அரசிடமிருந்து கோவில்கள் மீட்பு – ஏன் அவசியம்?

சுதந்திரத்திற்குப்பின் காங்கிரஸ், திராவிட கட்சிகள் கோவிலுக்கு எதுவுமே செய்யவில்லை என்று நான் விவாதிக்க தயார் இல்லை. எல்லோருமே ஏதோ ஒன்று முயன்றுள்ளார்கள். ஆனால் பல ஆயிரம் வருடம் காப்பாற்றப்பட்ட இந்த நிலம் – கோவில் – சிலை – கல்வெட்டுகள் எல்லாம் கடந்த 50 வருடத்தில் சூறையாடப்பட்டதன் அளவீட்டை கவனியுங்கள். இது முழுக்க முழுக்க நிர்வாக கோளாறாலும், அதிகார துஷ்பிரயோகத்தாலும் நடந்தது என்பதை பிரித்துப் பார்க்க நமக்கு ஒரு ஆய்வு தேவையில்லை. எனவே, ஜக்கி வாசுதேவ் சொல்கிற ஒரு புள்ளிக்கு நாம் வர வேண்டும். இதில் ஹிந்து பெருமக்களுக்கும், இந்த கலாச்சாரத்திற்கும் மாதேவடிகளான செம்பியன் மாதேவியார் தருகிற வலிமையான செய்தி ஒன்று உள்ளது. “அண்ணா,எங்கள் ஊருடைய பழைய பெயர் என்ன?” என கேட்டார்கள். அப்போதும் ஆநாங்கூர்தான் என்றோம். ஆனால் அவர்கள் நம்பவில்லை..

View More அரசிடமிருந்து கோவில்கள் மீட்பு – ஏன் அவசியம்?

பாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்

பாரம்பரியமும் பழமையும் வாய்ந்த சுவரோவியங்கள் உள்ள கோவில்கள் தமிழ்நாட்டில் எங்கெங்கு இருக்கின்றன என்று ஒரு பட்டியல்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில், வீடூர் ஆதிநாதர் கோவில், குறிஞ்சி கோதண்டஸ்வாமி கோவில், நார்த்தாமலை விஜயாலய சோழீச்சுரம் கோவில், தஞ்சைப் பெரிய கோவில், திருக்குறுங்குடி நின்றநம்பி கோவில், முழையூர் ஆதிச்சிவப்பிரகாச மடம், செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி கோவில்….

View More பாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்

கொலைகாரக் கிறிஸ்தவம் – 27

1621 பிப்ரவரி 2-ல் யாழ்ப்பாணத்தில் போர்ச்சுகீசிய உயரதிகாரியாகப் பதவியேற்ற கவர்னர் ஒலிவேராவின் ஆணையின்படி அன்றே நல்லூரின் புகழ்பெற்ற கந்தசுவாமி ஆலயம் இடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1622-ஆம் வருடம் இன்னொரு புகழ்பெற்ற பெருங்கோவிலான ஆரியச் சக்கரவர்த்தி ஆலயமும், திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயமும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

View More கொலைகாரக் கிறிஸ்தவம் – 27

கோயில் நிலத்தைக் காக்கப் போராடும் தனியொருவர்!

ஊதியூர் மலையை ஒட்டி குண்டடம் சாலையில், 101 ஏக்கர் நிலத்தில் கடந்த 2017ஆம் ஆண்‌டு ஹட்சன் அக்ரோ பிராடக்ட் லிமிடெட் என்ற தனியார் பால் தயாரிப்பு நிறுவனம் பால் பதப்படுத்தும் தொழிற்சாலை கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது. பணிகள் நடந்து கொண்டிருந்த நிலையில், அந்த இடம் உத்தண்ட வேலாயுத சுவாமி கோயிலுக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்தது.

View More கோயில் நிலத்தைக் காக்கப் போராடும் தனியொருவர்!

