காஷ்மீர் விவகாரமும் ஒமர் அப்துல்லாவும்

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த காஷ்மீர் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 25.3.2013ந் தேதி காஷ்மீர் சட்ட மன்றத்தில் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, டெல்லி காவல் துறையினர் கைது செய்த ஹிஸ்-புல்-முஜாஹிதீன் (Hizb-ul-Mujahideen ) அமைப்பைச் சார்ந்த தற்கொலை படையின் பொறுப்பாளரான லியாகத் ஷா (Liaquat Shah ) என்பவனை டெல்லி காவல்துறையினர் கைது செய்த விவகாரத்தில், மாநில அரசுக்கும், டெல்லி காவல்துறையினரும் இடையே நடக்கும் அதிகார போட்டியின் காரணமாக சில முக்கியமான கருத்துக்களை சட்ட மன்றத்தில் தெரிவித்துள்ளார். மாநில முதல்வரின் கருத்து இந்தியா இறையான்மைக்கு எதிரான கருத்தாக தெரிவதால் இக் கட்டுரை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.  சட்ட மன்றத்தில் மூன்று முக்கியமான கருத்தை மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
omar01
அப்சல் குரு ஜனநாயகத்தின் கோவில் மீது தாக்குதலை நடத்தியுள்ளார்.  ஆனால் ராஜீவ் காந்தி மீது நடத்திய தாக்குதல் அல்லது பஞ்சாப் முதல்வர் பியாந்த் சிங் மீது நடத்திய தாக்குதல் ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இல்லையா?  (Afzal Guru had attacked the temple of democracy.  Was not the attack on Rajiv Gandhi or the one  on the Punjab Chief Minister (Beant Singh) an attack on democracy ) இவர்களை தாக்கியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.   அப்பாவி பொது மக்களை கொன்று குவித்த, சந்தன கடத்தல் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளி அனைவருக்கும் , அனைத்து சட்ட உதவிகளும் எல்லா நிலைகளிலும் கிடைத்தன. ஆனால் அப்சல் குருவிற்கு கிடைவில்லை. (forest brigand Veerappan and others of his gang were also involved in innocent civilian killings. Yet they were allowed to use every legal recourse in their defence)  1971லிருந்து காஷ்மீரில் அரசியல் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கொண்டு வரப்பட்ட ராணுவத்திற்கு  என கொடுக்கபட்டுள்ள தனி அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ச்சியாக குரல் கொடுத்தாலும், அச்சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு மறுக்கிறது. (Political issue since 1971 While reiterating hid demand of revocation of the Armed Forces Special Powers Act.   ) என்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.  இதன் மூலம் காஷ்மீர் முதல்வர் இஸ்லாமியப் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டை முன் வைக்கலாம்,
ஆயுதமற்ற காவல் படையினரை அடித்தே கொல்லும் இஸ்லாமிய வெறியர்கள்
ஆயுதமற்ற காவல் படையினரை அடித்தே கொல்லும் இஸ்லாமிய வெறியர்கள்
அப்சல் குரு பாராளுமன்ற கட்டிடத்தை தாக்கிய வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதை மறந்து விடக் கூடாது.  2001 டிசம்பர் மாதம் 13ந் தேதி பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தடுக்க தவறியிருந்தால், பல மூத்த தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இறந்திருப்பார்கள் என்பதை கூட ஒமர் அப்துல்லா நினைத்து பார்க்க வில்லை.  ராஜீவ் காந்தி கொலை செய்த குற்றவாளிகளுக்கும், பஞ்சாப் முதல்வர் பியாந் சிங்கை கொன்ற கொலைகாரர்களுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பின்னும் ஏன் இன்னும் தூக்கிலிடவில்லை என கேட்பது ஒரு முதல்வருக்கு தகுதியானதா என்பதை நினைத்து பார்க்க வேண்டும். உச்ச நீதி மன்ற தீர்ப்பிற்கு பின் குடியரசு தலைவரிடம்  கருணை மனுப் போட்டு, தள்ளுபடி செய்த பின் தண்டனை நிறைவேறியது.  மேலும் பயங்கரவாதி அப்சல் குருவிற்கு வக்காலத்து வாங்கும் செயலை ஒரு முதல்வரே செய்வது, மாநிலத்தில் மேலும் பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் என்பதை மறந்து விட்டார்.  26.9.2011-ல் ஜம்மு – காஷ்மீர் சட்டமன்றத்தில் அப்சல் குருவிற்கு கருணை காட்ட வேண்டும் என்று சுயாட்சி உறுப்பினர் ஷேக் அப்துல் ரஷீத் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆளும் கட்சியும், எதிர் கட்சியும் ஆதரவு கொடுத்தது ஏன் என்று புரியவில்லை.  பாராளுமன்றத்தை தாக்கிய குற்றவாளி அப்சல் குருவிற்கு, காஷ்மீர் சட்ட மன்றத்தில் ஷாகிப் என்ற அடைமொழி கொடுத்து அழைக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது.  அப்சல் குருவை தூக்கிலிட்டது அரசியல் காரணங்களுக்காக என வாதாடும் இவர்கள், சட்டமன்றத்திலேலே ஒரு பயங்கரவாதிக்கு மரியாதை கொடுக்கும் விதமாக ஷாகிப் என்ற அடைமொழியை கொடுத்ததும் அரசியல் சிந்து விளையாட்டுதான்.
அமைதியாக இருப்பதாக ஓமர் சொல்லும் காஷ்மீர அப்பாவி முஸ்லீம்கள்
அமைதியாக இருப்பதாக ஓமர் சொல்லும் காஷ்மீர அப்பாவி முஸ்லீம்கள்

காஷ்மீர் சட்ட மன்றத்தில் ஒமர் அப்துல்லா முதல்வராக பொறுப்பு ஏற்ற பின் தொடர்ச்சியாக பிரிவினைவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும்  ஆதரவாகவே குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.  2010-ல் முதல்வர் ஒமர் அப்துல்லா சட்ட மன்றத்திலேயே காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தததை ஏற்றுக் கொள்ள இயலாது என்பது போல் பேசினார் (Challenge the accession of the state with India )  அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்றுவதில் தான் தோல்வியடைந்ததாகவும் சட்ட மன்றத்தில் பேசியுள்ளார்.  ஆகவே அப்சல் குருவின் செயல்பாட்டை ஆதரிக்கும் விதமாக செயல்படுவது ஒமர் அப்துல்லாவின் வழக்கமான ஒன்றாகும். இரண்டாவது, சந்தன கடத்தல் வீரப்பனை அப்சல் குருவுடன் ஒப்பிட்டு பேசுவது சரியானது கிடையாது.  சந்தன கடத்தல் வீரப்பன்  தன்னையும், தனது குடும்பத்தினரையும் பழிவாங்கிய காவல் துறையினரை மட்டுமே கொலை செய்ததும், அவனது குடும்பத்தை சீர்குழைய செய்தவர்களை பழிவாங்கியது தான் அவனது செயலாகும்.  ஆனால் அவனது செயலுக்கு எவரும் அங்கீகாரம் கொடுக்க வில்லை , சட்ட மன்றத்தில் அவனுக்காக கருணை காட்ட தீர்மானம் நிறைவேற்றவில்லை என்பது மட்டுமில்லாமல் அவன் மீது பல வழக்குகள் நீதி மன்றத்தில் உள்ளது.  என்கவுன்டர் மூலமாக வீரப்பன் கொல்லப்பட்டான் என்பதை ஒமர் அப்துல்லாவிற்கு தெரியாது, அதற்காக பாராளுமன்ற கட்டிடத்தை தாக்கிய அப்சல் குருவின் செயல்பாட்டை, சந்தன கடத்தல் வீரப்பனுடன் ஒப்பிடுவது ஒரு முதல்வருக்கு அழகல்ல.   இந்த நாட்டின் ஆன்மாவின் மீது நடத்திய தாக்குதல், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி செய்தவன் என்பதும். நீதி மன்றத்தின் மூலமாக பல் வேறு வழிகளில் நாடாளுமன்றத்தை தாக்க உதவி செய்தவன் என்ற குற்றச்சாட்டு;ம் நீருபிக்கப்பட்டுள்ளது.  இறுதியாக தீர்ப்பிற்கு பின் குடியரசுத் தலைவரின் கருணை மனு நிராகரித்த பின்னர் தான்; தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பதை மறந்து விடக் கூடாது.

Prednisone can cause severe allergic reactions and allergic reactions may be life-threatening. It can yeast infection pill fluconazole online Phitsanulok help to lower the risk of cancer if taken at the right dosage, and is very effective at treating fibromyalgia and rheumatoid arthritis. This drug is also a useful and reliable treatment that helps to get rid of a sore throat and to cure tonsillitis.

Best buy cheap generic online levitra uk cheapest levitra online in australia canada viagra uk cheap amoxiltra uk buy amoxiltra uk. I'm using clomid for Yichun my last menstrual period and for my first pregnancy. Your order will be delivered to any of our 14,000+ stores in the united states, puerto rico and canada, and shipped to you by australia post.

Our team is ready to help you with any questions or concerns that you have about the sexual health and the use of herbs or natural products. Aceh was established as the capital of the aceh sultanate in http://mtviewprop.com/agent-detail/Karlyne-McGinnis/154544/ 1484 as it was then known, by sultan muhammad shah. It was an infection caused by the bacteria that causes pneumonia (bronchitis), bronchopneumonia and acute bronchitis.

ஹிஸ்புல் பயங்கரவாதி லியாகத் ஷா
ஹிஸ்புல் பயங்கரவாதி லியாகத் ஷா

மூன்றாவதாக  ஹிஸ்-புல்-முஜாஹிதீன் அமைப்பைச் சார்ந்த தற்கொலை பிரிவின் பொறுப்பாளர் லியகத் ஷா என்பவன் கைது விவகாரத்தில், ஒமர் அப்துல்லா வக்காலத்து வாங்கியுள்ளார்.  இந்த தீவிரவாதி ஹோலி பண்டிகையின் போது டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த ஊடுருவியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் டெல்லி காவல் துறையினர் இந்திய நேபாள எல்லையில் உள்ள கோரக்பூரில் கைது செய்யப்பட்டான்.  கைது செய்த போது அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் டெல்லியில் சோதனை நடத்திய போது ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்தக் ஆயுதங்கள் ஹோலி பண்டிகையின் போது டெல்லியில் தற்கொலை படை தாக்குதல் நடத்துவதற்கு என்பதும் தெரியவந்தது.  ஆனால் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு அவன் சரணடைய வந்தவன் என கூறி வருகிறது.  பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் சரணடைய மாநில அரசு வேண்டுகோள் விடுத்தது, இதற்கு சம்மதம் தெரிவித்து இதுவரை எவரும் சரணடையவில்லை.  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சரணடைபவர்களுக்கு பாதுகாப்பும், மறுவாழ்வும் வழங்குவதாக அறிவித்த போதே நான்கு வழிகளில் அவர்கள் சரணடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது,  அதாவது, பூஞ்ச்- ராவல்கோட் (Poonch-Rawalakote), வாகா எல்லை(wagah), ஊரி- முஸபராபாத், மற்றும் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலும் சரணடையலாம் என அறிவிக்கப்பட்டது.  கடந்து இரண்டு ஆண்டுகாலமாக அறிவிக்கப்பட்ட இந்தக் வழித் தடங்களில் எவரும் சரணடையவில்லை என உள்துறை செயலாளர் திரு.ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.  1989லிருந்தே ஹிஸ்-புல்-முஜாஹிதீன் தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என போராடி வருகிறது.

காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா வக்காலத்து வாங்கும் லியகத் ஷா பாகிஸ்தான் கைப்பற்றப்பட்ட காஷ்மீர் பகுதியிலிருந்து நேபாளம் வழியாக  இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார்.  நேபாளத்திற்கு சென்றவுடன் பாகிஸ்தான் பாஸ்போர்ட்டை கிழித்து விட வேண்டும் என பாகிஸ்தானில் தெரிவிக்கப்பட்டது, அதை போலவே லியகத் ஷா தனது பாகிஸ்தான் பாஸ்போர்ட்டை கிழித்து விட்டார், என்றும், பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளது என டெல்லி காவல் துறை அதிகாரி ஸ்ரீவத்ஸ்வா தெரிவித்தார் ( ஆதராம் Mjuhk; Washingtonpost. 22.3.2013)  ஆகவே சரணடைய வந்தவர் ஏன் பாகிஸ்தான் பாஸ்போர்டடை கிழித்து எறிய வேண்டும் என்பதற்கு சரியான விளக்கம் கிடையாது. 2012-ல் 1,000 பேர்கள் மறுவாழ்விற்காக விண்ணப்பித்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.  ஆனால் இவர்களில் ஒருவர் கூட சரணடைய வில்லை ஏன் என்பதற்கான காரணங்களும் தெரியவில்லை.
நான்காவதாக மாநில முதல்வர் வைத்துள்ள முக்கியமான கோரிக்கை ராணுவத்தினருக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.  1990-ல் இச் சட்டம் கொண்டு வரும் போது என்ன காரணங்களை கூறப்பட்டதோ, அதே காரணங்கள் இன்னும் இருக்கின்றது என்பதை மறந்து விடக் கூடாது.  1990-ல் இச் சட்டத்தை கொண்டு வரும் போது பாரத தேசத்தின் எல்லையிலிருந்து அதாவது காஷ்மீரில் உள்ள எல்லைக் கோட்டிலிருந்து (Line of Control )20 கி.மீ சுற்றுளவு பகுதிகளில் இச்சட்டம் அமுல் படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.  ஆனால் நாட்கள் நகர நகர மற்ற பகுதிகளிலும் இச் சட்டம் அமுல் படுத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் Rajouri, Poonch, Anantnag, Baramulla, Budgam, Kupwara, Pulwama, Srinagar போன்ற மாவட்டங்களிலும் இச் சட்டம் அமுல் படுத்தப்பட்டது.  மேலும் 2001-ல் ஆகஸ்ட் மாதம் மேலும் சில பகுதிகளுக்கு இச் சட்டம் அமுல் படுத்தப்பட்டது.  காஷ்மீரில் உள்ள சூழ்நிலை ஜம்முவிற்கும் பரவியதால், ஜம்முவில் உள்ள Jammu, Kathua, Udhampur, Doda   Nghd;  போன்ற சில மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது.
இவ்வாறு விரிவுப்படுத்த வேண்டிய சூழ் நிலை ஏன் ஏற்பட்டது என்பதை பற்றி காஷ்மீர் சட்ட மன்றத்தில் விவாதித்திருப்பார்களா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த சட்டத்தை அமுல் படுத்திய பின்னர் இராணுவத்தினர் தங்களது பணியின் காரணமாக 80,000 ஏ.கே. 47 மற்றும் 56 ரக துப்பாக்கிகள் கண்டு பிடிக்கப்பட்டன, தொடர் சோதனையின் போது பயங்கரவாதிகளிடமிருந்து 1,300 மெஷின் கன் துப்பாக்கிகள், 2,000 ராக்கட் லாஞ்சர்கள், 63,000க்கு அதிகமான கையெறி குண்டுகள், 7 மில்லியன் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.  இவைகளை கண்டு பிடிக்கும் நடந்த சண்டையில் 5,108 ராணுவத்தினர் பலியானார்கள், 20,000க்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள்.  ஆகவே நிலைமை இவ்வாறு இருக்க் இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோருவது சரியானது தானா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
தலை வெட்டி கொல்லப்பட்ட இளம் ராணுவ வீரரின் மனைவி கதறல்
தலை வெட்டி கொல்லப்பட்ட இளம் ராணுவ வீரரின் மனைவி கதறல்
இன்னும் காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் அட்டகாசங்கள் குறைந்து விடவில்லை.  4.2.2010ந் தேதி பாகிஸ்தானில் உள்ள முஸப்பரபாத்தில் அனைத்து பயங்கரவாத அமைப்பின் பொறுப்பாளர்கள் ஒன்று கூடி கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவின் மீது பயங்கரவாத தாக்குதல்களை நடத்தினாலும் இன்னும் நமது நோக்கம் நிறைவேறவில்லை என்றும், இதற்காக மாற்று வழிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று பேசியுள்ளார்கள. (ஆதராம் Mjuhk; seemamustafa @gmail.com ) ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்த முல்லா ஒமர் 17 டிவிசன்கள் உள்ளன, இவை நிழல் இராணுவமாக செயல்படும் என தெரிவித்துள்ளார்(reorganized his cadres into 17 divisions called the “ shadow armies” ) ஆகவே நிலைமை இவ்வாறு இருக்க எப்படி இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்பது தெரியவில்லை.  காஷ்மீ;ர் மாநில சட்ட மன்றத்தில் ஒமர் அப்துல்லா பேசியது கண்டிக்க தக்கது, இனிமேலும் அவர் முதல்வர் பதவியில் நீடிப்பது இந்தியாவின் இறையான்மைக்கு பங்கம் ஏற்படும் என்பது மட்டும் உண்மையாகும். இதை தட்டிக் கேட்கும் தைரியம் மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் இருக்கிறதா என்பது தெரியவில்லை.

ஹைதராபாத் குண்டுவெடிப்புகள்

இன்னொரு நாள்.. இன்னொரு நகரம் ..
இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கோர வெறியாட்டம்..
இழந்தவை இந்திய உயிர்கள். சிந்தியது இந்திய ரத்தம்.

காங்கிரஸ் அரசே, போலி மதச்சார்பின்மை கட்சிகளே, உங்கள் ஈனத்தனமான வாக்கு வங்கி அரசியலுக்காக அப்பாவி மக்கள் வீதிகளில் உடல் சிதறி மடிய வேண்டுமா?

அமெரிக்காவும் பிரிட்டனும் தொடர் ஜிகாதி பயங்கரவாதச் செயல்களை பெருமளவு தடுத்தி நிறுத்தி விட்டன. ஏன் இந்தியாவால் முடியவில்லை? சிந்தியுங்கள் மக்களே.

ஹைதரபாதில் உயிரிழந்த மனித உயிர்களுக்கு கண்ணீர் அஞ்சலி.
பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த ஆறுதல்கள்.

TH_FB_hyd_bomb_blast_Feb_2013

அப்சலுக்கு தூக்கு: பயங்கரவாதிகளுக்கு படிப்பினை

நாடாளு மன்றம் மீதான தாக்குதலில் மரண தண்டனை விதிக்கப் பட்ட  முகமது அப்சல் குரு ஒரு வழியாக, தில்லி  திஹார் சிறையில் பிப். 9-ம் தேதி தூக்கிலிடப் பட்டிருக்கிறார். 2006-ம் ஆண்டிலிருந்தே அப்சல் குரு மீதான தூக்கு  தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்வி இருந்து வந்தது. ஆயினும் சிறுபான்மையினரின் வாக்குவங்கி மீதான பாசத்தில் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலம் கடத்தி வந்தது. அப்சல் தூக்கிலிடப்பட்டதை ”எதுவும் செய்யாமல் இருப்பதைவிட தாமதமாகவேனும் செய்தது நல்லது தான்” என்று விமர்சித்திருக்கிறார் குஜராத் முதல்வர் மோடி உண்மை தான்.

இந்த விவகாரத்தில் இதுவரை நடந்திருப்பதை  பின்னோக்கிப் பார்ப்பது இப்போது அவசியமாகி இருக்கிறது….

parliment01

2001-ம் ஆண்டு, டிசம்பர் 13-ம் தேதி: இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு கறுப்புநாள். அன்று தான் நமது ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்றம் அண்டைநாட்டிலிருந்து இயக்கப்படும்  பயங்கரவாதிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டது. அந்தத் தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஸ்-ஏ-முகமது, லஸ்கர்-ஏ-தொய்பா ஆகிய பயங்கரவாத இயக்கங்களைச் சார்ந்த ஐந்து பயங்கரவாதிகள் ஈடுபட்டனர்.

உள்துறை அமைச்சக ஊழியர்களுக்கான அடையாள அட்டைகளுடன் அத்துமீறி நாடாளுமன்ற வளாகத்தில் நுழைந்த இந்த ஐவரும் கண்மூடித்தனமாக சுப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். அப்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. நமது மக்கள் பிரதிநிதிகளையே இலக்காகக் கொண்டு நாடாளுமன்ற அவைகளை நோக்கி பயங்கரவாதிகள் முன்னேறினர்.

par02ஆனால் நமது பாதுகாப்புப் படையினர் தீரத்துடன் போரிட்டு, அந்த முயற்சியை முறியடித்தனர். எனினும் இந்தப்  போராட்டத்தில் நமது வீரர்கள் 7 பேர் தங்கள் இன்னுயிரை இழந்தனர்; பத்திரிகையாளர் உள்பட மேலும் இருவர்  உடன் கொல்லப்பட்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு நமது வீரர்கள் பயங்கரவாதிகள் ஐவரையும் சுட்டு வீழ்த்தினர்;  நமது நாடாளுமன்றமும் மக்கள் பிரதிநிதிகளும் காப்பாற்றப்பட்டனர்.

