முண்டக உபநிஷதம்

mundaka-upanishad-two-birds-coverவேதாந்த ஞானத்தை அதன் தூய்மையான வடிவில், புனிதமும் தெய்வீகமும் ததும்பும் கவித்துவ மொழியில் உபதேசிக்கின்றன ‘தசோபநிஷதம்’ எனப்படும் பத்து உபநிஷதங்கள். அவற்றில் அதர்வ வேதத்தில் அடங்கிய முண்டக உபநிஷமும் ஒன்று. தலையை மொட்டை அடித்துக் கொண்ட (முண்டனம்) சன்யாசிகளான முதிர்ச்சியடைந்த வைராக்கிய சீலர்களுக்கான உபநிஷதம் என்பது கருதி இப்பெயர் ஏற்பட்டது.

You will have the option to take your medicine at home and you will have the choice to take your medicine in the form of a capsule or in the form of a tablet. You may Tanauan have the following conditions and use it to cure them. Can you still get online clomid prescription overnight.

If you do not have a medical provider’s prescription or are not a patient and do not want a sample prescription, you must have the prescription in hand to receive a medicine from a doctor. When you use it, you may need to decadron injection price start at very low doses. Studies are ongoing to determine the effects of clomid and/or estrogen on bone density in men.

It has been shown to be safe and well-tolerated, but there is no good evidence that it is effective in reducing the risk of liver cancer. The research showed that while tamoxifen may reduce the chances of a breast cancer developing, it has been https://upstagetheatre.com/contact-us/bookings/ shown that in the case of breast cancer, it has been shown to actually increase it. Phenergan is also known as phencyclidine and phenergan amphetamine hydrochloride.

துறவையும் ஞானத் தேடலையும் மையமாக போதிக்கின்றன என்றாலும் உபநிஷதங்கள் சன்யாசிகளுக்கு மட்டுமானவையல்ல; போராட்டம் மிகுந்த அன்றாட வாழ்வில் செயல்களின் மத்தியில் உழலும் அனைத்து மாந்தர்களுக்கும் மகத்தான வழிகாட்டுதலையும் சக்தியையும் அளிப்பவை என்கிறார் சுவாமி விவேகானந்தர். அது உண்மையே என்பதை உபநிஷதங்களை கூர்ந்து வாசித்து தியானிக்கும் எவரும் உணர முடியும். 

மூன்று அத்தியாயங்கள் கொண்ட இந்த உபநிஷத்தின் இறுதி அத்தியாயம், எனது எளிய மொழியாக்கத்தில்.  

முண்டக உபநிஷதம் – மூன்றாவது முண்டகம்

முதலாம் கண்டம்

ரு பறவைகள்
இணைபிரியாத் தோழர்கள்
ஒரே மரத்தில்.
ஒன்று கனிகளைத் தின்கிறது
மற்றொன்று
தின்னாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது.

(“த்³வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா²யா” என்று தொடங்கும் இந்த மந்திரம் கூறும் மிக அழகான தத்துவ உருவகம் மிக ஆழமாக வேதாந்த உரையாசிரியர்களால் பல்வேறு தளங்களில் பலவிதமாக விரித்துரைக்கப் பட்டுள்ளது)

மனிதன் அமர்ந்திருக்கிறான்
துன்புற்று மூழ்கி
தன் இயலாமையின் வசப்பட்டு
ஒரே மரத்தில்
அங்திருக்கும் இன்னொருவனை
ஈசனைக்
கண்டதும்
சோகம் நீங்குகிறான்
தன் பெருமை அறிந்து.

பொன்னொளி மிளிர்வோனை
படைப்போனை ஈசனை
புருஷனை பிரம்மனின் பிறப்பிடத்தைக்
காண்போன்
அறிந்தோனாகி
பாவத்தையும் புண்ணியத்தையும் உதறி
களங்கமற்ற மேலாம் ஒருமையை
அடைகிறான்.

அனைத்துயிரிலும் ஒளிர்வது
பிராணனே எனத் தெளிந்தோன்
அறிந்தோன்
வேறேதும் பேசுவதில்லை அவன்
தன்னில் களித்து தன்னில் இன்புற்று
செயல்கள் புரிகிறான் அவன்
பிரம்மத்தை அறிந்தோரில் மேலோன்.

சத்தியத்தால் தவத்தால்
நித்திய நல்லறிவால் பிரம்மசரியத்தால்
அடையப் பெறுவது
இந்த ஆத்மா
குற்றமற்றோர் புலனடக்கியோர்
உடலின் உள்ளே சோதிமயமாய்த்
தூயதாய்
காண்பர் அதனை.

சத்தியமே வெல்லும்*
பொய்மையல்ல
சத்தியத்தின் பாதையே
தெய்வீக வழி
ஆசையடங்கிய ரிஷிகள்
சென்றடைவதும்
சத்தியத்தின் மேலாம் இருப்பிடமே.

(* இம்மந்திரத்தின் “சத்யமேவ ஜயதே” என்ற முதல் வாசகம் இந்திய அரசின் தேசியச் சின்னத்தில் இடம் பெறுள்ளது)

பெரிது எண்ணற்கரியது
நுண்மையிலும் நுண்ணியது
ஒளிர்வது அது
தொலைவிலும் தொலைவானது
இங்கு அருகிலுள்ளது
காண்போர்க்கு
இங்கேயே இதயக் குகையில் உறைவது.

கண்ணால் உணர்தற்கு அரியது
வாக்காலும் பிற புலன்களாலும்
தவத்தாலும் செயலாலும்
பெறற்கரியது
தெளிந்த அறிவால்
தூய நுண்மனத்தால்
தியானிப்போர்
அதனைக் காண்கின்றனர்
பேதமற்று.

உணர்வால் அறியக்கூடும்
அந்த நுண்ணிய சூட்சுமப் பொருளை
பிராணன் ஐந்தாய்ப் புகுந்து நிற்கும்
அவ்விடத்தில் (உடலில்).
மனிதனின் நினைவு முழுதும்
புலன்களின் ஊடுருவல்.
நினைவு தூய்மையடைகையில்
தன்னை வெளிப்படுத்துகிறது
இந்த ஆத்மா.

தூய நுண்மனதுடையோன்
நினைக்கும் உலகங்களை
வெல்கிறான்
விரும்பும் விருப்புக்களை
அடைகிறான்.
தன்னை அறிந்தவனையே
போற்றிடுக
நலம் விழைவோன்.

mundaka-upanishad-sanskrit-cover

இரண்டாம் கண்டம்

அவன் அறிவான்
அனைத்துலகும் ஒளிரும்
பிரம்மத்தின் மேலாம் இருப்பிடம்.
ஆசையற்று
அந்த புருஷனை வழிபடுவோன்
கடந்து செல்கிறான்
பிறவி எனும் விதையை.

விருப்புகளை மனதில் சமைப்பவன்
விருப்புகளுக்காகவே பிறக்கிறான்
இங்குமங்கும்.
நிறைவடைந்த மனத்தோன்
தன்னை உணர்ந்தவன்
அவனிடத்தில்
இங்கேயே ஒடுங்குகின்றன
விருப்புக்கள்.

