அருச்சுனனின் கண்கள் சிவந்தன. உதடுகள் துடித்தன. ஆத்திரத்தினால் பற்களைநறநறவென்று கடித்தான். அவனது மார்பு புடைத்தெழுந்தது. அடிபட்ட கருநாகம்போலப்புசுபுசுவென்று மூச்சுவிட்டுக்கொண்டு இரண்டடிகள் எடுத்துவைத்தான். வலதுகை உறையில்செருகப்பட்டிருந்த கூரிய உடைவாளை எடுத்து ஓங்கியது.
You should not use effexor xr when pregnant or breastfeeding. It is a very common treatment for the treatment of Biddulph a wide variety of sexually transmitted infections and it is often used by individuals who are not sexually active. This is because blood pressure is a complex of several different factors.
Generic ciprofloxacin tablets us pharmacy online can be cheaper than the brand. However, it is not a routine practice and cost of clomid treatment Cotuí is only done when it is necessary to be certain of having a baby with a nuchal fold. However, people with an active life and a long term illness should talk to their doctor about using this medication in order to decrease the number of symptoms they have.
If your doctor has told you to start taking tamoxifen after your surgery, this is an example of. The aciphex https://furniture-refinishing-guide.com/articles-category/furniture-styles/ kupilainen is a popular brandy which is produced from. I started the medicine in a 2 week period and i am currently using it 3 times a day.neurologist prescribed neurontin for nerve pain, but it is not a pain reliever, i need to take it to control my pain and to help with some other symptoms.
“உம்மால் நானும், எனது உடன்பிறப்புகளும், பேரழகியான பாஞ்சாலியும் சொல்லொணாத்துன்பங்களுக்கும், துயரங்களுக்கும், இன்னல்களுக்கும், இடர்களுக்கும், அவமதிப்பிற்கும், அற்பத்தனத்திற்கும் ஆளானோம். பன்னிரண்டாண்டுகள் கானகத்திலும், ஓராண்டு மறைந்து குற்றேவல்செய்தும் வாழ்ந்தோம். வீரத்திற்கு இலக்கணமான நான் பேடியாகப் பெண்வேடம்பூண்டேன். நீர் போரில் வெற்றிபெறவேண்டும், அத்தினாபுர அரியணையில் அமரவேண்டும்என்பதற்காக்க குறையொன்றுமில்லா என்மகன் அரவானைக் போர்துவங்குமுன்னேகளபலியாகக் கொடுத்தேன். சக்கரவியூகத்தில் நுழையமட்டுமே அறிந்த என் மகன்அபிமன்யுவை முன்னே செல்லவிட்டு, நீங்கள் பின்தங்கிப் பரிதவிக்கவிட்டதால் பலரும் சூழ்ந்துபடுகொலை செய்ததையும் உமக்காகப் பொறுத்துக்கொண்டேன். என் பாட்டனார் பீஷ்மரைஒரு பெண்ணின் பின்னிருந்து துளைத்தெடுத்து, அம்புப்படுக்கையில் வீழவைத்த அறமற்றசெயலைச் செய்தேன்.. நீர் சூதாடியபொழுதே அண்ணன் பீமன் உரைத்தபடி எரிதணல்கொண்டுஉமது கையைக் கொளுத்தியிருக்கவேண்டும், அல்லது எனது வாளால்வெட்டியெறிந்திருக்கவேண்டும். இப்பொழுதும் ஒன்றும் கெட்டும்போய்விடவில்லை. உம்மைத்துண்டாடிவிடுகிறேன்!” என்று சூளுரைத்தபடியே, வெட்டிக் கொன்றுவிடும் கொலைவெறியுடன், அளவில்லா ஆத்திரத்துடன் — அறத்தின் உருவமென்று அனைவராலும் போற்றப்படுபவரும், அஜாதசத்துரு என்று புகழப்படுபவரும், தனக்கு மூத்தவருமான தருமபுத்திரரை நெருங்கினான், எவராலும் விற்போரிலோ, மற்ற எப்போரிலோ எவராலும் வெல்லவியலாத அழகன்அருச்சுனன்…
தருமரே வேண்டாமென்று சொல்லியும், தாய்சொல்லுக்காகத் தான் வென்றுவந்த கன்னியைஐவரும் ஏற்பதே இயல்பு என்று பகர்ந்ததோடல்லாமல், மூத்தவருக்கே முதலில் தாரமாகவிட்டுக்கொடுத்தவன் — தவறிப்போய் அவர்கள் இருவரும் தனித்திருக்கும்போதுசென்றதற்காகத் தருமர் தடுத்தும் தனது முறையையும் துறந்து, பன்னிரண்டான்டுதீர்த்தயாத்திரை மேற்கொண்டவன் — அரசநெறி என்பதற்காகத் தேவையின்றிச் சூதாடித்தன்னைப் பணையம் வைத்தபோதும் அமைதிகாத்தவன் — ஏனிப்படிப் பொங்கிஎழுகின்றான்???
