மைக்கேல் விட்சல் சென்னை விஜயம்: ஒரு பார்வை

ஹார்வார்ட் ஸம்ஸ்க்ருத பேராசிரியர் மைக்கேல் விட்சல் சென்னைக்கும் வந்ததைத் தொடர்ந்து, தமிழ் இந்து ஆசிரியர் குழு அவரை நோக்கி சில கேள்விகளை தொடுத்திருந்தது நினைவிருக்கும். அவரது வருகையை ஒட்டி நடந்த சில சுவாரஸ்யமான, அதே சமயத்தில் தீவிரமான , சம்பவங்களையும் சொல்ல வேண்டியிருக்கிறது ……

View More மைக்கேல் விட்சல் சென்னை விஜயம்: ஒரு பார்வை

தேச அவமதிப்பும் சட்டமும் நீதிமன்றங்களும்

… இந்தப் பிரிவினைவாத இயக்கங்களின் குண்டர்கள் ராணுவத்தைத் தாக்கியதிலும், தேசியக்கொடியை எரிக்க முயன்றதிலும் ஆச்சரியம் இல்லை .. ஆனால் கடைந்தெடுத்த சமூக விரோத, தேச விரோத கும்பலுக்கு அனாதை இல்லத்தில் “சேவை” செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தது மிகவும் வியப்பளிப்பதாக இருக்கிறது….

View More தேச அவமதிப்பும் சட்டமும் நீதிமன்றங்களும்

கிறிஸ்துவ – திராவிட மாயவலை

சென்னை சங்கமம் ஆரம்பிப்பதற்கு முன்னால், ஜகத் காஸ்பர் இசைமேதை இளையராஜாவின் உதவியுடன் மாணிக்கவாசகப் பெருமான் பாடியருளிய திருவாசகத்தை (ஆரட்டாரியோ) சிம்பொஃனி வடிவில் வெளியிட்டு அவ்வியாபாரத்தில் பெரும் தோல்வி அடைந்தார். பின்னர் அது சிம்பொஃனியே அல்ல, சர்ச்சுகளில் வாசிக்கப்படும் சாதாரண ஆக்டெராய்ட் இசை வகையைச் சார்ந்தது என்று சில இசை மேதைகளால் நிறுவப்பட்டது. இதை இளையராஜா அவர்களே ஒரு தமிழ் வார இதழின் நேர்காணலில் ஒத்துக் கொண்டுள்ளார்கள். ஆன்மீகத் தமிழாக இருந்தாலும் சரி, கலாசாரத் தமிழாக இருந்தாலும் சரி, அதை களவு செய்து அதற்கு ஒரு கிறிஸ்துவ வண்ணம் பூசி தமிழர்களை இந்து மதத்திலிருந்து பிரிப்பதே இவர்களது நோக்கம்….

View More கிறிஸ்துவ – திராவிட மாயவலை

கிறிஸ்துவ மதமாற்றத்தின் இருண்ட பக்கம்

அடிப்படை நாணயமற்ற நபர்களைக் கொண்ட சர்ச்சுகளும் மிஷனரிகளும் ‘மொழிக் களவு’ (Hijacking the native language), ‘கலாசாரக் களவு’, ‘இனவெறி’ (Racism) ஆகிய அபாயகரமான யுக்திகளின் மூலம் மதமாற்றம் செய்யத் தொடங்கினர். இவற்றில், இடையே சற்று மங்கியிருந்த ‘கலாசாரக் களவு’ (inculturation) முன்னரே உண்டு என்ற போதும் தற்போது பெரிதாகத் தலை தூக்கியிருக்கிறது. அதாவது, ‘கத்தோலிக்க ஆஸ்ரமங்கள்’ அமைத்தல்; ஆஸ்ரமத்தின் நுழைவாயிலின் முகப்பில் ‘ஓம்’ சின்னத்தை வைத்தல்; ‘ஓம்’ என்பது “வேதச்சொல்” என்றும் “இந்துச்சொல் அல்ல” என்றும் சாதித்தல்; ஆஸ்ரமத்தின் உள்ளே யோக முத்திரையுடன் பத்மாசனத்தில் தியானம் செய்வதுபோல் இயேசு வீற்றிருக்கும் சிலை அமைத்தல்….

