தர்மக்ஷேத்திரம் – டி.வி. தொடர் விமர்சனம்

Image result for dharmakshetra                அண்மையில் எனது குடும்பநண்பர் ஒருவரின் பரிந்துரையின்பேரில் அமெரிக்க டி.வி.யான நெட்ஃபிளிக்ஸில் தர்மக்ஷேத்திரம் [Dharmakshetra] என்னும் தொடரைப் பார்த்தேன்.

The drug’s main purpose, however, is to treat patients who do not respond to treatment with steroids or those who need it to prevent steroid use. The erection is caused by nitric oxide out of pocket cost for clomid South Brisbane that is produced by a chemical in the body. It acts on a chemical in the brain called the gaba receptors.

We believe that when you make the commitment and step into the light on this journey, you will go beyond your physical ability to handle everyday life. If you are taking more than one medicine, you should consider whether you can combine different Villa Paula de Sarmiento cheap zithromax medicines to decrease the risk of low blood glucose. It works by binding to tetracycline resistance tetracycline resistant gene tetracycline receptor protein, which prevents the bacteria from developing resistance to antibiotics.

Drugstore pharmacies will offer their customers additional discount pharmacy drugs in bulk. Xanax (xanax) clomid over the counter near me Baturité is a safe and non-addictive medication. The only people who can tell you whether a particular treatment will work for you are those who are personally suffering from that treatment.

“பதினெட்டு நாள்கள் நடந்து, நமது பண்பாட்டைப் புரட்டிப்போட்டு, குருக்ஷேத்திரத்தில்  நன்மைக்கும், தீமைக்கும் இடையில் நடந்த போரில் எவர் உண்மையானவர், எவர் பொய்யானவர், எவர் அதர்மி, எவர் அறத்தைக் காத்தவர், யாருக்குத் தெரியும்?  போருடன் எல்லாம் முடிந்து போயின. குருக்ஷேத்திரம் பின்னால் தங்கிவிட்டது.  இப்போது தர்மக்ஷேத்திரத்தின் முறை. குற்றங்கள் சுமத்தப்பட்டன; பதில்களும் கிடைத்தன. இப்பொழுதும்கூட இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது.  இது நம் வாழ்வுடன் இணைக்கப்படவேண்டும்.  இல்லாவிடில், தர்மக்ஷேத்திரம் அறைகுறையாகவே இருக்கும்!” என்ற முன்னுரையுடன் இத்தொடர் துவங்குகிறது.

சித்திரகுப்தனின் அவையில் ஒருபக்கம் கௌரவர்களும், அவர்களைச் சார்ந்தவர்களான பீஷ்மர், திருதராட்டிரன், காந்தாரி, விதுரர், துரியோதனன், துச்சாதனன், துரோணர், கிருபர், கர்ணன் ஆகியோரும், மறுபக்கம், தர்மபுத்திரரான யுதிட்டிரர், கண்ணன், பாஞ்சாலி, பீமன், அருச்சுன்ன், நகுல-சகாதேவர்கள், துருபதன் ஆகியோரும் அமர்ந்திருக்கின்றனர்.  ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு, அவர்கள்மீது என்ன குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது, யார் சுமத்தியிருக்கிறார்கள், அதற்கு அவர்களது பதில் என்ன, குற்றத்தை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லையென்றால் அதற்கு சாட்சியென்ன என்று சித்திரகுப்தனால் விசாரிக்கப்படுகிறார்கள்.  சாட்சிகளாக மகாபாரதத்திலுள்ள மற்றபல பாத்திரங்களும் அழைக்கப்படுகிறார்கள்.

அத்துடன் மகாபாரத்தை எழுதிய வியாசமுனியும் அழைக்கப்பட்டு, அவர்மீது மற்றவர்கள் தொடுக்கும் வினாகளுக்குப் பதில்கூறுமாறு சொல்லப்படுகிறார்.

2014லில் வெளிவந்து, இப்பொழுதுதான் அமெரிக்காவில் ஒளிபரப்பப்படும் தொடரின் ஒவ்வொரு பகுதியும் விறுவிறுப்பாகவே இருக்கிறது.

இந்திமொழியில் எடுக்கப்பட்டுள்ள இத்தொடருக்கு ஆங்கில மொழியாக்கமும் கொடுக்கப்படுகிறது.  ஆயினும் மொழிபெயர்ப்பு இந்தியின் உணர்வுபூர்வமான உரையாடல்களைச் சரிவர ஆங்கிலத்திற்குக் கொணரவில்லை என்பதே உண்மை.