இந்தப் போராட்டத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்தத் தாக்குதல் நாட்டின் மனசாட்சியை உலுக்கியது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்ட நாடாளுமன்ற வளாகத்திற்குள்ளேயே எதிரிகள் நுழைய முடிந்தது எப்படி என்ற கேள்விகள் எழுந்தன. விசாரணையின் இறுதியில், எல்லை கடந்த பயங்கரவாதம் குறித்து  நாடு அறிந்தது.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் வைத்திருந்த உடைமைகள், தொலைபேசித் தொடர்புகள் மூலமாக, இந்தத் தாக்குதலுக்கு தலைநகர் தில்லியிலேயே ஒரு குழு உள்நாட்டில் பணியாற்றி உதவியது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், காஷ்மீரில் இயங்கிய ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தைச் சார்ந்த முகமது அப்சல் குரு, டில்லி பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானி, அப்ஷான் குரு என்ற பெண் அவரது கணவர் சௌகத் ஹுசேன் குரு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

போலீஸ் விசாரணையில் பல பயங்கரத்  தகவல்கள் வெளிவந்தன. உள்நாட்டு முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளுக்கும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையிலான வலைப்பின்னல் இந்த வழக்கில் தான் அம்பலமானது. 2002, ஜூன்  4-ல் குற்றவாளிகள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

par03வழக்கு விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. இறுதியில் 2002, டிசம்பர் 18-ம் தேதி, அப்ஷான் குரு தவிர்த்த மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அப்சன் (பெண்மணி) மட்டும் விடுவிக்கப்பட்டார். “பல நபர்களை கொன்ற நாடாளுமன்றத் தாக்குதல் நிகழ்வு நாடு முழுமையையும் ஆட்டுவித்த ஒன்றாகும்; மேற்படி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கினால் மட்டுமே சமூகத்தின் ஒட்டுமொத்த மனசாட்சிக்கும்  நிறைவு கிடைக்கும்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

இதில் வேதனை என்னவென்றால், தண்டனை பெற்ற இரண்டாவது குற்றவாளியான கிலானிக்கு ஆதரவாக நமது ஆங்கில ஊடகங்களும் இடதுசாரிகளும் மதச்சார்பற்றவர்களும் நடத்திய பிரசாரம் வழக்கின் உறுதிப்பாட்டையே கேள்விக்குறி ஆக்கியது.  இந்தத் தாக்குதலில் பிரதானமான மூளையாக செயல்பட்ட ஜெய்ஸ்-ஏ-முகமது இயக்க நிர்வாகி காஸி பாபா காஷ்மீரின் ஸ்ரீநகரில் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் 2003, ஆகஸ்ட் 30-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

2003, 2அக்டோபர் 3-ம் தேதி, கிலானியின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட தணடனையை ரத்து செய்து, அவரை வழக்கில் இருந்து விடுவித்தது. இதனை நமது மதச் சார்பற்ற அறிவிஜீவி வட்டாரங்கள் கொண்டாடி மகிழ்ந்தன. உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளிகள்  தொடர்ந்த மேல்முறையீட்டில், 2005, ஆகஸ்ட் 4-ம் தேதி, அப்சல் குரு மீதான மரண தண்டனை மட்டும் உறுதிப்படுத்தப்பட்டது. சௌகத் ஹுசேனின் தூக்கு தண்டனை 10 ஆண்டு சிறைத் தணடனையாகக் குறைக்கப்பட்டது. அவரும் தனது சிறைத் தண்டனை முடித்து, 2010, டிசம்பரில் விடுதலையாகிவிட்டார்.

இந்நிலையில் அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை 2006, செப்டம்பர் 26-ம் தேதி மீண்டும் உறுதி செய்யப்பட்டது. அப்சலின் மனைவி தபசும் குரு ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அதே ஆண்டு அக்டோபரில் கருணை மனு அனுப்பினார். பிறகு, தன்  மீதான தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு அப்சல் குரு சார்பில் மீண்டும் மனு செய்யப்பட்டது.

அதை 2007, ஜனவரி 12-ம் தேதி, உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.  ‘அதற்கான தகுதி (Merit)  அப்சலுக்கு இல்லை’ என்று நீதிபதி குறிப்பிட்டார். ஆயினும் நமது அரசு அப்சலை தூக்கில் போட முனையவில்லை. ஜனாதிபதியும் கருணை மனு விஷயத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை.

par04
இதுகுறித்து தில்லி  மாநில அரசின் கருத்தை அறிய விரும்புவதாக ஜனாதிபதி கலாம் அனுப்பி வைத்தார் அந்தக் கோப்பு கிடப்பில் போடப்பட்டது. 2010, மே 19-ம் தேதி, தில்லி மாநில அரசு, அப்சல் குருவின் கருணை மனுவை நிராகரிக்குமாறு ஜனாதிபதிக்கு விளக்கம் அளித்தது. அதன் பிறகும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இந்த இடைக்காலத்தில் ஜனாதிபதியாக பிரதிபா பாட்டீல் பொறுப்பேற்றிருந்தார்.

நாடாளுமன்றத் தாக்குதல் மற்றும் மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றாமல் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு தவிர்த்து வருவதாக பாஜக நீண்ட நாட்களாகவே பிரசாரம் செய்துவந்தது. நாட்டு மக்களின் மனசாட்சியாக இந்த விவகாரத்தை விடாமல் எதிரொலித்துக் கொண்டிருந்தது பாஜக. ஆயினும், மத்திய அரசு அர்த்தமுள்ள மௌனம் சாதித்து வந்தது.

கடந்த 2012, நவம்பர் 21-ம் தேதி மும்பை தாக்குதலில் தொடர்புடைய அஜ்மல் கசாப் என்ற பாகிஸ்தானியருக்கு ஏரவாடா சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போதே, அப்சலின் தண்டனையையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்தது. நாடாளுமன்றத்தில் அடிக்கடி இதுகுறித்த விவாதம் கிளம்பி அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியபோதும் பிரதமர் கண்டுகொள்ளாமல் இருந்தார்.

இதனிடையே, 2012, டிசம்பரில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சுஷீல்குமார் ஷிண்டே, அப்சல் குரு விவகாரத்தில் என்ன செய்வது என்று அரசு ஆராயும் என்று குறிப்பிட்டார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 3-ம் தேதி, அப்சலின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்தார். அப்சலின் தூக்கு தண்டனைக்கு இருந்த ஒரே தடைக்கல்லும் அகன்றது. இப்போது பயங்கரவாதி அப்சல் குரு தில்லி, திஹார் சிறையில் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்.parl05

சட்டத்தின் நடைமுறைப்படி, அவருக்கு அனைத்து வழிமுறைகளும் அளிக்கப்பட்டு, நமது ஜனநாயகத்தின் சிறப்பு நிரூபிக்கப்பட்டது. அவர் செய்த குற்றத்துக்கும், நமது சட்ட நடைமுறைகளில்  உள்ள உச்சபட்ச தண்டனையான மரண  தண்டனை  நிறைவேற்றப் பட்டிருக்கிறது.

காலம் கடந்தேனும் இந்த தண்டனை இப்போது நிறைவேற்றப்ப்பட்டதற்குக் காரணம், நடப்பாண்டில் நாடாளுமன்றத் தேர்தலை  காங்கிரஸ் சந்திக்கத் தாயாராவதன் உத்தியே என்ற பேச்சு எழுந்திருக்கிறது. அதில் உண்மை இல்லாமல் இல்லை. அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற வேண்டிய தேர்தலை முன்கூட்டியே நடத்தினால் நல்லது என்ற முடிவுக்கு ஆளும் கட்சி வட்டாரங்கள் வந்திருப்பதாக கடந்த மாதமே செய்திகள் உலா வந்தன. வரும் அக்டோபரில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுகளால் தடுமாறும் மத்திய அரசு, கசாப் தூக்கு தண்டனை நிறைவேற்றம் மூலமாக தனது தோற்றத்தை மாற்ற முயன்றதும், அதை காங்கிரஸார் கொண்டாடியதையும் நாடு அறியும். இப்போது, மக்களிடம் தனது நம்பகத்தன்மையை நிரூபிக்க சாகசங்களில் இறங்க மத்திய அரசு முயன்று வருகிறது. விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ள மத்திய பட்ஜெட்டிலும் மக்கள் மீது சுமைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

எது எப்படியோ, நாட்parl06டின் ஜனநாயக கோவிலைத் தகர்க்க முயன்ற சதிகாரர்களுக்கு அப்சல் குரு தூக்கிலிடப்பட்டிருப்பது ஓர் எச்சரிக்கையே. அரசியல் லாபம் கருதி இந்த நடவடிக்கையை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எடுத்திருப்பினும், வரவேற்கத் தக்கதே.

கொடிய பயங்கரவாதிகளுக்கு நமது நாடு பணியாது என்பதும் இதன்மூலமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த தண்டனை நிறைவேற்றத்தை உறுதிப்படுத்தி மத்திய அரசை வழிநடத்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு தேச மக்கள் சார்பில் நன்றி.

இந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-16, 2011)

ரிய திராவிட இனவாதக் கொள்கைகள் சிறிதும் ஆதாரமற்றவை என்று அறிவியல்பூர்வமாக நிறுவும் மேலும் வலுவான சான்றுகள் கிடைத்துள்ளன என்று டி.என்.ஏ இதழில் வந்த செய்திக் குறிப்பு (டிச-10) தெரிவிக்கிறது. இந்திய மக்களை இன ரீதியாக வேறுபடுத்திக் காட்டும் குறியீடுகள் (markers) இந்திய மக்கள் தொகுதியில் டி.என்.ஏ அமைப்பில் இல்லை என்று உயிர் செல்கள் மற்றும் மரபணு குறித்த ஆய்வில் ஈடுபட்ட இந்திய மற்றும் பன்னாட்டு அறிவியல் நிபுணர்கள் குழு கருத்து தெரிவித்துள்ளது.

ட்டி: அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவன் வினிஸ் சபரி மலைக்கு மாலை அணிந்து வந்ததை கண்டு, மாணவன் மனம் புண்படும்படியாக ஐயப்ப சுவாமி குறித்து அவமதித்து பேசியதாக பள்ளி ஆசிரியை ஒருவர் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி, ஐயப்ப பக்தர்கள் மற்றும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 45 பேர் கைது செய்யப்பட்டனர். சம்பந்தப் பட்ட ஆசிரியை மாணவர்களிடையே தொடர்ந்து கிறிஸ்தவ மத பிரசாரம் செய்து வருவதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஸ்லாமிய பயங்கரவாதிகள் மாட்சிமை பொருந்திய இந்திய பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தி 10 ஆண்டுகள் கழிந்ததை டிசம்பர்-13 அன்று இந்தியா நினைவு கூர்ந்தது. அந்தத் தாக்குதலை முறியடிப்பதில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு தேசம் கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. சம்பந்தப் பட்ட தியாகிகளின் குடும்பங்கள் இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்திய பயங்கரவாதி அப்சல் குருவுக்கு விதிக்கப் பட்ட மரண தண்டனை இன்னும் நிறைவேற்றப் படவில்லை என்ற அவலத்தைச் சுட்டிக் காட்டி பல நிகழ்ச்சிகளைப் புறக்கணித்தனர். முன்பு முன்னாள் ராணுவ வீரர்கள் இதே அவலத்தைச் சுட்டிக் காட்டி தங்கள் விருதுகளைத் திருப்பி அளித்த போது கூட அதை வெட்கமின்றிப் பார்த்திருந்த காங்கிரஸ் அரசு இப்போதும் அதையே செய்தது.

ரோடு, டிச.14: அம்மன் கோவில்களில் நகை திருடியதாக தமீம் அன்சாரி (45), அவருடைய மகள் பாத்திமா (16) ஆகியோரை பெருந்துறைப் போலீஸார் கைது செய்தனர். 120 கோவில்களில் அவர்கள் 4.5 கிலோ தங்க நகைகளைத் திருடியிருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். வெறும் நகைக்காக மட்டும்தான் திருடினார்களா? இது ஒரு தனி நபர்களின் திருட்டு மட்டும் தானா போன்ற கேள்விகள் எழுகின்றன. கஜினி முகமதுகள் அழிவதேயில்லை.

ந்தியாவின் காங்கிரஸ் அரசுக்கும், அதன் தலைமைக்கும் எதிரான கடும் கண்டனங்களையும் விமர்சனங்களையும் வெளிப்படுத்தும் ஃபேஸ்புக் போன்ற இணையதளங்களை தீவிரமாக கண்காணித்து அவற்றை முடக்க முயற்சி செய்யும் மத்திய அமைச்சர் கபில் சிபலின் அராஜக நடவடிக்கைகளுக்கு நாடு தழுவிய எதிர்ப்பு எழுந்துள்ளது. இணையத்திலும் இது குறித்த ஜனநாயக ரீதியான மனுப்போடும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

பிரபல சிந்தனையாளரும் எழுத்தாளருமான கிறிஸ்தோஃபர் ஹிட்சென்ஸ் (1949-2011) டிசம்பர்-15 வியாழன் அன்று மரணமடைந்தார். இறக்கும் வரை உண்மையான நாத்திகராக வாழ்ந்தவர். மதர் தெரசா என்று அழைக்கப் படும் அல்பேனிய நாட்டு கிருஸ்தவ முரட்டுப் பழமைவாதி குறித்த பிம்பங்களை உடைத்து, முகமூடியைக் கிழித்து அவர் ஒரு கிருஸ்தவ ஃபாசிஸ்ட் என்று நிரூபித்தவர். சொற்களைப் போர் ஆயுதமாகவே பயன்படுத்தி கருத்துலகில் ஆயுதபாணியாக உலவி மரபுவாத இடது சாரிகளை உலுக்கி எடுத்தவர். நியூயார் டைம்ஸின் நினைவஞ்சலி அவரது சிந்தனையின் வீச்சுகளையும், வரம்புகளையும் தொட்டுக் காட்டுகிறது. அதர்மத்தை அடையாளம் காட்டிய அவருக்கு நமது அஞ்சலி.


கொசுறு:

த்திய அரசின் இலவச கட்டாய கல்வி சட்டம் தொடர்பாக தமிழக அரசு கொண்டுவந்துள்ள விதிமுறைகளை எதிர்த்து “சிறுபான்மை பள்ளிகள் சார்பாக” மயிலாப்பூர் ரோமன் கத்தோலிக்க திருச்சபை பாதிரியார் செபாஸ்டியன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். விதிமுறைகள் அமலானால் பள்ளிகளின் மீது சிறுபான்மையினரின் “அதிகாரம்” குறையும் என்றும் அதனால் இதனை எதிர்ப்பதாகவும் வெளிப்படையாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரணதண்டனை அரசியல்கள் – 1

ராஜீவ் கொலையாளிகளுக்கான மரண தண்டனையை முன் வைத்த அரசியல் தொடர்பான குளவியாரின் கட்டுரைக்கு ஒரு விரிவான பதில் – விஸ்வாமித்ரா

பாராளுமன்றத் தாக்குதலின் முக்கிய சதிகாரனான இஸ்லாமிய பயங்கரவாதி அப்சல் குருவுக்கு விதிக்கப் பட்ட மரண தண்டனையில் துவங்கிய அரசியல் இன்று ராஜீவ் கொலையாளிகளின் மரண தண்டனையில் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. மரண தண்டனை என்பது சினிமாக்களில் வருவது போல அவ்வளவு எளிதாக நம் கோர்ட்டுகளில் வழங்கப் பட்டு விடுவதில்லை. கீழ்க்கோர்ட்டுகளில் விதிக்கப் படும் மரண தண்டனைகள் அதன் பின்னர் செஷன்ஸ் கோர்ட், ஹைக்கோர்ட், ஹைக்கோர்ட் பெஞ்ச், சுப்ரீம் கோர்ட், சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், கருணை மனுக்கள், மத்திய மாநில அமைச்சரவைகளின் பரிந்துரைகள் என்பது போன்ற ஆயிரத்தெட்டுத் தடைகளைக் கடந்து அபூர்வமாக வெகு சிலருக்கே வழங்கப் படும் ஒரு அபூர்வமான தண்டனையாகும்.

இத்தனை கடுமையான அலசல்களுக்கும் பரீசீலனைக்கும் உட்படுத்தப் பட்டு மிகவும் முக்கியமான வழக்குகளில் குற்றவாளிகள் செய்த கடுமையான கொலைக்குற்றங்கள் பல நீதிபதிகளினாலும் சந்தேகத்துக்குச் சற்றும் இடமில்லை நிச்சயமாகச் செய்யப் பட்டக் குற்றமே என்று உறுதி செய்யப் பட்டே வழங்கப் படுகின்றன. இன்றும் மரண தண்டனை என்னும் ஒரு கடுமையான தண்டனை விளைவிக்கும் அச்சமே பலரையும் கொலை என்னும் கடும் குற்றத்தைச் செய்வதில் இருந்து தயங்க வைக்கிறது. சிறைத் தண்டனை எல்லாம் கடுமை குறைந்து போய் பெரும்பாலான குற்றவாளிகளிடம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை அவர்களுக்கு சிறைச்சாலை என்பது இரண்டாவது வீடு போன்றாகி விட்டது. ஆகவே இன்றைய சூழலில் கொலை போன்ற கொடூரமான குற்றங்களைத் தடுக்கும் ஒரே கடைசி வழியாக இருப்பது இந்த மரண தண்டனையே. ஆனால் இந்த மரண தண்டனையையும் நீக்க வேண்டும் என்று மனித உரிமையாளர்களும், அரசியல்வாதிகளும், பல்வேறு சமூக அமைப்புகளும் போராடி வருகிறார்கள்.

இவர்கள் பெரும்பாலும் வைக்கும் வாதம் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இந்தத் தண்டனை நீக்கப் பட்டு விட்டது என்பதுவே. ஐரோப்பியாவில் நிலவும் சூழலும், அங்கு இழைக்கப் படும் குற்றங்களின் தன்மையும் பொதுவாக மக்களின் உணர்ச்சி வசப்படாத தன்மையும், சட்டத்தை மதித்து நடக்கும் பண்பும் இந்தியாவின் சூழலும் முற்றிலும் வேறானது என்பதை இந்த மரண தண்டனை எதிர்ப்பாளிகள் கருத்தில் கொள்வதில்லை. மனிதாபிமானத்தின் அடிப்படையில் இதை நீக்கக் கோரும் அமைப்புகள் ஒரு புறம் என்றால் தத்தம் அரசியல் காரணங்களுக்காக இந்த மரண தண்டனையை நீக்க வேண்டும் என்று போராடுபவர்களே அதிகம். அப்படியான ஒரு கோரிக்கை நான் முற்றிலும் எதிர்பாராத தமிழ்ஹிந்து தளத்தில் குளவியார் என்பவரிடம் இருந்து எழுந்ததே என்னிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இந்த நீண்ட பதில் கட்டுரையை எழுத வைத்து விட்டது:

முதலில் தமிழ் ஹிந்துவில் குளவியார் கொட்டிய சில கேள்விகளுக்குப் பதில் அளித்து விட்டு இந்த அரசியல் பின்ணணியில் கேட்கப் படும் வேறு சில கேள்விகளுக்கும் பதில் அளிக்க விரும்புகிறேன்.

குளவி கொட்டுக்கள் எப்பொழுதுமே சிறிய எரிச்சல் தருவதோடு நின்று விடுவதில்லை ஒரு சில சமயங்களில் விஷக் கொடுக்குகள் குத்தி உயிருக்கே அபாயமாகி விடுவதும் உண்டு. அது போல நாட்டுக்கே ஆபத்தான சில கருத்துகளை இந்த முறை குளவி விஷக் கொடுக்கால் கொட்டியுள்ளது. அதனால் கொட்டிய குளவியின் கொடுக்கை எடுத்து விஷ முறிவு மருந்து கொடுப்பது அவசியமாகி விட்டது.

குளவியார் சொன்னது அழுத்தமான எழுத்துருவில் இருப்பது:

அப்ஸலை தூக்கில் போட வேண்டும் என்று ஆரம்பித்தால் ஈடுகட்ட இதோ மூன்று தமிழ் உயிர்கள். நல்ல சமன்பாடு. காப்பாற்றப்பட்டது மதச்சார்பின்மை.

நான் அப்படி நினைக்கவில்லை. இது அப்சலைத் தூக்கில் போடாமல் இருக்க காங்கிரஸும் பிற முஸ்லீம் அமைப்புகளும் சேர்ந்து போட்ட ஒரு நாடகம். அதில் தமிழக முதல்வரும் குளவியும் தடுமாறி விழுந்து விட்டார்கள். எப்படி?

அப்சலை ஏன் தூக்கில் போடவில்லை என்ற கேள்வி ஒவ்வொரு முறையும் குண்டு வெடிப்பின் பொழுது எழுந்து எழுந்து அடங்குகிறது. ஆனால் ஒரு முறை போல மறுமுறை இருக்காது. அண்ணாவின் பின்னால் மக்கள் திரண்டது போல நாளை இன்னொரு குண்டு வெடிப்பின் பொழுது ஒரு சுயமரியாதை உள்ள, விலை போகாத மோடி போன்ற பா ஜ க தலைவர் ஒருவர் பின்னால் மக்கள் திரண்டு எழுந்து விட்டால் அப்பொழுது அப்சலைத் தூக்கில் போடுவதைத் தவிர்க்கவே முடியாமல் போய் விடும். ஆனால் அப்சலைத் தூக்கில் போட்டால் ஒற்றுமையாக வந்து விழும் இந்திய முஸ்லீம்களின் ஓட்டும் காங்கிரஸ் கள்ளத்தனமாக அனுமதித்துள்ள பங்களாதேசிகளின் கள்ள ஓட்டும் நாளைக்கு காங்கிரசுக்குக் கிடைக்காமல் போய் விடும் ஆபத்தும் உள்ளது. ஆக அப்சலைத் தூக்கில் போடாமல் இருக்க புத்திசாலித்தனமாக காங்கிரஸ் திருடர்கள் போட்ட திட்டமே இந்த ராஜீவ் கொலையாளிக்குத் தீடீரென்று விதிக்கப் பட்டத் தூக்குத் தண்டனை.

இவர்களுக்குத் தூக்குத் தண்டனையை அமுல் படுத்துமாறு உத்தரவு போட்டால் தமிழ் நாட்டில் உள்ள தனித் தமிழ் நாடு கோரிக்கையாளர்களும், இந்திய தேசீய விரோதிகளும் ஒன்று சேர்ந்து போராடுவார்கள். ஜெயலலிதாவுக்குக் கடுமையான அழுத்தத்தைக் கொடுப்பார்கள். அவர்களின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் ஒரு வித நிர்ப்பந்தத்தில் ஜெயலலிதா ஒரு தீர்மானம் எப்படியும் போடுவார். அதுவும் போக காலம் தாழ்ந்து ஜனாதிபதி கருணை மனுவை ஏற்க மறுத்திருப்பதினால் எப்படியும் வழக்கு நீதி மன்றம் போகும் மூன்று பேர்களின் தூக்குத் தண்டனை ரத்தாகி ஆயுள் தண்டனையாக மாற்றப் படும். என்று திட்டமிட்டு கணக்குப் போட்டே காய்களை நகர்த்தியுள்ளனர் குள்ளநரி காங்கிரசார். அப்படி அவர்களுக்கு தூக்கு ரத்தாகும் பொழுது உடனே காங்கிரசின் கூட்டாளியும் தேச விரோதியுமான ஓமரை வைத்து அவர்கள் சட்டசபையிலும் ஒரு தீர்மானம் போட்டு காலம் தாழ்த்தலாம்.