View More கிறிஸ்துவ மதமாற்றத்தின் இருண்ட பக்கம்

ஈழத்துப் பரணி பாடும் வாய்ச்சொல் வீரர் – 2

திருமாவளவன் பல்டி பங்குனி 27, வியாழக்கிழமை. தி.மு.க. இலங்கைத் தமிழர்களுக்காக ஒரு பேரணி…

View More ஈழத்துப் பரணி பாடும் வாய்ச்சொல் வீரர் – 2

ஈழத்துப் பரணி பாடும் வாய்ச்சொல் வீரர் – 1

இலங்கை அதிபர் ராஜபக்ஸே அப்பாவித் தமிழர்களைப் பாதுகாப்போம் என்று எவ்வளவுதான் உறுதி அளித்திருந்தாலும், அவர்களின் நிலைமையை நினைக்கும் போது நமது நெஞ்சம் துடித்துப் போகிறது. இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே மாட்டிக்கொண்டுள்ள இரண்டு லட்சம் அப்பாவித் தமிழர்கள் காப்பாற்றப் பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. முக்கியமாக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள பிரபாகரனையும், தப்பிச் செல்லும் மக்களைக் கொல்லுமாறு உத்தரவு பிறப்பித்துள்ள பொட்டு அம்மனையும் நினைத்துப் பார்க்கும் போது, அப்பாவித் தமிழர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் இருக்க வேண்டுமே என்று நம் மனது அடித்துக் கொள்கிறது.

View More ஈழத்துப் பரணி பாடும் வாய்ச்சொல் வீரர் – 1

குஜராத் கலவரம்: அவிழ்ந்து சிதறிய புளுகு மூட்டை!

கௌஸர் பானு என்கிற கர்ப்பிணிப் பெண்ணை ஹிந்துக்கள் பலர் சேர்ந்து கற்பழித்ததாகவும், அவர் வயிற்றை வாளினால் கிழித்து உள்ளிருந்த பாதி வளர்ந்த கருவை வெளியே எடுத்துக் கொன்றதாகவும் ஒரு சம்பவத்தை டீஸ்டா செடல்வாட்டும், பல போலி மதச்சார்பின்மை வாதிகளும் ரத்தக் கண்ணீர் விட்டுப் பிரச்சாரம் செய்தனர். அகமதாபாத் அருகில் உள்ள நரோடா பாடியா என்ற இடத்தில் பல முஸ்லீம்களைக் கொன்ற ஹிந்துக்கள் அவர்களின் உடல்களை ஒரு கிணற்றில் போட்டு மூடியதாக ஒரு சம்பவம் ஜோடித்துச் சொல்லப்பட்டது. தற்போது அனைத்துச் சாட்சியங்களும் பொய், அவ்வாறு ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்பது தெரியவந்துள்ளது.

View More குஜராத் கலவரம்: அவிழ்ந்து சிதறிய புளுகு மூட்டை!

வருண் வருகையும் சோனியா கலக்கமும்

தன்னுடைய இருபத்தி ஒன்பதாவது வயதில், அரசியல் பிரவேசத்தைத் தொடங்கும் ஒரு இளைஞர், ஹிந்துக்களுக்கு ஆதரவாக களம் இறங்குவதாலும், நேரு குடும்பத்திலிருந்தே வந்து ராகுல் காந்திக்கு எதிராகக் களம் இறங்குவதாலும், ஆகிய இரண்டு காரணங்களுக்காக மட்டுமே வருண் மீது சேற்றை வாரி இறைக்கின்றன ஊடகங்களும், போலி மதச்சார்பின்மை வாதிகளும். பல அரசியல்வாதிகள் இதற்கு முன்னால் இந்துக்களுக்கு எதிராகப் பேசியபோதும், செயல்பட்ட போதும் ஏன் இவர்கள் மௌனமாக இருந்தார்கள்? தேர்தல் ஆணையம் அப்போது ஏன் வாய் மூடி இருந்தது?

View More வருண் வருகையும் சோனியா கலக்கமும்

காவல்துறை Vs நீதித்துறை: தமிழகத்தின் பரிதாபம்

வக்கீல்களுக்கு அவர்கள் சார்ந்துள்ள சங்கங்களின் பலமும், அரசியல் கட்சிகளின் பக்கபலமும் இருக்க, காவலர்களுக்குச் சங்கங்கள் இல்லாமையும், அரசியல் கட்சிகளின் ஆதரவு இல்லாமையும் பெரும் பலவீனமாக உள்ளன. அவர்களை ஆளும் கட்சியினரும் காப்பதில்லை, எதிர்க் கட்சியினரும் கடுமையாகக் கண்டிக்கிறார்கள். சாதாரணப் போக்குவரத்து விதி மீறல் முதல் கிட்டத்தட்ட கொலைக்குற்றம் வரை, வக்கீல்கள் மீது வெறும் ’முதல் தகவல் அறிக்கை’ (FIR) மட்டுமே போலீசாரால் பதிவு செய்ய முடிந்துள்ளது… சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஜாதி மற்றும் அரசியல் கட்சி சார்புள்ள சங்கங்களோ இயக்கங்களோ நடத்த அனுமதிக்கக் கூடாது…

View More காவல்துறை Vs நீதித்துறை: தமிழகத்தின் பரிதாபம்