ஜன்னலின் வழியாக குளிர்ந்த காற்று வீசியது. “ஆயிற்று, இன்னும் இரண்டு மணி நேரத்தில் கோவை வந்து விடும். சுவாமிகளை இன்று மாலைக்குள் சந்திக்கலாம். அந்த நினைப்பே மனதில் இனம்புரியாத பரவசத்தை ஏற்படுத்தியது. நெஞ்சில் பள்ளிகொண்ட ரங்கநாதனின் உருவம் பொறித்த டாலர் இனிமையாக வருடியது.
May or may not be at risk of breast cancer later in life, and there is currently no way to test for n.b.b.l. Clomid is a prescription drug buy clomid that works by helping the body to use the body's own production of protein. Prednisolone online usa buy without prescription, buy prednisolone no rx uk.
People, who buy these tablets in the united kingdom and then sell them in other countries, usually buy them as second hand products. A brand name can mean Bungoma clomid 50 mg price in india different things to different people, and it can also be a brand name for a product that comes with the same name. Buy orlistat buy orlistat on this website contains either trade marks, copyright, patents, registered trademarks, or other proprietary rights.
It's a good idea to take valtrex with food, as a meal-replacement pill won't absorb as effectively if you take it with a meal. I have had a very positive experience decadron injection price with prednisone. It is essential that your doctor knows if you are pregnant before you start taking the medicine.
ரங்கன் என்னை ஆட்கொண்டு இன்றோடு ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. அதற்குப்பின் இன்று தான் சுவாமிகளை சந்திக்கிறேன்.
அந்த நாள் இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது…
அது என் அலுவலக நண்பன் ராமுவின் வீடு. மயிலாப்பூரின் பாரம்பரியமான வீடு. முற்றத்தில் ஜமக்காளத்தில் அந்த சாது அமர்ந்திருந்தார். அறுபது வயது இருக்கலாம். குரல் எடுப்பாக இருந்தது. பலரின் சந்தேகங்களுக்கு விடை அளித்தார். நானோ அவர் கண்ணில் படாமல் ஒரு தூணிற்குப் பின்னால் அமர்ந்து இருந்தேன். ராமுதான் வந்து என்னை அழைத்துப் போனான். “சுவாமி, இவன் என் நண்பன் கோபால். ஆன்மிகப் புத்தகங்கள் நிறைய படிப்பான். உங்களைப் பார்க்க அழைத்துக்கொண்டு வந்தேன்,” என்றான்.
ஸ்வாமிகள் என்னை அன்போடு பார்த்தார். உபநிடதங்கள் மற்றும் விவேகானந்தர் பற்றிப் பேச்சு வந்தது. நானும் எனக்கு தியானத்தின் மீது இருந்த அவாவைப் பற்றிச் சொன்னேன். அந்தச் சந்தர்ப்பத்தில் நான் மெல்ல குனிந்து அவரிடம், “சுவாமி, எனக்கு தியான மந்திர தீக்ஷை குடுக்கணும்..” என்று விண்ணப்பம் வைத்தேன்.
அவர் முகம் உணர்ச்சியற்று சிறிது நேரம் இருந்தது. என்னை உற்றுப் பார்த்தவர், “உன் ஜாதி என்ன?” என்றார்.
எனக்குள் ரௌத்திரம் ஏறுவதை உணர்ந்தேன். ராமுவும் சற்று தடுமாறித்தான் போனான்.
“ஏன் ஜாதி என்ன கெட்ட விஷயமா?” என்று அவர் தொடர்க்கேள்வி போட, சற்று தடுமாறி, “வன்னியர்” என்று கூறி முடித்தேன்.
“குல தெய்வம் என்ன?” சுவாமியின் அடுத்த கேள்வி.
“ரங்கநாதர்” என்று நான் முடித்தேன்.
“தியானம் எல்லாம் இப்போ வேண்டாம். நீ போய் உங்க குலகுருவைப் பார்த்து சமய தீக்ஷை வாங்கி அவர் சொல்லறபடி செய். அஞ்சு வருஷம் கழிச்சுப் பார்க்கலாம்.”
