்
வந்துபோர் மலைக்க, மாமதில் வளைந்தது ஒக்குமே. 16

சொற்பொருள்: கந்தநாறு – நறுமணம் கமழ்கின்ற. வாள் – ஒளி. மொய்ம்பு – வலிமை. மலைக்க – போரிட, போர் தொடுக்க

கோட்டையைச் சுற்றிலும் பரந்து கிடக்கும் அகழிக்குள் பூத்திருக்கும் நறுமணம் கமழும் தாமரைக் கூட்டங்களைப் பார்த்தால், கோசல நாட்டில் உள்ள பெண்களின் முக எழிலுக்கு ஈடாக மாட்டாமல் தோற்றுப்போய் ஓடிய தாமரைகள் எல்லாம் ஒன்றாகக் கூடி, தங்களுடைய சக்தியை எல்லாம் திரட்டிக் கொண்டு, ‘உங்கள் அழகுக்கு நாங்கள் ஈடாக மாட்டோமா இல்லையா என்பதைப் பார்த்துவிடுவோம்’ என்ற கருத்தோடு படையெடுத்து வந்து, அந்த மதிற்புறம் முற்றிலும் சூழ்ந்து நிற்கின்றனவோ என்று தோன்றச் செய்கின்றது.

நாட்டுக்கு வெளிப்புறத்தில் அகழி இருப்பதால், எல்லைக்கு வெளியே மலர்ந்த தாமரைகளை, மகளிருடைய அழகுக்கு ஆற்றாமlotus_pondல் தோற்றோடிப் போனவை என்று வர்ணித்தார். அவை பெருங்கூட்டமாக மதிலுக்கு வெளியே மலர்ந்திருப்பதால், ‘இவையெல்லாம் இந்த நாட்டை முற்றுகை இடத்தான் இப்படித் திரண்டிருக்கின்றன’ என்று கற்பித்தார். அப்படிப் போர்தொடுக்க ஒரு காரணம் வேண்டுமல்லவா? அதையும் பொருந்தக் கூறினார்.

Translation: Were these lotuses blossoming in their thousands in the moat around the fortification of the City, defeated in lustre, in comparison to the brilliance of the countenance of the women of Ayodhya (and therefore are to be found outside the City?) (And going by their sheer numbers, methinks) They are laying a siege around the bulwark, collecting all their strength together to vie with the beauty of those who defeated them?

Elucidation: The dyke around the wall is full of lotus blooms. So dense and thick is the growth and blossoming that they wear the appearance of a ‘lotus army’ laying a siege around the city walls. A poetic delight indeed.

சூழ்ந்தநாஞ்சில் சூழ்ந்தஆரை சுற்றும்முற்று பார்எலாம்
போழ்ந்தமா கிடங்கிடைக் கிடந்துபொங்கு இடங்கர்மா,
தாழ்ந்தவங்க வாரியில், தடுப்பஒணா மதத்தினால்,
ஆழ்ந்தயானை மீள்கிலாது அழுந்துகின்ற போலுமே. 17

சொற்பொருள்: சூழ்ந்த – சூழ்ச்சித் திறனால் உருவாக்கப்பட்ட. (சூழ்ச்சி என்றால், ஆழ்ந்த சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு என்பது பொருள். ஊழிற் பெருவலி யாவுள? மற்றொன்று சூழினும் தான் முந்துறும்’ என்று வள்ளுவர் சொல்வதைப்போல்.) பார் எலாம் – பாறையை எல்லாம், நாஞ்சில் – மதிலின் ஓர் உறுப்பு. ஆரை – மதில். கிடங்கு – அகழி (இந்த இடத்தில்). இடங்கர் – முதலை. வங்க(ம்) – கப்பல்.

நன்கு ஆலோசித்துத் திட்டமிடப்பட்டு எழுப்பப்பட்டுள்ள (நகர) மதில் சுவரைச் சுற்றிலும் உள்ள பாறைகளை எல்லாம் பிளந்து, மிக ஆழமாக உருவாக்கப்பட்ட அகழிகளில் பொங்கி எழுவதும், மீள வீழ்வதுமாகத் திரியும் பெரிய முதலைகளைப் பார்த்தால், அடக்க முடியாத மதம்பிடித்த யானைகள் (தம்முடைய மதமயக்கத்தினால்) பெரிய கப்பல்கள் இயங்குகிcrocodile1ன்ற கடலி்ல் வீழ்ந்து, அதிலிருந்து மீளமுடியாமல், நீருக்கு மேலே எழுவதும் மீண்டும் மீண்டும் அழுந்துவதுமாகக் கிடப்பதைப்போல் இருக்கிறது.

