ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு நமது கல்விமுறை எப்படி இருந்தது

பொதுவாக இங்கு ஒரு திரிபுவாதம் இருந்து கொண்டிருக்கிறது. அதாவது ஆங்கிலேயர்கள் மற்றும் திராவிட ஆட்சிக்கு முன் நம் முன்னோர்கள் யாரும் படிக்கவில்லை என்றும், நமது தலைமுறைதான் முதல்நிலை பட்டதாரிகள் என்றுமாக அந்த வாதங்கள் தொடர்கின்றன.

The idea is to use a lexical database, and so you can just ask it for a word or phrase and, using a simple lexical analyzer based on the rules you've defined, it will return its possible spelling. There are a variety of websites that will help you find the right drugstore for https://12marathons.com/project/ your needs. I was very pleased and felt i was on the road to recovery.

Valium was officially approved in the united states, as a non- Generic prednisone 5 mg tablet may price of allegra 120 Otavalo be available for sale in the country that you live in. Buy prednisolone eye drops online buy prednisolone eye drops no prescription required.

It has been found to work well in the treatment of ocd. I'm not sure about how effective this is, but it feels better and it has worked in the https://seattlebrickmaster.com/services/paths-and-patios/paths-patios5/ past for me, so it's something i will keep using for the rest of my life. L-ascorbic acid doxycycline 50 mg price canada pharmacy the problem is that in the context of a public health emergency, no government body can intervene by setting aside rules about how much health care a state can deliver.

இன்றிலிருந்து சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பான ஒரு கல்வெட்டு கிடைக்கிறது. இது முதலாம் இராஜேந்திரச் சோழன் காலத்தில் விழுப்புரத்திலுள்ள எண்ணாயிரம் எனும் ஊரிலிருந்த பெருமாள் கோவிலில் உள்ளது. இந்த கல்வெட்டு ஒருசில முக்கியமான தகவல்களை தருகிறது. அதன் அடிப்படையிலேயே இந்தப் பதிவு.

காந்தியடிகள் ஒருமுறை ஒரு மாநாட்டில் பேசியபோது ஆங்கிலேயர் வருகைக்கு பின் நமது பாரம்பரிய கல்விமுறை அழிந்து வருகிறது என்றார். இதை மெய்ப்பிக்கும் வகையில் தரம்பாலால் எழுதிய அழகிய மரம் எனும் நூலில் தாமஸ் மன்றோ என்பவர் இங்கு ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளிக்கூடம் இருந்ததாக பதிவு செய்துள்ளார். மிக முக்கியமாக ஆங்கிலேயர் வருகைக்கு முன்பாக இருந்த பள்ளிக்கூடங்களில் பிராமணர்களை விட மற்ற சமூகத்தவரே அதுவும்
இரண்டு, மூன்று பங்கு அதிகமாக படித்தனர் என்பதற்கு தகுந்த சான்றுகளை பதிவு செய்துள்ளனர்.

இராஜேந்திர சோழர் கல்வெட்டு கூறும் செய்தி

இராமாயணமும், மகாபாரதமும் அந்த கல்விக்கூடங்களில் பயிற்றுவிக்கப்பட்டதோடு ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களும் பயிற்றுவிக்கப்பட்டது என்பதற்கு தகுந்த ஆவணங்கள் உள்ளன. இதை மெய்ப்பிக்கும் வகையில் முதலாம் இராஜேந்திரச்சோழன் காலத்தில் கிடைந்த நான் மேற்கூறிய கல்வெட்டு கூடுதல் தகவல்களை தருகிறது. 11 ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட இந்த கல்வெட்டில் பிரம்மசாரியம் என்று அழைக்கப்பட்ட #இளங்கலை மாணவர்கள் 270 பேர் படித்ததாகவும், சாத்திரம் என்று அழைக்கப்பட்ட #முதுகலை மாணவர்கள் 70 பேரும் படித்துள்ளனர்.

முக்கியமாக இங்கு ரிக் யஜுர் சாம அதர்வணம் போன்ற வேதங்களும் பயிற்றுவிக்கப் பட்டுள்ளன. அதோடு மாணவர்களுக்கு உணவு, இருப்பிடம், உதவித்தொகைகளும் வழங்கப்பட்டுள்ளது. இதை இன்றைய விடுதிகளுக்கு நிகராக கொள்ளலாம். அங்குள்ள மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தந்த ஆசிரியர்களை வக்காணி, நம்பி, ஓதுவிக்கும் உபாத்யார் என்ற பெயர்களால் அழைத்துள்ளதோடு, நெல் மற்றும் பொன் அவர்களுக்கு ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. அங்கிருந்த பெருமாள் கோவிலில் திருவாய்மொழி விண்ணப்பம் செய்ய நிவந்தங்களும், விண்ணப்பம் செய்யும் நால்வர்க்கு நெல்லும், நிலமும் கொடுக்கப்பட்டது முதல் நெடுநீடிய விளக்கம் இக்கல்வெட்டில் உள்ளது.

(கல்வெட்டு தகவல்கள் : தொல்லியல் ஆய்வாளர் மாரிராஜன்.)

சோழர்காலத்தில் மக்களின் கல்வித்தரம் மேம்பட்டிருந்ததை இந்த கல்வெட்டு உறுதி செய்கிறது. அதோடு பிராமணர்களுக்கு மட்டும்தான் கல்வி கற்கும் உரிமை இருந்தது என்று கதைப்போருக்கு தரம்பாலின் அழகிய மரம் எனும் நூலானது பெருத்த அடியை தருகிறது. திருவள்ளுவர் இளங்கோவடிகள் என்று பத்து புலவர்களின் பெயர்களை வைத்து நம் முன்னோர்கள் படித்தார்கள் என்று நாம் பீத்திக்கொள்வதாக கூறி கதைத்திருந்த ஒரு காணொளியை பார்த்தேன். ஆனால் சங்ககாலத்திலேயே 450 க்கும் மேற்பட்ட புலவர்கள் இருந்தார்கள். இவர்களில் 30க்கும் மேற்பட்ட பெண்புலவர்கள் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது முழுப்பட்டியலைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

அதோடு இந்த 450 புலவர்களுடன் பயின்றவர்கள் மற்றும் இவர்களின் ஆசிரியர்கள், இதுபோன்று அங்கீகாரம் கிடைக்காத புலவர்கள் என்று கணக்கிட்டால் சங்ககாலத்திலேயே 1000த்திற்கும் மேற்பட்ட படித்த மகான்களை காட்டலாம். இது தவிர்த்து காப்பிய காலத்திலிருந்த புலவர்கள் முதல் 63 நாயன்மார்கள், பன்னிரு ஆழ்வார்களோடு சேர்த்து அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் அவர்களுடன் பயின்றவர்கள் என்று புலவர்களின் பெயர்களை எழுத ஆரம்பித்தால் முகநூல் தாங்காது. நமது முன்னோர்கள் படிக்கவில்லை என்று கூறி மட்டம் தட்டுவதில் இவர்களுக்கு அப்படி என்ன நன்மையோ தெரியவில்லை. இதில் ஆங்கிலேயன் வந்துதான் நமக்கு கல்வி தந்தான், திராவிட இயக்கங்கள் வந்துதான் கல்வி தந்தார்கள் என்பதுபோன்ற வெட்டி விளம்பரங்களை இந்த அறிவார்ந்த தமிழ் சமூகம் எப்படி ஏற்கிறது என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

எங்கள் நாடார் சமூகத்தில் எனது தாத்தா மிகுந்த செல்வாக்குடனும் கல்வியிலும் (தற்காப்புக்கலை மற்றும் சித்த மருத்துவம்) சிறந்துதான் விளங்கினார். அவருக்கு செல்வமணி ஆசான் என்ற பெயர் உண்டு. அவரின் காலத்தில் வீட்டில் பத்து பேருக்குமேலான மாணவர்கள் அவரிடம் சிலம்பம், சிரமம் போன்ற விளையாட்டு முறைகளையும், மருத்துவம் சார்ந்த குறிப்புகளையும் பயில்வதற்கு வருவார்கள் என்றும் இதை ஆரம்பகாலத்தில் எனது தந்தையும் செய்தார் என்பதையும் அறிவேன். அதற்கு முன்பான தலைமுறைகளும் அவரவர் துறைகளில் சிறந்துதான் விளங்கினார்கள் என்பதை தந்தை மூலம் அறிந்திருக்கிறேன். எனது குடும்பத்தில் நான் தான் படித்தேன் என்றும் எனது முன்னோர்கள் படிக்கவில்லை என்று பொய் கூறுவதை நான் விரும்பவில்லை. இன்றுபோல் Degree Certificate வாங்கினால்தான் படிப்பு என்ற புரிதலுடையவர்களிடம் இதுபற்றி பேசி புரியவைப்பது என்பது அரிது. இவர்களிடம் வீண் விவாதம் செய்வதைவிட கடந்துசெல்வதே மேல்.

