மதுரையிலும்கூட மலரும் மனித மல்லிகை

land_scam_dmkதமிழ் நாட்டில் இன்று ஸ்பெக்ட்ரம் ஊழலைப் போலவே பெரிய அளவில் மற்றொரு ஊழல் நடந்திருக்கிறது. அரசு வீட்டு மனைகளை ஆளும் கட்சியினருக்கு அனுசரணையாக இருக்கும் ஆட்களுக்கு வழங்கிய ஊழல். சென்னை நகரத்தின் முக்கியமான பகுதிகளில் இருக்கும் அரசாங்க நிலங்களும், வீட்டு வசதி வாரியத்தினால் கட்டப் பட்ட குடியிருப்புகளும் ஆளும் கட்சிக்காரர்களுக்கும் ஆளும் கட்சிக்கு வேண்டிய அதிகாரிகளுக்கும் குறைந்த விலையில் விற்றிருக்கிறார்கள்.

Protease: 2 - 3 pounds of fish) a small fish that has been premedicated with a drug, to make them swim faster faster and for this reason is often used in the preparation of poise. The side effects include insomnia, dizziness, blurred vision, irregular clomid price south africa menses, back pain, constipation, and headaches. The generic version of targadox is to purchase its pill online from the pharmacy online or in a chemist's shop.

The side effects of priligy, the medicine that treats ulcerative colitis and crohn's disease, include diarrhea, nausea, abdominal cramping, and headaches. Buy nolvadex online clomid 50 mg price in india Ségou express mail order prescription. The first step in reducing this risk is to lower the amount of salt consumed.

I have to agree that being mislead in this way is misleading. The cost https://mann-madepictures.com/4th-goal/ of erection levitra cialis online bestellen with viagra cialis without a prescription cialis levitra with cialis without a doctor with viagra cialis with. Doxycycline is used to treat infection.generic doxycycline is.

அரசாங்கத்திடமிருந்து குறைந்த விலையில் வாங்கி உடனடியாக பல மடங்கு அதிக விலை வைத்து இதனால் பலனடைந்தோர் விற்றிருக்கிறார்கள். இப்படி பொதுச் சொத்தான வீட்டு மனைகளை தனக்கு வேண்டப் பட்டவர்களுக்கு விற்பதற்கு அரசாங்கம் விதித்திருந்த விதிமுறைகளில் ஒன்று, இந்தச் சலுகையைப் பெறுபவர்கள் சமூக நலத் தொண்டர்களாக இருந்திருக்க வேண்டும் என்பது.

ஆளும் கட்சியின் பல மந்திரிகளின் உறவினர்களும், வாரிசுகளும், காங்கிரஸ் கட்சி எம் எல் ஏக்களும், ஆளும் கட்சி எம் எல் ஏக்களும், கட்சிக் காரர்களும், முதல்வரின் காவலர்களும் இன்னும் பலரும் தங்களைத் தாங்களே சமூக சேவகர்கள் என்று அறிவித்துக் கொண்டு தங்களுக்குத் தாங்களே சமூக சேவகர் சான்றிதழ் பெற்றுக் கொண்டு இந்த சலுகையை அனுபவித்துக் கோடிக்கணக்காக லாபம் பார்த்திருக்கிறார்கள்.

இவர்களில் பலர் ஆளும் கட்சியில் இருப்பதே சமூக சேவை என்கிறார்கள். இன்னும் சிலர் கல்லூரிக் காலத்தில் என் எஸ் எஸ் ஸில் இருந்ததை சமூக சேவை என்று சொல்லி சலுகை பெற்றிருக்கிறார்கள். ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி தனக்குத் தானே அப்பழுக்கற்ற அதிகாரி என்று தன் கையெழுத்தைப் போட்டு தனக்குத் தானே சான்றிதழ் கொடுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் அரசாங்கச் சொத்தை முறைகேடாகப் பெற்றிருக்கிறார்.