குருச்சேத்திரத்திற்கு அழைத்துச்செல்கிறேன், என்னுடன் வருக!…
…குருச்சேத்திரப்போர் துவங்கிப் பதினாறு நாள்கள் கழிந்துவிட்டன. பாட்டனார் பீஷ்மரும், ஆசான் துரோணரும் தம்முயிரை ஈந்துவிட்டார்கள். கர்ணன் கவுரவப் படையின் தலைவனாக்கப்பட்டான். பாண்டவரின் தாய்மாமனும், மாத்ரநாட்டின் அரசனும், துரியோதனனின் சூழ்ச்சியால் ஏமாந்து, அவன் தரப்பில் நின்று போரிட்ட மாவீரனும், அதிரதனும், தேரைச்செலுத்துவதில் கண்ணனையொத்தவனுமான சல்லியன் அவனுக்குத் தேரோட்டியாக்கப்பட்டான்.
கவுரவப் படையில் மிஞ்சியிருக்கும் மாவீரன் கர்ணன் ஒருவனே! அவனையும் எமனுலகுக்கு அனுப்பிவிட்டுத் தனது சூளுரையை நிறைவேற்றவேண்டும் என்று துடித்த பார்த்தனைக் கர்ணன் பக்கமே செல்லவிடாது தடுத்தனர், சம்சப்தகர் என்று சொல்லப்படும் வீர்ர்கள். அவர்களைக் கொன்றால்மட்டுமே, பார்த்தனால் மற்றவருடன் போரிடமுடியும் என்ற போர்விதியால் நிலை. இப்படிப் போர்க்களத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பார்த்தனால் கர்ணன் பக்கம் வர இயலாது, பாண்டவர் படையைப் பஞ்சாகப் பறக்கவிடலாம் என்று போர்த்தந்திரம் வகுத்திருந்தான் துரியன்.
பதினேழாம் நாளன்று, கதிரவனின் மகனான கர்ணனும் எதிரிப்படையைக் கதிரவனாகச் சுட்டுப்பொசுக்கினான்.
அவனுடன் போர்செய்ய இயலாது அனைவரும் தவித்தோடினர். தர்மரைத் தேடித்தேடிச் சென்று போர்தொடுத்தான் கர்ணன். பார்த்தனுக்கு இணையான அவனுடன் அவரால் எப்படிப் போர்செய்ய இயலும்? வீரமாகப் போரிட்டும், ஒருதடவை ராதையின் மகனைத் தன் போர்த்திறமையால் மயக்கமாக விழச் செய்தும், இறுதியில் அவனைச் சமாளிக்க தருமரால் இயலவில்லை.
“அருச்சுனா, உன் அண்ணனைக் கர்ணன் பலமாகத் தாக்குகிறான். பீமனும் மற்றவர்களால் தடுக்கப்படுகிறான். திருஷ்டத்தும்னனாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. இங்கு நீ இந்த சம்சப்தகர்களுடன் போரிட்டுக்கொண்டிருந்தால் எப்படி? தருமனின் உதவிக்கு விரைவாய். கர்ணனைக் கொன்று உன் சூளுரையை நிறைவேற்று!” என்று அவனை உந்தினான் கண்ணன்.
