குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு

2014ஆம் வருடத்துக்கு முன்னால், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த இந்து, கிறிஸ்தவ, பார்ஸி, ஜெயின், புத்த மதத்தை சார்ந்த மக்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்ட மசோதா லோக்சபாவிலும் ராஜ்ய சபாவிலும் நிறைவேறியிருக்கிறது.

The other part of the equation is that in order for the patient to benefit from these products, he or she must be committed to taking them for the rest of the day, and for most people, it takes about a month on a regular basis to notice any. It can be purchased by the https://silksdrycleaners.co.uk/a prescription and by the non prescription. Buy zithromax online from a pharmacy online in india and save huge money.

However, some plans cover these things, but you'll still have to fill out and sign the forms yourself. Side effects can consist of heartburn, Piracicaba doxycycline price at dischem upset stomach. We looked up all the best online pharmacy reviews and rated them based on their features, service and quality of product you can buy from these online pharmacies.

Best price stromectol and best generic diflucan for cancer - buy stromectol online - cheap stromectol online. In the case of clomiphene for sale La Ligua levitra, this is the problem of erectile dysfunction in men. This brand was used to describe the generic cialis, the only generic treatment for the sexual dysfunction by a medication, and it is manufactured by bayer-mellier, switzerland.

இதன் மூலம் குடியுரிமை பெறப்போகும் மக்களின் எண்ணிக்கை 31313 பேர்கள் மட்டுமே.

கவனிக்கவும், 2014க்கும் அப்புறம் இந்தியாவுக்குள் வந்த மக்களுக்கு குடியுரிமையை இந்த சட்டம் வழங்கவில்லை.

ஏற்கெனவே இங்கே இந்தியாவின் குடிமகன்களாக வாழும் எவருடைய குடியுரிமையையும் இந்த சட்டம் பறிக்கவில்லை. இந்தியாவுக்கு வந்த இந்துக்கள் கிறிஸ்துவர்கள் சீக்கியர்கள் (இவர்களே பெரும்பான்மை) ஆகியோருக்கு குடியுரிமை வழங்குவதையே இந்த சட்டம் உறுதி செய்கிறது. இவ்வாறு வந்து தங்கியிருக்கும் பலர் இதனை வரவேற்றிருக்கிறார்கள்.

இந்த மூன்று நாடுகளிலும் முஸ்லீம் அல்லாதவர்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதற்கான ஆதாரங்களோ, அல்லது அவற்றின் வரலாறோ தெரியாதவர்கள் இந்த விவாதம் செய்வதற்கே லாயக்கற்றவர்கள் என்பதால், அவற்றை இங்கே நான் பேசப்போவதில்லை.

ஆனால், காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டு முஸ்லீம் கட்சிகள் எப்படி முஸ்லீம்களை இந்த சட்டத்தில் சேர்க்காமல் விடலாம் என்று கடும் கோபத்துடன் இன்று வங்காளம், டெல்லி போன்ற மாநிலங்களில் பேயாட்டம் ஆடிகொண்டிருக்கிறார்கள். மறு பக்கம், எப்படி இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என்று அஸ்ஸாமில் கோபத்துடன் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். இரண்டும் வெவ்வேறானவை அல்ல. ஒன்றுகொன்று தொடர்புடையவை.

ஆப்கானிஸ்தானிலிருந்தும், பாகிஸ்தானிலிருந்தும் பங்களாதேசிலிருந்து ஏன் இந்தியாவுக்குள் முஸ்லீம்கள் வரவேண்டும்? தனக்கு தனி நாடு வேண்டும் என்று கேட்டு சென்ற முஸ்லீம்கள் ஏன் இந்தியாவுக்குள் வர விரும்புகிறார்கள்?

முக்கிய காரணம் பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் இந்தியாவை விட வறுமை, வேலைவாய்ப்பின்மை. இஸ்லாமியர்கள் தனியான தேசிய இனம், பிரிவினை வந்தாலே இஸ்லாமிய சொர்க்க பூமி உருவாகி பாலும் தேனும் பெருக்கெடுக்கும் என்று தம்பட்டம் அடித்து லட்சக்கணக்கான இந்துக்கள், சீக்கியர்கள், இஸ்லாமியர்களைக் கொன்றழித்து உருவான பாகிஸ்தான் பயங்கரவாதத்தை உலகெங்கும் ஏற்றுமதி செய்யும் நாடாக உருவாகியுள்ளது. இன்று அதன் குடிமக்கள் வறுமையினால் இந்தியா வர நேர்ந்துள்ளது. இது புரிந்துகொள்ளக்கூடிய காரணம் என்றாலும் அதற்காக குடியுரிமை வழங்க தேவையில்லை.

இதற்கு தனி சட்டம் வேண்டும். உதாரணமாக இவர்களுக்கு குடியுரிமை இல்லாத ஆனால் வேலை செய்யும் அனுமதி கொடுக்கக்கூடிய பத்திரங்கள் கொடுக்கப்படலாம். ஆனால் குடியுரிமை தேவையில்லாதது. ஏனெனில் எதிர்காலத்தில் பங்களாதேஷ் பாகிஸ்தான் ஆகியவை இந்தியாவை விட அதிக வேலைவாய்ப்புள்ள நாடாக ஆனால், இவர்கள் திரும்ப பாகிஸ்தான் பங்களாதேஷ் சென்றுவிடுவார்கள். அப்படிப்பட்ட பொருளாதார அகதிகளுக்கு குடியுரிமை தேவை இல்லாதது. அவர்களே கூட முக்கியமாக கருதாத ஒரு விஷயம். ஆனால், மத ரீதியாக கொடுமைப்படுத்தப்படுவதால் இந்தியாவுக்குள் வரும் இந்துக்கள் கிறிஸ்தவர்கள் சீக்கியர்கள், இந்தியாவை விட பாகிஸ்தான் வளம் மிகுந்த நாடாக ஆனாலும் திரும்பி போவப்போவதில்லை. ஆகவே அவர்களுக்கு குடியுரிமை தேவையான ஒரு விசயம்.

இது சாதாரணமான காமன் சென்ஸ் விஷயம். ஆனால், ராஜன் குறை, அ.மார்க்ஸ், என் ராம், ஜென்ராம், ரோமிலா தாப்பர், ராமச்சந்திர குஹா இன்ன இதர மாங்கா மடையர்களுக்கு காமன் சென்ஸ் என்பதை விட இந்துக்களை எதிர்க்க கிடைத்த வாய்ப்பாகவே அதனை உருத்திரித்து ஊதி பெருக்கி பேயாட்டம் போடுவது முக்கியம்.

உதாரணமாக ஸ்ரீ லங்கா தமிழர்கள் உள்நாட்டுப் போராட்டங்களின் போது அகதிகளாய்த் தமிழர்கள் வந்தனர். அவர்களுக்கு தக்க இடம் கொடுத்து ஆதரித்து வருகிறது இந்தியா. ஆனால் சிங்களர்கள் அவர்களுடன் வந்திருந்தால் அவர்களைத் திரும்ப அனுப்புவது தான் நியாயம். அவர்களையும் தமிழர்களைப் போலவே கருதவேண்டும் குடியுரிமை தர வேண்டும் என்று எந்த முட்டாளும் சொல்ல மாட்டான்.