Translation: The huge crocodiles in the deep ditch around the well thought-out and designed bulwark of the city, keep surfacing for a while and immersing deep again. This (scene) wears the appearance of massive elephants in uncontained rut, (having lost control over themselves) falling in the sea—full of ships—and then submerging and surfacing, struggling to get out of there.

Elucidation: The fortification is well designed; the ditch around is deep enough to provide asylum to crocodiles as large as elephants. And the crocodiles keep moving about, thus providing impregnable security to the city.

ஈரும் வாளின் வால் விதிர்த்து, எயிற்று இளம் பிறைக் குலம்
பேர மின்னி வாய் விரித்து, எரிந்த கண் பிறங்கு தீச்
சோர, ஒன்றை ஒன்று முன் தொடர்ந்து சீறு இடங்கர் மா,
போரில் வந்து சீறுகின்ற போர் அரக்கர் போலுமே. 18

சொற்பொருள்: ஈரும் – வகிரும்; விதிர்த்தல் – நடுங்குதல்; பக்கத்துக்குப் பக்கம் அசைதல். கிழிக்கும். எயிறு – பல். இடங்கர் – முதலை.

கூர்முனைகள் நிறைந்த தம்முடைய வால்களைப் பக்கத்துக்குப் பக்கம் வீசியபடியும்; வரிசையான பிறைச்சந்திரனைப் போன்ற வளைந்த பற்கள் வெளியே தோன்றுமாறு வாயைப் பிளந்தபடியும்; கோபமிகுதியால் கண்களில் தீப்பொறி பறப்பதுபோன்ற தோற்றத்தைக் கொண்டும், ஒன்றை ஒன்று தொடர்ந்தபடி (அந்த அகழியில்) சீறிக்கொண்டிருக்கும் முதலைகளின் கூட்டம், போர்க்களத்தில் வந்து ஆர்ப்பரித்துச் சீறும் அரக்கர்களின் கூட்டத்தை ஒத்து இருந்தது.

Translation: Numerous alligators swam in the ditch around the fortress, waving their saber-tipped saw-like tails sided-to-side for their swords; showing rows and rows of crescent like teeth, with their mouths menacingly opened wide, swarming about in the ditch resembled battlions of demons on the battlefield, swirling their swords about with their gory teeth exhibited threateningly.

Elucidation: The security offered by the natural inhabitants of the ditch around the fort, with their tails for swords and the threat offered by the mere sight of their mouths wide opened is described, underlining the well-secured high-protection of the fortress.

ஆளும் அன்னம் வெண் குடைக் குலங்களா, அருங் கராக்
கோள் எலாம் உலாவுகின்ற குன்றம் அன்ன யானையோ,
தாள் உலாவு பங்கயத் தரங்கமும் துரங்கமா,
வாளும், வேலும், மீனம் ஆக, மன்னர் சேனை மானுமே. 19

சொற்பொருள்: கரா – முதலை/ தரங்கம் – அலை. துரங்கம் – குதிரை

அந்த அகழியில் நீந்தும் அன்னங்களே (அரசனுடைய) வெண்கொற்றக் குடைகளாகவும்; முதலைகளே—கிரகங்களெல்லாம் சுற்றிவரும்படியான பெரிய—மலைகளை ஒத்த யானைப் படைகளாகவும்; வீசும் அலைகளில் அலைவுறும் தாள்களைக் (தண்டுகளைக்) கொண்ட தாமரைகளே குதிரைப் படைகளாகவும்; அங்கு நீந்தித் திரிகின்ற மீன்களே வாளாகவும், வேலாகவும் தோற்றமளித்து, அந்த அகழியே மன்னனுடைய தேர், யானை, குதிரை, காலாள் என்ற நால்வகைப் படையாகத் திகழ்ந்தது.

