உலகம் இயங்க எப்படி ஒரு புவியீர்ப்பு சக்தி தேவைப்படுகிறதோ,(அப்படி) ஒரு நாடு ஒற்றுமையாக இயங்கவும் ஒரு ஈர்ப்பு சக்தி தேவைப்படுகிறது. இந்த ஈர்ப்பு சக்தியை ஒரு நாட்டின் சட்ட திட்டங்களோ அல்லது அரசியல் சித்தாந்தங்களோ வழங்க இயலாது. அந்த நாட்டில் வாழ்ந்த முன்னோர்களால் அவர்களது அனுபவத்தை / வரலாற்றை அடிப்படையாக வைத்துக் கட்டமைத்த கலாச்சாரப் பண்பாடுகளே அந்த நாட்டை ஒற்றுமைப்படுத்தும் ஈர்ப்பு சக்தியாக இருந்து அந்த நாட்டையும் அதன் நாட்டு மக்களையும் பாதுகாக்கிறது.
This could have severe effects on your health and may even lead to your health becoming worse. This medication lowers the amount of time clomiphene citrate cost your pet needs to be on antibiotics. It is available in two strengths: cialis and cenestin.
Viagra is not available without a prescription from a doctor. There is less support for patients with Zanesville epilepsy or autism who have had seizures. Gabapentin has a long history of use in the treatment of various seizure conditions, including generalized tonic-clonic seizures, complex partial seizures, and other paediatric seizures; it is also frequently prescribed for the management of neuropathic pain.
Thanks again for all of you, you are the reason why this forum has become such an awesome and fun community. The drug clomid price cvs Kāramadai is most commonly used for sexually transmitted infections (stis) as a preventive medicine used orally or as an injection. Buy generico amoxil 100mg canada - buy amoxicilline amoxil 25 mg canada in cialis canada.
இந்த ஈர்ப்பு சக்தியின் வீச்சு எங்கெல்லாம் குறைகிறதோ அந்தப் பகுதிகள் எல்லாம் சிதறிவிடுகின்றன. சில நேரங்களில் அது அழிந்தும் போகின்றன இதற்கு இந்தியா, பாக்கிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகள், கொரியா, ஸ்ரீலங்கா என பல்வேறு உதாரணங்களைச் சொல்லாம்.
நமது பாரத நாட்டில் உள்ள நமது கோயில்களும் அதனை ஒட்டிய கலாச்சாரங்களும் பண்பாட்டுச் சின்னங்களும் அதனை அடிப்படையாக வைத்துள்ள வரலாற்றுச் சம்பவங்களே நமது கலாச்சார ஈர்ப்பு சக்தியாக இருந்து நமது நாட்டை ஒற்றுமையாக இயக்கி கொண்டு இருக்கிறது. இத்தனை மொழிகளும் இத்தனை சாதிகளும் எத்தனையோ பிரச்சனைகள் இருந்தும் இந்த நாடு ஒற்றுமையாக இருப்பதற்கு, ”வேற்றுமையில் ஒற்றுமை” “ எல்லா மதமும் ஒன்று” என்று வாய் கூசாமல் பொய் பேசும் அரசியல்வாதிகளல்ல காரணம். வேறுபாட்டையே அடிப்படையாக வைத்து ஒற்றுமைப்படுத்தும் ஹிந்துத்துவத்தாலேயே இது சாத்தியமானது.
இதை நாம் உணர்ந்தோமோ இல்லையோ, நம்மை அழிக்க ஐரோப்பாவில் இருந்து வந்த கிறித்துவர்கள் நன்கு அறிந்து இருந்தார்கள். அதன் காரணமாகவே அவர்களால் நமது கோயில்கள், நமது உண்மையான வரலாற்றிக்கு ஆதாரமாக விளங்கும் கல்வெட்டுச் சாசனங்கள், பண்பாட்டுச் சின்னங்கள் இவற்றின் அழிப்பும் , அதனை அடிப்படையாக வைத்து வரலாற்றை அழித்தல் மற்றும் திரித்தல் போன்ற செயல்களும் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நடந்து வருகின்றன. பல இலட்சக் கணக்கான பாரத மக்கள் தங்களது மாசற்ற தியாகத்தாலும் வீரத்தாலும் நமது நாட்டை அழிக்க வந்த ஐரோப்பியக் கிறித்துவர்களை விரட்டி அடித்தனர்.
