பிரமிடின் அடித்தளத்தில் பொக்கிஷத்தைக் கண்டவர்: சி.கே.பிரகலாத்

சமுதாய பிரமிடின் அடித்தளத்தில் வாழும் மிகவும் ஏழையான மக்களுக்கு தேவைப்படும் சேவைகளையும் பயன்பாடுகளையும் அளிப்பதன் மூலம், கார்ப்ரேட் அமைப்புகள் இலாபம் பெற முடியும், அதே நேரத்தில் வறுமையை ஒழிக்கவும் முடியும் என்றார் உலகப் புகழ்பெற்ற பொருளாதார பேராசிரியர் சி.கே பிரகலாத்… பணத்தை அள்ளிக் கொடுத்து உருவாக்கும் தாராள மனப்பான்மையால் விளைந்ததல்ல ஜெய்ப்பூர் செயற்கை கால்கள்; மாறாக அடித்தள மக்களின் தேவைகளிலிருந்து, அதன் அனைத்து காரணிகளையும் கணக்கில் எடுத்து உருவானது.

View More பிரமிடின் அடித்தளத்தில் பொக்கிஷத்தைக் கண்டவர்: சி.கே.பிரகலாத்

சோழவரம் இந்து முன்னணி தலைவர் குரூர படுகொலை

சர்வேஸ்வரா கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து அங்கு மசூதி ஒன்றைக் கட்ட மதவெறி அமைப்புகள் முயன்றதாகவும் அதை எதிர்த்து சோழவரம் முன்சீஃப் நீதிமன்றத்தில் மூர்த்தி அவர்கள் வழக்குத் தொடர்ந்தார் என்றும் ஊர்மக்கள் கூறுகின்றனர்… பூதூர் பாபா தர்கா அருகில் இவர் காலை 11 மணிக்கு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் 10 இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன.. இந்த மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை ஓயாமல் போராடும் மன உறுதியை இறைசக்தி இந்தக் கிராம மக்களுக்கு அளிக்கட்டும்.

View More சோழவரம் இந்து முன்னணி தலைவர் குரூர படுகொலை

ராஜசேகர ரெட்டி: ஏழைப் பங்காளன் முதல் எவாங்கிலிஸ்ட் வரை

நெல்லின் கொள்முதல் விலையை ஒவ்வொரு ஆண்டும் அதிகப் படுத்தி வந்தமையால் விவ்சாயிகளின் மதிப்பையும், அன்பையும் பெருமளவில் சம்பாதித்துக் கொண்டார் ரெட்டி … ஏழுமலையானின் ஏழு மலைகளில் இரண்டு மலைகள் மட்டுமே அவருக்குச் சொந்தம் என்றும், மற்ற ஐந்து மலைகளையும் அரசு எடுத்துக் கொள்ளப் போவதாகவும் அரசாணை பிறப்பித்தார் ரெட்டி .. 2009 தேர்தலுக்கு முன்னால் கிறிஸ்துவ மக்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களித்து ராஜசேகர ரெட்டியையே மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

View More ராஜசேகர ரெட்டி: ஏழைப் பங்காளன் முதல் எவாங்கிலிஸ்ட் வரை

அஞ்சலி: கானசரஸ்வதி டி.கே.பட்டம்மாள்

… பட்டின் நேர்த்தியும், தேனின் அடர்த்தியும், மலரின் மென்மையும், வீணையின் கம்பீரமும், அருவியோசையின் ஒழுக்கும் எல்லாம் சேர்ந்த ஒரு அற்புதம் என்று அந்தக் குரலைக் கற்பனை செய்யலாம் ! ஸ்ருதியும், லயமும் சிறிதும் பிசகாமல் ராக பாவம் முழுமையாக நிறைந்து அந்தக் குரலோடு சேர்வதால் விளையும் சங்கீதம் தான் பட்டம்மாளின் இசை….