கண்களுக்கு மீனையும், வேலையும், வாளையும் உவமை சொல்லும் வழக்கத்தைச் சற்றே மாற்றி, மீன்களை வேலுக்கும் வாளுக்கும் உவமையாகப் பயன்படுத்தியிருக்கிறான் கவி. நகாசு வேலை.

Translation: Swans swimming in the ditch resembled the Regal White Canopy; alligators resembled huge hill-like elephants; lotuses floating on their long stems in the waves of the waters moved forth like arrays upon arrays of horses; and the fish swimming in the waters were the swords and lances. Thus, all the four divisions of the King’s army—Chariot, Elephant, Horse and Infantry—found their place right in the ditch around the bulwark.

Elucidation: It is common in literature of those days to liken human (especially women’s) eye to swords, the head of lance and also to fish. The poet works his way aboutt from the other side. He picks up the fish that is used as similie and mixes all the metaphors to create a rich imagery of the schools of fish moving about like infantry wielding swords and lances.

விளிம்பு சுற்றும் முற்றுவித்து வெள்ளி கட்டி, உள்ளுறப்
பளிங்கு பொன்தலத்து அகட்டு அடுத்துறப் படுத்தலின்,
‘தளிந்த கல்தலத்தொடு, அச் சலத்தினை, தனித்துறத்
தெளிந்து உணர்த்துகிற்றும்’ என்றல் தேவராலும் ஆவதே? 20

சொற்பொருள்: —

அந்த அகழியின் வெளி எல்லைகளை எல்லாம் வெள்ளியினாலே அமைத்து, கரைகளின் உட்புறத்தில் பொன்தகடுகளை வேய்ந்து, அடித்தளம் முழுவதையும் பளிங்குகளால் நிறைத்து இருந்த காரணத்தால், ‘இது தரை, இது தண்ணீர்’ என்று பிரித்துப் பார்த்து உணர தேவரால்கூட இயலாத ஒன்றாக இருந்தது.

சூரிய, சந்திர ஒளியால் நீரின் விளிம்புகள் வெள்ளிக் கோடுகளாக மின்னுவதையும், நீர்த்தடங்களின் உட்புறம் பொன்தகடுகளாகப் பளபளப்பதையும் குறிப்பிடுகிறான். அகழியின் அடித்தளம் பளிங்கு என்பதால், தரைக்கும் தண்ணீருக்கும் வேறுபாடு தோன்றவில்லை என்று வர்ணிக்கிறான்.

Translation: The outer edges lined with silver, inner bannks inlaid with gold and with a crystal underlay below the waters, it was impossible even for the celestials to diffrentiate the water from the land.

Elucidation: Sun or Moon lit waterbodies naturally shimmer in silver at the edges and glow in gold on the surface. Clear waters have the visual effect of crystal. And the Poet moves on with his mind magic to weave a rich imagery. View More

புவனேஸ்வரி நவரத்ன மணிமாலை

2000ம் ஆண்டு நவராத்ரியில் அன்னை புவனேஸ்வரியின்மேல் நான் ஒரு நவரத்ன மணிமாலை இயற்ற வேண்டும் என்று இணையப் பிதாமகர் டாக்டர் ஜெயபாரதி விரும்பினார். நவரத்ன மணிமாலை என்பது (காப்பு, பலச்ருதி நீங்கலான) ஒன்பது பாடல்களில் விருத்தம், வெண்பா, கட்டளைக் கலித்துறை போன்ற யாப்பினங்கள் கொண்டதாக இயற்றப்பட வேண்டும். ஒவ்வொரு பாடலிலும் ஒரு மணியின்–இரத்தினத்தின்–பெயரையும் சொல்ல வேண்டும். பாரதி இயற்றியுள்ள பாரதமாதா நவரத்ன மணிமாலையும் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.

