பாவை நோன்பும் தைந் நீராடலும் – 1

kolamமார்கழியும் திருப்பாவையும் நமக்கு நினைவூட்டுவது பாவை நோன்பென்னும் பண்டைய வழக்கம். மார்கழி மாதம் பாவை நோன்புக்குப் பெயர் பெற்றது. தைந் நீராடல் என்பதும் பிரசித்தி பெற்ற ஒன்று. மார்கழியிலும் நீராட்டம் உண்டு. இந்தச் செய்திகளை எல்லாம் அரைகுறையாகக் கேட்டுள்ளோம். இவை குறித்த இலக்கியச் செய்திகளைத் தொகுத்துத் தருவதே இக்கட்டுரை.

Purchase doxycycline 100mg ointment purchase doxycycline online no prescription the company, which this year will release its first new product, said it had sold .5 billion in 5-inch and 7-inch smartphones since the launch of its first model in 2010. The good news is we have an excellent Sumqayıt reputation for customer service, and we want to earn your trust. The treatment of lymphatic filariasis with ivermectin has, in the past decade, undergone a series of developments.

The lipitor brand name comes from the chemical structure of the active ingredient, which is the same as the generic (brand-name) drug but with certain modifications and some additional inactive ingredients. It https://salemhealthcare.co.ke/81961-macrobac-250-mg-price-82266/ is good to note that the drugstore that you buy from, is not going to sell you the same drug, as the one you order online is the best option to purchase. But if you’re a woman and want to ask something more than just ‘can i have a date?’ – this is all about levitra in contrassegno.

This drug is not approved for the treatment of heart arrhythmia. Generic dapoxetine is used to treat Custoias depression, anxiety and irritability. When we listen to a song, for example, we hear a combination of various.

பாவை நோன்பின் முக்கிய அம்சமே இளம் சிறுமியர், மார்கழி மாதம் விடியலுக்குமுன் எழுந்து, ஆற்றங்கரை சென்று, சில்லிடும் ஆற்று நீரில் நீராடி, ஆற்று மணலில் பாவை எனும் பொம்மை செய்து, அதற்குப் பூச்சூட்டி விளையாட்டாக வழிபடுதலே ஆகும். சற்று யோசித்துப் பார்த்தால் இதெல்லாம் தேவையா என்று தோன்றும். இளம் சிறுமியரை பகல் நேரத்தில் விளையாட அனுப்பக் கூடாதா? விடியலுக்கு முன்னால் எழுப்பி, குளிரில் ஏன் அனுப்ப வேண்டும்? அதுவும் ஆற்றங்கரைக்கு அனுப்பி, ஆற்றில் இறங்கிக் குளிக்கச் சொல்வது நல்லதா என்றெல்லாம் எண்ணத் தோன்றும். ஆனால் இந்தப் பாவை நோன்பில் பொதிந்துள்ள சில கருத்துகள், பொதுநலத்தையும், அக வாழ்வின் நன்மையையும் இணைத்து, மக்கள் சமூகத்தின் ஒரு முக்கியக் கடமையாகவே பாவை நோன்பினைக் காட்டுகின்றன.

அக வாழ்வு என்னும் பொழுது, மனம் நிறைந்த வாழ்க்கையை, கண் நிறைந்த கணவனுடன் இப்பிறப்பு மட்டுமில்லாமல், அடுத்த பிறவியிலும் வாழ வேண்டும் என்னும் வேண்டுதல் செய்யப்படுகிறது.

பொது நலம் என்னும் பொழுது, வரப்போகும் மாரிக்காலம் தப்பாமல் மழை கொடுக்க வேண்டுமெனில் மார்கழி மாதம் ஆற்றங்கரையில் நோன்பிருக்க வேண்டும். மாதம் முப்பது நாள்களும் செய்யும் இந்த நோன்பினை பெரியவர்கள் செய்தாலும்கூட, சில குறிப்பட்ட விதங்களில் இளம் சிறுமியர் செய்வதே பலனளிக்கும் வண்ணம் இருக்கும். இது எப்படி என்று பார்பதற்குமுன், இந்த வழக்கம் எப்பொழுது ஆரம்பித்திருக்கக் கூடும் என்று பார்ப்போம்.

பெண்பால் பிள்ளைத் தமிழ் இலக்கணத்தைக் கூறுமிடத்தே, பிங்கலந்தை நிகண்டு, சூத்திரம் 1369 இவ்வாறு கூறுகிறது:

பேணும் சிறப்பின் பெண் மகவாயின் …..
ஐந்தின் முதலா ஒன்பதின்காறும்
ஐங்கணைக் கிழவனை யார்வமொடு நோற்றலும்
பனி நீர் தோய்தலும் பாவை யாடலும்.

ஐந்து முதல் ஒன்பது வயது வரையிலான பருவத்தில் உள்ள சிறுமியர் பனி நீர் தோய்ந்து, பாவை ஆடி, ஐங்கணைக் கிழவன் எனப்படும் ஐந்து பாணங்களை உடைய காம தேவனுக்கு ஆர்வமோடு நோன்பு நோற்பர் என்பது இதன் பொருள்.

இதுவே தமிழ் மரபென்றால், வட நாட்டில் மார்கழி மாதத்தில், யமுனை ஆற்றங்கரையில், கார்த்யாயினி என்னும் பெண் தெய்வத்தைக் குறித்து பாவை செய்து, நோன்பு நோற்பர் என்னும் குறிப்பு ஸ்ரீமத் பாகவதத்தில் வருகிறது. இங்கே காமதேவன், அங்கே கார்த்யாயினி. ஆனால் குறிக்கோள் ஒன்றே. கண்ணன் போல, திருமால் போல, மனம் கவர் கணவனை அடைதல் என்பதாகும்.

இதைச் செய்யும் பருவம், கணவன் என்பதும் திருமணம் என்பதும் என்னவென்றே அறியாத சிறார்ப் பருவம்! அப்பருவத்தில் எதற்கு இப்படி ஒரு நோன்பு என்று நோக்கினால், அங்கேதான் புலப்படுகிறது, ஒரு பொதுநலம்.

வசிஷ்டர், காஷ்யபர் போன்ற முனிவர்கள் சொன்ன ஒரு கருத்து, பின்னாளில், வராஹமிஹிரரால் மனித குலம் அறியும்வண்ணம் எழுதி வைக்கப்பட்ட ஒரு கருத்து-  மார்கழி மாதம் வைகறைப் பொழுது தொடங்கி காணப்படும் சில இயற்கைச் சூழ்நிலைகள், ஆறு மாதங்கள் கழித்து, வளமான மழைக்காலம் வருவதற்கு ஏதுவாகும் என்பது. இந்த இயற்கைச் சூழ்நிலைகள் உண்டாவதற்கு, ஆண்டாள் கூறுவது போன்ற ‘கீசு கீசு’ என்னும் ஆனைச் சாத்தான், சிலும்பும் புள்ளினங்கள், கொட்டில் விட்டு வெளி வரும் எருமைக் கன்றுகள் எழுப்பும் ஓசைகள் – அவை தவிர ஆற்று நீரில் கூக்குரலிட்டு நீராடி, பாவை விளையாடும் சிறுமியர் எழுப்பும் இனிய குரலோசை போன்றவை முக்கியத் தேவைகள்.

paavai-nonbuமூவகையில் கவனிக்கப்படும் இயற்கைச் சூழ்நிலையில், முதல் வகை மேலே கூறப்பட்ட வைகறைப் பொழுதின் சலசலப்புகள். நீர் சம்பந்தப்படும்படி, விடியலுக்கு முன்னரே வாசல் தெளித்துக் கோலமிடுவதும் இதில் அடக்கம். மக்கள் கூட்டத்தையும் சேர்த்து உயிரினங்கள் பலவும் வைகறைக் குளிரை வெப்பப்படுத்த வேண்டும். நடமாடுவதன் மூலமும் நீரை அளைப்பதன் மூலமும் ஓசையின் மூலமும் இது செய்யப்படுகிறது. மக்கள் தொகுதியைப் பொருத்த மட்டில், காவலும் கண்டிப்பும் இல்லாத நிலையில் கூவித் திரிந்து விளையாடும் இளம் சிறுமியரின் பொம்மை விளையாட்டும், மணல் விளையாட்டும், ஆற்று நீராட்டமும் இந்த இயற்கைச் சூழலுக்கு ஒத்துப் போகின்றன. இதனால்தான், பெண் குழந்தைகளை ஈடுபடுத்தும் வண்ணம் விளையாட்டாக இந்த நோன்பினை முனிவர்கள்அமைத்துள்ளனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

maargazhi-skyஇரண்டாவது வகை, காற்று மண்டலம், மேகக்கூட்டம், வைகறையின் வண்ணங்கள் முதலியன. கீழ் வானம் வெள்ளென்று இருக்கும் நிலையை ஆண்டாள் சொல்வது, முக்கிய இயற்கைக் குறிப்பு. மார்கழி மாதம், விடியல் நேரத்தில் வானம் வெண்ணிறமாக இருக்க வேண்டும், மாறாக சிவந்து இருந்தால் மாரிக் கால மழை ஓரளவேனும் அடிபடும் என்று அறியப்பட வேண்டும். சிவந்த விடியல் வானம் தை, மாசி மாதங்களில் நல்லது. ஆனால் மார்கழியில் வைகறை வானம் தூய்மையாய், வெண்ணிற மலர் போல இருக்க வேண்டும் என்பது முனிவர்கள் கருத்து. காற்று மெலிதாக வீச வேண்டும். மெல்லிய மேகக் கீறுகள் வானில் தென்பட வேண்டும். முக்கியமாக பனிப் படலம் கூடாது. தை பிறந்தபின் பனி வர வேண்டும். மார்கழியில் அல்ல. தற்சமயம், நம் நாட்டின் பல பகுதிகளில் பனிப் படலம் தென்படுவது, அடுத்த மழைக்காலம் குறைவுடையது என்பதை முன்கூட்டியே காட்டும் ஒருகாலம்- காட்டி.

milkywayமூன்றாவது வகை வான்வெளியில் உள்ள கிரக அமைப்புகள். ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்று ஆண்டாள் கூறியது சாதாரணச் செய்தி அல்ல. மார்கழி மாத சூழ்நிலை வகை தெரிந்துதான் அவள் ஒவ்வொன்றையும் பாடியிருக்கிறாள். மார்கழி விடியல் நேரத்தில், ஒரு கிரகம் உதித்து, மற்றொரு கிரகம் அஸ்தமனம் அடைவது விண்வெளி குறித்த நல்ல காரணியாகும். வரப் போகும் மாரிக் காலம் சிறப்பாக இருக்கும் என்பதற்கு இது ஒரு முன்-காட்டி. கிரகங்கள் நீச்சமடையாமல் இருப்பதும், கிரக யுத்தம் என்று சொல்லும்படி கிரகங்கள் கூடி இல்லாமல் இருப்பதும், கிரஹணங்கள் ஏற்படாமல் இருப்பதும், அடுத்த மாரியின் வளப்பமான பொழிதலை உறுதிப்படுத்துவது ஆகும்.

தற்சமயம் மார்கழியில் இருக்கும் இம்மூவகை நிலையை எண்ணிப்பார்த்தே, அடுத்த ஆண்டின் மழை எப்படி இருக்கும் என்று வாசகர்கள் கணித்துவிடலாம். இந்த் வகையில் கணித்தவர்கள்தான் நம் தமிழ் முன்னோர்.

பாவை நோன்புக்கும், மழைக்கும் உள்ள தொடர்பு அறிந்த நம் முன்னோர், சரியான காலத்தில், சரியான அளவில் மழைக் காலம் தொடங்கி விட்டது என்று திருப்திபடுவதுடன் அல்லாமல், அடுத்த மார்கழியையும் சரியாகவே வரவேற்போம் என்று வரவேற்றனர். பாவை நோன்பைப் பற்றி பரிபாடல் பாடியுள்ள ஆசிரியர் நல்லந்துவனார், ஆவணித் திங்கள் அவிட்ட நாளில் கோள்கள் நிலை சொல்லி, இவ்வாறு அமையப் பெறவே, சைய மலையின்கண் மழை துவங்கும் என்பது உறுதி என்னும் விதிப்படி, மழை பெய்யலாயிற்று என்றார். அதனுடன் நில்லாமல், அதற்கடுத்த மார்கழியில், எவ்வாறு மக்கள் ஆர்வத்துடன் பாவை நோன்பிருந்தனர் என்றும் விவரிக்கின்றார்.

பாவை நோன்பு செய்யும் முறை

athiraiyaanமார்கழி மாதம் பௌர்ணமியன்று பாவை நோன்பைத் தொடங்குவர். அன்று திருவாதிரை நட்சத்திரத்தில், நிலவு பூரணம் அடையும். ஆதி இறை என்பதாலும், திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி என்பதாலும், ஆதிரையான் என அழைக்கப்பட்ட முக்கண்ணன், திருவாதிரையன்று வணங்கப்படுபவன். அக்கடவுளே மழை பொழிய அருள்பவன். அதனால், திருவாதிரை நட்சத்திரத்தில், சந்திரனானது முழுமை அடையும் மார்கழி மாதப் பௌர்ணமியன்று, ஆற்றங்கரைதோறும் ஹோமத்தீ வளர்த்து, ஆதிரையானுக்கு பூசை செய்து, பாவை நோன்பினைத் துவக்குவர். அன்றிலிருந்து ஆறு மாதம் கழித்து, அதே ஆதிரை நட்சத்திரத்தில், சூரியன் நுழையும் போது இருக்கும் கால, நேரம், நாள், ஓரை ஆகியவற்றின் அடிப்படையில், மாரிக்காலம் எப்படி இருக்கும் என்று மீண்டும் கணிக்கப்பட்டு, உறுதி செய்யப்படும். அதன் அடிப்படையில்தான் என்ன பயிரிடுவது, எப்பொழுது பயிரிடுவது என்று முடிவு செய்வர். பாவை நோன்பின் போது, சரிவர பூசனைகள் செய்வதாலும் நேர்த்தியாக நோன்பிருப்பதாலும் வரப்போகும் மாரிக்காலம் வளமாக இருக்கும் என்பது இந்த நோன்பில் பிணைந்துள்ள பொதுநலக் கருத்து.

இந்தக் கருத்தினை திருப்பாவையிலும் காணலாம்.

“நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்” என்ன பயன் என்று ஆரம்பித்திலேயே ஆண்டாள் தெரிவிக்கிறாள். அதன் பயன், “தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்தல்” என்பதே. பாவை நோன்பிருந்தால் மாதம் மூன்று முறை மழை பொழியும்.

praying-varunaஅது மட்டுமல்ல, அடுத்த பாசுரத்தில் (‘ஆழி மழைக் கண்ணா’), மாரிக்காலத்தில் இருண்டு திரண்டு மேகங்கள் மழை பொழிவதைக் குறிப்பிட்டு, “வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்” என்று மார்கழி நீராட்டத்திற்கும், மழைக் காலத்திற்கும் உள்ள தொடர்பைக் காட்டுகிறாள். ஆக, பாவை நோன்பின் முதல் நோக்கம், பொதுநலம் அல்லது நாட்டு நலம் என்னும் மழை வளம் வேண்டுதல்.

இந்த நோன்பை விவரிக்கையில், பரிபாடல் 11-இல் நல்லந்துவனார் இவ்வாறு கூறுகிறார்.

ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை விரிநூல்
அந்தணர் விழவு தொடங்க, புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!’ என
அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,

பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின் ஊதை ஊர்தர,
உறை சிறை வேதியர் நெறி நிமிர்
நுடங்கு அழல் பேணிய சிறப்பின்,

தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.

full-moonகதிரவன் அதிகம் காயாத, குளிர்ந்த கடை மாரியையுடைய மார்கழித் திங்களில், சந்திரன் திருவாதிரை நட்சத்திரத்தில் முழுமை பெற்ற அந்தப் பௌர்ணமி நன்னாளில், விரி நூல் அந்தணர் விழவு தொடங்குவர். முப்புரி நூலை உடைய அந்தணர் (அந்தணர் என்றால் வேதாந்தத்தை அணவினவர் என்பது நச்சினார்க்கினியர் கருத்து) இறைவனுக்கு பலிப் பொருள் (நைவேத்தியப் பொருள்) பெய்த பொற்கலங்களை ஏந்தி நிற்க, “வெப்பமடையாமல் இந்நில உலகம் குளிர்வதாக!” என்று வாழ்த்தி, “அம்பாவாடல்” என்னும்படி, அம்பா என்று சொல்லப்படும் தாயோடு, இளம் கன்னியர் ஆற்றினில் நீராடி வர, அவர்களுக்கு, ‘முனித் துறை முதல்வியர்’ எனப்படும், சடங்குகள் அறிந்த முதிய பார்ப்பனப் பெண்டிர் நோன்பு செய்யும் முறையைச் சொல்லிக் கொடுக்க, நோன்பு நோற்கும் கன்னிப் பெண்கள், குளிர்ந்த ஆற்று நீரில் குளித்தமையாலும், குளிர் தாளாததாலும், உடுத்தின ஈரத் துணியுடனே இருப்பதாலும், அந்தக் குளிர் தணியும் வண்ணம், ஹோமத் தீயின் அருகே வந்து, தங்கள் ஈரத்துணியைக் காட்டி உலர்த்தும் வண்ணம் இருப்பர். அந்தத் துணியிலிருந்து கிளம்பும் நீராவியானது, வைகை ஆற்றுக்குத் தரும் அவிப் பொருள் போன்று இருக்கும். ‘வையை! நினக்கு மடை வாய்த்தன்று’ என்று , கன்னியர் ஈரத் துணியில் கிளம்பும் நீராவியே வைகை உண்ணும் ஹவிஸ் என்னும் ஹோமப் பொருள் என்று புலவர் கூறுகிறார்.
 
அடுத்து ஒரு முக்கியக் குறிப்பைத் தருகிறார்.

மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர்,
அவர் தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ,
தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!
 

poyyaadalஇவ்வாறு ஹோமமும், நோன்பும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, மறுபுறம், இளம் பெண்கள் நடனம் ஆடுவர். இங்கே சிறுவர்கள் பற்றியும் புலவர் குறிப்பு தருகிறார். மையோலை பிடித்து கவி பாடும் மழ புலவர் என்றால் முதன் முதலாக ஓலைச் சுவடி பிடித்து பாடம் பயில ஆரம்பிக்கும் சிறுவர் என்பது பொருள். அவர்கள் படிக்கும் பாடலுக்கு மாறாக, அந்தப் பெண்கள் பொய்யாடல் ஆடுவர் என்கிறார். பூசையின் பகுதியாக, அந்தக் குளிரிலும், அபிநயம் பிடித்து அவர் ஆடுவர். அது பொய்யாடல் என்கிறார். கள்ளமில்லாப் பருவத்தினராக இருப்பதால், அந்தப் பாடல்களுக்குக் காமக் குறிப்பின்றி ஆடுதல் ‘பொய்யாடல்’ எனப்படும் என்கிறார் உரை ஆசிரியர் பரிமேலழகர். இதன் மூலம் அந்தப் பாடல்களில் காதல் ரசம் அல்லது, நல்ல கணவனை விரும்பும் விழைவு இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஆனால் கள்ளமிலா அந்தச் சிறுமியர் அபிநயித்தபோது, அது வைகைக்கு வைக்கும் ஒரு விண்ணப்பம் ஆகிறது.

அது என்ன விண்ணப்பம் என்றால், நீரின் கண் ஆடியும், தீயின் கண் (ஹோமத் தீ) நின்றும், பொறியையும், புலனையும் அடக்கி இந்தச் சிறுமியர் ஆடுவது, இவர்தம் முன் பிறப்புகளிலும், இவ்வாறு ஆடினமையின் காரணமாகவோ? இந்தப் பேறுக்குரிய காரணத்தை நீயே சொல்வாய் வைகை நதியே- இவ்வாறு கூடியிருப்போர் நினைப்பர், கேட்பர். புலவரும் கேட்கிறார்.

“தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?” என்னும் இந்த வரிகளின் மூலம், தைந் நீராடுதல் என்பது, ‘தவத்தை நீராடுதல்’ என்னும் சொற்களின் சேர்க்கையே என்று தெரிகிறது. இந்த வரிகள் சொல்லப்படும் காலமும் இடமும், மார்கழி மாதத்து பாவை நோன்பு ஆரம்பிக்கும் முதல் நாள். தை மாதம் இன்னும் வரவில்லை. ஆனால் மார்கழி மாதத்து பாவை நோன்பின் நீராட்டத்தையே, தைந் நீராடல் என்று புலவர் கூறுகிறார். பொதுநலம் கொண்ட பாவை நோன்பில் பிணைக்கப்பட்டுள்ள அக நலம் காட்டும் பகுதி இது.

சிறு வயதிலேயே புலன்கள் அடக்கி, ஆண்டாள் சொன்னது போல, மை இடுதலையும், மலர் சூடுதலையும், தங்களை அழகுபடுத்திக் கொள்வதையும் விடுத்து, நெய் சோறும், பால் சோறும் விரும்பி உண்ணும் அந்தப் பருவத்தில் அவற்றையும் விட்டொழித்து, இனிய தூக்கத்தையும் கலைத்துக் கொண்டு, குளிரையும் பொருட்படுத்தாமல், சில்லிடும் ஆற்று நீரில் குளித்து நோன்பிருக்கிறார்களே, இதுவே தவம். ‘தவமும் தவமுடையார்க்காகும்’ என்பது முதுமொழி. ஒருவர் வழி வழியாக தவம் மேற்கொண்டிருந்தால்தான், இப்பிறப்பிலும், தவத்தை மேற்கொள்வர். ஆகவே அந்தச் சிறுமியரும் முன்னரே இருந்த தவத்தைப் பற்றியே இன்று, வைகையே, உன் முன்னரும் தவத்தை ஆகும் பேறு பெற்றனரோ, நீ கூறு என்கிறார் புலவர்.

தை என்றால் பிணைத்தல் அல்லது தைத்தல் என்பது பொருள். தைந் நீராடல் என்பது, பிறவி தோறும் கடைபிடித்த தவத்தை, இப்பிறவியிலும் பிணைக்கும் ஒரு நீராடல், எனவே அதை ‘தவத் தைந் நீராடல்” என்கிறார் புலவர். மார்கழிப் பாவை நோன்பே தைந் நீராட்டமும் ஆகும் என்பது இதன் மூலம் புலனாகிறது.

அந்தப் பௌர்ணமியன்று ஆரம்பிக்கும் பாவை நோன்பு அன்றுடன் முடிவதில்லை.

(தொடரும்…)

பாவை நோன்பும் தைந் நீராடலும் – 2

ஆண்டாள் கொட்டிய பறையும், கேட்ட பறையும்

andal-painting‘வேதமனைத்துக்கும் வித்து’ என்று ஆன்றோரால் போற்றப்படும் திருப்பாவையில் அடிக்கடி சொல்லப்படும் ஒரு சொல், ‘பறை’ என்பதாகும். இது கையால் தட்டப்படும் ஒரு தோல் கருவி. பாணர்கள் முதல், சிறுவர்கள் வரை பலராலும் கொட்டப்படும் இந்தப் பறை, பாவைநோன்பின் போதும் சிறுமியரால் கொட்டப்படுவது. பாவைக் களம் புக வேண்டி, மற்ற சிறுமியரை அழைக்கும் ஆண்டாள் பறை கொட்டினது மட்டுமல்லாமல், நாராயணன் பறை தருவான், அவன்  பறை தர வேண்டும்  என்றும் கூறுகிறாள்.

அவளிடம்தான் ஏற்கெனவே  பறை இருக்கிறதே, அது என்ன வேறு ஒரு பறை – அதுவும் நாராயணன் தரும் பறை என்று நாம் ஆராயப் புகுந்தால், சில அரிய ஆன்மீகக் கருத்துகள் புலனாகின்றன. அதன் மூலம், வேதமனைத்துக்கும்  எவ்வாறு திருப்பாவை விதையாகிறது என்றும் புரிகிறது.

இவற்றை விவரிப்பதற்கு முன்னால், ஆண்டாள் கொட்டிய பறை எது என்று கண்டு பிடிக்க முடியுமா என்று பார்ப்போம்.

ஆண்டாள் கொட்டிய பறை

ஐந்திணைகளுக்கும் உரிய பறைகள் தொண்டகப்பறை (குறிஞ்சி), துடிப்பறை (பாலை) , ஏறுகோட்பறை (முல்லை), மணப்பறை மற்றும் கிணைப்பறை (மருதம்) , மீன்கோட்பறை (நெய்தல்).
இவை தவிர வேறு சில பறைகளும் அந்த நாளில் இருந்திருக்கின்றன. புறநானூறில் 12  விதமான பறைகள் சொல்லப்படுகின்றன. இவற்றுள் ஆண்டாள் எந்தப் பறையைக்கொட்டியிருப்பாள் எனக் காண்போம்.

(1) அரிப்பறை  :- அரிப்பது போல ஓசை எழுப்பும். வயல் வெளியில் பறவைகள், இலைகளின் மீது உரசிச் செல்லும் சப்தம் போலவும், பெண்டிர் அணிந்த  நகைகள் ஒன்றனோடு ஒன்று உரசுவது போலவும் என்று, அரிப்பறை ஓசை உவமை காட்டப் படுகிறது.

(2) அனந்தன் பறை :- சுடுகாட்டுப் பகுதிகளில், பேயாட்டம் ஆடும் மகளிர் இதைக் கொட்டுவர். சரசரவென்று பாம்பு செடிகளுக்கிடையே ஓடும் ஓசை போல் இருக்கும் போலிருக்கிறது. இதன் ஓசை கேட்டு பருந்துகள் வருமாம்.

(3)  ஆகுளிப்பறை மற்றும்

(4 ) சிறு பறை :- மிகச் சிறிய, கைக்கடக்கமான பறை இது. பாணர்கள் யாழுடன் எடுத்துச் செல்லும் பறை. அரசனைக் குறித்தோ, கடவுளைக் குறித்தோ பாடுவதற்குப் பயன் படுவது. இதை விடிவதற்கு முன் கொட்டுவார்கள்.

(5) சல்லிப்பறை :- இதைப்  பெரும் பறை என்பார்கள். விழாக்களிலும், ஊர்வலங்களிலும் கொட்டுவார்கள்.

6) சாக்காட்டுப்பறை :- இது சாவுக்கு அடிக்கும் பறை.

(7) செருப்பறை :- அரசன் போர்க்களத்தில் நுழையும்  போது அடிப்பது. யானைப் படைக்கு முன்னால் அடித்துச் செல்வர்.

(8) போர்ப்பறை :- இது போர் அறிவிக்கும் பறை. போருக்குச் செல்லும் போது  அடிக்கும்  பறை.

(௯) நெய்தல் பறை :- சாக்காட்டுப் பறை போல, சாவின் போது  நெய்தல் நிலத்தில் அடிக்கபடுவது.

(10) தடாரிப்பறை :- இதைக் கிணைப் பறை என்றும் பம்பைப் பறை என்றும் கூறுவர். இது உடுக்கையாக இருக்கலாம்.

(11) ஒரு கண் பறை:- அளவில்  பெரியதான  இப்பறையில், கண் போன்ற அடையாளம் தெரியும். அது யானையின் பாத வடிவில் இருக்கும், செய்திகளை அறிவிப்பதற்கும், போர்க்களங்களிலும், இது பயன் படுத்தப்பட்டது.

(12) மணப்பறை :- திருமணங்களில்  கொட்டப்படுவது.

புறநானூறில் ஆங்காங்கே பேசப் படும் இந்த 12 பறைகளில், ஆகுளிப் பறையும், சிறுபறையும் மென்மையாகவும், பாடலுக்கு இசைந்தும் கொட்டப்படுவதுடன், கடவுளைக் குறித்து, விடிவதற்கு முன்னமேயே கொட்டப் படுவதால், ஆண்டாளும் அவள் தோழிகளும், கொட்டிய  பறை சிறு பறை அல்லது ஆகுளிப் பறை எனக் கொள்ளலாம்.

இனி, பறை என்று ஆண்டாள் கூறும் செய்திகளைப் பார்ப்போம்.
மொத்தம் 10 இடங்களில் ஆண்டாள் பறை என்று குறிப்பிடுகிறாள்.

ஆண்டாள் கூறும் பறை

1. பறை தருவான்  (பாசுரம் – 1)
2. பாடிப்பறை கொண்டு  (பாசுரம்- 8 )
3. போற்றப் பறை தரும்  – (பாசுரம்- 10)
4. அறை பறை –  (பாசுரம் -16)
5. பறை தருகியாகில் – (பாசுரம் -25)
6. சாலப்பெரும் பறை – (பாசுரம் -26)
7. உன்றன்னை பாடிப்  பறைகொண்டு – (பாசுரம் -27)
8. நீ தாராய் பறை – (பாசுரம் -28)
9. இற்றைப்  பறை கொள்வான் –  (பாசுரம் -29)
10.அங்கப் பறை கொண்ட ஆற்றை  – (பாசுரம் -30)

அவற்றுள், 26  -ஆம் பாசுரத்தில் வரும் சாலப் பெரும் பறை, மேற் கண்ட 12 பறைகளுள் சல்லிப் பறையை ஒத்திருக்கிறது. சல்லிப் பறை என்பது, விழாக்களில் கொட்டப்படுவது.  சுற்றுப்புறத்து ஓசைகளையும் மீறி ஓங்கி ஒலிக்க வேண்டிய பறை.

‘மாலே மணி வண்ணா’ எனத் தொடங்கும்  பாசுரத்தில், ‘சாலப் பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே’ என்று ஆண்டாள் கூறும் வர்ணனை இறைவன்  வரும் வீதி ஊர்வலம் போல உள்ளது.

ஞாலத்தை எல்லாம் நடுங்கச் செய்யும் வகையில்  பாஞ்சசன்னியம் என்னும் சங்கூதும் ஒலியோடு, பிற ஒலி முழக்கங்களும், பல்லாண்டு இசைத்த வண்ணம் செல்வதும், கோல விளக்கும், கொடியும், விதானமும் செல்லும் பாங்கினையும் உரைத்திருப்பது, மார்கழி மாதத்து வைகுண்ட ஏகாதசி அன்று திருமால் வீதி வலம் வரும் கருட சேவை போன்று இருக்கிறது. வீதி ஊர்வலத்தில் கொட்டப்படும் சல்லிப் பறையை ஆண்டாள் சாலப் பெரும் பறை என்று கூறியிருக்கலாம்.