ஆனால் சிங்கள அரசுக்கு எதிராக எழுதி அதனால் சிங்கள பத்திரிகையாளர் இந்தியாவிடம் புகலிடம் கேட்டால் அதை இந்தியா புரிந்துணர்வுடன் விண்ணப்பத்தை ஏற்று பரிசீலிக்க வேண்டும். அது தான் நியாயம். ஆனால் தமிழர்களுக்குத் தரும் புகலிடத்தின் அடிப்படையே வேறு. இதை புரிந்தும் புரியாதது போல் நடிக்கும் நடிப்புப் புரட்சியாளர்கள் தான் இந்த சட்டத்தின் எதிர்ப்பாளர்கள். இது அப்பட்டமான இனவாதம்.

இதே நேரத்தில் அமெரிக்காவில் கருப்பினத்தவர் வெள்ளையின போலீஸாலும் வெள்ளையினத்து அதிகார வர்க்கத்தாலும் கொல்லப்பட்டபோது எழுந்த குரலை நாம் நினைவில் கொள்ளவேண்டும். #blacklivesmatter என்ற கோஷம் பலரால் எழுப்பப்பட்டது. இதில் வெள்ளையரும் இந்த குரலை எடுத்து கலந்துகொண்டார்கள்.

இதற்கு எதிராக வெள்ளையினத்தவரால் இன்னொரு முழக்கம் வைக்கப்பட்டது. அது #alllivesmatter என்பது.

ஆனால் இதிலுள்ள வன்மமும் வக்கிரமும் எளிதில் விளங்கிகொள்ளக்கூடியது. கருப்பினத்தவர் கொல்லப்பட்டதற்கான அமைப்பு ரீதியான காரணங்களுக்கு எதிராக எழுப்பப்படும் கோஷமான ”கருப்பினத்தவரின் உயிர்கள் மதிக்கத்தக்கவை” என்ற வாசகத்தில் உள்ள முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் வெள்ளையின அரசியல்வாதிகள் எல்லா உயிர்களுமே மதிக்கத்தக்கவைதான் என்று எதிர்குரல் கொடுக்கிறார்கள்.

இது கருப்பினத்தவர்களின் துன்பத்தை அவர்களது அவல நிலையை உதாசீனம் செய்கிறது. அவர்களது துன்பத்தை நிராகரிக்கிறது. எல்லாருமே ஒரே மாதிரியான அவலநிலையில்தான் இருக்கிறார்கள் என்று பம்மாத்து செய்கிறது. எல்லா உயிர்களுமே முக்கியமானவைதான் என்று அதனை எதிர்ப்பது இனவாதத்தின் காரணமாக கொல்லப்பட்ட கருப்பினத்தவர்களின் உயிர்களை அவர்களது போராட்டத்தை கொச்சை படுத்துகிறது. இவ்வாறு எல்லா உயிர்களும் முக்கியமானவைதான் என்று சொல்லி பலத்த விமர்சனத்துக்கு ஆளானவர்கள் ஹில்லரி கிளிண்டன், டோனல்ட் ட்ரம்ப் போன்றவர்கள்.

”எல்லா உயிர்களும் முக்கியமானவை” என்று சொல்வதே ஒரு இனவாத கோஷமே என்று கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் கார்லா ஷெட் கடுமையான விமர்சனம் வைக்கிறார். இன்னும் பலரின் கடும் விமர்சனத்துக்கு ஆளான ஜென்னிபர் லோபஸ், ஹில்லாரி கிளிண்டன் போன்றவர்கள் தாங்கள் கூறியதற்கு மன்னிப்பு கோரினார்கள்.

எல்லாருமே பாதிக்கப்பட்டவர்கள்தான், ஆகையால் முஸ்லிம்களையும் இந்தச் சட்டத்தில் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற அர்த்தமற்ற கோரிக்கையும் இந்த அப்பட்டமான இனவாதத்துடன் ஒப்பிடக் கூடிய ஒன்று.

*****

இந்தியாவில் அப்படிப்பட்ட நேர்மையான விவாதத்துக்கு எதிரான எதிரான சூழ்நிலை நிலவுகிறது. காரணம் பாஜகவை எதிர்ப்பதற்காக, பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும், ஆப்கானிஸ்தானிலும் மோசமான நிலையில் வாழும் இந்துக்களின் எந்த ஒரு அவலநிலையையும், கிறிஸ்துவர்களின் அவலநிலையையும் பேசக்கூடாது என்று இங்கே ஒரு அறிவுஜீவி வர்க்கம் நினைக்கிறது. இந்துக்கள் பாஸிஸ்டுகள், இந்து மதமே கேவலமானது, இந்துக்கள் கொன்றொழிக்கப்பட்டால் அது நல்லதுதான் என்று அளவுக்கு இவர்களது மனத்தில் இந்து மதத்துக்கும் இந்துக்களுக்கும் எதிரான கடும் வெறுப்பு நச்சாக ஆக்கிரமித்திருக்கிறது.

பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும், ஆப்கானிஸ்தானிலும் – இந்துக்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும், சீக்கியர்களுக்கும் எதிரான கொடுமைகள் அமைப்பு ரீதியானவை. இவைகள் தங்களை இஸ்லாமிய நாடு என்று அறிவித்துகொண்டவை. இவர்களின் நாட்டில் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ ராணுவ தளபதியாகவோ முஸ்லீமை தவிர வேறு யாரும் வரக்கூடாது என்று சட்டமே இருக்கிறது. ஆனால் இந்த பாகிஸ்தான்தான், இந்தியா இவ்வாறு 31,313 பேர்களுக்கு குடியுரிமை வழங்குவதை “இந்து பாசிச பயங்கரவாதம்” என்று அழைக்கின்றது. இவை தங்கள் நாட்டில் அமைப்பு ரீதியான வெறுப்பை கொடுமைகளை இந்துக்கள், கிறிஸ்துவர்கள் மீது செலுத்தாமல் இருந்தால் ஏன் அவர்கள் இந்தியாவுக்கு ஓடி வரப்போகிறார்கள்? என்று ஒரு அறிவுஜீவி கூட கேட்கவில்லை.

ஆனால், அறிவுஜீவிகளை விட முக்கியம் இங்கே இருக்கும் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டு கட்சிகளின் அப்பட்டமான இந்து வெறுப்பு.

ராமர் ஒரு கற்பனை என்று நீதிமன்றத்தில் தாக்கீது செய்த காங்கிரஸ் அரசாங்கமும், ராமர் என்ன பொறியியல் படித்தவரா என்று கிண்டல் செய்த திமுகவும், இந்து மத எதிர்ப்பையே முழு நேர வேலையாக செய்யும் கம்யூனிஸ்டுகளும் வழக்கமாக இந்து மதத்தின் மீது காட்டும் வெறுப்பை தாண்டி, இன்று இந்துக்கள் மீதே தங்கள் வெறுப்பை இங்கே அப்பட்டமாக காட்டியிருக்கிறார்கள். அதுவும் பாகிஸ்தானிலிருந்தும் பங்களாதேஷிலிருந்தும் தப்பி இங்கே ஓடிவந்த இந்துக்கள் மீது.

