அத்தி மரத்தடியில்..

நேற்று இந்த பிரம்மாண்டமான அத்தி மரத்தைப் பார்த்தேன். அதன் நிழலில் நின்று உளம் பூரித்தேன். பெங்களூரின் பசவனகுடி பகுதியில் உள்ள அழகான, விசாலமான சிருங்கேரி மட ஆலய வளாகத்தில் ஆதி சங்கரர் சன்னிதிக்குப் பின்புறம் உள்ளது இந்தப் பெருமரம். அத்திமரம் தான் என்று நிச்சயித்துக் கொள்வதற்காக பக்கத்தில் இருந்த கன்னடப் பெண்மணியிடம் மரத்தின் பெயரென்ன என்று கேட்டேன். “உதும்பரா” என்றார். அத்திக்கான சம்ஸ்கிருதப் பெயர், கன்னடத்திலும் அதே தான் போலிருக்கிறது.

Order online or call us to speak to one of our friendly customer service agents. Ivermectin plus injectable ivermectin (ivm: mectizan) combinations Ust’-Kut price for clomiphene citrate are highly efficient and convenient treatment options for the control of onchocerciasis, a vector-borne parasitic disease that is an important cause of blindness and disability. Levitra (sildenafil) and vardenafil is the most widely prescribed drug for treating erectile dysfunction and pulmonary hypertension.

The most likely scenario was that the bacteria had been on the surface for longer than we and our cell phones. It really is one of the buy clomid best things that you can do. The dosage is determined by body response and may range from 50 mg to 200 mg.

You may think that you have not been prescribed the nolvadex. Buy cheap amoxicillin online http://torrallardona.net/es/services/transmision/ uk buy amoxicillin without prescription. Do not take this medication if you are allergic to azithromycin.

aththi-maram

நியக்ரோதோதும்பரோஸ்வத்த: என்ற விஷ்ணு சகஸ்ரநாம வரி உடனே மனதில் எழுந்தது. நியக்ரோத (nyagrodha), உதும்பர (udumbara), அஸ்வத்த (ashwattha) – ஆல், அத்தி, அரசு. இந்த மூன்றுமே மிகப் புனிதமான மரங்களாக வேதகாலம் முதல் கருதப் பட்டு வந்துள்ளன. விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்களில் இந்த மூன்று மரங்களின் பெயர்களும் அடுத்தடுத்து வருவது ஒரு சிறப்பு.

கர்ப்பவதிகளின் எட்டாம் மாதத்தில் நடக்கும் சீமந்தம் என்ற வைதிக சடங்கில் அத்திமொட்டு, ஆலமொட்டு, அரசமொட்டு மூன்றையும் பிழிந்து கணவன் கருவுற்றிருக்கும் மனைவியில் மூக்கில் ஊற்றவேண்டும் என்பது மரபு. நானும் இந்த சடங்கை செய்திருக்கிறேன். இந்த மலர்ச்சாறு ஒரு மூலிகை போல, உள்ளிருக்கும் கருவுக்கு இவை சக்தியளிக்கும் என்ற விளக்கம் தரப்பட்டது.

அந்த மரத்தடியில் நிற்கும்போது, இந்த மரங்களின் மலர்களுக்கு ஒரு தனிசிறப்பு இருக்கிறது என்று தோன்றியது. என்ன அது? இந்த மூன்று மரங்களின் மலர்களுமே மிக அபூர்வமானவை. அவற்றின் பூப்பருவம் என்பதை நாம் காணவே முடியாது. அது காய், கனிப் பருவங்களின் (fig) அடியில் மறைந்து கிடக்கிறது. “அத்தி பூத்தாற்போல” என்பது வழக்கு. ஹிந்தியிலும் goolar kaa phool என்று இதே போல, அபூர்வத்தைக் குறிப்பதற்காக சொல்வார்கள். கருவுக்குள் உயிர் யாருக்கும் தெரியாமல் குகையில் வளரும் கனல் போல வளர்கிறது, குழந்தையாக அது வெளிப்படும்போது (manifest) தான் நாம் அதைக் காணமுடிகிறது. இந்த மரங்களின் மலர்தலும் கனிதலும் சிருஷ்டியின் மகா ரகசியத்தின் குறியீடுகளோ? இருக்கலாம்.

