ஹிந்துத்துவம் டுடே

ஹிந்துத்துவம் டுடே என்ற சகோதர இணையதளம் கடந்த ஒரு மாதமாக இயங்கி வருகிறது.. தமிழில் இந்து அறிவியக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் தொடங்கப் பட்ட இந்துத்துவ பதிப்பகம் சார்பாக நடத்தப் படும் இந்த இணையதளம் பல அருமையான படைப்புக்களையும், விவாதங்களையும் வரும் நாட்களில் தொடர்ந்து வழங்கும்.. இத்தளம் வழியாக இந்துத்துவ பதிப்பகத்தின் புத்தகங்கள் அனைத்தையும் ஆன்லைனில் வாங்கவும் முடியும்.

Buy cheap levitra 20mg 100mg 50mg 30mg generic for the best quality. It is the time to go from 100mg of levitra to 100mg of levitra and from 100mg of http://jualah.id/cara-promosi/ levitra to 50mg of levitra. Go up to the counter and, if it’s the first time you’ve ever been there, make a purchase in a foreign language.

Generic prednisolone tablets are manufactured by cipla limited. Pill, an old-fashioned medicine, is still widely used deprecatingly clomid for sale to treat a variety of diseases such as headaches, back pain or sinus problems. Pillows are the perfect way to give a gift of quality time.

This can lead to a loss of bone mass and a reduction in bone mineral density, which is a strong predictor of fractures in women. Generic dapoxetine (cymbalta) 60 mg - low cost - generic dapoxetine (cymbalta) 60 mg - generic dapoxetine (cymbalta) 60 mg - https://blog.ratonviajero.com/page/9/ low cost. When the steroid dose of prednisolone is increased, however, its cost may increase because of increased risk of infections and an increased potential for side effects such as muscle cramps and fluid retention.

hindutvam-today

நமது வாசகர்கள் அனைவரும் தங்களது ஏகோபித்த ஆதரவை ஹிந்த்துவம் டுடே இணையதளத்திற்கும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஹிந்து கண்காட்சியில் தமிழ்ஹிந்து புத்தக அரங்கு

கடந்த பிப்ரவரி 19 முதல் 24 வரை சென்னை மீனம்பாக்கம் ஏ.எம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் நடந்து வரும் ஹிந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சியில் தமிழ்ஹிந்து ஒரு புத்தக அரங்கை அமைத்துள்ளது.

tahi_stall_at_hindu_fair_2013

இந்துத்துவ பதிப்பகத்தின் வெளியிடுகளாக, ம.வெங்கடேசன் எழுதியுள்ள ”புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்?”, ”தாழ்த்தப் பட்டவர்களுக்கு பாடுபட்டதா நீதிக்கட்சி?”, ”1947 – பாகிஸ்தானில் தாழ்த்தப் பட்டவர்கள்” ஆகிய நூல்கள் இந்த அரங்கில் கிடைக்கும். “பண்பாட்டைப் பேசுதல்”, “சாதிகள் – ஒரு புதிய கண்ணோட்டம்” ஆகிய நூல்களின் புதிய பதிப்புகளும் கிடைக்கும். அத்துடன் மற்ற பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள இந்துத்துவம், இந்து தர்மம், இந்துப் பண்பாடு, வரலாறு தொடர்பான பல்வேறு புத்தகங்களும் இந்த அரங்கில் கிடைக்கும்.

தமிழ்ஹிந்து அரங்கின் எண் I-11 [விவேகானந்த கேந்திரம்,ஓராசிரிய பள்ளிகள் (Single Teacher School) அரங்குகளுக்கு அருகில்).

அனைவரும் வருக! ஆதரவு தருக!

TH_Pamphlet_2013_pic_page_2

இந்துத்துவப் பதிப்பகம்: ஓர் அறிமுகம்

சென்ற பல வருடங்களாகவே பதிப்பகத் துறையில் இந்துக்களுக்கு – இந்து மதத்திற்கு – இந்துப் பண்பாட்டிற்கு எதிரான குரல்கள் தமிழ்நாட்டில் பலமாகவே ஒலித்துக்கொண்டு வருகின்றன. ஒவ்வொரு வருடமும் சென்னை புத்தக கண்காட்சியில் இடம்பெறும் பல பதிப்பகங்களின் புத்தகங்களைப் பார்த்தாலே இந்து மதத்தை அழிக்க நினைக்கும் சக்திகள் எவ்வளவு வளர்ந்து இருக்கின்றன என்பது புரியும்.