இப்படி ஏற்கனவே முன்னாள் பிரதமரைக் கொன்றவர்களையே தூக்கில் போட முடியாத பொழுது முந்நாள் பார்லிமெண்ட் தாக்குதல்காரர்களை மட்டும் எப்படி தூக்கில் போடுவது ? என்ற கேள்வி நியாயமான கேள்வி என்ற தோற்றத்துடன் எழுப்பப் படும். அதையே சாக்காக வைத்து, ஆகவே அவர்களுக்கும் தண்டனை குறைக்கப் படுகிறது என்று காங்கிரஸ் அரசு அப்சல் குருவுக்கும், கசாப்புக்கும் ஆயுள் தண்டனையே போதுமானது என்று குறைக்கப் போகிறார்கள். ஆக மொத்தத்தில், அப்சலின் மரண தண்டனையை நீக்கிய பழி காங்கிரஸ் மீது விழாது. மாறாக குளவியார் உட்பட இந்த மூவருக்கும் தண்டனை குறைக்கக் கேட்டுப் போராடிய அனைவர் மீதும் முக்கியமாக ஜெயலலிதா மீதும் விழும். அப்சல் குருவுக்கு மரண தண்டனையில் இருந்து விலக்களிக்கப் படும் காங்கிரஸின் முஸ்லீம் ஓட்டுக்கும் எந்த வித சேதாரமும் வராது. இபப்டி ஒரு தந்திரமானக் கணக்குப் போட்டே காங்கிரஸ் காய்களை நகர்த்தியுள்ளது.

அப்சல் குருவின் மரண தண்டனையை குறைப்பதன் மூலம் முஸ்லீம் ஓட்டுக்களைத் தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் போட்ட சகுனித்தனமான சதித் திட்டமே இந்த மூவருக்கும் உறுதி செய்யப் பட்ட மரண தண்டனை. இதை எதிர்ப்பவர்கள் அனைவரும் மறைமுகமாக அப்சல் குருவின் விடுதலைக்காகவே உழைக்கிறார்கள். குழவியார் இதற்குப் பதிலாக நேரடியாக அப்சல் குருவை விடுவிக்கச் சொல்லியே கோரிக்கை வைத்திருந்திருக்கலாம்

அடுத்ததாகக் குளவியார் சொல்கிறார்:

அப்ஸலுக்கும் பேரறிவாளன் குழுவுக்கும் வேறுபாடு இருக்கிறது. ஈழத்தமிழர் பிரச்சனையில் தவறான முடிவுகள் எடுத்து அதில் குட்டையைக் குழப்பியதில் எல்லாருக்கும் பங்கு இருக்கிறது.

விடுதலைப்புலிகளை ராஜீவ் தலைமையிலாலான அன்றைய இந்திய காங்கிரஸ் அரசு மிக மோசமாக குறைத்து மதிப்பிட்டது. அதன் விளைவாக பல நூறு இந்திய வீரர்களைப் பலிகொடுத்ததுடன் ராஜீவுடன் சேர்த்து 14 இந்திய உயிர்களைப் பறித்தது.

தெளிவு. ராஜீவ் கொலையை அரங்கேற்றியவர்கள் விடுதலை புலிகளின் அம்புகள் என்றால் விடுதலை புலிகளே மற்றொரு சக்தியின் அம்புகளாக மாற்றப்பட்டனர் என்பதுதான் உண்மை.

இந்த அலசல்கள் எல்லாம் இப்பொழுதைய பிரச்சினைக்குத் தேவையில்லாதது. ராஜீவ் காந்தி தவறு செய்திருக்கிறார் உண்மைதான். காங்கிரஸ் தவறு செய்திருக்கிறது உண்மைதான். ஏன் காந்தாகார் விமானக் கடத்தலின் பொழுது பி ஜே பி தவறு செய்யவில்லையா? யார் எய்தது என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும் தான். ஆனால் அப்படிக் கண்டு பிடிக்காதபடியால் அம்புகளுக்குத் தண்டனை கொடுக்கக் கூடாது என்பது மூளையற்ற பேச்சு. சரி காங்கிரஸ் சதிகாரர்களின் ஆட்சிகளுக்கு இடையில் வந்த பி ஜே பி அரசு எய்தவர்களைக் கண்டு பிடித்துத் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்க வேண்டியதுதானே? அவர்கள் ஆட்சியில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

ஆக இங்கு வில், அம்பு எல்லாம் திசை திருப்பும் பேச்சுக்கள். எந்தவொரு குற்றத்திலும் எய்தவன் இருக்கவே செய்வான். கசாப்பும் அப்சலும் மட்டும் என்ன தானாக முடிவு செய்து திட்டம் போட்டாத் தாக்கினார்கள்? அவர்களுக்குப் பின்னால் இந்திய தேச விரோதிகளும், பாக்கிஸ்தானின் ஐ எஸ் ஐயும் பிற பயங்கரவாத அமைப்புகளும் இருக்கத்தானே செய்தன? ஆக எய்தவனை விட்டு விட்டு அம்பை தண்டிக்கக் கூடாது என்ற தங்களின் அறிவு பூர்வமான தர்க்கம் கொண்டு அப்சலையும், கசாப்பையும் விடுதலை செய்து விடலாமா?

எந்தவொரு சதிச் செயலுக்குப் பின்னாலும் வெளி நாடுகளின் தூண்டுதல்கள் இருந்து கொண்டுதான் இருக்கும். அதற்காக எய்தவனைப் பிடிக்கும் வரை அம்பை நோகக் கூடாது என்பது அறிவான பேச்சு அல்ல. அமெரிக்காவில் செப்டம்பர் பதினொன்றில் தாக்குதல் நடத்தினார்கள். அதை ஏற்பாடு செய்த சதிகாரர்கள் அரேபியாவிலும், பாக்கிஸ்தானிலும் இருந்துதான் செய்தார்கள் அவர்களுக்குப் பின்ணணியில் ஏகப் பட்ட சதிகள் இருந்தன. இருந்தாலும் பிடிபட்ட எவரையுமே அவர்களை எய்தவர்களை இயக்கியவர்களைப் பிடிக்கும் வரையிலும் தண்டிக்கக் கூடாது என்று அமெரிக்காவில் எவருமே சொல்லவில்லையே. தெளிவாக சிந்திக்கத் தெரிந்த எவராலும் இப்படிப் பட்ட ஒரு உளறலை அவிழ்த்து விட முடியாதே? பிடிபட்டவர்களுக்கு எல்லாம் கடும் தண்டனையை அமெரிக்கா அளித்துக் கொண்டுதானே இருக்கிறது? அதனால்தானே செப்டம்பர் 11க்குப் பிறகு மற்றொரு தாக்குதல் இன்று வரை அமெரிக்க மண்ணில் நிகழவில்லை?

அமெரிக்காவின் தவறுகளினால்தான் அமெரிக்காவின் மீதான தாக்குதலே நடந்தது. அதற்காக நாம் தவறு செய்து விட்டோம் ஆகவே இந்தத் தாக்குதலுக்கு நாம்தான் பொறுப்பு ஆகவே பிடிபட்டவர்களை மன்னித்து விட்டு விட் வேண்டும் என்று அமெரிக்காவில் எவரும் கோரியதில்லையே? ஆம் தவறுகள் நடந்து விட்டன. எதிர்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதை நாம் சொல்லலாம், நம் மக்கள் சொல்லலாம். ஆட்சியை மாற்றலாம் ஆனால் அதைக் காரணமாகக் கொண்டு எதிரி வந்து தாக்க அனுமதியோம் என்பதுதானே அமெரிக்காவின் நிலைப்பாடு? அப்படி உறுதியாகச் செயல் படும் சட்டங்களும் தண்டனைகளும் இருப்பதினால்தானே இன்று வரை அந்த அமெரிக்க மண்ணில் மற்றொரு தாக்குதல் நிகழவில்லை?

எந்தவொரு தலைவரின் கொலைக்குப் பின்னாலும், பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னாலும் நிச்சயமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பின்ணணியில் ஏராளமான சதிகாரர்கள், நிதியுதவி செய்தவர்கள், திட்டமிட்டவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்கள் அனைவரும் பிடிபட்டுத் தண்டிக்கப் படும் வரையிலும் ஏற்கனவே பிடிபட்டவர்களைக் கைது செய்யக் கூடாது என்று சிந்திக்கத் தெரிந்த எவரும் சொல்ல மாட்டார்கள்.

ஏன் மரகதம் சந்திரசேகர் விசாரிக்கப்படவில்லை? ஏன் வேண்டுமென்றே கால தாமதம் செய்யப்பட்டு சிவராசனின் தற்கொலை அனுமதிக்கப்பட்டது? என்றெல்லாம் எழும் கேள்விகள் கேள்விகளாகவே உள்ளன.

அவற்றுக்கான பதில் இனி என்றென்றும் கிடைக்காதவாறு விடுதலைப் புலிகளும் கூடவே எண்ணிக்கை தெரியாத அளவு ஈழத் தமிழர்களும் கொல்லப்பட்டு விட்டார்கள்.

அந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில்களை காங்கிரஸ் ஆட்சியின் பின்னே வந்த பி ஜே பி அரசு அல்லவா கண்டு பிடித்திருக்க வேண்டும்? அவர்கள் ஆட்சியின் பொழுது என்ன கிழித்துக் கொண்டிருந்தார்கள்? அதைக் காரணமாகக் கொண்டு கொலை செய்தவர்களுக்குத் தண்டனை கொடுக்கக் கூடாது என்பது ராஜாவும், கனிமொழியும் அருண் ஷோரியைக் காரணம் காட்டி தப்பிக்க முயல்வதை விடக் கேவலமான உத்தி. அதற்கான பதிலைக் கண்டு பிடியுங்கள். அன்று சிவராசன் தற்கொலை செய்வதை அனுமதித்த ராவின் தலைவர் பாஜ்பாய் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார், கார்த்திகேயன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் இருவருமே அந்த முடிவை எடுத்தவர்கள். யாரைக் காப்பாற்ற அதைச் செய்தார்கள் என்று அவர்கள் இருவரையும் முட்டிக் முட்டி தட்டி பி ஜே பி காலத்தில் விசாரித்திருந்தால் உண்மையைக் கக்கியிருக்கப் போகிறார்கள். விசாரிக்காமல் தடுத்தது எது? யார் தடுத்தார்கள்? யாரைக் காப்பாற்ற வாஜ்பாயியும் அத்வானியும் அமைதி காத்தார்கள்? ஆனால் அதைக் காரணமாக வைத்து கண்டுபிடிக்கப் பட்ட குற்றவாளிகளின் தண்டனையை நிறுத்தக் கூடாது.

அவைகள் எல்லாம் நியாயமான கேள்விகள்தான் மறுக்கவில்லை. மரகதம் சந்திரசேகர் மட்டும் அல்ல வை.கோ, கருணாநிதி என்று இன்னும் ஏராளமானவர்களை ராஜீவ் கொலையை விசாரித்த புலானாய்வுக் குழுவினர் விசாரிக்க அனுமதிக்கப் படவில்லை. இதை ராஜீவ் கொலையை விசாரித்த சி பி ஐ அதிகாரியான ரகோத்தமன் தனது ”ராஜீவ் கொலை வழக்கு – மர்மம் விலகும் நேரம்” என்னும் நூலில் பல பக்கங்களில் மீண்டும் மீண்டும் கூறுகிறார்.

குறிப்பாக அவரது தலைமை அதிகாரியான கார்த்திகேயன் தி மு க தலைவர் கருணாநிதி மற்றும் வை.கோபால்சாமி போன்றோரை விசாரிக்க அனுமதிக்க மறுத்ததன் மூலம் அவர்களைக் காப்பாற்றும் விதத்தில் அவர்களுக்கு ஆதரவாகச் செயல் பட்டவர் என்ற குற்றசாட்டை தன் உயர் அதிகாரி மீது நேரடியாகவே ரகோத்தமன் வைக்கிறார். முக்கியமாக ராஜீவ் கொலை செய்யப் படப் போகிறார் என்ற தகவல் கருணாநிதிக்கும், வை கோபால்சாமிக்கும் இன்னும் பல தி மு க பிரமுகர்களுக்கும் முன்னதாகவே தெரிந்திருக்க வேண்டும் என்று உறுதியான சந்தேகங்களை ரகோத்தமன் வைக்கிறார். ராஜீவ் கொலையான அதே நாளில் நடக்கவிருந்த தி மு க கூட்டத்தைக் கருணாநிதி ரத்து செய்திருப்பதும், வை.கோபால்சாமியின் பல பேச்சுகளும் அவரது பொய்களும் அவர்களுக்குத் தெரிந்தே இந்தப் படுகொலைகள் நடந்திருக்க வேண்டும் என்பதை உறுதிப் படுத்துகின்றன என்றும் இருந்தாலும் புலன் விசாரணையின் தலைமை அதிகாரியான கார்த்திகேயனின் தலையீட்டால் தன்னாலும் தன் குழுவினராலும் இவர்களை விசாரிக்கவோ கைது செய்யவோ முடியவில்லை கார்த்திகேயன் தி மு க வினருக்கு ஆதரவாகச் செயல் பட்ட துரோகத்தைச் செய்து விட்டார் என்று ரகோத்தமன் கடுமையான குற்றசாட்டை வைக்கின்றார்.

இதே குற்றசாட்டுக்களை சிவராசனை கைது செய்யச் சென்ற கமாண்டோ படை அதிகாரியான மேஜர் ரவி பின்னர் தான் எடுத்த மலையாள சினிமாவான 20 ஹவர்ஸ் என்ற திரைப்படத்திலும் கடுமையாக வைக்கின்றார். மரகதம் சந்திரசேகரின் குடும்பத்தாருக்கும் கொலை செய்த தனு, சிவராசனுக்கும் ஏற்கனவே அறிமுகம் இருந்திருக்கலாம் என்ற தன் கண்டுபிடிப்புகளையும் மறைக்காமல் வைக்கின்றார். ஆக காங்கிரஸ்காரர்கள் மட்டும் அல்ல தி மு க வினருக்கும் இந்தக் கொலையாளிகளுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம் என்றும் ஆனால் எந்தவொரு அரசியல்வாதியையும் விசாரிக்க தன் தலைமை அதிகாரி மறுத்து விட்டார் என்றும் ரகோத்தமன் குற்றம் சாட்டுகிறார். மரகதம் சந்திரசேகரை மட்டும் அல்ல கருணாநிதியையும், அவரது கும்பலையும், வை,கோபால்சாமியையும், தி க கும்பல்களில் பலரையும் விசாரித்தால் ஏன் இவர்களையெல்லாம் பாதுகாத்த சி பி ஐ உயர் அதிகாரியாக இருந்த கார்த்திகேயனையும், அப்பொழுதைய ராவின் டைரக்டரான பாஜ்பாயையும் விசாரித்தால் மட்டுமே இந்த கொலை வழக்கு முழுமை அடையும் என்பது உண்மையே. இந்த மூவரையும் விடுதலை செய்ய வேண்டுமானால் உங்களையெல்லாம் விசாரிக்க வேண்டி வரும் என்று மட்டும் இப்பொழுது சொல்லட்டும் இவர்களுக்கு மரண தண்டனையில் இருந்து விடுதலை கோரும் அனைவரும் ஓடி மறைந்து விடுவார்கள்.

ராஜீவ் கொலையாளிகளான சிவராசனையும் தனுவையும் உயிருடன் பிடிக்க கமோண்டோக்கள் தயார் நிலையில் இருந்த பொழுதும் கூட அவர்களை உயிருடன் பிடிக்க அனுமதியாமல் அவர்களுக்குப் பிடிவாதமாக அனுமதி கொடுக்க மறுத்து சிவராசனை தற்கொலை செய்ய தள்ளியுள்ளனர் அன்றைய புலனாய்வு தலைமை அதிகாரி கார்த்திகேயனும், ரா வின் தலைவரான பாஜ்பாய் என்பவரும். ஏன்? இந்தக் கேள்விக்குப் பதில் கண்டு பிடிக்கப் பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. இந்திய உளவு அமைப்பான ரா வுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இருந்த உறவு கண்டு பிடிக்கப் பட்டு விடும் என்ற அச்சித்தினாலேயே ரா சிவராசன் பிடிபடுவதை விரும்பவில்லை என்ற சந்தேகம் மற்றொரு ரா அதிகாரியான பி.ராமன் அவர்களின் மற்றொரு கட்டுரையைப் படிக்கும் பொழுது புரிபடுகிறது. நிச்சயமாக இந்தக் குற்றத்திற்காக கார்த்திகேயனும், பாஜ்பாயும் விசாரிக்கப் பட்டு அவர்கள் குற்றவாளிகளாக இருந்தால் நிச்சயம் தண்டிக்கப் படவே வேண்டும் ஆனால் அதற்காக கொலைக்கு உடந்தையாக இருந்து ஆதாரங்களுடன் பிடிபட்டவர்களுக்கு தண்டனை கொடுக்காமல் விட வேண்டும் என்பது அவசியம் கிடையாது.

இத்தனை சந்தேகங்கள் ஒரு புறம் இருப்பதினாலும் மாட்டிக் கொள்ளாமல் இன்னும் பலரும் இருப்பதினாலும் மட்டுமே கொலையில் உறுதியாகச் சம்பந்தப் பட்டவர்களை விடுதலை செய்து விட வேண்டும் என்று பேசுவது அபத்தமான ஒரு தர்க்கமாகும்.

நாளைக்கு குளவியார் வீட்டில் ஒரு களவு போகிறது என்று பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். களவு செய்தவனையும் களவு போன பொருட்களையும் போலீஸ்காரர்கள் பிடித்து விட்டார்கள் என்று நடக்க முடியாத ஒரு விஷயமும் நடந்து விட்டதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். ஆனால் களவு செய்ய திட்டம் போட்டுக் கொடுத்த கொள்ளையர்களின் தலைவன் ஒருவன் மட்டும் இன்னும் பிடிபடவில்லை என்றும் வைத்துக் கொள்வோம். குளவியார் அப்பொழுது அவனையும் பிடித்த பின்னால்தான் களவு போய் கண்டுபிடிக்கப் பட்ட தன் பொருட்களை வாங்கிக் கொள்வேன் என்று சொல்வாரா? ராஜீவ் கொலையாளிகளுக்கு இந்த அபத்தான காரணத்தை முன் வைத்து தண்டனை கொடுக்கக் கூடாது என்று சொல்லும் ஆதரவாளர்கள் எவரேனும் அவர்கள் வீட்டில் களவு போன பொருட்கள் பிடிபட்டால் அப்படிச் சொல்வார்களா? ஆக இவர்கள் சொந்தப் பொருள் என்றால் ஒரு நியாயம் ராஜீவ் கொலையாளிகளுக்கு மட்டும் வேறு நியாயமா? என்னே ஒரு இரட்டை வேடம்?

ஆக ஈழத்தமிழரின் கனவு அர்த்தமற்று சிதைக்கப்பட்டுவிட்ட நிலையில், அதில் காங்கிரஸின் பங்கு என்ன என்பது தெளிவான ரகசியமாகிவிட்ட நிலையில், இந்த மூன்று தமிழர்களைக் கொல்வது மிக மோசமான வக்கிரம் மட்டுமேயான ஒருவித ரத்தவெறி.

மீண்டும் முட்டாள்தனமான வாதம். ஈழத்தமிழர்களின் கனவு அர்த்தமற்று சிதைக்கப் பட்டதற்கு காங்கிரஸ் மட்டுமா காரணம்? புலிகள், தமிழ் நாட்டுக் கட்சிகள், சிங்களர், காங்கிரஸ் என்று அனைத்துத் தரப்பினரும் முக்கியமாக விடுதலைப் புலிகள்தானே காரணம்? அதற்கான விடை தெரிவது இப்பொழுது முக்கியமல்ல. இந்தியாவிற்குள் ஒரு பயங்கரமான கொலை நடந்துள்ளது 20 பேர்கள் இறந்துள்ளனர். அதை வெளிநாட்டில் இருந்து வந்த தீவீரவாதிகள் நிகழ்த்தியுள்ளார்கள். இதை மீண்டும் மீண்டும் பல கோர்ட்டுகள் ஊர்ஜிதம் செய்து விட்டன. சந்தேகத்திற்கிடமின்றி கொலையில் பங்கு கொண்டவர்களுக்குத் தண்டனை கொடுக்கப் பட்டுள்ளது. அதை நிறைவேற்றாமல் அது மோசமான வக்கிரம் என்று சொல்வதே வக்கிரமான மோசம்.

இவர்கள் மூவரும் தமிழர்களாக இல்லாமல் இருந்து சிங்களவர்களாக இருந்திருந்தால் கொல்லலாமா? அப்சல் குருவையும், கசாப்பையும் தண்டிக்கக் கூடாது என்று சொல்லும் இஸ்லாமியத் தீவீரவாதிகளுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? அவர்களை விட நீங்கள் எந்த அளவில் வேறு படுகிறீர்கள்? அவன் மதம் சார்ந்து பயங்கரவாதிகளை ஆதரிக்கிறார்கள் நீங்கள் மொழி சார்ந்து கொலையாளிகளை ஆதரிக்கிறீர்கள். இந்தியாவின் மீது குண்டு போட்டு அப்பாவி மக்களைக் கொல்லும் இஸ்லாமியப் பயங்கரவாதிகளும் அவர்களுக்கு ஒரு நியாயம் வைத்திருக்கிறார்கள். அதன் படி அவர்கள் கொல்வது சரியே என்கிறார்கள். அதே போல ராஜீவ் மற்றும் அப்பாவி மக்களின் கொலைகளுக்குக் காரணமான கொலையாளிகளுக்கும் ஒரு நியாயம் வைத்திருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு கொலைகாரனும், கொள்ளைக்காரனும் நியாயம் வைத்திருக்கிறார்கள். ஏன் கருணாநிதியும் கனிமொழியும் ராஜாத்தியும் ராஜாவும் கூட தங்கள் கொள்ளைகளை நியாயப் படுத்துகிறார்கள். எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு நாம் குண்டடி வாங்கி சாவோமே? நம்மைக் கொள்ளையடிப்பதை அனுமத்திப்போமே?

