மானுடத்தை வாழவைக்கும் தீபத் திருவிழா

தாயுணர்வு கொண்ட ஆன்மிகமே பூமியின் காயங்களுக்கும் மானுட நல்வாழ்வுக்கும் அருமருந்தாக அமையும் என்பதே நரகாசுர வதம் எனும் தொன்மம் இன்றைய சூழலில் நமக்கு அளிக்கும் திருசெய்தியாகும்… மாசற்ற செல்வம் தோன்றிய திருநாள் தீபாவளி. இயற்கையுடன் இணைந்த ஆன்மிகத்துக்கு இறைவனே சான்றுரைத்த திருநாள். தென்னாப்பிரிக்காவில் மகாத்மாவின் சத்தியாகிரகத்தின் முன்னோடியாக விளங்கிய தீபாவளி இந்திய கொத்தடிமை தொழிலாளர்களின் தொடர்ந்த ஏறத்தாழ அரை நூற்றாண்டு போராட்டத்தினால் 1906 இல்தான் கொண்டாட அனுமதிக்கப்பட்டது.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!

View More மானுடத்தை வாழவைக்கும் தீபத் திருவிழா

மதம் மாற்றாதீர்கள் !

மூலம்: டாக்டர் திருமதி ஹில்டா ராஜா
மொழியாக்கம்: ஸ்ரீநிவாசன் ராஜகோபாலன்
“நான் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவள்தான். எனது புரிதலின்படி கன்வர்ஷன் என்பது வாழ்நாள் முழுவதும் உண்மையைத் தொடர்ந்து தேடும் ஒரு வாழ்க்கைமுறை. மத மாற்றம் என்பது ஒரு தனிப்பட்ட விஷயம், ஒரு தெருக்கூத்தல்ல, எண்ணிக்கையைக் கூட்ட நிகழ்த்தப்படும் ஒரு செயலுமல்ல. மதமாற்றம் என்பது கண்டிப்பாக ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்துக்கு மனிதர்களைக் களவாடும் வேலை அல்லவே அல்ல… அன்னிய நாட்டு நிறுவனங்கள் எதற்காக இவ்வித மதமாற்றத்திற்குப் பண உதவி புரிகின்றன? சர்ச்சுகளுக்கு வரும் அன்னிய நாட்டு பண வரவை நாம் சட்டப் படி தடை செய்து விட்டு, அதற்குப் பிறகு எவ்வளவு மத மாற்றங்கள் நடை பெறுகின்றன என்று தான் பார்க்கலாமே!

View More மதம் மாற்றாதீர்கள் !

நிலவில் தடம் பதிக்கும் பாரதம்!

பாரத விண்வெளியாளர்கள் வெற்றிகரமாக “சந்திரயான்-1” என்னும் விண்கலத்தை விண்வெளியில் நிலவை நோக்கிச் செலுத்தியுள்ளார்கள்.…

View More நிலவில் தடம் பதிக்கும் பாரதம்!

பைத்ருகம் – ஓர் அறிமுகம்

இந்து மத நம்பிக்கைகளைக் கேவலமாகச் சித்தரிக்கும் தமிழ் பட உலகை ஒப்பிடும் பொழுது மலையாளப் பட உலகில் ஒரு நேர்மையைக் காண முடிகிறது. மலையாளப் பட உலகம் கம்னியுஸ்டுகளின் கோரப் பிடியில் சிக்கியிருந்தாலும் கூட பொதுவாக அவர்களிடம் அநாவசியமாக ஒரு மதத்தை இழிவு செய்யும் நோக்கில் எடுக்கப் படும் படங்களைத் தமிழில் காண்பது போலச் சர்வ சாதாரணமாகப் பார்க்க முடியாது. மேலும் தங்கள் நம்பிக்கைகளைச் சொல்லும் பொழுது அவர்கள் வெட்க்கப் படுவதோ மறைப்பதோ போலித்தனமாக நடிப்பதோ கிடையாது. எம் ஜி ராமச்சந்திரன் வெளியுலகில் நாத்திகக் கொள்கையுடையவராகத் தன்னைக் காண்பித்துக் கொண்டு ரோஸ் பவுடரின் நடுவே யாருக்கும் தெரியாமல் விபூதியைப் பூசிக் கொள்ளும் ஒரு வேடதாரியாகவே இருந்திருக்கிறார். திருப்பதி சென்று ஏழும்லையானை வணங்கியதற்காக சிவாஜி கணேசனை திராவிடக் கட்சிகள் வெளியேற்றின. இன்னும் பல இயக்குனர்களும் கலைஞர்களும் தங்கள் கடவுள் நம்பிக்கையை மறைத்துக் கொண்டால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற நிலை தமிழ்த் திரைப் பட உலகத்தில் தொடர்ந்தது.

