கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 11

ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் அருளிய கிறிஸ்துமதச்சேதனம்

This drug may not be suitable for use during pregnancy. This drug is taken at regular intervals to keep the user from experiencing the same side effects that can be Parede clomid tablet cost caused by taking it on an irregular basis. Antiviral ivermectin resistance in human toxocariasis.

For the first week or two, i did not realize how much of a joke the kennedy administration was. These drugs may make you more susceptible Albufeira clomid prices at clicks south africa to infections and viruses. Online clomid supply in delhi ncr the pharmacy will offer you a complete consultation on the process and how it is safe and effective.

Do you need some natural remedies that can help you? This site uses cookies to provide you canesten 10g price Subotica with a personalized user experience. Buy online dapoxetine tablets from sildenafil online.

பகுதி 1

பதிஇயல்

சன்மானமும் தண்டனையும்: நியாயத்தீர்ப்பு

உலகம் அழியப்போகின்றது, அதன் முடிவு  நெருங்கிவிட்டது என்று இன்றுவரை கிறிஸ்தவ மிஷநரிகள் பிரச்சாரம் செய்துவருவதை நாம் அறிவோம்[1]. கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுள் ஒன்றான நியாயத்தீர்ப்பு என்பது உலகின் இறுதி என்ற அவர்களது பிரச்சாரத்தோடு தொடர்புடையது. இந்தக்கோட்பாட்டைப் புரிந்துகொள்ளாமல் கிறைஸ்தவத்தைப் புரிந்து கொள்வது சாத்தியமில்லை.

உலகின் இறுதியில் மாண்டுபோன மனிதர்கள் அனைவரும் தமது உடல்களோடு  உயிர்பெற்று எழுந்துவருவார்கள். அப்போது ஜெஹோவாவின் ஏககுமாரராகிய இயேசு தோன்றி மனித உயிர்களையெல்லாம் விசாரித்து நியாயத்தீர்ப்பு வழங்குவார். எவரெல்லாம் அவரை விசுவாசித்தார்களோ, அவர்கள் எல்லாப்புலன் இன்பங்களையும் தடையில்லாமல் அனுபவிக்ககூடிய வசதிகள் நிறைந்த ஹெவனுக்கு(சொர்க்கம்?) அனுப்பப்படுவார்கள். அவரை விசுவாசிக்காதவர்கள் எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் ஹெல்லில் (நரகத்தில்?) இடப்பட்டு மீளமுடியாத துன்பத்தில் ஆழ்த்தப்படுவார்கள்.  நெருப்பு உடலைத் தகிக்கும் ஆனால் உடல் அழியாது துன்புற்றுக்கொண்டே இருக்கும். இறுதித்தீர்ப்பு அல்லது நியாயத்தீர்ப்பு என்னும் கிறிஸ்தவக்கொள்கையின் சாராம்சம் இதுதான்.

இதைக் கிறிஸ்தவர்கள் இன்றும் நம்புகின்றார்கள். விவரம் அறியாதவர்களை மதமாற்றும் கருவியாக மிஷநரிகளால் இந்தக்கோட்பாடு, காலம் காலமாகப்பயன் படுத்தப்பட்டு வருகின்றது. இந்த உலகில் எப்படி வாழ்ந்தாலும் இயேசுவை விசுவாசித்தால் சொர்க்கத்துக்குப் போகலாம் என்பது பரவலான கிறைஸ்தவ நம்பிக்கையாக இன்றும் இருப்பதை நாம் காணமுடிகின்றது. 

இந்தப்பகுதியில் ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் தர்க்கப்பூர்வமாக நியாயத்தீர்ப்பு என்ற கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கோட்பாட்டினை நிராகரிப்பதைக் காண்போம்.  நியாயத் தீர்ப்புக்கோட்பாடு மட்டுமல்ல, ஜெஹோவா, இயேசு ஆகியோரின்  நீதிமான்மையும், தெய்வீக இலக்ஷணங்களும் ஸ்ரீலஸ்ரீ சுவாமிஜி அவர்களால் கேள்விக்குட்படுத்தப்படுவதை இங்கே நாம் அறியலாம்…   

***

மரணித்த மனித உயிர்கள் உறைவது எங்கே?

ஓ கிறிஸ்தவப் பிரச்சாரகர்களே!