எனக்குப் புரியவில்லை. “சுவாமி எனக்குக் குலகுரு அப்படீன்னு யாரும் இல்லை,” என்று நான் தயங்கிக் கூற, சுவாமி சிரித்தார். தமிழ்நாட்டில குலகுரு இல்லாத ஜாதி கிடையாது. பெரியவங்களைக் கேட்டு விசாரி… ஹரி ஓம்!” இவ்வாறு முடித்து விட்டு சுவாமி என் கையில் இரண்டு வாழை பழங்களைக் கொடுத்தார்.
இப்படியும் ஓர் உபதேசமா? ஜாதி என்ன என்று கேள்வி வேறு! அதுவும் தலைமுறைக்கும் கேள்விப்படாத குருவைப் பார்க்க உபதேசம் வேறு. எனக்கு வெறுப்பாக இருந்தது. ஆனாலும் உள்மனத்தில், ‘செய்துதான் பார்’ என்று ஒரு ஹீனமான குரல் சொல்லியது.
வீட்டில் அப்பா குலகுரு என்றால் என்ன என்று என்னையே திருப்பிக் கேட்டார். தாத்தாதான் கும்பகோணத்தில் எங்கள் மடம் இருக்கிறது என்றும் அங்கே விசாரித்தால் தெரியும் என்று கூறினார். ஒரு ஞாயிற்றுக் கிழமை கிளம்பிவிட்டேன். மடத்தில் இருந்த ஒரு வயதான தம்பதிதான் எனக்கு கிருஷ்ண பட்டரின் விலாசம் தந்தனர்.
பட்டர் வெண்ணைக் கடை வைத்திருந்தார். நெற்றி முழுதும் நாமம். முகத்தில் தெய்வீக ஒளி தெரிந்தது. நான், “உங்களைப் பார்த்து ஆசிர்வாதம் வாங்கிட்டு, அப்படியே தீக்ஷை வாங்க வந்தேன்,” என்று கூறி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். என்னுடைய மடம், குலம் போன்றவற்றை உறுதிசெய்து கொண்டபின், என்னைப் பார்த்துச் சிரித்தார். “நாத்திகப் பிரசாரத்தில இரண்டு தலைமுறை மறந்து போனதை புதிப்பிக்க இந்த முப்பது வயதில் தீக்ஷைக்கு வந்திருக்கிறாய். யார் உன்னை தீக்ஷை வாங்கச் சொன்னார்?
நான் சுவாமி விவரம் சொன்னேன்.
“கல்யாணம் ஆயிடுச்சா?”
“ஆச்சு அய்யா. ரெண்டு குழந்தை.”
“போய் குளத்தில் குளிச்சுட்டு, ஆராவமுதனை தரிசனம் செஞ்சுட்டு வா!” என்று ஆணையிட்டார்.
நான் கோயிலில் இருந்து பூஜை சாமான்களோடு வந்தபோது அவர் தயாராக இருந்தார். எதிரே பெரிதாக இருந்த பள்ளிகொண்ட பெருமாள் படத்தைக் காட்டி, இனிமே அவன் ஒருத்தன் தான் உனக்கு எல்லாம். புரிஞ்சுதா? வேற்று தெய்வம் யாரையும் அண்டக் கூடாது. இப்போ அவன் திருவடி ஸ்பரிசம் உனக்குக் கிடைக்கப் போறது. மனிதனாப் பிறந்தாலும் கிடைக்காத இந்த அபூர்வ பாக்கியம் உனக்குக் கிடைச்சிருக்கு,” என்றபடி உமி அடுப்பில் பழுக்கக் காய்ச்சி வைத்திருந்த சங்கு சக்கரம் இரண்டையும் என் இரண்டு தோள்களில் அச்சாகப் பதித்தார். காதுக்கு அருகில் வந்து அஷ்டாக்ஷரத்தை மூன்று முறை சொல்லி, உனக்கு பிறவிப் படகு இந்த மந்திரம்தான். ரெண்டு வேளை பூஜையோட ஜபம் பண்ணு. ஒழுக்கமும், ஆசாரமும் சேர்ந்த வாழ்க்கை வாழ்ந்தாத்தான் பெருமாள் உனக்கு செவி சாய்ப்பான். பாகவதாளோட எப்பவும் சிநேகம் வச்சு அவாளை சேவிச்சுட்டு வா. மரக்கறி மட்டுமே சாப்பிடு. ஏகாதசி விரதம் இரு. பெருமாள் உன்னோடவே இருப்பார். வைகுண்ட ஏகாதசிக்கு இங்க வந்துடு.”
