பாரத தேசத்தில் ஜனநாயகம் ஆரோக்கியமாக இருக்கிறதா?

“ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர், வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?” என்று மனம் வாடிப் பாடிவைத்தான் பாரதி. பல ஆண்டுகள் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நமது புண்ணிய பாரத தேசத்தை மீட்டெடுத்து இங்கு சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்திய கையோடு குடியரசாகவும் உருவாக்கிய பெருமை நம்மை வழிநடத்திய மாபெரும் தலைவர்களையே சேரும்.

There are several reasons to be anxious and some are directly related to pregnancy. You get an allergic reaction to it or have any adverse agitato buy prednisolone 5mg reactions to it or. I loved him very much and i waited for him to love me.

It is used in combination with other medications to treat the symptoms of erectile dysfunction. Lactation Norden metformin do you need a prescription complaint management - a guide to patient-centred, evidence-based management of lactation complaints. If you are on this site please use the navigation on the left side of the page to see more information, please also look for the 'add to cart' button.

The second is if you or your partner ever had a sexually transmitted disease or infection. The price of tamoxifen citrate in the Kunnamkulam us is also different from the price in canada. The generic drug works by increasing the blood flow into the penile tissues.

உலக நாடுகள் பலவும் நாகரிகத்திலும், பண்பாட்டிலும், வரலாற்றிலும் பின் தங்கியிருந்த காலத்தில் நமது பெருமைக்குரிய பாரத தேசம் உலகத்துக்கே வழிகாட்டக்கூடிய ஆற்றலும் அதற்குரிய பின்புலமும் அமைந்திருந்தது என்பதை எவராலும் மறுக்கமுடியாது. நமது பெருமைக்குரிய இதிகாசங்களும் காப்பியங்களும் உலக இலக்கிய வானில் காணமுடியாத வைரங்களாக இன்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. நமது மொழிகள் உலக மொழிகளிடையே மிக உயர்ந்த இடத்தைப் பெற்றிருக்கின்றன. இப்படிப்பட்ட நாம் 68 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயரிடமிருந்து சுயாட்சி உரிமையைப் பெற்ற காலத்தில் எப்படி இருந்தோம் என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும். வில்வண்டியில் பூட்டப்பட்ட குதிரையைப் போல கம்பீரமாக ஓடிக்கொண்டிருந்த இளங் காளைகளை, செக்கில் பூட்டி சுற்றவிட்டதைப் போல நாமும் இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அடிமைகளாக செக்கிழுத்துக் கொண்டிருந்திருக்கிறோம்.

gandhi2நமது பாரம்பரியக் கல்வி முறை அழித்தொழிக்கப்பட்டுவிட்டது. ஆங்கிலேயர்களுக்குச் சேவகம் செய்யக் கூடிய முறையில் நமக்கு அள்ளித் தரவேண்டிய பாரம்பரியக் கல்வியைத் தங்கள் தேவைக்கேற்றாற்போல கிள்ளித் தந்து குதிரைக்கு சேணம் பூட்டியதைப் போல கிணற்றுத் தவளைகளாக ஆக்கி வைத்தார்கள். இந்தியாவில் பண்டைய அறிஞர்கள், மேதைகள் இவர்கள் எல்லாம் கற்ற கல்வி நமக்குக் கிடைக்காமல் போய், அயல் நாட்டார் கற்ற கல்வியைக் கற்று அவர்களோடு போட்டிபோட்டு, அதிலும் நம்மவர்கள் தலைசிறந்து விளங்கியிருக்கிறார்கள். பாணினியும், பாஸ்கராச்சார்யாவும், அகத்தியரும் நமக்குக் கொடுத்ததைப் போல சுயமான அறிவினைக் கற்க முடியாமல், அன்னியர் கொடுத்த கட்டுச்சோற்றை உண்டு வாழும் நிலைமைக்குத் தள்ளப்பட்டோம்.

சுதந்திரம் கிடைத்த அன்று இந்தியாவே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தது. இதற்காகத் தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் சமர்ப்பணம் செய்த தியாகச் செம்மல்கள் பலர் மாண்டுபோயிருந்தாலும், மீதம் இருந்தவர்கள் இங்கு பாலும் தேனும் ஓடப்போகிறது. இராம ராஜ்யம் தழைக்கப்போகிறது. அதர்மம் ஒழிந்து நேர்மையும், நியாயமும், நீதியும் நிலைநாட்டப்படவிருக்கிறது என்று மனப்பூர்வமாக நம்பினார்கள். நாம் நாட்டுக்காக இழந்ததோ, அல்லது செய்த தியாகங்களோ வீண்போகாது என்ற நம்பிக்கையில் வாழ்ந்து மடிந்தும் போனார்கள். ஆனால் நாம் சுதந்திரம் அடைந்த அந்த 1947 ஆகஸ்ட் 15இல் தேசப்பிதா என்று மக்கள் போற்றி மகிழ்ந்த மகாத்மா வங்கத்தில் நவகாளியில் நிகழ்ந்த கொடுஞ்செயல்களுக்கு மத்தியில் சமாதானம் பேசிக் கொண்டிருந்தார். அவருக்குத் தெரியும், ஒரு இரவில் இந்தியாவுக்கு விடிவு காலம் வந்துவிடாது; அது ஆயிரம் காலத்துப் பயிர் என்பதால் அதற்காக மீண்டும் சில நூறாண்டுகள் மக்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று.

இரவில் ஊர் அடங்கிப் போய் அமைதி நிலவுகிறது. பகலில் ‘ஹோ’ ‘ஹோ’ என்று எள் விழ இடமின்றி நாட்டின் நகர்ப்புறங்களில் மக்கள் அலைமோதிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அலைந்தவர்கள் இரவில் என்ன ஆனார்கள். அப்படித்தான் சுதந்திரப் போரின் கர்ஜனை ஓய்ந்து முடிந்ததும் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தவர்கள் போக ஏனையோர் தங்களுக்கு இந்த சுதந்திரத்தால் என்ன ஆதாயம் கிடைக்குமென்பதில் ஆர்வத்துடன் அவரவர்க்கு ஏற்ற துறைகளை நாடி அதில் ஈடுபடலாயினர். இதுதான் உலகம். காலமெல்லாம் உயிரைக் கொடுத்துத் தம் உமிழ்நீரால் மண்ணைக் கரைத்து புற்றை உருவாக்கி கோடிக்கணக்கில் கரையான் வாழ்ந்த அந்த புற்றில் நல்ல பாம்பு வந்து குடியேறுவதைப் போல சுயநலவாதிகளும், பேராசைக்காரர்களும், மக்கள் நலனைப் பேணாதவர்களும் இந்திய மக்களை வழிநடத்திச் செல்ல நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வந்து சேர்ந்துவிட்டனர். இவர்களில் யாரை நம்புவது, யாரை நிராகரிப்பது? மக்களுக்குத் தெளிவு ஏற்பட வேண்டாமா?

காலவோட்டத்தில் வேறெந்த துறைகளிலும் வல்லவர்கள் முன்னேறிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், அறிவியல் வளர்ச்சி எவருக்கும் நிகராக வானோங்கி வளர்ந்து கொண்டிருக்கையில், நாம் சுதந்திரம் அடைந்தபோது நமக்கு வெகு முன்னே வளர்ச்சி அடைந்து உயர்நிலையில் இருந்த நாடுகளுக்கு இணையாகவோ அல்லது அவர்களுக்கும் மேலாகவோ நாம் வளர்ந்து கொண்டிருந்தும் ஒரே ஒரு குறை அரசியல் ரீதியாக நாம் ஏனைய நாடுகளைப் போல, அதாவது ஜனநாயகம் தழைத்து வளர்ந்த நாடுகளைப் போல அமைதியும் ஒற்றுமையும் நிலவிட, மக்களுக்கு நன்மைகள் செய்வதில் நானா நீயா என்று உண்மையில் பாடுபடுவதை விட்டு, அரசியலால் பிரிந்து, எதிரிகளாக நிலைபெற்று போர்க்களம் போல இந்த நாட்டில் தேர்தல்களை நடத்தும் நிலைமையைக் கண்டு ரத்தக் கண்ணீர் சிந்த வேண்டியிருக்கிறது.