உலகத்தின் முடிவில் நியாயத்தீர்ப்பு நாளில் இயேசு நீதிபதியாகத் தோன்றுவார் என்று நீங்கள் சொல்கின்றீர்கள்! அப்படியானால் இறுதித்தீர்ப்புக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்புவரை செத்துப்போன மனித உயிர்கள் எங்கே இருக்கும்? சொர்க்கத்திலா, நரகத்திலா, வேறெங்காவதா? மனித உயிர்கள்[2](Soul) வேறெங்கோ இருப்பார்கள் என்று நீங்கள் சொல்லலாம். அப்படியானால் ஆதாம், அபிரஹாம் போன்றோர்கள் நியாயத்தீர்ப்புக்கு நெடுங்காலத்துக்கு முன்பே சொர்க்கத்திற்கு சென்றார்கள் என்று பைபிள் சொல்லுவது பொய்யாகிவிடுமே!

       மனித உயிர்கள் தமது உடல்களைப் பிரிந்தவுடன், மரணமடைந்தவுடன் சொர்க்கத்திற்கு சென்று இன்பத்தையோ அல்லது நரகத்தினை அடைந்து துன்பத்தையோ அனுபவிக்கும் என்றால் நியாயத்தீர்ப்பு நாளுக்கோ, அதில் இயேசுவின் விசாரணைக்கோ எந்தவித அவசியமும் இல்லையே! இன்னமும் நீங்கள் மனித உயிர்கள் நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்டுத்தான் ஆகவேண்டும், நியாயத்தீர்ப்பு கட்டாயமானது என்று சொல்வீர்களா? அப்படியானால் ஏற்கனவே சொர்க்கத்தில் இருந்த மனித உயிர்கள் நரகத்துக்கும், நரகத்தில் அல்லலுற்ற மனித உயிர்கள் சொர்க்கத்துக்கும் செல்ல வாய்ப்புண்டா? அப்படியொரு வாய்ப்புமில்லாமல் இருந்தால் நியாயத்தீர்ப்பு என்பதே நோக்கமற்றதாக, பயனற்றதாக, பொருளற்றதாக ஆகிவிடுமே! மாறாக, ஏற்கனவே சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ சென்றவர்கள் அங்கேயே இருப்பார்கள். மற்றவர்கள் மட்டுமே இயேசுவால் நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று நீங்கள் சொன்னால், நியாயத்தீர்ப்பின் நியாயமே கேள்விக்குள்ளாகும். எப்படிப்பார்த்தாலும் நியாயத்தீர்ப்பு நாளிலே மனித உயிர்கள் இயேசுவால் நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தப்படும் என்பது பொய்யானது, புனைவு, கற்பிதம்தான்!

நீதிபதியாக இயேசுவுக்கு தகுதியுண்டா?

Image result for judgement day cartoonநியாயத்தீர்ப்பு நாளிலே இயேசு ஒவ்வொரு மனித உயிரின் செயல்பாடுகளையும் ஆராய்வார் என்று உங்கள் பரிசுத்த வேதாகமமாகிய பைபிள் சொல்கின்றது. தாம் படைக்கப்படுவதற்கு முன்னர் பாவமோ புண்ணியமோ எதையும் அறியாத — செய்யாத மனித ஜென்மங்களில் சிலர் தமது வாழ்வில் துன்பத்தையே அனுபவிக்கவும், மற்றவர்கள் இன்பத்தையே துய்க்கவும் செய்கின்றனர். இதற்கெல்லாம் அவர்கள் யாரும் காரணமில்லை என்பதால் அவர்களைப்படைத்த இயேசுவேதான் அதற்குக் காரணமாக இருக்கமுடியும். அப்படியானல் இது ஓரவஞ்சனை அல்லவா! ஓரவஞ்சனையுள்ள ஒருவர் எப்படி நீதிபதியாக இருக்கமுடியும்? நியாயத்தீர்ப்பு வழங்குவதற்கு எந்தத் தகுதியும் இயேசுவுக்கு இருப்பதாகத் தெரியவில்லையே!

 நியாயத்தீர்ப்புக்கு  அடிப்படை பைபிள் என்பது நீதியா?