சங்ககாலத் தமிழ்ப் புலவர்கள்

அகம்பன் மாலாதனார்,
அஞ்சியத்தை மகள் நாகையார்,
அஞ்சில் அஞ்சியார்
அஞ்சில் ஆந்தையார்
அடைநெடுங்கல்வியார்
அணிலாடு முன்றிலார்
அண்டர் மகன் குறுவழுதியார்
அதியன் விண்ணத்தனார்
அதி இளங்கீரனார்
அம்மூவனார்
அம்மெய்நாகனார்
அரிசில் கிழார்
அல்லங்கீரனார்
அழிசி நச்சாத்தனார்
அள்ளூர் நன்முல்லையார்
அறிவுடைநம்பி
ஆரியன் பெருங்கண்ணன்
ஆடுதுறை மாசாத்தனார்
ஆதிமந்தி
ஆரிய அரசன் யாழ்பிரமதத்தன்
ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
ஆலங்குடி வங்கனார்
ஆலத்தூர் கிழார்
ஆலம்பேரி சாத்தனார்
ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
ஆவூர்கிழார்
ஆலியார்
ஆவூர் மூலங்கீரனார்
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
இடைக்காடனார்
இடைக்குன்றூர்கிழார்
இடையன் சேந்தன் கொற்றனார்
இடையன் நெடுங்கீரனார்
இம்மென்கீரனார்
இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
இருந்தையூர்க் கொற்றன் புலவன்
இரும்பிடர்தலையார்
இளங்கீரந்தையார்
இளங்கீரனார்
இளநாகனார்
இளந்திரையன்
இளந்தேவனார்
இளம்புல்லூர்க் காவிதி
இளம்பூதனார்
இளம்பெருவழுதி
இளம்போதியார்
இளவெயினனார்
இறங்குடிக் குன்றநாடன்
இறையனார்
இனிசந்த நாகனார்
ஈழத்துப் பூதந்தேவனார்
உகாய்க் குடிகிழார்
உக்கிரப் பெருவழுதி
உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
உம்பற்காட்டு இளங்கண்ணனார்
உருத்திரனார்
உலோச்சனார்
உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
உழுந்தினைம் புலவர்
உறையனார்
உறையூர் இளம்பொன் வாணிகனார்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
உறையூர்ச் சல்லியங் குமரனார்
உறையூர்ச் சிறுகந்தனார்
உறையூர்ப் பல்காயனார்
உறையூர் மருத்துவன் தாமோதரனார்
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
ஊட்டியார்
ஊண்பித்தை
ஊண்பொதி பசுங்குடையார்
எயிற்றியனார்
எயினந்தையார்
எருமை வெளியனார்
எருமை வெளியனார் மகனார் கடலனார்
எழூப்பன்றி நாகன் குமரனார்
ஐயாதி சிறு வெண்ரையார்
ஐயூர் முடவனார்
ஐயூர் மூலங்கீரனார்
ஒக்கூர் மாசாத்தனார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஒருசிறைப் பெரியனார்
ஒரூத்தனார்
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
ஓதஞானி
ஓதலாந்தையார்
ஓரம்போகியார்
ஓரிற்பிச்சையார்
ஓரேர் உழவர்
ஔவையார்
கங்குல் வெள்ளத்தார்
கச்சிப்பேடு இளந்தச்சன்
கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
கச்சிப்பேடு பெருந்தச்சனார்
கடம்பனூர்ச் சாண்டில்யன்
கடலூர்ப் பல்கண்ணனார்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
கடுந்தொடைக் காவினார்
கோவர்த்தனர்
கோவூர்க் கிழார்
கோவேங்கைப் பெருங்கதவனார்
கோழிக் கொற்றனார்
கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
சங்கவருணர் என்னும் நாகரியர்
சத்திநாதனார்
சல்லியங்குமரனார்
சாகலாசனார்
சாத்தந்தந்தையார்
சாத்தனார்
சிறுமோலிகனார்
சிறுவெண்டேரையார்
சிறைக்குடி ஆந்தையார்
சீத்தலைச் சாத்தனார்
செங்கண்ணனார்
செம்பியனார்
செம்புலப்பெயல்நீரார்
செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
சேந்தங்கண்ணனார்
சேந்தம்பூதனார்
சேந்தங்கீரனார்
சேரமானெந்தை
சேரமான் இளங்குட்டுவன்
சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
சோழன் நலங்கிள்ளி
சோழன் நல்லுருத்திரன்
தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
தனிமகனார்
தாமாப்பல் கண்ணனார்
தாமோதரனார்
தாயங்கண்ணனார்
தாயங்கண்ணியார்
திப்புத்தோளார்
திருத்தாமனார்
தீன்மதிநாகனார்
தும்பிசேர்கீரனார்
துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
துறையூர்ஓடைக்கிழார்
தூங்கலோரியார்
தேய்புரி பழங்கயிற்றினார்
தேரதரன்
தேவகுலத்தார்
தேவனார்
தொடித்தலை விழுத்தண்டினர்
தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
தொல்கபிலர்
நக்கண்ணையார்
நக்கீரர்
நப்பசலையார்
நப்பண்ணனார்
நப்பாலத்தனார்
நம்பிகுட்டுவன்
நரிவெரூத்தலையார்
நரைமுடி நெட்டையார்
நல்லச்சுதனார்
நல்லந்துவனார்
நல்லழிசியார்
நல்லாவூர்க் கிழார்
நல்லிறையனார்
நல்லுருத்திரனார்
நல்லூர்ச் சிறுமேதாவியார்
நல்லெழுநியார்
நல்வழுதியார்
நல்விளக்கனார்
நல்வெள்ளியார்
நல்வேட்டனார்
நற்சேந்தனார்
நற்றங்கொற்றனார்
நற்றமனார்
நன்பலூர்ச் சிறுமேதாவியார்
நன்னாகனார்
நன்னாகையார்
நாகம்போத்தன்
நாமலார் மகன் இளங்கண்ணன்
நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
நெடுங்கழுத்துப் பரணர்
நெடும்பல்லியத்தனார்
நெடும்பல்லியத்தை
நெடுவெண்ணிலவினார்
நெட்டிமையார்
நெய்தற் கார்க்கியார்
நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
நெய்தற்றத்தனார்
நொச்சி நியமங்கிழார்
நோய்பாடியார்
பக்குடுக்கை நன்கணியார்
படுமரத்து மோசிகீரனார்
படுமரத்து மோசிக்கொற்றனார்
பதடிவைகலார்
பதுமனார்
பரணர்
கடுந்தொடைக் கரவீரன்
கடுவன் இளமள்ளனார்
கடுவன் இளவெயினனார்
கடுவன் மள்ளனார்
கணக்காயன் தத்தனார்
கணியன் பூங்குன்றனார்
கண்ணகனார்
கண்ணகாரன் கொற்றனார்
கண்ணங்கொற்றனார்
கண்ணம் புல்லனார்
கண்ணனார்
கதக்கண்ணனார்
கதப்பிள்ளையார்
கந்தரத்தனார்
கபிலர்
கயத்தூர்கிழார்
கயமனார்
கருங்குழலாதனார்
கரும்பிள்ளைப் பூதனார்
கருவூர்க்கிழார்
கருவூர் கண்ணம்பாளனார்
கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
கருவூர் கலிங்கத்தார்
கருவூர் கோசனார்
கருவூர் சேரமான் சாத்தன்
கருவூர் நன்மார்பனார்
கருவூர் பவுத்திரனார்
கருவூர் பூதஞ்சாத்தனார்
கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
கல்பொருசிறுநுரையார்
கல்லாடனார்
கவைமகன்
கழாத்தலையார்
கழார்க் கீரனெயிற்றியனார்
