சாணக்கிய நீதி – 8

This entry is part 2 of 8 in the series சாணக்கிய நீதி

மாணவன் ஆசானிடம் கல்வி கற்கிறான்.  அது எக்கல்வியாக இருப்பினும் பரவாயில்லை.  கல்வியை முழுவதும் கற்ற மாணவன்/வி திரும்பவும் ஆசிரியரை நோக்கிச் செல்லமாட்டான்/ள்.  அது தேவையும் இல்லை.  இக்காலத்துக்கும் அது பொருந்தும்.  உயர்நிலைப் பள்ளியில் தேறியவர் அப்பள்ளிக்கு மீண்டும் மாணவராகச் செல்வதில்லை. கல்லூரிக்கே செல்கின்றனர்.

View More சாணக்கிய நீதி – 8

சாணக்கிய நீதி – 7

This entry is part 2 of 8 in the series சாணக்கிய நீதி

அன்புக் காதலியான மனைவி, தன்னை உயிருக்குயிராகக் காதலிக்கும் கணவனைப் பிரிந்து கள்ளக் காதலன் வீட்டிற்குச் சென்றால், தன் கௌரவத்திற்கும், தன் குடும்பத்தின் நற்பெயருக்கும் இழுக்கு வந்து சேர்ந்ததே, ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானோமே என்று அணுஅணுவாக மனதிற்குள் புழுங்கி இறந்துபோகவோ, அல்லாது தற்கொலை செய்துகொள்ளவோ, நேரிடும்.

View More சாணக்கிய நீதி – 7

குஜராத்: மோடி அலை ஓயாது!

அண்மையில் நடைபெற்ற இரு மாநில சட்டசபைத் தேர்தல்களின் முடிவுகள், நாட்டு நலனை விரும்புவோருக்கு உவப்பானதாக அமைந்திருக்கின்றன. குறிப்பாக குஜராத்தில் பாஜக பெற்றுள்ள மாபெரும் வெற்றி, மோடி அலை ஓயவில்லை என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை இழந்து, காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இதுவும் தேசியக் கண்ணோட்டத்தில் பாராட்டுக்குரிய முடிவாகவே இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் இந்த மாநிலத்தில், வெறும் 0.90 சதவீதம் வாக்குகள் வித்யாசத்தில் தான் பாஜக ஆட்சியை இழந்திருக்கிறது…

View More குஜராத்: மோடி அலை ஓயாது!

சாவர்க்கரின் சிறைவாசமும் சவுக்கு சங்கரும்

வீர சாவர்க்கர் மிகக் கொடுமையான வருடங்களுக்கு மத்தியில் எழுதிய மனுவில், தமக்கு விடுதலையே கிடைக்காது போகலாம் என்கிற சூழலில், என்னைத்தவிர பிறரை விடுவித்துவிடு என கேட்கிறாரே இந்த மனத்திண்மை சவுக்கு சங்கருக்கு உண்டா? அல்லது வீர சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதினார் என வாய் கூசாமல் பேசும் புல்லர் கும்பலில் எவனுக்கும் உண்டா?.. தனக்கு அடிப்படை வரலாறே தெரியாமல் இருப்பதை சவுக்கு சங்கர் வெளிக்காட்டுகிறாரா? அல்லது புத்தகம் படித்தால் கூட (அல்லது படித்ததாக பொய் சொன்னால் கூட) அதுவும் அவருக்கு புரியவில்லையா? அல்லது வேண்டுமென்றே நேர்மையில்லாமல் பொய் சொல்வதை வந்தவுடனேயே ஆரம்பித்துவிட்டாரா?…

View More சாவர்க்கரின் சிறைவாசமும் சவுக்கு சங்கரும்

அண்ணாமலை வீரமாமுனிவருக்கு நன்றி சொல்ல வேண்டுமா? : பதிலடி

நீங்கள் ஒவ்வொருமுறை கே.அண்ணாமலை என்ற பெயரை எழுதும்பொழுதும் கே என்பதில் வரும் இரட்டை சுழியை கொடுத்த வீரமாமுனிவருக்கும் ‘லை’ கொடுத்த பெரியாருக்கும் நன்றி செலுத்த வேண்டும் – என்கிறார் சு.வெங்கடேசன்.. இவர் கூறுவதில் ஏதாவது உண்மை உள்ளதா என்று இந்தக் கட்டுரையில் ஆராய்ந்து பார்க்கலாம்.. இரட்டை சுழி கொம்பு மீனாட்சி அம்மன் கோயில் ஓவியங்களிலேயே காணக்கிடைக்கிறபோது, வரலாற்றுப் புலமையுள்ள மதுரைவாசிக்கு மட்டும் தெரியாமல் போனது வியப்புதான்… பள்ளன் கோயில் செப்பேடு என்று அழைக்கப்படும்
பல்லவர் காலத்திய செப்பேட்டில். ஐந்து விதமான லை எழுத்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன…

