அஞ்சலி: அப்துல் கலாம்

“சர்வ வல்லமை வாய்ந்த கடவுளே, எனது மக்கள் வியர்வை சிந்தட்டும். அவர்களது உழைப்பு தீமையை அழிக்கும் மேலும் பல அக்கினிகளை உருவாக்கட்டும். எனது தேசம் அமைதியுடன் கூடி வளம் பெறட்டும். எனது மக்கள் இணைந்து வாழட்டும். ஒரு பெருமிதமிக்க இந்தியக் குடிமகன் என்ற புகழுடன் நான் இந்த மண்ணின் ஒரு துகளாக ஆகிவிடட்டும், மீண்டும் எழுந்து வந்து அந்தப் புகழில் இன்புறுவதற்காக.”

Generic lexapro walmart for sale walmart prescription. You’re about to clomid street price purchase an item, and you make the smart move to do so. When you take a prescription drug, you are paying for the drug that is prescribed for you.

For example, we know that these are the cases that affect a large number of people and can lead to serious illness. The company is in the process of making the changes, including increasing Orchards buy clomid without prescription its number of full-time employees to 1,000, which will bring the company to an annual run rate of over 0 million. Researchers at new zealand's auckland university found that the consumption of the edible molluscan by a particular group for a week (five-starred version of the mollusc) led to an improvement in symptoms associated with ibs when compared to a diet that did not include it.

These may be associated with hormonal imbalances in the body or other abnormalities, however. It is used to provide men the opportunity to have a normal number of sperms, including Bloemfontein the production of sperm. The key is in how to understand that your product will have the biggest impact on your finances.

–  டாக்டர் அப்துல் கலாம், Ignited Minds  நூலின் இறுதி வரிகள்

kalam-waving

தனது நீள்வட்டப் பாதையில் எண்பத்து மூன்று முறை சூரியனைச் சுற்றி வந்த ஓர் பூவுலக நிறைவாழ்வு தன் இயக்கத்தை நிறுத்தி விட்டது. ஆம், அவர் விரும்பியபடியே கலாம் மறைந்து விட்டார்.

ஒரு மகத்தான ஆதர்சமாக, வழிகாட்டியாக, நல்லாசிரியனாக, மனிதப் பண்புகளின் உறைவிடமாக இரண்டு தலைமுறை இந்தியர்களுக்கு தொடர்ந்து உத்வேகமூட்டி வந்திருக்கிறார் கலாம்.  இளைய உள்ளங்களில் கனவுகளுக்கான வேட்கையையும், முதிர்ந்த மனங்களில் சாதனைகளின் நினைவுகளையும், சவால்களையும் விட்டுச் சென்றிருக்கிறார்.

ராமேஸ்வரம் தீவில் எளிய குடும்பத்தில் பிறந்து, ராக்கெட்டுகளின் வழி பறந்து, ராஷ்டிரபதி பவனில் அமர்ந்த ஒரு அசாதாரணமான வாழ்க்கை அவருடையது. ஆனாலும், கலாம் என்றதும், புன்னகைக்கும் கண்களும், கலைந்துவிழும் கேசங்களும்,  இறுதிவரை தமிழ்த்தன்மை மாறாத ஆங்கில உச்சரிப்புடன் நம்மைத் தோளில் தட்டிக் கொடுத்து எழ வைக்கும் குரலும் தான் நினைவு வரும். அத்தகைய அலாதியானதொரு ஆளுமை அவருடையது.