ஐரோப்பிய கிறித்துவர்கள் விரட்டி அடிக்கப்பட்டாலும் அவர்களால் உருவாக்கப்பட்ட கம்யூனிஸம், திராவிடம் , போலி செக்யூலரிசம் போன்ற அரசியல் சித்தாந்தங்களும் அவற்றை அடிப்படையாக வைத்து உருவான அரசியல் கட்சிகளும் தொடர்ந்து அவர்கள் பணியை செய்து கொண்டு இருக்கின்றன.
சிறந்த நிர்வாகம் மற்றும் வேலைப்பளு என்ற பெயரில் தனியாருக்கு நமது வளங்களைத் தாரைவார்க்கும் இத்தகைய அரசாங்கங்கள் அவையே சிறந்த நிர்வாகம் என்று சொல்லி அறநிலையத் துறை என்ற பெயரில் ஹிந்துக்களுக்குச் சொந்தமான கோயில்களை நிர்வகிக்க எடுப்பது நகைப்புக்குரிய விஷயம். இவர்களின் நிர்வாகச் சீர் கேடுகளாலும் கிறித்துவ, திராவிடர்களுடன் இணைந்து செய்த திட்டமிட்ட தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்ட நமது கலாச்சார ஈர்ப்பு சக்தி மையங்களான கோயில்கள் மற்றும் கல்வெட்டுகள் ஏராளம். தஞ்சைப் பெரிய கோயில் கூட இவர்களின் தாக்குதலில் இருந்து தப்ப முடியவில்லை என்பது வேதனையான விஷயம். கும்பாபிஷேகம் என்ற பெயரில் பல ஆயிரம் கோயில்களில் இது போன்ற விஷயங்கள் இன்றும் நடந்து வருகின்றன..
இவ்வாறு அழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் கோயில்களில் ஒன்று தான் விஜயபுரி கோவர்த்தனாம்பிகை உடனமர் நாகேஸ்வரர் திருக்கோயில். ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்தில் உள்ள பல ஆயிரம் வருடப் பழமையான இந்தத் திருத்தலம் மகாபாரத காலத்தில் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ஜீனன் மூலம் எழுப்பப்பட்டு, அவருக்குப் பிறகு பல மன்னர்களால் பாரம்பரியம் குறையாமல் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.
பாண்டவர்களின் வனவாசத்தில் கடைசி பதிமூன்றாம் வருடத்தில் அன்யாத வாசத்தின் பொழுது அனைவரும் மறைந்து இருத்து வாழ வேண்டும் என்ற நிபந்தனையின் காரணமாகத் தற்பொழுது தாராபுரம் என்று அழைக்கப்படும் விராடபுரத்திற்கு வந்தனர்.
பஞ்சபாண்டவர்களில் ஒருவரான விஜயன் இந்த திருத்தலத்தின் அருகில் உள்ள விஜயாபுரி அம்மன் என்று தற்பொழுது அழைக்கப்படும் அம்மனின் ஆலயத்தின் வன்னி மரத்தில் தான் தனது காண்டீபம் மற்றும் பல ஆயுதங்களையும் மறைத்து வைத்து, கோயிலில் திருநங்கையாக மாறி தாராபுரம் என்று அழைக்கப்படும் விராட தேசத்தில் மறைந்து இருந்தார். அன்யாத வாசத்தின் கடைசியில் துரியோதனன் உடன் நடந்த போரில் (விஜயன்) வெற்றி பெற்றான்.
தான் பெற்ற வெற்றிக்காக அந்த தலத்தில் எழுந்தருளி இருந்த நாகேஸ்வரருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் மக்களுக்குப் பயன் தரும் வகையிலும் இந்த நாகேஸ்வரர் திருக்கோயிலுக்குத் திருப்பணி செய்து விஜயபுரி என்று அழைக்கப்படும் விஜயமங்கலம் என்ற ஊரையும் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நிர்மாணித்தான். விஜயன் நிர்மாணித்ததன் காரணமாக இந்த இடம் விஜயபுரி என்றும் விஜயமங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது.