இலங்கையில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பாலோனோர் ஒரு சில பிராந்தியங்களில் பெரும்பான்மையுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமையை வழங்குவது என்பது அவர்கள் மீதான வன்முறையை சிங்களர்கள் அதிகரிக்கவும், அந்த நிலப்பரப்புக்களை சிங்களர்கள் ஆக்கிரமிக்கவுமே வழிவகுக்கும். ஆனால் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற இடங்களில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களோ அல்லது அவர்கள் தேர்தலில் வென்று தங்களை தாங்களே நிர்வகிக்கும் வாய்ப்புக்களோ கிடையாது. 1947இலிருந்து இந்திய அரசு தன் கண்களை இறுக மூடிகொண்டதால், பாகிஸ்தான் பங்களாதேஷ் நாடுகள் இந்துக்கள் மீது கடுமையான இன ஒழிப்பு நடத்தியதால், இன்று விளிம்பு நிலையில் இன்னமும் தங்களை இந்துக்கள் என்று சொல்லிகொண்டு இருப்பவர்களே அதிசயம் என்று ஆகியிருக்கும் நிலையில் அப்படி அங்கிருந்து வந்தவர்களுக்கும்குடியுரிமை கொடுக்கக்கூடாது என்று பஸ்களை கொளுத்தி போராட்டம் செய்யும் காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் தங்கள் மனதில் எந்த அளவுக்கு இந்துக்கள் மீது வெறுப்பை வைத்திருக்கிறார்கள் என்று அறியலாம்.

இங்கே தமிழ்நாட்டில் தவ்ஹீத் ஜமாத் போன்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாத ஆதரவு குழுக்கள் பகிரங்கமாக மேடைகளில் இந்த சட்டத்தை எதிர்த்து பேசுகிறார்கள். இந்த சட்டத்துக்கும் இவர்களுக்கும் ஸ்னான பிராப்தி கூட கிடையாது. பங்களாதேஷிலிருந்து வந்த இந்துக்களுக்கும் பாகிஸ்தானிலிருந்து வந்த இந்துக்களுக்கும் குடியுரிமை வழங்குவதற்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்?

இங்கே போராட்டமாக வெடிப்பது அப்பட்டமான இந்து வெறுப்பு மட்டுமே. அந்த வெறுப்பு அறிஞர்களாலும் சான்றோர்களாலும் கண்டிக்கப்படவேண்டும். அப்படிப்பட்ட இந்து வெறுப்பை பரப்பும் கட்சிகள் மக்களால் முக்கியமாக இந்து மக்களால் புறம் தள்ளப்படவேண்டும்.

தமிழ்நாட்டில் முக்கியமாக இந்துக்கள் திமுகவை கடுமையாக நிராகரிக்கவேண்டும். இந்து வெறுப்பையே தனது ஆரம்பமாகவும், இடையாகவும் கடையாகவும் வைத்துள்ள திராவிட முன்னேற்றக்கழகத்தை தமிழ்நாட்டில் ஒரு சதவீத வாக்கு கூட பெற முடியாத கட்சியாக ஆக்க உங்கள் அனைவரையும் சிரம்தாழ்த்தி வணங்கி கேட்டுக் கொள்கிறேன்.

யானைக்கும் அடிசறுக்கும்: 2018 மாநில தேர்தல் முடிவுகள்

யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்ற பழமொழி உண்டு. அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநில (ம.பி, சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா, மிஸோரம்) சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் பாஜக அடைந்திருக்கும் தோல்விக்கு பொருத்தமான உதாரணம் இந்தப் பழமொழியாகத் தான் இருக்க முடியும்.

2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தில்லி, பிகார் மாநிலத் தேர்தல்கள் தவிர்த்து, அனைத்து சட்டசபை தேர்தல்களிலும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் பாஜக தொடர்ந்து வாகை சூடி வந்திருக்கிறது. ஆயினும் தில்லியில் அரவிந்த் கேஜ்ரிவாலும், பிகாரில் நிதிஷ்- லாலு கூட்டணியும் பாஜகவின் வெற்றிப் பயணத்துத் தடையாக இருந்துள்ளதை மறக்க முடியாது. என்றபோதும், வெல்ல முடியாத கட்சி பாஜக என்பது போன்ற ஒரு தோற்றம் உருவாகி இருந்தது. பிரதமர் மோடியும் பாஜக தலைவர் அமித்ஷாவும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இயங்கி பாரத அரசியல் வரைபடத்தின் வண்ணத்தையே மாற்றிக் காட்டினார்கள்.

லாலுவின் தொந்தரவு தாள முடியாமல் நிதிஷ் நிலைமை உணர்ந்து பாஜகவுடன் பழையபடி நட்புக்கரம் நீட்டினார். கோவா, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் அரசியல் சாதுரியத்தால் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதை பாஜக தடுத்தது. இவ்வாறான செயல்பாடுகளால் நாட்டின் 80 சதவீத மாநிலங்களில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆளும் நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டு கூட்டணியிலிருந்து சந்தர்ப்பவாதியான தெலுங்குதேசம் விலகியபோது, இந்த வெற்றிப் பயணத்துக்கு முதல் அடி விழுந்தது. அதையடுத்து உ.பி, கர்நாடக மக்களவை இடைத் தேர்தல்களில் பாஜக தோல்வியைத் தழுவியது. இப்போது மூன்றாவது அடியாக, ஐந்து மாநிலத் தேர்தல்களில் பாஜக தோல்வியை ருசித்திருக்கிறது.

தோல்வி காணாத கட்சி என்று எந்தக் கட்சியும் எக்காலத்திலும் இருந்ததில்லை. உண்மையில் இந்தத் தோல்வி பாஜகவை உள்முகமாக மறுஆய்வு செய்வதற்கான வாய்ப்பாகவே அமைந்திருக்கிறது. ஏனெனில், இத்தோல்வி பாஜகவின் அரசியல் எதிரியான காங்கிரஸ் அடைந்தது போன்ற அவமானகரமான தோல்வி அல்ல. மிகவும் போராடி, நூலிழையில் பாஜக பறிகொடுத்த வெற்றியைத் தான் காங்கிரஸ் சொந்தம் கொண்டாடுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் உள்கட்சி அதிருப்தியாளர்களை சரிக்கட்டி இருந்தாலே, பாஜக ஆட்சி அமைத்திருக்கும், கிட்டத்தட்ட 20 தொகுதிகளில் பாஜகவின் வெற்றிவாய்ப்பை மிக குறைந்த வித்தியாசத்தில் பாஜக பறிகொடுத்திருக்கிறது. இங்கெல்லாம் பாஜகவின் அதிருப்தி வேட்பாளர்கள் வாங்கியிருக்கும் வாக்குகள் பல்லாயிரக் கணக்கில் இருக்கின்றன. கட்சி வேட்பாளர் தேர்வில் கொடுக்கப்பட்ட அதீத கவனம், அதிருப்தி வேட்பாளர்கள் பெருகக் காரணமாகி இருக்கிறது. ராஜஸ்தானில் இரு அதிருப்தி வேட்பாளர்கள் சுயேச்சையாகவே வென்றும் இருக்கிறார்கள்!

