சென்னை ஐஐடி இயக்குனர் வி.காமகோடி: ஒரு நேர்காணல்

இவரைப்பற்றிய செய்திகள் மற்றும் இவரது ஆங்கில உரைகள், உரையாடல்களைத் தொடர்ந்து கவனித்து வந்திருப்பதால் நன்கு அறிந்திருந்தாலும், திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் செய்துள்ள இந்த 2020 நேர்காணல் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருந்தது.. காஞ்சிப் பெரியவர் (ஸ்ரீ ஜெயேந்திரர்) “நீ இந்த நாட்டுக்காக பெரிய செயல்களை செய்து இங்கேயே புகழ்பெறுவாய்” என்று சொன்னதை தெய்வ வாக்காக எடுத்துக்கொண்டதைச் சொல்லி “என்னிடம் பாஸ்போர்ட்டே கிடையாது” என்று மிக இயல்பாக, சிரித்துக்கொண்டே கூறுகிறார்…

View More சென்னை ஐஐடி இயக்குனர் வி.காமகோடி: ஒரு நேர்காணல்

தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்

வரலாற்றுக்கு கிறிஸ்தவர், இஸ்லாமியர் என்று பாகுபாடு கிடையாது.. அகழ்வாய்வில் 50 க்கும் மேற்பட்ட முழு தூண்கள் கிடைத்திருக்கிறது. தூண்களின் பூர்ண கலசமே அவை இந்து கட்டுமானத்தின் ஒரு பகுதி என்பதன் சான்று தான். இதற்கு பிறகான 17 வரிசைகளில் இந்த தூண்கள் இருந்ததற்குரிய கட்டுமான அடித்தளங்களும் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டது. மேலும் 263 க்கும் மேற்பட்ட நாக கன்னிகைகள், நடன மாதர்கள், யட்சர்கள், கந்தர்வர்கள், வாத்தியம் இசைப்பவர்கள் , துவார பாலகர்கள் என்று இந்து ஆலய லட்சணத்திற்குரிய அனைத்து ஆதாரங்களும் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டு நீதி மன்றத்திலும் அதற்குரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. 1975-76 ல் நடைபெற்ற முதல்கட்ட அகழ்வாய்விலேயே கீழே நிலையான பெரிய ஆலயம் இருப்பதற்குரிய சான்றுகள் கிடைத்தது…. இங்கு ஆலயம் இருந்தது பற்றிய எங்கள் கண்டுபிடிப்பை அப்போதைய அரசிடமும் எடுத்து சொன்னோம். அப்பொழுதும் ஒரு நிரந்தர தீர்வு ஏற்பட வழி இருந்தது. இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள் அப்போதும் அதை கெடுத்தார்கள். ஆர் எஸ் சர்மா, டி என் ஜா, அத்தார் அலி, சூரஜ் பென், ரொமிலா தாப்பர் இவர்களை எல்லாம் தலைமை தாங்கி வழி நடத்தும் இர்பான் ஹபீப் இவர்களே இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு வராமல் அரசியல் செய்தவர்கள். இந்திய அரசின் உயர் கல்வி , மற்ரும் பண்பாட்டு அமைப்புகளில் ஊடுருவி இருந்த எளிய மார்க்ஸிய அரசியல்வாதிகள். சுமூகமான தீர்வு எதுவும் நடந்து விடக்கூடாது என்று உறுதியாக அரசியல் செய்தார்கள். அன்று இப்பிரச்சினையை தீர்த்திருந்தால் நிறைய உயிர் சேதங்களையும், மக்களுக்கிடையே மனப்பிளவுகளையும் தவிர்த்திருக்கலாம்.
தொல்லியல் ஆதாரங்கள், வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறதே தவிர வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல…

View More தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்

இளையராஜா @ கூகிள்

அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கூகிள் நிறுவனத்தின் தலைமையகத்தில் அண்மையில் இளையராஜா பங்குபெற்ற நேர்காணல் & கேள்வி-பதில் நிகழ்ச்சி நடந்தது. ஜீசஸ் வாழ்வில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் உயிர்த்தெழுதல் என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரங்களும் இல்லை என்று பல ஆய்வுகளும் குறிப்பிடுவதை Youtube டாகுமென்டரிகளில் பார்த்ததாக ராஜா கூறினார். இரண்டாயிரம் வருடமாக கிறிஸ்தவ மதத்தின் ஆதாரமாக இருந்த இந்த விஷயம் நடக்கவேயில்லை என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், சமீபகாலத்தில் ஸ்ரீரமண மகரிஷி வாழ்வில் அவர் 15 வயது சிறுவனாக இருந்தபோது மரண அனுபவத்தைப் பெற்று அதன்பின் உயிர்த்தெழுந்தார், அதைக் கடந்து மரணத்தை வெல்லும் ஞானநிலையை அடைந்தார் என்றார். அங்கங்கு கறிவேப்பிலை போல சில ஆங்கில வாக்கியங்கள் தவிர்த்து நிகழ்ச்சி முழுவதும் இளையராஜா தமிழிலேயே பேசினார்….