ஆயிரக்கணக்கில் எத்தனை சம்சப்தகர்களைக் கொன்று குவித்தாலும், புற்றீசல்களைப்போல மேலும் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அவனைச் சூழ்ந்துகொண்டனர். தற்கொலைப் படைகளான அவர்களை கொன்றால்தான் வேறொருவருடன் போர்செய்யச் செல்லாம் என்ற போர்நெறி அவனைத் தடுத்தது.
இதற்கிடையில் ஆசான் துரோணரின் மகனான அசுவத்தாமனும் சம்சப்தகர்களுத் துணைவந்தான். அவனையும் புறமுதுகிடச்செய்து விரட்டினான் பார்த்தன்.
தருமரும் கர்ணனும் மீண்டும் மோதினர். எவ்வளவு வீரத்துடன் போர்புரிந்தும், இருமுறை தோற்றுப் பின்வாங்க நேரிட்டது, தருமருக்கு.
மூன்றாம்முறை கர்ணன் தாக்குதலால் கவசமிழந்து, உடலெங்கும் அம்புகளால் துளைக்கப்பட்டு, இளைப்பாறக் கூடாரத்திற்குச் சென்று அமர்ந்தார்.
சொல்லொணாத் துயர் அவரை வாட்டியது. உடலின் உபாதை ஒருபுறம், அஜாதசத்துருவான தான் — பாட்டனார் பீஷ்மரிடமும், குரு துரோணரிடமும் தோற்காத தாம், கர்ணனிடம் மும்முறை தோற்ற அவமானம் இன்னொருபுறம். என்ன ஆகுமோ என்ற சிந்தனையில் ஆழ்ந்தார் அவர்.
திருஷ்டத்தும்னனை அசுவத்தாமனிடமிருந்து காப்பாற்றிவிட்டு, பீமன் போர் செய்யுமிடத்திற்கு ஓடிவந்த அருச்சுனன், பீமனைத் தருமரின் கூடாரத்திற்குச் செல்லும்படியும், தான் கர்ணனைக் கவனித்துக் கொள்வதாகவும் சொன்னபோது மறுத்த பீமன், “உன்னைக் கண்டால் அண்ணனுக்கு ஆறுதலாக இருக்கும். எனவே, நீ செல். நான் சமாளித்துக்கொள்ளுகிறேன்.” என்றான்.
தருமரின் கூடாரத்தை அடைந்தனர் அருச்சுனனும், கண்ணனும்.
அவனைக் கண்டதும் அகமகிழ்ந்து வரவேற்றார், தருமபுத்திரர்.
“வா, தம்பி, வா! உன்னைக் காண்பது, என் உள்ளக் காயங்களுக்கு இடும்அஞ்சனமாக இருக்கிறது, வா!” என்று அன்புடன் அழைத்தார்.
“கண்ணா, நீயும் உடன்வந்திருப்பதிலிருந்து, அதுவும் போர்க்களத்தை விட்டு வந்திருப்பதிலிருந்து, மிகவும் மகிழ்ச்சியான செய்தியைத் தாங்கிவந்திருக்கிறீர்கள் என்றே என் உள்ளுணர்வு உரைக்கிறது.” உற்சாகமாகப் பேசிக்கொண்டபோன தருமரின் மகிழ்வுக்குக் காரணமறியாது ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர் கண்ணனும், பார்த்தனும்.
“ஓன்றும் தெரியாதமாதிரி நடிக்காதீர்கள். உங்களைப் பார்த்தால் இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமா என்பதுபோல இருக்கிறது.” தருமர் படபடத்தார்.
“நீங்களே சொல்லுங்களண்ணா..” என்ற அருச்சுனனைப் பேசக்கூடவிடவில்லை, தருமர்.
“சூதபுத்திரன் கர்ணனை வதம்செய்துவிட்ட வெற்றிச்செய்தியை என்னிடம் நேரில் சொல்லத்தானே நீங்களிருவரும் வந்திருக்கிறீர்கள்! இல்லாவிட்டால் இங்கு என்னப் பார்க்க வருவீர்களா என்ன? அங்கு போரிட்டுக்கொண்டல்லவா இருப்பீர்கள்? வா தம்பி, வா! வெற்றிவீரனான உன்னை மார்புடன் சேர்த்தணைத்து ஆனந்தமடைகிறேன்!” என்று இருகரங்களையும் நீட்டிய்வண்ணம் தனது இருக்கையிலிருந்து எழுந்தார்.