செந்தமிழில் இலக்கணமுறைப்படி பேசினால் இக்காலத்தில் எப்படிப் பல தமிழர்களால் புரிந்துகொள்ள இயலாதோ, அவ்வாறே, இலக்கண இந்தியை நன்றாகவும், வடமொழியான சங்கத்ததை ஓரளவாவது அறிந்தவர்களால்தான் உரையாடலின் அழுத்தத்தைப்  புரிந்துகொள்ள இயலும்.  இந்தியில் பரவிக் கிடக்கும் உருதுச் சொல்களை அறவே நீக்கி, சங்கதச் சொற்களைக் கையாண்டு உள்ளார்கள்.  எனக்கு மேற்சொன்ன இரண்டும் தெரிந்திருந்ததால் உரையாடல்களை நன்கு புரிந்தகொள்ளமுடிந்தது, உரையாடல்களை இரசிக்கமுடிந்தது.

மகாபாரதம் அறிந்தவர்களால்தான் —  நீதிவிசாரணையைப் போன்று நடக்கும் 26 பகுதிகள் உள்ள இத்தொடரில் என்ன சொல்லப்படுகிறது என்று புரிந்துகொள்ளலாம்.  இல்லாவிடில், நினைவுமீட்பாகச் [ஃப்ளாஷ்பேக்] சொல்லப்படும் சிற்சில நிகழ்ச்சிகளின்மூலம் மகாபாரதத்தையும், சுமத்தப்படும் குற்றங்களையும், அதற்குச் சொல்லப்படும் பதில்களையும், சித்திரகுப்தனின் தீர்ப்பையும் சரிவரப் புரிந்துகொள்ள முடியாது.

மகாபாரத மூலத்திலிருந்து பல்வேறு முரண்பாடுகள் இருந்தாலும், இத்தொடர் மகாபாரதக் கதாபாத்திரங்களை மனம்போலச் சித்தரிக்காமல், முடிந்த அளவுக்கு நடுநிலைமையிலேயே சித்தரிக்கிறது எனலாம். நீதிமன்ற விவாதங்கள்போல மகாபாரதப் பாத்திரங்கள் விவாதம் செய்வது மிகவும் ரசிக்கும்படித்தான் உள்ளது.

Image result for dharmakshetraஇத்தொடரில் நன்கு பதிலளித்துத் தம்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை மறுதளிப்பவர்கள் தருமபுத்திரரும்,  கண்ணனும்தான். அத்துடன், வேதவியாசரையும் சேர்த்துக்கொள்ளலாம்.

கர்ணனை, ‘எனக்கு இது ஏன் நடந்தது? என் தாய் என்னை ஏன் துறந்தாள்?  என்னைத் தேரோட்டிமகன் என்று தாழ்த்தினார்களே!’ என்று தன்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை ஒப்புக்கொள்ளாதவனாகவும், துரியோதனனை, ‘நான் கெட்டவன்தான்.  அனைவரும், எனது சொற்படி நடந்ததால், அவர்கள்மீது எப்பழியையும் சுமத்தக்கூடாது,’ என்று வாதிடுபவனாகவும் காட்டுகிறார்கள்.

துச்சாதனன் தான் சரித்திரத்தில் தனக்கென்று ஒரு தனியிடம் பெறுவதற்காக, துரியனின் தம்பி என்ற பெயர்மட்டுமே தனக்கு இல்லாமலிருப்பதற்காகவே, பாஞ்சாலியைத் தலைமயிரைப் பற்றி இழுத்துவந்ததாக் கூறுகிறான்.

திருதராட்டிரனோ தனக்குக் கண்பார்வை இல்லை என்ற காரணத்தால் தன்னிடமிருந்து அத்தினாபுரப் பேரரசு வஞ்சகமாகப் பாண்டுவிற்குக் கொடுக்கப்பட்டது, முறைப்படி துரியனுக்கே அப்பேரரசு சேர்ந்திருக்கவேண்டும் என்றும், துரியன் தான் சொல்வதைக் கேட்காதபோது தன்னால் எப்படி நீதியை நிலைநாட்ட இயலும் என்று தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றங்களை மறுக்கிறான்.

இருப்பினும், இத்தொடரில் என் மனதைத் தொட்ட ஒரு பாத்திரம் ஏகலைவன்.  கட்டைவிரலைக் கேட்டது அறமற்றசெயல் என்று துரோணர்மீது சாட்டப்பட்ட குற்றத்தை மறுதளிக்கிறான் அவன்.  “அவர் என்னைச் சீடனாக ஏற்றுக்கொண்டதால்தானே என்னிடம் குருதட்சிணை கேட்டுப் பெற்றுக்கொண்டார்?  பொன், பொருள் எதுவும் தர இயலாத, வெறும் வேட்டுவனான என்னிடம் நான் தரக்கூடிய ஒன்றைத்தானே கேட்டிருக்கிறார். அப்படிப் பெற்றுக்கொண்டதால்தானே நான் அழியாப் புகழ் பெற்றேன்?  எனவே, எனது குரு குற்றமற்றவர்!” என்னும்போது எனது கண்கள் பனித்துவிட்டன.