       இறுதித்தீர்ப்பு நாளில் எந்த சாஸ்த்திரத்தை அல்லது புனிதநூலைக்கொண்டு இயேசு மனித உயிர்களை நல்லவை, தீயவை என்று நிர்ணயிப்பார்? அவர் பரிசுத்த வேதாகமம் என்று உங்களால் சொல்லப்படும் பைபிளைத்தான் நியாயத்தீர்ப்புக்குப் பயன்படுத்துவாரா? பைபிளிலே பல மாறுபட்ட பதிப்புகளும், முரண்பட்ட கருத்துக்களும் இருக்கின்றன. அதில் எவற்றைக்கொண்டு அவர் நியாயத்தீர்ப்பை வழங்குவார் என்று உங்களால் சொல்லமுடியுமா?

       கிறிஸ்தவர்களை விசாரிப்பதற்கு நியாயத்தீர்ப்பின் அடிப்படியாக பைபிள் இருக்குமென்றால், பைபிளைப்பற்றியே கேள்விப்பட்டிருக்காத மக்களை விசாரிப்பதற்கு எந்த நூலை இயேசு பயன்படுத்துவார்?

       கிறிஸ்துவையோ பைபிளையோ அறியாத மக்களை விசாரிப்பதற்கு நல்லது எது, கெட்டது எது, என்று சொல்லும் அவரவர் மனசாட்சியை இயேசு பயன்படுத்துவார் என்று உங்களால் சொல்லமுடியுமா? அப்படியானாலும் அவர்களுக்கு நல்லது எது, கெட்டது எது என்று போதித்த அவர்களது மரபார்ந்த சாஸ்திரங்களைத்தான் அவர் நியாயத்தீர்ப்புக்குப் பயன்படுத்தவேண்டும்?

       ஆகவே, இயேசு கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை விசாரிப்பதற்கு அவரவர் மனசாட்சியைப் பயன்படுத்துவார் என்று  நீங்கள் சொன்னால் பைபிள்மட்டுமே மெய்யான புனிதநூல் — மற்ற மதங்களின் சாத்திரங்கள் எல்லாமே பொய் என்ற உங்களது அடிப்படையான நம்பிக்கை, கருத்து, பிரச்சாரம் தவிடுபொடியாகிவிடுமே!

மாறாக, அனைவரும் பைபிளின் அடிப்படையிலே நியாயத்தீர்ப்பு நாளிலே விசாரிக்கப்படுவார்கள் என்று நீங்கள் வாதாடலாம். ஆனால் அது இரக்கமற்ற அநீதியானதாகும். கிறிஸ்தவர் அல்லாதவர்களை, அவர்தம் வாழ்நாளில் அறியாத புனிதநூல் விதிக்கும்    நெறிமுறைகளின்படி வாழவேண்டும் என்று எதிர்பார்ப்பது கொடுமையிலும் கொடுமை அல்லவா? ஆகவே, இயேசுவிடத்தில் நியாயத்தீர்ப்பு நாளில் விசாரணைசெய்து நீதிவழங்குவதற்கு பொதுவான சாத்திரமோ சட்டமோ இல்லை என்பதும் தெளிவு.

இறுதித்தீர்ப்பு நாளிலே தன்னை நம்பாத விசுவாசிக்காத மனித உயிர்களை ஹெல் [Hell] என்னும்  எரிநெருப்பிலே, நரகத்திலே தள்ளுவார் என்று நீங்கள் சொல்கின்றீர்களே! தாயின் கருவரையிலே மரித்துப்போன மனித உயிர்கள் பலகோடி இருக்குமே! பிறக்கும்போது இறந்த குழந்தைகளும் பலப்பல இருக்குமே! பார்வையற்றவர்கள், காதுகேளாதவர்கள் எனப்பலப்பல மனிதர்கள் இருந்திருப்பார்களே!

கிறிஸ்தவமே வழக்கில் இல்லாத நாடுகளில், தமது சாஸ்திரங்களின்படி நேர்மையாக வாழ்ந்தவர்கள் பலப்பலர் இருந்திருப்பார்களே! இவர்களுக்கெல்லாம் இயேசுவையோ பைபிளையோ அறிவதற்கோ நம்புவதற்கோ, விசுவாசிப்பதற்கோ வாய்ப்பு எதுவுமே இருந்திருக்காதே! அப்படிப்பட்டவர்களை நரகத்தில் இடுதல் கொடுமையானது, அநீதியானது. அது ஆண்டவனின் செயலாகவும் இருக்கமுடியாது.

