இரண்டெழுத்து அற்புதம்

கம்பன் எனும் காவியச் சோலையில் பூத்துக் குலுங்கும் சொற்பூக்களும் பழுத்துக் குலுங்கும் சொற்கனிகளும் ஏராளம், ஏராளம். அவற்றின் வண்ணமும் வாசமும் கண்ணைக் கவரும். கருத்தை ஈர்க்கும். சொற்பூக்கள் கண் சிமிட்டும்; இள நகை சிந்தும்; தீயும் சொரியும்; தென்றலாய் வருடும்; புயலாய்த் தாக்கும்; சொற்கனிகள் அமுதாய் இனிக்கும், கனிச்சுவையில் நவரசங்களும் சொட்டாது – கொட்டும். வார்த்தைகளைத் தேடிக் களைத்து தன்னை வஞ்சித்துவிட்டு ஓடிவிடுவதாக ஷெல்லியைப் போல் கம்பன் வார்த்தைக்காகத் தவம் கிடக்கவில்லை, வார்த்தைகள் அவனைக் காதலித்தன. வரிசையாக நின்று அவன் கவிதையில் இடம் பிடிக்க முண்டியடித்து முன்னே வந்தன. கவிதையின் அழகெல்லாம் ஒன்று திரண்டு ஒரே ஒரு சொல்லில் பூத்துக் குலுங்க வைப்பது கம்பன் கலை.

View More இரண்டெழுத்து அற்புதம்