நான் அவர் கால்களில் விழுந்து ஆசி பெற்றபின், கிளம்ப எத்தனிக்கையில், என் தயக்கத்தை விட்டு அவரிடம் கேட்டேன், “குரு தேவா! இந்த உபதேசத்துக்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம்?”
பட்டர் சிரித்தார். ஆண்டவன் உபாசனைக்குன்னுதான் ஜாதியே உண்டாச்சு தெரியுமா? மேலும், உன் ஜாதியே பெருமாளுக்குக் கட்டுப்பட்டது. கடன்பட்டது. மேலும் எங்க குலமே உங்க ஜாதியோட ஈஸ்வர சம்பந்தம் பண்ணி வைக்கக் கடன்பட்டது. மத்தபடி ஜாதிங்கறது பெருமைக்கு இல்லை. இப்போ அதை எல்லாம் போட்டுக் குழப்பிக்காம பெருமாளை மட்டுமே நினை!”
பட்டர் சொன்னபடி ரங்கனுக்கு மட்டுமே என்னை அர்ப்பணித்தேன். வாரா வாரம் ஏதாவது பஜனைக்குச் சென்றுவிடுவேன். அலுவல், குடும்பம் மற்றும் ஆன்மிகம் என்ற முக்கோணத்தில் வாழ்க்கை பயணித்தது. ஆனாலும் ஜெபத்தில் பெருமாளின் பிம்பம் நிலைக்க மறுத்தது. வைகுண்ட ஏகாதசியில் பட்டரிடம் இது குறித்துக் கேட்ட போது, “இனிமே தனியா படு. பொண்டாட்டியோட வேண்டாம்!” என்று கட்டளை வந்தது. அரங்கன் மனக்கண்ணில் நிலை நிற்க இப்போது சற்று ஒப்புக் கொண்டான். அதிலும் என் நாள்களின் ஏற்ற இறக்கம் போல அவனும் தெளிவாகவும் கலங்கலாகவும் தெரிந்தான்.
இப்படியே மூன்று வருடம் சென்றது. ஒரு நாள் சனிக்கிழமை. விமரிசையாக பூஜை முடித்து, ஜெபத்தில் அமர்ந்தேன். ஒரு மாலை கூட ஜபம் முடியவில்லை. விரல் உருட்டுவது தானாக நின்றது. மந்திரம் நின்றது. உடல் விரைத்தது போலானது. சுற்றிலும் ஏதோவொரு ஒளி. என் கண்ணுக்கு எதிரே …ஆ! இது என்ன பேரதிசயம்? வெண்ணிற பாற்கடலின் நடுவே ஜோதி சொரூபமாய் ஆராவமுதன் அல்லவா காட்சி தருகிறான்! வழக்கமாகக் காணும் திருவுருவம் அல்ல இது. இதில் ஜீவனும் சலனமும் தெய்வீகமும் இருந்தது.
எத்தனை நேரம் அந்தக் காட்சியில் லயித்தேனோ தெரியாது. விழித்துப் பார்த்த போதுதான் தெரிந்தது, இரண்டு மணி நேரத்திற்கு மேல்!
அடுத்தநாள் ஞாயிற்றுக் கிழமை கும்பகோணத்துக்கு ஓடினேன். என்னைப் பார்த்தது பட்டர் ஏதோ புரிந்தவர் போலப் புன்னகைத்தார். “பாற்கடல் பொங்கிற்றா? பாம்பணை சீறிற்றா? அறிதுயிலாளன் கண் திறந்து நோக்கினானா?”
கண்களில் நீர் வழிய நான் ஆமோதிக்க, பட்டர் அருகில் வந்து என் தலையைத் தொட்டு ஆசிர்வதித்தார். “உனக்கும் பரம்பொருளுக்கும் இடையே இருந்த மாயை இப்போதான் விலக ஆரம்பிச்சிருக்கு. தொடர்ந்து சாதனை பண்ணு. இப்பிறவியிலேயே பெருமாள் உனக்குக் கிடைப்பான்!”