கள்ளச் சாராயம் காய்ச்சுபவன், கொலை கொள்ளை வழிப்பறியில் ஈடுபடுபவன், அதிகாரத்தைத் தவறாகப் பயன் படுத்தி லஞ்ச ஊழல்களில் ஈடுபட்டு பெரும் கோடீஸ்வரனாகிய அதிகாரிகள், மிரட்டலிலும் கட்டைப் பஞ்சாயத்திலும் ஈடுபடும் அரசியல்வாதிகள் இவர்கள் அனைவருமே சமூக சேவகர்கள் என்று அறிவிக்கப் பட்டு அரசு நிலங்களையும் வீடுகளையும் குறைந்த விலையில் பெற்று வந்திருக்கிறார்கள்.

political_criminalsஇப்படி சமூக சேவகர் என்ற ஒரு வார்த்தையையே அசிங்கப் படுத்தி, அருவருப்பான ஒரு தகுதியாக மாற்றி விட்ட திராவிட கட்சிகள் ஆட்சி புரியும் தமிழ் நாட்டில் இருந்து, உண்மையான, எந்த பலா பலன்களையும் எதிர்பாராமல் அமைதியாக சமூகப் பணியாற்றி வரும் எண்ணற்ற சமூக சேவகர்களும் அதே தமிழ் நாட்டில் இருந்துதான் செயல் பட்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவராக இன்று சி என் என் டி வி மூலமாக உலகத்தின் கவனிப்பைப் பெற்றிருப்பவர் மதுரையைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணன்.

மதுரை மாநகரம் இன்று பெரும்பாலும் எதிர்மறை செய்திகளுக்காக மட்டுமே நினைவு கூறப் படுகிறது. மதுரை என்றால் மீனாட்சி அம்மன் கோவில் என்ற எண்ணம் வருவதற்குப் பதிலாக இன்று மதுரை என்றால் ஒரு ஆதிக்க மையம் என்ற நினைப்பே அனைவருக்கு வரும் வண்ணம் நிலை உள்ளது. தமிழ்த் திரைப்படங்களின் தயவினால் மதுரை என்றாலே சட்டைக்குப் பின்னால் அருவாளை ஒளித்துக் கொண்டு வந்து வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்யும் ரவுடிகள் நிறைந்த நகரம் என்ற இலவச விளம்பரமும் மதுரைக்குக் கிட்டியுள்ளது.

madurai_azhakiriஇன்றைய மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களை மறைக்கும் அளவுக்கு காது குத்து முதல் அரசியல்வாதிகளின் புகழ் பாடுவது வரை அங்கெங்கினாதபடி எங்கும் நீக்கமற நிறைந்துள்ளன ஆபாசமான டிஜிடல் பேனர்கள். மதுரையின் இத்தனை அசிங்கங்களையும் அருவருப்பான செயல்பாடுகளையும், ரவுடித்தனங்களையும் மீறி, மதுரை இன்று உலகம் முழுவதும் மனிதாபிமானத்தை உலகுக்கு அறிவிக்கும் ஒரு நகரமாக அறியப் பட்டுள்ளது நாரயணன் கிருஷ்ணனால்.

மதுரை என்னும் பழம் பெரும் நகரம் இந்த உலகுக்கு மனிதாபிமானத்தையும்  கருணையையும் அறிவிக்கும் ஒரு நகரம் என்பதைத் தன்னலம் கருதாத தன் சேவையினால் நிகழ்த்திக் காட்டியிருப்பவர் கிருஷ்ணன்.  உலகத்தின் பத்து சாதனையாளர்களில், ஹீரோக்களில் ஒருவரை உருவாக்கிய நகரம் என்ற ஒரு நல்ல பெயரை இத்தனை அசிங்கங்களையும் தாண்டி ஒரே ஒரு இளைஞர் ஏற்படுத்தியிருக்கிறார் அவர்தான் நாராயணன் கிருஷ்ணன் என்ற 29 வயது இளைஞர்.