வழக்கம்போல மகாபாரத மூலத்தில் இல்லாத செய்திகள் நிகழ்வுகளாகக் காட்டப்படுகின்றன.

ஒருசில:

  • பலரோடும் போர்புரிந்து வஞ்சகமாக நிராயுதப்பாணியாக்கப்பட்ட அபிமன்யுவை, துரோணர் பின்னாலிருந்து வாளால் வீழ்த்தியதாகக் காட்டுகிறார்கள்; மூலத்தில் களைத்துக் கீழேவீழ்ந்த அபிமன்யுவைத் துச்சாதனினின் மகன் கதைகொண்டு அடித்துக்கொல்வதாக வருகிறது.
  • தன்மீது ஆசைப்பட்டதால்தான் குந்தி ஐவரும் தன்னை மணக்கவேண்டும் என்று சொன்னபோது அது அறமில்லை என்று தடுக்காததாகத் திரௌபதி தருமர்மேல் குற்றம்சாட்டுகிறாள்.

ஆனால் உண்மையில் தருமர் அன்னையின் ஆணை முறையற்றது என்றுதான் சொல்லுகிறார். அருச்சுனன்தான் அன்னையின் ஆணைக்கு அடிபணியவேண்டும் என்பதாக மகாபாரதம் சொல்லுகிறது.

  • தனது மகன் அசுவத்தாமன் இறந்துவிட்டான் என்ற செய்தியைப் பீமன் சொல்வதை நம்பால், யுதிட்டிரரிடம் துரோணர் வினவும்போது, “அசுவத்தாமன் இறந்தான், அது ஒரு யானை” என்ற பதில் கிட்டுகிறாது. அது ஒரு யானை என்று சொல்லும்போது கிருஷ்ணன் சங்கை ஊதுவதால், அது துரோணர் காதில் விழவில்லை. உடனே செயலிழந்துவிட்டார்.  அவரை திருஷ்டத்தும்னன் உடனே வாளால் வெட்டிச் சாய்த்துவிடுகிறான் என்று காட்டுகிறார்கள். ஆனால், அப்படித் தருமர் சொல்லியும், சிறிதுநேரம் கலங்கிய துரோணர் மீண்டும் போரிடுவதாகவும், அவருக்கு திவ்விய அஸ்திரங்கள் பயனற்றுப்போவதாகவும், அவருடன் வீரத்துடன் போர்புரியும் திருஷ்டத்தும்னனாலும் வீழ்த்தவியாலாது போகிறது என்றும், பீமன் துரோணரிடம், ‘மகனே இறந்தபின்பு எதற்காகப் போரிடவேண்டும், யோகத்தின்மூலம் உயிரை விடுங்கள்’ என்று சொல்வதாகவும் வருகிறது.  அவரது உயிர் ஒளிமயமாக உடலை விட்டு நீங்குவதை ஒருசிலர் மட்டும் காண்பதாகவும், அதைக் காணவியலாத திருஷ்டத்தும்ன் வாளால் அவரது தலையைக் கொய்வதாகவும் மகாபாரத மூலம் கூறுகிறது.

இப்படிப் பலப்பல வேறுபாடுகளைக் காட்டலாம்.

Image result for dharmakshetraசித்திரகுப்தனின் தீர்ப்பும் சிற்சில சமயங்கள் முரண்பாடாகவே தெரிகிறது. கடமையைச் செய்ததற்காக சிலருக்கு முக்தியும், தளபதியாகத் தனது கடமையைச் செய்த திருஷ்டத்தும்னனுக்கு முக்தியளிக்க மறுக்கவும் செய்கிறார்.

இக்கால சமத்துவநெறியை வலிந்து திணிக்கும் முயற்சியில் துரோணரையும், பரசுராமரையும்கூட விட்டுவைக்கவில்லை.  கர்ணனுக்குப் பிரம்மாஸ்திரம் கற்பிக்க அவன் க்ஷத்திரியனல்ல என்று துரோணர் மறுப்பதையும், பிராமணன் என்று பொய்சொல்லிக் கற்றதால் தக்கசமயத்தில் அந்த அஸ்திரம் பயன்படுத்தும் முறை மறந்துபோகட்டும் என்று பரசுராமர் சபித்ததும் தவறு, கல்விபயிற்றுவதற்கு வர்ணபேதம் காட்டக்கூடாது என்று இருவருக்கும் அறிவுரை வழங்குகிறார், சித்திரகுப்தன்.