ஜனநாயகத்தில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை, அது உள்ளாட்சித் துறைகளாகட்டும், மாநில அரசுக்காகட்டும், அல்லது மத்திய அரசுக்காகட்டும் அல்லது வேறு எந்த அமைப்புகளுக்காகட்டும் தேர்ந்தெடுத்து அனுப்புவது என்பது மரபு. அந்த மரபின்படி அந்தந்த துறைகளில் பணியாற்ற விரும்பும் கட்சிகளாகட்டும், தனி நபர்களாகட்டும் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்து சட்ட விதிமுறைகளின்படி மனுச்செய்து, தாங்கள் இன்ன தேர்தலில் இந்தப் பதவிக்காக போட்டியிடுகிறோம் என்பதை மக்களுக்கு விளக்கிச் சொல்லி, தாங்கள் செய்ததையும், செய்யப்போவதையும் விவரித்து வாக்குக் கேட்பது ஜனநாயக முறை. அதெல்லாம் சரியாகத்தான் நடக்கிறது. ஆனால் இந்த கட்டத்தைத் தாண்டி மக்கள் கரங்களிலிருந்து வாக்குச் சீட்டை பறித்துக் கொள்வதைத் தவிர மற்ற எல்லாவிதமான ஜகஜாலங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைக் கொடுப்பதற்கும், அதனை பெற்றுக் கொள்வதற்கும் சட்டதிட்டங்கள் இருக்கின்றன. அவற்றை மதித்து கொடுப்பவர்களும் வாங்குபவர்களும் ஒளிவு மறைவில்லாமல் நடந்து கொண்டால் பிரச்சனை இல்லை. ஆனால் நம் நாட்டுத் தேர்தல்களில் சுயநலக் காரர்கள் தங்கள் காரியங்களை யார் மூலம் சாதிக்கலாம், யார் இருந்தால் தங்கள் குறிக்கோள் நிறைவேறும் என்பதை மனதில் கொண்டு நன்கொடைகளை நேராகவும், மறைமுகமாகவும், கருப்புப் பணத்தை அள்ளிக் கொடுத்து, யாரை வீழ்த்த வேண்டும், யாரைக் கொண்டு வரவேண்டுமென்றெல்லாம் மனதில் கொண்டு நடந்து கொள்கிறார்கள். இதன் மூலம் ஜனநாயகம் அதற்கென்று போடப்பட்ட தண்டவாளத்தில் போகாமல், தரை இறங்கி குறுக்கு வழியில் உருண்டு மண்ணில் புதுயுண்டு போகும் அபாயம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

democracy1

இந்த நிலை மாற வேண்டாமா? நம் மனசாட்சிப்படி யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ, அவர்களுக்கு வாக்களிக்க சுதந்திரம் இருந்தும் அது பறிக்கப்படுகின்றதே. நம் உரிமை விலைக்கு வாங்கப்படுகிறதே. அச்சுறுத்தலும், ஜாதி, மத, இன, மொழி போன்ற பல பிரிவினைகளைப் பயன்படுத்தி மக்களின் வாக்குரிமை பிடுங்கப்படுகிறதே. இவைகளெல்லாம் மாற வேண்டாமா? ஊழலை ஒழிப்போம் என்பது அனைவருமே ஒருமித்த குரலில் முழக்கமிடுகிறார்கள். ஆனால் அவர்கள் அத்தனை பேருமே ஊழலை ஒழிக்க மனப்பூர்வமாகப் பாடுபடுவார்களா? நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் கூட கட்சி அமைத்துக் கொண்டு, காலம் காலமாக வளர்ந்து நிற்கும் ஆலமரத்துக்கும் அரச மரத்துக்கும் சவால் விட்டுக் கொண்டிருப்பது எப்படி? எந்த வகையிலும் வருமானம் வர வாய்ப்பில்லாத சிலர் ஒன்றுகூடி கட்சி அமைப்பதும், அவர்களிடம் கோடி கோடியாகப் பணம் கொட்டிக் கிடப்பதும் எப்படி? தெரியவில்லையே.

நமது தேர்தல் முறைகளில் மாற்றம் கொண்டு வருவது அப்புறம் இருக்கட்டும். நமது மக்கள் மனங்களில், அரசியல் கட்சியினரின் மனங்களில், பதவிக்கென்று ஆலாய் பறக்கும் சுயநலமிகள் மனதிலும், இவர்களது ஆதாயங்களைக் காட்டிலும், இந்த நாட்டின் எதிர்காலமும், மக்களின் வளமும், செல்வமும், பெருமையும் பெரிது, மிகப் பெரிது என்ற எண்ணத்தை முதலில் உருவாக்க வேண்டும். இந்த மாற்றத்தை எந்த சட்டத்தாலும் கொண்டுவர முடியாது. மனமாற்றம் ஒன்றுதான் இதற்கு வழி. இந்த மனமாற்றத்தை மக்களிடம், கட்சிகளிடம், அரசியல் வாதிகளிடம் கொண்டு வந்து நிலைபெறச் செய்யும் வல்லமை யாருக்கு இருக்கிறது? இனிதான் ஒருவர் அதற்காகப் பிறந்து வரவேண்டுமென்றால், அப்படியொருவர் வந்து இந்த மண்ணில் பிறக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் முறையிடுவோம். அப்போதாவது நாம் விரும்பும் இராமராஜ்யம் நிலைபெறுமா என்று பார்ப்போம். வாழ்க இந்திய ஜனநாயகம்!

அரசியல் கட்சிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்

elec3அரசியல் கட்சிகள் சில திட்டமிட்டே தொடங்கப்படுகின்றன. ஏதாவது ஒரு துறையில் புகழ்பெற்று மேலும் வளர்ச்சி பெற அந்தத் துறையில் வாய்ப்புகள் இல்லையென்றால், அப்படிப்பட்ட நபர்கள் தேர்ந்தெடுப்பது அரசியல். அதிலும் முந்தைய துறையில் கணிசமான செல்வாக்கு ஏற்பட்டு இவரைப் பின்பற்றுவோர் அதிகம் இருந்தால் நிச்சயம் ஒரு புது கட்சி துவங்கிவிடும். சில நேரங்களில் ஒரு கட்சியில் இருந்து கொண்டே அங்கு மேலும் உயர் பதவிக்கு வழியில்லாத இரண்டாம் தர அல்லது மூன்றாம் தர தலைவர்கள் தாங்களே தலைவர்களாக ஆகவேண்டுமென்ற எண்ணத்தில் ஏதாவதொரு சாக்கை வைத்துக் கொண்டு புதிய கட்சி துவங்குவார்கள். இருக்கும் கட்சிகள் எதிலும் விருப்பமோ, ஆர்வமோ நம்பிக்கையோ இல்லாமல், தனது சொந்த செல்வாக்கினால் பின்பற்ற சிலர் கிடைத்து விட்டால் புதிய கட்சிகள் துவங்கப்படுகின்றன. இப்போதெல்லாம் தேர்தல் நெருங்கும் சமயத்தில் சாதி, மத, இன, மொழி அடிப்படையில் சிறு சிறு கட்சிகள் தோன்றி பெரிய கட்சிகளோடு தேர்தல் பேரம் பேசி அதில் கிடைப்பதைப் பெற்றுக்கொண்டு அத்தோடு ஒதுங்கிவிடும் கட்சிகளும் உண்டு.