தவிர, பாஜக அரசுகள் 15 ஆண்டுகாலமாக ஆளும் சத்தீஸ்கர், ம.பி. மாநிலங்களில் ஆட்சிக்கு எதிரான மனநிலை நிலவி இருக்கிறது. முதல்வர்களாக இருந்த சிவராஜ் சிங் சௌஹானும் ரமண் சிங்கும் மக்கலீடம் நல்ல பெயர் பெற்றவர்கள்; ஊழல் கறையும் கிடையாது. என்றாலும், ஆட்சி நிர்வாகம் குறைகள் அற்றது அல்லவே? ம.பி.யில், மாண்ட்சோரில் விவசாயிகள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது, பாஜக அரசுக்கு பெரும் சிக்கலை உருவாக்க்கியது. விவசாயிகளின் அதிருப்தி பெருகவே கிராமப் பகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு அவர்கள் ஆதரவாகத் திரும்பினர். போதாக்குறைக்கு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக, நிறைவேற்ற இயலாத வாக்குறுதியை அள்ளி வீசியது காங்கிரஸ். பொறுப்புள்ள கட்சியான பாஜக அவ்வாறு செயல்பட முடியவில்லை.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல் விவகாரம் பெரும் அதிருப்தியை உருவாக்கி இருந்தது. இங்கும் விவசாயிகளின் அதிருப்தி பெருகி இருந்தது. விவசாய விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததால் அவர்கள் தெருவில் இறங்கிப் போராடும் காட்சிகளை பெருமளவில் காண முடிந்தது. விவசாயிகளின் அதிருப்திக் குரலுக்கு மத்திய அரசு உடனடியாக செவிசாய்க்க வேண்டும் என்பதே இந்தத் தேர்தல் முடிவுகள் விடுக்கும் எச்சரிக்கை என்றே சொல்லலாம்.

ராஜஸ்தானில் சட்டசபைத் தேர்தல்களில் ஒவ்வொரு முறையும் ஆட்சியை மாற்றுவது அம்மாநில மக்களின் வழக்கம். அந்த வகையில் காங்கிரஸுக்கு சாதகமான நிலை அங்கு காணப்பட்டது. தவிர, இட ஒதுக்கீட்டுக்காக ஜாட் இன மக்கள் நடத்திய போராட்டமும் அதை மாநில அரசு ஒடுக்கியதும், வசுந்தரா ராஜே அரசுக்கு எதிரான சக்திகளை ஒருங்கிணைத்தது. பாஜகவில் இருந்து விலகிய ஜாட் தலைவரான ஹனுமான் பேனிவால் துவங்கிய ராஷ்ட்ரீய லோக்தந்த்ரிக் கட்சி காங்கிரஸ் கட்சியை ஆதரித்தது. இதன் விளைவாக ஜாட் ஆதிக்கம் மிகுந்த 40 தொகுதிகளில் 30 தொகுதிகளை காங்கிரஸ் வென்றுள்ளது.

இவ்வாறு கள நிலவரம் மிகவும் மோசமாக இருந்தபோதும், பாஜக கடைசி வரை கடுமையாகப் போராடி தோல்வி விகிதத்தைக் குறைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோரின் சூறாவளிப் பிரசாரமும், வாக்குச்சாவடி மட்டத்திலான தீவிரமான களப்பணியும், நேர்த்தியான தேர்தல் செயல்பாடுகளும் இல்லாமல் இருந்திருந்தால், பாஜக மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கும்.

மத்திய, மாநில அரசுகள் மீதான அதிருப்தி நிலவுகையில், மாநில சட்டசபைத் தேர்தலில் வெற்றிக்கான வாய்ப்புகள் குறைவே. ஆயினும், உள்ளூர் அதிருப்தி நிலவரத்தை பாஜகவின் தேர்தல் பணிகள் பல இடங்களில் மாற்றிக் காட்டியுள்ளன. ம.பி, ராஜஸ்தான் மாநிலங்களில் சுமார் ஐம்பது தொகுதிகள் மிகக் குறைந்த வாக்குகள் வித்யாசத்தில் பாஜகவிடமிருந்து கைநழுவி உள்ளன. அவை பாஜக வசமாகி இருந்திருந்தால் காட்சியே மாறி இருக்கும். உண்மையில் பெரும் தோல்வி ஒன்று தடுக்கப்பட்டதையே இம்முடிவுகள் காட்டுகின்றன.

தெலுங்கானாவிலும் மிஸோமிலும் பாஜக வலுவான கட்சியாக இல்லை. என்றபோதும் மிசோரமில் முதல்முறையாக ஒரு இடத்தில் வென்று பாஜக தனது கணக்கை அங்கும் துவக்கி இருக்கிறது. தவிர, அங்கு பாஜகவின் தோழமைக் கட்சியான மிஸோ தேசிய முன்னணி வென்று ஆட்சி அமைக்க உள்ளது. வட கிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் ஆண்ட கடைசி மாநிலம் இது.

தெலுங்கானாவில் காங்கிரஸ்- தெலுங்குதேசம் கூட்டணியைத் தோற்கடிப்பதற்காக சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியை பாஜக அனுதாபிகள் பலர் ஆதரித்துள்ளனர். அங்கு அக்கட்சி வென்றிருப்பது காங்கிரஸ்- தெலுங்குதேசம் கூட்டணிக்கு பெருத்த அடியாகும். ஆனால் எந்த ஊடகமும் இதுபற்றி விவாதித்ததாகத் தெரியவில்லை. இங்கும் பாஜக 4 தொகுதிகளை இழந்துள்ளது. இங்கு முஸ்லிம் அடிப்படைவாதக் கட்சியான ஒவைசியின் கட்சி 7 இடங்களில் வென்றிருப்பதும் அபாய அறிகுறி! இக்கட்சி டி.ஆர்.எஸ். உடன் மரைமுகக் கூட்டணி அமைத்திருந்தது.

எது எப்படியாயினும், ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றாலும் தோல்வி தோல்வியே. ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலையில் பெருவாரியானோர் இருந்தபோதும் லட்சக் கணக்கானோர் காங்கிரஸ் கட்சிக்கும் வாக்களிக்க விரும்பாமல் நோட்டாவுக்கு வாக்களித்திருப்பதை இம்மாநிலங்களில் காண முடிந்தது. இந்த நோட்டா வாக்காளர்களின் மனநிலையை மாநில அரசு உணர்ந்திருந்தால் சில இடங்களிலேனும் முடிவுகள் மாறி இருக்கும். இவை அனைத்தையும் விட, “காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்ற இலக்குடன் பயணித்த மோடி- ஷா கூட்டணிக்கு இத்தேர்தல் முடிவுகள் ஏமாற்றமே!

இருப்பினும் காங்கிரஸ் புத்துணர்வு பெறுவது, எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஓரணியில் சேர்க்க உதவக்கூடும். அத்தகைய நிலை ஏற்பட்டால், கட்சிகளிடையிலான சுயநலக் கூட்டணியை விளக்கி நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பிரசாரம் செய்வது எளிதாக இருக்கும். உதாரணமாக, தலித் என்பதாலேயே மாயாவதியை ஆதரிப்பவர், மாயாவதி- காங்கிரஸ் கூட்டணியை விரும்பாது போக வாய்ப்புகள் உண்டு. இடதுசாரிகள் கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும் காங்கிரஸை எதிர்த்துக்கொண்டே தேசிய அளவில் அக்கட்சியுடன் இணக்கம் காட்டினால், அவர்களின் சந்தப்பர்ப்பவாதத்தையும் அம்பலப்படுத்த முடியும்.