கொங்கு தேசத்தில் உள்ள 43 சிவ ஆலயங்களில் மேற்கு நோக்கிய உள்ள சிவாலயம் என்பது இதன் தனிச் சிறப்பு. இந்தக் கோயிலில் நாகங்கள் வந்து பூஜை செய்ததால் சிவபெருமானுக்கு நாகேஸ்வரர் என்ற திருப்பெயர் அமைந்தது. இது பற்றிய கல்வெட்டும் இந்தக் கோயிலிலேயே உள்ளது. இது சம்மந்தமான ஒரு சிலையும் இந்தத் திருக்கோயிலில் உள்ளது. இந்தத் திருத்தலத்தில் எழுத்தருளியுள்ள அன்னையின் பெயர் கோவர்தனாம்பிகை. அன்னைக்குக் கோயில் பிராகரத்திற்கு உள்ளேயே தெற்கு பகுதியில் தனி சன்னதி உள்ளது. அன்னையும் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
இந்த வரலாற்றுச் சிறப்பு மட்டும் இன்றி மற்றும் ஓர் சிறப்பும் இந்தத் திருத்தலத்திற்கு உண்டு. பொதுவாக ஒரு கோயிலில் சில கல்வெட்டுக்களைக் கண்டு இருப்போம். ஆனால் ஒரு கோயிலே கல்வெட்டாக இருப்பது இந்தத் திருத்தலத்தில் மட்டும் தான். கோயிலில் பார்க்கும் இடம் எல்லாம் கல்வெட்டுகள் உள்ளன. இந்த கோயிலின் அர்த மண்டபம், மகா மண்டபம், மகா மண்டபத்தின் முன் பகுதி என கோயில் முழுவதும் கல்வெட்டு பொக்கிஷங்கள் உள்ளன.
இது போன்ற ஒரு கோயிலை திருமுருகப் பூண்டியில் மட்டுமே காண இயலும். அதாவது தமிழ் நாட்டிலேயே இது போன்ற கோயில்கள் இரண்டு மட்டும் தான் உள்ளன. இதில் திருமுருகப் பூண்டிகோவில் மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக உள்ளது. இப்பொழுது சென்றாலும் அங்கு பாதுக்காக்கப்பட்டு உள்ள கல்வெட்டுகளைக் காணலாம். (ஏன் திராவிட அரசியல்வாதிகள் தொல்லியல் துறையின் கீழ் கோயில் வரக்கூடாது என்று சொல்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். தொல்லியல் துறைக்கும் அறநிலையத் துறைக்கும் உள்ள வேறுபாடும், அதிமுகவுக்கும் , திமுகவுக்கும் உள்ள வேறுபாடும் ஒன்று)
இந்த கோயிலில் மட்டுமே 36 வரலாற்று விஷயங்களைச் சொல்லும் தனிப்பட்ட 36 கல்வெட்டுகள் உள்ளன. 1000 வருட பழமையான கல்வெட்டுகள் கூட இந்தக் கோயிலில் உள்ளன. இதை பற்றிய விவரங்கள் சிலவற்றைக் கீழே உள்ள சுட்டியில் காணலாம்.
இத்தகைய சிறப்புகள் பல கொண்ட இந்தத் திருக்கோயில் தற்பொழுது ஹிந்து சமய அறநிலையத் துறை முறைகேடுகளினால் சீரழிந்து கொண்டு இருக்கிறது. இவ்வளவு பழமையான திருக்கோயிலின் தற்போதைய நுழைவாயில் மண்டபமும் அதன் மீது இருந்த சிறு கோபுரம் மற்றும் அதன் சிலைகளும் தற்பொழுது முழுமையாக உடைக்கப்பட்டு விட்டன. இதைப் பற்றிய படங்கள் கீழே உள்ளன. எத்தனை கோடிகள் செலவு செய்தாலும் தற்பொழுது உருவாக்க முடியாத அழகான மண்டபங்களை இடிக்க இவர்களுக்கு அனுமதி வழங்கியது யார் என்று எனக்கு புரியவில்லை. அவ்வளவு ஏன் இந்து சமய அறநிலையத் துறைச் சட்டப் புத்தகத்தில் கூட இது போன்ற ஒரு அதிகாரம் இவர்களுக்கு வழங்கப்படவில்லை.