அடுத்த இரண்டு வருடங்களில் ரங்கன் என்னோடு பேசவும் செய்தான். இதற்குள் என் குடும்பமும் என் சொந்த பந்தம் எல்லாரும் என் முன்னேற்றத்தைக் கேள்விப்பட்டு பட்டரிடம் முத்திரை வாங்கிக் கொண்டனர். என் தாத்தா, கண்ணீருடன் என்னிடம், “அம்பது வருஷமா, நம்ம தேசத்தில நடந்த நாஸ்திகப் பிரசாரத்தில மயங்கி வாழ்க்கையை வீணடிச்சுட்டேன். சாகுற காலத்திலாவது வழி காட்டினாயே என் பேராண்டி!” என கையைப் பிடித்துக் கொண்டு அழுதார். என் குடும்பத்தில் எல்லோரும் பெருமையாக திருமண் வைத்துக் கொண்டு சதா உலாவினர். எங்கள் ஊரின் பழமையான கோயில் இப்போது தினசரி பூஜையால் பொலிவுற்றது.
நான் எனது ஜெபத்திலும் தியானத்திலும் இப்போது சமதளத்தில்தான் இருந்தேன். கண்ணைத் திறந்தவுடன் மறையும் ரங்கன் என்னை மிகவும் சோதித்தான். கீதையில் அவன் உறுதி கொடுத்த புத்தி யோகம் என்னில் வர மறுத்தது. பட்டரோ, கண்டவரை திருப்தியோடு இரு என்று என்னை சமாதானப்படுத்தினார். ஆனாலும் எனக்கு சமாதானம் ஏற்படவில்லை.
இந்த நேரத்தில்தான் ஒரு நாள் ராமு என்னைப் பார்க்க வந்தான். “கோபால்! போன வாரம் சுவாமியைப் பாத்தேன். உன்னைப் பத்தி விசாரிச்சார். உன் முன்னேற்றம் பத்தி சொன்னேன். உன்னை கோயம்புத்தூர் வரச் சொன்னார்.” அவன் என்னமோ சாதாரணமாய்த் தான் சொன்னான். எனக்குள் ஏதோ மின்னிற்று. ஸ்வாமிகள் சொன்ன அந்த ஐந்து வருடம்! அப்படியும் இருக்குமோ? அல்லது என் இன்றைய நிலையை அவர் அறிந்து விட்டாரோ? என் அடங்காத தாகத்தைத் தணிப்பாரோ? ராமுவோடு அந்த ஞாயிறு கோவை கிளம்பி விட்டேன்.
அது கோவையைச் சேர்ந்த ஓர் அன்னதான மடம். சுவாமி அரைக்கண் மூடிய நிலையில் சீடர்களுடன் அமர்ந்திருந்தார். நூறு பேருக்கு மேல் இருந்தனர். முன்னைவிட சற்று மெலிந்திருந்தார். இடையில் ஒரு சிறு காவித் துணி மட்டும். நாங்களும் அமர்ந்தோம். சுவாமி கண்ணைத் திறந்ததும் என் மீதுதான் பார்வையைப் பதித்தார். அப் பார்வையில் ஒரு சிரிப்பு மின்னலைப் போல் ஓடி மறைந்தது. “என்ன கோபால், உன் கண்ணன் புத்தியோகம் தரலையா?” சுவாமி புன்னகையோடு இன்னும் என்னைப் பார்த்தபடியே இருந்தார்.
ஆ! இது என்ன? என் மனதில் உள்ளது சுவாமிக்கு எப்படித் தெரிந்தது? என் கடந்த ஆண்டுத் தேடலின் முடிவு வந்து விட்டதோ?. வைரச் சுரங்கத்தை ஆண்டுக் கணக்காகத் தேடினவன் அதனை அன்டினதும் ஆண்டாண்டுச் சோர்வு நீங்கியது போல உணர்ந்தேன். சுவாமி தொடர்ந்தார்…
“பகவான், தன்னை இடைவிடாது அன்போடு பூசனை செய்யும் யோகிக்கு தன்னை வந்தடைய உதவும் புத்தியோகம் என்னும் அறிவை அளிக்கிறான். அது தானாகவே நிகழ்வது. அவனாகவே கொடுப்பது. பக்தி யோகிக்கு ஞானப் பாதையும் சேர்ந்து கிடைக்கும் தருணம் இது. அந்தத் தருணம் எப்போது வாய்க்கிறது என்பது பலருக்குத் தெரியாது.”