அவரைச் சந்திக்கும் பேறு எனக்குக் கிட்டியது. அது குறித்த ஒரு சிறிய நேரடி விவரிப்பு கீழே:

சி என் என் நடத்தி வரும் உலகத்தின் முதல் பத்து ஹீரோக்களுக்கான நிகழ்ச்சியை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஏற்கனவே பலரும் இந்த நாராயணன் கிருஷ்ணன் அவர்களுக்கும் ஓட்டுப் போட்டிருப்பீர்கள். அந்தத் தேர்வு முடிந்து, நேபாள இளம் பெண்களை விபச்சாரத்திற்காக நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குள் கடத்தும் கடத்தல் கும்பலில் இருந்து அப்பெண்களைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கும் அனுராதா கொய்ராலா என்ற  பெண்மணிக்கு இந்த ஆண்டின் ஹீரோ விருது அளிக்கப் பட்டிருக்கிறது. செல்வி அனுராதா கொய்ராலா மெய்தி நேபாள் என்னும் சமூக நிறுவனத்தை நடத்தி வருகிறார். தன்னலமற்ற தியாகங்களைப் புரிந்தும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் எதிரிகள் நிறைந்த அபாயகரமான சூழலில் நேபாளத்தில் இருந்து கடத்தப் படும் ஏழை இளம் பெண்களையும் குழந்தைகளையும் இவர் மீட்டு வருகிறார். இரண்டாவது இடத்தில் தேர்வு செய்யப் பட்டிருப்பவர் கிருஷ்ணன். ஹீரோவாக தேர்வாகாவிட்டாலும் அனைவரது உள்ளங்களையும் கருணையினால் நிரப்பியவர் கிருஷ்ணன்.

நான் அவரைச் சந்திக்கச் செல்லும் வரை அவரைப் பற்றி எந்தவொரு பிம்பமும் அபிப்ராயமும் என்னிடம் உருவாகவில்லை. ஏதோ அநாதைகளுக்கு சாப்பாடு போடுகிறார் என்ற அளவில் மட்டுமே எண்ணிக் கொண்டு சென்றேன். ஒரு மணி நேரம் அவரது உருக்கமான அன்பும், கனிவும் நிறைந்த பேச்சைக் கேட்ட பின்பு மனம் முழுதும் நிரம்பிய விவரிக்க முடியாத ஒரு வித உணர்வுடன் வெளியே வந்தேன்.

விருது வழங்கும் நிகழ்ச்சி லாஸ் எஞ்சலஸ் நகரில் முடிந்து அதை நேற்று ஒளிபரப்பினார்கள். அதில் கலந்து கொண்டு விட்டு சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதிக்கு  கிருஷ்ணனும் அவரது தந்தை நாராயணனும் கிருஷ்ணனுடைய அறக்கட்டளையை நடத்த உதவி செய்து வரும் பெரியவர் பார்த்தசாரதி அவர்களும் அவரது மனைவியும் வந்திருந்தனர். அவருக்கு ஒரு வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தார்கள். 

ஜெயா டி வியில் கிருஷ்ணணை நடிகர் விசு அறிமுகப் படுத்திப் பாராட்டும் வீடியோ ஒன்றை முதலில் காண்பித்தார். விசுவிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே உணர்ச்சியுடன் தன் செயல்களை நினைவு கூறுகிறார் கிருஷ்ணன். வீடியோ முடிந்தவுடன் கிருஷ்ணன் பேசத் துவங்கினார். தான் ஒரு பேச்சாளர் கிடையாது என்றும் தனக்குப் பேசத் தெரியாது என்று ஆரம்பித்து எளிய மதுரைத் தமிழில் எந்த வித பந்தாவும் பாவனைகளும் இல்லாமல் பேசினார்.

மதுரையில் கேட்டரிங் டெக்னாலஜி படிப்பில் பல்கலைக் கழக அளவில் முதல் மாணவனாக வந்தவர் கிருஷ்ணன். பெங்களூரில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணி புரிந்து வந்தபோது அவரது வயது 21. தனக்கு ஸ்விட்ஸர்லாந்து நாட்டின் ஒரு பெரிய ஹோட்டலில் வேலைக்கான ஆர்டர் வந்த மகிழ்ச்சியான செய்தியை பெற்றோர்களிடம் தெரிவித்திருக்கிறார். வெளிநாட்டில் புதிய வேலையில் சேரும் முன்னர் குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்று அன்னை மீனாட்சியின் ஆசி பெற அனைவரும் முடிவு செய்திருக்கின்றனர். அன்னை மீனாட்சியும் ஆசி அளிக்க முடிவு செய்திருக்கிறாள்.