இவ்வாறு இடிக்கப்பட்ட இடத்தில் தற்பொழுது ஐந்து நிலை இராஜ கோபுரம் கட்டப்பட உள்ளது. ( நமது முகவை போல தமிழ் உணர்வு கொண்ட ஒரு ஓதுவார்!! மூலம் இந்த திருப்பணி நடைபெறுவதாகக் கேள்வி). இதற்கு எல்லாம் பணம் அதாவது திருப்பணி காண்ட்ரேட்க்கு!! பணம் யார் தருகிறார்கள். எந்த கோயிலின் உண்டியலில் இருந்து எடுக்கப்படுகிறது என்பவை எல்லாம் மர்மமாகவே உள்ளன.
இராஜ கோபுரம் என்பதற்கு ஆலய ஆகமத்தில் அதிக முக்கியதுவம் கொடுக்கப்படவில்லை. மிகப் பெரிய இராஜ கோபுரங்கள் கோயில்களை மிலேச்சர்களிடன் இருந்து காப்பாற்ற, யானை முதலிய விலங்குகளைக் கொண்டு கோயில் தாக்கப்படும் பொழுது கொதிக்கும் எண்ணையை ஊற்றி கோயிலையும் மக்களையும் பாதுகாக்க மன்னர்களால் இடைக்காலத்தில் அதாவது பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டன. இராஜ ராஜன், கிருஷ்ண தேவராயர் போன்ற மாமன்னர்கள் தங்கள் தேசத்தின் குல தெய்வங்களுக்காகக் கட்டிய கோயில்களைத் தவிர மற்ற எல்லாக் கோயில்களிலும் கோயில் முன்வாசல் சிறு கோபுரங்கள் மற்றும் மண்டபங்களுடன் மட்டுமே காட்சி அளித்தன.
கோயில்களில் மிக முக்கியமாக இருக்க வேண்டியது நல்ல இயற்கைச் சூழலும் வேத ஆகமங்களும், நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடிய பாடல்களும் தான். ஆனால் அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்து சமய அறநிலையத் துறை இது போன்ற தேவையற்ற / கலாச்சார சீர்கேடுகளை கோயில் திருப்பணி என்ற பெயரில் செய்வதன் காரணம் ஏன் என்பது குறைந்த பட்சப் பொது அறிவு உள்ள மக்கள் கூட புரிந்து கொள்ளக்கூடிய விஷயமே.
இந்த அழிப்பு இப்பொழுது தொடங்கிய விசயம் அல்ல. கடந்த 1994 ஆம் ஆண்டே ஒரு கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது. இவர்கள் கும்பாபிஷேகம் என்ற பெயரில் நடத்திய கூத்தில் பல கல்வெட்டுக்களும் அரிய சிற்பங்களும் நாசமாக்கப்பட்டன. இவர்கள் நடத்திய கும்பாபிஷேகத்தின் இலட்சணம் என்ன என்பதை 1994 ஆம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் ஞாபகமாக இவர்கள் வைத்த ஒரு கல்வெட்டை வைத்தே தெரிந்து கொள்ளலாம். ஆயிரம் வருடம் பழமையான கல்வெட்டுகளின் மீது கொஞ்சம் கூட வரலாற்று அறிவே இல்லாத அரசு அதிகாரிகள் எதோ பெரிய சமயப் பணி செய்தது போல காட்டி கொள்ள தங்கள் பெயர்களை எழுதி ஒரு கல்வெட்டைப் பதித்து உள்ளனர். இது சம்மந்தமான படம் மேலே கொடுக்கப்பட்டு உள்ளது.
இது மட்டும் இன்றிப் பல இடங்களில் டைல்ஸ்(Tiles) ஒட்டிக் கோயிலின் பாரம்பரியத்தை அழித்து உள்ளனர். அது மட்டுமா? பல சிற்பங்கள் குப்பைகளாக கோயில் மதில் சுவர் ஓரங்களில் போடப்பட்டு உள்ளன.
இவ்வாறு 1994 ஆம் ஆண்டு இவர்கள் செய்த கும்பாபிஷேகத்திலேயே 30 சதவிகித புராதனம் அழிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்பொழுது புனர் நிர்மாணம் என்ற பெயரில் கோயிலை 100 சதம் அழித்து ஜவுளிக் கடை போல மாற்ற முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
பல மில்லியன் பணத்தை கோயில் மூலம் பெற்ற இந்து சமய அறநிலையத் துறை என்ற மதச்சார்ப்பு அற்ற அரசாங்க நிறுவனம் இந்தப் பழமையான கோயில்களுக்கு எந்தப் பராமரிப்புச் செலவும் செய்யவில்லை என்பதை இங்கு இணைக்கப்பட்டுள்ள படங்களே சாட்சி.