நமது மதம், கலாசாரம், வரலாறு, பண்பாடு இவைகளை திரித்தும், மோசமான முறையில் அவதூறு செய்தும், திராவிடர் கழகம், கம்யூனிஸ்டுகள், கிறிஸ்தவ மதமாற்ற சக்திகள், இந்திய தேசிய எதிர்பாளர்கள் போன்ற பல சித்தாந்த முகாம்களைச் சேர்ந்த பதிப்பகங்கள் தொடர்ந்து நூல்களை வெளியிட்டு வருகின்றன. இதைப் படிக்கும் பொது வாசகர்களின் மனநிலை இந்து மதத்திற்கும், பண்பாட்டிற்கும், இந்துத்துவத்திற்கும் எதிரானதாக மாறி விடுகிறது. இவர்கள் தொடர்ந்து பதிப்பிக்கும் புத்தகங்களை பார்த்தாலே புரியும் – அவர்களுடைய ஒரே நோக்கம் இந்துக்களை – இந்து மதத்தை வேரோடு பொசுக்க வேண்டும் என்பதே.

இந்தப் போக்கை மாற்ற வேண்டும்; நமது வரலாற்றை, பண்பாட்டை சரியான படி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு லாப நோக்கமில்லாத ஒரு பதிப்பகத்திற்கான மிகப் பெரிய அவசியம் உள்ளது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இத்தகைய ஒரு பதிப்பகத்தை நாம் நன்கறிந்த எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களுமான அரவிந்தன் நீலகண்டன், ம.வெங்கடேசன் ஆகியோர் இணைந்து ஆரம்பித்திருக்கின்றனர். தமிழ்ஹிந்து இந்தப் பதிப்பகத்திற்குத் தனது முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கி இப்பதிப்பகத்தினை வாழ்த்தி வரவேற்கிறது.

இந்துத்துவம் என்பது இந்த தேசத்தின் வாழ்வியல் முறை என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்ட பிறகும், இன்றும் இந்துத்துவம் என்றாலே நம்மவருக்கும் கூட கசப்பாகவே இருக்கிறது. அந்த அளவுக்கு அந்த வார்த்தையை ஒரு கசப்பான வார்த்தையாக மாற்றி இருக்கின்றன ஊடகங்கள் மற்றும் இந்து விரோத கருத்தியல்கள். அந்த கசப்பை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் இந்துத்துவப் பதிப்பகம் என்றே இந்தப் புதிய பதிப்பக்கத்துக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

”இப்பெயர் வைக்கும்போது சிலர் ஆட்சேபம் தெரிவித்தார்கள். இப்பெயர் வைத்தால் இந்துக்களே கூட புத்தகத்தை வாங்க மாட்டார்கள் என்று காரணம் சொன்னார்கள். நாம் லாபம் ஈட்டும் நோக்கத்தோடு இப்பதிப்பகத்தை ஆரம்பிக்கவில்லை.

இந்துத்துவம் மனித நேயத்திற்கான சிந்தனை.
இந்துத்துவம் உயர்நெறிகளின் சிந்தனை.
இந்துத்துவம் நல்வாழ்விற்கான சிந்தனை.
இந்துத்துவம் உலக சகோதரத் துவத்திற்கான சிந்தனை.
உலகத்தின் மானுட சமுதாயத்திற்கான மிகச்சிறந்த சிந்தனையே இந்துத்துவம் –

என்பதைப் பறைசாற்றவே இந்துத்துவப் பதிப்பகம் ஆரம்பிக்கப்படுகிறது என்று பதில் சொன்னோம்”

என்கிறார் ம.வெங்கடேசன்.