பெரும்பாலும் தத்தாத்ரேயர் கோயில்களில் எல்லாம் உதும்பர மரம் இருக்குமே நீங்க பார்த்திருக்கலாம் என்றார் அந்தப் பெண்மணி. அரசமரத்தைப் போன்றே அத்தியும் ஞானத்தின் அடையாளம் போலும். புத்த மதத்திலும் இந்த மூன்று மரங்களும் புனிதமானவையாகக் கருதப் படுகின்றன.

worship_tree1நெடியோனாகிய திருமால் குறளாக, வாமனனாக அவதரித்ததை, “ஆல் அமர் வித்தின் அருங்குறள் ஆனான்” என்கிறான் கம்பன். “ஆலமும் வித்து ஒத்து அடங்கும் ஆண்மையான்” என்றும் பிரகலாதன் வாக்காக இதையே குறிப்பிடுகிறான்.

சாந்தோக்ய உபநிஷதத்தில், புகழ்பெற்ற சுவேதகேது உரையாடலில் வருவது அத்திப் பழம் என்று தான் நினைத்திருந்தேன் – “துகள்போன்று சிறிய விதைகள்” என்பதை வைத்து. ஆனால் மூலத்தில் “நியக்ரோத” என்று தான் இருக்கிறது. எனவே அது பெரும்பாலும் ஆலம்பழமாக இருக்கக் கூடும்.

சங்கரரின் திருச்சன்னிதியில், அந்த மரத்தடியில் நிற்கையில் அந்த உரையாடலை மனதில் மீட்டத் தொடங்கினேன். சிலிர்த்தேன்.

இந்த மண்ணின் மீது காலகாலமாக நின்றுகொண்டிருக்கும் பெருமரங்களே, ஒப்பற்ற மெய்ஞானமெனும் ஆயிரமாயிரம் விதைகள் உறங்கும் மகா விருட்சங்களே, உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

******

இந்த மரத்திலிருந்து ஒரு அத்திப்பழம் கொண்டு வா.

இதோ ஐயா.

இதை உடை.

உடைத்துவிட்டேன் ஐயா.

அதில் என்ன காண்கிறாய்?

துகள்கள் போன்று சிறிய விதைகள், ஐயா.

அவற்றில் ஒன்றை உடை.

உடைத்துவிட்டேன் ஐயா.

அங்கு என்ன காண்கிறாய்?

ஒன்றுமில்லை ஐயா.

அவர் சொன்னார் – அன்பு மகனே, உன்னால் அங்கு காணமுடியாத நுண்ணிய சூட்சுமப் பொருள்; இந்த நுண்பொருளிலிருந்தே இந்தப் பெரும் அத்திமரம் வளர்ந்து நிற்கிறது.

சிரத்தை கொள், அன்பு மகனே. அந்த நுண்ணிய சூட்சுமப் பொருளே இவையனைத்தின் ஆத்மா. அது சத்தியம். அது ஆத்மா. நீயே அது, சுவேதகேது.

மேலும் விளக்குங்கள் ஐயா.

அப்படியே ஆகட்டும் அன்பு மகனே – என்றார் அவர்.

இந்த உபநிஷத அத்தியாயம் முழுவதையும் முன்பு நான் தமிழாக்கம் செய்திருக்கிறேன். இங்கே வாசிக்கலாம்.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

உத்தப்புரம் சாதிப் பிரச்சினை தீர்வு – ஒரு நேரடி அனுபவம்

மதுரை மாவட்டம் எழுமலைக்கு அருகில் உள்ளது உத்தப்புரம் கிராமம். எழுமலை இதன் தாய்கிராமம். 18 பட்டி கிராமங்களுக்கும் எழுமலை தாய்கிராமம்.

உத்தப்புரத்தில் பிள்ளைமார்கள், அரிசனங்கள், முத்தரையர்கள் மற்றும் சில ஜாதியினரும் வசித்து வருகிறார்கள். உத்தப்புரம் கிராமத்தில் அருள்மிகு முத்தாலம்மன் – மாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள அரசமரம் யாருக்குச் சொந்தம் என்பதில் இருதரப்பினருக்கும் இடையே நீண்டகாலமாகத் தகராறு இருந்தது.