வீரம், விவேகம், அரசநீதி அறிந்த தானே அத்தினாபுரப் பேரரசனாகியிருக்கவேண்டும் என்று விதுரர் குறைப்பட்டுக் கொள்வதாகவும் காட்டுகிறார்கள்.  இது அசட்டுத்தனத்தின் உச்சம் என்றே படுகிறது.

அதற்கு வேதவியாசர் அளிக்கும் பதில் மிகவும் பொருத்தமாக உள்ளது.  விதுரர் நெறிமுறைப்படி அரசாண்டாலும், அவருக்குப் பின்னர் இவ்வாறு பெரியதொரு போர் நிகழ்வதை அவரால் தடுக்க இயலாது, எனவே, அவருக்கு அரசு கிடைக்கக்கூடாது என்பதே விதியானது என்று சமாதானம் சொல்கிறார், வியாசர்.

இது அசட்டுத்தனத்தின் உச்சம் என்றால், இதைவிடப் பெரிய அசட்டுத்தனம் ஒன்றும் சித்திரகுப்தன் அவையில் நடந்து விண்ணுக்கும்மேலே செல்கிறது

தனது தம்பி விசித்திரவீரியனுக்காக காசி அரசன் மகளிர் மூவரையும் கவர்ந்து வரும் பீஷ்மரிடம், தன் மனதை சால்வனுக்குப் பறிகொடுத்துவிட்டதாகச் சொல்லும் அம்பையை அனுப்பிவிடுகிறார் அவர்.  கவருவதற்குமுன் அம்பை சால்வனை விரும்பது அவருக்குத் தெரியாததால் அவளையும் கவர்ந்துவந்திருந்தார்.

சால்வனோ, “சத்திரியனான நான் தானம் வாங்கமாட்டேன்.  இன்னொருவரால் கவரப்பட்ட உன்னை நான் ஏற்கமாட்டேன்,” என்று மறுக்கவே, அம்பை பீஷ்மரிடம் சென்று தன்னை மணம்புரியும்படி வற்புறுத்துகிறாள்.  தன்னுடைய பிரம்மச்சரிய சபதத்தைக் காட்டி, மறுக்கிறார்.  அவரைப் பழிவாங்கத் தன்னுயிரை ஈந்து துருபதன் மகனான சிகண்டியாகப் பிறக்கிறாள் அம்பை.

ஆயினும், தன்னை ஏற்காததற்காகப் பீஷ்மர்மீது குற்றம் சுமத்துகிறாள் அம்பை. பீஷ்மர் என்னசொல்லியும் அதை ஏற்காத சித்திரகுப்தன், “என்னதன கடுஞ்சபதம் மேற்கொண்டிருந்தாலும், ஒரு அபலையைத் தவிக்கவிடுவது அறமல்ல.  எனவே, பீஷ்மர்மீது சுமத்தப்பட்ட இக்குற்றம் குற்றமே!” என்று தீர்ப்பு வழங்குகிறார்.  அதாவது, எந்தவொரு சபதத்தினால் கங்கைமைந்தன் பீஷ்மர் அனைவரின் மனதிலும் சிறந்துநிற்கிறாரோ, அச்சபதமே பொருளற்றது என்று சொல்லும் தீர்ப்பினை நாம் எப்படித்தான் பொருள்கொள்ளமுடியும்?

பீமன் மந்தபுத்திக்காரன் என்ற துரியோதனனின் கூற்றும் சித்திரகுப்தனால் ஏற்றுகொள்ளப்படுகிறது.  அதற்குச் சமாதானமும் கூறுகிறார் கண்ணன்.

மகாபாரத மூலத்திலோ, துரியனைத்தான் மந்தபுத்திக்காரன்.என்று பலமுறை பீஷ்மரும், திருதராட்டிரனும், விதுரனும், உத்யோக பர்வத்தில் வசைபாடுகிறார்கள், பீமனை அல்ல.

மேலும், மாவீரனான அருச்சுனனைச் சரியானமுறையில் பதிலளிக்கவும் திராணியற்றவனாகவும், கர்ணனுடன் ஒப்பிடுகையில் மிகத் திறமைகுறைந்த வில்லாளனாகவுமே காட்டுகிறார்கள்.

இறுதிப்பகுதியில் கண்ணனும் தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றங்களுக்குப் பதிலிருக்கிறான்.  அதை அனைவரும் நேரில் கண்டு, கேட்டு இரசிக்கவேண்டிய ஒன்று.