இந்துத்துவத்தை உலகெங்கும் வாழும் தமிழ் வாசகர்களுக்கு பறைசாற்றவே இப்பதிப்பகம். இந்து மதம் மீதோ அல்லது பண்பாட்டின் மீதோ அல்லது இந்து வாழ்க்கை முறையின் மீதோ ஒரு உணர்வு ரீதியான ஒட்டுதலும் பற்றும் கொண்டவர்கள் இந்த புத்தகங்களை வாங்கி மற்றவர்களுக்கு பரப்பினாலே கூட போதும், இப்பதிப்பகத்தின் நோக்கங்கள் நிறைவேறும். அதையே தான் இப்பதிப்பகமும் விரும்புகிறது.

2012 டிசம்பரில் கீழ்க்கண்ட பத்து புத்தகங்களை இந்துத்துவ பதிப்பகம் சார்பில் கொண்டுவர திட்டமிடப் பட்டுள்ளது.

இந்தப் பதிப்பகத்தின் வளர்ச்சிக்கு நீங்கள் எப்படியெல்லாம் உதவலாம்?

அ) புத்தகங்களை வாங்க ஆர்வம் உள்ளவர்கள், வாசக உறுப்பினர் ஆகி, முன்பே அது பற்றித் தெரிவிப்பது திட்டமிட வசதியாக இருக்கும். இதற்குக் கட்டணம் எதுவும் கிடையாது. உங்கள் பெயர், முகவரி, இமெயில், (விருப்பமிருந்தால் தொலைபேசி எண்) ஆகியவற்றை hindutva.pathippagam@gmail.com என்ற முகவரியில் தெரிவிக்கவும். புத்தகங்கள் அச்சிட்ட பின்பு உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். நீங்கள் ஆர்டர் கொடுத்த உடன் 10% கழிவுடன் புத்தங்கள் உங்களுக்குக் கிடைக்கும். இந்தப் புத்தகங்களை வாங்கி விற்பதற்கு ஆர்வம் உள்ளவர்கள் அதையும் குறிப்பிட்டு எழுதவும் – ஒரு புத்தகம் 10 பிரதிகளுக்கு மேல் ஆர்டர் செய்தால், மேலதிக கழிவு வழங்கப் படும்.

ஆ) இந்தப் பதிப்பக முயற்சிக்கு நேரடியாக நன்கொடை அளிக்க, நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் திரு. ம. வெங்கடேசன் அவர்களை 99412-98629 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வெளிரும் புத்தகங்கள்:

[1] ஆழி பெரிது

வேதப் பண்பாடு குறித்து அறிவியல் பூர்வமான நவீன சிந்தனைகளை உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். வேள்விகள், வேத கால சமுதாயம், இயற்கை குறித்தும் பிரபஞ்சம் குறித்துமான வேத ரிஷிகளின் கோட்பாடுகள், உலக தொல் கலாசார வெளியில் வேதங்களின் இடம் என்று பல புள்ளிகளைத் தொட்டுச் செல்பவை இக்கட்டுரைகள். அசுவமேத யாகம், சரஸ்வதி நதி, சோமபானம், முருக வழிபாடு, ஆரியர் தமிழர் இணைப்பு முதலிய கலாசார,வரலாற்றுப் புதிர்கள் குறித்த தேடல்களும் இந்த நூலில் உண்டு. ஆசிரியர்: அரவிந்தன் நீலகண்டன்.

[2] தாழ்த்தப் பட்டவர்களுக்காக போராடியதா நீதிக்கட்சி?

தாழ்த்தப் பட்டவர்களின் உரிமைப் போராட்டங்கள் எல்லாம் திராவிட இயக்கத்தவர்களால் போராடிப் பெறப்பட்டன என்ற பிம்பத்தை உடைக்கிறது இந்நூல். ம.வெங்கடேசன் எழுதியிருக்கும் இந்நூல் திராவிட இயக்க முன்னோடியான நீதிக்கட்சியின் புரட்டல்களை அம்பலப்படுத்துகிறது. மதுரைப் பிள்ளை, சுவாமி சகஜானந்தர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா என்று தாழ்த்தப் பட்டவர்களின் உரிமைகளுக்காக உண்மையில் போராடிய தலைவர்களையும், எப்படி இந்தப் போராட்டங்களுக்கு எதிரானதாகவே நீதிக்கட்சியின் செயல்பாடுகள் இருந்தன என்பதையும் எடுத்துரைக்கிறது.