 பைபிளைப் படித்தபின்னும் கிறிஸ்தவரல்லாதவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். பைபிளில் உள்ளவை கடவுளின் வார்த்தைகள் என்றக்கருத்தை அவர்கள் நம்பாமல் இருந்திருக்கலாம். இயேவை நம்பவோ விசுவாசிக்கவோ அவர்கள் மறுத்திருக்கலாம். ஆனாலும் அவர்கள் தமது மதப்பெரியார்கள் சொன்ன நெறிமுறைப்படி வாழ்ந்திருக்கலாம். அத்தகைய நல்ல மனிதர்கள் சொர்க்கத்துக்குப் போவார்களா, இல்லை எரிநரகத்தில் இடப்படுவார்களா? அவர்களுக்கு சொர்க்கம், நித்தியவாழ்வு கிடைக்கும் என்றால் இயேசுவை விசுவாசிக்காதவர்களுக்கு நரகம் என்ற உங்கள் பிரச்சாரம் பொய்யாகிவிடுமே!

 முதல்பாவத்துக்கு மூலவரான ஜெஹோவா நீதிபதியா?

உங்கள் தேவனாகிய ஜெஹோவா தூய்மையற்ற புலன்கள், மதம், மாத்சரியம் காமம், கோபம், போன்ற தீயகுணங்களோடுதானே மனிதர்களைப் படைத்தார்? அதே ஜெஹோவாதானே தன்னைத்தவிர வேறு யாராலும் பின்பற்றவே முடியாத சட்டங்களை அத்தகைய மனிதர்களுக்கு வழிகாட்ட அளித்தார். அப்படிப்பட்ட உங்களது தேவன் அதே மனிதர்களைப் பாவிகள் என்று  நியாயத்தீர்ப்பு நாளிலே தீர்ப்பளிப்பது சரிதானா? நரகத்தில் தள்ளுவதும் முறையோ?

மனிதர்களைப் படைத்தபோதே அவர்களைத் தூய்மையற்றவர்களாக ஜெஹோவா என்னும் தேவன் படைக்கவில்லை என்று நீங்கள் வாதாடலாம். அப்படியானால் மனிதர்களிடத்தில் அசுத்தம் வந்தது எப்படி? அவர்கள் தூய்மையற்றவர்களானது எப்படி?

அந்த மனித உயிர்கள் முதல் பாவத்தினால் தீயகுணங்களைப் பெற்றனர் என்று நீங்கள் வாதாடலாம். அப்படியானால் ஆதிமனிதர்கள் முதல் பாவத்தைச் செய்யக்காரணமான பேதமை, மடமை அவர்களுக்கு வந்தது எப்படி? எப்படிப் பார்த்தாலும் ஆதிமனித மனித உயிர்கள் தூய்மையற்றவர்களாகவே ஜெஹோவா என்ற உங்கள் தேவனால் படைக்கப்பட்டன என்பதாகத்தானே தெரிகின்றது?

 ஆதியில் — படைப்பின் ஆரம்பகாலத்தில் — எது எப்படி நிகழவேண்டும் என்று ஜெஹோவா விதிக்கவில்லை என நீங்கள் வாதாடலாம். அப்படியானால் ஜெஹோவாவிற்கு முற்றறிவோ, ஞானமோ, அல்லது சர்வவல்லமையோ இல்லை என்பதாக அது பொருள் தந்துவிடும். ஜெஹோவாவிற்கு அத்தகைய வல்லமை இருந்திருந்தால் எது நடக்கவேண்டும் என்பதை அவர் ஆதியிலே நிச்சயம் செய்திருப்பார்! ஜெஹோவா நிச்சயித்தபடி ஆதிமனிதர்கள் நடந்துகொள்ளவில்லை, அவர்கள் வாழ்வு நகரவில்லை என்று நீங்கள் கூறினாலும் சர்வவல்லமை, சர்வக்ஞதை அவருக்கு இல்லை என்றே பொருள்பட்டுவிடும். ஆகவே ஜெஹோவாவின் சட்டப்படியே, திட்டப்படியே எல்லாம் நிகழ்கின்றன என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