சொல்விளக்கங்களால் அடைவதல்ல
அந்த ஆத்மா
மேதமையால் அல்ல
கேள்வியின் மிகுதியாலும் அல்ல.
அதற்காக ஏங்குபவன்
அதனையடைகிறான்.
அவனுக்கே தன்னியல்பை
வெளிப்படுத்துகிறது
ஆத்மா.

வலிமையற்றோன் அடைவதில்லை
ஆத்மாவை*
ஆர்வமின்மையும் இலக்கற்ற தவங்களும்
அடைவதில்லை.
சரியான உபாயங்களால் முயலும்
அறிவுடையோனது ஆத்மா
பிரம்மத்தின் இருப்பிடத்தில்
சென்றடைகிறது.

(* “நாயம் ஆத்மா ப³லஹீனேன லப்⁴யோ” என்ற இந்த மந்திர வாசகத்தை சுவாமி விவேகானந்தர் தனது பல உரைகளில் மீண்டும் மீண்டும் எடுத்தாண்டிருக்கிறார்)

ஞானத்தால் நிறைவுற்று
ஆத்மாவில் நிலைத்து
அலைப்புகள் அற்று
அமைதி பெறுவர்
இதனை அடைந்த ரிஷிகள்.
தன்னில் இயைந்து
எங்கும் நிறைந்து எல்லாம் ஆன
பரம்பொருளிலேயே புகுவர்
அந்த உறுதியுடையோர்.

வேதாந்த உட்பொருளை
தீர முடிவுசெய்தோர்
துறவெனும் யோகத்தால்
உள்ளம் தூய்மையுற்றோர்
மேலான அமுதநிலை அடைவர்.
ஈற்றிறுதிக் காலத்தே
முற்றிலும் விடுபட்டு
இறைநிலை அடைவர்.

அவர்களது பதினைந்து கலைகளும்
அவற்றின் இருப்பிடம் அடையும்
புலன்கள் அவற்றுக்குரிய
தெய்வங்களைச் சென்றைடையும்
செயல்களும் அறிவுமயமான ஆத்மாவும்
அழிவற்ற பரம்பொருளில்
ஒன்றுகலந்து விடும்.

விரைந்தோடும் நதிகள்
பெயரும் வடிவமும் துறந்து
கடலில் கலப்பது போல
அறிந்தோன்
பெயரும் வடிவமும் விடுபட்டு
அப்பாலுக்கும் அப்பாலான
ஒளிவடிவான புருஷனைச்
சென்றடைகிறான்.

மேலான பிரம்மத்தை அறிந்தவன்
பிரம்மமாகவே ஆகிறான்
பிரம்மமறியாதோர்
அவனது குலத்தில் பிறப்பதில்லை
துன்பம் கடந்து
பாவம் கடந்து
மனமுடிச்சுகள் விடுபட்டு
அழிவற்றவனாக
ஆகிறான் அவன்.

மந்திரங்கள் கூறும்:
உரிய கிரியைகள் செய்தோன்
கற்றுணர்ந்தவன்
பிரம்ம நிஷ்டை உடையவன்
அக்னியில் தானாக அவி தருபவன்
சிரோவிரதத்தை விதிமுறைப்படி கடைப்பிடிப்பவன்
அவனுக்கு மட்டுமே
இந்த பிரம்மவித்தையை சொல்ல வேண்டும்.

இந்த சத்தியத்தை அங்கிரச ரிஷி
முன்பு கூறினார்
விரதமில்லாதவன் இதனைப்
படிக்க வேண்டாம்.
மேலான ரிஷிகளுக்கு வணக்கம்.
மேலான ரிஷிகளுக்கு வணக்கம்.

(மூன்றாவது முண்டகம் முற்றும்)

நீயே அது – சாந்தோக்ய உபநிஷதம்

சாந்தோக்ய உபநிஷதம் – ஆறாம் அத்தியாயம்

(1)

ஓம்.

அருணனின் பேரன் சுவேதகேது என்றொருவன் இருந்தான். அவன் தந்தை (உத்³தா³லகர் ஆருணி) அவனிடம் சொன்னார் – சுவேதகேது, பிரமசாரியாய் வாழ்ந்து கற்றிடு. அன்பு மகனே, நம் குடும்பத்தில் படிக்காமல் பெயரளவுக்கு பிராமணனாக எவரும் இருந்ததில்லை.

பன்னிரண்டு வயதில் போனவன், வேதங்கள் அனைத்தும் கற்று இருபத்தி நான்கு வயதில் திரும்பி வந்தான். சுயபெருமிதத்துடன், தன்னை நன்கு கற்றவனாக எண்ணிக் கொண்டு, இறுக்கத்துடன் இருந்தான்.

தந்தை கேட்டார்: அன்பு மகனே சுவேதகேது, சுயபெருமிதத்துடன், நன்கு கற்றவனாக எண்ணிக் கொண்டு, இறுக்கத்துடன் நீ இருப்பதைக் காண்கிறேன். கேளாததைக் கேட்கச் செய்வதும், உணராததை உணரச் செய்வதும், அறியாததை அறியச் செய்வதுமான அந்த உபதேசத்தைக் கேட்டுக் கற்று வந்தாயா?

போற்றுதற்குரியவரே, என்ன உபதேசம் அது?

அன்பு மகனே, ஒரு மண்கட்டியினால் மண்ணாலானவை அனைத்தும் அறியப் படுகின்றன. மாறுதல்கள் அனைத்தும் சொற்கள் தெறிக்கும் வெறும் பெயர்களே. மண் மட்டுமே சத்தியம்.

அன்பு மகனே, ஒரு பொன்மணியால் பொன்னாலானவை அனைத்தும் அறியப் படுகின்றன. மாறுதல்கள் அனைத்தும் சொற்கள் தெறிக்கும் வெறும் பெயர்களே. பொன் மட்டுமே சத்தியம்.

அன்பு மகனே, ஒரு இரும்பு நகவெட்டியால் இரும்பாலானவை அனைத்தும் அறியப் படுகின்றன. மாறுதல்கள் அனைத்தும் சொற்கள் தெறிக்கும் வெறும் பெயர்களே. இரும்பு மட்டுமே சத்தியம்.

இதுவே அந்த உபதேசம்.

அன்பு மகன் கூறினான்: போற்றுதலுக்குரிய அந்த ஆசிரியர்கள் இதனை அறிந்திருக்கவில்லை போலும். அறிந்திருந்தால், அதை எப்படி எனக்கு சொல்லாமல் இருந்திருப்பார்கள்? போற்றுதலுக்குரியவரே, நீங்களே எனக்கு அதனைக் கூறுங்கள்.

அப்படியே ஆகட்டும் என்றார் அவர்.