anna01டெல்லியில் அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கியபோது இப்போது இருக்கும் அரசியல் கட்சிகளிடம் நம்பிக்கை இழந்த, ஊழலைக் கண்டு மலைத்துப் போய், இவைகளை இந்த நாட்டைவிட்டு ஒழிக்கவே முடியாது எனும் நிலையில் செயலற்றுப் போய் இருந்த மக்கள் இந்த போராட்டத்தைக் கண்டு நம்பிக்கை அடைந்தார்கள். இதோ ஒரு காந்தியத் தொண்டர், இவர் உண்மையாகவே ஊழலுக்கு எதிராகக் குரல் எழுப்புபவர், இவரை ஊக்கப்படுத்தினால் ஓரளவுக்காவது ஊழல் தடுக்கப்படும் என்று நடுத்தர, ஏழை, எளிய, ஊழைப்பாளி மக்கள், மாணவர்கள் நம்பினர். அதன் பயனாய் மக்கட் கூட்டம் பெருமளவில் அவரைப் பின்பற்றத் தொடங்கியது. அவரும் தன்னைப் பின்பற்றும் தொண்டர்களிடம் தன்னால் போராட முடியும், தனக்கு மன வலிமையோடு உடல் வலிமையும் இருக்கிறது என்பதைக் காட்ட ஊர்வலம் நடத்தி அதில் ஓடவும் செய்து காட்டினார். எப்போதுமே இவரைப் போன்ற ஒருவருக்கு செல்வாக்குப் பெருகுகிறது என்றதும், எதிர்காலத்தில் நல்ல அறுவடை கிடைக்கும் என்ற எண்ணத்தில் பல சுயநலப் பேர்வழிகள் இவரோடு கைகோத்துக் கொள்வது எப்போதும் நடப்பதுதான். அதுபோலத்தான் இவர் போராட்டங்களில் பங்குகொண்ட கேஜ்ரிவால் அண்ணாவோடு இருந்து பின்னர் தனிக்கடை வைத்து வியாபாரம் தொடங்கினார். அரசியல் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கிய நேரத்தில்தான் டெல்லி தேர்தல் வந்தது. தேர்தல் களத்தில் குதித்துத்தான் பார்ப்போம், கிடைத்ததைப் பீராய்ந்து கொண்டு முடிந்தால் அரசியல் இல்லையேல் இருக்கவே இருக்கிறது பொதுத் தொண்டு எனும் பெயரில் மீண்டும் போராட்டங்கள் என்று ஆம் ஆத்மி எனும் பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கினார், டெல்லி தேர்தலிலும் போட்டியிட்டார்.

anna02தேர்தல் தொடங்கிய நேரத்தில் டெல்லியில் பாஜகவா ? காங்கிரசா ? என்றுதான் தொடங்கியது. போகப்போக மூன்றாவதாக வந்து கொண்டிருந்த ஆம் ஆத்மி கட்சி திடீரென்று முன்னேறத் தொடங்கியது. ஊடகங்கள் அனைத்துமே ஒருமுகமாக ஆம் ஆத்மி இந்த தேர்தலில் ஒரு அதிசயத்தை நிகழ்த்திக் காட்டப்போகிறது என்று ஆரூடம் சொல்லின. மற்ற கட்சியினர் எகத்தாளமாக சிரித்து ஆம் ஆத்மியாவது ஆட்சிக்கு வருவதாவது, இதெல்லாம் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் என்று அதை பொருட்படுத்தாமல் ஒதுக்கினர். ஆனால் அந்த அதிசயம் நடந்தது. ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களைப் பெற்று இரண்டாமிடம் பெற்றுவிட்டது. பாஜகவுக்கும் பெரும்பான்மை இல்லை. பொதுவாக இதுபோன்ற நேரங்களில் அரசியல் கட்சிகள் என்ன செய்வார்கள், குதிரை பேரம் நடத்துவார்கள். அல்லது மற்ற கட்சிகளிலிருந்து ஆட்களை இழுத்துக் கொள்வார்கள். எப்படியாவது ஆட்சி அமைப்பதில் ஊக்கம் காட்டுவார்கள். டெல்லி அரசியலில் இப்போது ஒரு அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சியா எனக்கு வேண்டாம், உனக்கு வேண்டாம் என்று சொல்கிறார்கள். அதற்கும் காரணம் இருக்கிறது. திருவிளையாடல் திரைப்படத்தில் சிவபெருமான் தருமியிடம் கேள்விகளை நீ கேட்கிறாயா, நான் கேட்கட்டுமா என்பார், தருமி வேண்டாம் வேண்டாம் எனக்குக் கேட்கத்தான் தெரியும், நானே கேட்கிறேன் என்பார். அதைப்போல அரவிந்த் கேஜ்ரிவால் எதிரணியில் இருந்து கேள்விதான் கேட்பேன், ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டால் தான் சுட்டிக் காட்டிய தவறுகளைத் திருத்தவும், ஊழல் இல்லாமல் ஆட்சி புரியவும் இப்போது இருக்கின்ற அதிகார அமைப்பை வைத்துக் கொண்டு நடத்திக் காட்ட முடியுமா என்கிற அச்சம் அவருக்கு இருப்பதால் ஆட்சி செய்ய ஒப்பவில்லை.

இந்த சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் மற்ற நாடுகளில் எப்படித் தோன்றின, எப்படி வளர்ச்சியடைந்தன எனும் விஷயத்தையும் சற்று பார்க்கலாமல்லவா? கி.பி. 1600க்கு முன்பு வரை இப்போது இருப்பதைப் போன்ற அரசியல் அமைப்புகள், கட்சிகள் எல்லாம் இருக்கவில்லை. ஜனநாயகம் எனும் கருத்து கிரேக்கத்தில்தான் உதயமானது. அங்குகூட இப்போதைய அமைப்பில் கட்சிகள் எதுவும் அப்போதும் இல்லை. அங்கு செனட் எனும் அமைப்பும் அதில் பிரிவுகளும் இருந்திருக்கின்றன. சாதாரண பொது மக்களின் பிரதிநிதிகள் அதில் அங்கம் வகித்திருக்கின்றனர். செல்வச் சீமான்களுக்கும் பிரதிநிதிகள் அந்த அவையில் இருந்தனர். வணிகர்கள் பிரதிநிதிகளும் அங்கம் வகித்தனர். இப்படி வெவ்வேறு குழுவினராக இவர்கள் செயல்பட்டது ஓரளவுக்கு இப்போதைய ஆளும் கட்சி எதிர்கட்சி போலத்தான் அமைந்திருந்தது.