திருப்பணி என்ற பெயரில் இவர்கள் செய்யத் தொடங்கியுள்ள திருட்டுப்பணி இத்துடன் நிற்கப் போவது இல்லை. இந்தக் கோயிலைப் பற்றி விசாரிக்கும் பொழுது அதிர்ச்சி அளிக்கக் கூடிய மற்றொரு தகவலும் கிடைத்தது. அங்கு இராஜ கோபுர வேலைகளைச் செய்து கொண்டு இருந்தவரிடம் கோயில் திருப்பணி பற்றிப் பேசிய பொழுது பல அதிர்ச்சி அளிக்கும்விஷயங்களையும் சொன்னார்.
கோயில் முழுவதும் டைல்ஸ் ஒட்டப் போவதாகவும், கோயிலைச் சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் “SAND BLASTING” என்ற 2002 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட தொழில் நுட்பத்தின் மூலம் கோயிலை நாசம் செய்யப் போகிறார்கள் என்ற அதிர்ச்சி அளிக்கும் செய்தியையும் அளித்தார். என்னுடைய அனுபவத்தில் இவர்கள் இத்தோடு நிற்கப் போவது இல்லை. ஆகம விதிகளுக்கு புறம்பாக பல சன்னதிகளையும், பரிகார ஸ்தலமாக மாற்ற பல்வேறு புதிய மண்டபங்களையும் புதிய தெய்வங்களையும் அமைத்து கோயிலை வியாபாரத் தலமாக மாற்றப் போகின்றனர், நாகேஸ்வரர் என்ற திருப்பெயர் உள்ளதால் இதை ராகு கேது பரிகாரத் தலமாக மாற்றக் கூட இவர்கள் திட்டமிட்டு இருக்கலாம். அப்பொழுது தானே அந்த இடத்தைச் சுற்றி உள்ள இடங்களின் நில மதிப்பு உயரும். அதை வைத்து கழகக் கண்மணிகள் தொழில் செய்ய முடியும்.
இவர்களின் இத்தகையத் திருப்பணிகளின் முடிவில் ஒட்டு மொத்தக் கோயில் பழமையும் மாற்றப்பட்டு அதன் வரலாறு முற்றிலுமாக அழிக்கப்படும். அடுத்த சந்ததியினரிடம் இந்தக் கோயில் பல்லாயிரம் வருடம் பழமையானது என்று நாம் சொன்னால் நம்மைக் கண்டு நகைப்பர்.
இப்பொழுதும் கெட்டுவிட வில்லை மீதம் உள்ள 50 சதவிகிதக் கோயிலையாவது பாதுகாக்க நம்மால் முடியும்.
இந்த கோயிலில் தற்பொழுது நடைபெற்று வரும் புராதன அழிப்பை நிறுத்தவதோடு மட்டும் அல்லாமல் பழைய படி உடைக்கப்பட்ட மண்டபத்தை அதே கற்களை வைத்து அமைக்க வேண்டும் என்றும்,
கோயிலில் டைல்ஸ் போன்ற பொருட்களையோ அல்லது “sand blasting” போன்ற கோயிலை அழிக்கும் தொழில் நுட்பத்தையோ பயன்படுத்த கூடாது என்றும் இந்து சமய அறநிலையத் துறைக்குப் புகார் தெரிவிக்கலாம்.
அது மட்டும் இன்றி ஐந்து அடுக்கு இராஜ கோபுரம் போன்ற தேவையற்ற விஷயங்களில் பல இலட்சம் செலவு செய்வதற்குப் பதிலாக வேத ஆகமங்கள், தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை அடுத்த தலைமுறைக்குச் சொல்லிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கச் சொல்லலாம்.
அது மட்டும் இன்றி இதைத் தடுக்க இந்தக் கட்டுரையை ஆவணமாகக் கொண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம். அந்தப் பகுதியில் இருக்கும் ஹிந்து இயக்கங்களுக்கு இதை பற்றிய விஷயத்தைச் சொல்லி அவர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கலாம்.
விஜயமங்கலம் கோயில் சிதைவுகள் குறித்த மேலதிக புகைப்படங்களை இங்கே காணலாம்.