(2)

அன்பு மகனே, ஆதியில் சத் ஒன்று மட்டுமே இருந்தது, இரண்டற்று. ஆதியில் அசத் ஒன்று மட்டுமே இருந்தது, இரண்டற்று – என்பார் சிலர். அந்த அசத்திலிருந்து சத் தோன்றியது.

அது எப்படி அசத்திலிருந்து சத் தோன்றும் அன்பு மகனே? அவர் கூறினார்: ஆதியில் சத் ஒன்று மட்டுமே இருந்தது, இரண்டற்று.

அது எண்ணியது – நான் பலவாகுக, நான் வளர்க. அது அக்னியைப் படைத்தது. அந்த அக்னி எண்ணியது – நான் பலவாகுக, நான் வளர்க. அது நீரைப் படைத்தது. எனவே, மனிதன் உலர்கையிலும், வியர்க்கையிலும், அந்த நெருப்பே நீராகப் பிறக்கிறது.

அந்த நீர் எண்ணியது – நான் பலவாகுக, நான் வளர்க. அது அன்னத்தைப் படைத்தது. எனவே, மழை பொழிகையில் அன்னம் நிறைகிறது. நீரிலிருந்தே உணவாகும் அன்னம்* பிறக்கிறது.

(*: இந்த மந்திரங்கள் அனைத்திலும் ‘அன்னம்’ என்பது அன்னத்தை விளைவிக்கும் பூமி தத்துவத்தைக் குறிக்கும்).

(3)

அனைத்து உயிர்களுக்கும் பிறப்பிடங்கள் மூன்றே தான் – முட்டையிலிருந்து பிறப்பவை, உயிரிலிருந்து பிறப்பவை, விதையிலிருந்து முளைத்தெழுபவை.

அந்த தெய்வம் எண்ணியது: நல்லது, இந்த மூன்று தெய்வங்களிலும் (நெருப்பு, நீர், பூமி) ஜீவாத்மாவாக உட்புகுந்து பெயர்களாகவும் உருவங்களாகவும் (நாமரூபங்கள்) பிரிந்து வெளிப்படுவேன்.

இவை ஒவ்வொன்றையும் மூன்றாக்குவேன் – இவ்விதம் எண்ணி அந்த தெய்வம் இந்த மூன்று தெய்வங்களிலும் ஜீவாத்மாவாக உட்புகுந்து பெயர்களாகவும் உருவங்களாகவும் பிரிந்து வெளிப்பட்டது.

அவை ஒவ்வொன்றையும் மூன்றாக்கியது. அன்பு மகனே, இந்த மூன்று தெய்வங்களும் எப்படி மூன்று மூன்றாக ஆயின என்பதை என்னிடம் இருந்து அறிவாய்.

(4)

அக்னியின் செஞ்சுடர் – அது நெருப்பின் வண்ணம். வெண்மை நீருடையது. கருமை பூமியினுடையது. இவ்விதம் மறைந்தது அக்னியின் அக்னித்துவம். மாறுதல்கள் அனைத்தும் சொற்கள் தெறிக்கும் வெறும் பெயர்களே. மூன்று வண்ணங்கள் மட்டுமே சத்தியம்.

சூரியனின் செம்மை – அது நெருப்பின் வண்ணம். வெண்மை நீருடையது. கருமை பூமியினுடையது. இவ்விதம் மறைந்தது சூரியனின் சூரியத்துவம். மாறுதல்கள் அனைத்தும் சொற்கள் தெறிக்கும் வெறும் பெயர்களே. மூன்று வண்ணங்கள் மட்டுமே சத்தியம்.

நிலவின் செம்மை – அது நெருப்பின் வண்ணம். வெண்மை நீருடையது. கருமை பூமியினுடையது. இவ்விதம் மறைந்தது சந்திரனின் சந்திரத்துவம். மாறுதல்கள் அனைத்தும் சொற்கள் தெறிக்கும் வெறும் பெயர்களே. மூன்று வண்ணங்கள் மட்டுமே சத்தியம்.

மின்னலின் செம்மை – அது நெருப்பின் வண்ணம். வெண்மை நீருடையது. கருமை பூமியினுடையது. இவ்விதம் மறைந்தது மின்னலின் மின்னல்துவம். மாறுதல்கள் அனைத்தும் சொற்கள் தெறிக்கும் வெறும் பெயர்களே. மூன்று வண்ணங்கள் மட்டுமே சத்தியம்.

முன்னாளில் இதனை அறிந்திருந்த இல்லறத்தாரான பெரியோரும், வேதஞானியரான பெரியோரும் கூறினர்: ‘இனி யாம் கேட்காதது, எண்ணாதது, அறியாதது ஒன்று உள்ளதென யாரும் சொல்லமாட்டார்கள்’. இவற்றின் (மூன்று தெய்வங்கள்) மூலம், அவர்கள் அனைத்தையும் அறிந்தனர்.

செம்மையின் தோற்றங்கள் அனைத்தும் நெருப்பென அறிந்தனர். வெண்மையின் தோற்றங்கள் அனைத்தும் நீரென அறிந்தனர். கருமையின் தோற்றங்கள் அனைத்தும் பூமியென அறிந்தனர்.

அறியாத தோற்றங்கள் அனைத்தும் இதே தெய்வங்களின் சேர்க்கைகள் என அறிந்தனர். அன்பு மகனே, மனிதரிடத்தில் எவ்வாறு இம்மூன்று தெய்வங்களும் மூவடிவாகின்றன என்பதை இப்போது அறிவாய்.

(5)

உண்ணும் அன்னம் மூன்றாய்ப் பிரிகிறது. அதன் பருண்மை மலமாகிறது. அதன் நடுவுரு ஊனுடம்பாகிறது. நுண்மை மனமாகிறது.

உண்ணும் நீர் மூன்றாய்ப் பிரிகிறது. அதன் பருண்மை மூத்திரமாகிறது. அதன் நடுவுரு உதிரமாகிறது. நுண்மை பிராணனாகிறது.

உண்ணும் நெருப்பு மூன்றாய்ப் பிரிகிறது. அதன் பருண்மை எலும்பாகிறது. அதன் நடுவுரு மஜ்ஜையாகிறது. நுண்மை வாக்காகிறது.

அன்பு மகனே, அன்னத்தால் ஆனது மனம். நீரால் ஆனது பிராணன். நெருப்பால் ஆனது வாக்கு.

‘மேலும் விளக்குங்கள், போற்றுதலுக்குரியவரே’.

அப்படியே ஆகட்டும் அன்பு மகனே – என்றார் அவர்.

(6)

அன்பு மகனே, தயிர் கடையும்போது, அதன் நுண்மை மேலெழுகிறது. அது நெய்யாகிறது.

அது போலவே, அன்பு மகனே, உண்ணும் அன்னத்தின் நுண்மை மேலெழுகிறது. அது மனமாகிறது.

அன்பு மகனே, பருகும் நீரின் நுண்மை மேலெழுகிறது. அது பிராணனாகிறது.

அன்பு மகனே, உண்ணும் நெருப்பின் நுண்மை மேலெழுகிறது. அது வாக்காகிறது.