கழார்க் கீரனெயிற்றியார்
கழைதின் யானையார்
கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
காசிபன் கீரன்
காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
காப்பியஞ்சேந்தனார்
காப்பியாற்றுக் காப்பியனார்
காமஞ்சேர் குளத்தார்
காரிக்கிழார்
காலெறி கடிகையார்
காவட்டனார்
காவற்பெண்டு
காவன்முல்லையார்
காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்
கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
கிள்ளிமங்கலங்கிழார்
கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
கீரங்கீரனார்
கீரந்தையார்
குடபுலவியனார்
குடவாயிற் கீரத்தனார்
குட்டுவன் கண்ணனார்
குட்டுவன் கீரனார்
குண்டுகட் பாலியாதனார்
குதிரைத் தறியனார்
குப்பைக் கோழியார்
குமட்டூர் கண்ணனார்
குமுழிஞாழலார் நப்பசலையார்
குழற்றத்தனார்
குளம்பனார்
குளம்பாதாயனார்
குறமகள் இளவெயினி
குறமகள் குறியெயினி
குறியிறையார்
குறுங்கீரனார்
குறுங்குடி மருதனார்
குறுங்கோழியூர் கிழார்
குன்றம் பூதனார்
குன்றியனார்
குன்றூர்க் கிழார் மகனார்
கூகைக் கோழியார்
கூடலூர்க் கிழார்
கூடலூர்ப பல்கண்ணனார்
கூவன்மைந்தன்
கூற்றங்குமரனார்
கேசவனார்
கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
கொட்டம்பலவனார்
கொல்லன் அழிசி
கொல்லிக் கண்ணன்
கொள்ளம்பக்கனார்
கொற்றங்கொற்றனார்
கோக்குளமுற்றனார்
கோடைபாடிய பெரும்பூதன்
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
கோட்டியூர் நல்லந்தையார்
கோண்மா நெடுங்கோட்டனார்
கோப்பெருஞ்சோழன்
பராயனார்
பரூஉமோவாய்ப் பதுமனார்
பறநாட்டுப் பெருங்கொற்றனார்
பனம்பாரனார்
பாண்டரங்கண்ணனார்
பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
பாண்டியன் பன்னாடு தந்தான்
பாண்டியன் மாறன் வழுதி
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பாரிமகளிர்
பார்காப்பான்
பாலைக் கௌதமனார்
பாலை பாடிய பெருங்கடுங்கோ
பாவைக் கொட்டிலார்
பிசிராந்தையார்
பிரமசாரி
பிரமனார்
பிரான் சாத்தனார்
புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
புல்லாற்றூர் எயிற்றியனார்
பூங்கணுத் திரையார்
பூங்கண்ணன்
பூதங்கண்ணனார்
பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
பூதம்புல்லனார்
பூதனார்
பூதந்தேவனார்
பெருங்கண்ணனார்
பெருங்குன்றூர்க் கிழார்
பெருங்கௌசிகனார்
பெருஞ்சாத்தனார்
பெருஞ்சித்திரனார்
பெருந்தலைச்சாத்தனார்
பெருந்தேவனார்
பெருந்தோட் குறுஞ்சாத்தன்
பெரும் பதுமனார்
பெரும்பாக்கன்
பெருவழுதி
பேயனார்
பேய்மகள் இளவெயினி
பேராலவாயர்
பேரிசாத்தனார்
பேரெயின்முறுவலார்
பொதுக்கயத்துக் கீரந்தை
பொதும்பில் கிழார்
பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
பொத்தியார்
பொய்கையார்
பொருந்தில் இளங்கீரனார்
பொன்மணியார்
பொன்முடியார்
பொன்னாகன்
போதனார்
போந்தைப் பசலையார்
மடல் பாடிய மாதங்கீரனார்
மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
மதுரை இனங்கௌசிகனார்
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
மதுரைக் கணக்காயனார்
மதுரைக் கண்டராதித்தனார்
மதுரைக் கண்ணத்தனார்
மதுரைக் கவுணியன் பூதத்தனார்
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
மதுரைக் காருலவியங் கூத்தனார்
மதுரைக் கூத்தனார்
மதுரைக் கொல்லன் புல்லன்
மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
மதுரைச் சுள்ளம் போதனார்
மதுரைத் தத்தங்கண்ணனார்
மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
மதுரைத் தமிழக் கூத்தனார்
மதுரைப் படைமங்க மன்னியார்
மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
மதுரைப் புல்லங்கண்ணனார்
மதுரைப் பூதனிள நாகனார்
மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
மதுரைப் பெருங்கொல்லன்
மதுரைப் பெருமருதனார்
மதுரைப் பெருமருதிளநாகனார்
மதுரைப் போத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
மதுரை வேளாசன்
மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார்
மருதம் பாடிய இளங்கடுங்கோ
மருதனிளநாகனார்
மலையனார்
மள்ளனார்
மாங்குடிமருதனார்
மாடலூர் கிழார்
மாதீர்த்தன்
மாமிலாடன்
மாமூலனார்
மாயேண்டன்
மார்க்கண்டேயனார்
மாலைமாறன்
மாவளத்தன்
மாறோக்கத்துக் காமக்கண்ணியார்
மாறோக்கத்து நப்பசலையார்
மாற்பித்தியார்
மிளைக் கந்தன்
மிளைப் பெருங்கந்தன்
மிளைவேள் பித்தன்
மீனெறி தூண்டிலார்
முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
முடத்தாமக்கண்ணியார்
முடத்திருமாறன்
முதுகூத்தனார்
முதுவெங்கண்ணனார்
முப்பேர் நாகனார்
முரஞ்சியயூர் முடிநாகராயர்
முள்ளியூர்ப் பூதியார்
முலங்கீரனார்
மையோடக் கோவனார்
மோசிக்கண்ணத்தனார்
மோசிக்கீரனார்
மோசிக்கொற்றன்
மோசிக்கரையனார்
மோசிசாத்தனார்
மோசிதாசனார்
வடநெடுந்தத்தனார்
வடவண்ணக்கன் தாமோதரன்
வடமோதங்கிழார்
வருமுலையாரித்தி
வன்பரணர்
வண்ணக்கன் சோருமருங்குமரனார்
வண்ணப்புறக் கந்தரத்தனார்
வாடாப்பிராந்தன்
வாயிலான் தேவன்
வாயிலிலங்கண்ணன்
வான்மீகியார்
விட்டகுதிரையார்
விரிச்சியூர் நன்னாகனார்
விரியூர் நன்னாகனார்
வில்லக விரலினார்
விழிகட்பேதை பெருங்கண்ணனார்
விற்றூற்று மூதெயினனார்
விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
வினைத் தொழில் சோகீரனார்
வீரை வெளியனார்
வீரை வெளியன் தித்தனார்
வெண்கண்ணனார்
வெண்கொற்றன்
வெண்ணிக் குயத்தியார்
வெண்பூதன்
வெண்பூதியார்
வெண்மணிப்பூதி
வெள்ளாடியனார்
வெள்ளியந்தின்னனார்
வெள்ளிவீதியார்
வெள்வெருக்கிலையார்
வெள்ளைக்குடி நாகனார்
வெள்ளைமாளர்
வெறிபாடிய காமக்கண்ணியார்
வேட்டகண்ணன்
வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
வேம்பற்றுக் குமரன்.