டாக்டர் ஜேபி, வழக்கமான யாப்பு விதிகளைக் காட்டிலும் சில அதிகமான, சிறப்பான விதிகளையும் சேர்த்தார். ஐந்தாவது பாடல் தொடங்கி ஒன்பதாவது பாடல் வரையில் ஒவ்வொரு பாடலிலும் பயிலவேண்டிய தொனி, அதன் தன்மை, அதில் பதிக்கப்பட வேண்டிய பீஜாட்சரங்கள், எந்த அட்சரத்துக்குப் பிறகு எந்த அட்சரம் வரவேண்டும் என்றெல்லாம் விரிவாக எடுத்துச் சொன்னார். முக்கியமான விஷயம் என்னவென்றால், மேற்போக்காகப் படிக்கும்போது ‘இதில் பீஜாட்சரம் பதிக்கப்பட்டிருக்கிறது’ என்று வெளிப்படையாகத் தெரியக்கூடாது என்பதும்; அவை பாடலில் பயிலும் ஏதேனும் ஒருசொல்லின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்பதும் ஆகும்.

வெண்பா, விருத்தம், கட்டளைக் கலி்த்துறை போன்ற யாப்பியல் வடிவங்கள்; ஒவ்வொரு பாடலிலும் ஒரு ரத்தினத்தின் பெயரைச் சொல்லவேண்டிய அவசியம். அதற்குமேல் பாடலின் தொனி, அதில் பதிக்கப்படவேண்டிய அட்சரங்கள், அட்சரங்களின் வரிசைமுறை என்று எல்லாவற்றையும் மனத்தில் வாங்கிக் கொண்டு இச்சிறு நூலை இயற்றும்படியாக என்னைச் செலுத்திய பேரருளின் எண்ணம் என்வழியாக வெளிப்பட்டது என்பது என் பாக்கியம். முதல் ஏழுபாடல்களிலும் சொன்னது போக, எட்டாவது பாடலில் ஒன்பது மணிகளின் பெயரும் வருமாறும் அமைத்திருக்கிறேன்.

பின்னால் வருபவை டாக்டர் ஜேபி எனக்கு அமைத்துக் கொடுத்த வழிமுறைகள்:

0<><>o0<><>o0<><>o0<><>o0<><>o0<><>o0<><>o0<><>o

வாலையை ஐந்தில் வழுத்த முயலுங்கள்.

எட்டில் துர்க்கையைக் குறிப்பிடலாம். புவனையே துர்க்கையாக வருவதாக வைத்துப்பாடலாம்.

ஒன்பதில் நாமகள். ஆனால் அது, உங்களுக்கு அவள் கொடுத்திருக்கும் ஆற்றலை வியந்து நன்றி சொல்வதாக அமையவேண்டும். அதில் ‘வம்‘ என்னும் அட்சரம் வந்தால் சிறப்பு. ‘வத வத‘ என்னும் நான்கு எழுத்துக்களையும் எங்காவது வரச்செய்யுங்கள். ஆனால் அது அறமாகப் போய்விடக்கூடாது. ‘வம்’முக்குப் பின்னால் அவை வரவேண்டும். நாமகளை ‘வாக்வாதினி’ என்று அழைத்துப்பாடுங்கள். இப்பெயர் ‘வத வத’வுக்குப் பின்னால் வந்தால் சிறப்பு.

பத்து ஒரு பலசுருதியாக அமையலாம். பதிகத்தில் திருக்கடைக்காப்பு பதினொன்றாக அமையும். சம்பந்தரும் சுந்தரரும் பாடியிருக்கின்ற வழி.

ஹ்ரீம் என்னும் பீஜம், ஒன்றில் அல்லது பத்தில் அல்லது இரண்டிலுமே வரலாம். மஹாகணபதியே ஸ்ரீவித்யாவின் ஆரம்பத்தில் வருவார். வல்லபையை இணைத்துப்பாடலாம்.

நீங்கள் கேட்டதால் இவ்வளவும் தோன்றியது. உங்கள் மூலம் அவள் பேசுகிறாள்:-)

அன்புடன்

ஜெயபாரதி

0<><>o0<><>o0<><>o0<><>o0<><>o0<><>o0<><>o0<><>o

இத்தனையையும் செய்திருக்கிறேனா என்பதைப் பாருங்கள். குறிப்பாக ஒன்பது. அமைப்பதற்குச் சவாலாக இருந்த பாடல் என்ற வகையில் ஒன்பதாம் பாடல் எனக்கு முக்கியமானது. இந்த நூலில் இத்தனைக் கட்டுகளும் அட்சரங்களும் பதிந்திருக்கின்றன என்ற உண்மையை இத்தனை ஆண்டுகளில் முதன்முறையாக எல்லோருடனும் பகிர்ந்துகொள்கிறேன்.

