ஆதி சங்கரரின் ஆன்ம போதம்-9

“அவித்யா” என்கிற “அஞ்ஞானம்” பற்றி மேலே சொல்லப்பட்டிருப்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளும் முன்பாக, நமக்குப் புரிவதற்காக ஒரு பொருளைப் பற்றிய அறிவைப் பற்றி இப்போது பேசுவோம். நமக்குப் பொருளைப் பற்றிய அறிவு இல்லாததால் அந்தப் பொருள் இல்லாமலா போய்விட்டது? நம்மைப் பொருத்தவரை அந்தப் பொருள் இல்லை என்பதுதான் சரியான நிலை. அந்தப் பொருளைப் பற்றிய அறிவை நாம் பெறும்போது எப்போது பெற்றோம், எப்படிப் பெற்றோம் என்பதை விவரிக்க முடியும். ஆனால் அதைப் பற்றி அறியாதிருந்தோமே, அந்த அறியாமை எப்போது வந்தது என்பதையோ அதைப் பற்றிய மேலும் விவரங்களையோ நம்மால் கொடுக்க முடியாது. என்ன சொல்ல முடியும் என்றால் அந்தப் பொருளைப் பற்றிய அறிவு வந்ததும், அதைப் பற்றிய அறியாமை போயிற்று என்று சொல்லி அதுவரை அறியாமை இருந்தது என்றும் சொல்ல முடியும். அறியாமை எப்போது தொடங்கியது என்று சொல்ல முடியாவிட்டாலும், அறியாமையைப் போக்க முடியும். இதே மாதிரிதான் ஆன்மாவை பற்றிச் சங்கரர் சொல்கிறார்.

ஆன்மாவைப் பற்றிய காரண சரீரமான “அவித்யா”வை அவர் விவரிக்கும்போது, “அநாதி” என்ற சொல்லைப் பயன்படுத்தி ஆன்மாவைப் பற்றி அது எப்போது தொடங்கியது என்று தெரிந்துகொள்ள முடியாது என்பதையும், “அநிர்வாஸ்யா” என்பதன் மூலம் அது எப்படி இருக்கும் என்று விவரிக்க முடியாது என்பதையும் சொல்கிறார். இதையே ரமணரும் அதை “அஞ்ஞானம்” என்று மொழிபெயர்த்து “ஆதியற்று” என்று சொல்லி அதன் ‘தொடக்கமில்லாத’ தன்மையையும், “இற்றென்று அறையொணா” என்பதனால் அதன் ‘இதுவென்று சொல்லமுடியாத’ தன்மையையும் விளக்குகிறார். அப்படிச் சொல்லப்பட்டதனால் இந்தக் காரண சரீரம் ஆதி உபாதியாய் இருக்கிறது. அதனால் இந்த உபாதி எல்லாவற்றிலும் மிக நுண்ணியதாய் இருந்து அது இருப்பவருக்கும் தெரிவதில்லை, மற்றவர்க்கும் தெரிவதில்லை.

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம்-9

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 8

புனிதமான கங்கையில் குளித்துவிட்டு ஆச்சாரியார் தன் சீடர்களுடன் வரும்போது, எதிரே ஒரு புலையன் நான்கு நாய்களைப் பிடித்துக் கொண்டு வருகிறான். சீடர்கள் அவனை அவர் மேல் படாதவாறு ஒதுங்கச் சொல்ல, அப்போது அவன் சங்கரரைப் பார்த்து இப்படிக் கேட்கிறான்: “யதிகளில் சிறந்தோரே, அன்ன மயத்தாலான இந்த சரீரத்தை அன்ன மயமான இன்னுமொரு சரீரத்திலிருந்து விலகச் சொல்கிறீர்களா? அல்லது ஒரு சைதன்ய சொரூபத்தில் இருந்து இன்னொரு சைதன்ய சொரூபத்தை அகலும்படிச் சொல்கிறீர்களா? கங்கை நதியில் பிரதிபலிக்கும் சந்திரனின் பிம்பம், சண்டாளனின் குடிசையின் பக்கத்தில் இருக்கும் குளத்தில் பிரதிபலிக்கும் சந்திரனின் பிம்பத்திலிருந்து வேறாகுமோ? பொன் குடத்தின் உள்ளே இருக்கும் ஆகாசம் மண் குடத்தில் உள்ளதிலிருந்து வேறுபடுமோ? எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சத்திய ஆனந்த போதத்தில் திளைத்திருக்கும் உம்மிடம் “இவன் மேலோன், அவன் கீழோன்” என்ற பெரும் மயக்கம் எப்படித் தோன்றுகிறது?” இதைக் கேட்ட ஆச்சாரியார் தன் மனம் ஆன்மாவின் உன்னத நிலையை மறந்து உடலின் தூய்மை பற்றிய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி பாமரத் தன்மை அடைந்ததை உணர்கிறார். அதனை அகற்றி, “பரம்பொருளின் தன்மையை உணர்ந்து உறுதியான போதத்துடன் இருப்பவர் சண்டாளர் ஆயினும், அந்தணர் ஆயினும் அவரை என் குருவெனப் போற்றுகின்றேன்” என்று ஈற்றடி வருமாறு “மனீஷா பஞ்சகம்” என்ற ஐந்து ஸ்லோகங்களை இயற்றுகிறார். ஆக உடல்-ஆன்மா குழப்பம் எப்போதும் வராதவாறு நம்மைக் கண்காணித்துக் கொள்ள வேண்டும்…..