இறுதியாக, இந்தத் தேர்தல் முடிவுகள் 2019-இல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிபலிக்குமா என்ற கேள்வி எழுகிறது. இன்றைய நிலையில் பாஜகவின் எதிரிகள் வலுப்பெற இம்முடிவுகள் உதவி இருக்கின்றன என்பது உண்மையே. ஆனால், மாநில சட்டசபைகளுக்கு வாக்களிக்கும் மனநிலை வேறு; தேசிய அளவில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் மனநிலை வேறு என்பதை இதுவரை நமது வாக்காளர்கள் அறிவுப்பூர்வமாக பல முறை நிரூபித்திருக்கின்றனர். தவிர, இன்னும் 4 மாதங்களில் எத்தகைய திருப்பங்கள் நிகழும் என யாராலும் யூகிக்க முடியாது.

மத்திய அரசின் கடந்த 4.5 ஆண்டுகால ஆட்சி மீதான அதிருப்திக்கும் இந்தத் தோல்வியில் பெரும் பங்குண்டு என்பதை மறுக்க முடியாது. பாஜக முதல்வர்கள்  இந்தத் தோல்விக்கு தார்மிகரீதியாகப் பொறுப்பேற்கலாம். இத்தேர்தல் முடிவு மத்திய அரசு மீதான அதிருப்தியின் பிரதிபலிப்பல்ல என்று ராஜ்நாத் சிங் கூறலாம். ஆனால், சத்தீஸ்கர் தோல்விக்கு மத்திய அரசு மீதான அதிருப்தியும் ஒரு காரணமே. ராகுல் காந்தியின் பிரசாரத்தில் மத்திய அரசின் திட்டங்களைத் தாக்கியே பேசினார் என்பதை நாம் பார்த்தோம். குறிப்பாக பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு- சேவை வரி விதிப்பு ஆகிய இரண்டும் ஊரகப் பகுதி- நகர்ப் பகுதி இரண்டிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. அவை அற்புதமான பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகள் என்பதை மக்கள் அறிய இன்னும் காலம் தேவைப்படுகிறது. குறிப்பாக, வேலைவாய்ப்பில் வீழ்ச்சி, பொருளாதார முடக்கம் ஆகியவை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. எனவே, மத்திய அரசு சுதாரித்துக் கொள்ள வேண்டிய காலமும் இதுவே.

இப்போதைக்கு 5 மாநிலங்களில் 679 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 295 தொகுதிகளில் வென்று காங்கிரஸ் முதலிடம் பிடித்திருக்கிறது. 199 தொகுதிகளில் வென்று பாஜக இரண்டாமிடம் பிடித்திருக்கிறது. 2013 தேர்தல்களில் பாஜக இம்மாநிலங்களில் 382 தொகுதிகளில் வென்றிருந்தது. அத்தகைய வெற்றியை காங்கிரஸ் இம்முறை பெறவில்லை என்பது நிதர்சனம். அதேபோல பாஜகவின் செல்வாக்குச் சரிவும் இதில் வெளிப்படுகிறது. வரும் நாட்களில் பாஜக தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய காலகட்டம் இது.

யானைக்கும் அடி சறுக்கும் என்பதை பாஜக ஆதரவாளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டிய தருணமும் இதுவே. வெற்றி மமதை வலியோரையும் பலவீனப்படுத்திவிடும். தவிர கொள்கையோ,  கோட்பாடோ இல்லாத பலரும் வெற்றி பெறும் கட்சியில் சங்கமிக்கத் துடிப்பர். அதுவே, உண்மையான தொண்டர்களை அப்புறப்படுத்திவிடும். அத்தகைய சூழல் பாஜகவுக்குள்ளும் வந்திருப்பது அப்பட்டமாகவே தென்படுகிறது. இந்த நோயைக் குனப்படுத்துவது, கட்சி நிர்வாகிகளின் உடனடிக் கடமை.

இந்த பின்னடைவைப் பயன்படுத்தி, வரும் நாட்களில் கட்சியின் இலக்கு நோக்கிய வெற்றிப் பயணத்தை பாஜக கட்டமைக்க வேண்டும் என்பதே, தேசநலன் விரும்புவோரின் எதிர்பார்ப்பு.

 

திரிபுரமும் வசமானது! காவிமயமாகிறது பாரதம்!

 

திரிபுரா மக்களின் வெற்றிப் பெருமிதம்!

அண்மையில் நடந்த திரிபுரா, நாகலாந்து, மேகாலயம் மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் முடிவுகள், தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்த விரும்புவோருக்கு இனிய சேதியை அளித்திருக்கின்றன. குறிப்பாக, திரிபுராவில் பாஜக அடைந்துள்ள வெற்றி மிகவும் அற்புதமானது. அங்கு 20 ஆண்டுகாலமாக முதல்வராக இருந்த, காட்சிக்கு எளியவரான மாணிக் சர்க்கார் தலைமையிலான மார்க்சிஸ்ட் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, ஆட்சிக் கட்டில் ஏறுகிறது பாஜக.

இன்றைய நிலையில் ஒட்டுமொத்த பாரதத்தில் 21 மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் கரம் ஓங்கி இருக்கிறது. இது முன்னர் பழைய தேசிய கட்சியான காங்கிரஸ் வகித்த நிலை. இன்று அக்கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போலாகிவிட்டது. அந்த இடத்தை உண்மையான தேசியக் கட்சியான பாஜக கைப்பற்றிவிட்டது.

அ. தற்போது பாஜக ஆளும் மாநிலங்கள்:

1. மத்தியப்பிரதேசம்  (தனித்து ஆட்சி)

2. சத்தீஸ்கர் (தனித்து ஆட்சி),

3. ராஜஸ்தான் (தனித்து ஆட்சி),

4. குஜராத் (தனித்து ஆட்சி),

5. ஹிமாச்சல பிரதேசம் (தனித்து ஆட்சி),

6. ஹரியாணா (தனித்து ஆட்சி),

7. உத்தரகண்ட் (தனித்து ஆட்சி),

8. ஜார்க்கண்ட் (கூட்டணி),

9. உத்தரப்பிரதேசம் (கூட்டணி)

10. அருணாசல பிரதேசம்  (கூட்டணி)

11. அசாம் (கூட்டணி)

12. மணிப்பூர் (கூட்டணி)

13. மஹாராஷ்டிரா (கூட்டணி)

14. கோவா (கூட்டணி).

(குறிப்பு: இவற்றில் கூட்டணி என்று குறிப்பிடப்படுபவை, பாஜக தலைமையில் அமைந்த கூட்டணிகள். இம்மாநிலங்களில் பாஜக முதல்வர் உள்ளார்).