View More அஞ்சலி: கானசரஸ்வதி டி.கே.பட்டம்மாள்

மைக்கேல் ஜாக்ஸன் – மீட்பரைத் தேடி

கலைஞர்களின் ஆதார சக்தி மிகவும் உணர்ச்சி பூர்வமானது என்று சொல்லப்படுவதுண்டு. அது அடங்காமல் பீறிடும் போது அது அவர்கள் உடலையே சீரழிக்கும், ஆளுமையை சிதைக்கும் என்பார்கள். எந்த ஒரு சமூகமும்/தனிமனிதனும் வீழ்ச்சி அடையும்போது, அவர் சார்ந்த சமூகத்தின் ஆன்மிக வளம் மட்டுமே அந்த வீழ்ச்சியை தடுத்து நிறுத்தமுடியும்…

View More மைக்கேல் ஜாக்ஸன் – மீட்பரைத் தேடி

ராஜமார்த்தாண்டன் – மனதின் கலைஞன்

ராஜமார்த்தாண்டன் கவிஞர், திறனாய்வாளர். கொல்லிப்பாவை இதழ் ஆசிரியராக இருந்தவர். தினமணியில் உதவி ஆசிரியராக இருந்தவர். ‘மனப்பறவை’ கவிதையில் மலைச்சிகரம் நோக்கிப் பறக்கும் கவிதையைப் பற்றிப் பேசுகிறார். அந்த மனப்பறவை ராஜமார்த்தாண்டனே அன்றி வேறல்ல. ‘எல்லாமே நம்பிக்கையில்தான்’ கவிதையில், தன் கவிதை நம்மாலோ நம் வாரிசாலோ எப்படியும் உணரப்படும் என்கிறார். அவர் இறந்த செய்தி கேட்டு, ராஜமார்த்தாண்டனின் கவிதைகளைத் தேடிப்பிடித்து மீண்டும் வாசித்தபோது, அவரது நம்பிக்கை உண்மையாவதை உணர்ந்தேன். அதை உணர அவரில்லை. அஞ்சலி.

View More ராஜமார்த்தாண்டன் – மனதின் கலைஞன்

வீரர் மோகன் சந்த் சர்மா: அஞ்சலி

நேற்று (செப்டம்பர் 19) டெல்லி குண்டு வெடிப்புகளுக்கு காரணமான பயங்கரவாதிகளை பிடிக்க சென்ற போது பயங்கரவாதிகளின் குண்டுகளுக்கு பலியானார் காவல் துறை அதிகாரி மோகன் சந்த் ஷர்மா. இதுவரை தமது கடமையில் 35 பயங்கரவாதிகளை உயிரிழக்க செய்த இந்த மாவீரர் தேசத்துக்காகவும் நம் அனைவரின் பாதுகாப்புக்காகவும் தமது சொந்த குடும்பத்தைக் கூட கவனிக்காமல் தனது உயிரை பலிதானமாக்கியுள்ளார்…. நமது போலி மனித உரிமை வாதிகள், விலைக்கு போன ஊடகங்கள் நம் அனைவருடையவும் பாதுகாப்புக்காக உயிர் துறந்தவர்களின் தியாகத்தின் கனத்தை, அவர்கள் குடும்பங்களின் சோகங்களை அவை நம் பிரக்ஞையில் பதிய வைப்பதே இல்லை…தமிழ் இந்து.காம் நம் அனைவருடைய பாதுகாப்புக்காகவும் தன் குடும்பத்தையும் கவனிக்காமல் தன்னை பலிதானமாக்கிய இந்த வீரத்திருமகனுக்கு அஞ்சலி செய்கிறது.

View More வீரர் மோகன் சந்த் சர்மா: அஞ்சலி

ஹிமாசலப்பிரதேச ஆலய நெரிசலில் மரணித்த பக்தர்களுக்கு அஞ்சலி

தமிழ்இந்து.காம் சார்பாக உயிரிழந்த பக்தர்களின் உற்றார் உறவினர்களுக்குத் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.

View More ஹிமாசலப்பிரதேச ஆலய நெரிசலில் மரணித்த பக்தர்களுக்கு அஞ்சலி

குண்டுவெடிப்புகளில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

பெங்களூரிலும் அகமதாபாதிலும் குண்டுவெடிப்புகளில் இறந்த உயிர்களுக்கு தமிழ்இந்து.காம் தனது அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறது. மனிதம் மிக உன்னதமானது. உலகமெங்கும் வாழும் மனிதர்களை குலம், இனம், மொழி, மத நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு அப்பால் இந்து வேதங்கள் ‘அழிவின்மையின் மைந்தர்களே’ என அழைக்கின்றன….

View More குண்டுவெடிப்புகளில் இறந்தவர்களுக்கு அஞ்சலி