ஆகவே, அன்பு மகனே, அன்னத்தால் ஆனது மனம். நீரால் ஆனது பிராணன். நெருப்பால் ஆனது வாக்கு.

‘மேலும் விளக்குங்கள், போற்றுதலுக்குரியவரே’.

அப்படியே ஆகட்டும் அன்பு மகனே – என்றார் அவர்.

(7)

அன்பு மகனே, பதினாறு கலைகள் கொண்டவன் மனிதன். நீ பதினைந்து நாட்கள் உண்ணாமல் இரு, நீர் மட்டும் எவ்வளவு வேண்டுமானாலும் பருகிடு. நீரால் ஆனது பிராணன். எனவே, நீர் குடித்துக் கொண்டிருக்கும் வரை பிராணன் அறுபடுவதில்லை.

சுவேதகேது பதினைந்து நாட்கள் உண்ணவில்லை. பிறகு அவரிடம் வந்து கேட்டான்: என்ன சொல்வது ஐயா?

ருக், யஜுர், சாம வேத மந்திரங்களைச் சொல், அன்பு மகனே.

அவை எதுவும் மனதில் எழவில்லை ஐயா.

அவர் சொன்னார்: எரியும் பெரு நெருப்பில் விட்டில் பூச்சி அளவுள்ள ஒரே ஒரு கங்கு மட்டும் எஞ்சியிருந்தால், இதற்கு மேல் அது எரியாது. அன்பு மகனே, உனது பதினாறு கலைகளில் ஒரு கலை மட்டுமே உன்னிடம் எஞ்சியுள்ளது. அதனால் வேதங்கள் உனக்கு நினைவு வரவில்லை. போ, உணவு உண். பிறகு நான் சொல்வது புரியும்.

அவன் உண்டான். பிறகு அவரிடம் சென்றான். அவர் கேட்டதனைத்திற்கும் அவன் விடையளித்தான்.

அவர் சொன்னார்: எரியும் பெரு நெருப்பில் விட்டில் பூச்சி அளவுள்ள ஒரே ஒரு கங்கு மட்டும் எஞ்சியிருந்தாலும், உலர்ந்த புல்லைப் போட்டு அதை முன்பை விடவும் பெரிதாகச் சுடர்ந்தெரியச் செய்யலாம். அதே போன்று, உனது பதினாறு கலைகளில் ஒரே ஒரு கலை மட்டுமே எஞ்சியிருந்தது. அன்னம் அதைச் சுடர்ந்தெரியச் செய்தது. அதனால் வேதங்களை இப்போது நீ உணர்கிறாய்.

ஆகவே, அன்பு மகனே, அன்னத்தால் ஆனது மனம். நீரால் ஆனது பிராணன். நெருப்பால் ஆனது வாக்கு.

அவர் கூறியதனைத்தும் அவன் அறிந்தவனானான். ஆம், அறிந்தவனானான்.

(8)

உத்தாலகர் ஆருணி தன் மகன் சுவேதகேதுவிடம் கூறினார்: அன்பு மகனே, உறக்கத்தின் (ஸ்வப்னம்) உண்மை இயல்பை அறிந்து கொள். மனிதன் உறங்கும்போது அவன் ‘சத்’துடன் ஒன்றுபடுகிறான். தனது உண்மை இயல்பை அடைகிறான். அவன் ‘உறங்குகிறான்’ (ஸ்வபிதி) என்கிறார்கள், ஏனென்றால் அவன் தன் சுயமான தன்மைக்கு (ஸ்வம்) சென்று விட்டான் (அபீத:).

கயிற்றில் கட்டப் பட்ட பறவை திசை திசையாகப் பறந்தும் இடம் காணாமல் கடைசியில் கட்டப் பட்ட இடத்தையே வந்தடைகிறது. அது போல, அன்பு மகனே, மனம் திசை திசையாய்ப் பறந்தும் இடம் காணாமல் கடைசியில் பிராணனிடம் வந்தடைகிறது. ஏனெனில், அன்பு மகனே, மனம் பிராணனில் கட்டப் பட்டிருக்கிறது.

அன்பு மகனே, பசி தாகத்தின் உண்மை இயல்பை அறிந்து கொள். மனிதனுக்கு பசி (அச’நா) எடுக்கையில் அவன் உண்பதை நீர் இட்டுச் செல்கிறது. பசுக்களை இட்டுச் செல்பவனையும் (கோ³-நாய:), குதிரைகளை இட்டுச் செல்பவனையும் (அச்’வ-நாய:), மனிதர்களை வழிநடத்துபவனையும் (புருஷ-நாய:) நாம் குறிப்பது போல, உணவை வழிநடத்துபவனாக (அச’-நாய:) நீரைக் குறிக்கிறோம். அன்பு மகனே, இவ்வாறு இந்தக் குருத்து (உடல்) வளர்கிறது. வேரின்றி இது வளர முடியாது என்பதை அறிந்து கொள்.

அன்னத்தில் (பூமியில்) அன்றி அந்த வேர் வேறு எங்கு இருக்க முடியும்? அதே போல, அன்பு மகனே, அன்னம் குருத்து. அதன் வேரைத் தேடிச் செல், அது நீர். நீர் குருத்து, அதன் வேரைத் தேடிச் செல், அது நெருப்பு. நெருப்பு குருத்து. அதன் வேரைத் தேடிச்செல், அது சத். இந்த அனைத்துயிர்களுக்கும் வேர் ‘சத்’. அவற்றின் வசிப்பிடம் சத். அவை நிலைபெற்றுள்ளதும் சத்திலேயே.

மேலும், மனிதனுக்கு தாகமெடுக்கையில் (பிபாஸா) அவன் குடிப்பதை நெருப்பு இட்டுச் செல்கிறது. பசுக்களை இட்டுச் செல்பவனையும் (கோ³-நாய:), குதிரைகளை இட்டுச் செல்பவனையும் (அச்’வ-நாய:), மனிதர்களை வழிநடத்துபவனையும் (புருஷ-நாய:) நாம் குறிப்பது போல, நீரை வழிநடத்துபவனாக (உத³-நாய:) நெருப்பைக் குறிக்கிறோம். இவ்வாறு இந்தக் குருத்து (உடல்) வளர்கிறது. வேரின்றி இது வளர முடியாது என்பதை அறிந்து கொள்.

நீரில் அன்றி அந்த வேர் வேறு எங்கு இருக்க முடியும்? அதே போல, அன்பு மகனே, நீர் குருத்து. அதன் வேரைத் தேடிச் செல், அது நெருப்பு. நெருப்பு குருத்து, அதன் வேரைத் தேடிச் செல், அது சத். ஆம் அன்பு மகனே, இந்த அனைத்துயிர்களுக்கும் வேர் ‘சத்’. அவற்றின் வசிப்பிடம் சத். அவை நிலைபெற்றுள்ளதும் சத்திலேயே.