ஆ. கூட்டணி அரசில் பாஜக பங்கேற்கும் மாநிலங்கள்:

1. ஜம்மு- காஷ்மீர் (மக்கள் ஜனநாயக கட்சியின் ஆட்சியில் பங்கேற்பு)

2. பிகார் (ஐக்கிய ஜனதாதளம் ஆடசியில் பங்கேற்பு),

3. சிக்கிம் (சிக்கிம் ஜனநாயக முன்னணியின் ஆட்சி)

4. ஆந்திரப் பிரதேசம் (தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி)

இ. பாஜகவின் புதிய ஆட்சி அமையவுள்ள மாநிலங்கள்:

1. திரிபுரா (திரிபுரா பழங்குடி மக்கள் கட்சியுடன் கூட்டணி)

2. நாகலாந்து (தேசிய ஜனநாயக முனேற்றக் கட்சி,  நாகலாந்து மக்கள் முன்னணி ஆகியவற்றுடன் கூட்டணி அமையும் வாய்ப்பு)

3. மேகாலயா (தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைமையிலான கூட்டணி அரசில் பங்கேற்கும் வாய்ப்பு)

ஈ. மீதமுள்ள பகுதிகள்:

1. கர்நாடகா (விரைவில் ஆட்சி)

2. தில்லி (விரைவில் ஆட்சி)

3. கேரளா (அடுத்த தேர்தலில் ஆட்சி)

4. ஒடிசா (அடுத்த தேர்தலில் ஆட்சி)

5. மேற்கு வங்கம் (அடுத்த தேர்தலில் ஆட்சி)

6. தெலுங்கானா (அடுத்த தேர்தலில் கூட்டணி ஆட்சி)

7. தமிழகம் (அடுத்த தேர்தலில் கூட்டணி ஆட்சி)

8. பாண்டிசேரி (அடுத்த தேர்தலில் கூட்டணி ஆட்சி)

9. மிசோரம் (அடுத்த தேர்தலில் கூட்டணி ஆட்சி)

10. பஞ்சாப் (விரைவில் அரசியல் காட்சி மாறும்!)

இங்கு அடைப்புக் குறிக்குள் குறிப்பிட்டுள்ளவை, ஆணவ வெளிப்பாடுகள் அல்ல; பாஜகவின் தெளிவான திட்டமிட்ட வியூகம். இந்திய அரசியல் கட்சிகளிலேயே தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்படும் கட்சியாக பா.ஜ.க. மட்டுமே இருக்கிறது.

நிகரற்ற ஆளுமைகள்- பாஜகவின் தளகர்த்தர்கள்.

மோடி என்ற நிகரற்ற ஆளுமையை பிரதமராகக் கொண்ட பாஜகவுக்கு, அதன் தலைவரான அமித் ஷாவின் ராஜதந்திர அணுகுமுறையும் சேர்ந்ததால்தான் அடுத்தடுத்து பல மாநிலங்களில் வெற்றி பெற்று இன்று ஏகதேச பாரதம் காவிமயமாகி இருக்கிறது. அதன் தொடர்ச்சியே, தற்போது வடகிழக்கில் பாஜக பெற்றுள்ள வெற்றி.

இத்தகைய நிலையில் தற்போதைய தேர்தல் முடிவுகளை ஆராய்வது காலத்தின் தேவையாகும். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், பாஜகவை குறைந்தபட்சம் வரும் 10 ஆண்டுகளுக்கு யாரும் ஒதுக்கிவைக்க முடியாது என்ற உண்மையை வெளிப்படுத்துகின்றன தேர்தல் முடிவுகள். ஆனால், பாஜகவின் எதிரிகள் வழக்கம் போல, நீலிக் கண்ணீர் விடுகிறார்கள். இது அவர்கள் அழ வேண்டிய நேரம். அழட்டும்!

நமக்கு இந்த தேர்தல் முடிவுகள் களிப்பை மட்டும் நல்கவில்லை. தமிழகம் போன்ற மாநிலத்துக்கான எதிர்காலத் திட்டமிடலுக்கான வாய்ப்பையும் தந்திருக்கின்றன. எனவே நாம் ஆராய்வோம்!

***

நாகலாந்தில் நட்புப் பூக்கள்:

நாகலாந்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சிதான் (நாகலாந்து மக்கள் முன்னணி-என்.பி.எஃப்.) இதுவரை ஆட்சியில் இருந்தது. இப்போது அதன் கூட்டணிக் கட்சி (நாகலாந்து தேசிய முன்னேற்றக் கட்சி- என்.டி.பி.பி.) மாறி இருக்கிறது. அங்கு தேர்தலே பாஜகவின் நண்பர்களிடையிலான களமாகத் தான் இருந்தது. எதிர்பார்த்தபடியே,  பாஜக கூட்டணியே அதிக வெற்றி பெற்றிருக்கிறது.

பாஜகவின் முன்னாள் நண்பரான என்.பி.எஃப். இப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறது. முன்னாள் முதல்வர் நெய்பு ரியோ (என்.டி.பி.பி.), இப்போதைய முதல்வர் ஜிலியாங் என்.பி.எஃப். ) ஆகிய இருவருமே பா.ஜ.கவின் தோழர்கள். இது ஒரு தரும சங்கடமான நிலை. எனினும், தேர்தலுக்கு முந்தைய கூட்டணி என்ற முறையில் நெய்பு ரியோ முதல்வராகவே அதிக வாய்ப்பு. அநேகமாக என்.பி.எஃப். கட்சியும் அரசில் இணையக்கூடும் அவ்வாறு நிகழ்ந்தால், எதிர்க்கட்சிகளே இல்லாத மாநிலமாக நாகலாந்து மாற வாய்ப்புண்டு.

அங்கு மொத்தமுள்ள இடங்கள்: 60; தேர்தல் நடைபெற்ற இடங்கள்: 59. பாஜக கூட்டணி 28 (பாஜக-11, என்.டி.பி.பி.-17) இடங்களிலும், என்.பி.எஃப். 27 இடங்களிலும், மற்றவர்கள் 4 இடங்களிலும் வென்றிருக்கிறார்கள். காங்கிரஸ் இங்கு சுத்தமாக துடைத்தெறியப்பட்டிருக்கிறது. நாகா பழங்குடியினர் விவகாரம் இனிமேல் சுமுகமாகத் தீர்வதற்கான வாய்ப்பை இத்தேர்தல் முடிவு அளித்திருக்கிறது.

மேகாலயாவில் காங்கிரஸ் சிறுத்தது!

கிறிஸ்தவப் பெரும்பான்மை மாநிலமான மேகாலயாவில் தேர்தல் முடிவுகள் நிர்ணயிப்பவை சர்ச்களே. அங்கு தேர்தல் பிரசாரத்தின்போது ராகுலுக்கு ஆதரவாக பாதிரிப்படை வெளிப்படையாகவே களமிறங்கியது. ராகுலும், பா.ஜ.க.வை இந்து வகுப்புவாதக் கட்சி என்று பிரசாரத்தின்போது பூச்சாண்டி காட்டினார். எனினும், அக்கட்சியால் மீண்டும் ஆட்சிக்கான பெரும்பான்மை பெற முடியவில்லை.

மேகாலயத்தில் மொத்தமுள்ள தொகுதிகள் 60.  இங்கு கட்சிகளின் வெற்றி நிலவரம்: தேர்தல் நடந்த தொகுதிகள்: 59, காங்கிரஸ்- 21,  என்.பி.பி- 19, பாஜக- 2, யு.டி.பி- 6, பிறர்- 11. இங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை பெறவில்லை. இங்கு தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியாக பாஜக- என்.பி.பி. கூட்டணிக்கு 21 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் இக்கூட்டணியை ஆதரிக்கின்றனர்.