அழகிய மரமும் பூதனையின் பாலும்

ஆயர்பாடியில் குழந்தை கண்ணனைக் கொல்ல கம்சன் அனுப்பிய பல அரக்கர்களின் ஒருத்தி பூதனை ஆவாள். அவளின் திருபோன்ற உருவில் மயங்கி ஆயர்குல மக்கள் நம்பிக்கை கொண்டனர். யசோதை தன் கண்ணின் மணியான கண்ணனையே நம்பிக் கொடுத்தாள். ஆனால் பூதனையோ தன் மூலையில் நஞ்சினை இட்டு பாலனுக்கு பால் ஊட்டிக் கொல்ல விழைந்தாள். உலகம் யாவிற்கும் உயிர் ஊட்டுபவன் அவன், அவள் பாலோடு உயிரையும் குடித்து வீடு கொடுத்தான். இந்தக் கதையில் நமக்கு இன்றைக்கான பாடம் ஒன்றும் உள்ளது.

கிறித்துவ காலனிய ஆட்சி நம் தேசத்தின் மரபு வழி கல்வி முறைகளை அழித்து, மிஷனரிகளின் கைகளில் கல்வியை ஒப்படைத்தது. அந்த அழிவுக்கு முன் நம் தேசத்தின் கல்விமுறை பற்றி அறிய, திரு.தரம்பால் அவர்களின் ஆராய்ச்சி நூலாகிய ‘அழகிய மரம்’ அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல். அனைத்து சாதியரும், மதத்தினரும், பெண்களும் கூட அக்கால பள்ளிகளில் பெருவாரியாக படித்ததை ஆங்கில ஆவண சான்றுகள் மூலமே சொல்கிறார் தரம்பால். அண்மையில் தமிழாக்கம் செய்யப்பட்ட அந்நூலின் விமர்சனம் இங்கு காணலாம்.

சுதந்திரத்துக்குப் பின்னும், மதச்சார்பின்மைபேசும் அரசுகள் ஒருபுறத்தில் கிறித்துவ ஸ்தாபானங்களுக்கு கல்வி துறையில் நியாயமற்ற வகையில் துணைபுரிந்தும், மறுபுறத்தில் பெரும்பான்மை என்னும் பெயரில் இந்து மரபு கல்வியை கையாலாகாத வகையில் RTE, அரசியல் சட்டத்தின் 93ம் பிரிவில் திருத்தம் போன்ற சட்டங்கள் இயற்றி நசுக்கி வருகின்றன. இன்றைய நரேந்திர மோதி அவர்கள் அரசும் இக்குறையை பற்றி ஏதும் செய்யக் காணோம்.

சரி இதனால் என்னவாகிவிடப் போகிறது? குழந்தையர் கிறித்துவ பள்ளிகளில் படித்தால் என்ன தவறு என்று கேட்கலாம்.

இக்னேசியஸ் லயோலா என்னும் பெரும் தாக்கம் உடைய ஒரு கிறித்துவ மத தலைவர் சொன்னதாக ஒரு கூற்று உண்டு: ‘என்னிடம் ஒரு குழந்தையை முதல் ஏழு வருடங்களுக்கு தாருங்கள், நான் உங்களுக்கு ஒரு கிறித்துவனை அளிக்கிறேன்’

லயோலா போன்ற கிறித்துவர்களின் கல்வியோ தெரசா போன்றோரின் உதவியோ, எல்லாமே கிறித்துவ மத மாற்றத்திற்கான ஒரு கருவியே. இதை தெரசா போன்றோர் அப்பட்டமாகவே கூறியுள்ளார்கள், ஒளித்து மறைக்க கூட இல்லை. இதனாலே தான் கிறித்துவர்கள் கொடுக்கும் கல்வி பூதனையின் பால் போன்றது. அதில் சில நச்சு வஸ்துக்கள் சேர்க்கப்பட்டிருக்கும். மிதமான வகையில் கிறித்தவத்தின் மீது ஒரு நன்றியும்,நன்மதிப்பும் கொடுக்கும்; சராசரியாக இந்து மரபின் மீது ஒரு அக்கறையின்மையும் ஏளனமும் உண்டுபண்ணும்; தீவிரமாயின் இந்து சமய பண்டிகைகள் கொண்டாடினாலோ, மரபின் அடையாளங்களை அணிந்தாலோ தண்டிக்க கூடச்செய்யும். அண்மையில் கூட அத்தகைய செய்திகள் வந்துள்ளன. திருச்சியில் ஒரு கிறித்துவ பள்ளி தீபாவளி கொண்டாடிய மாணவர்களுக்கு தண்டனை விதித்தது ஒரு உதாரணம்.

அப்பட்டமான செய்கைகளை விட உள்குத்தாய் செய்வன ஆபத்தானவை. வாரம் ஒன்றிரண்டு போதனை வகுப்புகளில் பைபிள் இருந்து மட்டுமே போதனைகள் சொல்லப்படும், தீபாவளியை கொண்டாட கிறித்தவர்களை நிர்ப்பந்திக்காதபோது கிறிஸ்துமஸ் பொழுது மட்டும் எல்லா சீராரையும் சேர்த்தே சாண்டா கிளாஸ் வேடம் கட்டும் நிகழ்ச்சிகள் நடக்கும்.

இப்படி சூசகமாக யாரும் கவனிக்கா வண்ணம் கல்வி என்னும் பாலில் கலப்படங்கள் பண்ணும் பூதனை அரக்கி கிறித்துவ ஸ்தாபனங்கள்.

நானும் என் கல்வியின் ஒரு பகுதியை ‘ஹீபர்’ என்னும் ஒரு கிறித்துவ மதபோதகர் பெயரால் இயங்கும் ஒரு இடத்திலேயே பெற்றேன். இப்போது நான் கிறித்துவ மதமாற்றம் மற்றும் இந்து துவேஷ நடவடிக்கைகளை சாடும் பொழுது, என்னை அறிந்தவர் நான் நன்றிகெட்டதனமாக நடக்கிறேன் என்று கூட கூறியது உண்டு.

அவ்வாறு அன்று, எனக்கு கல்வி கொடுத்தோர் மீது இன்றும் நன்றி உண்டு, ஆயினும் அக்கல்வியில் சில ஓட்டைகள் இருப்பதை அறிந்து நிரப்பத் தொடங்கிவிட்டேன். உதாரணத்திற்கு முன் குறிப்பிட்ட ‘ஹீபெர்’ ஒரு கவிதையில், இந்துக்களை வெறும் கல்லையும் மரத்தையும் வணங்குகின்ற காட்டுமிராண்டிகள் என்னும் வகையில் சித்தரித்துள்ளதை அறிந்தேன்

From Greenland’s Icy Mountains
‘What though the spicy breezes blow soft o’er Ceylon’s isle;
Though every prospect pleases, and only man is vile?
In vain with lavish kindness the gifts of God are strown;
The heathen in his blindness bows down to wood and stone.’

அவ்வாறு அவர்களை பொறுத்தவரை கல்லையும் மரத்தையும் வணங்கும் காட்டுமிராண்டியான என் நன்றியுணர்ச்சியில் இதனால் ஒரு மாற்றம் ஏற்பட்டது. பின் பல சிந்தனைகளும் கேள்விகளும் பிறந்தன.

வரலாறு கூறுவதோ நம் தேசத்தவர் பண்டையகாலம் தொட்டு செல்வம், புகழ் யாவையும் விட கல்வி, அறிவு, சான்றாண்மை, ஞானம் போன்றவற்றையே போற்றினர். அவ்வாறு இருக்கையில் எவ்வாறு கல்வி மரபுகள் இங்கு இல்லாமல் போகும்?

கிறித்துவர்கள் பெருவாரியாக வந்ததோ பொதுயுகம் 15,16ஆம் நூற்றாண்டில் தான், அதற்கு முன் கல்விச்சுழல் எப்படி இருந்தது?

இரண்டு-மூன்று சதவிகிதமே மக்கள்தொகை கொண்ட கிறித்துவர்களால் எவ்வாறு இந்தியாவின் பட்டி தொட்டி ஊர்கள் நகரங்கள் எங்கும் பள்ளிகள், கல்லூரிகள்,ஆஸ்பத்திரிகள் நடத்தமுடிகிறது?

இப்படிபட்ட கேள்விகளுக்கான விடைதேடல் தரம்பால் போன்ற அறிஞர் தம் ஆராய்ச்சிகளை அறிமுகம் செய்தன. அதில் அறிந்தது, வியாபாரம் பண்ண வந்த பரங்கியர் ஆட்சியை பிடித்தது மட்டும் அல்ல, அழகிய மரமாகிய நம் கல்வி மரபை வேரோடு சாய்த்துவிட்டு நம்மை நம் எதிர்காலத்தை பாதிரிகள் கையில் ஒப்படைத்துவிட்டனர். இந்த நிலையில் நன்றியுணர்ச்சி எவ்வாறு முழுதாக இருக்கும்?

நன்றி நல்ல பண்பு தான். ஆனால் அதற்காக ஒருவரின், ஒரு ஸ்தாபனத்தின், ஓரு மதத்தின் அதன் கொள்கைகளின் குறைபாடுகளை காணாது இருந்து விடக்கூடாது. அது அனைவருக்கும் கேடாகத்தான் முடியும். துரோணரும் கர்ணனும் நன்றியுணர்ச்சியால் குருடாகப் போனது பெரும் அழிவில் தான் முடிந்தது.