பயங்கரவாதம் எந்த அடிப்படையில் செய்யப் பட்டாலும் அதைக் கடுமையாக மறுப்பனே மனிதன். மத, இன, ஜாதி, மொழி பார்த்து ஆதரிப்பவனுக்கும் அந்தப் பயங்கரவாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது

ஆனால் அதே வேளையில் அப்பாவி ஈழத் தமிழர்களின் கொலைகளுக்கும் அவல நிலைகளுக்கும் காங்கிரஸ், தி மு க முதலான இந்திய அரசியல் கட்சிகள் பொறுப்பாக இருந்திருக்குமானால் அவர்களையும் ராஜ பக்சேவை விசாரிப்பது போலவே விசாரிக்க வேண்டும். ஆனால் அது முடியும் வரை எவருக்குமே தண்டனை அளிக்கக் கூடாது என்பது கூறுகெட்ட ஒரு கூற்று மட்டுமே. இதைப் போலவே இஸ்லாமியர்களாக இருப்பதினால் தண்டனை கொடுக்கக் கூடாது என்றும், கிறுஸ்துவராக இருந்தால் மன்னிக்க வேண்டும் என்று அந்தந்த மதத்தினரும் தெலுங்கு, மலையாள, இந்தி பேசுபவர்களாக இருந்தால் தண்டிக்கக் கூடாது என்று அந்தந்த மொழியினரும் கோடானு கோடி ஜாதியினர்களில் ஒருவராக இருப்பதினால் தண்டிக்கக் கூடாது என்று அந்தந்த ஜாதியினரும் கொடி பிடிக்க ஆரம்பித்தால் இந்தியாவில் சட்டம், போலீஸ், கோர்ட், தண்டனை எல்லாம் எதற்காக? எல்லோரையும் அவிழ்த்து விட்டு விடலாமே? போலீஸையும், கோர்ட்டையும், ராணுவத்தையும் கலைத்து விடலாமே? மன்மோகனும், சிதம்பரமும் பேசும் ஓட்டுப் பொறுக்கி அரசியல் பேச்சை விடக் கேவலமான ஒரு கருத்து மேற்படிக் கருத்து.

ஆனால், ராஜீவ் இந்தியாவின் முன்னாள் பிரதமர் என்பதைத் தாண்டி அவர் இந்திய தேசத்தின் சின்னம் அல்ல. அவர் ஒரு ஊழல் கறையும் மானுடப் பெருங்குற்றங்களின் கறையும் படிந்த ஒரு அரசியல்வாதி.

காஷ்மீர் பிரிவினைவாதிகளை ஆதரித்த அமைப்பில் சக-பிரசிடெண்ட் ஆக இருந்தவர் ‘அன்னை’ சோனியா. அவர் மீது தேசத்துரோக குற்றத்துக்கான நடவடிக்கை எடுத்து தண்டனை கொடுத்துவிட்டு பிறகு பேரறிவாளன், முருகன், சாந்தன் குறித்து யோசிக்கலாமே.

இது அபத்தமான பேச்சு. முதலில் இந்தியாவின் எந்தப் பிரதமரும் அவர் முன்னாளோ, இந்நாளோ இந்திய தேசத்தின் ஒரு சின்னமே. அது 64 கோடி ஊழல் செய்த ராஜீவாக இருந்தாலும் லட்சம் கோடி ஊழல் செய்வதை வேடிக்கை பார்க்கும், அனுமதிக்கும் மன்மோகனாக இருந்தாலும் சரி, பெட்டிகளில் பணம் வாங்கிய நரசிம்மராவாக இருந்தாலும் சரி ஊழல் பெருச்சாளி தேவகவுடாவாக இருந்தாலும் சரி தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் இந்தியாவின் அரசியல் அமைப்பின் தலைவராக பதவி வகித்தவர்கள். அவர்களை நம் சட்டங்கள் விசாரித்து உரிய தண்டனை அளிப்பதே முறை. கருணாநிதியும், ஜெயலலிதாவும், எடியூரப்பாவும், ஜெயிலுக்குப் போகிறார்கள். அதற்காக அவர்கள் முன்னாள், இன்னாள் முதல்வர்கள் என்ற நிலை இல்லாமல் ஆகி விடாது. நரசிம்மராவே ஜெயிலுக்குப் போக இருந்தவர்தான். அவர்கள் தவறு செய்தால் நம் சட்டம் அவர்களை தண்டிக்க வேண்டும். அது போதாதாக இருப்பதினால்தான் அதில் குறைபாடுகள் உள்ளதால்தான் இன்று ஜன்லோக்பால் கேட்கிறார்கள்.

நாளைக்கு அதுவும் வரட்டும் குற்றம் செய்த நம் தலைவர்களை விசாரித்து உள்ளே போடுவோம். அதுதான் முறை. தவறு செய்த நம் தலைவர்களைக் கொல்லும் உரிமை நம் சட்டத்துக்கு மட்டுமே இருக்க வேண்டுமே அன்றி பிரபாகரனுக்கும் சிவராசனுக்கும் பேரறிவாளனுக்கும் அல்ல. அன்னை சோனியா மீது தாராளமாக தேசத் துரோகக் குற்றத்தைச் சாட்டலாம், விசாரிக்கலாம். அதற்கான தடைகள் பல இருந்தாலும் சுப்ரமணியன் சுவாமி அதற்கான நட்வடிக்கையை எடுத்துத்தான் வருகிறார். நாளைக்கு மன்மோகனுக்கும் ஆயுள் தண்டனை அளிக்கப் படலாம். மன்மோகன் சிங் குற்றவாளி என்ற உண்மை நிரூபிக்கப் பட்டு அவருக்கும் கடுங்காவல் தண்டனை விதிக்கப் படலாம். அதற்கான தண்டனையை இந்திய மக்கள் அளிக்க வேண்டும், இந்தியச் சட்டம் அளிக்க வேண்டும், இந்திய கோர்ட்டுகள் அளிக்க வேண்டும். மன்மோகன் திருடன் என்பதற்காக அவருக்குத் தண்டனை கொடுத்த பின்னால்தான் ராஜாவுக்கும் கனிமொழிக்கும் அழகிரிக்கும் இன்னும் வீடுகளில் கொள்ளையடிக்கும் உள்ளூர் திருடர்களுக்கும் தண்டனை அளிக்கப் பட வேண்டும் என்பது அறிவில்லாத குதர்க்க வாதம் மட்டுமே.

அதே சமயம், எந்த பயங்கரவாத தாக்குதலும் கண்டனத்துக்குரியது என்ற முறையில் ராஜீவும் அவருடன் இறந்த பதினான்கு பேருடைய மரணங்களும் கண்டனத்துக்கும் அஞ்சலிக்கும் உரியதே.

ஆனால், அதற்கு மற்ற பயங்கரவாதச் செயல்களுக்கு இல்லாத ஒரு ஒளிவட்டத்தை அளித்து மூன்று அம்புகளின் அம்புகளை பெரும் இனப் பேரழிவுகளுக்கு பின்னர் தூக்கில் போடுவது தவறானது.

எப்படி அப்சலை தூக்கில் போடுவது அவசியமானதோ அதே போல இந்த மூன்று பேரை தூக்கில் போடுவது அநியாயமானது.

நடந்தது ஒரு பயங்கரவாதச் செயல். நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப் பட்டிருக்கும் அச்சுறுத்தல். எப்படி அப்சல் குரு பாராளுமன்றத்தைத் தாக்கியது நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப் பட்ட சவாலோ அதே போன்ற தீவீரவாதம் உடையதே ராஜீவின் கொலையும். ராஜீவுக்கு மக்கள் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். அந்த அனுமதியைப் பயன் படுத்தி அவர் ஒரு முடிவு எடுக்கிறார். அது தவறான முடிவென்றால் அவருக்கு ஓட்டுப் போட்ட மக்களையும் அந்தப் பொறுப்புச் சாரும். அவர் எடுத்த முடிவு சரியோ தவறோ அது இந்திய அரசு எடுத்த முடிவு. அதற்கான தண்டனையை வெளிநாட்டினர் வந்து அளிக்க அனுமதிக்கவே முடியாது.

பெரும் இனப் பேரழிவு நடந்து விட்டது ஆகவே ராஜீவ் மற்றும் அப்பாவி மக்களின் கொலையில் நேரடியாகப் பங்கெடுத்த கொலையாளிகளை மன்னிக்க வேண்டும் என்று கேட்ப்பதே முட்டாள்த்தனமான ஒரு கேள்வி. ஹோலோகாஸ்ட்டின் பொழுது லட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப் பட்டு விட்டார்கள் என்பதற்காக ஹோலோகாஸ்ட் நடந்து முடிந்தவுடன் சில யூதர்கள் சேர்ந்து ஒரு ஜெர்மனியின் அதிபரையோ, ஒரு போலந்து நாட்டின் பிரதமரையோ கொன்றார்கள் என்றால் அந்த யூதர்களுக்கு யாரும் கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கி விடப் போவதில்லை. அந்த நாட்டுச் சட்டப் படி உரிய தண்டனை வழங்கவே படும். சரி, நம் நாட்டு உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம். காஷ்மீர் பண்டிட்டுகள் அழிக்கப் படுகிறார்கள். அதற்குக் கேடு கெட்ட காங்கிரஸ் அரசுகள் காரணமாக இருந்தன. அதனால் ஒரு மூன்று பண்டிட்டுகள் கிளம்பி ஒரு மன்மோகனையோ, ஒரு சிதம்பரத்தையோ கொன்றால், ஐயோ பாவம் ஏற்கனவே ஆயிரக்கணக்கான பண்டிட்டுகளைக் கொன்று விட்டார்கள், ஆகவே பரிதாபம் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் இந்த மூன்று கொலையாளி பண்டிட்டுகளை நாம் விட்டு விட வேண்டும் என்று யாராவது சொன்னால், எழுதினால் அவர்களது மனநிலை கேள்விக்குள்ளாக்கப் படுமா படாதா? மோசமான மனநோயாளி கூட வைக்கத் தயங்கும் வாதம் இது.

எப்படி அப்சலைத் தூக்கில் போடுவது அவசியமோ, முக்கியமோ அதை விட அவசியமும் முக்கியமும் வாய்ந்தது இந்த ராஜீவ் மற்றும் அப்பாவி மக்களைக் கொன்ற கொலையாளிகளுக்கு அளிக்கப் பட வேண்டிய மரண தண்டனையும் கூட. ராஜீவ் கொலை முதலில் நடந்தபடியால் காலக்கிரமப் படி கூட இவர்களுக்கே முதலில் தண்டனை அளிக்கப் பட வேண்டும். அப்படி அளித்தால்தான் இந்தியாவின் சட்டத்தில் அனைவருக்கும் நம்பிக்கை வரும். இல்லாவிட்டால் இந்துக்கள் என்றால் மன்னித்து விட்டு விடுகிறார்கள் என்ற அவநம்பிக்கை மைனாரிட்டியினருக்கு அரசின் மீது எழுந்து விடும். ஒரு நாட்டின் முன்னாள் தலைவரைக் கொன்றவர்களைக் கூட இந்திய அரசால் துணிந்து தண்டிக்க முடியவில்லை என்றால், ஒரு நாட்டின் பாராளுமன்றத்தையே தாக்கியவனைக் கூட இந்தக் கேடு கெட்ட அரசால் தண்டிக்க முடியவில்லை என்றால் இந்த அரசு நாளைக்கு எந்த எதிரியிடம் இருந்து மக்களைக் காப்பாற்றப் போகிறது? இஸ்லாமியப் பயங்கரவாதிகளிடமிருந்தும், சீன அச்சுறுத்தல்களில் இருந்தும் இந்தியாவை யார் காப்பாற்றப் போகிறார்கள்? எப்படி காப்பாற்றப் போகிறார்கள்?

இது வரை குளவியார் எழுப்பிய கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்திருக்கிறேன். ராஜீவ் கொலையாளிகளுக்கு விடுதலை கோரும் இன்னும் பல மனித உரிமைவாதிகளும், தனித் தமிழ் போராளிகளும், புலி ஆதரவாளர்களும் எழுப்புக் பல்வேறு கேள்விகளுக்கும் அவை எந்த அடிப்படையும் இல்லாத முட்டாள்த்தனமான வாதங்கள் என்பதையும் அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

(தொடரும்)

ஒரு கண்ணுக்கு வெண்ணெய்; மறு கண்ணுக்கு…?

p_chidambaramஅண்மையில் புதுதில்லியில் நடந்த மாநில காவல்துறை தலைவர்கள் மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், நாட்டில் காவி பயங்கரவாதம் தலையெடுத்து வருவதாக எச்சரித்தார். நாடு முழுவதும் நக்சல் பயங்கரவாதமும் இஸ்லாமிய பயங்கரவாதமும் கொடிய முகத்தைக் காட்டிவரும் வேளையில், மதச்சார்பின்மையைக் காப்பதற்கென்றே பிறப்பெடுத்த காங்கிரஸ் கட்சியின் குரலாக, பயங்கரவாதத்தை மதரீதியாக சமன் செய்யும் விதமாக இக்கருத்தை அவர் கூறியிருக்கிறார்.

கற்பனையான புனைவுகளின் அடிப்படையில் சில வழக்குகளில் பெண் துறவி பிரக்யா சிங் தாகுர் மற்றும் சில ராணுவ அதிகாரிகளை கைது செய்து, அதையே காரணமாகக் காட்டி காவி பயங்கரவாதம் நாட்டில் வளர்ந்து வருவதாக ப.சிதம்பரம் பூச்சாண்டி காட்டியிருக்கிறார். இதே காலகட்டத்தில், பெங்களூரு தொடர் குண்டுவெடிப்பில் கேரளாவின் அப்துல் நாசர் மதானி கைது செய்யப்பட்டிருப்பது சில முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. அவரை கைது செய்ய கேரளா, கர்நாடகா மாநில அரசுகள் நடத்திய பகீரதப் பிரயத்தனமும், அப்போது, இதே சிதம்பரம் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சி நடந்துகொண்ட விதமும், அக்கட்சியின் உண்மையான முகத்தை தோலுரிக்கின்றன.

பெங்களூரு குண்டுவெடிப்புகள்:

madanee-sufi-bomb2008 , ஜூலை 25- ம் தேதி கர்நாடகா மாநிலத்தில், பெங்களூரு நகரில் ஏழு இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில், இருவர் பலியாகினர்; 20 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய மாநில காவல்துறை, டி.நசீர் என்ற சிமி இயக்க பயங்கரவாதியை கைது செய்தது.

இவன், கேரளாவில் செய்யப்பட்ட இஸ்லாமிய சேவக் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவன். காஷ்மீரில் இயங்கும் லஸ்கர்- ஏ-தொய்பா எனும் பாக். ஆதரவு அமைப்பின் தளபதியாக செயல்பட்டவன். இவனிடம் நடந்த விசாரணையில், கேரளாவின் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும் இஸ்லாமிய சேவக் சங்க நிறுவனருமான அப்துல் நாசர் மதானிக்கு பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பது தெரியவந்தது.

கர்நாடகாவை ஆளும் பா.ஜ.க. அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது தெரியவந்தது. ஆயினும், மதானியைக் கைது செய்ய கர்நாடகா அரசு அவசரம் காட்டவில்லை.

வழக்கில் மதானி பெயர் சேர்க்கப்பட்டபோதும், சட்டரீதியான நடைமுறைகளில் கர்நாடகா அரசு கவனம் செலுத்திவந்தது. அதற்குள், முன்பிணை பெறும் முயற்சிகளில் மதானி ஈடுபட்டார். அவரது மனுக்கள் பல்வேறு நீதிமன்றங்களில் நிராகரிக்கப்பட்டன. இறுதியாக உச்ச நீதிமன்றத்திலும் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. கர்நாடகா நீதிமன்றம், மதானியைக் கைது செய்ய கெடு தேதி நிர்ணயித்த பிறகே, அவரை கைது செய்ய அம்மாநில காவல்துறை முனைப்பு காட்டியது.

madhani-arrestமதானியைக் கைது செய்ய கர்நாடக காவல்துறையின் ஒரு குழு, அவரது சொந்த ஊரான அனவரசேரி சென்றது. ஆனால், அவரை கைது செய்ய உள்ளூர் காவல்துறை ஒத்துழைக்கவில்லை. ‘மதானியை கைது செய்தால், சட்டம் ஒழுங்கு பாதிக்கும்’ என்று மாநில உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் வெளிப்படையாகவே அறிவித்தார். கேரள காவல்துறையின் அனுமதி. ஒப்புதல் இல்லாமல் மதானியை கைது செய்ய இயலாது என்பதால், எட்டு நாட்கள், கொல்லத்தில் கர்நாடகக் குழு காத்திருந்தது.

கேரளாவில் உள்ள காங்கிரஸ் கட்சியினர், இந்த நிகழ்வைப் பயன்படுத்திக்கொண்டு, இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு- மதானியை கைது செய்யக் கூடாது என்று நெருக்குதல் கொடுத்தனர். போதாக்குறைக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் ஆக. 12 ம் தேதி கேரளா வந்ததால், மதானியைக் கைது செய்வதை மாநில அரசு தவிர்க்க விரும்பியது. கேரளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மத்திய மந்திரிகள், இந்த தடுமாற்றத்தில் குளிர் காய்ந்தனர். காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் இரண்டுமே முஸ்லிம் வாக்கு வங்கி பறிபோய்விடக் கூடாது என்ற சிந்தனையிலேயே இப்பிரச்சினையை அணுகின.

prakash-karatஅதற்குள், நீதிமன்றத்தில் சரண் அடைந்து, கைதாவதிலிருந்து தப்ப மதானி முயன்றார். கர்நாடக பா.ஜ.க. அரசுக்கு உதவும் வகையில் மதானியை கைது செய்ய மார்க்சிஸ்ட் அரசு ஒத்துழைப்பதாக காங்கிரஸ் கட்சியினர் கேரளாவில் பிரசாரம் செய்தனர். இதையடுத்து, மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் விளக்கம் அளித்தார்.

” பா.ஜ.க-வின் சிறுபான்மையினர் விரோதப்போக்குக்காக மதானி கைது செய்யப்படவில்லை. குற்ற வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படியே அவர் கைது செய்யப்படுகிறார். அதற்கு சட்ட ரீதியாக கேரளா அரசு உதவ வேண்டியுள்ளது” என்றார் அவர். அதன் பிறகே, மாநில அரசும் கர்நாடக காவல்துறைக்கு ஒத்துழைப்பு தந்தது .

ஒருவழியாக, 17 – 08 – 2010 அன்று மதானியை கர்நாடகா காவல்துறையினர் கைது செய்தனர். அவருக்கு உரிய அனைத்து மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டன. அன்றிரவே நீதிமன்றம் கொண்டுசெல்லப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். மிகவும் மரியாதையாக அவர் நடத்தப்பட்டார். இதற்கே தமிழகத்தின் பல பகுதிகளிலும் கேரளாவிலும் இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.

மதானி, 1998 கோவை குண்டுவெடிப்புகளில் குற்றம் சாட்டப்பட்டவர். காவல்துறையினர் வழக்கை சரியாக நிர்வகிக்காததால், சாட்சியமில்லை என்று கூறி அந்த வழக்கில் இருந்து மதானி விடுவிக்கப்பட்டார். அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. கோவை குண்டுவெடிப்பு வழக்கிற்காக, கோவை சிறையில் 9.5 ஆண்டு விசாரணைக் கைதியாக அவர் இருந்தபோது, சிறையில் அவருக்கு ராஜ உபசாரம் செய்யப்பட்டது.

soofiya-madhani-200x150ஆனால், கோவை சிறையில் மதானி கொடுமைப் படுத்தப்படுவதாகக் கூறி கேரளாவில் கலமச்சேரி என்ற இடத்தில் தமிழக அரசு பஸ் (2005) எரிக்கப்பட்டது. அவ்வழக்கில் மதானியின் மனைவி சூபியா குற்றவாளி. அவ்வழக்கில் சூபியாவை கைது செய்ய தமிழக காவல்துறையால் முடியவில்லை. பலத்த முயற்சிக்குப் பிறகே சூபியா 19.12.2009 அன்று கைது செய்யப்பட்டார். அவ்வழக்கு இன்னும் முடியவில்லை; அவர் பிணையில் வெளியே நடமாடுகிறார்.

இந்த பஸ் எரிப்பு வழக்கில் மற்றொரு குற்றவாளி தான் டி.நசீர். அவர் தான் பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி.

இவ்வாறாக, 2008 – ல் பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்புக்கு மதானியின் தூண்டுதல் இருப்பது தெரிந்தும், அவரை கைது செய்ய கர்நாடகா அரசுக்கு இரண்டு ஆண்டுகள் ஆயின. மதானி கைதை தவிர்க்கவே கர்நாடகா அரசும், கேரளா அரசும் முயன்றன. ஏனெனில், அவர் கைது செய்யப்பட்டால், நாட்டில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் என்ற அச்சம்.

நாடாளுமன்றம் மீதான தாக்குதலுக்காக (2001) தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட (2008) முகமது அப்சல் குருவுக்கு தண்டனை நிறைவேற்றாமல் காலம் கடத்தப்படுவதை இங்கு நினைவு கூரலாம்.

‘அப்சலை தூக்கில் போட்டால் புதுடில்லியில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது’ என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் தேஜெந்திர கன்னா கூறியதை, கொடியேறி பாலகிருஷ்ணனின் கருத்தோடு ஒப்பிடலாம்.

இந்த நேரத்தில், 2006 – இல் நடந்த மாலேகான் குண்டுவெடிப்புகளுக்காக ஹிந்து பெண் துறவி ஒருவர் எவ்வாறெல்லாம் சித்ரவதை செய்யப்பட்டார் என்பதை எண்ணிப் பார்த்தால், நமது அரசுகளின் லட்சணம் புரியும்.

மாலேகான் குண்டுவெடிப்பு:

2006 , ஆகஸ்ட் 29-ம் தேதி, மகாராஷ்டிரா மாநிலத்தின் மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்; 100 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த பயங்கர நிகழ்வுக்கு சிமி அமைப்பே காரணம் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது.

ஆனால், குண்டு வைக்கப்பட்ட சைக்கிளை விற்றவர் என்ற காரணம் காட்டி, பெண் துறவி பிரக்யா சிங் தாகுர் கைது செய்யப்பட்டார். அவருடன் லெப்.கர்னல் பிரசாத் புரோஹித் உள்ளிட்ட சில ராணுவ அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். அபிநவ பாரத சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி முஸ்லிம்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட சதித் திட்டம் தீட்டியதாகவும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இவ்வழக்கில் பிரக்யா சிங் தாகுர் கைது செய்யப்பட்டது 10.10.2008 அன்று. ஆனால் அவரை சட்டவிரோதமாக காவல்நிலையத்திலேயே வைத்து, சித்ரவதை செய்தனர், மகாராஷ்டிர காவல்துறையினர். கைது செய்யப்பட்டவுடன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்க வேண்டும்; நீதிமன்ற அனுமதி பெற்றே விசாரணை நடத்த வேண்டும் என்ற விதி அங்கு அப்பட்டமாக மீறப்பட்டது. பல தரப்பிலும் கண்டனங்கள் எழுந்த பிறகே, மகாராஷ்டிர மாநில திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு சட்டத்தின் (MCOCA) கீழ் 23.10.2008 அன்று பிரக்யா சிங் தாகுர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.

pragya_thakur_arrestஅந்த 13 நாட்களும் பெண் துறவி என்றும் பாராமல் அவரை சிறப்பு புலனாய்வுத் துறையினர் கடுமையாக சித்ரவதை செய்தனர். அவருக்கு எந்த மருத்துவ வசதியும் செய்து தரப்படவில்லை. அவர் சமுதாயத்தில் மதிக்கப்படும் (மதானி போலவே) உயர்ந்த நிலையில் உள்ள துறவி என்றபோதும், அவர் கீழ்த்தரமான குற்றவாளி போல நடத்தப் பட்டார். அதன் விளைவாகத் தற்கொலை செய்யும் அளவுக்கு மனம் பேதலிக்கப்பட்டார்.