இந்த மூன்று தெய்வங்களும் (அன்னம், நீர், நெருப்பு) எவ்வாறு மனிதனை அடைந்து மும்மூன்றாக ஆகின்றன என்பதை முன்பே கூறினேன். மனிதன் இங்கிருந்து போகும்போது, அவன் வாக்கு மனத்தில் ஒன்றுகலந்து விடுகிறது. மனம் பிராணனில், பிராணன் நெருப்பில், நெருப்பு பரம்பொருளான தெய்வத்தில்.

அந்த நுண்ணிய சூட்சுமப் பொருளே இவையனைத்தின் ஆத்மா. அது சத்தியம். அது ஆத்மா. நீயே அது, சுவேதகேது.*

மேலும் விளக்குங்கள், போற்றுதலுக்குரியவரே.

அப்படியே ஆகட்டும் அன்பு மகனே – என்றார் அவர்.

(* மூலம்: “ஸ ய ஏஷ அணிமைதத்³ ஆத்ம்யம் இத³ம் ஸர்வம் தத் ஸத்யம் ஸ ஆத்மா தத்வமஸி ச்’வேதகேதோ”. தத்வமஸி – நீயே அது – என்பது வேதாந்த தரிசனத்தின் நான்கு மகாவாக்கியங்களில் ஒன்று).

(9)

அன்பு மகனே, விதவிதமான மரங்களிலிருந்து அவற்றின் ரசத்தை எடுத்துச் சேர்த்து ஒரு ரசமாக, தேனாக சமைக்கின்றன தேனீக்கள். அந்த ரசங்களுக்கு நான் இந்த மரத்தின் ரசம், நான் அந்த மரத்தின் ரசம் என்று பகுத்தறியும் விவேகம் இருப்பதில்லை. அது போலவே, இந்த அனைத்து உயிர்களும் ‘சத்’தில் கலந்திருக்கையில் (உறக்கத்தில், இறப்பில், மகா பிரளயத்தில்), நாம் சத்தில் ஒன்றுகலந்திருக்கிறோம் என்பதை அறிவதில்லை.

புலியோ சிங்கமோ ஓநாயோ பன்றியோ புழுவோ பூச்சியோ விட்டிலோ கொசுவோ, இங்கிருக்கும் இவை எதுவாயினும் அவை மீண்டும் அதாக ஆகின்றன.

அந்த நுண்ணிய சூட்சுமப் பொருளே இவையனைத்தின் ஆத்மா. அது சத்தியம். அது ஆத்மா. நீயே அது, சுவேதகேது.

மேலும் விளக்குங்கள், போற்றுதலுக்குரியவரே.

அப்படியே ஆகட்டும் அன்பு மகனே – என்றார் அவர்.

(10)

அன்பு மகனே, இந்தக் கிழக்கு நதிகள் கிழக்கு நோக்கிப் பாய்கின்றன, மேற்கு நதிகள் மேற்கை நோக்கி. அவை கடலில் இருந்து* கடலை நோக்கிச் செல்கின்றன. கடலாகவே ஆகின்றன. அங்கு, தான் இந்த நதி தான் அந்த நதி என்பதை அவை அறிவதில்லை. அது போலவே, ‘சத்’திலிருந்து வந்த இந்த அனைத்து உயிர்களும் ‘சத்’தில் இருந்து வந்திருக்கிறோம் என்பதை அறிவதில்லை.

புலியோ சிங்கமோ ஓநாயோ பன்றியோ புழுவோ பூச்சியோ விட்டிலோ கொசுவோ, இங்கிருக்கும் இவை எதுவாயினும் அவை மீண்டும் அதாக ஆகின்றன.

அந்த நுண்ணிய சூட்சுமப் பொருளே இவையனைத்தின் ஆத்மா. அது சத்தியம். அது ஆத்மா. நீயே அது, சுவேதகேது.

மேலும் விளக்குங்கள், போற்றுதலுக்குரியவரே.

அப்படியே ஆகட்டும் அன்பு மகனே – என்றார் அவர்.

(*: கடல் நீர் ஆவியாகி மழையாய்ப் பொழிவதைக் குறிக்கிறது).

(11)

அன்பு மகனே, இந்தப் பெருமரத்தின் வேரில் வெட்டினால், உதிரம் (பசுஞ்சாறு) தெறிக்க, அது உயிர்வாழும். அதன் நடுவில் வெட்டினாலும், உதிரம் தெறிக்க அது உயிர்வாழும். அதன் மேலே வெட்டினாலும், உதிரம் தெறிக்க அது உயிர்வாழும். மரம் முழுவதும் உயிரால் (ஜீவாத்மா) நிரம்பியுள்ளதாலேயே, அது நீர் பருகி இன்புற்று நிற்கிறது.

இந்த மரத்தின் ஒரு கிளையை விட்டு உயிர் சென்று விட்டால், அந்தக் கிளை காய்கிறது. இரண்டாவதை விட்டுச் சென்று விட்டால், அது காய்கிறது. மூன்றாவதை விட்டுச் சென்று விட்டால், அதுவும் காய்கிறது. மரம் முழுவதையும் விட்டுச் சென்றுவிட்டால், மரம் காய்கிறது.

அது போலவே, அன்பு மகனே, உயிர் விட்டுச் சென்றுவிட்டால் இதுவும் (உடல்) அழியும். ஆனால் உயிர் (ஜீவாத்மா) அழிவதில்லை.

அந்த நுண்ணிய சூட்சுமப் பொருளே இவையனைத்தின் ஆத்மா. அது சத்தியம். அது ஆத்மா. நீயே அது, சுவேதகேது.

மேலும் விளக்குங்கள் ஐயா.

அப்படியே ஆகட்டும் அன்பு மகனே – என்றார் அவர்.

(12)

இந்த மரத்திலிருந்து ஒரு அத்திப்பழம் கொண்டு வா.

இதோ ஐயா.

இதை உடை.

உடைத்துவிட்டேன் ஐயா.

அதில் என்ன காண்கிறாய்?

துகள்கள் போன்று சிறிய விதைகள், ஐயா.

அவற்றில் ஒன்றை உடை.

உடைத்துவிட்டேன் ஐயா.

அங்கு என்ன காண்கிறாய்?

ஒன்றுமில்லை ஐயா.

அவர் சொன்னார் – அன்பு மகனே, உன்னால் அங்கு காணமுடியாத நுண்ணிய சூட்சுமப் பொருள்; இந்த நுண்பொருளிலிருந்தே இந்தப் பெரும் அத்திமரம் வளர்ந்து நிற்கிறது.

சிரத்தை கொள், அன்பு மகனே. அந்த நுண்ணிய சூட்சுமப் பொருளே இவையனைத்தின் ஆத்மா. அது சத்தியம். அது ஆத்மா. நீயே அது, சுவேதகேது.

மேலும் விளக்குங்கள் ஐயா.

அப்படியே ஆகட்டும் அன்பு மகனே – என்றார் அவர்.

(13)

இந்த உப்பைத் தண்ணீரில் போடு. பிறகு காலையில் என்னிடம் வா.