காங்கிரஸின் இப்போதைய முதல்வர் முகுல் சங்மாவா, பாஜக ஆதரவு பெற்ற காண்டிராட் சங்மாவா (முன்னாள் நாடாளுமன்ற லோக்சபா சபாநாயகர் பி.ஏ.சங்மாவின் மகன்) , யார் அடுத்த முதல்வர் என்பது சில தினங்களில் தெரிந்துவிடும். மக்கள் ஆதரவை காங்கிரஸ் இழந்ததையே தேர்தல் முடிவுகள் காட்டுவதால்,  பாஜக ஆதரவு பெறுபவரே முதல்வர் ஆகக் கூடும்.

இப்போதைக்கு காங்கிரஸ்- பாஜக என இரு தரப்பிலும் மேலிடப் பார்வையாளர்கள் தலைநகர் ஷில்லாங்கில் அணி திரட்டுகின்றனர். ஆரம்ப நிலையிலும், தார்மிக ரீதியிலும், தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி.) கூட்டணி ஆட்சி அமைக்கவே அதிக வாய்ப்புள்ளது.

திரிபுராவில் அதிரடித் திருப்பம்:

இவ்விரு மாநிலங்களை விட, திரிபுராவில் ஏற்பட்டுள்ள திருப்பமே தலையாயது. எனவே தான் இக்கட்டுரையின் பெரும் பகுதியை திரிபுரா ஆக்கிரமிக்கிறது.

இந்தியாவில் இடதுசாரிகள் தம்பட்டம் அடித்துக்கொண்ட பிரதான அம்சங்களில் ஒன்று திரிபுரா. அங்கு இதுவரை முதல்வராக இருந்த மார்க்சிஸ்ட் தலைவர்கள் அனைவருமே எளியவர்களாகவும், தன்னலமற்றவர்களாகவும் அமைந்தது அக்கட்சியின் பேறு. அதைப் பயன்படுத்தியே அம்மாநிலத்தில் நீண்டகாலம் ஆட்சியை தக்கவைத்திருந்த்து அக்கட்சி.

ஆனால், மாநிலத்தில் மார்க்சிஸ்ட் தொண்டர்களின் அரசியல் வன்முறைகளைப் பொருத்த வரை, நமது அண்டை மாநிலமான கேரளம் போலவேதான். அங்கு தேர்தலே மார்க்சிஸ்ட் கட்சியினர் நினைத்தால் தான் அமைதியாக நடக்கும் என்ற நிலையே சென்ற தேர்தல் வரை நிலவியது. மார்க்சிஸ்ட்களின் ஜனநாயகம் என்பது அவர்கள் குறைவான எண்ணிக்கையில் இருக்கும் வரை மட்டுமே.

அங்கு சென்ற தேர்தலிலேயே (2013) ஆட்சி மாற்றத்துக்கான காரணிகள் தென்பட்டன. ஆனால், காங்கிரஸ் கட்சியால் மார்க்சிஸ்டுகளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. தவிர, திரிணாமூல் காங்கிரஸும் வாக்குகளைப் பிரித்தது. எனவே தான் சென்ற தேர்தலில் மாணிக் முதல்வராக முடிந்தது. எனினும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை முன்னைவிட அதிகரித்தது.

இந்த நேரத்தில் தான் தேசத்தின் பிரதமர் ஆனார் நரேந்திர மோடி. அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகர்தலா தொகுதியில் பாஜக வெல்ல முடியாத போதும், அங்கு அக்கட்சியின் வாக்குகள் கூடின. அப்போதே பாஜக திரிபுராவை தனது அடுத்த இலக்காகத் தீர்மானித்துவிட்டது.

திரிபுராவின் சோனாமுராவில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டம்.

தேர்தல் களத்தில் வெல்ல, நல்ல தலைமை, அர்ப்பணிப்புள்ள தொண்டர் படை, சிறந்த அரசியல் வியூகம் ஆகிய மூன்றும் அவசியம். இம்மூன்றும் பாஜகவிடம் இருந்தது. கடந்த இரண்டாண்டுகளாக பாஜக கீழ்மட்டத்தில் நடத்திவந்த அரசியல் போராட்டமும், கைக்கொண்ட தேர்தல் அணுகுமுறையும் தான் அக்கட்சிக்கு தற்போது இமாலய வெற்றியை வழங்கியுள்ளன. தவிர பா.ஜ.க.வின் தலைமையை உணர்ந்த மாற்றுக் கட்சியினர் மார்க்சிஸ்டுகளுக்கு மாற்றாகும் வல்லமை அக்கட்சிக்கு மட்டுமே உணர்ந்து அக்கட்சியில் இணைந்தனர்.

திரிபுராவில் சென்ற தேர்தலில் பாஜக ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை. அங்கு 1.5 % வாக்குகளைக் கூட வாங்க முடியவில்லை. ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் காங்கிரஸ்  கட்சியிலிருந்து எம்.எல்.ஏ.க்கள் பலரே பாஜகவில் ஐக்கியமாயினர். அவர்கள் மார்க்சிஸ்ட்களை எதிர்க்க பாஜகவைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்துவிட்டனர்.

நால்வர் அணியின் வியூகம்:

ஹிமாந்த பிஸ்வ சர்மா

இந்தக் காட்சிகளை பின்னிருந்து இயக்கியவர், வடகிழக்கு மாநில கூட்டணி நிர்வாகத்தைக் கவனிக்கும் ஹிமாந்த பிஸ்வ சர்மா. முன்னாளில் காங்கிரஸில் இருந்தபோது கறிவேப்பிலையாகத் தூக்கி எறியப்பட்ட சர்மாவிடமிருந்த தலைமைப் பண்பை உணர்ந்த அமித் ஷா  அவரையே வட கிழக்கு மாநிலங்களுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைப்பாளராக்கினார். இப்போது அவர் சர்வானந்த் சோனோவால் தலைமையிலான அசாம் அரசில் கல்வி அமைச்சராகவும் இருக்கிறார்.

ராம் மாதவ்

சர்மாவிடம் திரிபுரா தேர்தல் பொறுப்பு அளிக்கப்பட்டது. தவிர, அவருக்கு உதவியாக,  பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவும் அகர்தலா வந்தார். மேலும் ஆர்.எஸ்.எஸ். முன்னாள் பிரசாரகரும், சமூக சேவகருமான விப்லப் குமார் தேவும் களம் இறக்கப்பட்டார். தேர்தல் களத்தில் அனுபவம் மிக்க  மற்றொரு ஆர்.எஸ்.எஸ். செயல்வீரர் சுனில் தேவ்தரும் உடன் களமிறங்கினார், இவர்கள் நால்வரும் இணைந்து நடத்திய துல்லியமான தாக்குதலுக்குக் கிடைத்த வெற்றியே பாஜகவுக்கு பல்லாண்டு காலக் கனவை நனவாக்கி இருக்கிறது.