திருப்பாவையில் வைகுண்ட ஏகாதசி

முப்பது திருப்பாவை பாசுரங்களும், நாள் ஒன்றுக்கு ஒரு திருப்பாவை என்ற கணக்கில் முக்கியத்துவம் கொடுத்து பாடப் படுகிறது. அப்படிப் பார்க்கும் போது, முதல்  பாசுரத்தில் ‘மதி நிறைந்த நன்னாள்’ என்று சொல்வது, பௌர்ணமி கழிந்த மறு நாள் விடிகாலைக் காட்சி போலத் தெரிகிறது.

மார்கழி பௌர்ணமியில், பாவை நோன்பு ஆரம்பிக்கும் என்று பரிபாடல் – 11 தெரிவிக்கிறது. மார்கழி மாதம், திருவாதிரையில், சந்திரன் செல்லும் போது, பூரண சந்திரன் ஆகிறது. அன்று விடிகாலை, ஆற்றங்கரையில் ஹோமத் தீ வளர்த்து, ஆதிரையானை வழி படுவர். அவ்வமயம், அனைத்து பெண்களும் பாவை நோன்பு ஆரம்பிப்பார்.
திருமணமானவர்களும், கன்னிப் பெண்களும், சிறுமியரும் என, அனைத்துப் பெண்களும், அந்த வழிபாட்டில் கலந்து கொள்வர்.
அது முடிந்த மறு நாள் முதல், இளம் சிறுமியர் மட்டும ஆற்றங்கரை சென்று பாவை செய்து, பறை கொட்டி, அந்தப் பாவைக்குப்  பூச் சொரிந்து, விளையாட்டாகக் கடவுளை வணங்குவர்.

இதையே ஆண்டாள் துவங்கி வைக்கிறாள். பாவை நோன்பிருந்து நல்ல கணவனை  அடைவது என்னும் வழக்கப்படி கண்ணனையே கணவனாக அடைய விரும்பி ஆண்டாள் பாவைக் களம் புக விரும்புகிறாள். பௌர்ணமி கழிந்த மறுநாள் சிறுமியர் துவங்கும் பாவை நோன்புடன் முதல் பாசுரம் துவங்குகிறது. அப்பாசுரத்தில் வரும் வர்ணனை, பௌர்ணமி கழிந்த மறு நாள் விடிவதற்கு முன் இருக்கும்வானத்தைச்  சொல்கிறது. பௌர்ணமிக்கு மறுநாள் வைகறையில், முழு மதி இன்னும் வானில் இருக்கும்.
அன்று காலை  நிறை மதி இன்னும் வானில் தெரிய, அதைதான் ஆண்டாள், மதி நிறைந்த நன்னாள்  என்று சொல்லி இருக்கிறாள்.

rengamannar_garudaநாள் ஒன்றுக்கு ஒரு பாசுரம் என்ற கணக்கில், பௌர்ணமிக்குப் பதினைந்தாம் நாள் வரும் அமாவாசை ‘எல்லே இளங்கிளியே’ பாசுரத்தில் வருகிறது. அதற்கு மறுதினத்திலிருந்து, வளர் பிறை ஆரம்பம். வளர் பிறையின்  ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி ஆகும். அது 11-ஆம் நாள் வருவது. அப்படி கணக்கு பார்த்தால்  ‘மாலே மணி வண்ணா’  பாசுரம் வைகுண்ட ஏகாதசி என்றாகிறது . அன்றுதான், எல்லா விஷ்ணு ஆலயங்களிலும், கருட வாகனத்தின் மீது திருமால் வீதிப் புறப்பாடு கிளம்பி விடுவார். ஆண்டாளின் தந்தையான பெரியாழ்வார், பாண்டிய அரசனின் சந்தேகத்தைத்  தீர்த்து, அவனால் கொண்டாடப்பட்டு, பட்டத்து யானை மீது நகர் வலம் வந்தபோது, அவருக்கு கருட வாகனத்தின் மீது காட்சி  தந்த திருமாலைப் பார்த்து, ‘பல்லாண்டு பல்லாண்டு’ என்று இறைவனையே வாழ்த்திப்பாடினார். சாலப் பறை பற்றி சொல்லும், ‘மாலே மணி வண்ணா’ பாசுரத்திலும், பல்லாண்டு இசைப்பதைப் பற்றி கூறுவதாலும், அது வீதி வலம் வரும் கருட சேவையாகவும், அந்தப் பாசுரம் இசைத்த அன்று வைகுண்ட ஏகாதசியாகவும்  இருந்திருக்கலாம்.
மறுநாள் துவாதசி என்பதற்கு ஏற்றாற் போல், அடுத்த பாடலான ‘கூடாரை’ யில் உண்ணுவது பற்றி சொல்லப்படுகிறது.

இந்த இடத்தில் வைகுண்ட ஏகாதசி பற்றி ஒரு கொசுறு செய்தி. வைகுண்ட ஏகாதசி அன்று,  நாம் இருக்கும் பூமியானது, இந்தப் பால் வெளி அண்டத்தின் மையத்திலிருந்து அதிக பட்சத்  தொலைவை அடைகிறது. தனுர் மாதம் என்னும் மார்கழி மாதமுடைய தனுர் ராசியானது நம் பால் வெளி அண்டத்தின் மையப் பகுதியாகும். தனுர் ராசிக்கு நேர் எதிரில் சூரியன் வரும் இந்த மாதத்தில், நாம் சூரியனுக்கு அப்பால் – சூரியனிடமிருந்தும், பால் வெளி மையத்திடமிருந்தும், அதிக பட்ச தொலைவை அடைகிறோம். இதை வேறு விதமாகக் கூறுவதென்றால், பால் வெளி கேலக்ஸ்சியின் (galaxy) வெளியே – எங்கிருந்தோ அது வந்து கொண்டிருக்கிறதே, அந்த அண்ட வெளிக்கு அருகே – அதிக பட்ச அருகாமையை வைகுண்ட ஏகாதசி அன்று நாம் அடைகிறோம். இந்த வெளி, தேவயானம் என்றும் உத்தர வீதி என்றும் சொல்லப்படும்.  இது  நமது கேலக்ஸ்சியின் மேல்புறமான இடம். பிறவா நிலையடையும் ஜீவன்கள் உத்தர வீதியில் செல்லும் என்பது ஐதிகம். அப்படிப்பட்ட உத்தர வீதியின் புறம், நமது பூமிக் கோளம், அதிகபட்ச  அருகாமையைப் பெறும் வைகுண்ட ஏகாதசி நாள், மோக்ஷ வாயில் திறக்கப்படும் நாளாகக் கருதப்படுகிறது. பிரபஞ்ச இயலும், அதன் வழி  ஆன்மீக  நிலையையும் அறிந்த நம் முன்னோர் வகுத்த வழிகள் ஒப்புவமையே இல்லாதவை.

அத்தகு சிறப்பும், தொன்மை வழக்கமும் கொண்ட வைகுண்ட ஏகாதசி அன்று, சாலப் பெரும் பறை கொட்டினர்  என்று ஆண்டாள் கூறுவது சாலவும் பொருத்தம்.

ஆண்டாள் கேட்ட பறை

பறை கொட்டி, பாவை நோன்பு நோற்ற ஆண்டாள், தனக்கு நாராயணன் பறை தருவான் என்கிறாள். மேற்கூறிய சாலப் பெரும் பறை தவிர மற்ற இடங்களில், அவள் கேட்கும் பறை, அதாவது நாராயணன் தருவான் என்று சொல்லும் பறை என்பது,  தட்டும் பறை அல்ல. அவள்  பெற வேண்டும் என்று கேட்கும் அந்தப் பறை எப்படிப்பட்டது என்பது, மீதம் ஒன்பது இடங்களில் அவள் சொல்லும் பறையை இணைத்துப் பார்த்தால் விளங்குகிறது.

அவள் நாராயணன்  திருக்கோவிலின்  வாசல் கதவைத் தட்டி, கதவைத் திறக்கச் சொல்லி வாயில் காப்பாளனிடம் ‘தான் ஒன்றும் அழையா விருந்தாளி அல்ல, அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தானே. அதனால் தான் வந்தோம். கதவைத் திற’ என்கிறாளே அங்கே இருக்கிறது சூட்சுமம்.

இங்கே பறை என்பது கொட்டும் பறை அல்ல. மாயன் மணிவண்ணன் என்னும் கண்ணன் அறை பறை அறிவித்து அன்றே சொன்னானே, அதை நம்பி அவனைத் தேடி நாங்கள் வந்திருக்கிறோம். கதவைத் திறக்காவிட்டால் எப்படி என்று கேட்கிறாள்.

அப்படி என்ன அறை பறை அறிவித்து மாயவன் சொன்னான்?

அறை பறை என்னும் சொல்லே ஒரு சிறப்புப் பொருளுடையது. ‘அறை பறை அன்ன கயவர்’ என்னும் குறள் – 1076 -இல், ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்களைப் பகிங்கிரமாகச் சொல்லுவது அறை பறை என்கிறார் உரை ஆசிரியர் பரிமேலழகர். ரகசியமாக சொல்லப்பட்டு வந்த ஒரு விஷயத்தை கண்ணன் பகிங்கிரமாகச் சொல்லி இருக்கிறான். அதை உண்மை என்று நம்பி ஆண்டாள் கண்ணன் திருக்கோயில் தேடி வந்திருக்கிறாள்.

அபப்டி என்ன ரகசியம் – அதை ஊரறிய பகிங்கிரமாகக் கண்ணன் சொல்லி விட்டான் என்றால், அதுவே அவன் போர்க்களத்தில், அர்ஜுனனுக்கு, கொடுத்த வாக்குறுதி!

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஷுசஹ

bhagavadgitaஎல்லா தர்மங்களையும் விட்டு விட்டு என்னையே சரணடை. நான் எல்லாப் பாபங்களிலிருந்தும் உனக்கு விடுதலை அளிக்கிறேன் என்று கண்ணன்  கூறுவது,  பிறவி பெரும் கடலைக் கடக்க அவன் கொடுக்கும் ஒரு உறுதிப் பிரமாணம். இது என்றுமே உள்ள பிரமாணம்தான். ஆனால் அந்நாளில் மக்கள்,  கடினமான ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு அதன் பயனாக இதை அறிந்தார்கள். எனவே இது ரகசியம் எனப்பட்டது. அப்படியான ஒரு ரகசியத்தை, எல்லார் முன்னிலையிலும், எல்லோரும் அறியும் வண்ணம் போட்டு உடைத்து விட்டான் கண்ணன். அறை பறை என அறிவித்துவிட்டான்.

அன்றைக்கு அவன் அர்ஜுனனுக்கு அறிவித்தது, உரக்க அறிவித்தது, பறை  கொட்டியது  போல் அறிவித்தது, மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. அவன் கொடுத்த உறுதி பிரமாணத்தை நம்பி, அவனே எல்லாம் என்று அவனைச் சரணடைந்து, அவனைத் தேடி வந்திருக்கிறோம். நீ கதவைத் திறக்க மாட்டேன் என்கிறாயே என்று ஆண்டாள் இங்கு கூறுகிறாள்.

அறை பறை மாயன் மணி வண்ணன் ‘நென்னேலே வாய் நேர்ந்தான்’. அன்றே வாய் விட்டு விட்டான். அதை  நம்பி ‘தூயோமாய் வந்தோம்’ நாங்கள். எல்லா தர்மங்களையும் விட்டு விட்டுத் தூயவர்களாய் வந்தோம் என்று ஆண்டாள் சொல்லுவதிலிருந்து, நாராயணன் தரும் பறை – அது அவன் உரை- அது நமக்கு மோட்சம் தருவேன் என்று அவன் தரும் உறுதி – என்று புலனாகிறது.

இந்த மாயன் உரையை  (பகவத் கீதையில் அவன் கொடுத்த உறுதி), திருப்பாவையில் பறை என்று வரும் மற்ற இடங்களில் சேர்த்துப் பார்த்தால், இதுவேஉள்ளுறைப் பொருளாக விளங்குவது தெரியும்.

இப்பொழுது, ஆண்டாள் கூறும் பறை – பட்டியலைப் பார்ப்போம்.

1. பறை தருவான் – (பாசுரம் – 1)

“நாராயணனே நமக்கே பறை தருவான்”.

அன்று அர்ஜுனனுக்குப்  பறை என்னும் உரை தந்தான். அர்ஜுனனைப் போல நாமும் அவனை  அடைவோம். நமக்கும் அந்த உரை தந்து, உறுதி அளிப்பான்.

2. பாடிப்பறை கொண்டு  (பாசுரம் -8)

“பாவை, எழுந்திராய் பாடிப் பறை கொண்டு…….
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவா வென்று ஆராய்ந்து அருளேல்..”

அவன் கொடுத்த உரை என்னும் பறையை நம்பி, அவனிடம் சென்று நாம் வணங்கி -‘ இது நீ கொடுத்த உறுதி தானே, எங்களையும், ஏற்றுக் கொள் என்று சொன்னால், ‘ஆஹா’ என்று ஆஹா-காரம் செய்து ஆராய்ந்து சொல்கிறேன் என்பான். ‘

அவன் சக்கரவர்த்தித் திருமகனான இராமனைப்போல் அல்ல. ஒருவனிடம்  தவறு  இருந்தாலும், அவன்  தன்னைப் பணிந்தால் இராமன் தன்னடி சேர்த்துக் கொண்டு விடுவான். இராவணனே, ‘அபயம்’ என்று அவன் அடி பணிந்தால் அவனைத் தண்டிக்காமல் விட்டு விடுவான் என்று சீதை சொல்கிறாள். அவளுக்குத் தீங்கு செய்த காகாசுரனை அப்படித் தான் அவன் மன்னித்தான். அனால், இந்த தேர்த் தட்டு பாகன் இருக்கிறானே,  அவன் அப்படி அல்லன்.

பாவத்துடன் வரினும் சரி, பரவாயில்லை என்பவன் இராமன். ஆனால் புண்ணியத்தையும்  விட்டு விட்டு வா என்பவன் கிருஷ்ணன். அதனால் “பறை (உறுதி) வேண்டும் என்று சொல்லி விட்டீர்கள்  இல்லையா. பார்க்கலாம். ஆராய்ந்து சொல்கிறேன்.” என்று கூறுபவன் கிருஷ்ணன். அதனால் சீக்கிரம் போவோம், அவனைப் பார்த்து கேட்டு – இன்னும் காத்திருக்க வேண்டும் என்னும் தொனியில், ஆண்டாள்  இந்த  இடத்தில் பறை என்னும்சொல்லைக் கையாண்டு உள்ளாள்.

3. போற்றப் பறை தரும்  – (பாசுரம்- 10)

“போற்றப் பறை தரும் புண்ணியன்”

அதனால், அவனை நன்கு போற்றிப் பாடுவோம், நமக்கும் உறுதி கொடுத்து விடுவான் – அர்ஜுனன இவ்வாறுதான், அவனைத்  தொடர்ந்து, அவனை விடாது இருந்தான். அவனுக்கு உறுதிகொடுக்கவில்லையா?

4. அறை பறை –  (பாசுரம் -16)

‘அறை பறை மாயன் மணி வண்ணன் நென்னேலே வாய் நேர்ந்தான்’.

