மஹாகவி பாரதியாரின் கதைகள் – கடற்கரையாண்டி

காலை முதலாகவே வானத்தை மேகங்கள் மூடி மந்தாரமாக இருந்தபடியால் மணல் சுடவில்லை. உச்சிக்கு நேரே சூரியன். மேகப் படலத்துக்குட்பட்டு சந்தேகத்தால் மறைக்கப்பட்ட ஞானத்தைப்போல் ஒளி குன்றியிருந்தான்… குருட்டு வெயில் கடல்மீது படுவதனால், அலைகளைப் பார்க்கும்போது கொஞ்சம் கண் கூசிற்று. சிறிது தொலையில் ஒரு வெளிநாட்டு வியாபாரக் கப்பல் …

View More மஹாகவி பாரதியாரின் கதைகள் – கடற்கரையாண்டி

ஜாகிர் ராஜாவின் ‘செம்பருத்தி பூத்த வீடு’

எல்லோரும் ஒண்ணா நிண்டு தொழலாம், சொடலை இல்லை. உம்பேரு சுலைமான். எப்படி இருக்கு என்று ஆசை காட்டுகிறார். மீன் தூண்டிலில் சிக்கிவிட்டது என்று நாணாவுக்கும் சந்தோஷம். புது கைலி, சட்டை, தொப்பி எல்லாம் வருகிறது. நூறு ரூபாய் நோட்டு ஒன்றும் அவன் கையில். நாளைக்கு குளிச்சிட்டு புது சட்டை கைலி கட்டீட்டு வந்துரு பள்ளி வாசலுக்கு என்கிறார் நாணா. ஊரில் ஒரே பரபரப்பு. சுடலை சுலைமானாகப் போகிறான் என்று.

View More ஜாகிர் ராஜாவின் ‘செம்பருத்தி பூத்த வீடு’

மஹாகவி பாரதியாரின் கதைகள் – கடல்

நடுக்கடலில் ஒரு தீவு; அதனிடையே பெரிய அரண்மனை. அரண்மனைக்கருகே சிங்காரத் தோட்டம். அதில் ஒரு நீரோடை. அதனருகே புல்லாந் தரை மேல் பதினாறு வயதுள்ள ஒரு கன்னிகை உட்கார்ந்திருந்தாள். அவள் என்னைக் கண்ட மாத்திரத்தில் எழுந்து அரண்மனைக்குள் ஓடிப்போய் விட்டாள். நான் அவ்வழியைப் பின்தொடர்ந்து சென்றேன்.

View More மஹாகவி பாரதியாரின் கதைகள் – கடல்

வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 3

சிலப்பதிகாரம் வேதநெறியை எவ்வளவு உயர்வாகப் பேசிற்றோ அதற்கு மாறான நிலையில் மணிமேகலை வேதநெறியையும் வேதநெறியில் நிற்போரையும் பழிப்பதில் தலைநிற்கின்றது. மணிமேகலை பவுத்தமதப் பிரச்சார இலக்கியமாக இருப்பதே அதற்குக் காரணம்.

View More வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 3

வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 2

திருக்குறள் வேதநெறியினைத் தழுவிக்கொண்டு தமிழ்மரபின் தனித்தன்மையையும் நிலைநிறுத்தும் அறநூலாகும். பிறப்பால் மட்டுமே சாதியுயர்வைப் பேசுவாரை வேதமும் இழித்துரைக்கின்றது… ‘ஜன்ம பிராமணனை விடக் கன்ம பிராமணனுக்கே ஏற்றம்’ என்பதைத் திருவள்ளுவரும் எடுத்துக் காட்டியுள்ளார்.

View More வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 2

வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 1

கொற்றவை, பழையோள் ஆகிய தொல்குடிப் பெண் தெய்வங்கள், வைதிகக் கடவுளாகிய ‘மால்வரை மலைமகளு’டன் இணையப் பெறுகின்றனர். அந்த இணைப்பைச் செய்பவன் முருகன். இது தொல்பெரும் தமிழ் மரபும் வேத நெறியும் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரேயே தம்முட் கலந்து இணங்கியமைக்குத் தக்க சான்றாகும்.

View More வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 1

மஹாகவி பாரதியாரின் கதைகள் – புதிய கோணங்கி அதாவது குடுகுடுப்பைக்காரன்

குடுகுடு, குடுகுடு, குடுகுடு, குடுகுடு, சாமிமார்க்கெல்லாம் தைரியம் வளருது, தொப்பை சுருங்குது; சுறுசுறுப்பு விளையுது, எட்டு லச்சுமியும் ஏறி வளருது, பயந் தொலையுது, பாவந் தொலையுது, சாத்திரம் வளருது, சாதி குறையுது, நேத்திரம் திறக்குது, நியாயந் தெரியுது, பழைய பைத்தியம் படீலென்று தெளியுது. வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது, சொல்லடீ சக்தி, மலையாள பகவதி, தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது.

View More மஹாகவி பாரதியாரின் கதைகள் – புதிய கோணங்கி அதாவது குடுகுடுப்பைக்காரன்

விடியல்பாட்டு

வைகறைக் கணத்தைக் குறிக்க முடியாமல், அதிகாலைப் புலர்வின் அற்புத அழகை விவரிக்கவொண்ணாமல், தோற்றுத் தோற்றுத் தோத்திரம் செய்கின்றன வேதங்கள்! நான் அந்த மந்திரக் கணத்தை, ஒரு மாதிரியாகக் கவனித்து வைத்திருக்கிறேன்!

View More விடியல்பாட்டு

மஹாகவி பாரதியாரின் கதைகள்: பிழைத்தோம்

“டாம், டாம் என்று வெடிச் சத்தம் கேட்கிறது. எங்கு பார்த்தாலும் புகை. அந்தப் புகைச்சலுக்குள்ளே நான் சுழற் காற்றில் அகப்பட்ட பக்ஷி போலே அகப்பட்டுக் கொண்டேன்.

View More மஹாகவி பாரதியாரின் கதைகள்: பிழைத்தோம்

மருளர்களோடு மன்றாடுதல்: சல்மான் ருஷ்டி

… ஏனெனில், உலகிலுள்ள அனைவருக்கும் பொது உரிமையான கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாக நான் மன்றாடுகிறேன். கருத்துச் சுதந்திரத்தின் பகுத்தறிவுத் தன்மையைவிட, அது மனித இயல்பின் இதயமாக இருப்பதே எனது செயல்களுக்குக் காரணம் என்று என் மனசாட்சி சொல்லுகிறது. (”மிட்நைட் டையஸ்பரா: என்கவுண்டர்ஸ் வித் சல்மான் ருஷ்டி” புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்)

View More மருளர்களோடு மன்றாடுதல்: சல்மான் ருஷ்டி