எனவே, எவ்வளவுதான் விறுவிறுப்பாகக் கொண்டுசெல்லப்பட்டாலும், மூலத்தை இப்படி மாற்றிப் பாண்டவரைத் தாழ்த்திக் காட்டுவதை இக்கால நியதியாக ஆக்குவதும் ஏன் என்று தோன்றாமலில்லை.

இவ்வளவு வேறுபாடுகள் இருப்பினும், மகாபாரத மூலத்தை மறந்து, இது ஒரு நீதிமன்ற வழக்குத் தொடர் என்ற நினவுடன் பார்த்தால் வாதங்களை இரசிக்கமுடியும்.  அவ்வளவு விறுவிறுப்புடன் செல்கிறது இத்தொடர்.

***

 

தலபுராணம் என்னும் கருவூலம்-4

முந்தைய பகுதிகள்:

காஞ்சிப் புராணம் – வேதக் கருவூலம் (தொடர்ச்சி…)

நிலையாமைக் கோட்பாடு X உலகியற் கடமை – ஒரு சிந்தனை

புறநானூற்றுப் புலவர்கள் வெறும் காதலையும் போரையும் மட்டுமே சிந்தித்து முடிந்துவிடவில்லை. அவர்களிற் சிலர் வாழ்க்கையின் இயல்புகளையும் சிந்தித்தனர்; வாழ்க்கையின் குறிக்கோள், பயன் குறித்தும் சிந்தித்தனர். வாழ்க்கையின் முடிபும் பயனும் தெளிவாகத் தெரிந்த பின்னும் அவற்றை ஒருவர் அடையவிடாமல் சிலசக்திகள் தடைசெய்வதையும் கண்டனர். அவ்வாறு உலகின் உண்மை இயல்பைக் கண்டறிந்தவர்களில் ஒருவர், ஓரேருழவர் என்னும் பெயருடைய   புலவர்.

புறநானூற்றில் ஓரேருழவரின் பாட்டு மிகச்சிறியது; நான்கே அடிகளைக் கொண்டது. ஆனால் மிகப்பெரிய சிந்தனைகளைத் தன்பால் அடக்கிய பாடலது.

அப்பாடல்:

“அதளெறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஓடி யுய்தலுங் கூடுமன்
ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே”

இப்பாடல் பொருண்மொழிக் காஞ்சி என்னும் துறையில் அமைந்தது.

yanaiவாழ்க்கையின் இயல்புகளை நன்கு தெரிந்த தவமுனிவர் ஒருவர் தாம் தெளிந்ததுவும், உயிருக்கு இம்மை மறுமைகளில் உறுதி தருகின்றதுமாகிய பொருளை ஒருவர்க்குக் கூறுவதே, “பொருண்மொழிக் காஞ்சி” என்னும் இத்துறைக்குப் பொருளாகும்.

தொல்காப்பியம் காஞ்சி என்னும் துறையின் பொது இலக்கணத்தைப்,

“பாங்கரும் சிறப்பின் பல்லாற் றானும்
நில்லா வுலகம் புல்லிய நெறித்தே” (புறத்திணையியல் 23)

என்று கூறுகின்றது.

(பாங்கு – துணை. சிறப்பு என்பது வீடுபேறு. “சிறப்பீனும் செல்வமும் ஈனும்”- குறள் 31, பரிமேலழகர் உரை).

வீட்டின்பம் தனக்கு நிகர் இல்லாதது. நிலையான வீட்டின்பம் ஏதுவாக நோக்கின், உலகியலிற் காணப்படும் உயிர், உடல், இளமை, செல்வம்  யாவையும் நிலையாமையை உடையன, வீட்டின்பம் ஒன்றைத் தவிர வேறு ஒன்றும் நிலையாது என்பது இந்த நூற்பாவின் கருத்து.

நில்லாத உலகியல்பு கண்டு நிலைத்த வீட்டின்பத்தை அடைய உணர்த்துவதே ஞானம். இந்த ஞானத்தை அனுபவத்தின் வாயிலாக அடைந்தவருக்கும் வீட்டின்பமாகிய குறிக்கோளை நோக்கிச் செல்ல இயலாதவாறு உலகியல் கடமைகள் குறுக்கே நிற்கும்.  இத்தகைய மனநிலையில் இருந்த ஒரேருழவர் எனும் இச் சங்கப்புலவர் இப்பாடலைப் பாடினார்.