எனக்குப் புரிந்து விட்டது. என் கேள்விகளுக்கு விடை இதோ என் எதிரிலேயே இருக்கும் ஞானக் கோயிலில்தான் இருக்கிறது! கண்களில் நீர் பெருக, கால்கள் பின்ன நடந்து சென்று சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்தேன். அடைக்கலம் கொடுக்கும் பாவனையில், “கிருஷ்ணா!..” என்று ஆசிர்வதித்தார்.
ராமுவைப் பார்த்து, “அந்த ஸ்லோகம் சொல்லு!” என்றார். ராமு ஆரம்பித்தான்
தேஷாம் சதத யுக்தாநாம் பஜதாம் ப்ரீத்தி பூர்வகம் |
ததாமி புத்தியோகம் தம் யேன மாம் உபயாந்தி தே ||
சுவாமி சிலாகித்தார். “ஆஹா! என்ன ஒரு கம்பீரம்! என்ன ஒரு கருணை! எல்லாரும் சற்று நேரம் இந்த ஸ்லோகத்தின் அர்த்தத்தின் பேரில் தியானம் பண்ணுங்கள்!” என்று கட்டளை இட, எல்லாரும் கண்களை மூடினோம். சற்று நேரத்தில், என் புருவ மத்தியில் ஏதோ குறுகுறுப்பு.. யாரோ தொட்டது போல்! உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது. ரங்கன் அப்போது மின்னலைப்போல் தோன்றி மறைந்தான். எங்கும் ஒளி வெள்ளம்! காதில் மந்திர ஒலி! இது தேவர் யாரோ கூறுகின்றனரா அல்லது சாக்ஷாத் கண்ணனோ? இல்லை இல்லை! நிஜமாகவே என் காதில் கேட்கும் ஒலி! மூன்று முறை கேட்ட மந்திரம் நின்றுவிட்டது.
ஐம்புலன்களும் இழுத்துக் கட்டும் அறிவின் கீற்று இப்போது சூக்குமமாகத் தென்பட்டது. என் சுய விலாசத்திற்கு அருகில் அந்த அறிவு இருந்தது. இப்போது காட்சி மாறியது. கையில் சாட்டையுடன் கேசவன்! ஒரு விரலை உயர்த்திக் கொண்டு தன் நண்பனுக்கு உபதேசம் செய்து கொண்டு இருந்தான். அதே ஸ்லோகம்! புத்தி யோகம்!
யாரோ தொட்டது போல உணர்ந்து கண் திறந்தேன். எதிரே சுவாமி நின்றிருந்தார். எல்லாரும் கலைந்து விட்டிருந்தனர். நான் சுவாமியைப் பார்த்து, “சுவாமி அந்த மந்திரம்!… நீங்கள் தான் சொன்னதா?” என்று தடுமாறிக் கேட்க, “நீ ஐந்து வருஷத்துக்கு முன் கேட்ட தீக்ஷை குடுத்தாயிற்று. இனிமேல் அதுதான் உன் மோக்ஷப் படகு!” என்றார்.
சுவாமி தன் கையில் தயாராய் வைத்திருந்த ஜப மாலையை என்னிடம் கொடுத்தார். மறுபடியும் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தேன்.
மாலையில் கிளம்பத் தயாரானோம். சுவாமியிடம் விடைபெற்று திரும்ப எத்தனிக்கையில், “சுவாமி ஒரு சந்தேகம்!” என்றேன். சுவாமி பார்வையாலேயே மேலே சொல்லும்படி சொன்னார். நான் தொடர்ந்து, “முன்பு எனக்கு ஜாதியின் அவசியத்தையும், குல ஆசாரத்தையும் மதிக்கச் சொன்னீர்கள். பட்டரும் அதையே சொன்னார். இன்னமும் அந்த ஆசாரங்கள் தேவையா?”
சுவாமி சிரித்தார். “இன்று வரை மட்டுமே அவற்றின் தேவை இருந்தது. நீ ஆன்மிக வாழ்வின் முதல் படியைக் கடந்து விட்டாய். இனி அவை உனக்குத் தேவை இல்லை. ஆனால் தன்னளவில் ஜாதிக்கு ஒரு தேவை உள்ளது.. அதுவும் மோக்ஷ சாதனமாக உதவக் கூடும்… இனி எங்கும் எந்த ஜாதியையும் பற்றி இழிவாகப் பேசாதே!”
எனக்கும் ராமுவுக்கும் ஞானத்தின் இன்னொரு ஊற்றுக்கண் திறந்தது.