கோவிலுக்குச் செல்லும் வழியில் ஒரு மனநிலை தவறிய முதியவர் தன் பசி தீர்க்க தன் மலத்தைத் தானே உண்டு கொண்டிருந்த காட்சியை கேட்டரிங் படித்த கிருஷ்ணன் பார்த்திருக்கிறார். உடனே இவர் காரை விட்டு இறங்கி அவருக்கு இட்லிகள் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

உற்சாகமாக நண்பர்களுடன் இளமையைக் கழித்துக் கொண்டும், ஊர் சுற்றிக் கொண்டும், சினிமா, நண்பர்கள் என்று மதுரையில் திரிந்து கொண்டிருந்த எண்ணற்ற இளைஞர்களில் ஒருவராக இருந்த தன்னை மாற்றிய தருணம் அது என்பதை கிருஷ்ணன் எங்களுக்கு விளக்கினார். அந்த முதியவரைக் கண்ட நேரத்தில் இருந்து நிம்மதி இழந்து தவித்த கிருஷ்ணன் மெதுவாக தனது வெளிநாட்டு வேலையை மறந்து விட்டு மதுரை முழுவதும் சுற்றி சுற்றி வந்து ஆதரவற்ற மன நோயாளிகளிடம் சென்று  அவர்களுக்கு உணவு அளிக்கும் சேவையில் ஈடு பட ஆரம்பித்திருக்கிறார். அன்னை மீனாட்சி அனைத்துப் பிள்ளைகளுக்கும் ஆசி அளிப்பவள்.

 

தான் வெளிநாட்டு வேலையை ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணித்த உண்மையை வீட்டுக்குச் சொல்லாமல் லீவில் இருப்பதாகக் கூறி விட்டு மதுரை முழுவதும் அலைந்து அலைந்து மனம் பிறழ்ந்த வயதான முதிய மனிதர்களுக்கு உணவு ஊட்டியிருக்கிறார்.

எளிய நடுத்தர வர்க்கப் பெற்றோர்களின் எதிர்காலக் கனவான பையன் அவர். இப்படி சாலையோரங்களில் திரியும் அநாதரவான மன நோயாளிகளுக்குச்  சாப்பாடு செய்து கொண்டு போய் ஊட்டி விடுவதை எந்த நடுத்தர வர்க்கப் பெற்றோர்களாலும் ஜீரணிக்க முடிந்திராதுதான். இவரது செயல் கண்டு பயந்து போன பெற்றோர்கள் இவருக்கு ஏதாவது மனச்சிக்கல் இருக்குமோ என்ற ஐயத்தில் சோட்டானிக் கரை பகவதியிடம் மந்திரிப்பதற்காகவும், மன நோய் மருத்துவரிடம் அழைத்துச் சென்று காண்பிக்கவும் இவரைக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

narayanan_krishnan3ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பில் மதுரைப் பல்கலையிலேயே முதல் மாணவனாக வந்து ஐந்து  நட்சத்திர ஓட்டல்களில் பெரும் பணக்காரர்களுக்கு உணவு சமைத்துக் கொண்டிருந்த பையன், மனம் பிறழ்ந்தவர்களுக்கும் ஆதரவற்ற அநாதை முதியோர்களுக்கும் சாப்பாடு ஊட்டுவதை அவரது பெற்றோர்களாலும் ஆரம்பத்தில் மனதளவில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இருந்தாலும் இவர் தன் பெற்றோர்களை தன்னுடன் ஒரு நாள் தான் சாப்பாடு கொடுக்கும் இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டியிருக்கிறார். ஒரு சிலர் இவரது பெற்றோர்களின் கால்களில் விழுந்து “உங்க பிள்ளையா இது? நீங்க நல்லாயிருப்பீங்க அம்மா” என்று வாழ்த்தியிருக்கிறார்கள். அதைக் கண்டு மனம் பதைத்த இவரது தாயார் “இனி என் வாழ் நாள் முழுவதும் நான் உனக்கு சாப்பாடு போடுகிறேன். அநாதவரவானவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் சேவையை நீ செய். நான் உன்னுடன் என்றும் ஆதரவாக இருப்பேன்” என்று அனுமதியளித்துள்ளார். அன்றிலிருந்து இன்று வரை இவரது அன்னதானம் தொடர்கிறது.

