இறைமை ததும்பும் இரவு: நவராத்திரியை முன்வைத்து ..

இரவு அச்சமூட்டுவது, வசீகரிப்பது, மர்மங்களும் ஆழ்ந்த அமைதியும் கொண்டது. அதனால் தான் நம் மரபில் இரவைப் பெண்ணாக, தேவியாக உருவகித்தார்கள் போலும்! உலகின் வெளித் தோற்றங்கள் அனைத்தும் காரிருளில் கரைந்து மறையும் அந்தக் காலவெளியை, அக எழுச்சியை விழையும் அனைத்து விதமான மாந்தர்களும் சரணடைகிறார்கள் – ஞானிகள், கலைஞர்கள், கவிஞர்கள், போகிகள், யோகிகள், இலக்கின்றித் தவிப்பவர்கள் யாராயினும்…

View More இறைமை ததும்பும் இரவு: நவராத்திரியை முன்வைத்து ..

அன்னையின் அகவழிபாடு – மாதா அமிர்தானந்தமயி

மூன்று முறை “ஓம்” ஜபிக்கவும். கண்களை மூடி, நாபியிலிருந்து ஓங்கார நாதம் எழும்பித் தலை உச்சியிலுள்ள ஸஹஸ்ராரத்தைச் சென்று அடைவதாக பாவனை செய்யவும். ஓங்காரம் ஜபிக்கும்போது நமது தீய இயல்புகளும், கெட்ட எண்ணங்களும் வெளியேறுவதாகவும், நல்ல எண்ணங்களும், நல்லியல்புகளும் நம்முள் நிறைவதாகவும் எண்ண வேண்டும். மேலும், உள்ளத்திற்கும் உடலுக்கும் புத்துணர்வும், உற்சாகமும் ஏற்படுவதாக பாவனை செய்யவும்.

View More அன்னையின் அகவழிபாடு – மாதா அமிர்தானந்தமயி

ஆண்டாள் என்னும் அற்புதம் – நல்லார் பொருட்டுப் பெய்யும் மழை!

காம உணர்ச்சியிலிருந்து ஆன்மிக நிலைக்கு என்னும் நிலையிலிருந்து திருமண அமைப்பின் சட்டதிட்டங்களுக்கு கீழ்படிதல் என்பதாக அந்த உறவினை மாற்றி அமைத்தது. நவீன காலத்துக்கு முந்தைய திருமண அமைப்பில் பெண்ணின் கீழ்படிதல் நிலையே ஏசுவுக்கும்-சபைக்குமான உறவாகவும் அதன் அடுத்த கீழ்படிதலாக சபைத்தலைமைக்கும் அதன் உறுப்பினர்களுக்குமாக அது மாற்றப்பட்டது. இந்த மேற்கத்திய உருமாற்றம் பாரத பண்பாட்டில் ஏற்படவே இல்லை.

View More ஆண்டாள் என்னும் அற்புதம் – நல்லார் பொருட்டுப் பெய்யும் மழை!

பிள்ளையார் தேசத்தில் சதுர்த்தி விழா – ஒரு பார்வை

சென்னையை விட அதிக அளவில் முஸ்லீம் சமுதாயத்தினர் வாழும் மும்பை, ஐதராபாத் போன்ற பெரிய நகரங்களிலும், மற்ற மாநிலங்களிலும், (அதேபோல் மிகவும் விமரிசையாக துர்க்கா பூஜை கொண்டாடப்படும் கல்கத்தா நகரிலும்) இந்த மாதிரிப் பிரச்சினைகள் இல்லாமல், கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் இந்துக்கள் முழுச் சுதந்திரத்துடன் விநாயகர் சதுர்த்தி பண்டிகையைக் கொண்டாட அந்தந்த மாநில அரசுகளும், காவல் துறையும் அனுமதித்து ஏற்பாடுகள் செய்யும்போது தமிழகத்தில் மட்டும் ஏன்….

View More பிள்ளையார் தேசத்தில் சதுர்த்தி விழா – ஒரு பார்வை

சிலை வழிபாடு பாவமா? மூடநம்பிக்கையா? அல்லது அறிவியலா?