இதன் கருத்தை முன்னமேயே பார்த்தோம். ரகசியமாக இருந்த மோக்ஷம் என்னும் பெரும் உபாயத்தை, அறைந்து பறை அறிவித்தாற்போல்  அன்றே அர்ஜுனனிடம் சொல்லி விட்டானே. அதை நம்பித்தானே நாங்கள் இன்று வந்திருக்கிறோம்.

5. பறை தருகியாகில் – (பாசுரம் -25)

“நெடு மாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருகியாகில்”

அன்றைக்கு உன்னைக் கொண்டாடிய அர்ஜுனனுக்குத் தந்தாயே உறுதி மொழி, அதைப் போல நாங்களும் உன்னைக்  கொண்டாடிக் கேட்கின்றோம், எங்களுக்கும்  அந்த உறுதி மொழி கொடுத்து விடு.

6. சாலப்பெரும் பறை – (பாசுரம் -26)

“சாலப் பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே”

இதுவும் முன்னமே ஆராய்ந்தது. சாலப் பெரும் பறை  கொட்டி, பல்லாண்டு இசைத்து அவனை வணங்கிய முறைமையை இவ்வரிகள் புலப்படுத்துகின்றன.

7. உன்றன்னை பாடிப்  பறைகொண்டு – (பாசுரம் -27)

இங்கே அந்தப் பறை என்னும் உரையான உறுதி மொழி கிடைத்தபின் வரக்கூடிய பலன் கூறப்படுகிறது.
“கோவிந்தா உன்றன்னை பாடிப்  பறைகொண்டு யாம் பெரும் சன்மானம்” எதுவென்றால், கூடி இருந்து குளிர்தல் என்று முடிக்கிறாள்.

அன்று போர்க்களத்தில், அர்ஜுனனுக்கு உரை தந்த பின், அவனை விட்டு நீ பிரிந்தாயோ? இல்லையே. அவன் கூடவே ரத சாரதியாகவும் இருந்து, அவன் மனத்தை ஓட்டும் யோகேஸ்வரனாகவும் கூடி இருந்தாயே. அந்தக் கூடி இருக்கும் தன்மைதான் நான் பரிசாகக்  கேட்பது.

8. நீ தாராய் பறை – (பாசுரம் -28)

“அன்பினால் சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே, இறைவா நீ தாராய் பறை “.

உன்னைப் பலவாறாக சிறுமைப் படுத்தியும் பேசியுள்ளோம். அதை எல்லாம் நீ பெரிது படுத்தாதே. அன்று அர்ஜுனன உன்னைப் பேசாததா? இந்த அண்டத்தையே தன்னுள் கொண்டு, தன்னுள்  விரிந்து இருக்கும் உன்னை, நண்பனை ஏசிப்பேசி பரிகாசம் செய்வது போல்,  உன்னிடம் நடந்து கொண்ட அர்ஜுனனிடம் நீ கோபம் கொண்டாயா? இல்லையே. அதைப்போல, அன்பினால் நாங்களும் உன்னை இரு மாறாகப் பேசியுள்ளோம். அதற்காகச் சீற்றம் கொண்டு பறை தாராமல் இருந்து விடாதே. நீ பறை என்னும் உறுதி மொழியை  எங்களுக்குத் தர வேண்டும்.

9. இற்றைப்  பறை கொள்வான் –  (பாசுரம் -29)

“இற்றை பறை கொள்வான் அன்று காண்”

ஏதோ இன்றைக்கு மட்டும் நீ பறை கொடுத்தால் போதும் என்றில்லை.
அர்ஜுனனுடன் என்றென்றைக்கும் கூடவே இருந்து அவனை கவனித்துக் கொண்டாய் அல்லவா? அதுபோல இன்றைக்கு மட்டும் எங்களுக்கு நீ தலை ஆட்டுவது போதாது. என்றென்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும் எங்களை நீ ஆட் கொண்டு இருக்க வேண்டும்.

10.அங்கப் பறை கொண்ட ஆற்றை  – (பாசுரம் -10)

இவ்வரிகள் கடைசிப் பாசுரத்தில், பலன் கூறுவது போல் அமைந்துள்ளன.
அங்கு, அன்று அப்பறை கொண்ட விதத்தை, பட்டர் பிரான் மகளான ஆண்டாள் சொன்ன கருத்தை ஏற்றுக் கொண்டு அவன் அடி பணிபவர்கள், என்றும் அவனது திருவருளைப் பெற்று இனிதுடன் இருப்பர் என்று திருப்பாவைமுடிகிறது.

ranganatharமாயன் தந்த இந்த உரையை நம்மாழ்வார் ‘வார்த்தை’ என்கிறார். மாயன் தந்த வார்த்தை அறிந்தால், “பிறப்போடு, நோயோடு, மூப்பொடு இறப்பில்லை’ என்கிறார் (திருவாய் மொழி 7-5-10)
பிறவா நிலையைத் தருவது பறை ஒலியான அவன் வார்த்தை.
அதனால் அவன் சரணன்றி வேறொன்றும் நமக்கில்லை என்று இருக்க வேண்டும்.

நம்மாழ்வார் “வார்த்தை” என்று சொன்னதை “மாயன் உரை” என்று திருமழிசை ஆழ்வார்  கூறுகிறார்.

“ஆற்றம் கரை கிடக்கும், கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்தெனக்கு”
(நான் முகன் திருவந்தாதி- 10)

அவன் ஆற்றங்கரை தோறும் படுத்துகொண்டிருக்கிறான். ஒருவர் படுத்துக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? ஓய்வாக இருக்கிறார். இப்பொழுதைக்கு இந்த இடத்தை விட்டுச் செல்ல மாட்டார் என்பது.
நாமும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி முடித்து, அவன் பறை தருவான் என்பதை  உணரும் போது, ‘ ஐயோ அவன் எங்கிருக்கிறானோ, அவனை எங்கே தேடுவது’  என்று கவலைப் பட வேண்டாம். ஆற்றங்கரை ஏதாவது தென்படுகிறதா என்று பாருங்கள். கண்டிப்பாக அங்கே பள்ளி கொண்டிருப்பான். பறை கேட்டு சிறுமியரான நாம் வரும் போது, நாம் ஏமார்ந்து விடக் கூடாது அல்லவா? தூங்கிக் கொண்டிருப்பவனை ஆண்டாள் எழுப்பியது போல,  நாமும் அவனை எழுப்பிக் கேட்பதில், பாவைச் சிறுமியர்  போல நமக்கும் ஒரு கிளுகிளுப்பு. ‘என்னையா தேடி வந்தீர்கள்’ , என்று ஒன்றும் தெரியாதது போல் எழுந்திருப்பதில் அவனுக்கும் ஒரு ஆனந்தம்.

அதனால்தான் ‘கடல் கிடக்கும் மாயன்’ – பாற்கடலில் கிடக்கும் மாயவன், நமக்கு எளிதாக இருக்கும் வண்ணம்  ஆற்றங்கரை  தோறும் தூங்குவது போல் பாசாங்கு செய்து படுத்துக் கொண்டிருக்கிறான்.

அவன் கொடுக்கும் உரையால் நமக்கு என்ன பயன் என்றால்,
“கூற்றமும் சாரா, கொடு வினையும் சாரா, தீ மாற்றமும் சாரா” என்கிறார் ஆழ்வார்.
யம பயமும் வராது, இறப்பையே வெல்வோம்.
கொடிய பாபங்களும் நம்மைத் தீண்டாது, வினை அறுப்போம்.
கெட்ட பெயரும் நம்மைச் சேராது.

இப்படி எல்லாம் அந்தப்  பரம் பொருள் தரும் பயனை வேதமும், ஆழ்வார்களும் பலவிதமாகச் சொன்னாலும், சிற்றறிவினரான நம்மை ஈர்க்கும் வண்ணம் ஆண்டாள், பறை என்னும் ஒரு சொல்லில் புதையலையே கொடுத்துள்ளாள். பறை கொட்டி, பறை கேட்டு அவனைப் பணிந்தாலே போதும். அவள் சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் வாசித்தாலே போதும், அவனாகவே நம் மனத்தில்  உள்ள மற்ற எண்ணங்களைப் போக்கி ‘மற்றை நம் காமங்கள் மாற்றி’ விடுவான்.

தமிழர் கண்ட நீளா தேவி

நப்பின்னை யார் என்று ஆராய்ந்தபோது, அவள் நீளா தேவியின் அம்சம் என்று கோடிக்காட்டினோம். இந்தக் கட்டுரையில் தமிழ் மரபில் நீளா தேவி யார், எப்படிப்பட்டவள் என்று ஆராய்வோம்.

நீளா தேவி என்பவள்  திருமாலின் துணைவி என்று சொன்னால், ‘அப்படியா’ என்று ஆச்சரியப்படுபவர்கள் நிறைய பேர் இருந்தாலும், இந்துக் கடவுளர்களைக் கொச்சைப் படுத்தி இழிவு படுத்துபவர்களுக்கு, நல்ல அவல் கிடைத்த மாதிரிதான். ஏற்கெனவே, துணைவி என்று ஒரு தெய்வம் தாயார் சந்நிதியில் அமர்ந்திருக்க, பெருமாள் வீற்றிருப்பதோ, ஸ்ரீ தேவி, பூதேவி என்ற இரு நங்கயருடன். வீதி வலம் வந்தாலும், இந்த இவருடன்தான். இந்த இருவருடன் மூன்றாவதாக நீளா தேவியுமா என்று கேட்பவர்கள் உண்டு. அவர்களுக்கு ஒரு செய்தி. இந்த நீளா தேவியும் எப்பொழுதும் 2+1 என்றுதான் பெருமாளுடன் வீற்றிருக்கின்றாள். வீதி வலத்திலும் அவள் வருகின்றாள். ஆனால்  அவளை நம்மால் பார்க்க முடியாது. அவள் பெருமாளை ஒட்டி, அவரது நிழலாக – இருட்டாக இருக்கிறாள் என்று பெரியோர் கூறுவர்.

அவள் யார் என்று தேடினால் அவளைக் குறித்த செய்தி, வேதத்தில் எட்டு வரிகளாக மட்டுமே உள்ளன.
விஷ்ணுவைக் குறித்த வேத சூக்தங்கள் ஐந்து. (சூக்தம் என்றால் சிறப்பாகச் சொல்லப்பட்டது என்று பொருள்.) அவற்றுள் மூன்று, விஷ்ணு பத்தினிகளைப் பற்றியது. இவர்கள், ஸ்ரீதேவி, பூதேவி. நீளாதேவி ஆவர். நீளா சூக்தம் எனப்படும் நீளா தேவியைப் பற்றிய எட்டு வரிகள் தைத்திரிய சம்ஹிதையிலும், யஜூர் வேதத்திலும் காணப்படுகின்றன. வடமொழி இலக்கியங்களிலோ, கதை வழியாகவோ இவளைப் பற்றி ஒரு குறிப்பும் கிடையாது. ஆனால் தமிழ் மரபில் மட்டும்தான் இவளைப் பற்றி செய்திகள் உள்ளன என்பது, தமிழர்கள் வேதக் கருத்துகளில்  எந்த அளவு ஆழ்ந்திருந்தனர் என்று காட்டுகிறது. வேத மரபையும், வேதக் கருத்துக்களையும் தமிழர் ஐயம் திரிபுறக் கற்றுக்  கொண்டது மட்டுமல்லாது, கற்ற படி நடக்கவும், நிலை நிறுத்தவும் செய்துள்ளனர். கசடறக் கற்பதைப் பற்றி வள்ளுவர் போதனையாக மட்டும்  சொல்லவில்லை. நம் பழம் தமிழர் அவ்வாறு இருந்தமையையும்  எடுத்துக் காட்டியுள்ளார்.

கசடறக் கற்கும் வகையில், மூன்று மனைவியர் ஒருவருக்குக் கூடுமா என்ற கேள்வியை, மறை அறிந்த நம் முன்னோர் எழுப்பியுள்ளனர்.

இரண்டாம் சங்கப் பலகையை அலங்கரித்த கீரந்தையார் என்னும் புலவர் ‘தொன் முறை’ என்று ஆரம்பிக்கும் தனது பரிபாடலில் இதை ஆராய்ந்துள்ளார்.

Varaha Sculpture, Udayagiri
Varaha Sculpture, Udayagiri

திருமகள் சேர்ந்த குற்றமற்ற மார்பினை உடைய திருமால், வராஹமாக அவதரித்து  இந்தப் புவியை நீரிலிருந்து வெளியே எடுத்து, பூமகளை மணந்து கொண்டது, வான் மதியானது களங்கம் கொண்டதற்கு ஒப்பாகும் என்று கூறுவர். ஒருத்தியோடு மனையறம் நடத்தி வருகையில், இன்னொருத்தியோடு அகலம் (மார்பு) சேர்த்தல் கூடாமையில் சிறந்தது என்பது வழக்கு. அப்படி இருக்க நிலமகளை, நீரினின்று எடுத்ததாலேயே அவளை, இவர் மணந்ததாகக் கொள்ளலாமோ, என்னும் கேள்வி வருகிறது. ஆம். திருமால் பூ மகளை மணந்தார் என்று சொல்வோர், அதற்குச் சாட்சியாக, திருமால் அவளை வெள்ளத்திலிருந்து வெளிக் கொணர்ந்த பிறகு, புள்ளி அளவு நிலமும், அத்தகு வெள்ளத்தால் வருந்தியதில்லை என்னும் உண்மையை எடுத்துக்காட்டாகக் கூறி, அவர் பூமகளை மணக்கவேதான் அவ்வாறு  ஆனது என்பர். இது சிறந்த உரை அல்ல என்கிறார் கீரந்தையார்.

நித்தில மதாணி அத்தகு மதி மறுச்
செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம்-
வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண்
வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு
‘புள்ளி நிலனும் புரைபடல் அரிது‘ என
உள்ளுநர் உரைப்போர் உரையடு சிறந்தன்று

(அகலம் – மார்பு, களிறு – பன்றி ஆகிய வராஹம்.)

அது எவ்வாறு சிறந்த உரை அல்ல என்பது குறித்து அந்நாளில் விவாதங்கள் நடந்திருக்க வேண்டும். அந்த விவாதங்கள் இப்பாடலில் இடம் பெறவில்லை. ஆனால், மறை பொருளாக புலவர் இரு செய்திகளைக் காட்டியுள்ளார்.

(1) திருமால் அகலம் (மார்பு) வான் மதியைப் போல மாசு பட்டது அல்ல. செய்யோள் என்னும் திருமகள் வீற்றிருக்கும் இடம் களங்கமில்லாதது. எனவே அவள் ஒருத்திதான் திருமாலின் துணைவி!

(2) புள்ளி அளவு நிலமும் வெள்ளத்தால் வருந்தியதில்லை. எனவேதான் புவி மகள் திருமால் துணைவி ஆவார் என்று சொல்லப்படுவது சிறந்த உரை அல்ல.

இவற்றை  ஆராய்கையில், பூமகளும் திருமாலின் தேவிஆவார் என்ற வேதக்  கருத்தும் மெய்ப்பட வேண்டும். அதே நேரம், திருமால் அவளைச் சேரவே திருமகளுக்குப் போட்டி என்றோ, சக்களத்தி என்றோ இருக்கக் கூடாது. வேறு துணை ஒருத்தியைக் கொண்டவன் என்னும் அவப்பெயரும், களங்கமும் திருமாலுக்கு வரக் கூடாது. இந்த வகையில் ஆராய்ந்து, ஒரே வார்த்தையாக ‘சிறந்தன்று’ – இந்த உரை என்று கீரந்தையார் கூறி விட்டார்!