மணிகளின் பெயர்களை நீல வண்ணத்திலும், ஜேபி அவர்கள் சொன்ன நாம, பீஜ அட்சரங்களை சிவப்பு வண்ணத்திலும் மாற்றிக் காட்டியிருக்கிறேன்.bhuvaneshwari

புவனேஸ்வரி நவரத்ன மணி மாலை

காப்பு

தவனுடையோர் சிந்தையிலே தங்கிக் கிடக்கும்
கவுரியின்தன் மூத்த களிறே – புவனையின்மேல்
சொல்லால் நவமணிநான் சூட்டத் துணைபுரிவாய்
வல்லபை தன்னோடு வந்து.

-:)oOo(:-

உடலுற்றெழு வுயிராய்உட னுணர்வுற்றெழு கவியாய்
உலையுற்றெழு கொதியாயலை உததிப்பெரு நிதியாய்
உதரத்துதி மகவாயது உருவுற்றெழு ஜகமாய்
உரசிச்சர வெடியாய்க்கரு முகில்வெட்டிடு மிடியாய்
அடிதொட்டிடு கனலாய்முடி யதுவெட்டிடு மினலாய்
அருவித்திரள் புனலாய்வரு கதிர்கொட்டிடு தணலாய்
அடலுற்றெழு பொறியாயுடல் அழிவுற்றிடு நெறியாய்
அதிர்வுற்றிடு கழலாய்விதி யதுசெற்றிடு தழலாய்
வடவைக்கனல் தனையும்சுடு வயிரப்படை துணையாய்
மகிடத்தலை எரியச்சிகை புகையப்புகு மரியாய்
வலியாய்ப்பெறு நிலையாயொலி ஹ்ரீமென்றிடும் அலையாய்
மழையாகிய திரளாய்ப்பொழி மனநாடிய அருளாய்
புடவித்திரு வடிவாய்ப்பட புனிதத்தொரு மடியாய்
பரையாய்த்திரி புரையாய்ப்பெரு புவனைப்பெயர் மறையாய்
படர்பொற்கொடி பதந்தொட்டிட குறைகெட்டினி யிதமே
படிதொட்டிடும் வினைகெட்டிடும் திடமாயிரு மனனே. (1)

மனமே பேயே பெரும்பாழே
மாயக் கனவின் பிறப்பிடமே
வாழ்வும் மயர்வும் ஒன்றாக
மயங்கிக் கலக்கு மிருளொளியே
கனக்கும் சிந்தை கற்பனையும்
கவிதைப் பரவச அதிர்வுகளும்
கவலை பொய்கள் பெருமோகம்
கலந்து கிடக்கும் உள்வெளியே
உனக்காய் நினைத்தால் பறக்கின்றாய்
உயரே போகையில் சரிகின்றாய்
ஒவ்வொரு நாளும் ஓர்வடிவம்.
உனக்கும் எனக்கும் என்னபகை?
சினத்தைப் புகைக்கும் செயலாளின்
செக்கர் பவளத் திதழாளின்
தெரிசனம் உள்ளே வைப்பாயேல்
தெளிவேன் உன்னைக் கும்பிடுவேன். (2)

கும்பிடுவேன் நெஞ்சம் குளிர்வேன் குறைசூழ்ந்து
வெம்பும் மிடியழிந்து மேனிமிர்வேன் – அம்புயமேல்
பம்புபொற் பாதசர பச்சைத் திருமேனி
அம்பிகைதாள் உச்சி அணிந்து. (3)

துணிந்தவர் நெஞ்சிற் சுடர்விடும் சூலி தொடர்ந்தவள்தாள்
பணிந்தவர் உள்ளம் பயின்றிடும் நீலி யவள்வடிவை
அணிந்தா ரறிவினில் ஆழ்ந்தொரு ஞானத் தொளியுமிழ்வாள்
சிணுங்கிடும் தண்டை யனுங்கிடும் தோகைப் பசுமயிலே. (4)