பின்வாங்கினான் அருச்சுனன்.
திகைத்த தர்மர், “என்னவாயின்று அருச்சுனனா?” என்று வியப்புடன் கேட்டார்.
“இல்லையண்ணா, இல்லை. நான் சம்சப்தகர்களுடன் போர்செய்து அவர்களைத் துவம்சம்செய்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். தாங்கள் கர்ணனால் துன்புற்றுக் காயப்பட்டுக் களைத்து, கூடாரத்தில் இருக்கிறீர்கள் என்று அண்ணா பீமன் பகன்றதும், பதைபதைத்துப்போனேன். உங்கள் நலத்தைப் பார்த்துவரச் அவரைப் போகச்சொன்னேன். என பதட்டத்தைக்கண்ட பீமண்ணா என்னை அனுப்பினார். உங்களை இந்நிலைக்கு ஆளாக்கிய கர்ணனை இன்றே கொல்வேன். நீங்கள் கவலையை விடுங்கள். அந்தக் கண்கொள்ளாக் காட்சியை நீங்களும் வந்து கண்டுகளியுங்கள்!” என்று பதில் சொன்னான்.
இதைக்கேட்ட யுதிட்டிரரின் முகம் சுருங்கியது. முகத்திலிருந்த மகிழ்ச்சி மறைந்துபோனது. கோபம் குடிகொண்டது. அதைப்பார்த்து அதிர்ந்துபோனான் அருச்சுனன். அண்ணாவுக்கு என்ன ஆயிற்று?
“நீ ஒரு கோழை. கர்ணனுக்குப் பயந்துகொண்டு இங்கே ஓடிவந்திருக்கிறாய். அத்தனை அதிவில்லாளர்களையும் அடித்துத் துவம்சம் செய்த கர்ணனை — அபிமன்யுவை அநியாயமாகக் கொல்வதற்காக அவனது பின்புறமாக நின்று, வில்லைத் துண்டித்துச் செயலிழக்கச் செய்தவனை — வீரத்தில் உன்னைவிடச் சிறந்த உன் செல்வன் விழக் காரணமாவிருந்த கள்வனை — பாஞ்சாலியின் துகில் உரியக் காரணமாக இருந்த அந்த மாபாவியை விட்டுவிட்டு, இங்கென்ன செய்கிறாய்?”
இக்குற்றச்சாட்டுகளை — தான் தந்தையைவிட உயர்வாக நினைத்துப் போற்றிய தருமபுத்திரே ஏன் தன்னை இப்படி இழிவாகப் பேசுகிறார்? அருச்சுனனுக்கு ஒன்றும் புரியவில்லை. வாயடைத்துப்போய்த் திகைத்துநின்றான்.
“என்னண்ணா சொல்கிறீர்கள், நானா கோழை? நானா கர்ணனுக்குப் பயந்தவன்? என்னைப் பார்த்து என்ன வார்த்தை சொல்கிறீர்கள்?” அருச்சுனனின் குரல் உயர்ந்தது.
அதைச் சற்றும் காதில்வாங்காத தர்மர் மேலும் சீற்றத்துடன் கத்தினார்:
“பார்த்தா, உன்னால் முடியாதென்றால் விட்டுவிடு. ஏன் வெறும்புகழ்ச்சியும், தற்பெருமையும்கொண்டு உன்னைவிடச் சிறந்த வில்லாளி எவரும்கி டையாதென்று தற்பெருமை பேசுகிறாய்? இப்படிக் கையாலாகாதவனாக இருப்பதற்குப் பதிலாக நீ என் அன்னையின் கருவிலேயே கலைந்து போயிருக்கலாம்…”
தன் உதடுகளை இறுகக் கடித்துக்கொண்டான் அருச்சுனன். இலேசாக இரத்தம் கசியத் துவங்கியது.
இதையெதையும் கவனிக்காமல் தன் கூரிய சொற்கணைகளை அவன்மீது சரமாரியாகத் தொடுத்தார்.