பிரக்யா சிங் தாகுர் கைது செய்யப்பட நாள்: அக். 10; அவர் மீது முறையான வழக்கு பதிவு செய்யப்பட்ட நாள்: அக். 23. இவரும் உடன் கைது செய்யப்பட்டவர்களும் பிணையில் வெளிவந்துவிடக் கூடாது என்பதற்காக தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆயினும், அவர்கள் மீது எந்த ருசுவான சாட்சியத்தையும் மகாராஷ்டிரா சிறப்பு காவல்படையால் காட்ட இயலவில்லை. இறுதியில், சரியான சாட்சியங்கள் இல்லாததால், இவர்கள் மீதான தடுப்புக் காவலை 2009 ஜூலையில் விலக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று.

என்றபோதும், ராஜஸ்தானின் ஆஜ்மீர் (2007), ஆந்திரப் பிரதேசத்தின் ஐதராபாத் (2007), குஜராத்தின் மொடாசா (2008) ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் பிரக்யா சிங் தாகுர் குழுவினருக்கு தொடர்பிருப்பதாகக் கூறி வழக்கிற்கு மேல் வழக்கு தொடரப்பட்டன. இவ்வழக்கில், பெண் துறவி மட்டுமின்றி புரோகித் உள்ளிட்ட பல ராணுவ அதிகாரிகள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு அரசு இழைத்த இன்னல் கொஞ்சநஞ்சமில்லை.

‘ராணுவமும் காவித் தீவிரவாதிகளின் கூடாரமாகி வருகிறது’ என்றும் மத்திய அரசால் பிரசாரம் செய்யப்பட்டது. இதுவரை, இவர்களுக்கு எதிரான எந்த அடிப்படை ஆதாரமும் மத்திய அரசாலோ, மாநில அரசாலோ முன்வைக்கப்படவில்லை. ஆனால், பிணையில் (அதற்கு சட்டப்படியான உரிமை இருந்தும்) இவர்களால் வெளிவர முடியவில்லை.

தற்போது, உச்சநீதிமன்றத்தில், பெண் துறவியை சட்டவிரோதமாக 13 நாட்கள் வைத்து மகாராஷ்டிர காவல்துறை நடத்திய சித்ரவதையை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் வெளிவரும் விபரங்கள், மகாராஷ்டிரா மாநில காவல்துறைக்கு மட்டுமல்லாது, மத்திய அரசிற்கும் சிக்கலை ஏற்படுத்தத் துவங்கியுள்ளன.

சிந்திக்க வேண்டியது யார்?

இருவேறு மாநிலங்கள்; இரு வேறு சம்பவங்கள்; இருவேறு வழக்குகள்; இரண்டிலும் அந்தந்த மாநில அரசுகள் நடந்துகொண்ட நடத்தையை இதுவரை பார்த்தோம். பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மதானி மீது உறுதியான ஆதாரங்கள் இருப்பதால் தான் அவருக்கு முன்பிணை வழங்க அனைத்து நிலை நீதிமன்றங்களும் தவிர்த்தன. ஆனால், அவரை கைது செய்ய கர்நாடகா மாநில அரசு அவசரப்படவில்லை. மதானிக்கு உள்ள சட்ட உரிமைகளைப் பயன்படுத்திக்கொள்ள தேவையான அவகாசம் வழங்கப்பட்டது. கைதுக்குப் பிறகும் அவர் கௌரவமாகவே நடத்தப்படுகிறார். அந்த பா.ஜ.க.அரசு மீது தான் மதவெறியுடன் செயல்படுவதாக ‘மதச்சார்பற்றவர்கள்’ குற்றம் சுமத்துகின்றனர்.

மாலேகான் குண்டுவெடிப்பில் ஆரம்பகட்டத்தில் சிமி இயக்கத்தைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர். பிறகு என்ன காரணத்தாலோ வழக்கின் திசை மாற்றப்பட்டு, இரண்டு ஆண்டுகள் கழித்து, அபிநவ பாரத சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது வழக்கு திணிக்கப்பட்டது. புனையப்பட்ட இவ்வழக்கில் பல கேள்விகளுக்கு மகாராஷ்டிரா மாநில காவல்துறையிடம் பதிலில்லை. அதே சமயம், வழக்கு தொடர்பான தகவல்கள் என்ற பெயரில், ஊடகங்களுக்கு விசாரணை குறித்த தவறான தகவல்கள் கசியவிடப்பட்டன.

ஊடகங்களும் போட்டியிட்டுக்கொண்டு அவற்றை வெளியிட்டு, நாட்டில் இந்து பயங்கரவாதம் பரவிவருவதாகக் கூறி தங்கள் பங்கிற்கு நாட்டுநலத்திற்கு வேட்டு வைத்தன. அந்த செய்திகள் பல பொய் என்பது இப்போது தெரிய வந்தபோதும், உண்மையை ஏற்க எந்த ஊடகங்களும் இதுவரை முன்வரவில்லை. இதன் விளைவாகவே பெண் துறவி பிரக்யா சிங் தாகுர் உள்ளிட்டோர் தங்கள் மீதான கொடூர அடக்குமுறையை நிராயுதபாணிகளாகச் சந்திக்க வேண்டியதானது.

‘ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது’ என்பதே குற்றவியல் சட்டத்தின் நோக்கம். நமது நாட்டிலோ, குற்றம் செய்தவர்களுக்கு முதல்மரியாதை. மதானியை கைது செய்ய எட்டு நாட்கள் காத்திருந்த அதே காவல்துறை தான், பிரக்யா சிங் தாகுரை கைது செய்து 13 நாட்கள் தகவல் தெரிவிக்காமல் மறைத்தது.

மாநிலங்கள் மாறலாம்; அதிகார வர்க்கமும் அரசியலும் மாறுவதில்லை என்பதற்கு இதுவே உதாரணம். மதானியோ, பிரக்யா சிங் தாகுரோ- அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது அவர்களது உரிமை. இவர்கள் வழக்கில் இருந்து விடுபடுவதும் தண்டிக்கப்படுவதும் காலத்தின் கரங்களில் இருக்கிறது. ஆயினும், ஒரு கண்ணுக்கு வெண்ணெய்; ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு என்ற நடைமுறை இங்கு காணப்படுவதால், நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

’மக்களாட்சி வேண்டும்’ என வேண்டும் மக்களாட்சி

(2001, டிசம்பர் 13 இந்தியப் பாராளுமன்றம் பயங்கரவாதிகளால் தாக்கப் பட்டது. 7 காவலர்கள் உயிர்த்தியாகம் செய்து இந்தத் தாக்குதலை முறியடித்தனர். 18 பேர் படுகாயமடைந்தனர். எட்டு ஆண்டுகள் கழிந்தும், சதிகார தேசவிரோத பயங்கரவாதிக்கு விதிக்கப் பட்ட மரண தண்டனை இன்னும் நிறைவேறவில்லை என்ற நிலையில், ஜனநாயகத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தும் இந்தக் கட்டுரையை வெளியிடுகிறோம் – ஆசிரியர் குழு).

நான் வன்முறையாளன் என்பதை ஒத்துக்கொள்ள அஞ்சுகிறேன்; (இதற்கு எதிராக) அமைதியை நான் உருவாக்கப்போகிறேன் என்றெல்லாம் கூறுவது தன்னைத்தானே ஏமாற்ற செய்துகொள்ளும் ஒரு இனிய கற்பனை. எவ்வளவு தீவிரமாக அமைதி வழி நடந்தாலும், எந்த மனம் வன்முறையாய் உள்ளதோ அது எக்காலமும் அமைதியை நடைமுறைப்படுத்தாது. அமைதி வழி நடத்தல் என்பதே வன்முறைதான். ஐயன்மார்களே, கவனியுங்கள். (இதைக் கேட்டு அவநம்பிக்கையாய்) சிரிக்காதீர். – ஜே கிருஷ்ணமூர்த்தி.

மிக மோசமான காலங்களினூடேயும் வாழ்க்கை பிழைத்துக்கிடந்து இதுவரை இருக்கிறது. இந்தப் பிழைப்பும் பிழைப்பா என்கிற கேள்வி எழாதவரை இனியதாகத்தான் வாழ்க்கை தோற்றமளிக்கிறது. இது மதவெறியின் இருப்பை கவனியாது வாழ்க்கை நடத்துபவர்களுக்கும் பொருந்தும்.

மத வன்முறையால் இந்தியாவில் ஒவ்வொரு மனிதரும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நூறு வருடம் முன்பு நமக்குத் தெரிந்தவர்களுக்குத் தெரிந்தவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று கேள்விப்பட்டார்கள். பிறகு, நமது நண்பர்களுக்குத் தெரிந்தவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்ற நிலை ஏற்பட்டு, இப்போது நமது நண்பர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவருகிறது என்பது அறிந்து உறைந்துபோய் நிற்கிறோம். நாளைக்குப் பலியாகப்போவது நாம்தான். அல்லது இன்று இரவே.

indian_parlimentகோயம்புத்தூர், மதுரை முதலிய பெயர் தெரிந்த சிறிய நகரங்கள் முதல் பெயர் தெரியாத கிராமங்களிலும் இந்த வன்முறை பரவிவிட்டது. ஆயினும், சுருங்கிவரும் உலகின் ஆதிக்கத்திற்கு நடந்துவரும் இந்தப் போர் பற்றிய கவலை இல்லாமல் கண்ணைமூடிக்கொண்டு உலகம் இருள் என்பதோடு நிறுத்திவிடாமல் கண்கட்டை அவிழ்த்துவிட்டவர்கள் பாவிகள் என்றும் போதனைகள் கிடைக்கின்றன. மதுவின் போதையில், புழுக்கள் நெளியும் சாக்கடையில், வயிறு பிரட்டும் நாற்றத்தில் இருப்பவர்களில் பலருக்கு அனைத்தும் நன்றாக இருப்பதாகவும், உலகம் அமைதிப்பூங்காவாகவும், தனி மனித சுதந்திரம் உள்ளதாகவும் தோன்றுவதால் மூக்கைப் பொத்திக்கொண்டு அந்தச் சாக்கடையிலிருந்து வெளியேறுமாறு வேண்டிக்கொள்ளும் ஒரு சிலரும் கருத்துவெறியர்களாகத் தோன்றுகின்றனர். சாக்கடையில் மிதக்கும் அந்த சுக அனுபவத்தில் பாட்டும் வரும். சாக்கடையில் மூழ்கியிருக்கும் இந்திய மீடியாக்கள் பாடிவரும் பாட்டுக்கள் சாக்கடையில் மிதப்பதை உயர்வாகவும், வெளியேறி சாக்கடையை ஒழுங்குபடுத்தி, சுத்தப்படுத்தவும் விரும்புவர்களை ஏளனமும் செய்தும் வருகின்றன.

மதத் தீவிரவாதிகளால் வாழ்க்கைகளும், உயிர்களும், நம்பிக்கைகளும், சந்தோஷங்களும் அழிந்துகொண்டே வருகின்றன. தீவிரவாதச் செயல்களால் கண்ணீரையும், நம்பிக்கைகளையும் உதிர்த்துவருகின்ற அப்பாவி மக்களோ இந்தச் செயல்களின்மேல் எந்தவித கட்டுப்பாடும் செய்ய முடியாமல் ஓட்டு வங்கி அரசியல்வாதிகளின் கையில் ஜனநாயகத்தின் பெயரால் சர்வ வல்லமைகளையும் ஒப்படைத்துவிட்டு மிகவும் அழகான ஒரு கலாச்சாரமும், தனிமனித சுதந்திரமும் கண்முன் அழிந்துகொண்டிருப்பதைக் கண்டு திகைத்து நிற்கின்றனர். திகைத்து திகைத்து பழகிவிட்டவர்கள் செய்தித்தாட்களிலும், பத்திரிக்கைகளிலும் தணிக்கை செய்தபின் கிடைத்துவரும் செய்திகளில் தங்களின் முதல் திகைப்பின் இனிய அனுபவத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்குப் பல லட்சம் மக்களின் இறையாண்மையை தாக்கிய அஃப்ஸல் தூக்கிலிருந்து விடுபடுவதோ, அல்லது விடுதலை செய்யப்படுவதோ இந்த இனிய அனுபவத்தை மீண்டும் அனுபவிக்கும் வாய்ப்பாகவே இருக்கும். அதற்காகத்தான் செக்யூலரிசம் என்கின்ற பெயரில் இத்தனை வன்முறைகளும். அஃப்சலுக்கு தூக்கு கூடாது, மதானி எனும் மிருகத்தினை வலிமைப்படுத்திப் பின், கூண்டிலிருந்து விடுதலை செய்யவேண்டும் என்கிற கூப்பாடுகள். அப்படியானால் சாதாரண மக்களின் கதி? தனி மனித சுதந்திரத்தின் கதி? எக்கேடோ கெட்டொழியட்டும்.

பலமற்ற, காசுக்காக ஓட்டுப்போடுகின்ற, ஓட்டுப் போடாத, பல சமயங்களில் ஓட்டுக்கூட போடமுடியாத இந்த அப்பாவிகளால் என்ன செய்துவிட முடியும்? பலமுள்ளவைதானே வெற்றிபெறுகின்றன. நியாயமானவைகள் அல்லவே. தர்மத்திற்காக வாழப்பழகிவிட்ட இந்திய ப்ரஜைகளின்முன் இரண்டு வழிகளே இப்போது உள்ளன: “எம்முடைய மதத்தில் சேர்ந்துவிடு”, அல்லது “செத்துப்போ காஃபிர் நாயே”.

இப்படி எதுவும் இல்லாததுபோலவும் வாழ்க்கைப்பாதை பூக்களாலானதாகவும் சொல்லிவரும் மீடியாக்கள் அஃப்சலை தூக்கிலடக்கூடாது என்பவர்களின் வாதங்களை மட்டும் முன்வைக்கின்றன. தூக்குத்தண்டனை என்பது மனிதத்தன்மையற்ற செயல், அதை ஒரு மாண்புமிக்க அரசாங்கம் செய்யக்கூடாது என்று கூக்குரலிடுபவர் பலர். அவர்கள் செய்வதையே நாமும் செய்தால் நமக்கும் அவருக்கும் என்ன வித்யாசம் என்று வாதிடுபவரும் எண்ணிலர். நிழலில் மறையும் நீதிபோல இவர்கள் மறைப்பவை பல.

மரணம் என்பது மனிதர் மட்டுமல்லாது அத்தனை உயிரினங்களிலும் நடைபெற்றுவரும் ஒரு நிகழ்வு. தெரியாத தேவதையைவிட தெரிந்த சாத்தானே மேல் என்றிருக்கும் சராசரி மனிதர்களுக்கு யாராலும் சொல்லவியலாத மரணம் பயங்கரமானதாகத் தோன்றுகின்றது – அது இயற்கையான ஒன்றாக இருந்தாலும். அவர்களுக்கு மேலும் அச்சத்தை ஊட்டக்கூடியதாகவிருப்பது துர்மரணம்.

இந்த துர்மரணத்தை ஏற்படுத்துபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளில் ஒன்றாக மரண தண்டனை இருக்கின்றது. தண்டனை வழங்குவது என்பது வெறுமே பழிக்கு பழி வாங்கும் ஒரு செயல் இல்லை. தண்டனையின் நோக்கம் இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாமல் செய்ய விழைவதே. எந்த ஒரு தண்டனை அதிகபட்சமாக சில கொடிய வேதனையான செயல்கள் முற்றிலும் மீண்டும் நடாதவாறு செய்கிறதோ, அல்லது குறைந்தபட்சமாக அந்தக் கொடிய செயல்களைக் கட்டுப்படுத்துகிறதோ அந்தத் தண்டனை குற்றமிழைத்தவருக்கு வழங்கப்படவேண்டும்.

மரண தண்டனை என்பது கொலைக்கு பதில் கொலை என்பதன் அடிப்படையில் எழுந்ததில்லை. கொலையின் தன்மையைப் பொறுத்து தண்டனை வழங்கப்படும். சில விஷயங்களில் கொலை செய்யாதாருக்கும், அவர் நிகழ்த்திய வேறு சில கொடிய செயல்களுக்காக மரணதண்டனை விதிக்கப்படலாம். தேசத்துரோகம் என்பது இத்தகைய கொடிய செயல்களில் ஒன்று.

உலக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பெற்ற காலங்களே பொற்காலங்களாகக் கருதப்படுகின்றன. ஆயினும், இத்தகைய தீவிர தண்டனையை அதி தீவிர காரணங்களுக்கு மட்டும் அளிக்கவேண்டும் என்பதை இந்தியாவின் தவப்புதல்வர் மாமேதை அம்பேத்காரால் வடிவமைக்கப்பட்ட நமது அரசியல் சட்டம் உணர்ந்துள்ளது. அப்சலின் விஷயத்தில் இந்திய இறையாண்மையை நீதிமன்றங்கள் காத்திருக்கின்றன. நீதி நிறைவேறக் காத்திருக்கின்றன.

திடீரென்று உணர்ச்சி வசப்பட்டுச் செய்யாமல் பல நாட்கள் திட்டமிட்டு, இக்கொடிய காரியத்தினை நிறைவேற்றுவதற்கான பல முற்தேவைகளை நிறைவேற்றிப் பின், ஜனநாயகத்தின்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கின்றன அஃப்சலும், அந்த வகையறாக்களும். இப்படிப்பட்ட கொலைகாரர்களை மன்னிக்கவேண்டும் என்பது அப்சல் வகையறாக்களின் சந்தோஷங்களுக்குத் தரகராக வேலைசெய்வதால் கிடைக்கும் பலனைவிரும்புபவர்களுக்கும், உண்மை நிலவரம் அறியாதவர்களுக்கும் வேண்டுமானால் பிடித்த கோஷங்களாக இருக்கலாம்.

ஒவ்வொரு புனிதனுக்கும் ஓர் இறந்தகாலம் உண்டு என்பதையோ, அல்லது ஒவ்வொரு பாவிக்கும் ஓர் எதிர்காலம் உண்டு என்பதையோ யாரும் மறுக்கப்போவதில்லை. பாவிகள் புனிதராகத் தேவையான ஜனநாயகம், தனி மனித சுதந்திரம் போன்றவை பாதுகாக்கப்பட வேண்டும். இந்த அடிப்படைத் தேவைகளை அழிக்க நினைப்பவர்கள், புனிதர்களைப் பாவிகளாகவும் பாகன்களாகவும் காஃபிர்களாகவும் கற்பித்து அவர்களைக் கொலை செய்வதை ஊக்குவிக்கும் மனித உருவங்களும் உண்மையில் இவ்வுலக உயிரினங்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனை வீணடிப்பவர்கள் என்பதுதான் புத்தியுள்ளவர்கள் புரிதல்.

தங்களை நல்ல மேய்ப்பர்களாக அறிவித்துக்கொள்கிற அசடுகள் மனித ரத்தத்தை ருசி கண்ட புலிகளிடமிருந்து தங்கள் மந்தை காப்பாற்றப்படவேண்டியதன் அவசியத்தை உணரவேண்டும். ஏனெனில், மனிதர்களின் ரத்தத்தை ருசித்துவிட்ட புலிகள் மீண்டும் மனிதர்களை மட்டுமே வேட்டையாட முயலும். என்ன முயன்றாலும், அவை தங்களது குணத்தை மாற்றாது. இந்தப் புலிகளுக்கு எதிர்காலம், இறந்தகாலம் எல்லாமே வன்முறைதான். இவை மற்றவர்களைப் பாவிகள் என்று சொல்லிக்கொண்டு இருப்பவை. இவைகளை புனிதராக இல்லை. மனிதராகக் கூட மாற்ற முடியாது. இது போன்ற சூழல்களில் மட்டும்தான் மரணதண்டனை வழங்கப்படுகிறது. எல்லாச் சூழல்களிலும் இல்லை. அரிதிலும் அரிதாக வழங்கப்படும் இத்தகைய தண்டனைகள் தேவையானவையே.

ஒரு மரணத்தை ஏற்படுத்திவிட்ட ஒருவர் அதை உணர்ச்சியின் வசப்பட்டு செய்தார் என்றாலோ, அல்லது அந்தச் செயலுக்கான காரணங்களின் நியாயத்தன்மையை முன்வைத்தோ அரசு மரணதண்டனையை ஒரு சிலருக்குக் குறைக்கிறது. ஆனால், இறுதியாக்கப்பட்டுவிட்ட நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் இருந்து எந்த அரசும் பின் வாங்குவதில்லை, இந்தியாவைத் தவிர்த்து.

பலநூறு ஆண்டுகள் முன்பிருந்து இதுவரை பலகோடி மக்களையும், பல கலாச்சாரங்களையும், தத்துவங்களையும் அழித்து வருகின்ற வெறிமதத்தினரைத் துணையின் கள்ளத்தொடர்பு தெரிந்ததால் உணர்ச்சி வசப்பட்டு, ஆராயாமால், யோசிக்காமல், கொலை செய்தவர்களோடோ, அல்லது மரணங்களை ஏற்படுத்திவிட்ட விபத்துக்களுக்குக் காரணமானவர்களோடோ இணைத்துப் பேசுவது என்பது கள்ளத்தொடர்பு கொள்வதைவிடக் கீழான விஷயம். மூளைச்சலவை செய்யப்பட்டதால் தவறிழைத்துவிட்ட குழந்தைகள் என்று அரசாங்க தாத்தாக்கள் தங்களுக்குப் பிரியமான பெயரன்களை லேசாக மட்டுமே தண்டித்தால் மற்ற மனிதர்கள் நிம்மதியாக வாழ்வது என்பதே நடவாது.