மதுரை நகரின் சுற்று வட்டாரங்களில் உள்ள அனாதரவான முதியோர்கள், மன நிலை தவறிய அனாதைகள் ஆகியோருக்கு மட்டுமே இவர் உணவு அளித்து வருகிறார். பிச்சைக்காரர்களுக்கும், உடல நல்ல நிலையில் இருக்கும் ஏமாற்றுக்காரர்களுக்கும் இவர் உதவுவதில்லை. தினமும் 400 பேர்களுக்கு காலை, மதியம் இரவு மூன்று வேளைகளும் தானே சமைத்து உணவைக் கையில் எடுத்துக் கொண்டு போய் பரிமாறுகிறார். அவர்களுக்கு சுகாதாரம், உடை, குளியல் ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்கிறார். தினம் தோறும் — சனி, ஞாயிறு, தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், பந்த் போன்ற எந்த நாட்களுக்கும் விடுமுறை அளிக்காமல் கடந்த 9 வருடங்களாகத் தொடர்ந்து உணவு அளிக்கும் வேலையைச் செய்து வருகிறார். தனக்கு வரும் சொற்ப நிதியுதவியுடன் மட்டுமே எந்தவித பலாபலனையும் எதிர்பாராமல் இந்தச் சேவையை அளித்து வருகிறார்.

christian_serviceநாரயணன் கிருஷ்ணனும், சி என் என் ஹீரோவாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட அனுராதா கொய்ராலாவும் கடவுள் பக்தி நிரம்பிய இந்துக்கள். இவர்கள் இருவருமே எந்தவித பலாபலனும் பார்த்து இந்தச் சேவையைச் செய்வதில்லை. மத மாற்றம் இவர்கள் குறிக்கோள் கிடையாது.

மதமாற்றம் செய்யும் கேவலமான எண்ணத்துடன் சமூக சேவை செய்து கொண்டு அன்னை என்றும் புனிதர் என்றும் பட்டங்கள் பெற இவர்கள் செயல்படுவதில்லை. குறுகிய மதமாற்ற எண்ணங்களுடன் செய்வதன் பெயர் சேவை அன்று. அது வியாபாரம்.

தெரசா போன்ற மதமாற்ற வியாபாரிகளுக்கு கிடைக்கும் புகழும் பணமும் இவர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை.

உன்னதமான மனித நேயம் மட்டுமே இவர்களது அடிப்படை நோக்கம். இவர்கள் யாரிடமிருந்தும் எந்த நன்றியையும் எதிர்பார்ப்பதில்லை, அவர்களிடமிருந்து பணம் எதிர்பார்ப்பதில்லை. இதைச் செய்தால் இவருக்கு மந்திரிப் பதவி கொடுக்கப் போவதில்லை, அரசின் நிலத்தையோ வீட்டு மனைகளையோ இலவசமாக அளிக்கப் போவதில்லை, பல்கலைக் கழகங்கள் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப் போவதில்லை. இவர்களை யாரும் கலைஞர் என்றோ, பேராசிரியர் என்றோ, புரட்சித் தலைவர் என்றோ தலைவி என்றோ தளபதி என்றோ, தலை என்றோ, சூப்பர் ஸ்டார் என்றோ, சுப்ரீம் ஸ்டார் என்றோ, உலக நாயகன் என்றோ, அஞ்சா நெஞ்சன் என்றோ அழைக்கப் போவதில்லை. மக்கள் காசைக் கொண்டு கொட்டப் போவதில்லை. வரிசையில் நின்று இவரை தரிசிக்கப் போவதில்லை.இவரது கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம், பீராபிஷேகம் போன்ற ஆபாசச் செயல்களைச் செய்யப் போவதில்லை.

இவர் ரோட்டில் தனியாகப் போய்த்தான் சாப்பாடு கொடுக்க வேண்டும். கூட வர தொண்டர் படை, ரசிகர் பட்டாளம் கிடையாது. மாறாக இவரது தொண்டினால் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம் தங்களது குடும்பத்தின் நிதி ஆதாரத்தை, வேலை செய்து சம்பாதித்துக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய இளைஞனின் உழைப்பை இழந்துள்ளது. குடும்பத்திற்கு இவரது மாத வருமானம் கிடைக்கப் போவதில்லை. இவரது இளமையும் திறமையும் சாலையோரம் திரியும் அனாதைகளுடன் மட்டுமே கழிகின்றது.