ஒரு துடிப்பான அறிவியலாளராகத் தொடங்கி, வெற்றிகரமான அறிவியல் தொழில்நுட்ப நிர்வாகியாக, பாரத ரத்தினமாக அழுத்தமாகத் தனது முத்திரையைப் பதித்திருந்த கலாம் அவர்களை 2002ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க அரசு ஜனாதிபதியாக முன்னிறுத்தியது.  அந்த அரசு நம் நாட்டிற்குச் செய்த பல நன்மைகளில் முக்கியமானது இந்த மாபெரும் நற்செயல் என்றால் அது மிகையில்லை. இதன் மூலம் அறிவியல் வட்டங்களில் மட்டுமே பெரிய அளவில் அறியப் பட்டிருந்த கலாம்,  நாடறிந்த மக்கள் தலைவராக ஆனார். அந்தப் பீடத்திலிருந்து பேசியபோது அவரது மகத்தான எழுச்சி  மொழிகளுக்கும், இலட்சியவாதத்திற்கும், எதிர்கால இந்தியா குறித்த அவரது சிந்தனை வீச்சுகளுக்கும்  ஒரு தனித்த உயர்மதிப்பு ஏற்பட்டது.  அத்துடன், குடியரசுத் தலைவர் என்ற அந்தப் பதவிக்கே இதுவரை அதில் அமர்ந்த எந்தத் தலைவரும் அளித்திராத ஒரு புதிய பரிமாணத்தை கலாம் அளித்தார்.  பள்ளி கல்லூரி மாணவர்கள், தொழிலதிபர்கள், ஆன்மீக குருமார்கள், பல்துறை நிபுணர்கள் என்று அனைத்துத் தரப்பு மக்களிடமும் தொடர்ந்து உரையாடி “மக்களின் ஜனாதிபதி”யாக  அவர்களது இதயங்களில் இடம் பிடித்தார்.

kalam-missile-man

ஒரு அறிவியலாளர் என்ற வகையில் கலாமின் ஆரம்பகால ஆய்வுகளுக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்குமான நீண்டகால மதிப்பு என்ன என்று இன்று சில நிபுணர்கள் கேட்கலாம். இன்றுள்ள இளைய தலைமுறைக்கு அது எதுவும் பெரிதாகத் தோன்றாமல் இருக்கலாம்.  ஆனால், கலாம் பணியாற்றிய விண்வெளி,  ஏவுகணை, அணுசக்தி ஆகிய மூன்று துறைகளுமே முற்றிலும் தேசப் பாதுகாப்பு மற்றும் தேசத்தின் அதிமுக்கிய (strategic) தேவைகளுடன் தொடர்புடையவை என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஆய்வு மையங்களுக்கு வெளியே பொதுவில் அறிய முடியாத “மூடிய” அறிவியல் ஆய்வுகளையும், தொழில்நுட்பங்களையும் கொண்ட துறைகள் அவை. 1960-70களில் ரோஹிணி மற்றும் எஸ்.எல்.வி-3 செயற்கைக்கோள் வடிவமைப்புக் குழுவின் தலைவராக கலாம் ஆற்றிய பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 1980-90களில் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த மேற்கத்திய நாடுகள் பல்வேறு அத்தியாவசியமான தொழில்நுட்பங்களைத் தர மறுத்த  நிலையிலும்,  அக்னி, ப்ருத்வி, ஆகாஷ்,  நாக், பினாகா ஆகிய ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக உருவாக்கியதில்  கலாம் அவர்களின் தலைமைப் பொறுப்பும், பல்முனை வழிகாட்டுதல்களும் முக்கியப் பங்கு வகித்தன. அதன் பிறகு, உலக அரங்கில் இந்தியாவை வல்லரசாக நிலைநிறுத்திய போக்ரான் அணு ஆயுத பரிசோதனைகளிலும் கலாம் முக்கியமான பொறுப்பு வகித்தார்.

இந்த அனைத்து ப்ராஜெக்ட்களிலும், பல சிக்கலான புதிய தொழில் நுட்பங்களை கலாம் உட்பட பல இந்திய அறிவியலாளர்கள் இணைந்து தங்கள் அறிவுத் திறனாலும் கடும் உழைப்பாலும் தியாகத்தாலும் உருவாக்கினார்கள்.  தனிப்பெயர்களாக அன்றி, ஒட்டுமொத்த சாதனை என்ற அளவிலேயே அவர்களது அறிவியல் பங்களிப்புகளை இன்று நாம் நினைவு கூரமுடியும். ஒருவகையில், அவர்கள் அனைவரையும் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு ஒளிமிக்க குறியீடு கலாம் என்றே சொல்லலாம்.