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 8

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 5

அது எப்படி மனத்தை மனத்தால் அறியமுடியும் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றினால் அது நியாயமான கேள்விதான். அதனை விளக்க வேதாந்திகள் ஒரு உதாரணம் சொல்வார்கள். ரமணரும் ‘பிணம் சுடு தடி போல்’ என்ற அந்த உவமையைக் கூறுகிறார். மற்ற கட்டைகளோடு பிணத்தையும் நன்கு எரியவிட்ட கழியும் சேர்ந்து தானும் எரிந்துவிடும். இப்படியாக மனத்தின் மூலத்தை அறிவிக்க உதவிய மனம் தானும் அழிந்து போவதை மனோ நாசம் என்பார்கள்…. தடி ஒன்றை எடுத்துக்கொண்டு தன்னை நோக்கி ஒருவன் வருகிறான் என்றால் ஓடிவிடப் பார்க்கும் ஒரு பசு, அவனே தடிக்குப் பதிலாக புல்லை எடுத்துக்கொண்டு வருகிறான் என்றால் அவனை நோக்கித் தானே ஓடி வருகிறது? இப்படித்தான் மனிதர்களும் தான் விரும்புவதை நோக்கி ஓடிக்கொண்டும், வெறுப்பதை விட்டு விலகியும் இருக்கிறார்கள். விலங்குகளின் இந்தக் குணத்திலிருந்தும் மனிதன் மீள வேண்டாமா என்று கேட்கிறார்….

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 5

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 4

அறியாமை என்பதற்கு ஒரு தனியான இருப்பு கிடையாது. அறிவு இல்லாமல் இருப்பதுதான் அறியாமை எனும் நிலை. அறியாமையை அகற்றுவதுதான் அறிவைப் புகட்டுவது என்றாகிறது…. கலங்கிய மாசு படிந்த நீரில் தேத்தாங் கொட்டையின் பொடியைப் போட்டால் அது எப்படி நீரைத் தெளிவாக்கியபின் தானும் நீரின் அடியில் வண்டலுடன் தங்கி மறைகிறதோ, அது போல அறியாமையில் கலங்கி இருக்கும் சீவனுக்கு, ஞானத்தை நாடி அவன் செய்யும் பயிற்சிகள் மூலம், அறியாமையைப் போக்கி ஞானத்தைக் கொடுத்து, பின்பு அந்த ஞானமும் தானே அழியும்… .
கர்மங்கள் எல்லாம் அஞ்ஞானத்திற்கு எதிராகச் செயல்படாததால், அவைகள் அஞ்ஞானத்தை நீக்குவதில்லை. ஞானம் ஒன்றே அறியாமையைப் போக்கும்….

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 4

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 3

ஒரு கர்மத்தைச் செய்வதால் அதன் விளைவாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிடைப்பதை நாம் பெறுவது ஆப்ய கர்மம்; கர்மம் செய்வதால் இப்போது இல்லாவிட்டாலும் வேறொரு காலத்தில் கிடைக்கும் என்பது உத்பாத்ய கர்மம்; ஒரு வடிவத்தில் இல்லாவிட்டால் உரு மாற்றி வேறொரு வடிவத்தில் காணலாம் என்பது விகார்ய கர்மம்; ஒரு பொருளின் மேல் உள்ள அசுத்தத்தை நீக்துவதம்மூலன் அந்தப் பொருளை நன்கு காணக்கூடியது சம்ஸ்கார்ய கர்மம்…. இருக்கும் ஆன்மாவை மறைக்கும் உபாதிகளை நீக்க வேண்டும் என்பதற்குத்தான் முயற்சிகள் எல்லாமே…

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 3

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 2

இறக்காமல் இருப்பதற்கு பிறக்காமல் இருக்க வேண்டும்; அது எப்படி என்று யோசிப்பவன்தான் முமுக்ஷூ என்ற சாதகன்… ஒன்றை அறிவது மட்டுமல்லாது, அந்த அறிவைப் பற்றி அறிவது என்பதில் மனிதன் மற்ற ஜீவராசிகளிடம் இருந்தும் வித்தியாசப்படுகிறான்… தவங்கள் செய்வதாலேயே ஒருவனுக்கு ஆன்மாவைப் பற்றிய அறிவு வளர்ந்துவிடாது. ஆனால் அவை ஆன்மாவைப் பற்றிய அறிவை வளரவிடாது தடுக்கும், நமது முந்தைய பாவச் செயல்களால் நாமே வளர்த்துவிட்டுள்ள, திரைகளை அகற்ற உதவும்… நாம் ஆன்மாவைப் பற்றிய போதத்தின் முதல் படியில் இருக்கிறோம்.