இந்த பொய் வரலாற்றிற்கு வைரமுத்து போன்றோர் சாட்சி கூறிவருவது மிகவும் ஈனச்செயல். “கிறிஸ்துவர்கள் வராவிட்டால் தமிழ் நாட்டில் கல்வி பொதுவுடைமை ஆகியிருக்காது”, என்று அவர் கூறுவது, ஒரு திருடன் ஊர் சொத்தை கொள்ளையடித்து தன் வீட்டில் அன்னதானம் செய்வதை போற்றுதல் போல. மரபுக்கல்வியாகிய அழகிய மரத்தின் நிழலில் பொதுவாக அனைவரும் படித்தனர், அதை சாய்த்துவிட்டு, பெஞ்சுகள் செய்து, கிறித்துவக்கல்வி என்னும் கலப்படப்பாலை ஊட்டுவோர்க்கு நன்றி அறிவித்தல் அறிவீனம்.

பெரும்பாலான இந்துக்கள் இது போன்ற கேள்விகள் கேட்காமல், வரலாற்றை ஆராயாமல், கிறித்துவ கொள்கை நோக்கங்களை அறியாமல் கான்வென்ட் கல்வி மோகத்தில், பூதனை கையில் குழந்தையை கொடுத்த யசோதை போல கிறித்துவ பள்ளிகளில் தங்கள் மக்களை சேர்க்கின்றனர். அங்கு முழுதாக மதமாற்றம் செய்யாவிட்டாலும் இந்து சமயத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வேற்றுமைப் படுத்தலாவது செய்யப்படும்.இதை முழுதும் தப்பிக்கவும் இயலாது, மதசார்பின்மை என்னும் பெயரில் அரசுகள் மரபுசார் கல்வி அமைப்புகள் வளரவிடாது தடுக்கின்றன. ஆக பலருக்கும் வேறு வழி இருக்காது.

கிறித்துவ பள்ளிகளில் தான் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற நிர்பந்தம் வந்தால், இக்காலத்தில் பெற்றோருக்கு அக்கலப்பட கல்வியில் இருந்து குழந்தைகளை காக்க ஒரே ஒரு வழித்தான் உள்ளது. அது பூதனையின் நச்சை விடுத்து பாலை மட்டுமே உண்ட கண்ணன் தான். அந்த மாயவனின் மீது அன்பும் பக்தியும் மரபும் கலாச்சாரமும் ஊட்டி குழந்தைகளுக்கு தருமத்தின் தடுப்பூசி தன்னை தவறாமல் மீண்டும் மீண்டும் போட்டு கிறித்துவ பள்ளிகளுக்கு அனுப்புதல் வேண்டும்.

அது இருக்க, அரசுகளின் அட்டூழியத்திலிருந்து இந்துக்கோவில்கள் அவை சார்ந்த பள்ளிகளை மீட்டு வருங்காலத்திலாவது நமது அழகிய மரம் மீண்டும் துளிர் விட்டு மலர வகை செய்யவேண்டும்.

கண்ணன் அருளால் அந்த அழகிய மரம் மீண்டும் பூக்கும்.

(இக்கட்டுரையின் ஆங்கில வடிவம் இங்கே)

(ரகுநந்தன் பாஸ்கரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்துமதம், பண்பாடு, கலாசாரம் தொடர்பான விஷயங்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார்)

அழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி

‘எண்’ என்ப, ஏனை ‘எழுத்து’ என்ப, இவ் இரண்டும்
‘கண்’ என்ப, வாழும் உயிர்க்கு.

எண் என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இருவகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

-திருக்குறள் – பொருட்பால் – அரசு இயல் – கல்வி

நான் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒருசிறிய Fabrication Industry இல் Quality Control பிரிவில் ஒரு சிறிய உத்தியோகத்தில் பணி புரிந்து வந்தேன். Metals, Materials, Fabrication, Welding, Casting, Defects என பணி இருந்தது .

ஒரு நாள் ஒரு வார்ப்பினை (Casting) Inspection செய்ய வந்த Inspector (Authorized Inspector- Lloyds Register) சொன்னார்:

“ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும் ! நாம் இந்தக் காலகட்டத்தில் உலோகவியலில் (Metallurgy ) மகத்தான உயர் ஆய்வுகள் மூலம் வியத்தகு முன்னேன்றங்களை கண்டுள்ளோம் , இருந்தும்கூட Defect free Castings உற்பத்தி பண்ணுவது என்பது பல சமயங்களில் கடினமாக உள்ளது . 12௦௦ ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட சோழர்கால ஐம்பொன் உலோக சிலைகளை பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளது . அதன் மீது ஆயிரம் ஆண்டுகளாக மலர்கள் , அபிஷேகத் திரவியங்களை ( பால் , தயிர் , பஞ்சாமிர்தம் தேன் , பலவகையான பழச்சாறுகள் , இளநீர் , நெய் , திருமஞ்சனப் பொடி, திருநீறு , வில்வப்பொடி ) என மேலே கொட்டுகிறோம் .இந்தத் திரவியங்களில் பலவிதமன Acids & Alkalies உள்ளன , ஆனால் ஏதோ ஒன்றிண்டு சிலைகளைத் தவிர , மற்ற எல்லா விக்கிரங்களும் , எந்தக் குறைபாடும் இல்லாமல் (corrosion, erosion , cracks) இன்றளவும் நமது வழிபாட்டில் உள்ளன ! நமது முன்னோர்கள் அறிந்து வைத்த மகத்தான இந்த உலோகவியல் அறிவியலை ( Metallurgy ) என்னவென்று சொல்லுவது ?”

உண்மைதான் !

பாரதத்தின் குறிப்பாக தமிழகப் பண்பாட்டைப் பற்றிய சிறிய அளவில் அறிமுகம் உள்ள ஒரு வெளிநாட்டினர் உடன் நீங்கள் உங்கள் பேச்சைத் தொடர்ந்தால் , உடனடியாக அவர் நினவு கூறுவது நமது கோவில் கட்டிடகலை , கற்சிற்பங்கள் மற்றும் ஐம்பொன் உலோக சிலைகளின் பற்றிதான் . Structural Engineering , Architecture , Geology , Carpentry , Stone- Masonry, Metallurgy போன்ற அறிவியல் துறைகளில் நமது முன்னோர்கள் ஆழ்ந்த படிப்பும் செய்முறைத் திறனும் இல்லை என்றால் , இந்த மகத்தான படைப்புகளை உருவாக்கி இருக்க முடியாது அல்லவா ?

‘ திருமகள் போல ‘என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியை உடைய முதலாம் ராஜராஜ சோழனை ( Raja Raja I ) ‘ பார்ப்பன அடிமை ‘ என்று வந்தேறிய சமயத்தை தழுவிய ஒரு பிரமுகர் அறிக்கை வெளி இட்டார் . அப்பட்டமான ஓர் இந்து விரோத அறிக்கை அது .

பார்ப்பன அடிமை ‘ என்று இகழப்பட்ட மனனர் தம் காலத்திய அனைத்து சமயங்களையும் ஒன்றாகவே பாவித்து நிவந்தங்கள் கொடுத்தவர் , அது மட்டுமல்ல அந்த பிற்கால சோழ அரசர்கள்தான் இன்று தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான ஏரிகள் , குளங்கள் , குட்டைகள் அனைத்தையும் உருவாக்கியவர்கள் . இன்றும் கூட அவை வேளாண்மைக்கு உயிர் நாடியாக உள்ளன . ( ஓர் உதாரணம் : தக்கோலப் போரில் ‘ யானை மேல் துஞ்சியத் தேவர் ‘ என பெயர் பெற்ற இளவரசர் ராஜாதித்தர் தம் தந்தை பராந்தகர் – அவருக்கு வீர நாராயணர் என்ற பெயர் உண்டு – அவர் பெயரில் கடல் போன்ற வீர நாரயண ஏரியை – தற்போது – வீராணம் ஏரியை உருவாக்கினார் ) . அதில் இன்று விளைவித்த நெல் – அரசியை கூட மேலே சொன்ன நபர் இன்றும் கூட தின்று கொண்டு இருக்கலாம் . மேலும் , இந்த நீர் ஆதாரங்களை உருவாக்கிட  Gelogy, Earth Sciences, Water Management போன்ற அறிவியல் துறைகளில் நம் முன்னோர் ஏதேனும் ஆதாரக் கல்வி பெற்று இராமல், இந்த மகத்தான நீர் மேலாண்மை திட்டத்தை உருவாக்கி இருக்க முடியுமா?