இத்தகைய நீண்ட அனுபவத்தின் பின்னணியில் பின்னர் பிரதமரின் அறிவியல் ஆலோசகராகவும், இந்திய அரசின் நீண்ட கால தொழில்நுட்பக் கொள்கையை வகுக்கும் திட்டக் குழுவின் தலைமைப் பொறுப்புகளிலும் அவர் பணியாற்றினார்.  இத்திறக்கில் அவரது குழு சேகரித்த தகவல்களும், அதன் அடிப்படையிலான  நீண்டகால திட்டப் பரிந்துரைகளும் அரசு வட்டங்களுக்குள் அறிக்கைகளாக மட்டும் நின்றுவிடவில்லை. மாறாக, அவற்றை தனது புத்தகம் மூலமாகவும் (இந்தியா 2020, நண்பர் ஒய்.எஸ்.ராஜனுடைன் இணைந்து எழுதியது) பல்வேறு உரைகள் மற்றும் சந்திப்புக்கள் மூலமாகவும் நாட்டு மக்கள் அனைவரிடமும் அவர் பகிர்ந்து கொண்டார். இந்தியாவின் பல்துறை வளர்ச்சி குறித்த அறிவார்ந்த உரையாடல்கள் பொதுவெளியில் நிகழ்வதற்கு ஒரு முக்கிய காரணியாகவே இது இருந்தது.

*****

ஒரு சாதனையாளராக கலாமின் வெற்றிக் கதை லட்சக்கணக்கான கிராமப்புற ஏழை மாணவர்களிடையே மகத்தான தன்னம்பிக்கையையும், கல்வியின் மீது பெரும் பற்றையும் உண்டாக்கியது நிதர்சனமான உண்மை. எனது நண்பர்கள், சக பணியாளர்களின் வட்டங்களிலேயே அப்படிப் பட்டவர்களை நான் கண்டிக்கிறேன்.  இது கலாமின் சாதனை முகம்.

இந்தியாவின்  பல பகுதிகளில் பணிபுரிந்த போது,  அந்தப் பிரதேசங்கள் ஒவ்வொன்றுடனும் தன்னை இணைத்துக் கொண்ட கலாம்,  ஜனாதிபதியாக ஆவதற்கு முன்பே ஒரு அகில இந்தியத் தாரகை என்ற அளவில் மக்கள் மனதில் நிலைபெற்றிருந்தார். அவர் தமிழர் என்ற அளவில் நமக்கு என்றும் பெருமை தான், ஆனால் உண்மையில் மாநில எல்லைகளைக் கடந்த ஒரு அகில இந்திய ஆதர்சமாகவே அவர் விளங்கினார். இது கலாமின் தேசிய முகம்.

kalam_houseஒரு பக்தியுள்ள இஸ்லாமியக் குடும்பத்தில் மௌல்வியின் மகனாகப் பிறந்து வளர்ந்த கலாம், ராமேஸ்வரத்தின் புனித சூழல் காரணமாக, சிறுவயது முதலே இந்து ஆன்மீகம் மற்றும் கலாசாரத்தின் மீது ஆழ்ந்த மரியாதையும் பற்றும் கொண்டிருந்தார்.  பின்னர் தனது வாசிப்பு, அனுபவங்கள் மற்றும் தேடல்களின் வழியே, மதங்களின் வெளித் தோற்றங்களுக்கு அப்பால் உள்ள ஆன்மீக சாரத்தை அவரால் உணர முடிந்தது. அஜ்மீர் ஷரீஃபின் தர்காவையும் திருக்குரானையும் மட்டுமல்ல, ஸ்ரீஅரவிந்தரையும், திருக்குறளையும், பகவத்கீதையையும் தனதெனக் கருதி அவரால் அரவணைக்க முடிந்தது. சாய்பாபாவுடனும் தலாய் லாமாவுடனும் உரையாட முடிந்தது. பிரமுக் சுவாமி மகாராஜை ஆன்மீக குரு என்ற நிலையில் ஏற்க முடிந்தது.  வீணைவாசிப்பில் லயித்து கர்நாடக இசையை ரசிக்க முடிந்தது.  இது கலாமின் ஆன்மீக முகம்.

