பரதத்தில் பஞ்சதந்திரம்: பவித்ரா ஸ்ரீநிவாசன்

பவித்ரா ஸ்ரீனிவாசன் பல பரதநாட்டிய விற்பன்னர்களிடம் பயிலும் பொன்னான வாய்ப்பைப் பெற்றுள்ளார். தற்போது, உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீமதி மற்றும் ஸ்ரீமான் தனஞ்சயன் நடனத் தம்பதியரிடம் சிறப்புப் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். மேலும், ‘பத்மபூஷன்’ கலாநிதி நாராயணனிடம் கற்றுக்கொள்ளும் பெரும்பேற்றையும் பவித்ரா பெற்றுள்ளார். முதல் முறையாக குறுந்தகட்டில்(CD), பாரம்பரிய நடனத்தை வெளியிட்டவர் இவரே. கிருஷ்ண கான சபா இவருக்கு ‘பால சரஸ்வதி’ பட்டம் கொடுத்துச் சிறப்பித்தது. பாரத் கலாச்சார் ‘யுவகலா பாரதி’ பட்டம் வழங்கியுள்ளது. மியூசிக் அகாடமி, திறமை மிக்க இளம் கலைஞருக்கான ‘எம்ஜியார் விருது’ வழங்கியுள்ளது.

View More பரதத்தில் பஞ்சதந்திரம்: பவித்ரா ஸ்ரீநிவாசன்

மஹாகவி பாரதியாரின் கதைகள் – ஓநாயும் வீட்டு நாயும்

தூ! பிரஷ்டப் பயலே! என்னை நீ ஏமாற்றப் பார்த்தாய். உன் பிழைப்பும் ஒரு பிழைப்பா?நீ ஒரு அடிமையாய் இருந்தும் மெத்த ஜம்பமாய்ப்பேசினாய்; நான் சுதந்திரப் பிரியன்.

View More மஹாகவி பாரதியாரின் கதைகள் – ஓநாயும் வீட்டு நாயும்

அசுர சக்திகளும் தமிழ் வீரர்களும் அரசுரிமையும்: அமரர் கல்கி

… இந்தப் புண்ணிய பரத கண்டத்தின் வடமேற்குத் திசைக்கு அப்பால் மௌடீக அசுர சக்திகள் சில தோன்றியிருப்பதாக அறிகிறேன். அவர்கள் மூர்க்காவேசத்துடன் போர் புரிந்து நகரங்களைச் சூறையாடிக் குற்றமற்ற மக்களைக் கொன்று கோயில்களையும் விக்கிரகங்களையும் உடைத்துத் தகர்த்து நாசமாக்குகிறார்களாம். .. இந்தத் தெய்வத் தமிழ்நாட்டுக்கு அத்தகைய கதி நேராதிருக்கட்டும். அப்படி நேர்வதாயிருந்தால், வீரமறக் குலத்தில் பிறந்த நீங்கள் அந்த அசுர சக்திகளுடன் போராடச் சித்தமாயிருக்க வேண்டுமல்லவா?” …

View More அசுர சக்திகளும் தமிழ் வீரர்களும் அரசுரிமையும்: அமரர் கல்கி

மஹாகவி பாரதியாரின் கதைகள் – காற்று – தேவதரிசனம்

அவன் வரும் வழியிலே சோலைகளும் பூந்தோட்டங்களும் செய்து வைப்போம்.

அவன் வரும் வழியிலே கற்பூரம் முதலிய நறும் பொருள்களை கொளுத்தி வைப்போம்.

View More மஹாகவி பாரதியாரின் கதைகள் – காற்று – தேவதரிசனம்

வையகம் இதுதானடா

… அந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தி சற்றே ஆராய்ந்து பார்த்ததில், வெள்ளைத்தாதன்பட்டி பக்கம் உள்ள கோயில் வெறும் கோயில் மட்டுமல்ல. சுரங்க வாசலும்கூட என்று தெரியவந்தது. நான்கு நாயக்கர்கள் ஒட்டிக்கொண்டிருக்கும் நான்கு தூண்களுக்கு நடுவில் ரகசிய சுரங்கம் ஆரம்பிக்கிறது. நிலக்கோட்டை அரண்மனைக்கு இட்டுச் செல்லும் இரண்டு மூன்று சுரங்கங்களில் இதுவும் ஒன்று என்று யூகம். என்னைத் தவிர வேறு யாரிடமும் இதைப் பற்றி ஜெயக்குமார் சொன்னதில்லை ….