அவன் அப்படியே செய்தான்.

அவர் சொன்னார் – குழந்தாய், இரவில் தண்ணீரில் போட்டாயே உப்பு, அதைக் கொண்டு வா.

அவன் அதைத் தேடிப் பார்த்தும் காணவில்லை. முழுதாகக் கரைந்து விட்டிருந்தது.

குழந்தாய், இதன் மேலிருந்து ஒரு வாய் தண்ணீர் குடி. எப்படி இருக்கிறது?

உப்பாக.

நடுவிலிருந்து ஒரு வாய் குடி. எப்படி இருக்கிறது?

உப்பாக.

அடியிலிருந்து ஒரு வாய் குடி. எப்படி இருக்கிறது?

உப்பாக.

தண்ணீரைக் கொட்டிவிட்டு வா.

அவன் அப்படியே செய்தான். பிறகு சொன்னான் – அது எப்போதும் இருக்கிறது.

அவர் சொன்னார் – அன்பு மகனே, இதில் (நீரில்) இருப்பதை* உன்னால் காண முடியவில்லையே. அதுபோலவே இதிலும் (உடலில்).

அந்த நுண்ணிய சூட்சுமப் பொருளே இவையனைத்தின் ஆத்மா. அது சத்தியம். அது ஆத்மா. நீயே அது, சுவேதகேது.

மேலும் விளக்குங்கள் ஐயா.

அப்படியே ஆகட்டும் அன்பு மகனே – என்றார் அவர்.

(* இருப்பு = சத்)

(14)

அன்பு மகனே, காந்தாரத்திலிருந்து கண்களைக் கட்டிக் கூட்டிவந்து ஆளில்லாத இடத்தில் ஒருவனை விட்டுவிடுகிறார்கள். கிழக்கையும் வடக்கையும் தெற்கையும் மேற்கையும் பார்த்துத் திரும்பி, அவன் கூவுகிறான் – கண்களைக் கட்டிக் கொண்டுவந்து விட்டார்கள், கண்களைக் கட்டிக் கொண்டுவந்து விட்டார்கள்!

பிறகு ஒருவன் வந்து அவன் கண்கட்டை அவிழ்த்துவிட்டு கூறுகிறான் – அந்தத் திசையில் காந்தாரம், அந்தத் திசையில் போ. பிறகு அவன் கிராமம் கிராமமாக கேட்டு, அறிந்து, தானாக தெளிந்து காந்தாரத்தைச் சென்று அடைந்து விடுகிறான், ஆசிரியன் மூலம் இங்கு மனிதன் அறிவது போல. விடுபடாத வரையில் தான் தாமதம், பிறகு உடன் அதனுடன் ஒன்றுகலந்து விடுகிறான்.

அந்த நுண்ணிய சூட்சுமப் பொருளே இவையனைத்தின் ஆத்மா. அது சத்தியம். அது ஆத்மா. நீயே அது, சுவேதகேது.

மேலும் விளக்குங்கள் ஐயா.

அப்படியே ஆகட்டும் அன்பு மகனே – என்றார் அவர்.

(15)

அன்பு மகனே, நோயுற்ற மனிதனைச் சுற்றி நின்று உற்றார் கேட்கிறார்கள் – என்னைத் தெரிகிறதா? என்னைத் தெரிகிறதா? என்று. அவன் வாக்கு மனத்திலும், மனம் பிராணனிலும், பிராணன் நெருப்பிலும், நெருப்பு பரம்பொருளான தெய்வத்திலும் ஒன்று கலந்திடாத வரையில், அவர்களை அவனால் தெரிந்து கொள்ள முடியும்.

ஆனால், அவன் வாக்கு மனத்திலும் மனம் பிராணனிலும், பிராணன் நெருப்பிலும், நெருப்பு பரம்பொருளான தெய்வத்திலும் ஒன்றுகலந்துவிட்டால், அவர்களை அவனால் தெரிந்து கொள்ள முடியாது.

அந்த நுண்ணிய சூட்சுமப் பொருளே இவையனைத்தின் ஆத்மா. அது சத்தியம். அது ஆத்மா. நீயே அது, சுவேதகேது.

மேலும் விளக்குங்கள் ஐயா.

அப்படியே ஆகட்டும் அன்பு மகனே – என்றார் அவர்.

(16)

அன்பு மகனே, கையைப் பிடித்து அவனைக் கூட்டி வருகிறார்கள். இவன் அபகரித்திருக்கிறான். திருடியிருக்கிறான் என்கிறார்கள். அவன் அதை செய்தோன் (கர்த்தா) எனில், தன்னை பொய்யாக்கிக் கொள்கிறான். பொய்மயமாகி பொய்யால் தன்னை நிரப்பி அந்தக் கொதிக்கும் கோடாலியைத் தொடுகிறான். அவன் எரிகிறான். கொல்லப் படுகிறான்.

அவன் செய்திலன் (அகர்த்தா) எனில், தன்னை சத்தியமாக்கிக் கொள்கிறான். சத்தியமயமாகி சத்தியத்தால் தன்னை நிரப்பி அந்தக் கொதிக்கும் கோடாலியைத் தொடுகிறான். அவன் எரிவதில்லை. விடுபடுகிறான்.

அங்கு அந்த மனிதன் எரிவதில்லை. அவ்வாறே, அது இவையனைத்தின் ஆத்மா. அது சத்தியம். அது ஆத்மா. நீயே அது, சுவேதகேது.

அவர் கூறியதனைத்தும் அவன் அறிந்தவனானான். ஆம், அறிந்தவனானான்.

ஓம்.

(ஆறாம் அத்தியாயம் முற்றிற்று)

ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே: புத்தக விமர்சனம்

universeஇந்தப் பிரபஞ்சத்தையும் அதில் உள்ள அனைத்தையும் இறைவன் என்கிற ஒரு பெரிய ஆளுமை- மிக மிகப் பெரிய ஆளுமை- உருவாக்கினான் என்பது உலகத்திலுள்ள மூன்று முக்கிய மதங்களின் நம்பிக்கை. இத்தகைய சிருஷ்டிகர்த்தரின் நிரந்தரக் கட்டுப்பாட்டில் நாம் இருக்கிறோம். அவர் அவ்வப்போது இறைத்தூதர்களை உலகுக்கு அனுப்புவார். அவர்களிடம் மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் எப்படி உண்மையான இறைவனான தன்னை- தன்னை மட்டுமே வணங்க வேண்டுமெனச் சொல்லுவார். அப்படி வணங்காதவர்களை மறுமையில் தண்டிப்பார். இதுதான் ஆபிரகாமிய மதங்களின் நிலைப்பாடு.