அரசியல் ரீதியாகவும் கூட, மத அடிப்படைவாதங்களை முற்றிலும் நிராகரித்து, முஸ்லிம்கள் உட்பட அனைத்து இந்தியர்களுக்குமான பொது சிவில் சட்டத்தை அவர் ஆதரித்தார். இந்த வகையில் அனைத்து இந்திய முஸ்லிம்களும் பின்பற்றத் தகுந்த ஒரு ஆதர்ச முன்னுதாரணமாகவே அவர் திகழ்கிறார் எனலாம்.  இஸ்லாமிய மதவெறியர்களும் அடிப்படைவாதிகளும் அப்துல் கலாமை வெறுப்பதற்கும், அவரை முன்னிலைப் படுத்துவதைத் தவிர்ப்பதற்குமான காரணம் இது தான்.

*****

“செல்வச் செழிப்பும் ஆன்மீகமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை என்றோ, பொருட்களின் மீது ஆசை கொள்வது தவறு என்றோ நான் கருதவில்லை. உதாரணமாக, தனிப்பட்ட அளவில், குறைந்தபட்ச உடைமைகளுடன் வாழவே எனக்கு விருப்பம். ஆனால், செல்வச் செழிப்பை நான் போற்றுகிறேன், ஏனென்றால், அது தான் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் தருகிறது. அவையிரண்டின் மூலம் தான் நமது சுதந்திரத்தையே நாம் தக்க வைத்துக் கொள்ள முடியும்.  இயற்கையும் கூட எதையும் அரைகுறையாகச் செய்வதில்லை. உங்களைச் சுற்றி உள்ளவற்றைப் பார்த்தாலே இது புரியும். பிரபஞ்சமும் நாம் எண்ணிப் பார்க்க முடியாத அளவில், முடிவின்மையை நோக்கியே நீள்கிறது… “ [1]

கலாமின் இந்தச் சிந்தனை ஓட்டம் எப்படி காந்தியிடமிருந்து தெளிவாக வேறுபடுகிறது என்பதைக் காண முடியும்.  அவரே மேலும் கூறுகிறார் –

“கூடியவரை குறைந்த தேவைகளுடன் வாழவேண்டும் என்பதான துறவு வாழ்க்கையில் தவறு ஒன்றும் இல்லை. மகாத்மா காந்தி அவ்வாறு வாழ்ந்தவர் தான். ஆனால், அவரானாலும் சரி, நீங்களானாலும் சரி, அத்தகைய வாழ்க்கை தானாக தேர்ந்தெடுத்ததாக இருக்க வேண்டும். உங்களுக்கு உள்ளே எழும் ஒரு ஆழ்ந்த தேடலுக்கு விடைதேடும் முகமாக அத்தகைய வாழ்க்கைமுறையை நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்றால் சரிதான். ஆனால், உங்கள் மீது திணிக்கப் பட்ட ஒரு வாழ்க்கையை தியாகமாக புனிதப் படுத்துவதும், அன்றாட கஷ்டங்களையே ஒரு கொண்டாட்டமாக எண்ணுவதும்  வேறு வகையானது.  நமது இளைஞர்களைத்  தொடர்பு கொண்டு நான் பேச விரும்பியது முக்கியமாக இந்த விஷயத்தைப் பற்றித் தான். அவர்களது கனவுகளை நான் அறிய வேண்டும்.  ஒரு நல்ல வாழ்க்கையை, செழிப்பான வாழ்க்கையை, மகிழ்ச்சிகளும் வசதிகளும் நிரம்பிய ஒரு வாழ்க்கையைக் கனவு காண்பதிலோ, அத்தகைய ஒரு பொற்காலத்திற்காக உழைப்பதிலோ எந்த விதமான தவறும் கிடையாது. சொல்லப் போனால், அதுவே மிகச் சரியானது என்று நான் அவர்களுக்குச் சொல்வேன்.  நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும், அது உங்கள் இதயத்திலிருந்து வந்ததாக இருக்க வேண்டும். உங்களது ஆத்மாவை வெளிப்படுத்த வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே உங்களைச் சுற்றி அன்பையும் மகிழ்ச்சியையும் உங்களால் வெளிப்படுத்த முடியும்” [2]