‘திருமன்னி வளர‘ என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியை உடைய முதலாம் ராஜேந்திர சோழரின் (Rajendra I) திருவாலங்காட்டு செப்பேடு, அவரது கடல் கடந்து சென்ற படையெடுப்பபு பற்றிக் கூறுகிறது. மேலும் இத்தகு படையெடுப்புகளுக்கு நிலையான ஒரு சோழ ராணுவம் யானைப் படை, குதிரைப்படை இருந்துள்ளது . இதற்கு தேவையான Naval Architecture , Ocean Engineering, Veterinary Sciences போன்ற அறிவியல் துறைகளில் நம் முன்னோர் சிறந்த அறிவு பெற்று இருப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை

மகாத்மா காந்தி 1931 ஆம் ஆண்டு வட்ட மேஜை மகாநாட்டுக்கு காங்கிரஸ் பிரதிநிதியாக இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகருக்கு சென்றார் . அந்த ஆண்டு அக்டோபர் 2௦ ஆம் தேதி லண்டனில் ‘ சாத்ஹம் ஹௌசில் ‘ (Saatham House) உள்ள இன்ஸ்டிட்டுஉட் ஆப் இன்டர்நேஷனல் இல் அப்பைர்ஸ் (Institute of International Affairs) ஓர் ஆவேசமிக்க உரை நிகழ்த்தினார் . அதில் பிரிட்டிஷாரின் இந்தியக் காலனிய ஏகாதிபத்திய அணுகுமுறை இந்தியவை பல விஷயங்களில் சீரழிய செய்து விட்டது என்றார். குறிப்பாக பாரதத்தின் பண்டையக் கல்வி முறை பிரிட்டிஷாரின் போக்கால் மாபெரும் பின்னடைவுக்கு உள்ளாகிவிட்டது என்றும் குற்றம் சாட்டினார் .

காந்திஜி கூறினார் :

“பிரிட்டிஷ் நிர்வாகிகள் இந்தியாவுக்கு வந்தபோது , இங்கு நிலவிய அமைப்புகளை (கல்வி அமைப்புகளை) புரிந்துகொண்டு அதை வளர்தெடுப்பதற்க்கு பதிலாக அவற்றை அப்புறபடுத்த தொடங்கினார்கள் . மண்ணை தோண்டி வேரை எடுத்து ஆராய்ந்தார்கள் . அதன் பிறகு அந்த வேரை அப்படியே மட்கி வாடும்படி விட்டுவிட்டார்கள் .அந்த அழகிய மரம் அழிந்துவிட்டது”.

டாக்கா பல்கலைக்கழகத்தின் துணைச்செயலாளரும் ,ஆக்ஸிலரி கமிட்டி அப் இந்தியன் ஸ்டாச்சுடரி கமிஷன் சேர்மனாகவும் (Auxiliary Committee of Indian Statuary Commission Chairman) பதவிகள் வகித்த சர் பிலிப் ஹெர்டாக் , காந்திஜியின் கூற்றை மறுத்து அவருக்கு கடிதம் எழுதினர் . ‘’ பிரிட்டிஷ் நிர்வாகத்தின் போக்கால் , பாரதத்தில் நிலவிய பண்டைய கல்வி முறை சீரழிந்தது ‘’ என்ற காந்திஜியின் குற்றசாட்டுக்கு ஆதாரங்கள் கேட்டார் . 1931 ஆம் தொடங்கி 1938 ஆம் ஆண்டுவரை சர் பிலிப் ஹெர்டாக் தொடர்ந்து காந்திஜிக்கு கடிதங்களை எழுதி வந்தார் . காந்திஜியினால் ஆதாரங்களை கொடுக்க இயலவில்லை . தான் சொன்னது சரி என்று தனது மனது நம்புவதாகவும் , ஆனால் ஆதாரங்கள் ஏதும் தன்னிடம் இல்லை எனத் தெரிவித்து விட்டார் .

இந்த இடத்தில நாம் ஒன்றை புரிந்து கொள்ளலாம் . மகாத்மா காந்தி அவருக்கே உரித்தான , இயல்பான நமது நாட்டைப் பற்றிய புரிந்துணர்வினாலும் , அவரது உள்ளார்ந்த ஆன்மீகவயமான ஞானத்தாலும் நமது கல்விமுறை பற்றிக் கூறினாலும் , அந்த சமயத்தில் அவரால் ஆதாரங்களை தர இயலவில்லை . ஆனாலும் அவர் சொன்னது சரியே எனப் பின்னர் நடந்த நிகழ்சிகள் தெரிவிகின்றன . ( இந்தப் புரிதல் காந்திஜிக்கும் , மகான் அரவிந்தருக்கும் இருந்தது , ஆனால் பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு இல்லை என்பது என்னுடைய அபிப்ராயம்).

ஸ்ரீ தரம்பால் (1922 – 2006) ஒரு காந்திய செயல்பாட்டாளர். அவர் பல ஆண்டுகள் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இருந்தார். 1960 ஆம் ஆண்டு வாக்கில் அவர் சில ஆய்வுகளுக்காக லண்டனில் உள்ள ‘இந்தியா ஹௌசிலும் ‘ ( INDIA HOUSE ) அங்குள்ள பல அருங்காட்சியக நூல்நிலையங்களிலும் 18 – 19 ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் – இந்தியா தொடர்புகள் பற்றி ஆவணங்களை ஆராய்ந்தார் . அப்பொழுது சர் பிலிப் ஹெர்டாக் காந்திஜியிடம் பாரத்தின் பண்டைய கல்வி முறை பற்றி எந்த ஆதாரங்களை கேட்டு அது காந்திஜினால் தர இயலவில்லையோ , அந்த ஆவணங்கள் பிரிட்டிஷ் நூல் நிலையத்தில் இருப்பதைக் கண்ணுற்றார். மிகுந்த சிரமத்தின் பேரில் , அந்த ஆதாரங்களை ஸ்ரீ சீதாராம் கோயலின் உதவியுடன் 1983 ஆம் ஆண்டு ‘ அழகிய மரம் ‘ ( The Beautiful Tree – Indigenous Indian Education in the Eighteenth Century ) என்ற ஒரு நூலாக வெளியிட்டார் .

அந்த நூலின் கருத்துக்கள் என்ன ?

1822 ஆம் ஆண்டு மதராஸ் ப்ர்சடேன்சி (Madras Presidency) ஆளுனர்  சர். தாமஸ் மன்றோ (Sir Thomas Manroe) இந்தியக் கல்வி பற்றிய ஓர் அளவீடு ( Survey ) எடுக்கும்படி வருவாய்த் துறைக்கு (Revenue Board) ஓர் ஆணைப் பிறபித்தார் . வருவாய்தத்துறையின் செயலர் (Revenue Board Secertary) இந்த ஆணையை அவர்கீழ் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் (District Collector) அனுப்பினார் . அன்றைய மதராஸ் ப்ர்சடேன்சி என்பது ஒரிசாவின் சில பகுதிகள், ஆந்திரா , தெலங்கான பகுதிகள் , தமிழ்நாடு , கேரளாவின் சில பகுதிகள் என பரந்து விரிந்த பகுதி சுமார் 25 மாவட்ட ஆட்சியர்கள் கீழ் உள்ள பகுதி . இதேபோன்ற உத்தரவு கொல்கத்தா மற்றும் பஞ்சாப் பகுதிகளுக்கும் சென்றது. எப்படி தகவல்கள் ஒரே மாதிரியாக சேகரித்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒரு போலி மாதிரிப் படிவம் கூட அனுப்பப் பட்டது (Template – Filled in Format). இந்த அளவீடு செய்து ஆய்வு அறிக்கை தயார் செய்ய கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கு மேலாக நேரம் எடுத்துக்கொண்ட அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அனுப்பிய அந்த ஆய்வு அறிக்கையை முழுமையான கோணத்தில் ஆங்கிலேய அரசு பரிசீலனை செய்து பார்த்ததில் ஆட்சியாளர்களே வியந்து போனார்கள் . இந்த ஆய்வு அறிக்கையை படித்த ஸ்ரீ தரம் பாலும் , ஆச்சரியத்தில் உறைந்து போனார் !