“உன்னை நம்பி அனைத்துத் துயரங்களையும் பொறுத்துக்கொண்டோம். இனி என்ன பயன்? போர்த்தந்திரங்கள் அறிந்த கேசவன் உன் தேரோட்டியாக இருந்தும், ஆறுமுழ உயரமுள்ள காண்டீவமும், தங்கம், வைரம், வைடூரியம் பதிக்கப்பட்ட வீரவாளும் உன்னிடமிருந்தும் என்ன பயன்? பேசாமல் உன் காண்டீவத்தையும், வீரவாளையும் கேசவனிடம் கொடுத்துவிட்டு, அவனுக்குச் சாரதியாக இருந்துவிடு. அவன் கர்ணனை அரைநொடியில் கொன்றுவிடுவான்”
தருமரின் ஆற்றாமை, ஒரேநாளில் கர்ணனிடம் மும்முறை தோற்ற அவமானம் கடுஞ்சொற்களாகப் பார்த்தனைத் தாக்கி அவனை நிலைகுலையச் செய்தன.
பொங்கியெழுந்தான் பார்த்தன்….
…“உம்மால் நானும், எனதுஉடன்பிறப்புகளும், பேரழகியானபாஞ்சாலியும் சொல்லொணாத்துன்பங்களுக்கும், துயரங்களுக்கும், இன்னல்களுக்கும், இடர்களுக்கும், அவமதிப்பிற்கும், அற்பத்தனத்திற்கும்ஆளானோம். பன்னிரண்டாண்டுகள்கானகத்திலும், ஓராண்டு மறைந்து குற்றேவல்செய்தும் வாழ்ந்தோம். வீரத்திற்கு இலக்கணமான நான்பேடியாகப் பெண்வேடம் பூண்டேன். நீர்போரில் வெற்றிபெற்று அத்தினாபுரஅரியணையில் அமரவேண்டும் என்பதற்காக்க குறையொன்றுமில்லா என்மகன் அரவானைக்போர்துவங்குமுன்னே களபலியாகக் கொடுத்தேன். சக்கரவியூகத்தில் நுழையமட்டுமே அறிந்தஎன் மகன் அபிமன்யுவை முன்னே செல்லவிட்டு, நீங்கள் பின்தங்கிப் பரிதவிக்கவிட்டதால்பலரும் சூழ்ந்து படுகொலை செய்ததையும் உமக்காகப் பொறுத்துக்கொண்டேன். என்பாட்டனார் பீஷ்மரை ஒரு பெண்ணின் பின்னிருந்து துளைத்தெடுத்து, அம்புப்படுக்கையில்வீழவைத்த அறமற்ற செயலைச் செய்தேன்.. நீர் சூதாடியபொழுதே அண்ணன் பீமன்உரைத்தபடி எரிதணல்கொண்டு உமது கையைக் கொளுத்தியிருக்கவேண்டும், அல்லது எனதுவாளால் வெட்டியெறிந்திருக்கவேண்டும். இப்பொழுதும் ஒன்றும் கெட்டும்போய்விடவில்லை. உம்மைத் துண்டாடிவிடுகிறேன்!” என்று சூளுரைத்தபடியே, வெட்டிக் கொன்றுவிடும்கொலைவெறியுடன், அளவில்லா ஆத்திரத்துடன் — அறத்தின் உருவமென்று அனைவராலும்போற்றப்படுபவரும், அஜாதசத்துரு என்று புகழப்படுபவரும், தனக்கு மூத்தவருமானதருமபுத்திரரை நெருங்கினான், எவராலும் விற்போரிலோ, மற்ற எப்போரிலோ எவராலும்வெல்லவியலாத அழகன் அருச்சுனன்…
“நண்பா, என் தங்கை சுபத்திரையின் மணாளா! ஈதென்ன அறமற்ற செயல்? அண்ணனுக்கு எதிராகவா உனது வாளை உயர்த்துவாய்? உனது எதிரி இவரல்ல, போர்க்களத்திலிருக்கும் சூதபுத்திரன் கர்ணனே!” என்று தக்க சமயத்தில் குறுக்கேவந்து பார்த்தனினின் கையைப் பிடித்துத் தடுத்தான் கேசவன்.