greekரோமாபுரியின் வீட்சிக்குப் பிறகு ஐரோப்பா அரசியல் கூச்சல் இல்லாமல் அமைதியாகத்தான் இருந்து வந்திருக்கிறது. ஆனால் 1678க்குப் பிறகு இங்கிலாந்தில் மறுபடி இந்த அரசியல் பிரிவுகள் தோன்றின. அது என்ன 1678ஆம் வருஷம் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? ஆம்! அந்த ஆண்டில் இங்கிலாந்தில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. ரோமன் கேதலிக்கர்கள் இரண்டாம் சார்லஸ் மன்னனைத் தீர்த்துக் கட்டிவிட்டு அவர்கள் பிரிவைச் சேர்ந்த சார்லசின் தம்பி டியூக் ஆப் யார்க் ஜேம்ஸை அரசனாக்க முயல்வதாக ஒரு பரபரப்புச் செய்தி உலவியது. அப்படி அவர்கள் எதையும் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லாதபோதும் இங்கிலாந்து பாராளுமன்றம் எல்லா ரோமன் கேதலிக்கர்களையும் ஒதுக்கிவிட்டு டியூக் ஆப் யார்க் ஜேம்சை அரசு கட்டிலுக்கு உரிமையில்லாதவராகவும் ஆக்கிவிட்டார்கள். அரசர் இரண்டாம் சார்லசுக்கோ இங்கிலாந்து நாடாளுமன்றம் அரச வம்சத்தாரின் விவகாரங்களில் தலையிடுவதாகக் கருதி நாடாளுமன்றத்தையே கலைத்து விட்டார். இப்போது ‘செகூலர்’ எனும் சொல் இந்திய அரசியலில் அதிகமாக ஈடுபடுகிறதல்லவா? பாஜக என்றால் மதவாதிகள், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், ஜனதாதள் போன்றவர்கள் செகூலரிஸ்ட் என்கின்றனர். மதமே அரசியலை நிர்ணயிப்பதற்கும், ஒரு மதத்தில் இருப்பவர்கள் அரசியலில் வருவதற்கும் வித்தியாசமில்லையா என்ன? நம் செகூலரிஸ்டுகள் ஒருவன் ‘இந்து’ என்று சொல்லிவிட்டாலே அவன் மதவாதி. ஆட்சிபுரிபவன் ஒரு அவன் மதப் பண்டிகையைக் கொண்டாடிவிட்டாலே அவன் மதவாதி. அப்படியில்லாமல் இந்து பண்டிகைகள் எல்லாவற்றையும் குறைசொல்லி எதிர்த்துவிட்டு, மற்றெல்லா மதங்களின் பண்டிகைகளிலும் கலந்து கொள்பவந்தான் செகூலரிஸ்ட். இந்த செகூலரிசம் ஏற்பட்டது இங்கிலாந்தில் நடந்ததுதான், இங்கு நடப்பது கேலிக்கூத்து.

இங்கிலாந்து மக்கள் இரு பிரிவாக பிரிந்தனர். ஒரு பிரிவு சார்லஸ் மன்னனுக்கு ஆதரவாகவும், மற்றொரு பிரிவு அவருக்கு எதிராகவும் திரும்பினர். புதிய நாடாளுமன்றத்தை உருவாக்கும்படி கேட்ட எதிர் பிரிவினர் ‘பெட்டிஷனர்கள்’ எனப்பட்டனர். மன்னனுடைய ஆதரவாளர்கள் அரசனுடைய கட்டளைக்கு எதிராக இருப்பவர்களை எதிர்த்ததனால் ‘எதிர்ப்பாளர்கள்’ “Abhorrers” என வழங்கினர். ராஜாவின் கட்டளையை மாற்ற நினைப்பவர்களை இவர்கள் எதிர்த்தார்கள். இப்படி இவர்கள் எதிரெதிராக இருவேறு கட்சியினராகப் பிரிந்தனர். பிறகு ராஜாவின் ஆதரவாளர்கள் “Tories” என வழங்கப்பட்டனர். இந்த சொல் புராட்டஸ்டண்ட் ஆட்சியை எதிர்க்கும் அயர்லாந்து ரோமன் கேதலிக்கர்களைக் குறிக்கும். இந்த பழைய பெயர்கள் புதிய சொற்களைத் தாங்கி வரத் தொடங்கின.

அரசருக்கு சர்வ வல்லமையுள்ள அதிகாரங்கள் இருக்கவேண்டுமென்பது ‘டோரிக்களின்’ விருப்பம். இன்னொரு கட்சியினருக்கு சாதாரண மக்களின் செல்வாக்கு ஆட்சியில் இருக்கவேண்டுமென்பது. இவ்விரண்டு கட்சிகளும்தான் இங்கிலாந்தில் இருவேறு கட்சிகளாக உருவெடுத்தன. இப்போது இங்கிலாந்தில் டோரி என்பது கன்சர்வேடிவ் கட்சியாகவும், மற்றொரு கட்சி லேபர் கட்சியாகவும் இருந்து வருகின்றன.

englishபின்னாளில் உருவான ஐக்கிய அமெர்க்க நாட்டிலும் இருவேறு கட்சிகள் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி என்று உருவாகி ஆளத் தொடங்கின. இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் இவ்விரு பெரிய கட்சிகள் தவிர ஓரிரண்டு குட்டிக் கட்சிகளும் உண்டு. ஆனால் இந்தியாவில் அப்படி இரு கட்சி என்பது இல்லாமல் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாக ஆகி பல்வேறு கட்சிகள், தேர்தல் என்று வந்தால் இந்த குட்டிக் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய கட்சியோடு கூட்டணி அமைத்து முற்போக்கு கூட்டணி, ஜனநாயகக் கூட்டணி என்றெல்லாம் பெயர் வைத்துக் கொண்டு தேர்தல் முடிந்தபின்னர் அவரவர் கட்சியை வைத்துக் கொண்டு போராட்டம், அது இது என்று காலத்தை நடத்துகின்றனர்.

எத்தனை கட்சிகள் இருக்கின்றனவோ, அத்தனை கட்சிகளுக்கும் கொள்கை என்று ஒரு விளக்கப் புத்தகம் உண்டு. அந்த கொள்கைகளைத்தான் அவர்கள் கடைபிடிக்கிறார்களா என்றெல்லாம் பூதக்கண்ணாடி வைத்துக் கொண்டு நாம் பார்க்கக் கூடாது. அந்தந்த சமயத்தில் எது சாத்தியமாகிறதோ, பெரிய கட்சிகள் செய்வதை ஏற்றுக் கொள்வதோ அல்லது எதிர்ப்பதோ அதெல்லாம் அவரவர் சேர்ந்த கூட்டணிகளைப் பொறுத்து அமையும். இந்த சமரசத்துக்குக் “கூட்டணி தர்மம்” என்று பெயர். பிரதமர் ஒரு திட்டத்தை முன்மொழிந்து செயல்படுவார். அவர் கூட்டணியில் இருக்கும் இன்னொரு கட்சிக்கு அதன் கொள்கைப் பிரகடனத்தின்படி ஏற்புடையது இல்லாவிட்டாலும் கூட்டணி தர்மத்துக்காக அதை ஏற்றுக் கொள்வர். இது பரஸ்பரம் இரு கட்சிக்கும் பொருந்தும்.elecyion1

இந்திய அரசியல் எங்கே போகிறது? மக்கள்தான் சிந்தித்து இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

திருச்சியில் மோதி திருவிழா – ஒரு நேரடி அனுபவம்

ரேந்திர மோடி தமிழகம் வருகிறார் என்ற செய்தி ஒரு மாதம் முன்பே அறிந்திருந்தாலும் நிகழ்ச்சிக்கு நான்கு நாட்கள் முன்புதான் நாமும் சென்று பார்ப்போமே என்று முடிவெடுத்தேன். பாஜக நிர்வாகி ஒருவரிடம் நீங்கள் செல்லும் பஸ்ஸில் எனக்கும் ஒரு இடம் போடுங்கள் என்று கேட்டேன். அதற்க்கு அவர் உங்கள் நண்பர்கள் யாரேனும் இருந்தாலும் சொல்லுங்கள், அவர்களையும் கூட்டிக்கொண்டு போகலாம் என்றார்.