இவருக்கு ஓய்வு என்பதில்லை. ஒரு சினிமாவுக்கு, ஒரு டிராமாவுக்கு, ஒரு விளையாட்டுக்கு, ஒரு சுற்றுலாவுக்கு என்று எங்குமே இவரால் போக முடியாது. மதுரையை விட்டு ஒரு நாள் கூட தன் சொந்த வேலைகளுக்காக நேரம் செலவழிக்க இயலாது. 24 மணி நேரமும், 365 நாட்களும் ஓய்வின்றி எந்தவித ஒப்பந்தமும் இல்லாத ஒரு கடமைக்கு, ஆதரவற்ற சமூகத்தின் ஒரு சேவைக்காகத் தன் இளமை, வருமானம், நேரம், மகிழ்ச்சி, குடும்பம் என்று அனைத்தையுமே இந்த இளைஞர் தியாகம் செய்துள்ளார். உலகம் முழுவதும் சுற்றி வரும் திறமையான படிப்புப் பெற்றும் உள்ளூரில் சேவை செய்யும் உன்னதமான ஒரு தியாகத்தை தன் வாழ்க்கைப் பணியாகத் தேர்வு செய்துள்ளார்.

narayanan_krishnan5இவர் உதவி செய்கிறார் என்ற விஷயமே இவரால் உதவி செய்யப் படும் பலருக்குத் தெரியாது என்பதே உண்மை. இவர் ஒரு தனி மனிதராக கடந்த 9 வருடங்கள் தொடர்ந்து இடைவெளியின்றி தன் சொந்த உழைப்பில் சாப்பாடு சமைத்து, அதுவும் தான் உண்ணும் அதே தரத்திலும் ருசியிலும் அமைந்த சாப்பாடு சமைத்து, அந்த ஆதரவற்ற ஜீவன்களுக்குக் கருணையுடன் பரிமாறி வருகிறார்.

இலவசமாகத்தானே அளிக்கின்றோம், மனநலம் குன்றியவர்களுக்குத்தானே அளிக்கிறோம், அவர்களுக்கு என்ன சுவையா தெரியப் போகிறது? பசிக்குச் சாப்பாடு போட்டால் போதாதா? தரமாக ஏன் போட வேண்டும்? புழுத்துப் போன அரிசியில் செய்தால் இவர்களுக்கு என்னத் தெரியவா போகிறது? என்றெல்லாம் தன்னால் சேவை செய்யப்படுபவர்கள் குறித்து இளப்பமாகவும் கீழாகவும் இவர் எண்ணுவதில்லை. தரமான உணவுப் பொருட்கள் கொண்டு தரமான உணவை மட்டுமே இவர் மனநலம் குன்றிய அநாதரவான அநாதைகளுக்கு ஆரம்பம் முதலே அளித்து வருகிறார்.

இவருக்கு அரசாங்கம் உதவி செய்வதில்லை. ஒரு முறை அரசாங்க உதவி கேட்டுக் கலெக்டர் மீட்டிங்கிற்குப் போன பொழுது கலெக்டர் உளுத்துப் போன, புளுத்துப் போன அழுகிய அரிசி மூட்டைகளை இவருக்குத் தருவதாகச் சொல்லியிருந்திருக்கிறார். இவர் பதிலுக்கு “அந்த அரிசியை நீங்களும் உங்கள் குடும்பமும் தினமும் சாப்பிடுவதாக இருந்தால் அதே அரிசியை எங்களுக்கும் அளியுங்கள்” என்று பதில் சொல்லி விட்டுத் திரும்பிப் பார்க்காமல்  வெளியேறியிருக்கிறார்.

இவரல்லவா சூப்பர் ஸ்டார், இவரையல்லவா நாம் உலக நாயகன் என்று அழைக்க வேண்டும்? இவரல்லவா வாழ்க்கையின் நிஜ ஹீரோ?

இந்த மனப்பாங்கும் சேவையுள்ளமும் அனைவருக்கும் வாய்த்து விடுவதில்லை. இவரை இந்தச் சேவைக்கு ஆண்டவன் தேர்வு செய்திருக்கிறான் என்றே சொல்ல வேண்டும்.  