சிலைத் திருடன்: புத்தக அறிமுகம்

எவ்விதத் தகவல்களையும் நாம் சேமிக்காதது சிலைத் திருட்டை மிக எளிதாக்கி இருக்கிறது. சோழர் காலச் சிலைகளை விதவிதமாகக் கடத்தி இருக்கிறார்கள். மூலச் சிலைக்குப் பதிலாக அதே போன்ற போலிச் சிலையைச் செய்து வைப்பது, போலிச் சிலை இல்லாமலேயே மூலச் சிலையைக் கடத்திவிடுவது, பல சாதா சிலைகளைச் செய்து அவற்றோடு பழங்காலச் சிலைகளைச் சேர்த்துக் கடத்துவது, சிலைகள் மட்டுமில்லாமல் பழங்கால புராதன சின்னங்கள் எதுவானாலும் கடத்துவது, நேரடியாக தனக்குத் தேவையான ஊருக்குக் கடத்தாமல் பல நாடுகளுக்குச் சுற்றி எடுத்துச் சென்று கடத்துவது… இப்படிப் பல வகைகளில் கடத்துகிறார்கள்… இந்தியா போன்ற தனி மனித உயிருக்கு எவ்வித மரியாதையும் அற்ற ஒரு நாட்டில் இது போன்ற ‘உலகளாவிய’ விஷயத்தை எதிர்ப்பது பெரிய சவால். அதை எதிர்கொண்டு மிகத் தெளிவாக ஆவணப்படுத்தி இருக்கிறார் விஜய் குமார். அதைவிட முக்கியம் இவரது முயற்சியில் நம் தெய்வங்கள் தனக்கான இடங்களில் மீண்டும் ஆராதனை பெறத் துவங்கி இருக்கிறார்கள்…

View More சிலைத் திருடன்: புத்தக அறிமுகம்

சபரிமலை ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவம்

இல்லறத்தில் இருப்பவர்கள் மோக்ஷமே வாழ்வின் இறுதியான நோக்கம் என்பதை மறவாமல் இருக்கவும், அதற்காக படிப்படியாகத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளவுமே ஐயப்ப தெய்வ வழிபாடு அமைக்கப்பட்டிருக்கின்றது. ஆணும் பெண்ணுமாய், கணவன் மனைவியாய், தாயும் தந்தையுமாய் குடும்பமாய் இறைவன் எழுந்தருளியிருக்கும் கோலம் எல்லா கோயில்களிலும் நாம் காணுவது. அது இல்லற வாழ்க்கைத் தத்துவத்தைக் காட்டுவது. ‘ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்’ எனும் துறவியல் தத்துவத்தைக் காட்டுவது சபரிமலை ஐயப்பன் எழிற்கோலம்.. முறைப்படுத்தப்பட்ட காமம் ஆக்கசக்தியாகிறது. கட்டுப்படுத்தப்படாத காமம் அழிவுசக்தியாகிறது. ஆண்கள் உடலையும் மனத்தையும் காமத்தையும் வெல்லும் பயிற்சியாகவே ஐயப்ப விரதம் இருக்கிறது. இது ஆண்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டது. (மாதவிடாயுள்ள பருவத்தில் இருக்கும்) கன்னிப் பெண்கள், சுமங்கலிப் பெண்களுக்கென விரதங்கள், வழிபாட்டு முறைகள் – விசேஷமாகப் பெண்களுக்கே உரியனவாக – நமது பண்பாட்டில் பல உள்ளன. அதுவே அவர்கள் மனக்கட்டுப்பாட்டுக்குப் போதுமானது…