நான் என்னுடைய முகபுத்தக செய்தி பெட்டியில் இதை போட்டேன். நிறைய பேர் தொடர்பு கொண்டார்கள். எண்ணிக்கை கூடியபோது எங்களுக்கு என்று தனியே ஒரு பேருந்து ஏற்பாடு செய்து விடுவதாக சொன்னார்கள் – இலவசம் அல்ல. அனைவரும் செலவை பகிர்ந்து கொண்டோம்.  முக புத்தக நண்பர்கள் உடன் வர நாங்கள் ஒரு பேருந்தில் சென்னையிலிருந்து திருச்சிக்கு நேற்று காலை ( 26 செப்டம்பர்) பயணமானோம்.

modi-in-trichy-2
courtesy: narendramodi.in

நாங்கள் திருச்சியை நெருங்கும்முன் அங்கு (மதியம் 1 மணி) கூட்டம் அதிகமாகி விட்டதாக கூறி மாநாடு நடக்கும் இடத்தில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் எங்களை இறங்க சொல்லி பஸ்சை அங்கேயே நிறுத்த சொன்னார்கள் போலீசார். அங்கே பஸ்ஸை நிறுத்தி விட்டு நடந்து சென்றோம். வழியெங்கும் மக்கள் சாரி சாரியாக தாரை தப்பட்டைகளுடன் கோவில் திருவிழா போல வந்து கொண்டிருந்தார்கள். அந்த வரிசையில் சேர்ந்து கொண்டு மாநாடு நடக்கும் இடத்தை அடைந்தோம். இத்தனை மக்கள் கூடியிருக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு (சுமார் 3 லட்சம் பேர் அல்லது அதற்கும் மேல்) வெறும் இரண்டே வாயில்கள். பயங்கர நெரிசல். மெனக்கெட்டு இருக்கைகளை அடைந்தோம். உட்கார்ந்து சிறிது நேரம் கழித்து பின்னால் பார்த்தால் ஏராளமான மக்கள் உட்க்கார இடம் இல்லாமல் நின்று கொண்டிருந்தார்கள்.ஐந்து மணி நேரம் நின்று கொண்டே பேச்சை கேட்டனர் அனைவரும். நம் பாடு தேவலை என்று தோன்றியது.

நிகழ்ச்சியில் யார் யார் என்னென்ன பேசினார்கள், அதில் என்னென்ன குறை,சொற்குற்றம், பொருட்குற்றம் என்பதெல்லாம் “நடுநிலையாளர்கள்” கூறுவார்கள். நம்மை விட உன்னிப்பாக பேச்சை அவர்கள் கவனிப்பார்கள். அதனால் கவலை இல்லை. எப்படியும் வீடியோ வரும். மாநாடு பற்றிய என் எண்ணங்களை கூறவே இந்த பதிவு.

dinamani_cartoon_modi_speech
Courtesy: Dinamani.com

முதலில் இந்த பிரம்மாண்ட மக்கள் கூட்டம். இன்றைய தினமணியில் மதியின் கார்ட்டூன் அருமையாக இந்த மாநாட்டு நிகழ்வை பதிவு செய்திருந்தது. இத்தனை லட்சம் மக்கள் பிரியாணி இல்லாமல் சரக்கு இல்லாமல் பணம் கொடுக்கப்படாமல், கைக்காசை செலவு செய்து மாநாட்டுக்கு கட்டணம் செலுத்தி வந்தது திராவிட கட்சிகள் மற்றும் ஏனைய கட்சிகளுக்கு மட்டுமல்லாமல் பாஜகவுக்கும்கூட ஆச்ச்சரியமாகத் தான் இருக்கும். இது நிச்சயம் அவர்கள் வலுவால் வந்த கூட்டமல்ல. சங்கம் மற்றும் இதர பரிவாரங்களும் இதற்கு பொறுப்பில்லை என்று கூறலாம். கூட்டத்தின் ஒரு சிறிய சதவிகிதம் மட்டுமே இவர்களால் வந்திருக்கும்.

மற்ற எல்லோரும் வந்தது ஒரு மாற்றத்தை வேண்டியா, மோடிக்காகவா, மோடியை எல்லோருக்கும் தெரியுமா என்பதெல்லாம் நாம் யோசித்து கொண்டே இருக்கலாம். விடை கிடைக்காது. விவசாயிகள், அடித்தட்டு மக்கள் என்று வழக்கமாக பாஜக மற்றும் சங்க கூட்டங்களில் பார்க்க கிடைக்கும் முகங்கள் அல்ல இவர்கள். பலதரப்பட்டவர்கள். வந்த கும்பலை பார்த்தால் பார்லிமென்ட் மட்டுமல்லாமல் சட்டசபையும் வெல்லும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்று தோன்றியது (ரொம்பத்தான் ஆசை என்று நினைக்காதீர்கள். இத்தனை தன்னார்வம் கொண்ட இளைஞர்களை எந்த கட்சியிலும் பார்க்க முடியாது) இதனை பயன்படுத்திக் கொண்டு பாஜக கட்சியை அடிமட்டம் வரையிலும் வளர்க்க வேண்டும்.

எல்லோர் முகத்திலும் ஒரு எதிர்பார்ப்பு. ஒரு நம்பிக்கை. ஒரு சில மாநிலங்களில் கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தாற் போல இங்கும் நடக்காமல் இருக்க வேண்டும். கண்டிப்பாக உளவு அறிக்கை முதல் அமைச்சரிடம் போயிருக்கும். கூட்டணி பேச்சு வார்த்தையின் போது பாஜக குழையாமல் நெஞ்சை நிமிர்த்தி வேண்டியதை கேட்டு பெறலாம். இல்லையென்றால் மதிமுக தேமுதிக, பாமக, இஜக, புதிய தமிழகம், கொங்கு இத்யாதிகளுடன் களம் இறங்கலாம். கண்டிப்பாக இருவது இடம் கிடைக்கும் என்று நினைக்கிறேன். வேலை நாளில் திருச்சியில் நடந்த மாநாட்டிற்கே இவ்வளவு கூட்டம் என்றால் விடுமுறை நாளில் சென்னையில் வைத்து இருந்தால் எண்ணிக்கை கண்டிப்பாக ஏழு எட்டு லட்சத்தை தாண்டும் என்று தோன்றுகிறது.

மாநாட்டுக்கு நேரில் வராதவர்கள் எவருக்கும் நான் சொல்லும் இவ்விஷயம் மிகைப்படுத்த பட்டதல்ல என்பது புரியாது. மோடியைக் கண்டவுடன் மக்கள் அடைந்த உற்சாகத்தை விவரிக்கவே முடியாது. இதுதான் உண்மையான எழுச்சி. தமிழர்கள் முகம் கோணாமல் அகம் நிறைந்து ஒரு ஹிந்தி சொற்பொழிவை ஒரு மணி நேரம் கேட்டார்கள். வாழ்க ஒழிக என்று கோஷம் போட்டே பழக்கப்பட்ட மக்கள் வந்தேமாதரம் என்று கோஷம் போட்டார்கள்.

modi-in-trichy-1
Courtesy: Firstpost.com

“மோடி விவேகானந்தரின் மறு பிறப்பாமே” என்று கிராமத்து ஆட்கள் பேசுவதை கேட்கும் போது சிரிப்பு வந்தாலும், திடீர் என்று அவருக்கு இப்படி நாடு தழுவிய ஒரு மவுசு எப்படி வந்தது? அதுவும் ஊடகங்கள் எதுவும் அவரைப் பற்றி நேர்மறையாக எதுவும் எழுதுவதில்லை என்று கங்கணம் கட்டி கொண்டிருக்கும்போது என்ற கேள்வி மனதில் எழுகிறது. என்னுடன் விவேகானந்த கேந்திரத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் வந்திருந்தனர். அவர்கள் வீட்டில் கட்சி மாநாடா? அங்கெல்லாம் போகாதே. எல்லாம் குடிச்சிட்டு வந்து கூத்தடிப்பானுக என்று பயமுறுத்தியதையும் பொருட்படுத்தாமல் வந்திருந்தனர். இத்தனை லட்சம் மக்கள் கூடியிருந்த ஒரு கூட்டத்தில் இரவு கும்மிருட்டில் நடந்து வரும்போது அனைவரும் ஒழுங்காகச் செல்வதைப் பார்த்து அவர்களுக்கு ஒரு சந்தோஷ நிம்மதி (“இது ஒரு பிரம்மாண்ட கேந்திரா நிகழ்ச்சி போல் இருக்குண்ணா”).