இது குறித்து 1989, 1990-ல் ஏற்பட்ட மோதல் மற்றும் கலவரத்தில் 6 பேர் பலியாயினர். பின்னர் எழுமலையில் வைத்து இரு சமுதாயப் பெரியோர்களும் முன்னாள் MLA தவமணித்தேவர் (ஃபார்வர்டு பிளாக்) எழுமலை பண்ணையார் S.A.நடராஜன் மற்றும் ஊர்ப் பெரியோர்கள் முன்னிலையில் வைத்து அமைதியான சூழ்நிலை நிலவப்  பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இரு சமுதாயத்தினரிடையே சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது.

இரு தரப்பிலும் வன்முறை, கொள்ளை, தகராறு ஏற்படாத வண்ணம் பாதுகாப்புடன் வாழத்  ‘தடுப்புச்சுவர்’ இருதரப்பினர் சம்மதத்துடன் கட்டப்பட்டது. அரசமரம், முத்தாலம்மன் கோயில் பிள்ளைமார்களுக்கு உரியது என்பது அனைவருக்கும் தெரியும்.

இதற்கு இருதரப்பிலும் கடுமையான விரதம் இருந்து அரசமர வழிபாடு, முத்தாலம்மன் கோயில் வழிபாடு சம்பந்தமாகச் ‘சத்தியம்’ செய்து கொண்டனர். அதிலிருந்து இருதரப்பினருக்கும் தண்ணீர், உணவு என்று எந்தப் புழக்கமும் கிடையாது.

இந்த நிலையில் தான் தாழ்த்தப்பட்டவர்களால் ஓரங்கட்டப்பட்ட மா.கம்யூ கட்சி தங்களை அரசியல் ரீதியாக வளர்த்துக்கொள்வதற்காக உத்தப்புரம் பிரச்சினையை ஊதிப்பெரிதாக்கினர்.

இரு தரப்பினரும் ஒத்துக்கொண்டு கட்டிய தடுப்புச் சுவருக்கு ‘தீண்டாமைச் சுவர்’ என்று பெயரிட்டு, ‘இதில் மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளது, இதில் உயிர்பலி உண்டாகும், அரிசனங்களை மேல்சாதிப் பிள்ளைமார் நசுக்குகிறார்கள்’ என்று பேசி அமைதியைக் குலைத்தனர்.அமைதியை விரும்பாத சில ஆங்கிலப் பத்திரிகைகள், மீடியாக்களும் முயற்சி செய்தன.

‘தீண்டாமைச் சுவர்’ என்று பெயரிடப்பட்ட சுவரை இடிக்க வேண்டும் என்று கம்யூ. பிரகாஷ் காரத் டெல்லியிருந்து உத்தப்புரம் வந்தார். உத்தப்புரம் வந்தவர் அரிசன மக்கள் வாழும் பகுதி மக்களை சந்தித்துவிட்டு பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்த யாரையும் சந்தித்துப் பேசாதது மா.கம்யூ கட்சி இப்பிரச்சினையில் குளிர்காய நினைத்ததை தெள்ளத் தெளிவாக்கியது.

முந்தைய திமுக அரசால் தீண்டாமைச் சுவர் என்று பெயரிடப்பட்ட சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது.  இந்த அரசு தங்களுக்கு விரோதமாக செயல்படுவதாகக் கண்டித்து ‘பிள்ளைமார்கள்’ ஊரைக் காலி செய்து விட்டுக் குடும்பத்துடன் ‘தாழையூத்து’ மலையில் சென்று தஞ்சமடைந்தனர். ரேசன் கார்டுகளை அரசிடம் ஒப்படைத்தனர். பின்னர் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி. சண்முகம் பிள்ளைமார் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி ஊருக்கு அழைத்து வந்தார். திமுக அரசு கொடுத்த உறுதிமொழியை கிடப்பில் போட்டது. உத்தப்புரத்தை ‘உத்தமபுரமாக’ மாறும் என்று வாய்ஜாலம் காட்டி கருணாநிதி சட்டசபையில் பேசினார்.

உத்தப்புரத்திற்குப் பார்வையிட வந்த பாஜ தலைவர்கள், ஃபார்வர்டு பிளாக், இ.கம்யூ. தா.பாண்டியன், இந்து இயக்க பிரமுகர்கள் இருதரப்பினரையும் சந்தித்துக்  குறைகளை கேட்டனர்.