[3] புரட்சியாளர் அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?

புரட்சியாளர் அம்பேத்கரின் இந்து மதம் குறித்த விமர்சனங்கள் மற்றும் அவரது மதமாற்றம் குறித்த முழுமையான பார்வையை முன்வைக்கிறது ம.வெங்கடேசன் எழுதியிருக்கும் இந்நூல். சனாதன இந்து மதத்திலிருந்து வெளியேறிய அம்பேத்கர் கிறித்துவம், இஸ்லாம், கம்யூனிசம் ஆகிய பாதைகளை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை அம்பேத்கரே கூறியுள்ள பல்வேறு தகவல்களோடு விவரிப்பதுடன், இறுதியில் பௌத்தத்தை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதையும் காரண காரியங்களோடு விளக்குகிறது.

[4] பாரதி: மரபும் திரிபும்

ஈவெராவின் பக்தரும் துதிபாடியுமான வே.மதிமாறன் என்பவர் மகாகவி பாரதி மீது பொய் அவதூறுகளை சுமத்தி எழுதியிருக்கும் ”பாரதீய ஜனதா பார்ட்டி” என்ற புத்தகத்திற்கு மறுப்புரையாக ம.வெங்கடேசன் எழுதியுள்ள நூல். மதிமாறன் எழுதிய புத்தகம் முழுவதுமே வெறுப்பினால் எழுதப்பட்டது, ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளுடன் கூடியது என்பதை பாரதியின் எழுத்துகளின் வாயிலாகவே நிரூபிக்கும் நூல். மறுப்புரை என்பதோடு, யுகபுருஷரான பாரதியின் பன்முக ஆளுமையின் இன்னும் சில பரிமாணங்களையும் நாம் அறிந்து கொள்ள உதவுகிறது என்பது நூலின் சிறப்பு.

[5] 1947 – பாகிஸ்தானில் தாழ்த்தப்பட்டவர்கள்

1947 இந்தியப் பிரிவினையின்போது பாகிஸ்தானில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எத்தகைய சொல்லொணாத கொடுமைகள் நேர்ந்தன, உரிமை மறுப்புகள் நிகழ்ந்தன என்பது பற்றி எச்.ஜோகிந்தர் நாத் மண்டல் மற்றும் புரட்சியாளர் அம்பேத்கர் ஆகியோரது எழுத்துக்களிலிருந்தும், உரைகளிலிருந்தும் தொகுக்கப்பட்ட நூல். தாழ்த்தப்பட்டவர்களுக்கு நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதை அப்பட்டமாக விளக்கும் புத்தகம் இது.


[6] விலக்கப்பட்ட மலர் (இந்துத்துவச் சிறுகதைகள்)

ஆலந்தூர் மள்ளன் எழுதியுள்ள சுவாரஸ்யமான சிறுகதைகளின் தொகுப்பு. தமிழ்ஹிந்து தளத்தில் வெளிவந்த போது பரவலான வாசிப்பையும், பாராட்டுக்களையும், விவாதங்களையும் உருவாக்கியவை இந்தக் கதைகள். சுமைதாங்கி அம்மன் கோயில் பூசாரி முதல் பிரிட்டிஷ் சோல்ஜர் வரை, காரைக்குடி வக்கீல் முதல் சோவியத் ரஷியா காலத்து விஞ்ஞானி வரை பல்வேறு வகைப்பட்ட பாத்திரங்களை இக்கதைகளில் நீங்கள் நேர்கொள்ளலாம். முற்றிலும் வேறுபட்ட கதைக் களங்களையும் சம்பவக் கோர்வைகளையும் தாங்கி வரும் இந்தச் சிறுகதைகள் ஒவ்வொன்றும் இந்துத்துவ கருத்தியல் கல்வியை மட்டுமல்ல, நல்ல வாசிப்பு அனுபவத்தையும் அளிக்கக் கூடியவை.