அது எப்படி ‘சிறந்தன்று’ என்று ஆராயப் புகுமுன், திருமாலின் மற்றொரு துணை எனப்படும் நீளா தேவி குறித்த தமிழ்ப் பாடலையும் பாப்போம்.

“வையம் அளந்தான்றன் மார்பின் திருநோக்காப்
பெய்வளைக் கையாள்நம் பின்னைதான்”

என்னும் ஆய்ச்சியர் குரவைப் பகுதியில் (சிலப்பதிகாரம்), வையம் அளந்த பெருமாளாகிய திருமால், தன மார்பின் கண் உள்ள திருமகளை நோக்காமல், நப்பின்னையை நோக்கினான் என்று வருகிறது. இங்கும் திருமகளை ஒதுக்கிவிட்டு, நப்பின்னையை நோக்கினான் என்று சொல்லப்படுகிறது. இந்த  நப்பின்னை பூ மகள் அல்லள். எனவே இவள் மற்றொரு தேவியான நீளா தேவி என்பது உள் பொருளாகக் காட்டப்படுகிறது. வேறு எந்த மொழி இலக்கியத்திலும் இல்லாமல், தமிழ் இலக்கியத்தில் மட்டுமே இங்ஙனம் நீளா தேவியும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளாள்.

ஒருவருக்கு மூன்று பேர் துணைவியர் என்றால் அது களங்கம் ஆகாதா என்றால், ஆகாது என்று மறை பொருள் அறிந்த நம்மாழ்வார் காட்டுகின்றார்.
“குழல் கோவலர் மடப் பாவையும் மண் மகளும் திருவும் நிழல் போல்வனர்”
( திருவிருத்தம் – 3 ) என்கிறார்.
இங்கு கோவலர் மடப் பாவை என்று நப்பின்னையை மற்ற இருவரோடு (திருமகள் , மண் மகள்)  காட்டுவதால், அவள் நீளா தேவி என்பதும் புலனாகிறது. இம்மூவரும், திருமாலின் நிழல் போல்வனர் என்பதால் இம்மூவருமே  ஒருவர்தான் என்றும் காட்டுகிறது. நிழல் ஒன்று தான் இருக்க முடியும். அந்த நிழலை மூன்று பெயர்களில், மூன்று குணங்களில் மூன்று தேவியராகப் பார்க்கிறோம் என்றும்  தெரிகிறது.

இந்தக் கருத்தை, நாம் முன்பு சொன்ன வாதங்களில் வைத்துப்  பார்ப்போம்.
முதலில், கோவிலில் திருமால் ஸ்ரீ தேவி பூ தேவியருடன் எழுந்தருளி இருப்பதும், வீதி வலம் செல்லும் போதெல்லாம், அவர்களுடனே செல்வதும், நிழலை விட்டுப் பிரியாதிருப்பதைக் காட்டுகிறது. நம்மால் பார்க்க முடிந்த இவ்விரு நிழல்களுடன், கண்ணுக்குத் தெரியாத நீளா தேவியும் அவருடன் இருக்க வேண்டும் என்பதும் புலனாகிறது.

பரிபாடல் விவாதத்தின்படி, மண் மகளை மணந்தாலும், அது களங்கமல்ல. மண் மகளை அவன் மணந்தான் என்பது  உலகோருக்கு. என்றுமே மண் மகள், திருமகளைப் போல அவர் மார்பைச் சார்ந்தே  இருக்கிறாள் என்பதே உண்மை. மண்மகளும் திருமகளே.

அதுபோலவே நப்பின்னை என்னும் நீளா தேவியும் அவருடனேயே இருக்கின்றாள் என்பதும் உண்மை என்று ஆகிறது. “நப்பின்னை நங்காய் திருவே’ என்று ஆண்டாள் கூறுவதும், நீளா தேவி திருமகள்தான் என்று தெளிவிக்கிறது.

இந்த வேதக் கருத்தையே இராமானுசர் ‘சரணாகதி கத்யம்’ என்னும் பாவினில் திருமாலை விட்டுப் பிரியாதவளாக திருமகள் இருக்கின்றாள் என்று முதல் சூர்ணையில் சொல்லி, பின் 7 -ஆம் சூர்ணையில், அத்தகு திருவுக்குத் திருவான, திருவின் மணாளனே, ஸ்ரீ வல்லபனே என்று சொல்லி, மேலும் ‘நீ ஒருவனே பூமி, நீளா நாயகனும் ஆவாய்’ என்று ”ஏவம் பூத பூமி நீளா நாயக’  என்கிறார். இதன் மூலம் இம்மூன்று நாயகியருமே சமம். வேறுபாடு இல்லாதவர்கள் என்று சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு திருக்கோவிலிலும், அந்தந்த இடத்தில், தன துணைவியான திருமகளின் அம்சமான தேவியைத் திருமணம் கண்டு, அவளும் தனி சந்நிதி கண்டு ஆண்டு வந்தாலும், நிழல் போன்ற இம்முத் தேவியர் திருமாலை இணை பிரியாது இருப்பார்.

எதற்கு  மூன்று தேவியர்? திருமகள் என்னும் இலக்குமி ஒருத்தியுடனேயே மாயங்கள் செய்ய முடியாதவனா இந்தத் திருமால்?
முடியும்.
இலக்குமி என்னும் தமிழ்ச்  சொல்லும், லக்ஷ்மி என்னும் வடமொழிச்  சொல்லும் ‘ இலக்கு இவனே’ என்று திருமாலையே நம் இலக்காக, இலட்சியமாகக் கொள்ள வேண்டும் என்றுதான் காட்டுகின்றன. ஆனால் கர்ம வினையில் அகப்பட்டு சுழலும் நமக்கு திருமாலா இலக்கு? வேறு இலக்குகள் இல்லையா? முக்கியமான  மூன்று இலக்குகள் இல்லையா? மண், பொன், பெண் என்னும் மூன்று இலக்குகளைச் சுற்றியே நம் வாழ்க்கை இயங்குகிறது அல்லவா?

மக்களை மயக்கும் மண், பொன், பெண் என்னும் மூன்று சக்திகளின் ஆதிக்கத்திலிருந்து மக்கள் விடுபட்டால் தான் வீடு பேறு கிடைக்கும், எனவே தான் இந்த சக்திகளுக்கு மூலமாக மூன்று தேவியரை திருமால் ஆட்கொண்டுள்ளார் என்று கூறலாம். இதில் மண் என்பது பூமகள் என்பதும், பொன் என்பது திருமகள் என்பதும் வெளிப்படை. ஆனால் பெண் என்பவள்  எவ்வாறு நீளா மகள் என்னும் ஆயர் பாவை ஆகிறாள்?

http://www.tamilhindu.com/wp-content/uploads/desika-150x150.jpg

இதற்கு  விடையை, நம் தமிழ் முன்னோர் தராமலா போயிருப்பார்? இதோ  இருக்கிறது  விடை, காஞ்சிக்கு அருகில் உள்ள தூப்புல் என்னும் ஊரில் அவதரித்த தேசிகர் இயற்றிய ‘தயா சதகம்’ என்னும் பாவினில். திருமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீனிவாசப் பெருமானின் தேவியராக இம்மூவரையும் போற்றுகையில், நாம் செய்யும் அநேக பாபங்களையும், தோஷங்களையும் அவன்  காணாதவாறு, அவனை மயக்குபவள் என்று நீளா தேவியைக் குறிப்பிடுகிறார்.

மைத் தடங்கண்ணியான நப்பின்னை, எத்தனை போலும் அவன் துயிலேழவொட்டாள் காண். அவனைத் துயில் எழுப்ப மாட்டாள். அவள் துயில் எழுப்பினால் தான், அவன் எழுந்திருப்பான். அவள் மயக்கத்தில் அவன் ஆழ்ந்திருக்கவே, அந்த மயக்க நிலையிலேயே அவள் நம்மைப் பற்றி நாலு வார்த்தை நல்லதாகச் சொன்னால், நம்மிடம் உள்ள குற்றம் குறைகள் எதுவாக இருப்பினும், அதைப் பொருட்படுத்தாமல் அவன் நமக்கு அருள் பாலித்துவிடுவான்.

நப்பின்னையை நம்மில் ஒருத்தியாய், நம் தங்கையாய், நம் பின்னையாய்க் காட்டி, அவளிடம் கொண்ட மயக்கத்தில் அவன் நம் குறைகளைப் பொருட்படுத்தமாட்டாமையைக் காட்டவே அவள் (நீளா தேவி) ஜீவத் தொகுதிகளின் உருவகம் என்றும் நினைக்க ஏதுவாகிறது.
ஜீவர்களிடம் அவன் மயங்கி உள்ளான்.

திருமாலுக்கோ காக்கும் வேலை.
யாரைக் காக்க  வேண்டும்?
நம்மை, நம் போன்ற உயிரினங்களை.
எவ்விடத்தில் காக்க வேண்டும்?
இந்தப் புவியுலகில்.
அவன் தன் தொழில் செய்ய நாமும் வேண்டும்,
நாம் இருக்கும் இந்தப் புவியும் வேண்டும்.
மார்பில் திருமகளைத் தாங்கிக் கொண்டு,
இந்த இருவரையும் அரவணைத்துக் கொண்டு செல்வது அவன் வேலை.
இதில் நாம் என்ன அட்டூழியம் செய்தாலும், அவன் பொறுத்து, பொறுத்து, நம்மைத் திருத்தப் பார்க்கிறான். அவன் கண்டிப்பாக நடந்து கொள்ளலாம். மாறாகத் தண்டித்தால் நாம் அவனை வெறுத்து விடுவோமே!
நம்மிடம் உள்ள பொறுப்பினால், மயக்கத்தால், அவன் நம் குறைகளைப் பெரிதுபடுத்துவதில்லை.

இதையே நம் தமிழ்க் குடியைச் சார்ந்த பிள்ளை உலகாசிரியர் என்னும் பெருமான்,  ஸ்ரீவசன பூஷணம்  என்னும் நூலில் அழகாகச் சொல்லியுள்ளார். நம்மிடம் பல தோஷங்கள் உள்ளன. நாம் செய்யும் தவறுகளுக்கோ அளவில்லை. ஆயினும், நாம் செய்யும் செயல்களில் ஏதேனும் நல்லது இருக்காதா என்று பார்ப்பவன் அவன். ( நீளா தேவி என்னும் உயிர்த் தொகுதிகளின் பிரதிநிதியின் பொருட்டு ).

பொற்கொல்லனிடம், பொன்னைக் கொடுத்து சோதித்துத் தருமாறு கேட்டால், அவன் அதை உரை கல்லில் தேய்த்துப் பார்ப்பான். நம் கண்ணுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் மிக மிகக் குறைந்த அளவில் பொன் துகள் கல்லில் ஒட்டிக் கொண்டிருக்கும். அதை மெழுகில் ஒற்றி எடுத்து வைத்திருப்பான். இப்படியே பலரிடமிருந்தும் வந்த பொன்னை சோதனை செய்கிறேன் பேர்வழி என்று கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, அப்படி எடுத்த பொன், நாளடைவில் கால் பொன்னாயிற்று, கழஞ்சு பொன்னாயிற்று என்று திரட்டி  விடுவான்.

அந்தப் பொற்கொல்லனைப் போன்றவன்தான் திருமாலும்.
‘இவன் என் பேரைச் சொன்னான்’, இவன் என் ஊரைச் சொன்னான்’, இவன் அவனுக்குத் தண்ணீர் கொடுத்தான்’, இவன் தங்க நிழல் கொடுத்தான்’ என்று எப்படியோ கணக்கு பண்ணி நம் குறைகளைக் கண்டு கொள்ளாமல் நமக்கு நல்லதே நடக்கும்படி செய்து விடுவான் என்கிறார் பிள்ளை உலகாசிரியர்.

govindaraja_swamiநாம் தற்சமயம் பார்க்காததா என்ன ? –
‘இவர் உன்னைத் துவேஷிக்கவில்லையா?
நீ நாட்டிய மதத்தை ஏசவில்லையா?
சாது முதல் சேது வரை அனைத்தையும் அலட்சியப் படுத்தவில்லையா?’  என்று நாம் கேட்டால், இவன் சரியான பதில் வைத்திருப்பான்.
‘என் அடியாரைத் துவேஷித்தாலும், மஞ்சள் துண்டு போட்டிருக்கிறானே,
அதன் மகிமை அவனுக்குத் தெரிந்திருக்கிறதே’ என்பான்!
‘ஞாயிறு போற்றுதும் என்று இளங்கோ அடிகளை சப்போட்டுக்குக் கூப்பிட்டுக் கொண்டாலும், செய்வது என்னவோ சூரிய நமஸ்காரம்தானே,
அதுவும் தேவர்கள் விரும்பும் அதிகாலையில் செய்கிறானே’.
என்று கணக்கு போட்டு கண்டு கொள்ளாமல் போவதைத்தானே பார்க்கிறோம்!

இது நியாயமா?
அவனைப் போற்றும் நமக்குப் பல கஷ்டங்கள்.
அவனைத் தூற்றுவோர்க்கு என்றும் வெற்றிதானா என்றால், அது அப்படியல்ல.
பாதையை விட்டு விலகுவோரை முதலில், பாதைக்குத் திருப்ப வேண்டும். பாதையில் நடப்போருக்கு இலக்கு எது என்று காட்ட வேண்டும்.
மஞ்சள் துண்டு மகிமையைக் கண்டவருக்கு, போகம் காட்டி
அவன் பாதையில் திரும்ப வேண்டி மோகம் கொள்ளச் செய்ய வேண்டும்.
தோஷங்களை அவன் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு நிழல் போன்ற நீளா தேவியின் கருணை – கருணைக்கே கருணை காட்டும்  நீர்மை- தேவைப்படுகிறது.

பாதையில் நாம் நடக்க ஆரம்பித்த பிறகு, நமது இலக்கு என்ன என்று வழிபடுத்துகிறான். அப்படிப் போகையில் துன்பங்களும்,  அவற்றிலிருந்து பிறக்கும் பாடங்களும் நம்மைச் செம்மைப் படுத்துகின்றன. மண், பொன், பெண் என்று நாம் ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றி, சுற்றி வராமல், எது நம் இலக்கு என்று அறிந்து கொள்ள நம் தமிழ் ஆன்றோர் சொல்லாமல் இல்லை.

முன் கூறிய பரிபாடலிலேயே, கீரந்தையார் நம் இலக்கைச் சுட்டியுள்ளார்.
திருமால் கொடுத்த செல்வத்தில் மிகச் சிறந்தது அவன் தேவர்களுக்கு அமிர்தம் வழங்கியது. அதனால் அவர்களுக்கு சாவாமை, மூவாமை (மூப்பு இல்லாமை) , அழிவில்லா ஆற்றல் கிடைத்தது. இந்த மூன்றையும் நாமும் பெற்று, கொடும்பாடு அறியாமல், மெய்யுணர்வு பெற வேண்டும் என்று  அவன் அருள் புரிய வேண்டும் என்று பாடலை முடிக்கிறார்.