இந்நிலையில் பிள்ளைமார்கள் முத்தாலம்மன் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடத்திட முயற்சி செய்கையில் அரிசனங்கள் எதிர்ப்புத் தெரிவிக்க,  கோயிலுக்கு ஜனவரியில் பூட்டு போடப்பட்டது. 144 தடை உத்தரவும் அமுல்படுத்தப்பட்டது.

பின்னர் கோயில் பூட்டப்பட்ட  நிலையில் மா.கம்யூ, தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆலயப்பிரவேசம் செய்யப் போவதாக அறிவித்து ஒரு அரசியல் கூத்து நடத்தி நாடகமாடினர். பின்னர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மாதம் இம்மானுவேல் சேகரன் குருபூஜைக்கு அரிசனப் பகுதி இளைஞர்கள் பேனர் வைக்கவும் கல்வீச்சு சம்பவம் நடந்தது.

இதில் இரு தரப்பிலும் பெண்கள், இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தவர்கள் மதுரையில் தங்கிக் கையெழுத்திட்டனர்.

அப்போது திரு.கே.ஆதிமூலம் (ஆவின் முன்னாள் பொது மேலாளர்) அவர்கள் உத்தப்புரம் அரிசன மக்களுக்கு உதவிகள் செய்தார். இவருடைய தந்தைக்கு உத்தப்புரத்தில் உறவுகள் உண்டு. நல்லதும் செய்திருக்கிறார். அவர் உத்தப்புரம் அரிசன தலைவர்கள் திரு.கே.பொன்னையா, திரு.சங்கரலிங்கம் போன்றவர்களிடம் எத்தனை நாளைக்கு இப்படி கலவரம், கோர்ட், கேஸ் என அலையப்போறீங்க, தாய்மார்கள் இவ்வளவு கஷ்டப்படணுமா? நிம்மதியாக வாழ வேணாமா? என்று பேசி ஏதாவது சமாதானமா வாழ நீங்க ஒத்துழைச்சா என்ன? என்று கேட்டுள்ளார். அவர்களும் இதைத்தான் நாங்களும் விரும்புகிறோம் என்ற போது திரு.ஆதிமூலம் அரசியல் கட்சி (கம்யூ.கட்சி) தலையீடு இல்லாமல் இருந்தால் எனது நண்பர் – சின்மயா சோமசுந்தரம் (வி.எச்.பி – மதுரை மாவட்ட பொறுப்பாளர்) இவர் மூலம் பிள்ளைமார் தரப்பில் பேசி சமாதான முயற்சியில் ஈடுபடலாம் என்றுள்ளார். திரு.பொன்னையா மா.கம்யூ கட்சியினரிடம் பேசியபோது கட்சி தலையிடாது. சமாதான முயற்சிக்கு முயற்சி செய்யுங்கள் என்று சொல்லி உள்ளனர்.

K.ஆதிமூலம், சின்மயா சோமசுந்தரம் ஆகிய இருவரும் உத்தப்புரம் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண முயற்சிக்கிறார்கள் என்பதை மாவட்ட S.P, A.D.S.P. அறிந்து இவர்களின் முயற்சிக்கு உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர்.

மாவட்டக் காவல்துறை பிள்ளை, அரிசன சமூகத் தலைவர்களை அழைத்துப் பேசி சில சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது. அரிசனங்களிடம் எங்களுக்குத் தீண்டாமை என்பது கிடையாது. ஒற்றுமையாகத்தான் வாழ்கிறோம். அரிசனங்கள் சாமி தரிசனம் செய்வதை வரவேற்கிறோம். மேலும் கோயிலுக்கு பட்டா கொடுத்தல், சாக்கடை வசதி, பஸ் நிழற் குடை போன்றவை சம்பந்தமாகவும் உடன்படிக்கை கையெழுத்து ஆனது.