தன்னளவில் மிக அமைதியான ஆன்மீகமான  மனிதநேயராக இருந்த கலாம் தான், ஒரு கர்மயோகியாக ஏவுகணைகளையும் அணு ஆயுதங்களையும் தேசத்திற்காக உருவாக்கினார்.  கூடங்குளம் உள்ளிட்ட அனைத்து பிரசினைகளிலும், சமரசமின்றி நவீன அறிவியலின்,  “வளர்ச்சியின்” பக்கம் நின்று பேசினார். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு துறவியாக, மிகக் குறைந்த தேவைகளுடன், மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த கலாம் தான், அனைத்து மக்களும் அனைத்து வசதிகளையும்  பெறும் வகையில் இந்தியா 2020ம் ஆண்டுக்குள் “வளர்ந்த நாடாக” ஆக வேண்டும் என்பதை ஒரு இலட்சியக் கனவாக வலியுறுத்தி வந்தார்.  அவரைப் பொறுத்தவரை  இந்த இரண்டுக்கும் இடையில் எந்த முரண்பாடும் இருக்கவில்லை என்பதை அவரது மேற்கண்ட வாசகங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

தான் ஏற்ற ஒவ்வொரு பணியிலும் தன்னைத் திரியாக எரித்து, ஓயாமல் ஒழியாமல் உழைத்த ஒரு மனிதர்.  இறுதிக் கணத்திலும்  மாணவர்களிடையே  உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே உயிர்நீத்த ஒரு மனிதர்.  அவரை இப்படி இயக்கிய மகாசக்தி எது?

இந்த மண்ணின் மீதும், மக்களின் மீதும் அவர் கொண்டிருந்த அளப்பரிய பாசமும் நேசமும் தான்.

அதனால் தான் அந்த உத்தமர் உயிர் நீத்த இந்தத் தருணத்தில் ஒட்டுமொத்த தேசமும் பாசத்துடனும் நன்றியறிதலுடனும் கண்ணீர் விடுகிறது.

கலாம் சார், காலத்தை வென்று நிற்கும் நீங்கள் விட்டுச் சென்ற கனவுகள். என்றும் அணையாது எரியும் எங்களது இதயங்களில் நீங்கள் ஏற்றி வைத்த எழுச்சி தீபங்கள்.  நீங்கள் விரும்பியபடியே  இந்த மண்ணில் மீண்டும் வேறு வடிவில் எழுந்து வருவீர்கள்.

ஓம் சாந்தி.

*******

சான்றுகள்:

[1] “I do not think that abundance and spirituality are mutually exclusive or that it is wrong to desire material things. For instance, while I personally cherish a life with minimum of possessions, I admire abundance, for it brings along with it security and confidence, and these eventually help preserve our freedom. Nature too does not do anything by half measures, you will see if you look around you. Go to a garden. In season, there is a profusion of flowers. Or look up. The universe stretches into infinitude, vast beyond belief. ” – Ignited Minds, pp 22-23

[2] – “Certainly there is nothing wrong with an attitude of making do with minimum, in leading a life of asceticism. Mahatma Gandhi led such a life, but in his case as in yours it has be a matter of choice. You follow such a lifestyle because it answers a need that arises from deep within you. However, making a virtue of sacrifice and what is forced upon you – to celebrate suffering – is a different thing altogether. This was the basis of my decision to contact our young. To know their dreams and tell them that it is perfectly all right to dream of a good life, an abundant life, a life full of pleasures and comforts, and work for that golden era. Whatever you do must come from the heart, express your spirit, and thereby you will also spread love and joy around you” – Ignited Minds, pp 23-24