[7] 1857: முதல் சுதந்திரப் போர்

சிப்பாய் கலகம் என்று ஆங்கிலேயர் அழைத்து வந்த 1857 புரட்சிக்கு “முதல் சுதந்திரப் போர்” என்று பெயர் சூட்டி வீர சாவர்க்கர் தமது பாரிஸ்டர் கல்விக் காலத்தில் எழுதிய பிரபல நூல் இது. கைப்பிரதியாக இருக்கும் போதே பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப் பட்ட இந்த நூல், புரட்சிகர சுதந்திரப் போராட்ட வீரர்களால் இரகசியமாக அச்சேற்றப் பட்டு இந்திய இளைஞர்களைச் சென்றடைந்து மாபெரும் தேசிய எழுச்சி உணர்வை உருவாக்கியது. 1857 போர் எப்படி ஏற்பட்டது, யாரெல்லாம் ஈடுபட்டார்கள், அது ஏன் தோல்வி கண்டது, இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம் என்ன என்பதைப் பற்றி ஒரு வளரும் புரட்சி வீரராக சாவர்க்கர் மிக அருமையாக அலசுகிறார். சில பத்தாண்டுகள் முன்பு தமிழில் இந்நூலை  கலைமகள் காரியாலயம் வெளியிட்டது. அச்சில் கிடைக்காமல் நின்று விட்ட அந்தப் புத்தகத்தை தற்போது நமது பதிப்பகம் வெளியிடுகிறது.

[8] இந்துத்துவம் – வீர சாவர்க்கர்

1920களில் அந்தமான் தீவுகளின் இருட்சிறையில் அடைபட்டிருந்த காலத்தில் வீர சாவர்க்கர் இயற்றிய நூல் இது. சிறைக்கூடத்தில் நூல்களோ பத்திரிகைகளோ எதுவும் கிடைக்காத போதும், தமது நினைவாற்றலையும் சிந்தனைத் திறத்தையும் மட்டுமே கொண்டு அவர் இந்நூலை எழுதினார். இந்த நூலில் தான் “இந்துத்துவம்” என்ற சொல்லை உருவாக்கி, ஒரு தேசிய, சமூக, அரசியல் சித்தாந்தத்தை சாவர்க்கர் முன்வைத்தார். இன்றளவும், இந்துத்துவ கருத்தியலின் அடிப்படையான சித்தாந்த நூல்களில் ஒன்றாக இந்த வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நூல் திகழ்கிறது. சில பத்தாண்டுகள் முன்பு இந்த நூலும் தமிழில் வெளிவந்து, இப்போது தேடிப்பிடிக்க முடியாத அளவில் உள்ளது. ஜடாயுவின் புதிய மொழி பெயர்ப்பில் இந்த நூல் நமது பதிப்பகத்தின் வாயிலாக வெளிவருகிறது.

[9] பண்பாட்டைப் பேசுதல்

முன்பு தமிழ்ஹிந்து வெளியீடாக வந்த நூலின் மீள்பதிப்பு.

சமூகம், வரலாறு, இலக்கியம், சமயம், கலாசாரம் தொடர்பான கேள்விகளுக்கு விடைதேடிக் கொண்டிருப்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.

அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, அருணகிரி மற்றும் சில சிந்தனையாளர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.

மேலும் விவரங்கள் இங்கே.

 

 

 

[10] சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம்

முன்பு தமிழ்ஹிந்து வெளியீடாக வந்த நூலின் மீள்பதிப்பு.

சாதிகள், சாதியம் இவற்றின் வரலாற்றுப் பின்னணி என்ன? சாதியம் குறித்து இந்து தருமம் கூறுவதென்ன?

சாதி இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறதா? சாதியத்தை எதிர்க்க இந்து தருமம் அளிக்கும் கருத்தியல் என்ன?

அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பனித்துளி இணைந்து எழுதிய இந்தச் சிறு நூல் இத்தகைய கேள்விகளுக்கு சுருக்கமாக, எளிமையாக விடையளிக்கிறது.