பின்னர் திரு.ஆதிமூலம், திரு சின்மயா சோமசுந்தரம் ஆகியோர் 8-11-2011 அன்று வந்து எழுமலை பண்ணையார் S.A.நடராஜதேவர், பொன்.கருணாநிதி ஆகியோரிடம் கலந்து பேசி உத்தப்புரத்தில் அமைதி திரும்பிட நீங்கள் எங்களோடு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது, அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

9-ம் தேதி இரவு உத்தப்புரம் பிள்ளைமார் தரப்பினரைச் சந்திக்கச் சென்ற திரு.சின்மயா சோமசுந்தரம், திரு.ஆதிமூலம், திரு பொன்.கருணாநிதி, இராம.ரவிக்குமார் (இந்து முன்னணியின் முக்கியப் பிரமுகர், இந்து முன்னணியின் முன்னாள் முழு நேர ஊழியர்) உத்தப்புரம் பிரச்சினை, ஏற்படும் கஷ்டம், நிம்மதியற்ற வாழ்க்கை, காலச்சூழ்நிலை போன்ற பல விஷயங்களை எடுத்துக் கூறிய போது நமக்குள் தீண்டாமை இல்லை என்பதை வெளிக்காட்டும் விதமாக அரிசனங்கள் சாமி தரிசனம் செய்ய உதவ வேண்டும். நாம் விட்டுக் கொடுத்து நேசபாசத்தை வளர்க்கப் பாடுபட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். சால்வை, துண்டு அணிவித்து கௌரவித்து அனுப்பினர். பிள்ளைமார் தரப்பு இளைஞர்கள் பெரும்பாலும் ஒத்துழைப்புக் கொடுத்தனர்.

10-11-2011 அன்று காலையிலேயே வந்துவிட்ட திருஆதிமூலம், சின்மயா, பண்ணையார் நடராசன், பொன்.கருணாநிதி, A.D.S.P. மயில்வாகனன் பிள்ளைமார் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் 12 மணி அளவில் அரசமரத்தில் ஆந்தை கத்தியது. இது நல்ல சகுனம். முத்தாலம்மன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்றனர் பெரியோர்கள்.

மதியம் 3 மணிக்கு ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்தலாம் என முடிவானவுடன் மாவட்ட S.P. அஸ்ராகர்க், உத்தப்புரம் வந்தார்.

முத்தாலம்மன் கோயில் முன்பாக அரிசனங்களை வரவேற்க எழுமலை பண்ணையார் S.A.நடராசன், பொன்.கருணாநிதி, திருசேதுபிள்ளை, ராஜாமணிபிள்ளை மற்றும் இளைஞர்கள் பலரும் தயாராக இருக்க, திரு.ஆதிமூலம், சின்மயா, திரு.இராம.இரவிக்குமார், திரு.மு.பொன்னையா, சங்கரலிங்கம் உட்பட 11 ஆண்கள், 4 பெண்கள் பூஜை பொருட்களுடன் முத்தாலம்மன் ஆலயத்திற்கு ஊர்வலமாக வந்தனர். சரியாக 3.15க்கு முத்தாலம்மன் கோயில் முன்பாக வரவேற்புக் கொடுத்து S.A.நடராஜன், பொன்.கருணாநிதி ஆகியோர் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

முத்தாலம்மன் கோயில் பூசாரி பாண்டிமுருகன் சிறப்புப் பூஜை, தீபாராதனை காட்டினார். இந்தத் தீபாராதனை மரியாதை அரிசன மக்களுக்கு அளிக்கப்பட்டது. சாமி தரிசனம் முடித்து வெளிவந்தவர்கள் S.P, A.D.S.P. ஆகியோரைக் கௌரவித்து நன்றி தெரிவித்தனர்.

ஆலய நுழைவு நாளன்று உத்தப்புரம் வந்திருந்த திரு.அண்ணாதுரை (கம்யூ எம்எல்ஏ) தங்கராஜ் (மா.செயலர்) பொன்னுதாய் (மாதர்சங்கம்) மற்றும் சிலர் ஆலய வழிபாட்டில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பொன்னையா இரு சமுதாயத்தினரும் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்ப்பு ஏற்பட்டது. கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தபோது பெருவாரியான வரவேற்புக்  கொடுத்தனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. இனிவரும் காலங்களில் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக வாழ்வோம். முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடத்திட முழு ஒத்துழைப்புக் கொடுப்போம். அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ இரு சமுதாய மக்களும் வாழப்  பாடுபடுவோம் என்றார். மாவட்ட S.P. அஸ்ராகர்க் கூறுகையில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த ஆலய நுழைவுப் பிரச்சினையின் தீர்வுக்கு  இரு சமூகப்  பெரியோர்கள் அளித்த ஒத்துழைப்பே காரணம். தற்போது உத்தப்புரத்தில் முழு அமைதியும், மகிழ்ச்சியும் நிலவுகிறது. இது மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்றார்.