இந்த கும்பலெல்லாம் இதற்கு முன் மற்ற கட்சிகளுக்கு ஆதரவு செலுத்தியவர்களாகத்தான் இருப்பார்கள் – நிச்சயமாக பாஜக கிடையாது என்று சொல்வேன். அப்படி இருந்திருந்தால் இந்நேரம் பொன்னார் தான் முதல்வராக இருந்திருப்பார்! இந்த கட்சி கூட்டத்திற்கு வரும் போது மட்டும் ஒழுங்கு எப்படி இயல்பாக வந்து விடுகிறது என்று யோசித்தால் ஒன்று புரியும். தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி.

இந்த எழுச்சியை அரசியல் ரீதியான பலனாக மாற்ற செய்ய வேண்டிய விஷயங்களை பாஜக செய்ய வேண்டும். புதிய முகங்களை நிறைய சேர்க்க வேண்டும். இந்த ஒழுங்கை அரசியல் கலாச்சாரமாக மாற்ற வேண்டும். ஒரு சில விஷயங்கள் நெருடலாகவும் இருந்தன. மோடி புகழ் பாடும் பாட்டுக்கள், ஒலித்தகடுகள் விற்பனை, மோடி படம் போட்ட டி ஷர்ட் மற்றும் அவரது படங்கள் என்பதெல்லாம் என்னை போன்ற நபர்களுக்கு கொஞ்சம் இனிக்காது. இருந்தாலும் இவையெல்லாம் கட்சி அடையும் பரிணாம “வளர்ச்சியின்” ஒரு பகுதி என்று எடுத்து கொள்ள வேண்டியதுதான்.

modi-in-trichy-3

தர்மம் நலிவடையும் போதெல்லாம் நான் மீண்டும் வருவேன் என்று சொன்ன பரமனின் வாக்கு ஞாபகத்துக்கு வருகிறது. இது ஒரு அவதாரமாக இருக்குமோ? “மோடி என்ன அவதாரமா” என்று உருட்டுக் கட்டையை எடுத்து கொண்டு அடிக்க வராதீர்கள். நான் அவதாரம் என்று சொன்னது மக்கள் மனதில் தோன்றியிருக்கும் எழுச்சியையும் மாற்றத்தையும். இந்த அவதாரத்தை ஒழுங்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டியது பாஜகவின் கடமை, பொறுப்பு.

கடைசியாக, இன்றைய நாளிதழ்கள் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்கள் வெள்ளத்தை வர்ணிக்கும் விதம்.
Times of India: More than 80 thousand gathered.
தினமலர்: லட்சக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.

இரண்டும் உண்மைதான். உண்மையைப் போல பொய்யை சொல்வதில் தேர்ந்த நம் ஆங்கில ஊடகங்கள் தொடர்ந்து இது போல எழுதி கொண்டிருக்கட்டும். கெட்டவன் தூற்றத் தூற்ற நாம் வளர்வோம்.

*********

நிகழ்ச்சிக்குச் சென்று வந்த வேறு சிலரிடமும், அமைப்பாளர்களிடமும் பேசியதிலிருந்து தெரிய வந்த தகவல்கள்

– நமது நிருபர்

மைதானத்தில் போட்டிருந்த சேர்களின் எண்ணிக்கை சுமார் 85000. மொத்தம் வந்திருந்த மக்கள் குறைந்த பட்சம் இதைப் போல மூன்று மடங்கு இருக்கலாம். நாற்காலிகளும் அந்த மைதானம் முழுவதும் நிறைந்து, பாலத்திற்கு அப்பாலிருந்த துணை மைதானங்களும் நிரம்பி வழிந்தன. வந்திருந்த பேருந்துகள்,மினி பேருந்துகளின் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கும் மேல்.

பிளாஸ்டிக் உபயோகத்தைத் தவிர்க்கும் வகையில் பாட்டில்கள் இல்லாமல் வேறு வகையில் தண்ணீர் வினியோகம் செய்வது பற்றி ஆலோசிக்கப் பட்டது. அது பாதுகாப்பாதனல்ல என்று காவல் துறையினர் கூறி விட்டதால் பிளாஸ்டிக் பைகளில் குடிநீர் வழங்கப் பட்டது.

எமர்ஜென்சிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தன்; உதாரணம் – ஒரு பெண்மணி சர்க்கரை நோய் காரணமாக தீடீர் மயக்கமடைய உடனே வெவ்வேறு மூன்று தொண்டர்கள் சாக்லேட் எடுத்து வந்து கொடுத்தனர் – அது அவர்கள் பையில் எதேச்சையாக இருந்ததல்ல.

பொதுவாக எல்லா கட்சி மாநாடுகளிலும் நிகழ்ச்சி நடந்து முடிந்த பின் அந்த இடம் ஒரு மாபெரும் குப்பை மேடு போல இருக்கும். டாஸ்மாக் பாட்டில்கள், துண்டுகள், செருப்புகள் இவையெல்லாம் கிடக்கும். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மைதானத்தைச் சுற்றிவந்து பார்த்தபோது இவை எதுவும் தென்படவில்லை. பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவதற்காக உரிய கட்டணம் மாநகராட்சிக்கு கட்சி அமைப்பாளர்களால் ஏற்கனவே செலுத்தப் பட்டிருந்த படியால் அவர்கள் இரவோடிரவாக உடனே வந்து மைதானத்தை சுத்தம் செய்து விட்டனர்.

கூட்டம் மிக ஒழுங்கோடு கலைந்துபோனது; நகருக்குள் எந்த அலம்பலும் இல்லாமல் கூட்டம் மிகக் குறைந்த நேரத்தில் வெளியேறியது. இரவு 8 மணிக்கு கூட்டம் முடிந்தது. 11 மணிக்கு நகர போக்குவரத்து வழக்கம் போல ஆரம்பித்து விட்டது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் பந்தோபஸ்துக்கு நின்றிருந்த காவலர்களின் ஈடுபாடான பங்கற்பு. வழக்கமாக இதுபோன்ற அரசில் கூட்ட பந்தோபஸ்துக்கு வரும் காவலர்கள் விட்டேற்றியாகத் தான் நிற்பார்கள்; அது இங்கே நேர் மாறாக இருந்தது. மேலும் ஏற்பாடு செய்த கட்சிக் காரர்கள் முழுமையாக காவல் துறையுடன் ஒத்துழைத்தனர். அவர்களை காவல் துறையினர் மனம் திறந்து பாராட்டவும் செய்தனர்.