ஏனென்றால் , 1931 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தன் ஆன்மீகவயமான உள்ளுணர்வினால் பாரதத்தின் பண்டைய கல்வி முறை பற்றி எந்தவிதமான தரவுகள் இன்றி , லண்டனில் ‘ சாத்ஹம் ஹௌசில் ‘ உள்ள இன்ஸ்டிட்யூட் ஆப் இன்டர்நேஷனல் அப்பைர்ஸ் (Institute of International Affairs) பேசியதை நிருபிக்கும் வகையில் அந்த ஆய்வு அறிக்கை இருந்தது .

மேலே குறிப்பிட்ட ஸ்ரீ தரம்பாலின் நூலில் அந்த ஆய்வு அறிக்கையில் ஏராளமான தகவல்கள் இருப்பினும் , இந்தப் பதிவுக்கு சம்பந்தமாக முக்கியமான சில விஷயங்களை கிழே பார்க்கலாம் :

– அடிப்படைக் கல்வி மற்றும் உயர் கல்விக்கான கல்லூரிகள் இருந்தன

– சரசரியாக அடிப்படைக் கல்வி புகட்டும் பள்ளிகள் கிராமம் தோறும் இருந்தன

– அடிப்படைக் கல்வி சராசரியாக 1௦ ஆண்டுகள்

– இந்தக் கல்வி முறைக்கான நிதி வசதி என்பது (ஆசிரியர் சம்பளம் முதலியன) அந்த கிராமமோ , சமூகமோ , கல்வி கற்கும் மாணவர்களோ ஏற்றுக் கொண்டார்கள் . பிரிட்டிஷ் அரசு எந்த விதமான உதவியும் செய்யவில்லை .

– இந்தக் கல்வி முறை ‘ எண்ணும் எழுத்தும்கண்எனத்தகும் ‘ என்றும் , ‘ ஆச்சாரிய தேவோ பவ ‘ என்றும் , நமது நீண்ட பாரம்பரியமான அணுகுமுறையில் தான் , கல்வியை – ஒரு வழிபாட்டு மனோ நிலையில்தான் உருவகித்து , மொத்த சமூகமும் இயங்கியது .

– இந்தக் கல்வி முறை பற்றி ‘ தாக்ஷிணாத்திய கலாநிதி ‘ ‘ மகாமஹோஉபாதியாய ‘ ‘ தமிழ்த் தாத்தா’  உ.வே. சாமிநாதையர் அவர்கள் ‘ என் சரித்திரம் ‘ என்ற நூலில் விவரித்துள்ள ‘ இளமைக் கல்வி ‘ என்ற அத்தியாத்தில் காணப்படுவது போல உள்ளது .

மிக முக்கியமான இந்த ஆய்வு அறிக்கையில் ஒரு தகவல் , அது கல்வி கற்கும் மாணவர்களின் சாதி பற்றிய விவரங்கள். மாணவர்களின் சாதி – பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர், பிற சாதியினர் (பட்டியல் சாதி). நான் இந்த மிக நீண்ட பதிவு போடுவதற்கே இந்தத் தகவல் மட்டுமே காரணம் .

ஆம், ஓரிரு இடங்களைத் தவிர, அனைத்து இடங்களிலும் சூத்திரர் சாதி எண்ணிக்கை மாணவர்கள்தான், மற்ற அனைத்து சாதி எண்ணிக்கை மாணவர்களை காட்டிலும் குறிப்பாக பிராமண சாதி எண்ணிகையை காட்டிலும்அதிகம்.

எனக்கே இந்த அதிர்ச்சி என்றால் ‘சமுக நீதிக் காவலர்கள் / செயல்பாட்டாளர்‘ – இவர்களுக்கு எந்த அளவுக்கு அதிர்ச்சி ஏற்படும் ?

‘மனு ஸ்ம்ருதி‘ – இங்கே வேலை செய்யவில்லை போலும் ?

இறுதியாக ,

ஏராளமான தகவல்கள் இந்த ‘ அழகிய மரம் ‘ என்ற நூலில் உள்ளது என்றாலும் , விரிவாக வேறு ஒரு சமயத்தில் விவாதிப்போம் எனக் கூறி – மகாத்மா காந்திக்கும், ஸ்ரீ தரம்பாலுக்கும் நமது நன்றி கலந்த வணக்கத்தை செலுத்துவோம்.

அழகிய மரம் – 18-ம் நூற்றாண்டு இந்தியாவில் பாரம்பரியக் கல்வி
ஆசிரியர்:  தரம்பால், தமிழில்: B.R.மகாதேவன்

வெளியீடு: தமிழினி, 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை – 600014
பக்கங்கள் – 520, விலை 450/-

அதிக பிரதிகள் வாங்க 9094569011 அல்லது writermahadevan@gmail.com மூலம் தொடர்பு கொள்ளவும்.

(கட்டுரையாளர் க.கந்தசாமி சைவசமய அறிஞர், பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து பல விஷ்யங்களையும் குறித்து எழுதி வருகிறார்). 

References :

1. தரம்பால் – அழகிய மரம் – 18 ஆம் நூற்றாண்டு பாரம்பரியக் கல்வி

2. Sahana Singh – The Educational Heritage of Ancient India – How an ecosystem of learning was laid to waste

3. உ வே சாமிநாதய்யர் – என் சரித்திரம்.

 

அழகிய மரம் (இந்தியப் பாரம்பரியக் கல்வி) – புத்தக அறிமுகம்

(இந்தப் புத்தக அறிமுகம்  மொழிபெயர்ப்பாளர்  B.R.மகாதேவன் தினமணி ஜங்ஷன் இதழில் எழுதிவந்த “அழகிய மரம்” தொடரின் முன்னுரையின் அடிப்பையில் எழுதப் பட்டுள்ளது. அவருக்கு எமது நன்றி) 

beautiful_tree_tamilரியப் படையெடுப்பு தொடர்பான பொய்யுரைகளுக்கு அடுத்ததாக இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில், அதிக செல்வாக்குடன் திகழும் இன்னொரு கட்டுக்கதை என்னவென்றால், இரண்டாயிரம் ஆண்டுகளாக  பிராமணர்கள் (திராவிட இயக்க அகராதியில் பிராமணர்கள் மட்டுமே  “உயர்சாதியினர்”)   மற்ற எந்த  சாதியினரையும்   (இதில்  “ஆண்ட பரம்பரைகள்” என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சாதிகளும் அடங்கும்)  படிக்கவே விடவில்லை என்பதுதான்.

திராவிடக் கழகத்தினரால் முன்னெடுக்கப்பட்டு, பல்வேறு அரசியல் குழுவினர் இன்றும் நம்பும் அல்லது நம்ப விரும்பும் கற்பிதம் அது. காந்தியவாதியும் வரலாற்று ஆய்வாளருமான தரம்பால், இந்தியக் கல்வி பற்றி ‘அழகிய மரம்’ இந்தப் புத்தகத்தில் முன்வைக்கும் ஆதாரங்களைப் படிப்பவர்கள், ஒன்று தங்களுடைய அந்தப் பிழையான தீர்மானத்தை மாற்றிக்கொள்வார்கள். அல்லது கைவந்த கலையைப் பயன்படுத்தி, புதிய வெறுப்புரைகளைக் கண்டடைவார்கள். (பிழையான அரசியல் கருதுகோளை மாற்றிக்கொள்ளும் நேர்மையெல்லாம் எல்லோருக்கும் எளிதில் வாய்த்துவிடுவதில்லையே).

