தித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 1

ஆண்டாள் இயல்பாகவே பெண்ணாக இருப்பதால், இறைவனைத் தன் காதலனாக எண்ணி அவனை காதலனாக நினைத்து கசிந்து உருகி பக்தி செய்ய முடிந்தது. இதைக் கண்ட மற்ற ஆழ்வார்களெல்லாம், எவ்வளவு எளிதாக பக்தி செய்து இச்சிறுபெண் கண்ணனை அடைந்து விட்டாள்! பெண்ணாக இருந்தால் இறைவனை எளிதாக அடைந்து விடக் கூடுமோ என்று எண்ணி ஆண்டாளை உதாரணமாகக் கொண்டு அவர்களும் பெண் பாவனையில் கண்ணனைக் காதலித்தல், ஊடல் கொள்ளுதல், பிரிந்து வருந்துதல், தூது விடுதல், மடலூர்தல் என்று விதவிதமாக நாயகி பாவத்தில் கண்ணனை பக்தி செய்து அனுபவித்தனர் போலும்

View More தித்திக்கும் தெய்வத் தமிழ் திருப்பாவை – 1

ஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -2

கொடுங்கோல் மன்னனை எதிர்த்து மாண்டவர்களின் நினைவுச் சின்னம் இங்கே பதிவாகியிருக்கிறது, எந்தப் புரட்சி கோஷங்களும் இல்லாமல்…நமக்கும் நம் முதலிகளுக்கும் உள்ள தன்னேற்றத்தை அருளிச் செய்ய வேணும் என்று கேட்கிறார் முதலியாண்டான். இங்கு பிராமணர் – பிராமணரல்லாதார் பற்றிய ஒரு 11ம் நூற்றாண்டு உரையாடல் பதிவு செய்யப் பட்டுள்ளதைக் காண்கிறோம்… திருவரங்கம் கோயில் விஷயத்தில் அத்தகையதொரு உணர்வினை உண்டாக்குவதில் கோயிலொழுகு நூலின் பங்களிப்பு மகத்தானது..

View More ஸ்ரீரங்கம்: காலவெளியில் ஒரு பயணம் -2

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 2

எந்தப் பழக்கங்களை, சிந்தனைகளை இந்த விசாரணை கண்டனம் செய்கிறதோ அவை இன்னும் ஜீவித்திருப்பது வாஸ்தவம்தான். ஆனால்… வைஷ்ணவக் கோயில்களில் தினசரி ஆராதனையாக, திவ்யப் பிரபந்தப் பாசுரங்கள் பாடப்படுவதும், அரையர் சேவையில் தாழ்த்தப்பட்டோர் வாத்தியங்களான பறை முதலானவை பயன்படுத்தப்படுவதும், முத்துக்குறி போன்ற கிராமிய வடிவங்கள் அரையர் சேவையில் இடம் பெறுவதும் சமூகத்தில் எழுப்பப்பட்டிருந்த ஜாதி ரீதியான வேலிகளை அகற்றுவதில் இராமானுஜரின் வைஷ்ணவம்… சமூகத்தின் நிரந்தர ஏற்பாடுகளை வெறுத்து ஒதுக்கியவர்கள் என்பதைத் தவிர. சித்தர்கள் பெரும்பாலோர் பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பதினாறாம் நூற்றாண்டு வரை…

View More தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 2

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1

இது பற்றியெல்லாம் சிந்தித்தவர்கள், சுய விமரிசனம் செய்தவர்கள், அவர்கள் செயல்படவும் செய்தார்கள் என்பதைத் தான், சிவனோ பெருமாளோ அவர்களுக்காக மனமிரங்கி அவர்களைக் காப்பாற்றியதாக இலக்கியங்களும் கலைகளும் சொல்கின்றன. அதைத் தான் அவர்கள் வரலாற்றிலும் இலக்கியத்திலும் எழுதி அவற்றிற்கு ஒரு அழியா வாழ்வு கொடுத்திருக்கின்றனர்… இவர்கள் பாதுகாத்தும் சிறப்பித்தும் வாழ்வு தந்ததால் தானே அவை இன்றைய பிரசாரகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பிராமணர்களைப் பழிக்க ஏதுவாயிருக்கிறது!

View More தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 1

அச்சுதனின் அவதாரப்பெருமை – 4

தன்னடியார்களுக்குக் காட்சிதரும் பொருட்டு அவதாரம் எடுக்கக் கிளம்பி, வழியிலே கொடியோர்களைத் தண்டித்தல் என்னும் முக்கியமான காரியத்தையும் செய்து முடிக்கிறான் கண்ணன் […] “கீதை உபதேசம் செய்தான்”, “கர்ம யோகத்தையும் ஞான யோகத்தையும் அர்ஜுனனுக்கு விளக்கினான்”, “கடினமான உபநிடத அர்த்தங்களை எடுத்துக் கூறினான்” என்றெல்லாம் ஆழ்வார்கள் அவ்வளவாகப் பாடியிருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, அவனுடைய குழந்தைப் பருவ விளையாட்டுகளிலேயே மெய் மறந்து பாசுரம் பாசுரமாகப் பாடியுள்ளனர்.[…]

View More அச்சுதனின் அவதாரப்பெருமை – 4