சுனில் தேவ்தர்

இந்த நால்வர் அணி திரிபுராவின் 60 தொகுதிகளிலும் பம்பரமாகச் சுழன்றது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் களப் பணியாளர்களை நியமித்தார்கள். மார்க்சிஸ்ட் ஆட்சி மீதான அதிருப்தி மாநிலமெங்கும் விரவிக் கிடந்தது. அதை பாஜக ஆதரவாக அவர்கள் தொடர் பிரசாரத்தால் மாற்றினார்கள். தேர்தல் பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தில் மோடிக்கு சோனாமுராவில் கூடிய பிரமாண்டமான கூட்டத்திலேயே, அங்கு அடுத்து பாஜக வெல்லப்போவது தெரிந்துவிட்டது.

விப்லப் குமார் தேவ்

எனினும், எந்த ஒரு வாய்ப்பையும் வீணாக்க விரும்பாத அமித் ஷா, அரசால் கடுமையாக பாதிக்கப்பட்ட பழங்குடியினரின் கட்சியான திரிபுரா பழங்குடி மக்கள் கட்சி (ஐ.டிஎஃப்.டி.) உடன் கூட்டணி கண்டது. வாக்குகள் சிதறுவதைத் தடுத்ததாலும், மார்க்சிஸ்ட்கள் முன்புபோல வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற முடியாததாலும், பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது.

அங்கு மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. அவற்றில் பாஜக கூட்டணி 43 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கூட்டணி 16 இடங்களிலும் வென்றுள்ளன. திரிபுராவில் சென்ற தேர்தலில் அடையாளமே இல்லாமல் இருந்த பாஜகவின் வாக்கு சதவீதம் இப்போது 42.4 %. அதன் கூட்டணிக் கட்சியின் வாக்கு சதவீதம் 7.9 %. மார்க்சிஸ்ட் கட்சி 43.2 % வாக்குகளைப் பெற்றபோதும், கூட்டணி வலுவால் பாஜக வென்றுள்ளது. இதற்கு அமித் ஷாவின் வியூகமே காரணம்.

“திரிபுராவில் ஐ.டிஎஃப்.டி. கட்சியுடன் கூட்டணி சேர்வது என்ற முடிவால் ஆதாயமும் கிடைக்கலாம்; பாதகமும் ஏற்படலாம் என்று நாங்கள் சொன்னபோது, உடனடியாக அக்கட்சியுடன் கூட்டணி வைக்க முடிவெடுத்தார் ஷா. அவரது தேர்தல் வியூகமே இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணம்” என்கிறார் சர்மா. அது மட்டுமல்ல, “அரசியல் பல்கலைக் கழகத்தில் அமித்ஷா முனைவர் பட்ட மாணவர் என்றால் ராகுலை நரசரி பள்ளி மாணவராகத் தான் கருத வேண்டும்” என்றும் அவர் கூறி இருக்கிறார். உண்மைதான். தேர்தல் முடிவுகளுக்கு பதில அளிக்காமல் இருக்க- பாட்டியைப் பார்ப்பதற்காக என்று சொல்லி- இத்தாலிக்கு ஓடிவிட்ட ராகுல் குறித்து, முன்னாள் காங்கிரஸ்காரர் கூறுவது சரிதான்.

ஒருகாலத்தில் மாநிலத்தை ஆண்ட காங்கிரஸ் இப்போது 1.8 % வாக்குகளை மட்டுமே பெற்றிருப்பது பரிதாபம்தான். மோடி கூறுவது போல காங்கிரஸ் இல்லாத பாரதம் நோக்கி மக்கள் பயணிக்கத் துவங்கிவிட்டதையே திரிபுரா முடிவுகள் காட்டுகின்றன. அதேபோல, இடதுசாரிகளின் செங்கோட்டைகளுள் ஒன்றான மேற்கு வங்கம் ஏற்கனவே தகர்க்கப்பட்ட நிலையில், இப்போது இரண்டாவது கோட்டையும் திரிபுராவில் தகர்க்கப்பட்டுவிட்டது. இனி அவர்கள் கேரளத்துடன் “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” கோஷத்தை நிறுத்திக்கொள்ள வேண்டியதுதான்.

கேரள முதல்வர் பிணாரயி விஜயன் இனியேனும் அரசியல் எதிரிகள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடாமல் நல்லாட்சி நடத்துவது அவருக்கு நல்லது. இல்லையெனில், அங்கும் தாமரை மலரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

மொத்தத்தில் வட கிழக்கு மாநிலங்களில் பாஜகவின் பாதம் அழுத்தமாக பதிந்துவிட்டது. இனியும் 7 சகோதரிகள் என்று அழைக்கப்படும் அந்த மாநிலங்கள் புறக்கணிக்கப்படாது. அதிக அளவில் பிரிவினை குறுங்குழுக்கள் உள்ள வட கிழக்கில் பாஜகவின் ஆதாரம் கூடுவது தேசத்தின் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்துகிறது.

 

நால்வருக்கு சமர்ப்பணம்!

இந்த நல்ல நேரத்தில் துயரமான ஒரு நினைவைப் பகிர்ந்து கொள்வது அவசியம்.

1999 ஆகஸ்ட் 6-இல் திரிபுராவில் வனவாசி கல்யாண் ஆசிரமத்தைப் பார்வையிடச் சென்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் நால்வர் என்.எல்.எஃப்.டி. பிரிவினைவாதிகளால் பங்களாதேஷுக்குக் கடத்தப்பட்டனர். அவர்களை மீட்க வாஜ்பாய் அரசு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஏனெனில், அங்கு அதிகார வர்க்கமும், ஆளுங்கட்சியும்  பிரிவினைவாதிகளுக்கு சாதகமாக இருந்தன. கடுமையான சித்ரவதைகளுக்குப் பிறகு அவர்கள் நால்வரும் கொல்லப்பட்டதாக 2000 நவம்பரில் தெரிய வந்தது.

அந்த நால்வர்: வடகிழக்கு பாரதத்தின் ஆர்.எஸ்.எஸ். ஷேத்திர கார்யவாஹ் ஷியாமல் காந்தி சென்குப்தா, அகர்தலா விபாக் பிரசாரக் சுதாமய் தத்தா, ஜில்லா பிரசாரக் சுபாங்கர் சக்கரவர்த்தி, தெற்கு அசாம் பிரசாரக் தீபேந்திரநாத் தேவ் ஆகியோர்.

வனவாசி கல்யாண் ஆசிரமம் வனவாசி மக்களை மேம்படுத்த சேவை செய்து வரும் அமைப்பு. திரிபுராவில் பழங்குடியின மக்களின் தொலைதூரக் கிராமங்களில் இந்த அமைப்பின் பணிகளை மேற்பார்வையிடச் சென்றபோதுதான் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் நால்வரும் -அவர்கள் நால்வருமே பிரம்மசாரிகள்- பிரிவினைவாதிகளால் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டனர்!

பல்லாண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்.சும் அதன் சகோதர இயக்கங்களும் நிகழ்த்திய தியாக மயமான பணிகளுக்குக் கிடைத்துள்ள மதிப்புமிகு பயனே, தற்போது பாஜக பெற்றுள்ள வெற்றியின் ஆதாரம். 2000—இல் பலியான இந்த நான்கு உத்தம ஸ்வயம்சேவகர்களுக்கும் இன்றைய பாஜகவின் திரிபுர வெற்றி சமர்ப்பணம்.