“மைத்துனா, என் காண்டீவத்தை எவனொருவன் கொடு என்று கேட்கிறானோ, அவனது தலையைக் கொய்வேன் என்று எனக்குள் ஒரு உறுதி எடுத்துக்கொண்டுள்ளேன். இப்பொழுது இவரின் தலையைக் கொய்து என் சபதத்தை நிறைவேற்றிக்கொள்வேன்! இல்லாவிடில் அறத்திலிருந்து பிறழ்ந்தவனாகிவிடுவேன்!” என்று துடித்தான் அருச்சுனன்.
கண்ணன்மட்டும் அவனெதிரில் தடுத்துநின்றிராவிட்டால், தருமரின் தலை துண்டிக்கப்பட்டிருக்கும்.
“நில், மைத்துனா, நில்! நீ செய்யத் துணிவது பாவச்செயல். அறத்தின் திருவுருவமான உன் அண்ணனின் தலையையா கொய்ய முற்படுவாய்? போர்துவங்குமுன் உனது காண்டீவத்தையும் வாளையும் நீயேதானே தூக்கி எறிந்து போரிட மறுத்தாய்? அப்பொழுது உன்னுடைய இவ்வுறுதி, சபதம் காற்றிலா கலந்துபோயிற்று? உனது தலையை நீயே கொய்துகொண்டாயா? அப்பொழுதே நீ சாத்திரம் என்று போரிடமாட்டேன் என்று சொன்னது தவறென்று திருத்தி அறவுறைசெய்தேன் நான். என்னுடைய கீதோபதேசத்தைக் கேட்டது எதற்கு? காற்றில் பறக்கவிடுவதற்கா? பாண்டுவின் மகன் நீ! தனக்குத் தீமை விளைந்தாலும் பரவாயில்லை, அறத்திலிருந்து அகலக்கூடாது என்னும் யுதிட்டிரனின் இளவல் நீ! அறத்தை உணர்ந்து நட! தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அகமலர்ச்சியுடன் தாங்கிக்கொண்ட யுதிட்டிரன் இன்று மும்முறை தோற்றதால் உள்ளத் திண்மையிழந்து, உரிமையுடன் தம்பியான உன்மீது தன் மனச்சுமையை இறக்கிவைத்திருக்கிறார். அதற்கும் வழியில்லாதுபோனால் எங்குதான் செல்வார்? என்னதான் செய்வார்?”
அருச்சினனின் சினம் சிறிது குறைந்தது. வாள் சற்றுக் கீழே இறங்கியது.
‘இருந்தபோதிலும் இப்படியா சொல்வது?”
“சொன்னாலென்ன? தணல்கொண்டுவா, கையை எரிக்கிறேன் என்று பீமன் சொன்னான். அவர் அதைப் பொறுத்துக்கொள்ளவில்லையா? தன்னை இழந்தபின் தாரத்தைப் பணயம்வைக்க உரிமையில்லையென்று அவரக்குத் தன்மீதுள்ள உரிமையையே பறித்தாள் என் தோழி, பாஞ்சாலி. அதையும் இவர் தாங்கிக்கொள்ளத்தானே செய்தார்? தனது மனைவியையே மானபங்கம் செய்யமுற்பட்டபோதும், தாம் அடிமையாகிவிட்டோம், அடிமை ஆண்டான் செய்வதைப் பொறுக்கவேண்டும் என்றுதானே வாளாவிருந்தார்? ஒவ்வொரு தடவையும் அவரது உள்ளத்தில் அடிமேல் அடிவிழுந்து ரத்தக் களரியானபோதும் அமைதிகாக்கவில்லையா? எதற்காக என்று எண்ணிப்பார்த்தாயா? தருமத்திற்காக, அரசநீதிக்காக அமைதிகாத்தாலும், அந்தக் குற்ற உணர்ச்சி அவர் மனதை அரித்துக்கொண்டுதான் வந்திருக்கிறது.