View More சபரிமலை ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவம்

திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 2

திருநாவலூர் சுந்தரர் மடம் அறநிலையத்துறை ஆவணங்களின்படி ஸ்ரீ பக்தஜனேஸ்வரர் கோயிலின் கிளை கோயிலே. எனவேதான் 2013 ஆம் ஆண்டு விழுப்புரம் இணை ஆணையர் புது மண்டபம் கட்டுதல் என்றபடிக்கே உபயதிருப்பணி அனுமதி கொடுத்துள்ளார். இந்த உபயதிருப்பணிக்கு அறநிலையத்துறை 6 நிபந்தனைகளை கொடுத்துள்ளது. அதில் முக்கியமாக இரண்டாவது நிபந்தனை ஆகமவிதிப்படி செயல்படவேண்டும் என்பது. ஆனால் இன்று அத்தனை நிபந்தனைகளும் ஆள்பலம் அரசியல் பலத்தால் மீறப்பட்டிருக்கின்றது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது அறமற்றதுறை… சைவவேடதாரிகள், ஆணவப்போக்கோடு, சுந்தரர் மடம் நிலைப்பெற கடந்த நூறு ஆண்டுகளில் காரணமாக இருந்த சிவாச்சாரியார்களை மிரட்டி ஒதுக்கியும், பாரம்பர்ய சைவ ஆதினங்களின் வழிகாட்டுதல் இல்லாமலும் தான்தோன்றித் தனமான திருப்பணியும் குடமுழுக்கும் செய்து விட்டிருக்கிறார்கள். இந்த சைவவேடதாரிகளின் இன்றைய செயல்பாடு சரிதானா? சைவதர்மமா? என்பதை சைவசமயத்தார்கள் சீர்தூக்கி சிந்திக்கவேண்டும்…

View More திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 2

திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 1

அக்காலத்தில் குருக்கள் நித்யபடி வாழ்க்கையே கஷ்டமானது. அந்த கஷ்டத்திற்க்கும் நடுவில், ஊருக்கு ஒரு குடியாக உள்ள குருக்கள் எல்லாம் சேர்ந்து திருப்பணி செய்வது அசாத்யமானது. ஆனால் ஸ்ரீ சுந்தரர் பெருமான் மீது கொண்ட பக்தியும் அன்பும், சுவாமி திருவருள் துணை ஒன்றையுமே நம்பிச் செய்தார்கள். அன்று அவ்விடத்தில் திருமடம் அமைக்கவில்லை என்றால், காலப்போக்கில் பல கோயில் இடங்கள் மாயமானது போன்று, ஸ்ரீ சுந்தரர் அவதார பூமியும் மயமாகி மறைந்தே இருக்கும். ஆனால், இன்றோ சுந்தரர் பூமியை அடையாளப்படுத்திய சிவாச்சாரியார்களை அவ்விடத்திற்கு வரவிடாமல் குண்டர்களை வைத்து மிரட்டும் சைவவேடதாரிகளை திருமுறை வியாபாரிகளை என்னவென்று சொல்வது? சிவாச்சாரியார்களை மிரட்டி வெளியேற்றி சுயநல லாபத்திற்ககாக, அடையாள அரசியலுக்காக திருப்பணி செய்யும் ருத்திராட்ச வேடதாரிகளை இறைவன் மன்னிக்கவே மாட்டார். இப்பொழுது நடைபெற்றுள்ள திருப்பணி பல உண்மையான சிவாச்சாரியார்களின் மனவேதனையில், மன துக்கத்தில் எழும்பும் ஒரு ஆகம விதியற்ற மாயக் கட்டிடம். ஒரு மரபிடம் இருந்து பிடுங்கி அவர்களை மிரட்டி வெளியேற்றி செய்யும் இந்த திருப்பணி கண்டிப்பாக இறை திருப்பணி அல்ல.. உண்மை சைவர்களின் பரவலான எதிர்ப்பையும் மீறி முற்றிலும் வேதாகம விரோதமாக ஒரு சமய, கலாசார அழிப்பு குடமுழுக்கு என்ற பெயரில் திருநாவலூரில் நடந்தேறியிருக்கிறது…

View More திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 1

தாமிரபரணி புஷ்கரம்: தடை போடுகிறதா தமிழ்நாடு அரசு?