மயிலாகி என்னுள் வளர்ந்தாடி வந்து
வடிவாகி நின்ற உமையே
வளமான சொல்லில் நடமாடி யென்றும்
மகிழ்வாகும் என்றன் மகளே
துயிலூடு வந்து தொடுவானில் சின்ன
சுடராகும் வாலை யமுதே
சுகமான வண்ணக் கவியாவி ளைந்து
துடியாட்ட மாடு மொளியே
பயில்கின்ற வேளை கிளியாக வந்து
பரிகாச மென்ன பெண்ணே
பண்ணோடு பாதம் கிண்ணென்று துள்ள
பறந்தோடி வாவென் மயிலே
அயலேயும் நின்று அருகாக வந்து
அழகாக நோக்கு மம்மே
அடிவாடி யென்றன் அபிராம வல்லி
அமுதூறு முத்து மொழியே.(5)

மொழியான சிந்தை அறிவாலயம்
முடிவான எண்ணம் அன்பாலயம்
வழியான கண்கள் விழிவாகனம்
மனமீதில் அம்மை ஆவாகனம்
பொழிகின்ற சொல்லில் பதிவாகிடும்
புகழேறு கின்ற கோமேதகம்
மெழுகென்ற போதும் என்றன்மனம்
மினலாகி வெட்டும் அம்மைதினம். (6)

அம்மா சுகவாணி ஆழியில் வந்தவளே
இம்மா மலையுதித்த எம்மிதய – சிம்மத்தில்
பொற்பதும ராகம்சேர் பூணிற் பொலிபவளே
சிற்பரையே சிந்தை தெளி. (7)

தெளித்த கோலம் வானெல்லாம்
சிதறிக் கிடக்கும் செம்பவளம்
தீப்பட் டெரியும் மாணிக்கம்
செக்கச் சிவந்த கெம்புக்கல்
வளிமண் டலமே வயிரக்கல்
மஞ்சள் பச்சை நீலத்தில்
மாயா ஜால வைடூர்யம்
வானக் கடலில் நன்முத்து
வெளிதட விடுமொளி புவனையின்கண்
விரிந்த நீலம் அவளுடலே
மெய்யாய் துர்க்கை கெளரியுமாய்
விமலை நிமலை கமலையுமாய்
அளித்துக் காக்கும் அன்னையுமாய்
அன்பிற் கனிந்த தேவியுமாய்
அடியாற் கெல்லாம் இன்னுயிராய்
ஆகும் செம்மை மாமணியே. (8)

செம்மாமணி என்பொன்மணி திவ்யத்திருக் கோலம்
தெளிவானவள் அருளானவள் அறிவானவெண் கமலச்
சிம்மாசனி மயில்வாகனி மனவாலயப் படிவம்
செய்தெய்வத வதனத்திரு சிறுபுன்னகை மலர
எம்மாதவர் எக்காரணர் எவ்வேதமும் நாடும்
எழிற்பொற்பதம் தருமற்புதம் தனிலொர்பொடி யாலே
எனையாள்கிற வாக்வாதினி யிடுபிச்சையி னாலே
எளியேன்மனம் கவிதைக்கடல் தனையுற்றொளி சேரும்
அம்மாஉனை கண்பொங்கிட கரம்கும்பிட நாளும்
அருவீணையின் இசையின்கதி அமைவுற்றிட நெஞ்சம்
அதிகாலையில் நனிமாலையில் உனைநாடிடச் செய்வாய்
அகிலங்களை வசமாக்கிட அருகுற்றருள் பெய்வாய்
எம்மைச்சுடு மறியாமையின் இருள்முற்றிலும் போக்கி
இதயத்தினை கமலத்தொரு வெள்ளைமல ராக
ஏற்றந்தரு மாற்றம்பெற எமையாக்குதல் கடனே!
இறைவிப்பெரு வாணிக்கழல் துயர்போக்கிடு முடனே! (9)

நூற்பயன்

கேட்ட பொருளெதுவும் கேட்காத நற்பயனும்
வாட்டம் தொலைத்த மனநிலையும் – கூட்டும்
புவனைக்கு நாம்பூட்டும் பூந்தமிழ்ப் பாட்டாம்
நவரத்ன மாலை நலம்.