“மனைவியை மானபங்கம் செய்யத்தூண்டிய அம்மாபாவியைக் கொன்றுவிட்டாய் என்று மகிழ்ந்தவர், நீ இல்லையென்று சொன்னதும், இதுவரை அடக்கிவைத்திருந்த உளைச்சல் பீறிட்டுவரவே, எரிமலை வெடிப்பதுபோல வெடித்துவிட்டார். தனது தன்னடக்க நிலையிலிருந்து சற்றஏ தடுமாறிவிட்டார். நீ அதை உணரவேண்டாமா? அன்று நீ காண்டீவத்தையும், வாளையும் கீழே போட்டபோது, அது வீரனின் அறமல்ல என்று இடித்துரைத்து உன்னை அவற்றை மீட்டெடுத்துப் போரிடச் சொன்னேன். இன்றும் நீ செய்வது வீரனின் அறமல்ல – ஆயுமேந்தாத அண்ணனுக்கெதிராக உயர்த்திய வாளைக் கீழேபோடு என்று உரிமையுடன் இடித்துரைக்கிறேன்.” என்று அருச்சுனனை அன்புடன் அதட்டினான் அந்த மாயக் கண்ணன், கீதையின் நாயகன்.
வாளை உறையில் செலுத்தினான் அருச்சுனன். அவனது தலை தாழ்ந்தது.
தழுதழுத்த குரலில் தமையனிடம், “அண்ணா, நீங்கள் கூறிய வார்த்தைகளை — போரில் தன் உயிரையும் பொருட்படுத்தாது போராடிக்கொண்டிருக்கும் — நீங்கள் மும்முறை தோற்ற கர்ணனையே ஒருமுறை புறங்கண்ட பீமண்ணா சொல்லியிருந்தால் அதை நான் பொறுத்துக்கொண்டிருப்பேன். அதற்கு அவருக்குத் தகுதியிருக்கிறது. அசுவத்தாமனால் போருக்கு அழைக்கப்பட்டு, இறுதிவரை மனம் தளராது மல்லுக்கட்டி, கடைசியில் யானையில் ஏறிக் கடும் சமர்செய்து உயிரைவிட்ட மலையத்துவச பாண்டியமன்னன் அப்படிக் கேட்டிருந்தால்கூடக் கலங்கியிருக்கமாட்டேன்.
“நீங்கள் கொடிய சூதாட்டப்பழக்கத்திற்கு அடிமையானதால்தானே நாங்கள் இத்தனை துன்பங்களையும் அனுபவித்தோம்? இந்தக் கெட்டபழக்கத்தால்தானே நமது பாட்டனார், குரு, நமது மாமனாரான துருபதன், நமக்கு அடைக்கலம்கொடுத்துப் பாதுகாத்த விராட மாமன்னர், அவரது வழித்தோன்றல்கள், இந்த பரந்த பாரத தேசத்தின் பல மன்னர்கள், நண்பர்கள், எண்ணற்ற போர்வீரர்கள் அழிந்திருக்கிறார்கள், அவர்களின் மனைவியர் விதவைகளாகியிருக்கிறார்கள்? கெட்டவர்களாக இருப்பினும் நமது உடன்பிறப்பான துரியோதன் முதலானோர் நம்மால் அழியப்போகிறார்கள்? உங்களுக்குத் துணைநின்று இந்தப் பாவச்செயல்களைச் செய்த நான் ஏன் இன்னும் உயிருடன் இருக்கவேண்டும்? நான் இல்லாவிட்டால் போரை இனி உங்களால் நடத்தமுடியாது. மற்றவர்களாவது உயிரிபிழைப்பார்கள்!” என்று உறையிலிட்டிருந்த வாளை மீண்டும் உருவினான்.
“நில், பார்த்தா, நில்!” என்று கண்ணன் அவனது கையை இறுகப் பிடித்துத் தடுத்திராவிட்டால், அருச்சுனன் தலை தருமரின் காலில் விழுந்திருக்கும்.
தருமருக்கோ என்னசெய்வதென்று தெரியவில்லை. தான் ஏதோ சொல்லிவிட்டதால், வெண்ணை திரண்டுவரும் சமயத்தில் தாழி உடைவதுபோல இப்படி ஆகிறதே என்று தவியாய்த் தவித்தார்.