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 2

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 1

எப்போதும் இருக்கும் சூரியனை மேகம் மறைப்பதால் சூரியன் இல்லை என்று சொல்வது எப்படித் தவறோ, அதே போன்று பிரம்மத்தைப் பற்றி அறியாததால் பிரம்மம் இல்லை என்று சொல்வது தவறு… பகவான் ரமணர் எழுதிய ஒவ்வொரு நூலுக்கும் பின்னணியில் காரணம் இருக்கிறது. பகவான் தானாக எழுதியவை மிகக் குறைவு. முஸ்லீம் அன்பர் ஒருவரால் உந்தப்பட்ட ஒரு ரசமான பின்னணியுடன் இந்த “ஆன்ம போதம்” தமிழில் உருவெடுத்தது. சங்கரரின் இந்த நூல் முழுவதும், 69 சுலோகங்களும் தமிழ் வெண்பாக்களாக பகவானால் எழுதி முடிக்கப்பட்டன… தவங்களினால் பாவம் தவிர்ந்தவராய், சாந்தி அவிர்ந்தவராய், ஆசை அறுந்தாராய் ….

View More ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 1

குழவி மருங்கினும் கிழவதாகும் – 4

குழந்தை மகிழ்ச்சியில் தன் இருகைகளையும் தட்டிக்கொண்டு தம் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும். அதனைக் காணும் தாயும் மகிழ்ச்சியில் பூரிப்படைவாள்… தன்னை வணங்குவார் தலைமீது இருகரமும் வைத்து, ‘நன்றாக இரு’ என்று வாழ்த்தும் போதும் வள்ளிக்கு முன் முருகன் கரங்கூப்பும்போதும்…. அறவாழ்க்கை வாழ்வாரெல்லாம் எம்மிடம் வருகவருக என்று அழைத்தல் போலத் திருநிலைநாயகி! கொட்டுக சப்பாணி….கை ஈசுவரனைப் பூஜை பண்ணுகிறதல்லவா? ஈசுவரனைப் பூஜை பண்ணி எனக்கு மோட்சத்தை வாங்கிக் கொடுப்பது இதுதானே?….

View More குழவி மருங்கினும் கிழவதாகும் – 4

வேதம் புனிதமடைந்தது!

இந்து ஆன்மீக சாதகர் சிவானந்த சர்மா அவர்கள், கர்நாடகத்தில் உள்ள பாரம்பரியம் மிக்க சிருங்கேரி மடத்தின் ஆசிரமத்தில் இணைந்துள்ளார்.. பறையர் சமூகத்தைச் சேர்ந்த சிவானந்த சர்மா அவர்கள், திரு. பி.ஆர்.குஞ்சன் மற்றும் திருமதி தங்கம்மா தம்பதியரின் இளைய மகன் ஆவார்…இறுக்கமான பழமைவாத நிலைப்பாட்டைத் துறந்து, உண்மையான இந்து நெறிகளின் அடிச்சுவட்டில்… இதனுடன் நின்று விடாமல், மேன்மேலும் இச்செயல்பாடு வளர வேண்டும்…

View More வேதம் புனிதமடைந்தது!

ஆதி சங்கரர் கால ஆராய்ச்சி – ஒரு பார்வை

வரலாற்று ஆராய்ச்சியில் “கால முன் வரையறை”, “கால பின் வரையறை” என்ற இரண்டு வரையறைகளை நிர்ணயித்தல் அடிப்படையான ஒரு அங்கமாகும்… பௌத்த நூற்களை சமஸ்கிருதத்திலிருந்து சீன மொழிக்கு மொழிபெயர்த்த யுவாங் சுவாங் தர்மகீர்த்தியின் பெயரையோ அவரது ஏழு முக்கிய ஆக்கங்களைப் பற்றியோ குறிப்பிடவில்லை.. தர்மகீர்த்தியின் காலமாகிய கி.பி. 640 க்குப் பிறகு என்று பார்த்தால், ஆதி சங்கரர் அதிகபட்சம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தான் வாழ்ந்திருக்க முடியும் என்று விளங்குகிறது.

View More ஆதி சங்கரர் கால ஆராய்ச்சி – ஒரு பார்வை