‘தோலைப் புடைத்து வைத்தாற் போன்ற நெடிய வெளிய களர் நிலத்தின்கண் ஒருவன் அலைக்கும் (துரத்தி வருத்தும்) புல்வாய் (மான்) எளிதின் ஓடிப் பிழைக்குமா போல யானும் நன்னெறிக்கண்ணே ஒழுகிப் பிழைக்கவுங் கூடும்; சுற்றத்தோடு கூடி வாழும் இல்வாழ்க்கை அதன்கட் செல்லவொட்டாது காலைத் தளையா நிற்கும்; ஆதலான் உய்தல் இயலாது.’

இந்தப் பாடலில் கவிஞனின் உள்ளம் ஞானவாழ்க்கை உலகவாழ்க்கை இரண்டனுக்கும் இடையில் சிக்கித் தவித்தல் நன்கு வெளிப்படுகின்றது.

arjuna_krishna_warriorsஇதுபோன்ற மனப்போராட்டம் அருச்சனனுக்கும் நிகழ்கின்றது.

போர்க்களத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அருச்சுனனின் உள்ளம் முதலில் ஞானமார்க்கத்தையே தெரிவு செய்கின்றது. பகைவர் எனப்பட்டுத் தன்னொடு போருக்கு வந்துள்ளவர்களைக் கண்ட அருச்சுனன் அவர்களெல்லாம் தன் சுற்றத்தார்களாக இருத்தலைக் காண்கிறான். சுற்றத்தார்களைக் கொன்று அழித்து அடையும் இராச்சியத்தை அவன் விரும்பவில்லை.

சத்துருக்களாகத் தோன்றினாரெல்லம் என்னுடைய மித்ருக்களாக இருப்பதால், இவர்களைக் கூரிய அம்பாலே கொன்று இராச்சியம் செய்வதில்லையென்று சொன்ன அருச்சுனன் பெற்ற ஞானம் உயர்ந்தஞானம் என்றும், அவனுக்குத் தேர்ப்பாகனாகிய கிருஷ்ணன் அவன் மனந் தேறிடச் (மயங்கிட?) ‘சர்வமும் நாமே கொல்வோம் நீ யன்று’ என்று அவனைச் சுற்றத்தாரைக் கொல்விக்க ஊக்கினான் என்றும் சிவஞான சித்தியார் பரபக்கம் ஒரு கருத்தைக் கூறிற்று.

(“பார்த்தனார் இரதமேறிப் படைதனைப் பார்த்துச் சார்பைக், கூர்த்த அம்பாலே எய்து கொன்றர சாளே னென்னத், தேர்த்தனி லிருந்து மாயை செய்துமால் கொல்லச் செப்பும், வார்த்தை’யே பகவத்கீதை என்று கூறுகின்றது சிவஞானசித்தியார் பரபக்கம்.)

பல்லாயிரம் பேரைக் கொன்று அசோகன் பெற்ற ஞானத்தை அருச்சுனன் யாரையும் கொல்லாமலே பெற்றான். “நில்லா தவற்றை நிலையின என்றுணரும், புல்லறி வாண்மை கடை” (331) எனத் தெய்வப் புலவர் கூறியவாறு, நிலையில்லாத இராச்சிய செல்வத்தை விரும்பி, நிலையான பழியைத் தேட அருச்சுனன் விரும்பவில்லை. இதுவே அவன் பெற்ற ஞானம். இத்தகையதொரு ஞானமே அரக்க குலத்தினனான வீடணனை, விபீஷ்ண ஆழ்வாராக்கியது.

இந்த நிலைமையின் மறுபக்கத்தையும் சிந்திக்க வேண்டும். ஒருக்கால், அருச்சுனன் போர்செய்ய மறுத்திருந்தால், அவனை, உலகம் ஞானி என்று கூறுமா, போருக்கு அஞ்சிய கோழை என்று இகழுமா, கடமையில் தவறியவன் எனப் பழிக்குமா?

rama_agastyaஇத்தகைய சிக்கல் இராமபிரான் வாழ்க்கையிலும் நேர்ந்தது  எனக் காஞ்சிப் புராணம் வீரராகவப் படலம் ஒரு கதையைக் கூறுகின்றது.

(இங்கு இராமபிரான் என்றது, குலசேகர ஆழ்வாரும் கம்பனும் தியாகையரும் போற்றிய இராமன் என்னும் பெயருடைய பரம்பொருளை அன்று. இங்கு இராமன் என்றது அயோத்தி என்ற நாட்டுக்கு உரியவனும், இலங்கை என்ற நாட்டை ஆண்ட இராவணன் என்னும் பகைவன் மீது படையெடுத்துச் சென்றவனுமாகிய ஓரரசனை.)