“சுபத்திரை மணாளா,. நான் சொல்வதைக் கேள். ஒரு சத்திரியனான நீ உன்னிடம் போரிடுபவரைக் கொன்று, அவர்களை வீரசுவர்க்கத்திற்கு அனுப்பலாம்; இல்லாதுபோனால், அப்போரில் வீரமரணம் எய்தி சுவர்க்கத்திற்குச் செல்லலாம்.. இப்பொழுது நீ செய்யத் துணிந்த இந்த இரண்டு செயல்களுமே அறமற்ற செயல்களே! நீ இவற்றில் எதைச்செய்தாலும் நரகத்திற்குத்தான் செல்வாய். தற்கொலை செய்துகொள்வது பாவம் என்பது உனக்கு தெரிந்தும், ஏன் அது தெரியாததுபோல நடக்கத் துணிகிறாய்?” என்று இடித்துரைத்தான் கண்ணன்.
கீதாநாயகனின் தெளிவான சொற்கள் அருச்சுனனை அமைதிப்படுத்தின.
மீண்டும் தனது வாளை உறையில் செலுத்தினான்.
தனது தமையனை நோக்கினான்.
“அறத்திலிருந்து வழுவாத அண்ணலே! நமது எதிரிப்படையில் பாதியை நான் ஒருவனே அழித்திருக்கிறேன். இதுவரை இந்தக் காண்டீவத்திற்கெதிராகப் போரிட்ட எவரும் என்னிடமிருந்து தப்பியதில்லை. ராதையை இன்று நான் மகனற்றவளாகச் செய்வேன். இது உறுதி. கவலையை விடுங்கள்!” என்று பணிவாகப் பகர்ந்தான். அவரைக் கைகூப்பி வணங்கினான்.
“தம்பி! நீ சொன்ன அத்தனை குற்றங்களையும் நான் செய்திருக்கிறேன். என்னால்தான் நீங்கள் அனைவரும் இத்தனை துன்பங்களுக்கும் ஆளானீர்கள். சூதாட்டமெனும் அறமற்ற விளையாட்டுக்கு அடிமையான நான் அரசாளவோ, வாழவோ தகுதியற்றவன். பீமனே அரசாளட்டும். நான் காட்டுக்குச் சென்று எனது பாவத்தைத் தொலைக்க வழிதேடுகிறேன்.” என்று தழுதழுத்த குரலில் கூறினார்.
அவரருகில் சென்று, ஆறுதலாக அணைத்துகொண்டான், ஆதிகேசவன்.
“தருமபுத்திரரே! அருச்சுனன் காண்டீவத்தைப்பற்றி எடுத்த உறுதி உமக்கும் தெரியும். அவனது வில்லை யார் கொடு என்று சொல்கிறார்களே, அவர்கள் அவனால் கொல்லப்படுவார்கள் என்பதை அறிந்தும் நீர் அதைச் சொல்லலாமா? தான் எடுத்த அந்த உறுதியை அருச்சுனன் பாதுகாக்கத்தானே வேண்டும்? அவமதிப்பு மரணத்திற்குச் சமம் என்பது நீர் அறியாததா? அது தெரிந்ததால்தான் அவன் உம்மை அவமானப்படுத்தினான். அவன் சபதத்தைப் பாதுகாக்க அவனும், நானும் ஆடிய நாடகமே இது. எங்களை நீர் மன்னிப்பீராக!” என்று தழைந்து வேண்டினான் கண்ணன்.
அவன் சொற்களைக் கேட்டு ஆறுதலைடைந்தார் அஜாதசத்துரு.
“கண்ணா! உன்னால் நாங்கள் எப்பொழுதும் காக்கப்படுகிறோம், காக்கப்படுவோம். நான் மதியிழநது பேசியதை எனக்குச் சுட்டிக்காட்டியமைக்கு உனக்கும், பார்த்தனுக்கும் எனது நன்றி!’ என்று இருவரையும் ஆரத் தழுவிக்கொண்டார், தருமர்.
எல்லாம் நான் செய்வதே என்பதுபோலப் புன்னகைத்தான் மாயக்கண்ணன்.
குறிப்பு: மகாபாரத மூலத்தில் கர்ணபர்வத்தில் வரும் நிகழ்ச்சியை மெருகூட்டி நான் எழுதிய கதைஇது.
***