“வாயடை அமிர்தம் நின் மனத்தகத்து அடைத்தர,
மூவா மரபும் ஓவா நோன்மையும்
சாவா மரபின் அமரர்க்காச் சென்ற நின்
… … … மரபினோய் நின் அடி
தலை உற வணங்கினேம், பல் மாண் யாமும்;
கலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்,
கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்-
‘கொடும்பாடு அறியற்க, எம் அறிவு!‘ எனவே”

இப்படி விழையும் நிலைக்கு நாம் வருவதற்கு, அவன் மூன்று தேவியருடன் வலம் வர வேண்டியிருக்கிறது.
இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால்,
இந்த முத்தேவியரும் கோவிலில் எழுந்தருளி அருள் பாலிப்பது,
நம் தமிழக மரபில் கட்டப் படும் கோவில்களில் மட்டும்தான்.
அதிலும், நீளா தேவி சமேதராக திருமால் காட்சி தருவது,
தமிழ்ப் பகுதியான திருத்தங்கல் என்னும் ஊரில்தான்.
அன்ன நாயகி என்னும் பெயருடன், ஸ்ரீதேவியும்,
அனந்த நாயகி என்னும் பெயருடன் நீளா தேவியும்
திருமாலுக்கு வலப்புறம் இருக்க,
அமிர்த நாயகி என்னும் பூதேவி,
ஜாம்பவதி என்னும் – இந்த சம்புத்தீவு எனப்படும் நாவலம் தீவினை உருவகப்படுத்தும் ஜாம்பவதி தேவி இடப்புறம்  இருக்க,
நடுவில் இருக்கும் திருமாலின் திருபெயரோ ‘நின்ற நாராயணன்!’

thirucherai-perumalநாராயணன் நின்றிருந்த காட்சி ஒன்று உண்டு. அது, பாரதப் போர் முடிந்தபின், அம்புப் படுக்கையில் பீஷ்மர் படுத்திருக்க, கிருஷ்ணன், யுதிஷ்டிரர் உள்ளிட்ட அனைவரும், சூழ்ந்திருந்து நின்றிருந்த நேரம். திருமாலின் ஆயிரம் திருப் பெயர்களையும் ‘விஷ்ணு சஹஸ்ரநாமம்’ என பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறே, யுதிஷ்டிரரின்  கேள்விக்குப் பதிலாகச் சொல்கையில், அந்த ஆயிரம் நாமங்களுக்கு உரியவனான திருமால், கிருஷ்ணனாக, நின்று கொண்டுதான் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த நின்ற நாராயணனின் பேரும், பெருமையும் சொல்கையில், அவன் முத்தேவியர் உள்ளிட்ட அனைத்து பரிவாரங்களும் அவனுடம் இருப்பர். ஏனென்றால், அவர்கள் உள்ளடக்கி , இந்தப் பிரபஞ்சம் முழுவதும் குறித்தே அவன் லீலைகள், அவதாரங்கள், அவன் சிறப்புகள் எல்லாம் சஹஸ்ரநாமத்தில் சொல்லப்படுகின்றன.  அவன் நின்ற நாராயணனாக திருத்தங்கலில் நிற்கையில், மூன்று தேவியருமே உடன் இருப்பதாக வடித்தது, நம் தமிழ் முன்னோர், அந்த வேதப் பொருளின் முழு உண்மையை அறிந்திருந்தனர் என்பதற்குச்  சான்று.

மேலும் நீளா தேவியை அனந்த நாயகி என்பதிலும் ஒரு உட்பொருள் புலனாகிறது. அனந்தன் என்பது ஆதி சேஷனின் பெயர்.
இறைவன் சேஷி எனப்படுபவன்.
அவனைத் தவிர்த்த மற்றெல்லாப் பொருட்களும் –
உயிருள்ளவை, உயிரில்லாதவை என அனைத்து பொருட்களும் –
சேஷன் எனபப்டுவர்.
இவர்களின் பிரதிநிதி ஆதிசேஷன் ஆவார்.

ஆதிசேஷன் இல்லாமல் திருமால் இல்லை. அவனுக்காக, அவன் பொருட்டு, அவனோடு, அவனில் என்று திருமாலுக்கு ஆதிசேஷனோடு என்றும் தொடர்புண்டு.
அந்த ஆதிசேஷனே முக்குணங்களின் தொகுதியாக மூன்று வரிசை அரவணையாகவும், ஐம்பூதங்களின் தொகுதியாக ஐந்து தலைகளுடனும், இந்த பிரபஞ்சத்தில்  உள்ள எல்லாப் பொருள்களையும் தன்னகத்தேகொண்டுள்ளான்.
இப்படிப்பட்ட  ஆதிசேஷனை ஆள்பவனாகத் திருமாலும்,
வைகுந்தத்தில் அவன் மேல்  அமர்ந்து,
மன்வந்திரங்களுக்கும், கல்பத்திற்கும் இடைப்பட்ட பிரளய காலத்தில் பாற்கடலில் அவன் மீது பள்ளி கொண்டு,
நின்றால் அவன் மீதே நின்று (திருவல்லிக்கேணியில்),
நடந்தால், கூடவே அவன் குடையாகப் பின்தொடர என்று –
பிரியாது இருக்கும் உறவில், ஸ்ரீதேவி, பூதேவி என்று காட்சி தரும் போது, எங்கே போனான் அந்த சேஷன்?

அவன்தான் அவளோ?
அனந்த நாயகி என்று நீளா தேவி திருத்தங்கலில் காட்சி தருவது,
நிழலாகப் பின் தொடரும் சேஷனே என்று காட்டவோ?
ஜீவக் கூட்டங்களின் தொகுதியாக உள்ள அவனில் திருமால் மயங்கியமையால்தான், ஓயாது குற்றங்கள் பல நாம் செய்கினும், நம் தோஷங்களைக் காணாமல் நம்மைக் கை தூக்கிவிடப் பார்க்கிறானோ?

நீளா தேவி என்ற பெயரைப் பாருங்கள்.
வடமொழியில் நீலா என்றுதான் எழுதப் படுகிறது.

ஆனால் உச்சரிக்கையில், அவள் நீளா ஆகிறாள்.
இதற்குத் தமிழில்தான் சிறந்த அர்த்தங்கள் உள்ளன.
அவள் நீளா. அதனால் நீளாது, குறுகியே, அவனில் ஐக்கியமானவளோ?
நீளாமையால் அவனுக்கும் (திருமால்) அவளுக்கும் உள்ள உறவு, பின்னிப் பிணைந்த ஒன்றோ?
மற்ற இரு தேவியருடன் அல்லாமல், நப்பின்னையுடன் மட்டுமே மனையியல் இன்பத்தில் திருமால் ஈடுப்பட்டுள்ளதாகக் காட்டியுள்ளது,
இந்த ஜீவக்கூட்டங்களைத்தான் அவன் முயக்குகிறான், மயக்குகிறான் – விரைவில் இவர்கள் தன் நிலை அடைய வேண்டும் என்பதற்காக என்று நமக்கு அறிவிக்கவோ?

யார் நப்பின்னை ?

தமிழ்  பக்தி  உலகிலும் , இலக்கிய  உலகிலும் , தனியிடத்தைப்  பெற்ற மர்மப்  பெண்  நப்பின்னை !

பலரும்  அறிந்த  வகையில்  திருப்பாவையிலும், பழமை  இலக்கியவாதிகள்  தெரிந்து  கொண்ட  வகையில்  ஓரிரு  பழம்  தமிழ்  இலக்கியங்களிலும்  ஒளிந்து கொண்டுள்ள இந்த  நப்பின்னை , ஒரு  புரியாத  புதிர்தான்.

nappinnai03இவள்  பெயர்  நப்பின்னைதானா? அல்லது  ஆயர்  குடியில்  இளையவளாகப் பிறந்ததனால் , நம் – பின்னை  என்று  பெயர்  பெற்றவளோ? ஆயர்  மகளான  இவள்  கண்ணனின்  மாமன்  மகளோ ? கண்ணனுக்கு  மனைவியென்று ஆழ்வார்களால்  பாடப்  பட்ட  இவளைப்  பற்றி எந்த  வடபால்  இலக்கியமும்  – கண்ணன்  சரிதையைக்  கூறும்  பாகவதம்  போன்றவையும் ஒன்றும்  கூறவில்லையே ?  இப்படிப்  பல  கேள்விகள்  நப்பின்னையைப்  பற்றி உள்ளன .

யார்  இந்த  நப்பின்னை  என்ற  ஒரு  ஆராய்ச்சியே  இக்கட்டுரை.

முதலில்  நப்பின்னை என்ற  பெயரின்  பொருளைத்  தேடுவோம் .நப்பின்னை , நம்பி  என்னும்  இரண்டு  சொற்களுமே  தங்கை  அல்லது  தம்பியைக்  குறிப்பதாக  வழக்கில்  இருந்திருக்கின்றது . சொந்த  தம்பி , தங்கை  என்றில்லை, பொதுவாகவே  வயதில்  இளையவர்களை  இவ்வாறு  விளித்திருக்கிறார்கள். யாரையாவது  பார்த்தால் , ‘என்ன  தம்பி , நல்லா இருக்கீங்களா? ’ என்று  ‘தம்பி ’ முறை  சொல்வது  போல , தம்பிக்கு  பதிலாக  நம்பி  என்ற  வார்த்தை  வழக்கில்  கூப்பிடுவதாக  இருந்திருக்கின்றது  என்பதை  சீவக  சிந்தாமணியில்  காணலாம் . சீவக  சிந்தாமணியில்  482 ஆவது  பாடலில் , நப்பின்னை  என்ற  சொல்லும்  வருகிறது . (விளக்கத்தைப் பிறகு பார்ப்போம்.) இந்தச்  சொல்லை விவரிக்கையில் , உரை  ஆசிரியர்  நச்சினார்க்கினியர் , “‘ந ’கரம்  சிறப்புப்  பொருள்  உணர்த்தும்  ஓர்  இடைச்  சொல் ” என்று  விளக்குவதால் , பின்னை  அல்லது  நப்பின்னை  மற்றும்  நம்பி  ஆகிய  இவ்விரு  சொற்களும் , வயதில்  இளைய  பெண் , ஆண்  பாலரைக்  குறிக்கும்  பொதுச் சொற்களாக  வழக்கில்  இருந்திருக்கின்றன  என்று  தெரிகிறது .

பின்னை அல்லது பிஞ்சை அல்லது நப்பின்னை என்ற சொற்கள் சிலப்பதிகாரத்தில் வருகின்றன. ஆய்ச்சியர் குரவையில் வரும் இந்த சொற்களும். அவற்றைத் தொட்டு வரும் பொருளும், இவள் தங்கையா அல்லது தாரமா என்று இருவேறு விதமாகப் பொருள் கொள்ளும் வண்ணம் உள்ளன. முதலில் சிலம்பு கூறும் செய்திகளை அலசுவோம்.

சிலப்பதிகாரத்தில் பின்னை

கோவலன் பழியில் சிக்கிய வேளையில், ஆயர் சேரியில் துர்நிமித்தங்கள் தெரிந்தன. கன்று கறவைகள் கண்ணிலிருந்து நீர் வழிந்தது. அத்தகைய வேளையில், முன்பு கோகுலத்தில் கண்ணன் தன் முன்னவனுடனும், பின்னையுடனும் ஆடிய பாலசரிதத்தை தாமும் ஆடினால், துயர் நீங்கும் என்று ஆய மகள் மாதரி கூறுகிறாள்.

“ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன் தம்முன் ஆடிய
வாலசரிதை நாடகங்களில் வேல் நெடுங்கண்
பிஞ்ஞையோ டாடிய குரவை யாடுதும் யாமென்றாள்
கறவை கன்று துயர் நீங்குகவெனவே;”

என்று மகளையும் மற்றவர்களையும் அழைக்கிறாள்.

பால சரிதை என்னும் பகுதி , கண்ணனின் கதையைக் கூறும் ஹரி வம்சத்தில் வருகிறது. இதையே பாஸர்  என்பவர் நாட்டிய நாடகமாகத் தந்துள்ளார். வடமொழியில், முதன் முதலில் எழுதப் பட்ட நாட்டிய நாடகம் இது. மாதரி ‘வால சரிதை’ என்று கூறுவது, இந்த பால சரிதா-வாகத்தான் இருக்க வேண்டும். ‘பா’  – ‘வா’ என்று  இடம் மாறுதல் தமிழில் உண்டு.

கண்ணனின் பால சரிதையைப் பாலைப் பண்ணில் அமைத்து, குரவை ஆடினர். நடன அமைப்பு பற்றி சிலம்பு கூறுவதை, உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் நன்கு விளங்கும் வண்ணம் எழுதியுள்ளார்.

அதன் படி, ஏழு பெண்கள் ஏழு ஸ்வரங்களாக இருப்பார். ‘ச’ முதல் ஆரம்பிக்கும் ஏழிசையும், தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று வழங்கப்படும். இவை பற்றிய குறிப்புகளை திவாகர நூற்பாக்களில்  காணலாம். இவை முறையே   ச  முதல் (ஷட்ஜம்) நி வரை (நிஷாதம்) உள்ள ஸ்வரங்கள். இவை ஒவ்வொன்றுக்கும் மாத்திரை அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் குரலும் (ஷட்ஜம்), இளியும் (பஞ்சமமும்) ஆதாரமானவை. ரிஷபம் எனப்படும், இரண்டாவதான துத்தம், குரலைத் தொக்கியே – அதாவது ஷட்ஜத்தை  ஒட்டியே இருக்கும்.

இந்த ஏழு ஸ்வரங்களும் பலவிதமாக  ஒன்றுடன் ஒன்று இணைந்து  ராகம் – அதாவது தமிழில் ‘பண்’ என்று சொல்லப்படும் பல வகைப் பண்கள் எழுந்துள்ளன. ஆய்ச்சியர் குரவையில் வருவது, ஆய்ப் பாலைப் பண். இது பாலைப் பண்களில் ஒரு வகை.

குரவை என்று நடனம் ஆடும் பொழுது, இந்தப் பண் வகையில், ஸ்வரங்கள் எவ்வாறு சேருகின்றனவோ, அந்த வகையில், நடனமாடும்  ஏழு பெண்களும் சேர்ந்து, சேர்ந்து பண் வகையைக் காட்டி ஆடுகின்றனர்.
இதில், ஷட்ஜம் என்னும் குரல் வகையை மாயோன் என்னும் கண்ணனாக உருவகப்படுத்தியுள்ளனர். அடுத்த முக்கிய ஸ்வரமான பஞ்சமம் என்னும் இளியை, பலராமனாக உருவகப்படுத்தி ஆடுகின்றனர். இந்த இருவரை (இரு ஸ்வரங்களை) ஒட்டியே மற்ற ஸ்வரங்களும் (பெண்களும்) சேர்ந்து, பிரிந்து ராகம் என்னும் பண்ணைப் பலவிதமாகக் காட்டுகின்றனர். இதில், ரிஷபமான துத்தம், ஷட்ஜத்தை (குரல் என்னும் கண்ணன்) ஒட்டியே வரும். அந்த துத்தம் நப்பின்னை! இதுவே சிலம்பு விவரிக்கும் ஆய்ச்சியர் குரவை!

கண்ணனும், பலராமனும் எப்பொழுதும் ஒன்று கூடியே ஆடுவர் – குரல், இளி என்று. துத்தம் (நப்பின்னை) ஷட்ஜத்தை ஒட்டியே வருமாதலால், அவள் கண்ணனுக்கும் பலராமனுக்கும் இடையே எப்பொழுதும் ஆடுவாள்.