சீதாபிராட்டியை இராவணன் கவர்ந்து சென்றபின், இராமபிரான் அவளைத் தேடி அலைகின்றான். காஞ்சியம்பதியை அடைகின்றான். திருவேகம்பநாதரைத் துதித்துச் சீதையைப் பெற அருளவேண்டுகின்றான். திருவேகம்பரின் சந்நிதிக்குத் தெற்கே அமைந்துள்ள அகத்தீசுரத்திற்குச் சென்றான். அங்கு மலயமாமுனியைக் கண்டு வீழ்ந்து வணங்கினான். கவலையில் தோய்ந்துள்ள இராமனின் முகத்தைக் கண்டு, அகத்தியர் கவலைக்குக் காரணத்தை வினவுகின்றார். இராமன் நடந்த தனைத்தையும் கூறினான்.

மனைவியைப் பிரிந்திருந்த கவலையில் மூழ்கி இருந்த இராமனுக்கு அகத்திய முனிவர் உலகத்தின் நிலையாமை, உலகு உடல்கள் ஐம்பூதங்களாகிய சடத்தின் கலப்பினால் உருவானவை, பஞ்சபூதக் கூட்டரவால் எல்லாப் பொருள்களும் உருவானவையால் யாவும் உடன்பிறந்தவை, இருவினைப் பயனால் இன்பத்துன்பங்கள் தோன்றுகின்றன என்றெல்லாம் தத்துவ உபதேசம் செய்கின்றார். (ஆதி சங்கரரின் ‘நிர்வாண ஷட்கம்’ என்னும் தோத்திரநூலின் பொருளும் இது போன்ற உபதேசமே.)

இராமபிரான் அவற்றைக் கேட்கும் மனநிலையில் இல்லை. இராமபிரான் அகத்திய முனிவருக்குக் கூறிய மறுமொழி சிந்திக்கத் தக்கது.

“முனிவர் பிரானே! தாங்கள் கூறியது அனைத்தும் உண்மையே. இருந்தாலும் இப்பொழுது இது பொருந்துமோ? மனையவள் மாற்றான் கை அகப்பட்டு வருந்தும்போது நிலையாமை முதலிய தத்துவம் பேசிச் செயலற்று இருப்பவனைப் பித்தன் என்று உலகம் உரைத்திடும். ஆதலினால், பெரியோய்!, போர்க்களத்தில் பகைவரின் உயிரைப் பருகி வென்று, என் உயிரிற் சிறந்த சீதையை மீட்டபின், ஐயனே! நீ தெரிவிக்கும் நுண்ணிய தத்துவஞானத்துக்கு உரியவன் ஆவேன். நான் சொன்னவாறல்லாமல் என்னுளம் அடங்கிடாது” என உறுதிபடச் சொன்னான்.

“அத்த நின்னுரை முழுவதும் உண்மையே யானும்
இத்த லைக்கிது இணங்குமோ மனையவள் மாற்றான்
கைத்த லகப்பட்டுழித் தத்துவங் காண்போன்
பித்தன் என்றுல குரைத்திடும் ஆதலிற் பெரியோய்
பறந்த லைப்புகுந் தொன்னலர்ச் செகுத்துயிர் பருகிச்
சிறந்த சீதையை மீட்டபின் ஐயநீ தெரிக்கும்
உறந்த தத்துவ ஞானத்துக்கு உரியவன் ஆவேன்
அறைந்த வாறலது என்னுளம் அடங்கிடாது என்றனன்”

agastya_ramaஇராமனின் மனநிலையை அறிந்த அகத்தியர்,

“உன் கருத்து இதுவென்றால், நீ போரில் வெற்றி பெறும் வீரத்தை விரும்பியதால், ‘வீரராகவேசன்’ என்னும் பெயரால் ஒரு இலிங்கம் நிறுவி இக்காஞ்சியில் இறைவனை வழிபடுக.

இராவணனைச் சிறுவிரலா லடர்த்த இறைவன் உனக்கு அவனை வெல்லும் வல்லமை அளிப்பான்”

எனக் கூற, இராமன் அவ்வாறு வழிபட்டுப் பயன்பெற்றான் என்பது  பின் நிகழ்ந்த கதை.

‘நிலையாமை’ என்னும் தத்துவக் கோட்பாடு இந்தியத் தத்துவ ஞானங்களில் எல்லாம் பேசப்படுவதொன்றே.

வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களில் அடிபட்டு புண்பட்டுத் துன்பப்படும் நெஞ்சுக்கு இதமான மருந்து நிலையாமையைத் தெளிதல் அன்றி வேறொன்றும் இல்லை.

