இன்றைய அரசியல் வாதிகளுக்கு இந்து மதம் சம்பந்தப்பட்ட எதுவும் ‘மதவெறி’ என்று தோற்றமளிக்கிறது. இந்துப் பண்டிகைகள் காட்டுமிராண்டித்தனமானது என்பது அவர்களது கருத்து. நெற்றியில் திருநீறு, குங்குமம் அணிந்தால் அது கேலிக்குரியதாக ஆகிவிடுகிறது. இப்படிப்பட்டச் செயல்களை ஏதோ சாதாரண அடிமட்ட தொண்டன் செய்தால் அதனை அறியாமை என்று ஒதுக்கித் தள்ளிவிடலாம். ஆனால் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் தனது தொண்டனின் நெற்றியிலிட்ட குங்குமத்தை ரத்தம் வழிகிறது என்று கேலி செய்வது ஒப்புக்கொள்ள முடியாதது. கண்டிக்க வேண்டியது. ஒரு முதலமைச்சர் ஒரு மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் தலைமை வகிக்கும் இடத்தில் இருப்பவர். இந்த மாநில மக்கள் அனைவரும் அவர் எந்த மதம், ஜாதி அல்லது பிரிவு மற்றும் அனைத்து மொழி பேசுவோர்க்கும் தலைமையானவர், பொதுவானவர். அவருக்கு விருப்பு, வெறுப்பு இருப்பது நியாயமுமல்ல, நேர்மையுமல்ல. அப்படிப்பட்ட பதவியிலிருப்பவர் விநாயக சதுர்த்தியைக் கேலி செய்வதும், ரம்ஜான் நோன்பு முடிவில் கஞ்சி குடிப்பதற்குத் தானும் தலையில் குல்லாயோடு போய் அமர்ந்து கொண்டு இது ஆரோக்கியமானது என்று சொல்வதும், மக்களிடையே பிரிவையும் விரோதத்தையும் ஏற்படுத்தி இடையில் தன்னை மைனாரிட்டியின் காவலன் என்று காட்டிக் கொள்ளச் செய்யும் தந்திரமாகும்.
I would love to hear any advice you have, thank you. Today, http://johndanatailoring.co.uk/product/slim-fit-3pc-solid-blue-suit/ the drug has become well-liked with infertility patients and other women, It was known that the drug was administered on a monthly basis following a blood sample being sent for parasitological assessment of bancroftian filariasis, and.
This drug is used to treat and manage a broad range of conditions in a patient. The key to Warwick making your next relationship work is finding someone that will understand and support you. They may be able to tell if your child is allergic or has a food intolerance, and you may want to seek a professional opinion.
Atherosclerosis is often associated with atherosclerotic plaques resulting in coronary artery disease. It is La Unión a white to light pinkish crystalline solid with a characteristic melting point. When your doctor prescribes an antibiotic, take it as prescribed.
இந்த அரசியல் வாதிகள் தங்கள் வீச்சை அரசியலோடு நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை. ஆனால் இவர்களிடம் சிக்கிக்கொண்ட அதிகாரத்தின் விளைவாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை எல்லாம் கோயில்களில் தர்மகர்த்தாவாகவும், நிர்வாகக் குழு உறுப்பினர்களாகவும் நியமித்து விடுகிறார்கள். அப்படி கோயில் நிர்வாகத்துக்கு வந்த அரசியல் வாதிகள், வந்த இடத்திற்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டு, தாங்கள் நியமிக்கப்பட்ட பணிகளை செவ்வனே செய்ய வேண்டுமல்லவா? அவர்கள் நியமிக்கப்பட்ட பதவிக்காக அவர்களுக்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து கோடிக்கணக்கான பணம் செலவிடப்படுகிறதே, அதற்காகவாவது அவர்கள் மக்களுக்கும் தங்கள் மனச்சாட்சிக்கும் உண்மையாக நடந்து கொள்ள வேண்டுமல்லவா? ஆனால் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சிகள் அரசியல் வாதிகள் புனிதத் தலங்களில் நியமிக்கப்படுவதன் கேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
முதலில் “திருப்பதி கோவிலில் மெகா ஊழல்” என்ற தலைப்பிலான செய்தியைப் பார்க்கலாம். அந்த செய்தி கூறும் விஷயம் இதுதான்:– “திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் அபிஷேக டிக்கெட்டுகளை விற்றதில் 25 கோடி ரூபாய் அளவுக்கு மெகா ஊழல் நடந்திருப்பது விஜிலென்ஸ் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க பல்வேறு சேவாக்கள் நடத்தப்படுகின்றன. தினசரி, வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர ஏன் 29 வகையான அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. இதற்கான டிக்கெட்களை விற்பனை செய்ததில் 25 கோடி ரூபாய் அளவுக்கு மெகா ஊழல் நடந்து இருப்பதும், இதில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்களான காலே யாதையா, அல்லூரி சுப்பிரமணியம், மடலப்பு அஞ்சய்யா ஆகிய மூன்று பேரும், துணை செயல் அலுவலர்கள் 25 பேரும் ஈடுபட்டிருப்பது விஜிலென்ஸ் மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. ஊழலில் ஈடுபட்ட அனைவருமே அரசியல் ரீதியாக நியமனம் செய்யப்பட்டவர்கள்.
இவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்ய விஜிலென்ஸ் துறை தனது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது. சினிமா டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்பது போல, குறைந்த எண்ணிக்கையிலான சேவா டிக்கெட்டுகளை மட்டும் பகிரங்கமாக விற்றுவிட்டு, மீதி டிக்கெட்டுகளை லட்சக்கணக்கில் கொள்ளை லாபம் வைத்து ‘பிளாக் மார்க்கெட்’டில் விற்பனை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சேவா டிக்கெட் விற்பனையில் ஊழல் நடப்பதாக நீண்ட காலமாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி சுந்தர்குமார் விசாரணை நடத்தி, 2009 மார்ச் மாதம் அறிக்கை சமர்ப்பித்தார். ஆனால், அப்போதைய ஆந்திர அரசு அதிகாரிகள் கிடப்பில் போட்டுவிட்டார்கள். ஆட்சி பீடத்தில் யார் இருந்தார்கள், அவர்களின் உள்நோக்கம் என்ன என்பதெல்லாம் யோசிக்க வேண்டிய விஷயங்கள். அவர்கள் ஏன் இந்த விஷயத்தில் அக்கறை காட்டவில்லை என்பதையும் விசாரிக்க வேண்டும்.
ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் திருமலையை நோக்கி பாதயாத்திரை நடத்தினார். இதையடுத்து, இந்த ஊழல் விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. திருப்பதி வெங்கடாசலபதிக்கு காணிக்கையாக அளிக்கப்பட்ட ஏராளமான தங்க நகைகள் ஏற்கனவே திருடு போயிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தரிசன டிக்கெட் விற்பனையில் 25 கோடி ரூபாய் அளவுக்கு மெகா ஊழல் நடந்திருப்பது பக்தர்களை மேலும் அதிருப்தி அடைய செய்துள்ளது.”
இதுதான் இப்போதைய செய்தி. இந்த ஊழலுக்குக் காரணமானவர்கள் அரசியல் ரீதியாக பணியமர்த்தப்பட்டவர்கள். இவர்களது நேர்மை, உண்மை இவை குறித்தும் இப்போது விசாரிக்கப்பட வேண்டும். அரசியல் வாதிகள் என்பதால் இந்த ஊழலையும், மத்திய அமைச்சர் ராசாவின் ஊழலை மூடி மறைப்பது போல மறைப்பதோ, அல்லது சம்பந்தப்பட்டவர்கள் குறிப்பிட்ட சாதியினர் என்பதால் குற்றச்சாட்டைச் சொல்லுகிறார்கள் என்று சப்பைக் கட்டு கட்டுவதோ சரியாக இருக்க முடியாது. ஆலய நிர்வாகம் என்பது நம்பிக்கை சம்பந்தப்பட்டது. அதில் மத நம்பிக்கை உள்ளவர்கள்தான் மனச்சாட்சியோடு பணியாற்ற முடியும். ஏனோ தானோ ஆசாமிகள் ஆலயங்களை குறுக்கு வழியில் சம்பாதிக்கப் பயன்படுத்துவதை மத நம்பிக்கை உள்ளவர்கள் அனுமதிக்க முடியாது. கண்டிப்பாக நடவடிக்கை எடுத்தே தீரவேண்டுமென்று உறுதியாக இருக்க வேண்டும். நாம் சொல்லுவது போலி செக்யூலரிஸ்ட்டுகளின் காதில் விழுமா? செவிடன் காதில் ஊதிய சங்காக முடியுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