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக ஐரோப்பாவிலும் சற்றேறக்குறைய ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளாக அரேபியாவிலும் இந்தக் கோட்பாடு கோலோச்சி வந்துள்ளது. நவீன காலத்துக்கு முன்னால் மிகச்சிறந்த முறையில் அரசதிகாரத்தைக் கட்டியெழுப்ப இந்த இறைநம்பிக்கை உதவியாக இருந்துள்ளது. எலைன் பேகல்ஸ் என்கிற விவிலிய அறிஞர் இதை, “ஏக ஆண்டவன் நம்பிக்கையின் அரசியல்” என்றே சொல்கிறார். ஆனால் பாரதிய ஆன்மிக மரபுகள் இத்தகைய ஆண்டவன் மீதான நம்பிக்கைக்கு எத்தகைய முக்கியத்துவத்தைக் கொடுத்துள்ளன? இதை நாம் ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கடந்த முன்னூறு ஆண்டுகள் நிலவிய காலனிய ஆதிக்கத்தில் இந்த ஆபிரகாமிய இறைநம்பிக்கையே ஆதர்ச நம்பிக்கையாக இந்திய மக்களுக்கு எடுத்து வைக்கப்பட்டுள்ளது. எம்.என்.ராய் போன்ற அறிஞர்களும் ஈவெரா போல போலிப்பகுத்தறிவு பேசிய இனவாதிகளும் கூட ஆபிரகாமிய மத நம்பிக்கையை ஆதர்ச மத நம்பிக்கையாக நம் மக்கள் முன் வைத்தனர். இந்துக்களும் தமது இறைக் கோட்பாடுகளை ஆபிரகாமிய சட்டகத்தில் பிரதி எடுக்க ஆரம்பித்தனர். இதன் விளைவாக “நான் முருகனை நம்புகிறேன். நீ ஏசுவை/அல்லாவை நம்புகிறாய்” என மத-ஒப்புமை பேச ஆரம்பித்தனர். ஆனால் உண்மை வேறுவிதமானது; இதனை இந்துக்கள் குறிப்பாகவும் இந்திய மக்கள் பொதுவாகவும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

cover_andavan-maruppum-aanmigameஇதற்கான ஒரு நல்ல அறிமுகமாக சிந்தனையைத் தூண்டும் ஒரு முனைப்பாகவும் ஒரு புத்தகம் உதவும்.

பத்மன் எழுதிய “ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே” என்கிற புத்தகம்தான் அது. விகடன் பிரசுரம். தலைப்பே ஓர் அதிர்ச்சியைத் தர வேண்டும் என்பதாக வைக்கப்பட்டிருக்கிறது. பாரதத்தின் இறை-மறுப்புப் பாரம்பரியத்தை இந்த நூல் எளிய முறையில் தொடக்கநிலை அறிமுகம் அளிக்கிறது. முதலில் ஆன்மிகம் என்றால் என்ன என பத்மன் விளக்குகிறார்.

சில வீச்சுக்கள்:

  • மதங்களில் ஓரளவு ஆன்மிகம் இருக்கிறது. ஆனால் மதங்களுக்குள்ளே சிறைப்படாமல் அவற்றைத் தாண்டி இயங்குகிறது.
  • வாழ்க்கையை தனக்கும் பிற உயிர்களுக்கும் பயனுள்ளதாக அமைத்துக் கொள்வதுதான் ஆன்மிகமே தவிர, ஏதோ சில பிரதிபலன்களுக்காகக் கெஞ்சுவது அல்ல.
  • அறிவியலை மறுப்பதல்ல ஆன்மிகம். அறிவியலின் தீட்சண்யத்தால் தீர்க்கமான உண்மையை தரிசிப்பதே ஆன்மிகம்.
  • ஆன்மிகத்தைப் பொருத்த மட்டில் ஆண்டவனை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் இரண்டாம் பட்சம்தான்.

அடுத்த இரண்டு அத்தியாயங்களில் ஆசிரியர் ஆஸ்திகம் நாஸ்திகம் என்கிற வகைப்பாட்டை விளக்குகிறார். பாரத ஆன்மிக மரபில் இப்பதங்கள் கையாளப்படுவதற்கும் இன்றைய ஆபிரகாமிய சிந்தனைக் கலப்பின் பின் பயன்படுத்தப்படும் விதத்துக்குமான வேறுபாட்டை விளக்குகிறார்: இருப்பின் ஆதாரத் தன்மையை மறுப்பதே நாஸ்திகமன்றி சிருஷ்டிகர்த்தா குறித்து பாரதிய தத்துவ விசாரம் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை என்கிறார் அவர். (ஆனால் ஒரு தொடக்க அறிதல் முறையாக சிருஷ்டியை ஒரு தேவன் செய்தான் என்கிற கோட்பாட்டை வைத்து விளையாடிவிட்டு அதனை வளரும் குழந்தை பொம்மைகளை உதறுவது போல உதறியிருக்கிறார்கள். இதே ஞானத்தை அனைத்து மக்களும் அறியவேண்டும் என்பதில் இந்து ஞானிகள் கவனமாக இருந்திருக்கிறார்கள். எனவே ஹிந்துத் தொன்மங்களில் தொடர்ந்து படைப்பின் தேவனான பிரம்மன் ஆணவ-பங்கம் செய்யப் படுகிறான். முருகன், கண்ணன், சிவன் ஆகியோரிடம் பிரம்மா ஆணவம் காட்டி பின் வருந்திய கதைகள் பாரதமெங்கும் எளிய மக்களின் பேச்சு வழக்கிலும் உள்ளது.)

பார்க்க: டார்வின் – முருகன் வைத்த குட்டு

richard-dawkinsமுக்கியமான நாஸ்திகத் தத்துவங்களான லோகாயதம், நியதிவாதம், அக்கிரியாவாதம், சசஸ்தவாதம், விச்சேபவாதம் ஆகியவற்றை எளிமையாக விளக்குகிறார் ஆசிரியர். முக்கியமாக நியதிவாதம், அக்கிரியாவாதம், சசஸ்தவாதம் ஆகியவை இணைந்து ஆசீவகம் உருவாகியதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். அண்மையில் பிரபல உயிரியலாளர் ரிச்சர்ட் டாவ்கின்ஸ் எழுதிய “இறைவனெனும் மனச்சீர்கேடு” (The God Delusion) எனும் நூல் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளானது. இந்நூலைத் தாக்கியவர்கள் முன்வைத்த ஒரு முக்கிய வாதம், “நம் அறச்சிந்தனைகளுக்குக் கடவுள் நம்பிக்கை ஓர் அடிப்படை” என்பது. டாவ்கின்ஸ் இதை மறுத்து கடவுள் நம்பிக்கை எப்படி மோசமான அறச்சீர்கேடுகளை நியாயப்படுத்தியிருக்கிறது எனத் தனது நூலில் வாதிட்டுள்ளார். ஆனால் இந்த நூலைப் படித்திருந்தால் அவர் ஒருவேளை நேர்மறை ஆதாரமே கூட கொடுத்திருக்க முடியும். பத்மன் முழுமையான நாஸ்திகர்களான ஆசீவகர்கள் உயர்ந்த நற்பண்புகளுடனும் வாழ்வியல் சிந்தனைகளுடனும் அற மாண்புடனும் வாழ்ந்ததாக விளக்குகிறார். (பக். 44)

வேத ஆன்மிகத்திலும் இறை மறுப்பு இருப்பதை பத்மன் கூறுகிறார். நாஸதீய சூக்தத்தை இதற்கான சான்றாக அவர் முன்வைக்கிறார்:

ஆக, ஆண்டவனை நாஸதீய சூக்தம் முற்றிலும் மறுக்காவிட்டாலும் அவரது இருப்பையும் ஆளுமையையும் கேள்விக் குறியாக்கியுள்ளது. அதே நேரத்தில் ஒரு வகையில் இயற்கையாகத் தோன்றிய இந்தப் பிரபஞ்சத்தின் ஆதி உயிராகவும், இப்பிரபஞ்ச இயக்கத்தைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் சக்தியாகவும் ஆண்டவனை உருவகப்படுத்துகிறது. முரண்களுடனான இந்தச் சமரசம்தான் ஆண்டவன் மறுப்பு ஆன்மிகத்தின் ஆணிவேர்.