இவர் மற்றும் ஒரு மகத்தான சேவையையும் செய்து வருகிறார். மதுரையில் இவர் உணவு அளித்து வந்த ஒருவர் இறந்து அனாதையாகக் கிடந்த பொழுது கார்ப்பரேஷன், போலீஸ் என்று அலைந்தும் மூன்று நாட்களாக அந்தப் பிணம் அனாதையாக ரோட்டோரமே கிடக்க விடப் பட்டிருக்கிறது. இனியும் அரசாங்கத்தை நம்பிப் பயனில்லை என்று முடிவு செய்து அந்தப் பிணத்துக்கு ஈமக் கடன்கள் செய்து எரிக்க முடிவு செய்திருக்கிறார்.

“நான் பிறப்பால் ஒரு பிராமணன் [என்று அழைக்கப்படுபவன்]. எங்கள் குல வழக்கப்படி தந்தை உயிருடன் இருக்கும் பொழுது நான் வேறு யாருக்கும் ஈமக் கிரியைகள் செய்யக் கூடாது. இருந்தாலும் என் பெற்றோர்கள் என்னை அந்த இறுதிக் கடன்கள் செய்ய அனுமதியளித்தார்கள். அன்றிலிருந்து இன்று வரை நூற்றுக்கணக்கான அனாதைப் பிணங்களை நான் அவர்களுக்கு உரிய சடங்குகள் செய்து எரித்து வருகிறேன்” என்கிறார் கிருஷ்ணன். இதை இவர் சொல்லிய பொழுது அங்கிருந்த பலரது கண்களிலும் நீர் பனித்தன.

பெரும்பாலான ஆதரவற்றவர்கள் தங்களை சுத்தம் செய்து கொள்வதோ முடி திருத்திக் கொள்வதோ கிடையாது. அதனால் அவ்ர்களுக்குச் சடை முடி வளர்ந்து வெட்டுவதும் பராமரிப்பதும் கடினமாகி நோய்கள் வருகின்றன. ஆகவே, அவர்களுக்கு முடி வெட்டி விட இவர் ஏற்பாடு செய்திருக்கிறார். காசு வாங்காமல் சேவையாக முடி வெட்டி விட எந்த நாவிதரும் தயாராக இல்லை. மேலும் ஒரு சிலர் ஒத்துக் கொண்ட பொழுதும் மன நிலை தவறியவர்கள் அவர்களைத் தாக்கியிருக்கிறார்கள். ஆகவே, எவருமே இவர்களுக்கு முடி வெட்டி விடத் தயாராக இல்லை. பலரிடம் கெஞ்சிப் பயனில்லாத வேளையில் மலேயா சலூன் என்ற சலூன் கடைக்காரரிடம் இவரே பயிற்சி எடுத்துக் கொண்டு இவரே அனைவருக்கும் இப்பொழுது முடி வெட்டி விடும் வேலையையும் செய்து வருகிறாராம்.

மனம் பிறழ்ந்தவர்கள் பெண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் பல்வேறு விதமான பாலியல் பலாத்காரங்களுக்கும் உட்பட்டு நோய்வாய்ப் படுகிறார்கள். ஆகவே அவர்களுக்காகவாவது ஒரு அனாதை இல்லத்தைக் கட்ட தான் நினைத்ததாகவும் அதற்காக பல நல்ல மனிதர்களும் — டி வி எஸ், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களின் உதவி கொண்டு இப்பொழுது மொத்தம் ஒரு ஆறு பிளாக்குகள் கொண்ட விடுதிகள் கட்டி வருவதாகவும், அதற்கு இன்னும் ஒரு 1.5 கோடி தேவையிருப்பதாகவும் கூறினார்.

தனக்கு வரும் நிதியுதவிகள் அனைத்திற்கும் உடனுக்குடன் ரசீது அளித்து அந்தப் பணம் முழுவதையுமே சேவைக்கு மட்டுமே பயன் படுத்துவதாகவும் கூறினார். பெரும்பாலான  சேவை நிறுவனங்களிலும், பன்னாட்டு சேவை நிறுவனங்களிலும் பெரும் பங்கு நிர்வாகச் செலவுகளுக்கே சென்று விடுகிறது. இங்கு 100 சதவிகிதமுமே மொத்த நிதியுமே சேவைக்கு மட்டுமே பயன்படுத்தப் படுகிறது என்கிறார். மேலும், கடந்த ஒவ்வொரு ஆண்டும் தவறாது வருமான வரி படிவங்களைத் தவறாமல் சமர்ப்பித்திருக்கிறார். கணக்கு வழக்குகள் அனைத்தையுமே தவறாது சுத்தமாகப் பராமரித்திருக்கிறார். இத்தனையும் இவரும் இவருக்கு உதவி செய்யும் பார்த்தசாரதி, லஷ்மி அம்மாள் தம்பதியினரும் இன்னும் மூன்று உதவியாளர்கள் மட்டுமே செய்திருக்கிறார்கள்.

