கனிமொழி எம்.பி அவர்களுக்கு சில சிலப்பதிகாரக் கேள்விகள்

உங்கள் பெரியாரால் *** கதை என்று இழிவு படுத்தப்பட்ட சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டியிருப்பது பாராளுமன்றத்தைக் கொச்சைப்படுத்தவா? பெரியார் அப்படி என்ன சொன்னார்?… “மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது” தமிழர் முறை. யார் தமிழர் இங்கே? கண்ணகியின் சாபம் தெரிந்த உங்களுக்கு கண்ணகியின் திருமணம் பற்றி தெரிந்திருக்க வேண்டுமே.. சிலப்பதிகாரத்தில் உங்களைப்போலவே, உங்கள் திராவிட இயக்கத்தைப் போலவே, ஒரு ஆசாமி இருந்தான். பொற்கொல்லன் அவன்…

View More கனிமொழி எம்.பி அவர்களுக்கு சில சிலப்பதிகாரக் கேள்விகள்

வழிநெடுக காட்டுமல்லி: இசைஞானியின் மாயம்

ஏழுஸ்வரங்களால் ஆன சஞ்சீவி மலை, ஐந்திணைகளுக்கும் பாடல் கொடுக்கும் அற்புதம் இளையராஜா. இந்த வழி நெடுக காட்டுமல்லி பாடல், ராஜாங்கத்தில், இன்னொரு முல்லை நிலப்பாடல்.. எண்பது வயதான இளையராஜா இப்படி எழுதி, இசையமைத்து பாடுகிறார். காட்டு மல்லி வாசம் போல இந்த நாட்டை இந்தப் பாடலால் மணக்கச் செய்திருக்கிறார் ராஜா…

View More வழிநெடுக காட்டுமல்லி: இசைஞானியின் மாயம்

மோகமுள் சூடிய இளையராஜாவின் இசைமகுடம்

இசையால் தோய்த்து எடுத்திருக்கிறார் இந்தப் புதினத்தை. தி.ஜா.வின் எழுத்துக்களை, கற்பனையை ஸ்வரமாக்கி வரமாக்கி வைத்திருக்கிறார்.. பாபுவை கண்டுபிடித்த யமுனா அவனுடன் இணையும் பொழுது வரும் வயலின் கூட்டம், மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பதை கமகத்துடன் கமகமவென்று இசை வாசனை வீசைசெய்வது தெய்வீகம்… இளையராஜாவின் இசை – தி.ஜானகிராமனின் மோகமுள்ளுக்கு கிடைத்த பாக்கியம், “பொன்னியின் செல்வன்” தவறவிட்ட மகுடம்…

View More மோகமுள் சூடிய இளையராஜாவின் இசைமகுடம்

இசைஞானியை வசைபாடும் திமுகவினர்: பதிலடி

இங்க நீங்க வச்சது தான் சட்டம். நீங்க சொல்ற ஆளைத்தான் புகழனும். அப்படி இல்லாம உங்களுக்கு பிடிக்காதவங்க யாரையாவது புகழ்ந்து பேசினா அவரைப்பத்தி தப்பா பேசுவீங்க.. இன்றைய கோழைவுட் போல சுயலாபத்துக்காக அரசியல்வாதிகளுக்கு சலாம் போட்டு காரியம் சாதிப்பவர் அல்ல. சரியான ஆண்மகன் எங்கள் ராஜா. இது பெரியார் மண் என்று கொக்கரித்துக்கொண்டிருந்த பொழுது, ஒவ்வொரு முறையும் “குருர் பிரம்மா குருர் விஷ்ணு” ஸ்லோகம் ஒலிக்க விட்டே மேடையேறிய புனிதன் எங்கள் ராஜா….

View More இசைஞானியை வசைபாடும் திமுகவினர்: பதிலடி

அரசியல் “மாநாடு”: திரைப்பார்வை

இருபது நிமிடங்களில் என் மீது திணிக்கப்படும் கருத்து என்னவென்று தெரிந்துவிட்டது. 1998 கோவை குண்டு வெடிப்பு களம். பாஷா என்ற பெயரை யாரும் உச்சரிக்கவில்லை.. “எங்கள் மீது பழி சுமத்துகிறார்கள்” என்று ஆதங்கப்படும் அவர்கள் “ஏன் எங்கள் மீது பழி சுமத்துகிறார்கள்” என்று கேள்வி கேட்காமல் இருப்பது விந்தையே.. படம் முடிந்து வீட்டுக்கு வரும் வழியில் மகன் “ஆமாம்பா. Poor they are. They are being crucified. பாவம் அவுங்க” என்று சொன்னபொழுது தான் என் பயம் அதிகமாகியது. The agenda works…

View More அரசியல் “மாநாடு”: திரைப்பார்வை

நல்லா இருந்த தமிழ்நாடும்..

இளங்கோவடிகள் வந்தார். சிலப்பதிகாரம் என்ற முத்தாரத்தை தமிழன்னைக்கு அணிவித்தார். மாணிக்கவாசகர், சுந்தரர் மற்றும் நாயன்மார்கள் தமிழன்னையை ஆடவல்லான் கையில் கொண்டு சேர்த்தனர். யாருக்கு கிடைக்கும் இந்த புகழ், என்றே மனம் குளிர்ந்தாள் தாய்… ஈரோட்டில் இருந்து ஒரு கயவன் வந்தான். அவளை காட்டுமிராண்டி என்று தூற்றினான். காஞ்சியில் இருந்து மற்றொரு விஷம் இறங்கியது. திருவாரூர் ரயில் வந்தது…

View More நல்லா இருந்த தமிழ்நாடும்..