அடுத்த செய்தி மிகவும் முக்கியமானது. சிறிது காலம் முந்திதான் எல்லா ஊடகங்களிலும் ஒரு இந்து சாமியார் குறித்த சர்ச்சை ஏற்பட்டு அதை அரசியல் வாதிகளும், அயல்நாட்டு ஏஜெண்டுகளான சில ஆங்கில தொலைக்காட்சி நிறுவனங்களும், பகுத்தறிவு பாசறை தொலைக்காட்சிகளும் அல்லும் பகலும் திரும்பத் திரும்ப இந்தக் காட்சிகளைப் போட்டுக் காட்டி அசிங்கப்படுத்தின. இதன் மூலம் இந்து சாமியார்கள் அனைவரும் பெண்பித்து பிடித்தவர்கள், கயவர்கள், ஒழுங்கீனமானவர்கள் என்ற பிரமையை உண்டாக்க திட்டமிட்டு சதிசெய்தனர். ஆனால் அடிக்கடி கிறிஸ்தவ பாதிரிமார்களின் கேளிக்கைகளைப் பற்றியும், மோசமான நடத்தை பற்றியும் வரும் செய்திகள் ஏதோவொரு மூலையில் இடம்பெறுவதோடு அதன் முக்கியத்துவம் முடிந்து விடுகிறது. இப்போது வெளியாகியிருக்கும் ஒரு செய்தியை இப்போது பார்ப்போம்.
“திருவண்ணாமலை 18-8-2010:” “மாணவனிடம் சில்மிஷம் – பங்கு தந்தை கைது”. “ஓரினச் சேர்க்கைக்கு மாணவனை அழைத்த பங்கு தந்தையை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த தச்சம்பட்டு ஆர்.சி.எம். சர்ச் சார்பில் நடுநிலைப் பள்ளி மற்றும் உறைவிடப் பள்ளி உள்ளது. இந்த சர்ச்சுக்கு பங்குத் தந்தையாகவும், உறைவிடப் பள்ளி வார்டனாகவும் ஸ்டீபன் (30) பணிபுரிந்து வருகிறார். ஸ்டீபன் உறைவிடப் பள்ளியில் உள்ள மாணவர்களுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்தார். வராத மாணவர்களை அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்தார். நேற்று முன் தினம் தச்சம்பட்டைச் சேர்ந்த பட்டு நெசவு கூலித் தொழிலாளி மணிகண்டனின் மகன் மோகன்ராஜை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்தார். மோகன்ராஜ் வரமறுக்கவே அவனை அடித்துத் துன்புறுத்தினார். மோகன்ராஜ் அவரது தந்தையிடம் நடந்தவற்றைக் கூறினார். மணிகண்டன் சேத்துப்பட்டு போலீசில் நேற்று புகார் செய்தார். போலீசார் விசாரித்து ஸ்டீபனை கைது செய்தனர்”
இதுதான் அந்தச் செய்தி.
இதுவரை எந்த யோக்கியமான தொலைக்காட்சியாவது இந்த விஷயத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதா? இந்து சாமியாராக இருந்திருந்தால் இந்நேரம் எல்லா தொலைக்காட்சியிலும் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கும். இவர் ‘மைனாரிடி’ அல்லவா? நடப்பது மைனாரிடி அரசு அல்லவா? அவர்களுக்கு எந்த கேடும் விளைந்து விடக் கூடாது என்று பாதுகாப்பு கொடுக்கும் அரசு அல்லவா? அப்படிப்பட்ட அரசு நியாயம் வழங்குமா? இனி நாம் நீதிகேட்டு இறைவனிடம்தான் போக வேண்டும்.
இந்த இந்து பூமியில் லட்சக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் இந்து தர்மம் காக்கப்பட வேண்டுமென்றால், போலிகள் விரட்டப்பட வேண்டும். விதேச முதலீட்டில் நடக்கும் அன்னிய தொலைக் காட்சிகளுக்கு இந்து தர்மம் பற்றி பாடம் சொல்லித்தர வேண்டும்.
காலம் மாறுமா? காத்திருப்போம்.