பண்ணையார் S.P.நடராஜன் கூறியதாவது, ஊரில் அமைதி ஏற்பட வேண்டும், தீண்டாமையை நாங்கள் ஆதரிக்கவில்லை என்பதன் வெளிப்பாடாக எங்களின் நேசபாசத்தை வெளிப்படுத்தி உள்ளோம். இதற்கான முயற்சியில் வெற்றிபெற்று உள்ளோம். தாழ்த்தப்பட்ட மக்களைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்றோம். தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம். ‘இது முடிவல்ல, முடிவின் தொடக்கம்’ என்றார்.

‘இந்த ஊர் கலவரம் காரணமாக இரு தரப்பிலும் 2600 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக இரு தரப்பிலும் பேசி கோர்ட் மூலம் சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வழக்குகள் வாபஸ் பெறப்படும். உத்தப்புரம் மக்களின் பாதுகாப்பு, நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் போலீசாரின் செயல்பாடுகள் இருக்கும்’ என்றார் எஸ்பி.

எது எப்படியோ! 70 ஆண்டுகளாகத் தீராத பிரச்சினை அரசியல் கட்சிகளின் தலையீடு இல்லாதிருந்ததாலும்,அரசு நடுநிலையோடு செயல்பட்டதாலும் இந்து ஆன்மீகப் பெரியோர்கள், அமைதியை விரும்பும் இளைஞர்களாலும் உத்தப்புரம் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டுள்ளது. கட்சிகளைக் கடந்து உறவுகளே வென்றது. அந்த முத்தாலம்மன் அருளாலும் இது நடந்தது.

தமிழக அரசு இரு தரப்பு மக்களுக்கும் பாரபட்சமின்றி உரிய நிவாரணம் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும். மாவட்ட காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மாவட்ட வருவாய்த்துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவை பூரண ஒத்துழைப்பு நல்கிட முதலமைச்சர் உத்தரவிட வேண்டும். அப்படி நடந்தால் உத்தப்புரம் உண்மையில் உத்தமபுரமாக மாறி ஒரு முன்மாதிரியான கிராமமாக மாறிவிடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

குறிப்பு :
18 பட்டி கிராம மக்களால் வழிபாடு நடத்தப்படும் முத்தாலம்மன் சாமி தாய் கிராமமான எழுமலையில் திருவிழா நடத்தப்படும்போது விழாக்கோலம் பூண்டிருக்கும்.

‘முத்தாலம்மன்’ பறையர்களின் தெய்வம்.

வழிபாட்டு உரிமை – கம்பளத்து நாயக்கர்

மற்ற ஜாதியினர் திருவிழா கொண்டாடுவது எழுமலையில் இன்றும் தொடர்கிறது.

திருவிழா கொண்டாட ‘சாமி சாட்டுதல்’ (நாள் குறித்து சொல்வது) பறையர் சமுதாயத்தை சார்ந்த பெரியோர்கள். முதல் மரியாதை பெரிய வீட்டு நாயக்கருக்கு.

உத்தப்புரம் பஞ்சாயத்து தலைவராக பதவியேற்ற ஆடிட்டர் முருகேசன் அவர்களின் மனைவி திருமதி.கலாவள்ளி பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அரிசன தலைவர் திரு.பொன்னையா அவருக்கு ஆடிட்டர் முருகேசன், எஸ்ஏ.நடராஜன், பொன்.கருணாநிதி, பெரியவீட்டு நாயக்கர் மற்றும் ஊர் பெரியோர்கள் சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினர்.

திருமதி கலாவள்ளி அவர்கள் விபத்தில் சிக்கி கோவையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தேவையான பி பாசிடிவ் ரத்தவகை கிடைத்திட எஸ்பி அஸ்ராகர்க் ஏற்பாடு செய்தார். அரிசன தலைவர்கள் சங்கரலிங்கம், பொன்னையா ஆகியோர் நலம் விசாரிக்க கோவை சென்று வந்தனர்.

அரசு சமாதான முயற்சிக்கு பாடுபட்ட பெரியோர்களுக்கு சமூக நல்லிணக்க விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும்.