View More இளையராஜா @ கூகிள்

வாசகர்களின் பாராட்டே எனக்கு மகத்தான விருது!- 2

– கிரைம் நாவல் மன்னர் ராஜேஷ்குமார் சிறப்பு நேர்காணல்   தமிழின் முன்னணி…

View More வாசகர்களின் பாராட்டே எனக்கு மகத்தான விருது!- 2

வாசகர்களின் பாராட்டே எனக்கு மகத்தான விருது!- 1

– கிரைம் நாவல் மன்னர் ராஜேஷ்குமார் சிறப்பு நேர்காணல்   கிரைம் நாவல்…

View More வாசகர்களின் பாராட்டே எனக்கு மகத்தான விருது!- 1

தாமரை சங்கமம்: பொன்.ராதாகிருஷ்ணனுடன் ஒரு நேர்காணல்

பாஜக மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று 1996-ல் கூறியபோது யாரும் நம்பவில்லை. ஆனால் அடுத்த 6 ஆண்டுகளில் பாஜக ஆட்சிதான் செங்கோட்டையில் இருந்தது. எதுவும் சாத்தியமில்லை என்று கூறிவிட முடியாது… 6 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களோடு ஏற்கெனவே உள்ள 7 லட்சம் உறுப்பினர்களையும் சேர்த்தால்… இது கூடி களையும் கூட்டமாக இருக்காது. உறுதிமொழி மாநாடு இது. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சிக்கு வர வேண்டியதன் காரணங்களை மக்களுக்கு சொல்வோம்… தமிழகத்தில் தனியொரு தலைவரை மையப்படுத்தி தான் அரசியல் சுழல்கிறது. இந்த தனி மனித மற்றும் சினிமா கவர்ச்சியை எல்லாம் மீறி பாஜக வளரும்…

View More தாமரை சங்கமம்: பொன்.ராதாகிருஷ்ணனுடன் ஒரு நேர்காணல்

சுதேசி பொருளாதாரம் – ஒரு நேர்காணல்

சுதேசி என்ற கோட்பாடு ஒரு தனியான கோட்பாடு அல்ல. சுதேசி என்பது உற்பத்தியாளர் வியாபாரிகள் நுகர்வோர் மூவரும் இணக்கமாக பணி செய்தால் தான் வெற்றி பெறக் கூடிய கோட்பாடு. எனவே இந்த மூவரிடமும் ஒருவரை ஒருவர் புரிந்து செயலாற்ற தகுந்த களம் அமைத்து வருகிறது சுதேசி இயக்கம். கம்யூனிஸ்ட்டுகளின் விதேசி எதிர்ப்புக்கும் சுதேசிகளின் எதிர்ப்புக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் உண்டு.. முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பாலும் சரி கம்யூனிஸ பொருளாதார கட்டமைப்பாலும் சரி இங்கே இருக்க கூடிய பாரம்பரிய இயற்கையை ஒட்டிய தொழில் நுட்பத்தை ஞானத்தை அழித்து விட்டு மக்களுக்கு எந்த நன்மையையும் கொடுக்க இயலாது

View More சுதேசி பொருளாதாரம் – ஒரு நேர்காணல்

உடையும் இந்தியா? – ஒரு உரையாடல்

நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த “உடையும் இந்தியா?” நூல் வெளிவந்து விட்டது. அரவிந்தன் நீலகண்டனே தமிழ் மொழியாக்கத்தை செய்திருக்கிறார். நூல் குறித்து பத்ரி சேஷாத்ரியும் அரவிந்தனும் நிகழ்த்திய காரசாரமான உரையாடல் மூன்று பகுதிகளாக… ஆரிய, திராவிடம் ஆகியவை எவ்வாறு இனவாதச் சிந்தனைகளாக ஆகின.. உலகளாவிய கிறிஸ்தவ மதமாற்ற வலை, “திராவிட கிறிஸ்தவம்” என்ற புரளி…தலித்களை இந்திய சமூகத்திலிருந்து பிரித்தெடுக்கும் சூழ்ச்சிகள். உலக அரசியலில் இந்தியாவை சீர்குலைக்க முனையும் சக்திகளின் சதிவலைகள்….

View More உடையும் இந்தியா? – ஒரு உரையாடல்

கொயன்ராட் எல்ஸ்ட்டுடன் ஒரு மாலைநேர சந்திப்பு

இந்து சமுதாயம் கிறித்துவ இறையியலைப்புரிந்து கொள்ளாமல் மதமாற்றத்திற்கு எதிராக வலுவான எதிர்த்தரப்பைக் கட்டியெழுப்ப முடியாது… போப் செய்த தவறுகள் என்று பட்டியலிட்டால், போப்பே பாவிதான் என்று சொல்லி விடுவார்கள். காலனியம், நிறவெறி, செவ்விந்தியர்களை அழித்தது என்று எதைசொன்னாலும்… மேற்கு இந்தியா மீது காட்டும் ’சிறிய அக்கறை’ இந்தியாவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்…

View More கொயன்ராட் எல்ஸ்ட்டுடன் ஒரு மாலைநேர சந்திப்பு

ஒரு நாள் மாலை அளவளாவல் – 3 [இறுதிப் பகுதி]

நடக்கிறது எதுவுமே, அது எனக்கு சந்தோஷத்தை இல்லை ஏதோ தாக்கத்தைத் தந்தால், அதைப்பற்றி சொல்லணும் என்று தோன்றினால் சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால், யாரும் கேட்டால் சொல்கிறேன். அவ்வளவுதான்… புதுமைப் பித்தன் நாவல் எழுதுகிறேன் என்று ஆரம்பித்து ஒரு இடத்திலே “அவரைக் கைத் தாங்கலாக அழைத்து வந்ததாக” எழுதுகிறார்… நிறைய சச்சரவுகள் வரும் என்று பிரசுரமாகவில்லை. கடைசியில் டைம்ஸ் டுடேயோ என்னவோ பத்திரிகையில் பிரசுரமானது. இதன் தமிழ் வடிவத்தை தமிழ் ஹிந்து (www.tamilhindu.com) என்னும் இணைய இதழில் பார்க்கலாம்… பிச்சமூர்த்தி யாப்பில் எழுதி fail ஆயிருக்கிறார் பார்த்தீர்களா?…

View More ஒரு நாள் மாலை அளவளாவல் – 3 [இறுதிப் பகுதி]