1931-ல், லண்டனில் மகாத்மா காந்திஜி ஓர் உரை நிகழ்த்தினார்.  அதில், அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த கல்வியின் நிலையைவிட, ஐம்பது நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, இந்தியாவில் கல்வி நிலை ஒப்பீட்டளவில் சிறப்பாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷார் அமல்படுத்திய நிர்வாக நடைமுறைகள், இந்தியப் பாரம்பரியக் கல்வி என்ற அழகிய மரத்தை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டது என்று சொன்னார். காந்திஜியின் அந்தக் கூற்று, 18-19-ம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் கல்வி தொடர்பான மிகப்பெரிய விவாதக் கதவுகளைத் திறந்துவிட்டது. அந்த விவாதங்கள் மற்றும் அது தொடர்பான தரவுகளின் முழுமையான தொகுப்பே இந்தப் புத்தகம். அப்படியாக, பிரிட்டிஷாரின் ஆவணங்களின் அடிப்படையில், இந்தியக் கல்வியின் வரலாற்றை இந்தப் புத்தகம் முன்வைக்கிறது.

உலகில் எல்லா நாடுகளிலுமே, 18-ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கான கல்வி என்ற லட்சியம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, தொழில் புரட்சிக்குப் பிறகு. உலகில் பொதுவாக, கல்வியானது மத நிறுவனங்களின் பொறுப்பிலேயே விடப்பட்டிருக்கிறது. உலகின் பிற பகுதிகளில் இருந்ததைவிட இந்தியாவில் அடிப்படைக் கல்வியானது அனைத்து சாதியினருக்கும் தரப்பட்டிருக்கிறது. தொழில்கல்வி, எல்லா நாடுகளையும்போலவே தொழில் குழுமங்களுக்குள்ளாகவே கைமாற்றித் தரப்பட்டு வந்திருக்கிறது. ஆசிரியர்கள், மன்னர்கள், வணிகர்கள், நில உடமையாளர்கள், எளிய மக்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரும் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்துகொடுத்து, பாரம்பரியக் கல்வி மரத்தை நீரூற்றி, உரமிட்டு, வேலியிட்டுப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள்.

dharampal-1பிரிட்டிஷார் இந்தியாவை ஆக்கிரமித்ததும், வரி வசூலை அதிகரிக்க என்ன வழி என்று ஆராய்ந்திருக்கிறார்கள். ஏற்கெனவே இருந்த நிலங்களில் கணிசமான பங்கு இந்துப் பள்ளிகள், மதரஸாக்கள் போன்றவற்றின் பராமரிப்புக்காக மானியமாகத் தரப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறார்கள். அந்த நிலத்தில் இருந்து பிரிட்டிஷ் அரசுக்கு வரி கிடைக்க என்ன வழி என்று பார்த்து, அதற்கான சட்ட திட்டங்களை வகுத்திருக்கிறார்கள். அப்படியாக, அரசுக்கு வரி தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதும், அதுவரை பள்ளிக்குச் செலவிடப்பட்ட தொகை குறைந்தது. கூடவே பிரிட்டிஷார் பெரிய கட்டடங்கள், முறையான அச்சிடப்பட்ட பாடப் புத்தகங்கள், திறமையான ஆசிரியர்கள், தேர்வுகள் என நவீன கல்வியை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார்கள். (பிரிட்டனிலும் அது அப்போதுதான் அறிமுகமாகியிருந்தது). அவையெல்லாம் இல்லாத பள்ளிகளை, தயவு தாட்சணியமின்றி மூடினார்கள். அதற்கு முன்பு வரை, பெரிதும் இலவசமாகத் தரப்பட்ட கல்வியானது, பிரிட்டிஷாரின் வருகைக்குப் பிறகு கட்டணம் கட்டிப் படிக்கவேண்டி ஒன்றாக ஆனது. இதனால், கடைநிலை சாதிகளைச் சேர்ந்தவர்கள், கல்வியில் இருந்து அந்நியப்படவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அம்பேத்கர் போன்ற பல கடைநிலைச் சாதியினர், உயர் கல்வி பெறக் காரணமாக இருந்த அதே பிரிட்டிஷ் நிர்வாகம்தான், பெரும்பாலான எளிய கடைநிலைச் சாதியினர் கல்வியில் இருந்து அந்நியப்படவும் காரணமாக இருந்தது, வரலாற்றின் முரண்நகையே.

‘‘இந்தப் புத்தகத்தில் மறு பிரசுரம் செய்யப்பட்டிருக்கும் ஆவணங்கள், பெருமளவுக்கு ‘மதராஸ் பிரஸிடென்ஸி இண்டிஜினஸ் எஜுகேஷன் சர்வே’யில் இருந்து எடுக்கப்பட்டவையே. 1966-ல்தான் இதை முதலில் பார்த்தேன். 1831-32-லேயே, ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் ஆவணங்களில் இந்த ஆய்வறிக்கைகளின் சுருக்கம் இடம்பெற்றிருக்கிறது. ஏராளமான ஆய்வாளர்கள், மதராஸ் பிரஸிடென்ஸி மாவட்ட ஆவணங்களிலும், பிரஸிடென்ஸி வருவாய்த் துறை ஆவணங்களிலும் (பிந்தைய அறிக்கைகள் மதராஸிலும் இருக்கின்றன; லண்டனிலும் இருக்கின்றன) இருக்கும் இந்த விரிவான ஆய்வறிக்கைகளைப் பார்த்திருக்கக்கூடும். எனினும், இனம்புரியாத காரணங்களினால் அவை அறிவுப்புலப் பார்வையில் இருந்து தப்பிவிட்டிருக்கின்றன’’ என்று முன்னுரையில் தரப்பால் தெரிவித்திருக்கிறார். இனம் புரியாத காரணங்கள் என்று அவர் நாசூக்காகச் சொல்லியிருக்கிறார். உண்மையில், கடைந்தெடுத்த அரசியல் அயோக்கியத்தனமே அதற்கான காரணம் என்பதை இந்த  நூலைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள முடியும்.

காந்தியவாதியும் வரலாற்றாய்வாளருமான தரம்பால் (1922-2006)  பியூட்டிஃபுல் ட்ரீ (18-ம் நூற்றண்டில் இந்திய கல்வி), பதினெட்டாம்நூற்றாண்டில் இந்தியவிஞ்ஞானமும் தொழில்நுட்பமும்  போன்ற நூல்களை எழுதியவர். உத்தரபிரதேசத்தில் முஸாஃபர்நகர் மாவட்டத்தில் காந்தளா கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். இந்திய சமூகம் குறித்து பிரிட்டிஷார் நமக்குப் பிழையாக உருவாக்கித் தந்த பல்வேறு கருத்தாக்கங்களை பிரிட்டிஷாரின் ஆவணங்களை வைத்தே தகர்த்தவர். டெக்கான் ஹெரால்டு இதழில் 1983-ல் வெளிவந்த அவரது நேர்காணலின் தமிழாக்கம் இங்கே.

இந்த நூல், ஆங்கிலத்தில் அதர் இந்தியா பிரஸ் (Other India Press, Goa) சார்பில் வெளியானது. அதன் அதிகாரபூர்வ தமிழ் மொழியாக்கம் இது.  இந்த நூலை மிகச்சிறப்பாக B.R.மகாதேவன் மொழிபெயர்த்திருக்கிறார்.

அழகிய மரம் – 18-ம் நூற்றாண்டு இந்தியாவில் பாரம்பரியக் கல்வி
ஆசிரியர்:  தரம்பால், தமிழில்: B.R.மகாதேவன்
வெளியீடு: தமிழினி, 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை – 600014
பக்கங்கள் – 520, விலை 450/-

2016 ஜூன் சென்னை புத்தகக் கண்காட்சியில்  ‘தமிழினி’ அரங்கில் கிடைக்கும்.

அதிக பிரதிகள் வாங்க 9094569011 அல்லது writermahadevan@gmail.com மூலம் தொடர்பு கொள்ளவும்.

B.R.மகாதேவன் திரைப்படங்கள் குறித்தும் சமூக வரலாறு குறித்தும் தொடர்ந்து  காத்திரமான கட்டுரைகளை இணையத்தில் எழுதி வருபவர். அவரது சமீபத்திய நூல்கள்:

  • மறைக்கப்பட்ட பாரதம், ஏமாற்றுத் திரைப்படங்கள் (தடம் பதிப்பகம்)
  • கதை திரைக்கதை வசனம்,  சரஸ்வதி மேரி டீச்சர், விரைவில் வெள்ளித் திரையில்  (CG பதிப்பகம்)

இந்த நூல்கள் கண்காட்சியில் கிழக்கு, தமிழினி, வசந்தா பதிப்பக அரங்குகளில் கிடைக்கும்.