இதை குறிக்கையில் சிலம்பு இவ்வாறு சொல்கிறது.

“மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும்
கோவலர்தஞ் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர”

மாயவன் தன் முன்னினோடும் – கண்ணன் தன் முன்னவனான, அதாவது அண்ணனான   பாலராமனோடும்.

வரிவளைக்கைப் பின்னையொடும் – வளையல் அணிந்த கைகளை உடைய பின்னவளோடும், அதாவது தன் தங்கையான சுபத்திரையோடும் – என்றுதான் இங்கே பொருள் காண முடிகிறது.

puri_jaganathஇதை நோக்குங்கால், ப்ரிஹத் சம்ஹிதையில், வராஹமிஹிரர் கூறுவது நினைவுக்கு வருகிறது. 58- ஆவது அதிகாரத்தில், கடவுளர் சிலைகளை வடிக்கும் விதம் பற்றி அவர் கூறுகிறார். அப்படிக் கூறுகையில், பலராமன் சிலையின் அங்க லக்ஷ்ணங்களைக் கூறி விட்டு, பலராமனைத் தனியாக பிரதிஷ்டை செய்யக் கூட்டாது என்றும், நடுவில் ஒரு பெண் சிலையை வடித்து, மறு பக்கம் கண்ணன் சிலையை வடிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். இந்த அமைப்பே ஆய்ச்சியர்  குரவையிலும் வருகிறது. நடுவில் இருக்கும் பெண்  தன் வலக் கையில் வெள்ளைத் தாமரையை வைத்திருக்க வேண்டும். இடக் கை உடலின் குறுக்கே இருக்க வேண்டும் என்கிறார். இவ்வாறு பலராமனும், கண்ணனும் இருபுறமும் இருக்க, நடுவில் ஒரு பெண்ணும் இருக்கும் அமைப்பு, பூரி ஜகன்னாதர் கோவிலில் வணங்கப்படும் பலராமன், சுபத்திரை , கண்ணன் உருவச் சிலைகளே!

பூரியில் உள்ள உருவச் சிலைகள் வடிக்கப்பட்டவைகள் அல்ல. ஆனால் இம்மூவரையும் ஒன்றாக வழிபடும் வழக்கம் இருந்திருக்கின்றது என்பதற்கு அது சாட்சி. வராஹமிஹிரரும், கடவுளர் சிலை வடிக்கப்படும் பரிமாணங்களைப் பற்றி விவரிக்கும் போது, இம்மூவர் சிலைகள் வடிப்பதையும் விவரிப்பதால், அந்நாளில், இம்மூவரையும் ஒன்றாக வைத்து வழிபடும் வழக்கம் இருந்திருக்கின்றது என்று தெரிகிறது. இம்மூவரின் மூலக் கதை, பால சரிதை. அதன் நடனமாக்கம் ஆய்ச்சியர் குரவை என்பது புலனாகிறது.

பால சரிதையில், கண்ணனின் இளம் பருவ ஆட்டங்களில், அண்ணனும், தங்கையுமே இருந்தனர். முன்னவன் என்பவன் அண்ணன் என்றால், பின்னை என்பவள் தங்கையாகத் தான் இருக்க முடியும். பூரி கோவில் தெய்வங்களே இதற்கு ஆதாரமாக – வழி வழியாக வந்த வழிபாடாகத் தெரிகிறது.

நப்பின்னை என்னும் தாரத்தைக் குறிப்பதாக ஓரிடம், ஆய்ச்சியர் குரவையில் வருகிறது.

அவரவர் பாத்திரங்களைச் சொல்லி, அவரவர் இருப்பிடங்களையும் சொல்கிறாள் மாதரி,

“மாயவன் என்றாள் குரலை விறல்வெள்ளை
ஆயவன் என்றாள் இளிதன்னை- ஆய்மகள்
பின்னையாம் என்றாளோர் துத்தத்தை மற்றையார்
முன்னையாம் என்றாள் முறை;”

ஆனால், ஆட்டத்தின் போது  தங்கையாகிய பின்னையையும், அவள் அழகினைக் காணும் போது, நம்-பின்னை என்னும் தாரத்தையும், மாதரி குறிக்கிறாளோ என்றும் தோன்றுகிறது.

கண்ணனுக்கு இடப்பக்கமும்  பலராமனுக்கு வலப்பக்கமுமாக நடுவில், பின்னை ஆடுவதாகப்  பல இடங்களில் கூறினாலும் , ஆரம்பத்தில், பின்னையாக நடிப்பவளைப் பார்த்து, மயங்கி, மாதரி கூறுவது, நப்பின்னை என்னும் தாரத்தைப் பற்றியதாக இருக்கிறது.

“வண்டுழாய் மாலையை மாயவன் மேலிட்டுத்
தண்டாக் குரவைதான் உள்படுவாள்-கொண்டசீர்
வையம் அளந்தான்றன் மார்பின் திருநோக்காப்
பெய்வளைக் கையாள்நம் பின்னைதா னாமென்றே
ஐயென்றா ளாயர் மகள்;”

‘வந்துழாய் மாலையை மாயவன் மேலே சாற்றி, குரவை ஆடத்  துவங்கும் அந்தப் பெண், மாயவன் தன் மார்பில் இருக்கும் திருமகளை நோக்காமல் இருந்ததற்குக் காரணமாகிய நப்பின்னைதானோ, ஐ ? ‘ – என்று தன் மகள் ஐயிடம் மாதரி வியந்து கூறுகிறாள். இந்த ஆட்டத்தில், தங்கையாக ஆடும் பெண், மாயவனை மயக்கிய நப்பின்னை போல இருக்கிறாள் என்றும் பொருள் கொள்ளும் வண்ணம் இருக்கிறது. ஏனைய இடங்களில், தங்கை என்றே பொருள் கொள்ளும்படி இருக்கிறது.

ஒவ்வொரு ஆயர் மகளும், கண்ணனே தனக்குக் கணவனாக வர வேண்டும் என்று விரும்பினாள் என்று, கலித் தொகைப் பாடல்களில் தெரிகிறது. ஆயர் குல மங்கை ஒருத்தியை, அதிலும் தமிழ் பேசும் ஆயர் குல மகள் ஒருத்தியை, கண்ணன் கைப் பிடித்திருந்தால்தான், இந்த அளவு, பிரேமை – ‘நப்பின்னை கல்ட்’ என்று சொல்லும் வண்ணம் தமிழ் வழி முறைகளில் வளர்ந்திருக்க முடியும்.

ஆய்ச்சியர் குரவையில் வரும் பின்னை, தங்கையாக இருக்கலாம் என்று பல இடங்களிலும், மேற் சொன்னவாறு காட்டினாலும், நப்பின்னை என்னும் ஆயர் குலப் பெண்ணை கண்ணன் மணம்செய்துள்ளான்  என்பதற்கு சில ஆதாரங்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

சீவக சிந்தாமணியில் பின்னை

சீவக சிந்தாமணியில், கோவிந்தையார் இலம்பகத்தில் ஆநிரை மீட்டுத் தருபவருக்குத் தன் மகள் கோவிந்தையை திருமணம் செய்து தருவதாக, நந்தகோன் முரசு அறைவிக்கிறார். சீவகன் ஆநிரை மீட்டுத் தருகிறான். சீவகனை நம்பி என்று விளித்துப் பேசும் நந்தகோன், தன் மகளை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கையில், முருகன் எவ்வாறு வள்ளியை மணந்தானோ, மாயவன் எவ்வாறு நப்பின்னையை மணந்தானோ அவ்வாறு தன் மகள் கோவிந்தையை சீவகன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்.

குலம் நினையல் நம்பி கொழும் கயல் கண் வள்ளி
நலன் நுகர்ந்தான் அன்றே நறும் தார் முருகன்
நில மகட்குக் கேள்வனும் நீள் நிரை நப்பின்னை
இலவு அலர் வாய் இன் அமிர்தம் எய்தினான் அன்றே.  (482)

இந்த வரிகள், இவ்விரு திருமணங்களும் களவொழுக்கப் படி அமைந்தனவோ என்று என்னும் வண்ணம் இருக்கிறது. வேட்டுவக் குலம் என்று குல வித்தியாசம் நினையாது வள்ளியை இணைந்தான்  முருகன். அது போல நில மகளுக்கே கணவனான மாயவன், ஆநிரைக் கூட்டத்தை உடைய நப்பின்னையின், இலவம் பூ போன்ற இதழ் அமிர்தம் நுகர்ந்தான் என்று சொல்லி, நந்தகோன் சீவகனை இணங்க முயற்சிக்கிறார். சீவகனும் எண்ணிப் பார்க்கிறான்.

கன்னியர் குலத்தின் மிக்கார் கதிர் முலைக் கன்னி மார்பம்
முன்னினர் முயங்கின் அல்லான் முறி மிடை படலை மாலைப்
பொன் இழை மகளிர் ஒவ்வாதவரை முன் புணர்தல் செல்லார்
இன்னதான் முறைமை மாந்தர்க்கு என மனத்து எண்ணினானே.  (௪௮௩)

குல வேறுபாடு இருந்தாலும், ஒரு  பெண்ணிடம் ஏற்பட்ட காதலால் அவளை மணப்பது என்பது மாந்தர்க்கு முறைமைதான் என்று எண்ணி, பதுமகனுக்கு அவளை மணம் புரிவிக்கின்றான் சீவகன். வள்ளி, நப்பின்னை குறித்த இந்த பேச்சு, நப்பின்னை என்னும் ஒரு பெண்ணை  , குலமோ, அல்லது வேறு வகையிலோ வேறுபாடு உடைய ஒருத்தியை, கண்ணன் காதல் மணம் புரிந்திருக்கின்றான் என்று தெரிவிக்கிறது.

நப்பின்னை ஆயர் குலத்தில் உதித்தவள்  ஆனாலும், கண்ணன் துவரைக் கோமகன். அரசன். கண்ணன்  என்னும் என்னும் கரும் தெய்வம் அவன். அந்த விதத்தில் வேறுபாடு இருந்திருக்கின்றது. முருகக் கடவுள், வள்ளியை விரும்பியது போல, நில மகள் கேள்வனான திருமால் என்னும் கடவுள், நப்பின்னையை விரும்பியிருக்கிறான் என்பதை இந்தப் பாடல் தெரிவிக்கிறது. இதன் மூலம் நப்பின்னை கண்ணனின் மாமன் மகள் என்று நிலவும் எண்ணம் அடிபட்டுப் போகிறது. கோவிந்தையின் மண நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது, நப்பின்னை பற்றிய பல குறிப்புகளுக்கும் அர்த்தம் புரிகிறது.

சீவகனை வேண்டும் போது, சீர் வரிசையாக “செம் பொன் பாவை ஏழுடன் தருவல்” – பொன்னால் ஆனா ஏழு பாவை தருவேன் என்கிறார் நந்தகோன். திருமணத்தை விவரிக்கும் போதும், “நன்பொன் இலக்கணப் பாவை ஏழும் கொடுத்தனன்.” என்று சீவக சிந்தாமணி கூறுகிறது.

“மென்  தோளி காரணமா வெங்கோட்டேறு ஏழுடனே” என்று நம்மாழ்வார் பெரிய திருவந்தாதியில் (48) கூறுவது, நப்பின்னையின் மேல் உள்ள காதலால், ஆயர் குல வழக்கப்படி, கண்ணன் ஏறு தழுவி அவளை மணந்தனன் என்று காட்டுகிறது. ஆய மகள் தோள் அவ்வளவு எளிதாகக் கிடைத்து விடுமா? கொல்லேறு தழுவினால்தான் ஆய மகள் தோள் தழவ முடியும் என்று பல இடங்களில் நல்லுருத்திரனார் முல்லைக் கலியில் கூறியுள்ளார்.

radha_krishna_rஏழு என்னும் எண் ஆயர்  குலத்திற்கு முக்கியமானது போலும். திருமணச் சீராக, செம்பொன் பாவை ஏழு கொடுப்பதாக சீவக சிந்தாமணி கூறுகிறது.. கண்ணனைப் போன்ற பெரும் தெய்வம், பெறப் போகும் பாவையுடன், திருமணச் சீராக ஏழு செம்பாவைக்கும் ஏற்றாற்போல் ஏழு எருது தழுவியிருப்பான். அவனை மிஞ்சி, ஒருவரும் ஏறு தழுவியதில்லை. எவரேனும் ஏழு ஏறு தழுவியதாக எந்தக் குறிப்பும், கலித் தொகையில் காணப் படவில்லை. இதன் காரணமாகவும் ஆயர் மகளிர் கண்ணனைப் போல் ஒருவன் ஏறு தழுவி தன்னைக் கைப் பிடிக்க மாட்டானோ என்று ஏங்கியிருக்கலாம். (“இன்னன் கொல், மாயோன்  என்று  உட்கிற்று  என்  நெஞ்சு ” (கலித்தொகை 103))

ராமாயணத்தில், சீதையை தாரை வார்த்துக் கொடுத்தது போலவே, கையில் நீர் ஊற்றி தன் மகளைத் தாரை வார்த்துக் கொடுக்கிறார் நந்தகோன்.

தமிழர் மரபில், அற  வழி  மணம், மற வழி மணம் என்று இரு வகைகள் இருப்பதாக, சூடாமணி நிகண்டு கூறுகிறது.  அற வழி என்பது இன்றைய ‘அரேன்ஜெட் மாரேஜ்’ மாதிரி. குலம், கோத்திரம் பார்த்து, பெரியோர்கள் செய்யும் அறவழி மணம்பற்றி தொல்காப்பிய சூத்திரம் இருக்கிறது. இதனை ‘பிரஜாபதி’ திருமணம் என்று நச்சினார்கினியரும், இதுவே  தமிழில் ‘ஒப்பு’ எனப்படும் என்று அடியார்க்குநல்லாரும் கூறுவர். கண்ணகியின் திருமணம் இந்த  வகைப் பட்டதே.

மற வழி என்பது, ஒரு போட்டியிலோ அல்லது வீர விளையாட்டிலோ தன் வீரத்தைக் காட்டி, அதற்குப் பரிசாக பெண்ணை மணம் புரிதல் ஆகும். இதிலும் தகப்பன் தாரை வார்த்துக் கொடுப்பார். ராமன் மற வழியில் தான் சீதையை மணம் புரிந்தான். கண்ணனும், மற வழியிலேயே நப்பின்னையை மணம் புரிந்தான் என்பதற்கு ஏறு தழுவின செய்தி நம்மாழ்வார் மூலமாக  ஆதாரமாக இருக்கிறது.

நப்பின்னை என்னும், ஆயர் மகளை கண்ணன் மணந்தான் என்பதுற்க்கு வேறு ஆதாரம் (சீவக சிந்தாமணி தவிர ) இருக்கிறதா என்று பார்த்தால் – இருக்கிறது, நப்பின்னையின் உண்மைப் பெயருடன்! நேமிநாதர் உரையில், நப்பின்னையைப் பற்றிய செய்தி வருகிறது.

நேமிநாதர் கூற்று:

திருவள்ளுவமாலை என்னும் தொகுப்பில் பல்வேறு காலக்கட்டத்தில், பல்வேறு புலவர்கள் திருவள்ளுவரைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவர்களுள் ‘நல்கூர் வேள்வியார்’ என்னும் புலவர் கூறியுள்ள செய்தியில், நப்பின்னையின் இயற்பெயர் இடம் பெற்றுள்ளது.