modi-in-trichy-4

பூனைக்கு யார் மணி கட்டுவது?: மதுவிலக்கு குறித்து சில எண்ணங்கள்

இறைவன் படைப்பில் ஓரறிவு படைத்த உயிரினங்கள் தொடங்கி ஆறறிவு படைத்த மனிதர்கள் வரை பல்வகை உயிரினங்கள் இருக்கக் காண்கிறோம். வாரியார் சுவாமிகள் சொல்வது போல மனிதரில் சிலருக்கு ஆறறிவு என்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். சமீப காலமாக மக்கள் மத்தியில் பெரும்பாலார் போதைக்கு அடிமைகளாக ஆகி, சமூக அந்தஸ்து, கெளரவம், பெருமை அனைத்தையும் தெருவோரக் குப்பைமேட்டில் எறிந்துவிட்டு அங்கேயே விழுந்து கிடக்கக் காண்கிறோம். பேருந்தில் அவசரமாக ஏறி ஏதோவொரு இடத்தின் பெயரைச் சொல்லி பயணச்சீட்டை வாங்கிவிட்டு, அந்த இடம் வந்ததும் நடத்துனர் எத்தனை முறை சொல்லியும் இறங்காமல் தடுமாறும் இளைஞர்களைப் பார்க்கிறேன். சாலையோரம் நல்ல உடையணிந்த மனிதன் அவை சீர்குலைந்து புழுதியில் புரண்டு வாயில் ஈக்கள் மொய்க்கப் படுத்துக் கிடக்கும் மனிதர்களைப் பார்க்கும்போது, அப்படிப்பட்டவர்களின் பெற்றோர் அல்லது மனைவி நம் நினைவுக்கு வருகின்றார்கள். நெடுந்தூரப் பயணம் செய்து கொண்டிருந்தேன். வழியில் ஓர் ஊரில் ஒரு இளைஞன் ஏறி காலியாகவிருந்த ஒரு இடத்தில் தொப்பென்று விழுந்தான். நடத்துனர் வந்து பயணச்சீட்டுக் கொடுக்கும்போதும் அவன் சுய நினைவின்றி, ஏதோ பணத்தை நீட்டி சென்னைக்கு ஒரு சீட்டு வாங்கிக் கொண்டதுதான், அது தொடங்கி அவன் வாயிலெடுத்து பேருந்தையே அசிங்கப் படுத்திவிட்டான். இறங்கும் இடம் வந்த பின்னும் அவனுக்கு மட்டும் நினைவு வரவே இல்லை.

இதுபோன்ற நிகழ்ச்சிகளைப் பட்டியலிட்டால் ஏடு போதாது எழுத, இடம் போதாது தளங்களில் ஏற்ற. 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி காலையில் நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு பெரிய ஊர்வலத்தில் கலந்து கொண்டேன். சுதந்திர நாள் கோலாகல கொண்டாட்ட ஊர்வலம் அது. அதில் கூட்டம் கூட்டமாக சிலர் ஆடிக் கொண்டு வந்தனர். அதன் பொருள் அப்போது எனக்குப் புரிந்ததோ இல்லையோ, இன்று நன்றாக புரிகிறது. குடியின் கேட்டை விவரிக்கும் காட்சிகள் அவை. சென்னை மாகாணம் முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப் படுவதற்கு மக்களிடம் இருந்த ஆர்வம் புரிந்து கொள்ள முடிகிறது. அப்போதெல்லாம் கள்ளுக்கடைகள் இருந்தன. சாராயங்கள் இல்லை. ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறமான இடத்தில், தென்னந்தோப்பு, ஆற்றங்கரை போன்றவிடங்களில் கள்ளுக்கடைகள் இருந்தன. முக்கிய சாலையிலிருந்து மறைவாக இருக்கும் அந்தக் கள்ளுக்கடைகளுக்கு வழிகாட்டிக் கொண்டு மரப்பலகையில் “கள்ளுக்கடை போகும் வழி” என்று தாரினால் எழுதி மாட்டி வைத்திருப்பார்கள்.

கிராமங்களிலும், நகரங்களிலும் கள்ளுக்கடைகளுக்குப் போகின்றவர்கள் ஊரறிய, நாடறிய போகமாட்டார்கள். இருட்டிய பிறகு தலையில் துண்டைப் போட்டு மறைத்துக் கொண்டு திருட்டுத் தனமாகச் சென்று கள்ளைக் குடித்தார்கள். அவர்களுக்கு ஒரு உள்ளுணர்வு, தாங்கள் ஒரு தவறான, சமூகம் வெறுக்கும் காரியத்தைச் செய்கிறோம் என்று. அன்று குடியினால் வீழ்ந்த ஏழை எளிய மக்கள் பெரும்பாலும் உழைக்கும் பாட்டாளி மக்கள். இவர்கள் குடிப்பதால் அவர்கள் குடும்பங்கள் சரிந்தன, அழிந்தன, பெண் பிள்ளைகள் தாலிகளைக்கூட கழற்றிக் கொடுத்து பாழும் கழுத்துடன் இருந்தனர். ராஜாஜி போன்ற சிறந்த சமூக நல வாதிகள் இந்த சமூக இழிவை, சமூக சீர்கேட்டை ஒழித்திட மதுவிலக்கைத் தமிழ் நாட்டில் கொண்டு வந்தார்கள்.

ராஜாஜி முதன் முதலில் சேலம் மாவட்டத்தில் இந்த மதுவிலக்கை அமல் படுத்திப் பார்த்து, அது வெற்றிகரமாக நடக்கிறது என்பதை உறுதி செய்துகொண்டபின் சென்னை மாகாணம் முழுவதற்கும் அதனை அமல் படுத்தினார். குடியால் கெட்டழிந்த குடும்பங்கள் பெரும்பாலும் உடலுழைப்பைத் தரும் கூலிகள் மற்றும் விவசாயக் கூலிகள். அவர்கள் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்தார் ராஜாஜி. தமிழக உழைப்பாளி வர்க்கத்துப் பெண்கள் ராஜாஜியைக் கெயெடுத்துக் கும்பிட்டு, தங்கள் வாழ்க்கையைப் புதுப்பாதைக்குக் கொண்டு சென்றவர் என்று வாழ்த்தினர். ஒரு தலைமுறை குடி என்பதை மறந்திருந்தனர் மக்கள். அப்போதும் திருட்டுத் தனமாக குடிக்கும் மனிதர்கள் இருந்தார்கள். பெரிய மனிதர்கள் பெர்மிட் வாங்கி வைத்துக் கொண்டு அயல் நாட்டு குடி வகைகளைக் குடித்தார்கள். கள்ளுக்கடைகளை ஒழித்ததனால் ஏற்பட்ட அரசு கஜானாவின் வருமான இழப்பை விற்பனை வரி மூலம் ராஜாஜி ஈடுகட்டினார். அரசாங்கத்துக்கு வருமானம் என்பதைவிட, இந்த நாட்டு ஏழை எளிய மக்களின் வாழ்வைப் பெரிதாக எண்ணிய தலைவர்கள் இருந்த காலம் அது.

அண்ணாதுரை அவர்கள் தமிழக முதலமைச்சராக ஆனபோது, அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க கள், சாராயக் கடைகளைத் திறப்பதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டபோது, அவர் அதனை ஏற்றுக் கொள்ளாததோடு, ஆட்சியையே நான் இழக்க நேர்ந்தாலும் ஏழைகளின் வாழ்க்கையைக் கெடுக்கும் கள் சாராயக் கடைகளைத் திறக்க அனுமதிக்க மாட்டேன் என்றும், மாறாக காமராஜ் போன்ற தலைவர்களோடு சேர்ந்து பூரண மதுவிலக்கை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வேன் என்றும் சொன்னார்.

அரசியல் நாகரிகம் சிறுகச் சிறுக மறைந்து, தனி மனித துதிபாடல்களும், பகட்டான விளம்பரங்களும், விளம்பரங்களுக்காகத் திட்டங்களும் வகுக்கப்பட்ட காலமொன்று வந்தது. என்ன செய்வது. அரசாங்கத்தின் ஆடம்பரங்களுக்கு ஏற்ப போதிய வருமானம் தேவைப்பட்டது. காமராஜ் காலத்தில் ஏழு அமைச்சர்கள் நாட்டின் நிர்வாகத்தைக் கவனித்து வந்த நிலையில், பின்னர் வந்தவர்கள் இருபது முப்பது என்று அமைச்சர்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டார்களே தவிர, மக்களின் கவலைகள் தீர சரியான நிர்வாக முறைகளோ, ஏழைகளைப் பாதுகாக்க நீண்ட கால திட்டங்களோ இல்லாமல் இலவசங்கள், ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி, கவர்ச்சிகரமான திட்டங்கள், அதற்கான விளம்பரங்கள், ஆடம்பர விழாக்கள் என்று அரசாங்க கஜானா திவாலாகிக் கொண்டிருந்த நிலையில், அவற்றை ஈடுகட்ட வருமானம் வந்து கொட்டுகின்ற அளவுக்கு மீண்டும் கள், சாராயக் கடைகளைத் திறந்து விடும் ஏற்பாடுகள் நடந்தன.