பாஜகவும் இப்தார் விருந்தும்

பல இந்துத்துவ நண்பர்கள் (பாஜக ஆதரவாளர்கள் உள்பட) திரு.பொன்னார் அவர்களும், தமிழிசை அவர்களும் இப்தார் நோன்பு திறப்புக்கு சென்றுவந்ததை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இது இணையத்திலும் வெளியிலும் கடுமையாக நடந்து வருகிறது. இதற்கு காரணம் நம் அறியாமைதான். islam_bjp2அதாவது நம்முடைய சங்க நிலைபாட்டையும், பாஜகவினுடைய சித்தாந்தத்தையும் சரியாக புரிந்துகொள்ளத தன் விளைவுதான் இது. உண்மையிலேயே இந்துத்துவர்களாகிய நாம் சிறுபான்மை சமூகம் கல்வியில் பொருளாதாரத்தில் சமுதாய சீர்திருத்தங்களில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளவர்கள்.  இன்னும் சொன்னால் நாம் மட்டும்தான் அந்த எண்ணம் உடையவர்கள் என்று கூட சொல்லலாம். அவர்களின் உணர்வுகளை மதிப்பவர்கள். அவர்களின் வழிபாட்டு முறைகளுக்கு மதிப்பு கொடுப்பவர்கள் நாம்தான். அவர்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்க வேண்டும் என்று மனதார விரும்புபவர்கள் நாம்.

 • பாஜகவில் சிறுபான்மையினர் அணி ஒன்று இருக்கிறது. அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
 • பாஜகவில் உள்ள சிறுபான்மையினர் அணியில் உள்ளவர்கள் கவுன்சிலர் பதவிக்கோ, ஊராட்சி தலைவர் போன்ற பதவிகளுக்கோ, ஏன் எம்எல்ஏ பதவிகளுக்கோ போட்டியிடும்போதும் நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
 • பாஜகவில் சிறுபான்மையினர் உறுப்பினர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
 • பாராளுமன்ற மேலவையில் பாஜகவுக்கு தலைவராக சிக்கந்தர் பக்த் எனும் இஸ்லாமியர் திறம்பட செயல்பட்டார் அப்போது எவரும் எதிர்க்கவில்லை.
 • பாஜக அரசில் முக்கியமான இலாகாக்களில் ஒன்றான தொழிற்சாலைகளுக்கான பொறுப்பில் அவர் மத்திய அமைச்சராக இருந்தார். அப்போது எவரும் எதிர்க்கவில்லை.
 • மதிப்பிற்குரிய டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் குடியரசு தலைவர் ஆவதற்குரிய சூழலை உருவாக்கினோம் ஆதரவு தெரிவித்தோம். அப்போது யாரும் எதிர்க்கவில்லை.
 • கடந்த குடியரசு தேர்தலில் கிறிஸ்தவரும் வடகிழக்கு பிரதேச வனவாசி சமுதாயத்தவருமான சங்க்மா குடியரசு தலைவராக வேண்டுமென கடுமையாக உழைத்தோம். அதற்கும் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
 • குஜராத்தில் சில நகராட்சிகளில் பாஜக சார்பில் சிறுபான்மையினர் அதிக அளவில் வேட்பாளராக நிற்க வைத்து வெற்றி பெற செய்திருக்கிறோம். அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
 • சிறுபான்மையினர் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்கள் போட்டு செயல்படுத்தப்படுகிறது குஜராத்தில். அதை யாரும் எதிர்க்கவில்லை.
 • சிறுபான்மையினர் அணி சார்பில் மாநாடு போட்டு பாஜகவுக்கு வலிமை சேர்க்கிறபோது அதை யாரும் எதிர்க்கவில்லை.
 • பாஜகவில் தேசிய அளவில் சிறுபான்மை சமூகத்தினருக்கு மிக முக்கியமான பதவிகளை கொடுத்து வைத்திருக்கிறபோது அதை நாம் எதிர்க்க வில்லை.
 • தன் சிறுபான்மை சமூக மக்கள் பலபேர் எதிர்த்தும் கூட தமிழகத்தில் மோடியுன் மேடை ஏறியும், பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்து பாஜகவிற்கு துணைநின்ற சிறுபான்மை சமூகத்தினரை அப்போது எதிர்க்கவில்லை.