.. விநாயகர் திருக்கரத்தில் ஏந்தியிருக்கும் கயிறு பரம்பொருள் நம்மை நம் வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்த சத்தியத்தை நோக்கி (சில நேரங்களில் அறியாமையால் நாம் தயங்கி நின்றால் கூட) இழுத்துச் செல்வதைக் காட்டுகிறது… சிலை வழிபாடு பற்றிய கேள்விகளை எழுப்பி, அதன் வரலாறு, தத்துவம் மற்றும் அறிவியலை விளக்கும் ஒரு தமிழ் பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் – இங்கே …

View More சிலை வழிபாடு பாவமா? மூடநம்பிக்கையா? அல்லது அறிவியலா?

காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?: பாகம் 2

ஒரு மனிதன் தனக்காகவென்று தனியாகச் செய்கின்ற சாதனமன்று காயத்ரீ. ‘நம்முடைய அறிவை எப்பொருள் தூண்டுகிறதோ’ என்று அது பன்மையில் துவங்குகிறது. ‘அப்பெரிய பொருளை தியானிப்போமாக’ என்று பன்மையில் முடிகிறது. ஆத்மசாதகன் தனித்திருந்து சாதனங்கள் பயிலுகின்ற இடத்தும் எண்ணத்தால் தன்னை மற்ற உயிர்களோடு இணைத்துக் கொள்ளவேண்டும் … புறத்திலுள்ள சூழ்நிலை அறிவைத் தூண்டுவதற்கு ஏதுவாகிறது. தூண்டுதல் உடன்பாடு, எதிர்மறை ஆகிய இரண்டு நிலைகளிலும் நிகழ்கிறது.

View More காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?: பாகம் 2

பேராற்றலின், பெருங்கருணையின் சின்னம்: திருநீலகண்டம்

… நல்வினைப் பயனை உயிர்கள் அனுபவிக்கும்படி அளித்துத் தீவினைப் பயனை அவன் ஏற்றுக் கொள்கிறான். கரியமிடறு அந்தக் கருணைக்கு அடையாளமாகத் திகழ்கின்றது… இயேசுநாதர் அறைந்து கொல்லப்பட்ட சிலுவையாகிய கொலைத்தண்டனைக்கு உரிய கழுமரத்தைக் காட்டிலும் இறைவனின் நீலகண்டம் அவனின் பேராற்றலுக்கும் பெருங்கருணைக்கும் அடையாளமாக, மானுடரின் பாவக்கழுவாய்ச் சின்னமாகப் பெரிதும் திகழ்கின்றது …

View More பேராற்றலின், பெருங்கருணையின் சின்னம்: திருநீலகண்டம்

போகப் போகத் தெரியும் – 23

சமூக விடுதலை என்ற சாயத்தைப் பூசிக்கொண்ட தலைவர்கள், உண்மையில் செய்ததெல்லாம் அங்க வர்ணனைகளின் பங்கு வர்த்தகம்தான்… ஆபாசக் குப்பைகள் அரசியல் அந்தஸ்து பெற்றது தமிழகத்தில்தான். எழுச்சியோடு உருவான படைப்புகள் சாதி அடையாளங்களால் ஒதுக்கி வைக்கப்பட்டதும் தமிழகத்தில்தான்.

View More போகப் போகத் தெரியும் – 23

காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?: பாகம் 1

கடலில் தோன்றி, கடலின்மீது அலைகள் உருண்டோடி விளையாடுவது போன்று ஜகத்தும் ஜீவனும் பரத்தில் தோன்றி பரத்தில் நிலைபெற்றிருக்கின்றன… உள்ளத்தைச் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கின்ற தாமரை மலராகக் கருதவேண்டும். அதில் சுயம் ஜோதி சொரூபமாக வழிபடு தெய்வம் வீற்றிருப்பதாக உணர்தல் வேண்டும். இந்த உணர்வில் நிலைத்திருப்பது தியானமாகிறது.

View More காயத்ரி மந்திரத்தின் பொருள் என்ன? தத்துவம் என்ன?: பாகம் 1

காயத்ரி மந்திரம் அனைவருக்கும் உரியதா?

“பல்லாயிரம் ஆண்டுகளாக நம் நாட்டில் தேசியப் பிரார்த்தனையாகவும், தேசிய மந்திரமாகவும் இருந்துவருகிற காயத்ரி மந்திரத்தைப் பொதுவுடைமையாக்க வேண்டும். பால்வேற்றுமையின்றி, பிறப்பு வேற்றுமையின்றி அதைப் பயன்படுத்தக் கூடியவர்களுக்கெல்லாம் அதை உரியதாக்க வேண்டும்” என்கிறார் சுவாமி சித்பவானந்தர்.

View More காயத்ரி மந்திரம் அனைவருக்கும் உரியதா?