View More அண்ணாமலை வீரமாமுனிவருக்கு நன்றி சொல்ல வேண்டுமா? : பதிலடி

சாணக்கிய நீதி – 4

This entry is part 1 of 8 in the series சாணக்கிய நீதி

அன்றிலிருந்து இன்றுவரை சமுதாயம் ஆண்களையே சார்ந்திருக்கிறது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.  பெண்ணுரிமைக்குத் தற்காலத்தில் அதிகம் குரல்கொடுக்கப் படுகிறது என்றாலும், அது படித்த பட்டினத்துப் பெண்களுக்கே சாதகம் செய்திருக்கிறது.  ஆகவே, அவர்கள் துணிச்சலாகச் செயல்பட்டால்தான் அப்படிப்பட்ட சமுதாயத்தில் சமாளிக்க இயலும்.
காமம் என்பதை ‘அறம், பொருள்’, இன்பம்’ இவற்றின் தேடலின் தூண்டுதலாக எடுத்துக்கொள்ளலாம்.  அதை ஆண்கள் நிறைவேற்றவேண்டும் என்று மந்திரங்கள் சொன்னாலும், அதற்கு உறுதுணையாக விரும்பிச் செய்வது – செய்யவைக்க உறுதுணை என்று மந்திரங்கள் சொல்வது பெண்கள்தான்!  அந்தப் பெண் வாழ்க்கத் துணையாக, வாழ்க்கை வண்டியின் உறுதுணையாக இழுக்காவிடில் ஆண்களால் எதையும் செய்ய இயலாது என்று வேதங்களும் உணர்ந்து சொல்லியுள்ளன. 

View More சாணக்கிய நீதி – 4

இந்துமதம் குறித்த அவதூறுகளை எப்படி எதிர்கொள்வது: ஒரு பார்வை

இந்து மதம் குறித்து அவதூறு பரப்புபவர்கள் எல்லாம் கிறிஸ்தவ, இஸ்லாமிய கார்ப்பரேட் கம்பெனியின் விளம்பர நடிகர்கள் போன்றவர்கள். காசு வாங்கிக் கொண்டு போய்கொண்டே இருப்பார்கள். ஆனால், ஒட்டு மொத்த இந்து தரப்பும் பதறியடித்துக்கொண்டு அதற்குப் பல்வேறுவிதமான பதில்களைச் சொல்லத் தொடங்குகிறது. .. நாம் பேச வேண்டியவற்றை மற்றவரைக் கொண்டு பேசவைப்பதென்பது மத அரசியலில் பால பாடம். கிறிஸ்தவ, இஸ்லாமிய அடிப்படை சக்திகள் அதில் டாக்டரேட் முடித்து விட்டிருக்கிறார்கள். நாம் பத்தாவது பாஸ் செய்யவாவது முயற்சிகள் எடுக்கவேண்டும்…”ராஜராஜன் இந்து இல்லை என்று சொல்பவன், என் அம்மா என் அப்பாவுடன் படுத்து என்னைப் பெறவில்லை என்று சொல்கிறான்” என்று அவர்கள் மத்தியில் இருந்தே ஒருவரைப் பேசவைக்க வேண்டும்..

View More இந்துமதம் குறித்த அவதூறுகளை எப்படி எதிர்கொள்வது: ஒரு பார்வை

தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத திமுகவுக்கு நன்றி: ஒரு திறந்த மடல்

இப்பண்டிகை வராக மூர்த்திக்கும் பூமி அன்னைக்கும் பிறந்த நரகாசுரனை அதே வராக மூர்த்தி – பூமாதேவி அவதார அம்சங்களான ஸ்ரீ கிருஷ்ண சத்யபாமாவால் வதம் செய்யப்படும் நாள் என தென்னகத்தில் கொண்டாடப்படுகிறது. அதர்மியானவன் சொந்த மைந்தனென்றாலும் அவனை வதம் செய்யும் பாரத பண்பாடு எங்கே. கடைமட்டத் தொண்டன் முதல் கணக்கற்றோர் செய்த தியாகத்தை ஒரு குடும்பம் மட்டுமே உண்டு மகிழும் கழகம் எங்கே! எனவே திமுகவினர் தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதென்பது சரியானதல்ல. தீபாவளிக்கு கண்ணியமானதல்ல…

View More தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத திமுகவுக்கு நன்றி: ஒரு திறந்த மடல்

அம்பேத்கரின் தோற்றுப் போன ஆன்மிகமும், ஆதரவு பெறாத அரசியலும்

பெளத்தத்துக்கு மதம் மாறியபோது அம்பேத்கர் முன்மொழிந்திருந்த 22 வாக்குறுதிகள் ஏதோ அவசர கோலத்தில் உருவாக்கியவை போலவே இருக்கின்றன.. “இந்து மதத்தை விடுத்து நான் பௌத்தத்தை ஏற்கிறேன்” என்றார். ஆனால் அவர் வகுத்த அரசியல் சாசனப்படி பெளத்தர்களுமே கூட இந்துவாகவேதான் வாழ்கிறார்கள். வாழ முடியும். பெளத்தத்துக்கான மத மாற்றம் என்பது அம்பேத்கர் செய்தபோதே அவசியமற்ற ஒரு செயல்தான். அன்றைக்கே அதன் தாக்கம் ஒன்றுமில்லைதான்…

View More அம்பேத்கரின் தோற்றுப் போன ஆன்மிகமும், ஆதரவு பெறாத அரசியலும்

சாணக்கிய நீதி – 3

This entry is part 3 of 8 in the series சாணக்கிய நீதி

நம்மைச் சுற்றியிருப்பவர்களின் உண்மையான குணம் என்ன, அவர்கள் எப்படி தங்கள் சுய உருவத்தைக் காட்டுவார்கள் என்று எப்பொழுது, எப்படி அறிந்துகொள்வது?  இது அரசருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் தெரியவேண்டிய ஒன்றுதானே! உண்மையான நண்பரைப் பற்றி நமக்குத் துயரத்தால் கையறு நிலை வரும்போதுதான் அறிய இயலும்

View More சாணக்கிய நீதி – 3