இதையெல்லாம் நாம் ஆக்கப்பூர்வமான செயல்முறை என்றே கருதிய காரணத்தால் நாம் எதிர்க்கவில்லை. அதாவது நமது சித்தாந்தம் இதுதான். இங்குள்ள பண்பாடு, கலாச்சாரம், தேசியத்தை ஏற்கின்றவர்களை நாம் சகோதரர்களாக ஏற்க வேண்டும். நாம் அவர்களை அரவணைக்க வேண்டும். மகாகவி பாரதி ஒரு கட்டுரையில் சொல்வார், ஆரிய சம்பத்து என்று. அதை படித்து பாருங்கள்.

நமது வேதம், bharathi-fullநமது சாஸ்திரம், நமது பாஷைகள், நமது சிற்பம், நமது சங்கீதம், நமது நாட்டியம், நமது தொழில் முறைகள், நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், நமது குடிசைகள் இவை அனைத்துக்கும் பொதுப்பெயர் ஆரிய சம்பத்து. காளிதாசன் செய்த சாகுந்தல நாடகம், ஹிந்தியில் துளசிதாசர் செய்திருக்கும் இராமாயணம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள், ஆண்டாள் திருமொழி இவை அனைத்துக்கும் பொதுப்பெயர் ஆரிய சம்பத்து. தஞ்சைப் பெரியகோயில், திருமலைநாயக்கர் மஹால், தியாகய்யர் கீர்த்தனைகள், எல்லோராவின் குகைக் கோயில், ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால், சரப சாஸ்திரியின் புல்லாங்குழல் இவை அனைத்துக்கும் பெயர் ஆரிய சம்பத்து.

அதுதான் நம்முடைய சித்தாந்தம். இந்துத்துவ சித்தாந்தம். ஆனால் பாஜக கட்சியில் உள்ள சிறுபான்மையினர் இப்தார் நோன்புக்கு அழைக்கும்போது அங்கு சென்றால் நாம் எதிர்க்கிறோம். islam1விநாயகர் சதுர்த்தியின்போது விநாயகருக்கு மரியாதை செய்து வழியனுப்ப சிறுபான்மையினர் வந்தால் நாம் புளகாங்கிதம் அடைகிறோம். இஸ்லாமிய சகோதரிகள் ராமருக்கு ஆரத்தி எடுத்தால் மெச்சுகிறோம்.  கிருஷ்ணாஷ்டமியில் நம் இஸ்லாமிய சகோதரிகள் அவர்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணன் வடிவ அலங்காரம் செய்து அழைத்து வரும் போது அதை பாராட்டுகிறோம்.  அதையேநம் தலைவர்கள் சிறுபான்மையினருக்கு செய்தால் எதிர்க்கிறோம். நாம் என்ன வகாபிகளா? ஏன் இந்த இரட்டை டம்ளர் முறை? இந்த நாட்டை, இங்குள்ள பண்பாட்டை, கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களை அவர்கள் யாராக இருந்தாலும் சரி நாம் கடுமையாக எதிர்க்கிறோம். islam2அதே வேளையில் ஏற்றுக்கொள்பவர்களை ஆதரிக்க வேண்டும். அரவணைக்க வேண்டும். அவர்கள் நம்மவர்கள். நம் சொந்தங்கள். நம் தொப்புள்கொடி உறவுகள். முகமது கரிம் சாக்ளா சொன்னார், “நாங்கள் மார்க்கத்தால் மட்டுமே இஸ்லாமியர்கள். எங்கள் பண்பாடு எங்கள் ரத்தம் ஹிந்து”. அதே சாக்ளா மனம் வெதும்பி சொன்னார், “எங்களை போன்ற தேசிய முஸ்லீம்களை கைவிட்டு விட்டு காங்கிரஸ்காரர்கள் அடிப்படைவாத பிரிவினைவாத மூஸ்லீம்களை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார்கள்.” நம் தேசபற்று கொண்ட இஸ்லாமிய சகோதர சகோதரிகளை இந்துத்துவ இயக்கங்கள் எக்காலத்திலும் எக்காரணத்துக்காகவும் கைவிடக் கூடாது. அவர்கள் நம் குடும்ப உறுப்பினர்கள்.  இதனை நன்கு உணர்ந்திருந்த காரணத்தால்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில இந்திய தலைவராக இருந்த பரம் பூஜனீய சுதர்ஷன்ஜி  அவர்கள் வழிகாட்டுதலில் முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்ச் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.  இன்று பத்து லட்சம் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் தேசபக்தியுடன் சமூக நல்லிணக்கத்துக்காகவும் இஸ்லாமிய சமுதாயத்தின் கல்வி-சமூக பொருளாதார மேம்பாட்டுக்காகவும் இந்த அமைப்பின் மூலம் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இஃப்தார் விருந்துக்கு அழைத்தால் மாட்டேன் என்று சொல்பவர் தேசபக்தியுள்ள இந்தியனாக இருக்க முடியாது.