இந்தியாவில் இப்போது இதுபோன்ற லேசான தண்டனைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன என்பதுவும், அதுவும் பெயரளவிலே என்பதுவும் எல்லாரும் அறிந்ததுதான். இங்கனம் பெயரளவில் தண்டனை அளிக்கப்பட்டவர்கள் ஏதேனும் ஒரு வழிமுறையில் விடுதலையாகி மீண்டும் அக்கொடிய செயல்களில் ஈடுபட்டுவருவது பலமுறை நடைபெற்றாகிவிட்டது. இவர்கள் கொலை செய்வதையே தெய்வீகப் பணியாகச் செய்பவர்கள். மனிதர்களைத் தனித்தனியாகவோ, அல்லது கூட்டம் கூட்டமாகவோ எங்கனம் கொலை செய்யலாம் என்பதை அறிந்தவர்கள். ஒரு மனிதரை வெறும் கையால் கொல்ல எத்தனை முறைகள், ஆயுதங்களால் கொல்ல எத்தனை முறைகள் என்றெல்லாம் கற்பிக்கப்பட்டவர்கள். கற்பிப்பவர்கள். தும்மலின்போது கண்களை மூடும் அநிச்சைச் செயல்போல் கொலைகள் செய்வதை இயல்பாய் எடுத்துக்கொள்பவர்கள். மற்ற மதத்தாரை கொல்லுவதால் கிடைக்கும் சந்தோஷத்திற்காக வாழ்நாளைச் செலவிடுபவர்கள். அத்தகைய வாழ்வை பரப்புபவர்கள்; பாடம் நடத்துபவர்கள். இவர்களை விடுதலை செய்யப்பட்ட கள்ளத்தொடர்பு கொலையாளிகளின் தற்போதைய அமைதி வாழ்க்கையோடு ஒப்பிடுவது வெறும் பசப்புத்தனம். இவர்களை விடுதலை செய்தால் என்ன ஆகும் என்பதற்குப் பல நிகழ்வுகள் படிப்பினைகளாய் உள்ளன. இத்தகைய மிருகங்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற முல்லாமாரித்தன வாதத்திற்குப் பதிலாக நடந்துவருகின்ற கொடுமைகளில் ஒன்றை உதாரணமாக இங்கே கொடுக்கலாம்.

மௌலானா மஸூத் அஸ்ஹார் என்னும் புனிதனை இந்திய அரசாங்கம் பிடித்து, மரணைதண்டனையெல்லாம் கொடுக்காமல், சிறையில் அடைத்துவைத்தது (இதுவே அதிசயம்தான். பொதுவாக இந்தத் தீவிரவியாதிகளை பிடிப்பதில் இந்தியா விருப்பம் காட்டுவதில்லை). என்ன நடந்தது? 1999ம் வருடம் இண்டியன் ஏர் ஃப்ளைட் 814ஐ கடத்திய தீவிரவாதிகள் பயணிகளின் உயிருக்குப் பதிலாக இந்த இஸ்லாமியப் பெரியவரை விடுதலை செய்யவேண்டும் என்றன. அம்ருத்ஸரில் தரையிறங்கிய shiv_sena_afzal_protest_delhi_3_061017விமானத்தின் டயர்களைச் சுட்டுவிட்டு பின் இந்தத் தீவிரவாதிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினால் அரசாங்கத்தின் கை ஓங்கியிருக்கும். 180 பயணிகளும் வேறு வேதனைகள் இன்றி தப்பித்திருப்பர். ஆனால், இந்திய அரசாங்கம் “ஏனோ” அங்கனம் செய்யாமல் விமானத்திற்குப் பெட்ரோல் போட்டு பாக்கிஸ்தானுக்குப் பத்திரமாக அனுப்பியது. பிறகு ஆப்கானிஸ்தான் சென்றது விமானம். இஸ்லாமியப் பெரியவர் இறுதியில் விடுதலை செய்யப்பட்டது. விடுதலை செய்யப்பட்ட இதை அணைத்து வரவேற்றது பெரியவர்களில் பெரியவரான ஜனாப் முஹம்மது பின் லேடன். 2001ம் ஆண்டு ஜனாப் மௌலானா மஸூத் அஸ்ஹார் இந்தியாவில் ஜைஷ்-எ-மொஹம்மத் என்கின்ற அமைப்பினை நிறுவியது. (இந்தியாவில் நிறுவப்பட்டது என்பதைக் கவனிக்கவும். பாக்கிஸ்தானிய தீவிரவாத அமைப்பு என்று மட்டுமே இங்கு பேச்சு அடிபடும். ஆனால், உண்மையில் இந்தியா பொருளாதார தன்னிறைவு அடைவதற்கு முன்னரே தீவிரவாதத் தன்னிறைவு பெற்றுவிட்டது என்பது மறைக்கப்படும் மற்றொரு உண்மை.) இந்த நிறுவனம் கொன்ற அப்பாவி மக்கள் பலர். பாராளுமன்ற தாக்குதலை நடத்தியதும் இவர்களே. அதாவது தற்போது தூக்குத் தண்டனையிலிருந்து தப்பவிருக்கும் பெரியவர் அஃப்ஸல் அவர்கள் இந்த தீவிரவாத நிறுவனத்தின் உறுப்பினர். இதே குழுதான் இதன் பின் மும்பையில் நடந்த ரயில் குண்டு வெடிப்பிற்கும் காரணமாகக் கண்டறியப்பட்டது.

பாராளுமன்றத்தின் உள்ளே பாஜாகா, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுக்கள் உள்ளீடாக அனைத்து கட்சியிலும் உள்ள பெருந்தலைகள் இருந்தனர். விட்டால் போட்டுத் தள்ளியிருப்பார்கள். இந்தியாவின் அனைத்து முக்கிய தலைவர்களையும் ஒரேயடியாக ஒரே நாளில் கொன்றுவிட்டால் இந்திய அரசாங்கத்தை உடனடியாக யார் எடுத்துச் செல்வது? மிகுந்த குழப்பமும், தேவையில்லாத கொடிய தொந்தரவுகளும் ஏற்பட்டிருக்கும். ஏன், ஆட்சியின் அதிகாரத்தைப் பிடிக்க புரட்சிகள்கூட ஏற்பட்டிருக்கலாம். ஏற்கனவே தனிநாடு கேட்டுக்கொண்டிருக்கும் குழப்பவாதிகள் தனிநாடுகள் அறிவித்துமிருக்கலாம். இவற்றையெல்லாம் சமாளிக்கக்கூடிய மாட்சிமை இந்தியாவிற்கு உண்டுதான் என்றாலும், இவை விளைவிக்கும் கேடுகள் இந்தியாவை எந்த அளவு பிற்போக்கு நிலைக்குத் தள்ளி இருக்கக்கூடும் என்பதை யோசிக்க வேண்டும். இந்தியாவின் பொருளாதார நிலை அதல பாதாளத்திற்குப் போகும். தற்போது தயங்கி தயங்கி இந்தியாவில் முதலீடு செய்துகொண்டிருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் சுத்தமாக அவர்களுடைய முதலீடுகளை நிறுத்திக்கொள்வர். வெளிநாட்டு முதலீட்டால் தற்போது ஓரளவு அதிகரித்துள்ள வேலைவாய்ப்புக்கள் இல்லாமலாகும். வெளிநாட்டு முதலீடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, சொந்தமாக தைரியமாக தொழில் நடத்தலாம் என்று மக்கள் நினைக்கக்கூடமுடியாது. மக்கள் ஏழைகளாவர். இந்த ஏழைகளை பணத்திற்காக தங்களுடைய மதத்திற்கு மாற்றிக்கொள்ளலாம். ஏனெனில் மத மாற்றம் என்பது ஒரு மிகப் பெரிய வியாபாரம்.

இந்திய அரசாங்க பட்ஜெட்டைவிட அதிக அளவு செல்வம் புழங்கும் விஷயமாக தற்போது உள்ள இந்த வியாபாரம் இந்தக் குழப்பங்களால் மிக மிக அதீத பெருக்கம் அடையும். இந்த ஒரு வியாபாரம்தான் வாழ வழி என்றாகிவிட்டால் மக்கள் அனைவரும் இந்த வியாபாரத்தில்தானே ஈடுபடுவர். இவை எல்லாவற்றையும் தடுத்தவர்கள் ஆறு பாராளுமன்றக் காவலர்கள். சாதாரண மனிதர்கள்.

இவர்களின் வீர மரணத்தால் தப்பிப்பிழைத்த தலைவர்களின் முன் அப்சலின் வாழ்க்கை தற்போது நிற்கிறது. இந்தத் தலைவர்களும் சுயநலமிகள் என்பதால் பொது ஜன அபிப்பிராயத்திற்கு எதிராக செல்ல விரும்பார். எனவே இத்தகைய பொதுஜன விருப்பத்தை ஏற்படுத்த எல்லா மீடியாக்களும் அப்சலை விடுதலை செய்யவேண்டும் என்று கூறும் திம்மித்துவவாதிகளின் எழுத்துக்களையும், பேட்டிக்களையும் வெளியிட்டுவருகின்றன. மாற்றுக் கருத்தை கூறுபவர்கள் எவரும் இல்லையோ என்ற தோற்றம் உருவாகும் அளவு திம்மித்துவவாதிகளின் கருத்தை மட்டுமே இவை வெளியிடுகின்றன. இதற்காக இந்த மீடியாக்களுக்கு என்ன லாபம் கிடைக்கும் என்பது அப்பாவி ஐயாசாமிகளான இந்திய பொதுஜனத்திற்கு என்றும் தெரிய வரப்போவதில்லை. ஆனால், இந்த ஐயாசாமிகளுக்கு தெரிந்ததெல்லாம் லாபம் இல்லாமல் மீடியா முதலாளிகள் வியாபாரங்கள் செய்யார் என்பதுதான். வெறும் அறிவு மட்டும் இருந்து என்ன பயன்? தடுக்கும் வலிமை இல்லையே.

இதே போன்ற நிலையிலிருந்த மக்களைக்கொண்டிருந்த பல நாடுகளைப்பற்றி வரலாறு என்ன சொல்லுகின்றது? உதாரணமாக, இந்திய தத்துவங்களுக்கும் கலாச்சாரத்திற்கும் இணையான பெர்ஷிய கலாச்சாரத்திற்கு என்ன ஆயிற்று? “அன்பைப் பளிங்கில் பதித்திடுங்கள்…. காயங்களை தூசியைப்போல துடைத்திடுங்கள்” என்கின்ற அழகிய உருக்கமான பழமொழிகளைப் பழகிய அந்த கலாச்சாரமே தற்போது அழிந்துவிட்டதே. ஈரான் என்கின்ற நாடாக அல்லவா அது மாறிவிட்டது. அந்த ஈரானிய நாடோ தீவிரவாத அமைப்புக்களுக்கு ஆயுதத்தையும், பணத்தையும் ஏற்பாடு செய்துகொண்டிருக்கின்றது. அந்த பழமொழிக்கு என்னவாயிற்று? பிரச்சினை என்னவென்றால் ஒரு கருத்தை சம்பந்தப்பட்ட அனைவரும் அப்படியே பின்பற்றவேண்டும். அங்கனம் இல்லாமல், ஒரு குழு தொடர்ந்து அன்பைப் பளிங்கில் பதிக்கவும், மற்றொரு குழு காயங்களை ஏற்படுத்தவும் செய்தால் பளிங்கு சமாதிகூட முந்தைய குழுவிற்குக் கிடைக்காது. அதுதான் இந்தியாவிலும் நடந்துகொண்டிருக்கின்றது.

இப்படிப்பட்ட ஒரு நிலையில் தீவிரவாதிகளுக்கு அவர்கள் எத்தனை இந்தியர்களைக் கொலை செய்தாலும், எவ்வளவு பெரிய சேதாரத்தை விளைவித்தாலும் மரண தண்டனை வழங்கக்கூடாது என்று சிறையில் அடைத்தால், நாளை இந்தியாவிற்குள்ளும் வெளியிலுமுள்ள துப்பாக்கி ஏந்திய தோழர்கள் அப்பாவிகளை பணயக்கைதிகளாக்குவர். இத்தகைய செயலுக்கு வருந்துவதுபோல முகத்தை வைத்துக்கொண்டு இந்தியாவிலுள்ள துப்பாக்கி ஏந்தாத தோழர்கள் இந்த தீவிரவாதிகளை விடுதலை செய்வர். இது ஓர் தொடர்கதையாகிவிட்டது. நமக்கும் பழகிவிட்டது. யாரேனும் தீவிரவாதியை விசாரணைக்காக கைது செய்தால்கூட காய்கறிவாங்க வீட்டை விட்டுப் போக வேண்டுமா என்ற கேள்வி வருகின்றது. வீட்டிற்கு வரும் பார்சலில் குண்டுகள் இல்லை என்பது நிச்சயம் இல்லையாதலால் வீட்டிலிருக்கவும் பயமாயிருக்கிறது. வீட்டிலும் பாதுகாப்பில்லை. வெளியிலும் பாதுகாப்பில்லை. இதற்கெல்லாம் காரணம் என்ன?

எந்த ஒரு குழு தன்னுடைய கருத்து மட்டுமே சரி என்றும், மற்றவை அனைத்தும் தவறு, அழிக்கப்படவேண்டும் என்று எப்போது கூற ஆரம்பிக்கிறதோ அப்போதே வன்முறை பிறந்துவிடுகின்றது. தன்னுடைய மதமே சிறந்த மதம், தன்னுடைய தூதரே உயர்ந்தவர், மற்றோரெல்லாம் சாத்தான்களின் குழுக்கள் என்று கூறும் ஆபிரகாமிய மதங்களால்தான் பெரும்பாலான போர்கள் நடந்தன. நடைபெற்று வருகின்றன. எல்லா வழிகளும் உயர்வழியே, இறையை அல்லது இறுதி உண்மையை எந்த வழிகளிலும் சென்றடையும் உரிமை எவருக்கும் உள்ளது என்று கூறுகின்ற இந்திய தத்துவங்களுக்கு எதிரானவையாக இவை இருக்கின்றன. எனவே இந்தியாவைப் பொறுத்தவரை, பாரதத்தின் பரந்த மனப்பான்மையையும், தனி மனித சுதந்திரத்தையும், பல கலாச்சாரங்களை ஏற்றுக்கொள்ளும் தன்மையையும், மக்களாட்சியையும் அழிப்பதே ஆபிரகாமிய மதங்களின் ஒரே வேலைத்திட்டம்.

இவர்கள் இதுவரை சென்ற பாதைகள் முழுவதும் ரத்தமே காய்ந்துகிடக்கிறது. அங்கனம் ரத்தம் சிந்தி கைப்பற்றப்பட்ட நாடுகள் தங்களது அதே கருத்தை ஏற்றுக்கொண்டுள்ள மற்றொரு நாட்டோடு அதே கருத்துக்களைத் தூய்மையாய் பின்பற்றவில்லை என்று அதே காரணங்களுகாகப் போர் தொடுக்கின்றன. இந்த வன்முறை ஏற்றுக்கொண்டாலும் நிற்காத வன்முறை. ஏற்காவிட்டாலும் இருக்கும் வன்முறை. இது பூமியிலிருந்து மனித வாழ்வையே அழிக்க வந்துள்ள வன்முறை.

வரலாற்று நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் மாறாமல் நிகழ்கின்றன. அடுத்த வரலாற்றுத் தவறுகளை மீள்பதிவு செய்யத் தேவையான மாறுபட்ட சூழலையும், மாறுபட்ட சட்டங்களையும் தவறாமல் உருவாக்குவதே வரலாற்றின் மாறாத நடத்தையாக இருக்கிறது.

குரு கோவிந்தசிங்
Guru Gobind Singh

இதைத் தடுக்க இத்தகைய வன்முறையை அழிக்கும் புரிந்துணர்வும், புரிந்துணர்வோடு கூடிய வன்முறையுமே தற்கால உலகின் தற்போதைய தேவைகள். இந்த வன்முறையானது மனிதர்களுக்கு சொந்தமாக புத்தி உண்டு, தனி மனித விடுதலை முக்கியம், கலாச்சார சுதந்திரம் அவசியம், எந்த மனிதரும் மற்றோருக்கு இளைத்தவரில்லை, இறுதி ஞானம் என்பது பல வழிகளிலும் அடையக்கூடிய ஒன்று என்ற கொள்கைகளைப் பயிலும் சுதந்திரத்தை மானுடத்திற்கு அளிக்கும் வன்முறையாக இருத்தல் அவசியம். இல்லையேல் இது எதிர்க்கும் வன்முறைக்கும் இதற்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும். அப்படித்தானே ஆபிரகாமிய மதங்கள் இங்கே தோன்றின.

அவர்களைப்போல நாமும் நடந்தால் நமக்கும் அவர்களுக்கும் என்ன வேறுபாடு என்று நினைத்தவர்களை ஆபிரகாமிய மதங்கள் விழுங்கி, ஜீரணம் செய்து, கழிவுகளாகத் தங்கள் மாறாத நிலைப்பாட்டை வெளியிட்டுவிட்டன. இத்தகைய வன்முறையாளர்களைத் தீவிரமாக எதிர்த்தால் அவர்கள் அதிக உத்வேகம் பெற்று மேலும் மேலும் தொந்தரவுகள் தருவார்கள் என்பதுகூட இந்த ந.பி.க்களின் (நடைப்பிணங்களின்) வாதங்களில் ஒன்று. அந்த வகையில் பார்த்தால் பிக்பாக்கெட் அடிப்பவர்களுக்குக்கூட தண்டனை வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுவிடும். (இப்படி சொல்லுவதால் பிக்பாக்கட்காரர்கள் கோபம் கொள்ளக்கூடாது. இந்த வெறிமதத்தினரையும் விட நீங்கள் பல பல படிகள் உயர்ந்தவர்கள்.) எத்தனை முறை குளித்தாலும் அழுக்காகும் உடம்பு, அதனால் குளிக்கவே வேண்டாம் என்று சொல்லும் வாதம் இது. எப்போதெல்லாம் எதேச்சதிகார சக்திகள் எழுகின்றனவோ அப்போதெல்லாம் அவற்றை அழிக்கத்தான் வேண்டும். என்ன பாதிப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று துணியவேண்டும். ஏனெனில், அங்கனம் செய்யாவிட்டால் ஏற்படப்போகும் பாதிப்பு, எதிர்ப்பதால் ஏற்படும் பாதிப்பைவிட அதிகம். மிக மிக அதிகம்.

கண்ணுக்குக் கண் எனும் ஹாமரோபியின் சட்டங்களுக்கு இந்தியாவின் பதிலாகவுள்ள “கண்ணுக்குக் கண் உலகை குருடாக்கும்” என்ற கோஷம் ஒரு நேர்மையற்ற வாதமே. ஏனெனில், ஒருவரின் கண்ணை குருடாக்கும் வன்முறை எல்லாருக்கும் இருக்காது. வன்முறையாளனுக்கு மட்டுமே இருக்கும். இத்தகைய “வன்முறையாளனை மட்டுமே” இந்த சட்டம் தண்டிக்கிறது. எல்லாரையும் இல்லை. எனவே, இத்தகைய சட்டத்தால் வன்முறையாளர்கள் குருடர்களாகலாம். அமைதியாய் வாழ்பவரன்று. அமைதியாய் வாழ்பவர்களுக்கு இத்தகைய சட்டங்களால் எந்த தொந்தரவும் இல்லை. அதனால் அமைதியாய் வாழவே அனைவரும் முயல்வர். இதனால், தீவிரவாதம் போன்ற விஷயங்களில் “மட்டும்” கண்ணுக்குக் கண் என்பது பலருக்கு உள்ளொளியை மட்டுமல்ல வாழ்வொளியையும் வழங்கும். ஆனால், இந்த உண்மையைக் காணத் தேவையான கண்ணொளி ஏற்பட வேண்டும்.

சற்றே யோசித்தால் அஃப்ஸல் உள்ளீடான தீவிரவாதிகள் மற்றோரை கொல்லும் முன்னரே கருணை அன்பு முதலான மென்மையான உணர்வுகளை இழந்த பிணங்களாகிவிட்டனர் என்பது புரியும். பிணங்களைத் தூக்கிலிடுவதில் என்ன தவறிருக்கக்கூடும்? அங்கனம் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டால் இந்த நடைப் பிணங்களால் மேலும் பிணங்களே குவியும்.

சுவர்க்கம் கிடைக்கும் என்னும் நம்பிக்கையாலோ, அல்லது மிக உன்னதமான காரியம் செய்வதாகவோ நினைத்து ஏற்கனவே கும்பல் கும்பலாக கொலைகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு, இனி கடுமையான தண்டனை எல்லாம் கிடையாது, சிறையில் ஆயுர்வேத சிகிச்சையோடு இருக்கலாம், சிறையிலுள்ளவர்களிடமும் தீவிரவாதக் கருத்துக்களைப் பரப்பலாம், வெளியில் இருந்தால் கிடைக்காத சுகபோகங்கள், வெளியில் கிடைத்த சுகபோகங்கள் (ஓரினச் சேர்க்கைக்குச் சிறுவர்கள் உட்பட) இங்கே கிடைக்கும் என்று அந்த சுவர்க்கத்தை சிறைச்சாலைகளுக்கும் கொண்டு வந்தால் இவர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரிக்கும்.

இத்தகைய தீவிரவாதத்தைத் தூண்டுகின்ற நாடுகளுக்கு (உதாரணமாக, பாக்கிஸ்தான், அரேபியா, ஆப்கானிஸ்தான்,….) இதனால் மேலும் லாபம்தான். இதுவரை இந்தச் செயல்களுக்காக இவர்கள் அதிகம் செலவழிக்கவோ, நஷ்டமடையவோ தேவையில்லாமல் இருந்தது. இந்தியாவிற்குத்தான் நஷ்டமும், பொருள் விரயமும். இனி சுவர்க்கத்தை சிறைச்சாலைகளுக்குக் கொண்டு வரும் செலவும் இந்திய அரசாங்கத்திற்கு ஏற்படும். இந்த அரசாங்கத்திற்கு தங்கள் உழைப்பின் ரத்தத்திலிருந்து வரி கட்டுபவர்களிடமிருந்து கிடைக்கும் பணத்தை உபயோகித்து, இந்த வெறிமதத்தார் வரி செலுத்தும் மடையர்களையே கொல்லுவர். கொன்றதற்காக விலை மதிப்பில்லாத வாழ்க்கையும் கிடைக்கும்.