மேலும் இதைப் பற்றிய செய்தியைப் பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சி நிலையங்களுக்கும் கொடுக்கலாம் (பின்குறிப்பு: நசியனூர் கோயில் திருட்டு பற்றி பல செய்திதாள்களைத் தொடர்பு கொண்டு சொல்லியும், அதைப் பற்றிய செய்தியை வெளியிட முடியாது என்று சொல்லிவிட்டார்கள். ஏன் என்பது புரியவில்லை. நித்தியானந்தா என்ற கார்பரேட் சாமியாரை பற்றிப் பக்கம் பக்கமாக எழுதிய பேப்பர் புலிகள் இதைப் பற்றி எழுதச் சொல்லும் பொழுது மட்டும் பூனையாக மாறியதன் காரணம் புரியவில்லை)
சில பத்திரிகைத் துறையினரின் மின்னஞ்சல் முகவரிகள்:
The Hindu: letters@thehindu.co.in
புதிய தலைமுறை: news@gennowmedia.com
New Indian Express: writetous@newindianexpress.com
Dinamalar: dmrcbe@dinamalar.in
Dina thanthi: managerms@dt.co.in
இந்தக் கோயில் ஈரோடு மாவட்ட இந்து சமய அறநிலையத் துறையின் துணை ஆணையர் கண்காணிப்புக்குக் கீழ் உள்ளது. இந்தக் கோயில் நாகேஸ்வரர், சோமேஸ்வரர் கரியபெருமாள் வகையரா கோயில் என்று பல கோயில்களுடன் இணைக்கப்பட்டு, ம யுவராஜா என்ற நிர்வாக அதிகாரியின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இதைப் பற்றிய படமும் இத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது.
புகார் தெரிவிக்க வேண்டிய அதிகாரிகள் பற்றிய விவரங்கள்:
கோயிலின் நிர்வாக அதிகாரி:
மா யுவராஜ்
அருள்மிகு நாகேஸ்வர சோமேஸ்வர கரியபெருமாள் வகையரா திருக்கோயில்,
விஜயமங்கலம், பெருந்துறை வட்டம், ஈரோடு –
தொலைபேசி எண்: 9659042461
கோயில் நிர்வாகத்தின் தலைமை அலுவலரும், துணை ஆணையரும்
பெ தனபாலன்,
துணை ஆணையர் அலுவலகம்,
இந்து சமய அறநிலையத் துறை, ஈரோடு
தொலைபேசி எண்: 0424-51537
The Secretary, Tamil Development, Religious Endowments and Information Department,
Email: tamilreinfosec@tn.gov.in, Ph: +91-44-25672887, Fax: +91-44-25672021
இந்தியாவின் கலாச்சாரச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கான பொறுப்பில் இருக்கும் இந்திய அரசாங்கத்தின் தொல்லியல் துறை அதிகாரியின் விவரங்கள்:
Janhwij Sharma, Director (Conservation), ASI (Delhi)
Email ID: dircon.asi@gmail.com Ph: +91-11-23013316,
Sh. S.V. Venkateshaiah, Regional Director South Zone (Bangalore)
Email ID: rdsouth.asi@gmail.com Ph : +91 9449571424,
The commissioner, Department of Archaeology,
Email ID: tnarch@tn.nic.in, Ph: 044-28190023, FAX: 28190023
இந்த அதிகாரிகளை நீங்கள் தொடர்பு கொண்டு புகார்களை அளிக்கலாம்.
இது தொடர்பாக நீங்கள் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் நிர்வாக அதிகாரி (Asst public information officer) மற்றும் துணை ஆணையருக்கு (public information officer) க்கு இது குறித்த தகவல் வேண்டி விண்ணப்பம் செய்யலாம்.
சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்தக் கோயிலை மீட்கவும் அதன் பழமையைப் பாதுகாக்கவும் ஹிந்துகள் போராட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கோயிலைப் பற்றிய தகவல்களையும் அதன் படங்களையும் மின்னஞ்சல் செய்த நல் உள்ளம் கொண்ட ஹிந்து சகோதரர்க்கும் எனது நன்றிகள். ஆயிரம் வருட பழமையான கோதண்ட ராமர் கோயிலில் நடந்த கோயில் சிதைவை தனது பத்திரிக்கையில் (கம்யூனிஸ சார்பு உள்ள பத்திரிக்கையாக இருந்தும்) செய்தி வெளியிட்ட “THE HINDU” பத்திரிக்கைக்கு எனது நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.