View More வையகம் இதுதானடா

பகைவருக்கருள்வாய் நன்னெஞ்சே

பல நூற்றாண்டுகளாக ஆப்கானிஸ்தானிலிருந்தும் அதற்கு அப்பாலிருந்தும் இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் பாரதத்தின் மீது படையெடுப்பதும் தாக்குவதும் கொள்ளை அடிப்பதும், அடிமைகளாக மக்களை சிறைபிடித்து செல்வதும் நடந்து வந்துள்ளன. மகாராஜா ரஞ்சித் சிங் காலத்தில்தான் இந்த கொடூரச்செயல்களை நிறுத்தும்படி ஆப்கானிஸ்தானம் பணியவைக்கப்பட்டது.

View More பகைவருக்கருள்வாய் நன்னெஞ்சே

மஹாகவி பாரதியாரின் கதைகள்-செய்கை

“நாட்டியம் மிகவும் மேலான தொழில். இப்போது அந்தத் தொழிலை நமது நாட்டில் தாஸிகள் மாத்திரமே செய்கிறார்கள். முற்காலத்தில் அரசர் ஆடுவதுண்டு. பக்தர் ஆடுவது லோக பிரசித்தம். கண்ணன் பாம்பின் மேலும், சிவன் சிற்சபையிலும் ஆடுதல் கண்டோம்.

View More மஹாகவி பாரதியாரின் கதைகள்-செய்கை

மஹாகவி பாரதியாரின் கதைகள் – கடற்கரையாண்டி

காலை முதலாகவே வானத்தை மேகங்கள் மூடி மந்தாரமாக இருந்தபடியால் மணல் சுடவில்லை. உச்சிக்கு நேரே சூரியன். மேகப் படலத்துக்குட்பட்டு சந்தேகத்தால் மறைக்கப்பட்ட ஞானத்தைப்போல் ஒளி குன்றியிருந்தான்… குருட்டு வெயில் கடல்மீது படுவதனால், அலைகளைப் பார்க்கும்போது கொஞ்சம் கண் கூசிற்று. சிறிது தொலையில் ஒரு வெளிநாட்டு வியாபாரக் கப்பல் …

View More மஹாகவி பாரதியாரின் கதைகள் – கடற்கரையாண்டி

மஹாகவி பாரதியாரின் கதைகள் – கடல்

நடுக்கடலில் ஒரு தீவு; அதனிடையே பெரிய அரண்மனை. அரண்மனைக்கருகே சிங்காரத் தோட்டம். அதில் ஒரு நீரோடை. அதனருகே புல்லாந் தரை மேல் பதினாறு வயதுள்ள ஒரு கன்னிகை உட்கார்ந்திருந்தாள். அவள் என்னைக் கண்ட மாத்திரத்தில் எழுந்து அரண்மனைக்குள் ஓடிப்போய் விட்டாள். நான் அவ்வழியைப் பின்தொடர்ந்து சென்றேன்.

View More மஹாகவி பாரதியாரின் கதைகள் – கடல்

மஹாகவி பாரதியாரின் கதைகள் – புதிய கோணங்கி அதாவது குடுகுடுப்பைக்காரன்

குடுகுடு, குடுகுடு, குடுகுடு, குடுகுடு, சாமிமார்க்கெல்லாம் தைரியம் வளருது, தொப்பை சுருங்குது; சுறுசுறுப்பு விளையுது, எட்டு லச்சுமியும் ஏறி வளருது, பயந் தொலையுது, பாவந் தொலையுது, சாத்திரம் வளருது, சாதி குறையுது, நேத்திரம் திறக்குது, நியாயந் தெரியுது, பழைய பைத்தியம் படீலென்று தெளியுது. வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது, சொல்லடீ சக்தி, மலையாள பகவதி, தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது.

View More மஹாகவி பாரதியாரின் கதைகள் – புதிய கோணங்கி அதாவது குடுகுடுப்பைக்காரன்