சாங்கியம், வைசேக்ஷிகம், மீமாம்சம் ஆகியவற்றை அடுத்தடுத்த அத்தியாயங்களில் விளக்குகிறார். இவை அனைத்திலும் ஆண்டவன் ஒரு மையப்புள்ளியாக இல்லாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். பின்னர் சித்தர் பாடல்களில் இதே தன்மை இருப்பதை விளக்குகிறார். இயல்பாக இதில் முன்னிலை பெறுவது சிவவாக்கியர் பாடல்கள்தாம்.

சாதியாவது ஏதடா? சலம்திரண்ட நீரெலாம்
பூதவாசல் ஒன்றலோ? பூதமைந்தும் ஒன்றலோ
காதில்வாளி காரைகம்பி பாடகம்பொன் ஒன்றலோ?
சாதிபேதம் ஓதுகின்ற தன்மையென்ன தன்மையோ

பொதுவாக நம்பிக்கையின் அடிப்படையில் சமூக அதிகாரம் மேல்வர்க்கத்தினரிடம் சென்றுவிடும். நம்பிக்கை இந்நிலையில் தனிமனிதச் சார்பு என்பதற்கு அப்பால் சமூகக் கட்டுப்பாட்டுக் கருவியாகிவிடுகிறது. மேற்கில் இது முழுதாக விரிந்து படமெடுத்து ஆடி, பின்னர் அடங்கியது. இங்கு மிகவும் குவிமையமற்ற நிலையில் அப்போக்கு அவ்வப்போது சமூக தேக்கநிலையாக எழுகிறது. அதனைக் கண்டிக்க ஆன்மிகத் தேடலை ஒரு சமரசமற்ற சமூக ஆன்மிகச் சமத்துவமாக சித்தர் பாடல்கள் முன்வைக்கின்றன. இதனை பத்மன் மேற்கோள் காட்டும் சிவவாக்கியர் பாடல்கள் தெளிவாக காட்டுகின்றன. பல வேத செய்யுட்கள் மூலம் எப்படி ஆண்டவனை முன்னிறுத்தாமல் சகல உயிர்களுடனும் ஆன்மநேய ஒருமை பூண்வதே வேதமார்க்கத்தில் ஆன்மிகமாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது என ஆசிரியர் விளக்கிக் கூறுகிறார்:

ஆக, உலகின் எஜமானனாக ஆண்டவனை முன்னிறுத்தி, அவரது விருப்பத்தால் அல்லது அவரைத் துதி செய்வதாலேயே மோட்சம் கிட்டும் என்று வலியுறுத்தாமல் உலகின் தோற்றம், ஆன்மவிளக்கம், விடுதலைக்கான வழிமுறைகள் ஆகியவற்றை அறிவியல் மற்றும் உளவியல் ரீதியில் அலசி ஆராய்வதே ஆண்டவன்மறுப்பு ஆன்மிகத்தின் அடிப்படை. இது வைதீக மார்க்கத்திலும் விரவிக் கிடக்கிறது. (பக்.91)

பாரதத்தின் அவைதீக ஆன்மிக மரபுகளை அடுத்த ஐம்பது பக்கங்கள் விளக்குகின்றன. ஆரிய இனவாதத்தின் அறிவியல் அடிப்படையற்ற தன்மையையும் இங்கு ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஆரியன் என்பவன் யார்? புத்தரின் வார்த்தைகளில் சொன்னால்:

எந்த விதத்திலேனும் பிற உயிர்களை வதைப்பவன் எவனும் ஆரியனல்லன். உயிர்களுக்கு இம்சை புரியாதவனே ஆரியன் எனப்படுவான்.

நதேன ஆரியோ ஹோதி யேன பாணானி ஹிம்ஸதி
அஹிம்ஸா ஸப்ப பாணானாம் ஆரியோ தி பவுச்சதி
(தம்மபதம், தம்மட்டவக்கோ, 19.15)

அதாவது ஆரியன் என்போன் அறவோன் எவ்வுயிருக்கும் தீங்கு செய்யாமல் நன்மை செய்பவனே. ஆம், திருவள்ளுவரின் அந்தணனுக்கான வரையறை புத்தரின் எதிரொலியாகவே இருக்கிறது. ஒருவேளை இந்த விதத்தில் வேண்டுமென்றால் பார்ப்பனர்களெல்லாம் ஆரியர்கள் என்று சொல்லலாம். ஆனால் இந்த பார்ப்பனத் தன்மை பிறப்படிப்படையில் எழுவதல்ல; ஆரியர் எனும் பதமும் இன அடிப்படையில் எழுந்ததல்ல.

நூலின் தொடக்கவுரையிலேயே ஆசிரியர் இந்த நூல் காலத்தின் கட்டாயம் எனக் கூறியுள்ளார். உண்மைதான்.

போலியான ஆன்மிகச்சந்தை ஒன்றே உருவாகியுள்ள ஓர் அவலநிலை ஒரு பக்கம்; ஆனால் அதைவிடவும் பன்மடங்கு பெரிய தேசிய அபாயமாகவே அந்நியப் பண உதவியுடன் ஆக்கிரமிப்பாகவே நடத்தப்படும் மனநோய்ப் பரவலாக மதமாற்றம் மறுபக்கம்;  இப்படி நடக்கும் போது, இவையெல்லாம் போதாதென்று போலிப் பகுத்தறிவு வேறு வக்கிரமான காமெடி-வில்லனாக தமிழ்நாட்டில் நிலவி மக்களைக் குழப்பி வருகிறது.

இந்தச் சூழலில் நம் உண்மையான ஆன்மிகப் பாரம்பரியத்தைத் தெளிவாகவும் துணிவாகவும் பேசியுள்ளார் ஆசிரியர்.

ஒவ்வொரு தமிழ் ஹிந்துவும் படிக்க வேண்டிய நூல் – ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே!

ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே
ஆசிரியர்: பத்மன்

விகடன் பிரசுரம்
பக்கங்கள்:144
விலை ரூ. 55