View More பைத்ருகம் – ஓர் அறிமுகம்

வனவாசிப் பழங்குடிகள் இந்துக்களே

ஜவஹர்லால் நேருவின் தோழரான வீரியர் எல்வின் கிறிஸ்தவ மிஷினரி ஆவார். இந்திய வனவாசிகளை மதம் மாற்ற அவர் வந்தார். அவரது தொடக்க காலங்களில் வனவாசிகள் இந்துக்கள் அல்ல என்றும் இந்துமயமாக்கப்படுவதே வனவாசிகளுக்குப் பெரும் தீமை என்றும் அவர் பிரசாரம் செய்து வந்தார். ஏறத்தாழ பத்து ஆண்டுகள் வனவாசிகளுடன் வாழ்ந்த பின்னர் அவர் எழுதினார்: “பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நான் முதன்முதலில் ஆதிகுடிகளுடன் வாழ வந்தபோது அவர்கள் இந்துக்கள் அல்ல எனக் கருதினேன். ஆனால் பத்து ஆண்டுகள் அவர்களைக் குறித்து ஆழமாக ஆராய்ச்சி செய்தபோது நான் கொண்டிருந்த எண்ணம் தவறு என்பது நிரூபணமாகிவிட்டது.”…

View More வனவாசிப் பழங்குடிகள் இந்துக்களே

பாரதியும் தேசியமும்

மகாகவி சுப்பிரமணிய பாரதியையும், இந்த தேசத்தின்மேல் அவர் கொண்டிருந்த உணர்வையும் பிரித்துச் சொல்ல…

View More பாரதியும் தேசியமும்

திரைப் படங்களில் இந்து மதச் சித்தரிப்பு

திராவிட இயக்கம் தமிழ் சினிமாவைக் கடத்திச் செல்ல ஆரம்பித்த 50கள் வரை தமிழில்…

View More திரைப் படங்களில் இந்து மதச் சித்தரிப்பு

அந்த அடக்குமுறையாளர்கள் !

மூலம்: தருண் விஜய், மொழியாக்கம்: ஸ்ரீநிவாசன் ராஜகோபாலன்
நல்ல நோக்கங்களுடைய நமது அன்பிற்குரிய பல ஹிந்துக்கள், சிறிதும் வெட்கமில்லாமல், தாங்கள் ஒரு கிருத்துவ பள்ளியில் படித்திருந்தாலும், கிருத்துவத்துக்கு மதம் மாறவில்லை என்று பல முறை பீற்றிக்கொள்வார்கள். அப்படிப்பட்ட மேன்மையாளர்களின் பட்டியலில் எனது பேரையும் நான் சேர்க்கச் சொல்லவா? நான் ஒரு கிருத்துவப் பள்ளியில்தான் படித்தேன். எனது ஆசிரியர்களான ஜேக்கப் சார், மற்றும் ஃபாதர் பெஞ்சமின் மீது அன்பு கொண்டுள்ளேன். ஆனால், அவ்வன்பு, “சார், ஒரு ஹிந்துவாக, நான் மதிக்கிற, நீங்கள் சார்ந்துள்ள மதத்தின் பெயரால் சிலர் செய்யும் செயல்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை” என்று கூறுவதைத் தடுக்கலாமா?ஜனநாயகமும் பன்மையும் இணைந்து நமது நரம்பில் ஓடும்போது, அந்த ஒரு சிலரின் அடக்குமுறையை எதிர்க்க நாம் ஏன் தயங்குகிறோம்?

View More அந்த அடக்குமுறையாளர்கள் !