ஆனால், இந்திய அரசாங்கம் இப்படித்தான் நடக்குமா, வேறு வகையில் நடக்கவியலாதா என்று பார்த்தால் நமக்கு இந்திய அரசாங்கத்தால் சரியான செயல்களைச் செய்யவும் முடியும் என்பது பஞ்சாப் பிரச்சினைகளைத் தீர்த்ததிலிருந்து தெரிகிறது. பஞ்சாப் தீவிரவாதம் தண்டிக்கப்படவேண்டியதாகவும், மற்ற மதத்தீவிரவாதங்கள் ஆதரிக்கப்படவேண்டியதாகவும் இந்திய அரசாங்கத்திற்கு தோன்றுவதற்குக் காரணம் வெறும் ஓட்டு அரசியல்தான் என்பது வெள்ளிடை. இத்தகைய திம்மித்துவ அரசியல்வாதிகள் பலர் இந்த தீவிரவாதச் செயல்களை, கொலைகளை அரசியல் கொலைகளாக பார்க்கவேண்டும் என்றும் கூறுவர். காந்தி உயிரோடு இருந்தால் இவர்களை மன்னிக்கவேண்டும் என்பார் என்றும் கூறுவர். அவர்களுக்குத் தெரியாததில்லை, காந்தியே இது போன்ற ஒரு சூழ்நிலையில் மரணதண்டனை விதிக்கப்படுவதை எதிர்க்கமுடியாமல் இருந்தார் என்பது.

கீழ்த்தரமாய் வாதங்கள் செய்வதற்கு சளைக்காத சிலர் அஃப்சலை பகத்சிங்கிற்கு இணையாய் வைக்கின்றனர். இருவரும் பாரளுமன்றத்தைத்தானே தாக்கினார்? என்ன வேறுபாடு, ஒருவர் தீவிரவாதி ஒருவர் தேசியவாதியா? என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள். இரண்டிற்கும் எத்தனையோ வேறுபாடுகள் இருக்கின்றன. மாவீரன் பகத்சிங் பாராளுமன்றத்தில் யாரையும் கொல்லாமல் நுழைந்து, யார் மேலும் பட்டுவிடாமல் குண்டினை எறிந்தார். இதற்குக் காரணம் உலகம் இந்தியாவின் பிரச்சினையை கவனிக்க வேண்டும் என்பதால். பகத்சிங் அப்பாவி பொதுமக்களையும், பயணிகளையும், குழந்தைகளையும், முதியோரையும் கொல்லுவதை ஆதரிப்பவரில்லை. அப்சல் வகையறாக்களோ அதைத்தான் செய்துவருகின்றன. தொடர்ந்து செய்யவும் போகின்றன.

பாராளுமன்றத்திலிருந்த தலைவர்களைக் கொல்ல வந்த அவர்கள் 6 காவலர்களைக் கொன்றார்கள். பகத்சிங்கின், வாஞ்சிநாதனின் எச்சில் உணவை உண்ட எலிக்குக்கூட அப்பாவிகளைக் கொல்லத் தோன்றாது. இது தெளிவாகத் தெரிந்தும் தீயோரை நல்லோருக்கு இணையாக வைப்பதற்கான காரணங்கள் எவை? ஒரு நிலப்பகுதியில் வாழும் மாந்தர் தங்களின் வரலாறு பற்றி எதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பதும், அந்த எதிரிடைக் கதைகள் வன்முறையால் நிரம்பியிருப்பதுமே காரணங்கள்.

இத்தகைய எதிர் எதிர் வரலாற்று கருத்துக்கள் இருக்கும் நிலங்களில் பலமற்ற அமைதி விரும்பும் மக்கள் அழிவதே நிகழ்ந்துள்ளது. தங்களின்மேல் திணிக்கப்பட்ட வரலாறுகளை, திருத்தப்பட்ட வரலாறுகளைப் படிக்கும் இந்தியர்கள், பள்ளியில் போதிக்கப்படும் பாடங்களை நம்பாமல், அவரவர் குழுக்களின் போதனைகளுக்கேற்ப வன்முறையில் ஈடுபடுகின்றனர். தன் குழு தவிர்த்த ஏனைய குழுக்கள் தாழ்ந்தவை, திருத்தப்படவேண்டியவை என்று நினைக்கும் வரலாறுகளைப் படிப்பவர்களால் இந்தியா சிதற இருப்பது திண்ணம்.

இல்லவே இல்லை என்று முதலில் சொல்லிவிட்டுப் பின் மூட்டுவலியோடு கூடிய காய்ச்சல் என்றாவது சிக்கூன் குனியாவை அங்கீகரிக்கின்ற அரசாங்கம் இந்த தீவிரவாத வியாதிக்கு ஆயுர்வேத சிகிச்சையளிப்பதையெல்லாம் விட்டுவிட்டு ஆயுத சிகிச்சை அளிக்க முன்வரவேண்டியது முக்கியம். இதற்கு இப்படிப்பட்ட தீவிரவாதம் இந்தியாவில் இருக்கின்றது என்பதை இந்திய அரசாங்கமும், மக்களும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இந்த வியாதியைப் பொறுத்தவரை அழிக்காவிட்டால் அழிக்கப்படுவீர் என்பதை நினைவில் கொள்ளுவது அத்தியாவசியம்.

இந்திய நீதிமன்றம் சரியான முறையில் விசாரிக்கவில்லை. நேரடி சாட்சியில்லாத இந்த விஷயத்தில் சூழ்நிலையளித்த சாட்சிகளை மட்டும் வைத்து விசாரித்திருப்பதால் அஃப்சல் வாயில் எதையாவது (விரல், லாலிபாப், அல்லது வேறு ஏதாவது) வைத்து சூப்பிக்கொண்டு இருக்கும் ஒரு அப்பாவி குழந்தை என்றே கொள்ள வேண்டும் என்பது இந்த மரணதண்டனையை எதிர்க்கும் ந.பி.க்கள் சொல்லும் மற்றொரு வாதம். முதலாம் வருட சட்ட மாணவருக்குக்கூட தெரியும் பிக்பாக்கெட் அடிப்பதைக்கூட வீடியோ படம்பிடித்து நிறுவ வேண்டும் என்பது நடவாதது என்பது. மேலும் இதுபோன்ற விஷயங்களில் சாட்சிகளை பாதுகாக்கும் கடமையும் அரசாங்கத்திற்கு உள்ளது.

செப்டம்பர் 11 தாக்குதலுக்கு என்னவிதமான எதிர் நியாயங்களை இவர்கள் கூறினார்களோ அதே நியாயங்களை இங்கும் முன்வைக்கின்றனர். அதாவது, அமெரிக்கா இரட்டை கோபுரங்களைத் தானே தாக்கிக்கொண்டது என்பது அவ்வாதம். அதே போல இந்த பாராளுமன்ற தாக்குதலே இந்திய அரசாங்கம் செய்ததுதான் என்கின்ற அளவில் இவர்கள் இந்த ந.பி.க்களை பாதுகாக்கப் பொய் சொல்லுகின்றனர். அந்த வகையில் கோயம்புத்தூரில் குண்டினால் இறந்த அந்த ஆறு வயது குழந்தை செய்துகொண்டதுகூட தற்கொலை என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். அஃப்சலின் உயிருக்கு முன்னால் மற்ற உயிர்களுக்கு மதிப்பில்லையா? இவ் வெறிமதத்தார் உயிரும், வாழ்வும், சந்தோஷமும் அப்பாவி மக்களின் உயிரைவிட உயர்வானது எப்போது?

மற்ற குழுக்களை கொடுமைப்படுத்துவதையே சந்தோஷமான வாழ்நெறியாகக் கொண்ட தீவிரவாதிகளுக்கு இவையே மனித உரிமைகளாகத் தோன்றுகின்றன. இவற்றை எதிர்ப்பவர்கள் தங்களின் உரிமைகளை எதிர்ப்பதாகவும் சொல்லுகின்றனர். அவர்களது போதனைகளின்படி இது நியாயமான ஒரு வாதம்தான்.

அதேபோல் மனித உரிமை என்கின்ற பெயரால் கொடுஞ்செயல்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு பெட்ரோ டாலர்களோ, ஓரிரண்டு சால்வைகளோ, வாழ்க்கை வசதிகளோ, ஓட்டுக்களோ தனி மனித சுதந்திரத்தையும் விட உயர்வாகவும் தேவையாகவும் தெரிகின்றன.

தீவிரவாதிகள் நடத்திவரும் தாக்குதல்களுக்கு மரணதண்டனை வழங்கக்கூடாது என்று கூறுபவர்களுக்கு, தீவிரவாதிகள் இந்தக் கொலைகளை காஃபிர்களுக்கு வழங்கும் தண்டனையாகவே கருதுகின்றனர் என்பதும் தெரிந்திருக்கலாம். விதிக்கப்படும் தண்டனைக்கான காரணம் கொல்லப்படுபவர்கள் தங்கள் மதத்தைச் சேர்ந்தவரில்லை என்பதுதான்.

செப்டம்பர் 2002ல் குஜராத் அக்ஷர்தாம் கோவிலில் தாக்குதல் நடத்தி 30 பேரைக் கொன்ற தீவிரவாத அமைப்பின் பெயர் “டைஹ்ரீக்-ஏ-கிஸ்ஸாஸ்” (Taihreek-e-Qisaas). இதன் பொருள் “மரண தண்டனை” !

இந்தியாவில் இந்த மரணதண்டனையைத் தீவிரவாதிகளுக்கு நிறைவேற்றக்கூடாது என்று சொல்லுபவர்கள் தொடர்புடைய மற்ற நாடுகள் இந்த பிரச்சினையை எங்கனம் அணுகுகின்றன என்பதையும் கவனிக்கவேண்டும். 2000மாவது ஆண்டில் மட்டும் சவூதி அரேபியாவில் மரண தண்டனை பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 12. இவர்கள் மரண தண்டனை பெற்றது நமது நாட்டுச் சட்டங்களின்படிப் பார்த்தால் உப்புப் பெறாத உளுத்த விஷயங்களுக்காக. (இதே தண்டனை விதிக்கப்பட்ட மேற்கத்தியர்கள் அந்த நாடுகளின் தலையீட்டால் விடுதலை செய்யப்பட்டுவிடுகின்றனர். இந்திய அரசாங்கம் தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்களை இதுவரை காப்பாற்றியதில்லை. மதச்சார்பின்மை, மற்ற நாடுகளின் உள்விவகாரம் என்று சாக்குகள் சொல்லுகிறது.)

இங்கே தீவிரவாதிகளுக்காகக் குரல் கொடுக்கும் ந.பி.க்கள் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட இந்தியர்களைப் பற்றி மூச்சுக்கூட விடுவதில்லை. அஃப்சல், கீலானி போன்றவர்களுக்காக அமைப்புக்கள் ஆரம்பித்து, ஏகப்பட்ட பணம் செலவழித்துப் போராட்டம் நடத்தும், பேட்டிகள் கொடுக்கும் இவர்கள் சவூதி அரேபியாவிலோ, பாக்கிஸ்தானிலோ, பங்களாதேஷிலோ, சீனாவிலோ மரணதண்டனை விதிக்கப்படுவது குறித்து அறியாதவர்களாக இருக்கிறார்கள். ஒருவேளை, “இவர்கள் என்னதென தெரியாமல் செய்கிறார்கள். ஆண்டவரே, இவர்களை மன்னியும்” என்று ஆதரவளிக்க ஆட்கள் இருக்கிறார்கள் என்கிற அகந்தையால் இருக்கலாம். இவர்கள் கொல்லப்படும் ஹிந்துக்களுக்காக தங்கள் வாழ்க்கையைச் செலவழிப்பார்களா?

அதுகூட வேண்டாம். இந்தப் பாராளுமன்றத் தாக்குதலால் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தாருக்கு உதவி செய்யும்படி ஒரு போராட்டம்கூட இவர்கள் நடத்தவில்லை. இதுவரை இந்தியாவில் தீவிரவாதத்திற்குப் பலியான, நடுத்தெருவுக்கு வந்துவிட்ட, நாதியற்ற ஏழைகளுக்கு உதவ இவர்களின் சுண்டு விரல்கூட இதுவரை அசையவில்லை. காஷ்மீரில் இருந்து துரத்தப்பட்டு சொந்த நாட்டில் அகதிகள் என்கிற ஆதரவு இல்லாமல் அழிந்துகொண்டிருக்கும் மக்களைப் பற்றி இவர்களுக்குக் கவலையில்லை. குண்டுவெடிப்பினாலும், மதக்கலவரங்களாலும் வாழ்வையும், குடும்பத்தாரையும் இழந்தவர்களுக்கு இரங்கற்பாகூட இல்லை.

இவை எல்லாவற்றையும் விட ஆச்சரியப்படுத்தும் விஷயம் என்னவென்றால், மரணதண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு வற்புறுத்துவது அப்சல் இல்லை. தன்னுடைய செயலுக்கு வருந்தாத அது மரணதண்டனையை ஏற்கத் தயாராக உள்ளது. என்னவிருந்தாலும் போரில் நேருக்கு நேர் நிற்க தைரியமில்லாமல் குழந்தைகளையும், முதியோரையும், எதற்காக சாகிறோம் என்பதுகூடத் தெரியாமல் சாகடிக்கும் வெற்றுமரபைச் சார்ந்ததல்லவா அது. இத்தகைய மாவீரர், மற்ற வெறியருக்கும் வழிகாட்டியாக அமைய தீவிரவாதம் முடிவு செய்துவிட்டது. அதனால், அப்சலுடைய மனைவியையும், மகனையும் முன்வைத்து தீவிரவாதம் தன்னுடைய பிற்காலக் கொடுஞ்செயல்களை எளிதாய் நிறைவேற்ற செய்யும் முயற்சிதான் நீதிபதி கிருஷ்ண ஐயர் ஆதரவளிக்கும் இந்த கருணை மனுவும், அதன் தொடராய் எழும் தண்டனைக்குறைப்பு குரைப்புக்களும்.

இத்தோடு தீவிரவாதிகளால் தயார் செய்யப்பட்ட ஒரு கட்டுரை அப்சலின் மனைவி எழுதியதுபோல உலா வருகின்றது. அக்கட்டுரை இந்திய அரசாங்கம் அப்பாவிக்களை கொடுமைப்படுத்துவதாகவும், மனம் திருந்திய அப்சல் போன்றவர்களை (?) இவ்வரசு அதிகம் கொடுமை செய்வதாகவும், எனவே மனம் திரும்புகிற தீவிரவாதிகளுக்கு கதி இல்லை என்பதையும் விளக்கும் வண்ணமாய் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையின்படி இந்திய அரசாங்கம்தான் இந்தத் தாக்குதலை செய்து அப்சல் போன்ற அப்பாவியை தண்டித்துள்ளது. இதை அடிப்படையாகக்கொண்டே மரணதண்டனை குறைப்பு வேண்டப்படுகிறது. சுருங்கச் சொன்னால் இந்தியாவில் நீதி செத்துவிட்டது. எனவே நீதியோ நேர்மையோ இல்லாத இந்த அரசாங்கத்தை, அதன் மக்களை அழித்து நமது நீதியை நிலைநாட்டுவோம். வாளும், புனித நூலும் ஏந்தி வகாபியம் காக்க வாருங்கள் என்பதுதான் இதன் சாரம்.

எதுவாயினும், திம்மித்துவவாதிகளாலும், ந.பி.க்களாலும் மாவீரனாகப் போற்றப்படுகிற இந்த அஃப்சலின் மரணமோ, அல்லது தண்டனைக் குறைப்போ மேலும் பல தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் என்பது திண்ணம். ஏனெனில், தீவிரவாதிகளை உருவாக்கும் மையப்புதிர் அழியும் வரை தீவிரவாதம் தீவிர வியாதியாய் பரவிக்கொண்டேயிருக்கும். நமது தற்கால அரசியல் தலைவர்களுக்கு ஓட்டுக்களும், சொந்த சுகபோகங்களும் மட்டுமே முக்கியமாதலால் பலமுள்ள சிறுபான்மைத் தீவிரவாதம், பலமற்ற பெரும்பான்மையோரின் வாழ்வையும் சுதந்திரத்தையும் அழித்துக் கொண்டே இருக்கும்.

சென்னையில் தன் குடும்பத்தில் குழந்தையைக் கூட விடாமல் கொன்ற ஜெயப்பிரகாஷுக்கும், ஆட்டோ ஷங்கருக்கும் மன்னிப்பு வழங்கப்படவில்லை. பாராளுமன்ற தாக்குதல் சம்பவத்தால் ஆறு குடும்பங்களின் வாழ்வை கொன்ற அஃப்சலுக்கும், இதுபோன்ற சம்பவங்களால் இதுவரையும், இனிமேலும் பல கோடி உயிர்களை பறிக்கவிருக்கிற தீவிரவாதத்திற்கும் மன்னிப்பு கிடைத்தால், தற்போதைய சூழலில் அது அதிசயமில்லை.

பலமுள்ளது வெல்லும் என்பது நியதி. கொடியது ஒன்றை பலமுள்ளதாக்க நல்லவர்கள் செய்யவேண்டியது ஒன்றும் செய்யாமலிருப்பதுதான்.

எழுதப்பட்ட சட்டங்கள் சிலந்தி வலையொத்தவை; பலவீனமான, ஏழை உயிரினங்களே இவற்றில் சிக்கிக்கொள்ளும்; ஆனால், பலமுள்ள பணவசதியுள்ள உயிரினங்களால் சிலந்திவலையே துண்டு துண்டாய் சிதறி அறுபடும். – அனச்சார்ஸிஸ்

(இந்தக் கட்டுரை ஆனந்த விகடன் 25.10.2006 இதழில் நீதிபதி கிருஷ்ணய்யரின் பேட்டிக்கு எதிர்வினையாக அப்போதே எழுதி விகடன் ஆசிரியருக்கு அனுப்பப் பட்டது. இக்கட்டுரை/கடிதம் வெளியிடப் படவும் இல்லை. பனித்துளி அவர்களுக்கு பதில் எதுவும் வரவும் இல்லை).

மரியாதைக்குரிய ஆனந்த விகடன் ஆசிரியருக்கு,

25.10.2006 ஆனந்த விகடன் இதழில் முன்னாள் நீதிபதியும், தற்போதைய அரசியல்வாதியுமான மதிப்பிற்குரிய கிருஷ்ணய்யரின் பேட்டி வெளிவந்தது. அப்சல் எனும் தீவிரவாதியின் மரணதண்டனைக்கு எதிரான அவரது வாதங்கள் அவர் ஒரு நீதிபதியாக இருந்து நெடுநாளாகிவிட்டது என்கின்ற எண்ணத்தையே தோற்றுவித்தன. இது போன்று வாதங்களை முன்வைப்பதில் அவர் தனித்தவரில்லை என்பதும், ஒரு பெரும் கும்பலில் ஒருவர் என்பதும் தெரிந்ததே. எனக்குத் தோன்றிய கருத்துக்களை ஒரு கட்டுரையாக விகடனுக்கு அனுப்புகிறேன். இதைத் தாங்கள் கடிதமாக எடுத்துக்கொண்டாலும் சரிதான்.

பழைய காலத்தில் தனக்கிருந்த தைரியத்தையும், நேர்மையையும் விகடன் இப்போதும் கொண்டிருக்கும் என்று நம்புகின்ற பல லட்சக்கணக்கான வாசகர்களுக்கு மத்தியில் இந்தக் கட்டுரையை வெளியிட வேண்டுகிறேன். கோடிக்கணக்கில் முதலீடு தேவைப்படும் இந்தத் தொழில் தொடர்ந்து நடக்க தீவிரவாதிகளுக்கு ஆதரவாக மட்டுமே கருத்துக்கள் வெளியிடவேண்டியிருக்கிறது என்கின்ற நடைமுறையை நான் அறிவேன். ஆதலின் இதைத் தாங்கள் வெளியிடாவிட்டாலும் அது புரிந்துகொள்ளக்கூடியதே. இதை வெளியிடத் தாங்கள் முடிவு செய்வீர்களாயின், என் கண் அறிந்து இக்கட்டுரையில் பிழைகள் இல்லை என்று நான் நம்புவதால், மாறுதலின்றி வெளியிட்டால் மகிழ்வேன்.

வணக்கங்களுடன்,
பனித்துளி

வருண் வருகையும் சோனியா கலக்கமும்

வருண் காந்திபிலிபிட் – உத்தரப் பிரதேச மாநிலத்தின் இந்திய-நேபாள எல்லையில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதி. இங்கே இந்திரா காந்தியின் மருமகளும், சஞ்சய் காந்தியின் மனைவியுமான மேனகா காந்தி 1996-ஆம் வருடத்திலிருந்து தொடர்ந்து வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். ஆரம்ப காலத்தில் சுயேச்சையாக இருந்து பின்னர் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்து மத்திய அமைச்சராகவும் இருந்தவர். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தன் மகனான வருண் காந்தியை, தான் இத்தனை வருடங்களாகக் கட்டிக் காத்து வந்த பிலிபிட் தொகுதியில் தன் கட்சியின் அனுமதியுடன் வேட்பாளராக நியமித்துள்ளார்.

வருண் காந்தி, பட்டம் படித்தவர், மேற்படிப்புக்குச் சென்றவர்; நன்றாகக் கவிதையும், உரைநடையும் எழுத வல்லவர்; ஓரளவு திறமையான பேச்சாளரும் கூட. இருபத்து ஒன்பது வயதேயான இளைஞர். குழந்தைப் பருவத்திலேயே தந்தையான சஞ்சய் காந்தியைப் பறிகொடுத்தவர் ஆதலால், இவர் வளரும்போது, நேரு குடும்பத்திற்கே உரியதான, போலி மதச்சார்பின்மையும், ஹிந்து வெறுப்பும், வெளிநாட்டு மோகமும், இவரிடம் ஒட்டவில்லை. இவரது தாயார் மேனகா காந்தி சீக்கிய வம்சாவளியில் வந்த காரணத்தால் இவரை வீரம் உள்ளவராகவும், தைரியம் மிக்கவராகவும் வளர்த்தார் என்றே சொல்ல வேண்டும்.