சி என் என் பல ஆண்டுகள் இவரை அவதானித்த பிறகே உலக அளவிலான ஹீரோ போட்டிக்கு தேர்ந்தெடுத்திருக்கிறது என்கிறார். இவரது சேவைகளுக்கு அரசாங்கம் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை. இத்தனைக்கும் ஆதரவற்ற மனநோயாளி அநாதைகளைக் காப்பது அரசாங்கத்தின் சமூக நலத் துறையின் பொறுப்பு. அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை எந்த விதப் பிரதி பலனும் பாராமல் கைமாறும் எதிர்பாராமல் ஒரு தனி நபர் செய்து வருகிறார். 

“இன்ஃபோசிசும், ரிலையன்ஸும் கொடுத்த 5 லட்ச ரூபாயில் 50% கமிஷன் கொடு என்று என்னை அரசியல்வாதிகள் கேட்க்காததே அரசியல்வாதிகளும் அரசாங்கமும் எனக்குச் செய்து வரும் மாபெரும் உதவி. அதற்காகவே அவர்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்” என்று கூறுகிறார் கிருஷ்ணன். 

தன்னைத் தொடர்ந்து பலரும் தாக்கி வருவதாகவும், விமர்சனங்களுக்கு உள்ளாவதாகவும் இருந்தாலும் அந்த அவமானங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் தன் மனதுக்குச் சரியென்று படுவதைச் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். நிறைவாக “என் சேவைகள் அனைத்துமே அன்னை மீனாட்சியின் அருள் மட்டுமே. அவளது ஆசிகள் உங்கள் அனைவருக்கும் கிட்டட்டும். என் சேவையைத் தொடர உங்களால் முடிந்த அளவில் உதவுங்கள். நம் கண் முன்னே நம்மைப் போன்ற மனிதர்கள் மிருகங்களை விடக் கேவலமாக வாழ நாம் அனுமதிக்கக் கூடாது. நம் பாரதப் பண்பாடு அதை அனுமதிக்கவில்லை. மனிதாபிமானத்துடன் அந்தக் கொடுமை நீங்க உதவுங்கள்” என்ற உருக்கமான வேண்டுகோளுடன் தன் உரையை நிறைவு செய்தார். அவரது தந்தையையும் அவருக்கு உதவி செய்து வரும் பார்த்தசாரதி அவர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.

cnn_hero_motto

நாராயணன் கிருஷ்ணன் அவர்களது சேவைகளில் பங்கு கொள்ள விரும்புபவர்கள் அவரது அக்‌ஷயா டிரஸ்ட் தளத்தின் மூலம் (http://www.akshayatrust.org) உங்கள் நன்கொடைகளை அனுப்பலாம். உங்களது நன்கொடைகளுக்கு 80G வரிவிலக்கும் உண்டு. இதன்படி நீங்கள் தரும் நன்கொடையில் 50% வரிவிலக்குப் பெறுவீர்கள்.

மேலதிகத் தகவல்களுக்கு http://www.akshayatrust.org/donation_indian_rupees.php

ஏராளம் உணவு படைத்தவனாக இருந்தும், உணவு தேவைப்படுகின்ற பலகீனர்களுக்கும் உதவி நாடி வருகின்ற தீனர்களுக்கும் தானம் செய்யாமல் எந்த மனிதன், மனத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, அவர்களுக்கு முன்னாலேயே தான் உண்டு அனுபவிக்கிறானோ அவன் தேற்றுவான் இல்லாமல் துன்புறுவான். ரிக் வேதம் (10.117-2)

அற்றார் அழி பசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி (திருக்குறள் – 226)