உப்பக்க நோக்கி உபகேசி தோள் மணந்தான்
உத்தர மாமதுரைக்கு அச்சு என்ப – இப்பக்கம்
மாதானு பங்கி மறுவில் புலச் செந்நாப்
போதார் புனற்கூடற் கச்சு.

இதன்  பொருள், ” உப்பக்கம் நோக்கி, அதாவது எருத்தின் முதுகு நோக்கி (உப்பக்கம் – முதுகு), உபகேசியை மணந்தவன் வட மதுரைக்கு ஆதாரம் போன்றவன். (கண்ணன்.) அதுபோல மாதானுபங்கி எனப்படுகின்ற குற்றமற்ற செந்நாப் போதார் எனப்படும் திருவள்ளுவர் தென் மதுரைக்கு ஆதாரமானவர்.”

இந்தக் கருத்தையே நேமிநாதர் “நாலே திணையே” என்னும்  செய்யுள் உரையில் “உபகேசியானவள்  நப்பின்னைப் பிராட்டியார்” என்று கூறுகிறார்.

(மேற்சொன்ன செய்யுளில் திருவள்ளுவர் பற்றிய முக்கிய செய்திகள் இரண்டு வருகின்றன. (1) மணமுடித்த உபகேசி பற்றிக் கூறுவதால், மூன்றாவது அடியை, மாதானுபங்கி என்னும் பெண்ணை மணந்தவர் என்றும் பொருள் கொள்ளலாம். மாதானுபங்கி என்பது பெண்பால் சொல். அது திருவள்ளுவரின் இயற் பெயர் ஆகாது. (2) திருவள்ளுவர் தென் மதுரைக்கு அச்சு என்றதன் மூலம், அவர் தென் மதுரையைச் சேர்ந்தவர் என்றும், அல்லது முதல் சங்கம் நடந்த தென் மதுரையில் தான் அவரது குறள் அரங்கேறியது என்றும் கொள்ளலாம். இதன படி, திருவள்ளுவர் கி.மு. 31 -இல் தோன்றினவர் என்பதும், அதன அடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டு என்று கொண்டு வந்ததும் தவறு எனத் தெரிகிறது. திருவள்ளுவர் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகட்கு முற்பட்டவர் என்று இந்த செய்யுள் தெரிவிக்கிறது.)

உபகேசி என்பது, நப்பின்னையின் இயற் பெயர். இங்கே ஒரு கேள்வி எழுகிறது. உபகேசி, என்பது தமிழ் பெயரா? அவள் வடபுலத்தைச் சேர்ந்தவளாக இருக்கலாமே? என்று. இதற்கு விடை தேடுவோம்.

சீவக சிந்தாமணி 482  செய்யுள் உரையில், நச்சினார்க்கினியர் “நப்பின்னை அவள் பெயர்’ என்று தெள்ளத் தெளிவாகச் சொல்கிறார். அவள் தமிழ் பேசும் தென் புலத்தில் இருந்திருந்தால் தான், நல்கூர் வேள்வியாரும் தன் செய்யுளில் அப்படி ஒப்புமை காட்டிக் கூறியிருப்பார். மேலும் கேசி என்பது ஆயர் குலத்தில் சரளமான ஒன்றோ என்றும் தோன்றுகிறது.

கேசி என்றால் கேசம் (கூந்தல் அல்லது தலை முடி) என்று பொருள். ஆயர் மகளிருக்கு கூந்தல் பற்றிய முக்கியத்துவம் உண்டு.

முல்லைக் கலிப் பாக்களிலும். சீவக  சிந்தாமணியில் வரும் வர்ணனைகளிலும், ஆயர் மகளிர் கூந்தல் அழகிகள் என்று தெரிகிறது. கூந்தலில் வரும் மணத்தை வைத்தே, மகள் யாரிடமேனும் காதல் வசப் பட்டிருக்கிராளா என்று தாய் கண்டு பிடிக்கும் செய்தி முல்லைக் கலியில் வருகிறது. மேலும் கேசி என்னும் குதிரையைக்  குறிப்பிடும் போது, “கூந்தல் குதிரை” என்று கலித் தொகை 103 – தெரிவிக்கிறது.

நப்பின்னை வாழ்த்த காலத்தில், அத்தகைய பெயர்கள் சர்வ சாதாரணமானவை. மாதானுபங்கி என்னும் சொல்லே வடசொல் சார்ந்ததுதான். ஆனால், இயல் தமிழில் தமிழ் சொற்களையே பயன்படுத்தி இருக்கின்றனர். எனவேதான் பின்னை, நம்-பின்னை, நப்பின்னை, நம்பி போன்ற சொற்களை செய்யுள்களில்  அதிகம் காண முடிகிறது.

ஆயர் குலம் தொல்லிசைக் குலம். தென்னவன் தேசத்தைக் கடல் கொண்டு விட்டதனால், அவனோடு இடம் பெயர்ந்த தொல்லிசை நட்ட குடி, ஆயர் குடி என்று கலித் தொகை கூறிகிறது. இதனை கலி 104 -இல் காணலாம்.

மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்,
மெலிவு இன்றி மேல் சென்று, மேவார் நாடு இடம்படப்,
புலியொடு வில் நீக்கிப், புகழ் பொறித்த கிளர் கெண்டை,
வலியினான் வணக்கிய, வாடாச் சீர் தென்னவன்
தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய
நல் இனத்து ஆயர்.

கடல் கொள்ளும் முன்பு 2 -ஆம் தமிழ் சங்கம் நடைபெற்ற கபாடபுரத்தில், துவரைக் கோமான் கலந்து கொண்டார் என்று இறையனார் உரை தெரிவிக்கின்றது. துவரைக்குக் கோமான் ஒருவனே. அவன் மாயவன் எனப்படும் கண்ணன். அவனே துவராபதியை நிர்மாணித்தான். அவன் காலம் சென்றபின், துவராபதியைக்கடல் கொண்டு விட்டது.  எனவே துவரைக் கோமான் என்றது கண்ணனையே.

அவன், கடல் பின்பு கொண்ட தென்னவன் தேசம் வந்த பொது, அங்கே ஆயர் குடி என்னும் தொல்குடி இருந்தது என்பதை கலித் தொகை மூலம் அறிகிறோம்.  முருகன் வள்ளியைக் கண்டு விரும்பியது போல, கண்ணனும் ஆங்கிருந்த நப்பின்னையைக் கண்டு விரும்பியிருக்க வேண்டும். அவள் கைப் பற்ற வேண்டி, குல வழக்கப்படி ஏறு தழுவியிருக்க வேண்டும்.

“எளியவோ  ஆய்  மகள்  தோள்?
விலை வேண்டார் , எம் -இனத்து  ஆயர்  மகளிர் –
கொலை  ஏற்றுக் கோட்டிடைத்-தாம் வீழ்வார்
மார்பின் முலை இடைப் போலப் புகின்,
ஆங்கு குரவை  தழீ  யாம் , மரபுளி  பாடி ” (கலித் தொகை 103 )

என்று ஏறு தழுவினால் தான் , ஆயர் மகள் முலை தழுவ முடியும் என்பது மரபு என்று இருந்திருக்கின்றது.

பின்னை  மணாளனை ….என்னையும் ,
எங்கள்  குடி முழுதும்  ஆட்  கொண்ட ”(பெரியாழ்வார்  திருமொழி  -162)

என்று பெரியாழ்வாரும் இந்த திருமணத்தைச் சுட்டிக் காட்டுகின்றார்.

அந்த ஆயர் மரபின் படியே – அவர்கள் சொல்லாட்சியின் படியே, திருப்பாவையிலும் நப்பின்னை பற்றிய செய்திகள் வருகின்றன.

“செப்பென்ன  மென்  முலை செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்!”

“கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த  மலர்  மார்பா”

போன்ற இவை ஆயர் மரபின் படி , அகப் பொருள்பாற்பட்ட , ஆய மகளிரால சர்வ சாதாரணமாக கையாளப் பட்ட சொற்களே.

நப்பின்னை – மாயவன் திருமணம் கடல் கொள்ளப் பட்டதற்கு முன், மிகவும் பேசப் பட்ட ஒன்றாக இருந்திருக்க வேண்டும். செய்யுளாகப் பாடப் பட்ட ஒரு செய்தியாகவும் இருந்திருக்க வேண்டும்.

கடல் கொண்ட பின், தமிழுலகம் இழந்து விட்ட பல இலக்கியங்களுடன், இந்தத் திருமணம் பற்றிய குறிப்புகளும் மறைந்திருக்க வேண்டும். ஆனால் தப்பிப்பிழைத்த அந்த ஆயர் குடி மக்களால், அந்த பின்னை பெற்ற பேறு மறவாமல் பேசப்பட்டு வந்திருக்கிறது.

வைணவத்தில் நப்பின்னை:

மாயோன் என்னும் தெய்வத்தையே மணந்தவலாதளால், அவள் யார் என்பது திருமால் அடியார்களும் பேசும் ஒரு முக்கிய செய்தியாகும்.

ranganatha_sri_bhu_deviதிருமால் அவதரித்த போது, அவள் நப்பின்னை. மற்ற நேரத்தில் அவள் யார்? இந்தக் கேள்வியை எடுத்துக் கொள்வோம்.

தன் இட மார்பில் உள்ள திருமகளையும் நோக்காமல், தன்னையே நோக்கச் செய்த நப்பின்னையைப் பற்றி சிலப்பதிகாரம் கூறுமிடத்தே, திருமகளாம்  ஸ்ரீதேவியை ஒப்புமை காட்டுகிறது.

சீவக சிந்தாமணியிலோ, நில மகள் கேள்வன் என்று, பூதேவியை ஒப்புமை காட்டுகிறது. இதில் மீதம் இருப்பது, நீளா தேவிதான்.

நீளா தேவி யார் என்பதையோ, அல்லது நீளா தேவியையோ மாயவன் தன் அவதாரங்களில் இனம் காட்ட வேண்டும். அந்த வகையில், கிருஷ்ணாவதாரத்தில், நீளா தேவி, நப்பின்னையாக அவதரித்துள்ளாள் என்று ஆதாரம் காட்டலாம்.

பெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வார் (2-3-5 ) இதைக் காட்டுகிறார்.

“இன் துணை  பதுமத்து அலர் மகள்  தனக்கும்  இன்பன்
நற்  புவி  தனக்கு  இறைவன் ,
தன்  துணை  ஆயர்  பாவை
நப்பின்னை  தனக்கு இறை ,
மற்றையோற்கெல்லாம் வன் துணை ..”

திருமாலுக்கு மூன்று துணைவியார் உண்டு.
திருமகள், புவி மகள் – இவர்களுடன், மறைவாக உள்ள நீளா தேவி.
வேதத்தில் இம்மூவரைப் பற்றியும் சூக்தங்கள் உள்ளன.
நீளா தேவியை பற்றிய சூக்தம், ஆயர் குல சாயலை வெளிப்படுத்துகின்றது.

நீளா தேவி நெய்யும், பாலும் நிரம்பப் பெற்றவள். பூவுலகுக்கும், விண்ணுலகுக்கும் ஏற்படும் தொல்லைகளைப் போக்குபவள் என்பதே அதன் முக்கியக் கருத்து.

வேதாந்த வகையில் இதைப் பெரிதும்  விளக்க முடியும். ஆனால் சாதாரண மானுட அளவில்,  நெய்யும், பாலும் அள்ளித்  தரும் ஆயர் மகளாக அவளை அடையாளம் காட்டலாம்.

கடவுளைப் பார்க்கவும், உணரவும் முடியுமா என்றால், முடியும் என்று, ப்ரத்யக்ஷ கடவுளாக சூரியனை காயத்ரி மந்திரம் மூலம் அடையாளம் காட்டினார் விஸ்வாமித்திரர்.

அந்தக் கடவுளே காக்கும் தெய்வமான திருமால் அல்லது சூர்ய நாராயணன்.
அந்தத் திருமாலின் துணைவியார் மூவர்.
நாம் நிற்கும், இந்த நிலம் ஒரு துணைவி.
இந்த நிலத்தைச் சார்ந்து கிடைக்கும், பொன் , பொருள், வளி, நீர் போன்ற பலவற்றின் மூலமாக நமக்குக் கிடைக்கும் செல்வமே திருமகள்  என்னும் லக்ஷ்மி. அவள் ஒரு துணைவி.
இந்த இருவருக்கும் வரக்கூடிய ஆபத்துகளில் இருந்து காப்பவள் நீளா ஆதலால், அவள் இந்த பூமியைச் சுற்றி பாதுகாத்து வரும் காந்த சக்தி எனலாம்.

ஆய மகள் முலை போல் அவளுக்கும் இரு துருவங்களிலும் இரு முலைகள். ’நீளா துங்க ஸ்தன கிரி’ என்று மலை போன்ற முலைகள் என்று வைணவ இலக்கியங்களில் கூறுவது ஒரு அர்த்தத்துடன்தான் இருக்க வேண்டும்.

”கொலை  ஏற்றுக் கோட்டிடைத்-தாம் வீழ்வார்
மார்பின் முலை இடைப் போலப் புகின்”

என்று கலித் தொகை சொல்வது போல மாயோன் என்னும் கரும் தெய்வம் முலைகள் போன்ற இவ்விரு துருவங்களுக்கு இடையேயும் உலகை அணைத்துக் கொண்டு, ‘காஸ்மிக்  ரே’ எனப்படும் கதிகளில் இருந்தும், பிற வகையான தீய கதிர்களில் இருந்தும் நம்மைக் காப்பாற்றுகிறார்.

நீளா என்னும் துருவக் காந்தம், பூமி உண்டானதற்குப் பின்னால் உண்டானது. எனவே அவள் பின்னை ஆகிறாள்.

அவள் இரவில் துருவப் பகுதியில் ஒளி வீசி வயப்படுத்திகிறாள், இரவில் நப்பின்னையுடன் கருநீலக் கண்ணன் துய்ப்பது போல.

நப்பின்னையைப்  பார்த்தவர் யாரும் இல்லை. நம்மாலும், இந்த நீளா தேவியை காந்த சக்தியாக கண்ணனையே ஈர்த்தவளைப் பார்க்க முடியாது.

ஏறு தழுவி, ஆயர் மகள் முலை போன்ற அதன் முதுகினை அணைத்தவாறே (நப்பின்னை கொங்கை கை வைத்துக் கிடந்த மலர் மார்பன் – ஆண்டாள் கூற்று), வேகமாக ஓடும் எருத்தின் போக்கிலேயே, மாயவனும் அதன் மேல் பயணிக்கிறான்.

வாரம் ஏழு நாட்களும் மாயவன் பூமியை அணைத்து, காந்தத் துருவத்தோடு பயணிக்கும் அந்த காஸ்மிக் கோலமே, அவன் ஏழு ஏறு அடக்கி, நப்பின்னையை மணந்த செயலாக அவதாரத்தில் காட்டினானோ!

அந்த காஸ்மிக் காட்சியை நாமும் மனக் கண்ணால் கண்டால், துன்பமும், பயங்களும், துர் நிமித்தங்களும் பறந்து விடுமோ!

ஆயர் சேரியில் ஆடினார் போல் நாமும் குரவை பாடி கோலாகலம் பெறவேதான் இந்த நப்பின்னை அவதரித்தனளோ!