அந்த நிலையில் வயதாகி, உடல் நிலை முடியாமல் வீட்டில் இருந்த ராஜாஜி அன்றைய முதலமைச்சரை வீடு சென்று கைகளைப் பிடித்துக் கொண்டு, வேண்டாம், ஒரு தலைமுறை மக்கள் மறந்து போய்விட்ட இந்த பாழாய்ப்போன குடியை மீண்டும் கொண்டு வரவேண்டாம், ஏழை எளியவர்களை அழிக்கும் இந்தக் கொடுமையால் பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்படுவர். இதனால் வரும் வருவாயை ஈடுகட்ட புதிய திட்டங்களைக் கண்டு பிடிப்பதே சரியானது என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார். ஆனால், அவைகள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காய் போனது.

பின்னர் தனி நபர்களுக்கு கள்ளுக்கடை, சாராயக் கடைகள் வைத்துக் கொள்ள ஏலம் விடப்பட்டு அரசாங்கத்துக்கு வருமானம் வந்தது. அதில் பலர் கோடீஸ்வரர்கள் ஆனார்கள், குடித்துக் குடியைக் கெடுத்தவர்கள் அல்ல, குடிக்க வைத்து மக்களை நாசப்படுத்தியவர்கள். இவர்களுக்குப் போட்டியாக முளைத்ததுதான் கள்ளச்சாராயம். முதலில் பிற மாநிலங்களிலிருந்து திருட்டுத் தனமாகக் கொண்டு வந்தனர். பின்னர் ஆங்காங்கே குடிசைத் தொழிலாகக் கள்ளச்சாராயம் உற்பத்தி செய்யப்பட்டது. சமூகத்தில் அடிமட்டத்தில் கிடந்தவர்கள், சமூக விரோதிகள், அரசியலில் குறுக்கு வழியில் முன்னேறத் துடித்த சாதாரணர்கள் என்று இந்தத் துறை மூலம் கோடீஸ்வரர்கள் ஆனவர்கள் பலபேர்.

சட்டப்படியான கடைகளுக்கு எதிராக கள்ளக் கடைகள் பரவிவரும் கொடுமைகண்டு பதறினார்கள் அரசியல் வாதிகள். என்ன செய்வது. சட்டத்தின்படி திருட்டுத் தனமாக விற்கப்படும் கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும் முடியவில்லை, அந்தத் தொழிலில் ஈடுபட்டவர்கள் அத்தனை வலுவாகத் தங்களை ஆக்கிக் கொண்டு விட்டார்கள். அரசியலை ஆட்டிப் படைக்கும் வல்லமை பெற்றுவிட்டார்கள். வேறு வழியில்லை. சாராய வியாபாரத்தைத் தாங்களே எடுத்து நடத்தலாம். டாஸ்மாக் எனும் பெயரால் அரசாங்கக் கடைகளை ஒவ்வொரு தெருவிலும், ஆலயங்களுக்கு எதிரிலும், பள்ளிக்கூடங்களுக்கு அருகிலும் வைத்து ஓகோவென்று வியாபாரம். இதனால் வருமானம் கோடி கோடியாக அரசாங்கத்துக்கு வந்து கொட்டத் தொடங்கியது.

ஐரோப்பிய நாடுகளில் வார இறுதி என்றால் மக்கள் ஓய்வு தேடி அமைதியான இடங்களுக்கு ஓடுவர். இங்கெல்லாம் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி இரவு வரை வார விடுமுறை நாட்களை உல்லாசமாகக் கழிப்பதற்காக டாஸ்மாக் கடைகளின் முன்பு திருவிழா கூட்டம் கூடுகிறது. காரில் வரும் செல்வந்தர் வீட்டு ஆட்கள், மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் கூட்டம், சைக்கிளில் சாதாரண மக்கள், கால் நடையாக காக்கி உடை அணிந்த துப்புறவு தொழிலாளர்கள் முதல் மூட்டை தூக்குவோர், தள்ளுவண்டி வைத்திருப்போர் என்று ஒரே கூட்டம். சமீப காலமாக இந்த சாராயத்தைக் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் பள்ளி மாணவர்கள் தங்கள் சீருடை அணிந்த கோலத்தோடு விழுந்து கிடக்கும் கோலத்தை பத்திரிகைகள் படம் பிடித்து போட்டு வருகின்றன.

நல்ல உடைகள் வாங்கவோ, வீட்டுத் தேவைகளுக்கான பொருட்களை வாங்கவோ, பிள்ளைகளின் படிப்புக்குத் தேவைகளை கவனிக்கவோ நேரமின்றி போதைப் பொருட்களை உட்கொண்டு தெருவில் மயங்கிக் கிடப்பதையே பெரும்பாலோர் விரும்புவது போலத் தெரிகிறது. அது தவிர, இந்த போதையை ஏற்றிக் கொண்ட பெருமக்கள் தங்களை உலகத்தின் உச்சியில் இருப்பவர்களாக நினைத்துக் கொண்டு அரற்றுவது, ஆர்ப்பாட்டம் செய்வது, மிரட்டுவது, பெண்களைக் குழந்தைகளை வெறுப்படையச் செய்கிறது.

சில அரசியல் கட்சிகள் இந்த நிலைமையை ஒழிக்க வேண்டுமென்று குரல் கொடுக்கின்றன. ஆனால் அவை முழுமூச்சாக இதில் ஈடுபடுவதாகத் தெரியவில்லை. ஒரு கொள்கை பிரகடனமாக மட்டுமே செய்கின்றனர். காந்திய இயக்கம் தமிழருவி மணியன் போன்றோர் தீவிரமாக இது குறித்துப் பிரச்சாரம் மேற்கொண்டு, மகாநாடுகள் நடத்தி வருகின்றனர். சாதாரண மக்கள்கூட இதற்குப் பதில் சொல்லுகின்றனர், என்னவென்று தெரியுமா, அரசாங்கம் நடப்பதே இந்த டாஸ்வாக் வருமானத்தில்தான். அப்படியிருக்க அவற்றை மூடவோ, முழு மதுவிலக்கை அமல் படுத்தவோ யார் விரும்புவார்கள் எங்கின்றனர் சாதாரண மக்கள்.

இந்த நிலைமை இப்படி நீடிப்பதில் யாருக்கும் வெட்கமில்லை. பூனைக்கு யார் மணி கட்டப் போகிறார்கள். என்று நாட்டில் முழு மதுவிலக்கு கொண்டுவரப்படும். என்று ஏழை எளிய உழைப்பாளி மக்கள் தாங்கள் ஈட்டும் வருமானத்தைத் தங்களுக்காகவும், குடும்பம், பெண்டு பிள்ளைகளுக்காகவும் செலவிட்டு மகிழ்ச்சியோடு, ஆரோக்கியமாக வாழப்போகிறார்கள். என்று சமூகத் தொல்லைகள் ஒழிந்து மக்கள் இந்த குடிகார கேடர்களிடமிருந்து தப்பி சுதந்திரமாக தெருக்களில் நடமாடப் போகிறார்கள். என்று நம் நாட்டில் மீண்டும் வசந்தம் வரும்? இவைகளுக்கெல்லாம் பாதிக்கப்பட்ட மக்கள்தான் நன்கு சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாட்டின் கருத்தைப் போல, “திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது” என்பது போல குடிகாரர்களே திருந்தி இனி எங்களுக்குக் குடி வேண்டாம் என்று என்று சொல்வார்கள் என்று காத்திருக்க வேண்டியதுதானா? மக்கள் தீர்ப்புக்குக் காத்திருப்போம்.