காவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்

ஆறு வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது என்பதே தவறு. இது முழுக்க முழுக்க தமிழ் மீடியாக்களின் புரிதலில் ஏற்பட்ட கோளாறு அல்லது விஷமப்பிரச்சாரம். உச்சநீதிமன்றம் ஆறுவார காலத்தில் ஒரு செயல்திட்டத்தை [ ஸ்கீம் ] உருவாக்கச்சொன்னது. அவ்வளவுதான். இதை ஆரம்பம் முதலே மக்களிடமும் மீடியாக்களிடமும் தெளிவாக விளக்காதது தமிழக பாஜகவின் தவறு.. அதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்கள் வசம் உள்ள அணைகளின் கட்டுப்பாட்டை நதிநீர் ஆணையத்தின் வசம் ஒப்படைக்க ஒத்துக்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட எந்த மாநிலமும் இதற்குத் தயாராக இல்லை. கர்நாடகம் , ஆந்திரம் , கேரளம் மட்டுமல்ல, தமிழகமே அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை… காரணம் , அணைகள் வாரியத்திடம் சென்றால் அணைகளில் உள்ள தண்ணீர் விவசாயத்திற்கு மட்டுமே விநியோகிக்கப்படும்… இருக்கும் ஏரி , குளங்களையெல்லாம் ஆக்கிரமித்துவிட்டு ,குடிநீர் தேவைக்காக பலநூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நகரங்களுக்கு குழாய் மூலம் நீர் எடுத்துச்செல்லும் வேலையெல்லாம் நடக்காது. மேலும் அணையை திறந்துவிட மாண்புமிகு முதலமைச்சர் தாயுள்ளத்துடன் உத்தரவிட்டார் என்று செய்தி வெளியிட்டு புளகாங்கிதப்பட்டுக்கொள்ளவும் முடியாது…

View More காவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்

நில உச்சவரம்புச்சட்டமும் இந்திய விவசாயமும்

கொங்கு வழக்கில் முட்டுவழி என்பார்கள். அதாவது முதலீடு. நிலத்தின் அளவு அதிகமாகும்போது முட்டுவழி குறைவதும், குறைவான நிலப்பரப்புக்கு முட்டுவழி அதிகமாவதும் இயற்கை. உலகில் எல்லா தொழில்களுக்கும் பொதுவான நியதி இதுதான்… கார்ப்பரேட்டுகள் விவசாயத்தின் எதிரிகள் அல்ல. உண்மையில் அவர்கள் வருகைக்குப்பிறகே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. சேலம் தர்மபுரி பகுதியைச்சேர்ந்த மாம்பழ விவசாயிகள் காலம் காலமாக உள்ளூர் வியாபாரிகளால்வஞ்சிக்கப்பட்டு வந்தனர். மாம்பழச்சாறு தயாரிக்கும் நிறுவனங்கள் வந்த பிறகுதான் அவர்கள் நிலை மேம்பட்டது. குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இன்று எந்த கார்ப்பரேட்டுகளை கரித்துக்கொட்டுகிறோமோ, அவர்கள்தான் இனி விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றப்போகிறார்கள்…

View More நில உச்சவரம்புச்சட்டமும் இந்திய விவசாயமும்

பசுவதைத்தடை – அருந்ததியர்: சிந்திக்கவேண்டிய ஒரு விஷயம்

மொகலாயர் காலம் தொட்டு பல நூற்றாண்டுகளாக , பல்வேறு சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாகியும் ஹிந்துக்களாகவே நீடிப்பதுதான் மாபெரும் சாதனை. தங்கள் ஸ்வதர்மத்தின் மீதான அவர்களின் பற்று போற்றுதலுக்குரியது. அப்படிப்பட்ட சாதியினர்களில் மிக முக்கியமானவர்கள் அருந்ததியர்கள். வருடம் தோறும் கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து பழனி முருகனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். எங்கள் ஊர் மாரியம்மன், மற்றும் பகவதியம்மன் திருவிழா நடைபெறும்போது தங்கள் தெருவில் இருந்து ஊர்வலமாக மாவிளக்கு எடுத்துவந்து வழிபடுவார்கள். அவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள்….

View More பசுவதைத்தடை – அருந்ததியர்: சிந்திக்கவேண்டிய ஒரு விஷயம்

நதிநீர் தாவாக்களில் வஞ்சிக்கப்படும் தமிழகம்: தீர்வு என்ன?

மாநிலக் கட்சிகள் பிராந்திய நலனை மட்டுமே மனதில் கொண்டு அரசியல் செய்வதில் ஆச்சரியமில்லை. அவர்களின் அரசியல் ஒரு குறுகிய பிராந்தியத்தை அடிப்படையாக கொண்டது. ஆனால் காங்கிரசும், பா.ஜ.க.வும் (ஓரிரு மாநிலங்களில் மட்டுமே வலுவாக இருக்கும் மார்க்சிஸ்டுகளை தேசிய கட்சியாகவே மதிக்க முடியாது) தமிழகத்தின் நலனைப் புறக்கணிப்பது அநியாயம். திமுக அல்லது அதிமுக உடன் சேர்ந்து சில எம்பிக்களைப் பெற்று விடுவதாலும், கழகங்களின் சுயநல கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களின் முழு ஆதரவைப் பெற்று விடுவதாலும், இந்த இரண்டு கட்சிகளுமே தமிழகத்தின் நலனை எண்ணிப் பார்ப்பதாக இல்லை. உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளித்தாலும் அதை காங்கிரசும், பா.ஜ.க.வும் ஆளும் கேரள, கர்நாடக மாநில அரசுகள் மதிப்பதில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பினை அமல்படுத்தாத மாநிலங்களின் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு மத்திய அரசை சார்ந்தது. சம்பந்தப்பட்ட மாநில அரசை அரசியல் சட்டத்தின் 356 வது பிரிவை அமல்படுத்தி கலைக்க வேண்டும். அல்லது 355வது பிரிவைப் பயன்படுத்தி சட்டசபையை முடக்கிவிட்டு நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தலாம்

View More நதிநீர் தாவாக்களில் வஞ்சிக்கப்படும் தமிழகம்: தீர்வு என்ன?

தமிழக அரசின் இலங்கை எதிர்ப்பு – ஒரு பார்வை

கருணாநிதியிடம் இருந்து தட்டிப்பறித்த ”தமிழினத் தலைவர்” பட்டத்தைத் தக்க வைக்க மேலும் மேலும் தவறு செய்கிறார். ராஜீவ் கொலையாளிகளுக்கு ஆதரவாக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்; இலங்கை ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை எதிர்க்கிறார்… தமிழக அரசின் நடவடிக்கைகளை தங்களுக்கான ஆதரவாக எடுத்துக்கொள்ளும் புலி ஆதரவாளர்கள் வரம்பு மீறுகின்றனர்… 80-களின் இறுதியில் தமிழகத்தில் நிலவிய பயங்கரத்தை நாம் மறந்துவிடக்கூடாது… சிங்களர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை தமிழகத்தில் வளர்ப்பது இலங்கை வாழ் தமிழர்களை மேலும் பாதிக்கவே செய்யும்.

View More தமிழக அரசின் இலங்கை எதிர்ப்பு – ஒரு பார்வை