இந்த நிகழ்வானது பாரத நாடெங்கும் தொடர்ந்து நடந்து வரும் பல்வேறு புனிதநீராடல் விழாக்களிலிருந்து எந்த வகையிலும் வேறுபட்டதல்ல.. இந்த அனைத்து மாநிலங்களிலும் சம்பந்தப்பட்ட அரசுத்துறைகள் கோயில் நிர்வாகங்கள், ஆன்மீக அமைப்புகள கூடிப் பேசி பரஸ்பர ஒத்துழைப்புடன் இந்த விழாக்கள் நடந்தேறுகின்றன. முதலமைச்சர்களே கூட கலந்து கொள்கிறார்கள். அத்தகைய நல்ல முன்னுதாரணத்தை கடந்த வருடம் காவேரி புஷ்கரத்தின் போது தமிழ்நாடு அரசும் கடைப்பிடித்தது. இப்போது என்ன ஆயிற்று?.. “குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயிலில் அதிகமான பக்தர்கள் செல்ல பாதைவசதி இல்லை; இடவசதியும் இல்லை” என்று வெட்கமில்லாமல் எழுதுகிறார் ஒரு அரசு அதிகாரி. 1990களில் கூட கோயிலுக்கு முன்பாக மனதைக் கொள்ளை கொள்ளும் மணல்மேடு இருந்தது. அதனை முழுவதுமாகத் தோண்டி மணல் கொள்ளையர்கள் அழித்த பிறகு, இப்போது சேறும் சகதியும் முட்புதர்களும் பரவிய குப்பை மேடாக ஆகி விட்டிருக்கிறது. அட, இந்த விழாவை முன்னிட்டாவது அதைத் தூய்மை செய்து பயன்பாட்டுக்கு ஏற்றபடி ஆக்கலாம் என்று இந்த ஆணையருக்கு புத்தி போகவில்லை. அரசின் கையாலகாத் தனத்தை முரசறைவது தான் அவருக்குத் தெரிந்திருக்கிறது…

View More தாமிரபரணி புஷ்கரம்: தடை போடுகிறதா தமிழ்நாடு அரசு?

‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2

மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாற்று ஆராய்ச்சி என்ற போர்வையில் திருப்பெருந்துறை கோயிலை சிவாலயமன்று என்று நிறுவமுயன்று, அதற்கு அறிவார்ந்த சான்றுகள் எதுவும் கிடைக்காமல் போக, கருவறையில் லிங்க பணமில்லை, அம்பிகையின் சந்நிதியில் திருமேனியில்லை, கல்வெட்டில்லை, நந்தியில்லை, கொடிமரமில்லை, கோணங்கியில்லை, என் தகப்பன் குதிருக்குளில்லை என்பது வரை பேசி, அது சமணச்சார்புடைய கோயில் என்று கொண்டு நிறுத்தி, அதற்கும் அடங்காமல் ஆதாரமுமில்லாமல், ஏதோ ஒரு க்ராமக்கோயில் கல்வெட்டை கோடிட்டு காட்டி, பீடம், இந்திரன், சாத்தன், திருமால், குதிரை, கொட்டடி, கொள்ளுக் கடையென்று கொட்டமடித்து விளையாடியுள்ளார். என்ன விதமான ஆராய்ச்சி இது? இதற்கு சைவசித்தாந்தப் பெருமன்றமும் துணைபோயுள்ளது. இனிவரும் ஆண்டுகளில் இது போன்ற “ஆய்வு” நூல்கள் வெளிவரும் என்று வேறு பயமுறுத்தியுள்ளார். மிகக்கொடுமை. ஆரூர் த்யாகேசப்பெருமான் காப்பாற்றட்டும்…

View More ‘மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ நூல்: கலக்கமும் தெளிவும் – 2