நிலையாமையே உண்மை எனினும் இந்தத் தத்துவம் எல்லோருக்கும் உரியதன்று. அதற்குரிய தீவிரதர மனப் பக்குவம் உடையவருக்கே இந்தத் தத்துவத்தின் பொருள் விளங்கும். அத்தகைய தீவிரதர மனப்பக்குவம் இல்லாதவருக்கு இந்த தத்துவத்தைக் கூறல் கேலிக் கூத்தாகிவிடும். அருச்சுனனையும் இராமனையும் போல உலகியற் கடமைகளைக் குறைவறச் செய்து முடித்தலே பிற அனைவருக்கும் உரியதாகும்.

தமிழரை அவமதித்த கனகவிசயரை வென்று, பத்தினித்தெய்வம் அமைக்கக் கற்கொண்டு வந்து, தன் உலகியல் கடமைகளை முடித்திருந்தான் சேரன் செங்குட்டுவன். அவன் மீது பொறாமை கொண்டிருந்த ஏனைத் தமிழ் மன்னர்கள் இருவரும் சேரன் செங்குட்டுவனின் வெற்றியை இழித்து உரைக்க, அவர்கள் இருவரையும் ஒறுக்கச் சீற்றம்கொண்டான். அப்பொழுது மாடலமறையோன் எழுந்து ‘பொருண்மொழிக்காஞ்சி’ யாகச் சேரனுக்கு அறவுரை வழங்குகின்றான்.

முதலில் சேரன் செங்குட்டுவன் பெற்ற மகத்தான வெற்றிகளையெல்லாம் கூறி, அவன் மனம் அமைதி கொள்ளும்படியாகப் புகழ்கின்றான்.

அதன் பின், அரசே! நீ வையகம் காவல் பூண்டு ஆண்டுகள் ஐயைந்திரட்டிச் சென்றன. நீ அறக்களவேள்வி செய்யாமல் மறக்கள வேள்வியே செய்வோனாக  உள்ளாய். உன் முன்னோரில், ‘கடற்கடம் பெறிந்த காவலனாயினும், விடர்ச்சிலை பொறித்த விறலோனாயினும் (இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்), பாலை பாடிய கெளதமனாரின் செய்யுளைக்கொண்டு அவரையும் அவருடைய மனைவியையும் மேனிலையுலகம் எய்துவித்தவனாயினும் (பல்யானைச் செல்கெழு குட்டுவன்) இன்னுமிவர்போன்ற மீக்கூற்றாளர்கள், பெருவீரர்கள் யாவரும் இப்பொழுது இல்லை. இதனால் யாக்கை நில்லாது என்பதை உணர்ந்தோய்.

enlightened_counsellingசெல்வம் நில்லாது என்பதை நீ வெற்றி கொண்ட தண்டமிழ் இகழ்ந்த ஆரியமன்னரிற் கண்டனை அல்லவா. இளமை நில்லாதென்பதை உன்னுடைய யாக்கையில் நீயே கண்டனை. ஒருவன் செய்வினை வழியில் ஆருயிர் சென்று பிறக்குமென்பது பொய்யில் காட்சியோர் பொருளுரையாகும். பிறந்திறப்போரெல்லாரும் போகும் பொதுநெறியில் உன் உயிர்போதலை யான் பொறேன். அறிவெல்லை கடந்தவனே! நீ வானவர் போற்றும் வழியாகிய வீட்டுநெறியில் செல்லல் வேண்டும்”

என்று நிலையாமையை உணர்த்தி ஞானமார்க்கத்தைக் காட்டி மாடல மறையோன் செங்குட்டுவனை ஆற்றுப்படுத்தினான்.

சேரன் செங்குட்டுவன் சினந்தணிந்து, ஆரிய அரசரைச் சிறைவீடு செய்கிறான்; நன்பெருவேள்வி முடித்தான்.

அருச்சுனன், இராமன், சேரன் செங்குட்டுவன் இம்மூவரின் மனநிலையை ஒப்பு நோக்கினால் எத்தகைய மனநிலை, நிலையாமை என்னுமுயரிய கோட்பாட்டை ஏற்கும் பக்குவமுடையதாகும் என்பது தெளிவாகும்.

நிலையாமை என்ற தத்துவத்துக்கும், தனிப்பட்ட வாழ்க்கையில் ஒருவன் கைக்கொண்டு ஒழுகுவதற்கும், நாடாட்சி போன்ற பொது வாழ்க்கையில் உலகியல் கடமைகளை ஒருவன் கட்டாயம் கடைப்பிடித்து ஒழுகுவதற்கும் உரிய எல்லைகளை வேதமதம் கற்பிக்கின்றது.

வேதமதத்தை எதிர்த்து, ‘நிலையாமையே நிலையானது’ என்ற கொள்கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்ட மதங்கள் பாரத நாட்டுக்கு அந்நியமாகப் போயின.