  adam-and-eveஇவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது ஒரு சிறு குழந்தைகூட ஜெஹோவாவோ அல்லது அவரது ஏகபுத்திரனான ஏசுவோ நீதிமான் அல்லர் என்பதைப் புரிந்துகொள்ளும். ஜெஹோவா ஆதிமனித மனித உயிர்களை தூய்மை அற்றவைகளாகப் படைத்தார்! அவர்களுக்கு அறிவைத்தரும் மரத்தைப்படைத்து, அதன் கனிகளை உண்ணாதே என்று உத்தரவிட்டார்! அவரேதான் அவர்களை ஆண்டவன் கட்டளையை மீறத்தூண்டிய சாத்தானையும் ஏற்கனவே படைத்திருந்தார்! ஆக, ஆதிமனிதர்கள் செய்த முதல்பாவத்திற்கு எல்லாவகையிலும் ஜெஹோவாவின் தவறுகளே காரணமாக இருந்திருக்கின்றன. அத்தகையவர் கருணையுள்ளவராக தம்மைக் காட்டிக்கொண்டு தம்முடைய பிள்ளையின் தியாகத்தால் மனிதர்களின் பாவங்களைத் தாமே ஏற்றுக்கொண்டு அவர்களைத் துன்பங்களிருந்து மீட்பார் என்பது நாடகமன்றி வேறென்ன! மனிதர்களின் துன்பங்களுக்கெல்லாம் காரணமான படைப்பின் நாயகனே நீயாயத்தீர்ப்பு நாளிலே அவர்களுக்கு நீதியும் வழங்குவார் என்பதும் அநீதியல்லவா? தம்மைப் பின்பற்றாதவர்களை நரகத்தில் தள்ளுவார் என்பதும் அநீதியன்றோ! குற்றங்களுக்கு மூலகாரணரான ஜெஹோவாவே குற்றவாளிகள் என்று யாரையும் தண்டிப்பார் என்பதும் அநீதிதான்.

  இயேசுவை நம்பாமல் விசுவாசிக்காமல் இருப்பதே பாவம் என்றும் உங்கள் பைபிள் சொல்கின்றது. அதேசமயத்தில் இயேசு பிறப்பதற்கு முன்னரும் அதற்குப்பின்னரும் மனித உயிர்கள் செய்தபாவங்களுக்காக அவர் துன்புற்றார் என்றும் சொல்கின்றீர்கள். அப்படியானால் அவரை விசுவாசிக்காதபாவமும் இயேவைத்தானே சேரவேண்டும்? உலகில் தோன்றிய, தோன்றப்போகும் மனித உயிர்களின் பாவங்களையெல்லாம் இயேசுவே தன்மேல் ஏற்றுக்கொண்டார் என்றுதானே உங்கள் பரிசுத்தவேதாகமம் சொல்லுகின்றது? அப்படியானால் இயேசுவே அவர்கள் அனுபவிக்க வேண்டிய நரகத்துயரை அனுபவித்தாக வேண்டுமே! அப்படியிருக்க அவரை நம்பாத மனித உயிர்களை எரிநரகத்தில் அவர் இடர்ப்படவிடுவார் என்பது அநீதி அல்லவா?

இறுதித்தீர்ப்பைப்பற்றிய மேற்கண்ட தவறும் தண்டனையும் என்ற எமது விவாதமும் இயேசுவுக்கும் அவரது பிதாவாகிய ஜெஹோவாவுக்கும் கடவுளுக்குரிய தெய்வீகத்தன்மைகள், லக்ஷணங்கள் ஏதும் இல்லை என்பதை தெளிவாக்குகின்றன.

குறிப்புகள்:

[1] மாயன் காலெண்டரை வைத்து சமீபகாலத்தில் இவர்கள் செய்த பிரச்சாரத்தை, மதமாற்ற முயற்சிகளை நாம் இங்கே நினைவு கூறலாம். “உலகின் முடிவு நெருங்கிவிட்டது, இயேசுவை விசுவாசித்தால் சொர்க்கத்துக்குபோய் சுகமெல்லாம் அனுபவிக்கலாம். இல்லையேல் நரகத்தில் எரிந்துகொண்டே இருப்பீர்கள். கிறிஸ்தவராகுங்கள்!” என்பதே அவர்தம் பிரச்சாரம். 

[2]  Soul என்றக் கிறிஸ்தவக்கருத்துருவும் ஆன்மா, உயிர் என்ற பாரதியக்கருத்தும் வேறுபட்டவை. மனிதருக்குமட்டுமே மனித உயிர் உண்டு என்பது கிறிஸ்தவ நம்பிக்கை. ஜெஹோவா ஆதியில் படைத்த மனிதர்களின் சந்ததியினரே மனித உயிர்கள். ஆகவே இங்கே மனித உயிர்கள் என்பது மனித உயிர்களுக்கு இணையாகப் பயன்படுத்தப்படுகின்றது.