வருண் காந்தி, தான் பிலிபிட் தொகுதி வேட்பாளர் என்பது உறுதியானவுடன், தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்தத் தொகுதி ஹிந்துக்களும், முஸ்லீம்களும் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதி. நேபாள எல்லையில் இருப்பதால் இஸ்லாமியத் தீவிரவாதிகள் எல்லை தாண்டி வந்து நம் நாட்டிற்குள் புக வசதியாக இருக்கின்ற ஒரு தொகுதி. அவ்வாறு நம் எல்லைக்குள் வருகின்ற தீவிரவாதிகளுக்கு சில உள்ளூர் மதவாதிகள் இடமும் கொடுத்து உதவியும் செய்து வருகின்றனர். இதனால் அடிக்கடி இத்தொகுதியில் பசு வதை, ஹிந்துப் பெண்கள் கடத்தல் மற்றும் கற்பழிப்பு, ஹிந்துக்கள் வீட்டில் கொள்ளை போன்ற பயங்கர சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. ஹிந்துக்கள் எப்போதும் ஒரு பயத்திலேயே உயிர் வாழவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டுள்ளனர். (இந்த உண்மைகளை எழுத்தாளரும், பத்திரிகையாளருமான திரு தருண் விஜய் சமீபத்தில் எழுதிய ஒரு கட்டுரையில் தெளிவு படுத்தியுள்ளார்). உத்திரப் பிரதேசத்தை ஆண்டுவரும் முலாயம் (5 ஆண்டுகள்) மற்றும் மாயாவதி (2 ஆண்டுகள்) ஆகியோரின் போலி-மதச்சார்பின்மை அரசுகள் இப்பிரச்சனையைக் கண்டு கொள்ளவே இல்லை.

தொகுதியில் ஹிந்துக்களின் நிலையைக் கண்டு கொதித்துப்போன வருண் காந்தி, தன் கட்சித் தொண்டர்களின் கூட்டத்தில், “ஹிந்துக்களுக்குத் துரோகம் இழைப்பவர் எவராயிருந்தாலும் அவர்களை அழிப்பேன். எவரேனும் ஹிந்துக்கள் மீது கை வைத்தால் அவர் கையை வெட்டுவேன். பாகிஸ்தான் தீவிரவாதிகளையும், அவர்களுக்கு உதவும் நபர்களையும், அவர்கள் ஹிந்துக்களாக இருந்தால் கூட, பகவத் கீதையில் சொன்னபடி அவர்களை அழிக்கத் தயங்க மாட்டேன்” என்று உணர்ச்சி மேலிட்டு முழங்கியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது.

அந்த வீடியோவில் இருப்பது தன் குரலல்ல என்று வருண் கூறியுள்ளார்.

தன் பேச்சில் அவர் முஸ்லீம்கள் என்று ஒரு சமுதாயத்தைக் குறிப்பிட்டுச் சொன்னதாகவோ அல்லது அவர்களைத் தரக்குறைவாகப் பேசியதாகவோ தெரியவில்லை. ஆனால் அப்படிப் பேசியதாக நாடெங்கும் உள்ள பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகள் செய்திகள் பரப்பின. மத நல்லிணக்கத்திற்கு எதிராக, இரு மதத்தினரிடையே பகைமையை வளர்க்க, நாட்டின் அமைதியைக் கெடுக்கவேண்டி அவர் வேண்டுமென்றே பேசியதாக இவை விடாமல் கூறி வருகின்றன. போலி மதச்சார்பின்மை பேசி, எப்பொழுதும் ஹிந்துக்களுக்கு எதிராகவே கருத்துக்களைக் கூறிவரும் ஊடகங்களின் விஷமப் பிரச்சாரத்துக்கு மதிப்பளித்து, தேர்தல் ஆணையம், ‘இந்திய தண்டனைச் சட்டம்’ (IPC) 153A பிரிவின் கீழும். ‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்’ (Representation of People Act) 125 பிரிவின் கீழும் வருண் காந்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்திரப் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு அளித்தது. அதன்படி அவர் காவல்துறைக்குப் புகார் அளிக்க, உத்திரப் பிரதேசக் காவல் துறையும் முதல் தகவல் அறிக்கை தயார் செய்தது.

இங்கே நாம் இரண்டு முக்கியமான விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஒன்று, ஊடகங்களின் விஷ(ம)ப் பிரச்சாரம். இரண்டாவது, தேர்தல் ஆணையத்தின் அத்துமீறல்.

முதலாவதாக, பல ஊடகங்கள் நேரு குடும்பத்தின் அடிவருடிகளாக இயங்குவது நமக்குப் புதிதல்ல. இத்தாலி நாட்டைச் சேர்ந்த சோனியாவை நேரு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட ஒரே காரணத்துக்காக பாரதப் பிரதமராக்க வேண்டிப் படாத பாடுபட்ட ஊடகங்கள், இந்திய சட்டப்படி அது இயலாது என்று தெரிந்தவுடன், இந்திய மற்றும் இத்தாலி ஆகிய இரண்டு தேசத்துக் குடியுரிமையும் கொண்டுள்ள பிரியங்கா மற்றும் ராகுல் ஆகியோரைப் பிரதமராக்கத் துடித்தன. பிரியங்காவும் தனக்கு ஆர்வமில்லை என்று சொல்லி விட்டதால், கடந்த ஐந்து ஆண்டுகளாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ராகுல் காந்தியை மக்கள் முன்னால் நிறுத்த அனைத்து முயற்சியும் எடுத்து வருகின்றன. உருப்படியான கல்வி அறிவு, நாட்டு நடப்புகளை கவனித்து அவற்றை ஆராய்ந்து பார்க்கும் திறன், பேச்சுத் திறன், எனப் பல தேவையான தகுதிகள் இல்லாததால் ராகுல் காந்தியால் மக்கள் மனதில் இடம் பிடிக்க இயலவில்லை.

அவரை முன்நிறுத்திப் பிரச்சாரம் செய்த எந்த மாநிலத் தேர்தலிலும் காங்கரஸ் கட்சியினால் வெற்றி பெற முடியவில்லை. இருந்தாலும், “இந்தியாவைக் கண்டுபிடித்தல்” (Discovering India) என்று அவர் நாடகத் தன்மையுடன் கூடிய ஒரு பிரயாணம் மேற்கொண்ட போது, அதன் மூலம் மக்கள் மனதில் அவர் இடம் பிடிக்க ஏதுவாக, அவர் தலித் மக்களுடன் ஒரு நாள் இரவு குடிசையில் தங்கியதையும், ஒரு நாள் மதிய உணவு அருந்தியதையும், தலித் குழந்தைகளுடன் ஒரே ஒரு நாள் விளையாடியதையும், பெரிதுபடுத்திக் காண்பித்து, அவற்றைப் பற்றிக் கட்டுரைகள் எழுதி மக்களிடையே ராகுல் காந்தியை “இந்தியாவின் இளவரசன்” என்பதான ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயன்றன ஊடகங்கள். இந்த முயற்சியிலும் தோற்றுப்போயின.

பின்னர் அவர் தன்னுடைய செயலர்கள் எழுதிக் கொடுத்த பேச்சைப் பாராளுமன்றத்தில் தட்டுத் தடவிப் படித்ததை ஒரு மாபெரும் சொற்பொழிவாகக் காட்ட முயற்சித்தன. அதிலும் அவை வெற்றி பெற முடியவில்லை. இந்த ஊடகங்கள் எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து போயிருக்கின்றன என்றால், ராகுல் காந்தி காலையில் கண் விழிப்பதையும், பல் தேய்ப்பதையும், குளியலறை போவதையும் தான் முக்கியச் செய்தியாக (breaking news) போடுவதில்லை. மற்றபடி அவர் எது செய்தாலும் அது முக்கியச் செய்திதான்!

இவ்வாறு ராகுல் காந்தியை இந்திய மக்களின் மீது பிரதமராகத் திணிக்க ஊடகங்களும், போலி மதச்சார்பின்மை வாதிகளும் முயற்சி செய்யும் வேளையில், மேனகா காந்தியின் மைந்தர் வருண் காந்தி ஹிந்துக்களின் பிரதிநிதியாகவும், பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய வேட்பாளராகவும், தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்குவதை அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. சொல்லப் போனால் நேரு குடும்பத்திலிருந்து ஓர் இளைஞர் இந்த தேசத்தின் உண்மையான பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும், மத உணர்வுகளையும் புரிந்து கொண்டு அவற்றைக் காக்கும் பொருட்டு அரசியலில் இறங்குவதை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. வருண் காந்தி ராகுல் காந்தியை அரசியல் களத்தில் எளிதில் தோற்கடித்து விடுவாரோ என்கிற அச்சம் வெளிப்படையாகவே தெரிகிறது. கடந்த இரண்டு வாரங்களாக ஊடகங்கள் வருண் காந்தி மீது சேற்றை வாரி இறைக்க முயற்சி செய்து வருவதன் காரணம் இதுதான்.

பிலிபிட் தொகுதியின் அதிகாரபூர்வ வேட்பாளராக வருண் காந்தி தேர்தல் ஆணையத்தினால் அங்கீகாரம் செய்யப்படாத நிலையில், மேலும் தன்னுடைய வேட்பு மனுவை அவர் இன்னும் தாக்கல் செய்யாத நிலையில், தேர்தல் ஆணையம் அவர்மீது நடவடிக்கை எடுத்திருப்பது சட்டத்திற்குப் புறம்பானது என்றும் அது தன் எல்லையை மீறி நடந்துகொண்டுள்ளதாகவும் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களே தெளிவு படுத்தியுள்ளார்கள். காவல்துறைக்கு மட்டுமே வருண் காந்தி மீது நடவடிக்கை எடுக்க தற்போது அதிகாரம் இருக்கின்ற நிலையில், வருண் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, காவல்துறையின் அறிக்கையின் படி தேர்தல் ஆணையம் வேட்புமனுவை நிராகரித்திருக்கலாம். அல்லது தேவையான நடவடிக்கைகளை அப்போது எடுத்திருக்கலாம்.

மேலும், வருண் காந்தி, தான் அவ்வாறு மத வெறியுடனோ, இரு மதத்தாரிடையே பகைமை ஏற்படுத்திக் கலவரம் ஏற்படும் விதமாகவோ பேசவில்லை என்றும், அந்த ஒலி/ஒளி மின்வட்டுக்கள் திருத்தம் செய்யப்பட்டவை என்றும், தனக்கு எதிராக நடந்த அரசியல் சதி என்றும் கூறியுள்ளதை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யவில்லை. அவர் தன் பக்கத்து நியாயங்களை எடுத்துச் சொல்ல அவருக்கு வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. அதோடு நில்லாமல் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துவிட்டு, பா.ஜ.க.வுக்கு வருணை வேட்பாளராக நியமிக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கியிருப்பதும் ஒரு அதீதமான செயல்பாடு என்று கருத இடமிருக்கிறது. இதுவரை இந்தியாவில் நடந்திராத விதமாகத் தேர்தல் ஆணையம் இவ்வாறு நடந்து கொண்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஏப்ரல் 20-ம் தேதி முதல் தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி ஏற்கப் போகும் திரு நவீன் சாவ்லா அவர்களும், மற்றொரு ஆணையர் திரு கொரேசி அவர்களும் காங்கிரஸ் கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதே. தற்போது உள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் திரு கோபாலஸ்வாமி அவர்கள் திரு நவீன் சாவ்லா காங்கிரஸ் கட்சியின் சார்பாகப் பலமுறை நடந்து கொண்டதாகவும் அவரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதியிடம் அரசியல் சாசனத்தின்படி பரிந்துரை அளித்ததை நாம் அறிவோம். மேலும், வருண் விஷயத்தில் தேர்தல் ஆணையம் அவசர கதியில் நடந்து கொள்வதைப் பார்க்கும்போது, நமக்குச் சந்தேகம் உறுதியாகிறது. அதாவது ராகுல் காந்திக்குப் போட்டியாக வருண் வந்துவிட்டால், ராகுலின் அரசியல் வாழ்வு அதோகதியாகிவிடும் என்கிற பயம் காரணமாக காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவியும், நவீன் சாவ்லா மூலமாக வருணின் அரசியல் வாழ்க்கை தொடங்கு முன்னரே முடமாக்கிவிட முயற்சி மேற்கொண்டுள்ளனர் என்பது தெளிவாகிறது. இதற்கு ஊடகங்களும் ஒத்து ஊதுகின்றன என்பதும் விளங்குகிறது.

இதனிடையே வழக்குகள் போடப்பட்டதால், தன்னுடையVarun Gandhi முன்ஜாமீன் காலாவதியாகிவிட்ட நிலையில், நம் நாட்டு சட்டத்திற்கு மதிப்பளித்து, வருண் காந்தி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அப்போது அவருடன் வந்த அவரின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மீது காவல் துறை தடியடி, மற்றும் ரப்பர் குண்டுகள் அடங்கிய துப்பாக்கிப் பிரயோகம் ஆகிய நடவடிக்கை எடுத்து ஒரு கலவரம் ஏற்பட வழிவகை செய்துள்ளது. மேலும் சம்பந்தமே இல்லாமல் வருண் மீது கொலை முயற்சி, கலவரம் ஏற்படுத்தியது, போன்ற பல பொய் வழக்குகள் போட்டுள்ளது மாயாவதி அரசு. அதோடு நிறுத்தாமல் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தையும் அவர்மீது ஏவி விட்டிருக்கிறது. நம் நாட்டுச் சட்டப்படி சரண் அடைய நீதி மன்றத்திற்குச் சென்ற ஒருவரின் மீது, அபாண்டமான குற்றச்சாட்டுகள் சொல்லிப் பொய் வழக்குகள் போடுவதன் மூலம் மாயாவதியும் பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்புகளைக் கண்டு பயப்படுகின்றார் என்பது தெரிகிறது. இவருக்கும் சோனியாவுக்கும் ஒரு ரகசிய உடன்படிக்கை உள்ளதோ என்றும் சந்தேகம் எழுகிறது.

எப்பொழுதுமே இந்தியாவிற்கு எதிராக நடந்து கொள்ளும் கம்யூனிஸ்டுகளும், மற்ற போலி மதச்சார்பின்மை பேசும் கட்சிகளும் வருண் காந்தியின் அரசியல் பிரவேசத்தைக் கண்டு அச்சம் கொண்டு அவர் மீது சேற்றை வாரியிரைப்பதைப் பார்க்கும் போது, இந்த நாட்டில் பெரும்பான்மை சமுதாயமாக இருக்கும் ஹிந்துக்களின் சார்பாக யார் முன் வந்தாலும் அவர்களை மத வெறியர்களாகச் சித்தரித்து அவர்களின் அரசியல் வாழ்க்கைக்குத் தடங்கல்கள் ஏற்படுத்தும் போக்கு நன்றாகவே தெரிகிறது. அதாவது, இந்த நாட்டில் ஹிந்துக்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகவே இருக்க வேண்டும்; சிறுபான்மை இன மக்களுக்கு மட்டுமே சலுகைகள் வழங்கப்பட வேண்டும்; அவர்களை ஓட்டு வங்கிகளாக வைத்துக் கொண்டு, ஹிந்துக்களை ஜாதி வாரியாகப் பிரித்து, தமது சுயநல அரசியல் நாடகங்களை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்பதே இவர்களது தாரக மந்திரமாக இருக்கிறது. தங்கள் சுயலாபத்துக்காக, இந்த நாட்டின் இறையாண்மையைப் பற்றியும், பாதுகாப்பைப் பற்றியும், கலாசார சீரழிவைப் பற்றியும், பொருளாதார சீர்கேட்டைப் பற்றியும், துளியும் கவலைப் படாமல் நாட்டைக் குட்டிச் சுவராக்கும் இந்த அரசியல் வியாதிகள் இருப்பது நமக்குப் பெரும் அவமானமும் அபாயமும் ஆகும்.

சரி, விஷயத்திற்கு வருவோம். தன்னுடைய இருபத்தி ஒன்பதாவது வயதில், அரசியல் பிரவேசத்தைத் தொடங்கும் ஒரு இளைஞர், ஹிந்துக்களுக்கு ஆதரவாக களம் இறங்குவதாலும், நேரு குடும்பத்திலிருந்தே வந்து ராகுல் காந்திக்கு எதிராகக் களம் இறங்குவதாலும், ஆகிய இரண்டு காரணங்களுக்காக மட்டுமே வருண் மீது சேற்றை வாரி இறைக்கின்றன ஊடகங்களும், போலி மதச்சார்பின்மை வாதிகளும். பல அரசியல்வாதிகள் இதற்கு முன்னால் இந்துக்களுக்கு எதிராகப் பேசியபோதும், செயல்பட்ட போதும் ஏன் இவர்கள் மௌனமாக இருந்தார்கள்? தேர்தல் ஆணையம் அப்போது ஏன் வாய் மூடி இருந்தது?

உதாரணத்திற்கு, தமிழக முதல் அமைச்சரான கருணாநிதி, தன்னுடைய ஐம்பது ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், சட்டசபையில் பொன்விழா கண்டதாகச் சொல்லிக்கொள்ளும் அரசியல் வாழ்க்கையில், 365 நாளும் ஹிந்துக்கள் மீதும், ஹிந்து கலாசாரம், ஹிந்து ஆன்மீகம், ஹிந்துக் கோவில்கள், ஹிந்து மதம், ஹிந்து பழக்க வழக்கங்கள், ஹிந்து மத நூல்கள் என்று எல்லாவற்றின் மீதும் வசை பாடியே வாழ்ந்துள்ளார்! எந்த ஊடகமாவது அவரை விமரிசித்தது உண்டா? தேர்தல் ஆணையம் அவர் மேல் நடவடிக்கை எடுத்ததுண்டா? சமீபத்தில் கூட, ராமாயணத்தையும், ராமர் பாலத்தையும், ராமரையும், அசிங்கமாகப் பேசிப் பல கோடி ஹிந்துக்கள் மனத்தைப் புண்படுத்தும் விதமாகப் பேசினாரே! தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருந்தது? இதுவரை, ஒரு எச்சரிக்கை அறிக்கையாவது அவருக்கு அனுப்பியதுண்டா? கருணாநிதிக்கு ஒரு சட்டம், வருண் காந்திக்கு ஒரு சட்டமா?

சோனியா தான் போகின்ற இடங்களிலெல்லாம், ஒவ்வொரு முறை பேசும்போதும் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை ஹிந்துத் தீவிரவாதிகள் என்றே சொல்லிக்கொண்டிருக்கிறார். இவை ஒரு குறிப்பிட்ட மதத்தினரைத் தாக்கும் பேச்சு இல்லையா? கடந்த குஜராத் சட்ட மன்றத் தேர்தலின் போது ஹிந்துத் தலைவர்களை பொய்யர்கள், திருடர்கள், மரணத்தின் தூதுவர்கள் என்றெல்லாம் பேசினாரே! அப்போது தேர்தல் ஆணையம் என்ன வழக்குப் போட்டது? சோனியா காந்திக்கு ஒரு சட்டம், வருண் காந்திக்கு ஒரு சட்டமா?

அதே குஜராத் தேர்தலின் போது, காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் “குஜராத்தில் உள்ள ஹிந்துக்கள் தீவிரவாதிகள்” என்று பேசினாரே! அப்போது தேர்தல் ஆணையம் என்ன செய்தது? அவருக்கு ஒரு சட்டம், வருணுக்கு ஒரு சட்டமா?

இரண்டு வருடங்களுக்கு முன்னர் தேசிய மாநாடுக் கட்சியின் தலைவர் பாஃரூக் அப்துல்லா, பாராளுமன்றத் தாக்குதலில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதி அப்சல் குருவுக்காகப் பரிந்து பேசியபோது, “அவரைத் தூக்கிலிடுங்கள்! அதன் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்! இந்த நாடு பற்றி எரியும்! ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை சீரழியும்! தண்டனை அளித்த நீதிபதிகள் கொல்லப் படுவார்கள்!” என்று பேசினாரே! அப்போது தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருந்தது?

தற்போது கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மதானியுடன் கூடிக் குலாவுகின்றனர்! மதானிக்கு எதிரான தடயங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அங்கே எதிர்க்கட்சியாக இருக்கின்ற காங்கிரஸ் ஏன் வாயைப் பொத்திக் கொண்டு இருக்கிறது? ஹிந்துக்களுக்கு ஒரு சட்டம், முஸ்லீம்களுக்கு ஒரு சட்டமா? பா.ஜ.க.வுக்கு ஒரு சட்டம், கம்யூனிஸ்ட்களுக்கு ஒரு சட்டமா? மதானியை விடவா வருண் காந்தி மோசமாகப் போய்விட்டார்?

சமீபத்தில் சண்டிகார் நகரில் காங்கிரஸ் தலைவர் இம்ரான் கித்வாய் “நான் ஒரு முப்தியாக இருந்திருந்தால், பா.ஜ.க.வுக்கு முஸ்லீம்கள் ஓட்டுப் போடுவது காபிஃர்களுடன் (ஹிந்துக்களை தரக்குறைவாகச் சொல்லும் வார்த்தை – காபிஃர்) நட்பு வைத்துக் கொள்வதற்கு சமம், என்று ஒரு பஃட்வா கொடுத்திருப்பேன். நான் முப்தியாக இல்லையே என்று வருந்துகிறேன்” என்று பேசியுள்ளார். தேர்தல் ஆணையத்திடம் அவர்மீது பா.ஜ.க. புகார் கொடுத்துள்ளது. அவர் பேச்சு அடங்கிய ஒலி நாடாவையும் கொடுத்துள்ளது. ஆனால் இன்னும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன்?

2007 ஜனவரி மாதம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது அவரை உயிருடன் திரும்ப அனுமதிக்கமாட்டோம் என்று சவால் விட்டனரே தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர்! அப்போது தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருந்தது? தௌஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம். பாகர் சமீபத்தில் மதுரையில் ஒரு பொதுக் கூட்டத்தில் “வருண் காந்தி தமிழகம் வந்தால் உயிருடன் திரும்ப முடியாது” என்று பேசியுள்ளார். அது “வின்” தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டதே! என்ன செய்து கொண்டிருந்தது தேர்தல் ஆணையம்? அந்தப் பேச்சுக்கள் வன்முறையைத் தூண்டும் பேச்சுகள் இல்லையா? அவர்களுக்கு ஒரு சட்டம் வருணுக்கு ஒரு சட்டமா?

இந்த மாதிரிப் பல உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது வருண் காந்தி மேல் போடப்பட்டிருக்கும் அத்தனை வழக்குகளும் மேற்சொன்ன அத்தனைத் தலைவர்கள் மேலும் போட்டிருக்க வேண்டுமே!

இவற்றையெல்லாம் பார்க்கும் போது என்ன தெரிகிறது? ஹிந்துக்களுக்கு ஆதரவாக எந்த அரசியல் கட்சியும் செயல் படக்கூடாது; ஹிந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்கின்றன போலி மதச்சார்பின்மை பேசும் ஊடகங்களும், அரசியல் கட்சிகளும். இவ்வுண்மையை ஹிந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தீய சக்திகளை இந்துக்கள் நிராகரிக்க வேண்டும். ஹிந்துக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்ந்து செயல் படவேண்டும்.