இறைவனைத் தவிர யாரையும் கையெடுத்து கும்பிடக்கூடாது என்பது இஸ்லாமிய நெறியாகவே வகாபியத்தால் முன்வைக்கப்படுகிறது. வணக்கம் செய்வது வழிபாடு அல்ல என்கிற உண்மையை மறைத்து இந்திய பண்பாட்டு பழக்க வழக்கங்களை கொல்வதே இப்படிப்பட்ட செயல்பாடுகளின் நோக்கம். எனவே  சென்ற நாடாளுமன்ற islam_bjp1தேர்தலில்கூட அடிப்படைவாத இஸ்லாமிய வேட்பாளர்கள் கையெடுத்து கும்பிட்டு மக்களிடம் வாக்குகள் கேட்கவில்லை என்ற விமர்சனம் வந்த து. ஆனால் இங்குள்ள படத்தை பாருங்கள். இஸ்லாமியர்கள் கையெடுத்து கும்பிட்டு வரவேற்கிறார்கள். அதாவது அடிப்படைவாத கருத்தாக்கத்தை மறுதலித்து பாரத பண்பாட்டை ஏற்கிறார்கள்.

இந்த அடிப்படையில்தான் திருபொன்னார் அவர்களும் திருமதி தமிழசை அவர்களும் சென்றிருக்கிறார்கள்.  இஃப்தார் நோன்பு செல்பவர்கள் பிள்ளையார் கோவிலுக்கு வருவதில்லை என்பதுதானே போலி மதச்சார்பின்மையாளர்கள் குறித்த நம் குற்றச்சாட்டு. ஆனால் பாஜக தலைவர்கள் இந்து திருவிழாக்களுக்கு வருகிறார்கள். அதில் ஆத்மார்த்தமாக கலந்து கொள்கிறார்கள். அதை போலவே இஸ்லாமிய திருவிழா ஒன்றில் பங்கேற்பதில் என்ன தவறு? தவறு இந்த சமரச நல்லிணக்கம் ஒற்றைவழி பாதையாக வாக்குவங்கி அரசியல்வாதிகள் போலி மதச்சார்பின்மைகாரர்கள் ஆக்கிவிட்டதில்தான் இருக்கிறது. அந்த வக்கிரத்தை மட்டும்தான் நாம் எதிர்க்கிறோம். ஆகவே இதில் நாம் நம் சித்தாந்தத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய கோபத்தையும் ஆவேசத்தையும் எதில் காட்ட வேண்டுமோ அதில் காட்டுங்கள். நமக்குத் தேவை சரியான சித்தாந்த வழிகாட்டல்.

[கட்டுரையாசிரியர் ம.வெங்கடேசன் பாஜக மாநில எஸ்.ஸி அணியின் செயற்குழு உறுப்பினர். வரலாற்றாராய்ச்சியாளர். இவரது நூல்கள் ‘ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்’ ‘தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபட்டதா நீதி கட்சி?’ ‘புரட்சியாளர் அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?’ ஆகியவை சிறந்த ஆராய்ச்சி நூல்கள். இவர் தமிழ்ஹிந்து.காம் ஆசிரியர் குழு உறுப்பினர்.]