பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்று

”பி.பி. ஸ்ரீனிவாஸ் விழா நடத்த இருக்கிறோம். பல மொழிகளிலும் தம் பங்களிப்பைத் தந்துள்ள, பி.பி ஸ்ரீனிவாஸ் போல 80 வயது நிறைந்த, அறிஞர்களையும் கௌரவிக்கத் திட்டமிட்டு, அவ்வகையில் தமிழ் மொழிக்குத் தாங்கள் செய்துள்ள பாராட்டத்தக்க சேவையைக் கருத்தில் கொண்டு அதே மேடையில் தங்களையும் கௌரவிக்க விரும்புகிறோம்” என்று 2012 டிசம்பரில் வந்த கடிதத்தில் கண்டிருந்தது.. ஆச்சரியமாக இருந்தது. இங்கு அதுவும் தமிழ் நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் என்று கூச்சலிடும் கர்நாடகத்தில், ”உங்களை கௌரவிக்கிறோம்” என்றா குரல் எழும்? எப்படி இது நேர்கிறது?…. ”அவர் இருந்த போது பெரிய அளவில் நடத்த இருந்தோம். நம் துரதிர்ஷ்டம் அவர் மறைந்து விட்டார். இருந்தாலும் விழாவும் கௌரவிப்பும் இருக்கும். பெரிய அளவில் இல்லாவிட்டாலும். முடிந்த அளவில் நடத்துவோம்” என்றார்…. பாலஸ் மைதானத்தில் உள்ளே நுழைந்தால் ஒரு பெரிய கொட்டகை திறந்த மைதானத்தில் எழுப்பப் பட்டிருந்தது. மேடையும் மிகப் பெரியது… கௌரவிக்கப்பட இருந்தவர்கள் மேடைக்கு அழைத்து வரப்பட்டு எஸ்,பி.பாலசுப்ரமணியம், ஏசுதாஸ் முதலிய நக்ஷத்திர பாடகர்கள், சரோஜா தேவி, ஜெயந்தி, ரவி உட்பட எல்லோரும் புடை சூழ ஒவ்வொருவரும் கௌரவிக்கப்படுபவரை கால் தொட்டு வணங்கி, சால்வையோ, மாலையோ, பணமுடிப்போ, ஷீல்டோ கொடுத்தனர்….

View More பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் பெயரில் வந்த கௌரவம்: பலரோடு எனக்கும் ஒன்று

அஞ்சலி: டி.எம்.சௌந்தரராஜன்

எண்ணத்தில் ஏறி எப்போது நினைத்தாலும் அவரது எண்ணற்ற பாடலொன்றால் எண்ணம் முழுதும் நிரப்புகின்ற பெரும் இசையாற்றலுக்குச் சொந்தக்காரர்… சரஸ்வதியின் ஒரு சாயலை நமக்குக் காட்டிய பெருமகன் இவர். தன் திறமைக்கு ஏற்ப புகழும் பொருளும் பெயரும் ஈட்டி தமிழக கோடானு கோடி மனங்களில் இடம் பெற்று பெருவாழ்வு வாழ்ந்தவர். வாழ்கிறவர்… மதுரையில் சௌராட்டிரக் குடும்பத்தில்  மீனாட்சி ஐயங்கார் என்பவரின் மகனாகப் பிறந்த சௌந்தரராஜன், பிரபல வித்துவான் பூச்சி ஶ்ரீனிவாச ஐயங்காரின் மருமகன் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்றவர்…. ஒரு நிகழ்ச்சியில் பழம்பெரும் இயக்குனர் ஒருவர் சௌந்தரராஜனைப் பற்றி இப்படிச் சொன்னார் – சௌந்தரம் என்றால் அழகு ராஜன் என்றால் அரசன், இவர் அழகாக பாடுபவர்களில் அரசன்…

View More அஞ்சலி: டி.எம்.சௌந்தரராஜன்